Jump to content

ரஜினி அரசியல்: -ஜெயிக்கிற குதிரை!


Recommended Posts

  • Replies 58
  • Created
  • Last Reply

ரஜினி அரசியல்: 25- மக்கள் விரும்பினால்தான் நடக்கும்

bajpg

'பாபா' பட பூஜையின் போது ரஜினி | கோப்புப் படம்.

ரஜினி படத்தில் தொடர்ந்து நடிப்பாரா?

இப்போதைக்கு எந்த படமும் செய்யப்போறதில்லைன்னுதான் திட்டவட்டமா சொல்லிட்டு இருந்தார். அதை நான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று தீர்மானமாக கூற வேண்டாம்னு சொல்லித்தான் 'பாபா' படத்தையே பண்ண வச்சேன். இந்தப் படம் எப்படிப் போகிறது என்பதை பொறுத்துப் பார்ப்போம். அப்புறம்தான் அடுத்த கட்டம்!

 

'பாபா' படம் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

'பாபா' படம் எடுக்க தொடங்கியதிலிருந்தே சினிமா வட்டாரத்திலும், பத்திரிகை வட்டாரத்திலும் இதுவரை இல்லாத பரபரப்புதான். இதன் விளைவு எப்படியிருக்குமோ? படத்திற்கு பெயர் சூட்டியதுமே வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விட்டது. 'பாபா' படத்தை வெளியிடும் உரிமையை எனது ஆசிரமத்திற்குத்தான் வழங்கியுள்ளார் ரஜினி. இந்தப் படம் ரஜினிக்கு மாறுபட்ட படமாக இருக்கும். நல்லதை நினைப்பவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

கொள்ளை அடிப்பவர்களுக்கும், அநியாயம் செய்பவர்களுக்கும் தற்போது அரசியல் புகலிடமாக உள்ளது. அரசியலுக்கு வருபவர்கள் தன்னலம் கருதாமல் நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் சுயநலத்தோடுதான் அரசியலுக்கு வருகின்றனர். நம் நாட்டின் அரசியல் இப்படித்தான் உள்ளது. இந்நிலையில் அரசியலுக்கு வருவதற்கு ரஜினிக்கு தகுதியில்லை என்றுதான் கூற வேண்டும்.

அரசியல் கலக்காத ரஜினி இப்போது பல நல்ல விஷயங்கள் செய்து, நல்ல கருத்துகளை சுதந்திரமாகக் கூறி வருகிறார். அரசியலுக்குப் போனால் அப்படியெல்லாம் கூற முடியாது. அரசியலில் நிறைய கட்சிகள் உள்ளன. ரஜினி ஒரு கட்சிக்கு சென்றால் மற்றொரு கட்சிக்கு எதிரியாகி விடுவார். தமிழகம் முழுவதும் சேர்ந்து நீங்கள்தான் இருக்க வேண்டும் என்று ரஜினியிடம் மக்கள் கேட்கிறார்களோ, அப்போது ரஜினியை நானே அரசியலில் நிற்க வைப்பேன்! என்று பேட்டியை முடித்துக் கொண்டார் சச்சிதானந்த மகராஜ்.

'பாபா' படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைக்க ரஜினி என்னை அழைத்தது எங்கள் இருவருக்கு மட்டுமே (ரஜினி-சச்சிதானந்தா) தெரியும். எங்க ரெண்டு பேருக்கும் மட்டுமே தெரிந்த விஷயத்தை கூட தெரிஞ்சுகிட்டு செய்தி வெளியிடற அளவுக்கு வேகமா இருக்கீங்களே. ஆச்சர்யமாயிருக்கு என வேடிக்கையாக சொல்லிவிட்டுத்தான் நிருபர்களிடம் விடைபெற்றார் அவர். அதுவே கடைசிப் பேட்டியாக இருக்கும் என்று நிருபர்களாகிய நாங்கள் கூட அப்போது நினைக்கவில்லை.

ராமதாஸ் பேட்டிகள், பாமகவினர் 'பாபா' படத்திற்கு கொடுத்த நெருக்கடிகள், அதே காலகட்டத்தில் காங்கிரஸுடன் தமாகா இணைவு, தன் ஆன்மிக குருவான சச்சிதானந்தா மகராஜ் சுவாமிகளின் திடீர் மறைவு, 'பாபா' ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்களில் இருந்தெல்லாம் பிரச்சினை, கூட்டம் இல்லை என்ற திரையரங்க உரிமையாளர்களின் புலம்பல், ரஜினி எவ்வளவு எதிர்பார்ப்புடன் (சச்சிதானந்தா பேட்டியே ரஜினியின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தி விடுகிறது) இந்த படத்தை எடுத்திருப்பார் என்பதையோ, அது இத்தனை பிரச்சினைகளை சந்தித்து தோல்வியையும் தழுவும் என்பதையோ, அதே நேரத்தில் அடுத்தடுத்து அவருக்கு வந்த சோதனைகளையோ அவரை மையப்புள்ளியாக நிறுத்தி ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் ஆச்சர்யமே மேலிடுகிறது.

rajjpg

ரஜினி | கோப்புப் படம்.

 

எப்படி பிரபலப்பட்ட ஒரு சினிமா நடிகர் சுற்றுப்புறங்களிலிருந்து எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி வாய்மூடி மெளனியாகவே இருந்திருப்பார். மீடியாக்களிடம் பேசாமல் இருந்திருப்பார். அப்படி அந்த சமயத்தில் ஏதாவது பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்?

மற்றவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ? இந்த இடத்தில் ரஜினியை முன்வைத்து பல விஷயங்களை அசைபோடவே விரும்புகிறது.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொன்று பிடித்திருக்கிறது.

ஒருவனுக்கு இயற்கை பிடித்திருக்கிறது. இன்னொருவனுக்கு மிருகங்கள் மீது வாஞ்சை வருகிறது. சிலருக்கு இரண்டுமே பிடித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு நாலுபேரை அடிப்பது பிடித்திருக்கிறது. ரொம்ப சொற்பமானவருக்கு ஆராய்தல் இஷ்டமாக இருக்கிறது. அதில் சிலருக்கு புதிய கண்டுபிடித்தல் பிடித்தமானதாக இருக்கிறது. சிலருக்கு புகழ்ச்சி பிடித்திருக்கிறது. சிலருக்கு தனக்கு பிடிக்காதவரை மற்றவர் இகழ்தல் பிடித்திருக்கிறது. இங்கே அக்கிரமங்கள் நடப்பதை ஒழிக்க வேண்டும் என்ற வேட்கை பலருக்குள் உள்ளது. ஆனால் அவர்களின் அட்டூழியங்கள் அவர்களுக்கே புலப்படுவதில்லை. அந்த அட்டூழியங்களை சுட்டிக் காட்டி விமர்சித்தால் அதற்கும் ஒரு நியாயம் கற்பிப்பார்கள். பலருக்கு இல்லறம் பிடித்திருக்கிறது. சிலருக்கு சன்னியாசம் பிடித்திருக்கிறது.

சிலருக்கு ஆன்மிகம் பிடித்திருக்கிறது. சிலருக்கு நாத்திகம் பிடித்திருக்கிறது. சிலர் கம்யூனிஸமே என் வேதம் என்கிறார்கள்.

வேறு சிலரோ வேதங்களே இந்தியாவில் கம்யூனிஸம் என்கிறார்கள். அதையே கட்சிகளாக்குவது, அமைப்புகளாக்குவது, அதில் பதவிகளை ஏற்படுத்துவது, அதை இட்டு நிரப்புவது, இதையெல்லாம் கலக்கியெடுத்து அனைவரையும் மோசடி செய்து தின்னு கொழுப்பது என்பதெல்லாம் கூட நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது. என்றாலும் ஒட்டுமொத்தமான மனிதர்களில் பெரும்பான்மையோருக்கு தான் செய்ய முடியாத, யாரும் செயற்கரிய செயலை ஒருவர் செய்தால் அவர்களை பிடிக்கிறது. அது லாஜிக்காக சரியா? தவறா? அதில் அவர்கள் என்ன உத்தியை கையாள்கிறார்கள் என்பதையெல்லாம் யோசிப்பதில்லை.

ஆதிகால காவியங்கள் முதல் சமகால இலக்கியங்கள் வரை, அந்தக்கால கூத்துகள் முதல் இந்த கால திரைப்படங்கள் வரை இந்த மாதிரியான வித்தைகளை செய்வதிலேயே ஊறி திளைத்திருக்கிறது.

ஒருவன் பத்து பேரை அடித்து சாய்த்து விட்டு, 'நான் ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா!' என்று பெருங்குரலெடுத்து ஓங்கிக் கத்தும் போது ஆராவாரித்து ரசிக்கிறது, விசிலடிக்கிறது இந்த மந்தையிலான மனிதப் பட்டாளம். அதில்தான் இங்கே அறுவடை நடக்கிறது.

ஏன் இந்த மக்கள் இந்த அளவுக்கு அறியாமையில் இருக்கிறார்கள் என்பதை சிலர் சிந்திக்கலாம். மேடையில் பேசலாம். எழுதலாம். அதையெல்லாம் விட 'ஒன்றரை டன் வெயிட்டுடா' என்று வசனம் பேசி நிழல் திரையில் நடிக்கிறாரே அந்த மனிதர் என்ன உணர்கிறார் என்பதை யாராவது உணர்கிறார்களா? அந்தக் கதாநாயகனே தான் 'ஓங்கியடித்தால் ஒன்றரை டன் வெயிட்' என்பதை ஏற்றுக் கொள்வாரா? இதை யோசித்துப் பார்த்திருக்கிறார்களா? நிச்சயம் அந்த கதாநாயகர்/மனிதர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது மட்டுமல்ல, சிரிப்பார்.

ஒரு காலத்தில் எம்ஜிஆர் என்ற நடிகர் அரசியல்வாதியாகி பிரச்சாரம் போனார். அவரை காணக் காத்திருந்த பெருங்கூட்டத்தில் ஒரு மூதாட்டி ஒருவரை தாய்ப் பாசத்துடன் கட்டிப் பிடிக்கிறார். அந்த மூதாட்டி வாஞ்சையுடன் எம்ஜிஆரின் கன்னத்தைத் தடவுகிறார். உடலைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். 'அந்த நம்பியார் அந்த முரட்டு அடி, அடிச்சானே எங்காவது அடிகிடி பட்டு காயமாயிடுச்சாப்பா?' எனக் கேட்கிறார்.

எம்ஜிஆரோ சிரிக்கிறார். 'அது சினிமா பாட்டி. எனக்கொன்னும் ஆகாது. நம்பியார் அப்படியில்லை. ரொம்ப நல்லவர்!' என்கிறார். பாட்டி விடவில்லை, 'எதுக்கும் அந்த நம்பியார்கிட்ட ஜாக்கிரதையாவே இருப்பா!' என்கிறார். சினிமா கதாநாயக, வில்லன்களுடன் கலந்து கட்டி வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை அந்தப் பாட்டியினுடையது.

அந்தக் காலம் வேறு. இந்தக் காலம் வேறு.

தனக்கு இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இருக்கிறது. அதற்கு காரணம் அந்தத் தாய் முகாம்பிகைதான் என்றெல்லாம் கோயிலுக்குப் போனார் எம்ஜிஆர். ஆட்சிக்கு வந்து கோடானு கோடி மக்களின் வாழ்க்கையின் நல்லது கெட்டதற்கு காரணகர்த்தாவாக முதல்வர் பதவி வகித்த பிறகு திடீரென்று நோய்வாய்ப்பட்டார். நினைவிழந்தார். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சுயநினைவுக்கு வந்தவுடன் எம்ஜிஆர் முதலில் தன் உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சியுற்றார். 'எனக்கா, எனக்கா... எனக்கா இப்படி?' என்று கேட்டதாக கூட அப்போது செய்திகள் வெளியாகின.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 26 - தியாக உலகு; வர்த்தக உலகு

rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

பொருளாதாரம், பதவி, பகட்டு, கடவுளின் அவதாரம் என்று எல்லா நிலைகளிலும் மனிதனின் நிலை இதுதான். எந்த உயரத்திற்கு வாழ்க்கையில் சென்றாலும், சாமானிய நிலையை அறிந்து கொள்பவன், புரிந்து கொள்பவன், தனக்குள்ளேயே உணர்ந்து கொள்பவன்தான் சராசரி நிலையில் தரையிலேயே நிற்கிறான். அவன் விழும்போது பெரியதாக காயப்படுவதில்லை. தன்னை வாஞ்சையுடன் தடவி 'எதுக்கும் அந்த நம்பியார்கிட்ட ஜாக்கிரதையா இரு!' என சொன்ன மூதாட்டிக்கு வேண்டுமானால் நம்பியார் நல்லவர் என்று தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் எம்ஜிஆருக்கு தெரியும். அதுபோலத்தான் 'நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்' என்பவரின் நிலையும். இந்த இடத்தில் ரஜினியும் ரஜினியாகவே இருக்கிறார் என்பதுதான் உண்மை. ரஜினியை திரைப்படக் கல்லூரியில் பார்க்கும் பாலசந்தர் அவரின் நடை, உடை, பாவனை, செயலில் வித்தியாசத்தை உணர்ந்து கொள்கிறார்.

 

அதற்கேற்ப அவரை மனதில் வைத்து தன் படத்தில் பதிவு செய்கிறார். சும்மா நடந்தாலே, எதையாவது தூக்கிப்போட்டு பிடித்தாலே, அவர் இயல்பாக சிகரெட் பிடித்தாலே அது வித்தியாசமாக இருக்கிறது. இந்த வித்தியாச சூழலும், வேகமும் தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராதது. அதை இயல்பாகப் பயன்படுத்துகிறார். படம் சக்சஸ் ஆகிறது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவரின் அந்த ஸ்டைலை ஒட்டியே ரஜினிக்கு குவிகிறது.

ஆனால் ரஜினிக்கோ அதீத நடிப்பில் ஆசை. அதிலும் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் போல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறார். அவையெல்லாம் சாதாரண வெற்றிப் படங்களாக அல்லது தோல்விப்படங்களாகவே அமைகிறது. அது கொடுக்கும் பாடம் படத் தயாரிப்பாளர்கள் ஆக்ஷன் ஹீரோவாகவே அவரை விரும்பினார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் தனக்கு வந்த செல்வாக்கு, பிரபல்யம், தன்னை நாடிவரும் அரசியல் தலைவர்கள் எல்லாம் அவருக்குள்ளேயே பிரமிப்பை ஊட்டுகிறது.

அத்துடன் தனக்கான அந்தரங்கம் பறிபோகிறது. கண்டக்டராக இருந்ததுபோல் சுதந்திரக் காற்றை தரிசிக்க முடியவில்லை. தன்னந்தனியாக காட்டில் மேட்டில் சுற்ற முடியவில்லை. நண்பர்களுடன் பொழுதுபோக்க சுதந்திரமில்லை. எங்கும், எதிலும் சூப்பர் ஸ்டார் என மொய்க்கும் மக்கள் கூட்டம், ரசிகர் கூட்டம். பல்வேறுபட்ட புகை, மது என்று சிற்றின்ப வேட்கையில் உழன்றவர் ஒரு கட்டத்தில் வரலாறு, ஆன்மிகப் புத்தகங்கள் என புகுகிறார். எத்தனை நாளைக்கு அதிலேயே இருக்க முடியும். அரசியல் நம்மை அழைக்கிறதே.

அதற்கு தகுதியானவன்தானா நான்? அதை வைத்து யாரை ஏமாற்றுவது? நாம் ஏமாற்ற அவசியமில்லை என்றாலும் மற்றவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? சினிமா பிரபல்யத்திற்கே இந்த திணறல் என்றால் அரசியலில் எத்தனை தூரம் திணற வேண்டும். அதிலும் அதில் எந்த அளவு சுதந்திரம் பறிபோகும். ஒரு நிமிடம் கூட நம்முடையதில்லை என்றாகி விடுமே என அச்சம். எதை வேண்டுமானாலும் விடலாம். என் தனிப்பட்ட சுதந்திரத்தை எப்படி மற்றவர்க்கு/மற்றதற்கு தரமுடியும். வாய்ப்புகள் இருக்கிறதுதான். இதுவரை வந்த வாய்ப்பே தெய்வீகமானது. உன்னதமானது. வாழ்வாங்கு வாழ வைத்திருக்கிறது.

சினிமாவைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி எல்லாமே தன்னுடையது, தன் குழுவினுடையது என ஏற்றுக் கொள்ளலாம். அது ஒரு வர்த்தகம். அரசியல் என்று வந்துவிட்டால் எத்தனை அனர்த்தங்களை சந்திக்க நேரிடும். சிவன் சொத்து குல நாசம். முடிவுகளுக்காக முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போதெல்லாம் புது முடிச்சுகள் விழுகின்றன. அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் வித்தை ஆன்மிகம், யோகா, தியானத்தில் கிடைக்கிறது. அங்கே கிடைக்கிற விஷயம் ஒன்றே ஒன்று மன அமைதி. அதையும் தாண்டிய அமைதி ஆளரவமற்ற இடத்தில் சஞ்சாரம்.

ஒவ்வொரு படம் முடிந்தால் இமயமலை பயணமாகிறார். ரிஷிகளை காண்கிறார். அதற்குள்ளேயே கரைகிறார். ராகவேந்திரர் என்றால் அவருக்குள்ளேயே பயணமாகிறார். ரமணர் என்றால் அவருக்குள்ளும் பயணப்படுகிறார். பாபா என்றால் அந்த அச்சரத்திற்குள்ளும் மூழ்கிப் போகிறார். நான் கண்ட இன்பம் என் ரசிகர்கள் பெற வேண்டும் என துடிக்கிறார்.

'எத்தனையோ படங்கள் உங்களுக்காக கொடுத்துவிட்டேன். எனக்காக ஒரு படம் எடுங்கள். அது என் ரசிகர்களுக்காக இருக்கட்டும். என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதை வரவேற்பார்கள்!' என துடிக்கிறார். ரஜினியே சொல்கிறார். எடுக்க வேண்டியதுதானே? படத் தயாரிப்பாளர்கள் எடுக்கிறார்கள். யோசித்து யோசித்து எடுக்கிறார்கள்.

Rjpg

ரஜினி | கோப்புப் படம்.

ரஜினி சமாதானப்படுத்தியதால் விநியோகஸ்தர்களும் படத்தை பூஜையின் போதே விலை பேசி வாங்கி விடுகிறார்கள். இருந்தாலும் படம் வர்த்தக ரீதியாக பெரும் தோல்வி. அப்படியான பயனைத்தான் ரஜினியின் நூறவாது படமான 'ராகவேந்திரா' அனுபவித்தது. 'பாபா' படமும் அதிலேயே மூழ்கிக் கரைந்தது.

இங்கே பலரும் என்ன நினைக்கிறார்கள். சினிமா கதாநாயகன் சொன்னால் மக்கள் கேட்பார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் அதையே தரவேண்டும் என்று. ஆனால் அது சாத்தியமா? தியாக உலகில் சாத்தியம். வர்த்தக உலகில் சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அது என்ன தியாக உலகு? வர்த்தக உலகு

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக் கொட்டடியில் வாழ்ந்த பெருமக்கள் தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இந்த நாட்டுக்கே அர்ப்பணிக்கும் தன்மையோடு வாழ்ந்தார்கள். அது தியாக உலகு. சுதந்திரத்திற்கு பிறகு தங்களது சொத்தான ஆனந்த பவனத்தை அரசுக்கு கொடுத்ததே நேருவின் குடும்பம். பல்வேறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் காலங்காலமாக இருந்த தனது மூதாதைகளின் சொத்துகளை எல்லாம் கட்சிக்கு எழுதித் தந்தார்களே. அது தியாக உலகு.

அதுபோல சினிமா படம் எடுக்க வருபவர்கள் எல்லாம் தான் சேர்த்த சொத்துகளை, தன் மூதாதைகள் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் சமூக கண்ணோட்டத்தோடு கூடிய திரைப்படங்களை எடுக்கும் பணிக்காக செலவிட வேண்டும். காந்தியின் குரங்கு பொம்மைகளை வைத்து கெட்டதைக் கேட்காதே, கெட்டதைப் பேசாதே, கெட்டதைப் பார்க்காதே என்பது போல நிறைய போதிக்க வேண்டும்.

'புலால் உண்ணக்கூடாது. மது அருந்தக்கூடாது. தீய செயல்களில் ஈடுபடக்கூடாது!' போன்ற புத்திலிபாய் வரங்களை பேச வேண்டும். இந்த திரைப்பட தியாக உலகத்திற்குள் வர்த்தக உலகம் தப்பித்தவறி நுழைந்து விடவே கூடாது. திரை வர்த்தக சவாரியில் பெரும் சக்தியான ரஜினி 'புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது, தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. இப்படித்தான் ரமண மகரிஷி..!' என்று ஆரம்பித்தால் அந்த படம் ஓடுமா?

ரஜினி எதைச் சொன்னாலும் அவர் ரசிகர்கள் கேட்பார்களா? அவர்களுக்கு ரஜினி தண்ணி அடிக்கும் ஸ்டைல் பிடித்திருக்கிறது. ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் பிடித்திருக்கிறது. அவர் நடக்கும் நடை, பேசும் பேச்சு, கோபக்கனல் கக்கும் பார்வை, காதல் வயப்படும் கண்கள், ரசிக்க வைக்கும் லகலக வசனம் பிடித்திருக்கிறது. அதையே தங்கள் வர்த்தக ஆயுதம் ஆக்கி ஒப்பந்தம் போடுகிறார்கள் பட முதலாளிகள். பிறகெப்படி அவர் இந்த சமூகத்திற்கு சினிமாவின் மூலம் ஆலோசனைகள் சொல்ல முடியும். இவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து கொண்டே போகிற போக்கில்தான் சமூக நோக்கிலான கருத்துக்களை வீசிக் கொண்டு போக முடியுமே ஒழிய இந்த மக்களிடம் எதையும் திணிக்க முடியாது. ஆன்மிகமும் அப்படித்தான். ஆன்மிக அரசியலும் கூட அப்படித்தான்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 27-தேவை பல ஜிகினா வேலைகள்

 

 
rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

இப்போது மதுக்கடைகளில் நல்ல லாபம். அந்த விற்பனையில் நேரடியாக இறங்கியுள்ளது. அதிலும் ஊழல், ஊழல். மக்களை மேலும் மேலும் குடிக்கவைத்து குடிகாரர்களாக்கி கொண்டிருக்கிறது. சிகரெட்டும், பீடியும் விற்றுவிட்டு புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரம் செய்கிறார்கள். அழுகிப்போன நுழையீரல், கல்லீரலை டிவியில் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மக்கள் சேனலை மாற்றிவிட்டு மறுபடிதானே அந்த சேனலுக்குள் வருகிறார்கள்?

அரசாங்கமே மது விற்பனை வருவாயையும், சிகரெட், பீடி வரியையும் இழக்க விரும்பாத போது, திரைப்படத்தை தொழிலாக செய்பவர்கள் மீது மட்டும் இப்படி பாய்வது சரிதானா? அப்படியே அவர்கள் விழிப்புணர்வு படங்களாக எடுத்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒற்றைக் கதாநாயகன் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்றால் அந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டிய இடத்தில் யார் இருக்கிறார்கள். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியதுதானே? அவர்களை செய்யச் சொல்லி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டியதுதானே?

   
 

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் எல்லாம் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குவதும் அதற்காகத்தானே? இன்றைக்கு அரசியலை மக்களுக்கானது, தியாகத்தன்மையிலானது என்று எத்தனை பேர் பார்க்கிறார்கள்.

ஆக, இந்த மக்களிடையே யாரும் எதையும் திணிக்க முடியாது. 'எனக்கு உன் ஸ்டைலுதான் வேணும். எனக்கு உன்கிட்ட ஸ்டண்ட்டுதான் வேணும். ஆக்ஷன் ஹீரோவாத்தான் நடிக்கணும்!' என்பது சினிமா ரசிகர்களின் நிலை. ரஜினியே ஆனாலும், எம்ஜிஆரே ஆனாலும் இதுதான் நிலை.

'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'தான் எம்ஜிஆரின் கடைசிப்படம். அது எந்த அளவு வர்த்தக ரீதியாக சாதித்தது என்று அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். முந்தையவற்றை ஒப்பிட்டால் எம்ஜிஆரின் அந்தப் படம் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் கதையைத் தாண்டி பிரச்சாரமே சுடர்விட்டது. அதனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றியைத் தரவில்லை.

எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் 'அண்ணா நீ என் தெய்வம்' உள்ளிட்ட சில படங்கள் பாதியிலேயே நின்றன. அது மட்டுமல்ல எம்ஜிஆர் சினிமா வானில் மின்னிக்கொண்டிருந்த நேரத்திலேயே அவர் நடித்த பல படங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து செட் போட்டு காத்திருப்பார்கள். ஏதாவது அரசியல் வேலைகள், மீட்டிங், வேறு வேலைகள் என சென்று விடுவார். வர மாட்டார். அதனால் அந்த செலவு வீணாகும். திரும்ப செலவு செய்ய வேண்டி வரும்.

அப்படி சொந்தப் படம் எடுத்து மாட்டிக் கொண்டவர்கள் பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதையும் அந்தக் காலத்தில் கதை, கதையாய் சொல்வார்கள். இதற்கெல்லாம் மாற்றாக எம்ஜிஆர் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகவோ, மாற்று ஏற்பாடு செய்து கொடுத்ததாகவோ தகவல்கள் இல்லை.

rajpg

ரஜினி | கோப்புப் படம்.

 

ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் பட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தந்து அந்த நிலையை 'பாபா' படத்தில் மாற்றினார் ரஜினி. எம்ஜிஆர் -சிவாஜி காலத்தில் சினிமா கதாநாயகனை, அதிலும் லட்சிய கருத்துகளைச் சொல்லும் கதாநாயகனை ஆதர்ஸ தலைவராகவே கொண்டவர்கள் இருந்தனர். அதிலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கருத்தில் கொண்டே அவர் மீது காதல் கொண்டனர்.

எம்ஜிஆருக்கு பிறகான தமிழ்சினிமா என்பது கதாநாயகர்களிடம் எது பிடித்திருக்கிறதோ அதை ரசிக்கிறார்கள். வில்லனிடம் கூட வில்லத்தனத்தை ரசிக்கிறார்கள். நிறைய படங்கள் வில்லத்தனமான கதாநாயகர்களாலேயே வெற்றி பெறுகிறது. வில்லனாக நடித்து சூப்பர் ஸ்டாராக வளர்ந்த கதாநாயகன் ரஜினி என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழக அரசியல் வாழ்விலும் சிறகடிக்கிறது.

பெரியாரைப் பிரிந்து வந்த அண்ணா திமுகவைத் தொடங்கினார். 'ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்!' என்ற பஞ்ச் வசனம் (அடுக்குமொழி) வசனம் பேசியே வென்றார். அதற்கு துணை நின்றது அவரைப் போன்ற திராவிட இயக்கத்தவர்களின் அடுக்குமொழிப் பேச்சு. அதில் எம்ஜிஆரின் சினிமா சக்தியும் துணை நின்றது. அண்ணா மறைந்தபிறகு அதே அடுக்கு மொழி பேசியே பலரையும் கவர்ந்த கருணாநிதி முதல்வர் ஆனார்.

அப்போது அவர் பதவிக்கு வர துணையாக நின்ற எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டபோது திமுகவினர் எம்ஜிஆர் மீது கூத்தாடி, மலையாளி என்றெல்லாம் புழுதி வாரித்துாற்றி பிரச்சாரம் செய்தனர். எம்ஜிஆருக்கு அடுக்கு மொழி வசனங்கள் வராது. முக வசீகரம்தான் அவருக்கு எடுபட்டது. அதன் முன் கருணாநிதியின் அடுக்கு மொழி வசனங்கள் பாடாய்பட்டது.

அவரின் வழித்தோன்றல் ஜெயலலிதா. அவருக்கும் அடுக்குமொழி வராது. சினிமாவைப் போல் எழுதிக் கொடுத்த வசனங்கள்தான். அலை, அலையாய் அவரைக் கூட்டத்தில் காண ஜனங்கள். கட்சித் தொண்டர்கள். எம்ஜிஆரே அசந்தார். அவரைக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக, ராஜ்யசபா எம்.பி.யாக எம்ஜிஆர் பிரமாதப்படுத்தியபோது கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தனிப்பட்ட வாழ்க்கையையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்தார்கள்.

எம்ஜிஆர் இறந்தபோது அவரது சவ ஊர்வல வாகனத்தை விட்டே ஜெயலலிதாவை கீழிறக்கினார்கள். அவரே கட்சியாகி, ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிறகு அவருடன் இருந்த சசிகலாவை விமர்சித்தார்கள். மன்னார்குடி குடும்பம் என்று பல விஷயங்களை சொல்லி களங்கம் கற்பித்தார்கள். அப்படிப்பட்ட சசிகலா ஜெயலுக்குப் போக அவரின் ஆசீர்வாதம் பெற்ற தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று ஆளுங்கட்சியான இரட்டை இலையையும், பலமான எதிர்க்கட்சியான உதயசூரியனையும் இரண்டாம், மூன்றாம் இடத்தில் தள்ளிவிட்டு வெற்றி கொள்கிறார். அதுவும் சாதாரண வெற்றியல்ல.

மலைக்கும் மடுவுக்குமான வெற்றி. அந்தத் தேர்தலில் பணம் மட்டுமே பேசியதா? என்றால் அதுதான் இல்லை. அதையும் தாண்டி மக்களிடம் வேறு ஏதோ வேலை செய்திருக்கிறது. அதை உடைத்து உடைத்துப் பார்க்கும்போது ஒன்று புலனாகிறது. ஒரு மனிதன் இங்கே பெரிய அளவு பேசுபொருளானால் முக்கிய இடத்திற்கு போக வாய்ப்புண்டு போலும். ஆர்.கே.நகர் முழுக்க ஓர் ஆண்டு காலம் பேசப்பட்ட மனிதர் தினகரன். இப்போது அசகாயசூர வெற்றி பெற்றுவிட்டார்.

50
 

ஆனால் இங்கே ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றால் குதிக்கிறார்கள். அவர் பஞ்ச் வசனத்தை சுட்டி கிண்டல் செய்கிறார்கள். அவர் எது பேசினாலும் செய்தியாகிறது மட்டுமல்ல. அவரைப் பற்றிய நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் கூட பேசுகிறார்கள். அதுவும் செய்தியாகிறது. மீடியாக்களில் அலை பாய்கிறது. பொதுவாக அரசியல்வாதிகள் எப்படி உருவாகிறார்கள். அரசியல் தலைவர்கள் அங்கீகரித்தால் உருவாகிறார்கள் என்று சொல்லலாம். அந்த அரசியல் தலைவர்கள் எப்படி அந்தப் பொறுப்புக்கு வருகிறார்கள். அரசியலில் பிரபலப்பட்டால் பொறுப்புக்கு வருகிறார்களா? போராட்டங்கள் மூலம் பொறுப்புக்கு வருகிறார்களா? அதிகமான மேடைப்பேச்சின் மூலம் பொறுப்புக்கு வருகிறார்களா? பெரும் புரட்சிகள் நடத்தி தலைவர்கள் ஆகிறார்களா?

சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவை எல்லாம் வெள்ளையர் ஆட்சியின் எதிர்த் தேவைகளாக இருந்ததால் அன்றைக்கு அதன் மூலம் தலைவர்கள் உருவானார்கள்.

சுதந்திர இந்தியாவில் வறுமை, கொடுமை, வறட்சி, பஞ்சம் நிலவியதால் அதை அகற்ற போர்க்கால நடவடிக்கைகள் தேவைப்பட்டன. அதை அடியொற்றி தலைவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு கொள்ளையடிக்கவும், தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்ளவும் நேரம் இல்லை. தவிர அவர்கள் எல்லாம் சுதந்திர வேட்கை காலத்தில் சிறைக்கொடுமைகளையும், அடிமைத்தள வேதனைகளையும் அனுபவித்து அரசியல் நிலை அடைந்தவர்கள் என்பதால் அதிலிருந்தே மக்களைப் பற்றி அக்கறையுடன் சிந்தித்தார்கள். அந்த தலைமுறையின் நீட்சி சுத்தமாக தேய்ந்துவிட்டது.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 28- ஆன்மிகத் தேடல் சர்ச்சைகள்

 

 
RajinikanthPTIjpg

'கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி | கோப்புப் படம்.

அலங்காரச் சொற்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதுவும் நீட்சியாகி அலங்காரப் பதுமைகள் அக்கட்டிலில் அமர ஆரம்பித்து விட்டது. இந்தப் பதுமைகள் எல்லாம் 'பணம்தான் பதவிகளுக்கு உறுதுணை புரியும். புதிய பதவிகளை உருவாக்கும். அதற்கு சில ஜிகினா வேலைகளை ஏற்படுத்தினால் போதும்' என்ற நிலையை ஏற்படுத்தினார்கள். எங்கே எந்த மாலையானாலும் எனக்கே விழ வேண்டும். திருமணம் என்றால் நான்தான் மாப்பிள்ளை, இழவு என்றால் அதில் நான்தான் பிணம் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது புத்தி.

பெரிய திரை, சின்னத்திரை, காட்சி ஊடகங்கள், அச்சிதழ்கள் எல்லாவற்றிலும் நான், நான், நானாகவே இருத்தல் வேண்டும். அதுதான் நம்மை எல்லா இடங்களிலும் அறிய வைக்கும், மக்களைப் புரிய வைக்கும். ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும். அப்படியான ஆகப் பெரும் பேசுபொருள் சகல திக்குகளிலிருந்தும் வந்தே தீர வேண்டும். அப்போதுதான் இங்கே இப்போதைக்கு ஒரு தலைவன் உருவாகும் வழியாக இருக்க முடியும் போலிருக்கிறது.

 

நாளை இதுவே வேறு உத்தியில் மாறலாம். தியாகத்தன்மை முடிவு செய்து, கிளர்ச்சிகள், போராட்டங்கள், சிறைக் கொட்டடிகள், சுதந்திரப் போராட்ட வேட்கைகள் அரசியலை முடிவு செய்த காலம் போய், மக்களுக்காக பாடுபடும் தன்னலத் தலைவர்களின் ஈர்ப்பும் அகன்று போய், அடுக்கு மொழி வசனங்கள் ஆட்டிப் படைத்தது போய், சினிமா கவர்ச்சி இழுத்துப் பிடித்தது போய், இப்போது பணமும், ஆதிக்கமும், சாதியும், மதமும் கூட கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

அப்படியான மோசமான தலைவன் மட்டுமல்ல; நல்ல தலைவன் கூட ஏதாவது ஒரு திக்கின் கோடானு கோடி மக்களின் நாவின் உச்சரிப்பிலிருந்தே உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு மிகப்பெரும் பிரபல்யம் தேவையிருக்கிறது. சிகரெட்டை தூக்கிப் போட்டு மடக்கிப் பிடித்தாலோ, ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் அடையாளத்துக்கு 20 ரூபாய் நோட்டு கொடுத்தாலோ அதற்கெல்லாம் மசியக்கூடிய, மாறக்கூடிய ஜனங்களின் திரட்சி உள்ள பிரதேசமாக நம்முடைய அகமும், புறமும் மாறி வருகிறது.

சமகால ஆட்சியதிகாரத்தை பிடிக்கும் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

எதைக் 'கடவுள்' என்று மனிதன் வணங்கினானோ அதைக் கல்லாலும், அதை விட கடும் சொல்லாலும் அடித்தார் பெரியார் ஈவெரா. அந்த பகுத்தறிவு இயக்கத்திலிருந்து உதிர்த்த சில சீடர்கள் 'கோயில் கூடாது என்பதல்ல வாதம்; அது கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதுதான்!' என்ற அடுக்குமொழி பேசி தேர்தல் அரசிலாக்கி குளிர் காய்ந்தார்கள்.

அதுவே உச்சகட்டமாக எம்ஜிஆரை மூகாம்பிகை கோயில் வரை கொண்டு போய் நிறுத்தியது. பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கத் தலைவராக காட்டிக் கொண்ட எம்ஜிஆர் எந்த இடத்திலும் தன் திரைப்படங்களில், 'கடவுள் மறுப்புக் கொள்கை'யை பிரஸ்தாபிக்கவில்லை.

'கடவுள் கல்தான்' என்றாலும், 'கடவுள் இல்லை' என்றாலும் இந்த மண்ணில் கடவுளுக்கு வயது லட்சம் கோடி ஆண்டுகள். கடவுள் மறுப்புக்கு வயதோ ஒரு நூற்றாண்டு கூட தேறாது. எனவே கடவுள் மறுப்பாளர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கையில், அக்கொள்கை ஓட்டரசியலில் வேகாது என்பது மற்றவர்களை விட இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அது இவர்களின் ரத்த நாளங்களில், மரபு அணுக்களில் கூட ஊடாடியே வந்திருக்கிறது.

அதன் உச்சகட்டமான ஆன்மிக அரசியல் காலம் என்றால் அது 2001-2006- ஆம் ஆண்டுகளாகத்தான் இருக்கும். அந்த காலங்களில் ஒரு அரசியல்வாதி ஒரு பிரபல ஜோசியரையோ, ஆன்மிகவாதியையோ பார்க்காவிட்டால் அவர் அரசியல்வாதியே அல்ல என்ற நிலை இருந்தது. உண்ணிக் கிருஷ்ண பணிக்கர், குருவாயூர் குருக்கள், அந்தியூர் ஜோசியர் என சகல திசைகளிலும் ஒரு வகைப் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா.

யாகாவா முனிவர், சிவசங்கர் பாபா மாதிரியான ஜோதிட, ஆன்மிக சிகாமணிகள் கூட ஆருட, ஜோதிட மூட நம்பிக்கைகளை முன்வைத்து அரசியல் பேசி அரசியல்வாதிகளை நிர்ணயித்தார்கள்.

இன்றைக்கு சமூக வலைதளங்களில், ஊடகங்களில் வரக்கூடிய மீம்ஸ், நக்கல், நையாண்டி, கேலிச் சித்திரங்கள் எல்லாம் உள்ளன. மீம்ஸ் சமகால ஸ்டைல் என்றால் அந்தக்கால அரசியல் ஸ்டைல்தான் கேலிச் சித்திரங்கள். இந்த சித்திரங்கள் இல்லாவிட்டால் ஒருவர் அரசியல்வாதியாகவே திகழ முடியாது. பத்திரிகைகள், மீடியாக்கள் மூலம் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு மீம்ஸ் போடாத குறையாக காமெடி தர்பார் நடத்தி வந்தவர்கள் அக்கால கட்டத்தில் சாமியார்களே ஆவர். அவர்கள் மூலமாக பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களையும் தாண்டி இத்தகைய சாமியார்களை அருள் வாக்குகளையும், ஞானோபதேசங்களையும்(?!) மக்கள் ரசித்தனர்.

இந்த ரசிப்பிற்குள் அரசியல்வாதிகள் வரலாம். அரசியல் தலைவர்கள் வரலாம். சினிமா பிரபலங்கள் வரலாம். வந்தார்கள். ஜெயலலிதா மட்டுமல்ல, விஜயகாந்தும் வந்தார். மஞ்சள் துண்டுக்கு அர்த்தம் கற்பிக்கிற விதமாய் கருணாநிதியும் கூட சிலாகிக்கப்பட்டார். சினிமாவைத் தாண்டி அரசியல் தன்மைகளுடன் ரஜினியும் கூட அதற்குள் நுழைந்து வந்தார்.

அப்படி அவர் கண்டுணர்ந்து வந்த ஆன்மிகவாதிகள்/சாமியார்கள் பெரும்பாலும் உயர் மட்டத்தில் இருந்தனர். ஆன்மிகத் தேடலின்போது அவர் சச்சிதானந்த் மகராஜ் மட்டுமல்ல, ரஜனிஷ், யாகாவ முனிவர், நித்யானந்தா, தயானந்த சரஸ்வதி சுவாமிகள் என பலரையும் சந்தித்துள்ளார். அதில் அவர் குருவாக ஏற்றுக் கொண்டது சச்சிதானந்தா மகராஜ் மட்டுமே. அதே நிலையில் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளையும் வைத்திருந்தார்.

RAJINIKANTHjpg

ரஜினி | கோப்புப் படம்.

 

ஒரு கட்டத்தில் ரஜினிக்குள் நிறைந்தது இமயமலையில் அவர் சந்தித்த சில சாமியார்கள் மட்டுமே. இப்போதும் அவர் தன் வீட்டில் பிரபலங்களை சந்திக்கும் அறையில் யுக்தேஷ்வர், மகாசாயர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களின் படங்கள்தான் மாட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவர் ஆன்மிகவாதிகளுடன் வெளிப்படையான நெருக்கம் பாராட்டியதால் அரசியல்வாதிகளுக்கு மீடியாக்கள் போடும் கேலிச் சித்திரங்களை மிஞ்சும் அளவு ரஜினியின் அரசியல் ஆருடம் சொல்லும் சாமியார்களும் பெருகினர். அந்தப் பழக்க தோஷத்தில் ரஜினி எந்த சாமியாரை சந்தித்தாரோ, அந்த சாமியாரை மீடியாக்கள் மொய்ப்பதும் வாடிக்கையானது. அதில் ஒன்றாகத்தான் சச்சிதானந்த் மகராஜ் பேட்டியும் வெளியானது.

அதற்கு முன்பே ரிஷிகேசத்தில் வாசம் செய்தவரும், கோவை ஆனைகட்டியில் ஆர்ஷ வித்ய குருகுலம் அமைத்தவருமான பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமியும் ரஜினியின் அரசியல் தன்மைக்கு பஞ்ச் வசனங்கள் அளித்தார். அவர் எப்போதெல்லாம் கோவை ஆனைகட்டி குருகுலத்திற்கு வருவாரோ, அப்போதெல்லாம் ரஜினியும் வருவது வழக்கமாக ஆகிப்போனது. இந்த ஆசிரமத்தில் பகவத்கீதை, உபநிஷத்துக்களும் சமஸ்கிருதமும், சாதி, மத, பேதமில்லாது அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி இங்குள்ள பணியாளர்கள் இன்றளவும் ரஜினி புராணம் பாடுகிறார்கள்.

சுவாமியின் ப்ரிய சீடர்களில் முக்கியானவர் ரஜினி. சுவாமி சொன்னால் ரஜினி அப்படியே கேட்பார். 'படையப்பா' படம் எடுத்த போது அதற்கான அர்த்தத்தை ரஜினிக்கு சொன்னதே சுவாமிதான். அதை 'படையப்பா' வெற்றி விழாவிலேயே சொன்னார் ரஜினி. சுவாமிஜி சொன்ன பிறகுதான் அதுல வேல் தூக்கிட்டு வர்ற சீனையெல்லாம் சேர்த்தார் ரஜினி என்பதை இன்றும் இங்கே சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

''சுவாமிஜி ரிஷிகேசத்துல இருந்து இங்கே எப்ப வர்றாரோ அப்ப ரஜினிக்கும் அது தெரிஞ்சுடும். உடனே கார் கண்ணாடிகளை ஏத்திவிட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துடுவார். சில சமயம் குடும்பத்தோட கூட வந்து தங்குவார். அவருக்குன்னு இங்கே குடில் இருக்கு. ரொம்ப நாள் அவர் வந்து போறது தெரியாமலே இருந்தது. சாயங்காலம் நேரம்தான் வெளியில் வருவார். வாக்கிங் போவார். சத்தமில்லாம வந்துடுவார். ஒரு தடவை அவர் அப்படி வாக்கிங் போகும்போது மக்கள் பார்த்துட்டாங்க. அப்புறம் என்ன? படையே வந்துடுச்சு. அப்புறம் போலீஸ் செக்யூரிட்டி போட்டு கட்டுப்படுத்த வேண்டியதாயிடுச்சு. அதனால அவர் உடனே கிளம்ப வேண்டியதாயிடுச்சு. அதுலயிருந்த ரஜினி இங்கே வர்றேன்னா கூட சுவாமிஜி வேண்டாம்னுடுவார். ரிஷிகேஷ்ல இருந்த போது மட்டும் வந்து பார்க்க அனுமதிப்பார்!''

2000-ம் ஆண்டில் ரஜினியின் 50-வது பிறந்தநாள். அதையொட்டி ஒட்டி அப்போது நான் பணிபுரிந்த முன்னணி வார இதழில் இடம் பெறுவதற்காக இங்கே பேட்டிக்கு சென்றபோது ஆசிரமத்தவர்கள் தெரிவித்த கருத்து இது.

இப்போதும் கூட பலமுறை செய்தி சேகரிப்புப் பணிக்காக இந்த குருகுலம் தாண்டித்தான் செல்கிறேன். பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. என்றாலும் ரஜினியையும் இந்த ஆசிரமத்தையும், சுவாமியையும் இணைத்து பேசாத நபர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

 

ரஜனி லதாவோடை சேட்டை விட்டத்துக்கு ராமாவரம் தோட்டத்திலை  எம்ஜிஆர் நாலு சாத்து சாத்தினதாய் கேள்விப்பட்டன் உண்மையோ?

 

 

 

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 29- மவுன சித்தர் கிளப்பிய துஷ்ட தேவதைகள்

 

 
rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

சச்சிதானந்த மகராஜ், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகிய ஆன்மிகவாதிகளுடனான ரஜினியின் நெருக்கம் இப்படியென்றால், அதற்கேற்ப ரஜினிக்கு சம்பந்தமேயில்லாமல் பீலா விடும் சாமியார்கள் அந்தக் காலத்தில் வரைமுறையில்லாமல் பெருகியிருந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படியோ தெரியாது. ஆனால் அந்த அந்தக் காலகட்டத்தில் அவர்கள் ரஜினிக்கு சொன்ன அரசியல் ஆருடமும், ஜோதிடமும், அருள்வாக்கும் இருக்கிறதே. அது ரஜினியின் காமெடி ப்ளஸ் ஸ்டண்ட் திரைப்படங்களைக் காட்டிலும் படு சுவாரஸ்யமானது.

இன்றைக்கு வாட்ஸ் அப், டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் நம்மவர்கள் போடும் மீம்ஸை விடவும் அடர்த்திமிக்கது. அப்படி எனக்கேற்பட்ட சில சாமியார்களின் அனுபவங்களில் இரண்டே இரண்டு பேருடைய பேட்டிகளை மட்டும் இங்கே தந்துவிட்டு, அடுத்த கட்டமாக ரஜினியைப் பிடித்து உலுக்கிய காவிரி நதி நீர் அரசியலுக்குள் நுழைவோம்.

 

ஜனவரி மாதம். 2002-ம் ஆண்டு. ''ரஜினி மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். கேரளாவில் அவர் சிகிச்சை எடுத்தும் அவருடைய நோய் பூரணமாக குணமடையவில்லை. ரஜினி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் போதும். அவரை குணப்படுத்தி விடுவேன். அவருக்குள் நோயை குடிவைத்திருப்பவை துஷ்டதேவதைகள். அவற்றையும் நானே விரட்டி விடுவேன்!'' என்று அறிவித்திருந்தார் சுவாமி விஷ்ணு கால பகவான் என்ற சாமியார். அந்த மனிதருக்கு அப்போது நாற்பது வயதிருந்தால் அதிகம்.

திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்தில் ஜோதியோகா பவுண்டேஷன் என்றொரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். இவர் இயற்பெயர் மவுன குருசாமி, ''ஒவ்வொரு மனிதனும் சித்தராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அமைப்பை நிறுவியிருக்கிறேன். என் பூர்வாசிரமப் பெயரையும் மாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் சித்தருக்கெல்லாம் சித்தர்!'' என்று சொல்லிக் கொண்டார்.

தாடி வளர்த்து, காவி வேட்டி கட்டி, ருத்ராட்ச மாலை அணிந்திருப்பார் என்று நினைத்துப் போனால் டெரிகாட்டன் பேண்ட், சட்டை. உயர் ரக வெளிநாட்டு கறுப்பு கூலிங்கிளாஸ் அணிந்து அமர்க்களமாக இருந்தார். கோவையில் இருக்கும் பழமைவாய்ந்த கூட்டுறவு சொசைட்டி ஒன்றின் தனி அதிகாரி நான் என்றும் சொல்லி அதிரவைத்தார். இப்படியிருந்து கொண்டு எதற்கு இப்படி மூட நம்பிக்கைகளை பரப்புகிறீர்கள். ரஜினியைக் காண வேண்டும் என்ற ஆவலா? என்றுதான் கேட்டேன். கட,கடவென்று சிரிக்காமல் பேச ஆரம்பித்து விட்டார் மனிதர்.

''ரஜினி ஓர் அவதாரப் புருஷர். அதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. சுருக்கமாகச் சொன்னால் திருப்பதிசாமியின் நடமாடும் திருவுருவம் மிஸ்டர் ரஜினி. யாகாவ முனிவர் அவரை முதன் முதலாக அவதாரப் புருஷர் என்று அறிவித்தாரல்லவா? அதற்கு முன்பே அதை நான் கண்டுகொண்டேன். அதை எனக்கு முந்தி யாகாவ எப்படி கண்டுபிடிச்சார்னுதான் ஒரே ஆச்சர்யம். யாகாவாவையே சந்தித்துப் பேசினேன். நான் கண்ட உண்மையை மட்டும் அவரிடம் வெளிப்படுத்தவேயில்லை. கிட்டத்தட்ட அவர் சொன்ன முறையும், நான் கண்டுணர்ந்த உண்மையும் ஒன்று போலவே இருந்தன. அதன் பின்பு அவர் சொன்ன ஒரு விஷயத்தை நாம் சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அதனால்தான் சும்மாயிருந்துவிட்டேன்!''

சரி, ரஜினிக்குள் அப்படியென்ன பிரமாத விஷயத்தை கண்டு கொண்டீர்கள். விளக்கமாக சொல்ல முடியுமா?

நான் கண்டதை அப்படியே உங்களுக்கு முழுமையாகச் சொல்லி விளங்க வைத்துவிட முடியாது. சில வருடங்களாக நான் புகைப்படங்களைப் பார்த்தாலும், ஒரு பொருளைப் பார்த்தாலும், ஒரு மனிதனைப் பார்த்தாலும் அது சார்ந்த சூட்சும உடம்பு என் கண்களுக்குத் தெரிகிறது. அதை வைத்து சில விஷயங்களையும் கணிக்க முடிகிறது. எப்படின்னா, சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரத்திலே இருந்தார். நான் அவருடைய போட்டோவை ஒரு பத்திரிகையில் பார்த்தேன். அப்போது அவருடைய ஆற்றலைக் காண முடிந்தது. அதன் பின்புதான் எனக்கும் அந்த சக்தி வர ஆரம்பித்தது. அப்படித்தான் ரஜினியையும் நான் பார்த்தேன். அவரின் உடம்புல ரொம்ப வித்தியாசமான சக்திகள் இருக்கு. உதாரணமா அவர் 'ராகவேந்திரர்' படத்துல நடிச்சார். ரஜினியின் உடம்பு பவர்ஃபுல்லா இருந்தததாலதான் அவர் ராகவேந்திரரா நடித்தபோதே அவர் ராகவேந்திரர் சமாதிக்கெல்லாம் போய் வந்தபோதே அவர் சூட்சும உடல் சக்தியை கணக்கிட்டு ராகவேந்திரரே அவருக்குள் ஐக்கியமாகி விட்டார்!

ரஜினியை நேரில் சந்திக்காமல், அதாவது ரஜினியின் நிஜ உடலை சந்திக்காமல் எப்படி சூட்சும உடலை கணிக்கிறீர்கள்?

அதுதான் முன்னமே சொன்னேனே? பவர் ஃபுல்லான உடம்பை நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிறைய திரைப்படங்களில் பார்க்கிறோம். அதிலேயே அதன் தன்மை புலப்பட்டு விடுகிறதே.

ரஜினி அரசியல், ஆன்லைன் தொடர், மவுன சித்தர், துஷ்ட தேவதைகள், ரஜினி அரசியல் 29, அரசியல் ஆருடம், ராகவேந்திரர், சித்தர்கள், சுவாமி விஷ்ணு கால பகவான், அவதாரப் புருஷர்.

RAJINIKANTHjpg
 

ரஜினிக்குள் ராகவேந்திரர் குடிபுகுந்து விட்டார் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் அவர்தான் ரஜினிக்குள் குடியிருக்கும் துஷ்ட தேவதையா?

இல்லையில்லை. அவரின் சூட்சும உடலின் தன்மையை வைத்தே அங்கே ராகவேந்திரா குடிபுகுந்தார். அதே சமயம் வேறு சில தெய்வங்களும் அவருக்குள் குடிபுகுந்துள்ளன. கூடவே சில துஷ்ட தேவதைகளும் அங்கே நுழைந்துவிட்டன. அந்த துஷ்ட தேவதைகள் என்ன செய்யுதுன்னா ரஜினி ஒரு கருத்தை வெளிப்படுத்தும் முன்னரே வேறு அர்த்தத்தில் அவர் நாவைப் பேச வைத்து விடுகின்றன. அப்படித்தான் இரண்டு மாசம் முன்பு ஒரு படம் பூஜை போட்டாரு ரஜினி. அது நடக்கல. காரணம் அவருக்குள் துஷ்ட தேவதைகள்தான். அவை அவரை இயங்கவே விடலை. படமே நின்னுடுச்சு. அதன் தொடர்ச்சியாகத்தான் கேரளாவில் சிகிச்சைக்கெல்லாம் போயிருக்கார்.

இப்பவும் அவர் உடல்நிலை சரியாகாமல்தான் தவிச்சிட்டிருக்கார். இதை அவரின் நெருக்கமான நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவரும் அதை ஒப்புக்கிட்டார். அதை எப்படி குணமாக்கறதுன்னும் கேட்டார். 'என்னை அவர்கிட்ட அழைச்சுட்டு போங்க. சரிபண்ணிக்காட்டறேன்னு சொல்லி இருக்கேன். அதற்கு ரஜினியின் சம்மதம் பெற்றுத்தருவதாக சொல்லிச் சென்றிருக்கிறார்!'.

சூட்சும உடலைப் படத்தைப் பார்த்து உணர்கிற நீங்கள் அதில் படிந்துள்ள துஷ்ட தேவதைகளையும் அப்படியே இழுத்துப் பிடித்து வெளியேற்றலாமே?

(கேள்வியைக் கேட்டதும் சுவாமி ரொம்பவும் உஷ்ணமாகி விட்டார்) இது ரொம்ப இடக்கான கேள்வி. அந்த துஷ்ட தேவதைகள் செயல்படக்கூடிய தன்மை, அதன் விதி அமைப்பை வைத்து ரஜினிதான் சில வார்த்தைகள் உச்சரிக்க வேண்டும். அந்த வார்த்தைகளின் பவர் தாங்காமல் துஷ்ட தேவதைகள் விலகி ஓடிவிடும். அதை ரொம்ப ஈஸியாக என்னால் செய்ய முடியும். எனக்குள் நிறைய சித்தர்கள் புகுந்திருக்கிறார்கள். இதனால் சித்தர்களை விட ஒரு படி மேம்பட்ட நிலையில் என்னால் இதுவெல்லாம் செய்ய முடிகிறது. அப்படி பலரை தம்படி பைசா செலவில்லாமல் குணப்படுத்தியும் இருக்கிறேன்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா?

எனக்குள்ள சக்தியால் இறந்த காலம், எதிர்காலத்தை சொல்ல முடியாது. என்னிடம் ஆற்றல் விஷன், அணுவை ஆராய்ந்து அதன் சக்தியை கைவரப்பெறும் நிலை, கூடு விட்டு கூடு பாய்கிற நிலை சக்தி ஆகிய மூன்று சக்திகளே என்னிடம் இருக்கிறது. அது அல்லாமல் காலத்தை கடந்த நிலை என்ற ஒன்று எனக்குள் வர வேண்டும். அந்த நிலை வரும்போது மட்டும் ஒரு சில மேட்டர்கள் எனக்கு தெரிந்தது.

அப்போது எனக்குள் பேசிய சித்தர்கள் 2010-ம் வருடத்தில் சில மிருகங்களுடைய தோற்றத்தில் மனிதத் தலை கொணட கரு உருவாகும். இவற்றிற்கு மிருக உடம்பும் மனித தலையும்தான் இருக்கும். அதிலிருந்து 170-வது வருடத்தில் மனிதனுடைய சஞ்சாரம், மனிதப் பிறவிகள் அமைப்பு கொண்ட கரு உருவாகும். இவற்றிற்கு மிருக உடம்பும், மனிதத் தலையும்தான் இருக்கும். அதிலிந்து நூற்றி எழுபதாவது வருடத்தில் மனிதனுடைய சஞ்சாரம், மனிதப்பிறவி அமைப்புகள் எல்லாமே அழிந்து போய்விடும் என்று சொன்னார்கள்.

எனக்கு இப்படிப்பட்ட காலம் கடந்த நிலை என்பது எப்போதாவதுதான் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் அந்த துஷ்ட தேவதைகளை வெளியேற்றிய பின்பு ரஜினியின் உண்மையான விருப்பம் எதுவோ அப்படியே நடப்பார். அவரை நேரில் சந்தித்து பேசும்போது ஒரு வேளை எனக்கு காலம் கடந்த நிலை ஏற்பட்டால் அது புலப்படலாம். அவருக்கும் அதை உணர்த்தலாம். இப்போதைய நிலையில் அவருக்குள் ஞான மார்க்கமே பெருவாரியாய் பளிச்சிடுகிறது. அதற்கே அவரின் சூட்சும உடம்பு திசை காட்டுகிறது.

அதைப் புரிந்து கொண்டு ரஜினி நகர்ந்தாரென்றால் ஆற்றல் பெற்ற நிலை, அணுவினுடைய சக்தியை கைவரப்பெற்ற நிலை, கூடுவிட்டு கூடுபாயும் சக்தி, காலத்திற்கு அப்பாற்பட்ட நிலையையும் பெறக்கூடும். அநேகமாக அவரே அந்த நிலைக்கு வந்துவிட்டார். அவரை நிலை நிறுத்தாமல் அலைக்கழிக்கின்றன துஷ்ட தேவதைகள். (சித்தர் மூச்சுவிடாமல் பேசப் பேச தலை சுற்றாத குறைதான். இதுதான் ஆன்மிக அரசியலோ?)

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 30 - விசுவாமித்திரரின் நாடி ஜோதிடம்

 

 
rajpg

ரஜினி | கோப்புப் படம்: பிடிஐ.

'ரஜினிகாந்த் முதல்வர் ஆவார். அவர் ஆக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு ஓடிப்போனாலும் அவரை இழுத்து வந்து முதல்வர் நாற்காலியில் மக்கள் உட்கார வைப்பார்கள்!' 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலேயே இப்படியொரு குண்டை தூக்கிப்போட்டார் ஒரு நாடி ஜோதிடர்.

கோவை பீளமேடு, பெரிய மாரியம்மன் கோயில் அருகே ஒரு சின்ன சந்து. அதனுள்ளே நாடி ஜோதிடர் சுப்பிரமணியத்தின் வீடு. 'வாங்க எஜமானரே. உட்காருங்க எஜமானரே!' இப்படித்தான் வரவேற்கிறார். வார்த்தைக்கு வார்த்தை 'எஜமானரே!' என்றே விளித்தார்.

 

சுப்பிரமணியத்தின் நெற்றியில் நீளமான குங்குமக்கீற்று. 'பாபா' படத்துக்கு அர்த்தம் கொடுத்ததாக சொல்லப்படும் இந்த ஜோதிடர், 'ரஜினி; பாபா' என்று நான் கேள்வியை கேட்டதுமே காத தூரம் ஓடுபவராக இருந்தார்.

'எம்ஜிஆருக்கு. என்டிஆருக்கு, ராஜிவ்காந்திக்கு, எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு, சோனியா காந்திக்கெல்லாம் நாடி பார்த்து பலா பலன் சொல்லியிருக்கேன். அதையெல்லாம் விட்டுவிட்டு, 'ரஜினி, ரஜினி'ன்னு சொல்லி என்னை பயமுறுத்தறீங்களே!' என்று வேறு அழமாட்டாத குறையாக கெஞ்சினார்.

'ஏன் சாமி, இப்படி ரஜினி பற்றிப் பேசினாலே இப்படி வெலவெலக்கறீங்க? அவரைப் பற்றி சொல்லக்கூடாத ஒன்றை பத்திரிகை பேட்டியில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டீர்களாமே உண்மையா?' எனக் கேட்டோம்.

'அப்படியெல்லாம் எதுவுமே இல்லீங்க எஜமான். ரஜினி ஓர் அபூர்வமான மனிதர். அவர் நடிகர் என்பதையும் தாண்டி ஆன்மிக வழியில் போகிறவர். நான் ரஜினியை சந்தித்தது, பேசியது போன்ற சில விஷயங்கள் எப்படியோ பத்திரிகைகளில் கசிஞ்சிருச்சு. அது அவருக்கு பிடிக்காதது. அவருக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது. பேசக்கூடாது. இல்லீங்களா? அது தர்மமும் இல்லீங்க இல்லீங்களா எஜமான்?'

நாடி ஜோதிடம் என்பது என்ன?

நீ இப்படித்தான் வாழணும். இதற்குத்தான் வந்திருக்கிறாய். நீ இங்கே பிறக்கும்போது என்ன வரம் வாங்கீட்டு வந்திருக்கிறாய்ன்னு ஒவ்வொரு மனிதனோட லைஃபையும் அந்தக் கால ரிஷிகள் சூத்திரம் போல (ஓலைச்சுவடிகளில்) தெளிவா சொல்லியிருக்காங்க. அதை்தான் நாடிங்கிறோம். அதை படித்துத்தான் அதை நாங்கள் சொல்கிறோம்.

நீங்க சொல்லக்கூடிய ஓலைச்சுவடி ஜோதிடத்தை நிறைய பேர் சொல்றாங்களே. அதில் உங்களுடையதில் மட்டும் அப்படியென்ன ஸ்பெஷாலிட்டி?

என்கிட்ட இருக்கிறது விசுவாமித்திரர் நாடின்னு பேரு. இதுல பல விஷயம் இருக்கு. அந்த மாமுனி தன் கடைசி காலத்துல எழுதிய பிரம்மரிஷி நாடிதான் நான் வச்சிருக்கிறது. இதைப் படிச்சுத்தான் பல விஐபிங்களைப் பத்தி சொல்லியிருக்கேன்.

ரஜினியைப் பற்றி உங்க நாடி என்ன சொல்லுது?

அதை நான் எப்பவே வெளிப்படுத்தி விட்டேன். ரஜினிகாந்த் முதல்வர் ஆவார். அவர் ஆகமாட்டேன்னு பிடிவாதம் புடிச்சு ஓடிப்போனாலும் அவரை முதல்வர் நாற்காலியில இழுத்துட்டு வந்து மக்கள் உட்கார்த்தி வைப்பாங்க. அப்படி அவர் முதல்வரா ஆகும்போது தற்போதைய முதல்வர் ஜெயலலிதா டெல்லி அரியணையில் இருப்பார்னு இருக்கு. அப்படிப் பார்த்தா ஜெயலலிதாம்மா டெல்லியில் பிரதமரா அமர்ந்தாலும் ஆச்சர்யப்படக்கூடாது!.

இது கொஞ்சம் டூ மச்சாகத் தெரியலையா?

எது டூ மச்? என்.டி.ராமராவ் விஜயா-வாஹினியில நடிகைகளோட நடிச்சுக்கிட்டிருந்தார். நான் போய், 'ஐயா நீங்கள் முதல்வரா ஆவீர்கள்!'னு சொன்னேன். அவரோ திகைத்துப் போய் நம்ப மறுத்துட்டார். நானும் விட்டுட்டேன். அப்புறம் அவர் சி.எம். ஆகி கோயமுத்தூர் வர்றார். அவர் வந்தவுடன் பார்க்க ஆசைப்பட்டது என்னைத்தான். அதேபோல் எம்ஜிஆருக்கு நாடி பார்த்து சொன்னேன். அப்போ அவர் மிக நன்றாகவே இருந்தார். அப்ப, 'உங்கள் கையும் காலும் வராமல் போகும். வாயோ பேச முடியாமல் ஆகும்'னு ஓலையில் படிச்சு சொன்னேன். உடனே அங்கிருந்த பாவலர் முத்துசாமி, 'கொடுக்கிற கை இது; இந்தக் கையா வராமல் போகும்? யாரைப் பார்த்து என்ன பேச்சுப் பேசறே'ன்னு சத்தம் போட்டு வெளியே அனுப்பிச்சுட்டார்.

அப்புறம் எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாமப் போச்சு. அப்ப என்னை ஆளாளுக்கு வந்து கூப்பிட்டாங்க. அவர் பங்களாவுக்கு போறேன். பார்த்தா அங்கே உலகம் பூரா இருந்து வந்த மாந்தீரிக சமாச்சாரங்கள், தாயத்து, எந்திரங்கள்தான் நிரம்பிக் கிடந்தது. அப்புறம் எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளீன் ஆஸ்பத்திரி போகும்போது கூட நான் கொடுத்த எந்திரம்தான் கூடப்போச்சு!

rajinijpg
 

தமிழ்நாட்டு முதல்வரா ரஜினி வருவார்னு சொல்றீங்களே! அப்படி உங்க நாடியில எந்த மாதிரி வாசகங்கள் வந்தன?

'அடுத்ததாக செந்தமிழ்நாட்டை ஆளுவோன், ஆன்மிகத்திலே ஒழுகுவோன்; பல மொழி அறியும் நடிகன் ஒருவன்' அப்பிடின்னு நாடியில வருது. இப்ப நாடி போட்டாலும் அதுதான் வரும். பலமொழி அறிந்தவன் என்றால் ரெண்டு பேருதான் இருக்காங்க. யாரு? கமல்ஹாசன், ரஜினிகாந்த். 'அறிவாள்'னு இருந்தால் பொம்பளையச் சொல்லலாம். ஆனா இது, 'பலமொழி அறிவான்'னு இருப்பதாலேயே இவங்களை யூகம் செய்ய முடிகிறது.

அடுத்த வரி, 'மக்களின் இல்லத்தை தன் மனையாகக் கொள்ளுவான்'னு வருது. 'இல்'னா வீடுன்னு அர்த்தம். தவிர, 'உள்ளம்' என்றொரு அர்த்தமும் உண்டு. கமல்ஹாசனை வீடா உள்ளத்தில் நினைக்கிறவங்க அநேகமாக கொஞ்ச பேர்தான். தவிர கமல்ஹாசன், 'கடவுள் இல்லை'னு சொல்றவர். அதனால அடுத்த முதல்வர் ரஜினிதான்னு சொல்ல வேண்டியிருக்கு.

ரஜினிகாந்துக்குள் கெட்ட தேவதைகள் குடிகொண்டு விட்டன என்று ஒரு சாமியார் சொன்னாரே. அதைப் பற்றி உங்க நாடி என்ன சொல்லுது?

நல்லது கெட்டது எதுவுமே அவருக்கு பொருந்தாது. தண்ணீருக்கு சுவையுண்டா? சர்க்கரை போட்டா இனிக்கும். புளியைப் போட்டா புளிக்கும். ஆனா தண்ணியில்லாம வாழ முடியாது. இல்லீங்களா எஜமான். அது மாதிரி சுத்தமான தண்ணீர் அவர். சில பேருக்கு செய்வினை, பில்லி சூன்யம் செய்த பலிக்காது. கெட்ட ஆவிகளும் அண்டாது. அப்படிப்பட்ட தனி ரகம் ரஜினி.

எல்லாம் சரி. வார்த்தைக்கு வார்த்தை எஜமான், எஜமான்னு சொல்றீங்களே! நீங்க எஜமான் படத்தின் ரஜினி ரசிகரோ?

ஐயய்யோ! அப்படியெல்லாம் இல்லீங்கோ. கோயமுத்தூர், காங்கயம், வெள்ளக்கோயில் பகுதி கவுண்டர்கள்ல எஜமான் பரம்பரைன்னு ஒரு பிரிவு இருக்குங்க. அவங்களை எல்லாரும் எஜமான், எஜமான்னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. பேசுவாங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. அதையே எல்லோரையும் கூப்பிட பயன்படுத்தறேன். அவ்வளவுதான்.

அப்போது நான் இந்த நாடி ஜோதிடர் சுப்பிரமணியத்தை பேட்டி கண்டபோது அதற்கு முன்பே வேறு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அப்பேட்டியில், 'ரஜினி முதல்வர் ஆவார்!' என்றும் குறிப்பிட்டிருந்ததோடு, 'பாபா' படத்திலும் சில காட்சிகளுக்கு தான்தான் ஐடியா சொன்னதாகவும் பேசியிருந்தார். அப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி.

'அம்மா இருக்கும்போது இன்னொருவரை முதல்வர் என்று எப்படி சொல்லலாம்!' என்று அதை பார்த்து அதிமுக விஐபிக்கள் போயஸ் கார்டனுக்கு இவரை கொண்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

கார்டனில் என்ன நடந்ததோ? அதற்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கவே மறுத்து வந்தார். அதே சமயம் ரஜினி தரப்பிலும் கூட நாடி ஜோதிடர் கண்டிக்கப்பட்டதாக கேள்வி. அந்த சமயத்தில்தான் எனக்கு இந்த ஜோதிடரை பேட்டி எடுக்கும் பணி என் அலுவலகத்தில் தரப்பட்டது. அதற்காக நான் இவரை சென்று சந்தித்தேன். பேட்டி கொடுக்கவே மறுத்தார். 'எஜமானரே, ஏற்கெனவே நான் பேட்டி கொடுத்து பல சிக்கலில் சிக்கிக் கொண்டேன் விட்டு விடுங்களேன்!' என்றும் கேட்டுக் கொண்டார். என்றாலும் நான் விடாப்பிடியாக அவரை 'கன்வின்ஸ்' செய்தேன்.

அதில் 'ரஜினியை முதல்வர் ஆவார் என்பதை போடும்போது, அம்மா பிரதமர் ஆவார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் சிக்கல் வந்து விடும்' என்றும் சொன்னார். அந்தப் பேட்டிக் கட்டுரையின் சுவாரஸ்யம் கருதி அவர் சொன்ன விஷயத்தையும் சேர்த்தே எழுதினேன்.

வேடிக்கை என்னவென்றால், பேட்டி கொடுக்கும்போது எண்ணி நாலே வருஷத்தில் ரஜினி முதல்வர் என்றும், அம்மா பிரதமர் என்றும் சொன்னார். ஆனால் இன்றைக்கு அவர் பேட்டி கொடுத்து பதினாறு வருடங்கள் ஆகி விட்டன. பிரதமர் ஆகாமலே ஜெயலலிதா இறந்து விட்டார். ரஜினியோ இப்போதுதான் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 31 -ஆதி அந்தமுமாகி நிற்கும் காவிரி

 

 
rajinikanth%20book

ஜோதிடர்களின் ஆருடம், ஜாதக பலாபலன் கணிப்பு ஆனாலும், சாமியார்கள் அருள்வாக்கு, நாடி வாக்கு என்றாலும், அதில் கலந்து வரும் சுவாரஸ்யங்கள், ஜோடனைகள், புனைவுகள், அரசியல் ரசபாச விமர்சனங்கள் எல்லாவற்றுக்குள்ளும் மக்களுக்கான ஈர்ப்பு கலந்திருக்கிறது.

அதுவே தாங்கள் அன்றாடம் தரிசித்து, ஆகர்ஷித்து, போஷிக்கும் பிம்பம் பற்றியதானதாக இருக்கும் போது மிகுந்த உற்சாகமும், அதீத தீவிர மயக்கமும் கொள்கிறார்கள். மகுடிக்கு பாம்பு கட்டுப்படுவதில் அறிவியல் உண்மை இருக்கிறதோ இல்லையோ, இந்த மாய அலைவரிசையில் கிரக்கமும், போதையும் ஒரு சேரவே இருக்கிறது. அதில் உள்ளூர் வர்த்தகம் முதல் உலக வர்த்தகம் வரை கலந்தும் இருக்கிறது.

 

அதனால் அது முழு அளவிலான அரசியலுக்கும் பயன்பட்டு பதவி நாற்காலிகளை தீர்மானிக்கிறது. ஒன்றைப் பற்றி ஒன்றே ஒன்று பேசினால் அது அதற்கு மட்டுமேயானதாக உள்ளது. அதுவே ஒன்றை/ஒருவரை பற்றி ஒரு கோடி பேர் பேசினால் அது எல்லாமுமாகிறது. அதற்கான பிரபல்யமும், விளம்பரமும் கூட புதிதாக வரும் ஒன்றுக்கு/ஒருவருக்கு அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை.

அதற்காக எத்தனையோ அரசியல்வாதிகள் தங்களைத் தாங்களே 'டிக்ளேர்' செய்து கொண்டு காத்துக் கிடக்க, 'முதலமைச்சராகிய நான்..!' என்று பதவி பிரமாணம் எடுப்பது போல் கட்-அவுட், பேனர்களை வரிசையாக தங்களுக்கு தாங்களே கட்டியபடி கட்டியம் கூறிக் கொண்டிருக்க, அவர்களுக்கெல்லாம் கிடைக்காத அந்த அரசியல் அந்தஸ்து/ கற்பனா வடிவிலான அந்த ஜோதிட அந்தஸ்து/ மீடியாக்களின் அளவு கடந்த வெளிச்சம், 'அரசியலுக்கு வரவே மாட்டேன்; அது காலத்தின் கையில் இருக்கு!' என்று பிடிவாதம் பிடித்தே வந்த ரஜினி என்ற நடிகருக்கு மட்டுமே அபரிமிதமாய் கிடைத்திருக்கிறது. இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி அரசியல் என்று ஒற்றை வார்த்தையை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போட்டால் கூட, அது கொஞ்சம் தன்னெழுச்சியாக புறப்பட்டால் போதும் பதறியெழுகிறது ஒரு பெரும் கூட்டம். அந்தக் கூட்ட வெளியில் எல்லாம் காத்திருப்பின் அடையாளமும், காத்திருத்தலை அர்த்தமில்லாது ஆக்கி விடுமோ இந்த வருகை அதி தீவிர பய உணர்ச்சியையுமே அளவிட முடிகிறது. அது கூட அந்த ஒற்றை சொல்லுக்குரிய மனிதருக்கான பிரபல்யத்தையும், தன்னிகரில்லாத எழுச்சியையும் தந்து விடுகிறது.

'ரஜினிக்குள் கெட்ட தேவதைகள் புகுந்து விட்டன!' என்று 'கோட்- சூட்' சித்தரும், 'பாபா முதல்வர் ஆகியே தீருவார்!' என்ற நாடி ஜோதிடரின் வாக்கும், 'மக்கள் அத்தனை பேரும் தங்கள் அவல நிலையுணர்ந்து ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென கூவி அழைக்கும்போது அவரை நானே அனுப்பி வைப்பேன்!' எனச் சொன்ன ரஜினியின் ஆன்மிக குரு சுவாமி சச்சிதானந்த மகராஜின் கூற்றுக்கெல்லாம் உயிர் சக்தி இருக்கிறதோ இல்லையோ அடுத்த சில மாதங்களிலேயே காவிரி விவகாரத்தின் மூலம் திரும்ப தமிழகத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியலுக்கு வருகிறார் ரஜினி.

கர்நாடகா அரசு அங்கே அணைகள் கட்டி தனக்கே தனக்கு என தண்ணீரை தேக்கி விட்டு, தமிழகத்தை கழிமுகப் பிரதேசமாக ஆக்கியதென்பது இந்த ஜனநாயகத்தின் சாபகேடாகிப் போன நிலையில் தமிழகம் தன்னுரிமைக்காக எத்தனையோ போராட்டங்களை சந்தித்திருக்கிறது. ஆனால் ரஜினி என்ற நடிகனை முன்னிலைப்படுத்தி தமிழன் தன் வியர்வைத் துளிகளால் சம்பாதித்த தங்கக் காசுகளை அந்த ரஜினி சக்தியை நோக்கியே விட்டெறிய ஆரம்பித்த பின்பு நிலைமையே வேறு திக்கில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டது.

ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒரு கட்சியின் வார்டு செயலாளராக இருந்ததில்லை. கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகள் அனுபவித்ததில்லை. ஆனால் பெங்களூரு மண்ணிலிருந்து ரயிலேறி வந்ததனால் தமிழகத்திற்கு முறைப்படி வர வேண்டிய காவிரி தண்ணீரை அவரே தடுத்தாட் கொண்டு விட்டது போல் முழங்குகின்றன சில அரசியல் எதிர் வளையங்கள். அந்த கண்ணுக்குத் தெரியாத இறுக்கமான வளையத்தின் கடுமையான இறுக்கமென்பது 2002 அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே சுனாமியாய் தமிழகத்தில் சுழன்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கபினியில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிடப்படாமல் இருக்க, தஞ்சையில் நெற்பயிர்கள் துளிர்த்த வேகத்தில் கருக, புறப்பட்டது கிளர்ச்சி. மத்தியில் பாஜக ஆட்சி. மாநிலத்திலோ அதிமுக அரசு. தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பலவும் கர்நாடகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இந்த நேரத்தில் அதிமுக-திமுக அரசியலுக்கு பகடைக்காயாய் பயன்பட்டது தமிழ்த் திரையுலகு.

rajini1
 

காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்திற்கு பதிலடியாக தமிழகத்தின் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தரக்கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் ஆரம்பித்தனர் தமிழ்த் திரையுலக கலைஞர்கள், தொழிலாளர்கள். இதற்காக 2002 அக்டோபர் 12-ம்தேதி நெய்வேலி நோக்கி மாபெரும் பேரணி செல்வது மத்திய அரசின் நிறுவனமான அனல்மின் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்துவதுதான் திட்டம்.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான கலையுலக காவிரி போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்ட இப்போராட்டத்தை , நெய்வேலியில் வேண்டாம்; சென்னையில் நடத்தலாம். அதற்கு முன்பாக இது விஷயத்தில் பிரதமரை சந்தித்து பேசலாம். அவரிடம் கோரிக்கை கொடுக்கலாம் என்றெல்லாம் ரஜினிகாந்த் யோசனை தெரிவித்தததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை நிராகரித்து விட்ட போராட்டக்குழு பேரணி, ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டது. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிராஜா, 'போராட்டத்துக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி போராடுவோம்!' எனவும் ஆவேசமாக பேசியிருந்தார்.

அந்தக் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர் நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தகவல் வெளியானது.இதற்குள் எந்த மாதிரியான அரசியல் ரகசியங்கள் இருந்ததோ, மீடியாக்கள் விதவிதமாய் செய்திகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்து விட்டன. அதிலும் ரஜினிகாந்த் கன்னடர், பெங்களூருவில் சொத்து வாங்கிக் குவித்திருப்பவர். கர்நாடகாகவிற்கு எதிராக எந்தப் போராட்டமும் செய்ய மாட்டார். தமிழர்களுக்கு எதிர்நிலை எடுக்கிறார் என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதன் பின்னணியில் வெடித்த அரசியல் சாதாரணமானதல்ல. கோபம், குதர்க்கம், பணிவு, தன்னடக்கம், வெகுளி, ஆத்திரம், ஆசை, சூழ்ச்சி, சந்தேகம், சபலம் என மனித குணத்தில் எத்தனை உணர்ச்சிகள் உண்டோ அத்தனையும் அரங்கேற்றம் கண்டது. அந்தக் காலகட்டத்தில் அத்தனை தினசரிகளும், பருவ இதழ்களும், மீடியாக்களும் இந்த செய்திகளைத்தான் பக்கம் பக்கமாக தாங்கி வந்தன. இதனுள்ளும் ஆதி அந்தமான பொருளாக ரஜினி என்கிற நடிகரே நிறைந்திருந்தார்.

இந்தப் போராட்டத்தை நடத்த நடிகர் சங்கம் உள்ளிட்ட 8 அமைப்புகள் திட்டமிட்டு அதற்கான கள வேலைகளில் இறங்கியிருந்தபோதே பல்வேறு கருத்துகள் தெரிவித்தார் ரஜினிகாந்த். இவர்களின் போராட்டத்திற்கு எதிர்வினையாக டெல்லி புறப்பட்டு போனார். அங்கே பிரதமர் வாஜ்பாயை சந்தித்து காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை வைக்க முயற்சி செய்தார். அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. வாஜ்பாய் வெளிநாடு சென்று விட்டார் என்ற தகவல் கிடைக்க, இவர் ரிஷிகேஷ் சென்றுவிட்டார்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் நெய்வேலி போராட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி. அப்போது வெளியிட்ட அறிக்கை ரஜினிகாந்தின் கருத்தையே வலியுறுத்துவதாக இருந்தது.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 32 -என்னை எங்கே போகச் சொல்றீங்க?

 

 

 

rajini1jpg

ரஜினி | கோப்புப் படம்: ம.பிரபு.

வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு இவற்றில், எதுவாயினும், அது தமது உணர்வை எழுச்சியுடனும், அறவழியில் அமைதியாகவும், அறிவிக்கக்கூடிய ஒரு வழிமுறையாகவும் இருக்க வேண்டுமே தவிர வன்முறைக்கு இடம் தரும் வகையில் நிச்சயமாக நடந்து கொள்ளக்கூடாது. முதல்வரின் வாழ்த்து பெற்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் 12-ம்தேதி அறிவிக்கப்பட்டுள்ள பேரணி, தமிழக கலைஞர்களின் உணர்வு அடிப்படையிலான எதிர்ப்பை கர்நாடக அரசுக்கு தெரிவிக்கின்ற வகையிலே அமையும் என்று எண்ணித்தான் அதில் கலந்து கொள்ளுமாறு கழக கலைஞர்களுக்கும் தெரிவித்து இருந்தேன்.

ஆனால் அந்தப் பேரணி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெறுகிற பேரணி அல்ல என்றும், நெய்வேலி 2-வது மின்சார உற்பத்தி நிலையத்தில் தடையை மீறி நடத்தப்பட இருக்கும் கிளர்ச்சி என்றும், எத்தனை மணிக்கு தடையை மீறி உள்ளே நுழைந்து அந்த இடத்துக்கு செல்வோம் என்பதை முன்கூட்டி சொல்ல முடியாதென்றும், அது ரகசியமானதாக இருக்கும் என்றும் பாரதிராஜா பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

 

பெரியார் காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எந்த போராட்டமாயினும் அது ஆர்ப்பாட்டம் என்றில்லாமல் தடையை மீறி மறியல் செய்து கைதாகிற போராட்டமாகவே இருந்தாலும் எந்த இடத்தில், எந்த தேதியில், எந்த நேரம், எத்தனை மணிக்கு என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு ஈடுபடுவதுதான் வாடிக்கை. அதற்கெல்லாம் நேர்மாறாக திரைப்படக் கலைஞர்கள் தடையை மீறுவோம் என்றும், அதையும் முன்கூட்டி எத்தனை மணிக்கு என்று சொல்ல முடியாது என்று அறிவித்து இருப்பதை பார்க்கும்போது இது எங்கே கொண்டு போய் விட்டு விடுமோ என்று அஞ்சிட வேண்டி உள்ளது.

முன்கூட்டி அறிவித்து, அமைதியாக நடக்கிற அற வழிப்போராட்டங்களில் கூட ஏதோ காரணங்களால் அமளியும், வன்முறையும் உருவாகக்கூடிய விளைவுகள் ஏற்பட்டு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே இவ்வாறு முன்கூட்டியே வன்முறையை வரவேற்பது போல திட்டமிட்டு தடையை மீறுவோம் என அறிவித்து அதில் திரைப்பட கலைஞர்களை ஈடுபடுத்தும் இந்த போராட்டத்தில் கழக கலைஞர்களுக்கும், கழகத்தினரும் கலந்து கொள்ள வேண்டாம். ஒரு வேளை அறவழியில் நடிகர் முறைப்படி நடிகர் சங்கமே ஈடுபட்டு முன்னின்று பொறுப்பேற்று, பேரணியோ, அமைதி ஆர்ப்பாட்டமோ நடத்தினால் அதில் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்பதே கருணாநிதி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை.

அந்த அறிக்கை வெளியான தினத்தன்று இரவே திடீரென்று (அக்டோபர் 8, 2002) இரவு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதே வேகத்தில் அடுத்த நாள் மதியம் தனது வீட்டில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அன்று சரியாக 12.30 மணிக்கு தன் வீட்டு மாடியிலிருந்து இறங்கி வந்த அவர் நீலநிற ஜீன்ஸ் பேண்ட்டும், காவி நிற டீ சர்ட்டும் அணிந்திருந்தார். மொட்டையடிக்கப்பட்ட தலையில் லேசாக முடி வளர்ந்த நிலையில் காணப்பட்டார். 'நான் விடுத்த அறிக்கையில் நான் இந்தியன், அப்புறம் தமிழன் என சொல்லியிருந்தேன். அதில் எந்தத் தப்பும் இல்லை. எனக்காக குரல் கொடுத்தவர், திமுக தலைவர் மு.கருணாநிதி. அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை ரொம்ப பெரிசாக்கிட்டாங்க சிலர். என் மேல் உள்ள பொறாமையினாலலும் சிலர் என் மேல் உள்ள ஏதோ ஒரு பயத்தினாலும் இதை பெரிசாக்கிட்டாங்க. இந்த சமயத்தில் நான் அதை மேலேயும் பெரிசாக்க விரும்பலை. யார் இதை அரசியல் ஆக்கிட்டிருக்காங்களோ, யார் அரசியல் வேலை பண்ணிட்டு இருக்காங்களோ அவங்களை நான் வர்ற எலக்ஷன்ல பார்த்துக்கறேன். என் ரசிகர்கள் தயவு செய்து பொறுமையாக இருக்கணும். சாந்தமாக இருக்கணும். இது, நமக்கு சோதனைக் காலம். இதை சந்திப்போம்.

காவிரி பிரச்சினையில் நான் ஓர் அறிக்கை விட்டேன். இந்தப் பிரச்சினை தொடங்கியதும் நான் உங்களுக்கு ஆதரவு கொடுத்தேன். அதற்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்றுதானே? இது சம்பந்தமா திரைப்படத்துறை சேர்ந்தவங்க என்னிடம் வந்து கேட்பாங்க. கலந்து ஆலோசிப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். யாரும் வரலை. நான் என்ன நியூயார்க்ல இருந்தேனா? சீனாவுக்கு போயிட்டேனா? இல்லை ரஷ்யாவிற்கு போயிட்டேனா? நான் உங்கள் நண்பன்தானே? எதிரியா? உங்களிடம் நான் அதை எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் வரலை.

01chkanRajini

ரஜினிகாந்துடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா |கோப்புப் படம்.

 

இவ்வளவுக்கு பின்னாலயும் நடிகர் சங்கத்துக்கு வந்து நான் என் கருத்தை தெரிவிச்சேன். சிலர் நாகரிகமாகப் பேசினார்கள். இன்னும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். பரவாயில்லை. என் கருத்தை நான் நடிகர் சங்கத்தில் சொன்னேன். அங்கே பத்து பேரில் எட்டு பேர் நெய்வேலி போக வேண்டாம் என்ற கருத்தைத்தான் சொன்னாங்க. அப்புறம் நீங்களே முடிவு செஞ்சுக்குங்கன்னு விட்டுட்டேன். வந்துட்டேன். அப்புறம் நான் டெல்லி போய் பிரதமரை பார்க்க முயற்சி செஞ்சேன். முடியலை. பாபாஜி குகைக்கு போயிட்டு வந்துட்டேன்.

காவிரி பிரச்சனையை பிரதமரால் தீர்க்க முடியலை. இரண்டு மாநில முதல்வர்கள் தீர்க்க முடியாம திண்டாடறாங்க. அவங்களால தீர்க்க முடியாததை சினிமா உலகம் தீர்க்க முடியுமா? முடியாது. கர்நாடக திரைத்துறையினர் போராட்டம் நடத்தினாங்க. ஊர்வலமாக போய் மனு கொடுத்தாங்க. அவுங்க போராட்டம் நடத்தினாங்க. அதுக்காக நாமும் போராட்டம் நடத்தித்தான் ஆகணும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாறும் மறுக்கக்கூடாது.

நீதிமன்றம்தான் இந்த நாட்டை காப்பாற்றுகிறது. சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடகாவில் தண்ணீர் விட மாட்டேன்னு சொல்றாங்க. நாம் தண்ணீர் விடணும்னு கேட்டுப் போராடுவோம். வர்ற 13-ம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது. இந்தப் போராட்டத்தை சென்னையில் வைத்துக் கொள்ளலாம். ஊர்வலம் நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்கலாம். கவர்னர் யாரு? மத்திய அரசின் பிரதிநிதி. அதன் மூலமாக மத்திய அரசின் கவனத்தைத் திருப்பலாம்.

இந்தப் போராட்டத்திற்கு நான் வருகிறேன். அதற்கு நானே தலைமை தாங்குகிறேன். இப்படிப் போராட்டம் நடத்தினால், மத்திய அரசுக்குத் தெரியாதா? நெய்வேலிக்குத்தான் போகணும் என்கிறார்கள். அத்தனை பேரை வைத்துக் கொண்டு அங்கே போ், மின்சாரத்தை நிறுத்துன்னா நிறுத்திடுவாங்களா? அது மத்திய அரசு நிறுவனம். அப்படி அவங்க நிறுத்தலைன்னா உடைச்சிடுவீங்களா? அடிச்சு துவம்சம் செஞ்சிடுவீங்களா? 40 லட்சம் தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்றாங்க. இங்கே மின்சாரத்தை நிறுத்தினால், அவங்க நிலைமை என்ன ஆகும்?

அவங்க உயிருக்கும், பொருளுக்கும் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? கொடுங்க... கொடுங்க. கர்நாடகத்தை சேர்ந்த தமிழர்கள் எத்தனை பேர் என்கிட்ட போன் பண்ணி அழறாங்க தெரியுமா? நான் எதற்கும், யாருக்காகவும் பயப்பட மாட்டேன். மனசாட்சிக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே பயப்படறவன்.

27 வருஷங்களாக சம்பாதித்த பேரும், புகழும் அந்த ஒரு படத்தில் போயிடுச்சுன்னா அந்தப் பெயரும் புகழும் எனக்கு தேவையே இல்லை. நியாயமாக கொடுத்த ஒரு அறிக்கையினால் 27 வருட பெயரும் புகழும் போயிடுச்சுன்னா அநு்த பெயரும் புகழும் தேவையில்லை. ஆமாம் எனக்கு அந்த 27 வருட பேர் புகழ் போனாலும் கவலையில்லை.

என்னை எங்கே போகச் சொல்றீங்க? கர்நாடகத்துக்கா? கர்நாடகத்துக்கு போனா நீ தமிழன்கிறாங்க. இதுவும் வேண்டாம்; அதுவும் வேண்டாம் மகாரஷ்டிராவுக்கு போனல் நீ மதராஸிங்கிறாங்க. நான் எங்கேதான் போறது? நான் என்ன தப்பு செஞ்சேன்? என்ன விளையாடறீங்களா? அப்பாவி மக்களை, பொதுமக்களை, மாணவர்களை திசை திருப்பாதீங்க. எனக்கு நெய்வேலி போக பயமே கிடையாது. ஆண்டவன் இருக்கான். ஆனால் ஒண்ணு. நீங்க முடிவு எடுங்க. இங்கேயா? அங்கேயா?

அதே 12-ம் தேதி நான் நடிகர் சங்கத்துல, அல்லது பிலிம் சேம்பர் அல்லது வள்ளுவர் கோட்டத்தில் அமைதியாக உண்ணாவிரதம் இருக்கப் போறேன். சம்மதம் சொல்றவங்க என்னோட வாங்க என்று சரமாரியாக உணர்வு பொங்கியவரிடம் நிருபர்களில் ஒருவர், 'உங்கள் முடிவை நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்திடம் சொல்லீட்டீங்களா?' எனக் கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டேன் என்று பதில் அளித்திருந்தார்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 33 - ‘தமிழருக்கு உப்புத் துரோகமா?’

rajini

ரஜினி | கோப்புப் படம்.

இந்த விவகாரம் வெடித்து, இதற்காக பேட்டி கொடுத்த போது ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டனில் உள்ள வீட்டிலிருந்து, அபிராமபுரம் போட் கிளப் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் பேட்டி கொடுத்த அன்று காவிரி பிரச்சினைக்காக பொது வேலை நிறுத்தம் நடந்தது. அதையொட்டி ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கடுமையாக போடப்பட்டிருந்தது. இதே பரபரப்பான சூழ்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஓர் நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்ட 12-ம்தேதி நெய்வேலியில் நடைபெற உள்ள தமிழ் திரை உலகினரின் பேரணி குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தென்னிந்திய நடிகர் சங்கம் உள்பட தமிழ்த்திரை உலகின் அனைத்து பிரிவுகளையும் சார்ந்த பிரதிநிதிகள் என் தலைமையில் சந்தித்தனர்.

 

இந்த சந்திப்பின்போது இந்தப் பேரணி அமைதியாகவும், இதில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான திரைப்படத்துறையினருக்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் முதல்வர் அனைவரின் முன்னிலையிலேயே உள்துளை செயலாளர் டிஜிபி சம்பந்தப்பட்ட விழுப்புரம் பகுதி டிஜிபி மற்றும் கடலூர் எஸ்.பி ஆகியோருக்கு விரிவான உத்தரவுகளை பிறப்பித்தார். பேரணியின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து நாங்கள் கேட்பதற்கு முன்னரே முதல்வர் அது குறித்து விரிவான, தெளிவான உத்தரவுகளை பிறப்பித்தார்.

குறிப்பாக நூற்றுக்கணக்கான பேருந்துகளில் சென்னையிலிருந்து தமிழ்த் திரைப்படத்துறையினர் சென்னையிலிருந்து செல்லும்போது பேருந்துகளுடன் காவல்துறை வாகனங்களும் பாதுகாப்பிற்கு உடன் செல்லவேண்டும் என்றும் கட்டளையிட்டார். சென்னையிலிருந்து நெய்வேலி வரை இடையிலுள்ள முக்கிய ஊர்களில் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடி அதன் மூலம் ஏதும் அசம்பாவித நிகழ்ச்சிகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அத்தகைய ஊர்களில் ஒழுங்குபடுத்தவும், காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவும் கட்டளையிட்டார். மேலும் திரைப்பட நடிகைகள் அதிக அளவில் இதில் பங்கேற்க இருப்பதால், அதிக எண்ணிக்கையில் பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தவும் ஆணை பிறப்பித்தார்.

ஒவ்வொரு பேருந்திலும், காவல்துறையினர் உடன் பயணம் செய்து பாதுகாப்பு அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதேபோல் நெய்வேலியை அடைந்த பிறகு அங்கு திரைப்படத்துறையினர் தங்குகிற விடுதிகள், ஊர்வலம் செல்லும் பாதை, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்து இடங்களிலும் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாவட்டம் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு விரிவான ஆலோசனைகளையும், ஆணைகளையும் பிறப்பித்தார்.

இப்படி முதல்வரே பாதுகாப்பு குறித்த அம்சங்களில் இந்த அளவு உன்னிப்பாகவும், அக்கறையாகவும் ஏற்பாடுகள் செய்துள்ளார் என்பது எங்கள் பாதுகாப்பில் அவர் கொண்டுள்ள அக்கறையையும், ஈடுபாட்டையும் தெளிவாக உணர்த்துகிறது. இதற்கும் மேலாக பேரணி நடைபெறவுள்ள பாதையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கச் சொல்லியும், பாதையின் இருபுறங்களிலும் நடைமேடை அமைத்து ஆங்காங்கே காவல்துறையினரின் வீடியோகிராபர்களை அமர்த்தி பேரணியினை வீடியோ வாயிலாக படம் பிடித்து கண்காணிக்கவும் கூடுதலான உத்தரவாதமான, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகப் பெருமக்களும் பங்கேற்பதால், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் கூட அன்று நெய்வேலியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கும்போது, பேரணியில் அசம்பாவிதமோ, வன்முறையோ நிகழும் என்று அச்சப்படுவதற்கு அவசியமே இல்லை.

தமிழ்த் திரைப்படத்துறையின் எல்லாப் பிரச்சனைகளையும் சார்ந்த மிகப்பெரிய குழுவில் கே.பாலசந்தர், அபிராமி ராமநாதன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர், கமல்ஹாசன், திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை, கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், மனோரமா, தொழிலாளர் அமைப்பான பெப்சியில் தலைவர்கள் சத்யராஜ், பிரபு, வடிவேலு போன்ற பல்வேறு திரைப்படப் பிரிவு சங்ககங்களின் தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்தபோது அவர்கள் முன்னிலையிலேயே முதல்வர் பிறப்பித்த உ த்தரவுகளுக்கு உறுதிமொழிகளும், கலைத்துறையினரின் பேரில் அவருக்குள்ள பாசத்தையும் பரிவையும் உணர்த்துவதாகவே அமைந்தன.

தமிழ் திரைப்பட உலகில் நடத்தவிருக்கின்ற இந்த பேரணியில் அரசியல் மதமாச்சர்யங்கள் ஏதும் கலந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருகிறோம். அந்த வகையில் நெய்வேலியில் பேரணிக்காக முதல்வரை நாங்கள் சந்திப்பது என முடிவு செய்த நிலையிலேயே திமுக தலைவர் கருணாநிதி தானாக தமது கட்சியின் ஆதரவை தெரிவித்துவிட்டு, தற்போது அதை புறக்கணிக்க வேறு காரணங்களை அடுக்கி உள்ளார். அது ஏன் என எங்களுக்கு தெரியவில்லை.

02chrgnrajini%20sathyanarayana%20rao

அண்ணன் சத்தியநாராயண ராவுடன் ரஜினி

 

காவிரி பிரச்சினையில் பொதுவான உணர்வோடும், பரந்த மனப்பான்மையோடும், அரசியல் கலப்பு ஏதுமின்றி, தனிப்பட்ட அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் திரையுலகினர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றுதான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஆனால் காவிரிப் பிரச்சனையை மையமாக வைத்து, தமிழ்த்திரை உலகத்தினரிடையே சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது வருத்தத்திற்குரியது. திரும்பவும் சொல்கிறோம். நாம் நமது மக்களுக்கு, தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். யாரும் உப்புத் துரோகம் செய்யவோ, அதற்கு தூண்டவோ, துணை நிற்கவோ வேண்டாம். உருவாகி உள்ள தமிழ்த்திரை உலகின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை யார் செய்தாலும் தமிழுக்கும், தமிழ் கலை உலகிற்கும் செய்கிற துரோகமாக எதிர்கால வரலாறு அவர்களை பழி சொல்லும்!

இப்படி அறிக்கை வெளியிட்ட நாளன்றே நிருபர்களுக்கு உணர்ச்சி பொங்க பேட்டியும் அளித்திருந்தார் பாரதிராஜா. அந்த அறிக்கையில் அவர் ரஜினியை பெயர் சொல்லாமல் சுத்தமாக விடுபடுத்தியிருக்க நிருபர்கள் பெரும்பான்மை கேள்வியாக அவரையே முன் வைத்தனர்.

‘நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன். அதே நாளில் (12-ம்தேதி) சென்னையில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறாரே?’ எனக் கேள்வி.

‘தனிப்பட்ட ஒருவர் சொல்லும் கருத்துக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. நெய்வேலியில் போராட்டம் என்பது எட்டு அமைப்புகள் சேர்ந்து எடுத்த முடிவு. ஆகவே நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த், பொதுச்செயலாளர் சரத்குமார் ஆகியோர் எங்களிடம் வந்து நாங்கள் நெய்வேலி போராட்டத்தில் பங்கெடுக்க மாட்டோம் என்று சொல்லட்டும். அவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன்!’

’12-ம்தேதி சென்னையில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருப்பதால் நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா?’ என பிறிதொரு நிருபரின் கேள்வி.

‘நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி நிச்சயமாக நடந்தே தீரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது பேரலை. இந்த பேரலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த போராட்டத்தில் திரைப்பட கலைஞர்கள் மட்டுமல்லாமல் திரை உலகைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், அரசியல் கலப்பு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் இதில் கலந்து கொள்கின்றன. தஞ்சையில் வாடும் விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்த தமிழகமே எழுந்து குரல் கொடுக்கும்!’

‘உங்கள் தலைமையில் நடக்கும் போராட்டத்தை உடைக்கத்தான் ரஜினிகாந்த் தனிப் போராட்டத்தை அறிவித்து இருக்கிறாரா?’

‘ஹேஸ்யங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!’

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 34- திரையுலகின் பிளவுப் பின்னணியில்...

 

 
20rajinijpg

'2.0' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது | படம்: '2.0' படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து..

தமிழ்த் திரையுலக போராட்டத்தில் இப்படியொரு பிளவு ஏற்படுவதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறதே?

அரசியல் சாயம் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழனின் நிலைப்பாட்டை உலகம் முழுவதுக்கும் எடுத்துக் காட்டவே நெய்வேலியில் இருந்து மின்சாரம் தரக்கூடாது என்று நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்!

 

இந்தப் பிரச்சினையில் அரசியல் ரீதியாக யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களை அடுத்த தேர்தலில் சந்திப்பேன் என்றிருக்கிறாரே ரஜினிகாந்த்?

இதை நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். இதைப் பற்றி தகவல் எதுவும் எனக்கு இல்லை. நம்மைப் பொறுத்தவரையில் காவிரியில் தண்ணீர் வேண்டும் என்றுதான் கர்நாடகத்திடம் கேட்கிறோம். ரத்தம் வேண்டும் என்று கேட்கவில்லை. சாத்வீக முறையில், அமைதியான வழியில் போராட்டம் நடந்தே தீரும். இந்தப் போராட்டத்தின் உணர்வு பற்றி தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்!

நெய்வேலி போராட்டத்தில் திமுக நடிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

நான்கு நாட்களுக்கு முன்பு திரையுலக போராட்டத்தை திமுக ஆதரிக்கும் என்று கருணாநிதி கூறியிருந்தார். இதில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது!.

பாரதிராஜா இப்படி பேட்டிகள், அறிக்கைகள் கொடுத்த நேரத்தில் விஜயகாந்த்தும் தன் தரப்புக்கு 'யார் வந்தாலும் வராவிட்டாலும் நெய்வேலி பேரணி போராட்டம் நடந்தே தீரும்!' என்று தன் அரசியல் அதிர்வேட்டுகளை வீசியிருந்தார்.

தமிழ் திரை உலகின் காவிரி போராட்டக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடிகர் சங்கத்தில் உள்ள சங்கரதாஸ் சாமி கலையரங்கில் 9.10.2002 அன்று மாலை நடந்தது. இதில் இரவு 8 மணிக்கு வந்து கலந்து கொண்டார் விஜயகாந்த். பாரதிராஜாவுடன் தனியாக சற்றுநேரம் ஆலோசித்த அவர் பிறகு நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

‘நெய்வேலியில் திட்டமிட்டபடி தமிழ்த் திரையுலகினரின் பேரணி நடந்தே தீரும். இதில் மாற்றுக் கருத்தே ககிடையாது. எல்லா கலைஞர்களும் அதில் கலந்து கொள்வார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் நெய்வேலி பேரணி நடக்கும். வெளியூர்களில் இருக்கும் நடிகர்-நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது விவசாயிகளின் பிரச்சினை. விவசாயிகளின் பிரச்சினைக்காக நாம் அரசுக்கு துணை நிற்பது அவசியம்.

'நாம் இந்தப் பேரணியை நடத்தாவிட்டால் உணர்வு இல்லாதவர்கள் என்று நினைத்துவிடுவார்கள். நமக்கு இருக்கும் ஒற்றுமையைப் பேரணியில் காட்ட வேண்டும். கர்நாடக மக்களை அங்குள்ள அரசியல்வாதிகள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விடுகிறார்கள். தமிழர்களை எதிரிகளைப் போல சித்திரிக்கிறார்கள். கர்நாடக மக்கள் அதற்கு துணை போகக்கூடாது. பேரணியை எப்படி வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது என்பதுதான் நமது சிந்தனை' என்றெல்லாம் பேசியவரிடம் நிருபர்கள் சில கேள்விகள் கேட்டனர். அதிலும் ரஜினியின் பெயரே அதிகமாக மிதந்து வந்தது.

உங்களில் ரஜினிகாந்த் பேரணியில் கலந்து கொள்ளாமல் தனியாக உண்ணாவிரதம் இருக்கிறாரே?

அது அவரது தனிப்பட்ட விருப்பம்!

நெய்வேலிக்கு ஊர்வலமாகப் போய் மின்சாரத்தை நிறுத்து என்று சொன்னால் நிறுத்தி விடுவார்களா? காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுவிடுவார்களா? என்று ரஜினிகாந்த் கேட்டிருக்கிறாரே?

அவர் மட்டும் உண்ணாவிரதம் இருந்தால் தண்ணீரை திறந்து விட்டு விடுவார்களா? உண்ணாவிரதம் இருப்பது அவரது தனிப்பட்ட உணர்வு. அதில் நாம் தலையிடக்கூடாது!

ரஜினிகாந்த் உங்களுடன் தொலைபேசியில் பேசினாராமே? என்ன பேசினார்?

‘நெய்வேலி தவிர வேறு இடத்தில் எங்கு போராட்டம் நடத்தினாலும் கலந்து கொள்வேன்னு சொன்னார். ரஜினி எப்போதுமே தனிமையை விரும்புபவர். அதில் தப்பு இல்லை!

ரஜினி தனியாக உண்ணாவிரதம் நடத்துவதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?

நான் வருத்தப்படவில்லை.

நெய்வேலியில் போராட்டம் வேண்டாம் என்று ரஜினி சொன்னபோது நடிகர் சங்கத்தில் பத்தில் எட்டு பேர் ஆதரவு தெரிவித்ததாக கூறியிருக்கிறாரே?

பாதுகாப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தில் அப்படி ஆதரவு தெரிவித்திருப்பார்கள். நான் அவர்கள் மத்தியில் பேசிய பின் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சிலர் தேவையில்லை என்றால் அவர்களை இழுக்கக்கூடாது!.

திமுகவைச் சேர்ந்த சரத்குமார், நெப்போலியன் இருவரும் இந்தக் கூட்டத்துக்கும் வரவில்லையே. பேரணியில் கலந்து கொள்வார்களா?

சரத்குமார், நெப்போலியன் இருவரும் என் இரண்டு கைகள் மாதிரி. அவர்கள் நிச்சயம் பேரணியில் கலந்து கொள்வார்கள். நான் சொன்னால் கேட்பார்கள்!

rajjpg

ரஜினி, கமல், பாரதிராஜா | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.

 

விஜயகாந்த் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் சத்யராஜ், பிரபு, முரளி, அர்ஜூன், பார்த்திபன், மணிவண்ணன், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, தியாகு, வடிவேல், கரண், அப்பாஸ், சின்னி ஜெயந்த், ஸ்ரீமன், உதயா, பாண்டியன், நாசர், மன்சூர் அலிகான், குண்டு கல்யாணம், தாமு, ஜூனியர் பாலையா, நடிகைகள் ரோஜா, மனோரமா, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேநேரத்தில் திமுக கட்சியைச் சேர்ந்த சரத்குமார், நெப்போலியனை பேட்டி காண நிருபர்கள் அலையாய் அலைந்தார்கள். அதில் நெப்போலியன், ‘எங்களுக்கு தலைவர் சொல்லே தாரக மந்திரம். கட்சித்தலைமையில் என்ன உத்தரவு வருகிறதோ, அதற்கேற்பவே பேரணியில் கலந்து கொள்வேன்!’ என்றார். சரத்குமாரிடம் பேச முயன்றால், அவர் தொலைபேசியில் கூட கிடைக்கவில்லை.

அதே சமயம் கமலஹாசனின் நிலை என்ன என்றும் தேடியது மீடியாக்கள். ‘கமலஹாசன் ரஜினிக்கு நெருங்கிய நண்பர். எந்த இடத்திலும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றனர் ஒரு சிலர். வேறு சிலரோ, நெய்வேலிப் பேரணியில்தான் கமல்ஹாசன் கலந்து கொள்வார்!’ என்றனர் பலர்.

இதன் பின்னணியில் தமிழக அரசியல் அரங்கமே சினிமா அரசியல் அரங்கமாக, குறிப்பாக ரஜினியின் காவிரி அரசியலை மையமாக வைத்து சுழல ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்த நாட்களில் வந்த தினசரி, பருவ இதழ் செய்திகள், மீடியா ஒளி,ஒலி பரப்புகள் எல்லாவற்றிலும் ரஜினியா? பாரதிராஜாவா? நெய்வேலி பேரணியா? சென்னை சேப்பாக்க உண்ணாவிரதமா? என சடுகுடு தகவல்கள் இறக்கை கட்ட ஆரம்பித்து விட்டது.

இந்த களேபரங்களுக்கிடையே 12-ம்தேதி என அறிவித்த உண்ணாவிரதத்தை 13-ம் தேதி என்று மாற்றிக் கொண்டார் ரஜினி. அதேபோல் பாரதிராஜா தரப்பு நெய்வேலியில் தடையை மீறி போராட்டம் என்று அறிவித்திருந்ததை ‘தடைமீறல்’ என்பதை மாற்றி சாதாரண போராட்டமாக மாற்றி அறிவித்துக் கொண்டார்கள்.

இந்தச் சூழலில் நெய்வேலி பேரணி ஒரு கலையுலக நட்சத்திர விழா போலவே நடந்தது. சென்னையில் நடிகர் நடிகைகள் புறப்பட்ட இடத்திலிருந்து நெய்வேலி போய் சேர்ற வரைக்கும் ஒரே பாட்டும், நடனமும்தான். அதோடு, யாரெல்லாம் பேரணியில் கலந்து கொள்கிறார்கள். யாரெல்லாம் வரவில்லை என்று தனியாக கணக்கெடுப்பு வேறு நடந்து வந்தது. இங்கே வரும் சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்கள் சென்னை தலைமைக்கு உளவுத்துறை தரப்பில் அனுப்பப்பட்டபடி இருந்தது. இதில் கமல் வரவில்லை என்று பெரிய அளவில் சர்ச்சை கிளம்பியது. உளவுத்துறை போலீஸாரும் சல்லடை போட்டு சலித்த பின்னர் அவரும், நடிகை சிம்ரனும் பின்னர் காரில் வந்து இறங்கியதால் அவர்களையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டனர்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//ரஜினி அரசியல்: -ஜெயிக்கிற குதிரை!//

கமல் அரசியலில் தோக்கின்ற கழுதையா
 

 

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 35- பொங்கிய பாரதிராஜா

 

 
rajinijpg

உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், வடிவேலு, விஜயகுமார் | கோப்புப் படம்.

நிறைய சுவாரஸ்ய சம்பவங்களுடன் நெய்வேலியில் கலையுலகத்தினர் திரண்ட திரளான கூட்டத்தில், 'எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது!' என்று ஆவேசமாகப் பேசினார் பாரதிராஜா.

அவர் அப்போது பேசியதன் சுருக்கம்:

 

தமிழன் என்றால் உணர்ச்சி வசப்படுபவன்தான். உணர்ச்சி வசப்பட்டவன்தான் மனிதன். உணர்ச்சியில்தான் உண்மையும், உறுதியும் இருக்கும். நான் உணர்ச்சி வசப்பட்டுத்தான் பேசுவேன். கடந்த கால் நூற்றாண்டுகளாக தமிழன் இப்படி பயந்து, பயந்துதான் உள்ளனர். தமிழ், தமிழ் என்று பேசிக் கொண்டு இந்த சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டனர். கொஞ்சம் உசுப்பி விட்டால் தமிழன் விண்ணுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நிற்பான் என்பது இப்போது தெரிகிறது. காவிரி நீர் பிரச்சனை இன்று விசுவரூபம் எடுத்துள்ளது. இதற்கு யார் காரணம். கடந்த 70 ஆண்டுகளாக நாம் கண்மூடி இருந்துள்ளோம்.

இந்தக் காலத்தில் பல அணைகளை அங்கே கட்டி விட்டனர். இந்த பைத்தியக்கார தமிழன்தான் ஒரு போகம் விளைவித்த அவர்களுக்கு 3 போகம் விளைவிக்கவே கற்றுத்தந்தான். மத்திய அரசு, காவிரி நீர் ஆணையம், சுப்ரீம் கோர்ட் ஆகியவை கூறியும் கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கே கட்டுப்பட மாட்டேன் என்று கூறும்போது கர்நாடகா என்ன அண்டை மாநிலமா, அண்டை நாடா? என்று சந்தேகமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் ஒன்றுமே இல்லை.

தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லுவது என்ன நியாயம்? நாம் கொஞ்சமும் ஒற்றுமையில்லாமல் உறங்கிக் கிடந்தால் என்ன செய்வது, அவர்கள் போராட்டம் நடத்தலாம். உருவ பொம்மை எரிக்கலாம். இப்போது ஒரு தார்மீகமான பேரணி நடந்துள்ளது. தமிழன் கண்ணியமானவன் என்பதற்கு இந்தப் பேரணியே சாட்சி. இந்த ஊர்வலத்திலோ, வேறு இடங்களிலோ யாராவது உருவ பொம்மையை, படத்தை எரித்துள்ளோமா? நாம் கண்ணியத்தை காத்துள்ளோம். அங்கே தமிழக அமைச்சர்களின் கொடும்பாவிகளை எரிக்கின்றனர். பாரதிராஜாவிற்கு தர்ப்பணம், சத்யராஜூக்கு சடங்கு என்கின்றனர்.

இருந்தும் நாங்கள் அமைதி காக்கிறோம். நாம் கண்ஜாடை காட்டினால் எரிந்து இருக்கும். ஆனால் நாங்கள் அறவழியில், அமைதி வழியில் போராடுபவர்கள், இதைக்கூறக்கூட எனக்கு பயமாக உள்ளது. ஏனென்றால் அறவழி என்றாலே அரிவாள், அமைதி வழி என்றால் தீ என்று யாராவது தயவு செய்து வர்ணம் பூசி விடாதீர்கள். நான் அதிகமாக படிக்கவில்லை. புழுதி மண்ணில் புரண்டு வந்திருப்பதால் நான் இந்த மண்ணைப் படித்தவன். நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்து விடுமா? சென்னையில் போராட்டம் நடத்தக்கூடாதா? எனக் கேட்கின்றனர்.

மின்சாரத்தை தடை செய்வதா நம் நோக்கம். நமது தார்மீக உணர்வை காட்டுவதுதானே நோக்கம். சென்னையில்தான் நூற்றுக்கணக்கான முறை போராட்டம் செய்து பார்த்துவிட்டோமே. எங்கள் மண்ணில், எங்கள் உழைப்பில், வியர்வை சிந்தி தோண்டியெடுத்த நிலக்கரியை கொண்டு இங்கே மின்சாரம் தயாரித்து அங்கே அனுப்பப்படுகிறது. இங்கே நடத்தினால்தான் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று இங்கே போராட்டம் நடத்துகிறோம். அதை தமிழர்களாக நீங்கள் அணி, அணியாக திரண்டு வந்து உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

நம்மை பிரித்தாளுபவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஊர்வலத்திற்குப் போனால் தண்ணீர் வருமா என்று கேட்கிறார்கள். உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர் வந்து விடுமா? நமக்கு கண்டனம். ஆனால் உண்ணாவிரதம் இருப்பாராம். அவருக்கு வாழ்த்தாம். இன்னும் நீ விழித்துக் கொள்ளவில்லை என்றால் உன்னைப் போல, என்னைப் போல மடையன் யாருமில்லை. பிரித்தாளுவதை ஆங்கிலேயன்தான் செய்தான். இங்கே தமிழனை தமிழனே செய்கிறான். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தும் ஒன்றாக பேரணியை நல்ல முறையில் நடத்த உதவிய விஜயகாந்துக்கு நன்றியை கூறுகிறேன்.

கிருஷ்ணா, எங்களை கொளுத்தாதே. கொளுத்துவதை வேடிக்கை பார்க்காதே. நாளைய உண்ணாவிரதத்திற்கு வாழ்த்து கூறுகிறார். உங்களுக்குள் அண்டர் கிரவுண்டில் நிறைய இருக்கலாம். அங்கே 40 லட்சம் தமிழர்கள் உள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்? காட்டி தருகிறாயா? இங்கே கன்னடர்கள் உள்ளனர் என்று விஜயகாந்த் கூறினார். முரளியும், அர்ஜூனும் கன்னடர்கள்தான். ஆனால் தமிழர்களுக்காக இங்கே வந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இந்த பூமியில் நட்ட விதை, இந்த பூமியை உறிஞ்சி வளர்ந்து மரமாகி உள்ளது. நீ இங்கே காற்றை சுவாசிக்கலாம். ஆனாலும் நல்ல கனியை, பூக்களை தர வேண்டும். நிழலாவது தர வேண்டும். முடியாவிட்டால் காய்க்காதே. விஷ விதையை இந்த பூமியில் போடாதே. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. இங்கே உள்ளவர்களுக்கு இங்குள்ள சிரமம் புரிய வேண்டும். குக்கிராமத்தில் உள்ள முனியாண்டியை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தமிழக மக்களின் வாழ்க்கையை தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்கள் தப்புக் கணக்கு போடாதீர்கள். எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்காதீர்கள்.

நான் நெப்போலியனை நடிகராக்கும்போது எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்றா பார்த்தேன். விஜயகாந்த் சங்கத்திற்கு வரும்பாது எந்தக் கட்சி என்றா பார்த்தேன். உங்கள் படத்தைப் பார்ப்பவர்கள் எந்தக் கட்சி என்று பாகுபாடு உணர்ந்தா பார்க்கின்றனர். இங்கே குழப்பம் விளைவிக்காதீர்கள். இந்த மேடையை சுத்தப்படுத்துகங்கள் என்றேன். அதையும் கறையாக்கி விட்டார்கள். நாம் கலைஞர்கள், நீயும் நானும் சகோதரர்கள்.

நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் சில விஷயங்களுக்கு அரசியல் சாயம் பூசி விட்டனர். இத்தனை கலைஞர்களும், மக்களும் இங்கே வந்து கட்டுக் கோப்பாக ஊர்வலம் நடக்க காவல்துறையே காரணம். பாதுகாப்பு தாருங்கள் என்று தமிழக அரசைத்தானே கேட்க முடியும். தமிழக முதல்வரைத்தானே கேட்க முடியும்? தனியார் செக்யூரிட்டியிடமா கேட்க முடியும்? தமிழகத்தில் இரண்டு முதல்வர்களா உள்ளார்கள்? ஊர்வலம் நடத்தும்போது கலைஞர்கள் மீது ஒரு தூசி கூடப் படியக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளை அழைத்து முதல்வர் கூறினார்.

ஆனால் நெய்வேலியில் பிரச்சினை வருமோ என சிலர் கூறினர். எனக்கு குதர்க்கமாக பேசி பழக்கமில்லை. அவர் கூப்பிட்டு அறிவுரை கூறியிருக்கலாம். யார் வேண்டுமானாலும் களங்கப் படுத்தட்டும். நான் சுத்தமானவன். யாரும் என்னை எந்த கட்சியிலும் இழுத்து விட முடியாது. நெய்வேலிக்கு செல்ல எத்தனை பஸ் வேண்டும் என்று கேட்டார். 120 பஸ்கள் வேண்டும் என்று கேட்க சங்கடமாக இருந்தது. இருந்தாலும் கேட்டேன். எனது சொந்த செலவில் 120 பஸ் தாருங்கள் என்று தமிழக முதல்வர் கூறினார். பிறகும் 31 பஸ் கேட்டேன். அதையும் தந்தார்கள். காவிரிப் பிரச்சனைக்காக ஒன்றுபட்டிருக்கும் நம் திரையுலகத்தை மறந்தால் தமிழகம் மன்னிக்காது!’

பாரதிராஜா தலைமையில் நடந்த காவிரிக்கான கலைத்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை ஒருபங்கு என்றால் அடுத்தநாள் சேப்பாக்கத்தில் ரஜினிகாந்த் அமர்ந்து உண்ணாவிரதத்திற்கு வந்த கலை உலகத்தினர் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதை விட அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. கலைத்துறையினரும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டதால் அதில் அதீதமான அரசியலும் உருண்டோடியது.

ரஜினிகாந்த் அறிவித்திருந்தபடி 2002 அக்டோபர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு தன் போட் கிளப் ரோட்டின் வீட்டிலிருந்து கிளம்பினார். அப்போது அவரை பத்திரிகை புகைப்படக்காரர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு உடனே காவிரி நீரை விட வேண்டும் என்று கோரியும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்!' என்ற தகவலை தெரிவித்தார் ரஜினி.

நிருபர்கள் விடாமல், 'உங்களை பாரதிராஜா துரோகி என்பது போல் பேசியிருக்கிறாரே?' என்று கேட்க, 'அவர் உணர்ச்சி வசப்பட்டு அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டார். அது சரியல்ல!' என்று ஒற்றை வரியில் கருத்து தெரிவித்து விட்டு காரில் ஏறினார்.

தொடர்ந்து 8 மணிக்கு உண்ணாவிரதப் பந்தல் மேடையை அடைந்தார். அப்போது அவர் வெள்ளை நிற பைஜாமாவும், குர்தாவும் அணிந்து இருந்தார். சட்டையில் கறுப்பு பேட்ஜூம் குத்தியிருந்தார். மொட்டைத் தலையுடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்பட்டார். உண்ணாவிரதத்திற்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த உண்ணாவிரத மேடையில் விரிக்கப்பட்டு இருந்த மெத்தையில் அமர்ந்து 8.05 மணிக்கு அமர்ந்தவர்தான். யாருடனும் எதுவும் பேசவில்லை.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 36 -சேப்பாக்கத்துக்கு சாய்ந்த கோடம்பாக்கம்

 

 
rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

ரஜினி தன் உண்ணாவிரதத்தை ஆதரித்து மேடைக்கு வந்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அத்தனை திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், இதர விஐபிக்கள் எல்லோருக்கும் பெரிய கும்பிடு மட்டுமே போட்டார். சைகை காட்டி உடன் அமர வைத்தார் ரஜினி. நேரில் வாழ்த்து சொல்ல வர இயலாத முக்கிய பிரமுகர்கள் அன்றே ரஜினிக்கு வாழ்த்துக் கடிதங்கள் தந்திகள் அனுப்பினர். அவை ஆயிரக்கணக்கில் குவிந்தன.

பலர் உண்ணாவிரத மேடையில் இருந்த ரஜினியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

திமுக சார்பில் அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உசேன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள். ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் மஞ்சள் நிற பொன்னாடை மற்றும் ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து வாழ்த்தினார். பரிதி இளம் வழுதி எம்.எல்.ஏ குடும்பத்துடனே வந்து வாழ்த்தினார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தா.கிருட்டிணன் ஆகியோரும் வாழ்த்தினர்.

ஸ்டாலின் வாழ்த்திய போது தன் கையோடு கொண்டு வந்திருந்த திமுக தலைவர் மு.கருணாநிதி கொடுத்து அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தையும் ரஜினியிடம் கொடுத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் ஸ்டாலின் பேசும்போது, 'சேப்பாக்கம் தொகுதி திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதி, எனவே அவரது சார்பில் அவர் கொடுத்து அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை கொடுக்க வந்தேன். கடிதத்தைக் கொடுத்து வாழ்த்தினேன். ரஜினிகாந்த் என்னுடைய நண்பர். எனவே அவரை நேரில் வாழ்த்த வந்தேன். காவிரி பிரச்சினையை அரசியல் ஆக்கவில்லை!' என தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், 'நெய்வேலியில் பாரதிராஜா மேடையில் திமுகவை கடுமையாகத் தாக்கி பேசி உள்ளாரே?' எனக் கேட்டனர். அதற்கு பதில் தெரிவித்த ஸ்டாலின், 'தலைவரிடம் (கருணாநிதியிடம்) விஜயகாந்த் உறுதிமொழி கொடுத்ததனால் பேரணியில் திமுக கலைஞர்கள் கலந்து கொண்டனர். எங்கள் கலைஞர்கள் எப்படி நாகரிகமாக கலந்து கொண்டார்கள் என்பதை எல்லோருமே பார்த்தார்கள். 'அவர்கள்' எப்படி மேடையில் நடந்து கொண்டார்கள் என்பதை இந்த உலகமே பார்த்தது. அப்படிப்பட்ட பாரதிராஜாவை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை!' என்று உணர்ச்சி பொங்கினார்.

திமுகவுக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே அரசியல் ரீதியாக நெருங்கிய நட்பு உள்ளதா என்ற இன்னொரு கேள்விக்கு, 'அரசியல் ரீதியாக அல்ல நட்பு ரீதியாகவும் எப்போதுமே நாங்கள் நெருங்கியே இருக்கிறோம்!' என்று பதிலளித்தார்.

அப்போது மத்திய அமைச்சராகவும், பாஜகவில் இருந்தவருமான திருநாவுக்கரசரும், பாஜக நிர்வாகிகள் ஹண்டே, காசிமுத்து, மாணிக்கம் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்த குமார், ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம், எம்.எல்.ஏக்கள் ரங்கநாதன், வள்ளல் பெருமான் ஆகியோரும் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்தினர். புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்ததுடன் ரஜினியுடன் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், மக்கள் தேசம் தலைவர் கண்ணப்பன், எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் பலராமன் ஆகியோரும் ரஜினிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்கள் தவிர திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், அர்ஜுன், விஜய், பிரசாத், சூர்யா, முரளி, நெப்போலியன், சந்திரசேகர், அப்பாஸ், பாக்யராஜ், பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஜெயராம், சிலம்பரசன், லாரன்ஸ், டெல்லி கணேஷ், பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, அருண்பாண்டியன், பாண்டு, செந்தில், ஹர்ஷவர்த்தன், ஸ்ரீகாந்த், அருண்குமார், சின்னி ஜெயந்த், வினுசக்கரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, மலேசியா வாசுதேவன், கவுண்டமணி, அலெக்ஸ், ராஜீவ், கரணாஸ், குள்ளமணி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ராஜேஷ், ரமேஷ்கண்ணா, கிரேன் மனோகர், சிசர் மனோகர், தியாகு, ஸ்ரீகாந்த், டி.ராஜேந்தர், நிழல்கள் ரவி. நடிகைகள் ராதிகா, மனோரமா, குஷ்பு, மீனா, ரம்பா, காய்த்ரி ஜெயராம், ஜெயசித்ரா, தீபா வெங்கட், மயிலை ஜெயதேவி, விலாசினி, சைலு, காந்திமதி, 'பசி' சத்யா, சத்யப்ரியா, எஸ்.என்,பார்வதி, லதா, டைரக்டர்கள் பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், சேரன், கவிஞர்கள் வைரமுத்து, வாலி, படத்தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாசலம், ஆர்.பி,சவுத்ரி, கே.ஆர்.ஜி, கேயார், விநியோகஸ்தர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உள்ளிட்டோரும் வாழ்த்தினர்.

இவர்களில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ''நெய்வேலி பொதுக்கூட்டத்தில் பாரதிராஜா திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றியும், ரஜினியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். அவரை அப்படி பேசுவதற்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் எப்படி அனுமதிக்கலாம். அவரை ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அந்தப் பேரணியில் திமுகவை சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கருணாநிதியை சந்தித்து விஜயகாந்த் கேட்டபோது நானும் பக்கத்தில்தான் இருந்தேன். அப்படி அழைத்து சென்ற பின்பு மேடையில் திமுக நடிகர்களை வைத்துக் கொண்டு நாகரிகம் இல்லாமல் பாரதிராஜா பேசியதை விஜயகாந்த் தட்டிக் கேட்க வேண்டாமா?

தார்மீகப் பொறுப்பு ஏற்பதாகக் கூறி திமுக நடிகர்களை அழைத்து சென்ற விஜயகாந்த் இதற்கு விளக்கம் சொல்வாரா? கருணாநிதியை தாக்கிப் பாரதிராஜா கொடுத்த பேட்டிக்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் பேரணிக்கு போய் வாருங்கள் என்று சரத்குமாரையும், சந்திரசேகரையும் நான் வைத்தேன். இது எங்கள் நாகரிகம். ஆனால் பாரதிராஜா அங்கே காட்டிய நாகரிகம் என்ன? நெய்வேலி பேரணிக்கு வந்தவர்கள் மட்டுமே தமிழ் உணர்வு உள்ளவர்கள் என்று பேசியிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம்? நான் ரஜினியை வைத்து படம் எடுக்கவில்லை. என் மகன் நடிக்கும் படத்துக்கு குத்து விளக்கு ஏற்ற அழைக்கவில்லை!'' என கடுமையாக தாக்கி விட்டே அகன்றார்.

radhika2392771f
 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நெப்போலியன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அரசியலில் அறிமுகம் செய்தவர் கருணாநிதி. பாரதிராஜாவினுடைய மாணவன் என்று முறையில் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நெய்வேலி கூட்டத்தில் கருணாநிதியைப் பற்றி பாரதிராஜா பேசியது கண்டிக்கத்தக்கது. நாங்கள் சபை அடக்கத்திற்காக பொறுமை காத்தோம். மேடைகளில் பேசும்போது, 'பராசக்தி' படம் பார்த்துத்தான் தமிழ் உச்சரிப்பை கற்றுக் கொண்டேன் என்று பல முறை புகழ்ந்து பேசியவர்தான் இந்த பாரதிராஜா. தற்போது கருணாநிதியை யார் என்று கேட்கும் அளவுக்கு வந்திருக்கிறார். இந்த நிலைக்கு வந்த பாரதிராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். பாரதிராஜா நடிப்பை கற்றுக் கொடுக்கட்டும். ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் கற்றுத்தர வேண்டாம். அரசியல் கற்றுத்தர அவருக்கு அருகதையில்லை!'' என்று பொங்கினார்.

நடிகை ராதிகா நிருபர்களிடம் பேசுகையில், ''பாரதிராஜா எப்பவுமே தமாஷானவர். எனக்கு இருபது வருஷமா அவரைத் தெரியும். உணர்ச்சி வசப்பட்டு ரொம்ப பேசுவார். அப்புறம் அப்படியே மாறி விடுவார். டைரக்டர் பாலசந்தரை ஒரு முறை சாதி குறிப்பிட்டு திட்டினார். இப்போது அவரை கட்டித்தழுவிக் கொள்கிறார். ரஜினியை இப்போது இப்படி பேசும் பாரதிராஜாவுக்கு ரஜினியை வைத்துப் படம் எடுக்கும்போது தெரியவில்லையா? என்னையே 'நீ தமிழச்சியா?' என்றுதான் பாரதிராஜா கேட்பார். நான் இங்கே பிறந்தவள் இல்லைதான். என் அப்பா எம்.ஆர்.ராதா பெரியார், அண்ணாவுடன் திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர். அந்த பாரம்பரியத்தில்தான் தமிழ்காற்றை நான் சுவாசிக்கிறேன். வளர்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழ் என்றாலே கருணாநிதியைத்தான் சொல்வார்கள். அவரைப் போய் 'யார் இவர்?' என்று பாரதிராஜா கேட்கிறார்.

ஒரு தமிழனை இன்னொரு தமிழன் இப்படி கேட்கலாமா? தமிழனுக்கு அழிவு தமிழனால்தான். நான் திமுக கட்சிக்காரி அல்ல. ஒரு நடிகையாகத்தான் இதை சொல்கிறேன். பாரதிராஜாவோ ஒரு கட்சி சாயம் பூசிக் கொள்வதற்காக அப்படி பேசியிருக்கிறார். அவர் அப்படித்தான் பேசுவார்!'' என்று கூடுதல் உணர்ச்சி காட்டினார். அவருடன் வந்த அவரின் கணவர் நடிகர் சரத்குமாரோ அதையும் தாண்டி தாக்குதல் நடத்தினார்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 37 -சேப்பாக்கத்தில் பொங்கிய நடிகர்கள்

 

 
rajjpg

உண்ணாவிரத மேடையில் ரஜினியுடன் கமல், சத்யராஜ், வடிவேலு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள்.

''நெய்வேலி பேரணியில் பாரதிராஜா திடீரென்றுதான் கருணாநிதியைப் பற்றி விமர்சித்தார். திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அது ஏதோ தனக்கு வந்த கூட்டம் என்று நினைத்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தடுமாறிப் பேசினார். அப்போதே நாங்கள் பதிலடி கொடுத்திருப்போம். மேடை நாகரிகம் கருதிப் பேசாமல் இருந்தோம். ரஜினியை தாக்கிப் பேசிய பாரதிராஜா ரஜினியை வைத்து 'கொடி பறக்குது' படத்தை தயாரித்து, இயக்கி அதில் கோடி, கோடியாக சம்பாதித்தார். அவரது மகன் நடித்த 'தாஜ்மஹால்' படத்திற்கு ரஜினியை வைத்துதான் குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார். ஆனால் அந்த நன்றி உணர்வு இல்லாமல் ரஜினியை அந்த மேடையில் தாக்கிப் பேசினார். பாரதிராஜா பேசுவதைப் பார்த்தால் அவர் பின்னணியில் ஏதோ பெரிய சதி நடப்பது போல் உள்ளது.

தமிழன் என்ற உணர்வு ஏதோ அவருக்கு மட்டும் உள்ளது போல பேசுகிறார். பேரணி சென்ற போது காலை முதலேயே தகராறு செய்வது போலவே நடந்து கொண்டார். நடிகர்கள் சென்ற பஸ்ஸுக்கு குறுக்கே தனது காரை விட்டு குழப்பங்களை ஏற்படுத்தினார். அவருக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துவிட்டது. எங்கள் முதுகில் ஏறி அவர் தலைவராக நினைக்கிறார். அரசியலுக்கு வரணும்னா அவர் உழைச்சுட்டு வரட்டும். நடிகர் சங்கத்துல எல்லோரும் ஒற்றுமையாக இருந்தோம். இப்போது அதில் அரசியல் புகுந்துவிட்டது. நடிகர்களைக் குழப்பி ஆதாயம் தேட யாரும் நினைக்கக்கூடாது. அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்!'' என்றார் சரத்குமார்.

 

ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த கமல்ஹாசனோ இதற்கும் ஒரு படி மேலே போய், 'ரஜினி செல்வது அரசியல் பாதை!' என்று விமர்சனம் ததும்ப பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

நடிகர் கமல்ஹாசன் இந்த உண்ணாவிரத மேடைக்கு பிற்பகல் 3 மணிக்கு வந்தார். ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு நிருபர்களிடம் பேசினார். ''காவிரி பிரச்சினைக்காக இங்கே போராட்டம் நடைபெறுகிறது. எனது நண்பர் இங்கு உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்திருக்கிறேன். சினிமா என்பது வேறு. அரசியல் என்பது வேறு. நான் சினிமாத்துறையில் ரஜினியுடன் இருக்கும்போது ஒருவருக்கொருவர் பல உதவிகளைச் செய்து இருக்கிறோம். பரஸ்பரமாக அந்த உதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். இன்று இந்த மேடை அரசியல் மேடையாக மாறியுள்ளது. அதை நான் வழிமொழிய வந்து இருக்கிறேன். ரஜினி போகும் திசை அரசியல் திசை ஆகும்.

நேற்று நடந்த பேரணி-பொதுக்கூட்டம் கொஞ்சம் அரசியல் மேடையாக இருந்தது. இன்று முழுக்க, முழுக்க அரசியல் மேடையாகி விட்டது. திமுக தலைவர் கருணாநிதியையோ, நண்பர் ரஜினிகாந்த்தையோ பாரதிராஜா விமர்சனம் செய்திருந்தால் அது தவறு. நான் ஒரு கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு அரசியல் கிடையாது. சினிமாத்துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல. சினிமாத்துறை பல முதலமைச்சர்களை தந்து உள்ளது. நான் இங்கே வாழ்த்து சொல்லி வழியனுப்ப வந்திருக்கிறேன்!'' என்பதுதான் அன்று கமல்ஹாசன் பேட்டியின் சாராம்சம்.

அன்றைய தினம் ரஜினியின் உண்ணாவிரத மேடைக்கு வந்த அத்தனை நடிகர், நடிகைகளுமே உணர்ச்சி பொங்கிட பேட்டியளித்தனர். அதில் சத்யராஜ், வடிவேலு, ஜெமினி கணேசன், பிரசாந்த், ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், ஜெயராம், சிலம்பரசன், இயக்குநர்கள் பாலசந்தர், பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார், கவிஞர் வாலி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், நடிகைகள் மனோரமா, லதா உள்ளிட்டோரும் வந்தனர்.

சத்யராஜ் தனது பேட்டியில், ''காவிரி நீருக்காக யார் குரல் கொடுத்தாலும் அங்கு நான் கலந்து கொள்வதை எனது கடமையாக கருதுகிறேன். நேற்று பேரணி நடத்தப்பட்டது. இன்று ரஜினி சார் உண்ணாவிரதம் இருக்கிறார். இவற்றின் மையம் காவிரி நீர் ஒன்றே. எனவே இந்தப் போராட்டங்களில் நான் கலந்து கொள்கிறேன். சினிமா துறையில் அரசியல் என்பது புதியது அல்ல. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் வெவ்வேறு திசையில் இருந்தவர்கள்தான். ஆனால் திரை உலகுக்கு ஒரு பிரச்சினை என்றால் இருவரும் ஒன்றாக இணைந்து போராடினார்கள். எனவே இந்த திரை உலகில் இப்போது நடந்து இருப்பதை பிளவு என்று சொல்ல மாட்டேன். பிளவு ஏற்பட்டால் அதை சேர்க்கத்தான் முயற்சிப்பேன்!'' என்றார்.

வடிவேலு, ''காவிரி தண்ணீர் கேட்டு எங்கு போராட்டம் நடந்தாலும் நான் ஒரு உப்புக் கண்டமாக அங்கு இருப்பேன். காவிரி நீருக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை நான் ஆதரிப்பேன். நான் தமிழ்மண்ணில், தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்தவன் என்ற முறையில் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறேன். இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இந்தியனாக மாறுவேன். தமிழகத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழ் வெறியனாகவே இருப்பேன். உலகத்துக்கே ஒரு பிரச்சினை என்றால் மனிதனாக இருப்பேன்!'' எனத் தெரிவித்தார்.

ஜெமினி கணேசன் பேட்டியின்போது, ''காவிரி நீர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் நெய்வேலியில் நடத்திய போராட்டம் சிறப்பாக இருந்தது. அதை விட ரஜினி நடத்தும் போராட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த போராட்டங்கள் வாயிலாக கர்நாடக அரசு சுமுகமாக நடந்து கொள்ளவேண்டும்!'' என்று குறிப்பிட்டார்.

பாலசந்தர் குறிப்பிடுகையில், ''காவிரி பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு அவசியம். நாம் நடத்தும் போராட்டம் வெற்றிபெற வேண்டும். காவிரியில் தண்ணீர் விடக்கூடாது என்று கர்நாடகத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழக தமிழ்த் திரையுலகத்தினர் சார்பில் மணி கட்டப்பட்டுள்ளது. இது வெற்றி பெற வேண்டும். இதற்காக யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்பேன்!'' என்றார்.

நடிகர் பிரசாந்த், ''காவிரி நீர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் நடத்திய நெய்வேலிப் போராட்டமும், ரஜினிகாந்த் சென்னையில் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டமும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வைத்தான் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நெய்வேலி கூட்டத்தில் பாரதிராஜா அவரது சொந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்!'' என்றார்.

பாக்யராஜ், ''தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து தனது உணர்வுகளை தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டியதில்லை. உயிர் வாழ தண்ணீர் அவசியம். இது விவசாயிகளின் ஜீவப் போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு விடிவு காண்பது அவசியம். இதற்கு நமது போராட்டம் வழி வகுக்கும்!'' என்றார்.

பாண்டியராஜன், ''காவிரி பிரச்சனை குறித்து தமிழகத்தில் யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு. அப்படி ரஜினிக்கு ஆதரவு கொடுக்கவே இப்போது வந்தேன்!'' என்றும், ஆனந்தராஜ், ''காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டுவதோடு, ஆண்டவன் அருளால் மழை பெய்ய வேண்டும். கன்னடர்களுக்கு அவர்களின் தாய்மொழி முக்கியம் என்றால் தமிழர்களுக்கு அவர்களின் தாய்மொழி முக்கியம். நாம் அனைவரையும் மதிக்கிறோம். மதித்து நடப்பதால்தான் அமைதி காக்கிறோம். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விட வேண்டும். அனைவரையும் மதித்து நடக்கும் நம்மை கர்நாடக அரசு மிதிக்க நினைக்கக் கூடாது!'' என்றும், ''நேற்று உடல்நிலை சரியில்லாததால் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இன்று ரஜினிசார் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்!'' என்று சிலம்பரசனும் குறிப்பிட்டனர்.

நெய்வேலிப் பேரணியில் கலந்து கொள்ளாத நடிகை குஷ்பு, ரஜினியின் உண்ணாவிரத மேடைக்கு வந்தார். குஷ்பு அப்போது கர்ப்பமாக இருந்ததால் அந்தப் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் ரஜினி உண்ணாவிரதத்திற்கு வாழ்த்து தெரிவித்து மலர்ச்செண்டு கொடுத்துவிட்டுச் சென்றார்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 38-நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி

 

 
2616708519788786354706537821451218551683

ரஜினிகாந்த்

சிவானந்தா குருகுலத்தைச் சேர்ந்த ராஜாராம், ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளுடன் வந்து ரஜினியை வாழ்த்தினார். அயனாவரத்தைச் சேர்ந்த ஊனமுற்ற இளைஞர் மேடைக்கு தவழ்ந்தபடி வந்து ரஜினியை வாழ்த்தினார். இவர்கள் தவிர ரஜினியின் உண்ணாவிரதத்தை வாழ்த்த ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மேடைக்கு வந்து பாபா முத்திரையைக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சென்றபடி இருந்தனர்.

அதேபோல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் வரிசையாகத் தடுப்புகள் வழியே நின்று ரஜினிக்கு சால்வையை அணிவித்தும், மாலைகள் அணிவித்தும் வாழ்த்தியபடி சென்று கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் கல்லூரி மாணவிகள் பெரும் கூட்டம் கூட்டமாக வந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தபடி சென்றனர். மொத்தம் 9 மணி நேரம் மேடையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி.

 

பொதுவாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் வழக்கமாக தண்ணீர் மட்டும் குடிப்பார்கள். அதைக்கூட இங்கே ரஜினி செய்யாததையும், இயற்கை உபாதை கழிக்கக்கூட மேடையை விட்டு நிமிட நேரம் கூட அகலாமல் இருந்ததையும் வியப்பு பொங்க அனைவருமே பார்த்தனர். சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவரான ரஜினி அதையும் செய்யாமல் இருந்தது அதை விட பலருக்கும் வியப்பு.

தன்னை சந்திக்க வரும் பிரமுகர்களின் வாழ்த்தை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் கை குலுக்கி நன்றி தெரிவிப்பதையும் தவறாமல் செய்தார். பிற்பகலில் வெயில் கடுமையாக அடித்த போதும், அமர்ந்த இடத்தை விட்டு அவர் நகரவில்லை. சிலர் நிழலில் உட்காரச் சொல்லி அவரிடம் வலியுறுத்திய போதும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ரசிகர்கள் பலர் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர். குழந்தைகளோ அவரின் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றனர். பாரதிராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் கூட்டத்தில் கோஷங்களும் அவ்வப்போது ஒலித்தன. இந்த உண்ணாவிரதத்தின் அத்தனை அசைவுகளையும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும் நேரலை செய்தன. சரியாக மாலை 5 மணிக்கு இப்போது ரஜினிகாந்த் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடிகர்கள் சரத்குமாரும், நெப்போலியனும் நடிகை ரேகாவின் மகள் அபிரைனாவின் கையில் ஆரஞ்சு பழச்சாற்றை கொடுத்து ரஜினிகாந்திடம் கொடுக்கும்படி சொன்னார்கள். சிறுமி அபிரைனா ரஜினிகாந்திடம் பழச்சாறை கொடுக்க, அதை ரஜினிகாந்த் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் மேடை முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

''இங்கே வந்திருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ்மக்களே, ரசிகப்பெருமக்களே, திரை உலகைச் சேர்ந்த நண்பர்களே உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே வந்து என்னை வாழ்த்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வளவு சிறப்பாக இந்த உண்ணாவிரதம் நடத்த உதவிய காவல்துறைக்கும் என் பாராட்டுகளும், நன்றிகளும். உண்ணாவிரதத்திற்கு இந்த இடத்தை அளித்த தமிழக அரசுக்கு நன்றி.

தென் இந்தியாவின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் மு.கருணாநிதி இங்கே கட்டாயம் வாழ்த்த வருவேன் என்று கூறினார். நான்தான் வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் வாழ்த்துக் கடிதமும் அனுப்பியிருக்கிறார். அவருக்கும் எனது நன்றி. இந்த உண்ணாவிரதம் இங்கே நல்ல முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போராட்டம் வெற்றியா தோல்வியா? என்பது கர்நாடகத்தின் கையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது.

மத்திய அரசு என்ன செய்யுமோ? எப்படிச் செய்யுமோ? தெரியாது. ஆனால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டே ஆக வேண்டும். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. தண்ணீர் வந்தாக வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அரசிடம் மனு கொடுக்கச் செல்கிறேன்!'' என்று கூறி விட்டு ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குப் புறப்பட்டார்.

ரஜினியுடன் நடிகர்கள் 3 ஆம்னி பஸ்களில் சென்றனர். முதலில் புறப்பட்டுச் சென்ற பேருந்தில் ரஜினிகாந்துடன் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், பார்த்திபன், அப்பாஸ், விஜயகுமார், அர்ஜூன், அருண்குமார், கங்கை அமரன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், படத் தயாரிப்பாளர் கே.ஆர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 19 பேர் இடம் பெற்றனர்.

போலீஸ் ஜீப் முன் செல்ல இந்த 3 பஸ்களும் அணிவகுத்து வந்தன. வழிநெடுகிலும் ரசிகர்கள் ஆராவாரம் செய்து வாழ்த்தி அனுப்பினர். மாலை 5.35 மணிக்கு இந்த பஸ்கள் கவர்னர் மாளிகைக்கு வந்தன. ரஜினிகாந்த், சரத்குமார், நெப்போலியன் உள்பட 20 பேர் மட்டும் கவர்னர் மாளிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கே கவர்னர் ராமமோகனராவ் இல்லாததால் அவரது செயலாளர் ஷீலா பிரியாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.

'தண்ணீருக்காக தவிக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், குறிப்பாக தமிழக விவசாயிகள் சார்பாகவும், தங்களிடம் இந்த மனுவை சமர்ப்பிக்கிறோம்!' எனத் தொடங்கும் அந்த மனுவின் வாக்கியங்கள் பின்வருமாறு நீண்டது.

'காவிரி நீர் என்பது ஒரு மாநிலத்திற்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதி. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுச் சொத்து என்பதுதான் உலக நீதி. பல்லாண்டு காலமாக இந்த சட்ட விதிதான் காவிரி நீரைப் பயன்படுத்திக் கொள்வதில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சட்ட நியதிகள், இந்திய அரசியல் சட்ட அமைப்பு விதிகள், இயற்கை நீதி ஆகியவற்றை கருத்தில் கொண்டே உச்ச நீதிமன்றம் காவிரி நீர் பிரச்சினையில் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும் உத்தரவு. சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை. எல்லோரையும் விட உயர்ந்தது சட்டம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது.

கர்நாடக அரசு அந்த உத்தரவை அமல்படுத்துகிறதா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் கடமை மத்திய அரசுக்கும் உள்ளது. ஒரு மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு 256-வது பிரிவின் கீழ் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் என்ற முறையில் தாங்கள் எங்களுடைய உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலமாக உடனடியாக செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்!' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கவர்னர் மாளிகையில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு திரும்பிய ரஜினிகாந்த் பின்னர் நிருபர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.

''உண்ணாவிரதத்திற்கு இந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?'' எனக் கேள்வி கேட்டபோது, ''நான் இந்த வரவேற்பை எதிர்பார்த்தேன். தமிழ் மக்களை பற்றித் தெரியும். முதலில் என்ன நடந்தது; அப்புறம் என்ன நடந்தது என்பதையெல்லாம் மறந்து விடலாம்!'' என்று கூறிவிட்டு, முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று குறிப்பிடும் வகையில் 'கதம் கதம்' என்றார்.

அடுத்த என்ன திட்டம் என்று கேட்டபோது, ''பிரதமர் வந்ததும் தமிழ் திரை உலகத்தினருடன் சென்று பார்ப்பேன். கன்னட திரை உலக நண்பர்களையும் கூட்டிச் செல்ல முயற்சிப்பேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பேன். இது எல்லாம் தற்காலிகமான ஒன்றுதான். முக்கியமாக கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்திய மக்களுக்கு ஒரு பொற்காலத்தை கொண்டு வரவேண்டும். கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 40-50 ஆண்டுகள் கூட இதற்கும் ஆகலாம். பாரதியார் கூட இந்த திட்டத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அமெரிக்கா மாதிரி சுவிட்சர்லாந்து மாதிரி ஆகும். 30 ஆண்டானாலும் பரவாயில்லை. அந்த நதியை இணைக்காவிட்டால் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். எவ்வளவு பணம் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாளைக்கே அறிவித்தால் நாளையே ரூ.1 கோடியை என் பாக்கெட்டில் இருந்து தருகிறேன். பணத்தைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்பட வேண்டாம். பணம் வேண்டுமென்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள் பார்த்துக் கொள்கிறோம்!'' என்று பொங்கினார்.

-பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 39 - 64 வயது ரசிகரின் சுண்டுவிரல் துண்டிப்பு

 

 
rajini

ரஜினி | கோப்புப் படம்.

இதற்கிடையே ரஜினி உண்ணாவிரதம் இருந்த நாளிலேயே ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ரஜினி ரசிகர்களும் பல்லாயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர். அதிலும் ஏகப்பட்ட ரசபாச அரசியல் சங்கத்திகள் அரங்கேற்றம் கண்டன. குறிப்பாக கோவையில் ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி சம்பவம் ஒரு ரஜினியின் உண்ணாவிரதத்தை ஆதரித்தும், கர்நாடக அரசைக் கண்டித்தும் தன் கைவிரல்களில் ஒன்றை துண்டித்து அதிர்ச்சியூட்டினார்.

கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். உண்ணாவிரதத்தை ஒட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதே போல் சரவணம்பட்டி சிவானந்தபுரம் உள்பட கோவை மாவட்டத்தில் மட்டும் 11 இடங்களில் உண்ணாவிரதம் நடந்தது.

 

இப்படி நடந்த உண்ணாவிரதங்களில் காந்திபுரம் உண்ணாவிரதப் பந்தலில்தான் ஒரு ரசிகர் திடீரென்று ஆவேசம் வந்தவர் போல், 'ரஜினி வாழ்க. கர்நாடக அரசே காவிரியில் தண்ணீர் விடு!' என்று கூச்சல் போட்டுக்கொண்டே தன் கையிலிருந்த அரிவாளால் தன் சுண்டுவிரலையே வெட்டிக் கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ரஜினி ரசிகருக்கு அப்போதே வயது 64. (இப்போது கணக்கிட்டு பாருங்கள்: 79 -80 வயதாகியிருக்கும்). இந்த வயசில் அப்படியென்னா ஆவேசம் அவருக்கு? அவர் உண்மையிலேயே ரஜினி ரசிகர்தானா? என்று ரஜினி ரசிகர்களுக்கே சந்தேகம். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாசிலாமணி என்ற பெயருடைய அவரை சந்தித்து நானும் பேட்டி கண்டேன். மனிதர் மிகத் தெளிவாகவே பேசினார்.

''நான் இன்னெய்க்கு நேத்தில்லை. 1991-லேயே காவிரி பிரச்சினைக்காக கோவை அண்ணாசிலை பக்கம் நடந்த போராட்டத்தில் கலந்திருக்கேன். அதற்காக மூணு மாசம் ஜெயிலிலும் இருந்திருக்கேன். வருஷா, வருஷம் கர்நாடகாக்காரன் காவிரியில் தண்ணி விடறானோ இல்லையோ, நமக்குள்ளே குரோதத்தை மட்டும் அள்ளி விடறான். இந்த வருஷம் அதுல நம்ம ரஜினிகாந்தையே பலிகடா ஆக்கப் பார்த்துட்டான். எனக்கு ஆரம்பம் முதலே ரஜினின்னா உசிரு. அப்படிப்பட்ட மனுஷன் மேல சேற்றை வாரிப் பூசினா மனசு கேட்குமா?

நாம ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தவன் எல்லாம் ஆட்சிக்கு வந்து கார்லயும், விமானத்துலயும் உல்லாசமா போயிட்டிருக்கான். லட்ச, லட்சமா எம்பி,எம்.எல்.ஏ சம்பளமும் வாங்கறான். கோடி, கோடியா லஞ்ச, ஊழல்ல கொழுக்கிறான். தமிழன்னு சொன்னதுனாலயும், தமிழ்ப்படத்துல நடிச்சதுனாலயும் ரஜினி மட்டும் இப்படி உண்ணாவிரதம் இருக்கணுமா? அதுதான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் நினைச்சிருந்த வீட்டுக்குள்ளேயே வச்சு விரலை வெட்டிக்க முடியும்தான். ஆனா அது எத்தனை பேருக்கு தெரிய வரும்?

சுதந்திரத்துக்காக காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அது யாருக்காக? நமக்காக. அது போலத்தான் ரஜினி நமக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கார். அதுக்கு நான் சுண்டுவிரலை வெட்டிக்கிட்டது எம் மாத்திரம்? இப்பவும் சொல்றேன். காவிரியில் திரும்பவும் கர்நாடகாக்காரன் தண்ணியை விடலைன்னா, வரிசையா அடுத்தடுத்த விரல்களையும் வெட்டிக்குவேன். கட்டை விரலை வெட்டிய பின்னாடி என் உசிரையே கொடுப்பேன்!'' என்று உணர்ச்சி பொங்கிய மாசிலா மணி கோவை அருகே உள்ள பல்லடத்தில் ஒரு தோட்டத்தில் விவசாயக் கூலியாக இருந்தார். சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி. இருபதாண்டுகளுக்கு முன்பு அங்குள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய இயலாமல் பஞ்சம் பிழைக்க கோவைக்கு வந்தாராம். இரண்டு மகள்கள். திருமணமாகி ஊரில் உள்ளனர்.

இதற்கிடையில் இவரது செயலைப்பற்றி ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களிடம் பேசியபோது, ''அவர் ரஜினி ரசிகரே இல்லை. பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவோ, ரஜினி பணம் கொடுப்பார் என்பதற்காகவோதான் இப்படிச் செய்திருக்க வேண்டும்!'' என்று குறிப்பிட்டனர். இதைப்பற்றி மாசிலாமணியிடமே கேட்டபோது மீண்டும் உணர்ச்சி பொங்கலே வெளிப்பட்டது.

''காசுக்காக, பேருக்காக இதைச் செய்வது மகா கேவலம் சார். அப்படிப்பட்ட கேவலமான ஆள் நான் இல்லை. ரஜினிக்கு ஆதரவா ஏதாவது செய்யணும்னா ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சீட்டு வச்சுட்டுத்தான் செய்யணுமா? என்னைப் பொறுத்தவரை காவிரியில் கர்நாடகாக்காரன் தண்ணீர் விடணும். அது திருச்சி, தஞ்சாவூரை பசுமையாக கொழிக்கச் செய்யணும். அதுக்கு ரஜினி போராட்டம் செஞ்சார். அதுக்கு நான் கை இல்லை, விரல் கொடுத்தேன். அவ்வளவுதான்!'' என்றார் படு சீரியஸாக.

ரஜினி உண்ணாவிரதம் குறித்த செய்திகள் அன்றைய தினமும், அடுத்தடுத்த நாட்கள் காலை, மாலை தினசரிகளிலும் கட்டம், கட்டி பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டிருந்தது. பெரும்பான்மை பத்திரிகைகள் ரஜினி உண்ணாவிரத செய்திகளை, படங்களையே வால்போஸ்டர்கள் ஆக்கியிருந்தன.

ஒரு கடையில் பார்த்தால் தொங்கும் அத்தனை பேனர்களும் ரஜினி உண்ணாவிரதப் புகழே பாடின. இது ஏதோ பெரிய அரசியல் வரலாறு போல வெகுஜனப் பத்திரிகைகள் ஒரு பக்கம், இரண்டு பக்கம் என முழுப்பக்க அளவிலான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. அதற்கேற்ப அந்த மாதம் முழுக்கவே மீடியாக்களில், பருவ இதழ்களில் எல்லாம் ரஜினி குறித்த அரசியல் செய்திகளே இடம் பிடித்தன. அவற்றில் நிறைய அரசியல் ஹாஸ்யங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் றெக்கை கட்டிக் கொண்டது.

ஊர் ரெண்டு பட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையே. நடிகர்களை ரெண்டுபடுத்தி திராவிடக் கட்சிகள் கொண்டாடப் பார்த்தன. அவர்கள் ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் ரஜினி. பாரதிராஜா தலைமையிலான அணியினர் நெய்வேலிக்கு போகிற அதே நாளில் சென்னையில் உண்ணாவிரதம் என்று ரஜினி அறிவித்ததும், அரசியல் கட்சிகளுக்கு ஏக குஷியாகின. பிரியும் இரண்டு அணிகளை ஆளுக்கொரு பக்கமாக இழுத்துக்கொண்டு தங்கள் கட்சிகளை பலப்படுத்திக் கொள்ளப் பார்த்தார்கள்.

திடீரென்று விஜயகாந்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமை நடக்கவிருந்த உண்ணாவிரதத்தை ஒத்திவைத்து, 'கலை உலகில் புகுந்து யாரும் பாலிடிக்ஸ் பண்ண விட மாட்டேன்' என்று மறைமுகமாக குட்டு வைத்துவிட்டார் ரஜினி. முன்பு இதே காவிரி விவகாரத்தில் கடற்கரையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது முதல் ஆளாக ஆதரவுக் குரல் கொடுத்தவர்தான் ரஜினி. அதே வியூகத்தை கையில் எடுப்பது விறுவிறுப்பான அரசியல் சுழற்சிதான். ஆரம்பத்தில் ரஜினியை பின்னால் இருந்து இயக்கியவர் திமுக தலைவர் மு.கருணாநிதி என்பது கோடம்பாக்கம் அறிந்த ரகசியம்.

போட் கிளப் ரோட்டில் ரஜினி வாடகைக்கு குடியிருக்கும் மூன்றாவது மாடி அப்பார்ட்மென்டில் புதனன்று நிருபர்களை சந்திப்பதற்கு முன்பு கருணாநிதியுடன் அவர் போனில் பேசினார். அதன் எதிரொலியாகத்தான் அன்றைய பிரஸ் மீட்டின் தொடக்கத்திலேயே 'தாங்ஸ் டூ கலைஞர்' என்று நன்றி சொன்னார் ரஜினி. அவரையும் அறியாமல் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. 'இப்படிச் சொல்லியிருக்க வேண்டாம்' என்று பின்னர் திமுக ஆதரவு நடிகர்கள் ரஜினியிடம் சொன்னபோது மென்மையாக சிரித்துக் கொண்டார்.

தனக்குப் பின்னாலிருந்து இந்தக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் யார் என்று தெரியும். அவர்களை தேர்தலில் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறார் ரஜினி. அப்படியென்றால் அவர் மக்களவைத் தேர்தலில் (2004) திமுக பக்கம்தான் என சிலர் நினைத்தனர். அந்த எதிர்பார்ப்பிலும் ரஜினி மண்ணள்ளிப் போட்டிருக்கிறார். சனிக்கிழமையன்றே உண்ணாவிரதம் நடத்தியிருந்தால், நிச்சயம் திமுக ஆதரவு நடிகர்கள் மட்டுமே அவரோடு உண்ணாவிரதப் பந்தலில் காட்சி தந்திருப்பார்கள். அந்த கறுப்பு சிவப்பு கலர் தனக்கு வேண்டாம் என்றுதான் கலை உலகத்தின் மற்ற பிரபலங்களும் தன்னருகில் இருக்கும்படி ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளிப்போட்டார்.

ரஜினி வெளிப்படையாக காவிரி பிரச்சினையில் குதித்தால், அவருக்கு எதிராக கர்நாடகத்தில் தீப்பொறி பறக்கும் என்று கணக்குப் போட்டுதான் இங்குள்ள ஆளும் கட்சி கலையுலகத்தை இயக்கி அவரை உசுப்பிப் பார்த்தது. ஆனால் ரஜினியின் உண்ணாவிரதம் முடிவை கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா வரவேற்றுப் பேசியிருப்பது இவர்களை அதிர்ந்து போகச் செய்தது. தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பு தனது நிலையை தெளிவுபடுத்தி ரஜினி போனில் பேசிய முக்கியமான சிலரில் கிருஷ்ணாவும் ஒருவர்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 40-காவிரி போராட்டத்தின் பின்னணி சக்திகள்

 

 
rajni

அதில் விஜயகாந்த் மட்டும்தான், 'உண்ணாவிரதத்தை ஒருநாள் தள்ளி வையுங்கள். நடிகர் சங்கத்தில் பிளவு வேண்டாமே!' என்று கோரிக்கை வைத்திருந்தார். அதன் எதிரொலியாகவே விஜயாந்திடம் கருணாநிதியை சந்திக்கும் கோரிக்கையை வைத்திருக்கிறார் ரஜினி. 'நான் கலையுலகத்துக்கு எதிராகப் பேசுபவன் அல்ல. உங்கள் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை ஒரு நாள் தள்ளி வைக்கத் தயார்தான். ஆனால் அதற்கு முன்பு கருணாநிதியைப் பார்த்து ஒரு வார்த்தை பேசி விடுங்கள்' என்றிருக்கிறார்.

நெய்வேலி பேரணி, ரஜினி உண்ணாவிரத விவகாரங்களில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் எண்ணம் விஜயகாந்துக்கு இல்லவே இல்லை. ரஜினியின் வற்புறுத்தலுக்காகவே கடைசி நேரத்தில் அதைச் செய்தார். ஆளுங்கட்சி அதிமுக மனக்கசப்புக்கு ஆளானால் விளைவுகள் சரியானதாக இருக்காதே என்ற யோசனையோடுதான் கருணாநிதியை போய்ப் பார்த்தார் விஜயகாந்த். 'பாரதிராஜா பெரிய ஆள் ஆவதற்கு நீங்கள் எதற்கய்யா பல்லக்கு தூக்குகிறீர்கள்?' என்று கருணாநிதி பச்சை மிளகாய் காரத்தோடு கேட்டுமிருக்கிறார்.

 

இத்தனை அரசியலுக்கும் பின்னணியில் டான்சி வழக்கு தீர்ப்பும், அதனால் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதே ரஜினியின் உத்தேசம். அதற்கு வியூகம் வகுத்துக் கொடுப்பது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக என்றெல்லாம் அந்த காலகட்டத்தில் முன்னணிப் புலனாய்வு இதழ் கட்டியம் கூறியிருந்தது. காவிரி பிரச்சனைக்கான உண்ணாவிரதம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினி அணிந்திருந்த காவி பனியனையும் அதற்கு அரசியல் குறியீடாக சுட்டிக் காட்டியிருந்தார் கழுகார்.

அதே சமயம் இன்னொரு புலனாய்வு இதழில் 'வம்பானந்தா' இதே அரசியலை சற்றே வேறு விதமான ஹேஸ்யங்களுடன் கலந்து கட்டியிருந்தார்.

'பாமகவும், அதிமுகவும் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. 'பாபா' படம் வந்த போது ரஜினியை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்த போதே, 'டாக்டர் ஐயா என்ன இருந்தாலும் தைரியசாலி. யாரும் தொடப் பயப்படும் ரஜினியை இப்படி போட்டுத் தாக்குகிறாரே!' என்று தன் கட்சி இரண்டாம் கட்ட தலைகளிடமே ஜெயலலிதா பாராட்டி இருக்கிறார். டாக்டர் ஐயாவுக்கும் அந்தச் செய்தி எட்டியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தமிழக அதிகாரிகளுடன் டெல்லி சென்றபோது மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது 'நாங்களே உங்கள் பக்கம் வர இருக்கிறபோது எங்கள் ஆட்களை ஏன் இழுக்கிறீர்கள்?' என்று கேட்டாராம்.

அது மட்டுமல்ல, தமிழக முதல்வரை சந்திக்க ஏ.கே.மூர்த்தி விடாமல் நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் அரசியலில் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள். ரஜினி உண்ணாவிரதப் போராட்ட மேடைக்கு பின்னே, 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு-ஆண்டவன் தீர்ப்பு' என்று மட்டும் வாசகம் பெரியதாக எழுதி இருந்தது. இது காவிரி பற்றிய வார்த்தை அல்ல. வரப்போகும் டான்சி வழக்குத் தீர்ப்பையும் சேர்த்தே இப்படி பொதுவாக ரஜினி குறிப்பிட்டிருக்கிறார் என்று திமுகவினர் தமாஷாக டிஸ்கஸ் செய்தனர்.

ரஜினிக்கு ஆதரவு கொடுப்பதில் என்ன காரணத்தாலோ பாஜக தயக்கம் காட்டி இருக்கிறது. காங்கிரஸ் - திமுக இடையில் ரஜினி மீடியேட் செய்கிறாரோ என்ற திடீர் சந்தேகம் அவர்களுக்கு. அது மட்டுமல்ல. ஏற்கெனவே ரஜினி மீது பாரதிராஜாவுக்கு கோபம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு செய்தி அனுப்பி இருக்கிறது. தன் படம் ஒன்றில் நடிப்பதற்கு ரஜினியிடம் கால்ஷீட் கேட்டாராம் பாரதிராஜா. 'பாலசந்தர் சார் கூடக் கேட்கிறார். அவருக்கே தரவில்லை. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி மறுத்துவிட்டாராம் ரஜினி. கோபமடைந்த பாரதிராஜா, 'பாபா' படம் வெற்றி பெறாத போது, விநியோகஸ்தர்களை ரஜினிக்கு எதிராக தூண்டி விட்டதாகவும், அது ரஜினிக்கும் தெரியும் என்றும் உளவுத்துறை செய்தி கூறுகிறது!' என நீள்கிறது அந்த ஹேஸ்யச் செய்திகள்.

இதேபோல் மேலும் பல ரஜினி உண்ணாவிரதம்- அரசியல் சம்பந்தப்பட்ட ஹேஸ்ய செய்திகள் தமிழகத்தை வலம் வந்தபடிதான் இருந்தன. அவற்றில் சில:

காவிரி விவகாரம் பரபரப்பானதும் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தது. பாதுகாப்பை காரணம் காட்டி ரஜினியின் செயல்பாடுகளை ஒவ்வொரு அங்குலமாக கண்காணிப்பதற்காகத்தான் தமிழக அரசு இந்த வேலையில் இறங்கியிருக்கிறது என குடும்பத்தினரே சிலர் ரஜினியிடம் சொல்லியிருக்கின்றனர்.

''அதற்கெல்லாம் நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனது நடவடிக்கைகள் எல்லாமே வெளிப்படையாக இருக்கும். மடியில கனமிருந்தால்தான் வழியில் பயம்? யார், யார் என்னைக் கண்காணித்து என்ன ஆகப் போகிறது? என்னைக் கண்காணிக்க வரும் போலீஸ்காரர்களை நம்மைச் சார்ந்தவர்கள் யாரும் எதுவும் செய்து விடக்கூடாது என்பதுதான் என் கவலையே. தேவையானால் அவர்கள் கேட்கும் தகவல்களை தாராளமாகச் சொல்லுங்கள். அவர்கள் கஷ்டப்படாமல் அதை சேகரித்துச் செல்லட்டும்!'' என்று அட்வைஸ் கொடுத்தார் ரஜினி.

99419995rajnijpg

ரஜினி | கோப்புப் படம்.

பிரதமரை சந்திக்கச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லி பறந்தார் ரஜினி. அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து அவர் ரிஷிகேஷ் சென்றதாக தகவல்கள் பரப்பப்பட்டன. ரஜினியும் பாபாஜி குகைக்கு சென்று வந்ததாகவே கூறினார். ஆனால் இதற்கிடையே இன்னொரு அரசியல் விஷயம் நடந்தது. ரஜினியின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தையும், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்து விட்டுத் திரும்பினாராம் ரஜினி.

'பாபா' படம் வெளியான சமயத்தில் ரஜினியின் துணைவியார் லதாவின் கையே ஓங்கியிருந்தது. அப்போது ரஜினி மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா டம்மி ஆக்கப்பட்டிருந்தார். உண்ணாவிரதப் போராட்டத்திலோ அந்த நிலைமை தலைகீழ். காவிரி பிரச்சனை தொடர்பாக ரஜினி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலுமே சத்தியநாராயணாவே முன்னிலை வகித்தார். ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வெளிமாவட்டங்களிலிருந்து கிளம்பத் தயாராக உள்ள ரசிகர்களின் வாகனப்படைகள் பற்றி சத்தியநாராயணாவிடம் பதைபதைப்புடன் விவரித்திருக்கிறார்கள் தமிழக உளவுப் பிரிவு போலீஸார். அவ்வளவு கூட்டமும் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் சிக்கல் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

உடனே இதை ரஜினியிடம் டிஸ்கஸ் செய்த சத்தியநாராயணா மாவட்ட மன்றப் பொறுப்பாளர்களை டெலிபோன் அழைத்து தனியாக யாரும் வாகனம் பிடித்து சென்னை வர வேண்டாம் என்று உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அந்த வகையிலேயே மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஊர், ஊராக திடீர் உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதையும் மீறி பல மன்றங்கள் வாகனம் பிடித்து சென்னைக்கு வந்து விட்டதாம்.

உண்ணாவிரதத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை, எழும்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆதரவுக்கூட்டமொன்று நடந்திருக்கிறது. பழ. நெடுமாறன் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் வீராவேசமாக பேசியவர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அந்தப் பேச்சுக்காக பாரதிராஜாவை 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு தூபம் போட்டார்களாம். என்ன காரணத்தாலோ, அரசு அப்படியொரு நடவடிக்கையில் இறங்கவில்லை. அதற்கு பிரதியுபகாரமாகத்தான் காவிரி விஷயத்தில் ரஜினியை எதிர்த்து பாரதிராஜா போர்க்கொடி தூக்கியிருக்கிறார் என்றும் ஹேஸ்யச் செய்திகளை சில ரஜினி ரசிகர்களே வாசித்தனர்.

ரஜினி 2002 நேரடியான செய்திகளாக இருந்தாலும், ஹேஸ்யச் செய்திகளாக இருந்தாலும் அதில் அரசியல் சுவாரஸ்யங்களே ததும்பின. அதற்குள் முழுக்க ரஜினியே வந்தார் என்பதுதான் ஆச்சர்யமே. இத்தோடு நின்றதா ரஜினியின் காவிரி அரசியல் என்றால் அதுதான் இல்லை. ராமாயணத்தின் ஆரண்ய காண்டம் போல் பல திருப்பங்களைக் கண்டது. தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களை திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 41 - காவிரிக்கு மக்கள் இயக்கம்

 

 
Rajni

ரஜினிகாந்த் | கோப்புப் படம்.

காவிரி பிரச்சினைக்காக ரஜினி உண்ணாவிரதம் இருந்த வேளை அவருடன் நடிகர்கள் விஜயகுமார், அர்ஜுன், ரவிராகவேந்தர், கார்த்திக், அப்பாஸ், கருணாஸ், கே.ராஜன், சிலம்பரசன், அருண்குமார், ராஜீவ், கங்கை அமரன், டைரக்டர்கள் கேயார், மகேந்திரன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, கலைப்புலி தாணு, பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், அவரது மகன் சுப்பு போன்றோரும் உண்ணாவிரதம் இருந்து ரஜினி உண்ணாவிரதத்தை முடித்து எழும் வரை அவர்களும் அவருடனே அமர்ந்திருந்தனர். அதே வேளை தமிழகத்தை மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் உள்ள அரசியல் தலைகளையும், டெல்லி தலைவர்களையும் கூட அது திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.

ரஜினியிடம் மிகப் பெரிய அரசியல் ஆற்றல் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியது திமுக-தமாகாவுக்கு அவர் வாய்ஸ் கொடுத்த 1996 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் என்றால், அந்த ஆற்றல் முழுமையாக தனித்தன்மையுடன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களுக்கும், டெல்லி தலைவர்களுக்கும் கூட வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக்காட்டியது 2002 ஆம் ஆண்டு காவிரிக்காக அவர் நடத்திய இந்த உண்ணாவிரதம்தான்.

 

முக்கியமாக இந்த உண்ணாவிரதத்தின் போதுதான் அவருக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆன்மிக சக்தி, அரசியல் உத்தி, ரஜினி ஒன்றும் மற்ற அரசியல்வாதிகளை போல் சாமான்ய அரசியல்வாதி அல்லர் என்பதையும் கண்டு கொண்டுதாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.

அதற்கேற்பவே மற்ற அரசியல் தலைவர்களின் வெளிப்பாடும் இருந்தது. அதில் உச்சகட்ட வெளிப்பாடாகத்தான் ரஜினி உண்ணாவிரதம் இருந்த வேகத்தில் அப்போதைய துணை பிரதமர் அத்வானி நதிகள் இணைப்பு பற்றி மத்திய அரசு ஆலோசிக்கும் என்ற தகவலை சொல்லியிருந்தார்.

2002 அக்டோபர் 13-ம் தேதியன்று ரஜினியின் உண்ணாவிரதம் பற்றி நிருபர்கள் டெல்லியில் அத்வானியிடம் கேள்வி எழுப்பியபோது, ''காவிரி விவகாரத்தை பிரதமர் வாஜ்பாய் நேரடியாக கையாண்டு வருகிறார். பெரிய நதிகளை இணைப்பதன் மூலம் வறட்சியையும், வெள்ளப்பெருக்கையும் தடுக்கும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கும். பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில அரசுகளிடமிருந்தும் அறிக்கை பெற்று அதன் பேரில் முடிவு எடுப்பார். நாட்டில் வறட்சியையும், வெள்ளப்பெருக்கையும் சமாளிப்பது குறித்து மத்திய நீர் வளத்துறை யோசனை தெரிவித்து இருக்கிறது. தற்போது நாட்டில் நிலவும் வறட்சி மிகவும் மோசமானது!'' என பதில் சொல்லியிருந்தார். இதன் எதிரொலி போல் இதற்கு 2 வாரங்கள் கழித்து இந்தியாவில் உள்ள பெரிய நதிகளை பத்து ஆண்டுகளில் இணைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2002 அக்டோபர் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பால், நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில், ''இந்தியாவின் பெரிய நதிகளை பத்து ஆண்டில் இணைக்க வேண்டும். இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பைப் பெற மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வருவது பற்றியும் பரிசீலிக்கலாம். இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை போன்று நதிகள் இணைப்பு திட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நதிகளை இணைப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு தமிழக அரசு மட்டுமே பதில் அளித்து உள்ளது. மற்ற மாநில அரசுகளுக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது!'' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே நாளில், 'கங்கை-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மக்கள் இயக்கம்!' தொடங்குவதாக ரஜினி 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்து அடுத்த பரபரப்பை கொடுத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் இதுதான்.

''காவிரி நீர் பிரச்சினையில் நான் நடத்திய உண்ணாவிரதத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நதிகளை இணைக்க ரூ.1 கோடி தர நான் விடுத்த அறிவிப்பும் நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளது. மக்களிடம் இந்த விஷயம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் முடிவு செய்து இருக்கிறேன். இமயமலையில் இருந்து ஓடும் நதிகளை தென்னக நதிகளுடன் இணைப்பதன் அவசியம் பற்றி மக்களுக்கு விளக்க ஒரு மக்கள் இயக்கம் தொடங்கிட திட்டமிட்டு இருக்கிறேன். என்னை தலைவராகவோ, ஆட்சி நிபுணராகவோ நான் நினைக்கவில்லை. காவிரி விஷயத்தை வைத்து விளம்பரம் தேடவோ, அல்லது அரசியல் லாபம் அடையவோ நான் திட்டமிடவில்லை.

அரசியல்வாதிகள் தேர்தலைத் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை. அரசியல் தலைவர்களிடம் 5 ஆண்டுக்கான தெளிவான கண்ணோட்டம் கூட இல்லை. 3 வருடம், 4 வருடம் அரசியல் லாபக் கணக்குதான் போடுகிறார்கள். இதனால் என்னைப் போன்றவர்கள் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. எனக்கு அரசியல் எண்ணம் கிடையாது. பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் என்னால பேச முடியும். நான் ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் நான்கு தென் மாநில முதல்வர்களை சந்தித்துப் பேச இருக்கிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திப்பேன்.

நதிகள் இணைப்பதற்கு அரசியல் ரீதியாக ஆதரவு திரட்ட இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

நதிகள் இணைக்கும் பணியை முடிக்க 11 -12 வருடங்களுக்கு மேல் ஆகாது. இந்தத் திட்டத்தை முடிக்க ரூ.75 ஆயிம் கோடிதான் செலவாகும். அதிகபட்சம் ரூ.1 லட்சம் கோடிதான் ஆகும். எல்லா மாநிலங்களும் இதனால் பலனடையும். ஆனாலும் இவ்வளவு காலம் ஏன் இதை யாரும் நிறைவேற்ற முன்வரவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பணம் ஒரு பிரச்சினையே இல்லை. எனவே பணத்தைக் காட்டி சாக்குபோக்கே தேவை இல்லை.

இந்த திட்டத்திற்கு நான் ரூ.1 கோடி தருவதாக அறிவித்த பிறகு ஒரு சிறு தொழில் அதிபர் ரூ.10 லட்சம் காசோலை அனுப்பினார். இதன் மூலம் நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் பணியில் இறங்க முடிவு செய்தேன். கடவுளால் மட்டுமே எதுவும் நடக்கும். ஆனால் என்னால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். நான் ஏற்கெனவே கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், தேவகவுடா உடனும் கலந்து பேசுவேன். தண்ணீரை ஆளுபவன் உலகத்தை ஆள்வான். அரசியல் தலைவர்கள் ஆதரவை திரட்டி விட்டால் இந்த திட்டம் நிறைவேறி விடும். திட்ட செலவை, பயனடையும் மாநிலங்களே கொடுத்து விடலாம். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பும் பெறுவார்கள். மாறாக இவ்வளவு உயர்ந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல விடாமல் தடுத்து என் பொறுமையை சோதிக்க வேண்டாம். இந்த திட்டத்தை ஒத்துழைக்க செய்யுங்கள். நாங்கள் ஒத்துழைக்கிறோம்.

முதல் வேளையாக, 'தீபகற்ப நதி மேம்பாட்டு ஆணையம்' ஏற்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கங்கை- காவிரியை நேரடியாக இணைக்க சாத்தியம் இல்லை. ஆனால் தென்னக நதிகளை இணைத்தால், இமயமலை நதிகளையும், பிறகு தென்னக நதிகளுடன் இணைதது விடலாம். எல்லா தரப்பில் இருந்தும் இதை நிறைவேற்ற நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே திட்டத்தை இறுதி செய்ய வேண்டியது அவசியம். பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு கூட இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். பிரதமர் வாஜ்பாயை சந்திக்க ஒரு குழுவை அழைத்துச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

யாருடனும் மோதல் போக்கின்றி, மூடத்தனம் இல்லாத முறையில் நான் காவிரி பிரச்சினையில் மேற்கொள்ளும் இந்த அணுகுமுறை பல்வேறு தரப்பிலும் பாராட்டப்படுகிறது. அதனால் இதில் தலையிட முடிவு செய்தேன். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதனால் அந்த மாநில விவசாயிகள் சந்தித்து வரும் கஷ்டங்களும் எனக்கு தெரியும். நதிகள் இணைத்தால் காவிரி சிக்கலுக்கு மட்டுமல்ல, இருமாநில பிரச்சினையும் தீர்ந்து விடும். எல்லாவற்றுக்கும் இது தெளிவு ஏற்படுத்தும்!'' என்று தெரிவித்திருந்தார் ரஜினி.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 42 - இணைப்புக்கு ஒரு மக்கள் இயக்கம்

 

 
01chkanRajini

ரஜினிகாந்துடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா| கோப்புப் படம்.

அப்போது அளித்த பேட்டியின்போது தான் அரசியலுக்கு வருவது விதிப்படிதான் நடக்கும் என்று வழக்கம் போல் குறிப்பிட்டிருந்தார் ரஜினி. அதில் ஆழமும், அழுத்தமும், யதார்த்தமும் நிறைந்தே இருந்தது.

'நான் அரசியலில் இறங்குவேனா என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் எதையும் தொலைநோக்குடன் பார்க்க மாட்டேன். காவிரி தவிர அரசியல் ஆதரவு திரட்டுவது என்றால், வறுமை ஒழிப்புக்கு முழக்கமிடுவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போல இதை மேற்கொள்வேன். ஆனால் இப்போதைக்கு, இன்றைய பிரச்சனையைத்தான் பார்ப்பேன். நாளைய விவகாரத்தை நாளை பார்க்கலாம். எனக்கு கிடைத்த எவையும் நான் தேடியதே இல்லை. எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு.

 

சினிமாவில் நுழைந்தபோது வில்லனாகத்தான் வந்தேன். ஆனால் ஹீரோ ஆகி விட்டேன். ஒரு ஸ்கூட்டரும், ஒரு படுக்கை அறை கொண்ட அப்பார்ட் மென்ட்டும்தான் நான் ஆசைப்பட்டது. ஆனால் எனக்கு கிடைத்திருப்பதை பாருங்கள். இந்த வீடு, கார்களை பாருங்கள். அரசியல் கட்சிகளும், மக்களும் எனது அரசியல் பிரவேசத்தை மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். இப்போது நான் ஒரு நடிகன். எனக்கு எதிர்காலத்தில் ஏதாவது வேறு ஒரு பதவி காத்திருக்கலாம். அது எனக்கு இப்பவே தெரியாது!’ என்றவரிடம், ‘நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்களா? அப்படி உணர்கிறீர்களா?’ என ஒரு கேள்வி. அதற்கு ரஜினியிடம் இப்படி பதில் புறப்படுகிறது.

‘அது ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. நான் வருவேனா மாட்டேனாங்கிறது தலைவிதிப்படிதான் நடக்கும். எதுவும் என் கையில் இல்லை. எதையும் நான் தடுக்கவும் முடியாது!’

‘ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு நீங்கள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நேரத்தில் அவரிடம் நதி நீர் இணைப்பு பற்றி நீங்கள் பேசமுடியுமா?’ என்றும் கேள்வி.

அதற்கும் ரஜினி, ‘ஜெயலலிதாவுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்த திட்டத்திற்கு (நதி நீர் இணைப்பு) அவரை சம்மதிக்க வைப்பதில் எனக்கு எந்த சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா இப்போது சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லோருடைய நலனையும் கருதி ஜெயலலிதா இந்த திட்டத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்!’ என்றே பட்டென்று பதில் தந்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலையே வேறு மாதிரியாக இருந்தது.

ரஜினி தான் நடத்தப் போகும் மக்கள் இயக்கத்துக்கு ஆதரவு கேட்க, ஒரு சந்திப்பு நடத்த ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக்கடிதம் கிடப்பில் போடப்பட்டது. அவை வெகுஜன மீடியாக்களில் செய்திகளாக திரிந்தன.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கர்நாடகா போராட்டக்காரர்களை அப்போதைக்கு ஜகா வாங்க வைத்ததன் மூலம் அதை தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாக, அதுவும் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவின் வெற்றியாக கொண்டாட எண்ணியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. எனவே அதை ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசியல் தாரை வார்க்க, ஜெயலலிதா விரும்பவில்லை என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருந்தது.

எனவே முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்டு இருபது பேர் அடங்கிய கலைக்குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை சந்திக்க முடிவு செய்தார் ரஜினி. அங்கே மத்திய அரசு சார்பாக நதி நீர் இணைப்புக்கு ஓர் உயர்மட்டக்குழுவை அமைக்க முடிவு செய்திருந்தனர் வாஜ்பாய் மற்றும் அத்வானி. அதில் ரஜினியை உறுப்பினராக்கவும் திட்டம் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்திலும் வலுவான பேச்சு உலா வந்தது.

அதன் மூலம் ரஜினியை பாஜக ஆதரவாளர் ஆவார் என்றும், இது பற்றி சோ ரஜினியிடம் பேசுவார் என்றும் அதில் தகவல்கள் சிதறின.

இதே நேரத்தில் ரஜினி நடத்தப்போகும் இந்த இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய ஒரு கமிட்டி போடவும் பாமக முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் செய்திகள் பரவி நின்றது. அதே சமயம் மத்திய அரசு அமைக்கும் கமிட்டியில் ரஜினி இடம் பெறுவதையும் ஜெயலலிதா எதிர்ப்பதாக மீடியா தகவல்கள் உழன்றன. அதில் முக்கியமாக சுவாமி சச்சிதானந்த மகராஜ் இறந்த பிறகே அரசியல் ரீதியாக ரஜினியிடம் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் எதிரொலியே அவரின் உண்ணாவிரதம், மக்கள் இயக்கம், நதி நீர் இணைப்பு கோரிக்கை போன்ற இந்த பொதுநல செயல்பாடுகள் என்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்களிடமிருந்தே தகவல்கள் புறப்பட்டன.

‘அமெரிக்காவுக்கு சுவாமிஜியின் உடல் கொண்டு போகப்பட்ட சமயம் கூடவே சென்றார் ரஜினி. அங்கேயே மொட்டையடித்து குரு தீட்சை பெற்றுக் கொண்டார். இத்தகைய தீட்சை சச்சிதானந்த மகராஜ் ஆசிரமத்து சீடர்களில் ஆன்மிக நிலையில் மிக உயர்ந்த நிலைக்குப் போகிறவர்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். தமிழ்த் திரையுலகினர் காவிரிக்கான போராட்டத்தில் குதித்தபோது தான் தனிமைப்படுத்தப்பட்டது மிகவும் பாதித்தது ரஜினியை.

அதில் எழுந்த உள்ளார்ந்த ஆன்மிக எழுச்சிதான் அவரை தனித்த உண்ணாவிரத எண்ணத்திற்கு தள்ளி எதிர்த்தவர்களை கூட தன்னகத்தே வரவழைத்தது. மறைமுக எதிரிகளை கூட வலிய வந்து வாழ்த்து சொல்லவும் வைத்தது. அதில் கிடைத்த வரவேற்பு நதி நீர் இணைப்பு, மக்கள் இயக்கம் என்றெல்லாம் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பேச வைத்திருக்கிறது. கேளம்பாக்கத்திலுள்ள வீட்டிலிருந்தபடியே இந்தத் திட்டம் குறித்த பரிசீலனையில் இருக்கும்போது அவுருக்கு உறுதுணையாக பிரபல பத்திரிகையாளர் ஒருவரே இருந்துள்ளார். அவரிடம் மனம் விட்டும் பேசியிருக்கிறார். அந்த சமயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்போது அவருடன் தான் நதிநீர் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்திருப்பதாகவும், அது தமிழ்நாட்டிற்கு நல்ல பயனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘இதையெல்லாம் என்னிடம் சொல்லி என்ன பயன்? மக்களுக்கு போனாத்தானே பிரயோஜனம்?’என்று பத்திரிகை நண்பர் சொன்ன பிறகே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். தான் தொடங்க உத்தேசித்துள்ள மக்கள் இயக்கம் குறித்து அதன் பிறகே பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார்!’ என்றெல்லாம் அதில் விஷயங்கள் கனன்றன.

அதே சமயம் ‘அவர் ஒரு கட்சியை ஸ்தாபித்து அதை வழிநடத்த முடியுமா?’ என்ற கேள்விகளும் மீடியாக்களில் வந்த வண்ணம் இருந்தன. அது அரசியல் நோக்கர்களின் பார்வையில் சாத்தியம்; சாத்தியமில்லை என்கிற ரீதியில் வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள் நடக்காத குறையான விவாதப் பொருள் ஆனது.

02chrgnrajini%20sathyanarayana%20rao

அண்ணன் சத்தியநாராயண ராவுடன் ரஜினி | கோப்புப் படம்.

 

‘1996ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே திமுக, அதிமுக தவிர்த்த இன்னொரு இயக்கம் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்கிற உணர்வோடுதான் ரஜினி இருந்தார். அந்த வகையில்தான் காங்கிரஸை ஆதரிக்க அவர் முன்வந்தார். நரசிம்மராவ் அன்றைக்கே அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் தமிழகத்தின் தலைவிதியே மாறி இருக்கும். ஆனால் நரசிம்மராவ் ஒப்புக் கொள்ளாததால்தான் காங்கிரஸ் உடைந்து விட்டது. உடைந்த தமாகாவை மட்டும் ஆதரிக்க மனசில்லாமல்தான் திமுகவையும் சேர்த்து ஆதரித்தார் ரஜினி. கூட்டணிக்கும் பக்கபலமாக நின்று வெற்றியடையவும் வைத்தார். அதனால் அரசியல் பலம், கூட்டணியின் அவசியம் எல்லாம் தேர்தல் அரசியலில் எவ்வளவு கோலோச்சும் என்பது அவருக்கு தெரிந்தே இருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் ரஜினியின் ரசிகர்கள் யாரையோ ரஜினி ஆதரிப்பதை விட நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதை இப்போது ரஜினி உணர்ந்தும் இருக்கிறார். அதற்கான காலமும் நேரமும் சரியா என்பதை இந்த இடத்தில் உரசிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்!’ என்றும் கூட ஒரு பிரபல தமிழ் பத்திரிகை தன் பார்வையை விரித்திருந்தது.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 43 - போகாத ஊருக்கு வழி?!

 

 
01ChRGNRajini%20Vairamuthu

ரஜினி, வைரமுத்து

அத்துடன் ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருடன் எல்லாம் கூட்டணி வைப்பார் என்றும் கூட கற்பனை அரசியல் உலா சென்றிருந்தது சில மீடியாக்கள்.

‘அப்போது ரஜினிக்கு நெருக்கமான விதத்தில் அப்போது தென்பட்டது ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைதான். மருத்துவர் ராமதாஸிடமிருந்து தாக்குதல்கள் வந்தபோதும், காவிரி உண்ணாவிரதத்தின் போதும் முதலில் ஆதரவுக் குரல் கொடுத்ததும் ப.சிதம்பரம்தான். 'பாபா' பட ப்ரிவியூவுக்கு கூட ரஜினி அழைத்த ஒரே அரசியல் பிரமுகர் இவர் மட்டுமே. ஆக, இவருடன் கூட்டணி உறுதிப்பட்ட விஷயம். அடுத்தது காங்கிரஸ். தானே நேரடியாக களம் இறங்கும் பட்சத்தில் சோனியா காந்தியும், தமிழகத்திலுள்ள காங்கிரஸ் தலைமையும் ஒத்துழைத்தால், திமுக, அதிமுக, பாஜக தவிர்த்த ஒரு வலுவான மூன்றாவது அணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றி விட முடியும். இதற்குத் தலித் இயக்கங்கள், சிறுப்பான்மை இயக்கங்களின் ஒத்துழைப்பும் இருக்கும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு!’ என்றது ஒரு தரப்பு.

 

‘அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அரசை எதிர்த்து மக்கள் மத்தியில் பல்வேறு அதிருப்திகள். இந்த அதிருப்தியை ஒருங்கிணைக்கிற வகையில் திமுகவில் செயல்பாடில்லை. அதற்குள் ஒரு வித மந்தகதியும், உள்கட்சிக்குழப்பமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டையுமே ஆதரிப்பதில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டார் ரஜினி. அவருக்கு கருணாநிதி மீது இருக்கிற மரியாதை திமுக மீது இல்லை. என்னதான் ஆன்மிகம் பேசினாலும் பாஜக பக்கமும் போகத் தயாரில்லை. மனதளவில் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கி விட்டார். இப்போது அவர் பேச்சுகள் அதற்கான அறிகுறிகள்தான். மாறி மாறி திராவிடக்கட்சிகளே ஆட்சிக்கு வந்து, நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு, ஒரு நல்ல மாற்றாகவும், இந்த மூன்றாவது அணி இருக்கும். ஒரு புறம் ஆன்மிகம்; இன்னொருபுறம் அரசியல் பார்வை என்றிருக்கும் ரஜினி, இயக்கத்தை தொடங்கப் போவது உறுதி. ஆனால் அது எப்போது என்பதை காலமும், அரசியல் நெருக்கடிகளும், அதற்கான தேவைகளும்தான் தீர்மானிக்கும்!’ என்றது இன்னொரு தரப்பு.

வேறு சிலரோ, ‘இதெல்லாம் இருந்தாலும் ரஜினி அடிப்படையில் தனிமையை விரும்புபவர். தன்னுடைய உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுபவர். அரசியல் கட்சியைத் தொடங்கினால் தன்னுடைய வழக்கமான இயல்பை விட்டு விலகி, கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து செயல்பட வேண்டியிருக்கும். தன்னுடைய இயக்கத்தினர் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என ரஜினி விரும்பலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லாம் அரசியல் ரோல் மாடல்களாக திராவிடக் கட்சிகளின் குணாம்சத்தையே திமுக, அதிமுக மாவட்ட, வட்ட செயலாளர்களின் செயல்பாடுகளையே கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் ரஜினி?’ என்று எதிர்நிலை கேள்விகளும் கேட்டனர். இவையெல்லாம் மீடியாக்கள், செய்தித்தாள்களில் அப்போது கட்டம் கட்டின செய்திகள்.

இதே சமயம் பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் ஒருவர் ஒரு வார இதழுக்கு, ‘ரஜினி நதிகள் இணைப்பு பற்றி என்னிடம் விவாதித்தார்!’ என பேட்டி அளித்திருந்தார். அது குறிப்பிட்ட சில பத்திரிகைகளிலும் வெளியானது. ‘இந்தியாவிலுள்ள நதிநீர் இணைப்பை பற்றிய எனது பேட்டியை தனியார் நியூஸ் சேனலில் சில நிமிடங்கள் ஒளிபரப்பினார்கள். பேட்டி ஒளிபரப்பான மறுநாள் நான் எங்கிருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு சத்தியநாராயணா, நாகராஜ் என் வீட்டை தேடி வந்து விட்டார்கள். ‘உங்களை ரஜினி சார் பார்க்க ஆசைப்படுகிறார்!’ என்றார்கள். நானும் சம்மதித்தேன். மறுநாள் காலை வீட்டிற்கு கார் அனுப்பினார்கள். காலை பத்தரை மணிக்கு அவரது அருணாசலா ஓட்டலுக்கு கார் சென்றது. அங்கே ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ரஜினி நதிநீர்ப் பிரச்சனையை பற்றி மிக ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொண்டு டெக்னிக்கல் விவரங்கள் அத்தனையையும் நுணுக்கமாக கேட்டார்.

என் கூடவே பொதுப்பணித்துறையில் பணியாற்றிய இரண்டு முன்னாள் தலைமைப் பொறியாளர்களையும் ஆடிட்டர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தேன். நதி நீர் இணைப்பு விஷயங்களில் நிபுணர்கள் என்னுடன் வந்தவர். எங்களுடன் இரண்டு மணிநேரம் ரஜினி பேசினார். சின்ன சின்ன விஷயங்களை கூட புத்தி கூர்மையுடன் விவாதித்து தெளிவுபடுத்திக் கொண்டார். நதிநீர் இணைப்புத் திட்டத்தில் தமிழ்நாடு பெறக்கூடிய தண்ணீர் அளவு எவ்வளவு? பாசனப்பகுதி எவ்வளவு? போன்ற புள்ளி விவரங்களைக் கேட்டறிந்தார். அடுத்தநாள் அதுகுறித்த புள்ளி விவரங்களை சத்திய நாராயணாவும், நாகராஜூம் என் வீட்டிற்கு வந்து வாங்கிச் சென்றார்கள். ரஜினிகாந்த் அவற்றையெல்லாம் ஆழ்ந்து படித்துவிட்டு அதற்குப் பிறகே பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

சந்திரபாபு நாயுடு, எஸ்.எம்.கிருஷ்ணா, சோனியாகாந்தி ஆகியோரையும் ரஜினி சந்தித்து வருவதாக அறிகிறேன். காங்கிரஸ் கட்சிதான் கேரளத்திலும், கர்நாடகத்திலும் ஆளுங்கட்சி. எனவேதான் அவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். மேலும் நான்கு மாநில மக்களவை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் வேண்டும். பிரதமர் வாஜ்பாயையும் அவர் சந்திக்க உள்ளார். ரஜினி நதிநீர் இணைப்பு பற்றி பேசிய பின்புதான் அந்தத் திட்டமே சூடு பிடித்துள்ளது. நிறைய மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். நதிகளை இணைத்தால்தான் நாடு முன்னேறும் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த செய்தி மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது.

ரஜினியிடம் பேசியபோது இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முதல் நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னேன். தென்னக நதிகள் இணைப்பு அபிவிருத்தி வாரியம்’ அமைப்பதற்கு மக்களவையில் ஒரு சட்டம் இயற்றித் தர வேண்டும். இது மட்டும்தான் அரசு செய்ய வேண்டியது. அந்த அமைப்பை ஏற்படுத்தி விட்டால் மற்ற ஏற்பாடுகளையெல்லாம் அந்த வாரியமே செய்து விடும் என்பதை அவரிடம் எடுத்து சொன்னேன். அதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்ட ரஜினி இந்த நடவடிக்கைகளில் இறங்கியும் விட்டார்!’ என அவரின் பேட்டி வெளியாகியிருந்தது.

அதே சமயம் ரஜினியின் இந்த நதிகள் இணைப்பு இயக்கம் குறித்து அரசியல் தரப்பில் விமர்சனங்களும், ஆதரவுக்குரல்களும் வெளிப்படையாகவே ஒலிக்க ஆரம்பித்தன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு பேட்டியில், ‘கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடு’ என்கிற போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்புகிறது ரஜினியின் இந்தப் பேச்சுகள். நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஏதோ அவர் புதியதாக கண்டுபிடித்த விஷயம் இல்லை. இது ஒரு நீண்ட காலத் திட்டம். பெரியார் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் பலர் இதைப் பற்றி நிறைய பேசி விட்டார்கள். மேலும் இதைப் பற்றி பேசவேண்டிய இடம் மக்களவைதான். ரஜினி சொல்வது போகாத ஊருக்கு வழிகாட்டுவது ஆகும்!’ என சாடியிருந்தார்.

‘நாம் கர்நாடகத்திடம் 205 டிஎம்சி தண்ணீருக்கு போராடுகிறோம். அதேசமயம் மகாநதி, நர்மதா நதிகளில் வீணாகும் தண்ணீர் மட்டும் 700 டிஎம்சி என்கிறது ஒரு கணக்கு. 1972 ஆம் ஆண்டு கங்கை காவிரி இணைப்புக்கு 2640 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால் வெட்ட வேண்டும். அதன் மூலம் 40 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக பாசனம் பெருகும் என்றார் கே.எல்.ராவ். அப்போதைய திட்ட மதிப்பீடு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அதே திட்டத்திற்கு ஐந்தரை லட்சம் கோடிகள் ஆகுமாம். இதை பற்றி ராஜாஜி, எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பாஜக இதை தேர்தல் அறிக்கையில் சொல்லியும் இருக்கிறது. ஆரம்பித்திலிருந்து இந்த விஷயத்தில் அக்கறை காட்டியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி. இப்போது காலம் கனிந்து வந்திருக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருக்கும் நேரத்தில் இந்தப் பெரிய திட்டம் அமலாகி விடும். சுப்ரீம் கோர்ட்டும் கருத்து தெரிவித்துள்ளது. ஆக, எல்லாம் கனிந்த நேரத்தில்தான் நண்பர் ரஜினி தென்னக நதிநீர் இணைப்பை பற்றி சொல்லியிருக்கிறார். இது ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டிய விஷயம்!’ என்று தன் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார் பாஜக பிரமுகர்களில் ஒருவரான இல.கணேசன்.

இதே விஷயத்தில் சுப்பிரமணியன் சுவாமி (அப்போது ஜனதா கட்சி தலைவர்) ஒரு படி மேலே போய் ரஜினியின் கருத்துக்கு அழுத்தம் தந்தார்:

கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம். ஆனால் தென் இந்திய நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை நதிகளை இணைப்பது சாத்தியம். இந்த நதிகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் மூன்றாயிரம் டிஎம்சி நதி நீர் கடலில் போய்க் கலக்கிறது. அதை காவிரி, வைகைக்கு கொண்டு வரலாம். ரஜினியின் இந்த மக்கள் இயக்கத் திட்டத்தால் இதை நிறைவேற்ற முடியும். இதற்கு ஆகும் செலவை உலக வங்கியிடம் கடனாக பெறலாம். ஐந்து வருடங்களிலிருந்து ஏழு வருட காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம். அப்படி பெற்ற கடனை நதிநீர்ப் பாசனம், விவசாயம், உற்பத்தி மூலம் வரும் வருமானத்தால் ஐந்தே ஆண்டுகளில் அடைத்து விட முடியும். ரஜினிகாந்தை அக்டோபர் 24-ம் தேதி தாம்பரம் தாண்டி உள்ள அவரது பண்ணை இல்லத்தில் சந்தித்தேன். உரையாடல் முழுக்க நதிநீர் பற்றித்தான் இருந்தது. நடுவே கொஞ்சம் ஆன்மிகம். அரசியல் பற்றி பேசவில்லை!’

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 44 -அவருக்கு இழைக்கும் அநீதி

 

 
07THRAJINIjpg

ரஜினி, சோ, ஜி.கே.மூப்பனார் | கோப்புப் படம்.

அந்த காலகட்டத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான சோ இது சம்பந்தமாக பேசிய விஷயம் முக்கியமானது. ரஜினி சொல்லும் திட்டம் சாத்தியமா, ரஜினியின் பின்னணியில் நீங்கள்தான் இயக்குகிறீர்களா போன்ற சந்தேகங்களுக்கு விரிவாக அவர் பிரபல வார இதழ் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.

அது இதுதான்:

 

‘தனிமனிதனாக நின்று இதை செய்யப்போவதாக ரஜினி சொல்லவில்லை. பலருடைய ஒத்துழைப்பை பெற்ற ஒரு தனி மனிதன் முயற்சித்தால் அது நிச்சயமாக சாத்தியம். ரஜினி அறிக்கை வந்ததைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவும் வந்துள்ளது. துணை பிரதமர் அத்வானியும் பேசியிருக்கிறார். மத்திய அரசே இதில் முனைப்பு காட்டுகிற போது, ‘மக்கள் இயக்கம்’ என்பது தேவைப்படாமல் போகலாம். ரஜினியின் குறிக்கோள்களில் முக்கியமானது மத்திய அரசு இந்த நதி நீர் இணைப்பைச் செயலாக்க வேண்டும் என்பதுதான். எனவே உடனடியாக மக்கள் இயக்கம் என்பதில் முனைப்பு அவசியமில்லாமல் போகலாம். பேச்சோடு மத்திய அரசு நின்று செயலலில் ஈடுபட்டாலோ அல்லது மாநில அரசுகள் பிரச்சினைகளைக் கிளப்பி விட்டாலோ, அந்த சூழ்நிலையில் அவருடைய மக்கள் இயக்கத்திற்கு அவசியம் ஏற்படலாம்!’

இந்த திட்டத்தின் பிரம்மாண்டத்தை உணராமல் சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறாரா ரஜினி?

இத்திட்டத்திற்கு எடுத்த எடுப்பிலேயே தன் சார்பில் ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார். பிறகு பல நிபுணர்களோடு கலந்தாலோசித்து இது சாத்தியமா, என்ன செலவாகும், என்னென்ன சிக்கல்களை இதற்கு கடக்க வேண்டி வரும். எந்த அளவுக்கு பயன்தரும். எவ்வளவு வருடங்கள் தேவைப்படும் என்பதை பற்றியெல்லாம் விவரங்கள் அறிந்துள்ளார். இது சம்பந்தமாக இதுவரை பிரசுரமாகியுள்ள பல தகவல்களையும், ஆய்வுகளையும் படித்துள்ளார். கர்நாடகா முதல்வர் கிருஷ்ணாவிடமும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும் முதல் கட்டமாகப் பேசியுள்ளார். அடுத்து தமிழகத்தின் முன்னாள், இந்நாள் முதல்வர்கள், பிரதமர், துணை பிரதமர், முன்னாள் பிரதமர்கள் போன்றவர்களுடன் பேசி வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். அதாவது மக்களின் முக்கியப் பிரதிநிதிகள் எல்லோரும் இதில் ஒருமித்து செயலாற்ற வழி செய்வதுதான் அவர் திட்டத்தின் ஒரு பகுதி. ஆகவே இதில் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையின் தன்மையை உணராமல் பேசிவிட்டார் என்று சொல்ல முடியாது!

நம்முடைய அரசியல்வாதிகளைத் தாண்டி இவ்வளவு பெரிய மெகா திட்டத்தை செயல்படுத்தி விட முடியுமா? முட்டுக்கட்டை போட மாட்டார்களா?

இப்படிச் சொல்கிறவர்கள் பொதுவாக கங்கை, காவிரி இணைப்பைப் பற்றி பேசுகிறார்கள். அதில் பல சிரமங்கள் இருப்பதால் செய்து முடிப்பது கடினம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் தென்னக நதி நீர் இணைப்பைப் பொறுத்தவரை கடக்க முடியாத சிக்கல்கள் பெரிதாக இருக்காது என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, எவ்வளவு மக்கள் இடம் பெயர நேரிடும், அவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்படும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. தென்னக நதி நீர் இணைப்பை பொறுத்தவரை இது கூட பெரிய பிரச்சனையாகாது என்பது நிபுணர்கள் கருத்து. மகாநதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் ஒடிசா மாநிலம் கூட இதற்கு சம்மதம் தெரிவிப்பது நல்லது என நினைக்கலாம். காவிரி நீர், கர்நாடகம், தமிழ்நாடு இரண்டுக்கும் சேர்த்து போதவில்லை. ஆகவே இரண்டு மாநிலமும் ஆர்வம் காட்டும். கேரளம் கூட பிரச்சினையாக இருக்காது என்றே நினைக்கிறேன். இம்மாதிரித் திட்டங்களுக்கு சர்வ தேச நிதி அமைப்புகள் உதவி செய்யக்கூடும். நில உரிமையாளர்கள் உதவி செய்யலாம். வேலை வாய்ப்பும் பெருமளவு பெருகும். ஆக, இது நடக்கக்கூடிய காரியம்தான்!

ரஜினி அரசியலுக்கு வர நதி நீர் இணைப்பை ஓர் அஸ்திரமாக இறக்குகிறாரா?

அரசியலுக்கு வர அவருக்கு இது தேவையில்லை. இதனாலேயே தமிழகத்தின் பெருவாரியான மக்கள் யாருக்கும் ஆதரவு காட்டி விடமாட்டார்கள். உண்மையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக ரஜினி வர வேண்டுமென விரும்புகிறார்கள். அதுதான் அவர் பலம்!’

ரஜினி பல விஷயங்களில் குழம்பக் காரணம் உங்கள் ஆலோசனையைக் கேட்பதால்தான். நீங்கள் தொடர்ந்து அவரைக் குழப்புகிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?

எந்த விஷயங்களில் அவரைக் குழப்பினேன். சொல்லுங்கள். நீங்கள் சொல்வது என் மீது சொல்லும் குற்றச்சாட்டு அல்ல. ஒருவர் குழப்ப நினைத்தால் அவர் குழம்பி விடுவார் என்று ரஜினி மீது குற்றம் சுமத்துகிறீர்கள். இது நீங்கள் அவருக்கு இழைக்கும் அநீதி. இங்கே நீங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல பத்திரிகைகளும் சேர்ந்து முனைந்து அவரைக் குழப்ப முயற்சித்தும் கூட அவர் தெளிவாக இருக்கிறார். அப்படி இருக்க, நான் ஒருவன் மட்டும் தனித்து முயற்சித்து, அவரைக் குழப்பி விட முடியாது. கவலை வேண்டாம்!

பல்வேறு விஷயங்களில் ரஜினியின் மூலக்கதைக்கு, நீங்கள்தான் திரைக்கதை வசனம் எழுதுகிறீர்கள் என சொல்லப்படுகிறதே?

நான் திரைக்கதை எழுதினால் அதை என் மேஜை டிராயரில்தான் வைத்துக் கொள்ளலாம். பொழுது போகாத போது நானே என்னைப் பாராட்டிக் கொள்ளலாம். ரஜினி யாராலும் இயக்கப்படுபவர் அல்ல. தானாக சிந்தித்துத்தான் எந்த முடிவையும் எடுக்கிறார். இன்று பல பத்திரிகைகள்தான் ரஜினி இவரிடம் இதை சொன்னார்; அதை அவரிடம் சொன்னார் என்று கற்பனையாகவே வசனம் எழுதிக் கொள்கிறார்கள். அந்த பாவத்தைக் கூட நான் செய்வதில்லை!.

rajpg

ரஜினி | கோப்புப் படம்.

 

ரஜினியின் மக்கள் இயக்கம், தென்னக நதிகள் இணைப்பு சம்பந்தமான இந்த விஷயங்கள், விஐபி பேட்டிகள் எல்லாம் பத்திரிகை உலகில் இப்படி கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் 28.11.2002 அன்று சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்தார் ரஜினி.

அன்றைய தினம் பகல் 2 மணிக்கு சென்னை சாந்தோமில் இருந்த தமிழ்நாடு ஜனதா கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 30 நிமிடங்கள் பேசினார்கள். இந்த சந்திப்பின்போது ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரலேகா உடன் இருந்தார். இந்த சந்திப்பு முடிந்து சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘தென்னக நதிகள் இணைப்பு தொடர்பாக நான் ஓர் அரசியல் அறிக்கை தயார் செய்துள்ளேன். இந்த அறிக்கைக்கு தென்னக நதிகள் இணைக்கும் திட்டம் என்ற பெயரையும் சூட்டியுள்ளேன். அறிக்கை 40 பக்கங்கள் கொண்டதாகும். இந்த அறிக்கையை அடுத்ததாக வெளியிட இருக்கிறேன். அந்த அறிக்கை பற்றி பேசத்தான் ரஜினி என்னை சந்தித்தார். பேசினார். ஏற்கெனவே அவரை நான் 4 முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவரிடம் தென்னக நதிகள் இணைப்பு சாத்தியக்கூறுகள் பற்றி பேசியுள்ளேன். இப்போது நான் தயாரித்துள்ள அறிக்கையின் ஒரு பிரதியை அவரிடம் கொடுத்தேன். மேலும் நாங்கள் தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் விவாதித்தோம்.

நடிகர் ரஜினிகாந்த் என்னிடம், ‘மக்களவைத் தேர்தல் வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாய் திறந்து பேசினால் போதாது. இதில் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை பார்க்க வேண்டும்!’ என்றெல்லாம் கருத்துகள் சொன்னார். ரஜினிகாந்த் என்னை சந்தித்தது முக்கிய சந்திப்புதான். நாங்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம். ஆனால், அரசியல் பற்றி என்ன பேசினோம் என்பதை வெளியிட முடியாது. நடிகர் ரஜினிகாந்த் தேச பக்தி உடையவர். அவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் நாட்டுக்கு பல நன்மைகளை செய்யலாம்!’ என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியை சுப்பிரமணியன் சுவாமி அளித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதுவரை அரசியலுக்கு, அரசியல் கட்சிக்கு ரஜினி வரவில்லை. சுப்பிரமணியன் சுவாமி இப்போது ஜனதா கட்சியில் இல்லை. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக ஆகிவிட்டார். இப்படியான சூழலில்தான் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அந்த சூட்டோடு பேட்டி கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை கடுமையாகவே விமர்சித்தார். அது அத்தனை பத்திரிகை மீடியாக்களிலும் வெளியாகி பரபரப்பையும் கண்டது.

அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவுமே ரஜினியிடம் இல்லை. அரசியல் ஞானம் இல்லாதவர். ஊடகங்கள் மூலம் அவரால் அரசியல் நடத்த முடியாது. ரஜினி தனது அரசியல் கட்சியை அறிவித்து ஊழலுக்கு எதிரான கொள்கையை முன்னிறுத்தும்போது உண்மை அவருக்குத் தெரியவரும். அப்போது அவரே ஓடிவிடுவார். ரஜினிக்கு பாஜக ஆதரவு அளிக்குமா, அளிக்காதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினியை ஆதரிப்பதை நான் எதிர்ப்பேன்!’ என பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

15 வருடத்தில் என்னே அரசியல் முரண்? இதற்குள் சு.சுவாமிக்கும், ரஜினிக்கும் என்ன அரசியல் நடந்தது? அதை அவர்கள் இருவரில் ஒருவர்தான் சொல்ல வேண்டும். அதுதானே அரசியல்?

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.