Jump to content

Recommended Posts

ஐபிஎல் ஏலம் 2018: 2-ம் நாள் நிகழ் நேரப் பதிவு

 

 
Desktopjpg

 

 

வீரர்

அணி

தொகை

ஆல்ரவுண்டர் ஷிடிஸ் ஷர்மா சென்னை

ரூ.20 லட்சம்

மார்க் உட் (இங்கி. பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர்கிங்ஸ்

ரூ.1.5 கோடி

மயங்க் தாகர் ((சேவாக்கின் நெருங்கிய உறவினர்- ஆல் ரவுண்டர்) கிங்ஸ் 11 பஞ்சாப்

ரூ.20 லட்சம்

பிரதீப் சாஹு கிங்ஸ் 11 பஞ்சாப்

ரூ.20 லட்சம்

அகிலா தனஞ்ஜயா ( இலங்கை ஸ்பின்னர்) மும்பை

ரூ.50 லட்சம்.

பென் லாஃப்லின் (ஆஸி. பாஸ்ட் பவுலர்) ராஜஸ்தான்

ரூ. 50 லட்சம்

மயங்க் மார்கண்டே மும்பை

ரூ.20 லட்சம்

சயான் கோஷ் (டெல்லி அணியின் 25-வது வீரர், டெல்லி ரூ. 1.6 கோடி மிச்சம் பிடித்ஹ்டது) டெல்லி

ரூ.20 லட்சம்

பிபுல் ஷர்மா சன் ரைசர்ஸ்

ரூ.20 லட்சம்

பிரசாந்த் சோப்ரா ராயல்ஸ்

ரூ.20 லட்சம்

சித்த்ேஷ் லாத் மும்பை

ரூ.20 லட்சம்

டிம் சவுத்தி ஆர்சிபி

ரூ. 1 கோடி

மிட்செல் ஜான்சன் கொல்கத்தா

ரூ.2 கோடி

பார்த்திவ் படேல் ஆர்சிபி

ரூ.1.7 கோடி

நமன் ஓஜா டெல்லி

ரூ.1.4 கோடி

சாம் பில்லிங்ஸ் (இங்கி. கீப்பர்) சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ. 1 கோடி

முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.2 கோடி

கிறிஸ் கெய்ல் மீண்டும் விற்கவில்லை.

--

சந்தீப் லமிச்சான் (நேபாள் 17 வயது) டெல்லி அணி

ரூ.20 லட்சம்

கனிஷ்க் சேத் சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.20 லட்சம்

துருவ் ஷோரி சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.20 லட்சம்

கே.எம்.ஆசிப்(மும்பை பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.40 லட்சம்

பென் ட்வார்ஷுயிஸ் (ஆஸி. வி.கீ) கிங்ஸ் லெவன்

ரூ.1.40 கோடி

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சன் ரைசர்ஸ்

ரூ.1 கோடி

அக்‌ஷ்தீப் நாத் கிங்ஸ் 11 பஞ்சாப்

ரூ 1 கோடி

ஷ்ரேயஸ் கோபால் (கர்நா. ஆல்ரவுண்டர்) ராஜஸ்தான்

ரூ.20 லட்சம்

தஜிந்தர் டில்லான் (ஆல் ரவுண்டர்) மும்பை இண்டியன்ஸ்

ரூ.55 லட்சம்

காமரூன் டெல் போர்ட் கொல்கத்தா

ரூ.30 லட்சம்

பாபா அபராஜித் (தமிழ்நாடு) ஏலம் எடுக்கப்படவில்லை

--

தீபக் சாஹர் (ராஜஸ்தான் பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.80 லட்சம்

லுங்கி இங்கிடி (தெஆ) சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.50 லட்சம்

ஆண்ட்ரூ டை (ஆஸி. அடிப்படை விலை ரூ. 1 கோடி) கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ரூ.7.20 கோடி

பில்லி ஸ்டானலேக் ( ஆஸி.) சன் ரைசர்ஸ்

ரூ.50 லட்சம்

பாரிந்தர் சரண் கிங்ஸ் 11 பஞ்சாப்

ரூ.2.20 கோடி

ஆஸி. பவுலர் பெஹெண்ட்ராஃப் மும்பை

ரூ.1.50 கோடி

தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி மும்பை

ரூ.1 கோடி

கிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) சன் ரைசர்ஸ்

ரூ.1 கோடி

மிட்செல் சாண்ட்னர் சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.50 லட்சம்

ஜகீர் கான் பக்தீன் (ஆப்கான் வீரர்) ராஜஸ்தான் ராயல்ஸ்

ரூ.60 லட்சம்

ஜகதீசன் நாராயண் சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.20 லட்சம்

பிரதீப் சங்வான் மும்பை இந்தியன்ஸ்

ரூ.1.5 கோடி

முஜீப் ஸத்ரான் (ஆப்கான் ஸ்பின்னர்) கிங்ச் லெவன் பஞ்சாப்

ரூ.4 கோடி

அபூர்வ் வான்கடே கொல்கத்தா

ரூ.20 லட்சம்

ரிங்க்கு சிங் கொல்கத்தா

ரூ.80 லட்சம்

சச்சின் பேபி சன் ரைசர்ஸ்

ரூ.20 லட்சம்

ஷிவன் நவி (யு-19 பாஸ்ட் பவுலர்) கொல்கத்தா

ரூ.3 கோடி

அபிஷேக் சர்மா டெல்லி

ரூ.55 லட்சம்

அனுரீத் சிங் ராஜஸ்தான் ராயல்ஸ்

ரூ.30 லட்சம்

டேல் ஸ்டெய்ன் விற்கப்படவில்லை

--

மோஹித் சர்மா கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ரூ.2.40 கோடி

சந்திப் ஷர்மா சன் ரைசர்ஸ்

ரூ.3 கோடி

வினய் குமார் கொல்கத்தா

ரூ. 1 கோடி

மொகமது சிராஜ் ஆர்சிபி

ரூ.2.60 கோடி

கூல்ட்டர் நைல் ஆர்சிபி

ரூ.2.20 கோடி

ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ.2.60 கோடி

டிரெண்ட் போல்ட் டெல்லி

ரூ.2.20 கோடி

ஜெயதேவ் உனாட்கட் ராஜஸ்தான் ராயல்ஸ்

ரூ11.5 கோடி

தவல் குல்கர்னி ராஜஸ்தான் ராயல்ஸ்

ரூ.75 லட்சம்

மொகமது நபி சன் ரைசர்ஸ்

ரூ.1 கோடி

பென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ்

ரூ.2.2 கோடி

அலெக்ஸ் ஹேல்ஸ் விற்கப்படவில்லை --
குர்கீரத் சிங் டெல்லி ரூ.75 லட்சம்
ஜெயந்த் யாதவ் டெல்லி ரூ.50 லட்சம்
டேனியல் கிறிஸ்டியன் டெல்லி ரூ.1.5 கோடி
பவன் நேகி மும்பை இந்தியன்ஸ் ரூ.1 கோடி
வாஷிங்டன் சுந்தார் ஆர்சிபி ரூ.3.2 கோடி
மனோஜ் திவாரி கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 1 கோடி
மந்தீப் சிங் ஆர்சிபி ரூ.1.40 கோடி
சவுரவ் திவாரி மும்பை இந்தியன்ஸ் ரூ.80 லட்சம்
எவின் லூயிஸ் மும்பை இந்தியன்ஸ் ரூ.3.80 கோடி
முருகன் அஸ்வின் ஆர்சிபி ரூ.2.20 கோடி
கே.கவுதம் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.6.20 கோடி
ஷாபாஸ் நதீம் டெல்லி 3.20 கோடி
ராஹுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.09 கோடி

http://tamil.thehindu.com/sports/article22533862.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கெயில் ஐ 2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம்: 2-ஆம் நாள் நேரலைப் பதிவுகள்

 

 
ipl_auction_1

 

ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்

 

 

* கடைசி வீரராக ஜாவோன் சியர்லெஸ் ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* மன்சூர் தாரை ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

* நிதீஷ் எம்.டி தினேசன் ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* துஷ்மந்த்த சமீரா ரூ. 50 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கடைசி கட்டத்தில் 3-ஆவது முறையாக மீண்டும் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வந்த கிறிஸ் கெயல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

* பவன் தேஷ்பாண்டே ரூ. 20 லட்சத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஆர்யமான் விக்ரம் பிர்லாவை ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்தது.

* ரூ. 20 லட்சத்துக்கு ஜதின் சக்ஸேனாவை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

* சைதன்யா பிஷானி ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 20 லட்சத்துக்கு மோனு சிங்கை தேர்வு செய்தது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/28/ipl-2018-auction-day-two-2852885--1.html

Link to comment
Share on other sites

மும்பை இந்தியன்ஸ் அணியில் அகில தனஞ்சய

 

 

ஐபிஎல் போட்டிகளுக்காக சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியில் ஏலத்தில் எடுத்துள்ளது. 

Akila_Dananjayaa.jpg

 

http://www.virakesari.lk/article/30018

கிறிஸ் கெய்ல் ஐபிஎல் வாழ்வு முடிந்து விடவில்லை!

chris%20gaylejpg

கிங்ஸ் லெவன் அணியில் கெய்ல்.   -  படம்.| ஏ.பி.

ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலத்தில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன, நல்ல வீரர்கள் தங்கLai நிறுவிய வீர்ர்கள் சிலர் இம்முறை விலைபோகவில்லை. அப்படிப்பட்ட பட்டியலில் கிறிஸ் கெய்லும் வந்து விட்டார் என்றே ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தொலைத்தனர்.

நேற்று ஒருமுறை கிறிஸ் கெய்ல் விற்பனைக்கு வந்தபோது எந்த அணியும் வாங்க முன்வராமல், அவர் பெயரைக் கூறியவுடன் வாளாவிருந்தனர்.

இன்று மீண்டும் 2-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் அழைக்கப்பட்டவுடனும் ஒரு அணியிடமிருந்தும் எந்தச் சலனமும் இல்லை. எனவே கிறிஸ் கெய்லின் ஐபிஎல் வாழ்வு முடிந்து விட்டதாகவே அவரது ஆட்டத்தை ரசித்துக் குதித்துப் பார்க்கும் ரசிகர்கள் சோக முடிவுக்கு வந்திருப்பார்கள்.

ஆனால் சற்று முன் 3-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் ஏலத்தில் வந்த போது இஸ் தேர் அ பிட், இஸ் தேர் அ பிட் என்று 2 முரை ஏல அறிவிப்பாளர் கேட்டார், யாரும் அசையவில்லை, கடைசியாக சேவாக், பிரீத்தி ஜிந்தா அமர்ந்திருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கையை உயர்த்தியது.

கெய்லின் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கே அவரை கிங்ஸ் லெவன் ஏலம் எடுத்தது. கெய்லின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்துவிடவில்லை, மீண்டும் ஒருமுறை அவர் மட்டையிலிருந்து சரவெடி வெடிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article22542347.ece?homepage=true

Link to comment
Share on other sites

On 27.1.2018 at 1:10 PM, valavan said:

அஸ்வின் இல்லை, மக்கல்லம் இல்லை, ஒன்றுக்குமே உதவாத வட்சன், ஹர்பஜன் உள்ளே, இந்தமுறை சிஎஸ்கே சம்பியன் இல்லை என்பது மட்டும் உறுதி ஆயிட்டுது. கேகேஆர்-லயும் கம்பீர் ,பதான் இல்லை, 2018 ஐபிஎல் அணிகள் முழுக்க முழுக்க மாற்றமானவை, ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்த முகங்களை திரும்பவும் அதே அணியில் பார்க்காமல் இருப்பது நல்லதுதான். இந்தமுறை பைனல்வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பைதான் வருமெண்டு நினைக்கிறேன் பார்க்கலாம். இணைப்புக்கு நன்றி நவீனன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களின் முழு விவரம்tw_blush:

 

அஸ்வினை கைவிட்டதுக்கு சில காரணங்கள் இருக்கு. அதைவிட ஏலம் என்று வரும்போது பலத்த போட்டி இருக்கும்.

7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து  இருக்கு பஞ்சாப். அவ்வளவு காசுக்கு அஸ்வினால் இப்ப IPL இல் சாதிக்க முடியுமோ தெரியாது.

 

மக்கல்லமை எடுத்து இருக்கலாம்

Link to comment
Share on other sites

காஸ்ட்லி பிளேயர் உனத்கட், பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல்! - எந்த அணியில் யார்யார்? #IPLAuction2018

 

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக பிரமாண்டமாக நடந்துவந்த ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் முடிவுக்கு வந்துள்ளது. 

WhatsApp_Image_2018-01-27_at_9.54.42_AM_

 


இந்த ஏலத்தில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். ஒவ்வொரு அணியும் தலா 25 வீரர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.பி.எல். அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம். 

மும்பை இந்தியன்ஸ்:

mumbai_17161.jpg

ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா, பொல்லார்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்ட்யா, இஷான் கிஷான், ராகுல் சஹார், எவின் லூயிஸ், சௌரப் திவாரி, பென் கட்டிங், பிரதீப் சங்க்வான், ஜே.பி.டுமினி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டி.என்.தில்லான், ஷரத் லும்பா, ஆதித்யா தாரே, மயங்க் மார்க்கண்டே, அகிலா தனஞ்செயா, அன்குல் சுதாகர் ராய், மோஷின் கான் மற்றும் எம்.டி.நிதீஷ். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

KKR_17482.jpg

ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரேன், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுப்மன் கில், இஷாங்க் ஜக்கி, கமலேஷ் நகர்கோட்டி, நிதிஷ் ராணா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, ரிங்கு சிங், சிவம் மவி, கேமரூன் டெல்போர்ட், மிட்செல் ஜான்சன் மற்றும் ஜேவோன் சியர்லஸ். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

RCB_17353.jpg

விராட் கோலி, டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மொயின் அலி, டி காக், உமேஷ் யாதவ், யுஷ்வேந்திர சஹால், மனன் வோரா, குல்வந்த் கெஜ்ரோலியா, அனிகித் சௌத்ரி, நவ்தீப் சைனி, முருகன் அஷ்வின், மன்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, முகமது சிராஜ், நாதன் கோல்டர்நைல், அனிருதா ஜோஷி, பார்த்தீவ் படேல், டிம் சவுத்தி மற்றும் பவன் தேஷ்பாண்டே. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

KXI_17215.jpg

அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுவராஜ் சிங், கருண் நாயர், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர், ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மயங்க் அகர்வால், அங்கித் ராஜ்புத், மனோஜ் திவாரி, மோகித் ஷர்மா, முஜீப் ஜர்தான், பரீந்தர் ஸ்ரன், ஆண்ட்ரூ டை, அக்‌ஷ்தீப் நாத், பென் ட்வார்சூயிஸ், பிரதீப் சாஹு, மயங்க் தாகர், கிறிஸ் கெயில் மற்றும் மன்சூர் தார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், ஷகிப் அல் ஹசன், கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, கார்லோஸ் பிராத்வெயிட், யூசுப் பதான், விருத்திமான் சாஹா, ரஷீத் கான், ரிக்கி புயி, தீபக் ஹூடா, டி.நடராஜன், சித்தார்த் கௌல், கலீல் அஹமது, முகமது நபி, சந்தீப் ஷர்மா, சச்சின் பேபி, கிறிஸ் ஜோர்டான், பில்லி ஸ்டேன்லாக், தன்மய் அகர்வால், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, பிபுல் ஷர்மா மற்றும் மெஹ்தி ஹசன். 

டெல்லி டேர்டெவில்ஸ்:

Delhi_17448.jpg

ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், கிறிஸ் மோரிஸ், கிளென் மேக்ஸ்வெல், கவுதம் காம்பீர், ஜேசன் ராய், காலின் முன்ரோ, முகமது ஷமி, ரபாடா, அமித் மிஸ்ரா, பிரித்வி ஷா, ராகுல் டீவாட்டியா, விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல், அவீஷ் கான், ஷாபாஸ் நதீம், டேனியல் கிறிஸ்டியன், ஜெயந்த் யாதவ், குர்கீரத்சிங் மான், ட்ரென்ட் போல்ட், மனோஜ் கல்ரா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லமிச்சேன், நமன் ஓஜா மற்றும் சயன் கோஷ். 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

Rajasthan_17226.jpg

ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், அஜிங்கியா ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ராகுல் திரிபாதி, டிஆர்க்கி ஷார்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிருஷ்ணப்பா கௌதம், தவால் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட், அங்கித் ஷர்மா, அனுரீத் சிங், ஜாகிர் கான், ஸ்ரேயாஸ் கோபால், எஸ்.மிதுன், பிரசாந்த் சோப்ரா, பென் லாக்லின், மஹிபால் லோம்ரோர், ஆர்யமான் பிர்லா, ஜடின் சக்ஸேனா மற்றும் துஷ்மந்தா சமீரா.

சென்னை சூப்பர்கிங்ஸ்: 

CSK_17419.jpg

 

மகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுபிளசி, ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், அம்பாதி ராயுடு, இம்ரான் தாஹிர், கரண் ஷர்மா, ஷ்ரதுல் தாகுர், என். ஜெகதீசன், மிட்செல் சாட்னர், தீபக் சஹார், கே.எம்.ஆசிஃப், லுங்கி இங்கிடி, கனிஷ்க் சேத், துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், கிஷிட்ஸ் ஷர்மா, மோனு குமார் மற்றும் சைதன்ய பீஷ்னோய். 

 

https://www.vikatan.com/news/sports/114763-ipl-2018-complete-squad-list-of-each-team.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கெல்லம்,& Dwayne Romel Smith-தும் இல்லை..

அஸ்வின் அணியில் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்ததற்கு காரணம், தமிழகத்தை பிரதிநித்துவபடுத்தும் ஒரு அணியில் தமிழகத்தின் ஒரு சீனியர் பிளேயர் இருந்திருக்கலாமே என்ற அவாதான்.

இம்முறை சிஎஸ்கேயின் batting order படு வீக்காதான் இருக்கு என்று நினைக்கிறேன்.

வாட்சன், ஹர்பஜனை அணியில் சேர்த்ததுபற்றி உங்கள் கருத்து நவீனன்?

Link to comment
Share on other sites

 

வாட்சனை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் உதவலாம் அதே நேரம் கடைசி ஓவர்களில்  அடித்தும் ஆட கூடியவர்.

எதுக்கும் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

 

அதே நேரம்  வாஷிங்டன் சுந்தரை சென்னை வாங்கி இருக்கலாம். முரளி விஜய் எந்த விதத்திலும் பிரியோசனம் இல்லாத தெரிவு.

9 minutes ago, valavan said:

மக்கெல்லம்,& Dwayne Romel Smith-தும் இல்லை..

அஸ்வின் அணியில் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்ததற்கு காரணம், தமிழகத்தை பிரதிநித்துவபடுத்தும் ஒரு அணியில் தமிழகத்தின் ஒரு சீனியர் பிளேயர் இருந்திருக்கலாமே என்ற அவாதான்.

இம்முறை சிஎஸ்கேயின் batting order படு வீக்காதான் இருக்கு என்று நினைக்கிறேன்.

வாட்சன், ஹர்பஜனை அணியில் சேர்த்ததுபற்றி உங்கள் கருத்து நவீனன்?

 

இம்முறை சிஎஸ்கேயின் batting order படு வீக்காதான் இருக்கு என்று நினைக்கிறேன்.

உண்மை ஆரம்ப ஓவர்களில் அடித்து ஆட கூடியவர்கள் யாரும் இல்லை

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: இரண்டு நாள் ஏலம் முடிவில் ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு விவரம்

 

 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டு நாள் ஏலத்தில் முடிவில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 169 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். #IPLAuction #IPL2018

 
 
 
 
ஐபிஎல் 2018: இரண்டு நாள் ஏலம் முடிவில் ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு விவரம்
 
 
பெங்களூரு:
 
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
 
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஏலத்தில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஏலம் இன்று நடைபெற்றது. இன்று 91 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இத்துடம் மொத்தமாக இரண்டு நாள் ஏலத்தில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 169 பேர் ரூ. 431.70 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் வெவ்வேறு அணிகளில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
 
சென்னை சூப்பர் கிங்ஸ் (25):
 
மகேந்திர சிங் டோனி
சுரேஷ் ரெய்னா
ரவிந்திர ஜடேஜா
டு பிளிசிஸ்
ஹர்பஜன் சிங்
வெய்ன் பிராவோ 
ஷேன் வாட்சன் 
கெதார் ஜாதவ்
அம்பதி ராயுடு 
இம்ரான் தாஹிர் 
கரன் சர்மா
ஷர்துல் நரேந்திர தாகூர் 
நாரயண் ஜெகதீசன்
மிச்செல் சாந்தர்
தீபக் சஹார்
கேஎம் ஆசிஃப் 
லுங்கி நிகிடி
கனிஷ் ஷெத்
துருவ் ஷோரே
முரளி விஜய்
சாம் பில்லிங்ஸ்
மார்க் வுட்
ஷித்திஸ் சர்மா 
மோனு குமார்
சைதன்யா பிஷ்னோய்
 
201801281957484854_1_cskteam._L_styvpf.jpg
 
டெல்லி டேர்டெவில்ஸ் (25):
 
ரிஷப் பாண்ட்
கிறிஸ் மோரிஸ்
ஷ்ரேயாஸ் ஐயர்
கிளென் மேக்ஸ்வெல்
கவுதம் கம்பிர்
ஜேசன் ராய்
கொலின் முன்ரோ
மொகமது ஷம்மி
ககிசோ ரபாடா
அமித் மிஷ்ரா
பிரித்வி ஷா
ராகுல் தேவதியா
விஜய் சங்கர்
ஹர்ஷல் பட்டேல்
அவேஷ் கான்
ஷபாஷ் நதீம்
டன் கிறிஸ்டேன்
ஜெயந்த் யாதவ்
குர்கெராத் மான் சிங்
டிரெண்ட் போல்ட்
மஞ்சோத் கல்ரா
அபிஷேக் சர்மா
சந்தீப் லம்கானே
நமன் ஓஜா
சயான் கோஷ்
 
201801281957484854_2_ddteam._L_styvpf.jpg
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (21):
 
அக்சார் பட்டேல்
ரவிசந்திரன் அஷ்வின்
யுவராஜ் சிங்
கருண் நாயர்
லோகேஷ் ராகுல்
டேவிட் மில்லர்
ஆரோன் பிஞ்ச்
மார்கஸ் ஸ்டாயின்ஸ்
மன்யக் அகர்வால்
அன்கித் ராஜ்புட்
மனோஜ் திவாரி
மோகித் சர்மா
முஜீப் சத்ரான்
பரிந்தர் ஸ்ரன்
அண்ட்ரூ டை
ஆகாஷ்தீப் நாத்
பென் டுவார்ஷுய்ஸ்
பிரதீப் சாஹு
மன்யக் தகார்
கிறிஸ் கெயில்
மன்சூர் தார்
 
201801281957484854_3_punjabkxip._L_styvpf.jpg
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19):
 
சுனில் நரேன் 
அண்ட்ரே ரஸ்சல்
மிச்செல் ஸ்டார்க்
கிறிஸ் லைன்
தினேஷ் கார்த்திக்
ராபின் உத்தப்பா
பியுஸ் சாவ்லா
குல்தீப் யாதவ்
ஷுபம் கில்
இஷாங் ஜக்கி
கம்லேஷ் நகர்கொட்டி
நிதிஷ் ரானா
வினய் குமார்
அபூர்வ் வான்கடே
ரிங்கு சிங்
ஷிவம் மவி
கெமரான் டெல்போர்ட்
மிச்செல் ஜான்சன்
ஜவோன் சியர்லெஸ்
 
201801281957484854_4_kkrteam._L_styvpf.jpg
 
மும்பை இந்தியன்ஸ் (25):
 
ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா
ஜஸ்பிரித் பும்ரா
கெய்ரான் பொலார்ட்
முஸ்தபிசுர் ரஹ்மான்
பேட் கம்மின்ஸ்
சூர்யகுமார் யாதவ்
குருனல் பாண்டியா
இஷான் கிஷான்
ராகுல் சஹார்
எவின் லெவிஸ்
சவுரப் திவாரி
பென் கட்டிங்
பிரதீப் சங்வான்
ஜேபி டுமினி
ஜேசன் பெரண்டார்ஃப்
தஜிந்தர் சிங்
ஷரத் லும்பா
சித்தேஷ் லேட்
ஆதித்யா தாரே
மன்யக் மார்கண்டே
அகிலா தனஞ்ஜெயா
அன்குல் ராய்
மொஹ்சின் கான்
நித்தேஷ் எம்டி தினேசன்
 
201801281957484854_5_mumbaiteam._L_styvpf.jpg
 
ராஜஸ்தான் ராயல்ஸ் (23):
 
ஸ்டீவன் ஸ்மித்
பென் ஸ்டோக்ஸ்
அஜிங்யா ரகானே
ஸ்டூவர்ட் பின்னி
சஞ்சு சாம்சன்
ஜோஸ் பட்லர்
ராகுல் திரிபாதி
டார்கி ஷார்ட்
ஜோப்ரா ஆர்சர்
கிருஷ்ணப்பா கவுதம்
தவால் குல்கர்னி
ஜெய்தேவ் உனத்கட்
அன்கிட் சர்மா
அனிரூத் சிங்
சஹிர் கான்
ஷ்ரேயாஸ் கோபால்
சுதேசன் மிதுன்
பிரசாந்த் சோப்ரா
பென் லாப்லின்
மகிபால் லோம்ரோர்
ஜடின் சக்சேனா
ஆர்யாமன் விக்ரம் பிர்லா
துஷ்மந்தா சமீரா
 
201801281957484854_6_rrteam._L_styvpf.jpg
 
ராயல் சேலஞ்சர் பெங்களூர் (24):
 
விராட் கோலி
ஏபி டி வில்லியர்ஸ்
சர்பராஸ் கான்
பிரண்டன் மெக்கல்லம்
கிறிஸ் வோக்ஸ்
கொலின் டி கிராண்ட்ஹோம் 
மோயின் அலி
கிவிண்டன் டீ காக்
உமேஷ் யாதவ்
யுஸ்வேந்திர சஹால்
மனன் வோஹ்ரா
குல்வந்த கெஜ்ரோலியா
அனிகித் சவுத்ரி
நவ்தீப் சைனி
முருகன் அஷ்வின்
மன்தீப் சிங்
வாஷிங்டன் சுந்தர்
பவான் நெகி
மொகமது சிராஜ்
நாதன் கவுல்டர்-நைல்
அனிருதா ஸ்ரீகாந்த்
பார்தீவ் பட்டேல்
டிம் சவுத்தீ
பவன் தேஷ்பாண்டே
 
201801281957484854_7_rcbteam._L_styvpf.jpg
 
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (25):
 
டேவிட் வார்னர்
புவனேஷ்வர் குமார்
ஷிகர் தவான்
கேன் வில்லியம்சன்
ஷகிப் அல் ஹசன்
மணிஷ் பாண்டே
கார்லோஸ் பிரத்வேய்ட்
யூசுப் பதான்
விரிதிமான் சஹா
ரஷித் கான்
ரிக்கி பூயி
தீபக் ஹூடா
சித்தார்த் கவுல்
நடராஜன்
பசில் தம்பி
கலீல் அஹ்மத்
மொகமது நபி
சந்தீப் சர்மா
சச்சின் பேபி
கிறிஸ் ஜோர்டன்
பில்லி ஸ்டான்லேக்
தன்மய் அகர்வால்
ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி
பிபுல் சர்மா
மெய்தி ஹசன்
 
201801281957484854_8_srhteam._L_styvpf.jpg
 
இன்றைய ஏலத்தில் அதிகப்ட்சமாக இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் ரூ. 11.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஜேம்ஸ் பால்க்னர், ஜோஷ் ஹசில்வுட், இயான் மார்கன், அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், கெமரான் ஒயிட்,  கோரி ஆண்டர்சன், டேவிட் வில்லி, லியாம் பிளங்கீட், கொலின் இங்கிராம், ஜோ ரூட், சாமுவெல் பத்ரி, லசித் மலிங்கா உள்ளிட்ட முக்கிய வீரர்களை எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை. #IPLAuction #IPL2018

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/28195748/1142680/IPL-auctions-169-players-sold-full-team-list.vpf

Link to comment
Share on other sites

IPL – அஞ்ஜெலோ மேத்திவ்ஸ்,  லசித் மலிங்கா உட்பட விலைபோகாத முன்னணி வீரர்கள்…

unwanted-list-at-IPL-auction.jpg?resize=
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டு நாள் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் சில முன்னணி வீரர்கள் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டனர்..

 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 27-ந்  திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில்  நேற்று ஆரம்பமாகியது. 360 இந்தியர்கள் உட்பட  மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஏலத்தில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஏலம் இன்று நடைபெற்றது. இன்று 91 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இத்துடம் மொத்தமாக இரண்டு நாள் ஏலத்தில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 169 பேர் ரூ. 431.70 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜேம்ஸ் பால்க்னர், இயான் மார்கன், அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், ஜோ ரூட், சாமுவெல் பத்ரி, லசித் மலிங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுக்க எந்த அணியும் முயலவில்லை.

 
ஏலம் எடுக்கப்படாத சில முன்னணி வீரர்கள் விவரம் வருமாறு:-
 
இந்தியா:
 
மொகமது ஷம்மி
செட்டேஷ்வர் புஜாரா
இஷாந்த் சர்மா
இர்பான் பதான்
அசோக் டிண்டா
பிரவீன் குமார்
வருண் ஆரோன்
முனாப் பட்டேல்
 
இலங்கை:
 
அஞ்ஜெலோ மேத்திவ்ஸ்,
லசித் மலிங்கா
திசாரா பெரேரா
உபுல் தரங்கா
நிரோசன் டிக்வெல்லா
 
சபீர் ரஹ்மான் (வங்காளதேசம்)
பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து)
தவ்லத் சத்ரான் (ஆப்கானிஸ்தான்)
 
 
வெஸ்ட் இண்டிஸ்:
 
ஜான்சன் சார்லஸ்
ஜேசன் ஹோல்டர்
லெண்டில் சிம்மன்ஸ்
சாமுவெல் பத்ரி,
வெய்ன் ஸ்மித்
டேரன் பிராவோ
டேரன் சம்மி
ஜெரோம் டெய்லர்
மார்லன் சாமுவெல்ஸ்
 
 
ஆஸ்திரேலியா:
 
ஜேம்ஸ் பால்க்னர்
ஜோஷ் ஹேசில்வுட்
கேமரான் ஒயிட்
மோசஸ் ஹென்ரிகஸ்
ஷான் மார்ஷ்
மைக்கெல் கிளிங்கர்
நாதன் லையன்
பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப்
ஆடம் சாம்பா
பீட்டர் சிடில்
உஸ்மான் கவாஜா
ஜான் ஹேஸ்டிங்ஸ்
சீன் அபோட்
பென் ஹில்பெனாஸ்
 
 
தென்னாப்ரிக்கா:
 
டின் எல்கர்
மார்னே மார்கல்
டேல் ஸ்டெயின்
ஹாசிம் அம்லா
கைல் அபோட்
வெய்ன் பர்னெல்
மெர்சண்ட் டி லேங்
ரீசா ஹெண்ட்ரிக்ஸ்
வெர்னான் பிளாண்டர்
 
 
நியூசிலாந்து:
 
லூக் ராங்கி
கோரி ஆண்டர்சன்
கொலின் இங்கிராம்
மைக்கெல் மெக்லெனகன்
மார்டின் கப்தில்
லாக்கி பெர்குசன்
ராஸ் டெய்லர்
ஆடம் மில்னே
இஷ் சோடி
 
 
இங்கிலாந்து:
 
ஜோ ரூட்,
இயான் மார்கன்,
டேவிட் வில்லி,
லியாம் பிளங்கீட்
ரவி பொபாரா
ஜானி பேர்ஸ்டோ
ஸ்டீவன் பின்
தைமால் மில்ஸ்
அலெக்ஸ் ஹேல்ஸ்
டாம் குர்ரன்
அடில் ரஷித்
சமித் பட்டேல்
ஹாரி குர்னி

http://globaltamilnews.net/2018/63987/

Link to comment
Share on other sites

நம்புங்கள், இந்தப் பிரபல வீரர்களுக்கு ஐபிஎல்-லில் இடமில்லை!

 

 
malinga66

 

2018 ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாத வீரர்கள் இதுவரை விளையாடிய ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 613 ஐபிஎல் ஆட்டங்கள்!

அதிலும் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை (154) வீழ்த்திய மலிங்காவுக்கே இந்த வருட ஐபிஎல்-லில் இடமில்லை என்பது நம்பமுடியாததாக உள்ளது. 

11-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 12.50 கோடிக்கும் இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.11.5 கோடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்து ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பல பிரபல வீரர்களையும் எந்த அணியும் சீந்தாதது அதைவிடவும் பெரிய ஆச்சர்யம்! இந்தப் பட்டியலில் மலிங்கா, கப்தில், சிம்மன்ஸ், ஆம்லா, மார்கன், மெக்லெனகன், மேத்யூஸ், ஜேம்ஸ் ஃபாக்னர் போன்ற முக்கியமான வீரர்கள் உள்ளார்கள்! 

கடந்த வருட ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்காக இரு சதங்கள் எடுத்தும் இந்தமுறை ஹாசிம் ஆம்லாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. கடந்த வருடம் 10 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய ஆம்லா, 420 ரன்கள் எடுத்தார். அதில் இரு சதங்கள் இரு அரை சதங்களும் உண்டு. சென்னை அணி ஆம்லாவைத் தேர்வு செய்திருக்கவேண்டும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.  

hashim_amla.jpg

மலிங்கா இதுவரை 110 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த வருடம் 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2009 முதல் ஐபிஎல்-லில் பங்கேற்கும் மலிங்கா கடந்த வருடம்தான் குறைந்த விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல ரன்களை வாரிவழங்கியதும் கடந்த வருடம்தான். எகானமி - 8.52. இந்தக் காரணங்களால் இந்தமுறை அவரை எந்த அணியும் தேர்வு செய்ய விருப்பப்படவில்லை. 

சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா 2016 முதல் இன்றுவரை எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. 2010-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 2 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

டி20 போட்டியின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் இஷ் சோதி தேர்வாகவில்லை என்பது இன்னமும் நம்பமுடியாத செய்தியாகவே உள்ளது. அதேபோல டி20 அணிகளில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தமுறையும் ஐபிஎல்-லில் இடமில்லை. 

கடைசிவரை விலை போகாமல் இருந்த கிறிஸ் கெய்லைக் கடைசிக்கட்டத்தில் பஞ்சாப் அணி தேர்வு செய்தது. அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு அவர் தேர்வானார். 

மார்டின் கப்தில் இதுவரை ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் தேர்வாகாமல் உள்ளார்.

கடந்த வருடம் ரூ. 12 கோடிக்குத் தேர்வான டைமல் மில்ஸ் (பெங்களூர்) இந்த வருடம் தேர்வாகவில்லை. 

இஷாந்த் சர்மா

2017-ல் அடிப்படை விலை - ரூ. 2 கோடி: தேர்வாகவில்லை

2018-ல் அடிப்படை விலை - ரூ. 75 லட்சம்: தேர்வாகவில்லை.

இந்த வருடம் ஐபிஎல்-லில் இடம்பெறாத வீரர்களின் முழுப்பட்டியல்

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/29/prolific-old-hands-that-didnt-find-a-buyer-2853436.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலத்தில் திட்டப்படி செயல்பட்டோம்: மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பேட்டி!

mubai%20indiansjpg

இரண்டு நாள் ஐபிஎல் ஏலத்துக்குப் பிறகு, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, தங்கள் அணி திட்டமிட்டபடியே ஏலத்தில் செயல்பட்டது என்று கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு...

உங்கள் அணியை பொருத்தவரை இந்த ஏலம் எப்படி இருந்தது?

எங்களிடம் திட்டமிருந்தது. சற்று ஆபத்தானதுதான். ஆனால் நாங்கள் அதன்படி சரியாக செயல்பட்டோம் என்றே நினைக்கிறேன். ஆரம்பத்தில் பரபரப்பு அதிகமாக இருந்தது. நிறைய பேர் ஒவ்வொரு வீரருக்கும் ஏலம் கேட்க ஆரம்பித்தார்கள். எங்களிடம் அந்த அளவு பணம் இல்லை என்பதால் நாங்கள் பின்வாங்கிவிட்டோம். கண்டிப்பாக க்ருணால் பாண்டியாவை ரைட் டு மேட்ச் கார்ட் மூலம் எடுப்போம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அவர்  10வது கட்டத்தில் தான் ஏலத்தில் வந்தார். அதனால் அதற்கான பணத்தை வைத்திருக்க வேண்டியிருந்தது.

அந்த ஆபத்தான திட்டத்தைப் பற்றி சொல்லுங்கள்?

எந்த இரண்டு வீரருக்கு ரைட் டு மேட்ச் உபயோகிக்கப் போகிறோம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். எங்கள் அணி வீரர்கள் பலரை மற்ற அணியினர் வாங்கினார்கள். அதனால் மாற்று வீரர்களை பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிந்திருந்தது. ஒட்டுமொத்தமாக எங்கள் திட்டம் பலித்தது என்றே நினைக்கிறேன். ஒரு சில வீரர்களை தவறவிட்டோம். ஆனால் ஏலத்தில் அதை தவிர்க்க முடியாது.

நீங்கள் க்ருணாள் பாண்டியாவை ரைட் டு மேட்ச் மூலம் எடுக்கப் போகிறீர்கள் என்பதால் மற்ற அணியினர் விலையை ஏற்றி விட்டார்களா?

இல்லை. எங்கள் அணிக்கு அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலமாக அவர் ஆற்றியிருந்த பங்கின் மூலம் அவருக்கான மதிப்பு கூடியிருந்தது. அவர் எங்கள் அணியின் இரண்டு பொறுப்புகளை கவனிப்பதால் அவரை வாங்க நாங்கள் தயாராகத்தான் இருந்தோம். ஹர்திக்கும் இதே அணியில் இருப்பதால் இருவரும் இணைந்து நன்றாக ஆடுவார்கள்.

விக்கெட் கீப்பரை பொருத்த வரையில் சந்தேகங்கள் இருந்ததா?

இஷானை எடுக்க வேண்டும் என்றே நினைத்திருந்தோம். ஏனென்றால் பயிற்சியிலும் அவர் நன்றாக ஆடுவதைப் பார்த்தோம். ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் எங்கள் திட்டங்களுக்குள் சரியாக பொருந்திப் போவார். ஜோஸ் பட்லர் விலை அதிகம் என்பதால் அவரை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது. மேலும் அடுத்த சீஸனில் அவரால் ஆட முடியாது. அவரை எடுக்க முடியாத போது இஷானை எடுத்தோம். மும்பை இந்தியன்ஸில் எப்போதும் இளம் திறமைகளை ஆதரிப்போம். ஹர்திக், பும்ரா, க்ருணால் என மூன்று முக்கிய திறமைகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

ஏலத்துக்கு முன்னும், ஏலம் நடக்கும் போதும் ரோஹித் சர்மாவுடன் பேசினீர்களா?

ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்ட் போட்டிக்கு முன் அவருடன் பேசினோம். ஏனென்றால் அதற்குப் பிறகு அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கைக்கு பயணப்பட்டபோது ரோஹித்தை இலங்கையில் சந்தித்தேன். ஏலத்தில் நாங்கள் எடுத்த வீரர்களை பொருத்தவரை ஒரு குழுவாக அனைவருக்கும் மகிழ்ச்சியே.

எந்த முக்கிய வீரரை தவறவிட்டதாக நினைக்கிறீர்கள்? எந்த முக்கிய வீரர் குறைந்த விலைக்கு எடுக்கப்பட்டார்?

அப்படி யாரையும் தவற விட்டதாக நினைக்கவில்லை. எங்களைப் பொருத்தவரை கெய்ரன் பொலார்ட், எவின் லூயிஸ், பென் கட்டிங் ஆகியோரை நல்ல (குறைந்த) விலைக்கு எடுத்தோம் என நினைக்கிறேன். மேலும் சனிக்கிழமை முஸ்தஃபிஸூர் மற்றும் பாட் கம்மின்ஸை எடுத்ததும் நல்ல விலை தான். சஞ்சு சாம்சன், கே எல் ராகுலை தவறவிட்டத்தில் சற்று ஏமாற்றமே. ஆனால் அவர்களை எடுப்பது கடினம் என்பதை அறிந்திருந்தேன்.

உள்ளூர் வீரர்களில் நீங்கள் நினைத்த எத்தனை பேரை எடுக்க முடிந்தது?

இஷான் கண்டிப்பாக எங்கள் பார்வையில் இருந்தார். ராஹுல் சந்தர், மயங்க் என்ற இரண்டு லெக் ஸ்பின்னர்கள் திறமை எங்கள் திருப்திகரமாக இருந்தது. அவர்கள் இருவரையுமே எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது அற்புதமாக நடந்தது. வேகப்பந்து வீச்சாளர்களை பொருத்தவரை பிரதீப் பயிற்சியில் நன்றாக வீசினார். அனுபவமும் இருந்தது. அவரை எடுக்க பரிசீலித்தோம்.  இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளார்களை தேர்ந்தெடுத்தோம். மொஹ்ஸின் கான் மற்றூம் நிதீஷ். முன்னமே வீரர்களுக்கான சோதனை வலை பயிற்சி நடத்தியதால் வீரர்களின் ஆட்டமும், எண்ன ஓட்டமும் எப்படி இருக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இதை முன்னாடியே செய்திருக்கிறோம். இதற்கு முன்னால் அப்படித்தான் ஹர்திக் மற்றும் பும்ராவை நாங்கள் தேர்ந்தெடுத்தது.

- ©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

http://tamil.thehindu.com/sports/article22550792.ece?homepage=true

Link to comment
Share on other sites

‘கோலியுடன் விளையாடும் என் கனவு நனவாகிவிட்டது’ : சென்னை வீரர் வாஷிங்டன் சுந்தர் பெருமிதம்

 
WASHINGTONSUNDAR

சென்னை

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ஆகியோருடன் விளையாட வேண்டும் என்கிற என்னுடைய கனவு நனவாகிவிட்டது என்று சென்னையைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரைஸிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தர், தோனி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து விளையாடினார். ஆல்-ரவுண்டரான சுந்தரை ரூ.3.3 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த முறை ஐ.பி.எல். ஏலத்தில் விலைக்கு வாங்கியது. இவரின் அடிப்படை விலை ரூ. ஒரு கோடியாகும்.

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்னை தேர்வு செய்து இருப்பதை நினைத்து வியக்கிறேன். விராத் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரின் தீவிர ரசிகன் நான்,. கோலியுடனும், டீவில்லியர்ஸ் உடனும் விளையாட வேண்டும் என்கிற எனது கனவு நனவாகிவிட்டது.

கடந்த ஆண்டு ரைஸிங் புனே அணியில், தோனியுடன் விளையாடிய அனுபவம் உண்மையில் விலை மதிக்க முடியாதது. இப்போது பெங்களூரு அணியில் கோலியுடன் விளையாடப் போகிறேன் என்பது கடவுளின் ஆசியாகவே கருதுகிறேன்.

பெங்களூரு அணியில் இடம் பெற்று, இன்னும் கிரிக்கெட் தொடர்பான பல நல்ல, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். எனது குறிக்கோள் எனது திறமையை மேம்படுத்தி, கிடைக்கும் வாய்ப்புகளில் உயரே செல்ல வேண்டும் என்பதாகும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரைஸிங் புனே அணியில் அஸ்வின் இல்லாததன் காரணமாக சுழற்பந்துவீச்சுக்கு வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு விலைக்கு வாங்கியது. கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இடம் விஜய் சங்கர் இடம் பெற்று இருந்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன் கடந்த ஆண்டு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த ஆண்டு ரூ.3 கோடிக்கு நடராஜனை சன் ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது

http://tamil.thehindu.com/sports/article22543839.ece

Link to comment
Share on other sites

நான் மகிழ்ச்சியில் பறந்தேன்: ரூ.11.5 கோடி ஐபிஎல் வீரர் ஜெய்தேவ் உனாட்கட் நெகிழ்ச்சி

 

 
unadkat

ஜெய்தேவ் உனாட்கட்.   -  படம்.| ஏ.பி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் ஐபிஎல் 2018 ஏலத்தில் ரூ.11.5 கோடிக்கு, அதாவது சுமார் 1.8 மில். அமெரிக்க டாலர்களுக்கு, ஏலம் எடுக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் தான் மகிழ்ச்சியில் பறப்பதாக நெகிழ்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோரை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்க ரூ.11.5 கோடிக்கு அதிக செலவான இந்திய வீரரானார் ஜெய்தேவ் உனாட்கட்.

விஜய் ஹசாரே டிராபிக்காக ராஜ்கோட்டில் பயிற்சிக்காக உனாட்கட் செல்ல வேண்டியிருந்தது. உனாட்கட் தன் மனநிலை பற்றி ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டதாவது

“ஏலத்தில் என் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் சேர்ந்தே போனில் ஏலத்தைப் பார்த்தோம். வலைப்பயிற்சியை 5 நிமிடங்களுக்கு நிறுத்தி விட்டோம். சக வீரர்கள் ஒவ்வொரு நிமிடமும் ஆரவாரம் செய்தபடி இருந்தனர், எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர், தங்களுக்குள்ளேயே வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நமக்காக உண்மையில் மகிழ்ச்சியடைபவர்களை பார்ப்பது உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. விருந்து கொடுக்காமல் என்னை விடமாட்டேன் என்றார்கள், பிறகு விருந்தை தள்ளி வைத்தோம். விஜய் ஹசாரே டிராபிக்காக ஹைதராபாத் வரும் போது விருந்தில் மகிழ்வோம்.

உள்ளபடியே கூற வேண்டுமானா இந்தத் தருணத்துடன் நானும் நீந்திக் கொண்டிருந்தேன். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே எனக்குப்புரியவில்லை.

ஏலத்தினால் எனக்கு கவனச் சிதறல் ஏற்படவில்லை, ஏலம் முடிந்தவுடன் வலைக்குத் திரும்பினேன். உண்மையில் நான் மகிழ்ச்சியில் பறக்கவே செய்தேன். பறத்தலிலிருந்து தரையிறங்க முயற்சி செய்தேன். நான் எந்தத் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை. பயிற்சி முடிந்து போனை எடுக்க ஆரம்பித்தேன் இன்னும் அழைப்புகள் ஓயவில்லை.

என் சகோதரி குடும்பம் மகிழ்ச்சியில் துள்ள, என் பெற்றோர் பதற்றத்துடன் இருந்தனர், இவ்வளவு தொகை கொடுத்து எடுக்கிறார்கள் என்றால் அதன் மீதான் எதிர்பார்ப்புகள், அழுத்தங்கள் பற்றி அவர்கள் கவலையடைந்திருக்கலாம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் நன்றாக ஆடியதாக உணர்கிறேன். இலங்கைக்கு எதிராகவும் ஒரு மாதம் முன்பு நன்றாக வீசினேன்.

இது அனைத்தும் என்னுடைய வேர்களுக்கு என்னை திருப்பியுள்ளது, என் அம்மா எப்போதும் கூறுவார், சாதாரணமாக இரு, இயல்பாக இரு, இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று திரும்பத் திரும்பக் கூறுவார், இந்த அறிவுரை என்னுடனேயே இருப்பது” இவ்வாறு கூறினார் ஜெய்தேவ் உனாட்கட்.

http://tamil.thehindu.com/sports/article22549771.ece

Link to comment
Share on other sites

சென்னையோடு மல்லுக்கட்டு, மும்பையோடு சிணுங்கல் சண்டை... அழகுப்புயல் ப்ரீத்தி ஜிந்தா... ஐ.பி.எல் ஏல சுவாரஸ்யங்கள்! #IPLAuction

 
 

ரிச்சர்ட் மேட்லியின் 'gavel' சத்தத்தோடு ஐ.பி.எல் தொடர் தொடங்கிவிட்டது. கோவாவுடன் தண்ணீருக்காகப் போராடிவரும் பெங்களூரு நகரை, கோடிகளில் நனைத்துள்ளது 2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம்.  சர்வதேச அரங்கில் ஜொலித்த நட்சத்திரங்கள் பலர் விலைபோகாத நிலையில், உள்ளூர் வீரர்கள் பலரின் பேங்க் பேலன்ஸும் கோடிகளில் எகிறியுள்ளது.  சில அணிகள் மிகவும் பலமான squad-யை அமைத்துள்ளன. ஒருசில உரிமையாளர்கள் இளம் வீரர்களைக் கொண்டு அணிக்குப் புது ரத்தம் பாய்ச்சியுள்ளனர்.  2 நாள்கள் நடந்த இந்த ஏலம் வழக்கம் போல் ஆச்சர்யங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்தே இருந்தது. அந்த இரண்டு நாள்கள் நடந்த அதிரிபுதிரி நிகழ்வுகளின் தொகுப்பு....#IPLAuction

#IPLAuction

 

ப்ரீத்தி ஜிந்தா - ஏலத்தை மையம் கொண்ட புயல்!

இந்த இரண்டு நாள்களும் அனைவரையும் கவர்ந்தது ப்ரீத்தி ஜிந்தாவின் உற்சாகம்தான். முழுக்க முழுக்க ப்ரீத்தி 'ஜிந்தாபாத்' தான் ஏலத்தில். முதல் நாள் ஏலம் தொடங்கியதும் ஃபுல் ஃப்ளோவில் இருந்தார் ப்ரீத்தி. முதலில் ஏலம் விடப்பட்ட 8 மார்க்கி வீரர்களில், கெயில் தவிர்த்து மற்ற 7 பேருக்காகவும் மல்லுக்கட்டினார். ஒரு வீரரையும் விடவில்லை.  யுவ்ராஜ் சிங்கை வாங்கிய உற்சாகத்தில் அடுத்த வந்த 6 வீரர்களில் ஐவரை அவரே வாங்கிக் குவித்தார். அந்த மற்றொரு வீரர் unsold! முதல் நாள் ஏலத்தின் முதல் செஷன் முழுதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சில அணிகளின்  உரிமையாளர்கள் வீரர்களை வாங்கிய பிறகு சந்தோஷத்தில் கைகுலுக்கிக்கொண்டனர். சென்னை, கொல்கத்தா அணிகளுக்காக ஏலத்தில் ஈடுபட்டிருந்தவர்களோ 'statue' மோடிலேயே அமர்ந்திருந்தனர். ஏதோ ஐ.டி கம்பெனியின் க்ளயன்ட் மீட்டிங்கைப் போல் நடந்துகொண்டிருந்த ஏலத்தில், கொஞ்சம் கிரிக்கெட் ஃப்ளேவரைச் சேர்த்தது பஞ்சாப் அணிதான். வீருவின் சிரிப்பும், ப்ரீத்தியின் ரியாக்ஷன்களும்தான் இந்த ஏலத்துக்கான எனர்ஜி டானிக்.

ப்ரீத்தி ஜிந்தா

ஒரு வீரரை வாங்கியதும் உற்சாக ஹைஃபை...மிஸ் செய்துவிட்டால் தரும் அந்த சோக ரியாக்ஷன்...தான் வாங்கிய வீரரை, 'RTM பயன்படுத்தி எதிரணி வாங்குகிறதா' எனப் பார்க்கும்போது கண்கள் விரித்துக் காட்டிய பார்வை... RTM  மூலம் டேவிட் மில்லரை வாங்கிவிட்டு, விரல்களைத் துப்பாக்கிபோல் வைத்து நீதா அம்பானியைச் செல்லாமாகச் சுட்டது என வெரைட்டி ரியாக்ஷன்களால் ஏலத்தை கலர்ஃபுல்லாக வைத்திருந்தார் ஜிந்தா. வீரர்களுக்கான தொகை அதிகமாகப் போனபோது 'ஸ்லோ' மோஷனில் paddle-யைத் தூக்கியபோதெல்லாம் 'நடிகை' ப்ரீத்தி ஜிந்தா வெளிப்பட்டார். யுவ்ராஜ் சிங்கை மீண்டும் வாங்கியபிறகு ப்ரீத்தி கொடுத்த ரியாக்ஷன்.....இதுக்காகவாவது ஓவருக்கு 6 சிக்ஸர் பறக்க விடணும் யுவி! 

ப்ரீத்தியை அழவைத்த  RTM

ஒவ்வொரு அணிக்கும் இந்த ஏலத்தில் ஐந்து நபர்களுக்கான டிரம்ப் கார்டு இருந்தது. ரீட்டெய்ன் செய்த வீரர்களின் எண்ணிக்கையை கழித்துவிட்டு, ஒவ்வொரு அணிக்கும் Right To Match (RTM) கார்டுகள் வழங்கப்பட்டன. அதன் மூலம், முந்தைய ஆண்டு தன் டீமில் விளையாடிய வீரரை ,  எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதே தொகைக்கு மீண்டும் பெற முடியும். 

இரண்டு நாள்கள் முழுவதையும் மகிழ்ச்சியாகவே கழித்திருந்தாலும், அவ்வப்போது ஜிந்தாவை அழவைத்தன  RTM கார்டுகள்.   அவரும் ஒவ்வொரு வீரராக வாங்கிக் குவித்துக்கொண்டே இருந்தார். ஆனால், ஒவ்வொருவரையும்  RTM மூலம் மற்ற அணிகள் மீட்டுக்கொண்டே இருக்க, நொந்துபோனார் ப்ரீத்தி. ஏலத்தில் முதலாவதாக வந்த ஷிகர் தவானை, ராஜஸ்தான், மும்பை அணிகளோடு போட்டி போட்டு 5.20 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.  RTM பயன்படுத்தி அவரை மீட்டது சன்ரைஸர்ஸ். அடுத்து 1.60 கோடிக்கு, ஆறாவது வீரராக ஏலத்துக்கு வந்த டுப்ளெஸ்ஸியை வாங்கினார். சி.எஸ்.கே  RTM பயன்படுத்தியது. அடுத்து ரஹானேவின் பெயர் திரையில். மும்பை இந்தியன்ஸுடன் போட்டி. 5 கோடிவரை ப்ரீத்தி செல்ல, பின்வாங்கியது அம்பானி குடும்பம். ஆனால், RTM எடுத்து ப்ரீத்தியை கதறவைத்தது ராயல்ஸ்   . பின்னர் டுவைன் பிராவோ, ரஷித் கான் என மீண்டும் இருமுறை அவர் வாங்கிய வீரர்களை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸர்ஸ் அணிகளிடம் இழந்தார். ஒருவேளை  RTM ஆப்ஷன் இல்லாமல் இருந்திருந்தால் ப்ரீத்தியின் அணி....!

IPLAuction

ஃப்ளெமிங் VS ப்ரீத்தி

என்னடா சும்மா ப்ரீத்தி ஜிந்தா புராணமா இருக்கே என்று கடுப்பாக வேண்டாம். இந்த ஏலம் உண்மையில் அப்படித்தான் இருந்தது. சென்னை அணியின் 8 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் கூட இந்த அளவுக்கு 'டஃப்' கொடுத்திருக்காது. அந்த அளவுக்கு சென்னைக்கு டஃப் கொடுத்தார் ப்ரீத்தி ஜிந்தா. முதல் நாள் டுப்ளெஸ்ஸி, பிராவோ இருவரையும்,  RTM மூலம் சென்னை அணியிடம் இழந்தவர், இரண்டாம் நாள் சி.எஸ்.கே-வின் திட்டங்களுக்கு பெரும் தொல்லையாக விளங்கினார். வேகப்பந்துவீச்சாளர்களே இல்லாத நிலையில், 'யாராக இருந்தாலும் வாங்கிவிடுவது' என்ற மூடில் இருந்தார் ஃப்ளெமிங். 'என்னைத் தாண்டி வாங்கு பாப்போம் என்று சொல்லாமல் சொல்லி சவால் அளித்தார் ப்ரீத்தி. பரிந்தர் ஸ்ரன், ஆண்ட்ரே டை, ஜெய்தேவ் உனத்கட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என சென்னை வாங்க நினைத்தவர்களுக்கெல்லாம் அவரும் போட்டி போட்டார். அவர்களுள் சென்னை அணிக்கு மிஞ்சியது ஷர்துல் தாக்கூரும், தீபக் சஹாரும்தான். அனுபவ பௌலர் இல்லாத குறையை மோஹித் ஷர்மாவை வாங்கி சென்னை தீர்த்த வேலையில், RTM மூலம் பாதிக்கப்பட்டிருந்த ப்ரீத்தி, அதைக்கொண்டே சென்னையின் ஆசைக்கு ஆப்பு வைத்தார். முதல் நாளிலும் சும்மா இருந்தாரா...? பென் ஸ்டோக்ஸுக்கு ஆரம்பத்தில் சென்னை போட்டி போட்டபோது, இவர்தான் விடாமல் மல்லுக்கட்டினார். போதாக்குறைக்கு ரவிச்சந்திரன் அஷ்வினையும் நாடு கடத்திவிட்டார். இப்படி ஏலம் முழுவதுமே சூப்பர் கிங்ஸ்-கு தலைவலியாகவே விளங்கினார் ப்ரீத்தி!

மேட்லியை மெர்சலாக்கிய டேர்டெவில்ஸ்

11 ஆண்டுகளாக ஐ.பி.எல் ஏலத்தை நடத்திவரும் ரிச்சர்ட் மேட்லி ரொம்பவுமே 'புரொஃபஷனல்'. ஏலத்தின்போது, தன் கருத்துகளை தப்பித்தவறிக்கூட சொல்லிவிட மாட்டார். கெய்ல் ஏலம்போகாதபோது, "கெய்லை வாங்க ஆளில்லையா" என்று அதிர்ச்சியாக் கேள்விகளை முன்வைத்திட மாட்டார். ரெக்கார்ட் தொகைக்கு ஒரு வீரர் ஏலம் போனால், அந்த ஆச்சர்யத்தையும் வெளிக்காட்ட மாட்டார். "Ben Stokes sold for 12.5 crores  to Rajastan Royals " என 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்'டாக முடித்துக்கொள்வார். மிஞ்சிப் போனால், இளம் வீரர்கள் அதிக தொகைக்குப் போனால், '19 year old Rashid khan sold for 9 crores' என அவர்களின் வயதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வார். அப்படிப்பட்ட மேட்லி, இன்று ஓரிடத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார்.

ndeep Lamichhane

Uncapped ஸ்பின்னர்களுக்கான ஏலம் நடந்துகொண்டிருந்தது. சந்தீப் லாமிச்சான்...இந்தப் பெயரை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் கூறினார் மேட்லி. அவர், நேபாள வீரர் என்பதைப் பார்த்ததும், அவருக்குக் கொஞ்சம் ஆச்சர்யம். கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டின் பெயரை, ஏலத்தின்போது அவர் படித்தது இல்லை. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர். அதில் அந்நாட்டு வீரர் ஒருவரின் பெயர். அதுவும் அவனது வயது 17! அதுதான் அவரை ரொம்பவும் உற்சாகப்படுத்தியது. 20 லட்சம்தான் அடிப்படை விலை. யாரும் அவரை வாங்கத் தயாராக இல்லை. டெல்லி முன்வந்தது. வாங்கியது.  gavel-யைக் கீழே தட்டி, அதை உறுதிப்படுத்திய மேட்லி, "Wow, you bought a Nepalese player....excellent" என்று டெல்லி அணியைப் பாராட்டினார். இருபதுக்கும் குறைவான நாடுகளே விளையாடும் இந்த விளையாட்டில், மிகச்சிறிய நாட்டுக்காரன் ஒருவனுக்கு, மிகப்பெரிய மேடையில் இடம் கொடுத்தவர்களுக்கு மேட்லி கொடுத்த அந்தப் பாராட்டு....கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் பாராட்டு!

அரங்கை குஷிப்படுத்திய சில தருணங்கள்...

ஜெய்தேவ் உனத்கட்-ன் பெயர் அறிவிக்கப்பட்டதும் அரங்கம் பரபரப்பானது. கடந்த ஆண்டு பூனே அணிக்காக அசத்திய உனத்கட்டை, தன்னோடு சென்னைக்கு அழைத்துவர விரும்பினார் ஃப்ளெமிங். வேகப்பந்துவீச்சாளர்களே யாரும் இல்லாததால், எவ்வளவு தொகை போனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருந்தார். ஒன்றரைக் கோடி என அடிப்படை விலை அறிவிக்கப்பட்டதும் paddle-யை உயர்த்தினார். நொடிப்பொழுதும் யோசிக்காமல் கோதாவில் குதித்தார் ப்ரீத்தி. இருவரும் புயல் வேகத்தில் உனத்கட்டின் மதிப்பைக் உயர்த்தினர். 160, 170 லட்சம் என உயர்ந்த அவரது தொகை அடுத்து இருபது இருபது லட்சங்களாக உயர்ந்தது. 460, 480, 500 லட்சம்....இருவரும் ஓயவில்லை. வேகம் கூடிக்கொண்டே போகிறது. இரு அணிகள் போட்டி போடும்போது, ஒரு அணி பின்வாங்கிய பிறகுதான் புதிதாக ஒரு அணி களத்தில் குதிக்கும். இவர்கள் விடாது போட்டிபோட்டு விலையை உயர்த்தியதால், மற்ற அணிகள் பார்வையாளர்களாக மட்டுமே அமர்ந்திருந்தனர். 

#IPLAuction

780, 800, 820 லட்சம்...ஊஹும், இருவரும் விடுவதாயில்லை. போகப்போக கொஞ்சம் வேகம் மட்டும் குறைந்தது. 960...980...10 கோடியை அடைந்திருந்தது உனத்கட்டின் மதிப்பு. பத்தரைக் கோடிக்கு உயர்த்தினார் ஃப்ளெமிங். பதினொன்று...யோசித்து  paddle-யைத் தூக்கினார் ஜிந்தா. அப்போது சென்னையின் கைவசம் 17 கோடி ரூபாய் இருந்தது. இன்னும் சில வேகப்பந்துவீச்சாளர்கள் வாங்க வேண்டும். ஓப்பனர் வேறு இல்லை. வேறு வழியில்லாமல் பின்வாங்கினார் ஃப்ளெமிங். உனத்கட் பஞ்சாப்புக்குத்தான் என நினைத்திருந்த வேளையில், சட்டென்று paddle-யை உயர்த்தினார் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர். அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள், க்ளைமேக்ஸில் வந்து குட்டையைக் குழப்பியதும், அனைவரும் கைதட்டிச் சிரிக்கத் தொடங்கினர். 18.5 கோடி மட்டுமே மீதம் இருந்ததால், ப்ரீத்தியும் பின்வாங்க, ராயல்ஸ் வீரரானார் உனத்கட். பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி கொடுத்து வாங்கியவர்கள், 11 கோடிக்கு உனத்கட்டை எடுத்து மிரளவைத்தனர்.

இதேபோல், கடைசி கட்டத்தில் கெய்ல்-ன் ஏலமும் கொஞ்சம் கலகலப்பாக இருந்தது. மார்க்கீ வீரர்கள் பட்டியலில் 2 கோடி அடிப்படை விலையோடு இருந்தது கிறிஸ் கெய்ல்-ன் பெயர். முதல் நாளில் 4-வது வீரராக ஏலம் விடப்பட்டார். ஆனால், அவரை எடுக்க யாரும் முன்வரவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் ஏரியாவும் சைலன்ட் மோடிலேயே இருந்தது. இருபது ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் 20 சதங்கள் அடித்துள்ள ஒரு வீரர்...unsold! ஒரு சுற்று அனைத்து வீரர்களும் ஏலம் போய்விட்டனர். ஏலம் போகாத வீரர்களுக்கான மறு ஏலம்...கிறிஸ் கெய்ல்...மீண்டும் அமைதி...மீண்டும் unsold! 3-வது முறையாக அவரது பெயர் படிக்கப்படுகிறது. ஏதோ இம்முறை அவரை வாங்க, பஞ்சாப் முன்வந்தது. கெய்லுக்கான மாரத்தான் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வர, அவரை வாங்கிய பஞ்சாப் அணியை கைத்தட்டலும், புன்னகையும் கலந்து பாராட்டின மற்ற அணிகள். 

Kings XI Punjab

 

இப்படி ஏலம் கலகலப்பாக இருந்த தருணங்களிலெல்லாம் ப்ரீத்தி இருந்துள்ளார். இந்த உற்சாகம் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் புதிதல்ல. மொஹாலியில், தரம்சாலாவில், மற்ற கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகளின்போது பார்த்த அதே உற்சாகம்தான். என்ன, வழக்கமாக லீக் சுற்று முடியும்போதே அந்த உற்சாகம் அடங்கிவிடும். இந்த முறையேனும் இந்த உற்சாகம் பைனல் முடியும்வரை நீடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு............!

https://www.vikatan.com/news/sports/114790-preity-zinta-steals-the-show-during-2018-ipl-auctions.html

Link to comment
Share on other sites

ஐபில் ஏலம்: ரூ. 30 லட்சத்திற்கு ஏலம்போன பில்லியனர் மகன்

 
அ-அ+

ராஜஸ்தான் ராயல்ஸ் பில்லியனர் ஆன குமார் மங்கலம் பிர்லாவின் மகனை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் பேட்ஸ்மேன் ஆவார். #iplauction #RR

 
ஐபில் ஏலம்: ரூ. 30 லட்சத்திற்கு ஏலம்போன பில்லியனர் மகன்
 
ஐபிஎல் வீரர்கள் எலம் நேற்றும், நேற்றுமுன்தினமும் (ஜனவரி 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி ரூபாய்க்கும், இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட்டை 11.5 கோடி ரூபாய் கொடுத்தும் வாங்கியது.

ஐபிஎல் ஏலத்தில் இந்த இரண்டு தொகைதான் அதிகபட்ச தொகைதான். இதே அணி ஆர்யமன் பிர்லாவை ரூ. 30 லட்சம் கொடுத்து வாங்கியது. 20 வயதே ஆன பேட்ஸ்மேன் ஆர்யமன் பிர்லா யார் என்பதை அறிய யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

தற்போது ஆர்யமன் பிர்லா யார் என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குழுமம் ஆன ஆதித்யா பிர்லா குரூப்பின் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். குமார் மங்கலத்தின் மொத்த சொத்து மதிப்பு 12.7 பில்லியன் டாலராகும்.

201801291956537661_1_aryamanbirla002-s._L_styvpf.jpg

ஆர்யமன் பிர்லா மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். ஒரேயொரு ரஞ்சி டிராபி போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அவரது திறமையினால் ஐபிஎல் அணியில் தேர்வாகியுள்ளார். சிகே நாயுடு டிராபியில் 11 இன்னிங்சில் 795 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 79.5 ஆகும்.

ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள ஆர்யமன் பிர்லா கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் திறமையை கற்பதற்கான சிறந்த அடித்தளமாக இது இருக்கும். ஒரு இளம் வீரராக இது மிகப்பெரிய வாய்ப்பு. மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் இணைய இருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

மூன்று வருடத்திற்கு முன்பு நான் மும்பையில் இருந்து மத்திய பிரதேச அணிக்கு மாறிவிட்டேன். மும்பைக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெவா மாவட்டத்திற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் அணியில் இடம்பெறுவது எளிதான காரியம் அல்ல. அந்த இடத்தை பிடிப்பதற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை திறம்பட செய்ததற்காக நாம் பெருமையடைகிறேன்.

201801291956537661_2_aryamanbirla001-s._L_styvpf.jpg

என்னுடைய பெற்றோர் (குமார் மங்கலம் - நீர்ஜா பிர்லா) மிகவும் சந்தோசம் அடைந்தனர். ஏலத்தின் என்னை எடுக்கும்போது நான் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஏலம் முடிந்த பின்னரே ராஜஸ்தான் அணி என்னை வாங்கிய செய்தியை அறிந்தேன். என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

இதேபோல் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மருமகன் மயாங்க் தாதரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இவர் 13 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். சேவாக் பஞ்சாப் அணியின் ஆலோசகராக உள்ளார். ஏலத்தின்போது அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/29195654/1142873/IPL-Auction-Birla-Son-Picked-Up-by-Rajasthan-Royals.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்குக் கடும் போட்டி கொடுத்த இளம் பெண் யார்? (படங்கள்)

 

 
jhanvi1_dad1xx

 

ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இணையாக ஒருவர் அதிகக் கவனத்தை ஈர்த்தார். ஏலத்தில் எங்களுக்குக் கடும் போட்டி கொடுத்தவர் என்று ப்ரீத்தி ஜிந்தாவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். யார் அந்த இளம் பெண்?

நடிகை ஜுஹி சாவ்லா - தொழிலதிபர் ஜெய் மேத்தாவின் 16 வயது மகளான ஜான்வி மேத்தா ஐபிஎல் ஏலத்தில் மிகவும் துடிப்பாக கலந்துகொண்டு பலரையும் ஈர்த்துள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நடிகர் நடிகர் ஷாருக்கானும் ஜுஹி - மேத்தாவும் உரிமையாளர்களாக உள்ளார்கள். இதனால் ஜுஹியின் மகளான ஜான்வி இந்த வருட ஏலத்தில் தன் தந்தையுடன் கலந்துகொண்டுள்ளார். இவருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ஜான்வி பற்றி பலரும் அறியும்படி செய்துவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா. திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்த ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

தனது மகள் குறித்து மேத்தா ஒரு பேட்டியில் கூறியதாவது: ஜான்விக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உண்டு. ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கேற்பது அருமையான அனுபவமாக அமைந்துள்ளது. அவர் தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார். ஐபிஎல் ஏலத்துக்காக இந்தியாவுக்கு இரண்டு மூன்று நாள்கள் வந்துள்ளார் என்று கூறியுள்ளார். ஐபிஎல் இணையத்தளத்துக்கு ஜான்வி அளித்த பேட்டியில், ஏலத்தில் கலந்துகொண்டு அட்டையை உயர்த்திப் பிடித்தது நல்ல உடற்பயிற்சியாக அமைந்துள்ளது. எங்கள் அணிக்கு கிறிஸ் லின் தேவை என நினைத்தோம். அதேபோல அவர் எங்களுக்குக் கிடைத்துள்ளார். அவர் நிறைய சிக்ஸர் அடிப்பார். அவர் விளையாடுவதைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Preity_Zinta112.jpg

jhanvi177.JPG

jhanvi1_dad12.JPG

jhanvi1333.jpg

 

jhanvi1444.jpg

jhanvi1999.jpg

jhanvi1323.jpg

jhanvi1.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/29/meet-juhi-chawlas-daughter-jhanvi-mehta-who-gave-preity-zinta-a-run-for-money-2853446--2.html

 

Link to comment
Share on other sites

'செக்யூரிட்டி'யாக வேலை செய்து ஐபிஎல் அணியில் இடம் பிடித்த வீரர்

 

 
manzoor2

மன்சூர் தார் | படம் உதவி: மன்சூர் பேஸ்புக் பக்கம்.

தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டி(இரவுநேர காவல்) வேலை செய்து கொண்டே கிரிக்கெட் விளையாடி, ஐபிஎல் அணிக்கு தேர்வாகியுள்ளார் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் தார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பர்வேஸ் ரசூலுக்கு பின், தேர்வு செய்யப்பட்ட 2-வது வீரர் மன்சூர் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு மன்சூர் தார் வாங்கப்பட்டுள்ளார். மாநில அணியில் இடம் பெற்று இவர் அடித்த 100 மீட்டர் சிக்கர்தான் ஐபிஎல் அணிகளுக்கு அறியச் செய்தது.

காஷ்மீரின் வடபகுதயில் உள்ள பந்திப்பூர் மாவட்டம் சோனாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்சூர் அகமது தார். இவரின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மன்சூருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டியாக (இரவு பாதுகாவல்) பணிபுரிந்துள்ளார். அப்போது கிடைக்கும் கால நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்து மாநில அணியில் இடம் பிடித்துள்ளார். காஷ்மீர் மாநில அணியில் இடம் பிடித்தபின் இவர் போட்டிகளில் அடிக்கும் சிக்சர்களே இவருக்கு பெயரை வாங்கிக்கொடுத்துள்ளன.

இது குறித்து மன்சூர் தார் நிருபர்களிடம் கூறியதாவது-

''கிங்ஸ்லெவன் அணிக்காக என்னை வாங்கிய பிரீத்தி ஜிந்தாவுக்கும், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்தது, இப்போதுதான் ஒரு அணிக்கு சென்றுள்ளேன். முறையான வேலை கிடைக்காமல் வீட்டின் வறுமைச் சூழலால் தினக்கூலியாக 60 ரூபாய்க்கு வேலை செய்து இருக்கிறேன்.

இன்றைய கிரிக்கெட் உலகில் ரூ.20 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை இல்லை என்கிறபோதிலும், எனக்கு மிகப்பெரிய தொகையாகும். என் வீட்டில் இன்னும் முறையாக ஜன்னல், கதவுகள் இல்லை. அதை முதலில் சரிசெய்வேன், உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் எனது தாய்க்கு சிகிச்சை அளிப்பேன்.

என்னை ஐபிஎல் அணிக்கு தேர்வு செய்தது என் கிராமத்துக்கு மட்டுமல்ல , மாநிலத்துக்கே பெருமையானதாகும். இந்த செய்தியை என் தாயிடம் கூறியவுடன் ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் என்னுடைய வீட்டுக்கு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீதான ஆசையால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவேன். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்களில் இரவு நேர காவலராக பணியாற்றி பகலில் கிரிக்கெட் விளையாடுவேன். உள்ளூர் கிளப் அணிக்காக நான் முதல் ஆட்டத்தில் பங்கேற்கும் போது, காலில் அணிவதற்கு நல்ல ஷூ கூட என்னிடம் இல்லை.

2011-ம் ஆண்டு மாநில அணிக்கு தேர்வானபின்தான் என்னுடைய வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. சமீபத்தில் டெல்லியில் நடந்த டி20 போட்டியில் யுவராஜ் சிங்க்கு எதிரான அணியில் விளையாடினேன். இப்போது நானும், அவரும் ஒரே அணிக்காக விளையாடப்போகிறோம்''

இவ்வாறு மன்சூர் தார் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article22593483.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

ஐபிஎல் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்குக் கடும் போட்டி கொடுத்த இளம் பெண் யார்? (படங்கள்)

 

 
jhanvi1_dad1xx

 

ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இணையாக ஒருவர் அதிகக் கவனத்தை ஈர்த்தார். ஏலத்தில் எங்களுக்குக் கடும் போட்டி கொடுத்தவர் என்று ப்ரீத்தி ஜிந்தாவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். யார் அந்த இளம் பெண்?

நடிகை ஜுஹி சாவ்லா - தொழிலதிபர் ஜெய் மேத்தாவின் 16 வயது மகளான ஜான்வி மேத்தா ஐபிஎல் ஏலத்தில் மிகவும் துடிப்பாக கலந்துகொண்டு பலரையும் ஈர்த்துள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நடிகர் நடிகர் ஷாருக்கானும் ஜுஹி - மேத்தாவும் உரிமையாளர்களாக உள்ளார்கள். இதனால் ஜுஹியின் மகளான ஜான்வி இந்த வருட ஏலத்தில் தன் தந்தையுடன் கலந்துகொண்டுள்ளார். இவருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ஜான்வி பற்றி பலரும் அறியும்படி செய்துவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா. திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்த ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

தனது மகள் குறித்து மேத்தா ஒரு பேட்டியில் கூறியதாவது: ஜான்விக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உண்டு. ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கேற்பது அருமையான அனுபவமாக அமைந்துள்ளது. அவர் தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார். ஐபிஎல் ஏலத்துக்காக இந்தியாவுக்கு இரண்டு மூன்று நாள்கள் வந்துள்ளார் என்று கூறியுள்ளார். ஐபிஎல் இணையத்தளத்துக்கு ஜான்வி அளித்த பேட்டியில், ஏலத்தில் கலந்துகொண்டு அட்டையை உயர்த்திப் பிடித்தது நல்ல உடற்பயிற்சியாக அமைந்துள்ளது. எங்கள் அணிக்கு கிறிஸ் லின் தேவை என நினைத்தோம். அதேபோல அவர் எங்களுக்குக் கிடைத்துள்ளார். அவர் நிறைய சிக்ஸர் அடிப்பார். அவர் விளையாடுவதைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Preity_Zinta112.jpg

jhanvi177.JPG

jhanvi1_dad12.JPG

jhanvi1333.jpg

 

jhanvi1444.jpg

jhanvi1999.jpg

jhanvi1323.jpg

jhanvi1.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/29/meet-juhi-chawlas-daughter-jhanvi-mehta-who-gave-preity-zinta-a-run-for-money-2853446--2.html

 

இவருக்கு 16 வயது என்பதை நம்ப முடியவில்லை

Link to comment
Share on other sites

திசைமாறிய ஐபிஎல் வாழ்க்கை: கோடிகளில் புரளும் சஞ்சு சாம்சனும் எந்த அணியும் சீந்தாத பாபா அபரஜித்தும்!

 

 
baaba_sanju1

 

2012 யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது. இதன் அடுத்தக்கட்டமாக 2013-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் விளையாட வாய்ப்பு. இதைவிடவும் பிரகாசமான தருணங்கள் ஓர் இளைஞருக்கு வாய்க்குமா? எத்தனை எத்தனை கனவுகள் கண்டிப்பார் தமிழகத்தைச் சேர்ந்த பாபா அபரஜித்?!

அதே 2012-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டிக்குத் தேர்வானார் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன். அதில் சரியாக விளையாடாததால் யு-19 உலகக்கோப்பை போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறாவிட்டாலும் 2013 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வானார். 

அப்போது பாபா அபரஜித், சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் ஒரே வயது. சஞ்சு சாம்சனை விடவும் பாபா அபரஜித் உலகக் கோப்பையில் தன்னை நிரூபித்து தன்னை ஒரு சாதனையாளராக நிரூபித்திருந்தார். இருவரும் ஒரே சமயத்தில் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வானார்கள்.

2018-ல் இருவரும் ஐபிஎல்-லில் எந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்று பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. 

sanju211.jpg

சஞ்சு சாம்சன் இதுவரை 66 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிக்குத் தேர்வான முதல் வருடம் 11 போட்டிகளில் பங்குபெற்றார். அடுத்த வருடம் 13 போட்டிகள். அதற்கடுத்த 3 வருடங்களிலும் தலா 13 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 66 ஐபிஎல் போட்டிகளில் 1146 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் 7 அரை சதங்களும் உண்டு. 112 பவுண்டரிகள், 57 சிக்ஸர்கள். விக்கெட் கீப்பராகவும் பணியாற்றியதால் 34 கேட்சுகளும் 3 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். அமோகமான ஐபிஎல் வாழ்க்கை இந்த வருடமும் தொடர்கிறது. அவரை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

விக்கெட் கீப்பிங் கூடுதல் தகுதி என்பதால் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்வதில் எப்போதுமே ஐபிஎல் அணிகளுக்கிடையே பலத்த போட்டி நடக்கும். அதனால் அவருக்கு ஏலத்தில் எப்போதும் நல்ல தொகையே கிடைக்கும். 2013-ல் ரூ. 10 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணிக்குத் தேர்வான சஞ்சு சாம்சன், 2016-ல் ரூ. 4.20 கோடிக்கு தில்லி அணிக்குத் தேர்வாகி தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே ரூ. 8 கோடி சம்பளத்துக்குத் திரும்பியுள்ளார். இதுதவிர இந்திய அணிக்காக ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடியுள்ளார். கிரிக்கெட் உலகில் சஞ்சு சாம்சன் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது என்கிற நிலையை அடைந்துவிட்டார்.

சரி, பாபா அபரஜித் என்ன செய்துகொண்டிருக்கிறார்? ஐபிஎல்-லில் அவர் அடைந்த உயரம் என்ன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

2013-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானார் பாபா அபராஜித். யு-19 உலகக்கோப்பையில் திறமையை வெளிப்படுத்தி அதிகக் கவனம் பெற்றதால் ஐபிஎல்-லிலும் தன்னை நிரூபிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவர்மீது இருந்தது. ஆனால் நட்சத்திரங்கள் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரால் ஓர் ஆட்டத்திலும் இடம்பெறமுடியாமல் போனது. சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டபிறகு புணே அணிக்கு மாறினார். அப்போதாவது நிலைமை மாறும் என்றால் அதுவும் இல்லை. கடைசிவரை புணேவிலும் அவருக்கு ஓர் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இப்படிக் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு ஐபிஎல் ஆட்டத்திலும் விளையாடாமலேயே காலத்தைக் கழித்துவிட்டார்.

இந்த வருடம்?

இதற்கு முன்பு அவர் ஏதாவதொரு ஐபிஎல் அணிகளிலாவது இடம்பெற்றார். இந்தமுறை அந்தப் பாக்கியமும் கிடைக்கவில்லை. அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்றபோதிலும் எந்த ஓர் அணியும் பாபாவைத் திரும்பிப் பார்க்கவில்லை. எந்த ஐபிஎல் அணியிலும் தேர்வாகாமல் மிகப்பெரிய சறுக்கலைச் சந்தித்துள்ளார் பாபா அபரஜித். 

baba55.jpg

எந்த வாய்ப்புகளையும் இதுவரை அமையவில்லை என்றுதான் சொல்லமுடியுமே தவிர இனிமேலும் அதேநிலை தொடரும் என்று சொல்லிவிடமுடியாது. அப்படி ஒரு திறமையை ஒதுக்கிவிடவும் முடியாது. ஐபிஎல் கைவிட்டாலும் தமிழக அணியில் பாபா அபரஜித்துக்கு எப்போது நல்ல மதிப்பு உண்டு. 23 வயதுக்குள் பிராந்திய அளவில் அவர் செய்த சாதனைகளைப் பலரால் கனவுதான் காணமுடியும். ஐபிஎல்-லும் அவரால் எட்டமுடியாத உயரம் அல்ல. விரைவில் காட்சிகள் மாறும்.

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/30/baba-aparajith-sanju-samson-2854011.html

Link to comment
Share on other sites

9 minutes ago, MEERA said:

இவருக்கு 16 வயது என்பதை நம்ப முடியவில்லை

 

மீரா என்னால் செய்தியை மாத்திரம்தான் போடமுடியும்..:grin:

16 ஆ 18 ஆ என்று அறிய நான் என்ன செய்ய.:rolleyes:

திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்த ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நவீனன் said:

 

மீரா என்னால் செய்தியை மாத்திரம்தான் போடமுடியும்..:grin:

16 ஆ 18 ஆ என்று அறிய நான் என்ன செய்ய.:rolleyes:

திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்த ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

எங்கட ரதி அக்கா இருந்தால் பார்த்து சொல்லியிருப்பா....... 

Link to comment
Share on other sites

இதை ரதி பார்த்தால் மீராவுக்கு பதில் எழுத களத்துக்கு வரலாம்..:unsure:

2 minutes ago, MEERA said:

எங்கட ரதி அக்கா இருந்தால் பார்த்து சொல்லியிருப்பா....... 

 

இப்படி என்றாலும் ரதி வரட்டும்

Link to comment
Share on other sites

ஐ.பி.எல் 2018 : இம்முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?

ஐ.பி.எல் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா போல நடைபெறும். வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் இருவரும் இணைந்து களத்தில் கலக்கல் கிரிக்கெட் தான் இந்த ஐ.பி.எல். இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் அடியெடுத்து வைக்கிறது. இந்த 8 அணிகளில் மிக வலுவானாக அணிகள் எது என்று இந்த வீடியோவில் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை வீரர்

 

 
இவ்வருடம் நடக்கவிருக்கும் ஐபீஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=99813

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.