Jump to content

Recommended Posts

திரும்பினார் ஷேன் வார்ன்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக

shane%20warne

ஷேன் வார்ன்.   -  கோப்புப் படம். | ஆர்.வி.மூர்த்தி.

2008 முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை சாம்பியன் பட்டத்துக்கு இட்டுச் சென்ற ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு ஆலோசகராக, அறிவுரையாளராகத் திரும்பியுள்ளார்.

ஐபிஎல் சாம்பியன் அணியாக ராஜஸ்தான் அணியை உயர்த்திய 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ளார் ஷேன் வார்ன்.

இதனை ஷேன் வார்ன் “தாயகம் திரும்பினார்” என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கொண்டாடுகிறது.

“ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, என் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் ராஜஸ்தான் அணிக்க்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. அணி உரிமையாளர்களும் ரசிகர்களும் காட்டிய அன்பை நினைக்கையில் எனக்கு புல்லரிக்கிறது.

இந்த முறை வலுவான, ஆற்றல் நிறைந்த இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களுடன் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008-2011 ஐபிஎல் தொடர்களில் ஆடிய ஷேன் வார்ன் 52 போட்டிகளில் 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ரூ.12.5 கோடிக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை ரூ.11.5 கோடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22741986.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

ஐ.பி.எல் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது, சென்னை சூப்பர் கிங்க்ஸ்!

 
 

CSK

 
 

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. மே 27-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டமாக அமையவிருக்கும் இந்தக் கிரிக்கெட் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 
சூதாட்டப் புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த ஆண்டு மீண்டும் போட்டியில் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு போட்டி தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 4 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 8 மணிக்கு இன்னொரு போட்டியும் நடக்கும். இந்த ஆண்டு முதல் போட்டி 5.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7 மணிக்கும் தொடங்கும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் மும்பையில் நடைபெறவிருக்கின்றன. முதல் ஆட்டத்தில் மோதும் அணிகளின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி இந்தப் போட்டி நடைபெறுகிறது. 

https://www.vikatan.com/news/sports/116429-ipl-2018-to-begin-on-april-7-with-mi-vs-csk.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 11-வது சீசன்: சிஎஸ்கே - மும்பை ஏப்.7ல் மோதல்

 

 
MCASTADIUMjpgjpg

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான 7-ம் தேதி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

60 லீக் போட்டிகளில் 12 ஆட்டங்கள் மாலை 4 மணிக்கும், 48 போட்டிகள் இரவு 8 மணிக்கும் நடைபெறுகின்றன. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2-வது ஆட்டத்தில் ஏப்ரல் 10-ம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 15-ம் தேதி இந்தூரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும், 20-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 22-ம் தேதி ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், 25-ம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், 28-ம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும், 30-ம் தேதி சேப்பாக்கத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியையும், மே 3-ம் தேதி கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் சந்திக்கிறது.

இதைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மாலை 4 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், 11-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 13-ம் தேதி சேப்பாக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், 18-ம் தேதி டெல்லியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியையும், 20-ம் தேதி சேப்பாக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

http://tamil.thehindu.com/sports/article22758342.ece

Link to comment
Share on other sites

ஏப்.7ல் முதல் போட்டி: ஐபிஎல் கிரிக்கெட் முழு அட்டவணை!

 

 
ipl

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்.

11-வது ஐபிஎல் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐபிஎல் அமைப்பு நேற்று இரவு வெளியிட்டது. இதில் 11-வது ஐபிஎல் போட்டிகள் முறைப்படி தொடக்கவிழா நிகழ்ச்சியுடன் ஏப்ரல் 6-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. அதன் பின் 7-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன.

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் கடந்த 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு விளையாட முடியாமல் இருந்த சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த முறை களமிறங்குவதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

11-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன.

போட்டி நடக்கும் நேரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதல் போட்டி மாலை 4 மணிக்கும், 2-வது போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும்.

ஏப்ரல் 7-ம் தேதி மும்பையில் நடக்கும் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

போட்டி அட்டவணையில் எளிமினேட்டர் மற்றும் 2-ம் தகுதியாளர்(குவாலிபயர்2) ஆகியோருக்கான போட்டி நடக்கும் இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இறுதி ஆட்டம் மும்பை வான்ஹடே மைதானத்திலேயே நடக்கிறது.

ஒட்டுமொத்தமாக இரவு நேரத்தில் 48 போட்டிகளும், 4 மணிக்கு நடப்பதில் 12 போட்டிகளும் என 60 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஒரே நாளில் இருஆட்டங்கள் நடக்கும் போட்டி ஏப்ரல் 8-ம் தேதி அன்றே தொடங்குகிறது. டெல்லியில் மாலை 4 மணிக்கு நடக்கும் முதலாவது ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது.பெங்களூருவில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் ெபங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

போட்டி அட்டவணை:


ஏப்.7(சனி): மும்பை இந்தியன்ஸ்/சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்:மும்பை, நேரம்: இரவு 8 மணி


ஏப்.8(ஞாயிறு):

அணிகள்: டெல்லி டேர்டெவில்ஸ்/ கிங்ஸ்லெவன் பஞ்சாப்

இடம்: டெல்லி, நேரம்: மாலை 4 மணி

அணிகள்: கொல்கத்தை நைட் ரைடர்ஸ்/ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி


ஏப்.9(திங்கள்):

அணிகள்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்/ ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு8 மணி


ஏப்.10(செவ்வாய்):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: சென்னை, நேரம்: இரவு 8 மணி


ஏப்.11(புதன்):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி


ஏப்.12(வியாழன்):

அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்/ மும்பை இந்தியன்ஸ்

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி


ஏப்.13(வெள்ளி):

அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு/கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி


ஏப்.14(சனி):

மாலை 4 மணி: அணிகள்: மும்பை இந்தியன்ஸ்/ டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: மும்பை,


இரவு 8 மணி அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: கொல்கத்தா.


ஏப்.15(ஞாயிறு):

அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ்/ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: மாலை 4 மணி

அணிகள்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்/சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: இந்தூர், நேரம்- இரவு 8 மணி


ஏப்.16(திங்கள்):

அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

 

ஏப்.17(செவ்வாய்):

அணிகள்: மும்பை இந்தியன்ஸ்/ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: மும்பை, நேரம்: இரவு 8 மணி

ஏப்.18(புதன்):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: ஜெய்பூர், நேரம்: இரவு 8 மணி

ஏப்.19(வியாழன்):

அணிகள்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்/ சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: இந்தூர், நேரம்: இரவு 8 மணி

ஏப்.20(வெள்ளி):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: சென்னை, நேரம்: இரவு 8 மணி

ஏப்.21(சனி):

அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/கிங்ஸ்லெவன் பஞ்சாப்

இடம்: கொல்கத்தா, நேரம்: மாலை 4 மணி

அணிகள்: டெல்லி டேர்டெவில்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: டெல்லி, நேரம்-இரவு 8 மணி

 

ஏப்.22(ஞாயிறு):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/ சன் ரைசர்ஸ் ஐதராபாத்

இடம்: ஐதராபாத், நேரம்: மாலை 4 மணி

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி

ஏப்.23(திங்கள்):

அணிகள்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்/ டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: இந்தூர், நேரம்: இரவு 8 மணி


ஏப்.24(செவ்வாய்):

அணிகள்: மும்பைஇந்தியன்ஸ்/சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: மும்பை, நேரம்: இரவு 8 மணி

ஏப்.25(புதன்):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி

 

ஏப்.26(வியாழன்):

அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்/ கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி


ஏப்.27(வெள்ளி):

அணிகள்: டெல்லி டேர்டெவில்ஸ்/கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

ஏப்.28(சனி):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/ மும்பை இந்தியன்ஸ்

இடம்: சென்னை, நேரம்: இரவு 8 மணி

 

ஏப்.29(ஞாயிறு):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/ சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: ஜெய்பூர், நேரம்: மாலை 4 மணி

அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம் இரவு 8 மணி

 

ஏப்.30(திங்கள்):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/ டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: சென்னை, நேரம்: இரவு 8 மணி

மே1(செவ்வாய்):

அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ்/மும்பை இந்தியன்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி

மே. 2 (புதன்):

அணிகள்: டெல்லி டேர்டெவில்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

 

மே 3 (வியாழன்):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

மே4(வெள்ளி):

அணிகள்: மும்பைஇந்தியன்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: மொஹாலி, நேரம்: இரவு 8 மணி

மே5(சனி):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: சென்னை, நேரம்: மாலை 4 மணி

அணிகள்: சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி


மே6(ஞாயிறு):

அணிகள்: மும்பை இந்தியன்ஸ்/ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: மும்பை, நேரம்: மாலை 4 மணி

அணிகள்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: மொஹாலி, நேரம்: இரவு 8 மணி


மே7(திங்கள்):

அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்/ராயல் சேலஞ்சர் பெங்களூரு

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி

மே8(செவ்வாய்):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/ கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி


மே9(புதன்):

அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/மும்பை இந்தியன்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி


மே10(வியாழன்):

அணிகள்: டெல்லி டேர்டெவில்ஸ்/ஹைதராபாத்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி


மே11(வெள்ளி):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/ சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி


மே12(சனி):

அணிகள்: பஞ்சாப்/கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: மொஹாலிர், நேரம்: மாலை 4 மணி

அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி

மே13(ஞாயிறு):

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்/சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: சென்னை, நேரம்: மாலை 4 மணி

அணிகள்: மும்பை இந்தியன்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: மும்பை, நேரம்: இரவு 8 மணி

மே14(திங்கள்):

அணிகள்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: மொஹாலி, நேரம்: இரவு 8 மணி

மே15(செவ்வாய்):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

மே16(புதன்):

அணிகள்: மும்பை இந்தியன்ஸ்/ கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: மும்பை, நேரம்: இரவு 8 மணி


மே17(வியாழன்):

அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு/சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: பெங்களூருர், நேரம்: இரவு 8 மணி


மே18(வெள்ளி):

அணிகள்: டெல்லி டேடெவில்ஸ்/ சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

மே19(சனி):

அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: ஜெய்ப்பூர், நேரம்:மாலை 4 மணி

அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்/ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: ஹைதராபாத், நேரம் இரவு 8 மணி


மே20(ஞாயிறு):

அணிகள்: டெல்லி டேர்டெவில்ஸ்- மும்பை இந்தியன்ஸ்

இடம்: டெல்லி, நேரம் மாலை 4 மணி

அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: சென்னை, நேரம் இரவு 8 மணி

மே22(செவ்வாய்)

டிபிசி- டிபிசி(முதலாம் தகுதிச்சுற்று)

இடம் : மும்பை, நேரம் இரவு 8 மணி


மே 23(புதன்)

எல்மினேட்டர் சுற்று

இடம்: குறிப்பிடவில்லை : நேரம் இரவு 8 மணி

மே 25(வெள்ளி)

டிபிசி- டிபிசி(தகுதிச்சுற்று 2)

இடம்:குறிப்பிடவில்லை, நேரம் இரவு 8 மணி

இறுதிப்போட்டி மே 27(ஞாயிறு)

இடம்: மும்பை, நேரம் இரவு 8மணி

http://tamil.thehindu.com/sports/article22760538.ece?homepage=true

Link to comment
Share on other sites

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விரும்பும் கிறிஸ் லின்

 
அ-அ+

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வேன் என்று கிறிஸ் லின் ஆர்வம் தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR

 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விரும்பும் கிறிஸ் லின்
 
ஐபிஎல் சீசன் 2018-க்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் டோனியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தும், மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு யார் யார் கேப்டனாக பணியாற்ற போகிறார்கள் என்பது குறுித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் அந்த அணிகள் வெளியிடப்படவில்லை.

கொல்கத்தா அணியில் 1. பியூஸ் சாவ்லா, 2. கேமரூன் டெல்போர்ட், 3. இஷாங்க் ஜக்கி, 4. மிட்செல் ஜான்சன், 5. தினேஷ் கார்த்திக், 6. குல்தீப் யாதவ், 7. கிறிஸ் லின், 8. கம்லேஷ் நகர்கோட்டி, 9. சுனில் நரைன், 10. நிதிஷ் ராணா, 11. அன்ட்ரே ரஸல், 12. ஜவோன் சீர்லெஸ், 13. ஷிவம் மவி, 14. ஷுப்மான் கில், 15. ரிங்கு சிங், 16. மிட்செல் ஸ்டார்க், 17. ராபின் உத்தப்பா, 18. வினய் குமார், 19. அப்போர்வ் வான்கடே இடம்பிடித்துள்ளனர்.

இதில் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின் ஆகியோர் கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர். தினேஷ் கார்த்திக்கு கேப்டன் பதவியில் அனுபவம் உள்ளது. அதேவேளையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் லின்னும் போட்டியில் உள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டனுக்கான தேர்வில் கிறிஸ் லின் உள்ளார் என்று ஆலோசகரான கல்லீஸ் கூறியுள்ளார்.

201802191720398613_1_kkr-s._L_styvpf.jpg

இந்நிலையில் கேப்டன் பதவி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கிறிஸ் லின் கூறியுள்ளார். இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியை நான் கட்டாயம் விரும்புவேன். அந்த வாய்ப்பிற்காக போட்டி போடுவேன். கொல்கத்தா அணி சிறந்த குரூப்பை பெற்றுள்ளது.

பயிற்சியாளர்கள் காடிச், கல்லீஸ், ஹீத் ஸ்டிரீக் ஆகியோருடன் என்னால் சிறந்த முறையில் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். கேப்டன் அனுபவத்தை வளர்த்துக் கொண்டு வரும் நிலையில், கேப்டன் பதவி வந்தால் அதில் இருந்து எக்காரணம் கொண்டும் பின் வாங்க மாட்டேன்’’ என்றார்.

கொல்கத்தா அணியால் 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் லின்னுக்கு இது ஐந்தாவது ஐபிஎல் சீசனாகும். கடந்த சீசனில் 7 போட்டிகளில் 295 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 180.98 ஆகும்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/19172040/1146678/IPL-2018-KKR-Chris-Lynn-would-love-to-captain-Kolkata.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல்- ஆர்சிபி ஜெர்சியில் கிங்பிஷர் விளம்பரம் இடம்பெறாது

 

 
 

10 வருடங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்து சென்ற கிங்பிஷர், இந்த சீசனில் இருந்து இடம்பெறவில்லை. #IPL2018 #RCB

 
ஐபிஎல்- ஆர்சிபி ஜெர்சியில் கிங்பிஷர் விளம்பரம் இடம்பெறாது
 
இந்தியன் பிரிமீயர் லீக் 10 ஆண்டுகளை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. வருகிற சீசன் 11-வது வருடம் ஆகும். 10 வருடமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் கிங்பிஷர் பயணித்தது. வீரரகள் அணியும் ஜெர்சியின் பின்பக்கம் கிங்பிஷர் இடம்பெற்றிருக்கும். 10 வருட இணைந்து செயலாற்றிய கிங்பிஷர் உடனான ஒப்பந்தத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முடித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக டுரா (Dura) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

201802221645383199_1_RCB1-s._L_styvpf.jpg

அத்துடன் டைட்டில் ஸ்பான்சருக்கு 20 கோடி ரூபாய் என ஆர்சிபி விலை நிர்ணயித்துள்ளது. கடந்த வருடம் ஜியோனி உடன் செய்து கொண்ட ஒப்பந்த பணத்தைவிட 6 கோடி ரூபாய் அதிகமாகும்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/22164539/1147252/IPL-2018-Royal-Challengers-Bangalore-associate-sponsor.vpf

Link to comment
Share on other sites

நேரலை நிகழ்ச்சி வழியாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கேப்டன் அறிவிக்கப்படுகிறார்!

 

 
auction1

 

இன்றிரவு 7 மணிக்கு ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் காணப்போகிறீர்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்கான கேப்டன் அறிவிக்கப்படுகிறார். இந்த நிகழ்வு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணியின் கேப்டனை இதுபோன்ற ஒரு நேரலை நிகழ்ச்சியில் அறிவித்தது கிடையாது. அடுத்ததாக மார்ச் 4 அன்று கொல்கத்தா அணியும் தனது கேப்டனை இதுபோன்ற தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி மூலம் அறிவிக்கவுள்ளது. எனவே இதன்மூலமாகப் புதிய நடைமுறையை இரு அணிகளும் உருவாக்கியுள்ளன.

ஆஸ்திரேலிய கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகத் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 12.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. 

ராஜஸ்தான் அணிக்கு அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்

ஸ்டீவ் ஸ்மித் - ரூ. 12.50 கோடி
பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
உனாட்கட் - ரூ. 11.50 கோடி
சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி
ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 7.20 கோடி
கெளதம் - ரூ. 6.20 கோடி
ரஹானே, ஷார்ட், பட்லர் - ரூ. 4 கோடி
ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி

11-வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆர்ப்பரிக்கும் ஆட்டங்கள், அதிரடியான திருப்பங்கள் என பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும் இப்போட்டிகளுக்கு உலக அளவில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ரூ.16,000 கோடிக்கும் மேல் கொடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் பெற்றுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/24/rajasthan-royals-kolkata-knight-riders-to-announce-their-captains-on-television-2869485.html

Link to comment
Share on other sites

’ஐ.பி.எல். தொடர் அட்டவணையை மாற்றியமைக்க முடியாது’ - ஐ.சி.சியின் கோரிக்கையை நிராகரித்த பி.சி.சி.ஐ.!

 
 

ஐ.பி.எல். போட்டிகளின் தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கோரிக்கையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நிராகரித்துள்ளது. 

IPL_17459.jpg

 

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐ.பி.எல்லுக்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் மோதுகின்றன. 

இந்தநிலையில், ஏப்ரல் 22 முதல் 26-ம் தேதி வரை கொல்கத்தாவில் ஐ.சி.சி. உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற இருப்பதால், அந்த தேதிகளில் நடைபெறும் போட்டிகளின் தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஐ.சி.சியின் அந்த கோரிக்கையை பி.சி.சி.ஐ. நிராகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர், `கொல்கத்தாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை ஒட்டி ஐ.பி.எல். போட்டிகளின் தேதிகளை மாற்ற ஐ.சி.சி. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அந்த தேதிகளில் நடைபெறும் போட்டிகளை மாற்றினால், ஒட்டுமொத்த தொடரும் பாதிக்கப்படும். கொல்கத்தாவில் கூட்டம் நடைபெறும் நாள்களான ஏப்ரல் 22 முதல் 26-ம் தேதி வரை ஈடர்ன் கார்டன் மைதானத்தில் எந்த போட்டியும் நடைபெறவில்லை. 
ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறும் போட்டிக்குப் பின்னர், மே மாதம் 3-ம் தேதிதான் போட்டி நடைபெற இருக்கிறது. இதனால், ஐ.பி.எல். தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்ய இயலாது என்று விளக்கமளித்து விட்டோம்’ என்றார்.  

https://www.vikatan.com/news/sports/117462-bcci-turns-down-icc-request-for-rescheduling-indian-premier-league-match.html

Link to comment
Share on other sites

யுவ்ராஜுக்குப் பதிலாக அஸ்வினை கேப்டனாகத் தேர்வு செய்தது ஏன்?: சேவாக் விளக்கம்

 

 
ashwin_new111xx

 

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டனாக அஸ்வினைத் தேர்வு செய்தது ஏன் என அந்த அணியின் இயக்குநர் சேவாக் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்காக இதுவரை விளையாடிய அஸ்வின் இந்த வருடம் பஞ்சாப் அணிக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அஸ்வினை கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் அணி. 

கிறிஸ் கெயில், ஃபிஞ்ச், யுவ்ராஜ் சிங், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை, மயங்க் அகர்வால், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்‌ஷர் படேல் போன்ற வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளார்கள்.

பஞ்சாப் அணியின் இயக்குநரும் ஆலோசகருமான சேவாக் கூறியதாவது:

ஏலத்தில் நல்ல வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஆனால் எங்கள் அணியின் கேப்டன் யார் என்கிற கேள்வி எல்லோருடமும் இருந்தது. 90 சதவிகித ரசிகர்கள் யுவ்ராஜ் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் என்னுடைய தேர்வு சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணினேன். பந்துவீசும் வீரரே கேப்டனாக இருக்க வேண்டும் என்பது என் தேர்வு. கபில் தேவ், வாசிம் அக்ரம், வக்கார் யூனூஸ் போன்றோருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 

ஏலத்தில் கேப்டன் பதவிக்கு அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரை மனத்தில் நினைத்திருந்தோம். தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே எங்கள் தேர்வாக இருந்த அஸ்வின் ஏலத்தில் எடுத்தோம். 

ashwin_punjab11.jpg

அணி நிர்வாகத்தில் யுவ்ராஜை கேப்டனாக்குவது குறித்தும் பேச்சு இருந்தது. யுவ்ராஜ் என்னுடைய சிறந்த நண்பர். ஆனால் கிரிக்கெட் விஷயங்களில் நட்பைத் தள்ளி வைத்துவிட வேண்டும். அஸ்வின் சிறந்த கேப்டனாக இருப்பார் என நாங்கள் எண்ணினோம். 

அஸ்வின் புத்திசாலி கிரிக்கெட் வீரர். பந்துவீச்சாளரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். டி20 கிரிக்கெட்டை நன்குப் புரிந்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/26/there-was-also-talk-in-the-management-about-making-yuvraj-captain-says-sehwag-2870604.html

 

 

அஸ்வின் கேப்டன்: பஞ்சாப் ஐபிஎல் அணியின் முடிவு சரியா?

 

 
ashwin_punjab1

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்காக இதுவரை விளையாடிய அஸ்வின் இந்த வருடம் பஞ்சாப் அணிக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அஸ்வினை கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் அணி. 

கிறிஸ் கெயில், ஃபிஞ்ச், யுவ்ராஜ் சிங், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை, மயங்க் அகர்வால், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்‌ஷர் படேல் போன்ற வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளார்கள்.

இந்நிலையில் ஒரு கேப்டனாக குறைந்த அனுபவங்களே கொண்டிருக்கிறார் அஸ்வின்.

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கேப்டனாக இருந்த அஸ்வின், அதில் தோல்வியையே சந்தித்துள்ளார். 

லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 15 ஆட்டங்களில் கேப்டனாக இருந்த அஸ்வின் 12 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார்.

ஆனால் இதுவரை டி20 ஆட்டங்களில் கேப்டனாக அவர் இருந்தது கிடையாது. எனவே பஞ்சாப் அணியின் முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

பஞ்சாப் அணியின் இந்த முடிவு குறித்து அஸ்வின் கூறியதாவது:

இந்தப் பதவியை ஏற்பது சுலபமான முடிவாக இல்லை. ஆனால் சேவாக் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையால் இந்த முடிவை ஏற்றுக்கொண்டேன். பிரபல வீரர்களுடன் இணைந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம், நான் என் திட்டங்களைச் சுலபமாக யூகிக்கும் ஒரு கேப்டனாக நிச்சயம் இருக்க மாட்டேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/26/ravichandran-ashwins-record-as-captain-2870600.html

Link to comment
Share on other sites

ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் நிஜமனம்!

 

ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் நிஜமனம்!


ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக சாய்ராஜ் பதுகுலே நிஜமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் நிஜமனம்!

11 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவின் பல்வே று மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கான வீரர்கள் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில், பெங்களூரில் நடைபெற்ற ஏலத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிகளுக்கான பயிற்சியாளர்களை தெரிவு செய்து வருகின்றன. இந்நிலையில 2 வருட தடைக்கு பின் மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக, இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாய்ராஜ் பதுகுலே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/rajasthan-royals-bowling-coach

Link to comment
Share on other sites

`ஐபிஎல் தொடரில் டி.ஆர்.எஸ்.!’ - பிசிசிஐ பச்சைக்கொடி

 
 

நடுவரின் முடிவை மறுபரிசீலனைசெய்யும் டி.ஆர்.எஸ். முறையை ஐபிஎல் தொடரில் கொண்டுவர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதி அளித்துள்ளது. 

IPL_10164.jpg

 

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள், வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டியும் இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐபிஎல்-லுக்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறையைத் தொடக்கம் முதலே பிசிசிஐ எதிர்த்து வந்தது. டி.ஆர்.எஸ் முறைக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டையே பிசிசிஐ கொண்டிருந்தது எனலாம். இந்த நிலையில், ஏப்ரலில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் டி.ஆர்.எஸ் முறையைக் கொண்டுவர பிசிசிஐ முடிவுசெய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 

அவர் மேலும்,`இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச தொடர்களில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதேபோல, பிசிசிஐ நடத்தும் தொடர்களில் கிரிக்கெட் உலகின் பல்வேறு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், டி.ஆர்.எஸ் முறையை ஏன் பயன்படுத்தப்படக் கூடாது’ என்றார். 

 
 

பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில், இதுவரை டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்பட்டதில்லை. இதை கருத்தில்கொண்டே, உள்ளூர் நடுவர்களுக்கு டி.ஆர்.எஸ் முறைகுறித்த பயிற்சியைக் கடந்த டிசம்பரில் அளித்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த பயிற்சி அரங்கில் மொத்தம் 10 நடுவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

https://www.vikatan.com/news/sports/117743-bcci-mulls-use-of-drs-in-ipl-2018.html

Link to comment
Share on other sites

கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்!

 
 

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 

DK_10116.jpg

 

Photo Credit: BCCI

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐ.பி.எல்லுக்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் மோதுகின்றன. 

இந்தத் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராபின் உத்தப்பா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவரான கௌதம் காம்பீரை, ஏலத்துக்கு அனுப்ப கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்தது. அவர் தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஏலத்தின் தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடி என்ற பெரிய தொகைக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் ஐ.பி.எல். தொடரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தொடங்குகிறது. 

https://www.vikatan.com/news/sports/118196-dinesh-karthik-named-captain-of-kkr-in-ipl-2018.html

Link to comment
Share on other sites

இந்த வருட ஐபிஎல்-லில் மூன்று அணிகளுக்கு ஆதரவளிக்க தமிழ்நாட்டு ரசிகர்கள் முடிவு!

 

 
fans1

 

கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்கென்று சொந்தமாக ஒரு ஐபிஎல் அணியும் இல்லாமல் தவித்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இந்தமுறை மூன்று ஐபிஎல் அணிகளுக்கு ஆதரவளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  

2013-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

dhoni_team2121.jpg

இதனால் கடந்த இரு வருடங்களாகத் தங்களுக்கென்று சொந்தமாக ஐபிஎல் அணி எதுவும் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இந்தமுறை ஆதரவளிக்க மூன்று அணிகள் கிடைத்துள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் முடிவடைந்ததால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்திலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் இரு ஐபிஎல் அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 

ashwin_punjab1.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸில் 8 ஆண்டுகளாக அங்கம் வகித்த அஸ்வின், ரைசிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில், இந்த சீசனில் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ள அவர், தற்போது அந்த அணியின் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணைக் கேப்டனாக ராபின் உத்தப்பாவும் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனர்.

dk156.jpg

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவிர அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் வழிநடத்தவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் தமிழ்நாட்டு ரசிகர்களின் சொந்த அணிகளாக மாறியுள்ளன. ஐபிஎல் போட்டியில் இதுவரை வீரர்களாக சாதித்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் கேப்டன்களாகவும் சாதிக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். எனவே இந்த வருட ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், கொல்கத்தா ஆகிய இரு அணிகளுக்கும் ஆதரவளிக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் கிடைத்துள்ள ஆதரவுப் பதிவுகள் இதை வலியுறுத்துகின்றன. 

மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கு சென்னை, பஞ்சாப், கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளுமே தகுதி பெற்றால் அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கமுடியாது.

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/05/dinesh-karthik-appointed-kkr-captain-2874925.html

Link to comment
Share on other sites

தாயகம் திரும்பிய கவுதம் கம்பீருக்கு புதிய பொறுப்பு: டெல்லி டேர் டெவில்ஸ் அணி கேப்டனாக நியமனம்

 

 
gambhir

கவுதம் கம்பீர்- டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன்.   -  படம். | சந்தீப் சக்சேனா.

2018 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து தாயகம் திரும்பிய கவுதம் கம்பீர் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி உரிமையாளர் கவுதம் கம்பீரை ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

இதனைப் பெரிய கவுரவமாகக் கருதும் கம்பீர், “இந்தப் பொறுப்பு எனக்குக் கிடைத்தது, டெல்லி நகருக்கு நான் கிரிக்கெட் மூலமாகத் திருப்பி அளிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. இப்போது நான் உறுதியாக நம்புகிறேன் இந்த அணியில் உள்ள வீரர்கள் இந்த அணியை ஒரு சிறந்த அணியாக உருவாக்குவார்கள் என்று.

இப்போதைய அணியின் வீரர்களின் ஆற்றல் அபரிமிதமானது. இந்த ஆற்றலை சீரான ஆட்டத்திறனாக மாற்ற வேண்டியது என் பொறுப்பில் உள்ளது, மிகப்பெரிய சாம்பியனான ரிக்கி பாண்டிங்குடன் பணியாற்றுவது மிகப்பெரிய விஷயமாகும்” என்றார்.

கவுதம் கம்பீர் பற்றி பாண்டிங் கூறும்போது, “கவுதி ஒரு தலைவராக நீண்ட காலமாகவே திகழ்ந்து வருகிறார். முந்தைய ஐபிஎல் அணியில் அவர் ஒரு டாப் லீடராக தன்னை நிரூபித்துள்ளார். அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை, ஆனால் வெளியில் தெரியும் தன்னம்பிக்கைக்கு பின்னால் உள்ள அவரது வேட்கை அணியின் பிற வீரர்களுக்கு அகத்தூண்டுகோலாக அமையும். ஓய்வறை மரியாதையை பெற்றவர். உரிமையாளரும் கவுதியை கேப்டனாக்கியதில் பெருமை கொள்கிறார்” என்றார் பாண்டிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்பீர் தலைமையில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22961258.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: 8 அணிகளின் கேப்டன்கள்!

 

 
dhoni_toss1

 

தில்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணி கேப்டனாக கெளதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த வருட ஐபிஎல்-லில் அனைத்து அணிகளுக்கும் கேப்டன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 

ஐபிஎல் ஏலத்துக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கெளதம் கம்பீரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் அஸ்வினுக்கு முதல்முறையாக கேப்டன் பதவி கிடைத்துள்ளது. மற்ற அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐபிஎல் கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளார்கள். 8 அணிகளில் 6 அணிகளுக்கு இந்திய வீரர்களும் இரு அணிகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்களும் கேப்டனாக உள்ளார்கள்.

ஐபிஎல் 2018 கேப்டன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி
தில்லி டேர்டெவில்ஸ் - கெளதம் கம்பீர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அஸ்வின்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - தினேஷ் கார்த்திக்
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்டீவ் ஸ்மித்
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/07/list-of-captains-of-ipl-teams-2876222.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு

 

ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. #IPL2018 #CSK #MI

 
 
 
 
ஐபிஎல் 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளது. 10 வருடங்களை சிறப்பாக முடித்துள்ள ஐபிஎல், இந்த வருடத்தில் 11-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. ஐபிஎல் சீசன் 11 ஏப்ரல் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பிசிசிஐ மற்றும் ஸ்டார் இந்தியா இரண்டும் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளது. இதற்கு BEST vs BEST என பெயரிடப்பட்டுள்ளது. டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் ஆகியவற்று ஏற்றவகையில் இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க இயக்குனர் டான் மேஸ் இயக்க, ராஜீவ் வி. பல்லா இசையமைக்க சித்தார்த் பஸ்ருர் ஐந்து மொழிகளில் பாடியுள்ளார் 
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/13180349/1150726/Anthem-for-2018-Indian-Premier-League-Launched.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல- சொல்கிறார் நெஹ்ரா

 
அ-அ+

பிரபலமான டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கூறியுள்ளார். #IPL2018 #RCB

 
 
 
 
ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல- சொல்கிறார் நெஹ்ரா
 
இந்திய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. கடந்த வருடம் சர்வதேச போட்டிகள் உள்பட அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட் என்றாலே அது பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபில் கிரிக்கெட் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெஹ்ரா கூறுகையில் ‘‘ஒருபேட்ஸ்மேன் ஒரு போட்டியில் ஐந்து சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் கூட, 40 பந்தில் 120 அல்லது 50 பந்தில் 130 ரன்கள் எடுத்தாலும் அது பெரிதாக காட்டப்படுகிறது. அதேநேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கான வாய்ப்பும் உள்ளது. நான்கு ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், அதுகுறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளுவதில்லை. அதே சமயம் நான்கு ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தால், அது பெரிதாக விமர்சிக்கப்படுகிறது.

201803131909231203_1_nehra002-s._L_styvpf.jpg

கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களும் சரி சமமான பணிகளை செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பெங்களூர் மற்றும் மும்பை மைதானத்தில் பந்து வீச்சாளர்கள் பணி முக்கியமானது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் பணி முக்கியமானது. டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற முடியாது. வெற்றிக்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டும்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/13190635/1150732/Ashish-Nehra-says-Indian-Premier-League-not-just-a.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல் போட்டியில் சுனில் நரேன் பந்து வீசுவதில் சிக்கல்!

 

ஐ.பி.எல் போட்டியில் சுனில் நரேன் பந்து வீசுவதில் சிக்கல்!


சுனில் நரேன் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதால் ஐ.பி.எல் போட்டியில் பந்து வீசுவதும் சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியா அணியின் முன்னணி பந்து வீச்சாளர் சுனில் நரேன் இருபதுக்கு 20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீச்சை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்காக சுனில் நரேனை கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது.

இதனடிப்படையில் தற்போது பாக்கிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சுனில் நரேன் விளையாடி வருகின்றார். இந்நிலையில் நடைபெற்ற போட்டியில் ஒன்றில் சுனில் நரேன் வீசிய பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கிந்தியா கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை அளிக்குவுள்ளது. இதனால் ஐ.பி.எல் போட்டிகளில் சுனில் நரேன் பந்து வீசுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/sunil-naren-bowling-in-ipl

Link to comment
Share on other sites

சுனில் நரைன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம்: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின்போது புகார்

 

 
sunil

சுனில் நரைன்.

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சுனில் நரைன். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில் அவர் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் லாகூர் காலேண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு லாகூர் காலேண்டர்ஸ் அணிக்கும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையே லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின்போது சுனில் நரைன் பந்து வீசினார். அப்போது அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததையடுத்து போட்டி நடுவரிடம், அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுனில் நரைன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக போட்டி அதிகாரிகள், போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது பந்துவீச்சு குறித்து எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவர் தொடர்ந்து போட்டியில் விளையாடவும், பந்துவீசவும் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஆனால் ஐசிசி பவுலிங் விதி களின்படி, அவரது பந்துவீச்சு குறித்து மீண்டும் சந்தேகம் எழுந்து புகார் செய்யப்பட்டால் அவர் பந்துவீசுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார். அதேநேரத்தில் அவரது அணிக்காக அவர் பேட்டிங் செய்யலாம்” என்றார்.இதற்கு முன்பு சுனில் நரைனின் பந்துவீச்சு ஆக்ஷன் குறித்து 2015-ல் ஐபிஎல் போட்டியின்போது புகார் செய்யப்பட்டது. இதனால் அவர் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அதே ஆண்டு நவம்பரில் ஐசிசி, அவரது பந்துவீச்சை ஆய்வு செய்து பந்துவீசத் தடை விதித்தது.

ஒரு பவுலர் பந்துவீசும்போது முழங்கையானது 15 டிகிரிக்கும் மேல் வளையக்கூடாது. ஆனால் அதற்கும் மேல் சுனில் நரைனின் முழுங்கை வளைவதால் அவருக்குத் தடை விக்கப்பட்டது. இதேபோல 2014-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போதும் சுனில் நரைன் பந்துவீச்சுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் சுனில் நரைன், தனது பந்துவீச்சு ஆக்ஷனை சரி செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article23278013.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் பிளே ஆஃப்: புணேவுக்கு வழங்கப்பட்ட நீதி சென்னைக்கு வழங்கப்படாதது ஏன்?

 

 
dhoni_team2121

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரண்டு பிளே ஆஃப் ஆட்டங்களில் புணேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய சர்ச்சையைத் தொடங்கிவைத்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

11-வது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

இரண்டு முறை (2010, 2011) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்று முறை (2013, 2015, 2017) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.

56 லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதலாவது தகுதிச்சுற்றிலும், அடுத்த 2 அணிகள் வெளியேற்றுதல் சுற்றிலும்(எலிமினேட்டர்) மோதும். முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தோல்வியைச் சந்தித்த அணி எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியுடன் 2-ஆவது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் நகருக்கு அடுத்த வருட பிளே ஆஃப் போட்டிகளை (2-வது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள்) நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதன் அடிப்படையில் இந்த வருட பிளே ஆஃப் போட்டிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று புணே சார்பில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்தது. உண்மையில் இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரிக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆச்சர்யப்படும்விதத்தில் பிசிசிஐ சம்மதம் தெரிவித்துவிட்டது.

இந்த வருட பிளே ஆஃப் போட்டிகள் புணேவில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிளே ஆஃப் போட்டிகளின் முதல் ஆட்டம் மும்பையிலும் மற்ற இரு ஆட்டங்கள் புணேவிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி மே 27 அன்று மும்பையில் நடைபெறுகிறது. அதாவது பிளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்தும் மஹாராஷ்டிராவில் மட்டுமே நடைபெறவுள்ளன. 

இந்த இடத்தில் ஓர் கேள்வி எழுகிறது. 2015-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதின. மும்பை சாம்பியன் ஆனது. சென்னைக்கு 2-ம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நடந்ததை சென்னை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.

dhoni_captain1.jpg

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.

இதனால் 2016, 2017-ம் ஆண்டுகளில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டில் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல்-லுக்குள் நுழைந்துள்ளன.

இந்த வருடம் புணே நகருக்கென்று எந்த அணியும் கிடையாது. ஆனால் அணியே இல்லாத புணே நகருக்கு ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டது போல 2016-ம் ஆண்டு சென்னை நகருக்கு ஏன் பிளேஆஃப் போட்டிகள் ஒதுக்கப்படவில்லை? சென்னைக்குப் பதிலாக இரு பிளே ஆஃப் ஆட்டங்கள் அந்த வருடம் தில்லியில் நடைபெற்றன.

ஏற்கெனவே மும்பையில் பிளே ஆஃப் போட்டி ஒன்றும் இறுதிப் போட்டி ஒன்றும் நடந்தாலும் இதர இரு பிளே ஆஃப் போட்டிகளையும் தங்கள் மாநிலத்திலேயே நடக்கவேண்டும் என்று மஹாராஷ்டிர சங்கம் முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் இந்த வருடம் பிளே ஆஃப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் மஹாராஷ்டிர மாநிலத்தில் நடக்கின்றன. இதேபோன்றதோரு முனைப்பையும் ஆர்வத்தையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏன் வெளிப்படுத்தவில்லை? சென்னைக்கு வழங்கப்படாத நீதியை புணேவுக்கு மட்டும் பிசிசிஐயும் ஐபிஎல்-லும் வழங்கியது ஏன்? சென்னைக்கு அதுபோல வழங்கப்படவில்லை, எனவே புணேவுக்கும் பிளே ஆஃப் ஆட்டங்கள் கிடையாது என்று தீர்ப்பு எழுதியிருக்கலாமே! 

கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளே நடைபெறவில்லை. இதனால் குறைந்தபட்சம் 2016 பிளேஆஃப் ஆட்டங்களையாவது சென்னைக்கு ஒதுக்கும்படி கேட்டிருக்கலாம். அதற்கான முழு உரிமையும் சென்னைக்கு உண்டு. சரி, அப்போதுதான் கேட்கவில்லை. அப்போது இழந்த வாய்ப்பை இந்த வருடமாவது கொடுங்கள் என்றாவது கேட்டிருக்கலாம் அல்லவா! இதன்மூலமாக இந்த வருட பிளே ஆஃப் போட்டிகளைச் சென்னைக்குக் கிடைக்கும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யத் தவறிவிட்டது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். இதனால் சம்பந்தமே இல்லாமல் இரு பிளேஆஃப் ஆட்டங்கள் புணே-வில் நடைபெறவுள்ளன.

உரிமையை கேட்டுப் பெறுவது எப்படி என்று புணேவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/17/pune-to-host-two-ipl-playoff-matches-2882530.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - ஆர்சிபி அணியில் கோரி ஆண்டர்சன் சேர்ப்பு

 

ஐபிஎல் 2018 தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கவுல்டர்-நைலுக்குப் பதிலாக கோரி ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். #IPL2018 #RCB

 
ஐபிஎல் 2018 - ஆர்சிபி அணியில் கோரி ஆண்டர்சன் சேர்ப்பு
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி நடைபெற்றது.

இந்த ஏலத்தின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆஸிதிரேலியாவின் ஆல்ரவுண்டர் கவுல்டர்-நைல்-ஐ 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தற்போது இவர் காயம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கவுல்டர்-நைல் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

201803241732504909_1_coreyanderson-s._L_styvpf.jpg

இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. இவரது ஆரம்ப விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதற்கு ஐபிஎல் டெக்னிக்கல் கமிட்டி அனுமதி அளித்துள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேன் கோரி ஆண்டர்சன் இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். #IPL2018 #RCB

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/24173250/1152984/IPL-2018-RCB-replace-injured-Coulter-Nile-with-Corey.vpf

Link to comment
Share on other sites

ஸ்மித் விலகல் - ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்!

 
 

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்குப் பதிலாக, விரைவில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் அஜிங்கியா ராஹானே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரஹானே

 

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சர்ச்சைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் விலகினார். அதேபோல, துணை கேப்டன் வார்னரும் பதவி விலகவே, அந்த டெஸ்டில் விக்கெட் கீப்பர் டிம் பெயின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்த விவகாரம்குறித்து விசாரித்த ஐசிசி, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே கேப்டனாகச் செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான மனோஜ் படாலே, `எந்தவொரு தனி மனிதரை விடவும் கிரிக்கெட் விளையாட்டே பெரியது. இந்தக் கருத்தை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/sports/120254-ajinkya-rahane-to-lead-rajasthan-royals-in-the-upcoming-ipl-season.html

Link to comment
Share on other sites

ஸ்மித், வார்னர் ஐபிஎல் போட்டியில் இல்லாவிட்டால் மிகப்பெரிய சோகமாகும்: ஆஷிஷ் நெஹ்ரா வேதனை

 

 
nehra

ஆஷிஷ் நெஹ்ரா: கோப்புப் படம்   -  படம்: கே. தீபக்

ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் விளையாடாமல் இருந்தால்,அது மிகப்பெரிய சோகமாகும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவியும், டேவிட் வார்னரின்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.

இதில் ஸ்மித் ஒருபோட்டியில் விளையாட தடையும், 100 சதவீதம் அபராதமும், வார்னருக்கு ஒருபோட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்தி சிக்கிய பான்கிராப்டுக்கு 75 சதவீதம் ஊதியம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் ஸ்மித்தின் ஒட்டுமொத்த மரியாதையையும் சிதைத்துவிட்டது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் அந்த அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னரும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவீரர்களும் நெருக்கடியான மனநிலையில் இருப்பதால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்களா என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா டெல்லியில் நிருபர்களுக்கு வார்னர், ஸ்மித் குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

ஸ்மித், வார்னர் செய்தது தவறுதான் இல்லையென கூறவில்லை. பந்தை சேதப்படுத்தும் தவறை இருவரும் முதல்முறையாக செய்கிறார்கள் என்று கூறினால்கூட அதுவும் தவறுதான். அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர், அவர்களுக்கு ஐசிசியும் தண்டனை கொடுத்துவிட்டது.

உண்மையாகவே, நமக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியாது. ஆனால், ஸ்மித்தும், டேவிட் வார்னருக்கும் வாழ்நாள் தடை விதித்து, அவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் அணியில் விளையாமல் போனால், அது மிகப்பெரிய இழப்புதான். இருவரும் மிகச்சிறந்த வீரர்கள், இருவரும் இல்லாத ஐபிஎல் போட்டி மிகப்பெரிய சோகமாகும்.

பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ்  ஸ்விங் வீசுவது என்பது மிகப்பெரிய கலை. அதேசமயம், திருட்டுகூட ஒரு கலைதான். திருடியதற்காக ஒருவரை பிடித்து சிறையில் அடைத்தபின் அவரை புகழ்வோமா? ரிசர்வ் ஸ்விங் ஒரு கலை,ஆனால், பந்தை சேதப்படுத்துதல் என்பது நேர்மையற்றதாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு பந்துவீச்சாளர் நன்கு தயாராக வேண்டும், பந்தையும் சேதப்படுத்தாமல், வீச வேண்டும். டி20, ஒருநாள் போட்டிகளில் வெள்ளைப்பந்துகளில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது கடினம். அதிலும் ஒருநாள் போட்டிகளில் இரு புதிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படும் போது ரிவர்ஸ் ஸ்விங் என்பது மிகக்குறைவுதான். டெஸ்ட் போட்டியில் மட்டுமே அது சாத்தியம்.

அதிலும் சூழல், ஆடுகளத்தின் தன்மை ரிவர்ஸ் ஸ்விங்கின் போடுவதில் முக்கியப்பங்காற்றும். ஆடுகளம் மிகவும் வறண்டதாகவும், கோடுகள் நிறைந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் எளிதாக முடியும். உதாரணமாக, டெல்லி பெரோஷ்கோட்லா மைதானத்தில், முதல் 10 ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் வரும்.

இவ்வாறு ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23356760.ece?homepage=true

Link to comment
Share on other sites

சன் ரைசர்ஸ் கேப்டன் பதவியும் பறிப்பு! - அடுத்தடுத்த நெருக்கடியில் டேவிட் வார்னர்

 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலியாவின் துணை கேப்படனாக இருந்த டேவிட் வார்னருக்கு, தொடர்ந்து சிக்கல் அதிகரித்துவருகிறது.

டேவிட் வார்னர்

 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம்,  கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்தச் சம்பவத்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய வீரர் பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்துவந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் தான், இந்தச் செயலுக்கு மூளையாக இருந்தாகக் கூறப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய எல்.ஜி நிறுவனம் அவருக்கு வழங்கிவந்த ஸ்பான்சர்ஷிப்பை ரத்துசெய்துள்ளது. இது குறித்துப் பேசிய எல்.ஜி நிறுவனம், “டேவிட் வார்னருடனான எல்.ஜி-யின் ஸ்பான்சர்ஷிப் முடியும் தருவாயில் உள்ளது, இவர் மீதான சமீபத்திய சம்பவங்களால், இவருடனான ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை. எல்.ஜி ஆஸ்திரேலியா எப்போதும் சிறந்த தூதர்களுடனே பணியாற்ற விரும்புகிறது. இதில் நாங்கள் கவனமாக உள்ளோம். தற்போது வார்னர்மீது ரசிகர்களிடையே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால், இவருடனான ஸ்பான்சரை இத்துடன் முடித்துக்கொள்ள நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டிருந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பிறகு, வார்னர் சன் ரைசஸ் கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அணியின்  புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/sports/120448-ball-tampering-david-warner-steps-down-as-captain-of-sunrisers-hyderabad.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல் விளையாட குசல் பெரேராவிற்கு அழைப்பு
 

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 11 ஆவது ஐ.பி.எல். தொடரில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர்  தொடரிலிருந்து விலகியதையடுத்து அவருக்கு பதிலாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசசஸ் ஹைதராபாத் நிர்வாகம் இது குறித்து கூறுகையில்,

“ஆம்! நாம் டேவிட் வோர்ணருக்கு பதிலாக இலங்கை அணியின் குசல் பெரேராவை அணியில் விளையாடுமாறு அழைத்துள்ளோம். குசல் பெரேரா, டேவிட் வோர்ணரை போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர். கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார். இதனால் நாம் அவரை தெரிவுசெய்தோம். எனினும் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளது.

எனினும் குசல் பெரேரா இலங்கையில் 4 மாகாணங்களுக்கிடையில் நடைபெறவுள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட தயாராகி வருகின்ற நிலையில், இவர்  ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதானது இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் குசல் பெரேரா இணைந்து எடுக்கும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஐ-பி-எல்-விளையாட-குசல்-பெரேராவிற்கு-அழைப்பு/44-213530

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.