Jump to content

ஏ.இ. மனோகரன் காலமானார்


Recommended Posts

ஏ.இ. மனோகரன் காலமானார்
 

சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன்  சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார்.

இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார்.

பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார்.  அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-இ-மனோகரன்-காலமானார்/175-210623

 

 

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் காலமானார்

 

 

பிரபல பொப்பிசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் தனது 73 ஆவது வயதில் சென்னையில் நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

AEManoharan.jpg

ஏ.இ.மனோகரன் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கையில் மட்டுமன்றி உலகமுழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடிய “சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிட மாலுகெனாவா...” என்ற பைலா பாடல் நம் நாட்டு சிங்கள மற்றும் தமிழ் இரசிகர்கள் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்த்துக்கீஸ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.

நீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வந்த ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் மேடைகளில் பொப்பிசைப் பாடல்களை பாடி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார்.

குறிப்பாக, மனோகரன் பாடிய பொப்பிசைப் பாடல்களில் “சின்ன மாமியே உன்ன சின்ன மகள் எங்கே” என்ற பாடல் 1970 களில் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பாடப்பட்டு வந்தது.

1970, 1980 களில் இலங்கை வானொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

'வாடைக்காற்று' 'பாசநிலா' ' புதிய காற்று' ஆகிய பல ஈழத்து தமிழ் திரைப் படங்களிலும், 'ஜே ஜே' போன்ற தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் மனோகரன் நடித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பாடி நடித்துள்ளார்.

இவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/29795

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆட வைத்த ஒர் புயல் ஓய்ந்தது 

கண்ணீர் அஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
பல திறமை கொண்ட கலைஞர் மனோகரன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் ..
சனிக்கிழமை நடந்த நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் இவருடைய படம் ஒன்றையும்  போட்டு வினா, விடை போட்டி ஒன்று நடத்தி இருந்தேன். இன்று இந்த செய்தி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைக்கவே நெஞ்சு துடிக்குது.ஈழத்து குயில் ஒன்று இறைவன் பாதத்தில் மலராகின்றது......!

கண்ணீர் அஞ்சலிகள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கண்ணீர் அஞ்சலிகள் ஐயா! 70களில் செட்டிட்யார் தெருவில் வந்து பாடியது இன்னும் ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொப்பிசைக் கலைஞன் ஏ. இ. மனோகரனுக்கு அஞ்சலிகள். அன்னாரது துள்ளிசைப் பாடல்கள் இல்லாத பார்ட்டி தமிழரிடையே கண்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு...விலாசம் தந்தவர்களில்...ஏ. ஈ. மனோகரனும் முதன்மையானவர்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஈ மனோகரன் அவர்கள் இலங்கையில் ஒரு இசைப்புரட்சியை செய்தவர் என்றால் மிகையாகாது.


அன்னாருக்கு அஞ்சலிகள்.


எமது யாழ்கள உறவும் சிட்னியில் உள்ள தமிழ்வானொலியின் அறிவிப்பாளருமாகிய கானாபிரபா அவர்கள் ஏ.ஈ மனோகரனை பேட்டி கண்ட போது......

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர்

அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள்,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பாடல்களைத்தந்த பாடகனுக்கு   அஞ்சலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für ஏ. ஈ. மனோகரன்

தமிழ் நாட்டுக்கு... பொப் இசை பாடல்கள் அறிமுகமாக முதல், ஈழத்தில் அப் பாடல்களை பாடி...
தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை.... ஏ.ஈ. மனோகரனையே சாரும்.
ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

தமிழக மக்களை கவர்ந்த பாப் தமிழிசை நாயகன் சிலோன் மனோகர்: இனப்போரில் காணாமல் போன கலைஞர்கள்

 

 
download%204

சிலோன் மனோகர்(எ) எ.ஈ.மனோகர்   -  கோப்புப் படம்

இலங்கை தமிழில் பாப் இசை மூலம் 40 ஆண்டுகளுக்கு முன் தமிழக மக்களை கவர்ந்த சிலோன் மனோகர் நேற்று காலமானார். சிலோன்  பாப் தமிழிசை வழக்கொழிந்து போகும் நிலைக்கு தற்போது வந்துள்ளது.

சின்னமாமியே, உன் சின்னமகளெங்கே, பள்ளிக்குப் போனாளோ, படிக்கப்போனாளோ" என்ற பிரபல பாப் பாடலையும், " சுராங்கனி, சுராங்கனி, சுராங்கனிக்கா, மாலுக் கண்ணா வா, மாலு, மாலு, மாலு, சுராங்கனிக்கா மாலு, சுராங்கனிக்கா, மாலுக்கண்ணா வா" என்ற பாப் இசை (பொப்) இசைப் பாடலையும் பாடிய, இலங்கை நடிகரான மனோகரன் நேற்று சென்னையில் காலமானார்.

சென்னை கந்தன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு 7.20 அளவில் காலமானார்.

மனோகரன், இந்திய மற்றும் இலங்கை திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். அத்துடன், ‘சின்ன மாமியே ’ மற்றும் ‘சுராங்கனி சுராங்கனி’ என்ற தமிழ் சிங்களம் கலந்த பாப் பாடலையும் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார்.

அவர் 5 மொழிகளில் சுமார் 260 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் 1972 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியான நாடக தயாரிப்பாளராக அவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோய் தேவானந்த் என்பவரின் தயாரிப்பில் உருவான பாச நிலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஏ.ஈ.மனோகரன் முதன் முதலாக நடித்தார்.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் வந்த காலகட்டங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக்குழுக்கள் ஆரம்பமாகி  பாப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன்.

1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பாப் இசை இசைக்குழுக்களால் இசைக்கப்பட்டு வரத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, தமிழ் திரையிசை பாடல்களின் தாக்கம் இருந்த காரணத்தினால் 1960 களில் பாப் இசைக்கு அவ்வளவாக வரவேற்பில்லை.

அதன் பின்னர் இலங்கையிலும் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களால் அனைத்தும் பின்னுக்கு சென்றது. 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டபோது தமிழ்  பாப் இசை மட்டும் இன்றி சிங்கள பாப் இசையும் வீறுகொண்டெழுந்தது பிரசித்தி பெற்றது. அந்த காலக்கட்டத்தில் அனைவராலும் வரவேற்கப்பட்ட “சின்னமாமியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல், “சுராங்கனி சுராங்கனி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல், “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல், “குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றன.

அவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி தமிழகத்திலும் அனைவராலும் ரசிக்கக்கப்பட்டது. நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பாப் இசைச் துறைக்கு வர பாப் இசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் இலங்கையைத் தாண்டி வெளிவரத்தொடங்கின.

இக் காலம் ஈழத்து பாப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அன்றைய காலங்களில் இலங்கை  பாப் இசைகள் நகைச்சுவை, இலங்கை மண்ணியியல் பண்பு, இலங்கை மொழிவழக்கு, என்பவற்றை மட்டும் இன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன .

இதற்கு நித்தி கனகரத்தினத்தின் ‘கள்ளுக்கடை பக்கம் போகாதே’ என்ற பாடலை சொல்லலாம். அந்தக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கள்ளு குடிக்க தோப்புக்கே செல்பவர்களாக இருந்தனர்.

அந்த காலகட்டத்தில் நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது. இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இலங்கை  பாப் இசைப்பாடல்கள் தமிழ் திரைப்படங்களிலும் இடம் பெறலாகிற்று. 1977-ம் ஆண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சுராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பாப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இன்றும் கூட சுராங்கனி போன்ற பாப் பாடல்கள் ரீமிக்ஸ் இசை வடிவில் சில திரைப்படங்களில் வருவதை பார்த்திருக்க முடியும். எனினும், 1983-க்கு பின்னர் இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டு போர் தமிழ் பாப் இசைக்கலைஞர்களையும் பாதித்தது. இலங்கையிலிருந்து பாப் கலைஞர்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தது போன்ற காரணங்களால் இன்று இலங்கை பாப் இசைப்பாடல்கள் வழக்கொழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

http://tamil.thehindu.com/tamilnadu/article22496637.ece

Link to comment
Share on other sites

சென்னையின் கானாவில்கூட சுராங்கனியின் தாக்கம் இருக்கிறது! #RIPCeylonManohar

 
 

"சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ...
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்...!"- மறக்கமுடியுமா இந்தப் பாடலை? இலங்கையின் 'பாப் மாஸ்ட்ரோ' என்றழைக்கப்பட்ட சிலோன் மனோகரின் குரல் 70-களில் தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே நேரத்தில் வசியப்படுத்தி வைத்திருந்த மாயக்குரல். இலங்கைக்கே உரிய பாரம்பர்ய இசையான 'பெய்லா' (Baila) என்ற இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து ஃபியூஷன் இசையை உலகுக்குத் தந்தவர்தான் சிலோன் மனோகர். இன்றும் இவரின் பெய்லாக்களைத்தான் கோவாவில் வாழும் போர்ச்சுக்கீசியர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிகிறார்கள். (பெய்லா என்ற இசைவடிவம் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தது. ஆப்பிரிக்க காஃபிர்கள் இலங்கைக்கு 1630களில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். அவர்கள் மூலம் உருவானதுதான் பெய்லா இசை. சிங்களம் கலந்த ஆப்பிரிக்க வரிகளில் பாடுவதை பெய்லா என்று அழைத்தனர்.)

சிலோன் மனோகர்

 

மனோகர் பெய்லாவில் தமிழைப் புகுத்த மட்டும் செய்யவில்லை. பாப் இசையையும் பிசைந்து பல மெட்டுகளை உருவாக்கினார். அதில் ஒன்றுதான் கொலவெறி ஹிட். ஆம்... இவர் உருவாக்கிய ஃபியூஷன் பாடல் 'சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனி' பாடலை பாடாதவர்களே இருக்க முடியாது. தமிழ்நாட்டின்... நம் சென்னையின் கானாவில்கூட சுராங்கனியின் தாக்கம் இன்றும் இருக்கிறது. சுராங்கனியின் எளிமையான மெட்டுதான் இன்றுவரை உலகம் முழுவதும் பாப்புலர். அந்தப் பாடலை மட்டும் மனோகர் இந்தி உட்பட 8 மொழிகளில் பாடி இருக்கிறார். அத்தனை மொழிகளிலும் அது ஹிட். தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் இப்பாடலை பாடி நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார். மனோகர் இலங்கையில் பிறந்தவர்தான் என்றாலும் தமிழரான அவர் தமிழ்நாட்டில் பிரபலமாக திகழ்ந்தார்.

1970ல் அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த 'நல்நண்பர்கள்' என்ற இசைக்குழு அந்நாள்களில் இலங்கையை மொழிபேதம் கடந்து ஒன்றிணைத்து வைத்திருந்தது. அதற்கு முன்பே 'பாசநிலா' என்ற இலங்கையில் தயாரான தமிழ்ப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். அவர் நடித்த 'வட காற்று' என்ற தமிழ்ப்படம் இலங்கை அரசின் ஜனாதிபதி விருதினைப் பெற்றது. ஹிப்பி ஹேர் ஸ்டைலும், பிரெஞ்சு தாடியும், கணீர் குரலும் அப்போது இவரால் ஏக பாப்புலர். பல கல்லூரி மாணவ மாணவிகள் இவர் ஸடைலுக்கும் குரலுக்கும் மயங்கிக் கிடந்தார்கள். மனோகரின் பெற்றோர்களும் இசையார்வம் உள்ளவர் என்பதால் இயல்பிலேயே தமிழிசையைக் கேட்டு பாட ஆரம்பித்தவர் மனோகர்.

பள்ளி நாள்களில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி இசையில் உருவான பல பாடல் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டு பாடி பள்ளியில் பாப்புலராக இருந்தார். கல்லூரிக் காலத்தில் தமிழகத்தில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதன்முதலாகப் பாடினார். பாடி பில்டரான மனோகர் பல முறை ஆணழகன் பட்டம் வென்றிருக்கிறார்.

இலங்கையில் அவர் பாடிய சுராங்கனி பாடலுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசைக் கண்டு சென்னைக்குக் குடியேறினார். இளையராஜாவேகூட இவர் அனுமதி பெற்று 'அவர் எனக்கே சொந்தம்' என்ற ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த படத்தில் மலேசியா வாசுதேவன், ரேணுகாவை வைத்து 'சுராங்கனி' மெட்டில் ஒரு பாடலை கம்போஸ் செய்து சேர்த்திருந்தார். பாலிவுட்டிலும் ஆஷா போன்ஸ்லே 'சுராங்கனி கமால் கரேகி' என்ற பாடலை இதே மெட்டில் 'பரமாத்மா' என்ற படத்தில் பாட, மனோகரின் ஒற்றை மெட்டு உலக மெட்டாக... மொட்டாக மலர்ந்தது. சுராங்கனி இசைத் தட்டுகள் இங்கும் ஹிட்டடிக்க மீடியாக்களில் அவர் முகம் வெளியானது. வித்தியாசமான சிகையலங்காரம், கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து பல தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், முதல் படமாக 'டூபான் மெயில்' என்ற தெலுங்குப் படம்தான் ரிலீஸானது. அப்படத்தில் ஒரு சர்வதேச கடத்தல்காரனாக நடித்திருந்தார்.

மலையாளத்தில் சந்திரகுமார் இயக்கத்தில் 'தடவரா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்தார். 'மாமாங்கம்', 'சக்தி', 'கழுகன்' எனப் பல படங்களில் நடித்து பாப்புலரானார். அப்போது கேரளாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் ஜெயனுடன் 'ஆவேசம்' 'கோளிளக்கம்' படங்களிலும் வில்லனாக நடித்தார். 'கோளிளக்கம்' படப்பிடிப்பின்போது சென்னை இருங்காட்டுக்கோட்டையில் தன் கண்முன்னால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நண்பனும் நடிகரருமான ஜெயன் இறந்துவிட, திரையுலகை விட்டே மனம் வெறுத்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார். லண்டனுக்கு ஜாகை மாற்றிக் கொண்டவர் பி.பி.சி-யில் 9 வருடங்கள் வேலை பார்த்தார். பாடுவதற்காக சென்னைக்கு வந்து மீண்டும் மலையாளம், தமிழ் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். 

தமிழில் மட்டும் குரு, காஷ்மீர் காதலி, ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா, உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, தீ, ஜே.ஜே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சில தமிழ் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். அண்மைக்காலமாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். சென்னையிலிருக்கும் அவர் வீட்டில் தன் 73வது வயதில் நேற்று உயிரிழந்தார். 

மனோகருக்கு மனைவியும், கலா மேரி, செல்வ மேரி என்ற மகள்களும் டங்ஸ்டன் பாபு என்ற மகனும் உள்ளனர். சிலோன் மனோகர் மறைந்தாலும் அவரின் 'ஃபியூஷன் பெய்லா' சுராங்கனி காலாகாலத்துக்கும் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

https://www.vikatan.com/news/miscellaneous/114338-special-story-about-ceylon-manohar.html

Link to comment
Share on other sites

பொப் இசையும் பைலாவும் யாருடைய கலைவடிவங்கள் தெரியுமா?

 

 
 

இலங்கைப் பொப் இசையின் தூண்களில் ஒன்று சரிந்துவிட்டது...........

பொப் இசையும் பைலாவும் யாருடைய கலைவடிவங்கள் தெரியுமா?

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தின் பொப் இசையில் தனக்கென ஓர் தனி முத்திரையைப் பதித்திருந்த பொப் இசைச் சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் காலமான செய்தி ஈழத்து இசை ரசிகர்களை மட்டுமல்ல சிங்கள மற்றும் இந்திய இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.இ.மனோகரன் அல்லது சிலோன் மனோகரன் ஒரு சிறந்த ஆளுமை; ஈழத் தமிழ் இசைத்துறையில் புகழ்பாடி அழைக்கத்தக்க இசை மேதை; தனது பொப் இசையால் இசை ரசிகப்பெருமக்களை மிக நுணுக்கமாகக் கவர்ந்தவர்.

எழுபது எண்பதுகளில் பொப் இசை மிகப் பிரபலமாக இருந்தபோது சிங்களவரும் தமிழரும் அதற்கு புது வடிவம் கொடுத்து பாடல்களை ஆக்கத்தொடங்கினர். பொப் இசையும் பைலாவும் இலங்கையில் மிக மூச்சுப்பெற்ற தனித்துவக் கலை வடிவங்களாகும்.

இசைக்கு பொப் என்றால் நாட்டியத்திற்கு பைலாவைச் சொல்லலாம். ஆனால் மறந்தும்கூட பொப் இசையையோ அல்லது பைலா பாட்டையோ இலங்கைக்குரிய தொன்றுதொட்ட தனித்துவக் கலை வடிவங்கள் என்று சொல்லிவிடமுடியாது.

இவை இரண்டும் சிங்களவருக்கு உரியவையுமல்ல தமிழருக்கு உரியவையுமல்ல. அவற்றின் உருவாகம் என்பது வெளி நாட்டவர்களின் வருகையின் பின்னரான காலப்பகுதியாகும்.

பொப் இசையையும் பைலா பாட்டையும் இலங்கையில் முதன்முதல் மெருகேற்றியவர்கள் ஈழத் தமிழர்கள் தான். ஆனால் எம்மவரிடையே ஆவணப்படுத்தவேண்டும் என்ற எந்தவித முற்சிந்தனையும் இல்லாமையினால் அது ஏனோ சிங்களவருக்குரியதாக பார்க்கப்படும் ஒரு கண்ணோட்டம் இருக்கின்றது. ஆனால் அது சிங்களவருடையதும் இல்லை.

இலங்கையில் பொப் இசை அறிமுகமானது போர்த்துக்கேயர் வருகையின் பின்பே. தமது மதப் பிரசாரங்களைக் கையிலெடுத்த அவர்கள் தேவாலய பிரார்த்தனைக் கூடங்களில் பொப் இசையினைப் பயன்படுத்தினர்.

இதுவே நாட்டின் சுதேசிகளாயிருந்த சிங்களவர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் பரவத்தொடங்கியது. ஆங்கிலேயர் வருகையின் பின்னர் அவர்கள் அறிமுகப்படுத்திய மேலைத்தேய இசை வாத்தியங்களோடு சங்கமித்து பொப் இசை புதிய வடிவம் ஒன்றினைப் பெற்றது.

சுதேசிகளிடத்தே பொப் பிசை வளர்ந்ததென்றால் அது இலங்கைத் தமிழரிடத்தே என்றுதான் சொல்லமுடியும். குறிப்பாக இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழரிடையே பொப் இசைக் குழுக்கள் முதன்முதலில் தோன்ற ஆரம்பித்து பட்டிதொட்டியெங்கும் பரவத்தொடங்கியது. இதன்பின்னர் சிங்கள மக்கள் மத்தியிலும் பரவத்தொடங்கி ஏராளமான பொப் பாடல்கள் வெளிவரத் தொடங்கின.

“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனாராம்

அங்கே ஒருத்தியைக் கண்டாராம் கும்மாட்டம் தம்பட்டம் போட்டானாம்” என்பது இலங்கையின் ஆரம்பகால பொப் பாடலாகும்.

பைலாவின் நிலைமையும் இதுவே. இலங்கையில் பைலாவின் அறிமுகம் போர்த்துக்கேயர் வருகையுடனே வந்தது. ஆபிரிக்க-போர்துக்கேய கலப்பினைக் கொண்ட பைலா ஆடலும் பாடலுமானது இலங்கையிலுள்ள ஆபிரிக்க வம்சாவழி மக்களான காப்பிரி இன மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் இசை வடிவத்தைத் தழுவியதாகும். பைலா பாடல்களின் சொந்தக்காரர்கள் அவர்களே.

பொப் இசையும் பைலாவும் யாருடைய கலைவடிவங்கள் தெரியுமா?

(காப்பிரி இன மக்களின் பைலா)

இலங்கையில் தோற்றம்பெற்ற பொப் மற்றும் பைலா பாடல்களின் முதன்மையான முன்னோடிப் பாடல்களானவை, ’சுறாங்கனி’ பாடலும் ‘சின்ன மாமியே’ பாடலுமாகும். இவை இரண்டினதும் உருவாக்க கர்த்தாக்கள் தமிழர்களான ஏ.இ மனோகரன் மற்றும் நித்தி கனகரத்தினம் ஆகியோராவர்.

மனோகரன் சிங்களத்தில் பாடிய சுறாங்கனி பாடல் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் மட்டுமன்றி இந்தியாவில் தென்னிந்திய வட இந்திய மக்களையும் ஈர்த்துப்போட்ட கனவுப் பாடலாகியது. இந்தியாவின் ஏழு மொழிகளில் இது மீளுருவாக்கம்பெற்றதாகும்.

நித்தி கனகரத்தினத்தின் சின்ன மாமியே பாடலைத் தழுவியதாக பொப் இசைச் சக்கரவர்த்தியால் பட்டு மாமியே உன் சிட்டு மகளெங்கே பாடல் மீழுருவாக்கம்பெற்றது. ஆனாலும் நித்தி கனகரத்தினத்தின் சின்ன மாமியே பாடல் அளவுக்கு பட்டு மாமியே பாடல் புகழ்பெறவில்லை.

அமரர் மனோகரன் தனியே பொப் இசையோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஈழத்தில் வெளிவந்த சில திரைப் படங்களிலும் தமிழகத்தில் வெளிவந்த சில திரைப் படங்களிலும் தனது நடிப்பாற்றலினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஈழத்தில் எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த வாடைக்காற்று திரைப்படம் மனோகரனின் நடிப்பாற்றலினை புடம்போட்டுக் காட்டியது. செங்கை ஆழியானின் புகழ்பெற்ற நாவலான ‘வாடைக்காற்று’ கதையே இவ்வாறு திரைப்படமாக்கப்பட்டது. இதுதவிர பாச நிலா புதிய காற்று போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

பொப் இசையும் பைலாவும் யாருடைய கலைவடிவங்கள் தெரியுமா?(வாடைக்காற்று திரைப்படத்தில் நடிகை சந்திரகலாவுடன்)

மனோகரனின் தலை முடி அலங்கரிப்பானது அக்காலத்தில் பிரபலம்பெற்ற ஒன்றாகும். கொள்ளைக்காரன், வில்லன் போன்ற கதாப்பாத்திரங்களுக்கு அன்னாரது முடி அலங்கரிப்பு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.

இலங்கைத் தமிழர்களால் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்ட பொப் இசையும் பைலாவும் இன்று சிங்கள மக்களுக்குரியதாகப் பார்க்கப்படும் பின்னணியில் நாட்டில் நிகழ்ந்த யுத்தம் ஒரு காரணகாக இருப்பது மட்டுமன்றி எழுபதுகளில் ஈழத்திரைப்பட உருவாக்கங்களில் காட்டிய அதீத ஆர்வமும் முக்கிய காரணகாக இருக்கின்றது. இந்தியாவில் என்னதான் சினிமா வளர்ச்சியடைந்த துறையாகக் காணப்பட்டாலும் அதனையும் தாண்டி இந்திய மக்களால் விரும்பப்பட்ட துறைகளாக இலங்கை பைலாவும் பொப் இசையும் காணப்பட்டன என்றுதான் சொல்லமுடியும்.

பொப் இசையும் பைலாவும் யாருடைய கலைவடிவங்கள் தெரியுமா?

அத்தகைய பொப் இசையின்-பைலா கலையின் முன்னோடிகளுள் ஒருவரான பொப் இசைச் சக்கரவ்ர்த்தி ஏ.இ மனோகரனின் இழப்பென்பது உண்மையிலேயே ஈடு செய்யமுடியாத ஒன்று தான். அவருக்கு பின்னரான காலத்தில் அவரது இடத்தினை இன்றுவரை சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும்சரி தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும்சரி யாருமே நிரப்பவில்லை என்பதுதான் உண்மை. பொப் இசைத் துறை எனும் சாம்ராஜ்ஜியத்தில் யாராலும் வெல்ல முடியாத ஒரு மகாராசாவாகத்தான் அமரர் ஏ.இ.மனோகரன் இவ்வுலகை வீட்டு அகலும்வரை இருந்துள்ளார்.

அன்னாரின் இழப்பிற்கு ஐ.பி.சி தமிழ் தனது ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக்கொள்கிறது!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Do-you-know-the-music-of-Bob-and-Baila

Link to comment
Share on other sites

சிலோன் மனோகரின் இறுதிக் கிரியைகள் நாளை..

 

 

சிலோன் மனோகரின் இறுதிக் கிரியைகள் நாளை..(படங்கள் இணைப்பு)

 

Bookmark and Share
இலங்கையின் பிரபல பொப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார்.

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார்.

பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய இரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது என்பது விஷேட அம்சமாகும்.

இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார்.

தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2684&mode=head

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

”காலம் ஆகிய”
ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த,
தென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.