Jump to content

அனந்தி சொன்னது பொய்….


Recommended Posts

அனந்தி சொன்னது பொய்….

false.png?resize=674%2C477

யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது.

இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டி இருந்தார்.

அது தொடர்பில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் க. விக்னேஷ் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே கருத்துதெரிவிக்கையில் ,

மத்திய அரசுக்கும் இந்த கண்காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நாமே ஏற்பாடு செய்து கடந்த 08 வருடமாக கண்காட்சியை நடாத்தி உள்ளோம். இம்முறை 09ஆவது தடவையாக நடத்த உள்ளோம்.

இந்த கண்காட்சி தொடர்பில் முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தி உள்ளோம். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு , காட்சி கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் நாம் வடமாகாண சபையை புறக்கணிக்கின்றோம் எனும் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வடபகுதியில் பலமான ஒரு வர்த்தக அமைப்பாக நாம் உள்ள போதும் வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் எம்மை அமைச்சர் ஒரு தடவை கூட சந்திக்க வில்லை. எம்முடன் இதுவரையில் தொடர்பு கொள்ளவும் இல்லை.

கடந்த 08 வருடங்களாக நாம் கண்காட்சியினை நடாத்தி உள்ளோம். அதில் வடமாகாண சபையின் பங்களிப்பு என்ன என்பது கூட தெரியவில்லை. ஆனால் , கான்காட்சி ஊடாக இலாபங்களை பெறுகின்றார்கள்.

எங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எமக்கு பின்னல் எந்த அரசியல் கட்சியோ , அரசியல் வாதிகளோ இல்லை. நாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம். எங்களின் நோக்கம் வர்த்தக அபிவிருத்தியே .

இந்த கண்காட்சி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கபப்ட்டு உள்ளது.

எமக்கு யாரையும் புறக்கணித்து இக் கண்காட்சியை நடாத்த வேண்டிய தேவையில்லை. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/63059/

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

அனந்தி சொன்னது பொய்….

இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த கண்காட்சி தொடர்பில் முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தி உள்ளோம். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு , காட்சி கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் நாம் வடமாகாண சபையை புறக்கணிக்கின்றோம் எனும் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த கண்காட்சி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கபப்ட்டு உள்ளது.

எமக்கு யாரையும் புறக்கணித்து இக் கண்காட்சியை நடாத்த வேண்டிய தேவையில்லை. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

 
வடமாகாண சபையை புறக்கணிப்பதாக  அமைச்சர் கூறியதாகச் சொல்வதுதான் பொய்யென்று தெரிகிறது. அவர் அப்படிக் கூறியதாக இந்தப்பதிவில் எங்குமே சொல்லப்படவில்லை.
இந்நிகழ்வில் வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்­துச் சொல்­லப்­போய் மூக்­கு­டை­பட்ட அனந்தி!!
Ananthi-Sasitharan-740x430.jpg

கருத்­துச் சொல்­லப்­போய் மூக்­கு­டை­பட்ட அனந்தி!!

 

யாழ்ப்­பா­ணத்­தில் 9ஆவது வரு­ட­மாக நடை­பெ­றும் பன்­னாட்டு வர்த்­த­கக் கண்­காட்­சிக்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னையோ தன்­னையோ அழைக்­க­வில்லை என்று விவ­ரம் தெரி­யா­மல் கருத்­துக்­கூறி மூக்­கு­டை­பட்­டுக் கொண்­டார் வடக்கு மாகாண வர்த்­தக கைத்­தொ­ழில்­துறை அமைச்­சர் அனந்தி சசி­த­ரன்.

‘‘கண்­காட்­சிக்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனே முதன்மை விருந்­தி­ன­ராக அழைக்­கப்­பட்­டுள்­ளார், அத்­தோடு வடக்­கைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது’’ என்று தெரி­வித்­துள்­ளது கண்­காட்­சியை ஏற்­பாடு செய்­யும் பங்­கா­ளி­க­ளில் ஒன்­றான யாழ்ப்­பா­ணம் வர்த்­தக மற்­றும் கைத்­தொ­ழில் சம்­மே­ள­னம்.

முன்­ன­தாக, நேற்­றுக் காலை அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு ஒன்­றைத் தனது அலு­வ­ல­கத்­தில் நடத்­தி­னார். யாழ்ப்­பா­ணத்­தில் நடக்­கும் பன்­னாட்டு வர்த்­த­கக் கண்­காட்சி வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உட்­பட மாகாண சபையை புறம்­தள்ளி நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் அப்­போது குற்­றஞ்­சாட்­டி­னார்.

‘‘நாம் தொடர்ச்­சி­யாக இந்த நிக­ழ்­வில் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றோம்.எம்மை அழைக்­கா­விட்­டா­லும் பர­வா­யில்லை.வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரை­யா­வது மரி­யாதை நிமித்­தம் அழைத்­தி­ருக்­க­லாம்’’ என்­றார் அவர்.

 

அத்­தோடு இப்­படி மாகாண சபை­யி­ன­ரைப் புறந்­தள்­ளி­ய­மைக்­குக் கண்­டங்­க­ளைத் தெரி­விக்­கி­றார் என்­றும் கூறி­னார். அவ­ரது கருத்து வெளி­யா­னதை அடுத்து நேற்று மாலையே யாழ்ப்­பா­ணம் கிறீன் கிராஸ் விடு­தி­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார் யாழ்ப்­பா­ணம் வர்த்­தக, கைத்­தொ­ழில் சம்­மே­ளத்­தின் தலை­வர் க.விக்­னேஸ்.

9ஆவது பன்­னாட்­டுக் கண்­காட்­சிக்கு முதன்மை விருந்­தி­ன­ரா­கவே வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத்­தான் அழைத்­தி­ருக்­கி­றோம் என்று தெரி­வித்­தார் அவர்.

‘‘அது தொடர்­பான அழைப்­பி­தழை நாம் முதல்­வ­ரின் இல்­லத்­துக்கு நேர­டி­யாக சென்று அவ­ரி­டம் கொடுத்து நிகழ்­வுக்கு அழைத்­துள்­ளோம்’’ என்­றார் அவர்.

ஏற்­பாட்­டா­ளர்­கள் இவ்­வ­ளவு சிரத்தை எடுத்­துச் செயற்­ப­டும்­போது மாகாண அமைச்­சர் ஒரு­வர் இப்­ப­டித் திடீ­ரெ­னக் கூறி­யி­ருப்­பது பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். இத்­த­கைய குற்­றச்­சாட்­டைத் தெரி­விப்­ப­தற்கு முன்­ன­தாக மாகாண வர்த்­தக அமைச்­சர் என்ற ரீதி­யில் அனந்தி சசி­த­ரன் எதை­யா­வது செய்­தி­ருக்­கி­றாரா என்­றும் அவர் காட்­ட­மா­கக் கேள்வி எழுப்­பி­னார்.

‘‘வடக்கு மாகா­ணத்­தில் கைத்­தொ­ழில் அமைச்­ச­ராக அவர் பத­வி­யேற்ற பின்­னர் எம்மை ஒரு தட­வை­யா­வது சந்­தித்து இருக்­கின்­றாரா? அல்­லது எம்மை அழைத்­துப் பேசி இருக்­கின்­றாரா? இப்­படி ஓர் அமைச்­சர் இருக்­கின்­றார் என நாங்­கள் ஊட­கங்­கள் வாயி­லாக மட்­டுமே அறிந்து கொள்­கின்­றோம். நாம் எந்த அர­சி­யல் சார்ந்த அமைப்­பும் இல்லை.

இந்­தக் கண்­காட்சி நிகழ்­வுக்கு நாம் வடக்கு மாகாண சபை­யின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளோம். அத்­து­டன் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளோம். நாம் பல வருட கால­மாக இதனை நடாத்தி வரு­கின்­றோம். எமது நிகழ்­விலோ அமைப்­பிலோ அர­சி­யல் கலப்­புக்கு இட­மில்லை’’ என்று அவர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/64293.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.