Jump to content

Recommended Posts

சண்றைசர்ஸ் ஹைதரபாத்தின் தலைவராக வில்லியம்சன்

image_0d863ef935.jpg

இந்தியன் பிறீமியர் லீக்கின் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் திட்டமிட்டு பந்தைச் சேதப்படுத்தியமையடுத்தைத் தொடர்ந்து சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவர் பதவியிலிருந்து டேவிட் வோணர் பதவி விலகியமையைத் தொடர்ந்தே சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சண்றைசர்ஸ் ஹைதரபாத் சண்றைசர்ஸ் அணிக்கு, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான், வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் ஆகியோரை அணித்தலைவராக தெரிவுசெய்யும் வாய்ப்புகள் காணப்பட்டபோதும் கேன் வில்லியம்சனை அணித்தலைவராக தெரிவு செய்திருந்தது.

அதுவும் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக கடந்த மூன்று பருவகாலங்களில் விளையாடிய கேன் வில்லியம்சன், 15 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்ததுடன், 100 பந்துகளுக்கு 129.24 ஓட்டங்கள் என்ற விகிதத்தில் 411 ஓட்டங்களையே பெற்ற கேன் வில்லியம்சனை அணித்தலைவராக சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி தெரிவுசெய்தது கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் விளையாடுவதற்கு டேவிட் வோணருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டேவிட் வோணருக்குப் பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவை ஒப்பந்தம் செய்வதற்கு அவரை சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி அணுகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்று முடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்திருந்த நியூசிலாந்தின் விக்கெட் காப்பாளர் லுக் றொங்கியும் இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக் ஏலத்தில் விலை போயிருக்காத நிலையில் அவரையும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணருக்குப் பதிலாக ராஜஸ்தான் றோயல்ஸ், சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் ஒப்பந்தம் செய்ய முயலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/சண்றைசர்ஸ்-ஹைதரபாத்தின்-தலைவராக-வில்லியம்சன்/44-213587

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

கொல்கத்தா அணிக்கு பெரிய இழப்பு- காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகுகிறார்

 
 

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டிற்காக தயாராகி வந்த மிட்செல் ஸ்டார்க்கிற்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். #IPL2018 #KKR

 
கொல்கத்தா அணிக்கு பெரிய இழப்பு- காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகுகிறார்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. வார்னர், ஸ்மித், பேன்கிராப்ட் ஆகியோர் இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சின் மூலம் அணியை வழி நடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் களம் இறங்கவில்லை.

காயத்தால் விளையாடாத மிட்செல் ஸ்டார்க் சொந்த நாடு திரும்புகிறார். அங்கு காயம் குறித்து மதிப்பீடு செய்ய பின்னர்தான் அவரது காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்டார்க் விலக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட் செய்துள்ளது.

201803301502257444_1_starc-24s._L_styvpf.jpg

மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அந்த அணி 19 வீரர்களை மட்டுமே ஏலம் எடுத்துள்ளது. சர்வதேச அளவில் முன்னணி பந்து வீச்சாளரான ஸ்டார்க், ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிடில் கொல்கத்தா அணிக்கு அது பெரிய இழப்பாகும்.

அந்த அணியில் வினய் குமார், மிட்செல் ஜான்சன், அந்த்ரே ரஸல் ஆகியோருடன் கம்லேஷ் நகர்கோடி, ஷிவம் மவி ஆகிய இளம் வீரர்கள் உள்ளனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/30150033/1154081/IPL-2018-Aussie-Pacer-Mitchell-Starc-to-Miss-Tournament.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அட்டவணை மாற்றம்

 
அ-அ+

கர்நாடகா மாநில தேர்தலின் வாக்குப்பதிவு மே 12-ந்தேதி நடைபெற இருப்பதால், ஆர்சிபி போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #RCB

 
 
ஐபிஎல் 2018- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அட்டவணை மாற்றம்
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வருகிற 7-ந்தேதி (ஏப்ரல்) மும்பையில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. ஆர்சிபி பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி அட்டவணைப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் ஆட்டம் மே 12-ந்தேதி பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கர்நாடகாவில் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், 12-ந்தேதி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.

அதற்குப் பதிலாக ஏப்ரல் 21-ந்தேதி டெல்லியில் நடைபெற இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆட்டம் எம் சின்னசாமி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மே 12)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் (ஏப்ரல் 21)

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/30204530/1154154/IPL-2018-Royal-challengers-Bangalore-match-date-changed.vpf

Link to comment
Share on other sites

"இதயங்கள் போதும் விராட்.... கோப்பை வேண்டும் ப்ளீஸ்..!" - ஒரு ஆர்.சி.பி ரசிகனின் அன்பு வேண்டுகோள்

 
 

விராட் கோலி

'' விராட்! ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு நீங்கள் தான் முழுமையான கேப்டன். இந்திய அணியில் இருப்பது போல தோனியெல்லாம் ஃபீல்டிங் செட் செய்து தரமாட்டார்''

 

'' கோப்பை என்பது ஆர்சிபியால் ஜென்மத்திலும் வாங்க முடியாத விஷயம்''

இதெல்லாம் சமூக வலைதளங்களில் ஆர்சிபி பற்றிய மீம்களில் உள்ள வசனங்கள். ஒரு ஆர்சிபி ரசிகனாய் இது எங்களைக் கடுமையாக பாதித்திருக்கிறது. ஆனால் இதற்காகச் சோர்ந்துவிடும் கூட்டம் அல்ல நாங்கள். "விராட் கோலிக்கு ட்ராவுக்காக ஆடுவது பிடிக்காது. களத்தில் கர்ஜிக்கும் சிங்கம், இவரது பேட் பந்துவீச்சாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்’ என சமூக வலைத்தளங்களில் மற்ற வீரர்களின் ரசிகர்களை ஓடவிட்ட காலம் எங்களிடமும் இருக்கிறது.

அனுஷ்கா மீதான விமர்சனத்தையெல்லாம் ஒரு வார்த்தையில் வீழ்த்தியவர் விராட். ஆனால், எங்களை விடையில்லா ஒரு கேள்வி மட்டும் துரத்திக் கொண்டே இருக்கிறது. 10 சீசன்களாக நிறைய இதயங்களை வென்றுள்ளோம். ஆனால் கோப்பை? எல்லாரும் மாதிரியும் ஊர் பாசம் கண்ண மறைச்சு ஆரம்பத்துல இரண்டு சீஸன் சிஎஸ்கே ஃபேனாதான் இருந்தோம். தோனி எப்பவும் கபாலி தான். அந்த மாஸ் மனுஷன் இருக்குற அதே களத்துல நீங்க எங்களுக்கு பாகுபலியா தெரிஞ்சது தான் நாங்க ஆர்சிபி ரசிகனாகக் காரணம். 

''என்னதான் சொன்னாலும் ஆர்சிபிக்கு உங்க ஆளு ஒரு கப்பு ஜெயிக்கலயேப்பா'' - இந்த வார்த்தை ஆறிலிருந்து 60 வரை எல்லாரிடத்திலுமிருந்து வருகிறது விராட். 2 வருடம் தடை செய்யப்பட்டாலும் சென்னையும், ராஜஸ்தானும் சாம்பியன்கள், உங்களுக்குப் போட்டியாக முன்னிறுத்தப்படும் ரோஹித் ஷர்மா கையில் 3 ஐபிஎல் கோப்பைகள். நீங்கள் களத்தில் முறைத்துப் பார்த்த கம்பீரும், வார்னரும் கோப்பையோடு போஸ் கொடுக்கிறார்கள். ஆனால் விராட் கோலியின் ஆர்சிபி மட்டும் சர்வதேச கிரிக்கெட்டின் தென்னாப்பிரிக்க அணியைப் போலவே இருப்பது வேதனை தருகிறது விராட்.

டிராவிட் காலத்தில் டெஸ்ட் அணியாக இருந்தது ஆர்சிபி. கும்ப்ளே, வெட்டோரி என ஸ்பின்னர்கள் ஆண்ட காலத்திலும் ஆர்சிபிக்கு டெஸ்ட் யூனிஃபார்ம் தான் கொடுத்து வைத்திருந்தார்கள். எல்லாம் விராட் வந்ததும் மாறியது. அதிரடிக்கு கெயில்... அடித்து நொறுக்க ஏபிடி... வம்புக்கு பீட்டர்சன்... வைச்சு செய்ய வாட்சன்... இதையெல்லாம் மொத்தமாக செய்வார் விராட் என உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றது ஆர்சிபி...

கோலி

ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ரன், தனிநபர் அதிகபட்சமான 175 (கெயில்) எல்லாம் ஆர்சிபி வசம் வந்தது. ஒரே சீஸனில் 4 சதம், 963 ரன்கள் என விராட் கெத்து காட்டினார். ஆனால், கடைசியில் கோப்பை நமக்கில்லை. ஒவ்வொரு முறையும் கோப்பை கை நழுவும் போதெல்லாம் கனத்த இதயங்களுடன்.. "விராட் இதுவும் ஒரு ஆட்டம் தான். போனால் போகட்டும் எங்கள் இதயங்களை வென்றிருக்கிறீர்கள் அது போதும்" என ஸ்டேட்டஸ் தட்டி இருக்கிறோம். இந்தமுறை அதற்கு வேலை வைக்காதீர்கள். நாங்கள் சாம்பியன் என்று உரக்கக் கத்த வேண்டும். விசில் சத்தங்களை வெல்ல வேண்டும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையை கையில் ஏந்தப்போகும் இந்திய கேப்டன் என உங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு நீங்கள் காட்டும் உதாரணமாக இந்த ஐபிஎல் கோப்பை இருக்க வேண்டும். 

நிறைய வலிகளைத் தாண்டியிருக்கிறோம் விராட். எங்களுக்கு எந்த அணியைக் கண்டும் பயமில்லை, தோனி கம்பேக் தரட்டும், ரஹானே, தினேஷ் கார்த்திக், அஸ்வின் தங்களை நிரூபிக்கட்டும். ஆனால், கோப்பை கோலியின் கைகளில் இருக்கட்டும் என்பதே ஆர்சிபி ரசிகனின் விருப்பம். 

இதயங்கள் போதும் விராட். கோப்பைகள் வேண்டும்... ப்ளீஸ்...

 

கனத்த இதயத்துடன், 
ஆர்சிபி ரசிகன். 

https://www.vikatan.com/news/sports/120861-an-open-letter-to-virat-kohli-from-a-rcb-fan.html

Link to comment
Share on other sites

கடைசி பந்து சிக்ஸ் வெற்றிக்குப் பிறகே அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்: தினேஷ் கார்த்திக்

 

 
dinesh

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்.   -  படம். | பிடிஐ.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக புதிய பொறுப்பேற்றுள்ள தினேஷ் கார்த்திக், தனக்கு அழுத்தம் உள்ளது என்றும் எனினும் அதனை சிறப்பாகக் கையாள முடியும் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது, மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது.

இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கொல்கத்தாவில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

கேகேஆர் அணிக்கு கவுதம் கம்பீர் செய்தது பிரமிக்கத்தக்கது. அவர் ஒரு தரநிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அணியின் தலைவராக அணி நிர்வாகம் கவுதம் கம்பீர் போலவே என்னிடமும் அதிகம் எதிர்பார்க்கும். ஆம் அழுத்தம் உண்டு. ஒரு கேப்டனாக அணி பிளே ஆஃப் வரை முன்னேற வேண்டுமென்று என்னிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்போது இவ்வகை அழுத்தத்தை நான் கையாளும் நம்பிக்கையில்தான் இருக்கிறேன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை என்னால் வெளிக்கொண்டு வர முடியும்.

வங்கதேசத்துக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் சிக்ஸ் அடித்து வென்ற பிறகே நாட்கள் ஓடிவிட்டன, அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டன, ரசிகர்களும் அதிலிருந்து நகர்ந்து விட்டனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அது ஒரு அருமையான ஆட்டம். வங்கதேசத்துடன் ஆடும்போது அது இன்னொரு வகையான அழுத்தம், வென்றால் ஓகே வங்கதேசத்தை வென்று விட்டோம் என்று கூறுவார்கள் தோற்றால் வங்கதேசத்துடன் தோல்வியா என்ன நடக்கிறது என்பார்கள் என்று ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன்.

அந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கண்டோம், மிடிலில் கொஞ்சம் சரிவு, நான் இறங்கும்போது பவுண்டரிகள் அடிக்க வேண்டிய கட்டாயம். அந்தத் தொடர் நன்றாக அமைந்தது, ஆகவே இறுதிப்போட்டியில் வென்றிருக்காவிட்டால் ஏமாற்றமாகவே இருக்கும். அது ஒரு மகா உணர்வு.

இந்திய அணி போல் அல்லாமல் இங்கு நான் பல்வேறு நிலைகளில் இறங்குவேன். ஐபிஎல் என்பது சூழ்நிலைகளைச் சமாளிப்பதாகும். இன்னும் ஒருவாரம் இருக்கிறது, நான் என்னை வித்தியாசமாக நடத்திக் கொள்ள மாட்டேன். அனைவருமே இங்கு சிறந்தவற்றை அளிக்கப் போகிறார்கள், நான் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

என் மனைவி தீபிகா பல்லிக்கல்லிடமிருந்து நான் உறுதிப்பாடையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டேன். காமன் வெல்த் போட்டிகளுக்காக தீபிகா உண்மையில் கடினமாக உழைத்தார்.

இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.

http://tamil.thehindu.com/sports/article23407400.ece?homepage=true

Link to comment
Share on other sites

தெ.ஆ. அதிரடி வீரர் ஹெய்ன்ரிச் கிளாசனை நினைவிருக்கிறதா? ஸ்மித்துக்குப் பதில் ஆடுகிறார்

 

 
klassen

ஹெய்ன்ரிச் கிளாசன்.   -  படம். | ஏ.எஃப்.பி.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசன் இடம்பெறுகிறார்.

இந்த கிளாசனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், தென் ஆப்பிரிக்காவில் இந்தியா சமீபத்தில் வென்று வரலாறு படைத்த ஒருநாள் தொடரில் பிங்க் நிற உடையில் ல் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார் ஹென்றிக் கிளாசன்.

மேலும் அந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாகத் திணறிய இந்திய மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சு சிக்கன விகிதத்தைக் காலி செய்தவரும் ஹென்றிக் கிளாசன் தான்.

டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 146 என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அதிர்ஷ்டகரமாக இவரை அடிப்படை விலை ரூ.50 லட்சத்தில் வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இன்னொரு பிரச்சினைக்குரிய வீரர் பென் ஸ்டோக்ஸ், இவரது வழக்கு வியாஜ்ஜியங்கள் முடிந்த பிறகே அவர் விளையாட அனுமதிக்கப்படுவாரா என்பது தெரியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:

ரஹானே (கேப்டன்), டிஆர்க்கி ஷார்ட், ராகுல் திரிபாதி, ஆர்யமான் பிர்லா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பிரசாந்த் சோப்ரா, ஹெய்ன்ரிச் கிளாசன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கே.கவுதம், ஜதின் சக்சேனா, மாஹிபால் லோமர், ஸகீர் கான், ஷ்ரேயஸ் கோபால் மிதுன், அன்கிட் சர்மா, அனுரீத் சிங், ஜெய்தெவ் உனாட்கட், தவல் குல்கர்னி, துஷ்மந்த சமீரா, பென் லாஃப்லின்

http://tamil.thehindu.com/sports/article23414276.ece?homepage=true

Link to comment
Share on other sites

கோலியும் டோனியும் எனது பட்டியலில் உள்ளனர் !

 

இந்திய அணியின் தலைவர் விராட்கோலி மற்றும் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்த விரும்புவதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்  குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Kuldeep-Yadav.jpg

இந்நிலையில் அவர்களும் என்னுடைய பட்டியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ள குல்தீப் யாதவ் இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் இரு ஜாம்பவான்களின் விக்கெட்களையும் வீழ்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஐ.பி.எல்.லில் நான் ஒரு  பெரிய பட்டியல் வைத்துள்ளேன் அதில் இருவரும் உள்ளனர் என குல்தீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சில் அவர்களை வீழ்த்துவது கடினம்  என தெரிவித்துள்ள அவர் ஐ.பி.எல்.லில் மாத்திரம் அவர்களை எதிர்கொள்ள முடியும் என்பதால் அதனை பயன்படுத்த விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/32179

Link to comment
Share on other sites

ஐபிஎல்: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

 

 
dhoni_csk11

 

ஐபில் போட்டியின் இறுதிச்சுற்று வரை கோப்பையை கைநழுவ விட்ட அணிகளின் பட்டியல் இது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறை கோப்பையை வென்றாலும் நான்கு முறை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்து அதிகமுறை இரண்டாம் இடம் பிடித்த அணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. 

* இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி, மூன்று முறை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது.

* இந்த வருடம் விளையாடுகிற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் தில்லி அணிதான் ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை.

* பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.  

2008

சாம்பியன் - ராஜஸ்தான் ராயல்ஸ் 
இரண்டாம் இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

2009

சாம்பியன் - டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத்

இரண்டாம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2010

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டாவது இடம் - மும்பை இந்தியன்ஸ்

2011

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டாவது இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2012

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

2013

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ் 

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

2014

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2015

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

2016

சாம்பியன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இரண்டாவது இடம் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

2017

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட்

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/03/ஐபிஎல்-கைக்கு-எட்டியது-வாய்க்கு-எட்டவில்லை-2892858.html

Link to comment
Share on other sites

ஐபிஎல்-லில் இன்னொருமுறை சாதிப்பாரா வாஷிங்டன் சுந்தர்?

 

 
washi_90

 

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் தன் திறமையைப் பலமாக நிரூபித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். 5 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எகானமி - 5.70. வாஷிங்டனின் இன்னொரு சிறப்பு, பவர்பிளே பகுதியில் ஓவர்கள் வீசுவது. இதனால் கேப்டனின் சுமையை அவர் எளிதாக்குகிறார். 

இதுவரை ஒரு ஒருநாள் ஆட்டங்களிலும் 6 டி20 ஆட்டங்களிலும் ஆடியுள்ளார் வாஷிங்டன். அனைத்திலும் ரோஹித் சர்மாவே கேப்டன். ஆனால் ஐபிஎல்-லில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ரூ. 3.30 கோடிக்கு வாஷிங்டனைத் தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி. உள்ளூர் வீரரைத் தேர்வு செய்து அணியை பலமூட்டும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டது சிஎஸ்கே என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. 

கடந்த வருடம் அஸ்வினுக்குப் பதிலாக புணே ஐபிஎல் அணியில் இடம்பிடித்தார் வாஷிங்டன் சுந்தர். அவருடைய தேர்வு அந்த அணிக்கு மிகப்பெரிய திருப்பத்தை அளித்தது. புணே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 11 ஆட்டங்கள் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 6.16. ஐபிஎல் முடிவில் பவர்பிளே-யில் சிறப்பாகப் பந்துவீசுகிறவர் என்கிற முத்திரை சுந்தர் மீது விழுந்தது. 

இவரை அணியில் சேர்ப்பதற்கு முன்பு பவர்பிளே ஓவர்களில் புணே அணி தடுமாறி வந்தது. உதாரணமாக முதல் நான்கு ஆட்டத்தில் புணே அணி, பவர்பிளே-யில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வழங்கியது. இதனால் அந்த முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு வாஷிங்டன் சுந்தர், உனாட்கட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களால் அந்த அணி விஸ்வரூபம் எடுத்து இறுதிச்சுற்று வரை முன்னேறியது.

முதல் ஐபிஎல் போட்டியிலேயே இறுதிச்சுற்றில் கலந்துகொண்ட வாஷிங்டன் சுந்தர், அதில் இரு சாதனைகளை நிகழ்த்தினார்.

washi_971.jpg

ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரர்கள்

17 வயது 228 நாள்கள் வாஷிங்டன் சுந்தர் (2017)
19 வயது 178 நாள்கள் ஜடேஜா (2008) 
19 வயது 256 நாள்கள் மனிஷ் பாண்டே (2009) 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்கள் அளித்த வீரர்கள்

13 ரன்கள் வாஷிங்டன் சுந்தர்
16 ரன்கள் அஸ்வின்  
16 ரன்கள் கும்ப்ளே  
16 ரன்கள் ஆர்பி சிங்

2017 ஐபிஎல் போட்டியில் கவனம் ஈர்த்த வாஷிங்டன் சுந்தர், இந்தமுறை தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். வாஷிங்டன் தன்னுடைய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தி பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வெல்ல உதவுவாரா?

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/03/i-enjoy-bowling-in-powerplays-washington-sundar-2892889.html

Link to comment
Share on other sites

8 ஐபிஎல் அணிகளும் 10 ஐபிஎல் போட்டிகளும்: ஸ்கேன் ரிப்போர்ட்!

 

 
auction1

 

இந்த ஐபிஎல்-லில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நகரத்தைச் சேர்ந்த அணிகளும் முதல் ஐபிஎல் போட்டி துவங்கி, கடந்த வருடம் வரை எந்தளவுக்குத் திறமையை வெளிப்படுத்தியுள்ளன. இதில் எது சிறந்த அணி? எந்த அணி மிக மோசம்? பார்க்கலாம். 

 அணி  சாம்பியன்  பிளேஆஃப்- க்குத்  தகுதி  கடைசி 2 இடங்களில்
 சென்னை   2  8  0
 மும்பை  3  7  1
 கொல்கத்தா   2  5  1
 ஹைதராபாத்   2  5  2
 ராஜஸ்தான்  1  3  1
 பெங்களூர்  0  5  3
 பஞ்சாப்  0  2   3
 தில்லி  0  3  4

 

* சென்னை அணி இதுவரை கலந்துகொண்ட 8 ஐபிஎல்களிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் மும்பை அணி. 10 ஐபிஎல்களில் 7 முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.

* அதிகமுறை ஐபிஎல் போட்டியை வென்ற அணி - மும்பை. 3 முறை. சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் தலா இருமுறை வென்றுள்ளன. 

* ஐபிஎல் இறுதிச்சுற்றில் அதிகமுறை தோல்வியடைந்த அணி, சென்னை சூப்பர் கிங்ஸ். 4 முறை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது. அடுத்த இடத்தில் பெங்களூர் - 3 முறை.

* ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை.

* பஞ்சாப், கடந்த 10 ஐபிஎல்களில் இருமுறைதான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் கடைசி இரு இடங்களை மூன்று முறை பிடித்துள்ளது.

* கடைசி இரு இடங்களை அதிகமுறை பிடித்த அணிகளில் தில்லிக்குத்தான் முதலிடம். ஆரம்பத்தில் வலுவான அணியாக இருந்த தில்லி, பிறகு கட்டெறும்பாகிவிட்டது. நான்கு முறை கடைசி இரு இடங்களைப் பிடித்து தில்லி ரசிகர்களை மிகவும் சோதித்துள்ளது.

* இந்த வருடம் விளையாடுகிற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் என 8 அணிகளில் தில்லி அணிதான் ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை.

* பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.* குறைந்த தடவை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றதிலும் அதிகமுறை கடைசி இரு இடங்களைப் பிடித்ததிலும் தில்லி, பஞ்சாப் ஆகிய அணிகளை ஐபிஎல்-லின் மோசமான அணிகளாகக் கருதலாம். 

10 ஐபிஎல் போட்டிகளும் அணிகளின் தேர்ச்சி விவரமும்

2008

2008_timetable1.jpg

சாம்பியன் - ராஜஸ்தான் ராயல்ஸ் 
இரண்டாம் இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, தில்லி
கடைசி இரு இடங்கள்: பெங்களூர், ஹைதராபாத் (கடைசி இடம்).

2009

2009_timetable1.jpg

சாம்பியன் - டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் 

இரண்டாம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் 
கடைசி இரு இடங்கள்: மும்பை, கொல்கத்தா (கடைசி இடம்).

2010

2010_timetable.jpg

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டாவது இடம் - மும்பை இந்தியன்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர்
கடைசி இரு இடங்கள்: ராஜஸ்தான், பஞ்சாப் (கடைசி இடம்).

2011

2011_timetable.jpg

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ் 

இரண்டாவது இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: புணே, தில்லி (கடைசி இடம்).

2012

2012_timetable.jpg

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

 

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை
கடைசி இரு இடங்கள்: ஹைதராபாத், புணே (கடைசி இடம்).

2013

2013_timetable.jpg

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத்
கடைசி இரு இடங்கள்: புணே, தில்லி (கடைசி இடம்).

2014

2014_timetable1.jpg

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, மும்பை
கடைசி இரு இடங்கள்: பெங்களூர், தில்லி (கடைசி இடம்).

2015

2015_timetable1.jpg

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான்
கடைசி இரு இடங்கள்: தில்லி, பஞ்சாப் (கடைசி இடம்).

2016

2016_timetable1.jpg

சாம்பியன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இரண்டாவது இடம் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) குஜராத், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: புணே, பஞ்சாப் (கடைசி இடம்).

2017

2017_timetable1.jpg

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) மும்பை, புணே, ஹைதராபாத், கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: குஜராத், பெங்களூர் (கடைசி இடம்).

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/03/ipl-2892876--2.html

Link to comment
Share on other sites

சிறந்த ஐபிஎல் கேப்டன் தோனியா ரோஹித் சர்மாவா?

 

 
dhoni_rohit1xx

 

ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி என்கிற பதில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் சாம்பியன் ஆன சென்னை அணி 2008, 2012, 2013, 2015 ஆகிய நான்கு வருடங்களிலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதுதான் தோனிக்கு எதிராக உள்ளது. ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்கிற விவாதத்துக்கு வலு சேர்க்க சாதகமான அம்சங்கள் ஏராளமாக உள்ளன.

தோனி அதிகமுறை (7) ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினாலும் அதிக வெற்றிகள் ரோஹித் சர்மாவையே தேடிவந்துள்ளன.

கடந்த வருட இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோனி இடம்பெற்ற ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ். முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது. 

மும்பை அணி விளையாடிய நான்கு ஐபிஎல் இறுதிச்சுற்று ஆட்டங்களும் தோனிக்கு எதிராகத்தான். 2010, 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற மும்பை அணி, 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

rohit711.jpg

தோனியை விடவும் ரோஹித் சர்மா நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார் (2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் வீரராக). இந்தச் சாதனை வேறு எந்த வீரருக்கும் கிடையாது. ஐபிஎல்-லில் மூன்றுமுறை கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமையும் ரோஹித் சர்மா வசமே உள்ளது. யூசுப் பதான், மலிங்கா, பொலார்ட், ராயுடு ஆகிய வீரர்களும் மூன்றுமுறை இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மும்பை அணியில் தற்போதுள்ள வீரர்களில் கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் பொலார்ட், அம்பட்டி ராயுடு ஆகியோர் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது இடம்பெற்றிருந்தனர். ஆனால் தோனியோ, இவர்களுக்குப் பின்னால் இரு வெற்றிகளுடன் உள்ளார்.

ஏழு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தோனி தேர்வானாலும் இதுவரை ஒருமுறை கூட அவர் ஆட்ட நாயகன் பட்டத்தையோ தொடர் நாயகன் பட்டத்தையோ பெற்றதில்லை. அதேபோல அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்ததில்லை. ஆனால் 2015-ம் ஆண்டில் ரோஹித் சர்மா ஐபிஎல் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

ஏழு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றது பெரிதா அல்லது மூன்றுமுறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தது பெரிதா? தொடரட்டும் விவாதம்...

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/03/ms-dhoni-vs-rohit-sharma-2892900.html

Link to comment
Share on other sites

ஆதிக்கத்தை நிலைநிறுத்துமா சிஎஸ்கே?

 

 
05CHPMUMSDHONI

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் 7-ம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன. இந்த அணிகள் பற்றிய ஓர் அலசல்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் இந்த சீசனில் களமிறங்குகிறது. பழைய அணியை மையமாக கொண்டே தற்போது புதிய அணிக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இரு முறை சாம்பியனான சென்னை அணி இரண்டு வருடங்களுக்குப் பிறகு தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் முனைப்பில் இந்த சீசனை சந்திக்கிறது. சென்னை அணி ஐபிஎல் தொடரில் சிறந்த சாதனைகளை வைத்துள்ளது. 2 சாம்பியன் பட்டம் வென்றதுடன், 4 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைச் சந்தித்திருந்தது. 2 முறை பிளே ஆப் சுற்றில் கால்பதித்திருந்தது.

மீண்டும் புகழை நிலை நாட்டும் வகையில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக அமைந்துள்ளது. ஆளுமைத் திறன் மிக்க மகேந்திர சிங் தோனி, சுரெஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோரை சென்னை அணி ரைட் டூ மேட்ச் தேர்வின் மூலம் தக்க வைத்துக் கொண்டது. இவர்களுடன் அனுபவம் உள்ள ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆகியோரையும் வளைத்து போட்டுள்ளது. அனுபவ தொடக்க வீரரான முரளி விஜய்யும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ், இங்கிலாந்தின் சேம் பில்லிங்ஸ் ஆகியோருடன் டெல்லியைச் சேர்ந்த துருவ் ஷோரேவும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். இவர்களுடன் ஷேன் வாட்சன் மல்லுக்கட்டக்கூடும்.

3-வது வரிசையில் சுரேஷ் ரெய்னா மிரட்ட காத்திருக்கிறார். மிடில் ஆர்டரில் கேதார் ஜாதவ், அம்பாட்டி ராயுடு, தோனி வரிந்து கட்ட தயாராக உள்ளனர். வேகப் பந்து வீச்சில் இங்கிலாந்தின் மார்க் வுட், தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி ஆகியோரை அணி பெரிதும் நம்பி உள்ளது. இவர்களுடன் இந்தியாவின் ஷர்துல் தாக்குர், தீபக் ஷாகர், கே.எம்.ஆசிப், மோனு சிங் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், கரண் சர்மா ஆகியோர் முக்கிய பங்குவகிப்பார்கள்.

அனுபவ வீரர்களை அதிகம் உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அணியையும் வலுவாக எதிர்த்து போராடும் திறன் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் வலுவான போட்டியாளராகவும் சென்னை அணி திகழக்கூடும். அணியில் உள்ள ஒரே பலவீனம் 25 வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்களாக இருப்பதுதான். எனினும் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் குறுகிய வடிவிலான ஆட்டங்களில் இது பெரிய பிரச்சினை இல்லை.

 

அணி விவரம்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, ஷர்துல் தாக்குர், டு பிளெஸ்ஸிஸ், மார்க் வுட், சேம் பில்லிங்ஸ், இம்ரன் தகிர், தீபக் ஷாகர், லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், கனிஷ்க் சேத், மோனு சிங், துருவ் ஷோரே, கிஷித்ஸ் சர்மா, சைதன்யா பிஷ்னோய், ஹர்பஜன் சிங்.

 

மோதல் விவரம்:

ஏப்.7 மும்பை, ஏப்.10 கொல்கத்தா, ஏப்.15 பஞ்சாப், ஏப்.20 ராஜஸ்தான், ஏப்.22 ஹைதராபாத், ஏப்.25 பெங்களூரு, ஏப்.28 மும்பை, ஏப்.30 டெல்லி, மே 3 கொல்கத்தா, மே 5 பெங்களூரு, மே 11 ராஜஸ்தான், மே 13 ஹைதராபாத், மே 18 டெல்லி, மே 20 பஞ்சாப்.

http://tamil.thehindu.com/sports/article23440672.ece

Link to comment
Share on other sites

பேட்டிங்கில் நான் எந்த நிலையில் களமிறங்குவேன் என்பது ‘சர்ப்ரைஸ்’-சிஎஸ்கேவுக்கு ரோஹித் சர்மா மேசேஜ்

 

 
rohit

செய்தியாளர்கள் சந்திப்பில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா.   -  படம். | பிடிஐ.

புதிய சரவெடி பேட்ஸ்மென்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் எந்த டவுனில் களமிறங்குவேன் என்பதை ரகசியமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

7ம் தேதி தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸும் வான்கடேயில் மோதுகின்றன.

“பேட்டிங்கில் எந்த டவுன் ஆர்டரில் இறங்குவேன் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்க விரும்புகிறேன். எங்கள் நடுவரிசை வலுவாக உள்ளது, எவின் லூயிஸ், இஷான் கிஷன் மூலம் நல்ல தொடக்க வீரர்களும் உள்ளனர். 7ம் தேதி பார்ப்போம் நான் எந்த டவுன் ஆர்டரில் இறங்குகிறேன் என்பதை அதுவரை அது சர்ப்ரைசாக இருக்கட்டும்.

எந்த மாதிரியான வீரர்களைக் கொண்டிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே நல்ல அணி. மும்பை இந்தியன்ஸுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எங்களைப் பாதிக்காது. ஒரு அணியாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் செய்தோம்.

மகேலா சொன்னது போல் நாங்கள்தான் கோப்பையை வெல்ல சாதகமான அணி என்ற நிலையில் செல்ல வேண்டியதில்லை. மற்ற அணிகளுடன் சம அளவில் உள்ள அனி என்றே தொடருக்குள் நுழைய விரும்புகிறோம். தொடரை வெல்ல என்ன வேண்டுமோ அது எங்களிடம் இருக்கிறது.

நன்றாக தயாரித்திருக்கிறோம், முதல் போட்டிக்குத் தயார். அனைத்து அடிப்படைகளையும் சரிவர வைத்துள்ளோம். இனி களத்தில் இறங்கி ஆட வேண்டியதுதான்.

கடந்த ஐபிஎல் சாம்பியன் என்ற அடையாளம் அழுத்தம் ஏற்படுத்துவதாக நான் பார்க்க மாட்டேன், மாறாக அது பொறுப்புடைமை. ஆம் நாங்கள் கடந்த ஐபிஎல் சாம்பியன் அதை நினைத்து பெருமைப் படுகிறோம். இப்போது சரியான அணிச்சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துவதுதான் எங்கள் அணுகுமுறை.

மகேலா ஜெயவர்தனே பும்ரா குறித்து அறுதியிட்டது சரியே. அவர் தரமான பவுலர், அவர் எங்களுக்காக அருமையாக ஆடி வருகிறார். பும்ராவுக்கு அழுத்தம் கிடையாது, எந்த சூழலாக இருந்தாலும் அவர் செய்ய வேண்டியதை சிறப்பாகவே செய்கிறார்.

கடந்த ஆண்டு மலிங்கா பார்மில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு பொறுப்பைச் சுமந்தார். கடந்த ஆண்டு மலிங்கா இல்லாததால் மிட்செல் ஜான்சன், மெக்லினாகன் ஆகியோரை மாற்றி மாற்றி பயன்படுத்தினோம். இந்த ஆண்டு பும்ரா மீது அதிக அழுத்தம் இருக்காது.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா

http://tamil.thehindu.com/sports/article23446394.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரபாடா காயத்தால் 3 மாதம் விலகல்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடவில்லை

 
 
 

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா முதுகு வலி காரணமாக 3 மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். #IPL2018

 
 
 
 
ரபாடா காயத்தால் 3 மாதம் விலகல்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடவில்லை
 
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-1 என கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற கடைசி டெஸ்டின்போது முதுகு வலியால் அவதிப்பட்டார். இதனால் சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

201804051833181940_1_rabada001-s._L_styvpf.jpg

இதனால் ரபாடா ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #DD #CSK #MI #RCB #SRH #KKR #RR #KXIP

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/05183009/1155307/Kagiso-Rabada-ruled-out-for-three-months-with-a-back.vpf

Link to comment
Share on other sites

முன்னெடுத்துச் செல்வாரா கேப்டன் கேன் வில்லியம்சன்

 

 
05CHPMUKANEWILLIAMSON

கேன் வில்லியம்சன்   -  THE HINDU

பிஎல் தொடரில் 6-வது முறையாக களமிறங்குகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதால், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை இம்முறை வழிநடத்துகிறார்.

கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த வார்னர் இல்லாதது அணிக்கு பெரிய அளவில் இழப்புதான். எனினும் 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் அணி வில்லியம்சன் தலைமையில் வெற்றி நடை போட காத்திருக்கிறது.

வார்னர் இல்லாத போதிலும் வில்லியம்சனின் அனுபவம் பெரிதும் கைகொடுக்கும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. அவருக்கு உறுதுணையாக முன்னாள் கேப்டன் ஷிகர் தவண் செயல்படக்கூடும். வார்னரை இழந்துவிட்டதால் தொடக்க பேட்டிங்கில் ஷிகர் தவண் கூடுதல் கவனமும், பொறுப்பும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பந்து வீச்சில் வழக்கம் போல் மிரட்ட காத்திருக்கிறார் புவனேஷ்வர் குமார். கடந்த இரு சீசன்களிலும் அவர், அதிக விக்கெட்கள் வேட்டையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானும் சுழலில் நெருக்கடி கொடுக்க ஆயத்தமாகி உள்ளார்.

வார்னருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஷிகர் தவணுடன் தொடக்க வீரராக இடம் பெறக்கூடும். கேப்டன் வில்லியம்சன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, மணீஷ் பாண்டே ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கக்கூடும்.

அதிலும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 20 பந்தில் சதம் விளாசியிருந்த சஹா மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. பின்கள வரிசையில் ஆல் ரவுண்டர்களான யூசுப் பதான், கார்லோஸ் பிராத்வெயிட், ஷகிப் அல்ஹசன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

 

அணி விவரம்

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ஷிகர் தவண், விருத்திமான் சஹா, அலெக்ஸ் ஹேல்ஸ், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், ஷகில் அல் ஹசன், சந்தீப் சர்மா, கார்லோஸ் பிராத்வெயிட், யூசுப் பதான், முகமது நபி இசாகில், கிறிஸ் ஜோர்டான், பில்லி ஸ்லான்லேக், சித்தார்த் கவுல், தீபக் ஹூடா, சயத் ஹலீல் அகமது, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, பசில் தம்பி, என்.நடராஜன், பிபுல் சர்மா, மெகதி ஹசன், ரிக்கி புயி, சச்சின் பேபி, தன்மே அகர்வால்.

http://tamil.thehindu.com/sports/article23450960.ece

Link to comment
Share on other sites

மஹேலவின் பார்வையில் இம்முறை ஐ.பி.எல் தொடர்

1-81-696x464.jpg Mumbai indians Twitter
 

இம்முறை .பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மீண்டும் திரும்பியுள்ளதால் நடப்புச் சம்பியனாக கிண்ணத்தை தக்கவைப்பது தமக்கு கடினம் எனவும், இம்முறை .பி.எல் தொடரில் தமது அணி கடினமாக சவால்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்

 

11ஆவது .பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை மும்பையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முன்னாள் சம்பியனும், 2 ஆண்டுகள் போட்டித் தடைக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கவுள்ள தரப்பினருமான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவானுமான மஹேல ஜயவர்தன மற்றும் அதன் தலைவர் ரோஹித் சர்மா பங்கேற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று(06) மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மஹேல கருத்து வெளியிடுகையில்,

”கடந்த வருடம் நாம் சம்பியனாக முடிசூடிக் கொண்டாலும், இம்முறை போட்டித் தொடரில் அதனை மீண்டும் தக்கவைத்துக்கொள்வது கடினம் என்றே சொல்லாம். எந்த அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதை ஊகித்துக் கூற முடியாது உள்ளது.

அதிலும், இம்முறை போட்டித் தொடரில் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்ததாக களமிறங்கவுள்ளது. எனவே, போட்டித் தொடரை வெல்வதற்கு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளில் பல புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, அந்த அணிகளுடன் விளையாடுவது மிகப் பெரிய சவாலாக அமையும். நாம் இறுதிப் போட்டிக்காக திட்டங்களை மேற்கொண்டாலும், தற்போது எவ்வாறு முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அவ்வாறுதான் நாம் இப்போட்டித் தொடரில் முன்னே செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

 

இதேநேரம், சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த இரு அணிகளும் .பி.எல் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது. ராஜஸ்தான் ரோயல் அணிதான் அங்குரார்ப்பண .பி.எல் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது. எனினும், அந்த அணிக்காக விளையாடிய பல அனுபவமிக்க வீரர்கள் தற்போது இல்லை. அதிலும் குறிப்பாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ளையாடுவது எமக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும், என்று மஹேல ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை .பி.எல் தொடரில் டி.ஆர்.எஸ் முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பாதி தொடரின்போது, இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை எனில், அடுத்த அணி அவ்வீரரை ஏலத்தில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முடிவுகளையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து மஹேல கருத்து வெளியிடுகையில்ஐபிஎல் அணிகள் புதுமையான வகையில் முன்னேற இந்த முறைகள் பரிணாமமாக அமையவுள்ளது. இது ஒரு சிறந்த மாற்றுவழி. ஒரு தொடரில் பாதியில் அணிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள அருமையான வாய்ப்பாகும்.   

சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பாதி தொடரின்போது, இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை எனில், அடுத்த அணி அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருப்பது மிகவும் நல்லது. இவை அனைத்தும் வீரர்களை அணிகள் பெறுவது அல்லது வெளியேற்றுவதை சார்ந்தது.

 

அத்துடன், டி.ஆர்.எஸ் முறைமை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது .பி.எல் தொடரிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தவறுகள் நடப்பதுதான், டி.ஆர்.எஸ் அதற்கு உதவியாக இருக்கும். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதை எப்படி கையாள வேண்டும் என்பது சர்வதேச வீரர்களுக்கு தெரியும். இளம் வீரர்களுக்கு கற்றுக் கொள்ளும் சிறந்த அனுபவமாக இருக்கும்என்றார்.

இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைர் ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், மஹேல கூறியது போல் நாங்கள்தான் சம்பியன் பட்டத்தை வெல்ல சாதகமான அணி என்ற நிலையில் களமிறங்க வேண்டியதில்லை. ஏனைய அணிகளுடன் சம அளவில் உள்ள அணி என்றே தொடருக்குள் நுழைய விரும்புகிறோம். தொடரை வெல்ல என்ன வேண்டுமோ அது எங்களிடம் இருக்கிறது.

.பி.எல் தொடரின் நடப்புச் சம்பியன் என்ற அடையாளம் அழுத்தம் ஏற்படுத்துவதாக நான் பார்க்க மாட்டேன். மாறாக, அது பொறுப்புடைமை. ஆம், நாங்கள் கடந்த .பி.எல் தொடரில் சம்பியன். அதை நினைத்து பெருமைப்படுகிறோம். இப்போது சரியான அணிச் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எமது அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால், கடந்த வருடம் மாலிங்க போர்மில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு பொறுப்பைச் சுமந்தார். அதிலும் கடந்த ஆண்டு மாலிங்கவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் மிட்செல் ஜொன்சன், மிட்செல் மெக்லினெகன் ஆகியோரை மாற்றி மாற்றி பயன்படுத்தினோம். இந்த ஆண்டு பும்ரா மீது அதிக அழுத்தம் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.  

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

வெற்றி விகிதம் மும்பை சார்பாக 12:10; தோனி எந்த நிலையில் இறங்குவார்? நாளை வெற்றியுடன் தொடங்குமா தோனி படை?

 

 
csk

படம். | விவேக் பெந்த்ரே.

2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ஆளுமை நிரம்பிய கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் இறங்க, 3 முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் ரோஹித் தலைமையின் கீழ் சென்னைக்குச் சவால் அளிக்க நாளை வான்கடேயில் களமிறங்குகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டம் உண்மையான ஆட்டம் போலவே நடைபெற சுமார் 20,000 ரசிகர்கள் குவிந்தனர்.

இரு அணிகளுக்குமிடையேயான ஒருவிதமான பகைமை அறியப்பட்டதே. இதுவரை இரு அணிகளும் 22 ஆட்டங்களில் மோதியுள்ளன, இதில் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறை வென்றுள்ளது.

தினேஷ் கார்த்திக் வங்கதேசத்துக்கு எதிராக பிரமிப்பூட்டும் அதிரடியில் இறுதிப் போட்டியில் எட்டே பந்துகளில் வங்கதேச அணியின் கோப்பைக் கனவை முறியடித்து இந்திய அணிக்கு அபார வெற்றி தேடித்தந்தார், இதனையடுத்து தோனியின் பினிஷிங் திறமைகள் பற்றி கார்த்திக்குடன் ஒப்பீடுகள் எழுந்து வருகின்றன.

தோனி எந்த டவுனில் இறங்குவார்?

தோனியும் கடந்த சில போட்டிகளாக குறைந்த ஓவர் போட்டிகளில் சரிவர ஆட முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் அவருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தோனி கடைசியாக ஆகஸ்ட் 2016-ம் ஆண்டில் மே.இ.தீவுகளுக்கு எதிராக புளோரிடாவில் நடைபெற்ற டி20 போட்டியில் கேப்டன்சி செய்ததோடு சரி, அந்தப் போட்டியில் பிராவோ பந்தை ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் கொடுக்க இந்திய அணி தோல்வியடைந்தது.

அதன் பிறகு தற்போது சென்னை அணிக்காக தலைமைப்பணிக்குத் திரும்பியுள்ளார் தோனி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை மட்டுமே 15 ரன்களைக் கடந்துள்ளார். அந்தத் தொடர் முடிவில் ஸ்ட்ரைக் ரேட் 80 தான். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் டி20 போட்டியில் தோனி 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசியது நினைவிருக்கலாம்.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தன் வழக்கமான டவுன் ஆர்டரிலிருந்து சற்றே முன்னமேயே களமிறங்குவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி 6-ம் நிலையில் களமிறங்கிய போது அவரது சராசரி 27.50 ஸ்ட்ரைக் ரேட் குறைவான 113%தான். 4ம் நிலையில் தோனி இறங்கியபோது சராசரி 35.83, ஸ்ட்ரைக் ரேட் 141 ஆகும். 5-ம் நிலையில் தோனி இறங்கிய போது சராசரி 46.12, ஸ்ட்ரைக்ரேட் 147.72.

எனவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் தோனி 5-ம் நிலையில் களமிறங்குவதே சரியாக இருக்கும். மேலும் அவரிடம் ஸ்ட்ரோக்குகள் குறைந்து விட்டன, இன்று பவுலர்கள் விரல்களின் மூலம் வீசுவது ஸ்லோ பவுன்சர் என்றேல்லாம் தேறியிருக்கும் நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக ஃபுல் லெந்தில் வீசினால் தோனி 1 ரன் எடுக்கவே திணறுவதைத்தான் பார்த்து வருகிறோம். பவர் ப்ளே இருக்கும் போது தொடக்கத்தில் இறங்கி நாலு சாத்து சாத்தினால் அவரது பழைய அதிரடி அவருக்கு மீண்டும் கை கூடலாம்.

சென்னை அணியில் முரளி விஜய், டுபிளெசிஸ், மார்க் உட் நீங்கலாக ஒருவரும் அந்தந்த நாட்டு டெஸ்ட் அணியில் இல்லாதவர்கள். 11 வீரர்கள் 30 வயதுக்கும் அதிகமானவர்கள். ஷேன் வாட்சன் பிபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீகில் பார்முக்கு வந்தார். முரளி விஜய் பெரிய ஹிட்டர் என்பதை விட ரன் சேர்ப்பவர் என்றே கூற வேண்டும், டுபிளெசிஸ் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டு வருகிறார், எனவே ஒரு மந்தமான தொடக்கம் அவ்வளவு பார்மில் இல்லாத தோனி, ரெய்னாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். கேதார் ஜாதவ்வும் சமீபமாக உயர்மட்ட கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஜடேஜாவை பேட்டிங்கில் நம்பலாம் என்று தெரிகிறது. ராயுடுவை நம்ப முடியாது. சென்னை பேட்டிங்கை விட பவுலிங் நன்றாக உள்ளது, மார்க் உட், லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர் இருந்தாலும் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் பயன்படுத்த முடியும் எனும்போது டுபிளெசிஸ் வாட்சன் அணியில் இடம்பெறுவார்கள், பவுலிங்கில் இம்ரான் தாஹிர் இருப்பார், மார்க் உட்டோ அல்லது லுங்கி இங்கிடி ஆகிய இருவரில் ஒருவரைத்தான் பயன்படுத்த முடியும்,. ஜடேஜா, ஹர்பஜன் கூடுதல் பலம்..

மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா ஒரு பெரிய பார்மில் இருக்கிறார், அதிரடி வீரர் எவின் லூயிஸ் தொடக்கத்தில் ஒரு கிறிஸ் கெய்ல் போன்ற சரவெடி வெடிப்பவர். டுமினி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர்கள். தவிரவும் அனுபவமிக்க கெய்ரன் பொலார்ட் இருக்கிறார், பொலார்டின் பீல்டிங் ஒரு பெரிய பலம்.

சென்னை அணி (உத்தேசமாக): விஜய், வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, தோனி, ஜடேஜா, ஜாதவ்/ராயுடு, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், டிவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர்

மும்பை அணி (உத்தேசமாக): ரோஹித் சர்மா, எவின் லூயிஸ், இஷான் கிஷன், டுமினி/பென் கட்டிங், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, பொலார்ட், மிட்செல் மெக்லினாகன், பும்ரா, தனஞ்ஜயா, சங்வான்/முஸ்தபிசுர் ரஹ்மான்

http://tamil.thehindu.com/sports/article23456783.ece

Link to comment
Share on other sites

கரை சேருவாரா அஸ்வின்?

 

 
06CHPMURASHWIN

ரவிச்சந்திரன் அஸ்வின்   -  PTI

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. முன்னதாக 2008-ல் அரை இறுதியில் கால்பதித்திருந்தது. இதைத் தவிர்த்து பஞ்சாப் அணி மற்ற 8 சீசன்களிலும் ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த சீசனுக்காக அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 8 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் 120 விக்கெட்கள் கைப்பற்றினார். அணியின் துருப்பு சீட்டாக இருந்த அவரை, இந்த சீசனில் சென்னை அணி ஏலத்தில் தக்க வைத்துக்கொள்ளவில்லை.

குறுகிய வடிவிலான போட்டிகளில் சமீபகாலமாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அஸ்வின் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கேப்டனாக அவர், மாநில அணியை ஏற்கெனவே வழிநடத்தி உள்ளதால் நெருக்கடியை எளிதாக கையாளக்கூடும். பேட்டிங்கில் ஆரோன் பின்ச், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் அதிரடி வீரர்களாக உள்ளனர். அதேவேளையில் கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், டேவிட் மில்லர் ஆகியோரது பார்ம் சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் பலவீனமாக கருதப்படுகிறது. அஸ்வினுடன், அக்சர் படேல் மட்டுமே சுழலில் பலம் சேர்ப்பவராக உள்ளார். வேகப் பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆண்ட்ரூ டையை அணி பெரிதும் சார்ந்திருக்கக்கூடும்.

 

அணி விவரம்

ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், கருண் நாயர், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டாய்னிஸ், பரிந்தர் சிங் சரண், அனிகெட் சிங் ராஜ்புத், முஜீப் ஸத்ரன், மன்சூர் தார், அக்சர் படேல், பிரதீப் சகு, ஆகாஸ்தீப் நாத், மயங்க் தகார், மோஹித் சர்மா.

http://tamil.thehindu.com/sports/article23450952.ece

Link to comment
Share on other sites

ஸ்மித், வார்னர், ஸ்டார்க்... இவர்களுக்கு பதிலாக களமிறங்குபவர்களின் பிளஸ், மைனஸ் என்ன?! #IPL2018

 
 
Chennai: 

கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஐ.பி.எல் -11 சீசன் (IPL2018) வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் கோப்பை அறிமுக விழாவுக்குப் பின், இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது.

IPL2018

ஐ.பி.எல் தொடங்குவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், சில முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். இதனால் கடைசி நேரத்தில் மாற்று வீரர்களை அணிகள் அறிவித்து வருகின்றன. இதில் ஸ்மித், வார்னரைத் தொடர்ந்து, ஐ.பி.எல்- தொடரில் இருந்து ஸ்டார்க், கூல்டர் நைல், பெஹரன்டார்ஃப் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர்.  இவர்களுக்குப் பதிலாக ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத டாம் குர்ரான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), கோரி ஆண்டர்சன் மற்றும் மிட்ச்செல் மெக்லீனகன் (நியுசிலாந்து), தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்ன்ரிச் கிளாஸன் உள்ளிட்டோர் ஐ.பி.எல்- தொடரில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் நியூசிலாந்தைச் சேர்ந்த 26 வயதான ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னரை பெரிதும் நம்பியிருந்தது. அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு அவரை வாங்கியிருந்தது. ஆனால், காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அணியில் போதுமான வீரர்கள் இருப்பதால், இவருக்கு மாற்றாக இதுவரை யாரையும் சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிக்கவில்லை. அதேபோல, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரபாடா காயத்தால் அவதிப்பட்டுள்ளார். அவரை மூன்று மாதங்கள் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருக்குப் பதிலாக மாற்று வீரரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி இன்னும் அறிவிக்கவில்லை. ரபாடாவை டெல்லி அணி ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

மிட்ச்செல் ஸ்டார்க்  -  டாம் குர்ரான்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில், வலது முழங்காலின் கீழ்ப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஸ்டார்க் ஆடவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் அவர் விலகியிருக்கிறார். 28 வயதான ஸ்டார்க், இம்முறை ரூ.9.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை, 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா. சுர்ரே கவுன்ட்டி அணிக்காக விளையாடிய இவர், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி-20 போட்டியில் அறிமுகமானார். ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் குர்ரான் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார். 

மிட்ச்செல் ஸ்டார்க்  -  டாம் குர்ரான்

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இறுதிகட்ட ஓவர்களில் தனது யார்க்கர்களால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். டெயில் எண்டராக இருப்பினும் பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர். இதுவரை இங்கிலாந்துக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டி, 6 T20 போட்டிகளில் விளையாடியுள்ள  23 வயதான டாம் குர்ரன், இதற்கு முன்பு 51 உள்ளூர் T20 லீக் போட்டிகளில் 128.36 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஏற்கெனவே, கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், ஆண்ட்ரூ ரஸெல் ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதால், அது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பின்னடைவே. மேலும், சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில், பந்தை எறிவதாக கொல்கத்தாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் மீது அம்பயர்கள் புகார் கூறினர். ஐபிஎல்-லில் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றாலும், போட்டிகளின்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரின் பந்துவீச்சு முறை தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. 
 

டேவிட் வார்னர் - அலெக்ஸ் ஹேல்ஸ்

டேவிட் வார்னர் - அலெக்ஸ் ஹேல்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன்  டேவிட் வார்னருக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவருக்கு, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி மறுத்தது. ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்தின் ஓபனிங் பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத இவர், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 29 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்துக்காக 52 சர்வதேச T 20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 7 அரைசதம் உள்பட 1,456 ரன்களை அடித்திருக்கிறார். சர்வதேச T 20 போட்டிகளில், இங்கிலாந்து சார்பில் சதமடித்திருக்கும் ஒரே பேட்ஸ்மேனான இவர், 2015-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் - ஹெய்ன்ரிச் கிளாஸன்

ஸ்டீவ் ஸ்மித் - ஹெய்ன்ரிச் கிளாஸன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கும் மற்றொரு அணிதான் ராஜஸ்தான் ராயல்ஸ். வீரர்களுக்கான ஏலத்துக்கு முன்பாகவே, 'ஆஸ்திரேலியாவின் விராட் கோலி' எனப் புகழப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை, 12 கோடிக்கு அந்த அணி தக்க வைத்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தால் கிரிக்கெட்டிலிருந்து ஒரு வருடத்துக்குத் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹெய்ன்ரிச் கிளாஸன் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். இவர் இந்த ஆண்டு இந்தியாவில் எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 27 பந்துகளில் 43 ரன்களை விளாசி, 'தென் ஆப்பிரிக்கா பிங்க் நிற உடையணிந்து விளையாடிய போட்டிகளில் தோற்றதில்லை' என்ற சாதனையைத் தக்கவைக்க உதவினார். T20 கிரிக்கெட்டில் 146 எனும் அட்டகாசமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கும் ஹெய்ன்ரிச் கிளாஸனை, அவரது அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது ராஜஸ்தான். 26 வயதான இவர், தென் ஆப்பிரிக்காவுக்காக 4 ஒருநாள் போட்டி மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

நாதன் கூல்டர்நைல் - கோரி ஆண்டர்சன்

நாதன் கூல்டர்நைல் - கோரி ஆண்டர்சன்

ஐ.பி.எல் ஏலத்தில் 2.2 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கூல்டர்நைலை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. 30 வயதான இவர், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால், ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கான மாற்று வீரராக, நியூசிலாந்தைச் சேர்ந்த கோரி ஆண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஏலத்தில் விலை போகாத இந்த ஆல்ரவுண்டரை, அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி, 142 ரன்களும் 3 விக்கெட்களும் எடுத்திருந்தார். 

ஜேசன் பெஹரன்டார்ஃப் - மிட்ச்செல் மெக்லீனகன்

ஜேசன் பெஹரன்டார்ஃப் - மிட்ச்செல் மெக்லீனகன்

 

ஐ.பி.எல் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளள் ஜேசன் பெஹரன்டார்ஃபை, மும்பை அணி வாங்கியது. 27 வயதான இவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால், இவர் இந்தியாவுக்கு எதிராகக் கடந்தாண்டு நடைபெற்ற T20 போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதை, கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தினால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கான மாற்று வீரராக, நியூசிலாந்தைச் சேர்ந்த மிட்செல் மெக்லீனகனைத் தேர்ந்தெடுத்துள்ளது, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி.  ஏலத்தில் விலை போகாத இவரை, அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2 சீசன்களில் மும்பை அணிக்காக 40 போட்டிகளில் விளையாடி, 54 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

https://www.vikatan.com/news/sports/121406-smith-warner-starc-who-are-the-replacement-players-in-ipl.html

Link to comment
Share on other sites

அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங்கை மும்பை இந்தியன்ஸ் இழக்கிறது: அனில் கும்ப்ளே வேதனை

 

 
KUMBLE1

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே : கோப்புப் படம்

அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாத இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணி உணரும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே தெரிவித்தார்

11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நாளை மும்பையில் தொடங்குகிறது. வான்ஹடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டித்தொடருக்குள் வருவதால், அந்த அணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்றுவந்த அனுபவ வீரரும் ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ஆதலால், இது சென்னை அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே இன்று தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாததை நிச்சயமாக உணரும். அதேசமயம், குர்னல் பாண்டியா மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர், அவர்தான் இந்த முறை மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்த வேண்டும்.

அணியில் லெக் ஸ்பின்னர் ராகுல் இருந்தபோதிலும், அவர் அனுபவமற்றவர். ஹர்பஜன் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஹர்பஜனால் பேட்டிங்கில் கூட சிறப்பாகச் செயல்பட முடியும்.

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்திபிஜுர் ரஹிம், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரருக்கு தொடக்க ஓவர்களை நன்றாக வீசும பொறுப்பு இருக்கிறது. அதேசமயம், மல்லிங்காவின் பந்துவீச்சையும் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துவிட்டது. ஆனால், அவர் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக மாறிவிட்டார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் பலர் ஐபிஎல் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ளவும் இந்திய அணியில் இடம்பிடிக்கவும் இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.

குறிப்பாக பிரித்திவ் ஷா, நாகர்கோட்டி ஆகியோர் வாய்ப்பை நன்கு பயன்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஐபிஎல் மூலமே அணியில் இடம் பெற்றவர்கள். இவர் மீது மக்கள் ஒரு விதமான எதிர்பார்ப்புடனே இருப்பார்கள். இவர்களும் இந்த சீசனில் சிறப்பாக செயல்படவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆதலால், உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரரும், ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள தங்களின் திறனையும், திறமையையும் வெளிப்படுத்த நல்ல களமாகும். இது இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.''

இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23459308.ece

Link to comment
Share on other sites

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை

 

 
07CHPMUDHONI2

மகேந்திர சிங் தோனி   -  AFP

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இரு வருடங்களுக்குப் பிறகு திரும்பி உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியை காண்பதற்கு கூட்டம் நிரம்பி வழிந்ததே இதற்கு சாட்சி. புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ள சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தவிர ரசிகர்களிடம் வேறு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.

இதற்கிடையே கடந்த சிலதினங்களுக்கு முன்பு “ரசிகர்களைவிட இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்” என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மிரட்டும் பேட்டிங் வரிசையை கடந்த 10 வருடங்களாக கொண்டிருந்த போதிலும் பெங்களூரு அணி ஒருமுறை கூட மகுடம் சூடவில்லை என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாகவே விராட் கோலியின் கருத்து அமைந்ததாக பார்க்கப்படுகிறது.

கோப்பையை வெல்வதற்கு முனைப்பு காட்டும் விதமாக அந்த அணியின் பந்து வீச்சு துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக யுவேந்திரா சாஹலுடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்துள்ளது பெரிய அளவில் கைகொடுக்கும் என கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரையும் வளைத்துப் போட்டுள்ளனர்.

காயம் மற்றும் தடை காரணமாக உலகத்தரம் வாய்ந்த சில நட்சத்திர வீரர்கள் இந்தத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் லாபகரமான இந்தத் தொடரில் இம்முறை விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிக்கு இழப்புதான். எனினும் அந்த அணிகள் முறையே அஜிங்க்ய ரஹானே, கேன் வில்லியம்சன் ஆகியோரது தலைமையில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டது.

ராஜஸ்தான் அணி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் (ரூ.12.5 கோடி), ஜெயதேவ் உனத்கட் (ரூ.11.5 கோடி) ஆகியோருக்காக மட்டும் அதிக தொகையை செலவிட்டது. இவைதவிர தேசிய அணிக்காக இதுவரை விளையாடாத இங்கிலாந்து கவுன்டி வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.7.2 கோடிக்கும், கர்நாடக வீரர் கே.கவுதமை ரூ.6.2 கோடிக்கும் ஏலம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர்களுடன் பிபிஎல் நட்சத்திர பேட்ஸ்மேன் டி’ஆர்சி ஷார்ட், ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் கணிசமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

2016-ம் ஆண்டு சாம்பியனான ஹைதராபாத் அணியில் வார்னர் இல்லாததால் டாப் ஆர்டரில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ், ஷிகர் தவணுடன் இணைந்து நிரப்பக்கூடும். அந்த அணி கடந்த சீசனில் விளையாடிய வீரர்களின் ஒரு குழுவை தக்கவைத்துக்கொண்டுள்ளது நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுகிறது. மணீஷ் பாண்டே, யூசுப் பதான், கார்லோஸ் பிராத்வெயிட் ஆகியோரது வருகையால் அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெறக்கூடும். வேகப் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோரும் சுழலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் சிறந்த பங்களிப்பு செய்ய காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒருவித அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. தோனி தலைமை வகிக்கும் சென்னை அணியில் ஒட்டுமொத்தமாக இடம் பெற்றுள்ள வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்களாக உள்ளனர். எனினும் இந்த சீசனை அந்த அணி அனுபவ வீரர்களை கொண்டே அணுகுகிறது. அனைவரது கவனமும் தோனி மீது திரும்பி உள்ளது. தனது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட காலமாக போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனை கொண்டிருந்த அவர், மீண்டும் அந்த பணியில் திறம்பட செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் மேலோங்கியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஐபிஎல் தொடரை சிறந்த களமாக தோனி பயன்படுத்தக்கூடும். சென்னை அணியின் மற்ற முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளெஸ்ஸிஸ், டுவைன் பிராவோ ஆகியோர் உள்ளனர்.

கவனிக்கப்படக்கூடிய மற்றொரு அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திகழ்கிறது. அந்த அணி கவுதம் காம்பீரின் சேவையில் இருந்து விலகி இம்முறை, திடீரென புகழ் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையில் தொடரை சந்திக்கிறது. கொல்கத்தா அணிக்காக 7 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி காம்பீர் இரு முறை கோப்பையை வென்று கொடுத்திருந்தார். இதனால் அவரது வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி தினேஷ் கார்த்திக்குக்கு உள்ளது. இளம் வீரர்களான சுப்மான் கில், கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க அனைத்து சீசன்களிலும் பெரிய அளவில் சோபிக்காத டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இந்த சீசனில் வழிநடத்த உள்ளார் கவுதம் காம்பீர். இவரது அனுபமும், புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் ஆக்ரோஷ அணுகுமுறையும் கைகொடுக்கக்கூடும் . யு-19 நட்சத்திர வீரர்களான அபிஷேக் சர்மா, மன்ஜோத் கர்லா, பிருத்விஷா ஆகியோர் தங்களது திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.

டெல்லி தனது முதல் ஆட்டத்தில் சந்திக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நட்சத்திர வீரர்களை அதிகம் உள்ளடக்கியுள்ளது. கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங் ஆகியோரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டுவருவது அணி நிர்வாகத்துக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும். கேப்டனாகவும், முதன்மை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ள அஸ்வினுக்கும் நெருக்கடி காத்திருக்கிறது. இந்திய அணியில் குறுகிய வடிவிலான போட்டிகளில் தனது இடத்தை இழந்துள்ள அஸ்வின், உயரிய திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆரோன் பின்ச், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர் ஆகியோரும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர்.

ஐபிஎல் வராலாற்றில் வெற்றிகரமாக வலம் வரும் நடப்பு சாம்பினான மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் நீண்ட கால கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை இழந்துள்ளது மட்டுமே சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது இடத்தை கிருனல் பாண்டியா நிரப்பக்கூடும். ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொல்லார்டு ஆகியோர் தங்களது அதிரடி பேட்டிங்காலும், பும்ரா தனது யார்க்கர்களாலும் எதிரணியை புரட்டிப் போட தயாராக உள்ளனர்.

தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோசன், வருண் தவண் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் தொடங்கும் கலை நிகழ்ச்சிகள் சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.50 கோடி பரிசுத் தொகை

ஐபிஎல் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 கோடி. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.26 கோடி வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும், பிளே ஆப் சுற்றுடன் வெளியேறும் இரு அணிகளுக்கு தலா ரூ.9 கோடி வழங்கப்படும். இவை தவிர மீதி உள்ள தொகை மற்ற அணிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.

http://tamil.thehindu.com/sports/article23462639.ece?homepage=true

Link to comment
Share on other sites

பாண்டிங் வழிநடத்த... கம்பீர் தலைமைதாங்க... கோப்பையை குறிவைக்கும் டெல்லி! -டேர்டெவில்ஸ் ரிவ்யூ!

 

ஐ.பி.எல் போட்டிகளில் யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத அணிகளில் ஒன்றாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறது. சேவாக், கம்பீர் என உள்ளூர் வீரர்களும் ஏபி டி வில்லியர்ஸ், கிளன் மெக்ராத் என பன்முகத்தன்மைக்கொண்ட வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை அரை இறுதிக்கு தகுதிப் பெற்றது. பின்பு நான்காவது சீசனில் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு வெளியேற, டி வில்லியர்ஸ் பெங்களூரு பக்கம் போக, சேவாக்கின் ஃபார்ம் மோசமடைய 2010 & 2011ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் மற்றும் எட்டாம் இடங்களைப் பிடிக்கவே, டெல்லி ரசிகர்களே அணியின் மீதிருந்த நம்பிக்கையை இழக்கத் துவங்கினர்.

டெல்லி டேர்டெவில்ஸ்

கம்பீர் கொல்கத்தா சென்று தன்னை நிரூபித்துக்கொண்டு இரண்டு முறை கோப்பையை கைப்பற்றினார். சேவாக் பஞ்சாப் அணிக்காக அடித்து நொறுக்கி அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார். தவான் ஹைதராபாத் அணியில் நிரந்தர இடம்பிடிக்க டெல்லி அதனுடைய தனித்தன்மையை இழந்தது. ராகுல் திராவிட் இளைஞர்களைக் கொண்டு ராஜஸ்தானைப் போல கட்டமைக்க எண்ணினாலும் பெரிதாக சோபிக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்து வீரர்களும் ஏலத்தில் வந்தாக வேண்டுமென்கிற நிலையில் இம்முறை டெல்லி அட்டகாசமாக விழித்துக்கொண்டது என்றேதான் சொல்ல வேண்டும்.

கவுதம் கம்பீர் மீண்டும் டெல்லிக்காக விளையாட வேண்டுமென்று முடிவெடுத்ததே இதற்கு அச்சாணி. அவரைக் கேப்டனாகக் கொண்டு ஏலத்தில் அனாயசமாக வீரர்களை வாங்கி குவித்தனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள்,ஆல் ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவரையும் முதல் நாளே டெல்லி பக்கம் இழுத்தார் ரிக்கி பான்டிங். மும்பை அணியின் பயிற்சியாளராக கோப்பையை வென்றவர் இப்போது டெல்லி அணியை தன்னுடைய ட்ரேட்மார்க் ஆக்ரோஷத்தின் மூலம் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் கம்பீர் போன்ற ஒரு ஆளுமைக்கு பாண்டிங் நிச்சயம் ஒத்துப்போவார்.

தென்னாப்பிரிக்காவின் அதிவேக பந்துவீச்சாளரும் டெஸ்ட் தரவரிசையில் முதன்மை இடத்திலிருக்கும் ககிஸோ ரபாடா, க்றிஸ் மாரிஸ், நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் காலின் மன்றோ, இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ட்ரென்ட் போல்ட், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், இங்கிலாந்தின் ஜேசன் ராய் என அயல்நாட்டில் சிறந்து விளங்கும் டாப் வீரர்களை கட்டம் கட்டி அசால்ட்டாக தூக்கினர். இதனைத் தாண்டி, இந்தியாவின் முகமது ஷமி, சென்ற ஐபிஎல்லில் தெறிக்கவிட்ட ரிஷப் பன்ட், 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, மும்பையின் இளம் சரவெடி ஸ்ரேயாஷ் ஐயர் என கம்பீர் சீட்டு குலுக்கிப்போட்டு11 வீரர்களை இவர்களில் தேர்ந்தெடுத்தால் கூட மற்ற அணிகளுக்கு பெரிதும் சவால் விடக்கூடிய அணியாக இருக்கும்.

கம்பீர் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு விளையாடுவதை பெரிதும் விரும்புவார். கொல்கத்தாவை வழிநடத்தியபோது, சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, குலதீப் யாதவ் போன்றவர்களைக்கொண்டு மிடில் ஓவர்களை கட்டுக்குள் வைத்திருப்பார். அமித் மிஸ்ரா, ஷபாஷ் நதீம், ராகுல் தெவேதியா என அழகாக டெல்லியின் ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இரண்டு லெக் ஸ்பின்னர் மற்றும் ஒரு இடது கை பந்துவீச்சாளர் என சூழலின் கோட்டாவையும் டிக் அடித்து விட்டனர்.

கம்பீர், ப்ரித்வி ஷா, ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல், மோரிஸ், அமித் மிஸ்ரா, ரபாடா, குர்க்ரீத் மான், போல்ட், நதீம் - இதுதான் அனேகமாக பிளேயிங் லெவனாக இருக்கும்! 

36 வயதில் சொந்த மண்ணிற்கு மீண்டும் திரும்பியுள்ள கம்பீருக்கு இருக்கக்கூடிய ஒரே ஆசை என்னவெனில், தான் ஆடிய பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மீண்டும் டெல்லி அணியை எழுச்சியடைய செய்து முதன்முறையாக டெல்லிக்கு கோப்பையை வெல்லவேண்டுமென்பதே. மும்பையை வெற்றிக்கு இட்டுச்சென்ற ரிக்கி பான்டிங் உடனிருக்க, தலைநகர் டெல்லியை ஐபிஎல்லில் தலைநிமிர வைப்பாரா கம்பீர்.

https://www.vikatan.com/news/sports/121430-a-review-on-delhi-daredevils-ipl-team.html

Link to comment
Share on other sites

IPL 2018 OPENING CEREMONY LIVE UPDATES

source.gif

  • sample

    ஐ.பி.எல் கலைநிகழ்ச்சிகள் முடிந்தன. இன்னும் 25 நிமிடத்தில் இந்த சீசனின் முதல் டாஸ். தோனியின் என்ட்ரிக்கு கெட் ரெடி..!

    2 minutes ago
     
     
  • sample

    ஐ.பி.எல் தொடக்க விழாவில் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா #IPL2018

    7 minutes ago
     
     
  • sample

    1_18185.png

    8 minutes ago
     
     
  • sample

    டான்ஸ் கிங் ஹிரித்திக் ரோஷன் நடனத்தில் அதிரும் வான்கடே..! 

    11 minutes ago
     
     
  • sample

    8 ஐ.பி.எல் அணிக் கேப்டன்களின் உறுதிமொழி #IPL2018

    16 minutes ago
     
     
  • sample
    23 minutes ago
     
     
  • sample

    வான்கடே மைதானத்தில் மும்பை ரசிகர்களுக்கு முன்பே 'எல்லோ ஆர்மி' நிறைந்துவிட்டது. விசில்கள் பறந்துகொண்டிருக்கின்றன #IPL2018

    22_18323.png

    32 minutes ago
     
     
  • sample

    குலேபா...!

    33_18330.png

    33 minutes ago
     
     
  • sample

    மும்பை வான்கடே மைதானத்தில் இப்போதே தமிழ்ப் புயல் வீசத் தொடங்கிவிட்டது. தொடக்கவிழாவில் நடனப்புயல் பிரபுதேவா கலக்கல் டான்ஸ்

     

    39 minutes ago
     
     
  • sample

    ஐ.பி.எல் தொடக்கவிழா #IPL2018

    1_18487.png

     

    42 minutes ago
     
     
  • sample

    ஐ.பி.எல் 2018 தொடக்கவிழா தொடங்கிவிட்டது : பாலிவுட் ஸ்டார் வருண் தவான் நடனத்தோடு 11-வது ஐ.பி.எல் சீசன் கலர்ஃபுல்லாக தொடங்கியுள்ளது.

    46 minutes ago
     
     
  • sample

    ரசிகர்கள் தேர்ந்தெடுத்த மும்பை, சென்னை லெவனில், 7சி.எஸ்.கே வீரர்கள்

    48 minutes ago
     
     
  • sample

    வருண் தவான், ஜேகுலின் ஃபெர்னாண்டஸ், தமன்னா ஆகியோர் ஆட்டம் போட ரெடி. ஐ.பி.எல் திருவிழா இன்னும் சில நிமிடங்களில்..விசில் போட ஆர் யு ரெடி? 

    52 minutes ago
     
     
  • sample

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் #IPL2018

    30264537_1693379667395349_30741809444295

    1 hours ago
     
     
  • sample

    சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் - நேருக்கு நேர்

     
    1 hours ago
     
     
  • sample

    பத்து ஆண்டுகளில் பறந்த சிக்ஸர்கள் எத்தனை..? சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் விளசிய சிக்ஸர்கள் எத்தனை..? #IPL2018

    30221742_1693338214066161_74395847935509

    2 hours ago
     
     
  • sample

    காயமடைந்த டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ககிஸோ ரபாடாவுக்கு மாற்றாக இங்கிலாந்து ஃபாஸ்ட் பௌலர் லியாம் பிளங்கட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் #IPL2018

    skysports-liam-plunkett-england-odi-cric

    2 hours ago
     
     
  • sample

    5 hours ago
     
     
  • sample

    ஸ்மித், வார்னர், ஸ்டார்க்... இவர்களுக்கு பதிலாக களமிறங்குபவர்களின் பிளஸ், மைனஸ் என்ன?! #IPL2018..ஸ்பெஷல் ஸ்டோரி  https://bit.ly/2qcDuqR

    new3_12220.jpg

    7 hours ago
     
     
  • sample

    "வார்னர் இல்லனாலும் நாங்க ஜெயிப்போம்" - புது சீசன்... புது சன்ரைஸர்ஸ் #IPL2018

    Sunrisers Hyderabad

    1 days ago
     
     
  • sample

    சச்சின் முதல் பிராவோ வரை... ஆரஞ்ச் கேப்... பர்பிள் கேப்... இதுவரை யார் யார்..? #IPLstats #IPL2018 #VikatanPhotoCards

    1 days ago
     
     
  • sample

    சென்னை முழுதும் விசில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. ‘தல’ தோனி திரும்ப வந்துவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். இது சி.எஸ்.கே வெர்ஷன் 2.0! தில் இருந்தா மொத்தமா வாங்கலே!

    1 days ago
Link to comment
Share on other sites

ஐ.பி.எல் தொடக்க விழாவில் தமிழ்ப் பாடல்! களைகட்டிய 11-வது சீஸன்

 
 

வண்ணமயமான நடன நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல்-லின் 11-வது சீசன் தொடங்கியது. 

பிரபுதேவா

ஐ.பி.எல் கிரிக்கெட் 11வது சீஸன் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழா நிகழ்ச்சி, பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் நடனத்துடன் தொடங்கியது. மேலும், இந்தத் தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் என பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். பிரபுதேவா நடனத்தின்போது தமிழ் பாடலும் ஒலிக்கப்பட்டது. 

இந்தி நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடனமாடினார்கள். முன்னதாக தமன்னா பாகுபலி பாடலுடன் அறிமுகமாக, கலக்கல் நடனத்தினால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

https://www.vikatan.com/news/sports/121530-ipl-2018-inauguration-ceremony-started-with-tamil-songs.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.