Jump to content

யார் கொள்ளையர்?


Recommended Posts

  •  
  • யார் கொள்ளையர்?
Mahinda-Rajapaksa-Ranil-Wickremesinghe-a

யார் கொள்ளையர்?

 

நாளுக்கு நாள் சூடு­பி­டித்து வரும் நாட்­டின் அர­சி­யல் சூழ்­நிலை, கூட்டு அரசினது வசந்­த­கா­லம் முடி­வுற்று கொதி­நிலை உரு­வா­கி­யுள்­ள­தைப் புலப்­ப­டுத்தி வரு­கின்­றது. அந்த வகை­யில் இனி­வ­ரும் நாள்­கள் அர­சி­ய­லின் இருள் மற்­றும் கடுங்­கு­ளிர் நிலை எம்மை சிர­மத்­தில் ஆழ்த்­தக்­கூ­டும்.

வௌியில் தெரி­ய­வ­ராது, தம்­மைச் சுற்­றிச்­சூழ்ந் துள்ள அர­சி­யல் சிர­மங்­களே அரச தலை­வர் மைத்­தி­ரியை தமது அர­ச­த­லை­வர் பத­விக்­கா­லம் 5 ஆண்­டு­கள் தானா,அல்­லது ஆறு ஆண்­டு­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­குமா என்­ப­தைத் தௌிவு­ப­டுத்­து­மாறு உயர் நீதி­மன்­றத்தை கோரச் செய்­தி­ருக்­கு­மெ­னக் கரு­த­மு­டி­கி­றது. அது­வும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்ள பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­திக்கு முன்­னர் அது குறித்­துத் தெரிந்து கொள்ள அவர் முயன்­றி­ருப்­பது, இன்­றைய அர­சி­யல் சூழ்­நி­லை யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கி­றது. அவ்­வா­றில்­லாது விடில், அத்­த­கைய சிக்­கல்­மூ­லம் தமது பிர­தி­ பிம்­பத்­துக்கு ஏற்­ப­டத்­தக்க பாதிப்பை நன்­கு­ணர்ந்­துள்ள, மனச்­சாட்­சி­யுள்ள, அர­சி­யல் வாதி­யொ­ரு­வ­ரான மைத்­தி­ரி­பால அவ்­வி­தம் இந்த விட­யத்­தில் தலையிட்டிருக்கமாட்டார்.

பதவிக்காலம் குறித்து
மைத்திரி குழம்புவதேன்?

தமது பத­விக்­கா­லம் முடி­வ­டைய மேலும் இரண்­டாண்­டு­கள் மீத­மி­ருக்­கை­யில் தமது பத­வி­யைத் தாமா­கக் கைவிட்டு மீண்­டும் அரச தலை­வர் தேர்­தலை நடத்­தி­னார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த. அதன்­படி அர­ச­த­லை­வர் பத­விக்­கான அதி­கா­ரங்­க­ளில் பல­வற்றை பத­விக்கு வந்து நூறு நாள்­க­ளுக்­குள் நீக்­கு­வேன் என நாட்டு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்கி பத­விக்கு வந்த அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால, தமது பத­வி­யின் ஐந்து ஆண்­டு­கள் முடி­வில் தமது பத­வி­யி­லி­ருந்து உண்­மை­யில் வில­கிக் கொள்­ளும் விருப்பு உடை­ய­வ­ராக இருந்­தி­ருப்­பின், இவ்­வி­தம் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் தமது பத­விக்­கால நிறைவு குறித்து விளக்­கம் கோர வேண்­டிய தேவை எழ வாய்ப்­பில்லை என்­பது அர­சி­யல் குறித்து ஆர்­வம் காட்­டும் எவ­ரும் அறிந்த தொன்றே.

 

மகிந்த காலத்து பிணைமுறி
விவகாரம் குறித்து விசாரிக்க
ரவிகருணாநாயக்க கோரிக்கை

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது கவ­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்ள முன்­னாள் நிதி அமைச்­சர் ரவிகரு­ணா­நா­யக்க, எவரோ சில அதி­கா­ரி­கள் அரச தலை­வ­ருக்கு தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­வ­தாக கருதுவதாகத் தோன்றுகிறது. மத்­தி­ய­வங்கி பிணை­முறி ஊழல் விட­யத்­தில் குறித்த ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கை­யில் தாமொரு குற்றவாளியென குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என­வும், கடந்த மூன்­றாம் திகதி அரச தல­வைர் வௌியிட்ட விசேட அறிக்­கை­யில் தம்­மைப்­பற்­றித் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­கள் இத்­த­கைய தவ­றான தக­வல்­களை வழங்­கும் அதி­கா­ரி­க­ளது கப­டத்­த­னத்­தின் விளைவே என­வும் ரவி கரு­ணா­நா­யக மீண்­டும் மீண்­டும் தெரி­வித்து வரு­கின்­றார்.

உரிய சந்­தர்ப்­பத்­தில் இத குறித்து அரச தலை­வ­ருக்கு அவர் விளக்­க­ம­ளிப்­பார் என பொது மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.
தாக்­கு­த­லொன்­றுக்கு உட்­ப­டு­மொரு பிர­மு­கர், தமது பாது­காப்­புக்­காக நாலா­பு­ற­மும் எதிர்த்­தாக்­கு­தலை மேற்­கொள்­வது இயல்­பான தொன்றே. 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் முதல் கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தின் கீழ் இடம்­பெற்ற மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் தொடர்­பான அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் விசாரணை அறிக்கை தொடர் பான கவ­னத்­தைத் திசை திருப்­பும் நோக்­கி­லேயே, 2008 ஆம் ஆண்­டு­மு­தல் 2015 ஆம் ஆண்டு வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் மத்­திய வங்கி பிணை­முறி வழங்­க­லில் பெரும்­மோ­ச­டி­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐ.தே.கட்­சி­யின் தலை­வர் உள்­ளிட்ட கட்­சிப்­பி­ர­மு­கர்­கள் குற்­றச் சாட்டை முன்­வைக்க ஆரம்­பித்­த­னர்.

இத­னி­டையே குறித்த காலப்­ப­கு­தி­யில் மத்­திய வங்­கி­யின் ஆளு­ந­ராகப் பத­வி­வ­கித்த நிவாட்­கப்­ரால் குறித்த குற்­றச்­சாட்­டுக் குறித்த எந்­த­வொரு விசா­ர­ணைக்­கும் உத­வத் தாம் த­யா­ரெ­னத் தைரி­வித்­துள்­ளார்.

இவற்­றின் மத்­தி­யில், அண்­மை­யில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டம் கருத்து வௌியிட்ட முன்­னாள் நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக, மேற்­கு­றிப்­பிட்ட காலப்­ப­கு­தி­யில் இலங்கை மத்­திய வங்­கி­யின் பிணை­முறி வழங்­கல் செயற்­பா­டு­கள் தொடர்­பாக மட்­டு­மன்றி, ‘ஹெஜின்’ கொடுக்­கல் வாங்­கல் தொடர்­பில் அர­சுக்கு ஏற்­பட்ட நட்­டம் மற்­றும் கிறீக் பிணை­மு­றி­களை மத்­திய வங்கி கொள்­வ­னவு செய்­த­வேளை ஏற்­பட்ட நட்­டம் என்­பவை குறித்து விசா­ரிக்­கப்­ப­ட­ வேண்­டு­ மெ­னத் தெரி­வித்­தி­ருந்­தார்.

‘ஹெஜின்’ ஒப்பந்தம்
என்றால் என்ன?

மகிந்­த­வின் தலை­மை­யி­லான அர­சால் மேற்­கொள்­ளப்­பட்ட பெரும் ஊழல் மிகக் கொடுக்­கல் வாங்­க­லாக அந்த வேளை­யில் எதிர்க்­கட்­சி­யி­ன­ரால் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ‘ஹெஜின்’ கொடுக்­கல் வாங்­க­லின் பின்­னணி குறித்­துத் தெரிந்து கொள்­ளல் இவ்­வே­ளை­யில் பயன்­மிக்­கது.

‘ஹெஜின்’ என்­பது எந்­த­வோர் பொருள் அல்­லது சேவை­யின் விலை எதிர்­பா­ராத வகை­யில், கூடி­யும், குறைந்­தும் போகும் ஆபத்­தைத் தவிர்த்­துக் கொள்­வ­தற்­கா­கக் கைக்­கொள்­ளப்­ப­டும், ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட தோர் நிதிக் கையாள்கைச் செயற்­பா­டா­கும். அது ஒரு அள­வுக்கு காப்­பு­று­திக்கு ஒப்­பா­னது. சாதா­ரண கொடுக்­கல் வாங்­க­லொன்­றின்­போது விருப்­ப­ மில்­லாத செயற்­பாடு இடம்­பெ­று­மா­னால் அதன்­மூ­லமான நட்­டத்­தைத் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கா­கவே ஹெஜின் நடைமுறை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அதன்­படி, உலக பெற்றோலிய எரிபொருள் விலை எதிர்­பா­ராத விதத்­தில் உயர்­வ­டை­யு­மா­னால் அதன் மூல­மான நட்­டத்­தைத் தவிர்த்­துக் கொள்­வ­தற்­காக சில வங்­கி­க­ளு­டன் ‘ஹெஜின்’ ஒப்­பந்­தத்தை மேற்­கொண்­டி­ருந்த பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னம், உலக எரிபொருள் விலை உயர்­வ­டை­வ­தற்­குப் பதி­லாக 2008 ஆம் ஆண்­டின் நடுப்­ப­கு­தி­யில் எதிர்­பா­ராத விலை­வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக சிக்கலில் விழ நேர்ந்தது.

இத்தகையதொரு நிலை ஏற்­ப­ட­வும் இட­முண்­டென ஒப்­பந்­தம் தயா­ரிக்­கப்­பட்­ட­போது பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்­த­ரப்பு அனு­மா­னித்திருக்கவில்லை. 2008 ஆம் ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட ‘ஹெஜின்’ ஒப்­பந்த விதி­கள் பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத் துக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தின. உண்­மை­யில் கூட்டுத்தாபனத்தின் நிறை­வேற்று த­ரப்­பின் தீர்­மா­னம் தவ­றா­கிப் போனமை மட்­டுமே அத்­த­கைய பின்­ன­டை­ வுக்­குக் கா­ர­ணமேயொழிய, அது மத்­திய வங்கி பிணை­மு­றி ஊழல் சம்­ப­வம் போன்று திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட களவு அல்ல.

பெற்றோலிய எரிபொருள் விலை வீழ்ச்சியில் ஏற்பட்ட நட்டமேயொழிய அது ஊழலோ மோசடியோ அல்ல.

உண்­மை­யில் 2007 ஆம் ஆண்டு முதல் இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்டுத்­தா­ப­னம், இலங்­கைக்­குத் தேவை­யான பெற்றோலிய எரிபொருள் வகை­க­ளின் ஒரு பகு­தி­யைக் கொள்­வ­னவு செய்­த­போது சர்­வ­தேச வங்­கி­கள் சில­வற்­றி­னூ­டாக, முழு­உ­ல­க­முமே ஏற்­றுக்­கொண்ட ‘ஹெஜின்’ நடை­முறை­யைக் கைக்­கொண்டு வந்­தது.

இதன் மூலம் ஆரம்ப ஒன்­றரை வரு­டங்­க­ளில் கூட்­டுத் தா­ப­னம் குறிப்­பி ­டத்­தக்க அளவு இலா­பம் ஈட்­டி­யது. ஆனால் 2008 ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் எதிர்­பா­ராத வித­மாக உலக பெற்றோலிய எரிபொருள் விலை வீழ்ச்­சி­ய­ டைய ஆரம்­பித்­த­தை­ய­டுத்து அப்­போ­தைய ‘ஹெஜின்’­­­ஒப்­பந்­தம் இலங்­கைக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்தி வைத்­தது.

அந்த வேளை­யில் மூன்­று­பன்­னாட்டு வங்­கி­கள், கூட்­டுத்­தா­ப­னத்­தி­டம் நட்ட ஈடு கோரி வழக்­குத் தொடுத்­தன. பெருந்­தொகை நட்­ட­ஈட்­டைக்­கோ­ரிய அமெ­ரிக்க வங்­கி­யின் கோரிக்கை நீதி­மன்­றால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அதே வேளை பிரித்­தா­னிய மற்­றும் ஜேர்­மனி நாடு­க­ளது வங்­கி­க­ளின் நட்ட ஈட்­டுக்­கோ­ரிக்­கை­க­ளுக்­கான தீர்ப்­புக்­கள் வங்­கி­க­ளுக்­குச் சார்­பா­கவே அமைந்­தன. ஆயி­னும் குறித்த வங்­கி­க­ளு­டன் அரசு மற்­றும் பெற்­றோ­லி­யக்­கூட்­டுத்­தா­ப­னம்­மேற்­கொண்ட பேச்­சுக்­க­ளை­ய­டுத்து கோரப்­பட்ட நட்ட ஈட்­டுத்­தொகை குறைக்­கப்­பட்டு மொத்­த­மாக 89 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­களே நட்ட ஈடா­கச் செலுத்­தப்­பட்­டன.

இது அந்த வேளையை இலங்­கைப் பெறு­ம­தி­யில் 12.5 பில்­லி­யன் ரூபாய்­க­ளா­கும். அந்த வகை­யில் முன்­னர் குறிப்­பிட்­டமை போன்று, இது வர்த்­தக ரீதி­யி­லான நட்­ட­மே­யொ­ழிய, ஊழலோ, திருட்டோ அல்ல. இது விட­யத்­தில் ஊழல் இடம் பெற்­றி­ருத்­தால் இன்­றைய கூட்­டாட்சி அரசு அதற்­கான சட்ட நட­வ­டிக்கை எடுக்­காது தவிர்த்­தி­ருக்­குமா? மத்­தி­ய­வங்­கி­யின் கிறீக் பிணை­முறி கொள்­வ­னவு விட­யத்­தில் ஏற்­பட்ட நட்­டம் குறித்த குற்­றச்­சாட்டும் இத­னை­யொத்த தொன்றே.

மத்­திய வங்­கி­யால் நிர்­வ­கிக்­கப்­ப­டும் சில நிதி­யங்­கள் மற்­றும் அற­வீ­டு­களைத் திரட்டி, பொருத்­த­மான விதத்­தில் முத­லீ­டு­ மேற்­கொண்டு அவற்­றின் பெரு­ம­தி­யைக்­கூட்­டு­வது மத்­திய வங்­கி­யின் பொறுப்­புக்­க­ளி­லொன்று. மத்­திய வங்­கி­யின் நிதிச்­ச­பை­யில் உயர் கல்­வித்­த­ரா­த­ரங்­கள் மற்­றும் அனு­ப­வங்­க­ளைக் கொண்­டுள்ள அதி­கா­ரி­களே பணி புரி­கின்­ற­னர்.

திறமை வாய்ந்த முத­லீட்­டா­ளர்­கள் இத்­த­கைய நிதி­யம் மற்­றும் அற­வீடு மூலம் கிட்­டும் நிதி­யைப் பொருத்­த­மான முத­லீ­டு­க­ளில் முத­லிட்டு அதன்­மூ­லம் கிட்­டும் இலா­பத்தை அந்த முத­லீ­டு­க­ளு­டன் சேர்த்­துப் பெருக்­கிக் கொள்­வர். அவ்­வி­தம் மேற்­கொள்­ளப்­ப­டும் பல முத­லீ­டு­க­ளில் ஒன்றிரண்டு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னா­லும், ஏனை­யவை பெரும் இலா­ப­மீட்­டி­னால் மொத்­தத்­தில் அந்த முத­லீட்­டுத் தரப்பு இலாப மீட்­டிய தரப்­பாகக் கொள்­ளப்­ப­டும்.

கிறீக் பிணை­மு­றிக் கொள்­வ­னவு இலங்கை மத்­திய வங்­கி­யின் முத­லீட்­டுத்­த­ரப்­புக்கு தவ­றான தொன்­றாக அமைந்து விட்­டது. எதிர்­பா­ராத வகை­யில் கிறீஸ் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வீழ்ச்சி கண்­ட­தால் எதிர்­பார்த்த இலா­பத்­துக்­குப் பதி­லாக மத்­திய வங்கி நட்­டத்­தைச் சந்­திக்­க­ நேர்ந்­தது.

இந்த கிறீஸ் பிணை­முறி கொள்­வ­னவு, மத்­திய வங்கி மேற்­கொண்ட பெரும் குற்­ற­மாக எதிர்த்­த­ரப்­பு­க­ளால் விமர்­சிக்­கப்­பட்டு வந்­தது. அது தொடர்­பாக மத்­திய வங்கி ஆளு­நர் உட்­பட வங்­கி­யின் நிதிச்­ச­பைக்கு எதி­ராக ராஜாங்க அமைச்சர் சுஜீவ் சேனசிங்­கா­வால் உயர்­நீ­தி­மன்­றில் வழக்­குக்­கூ­டத் தொடுக்­கப்­பட்­டது. ஆயி­னும் உயர்­நீ­தி­மன்­றமோ, குறிப்­பிட்ட முத­லீட்டை மேற்­கொள்ள மத்­திய வங்­கி­யின் நிதிச் ச­பைக்கு பூரண, சட்­டப்­ப­டி­யான உரிமை உள்­ள­தெ­னத் தெரி­வித்து, அந்த விட­யத்­தில் தவ­றே­தும் நிக­ழ­வில்­லை­யெ­னத் தீர்ப் ப­ளித்­தி­ருந்­தது.
உண்­மை­யில் அத்­த­கைய முத­லீ­டு­கள் ஒன்­றால் நட்­டம் ஏற்­பட்­ட­து­டன் அது அமெ­ரிக்க டொலர் 6.6 மில்­லி­யன் அள­வா­ன­தா­கும்.

அது முன்­னாள் மத்­திய ஆளு­நர் அஜித் கப்­ரால் மற்­றும் நிதிச்­ச­பை­யின் செயற்­பட்­டால் ஏற்­பட்ட பெரும் குற்­றம் என எவ­ரா­வது கூறு­வார்­க­ளா­யின், கீழ்க்­கா­ணும் தர­வு­கள் குறித்து அவர்­க­ளால் எத்­த­கைய விமர்­ச­னத்தை முன்­வைக்க இய­லும்? 2011 ஆம் ஆண்­டில் இலங்கை மத்­திய வங்கி மேற்­கொண்ட முத­லீ­டு­கள் கார­ண­மாக 430 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் இலா­ப­மீட்­டப்­பட்­டி­ருந்­தது. அது 6.6 வீத இலா­பம் என்­ப­து­டன் மத்­திய வங்­கி­யால் ஒரு­போ­தும் ஈட்­டப்­ப­டாத உயர் இலா­ப­மாக அமைந்­தி­ருந்­தது.

உயர் நீதி­மன்ற வழக்­குத் தீர்ப்­பில் குறிப் பிடப்­பட்­ட­படி, அந்த வேளை­யில் கிறீஸ் பிணை­முறி முத­லீட்­டில் முத­லி­டப்­பட்ட தொகை, மத்­திய வங்­கி­யால் முத­லீடு செய்யப்ப­டத்­தக்க முழுத்­தொ­கை­யின் தசம் 6 (0.6%) வீதம் மட்­டு­மே­யா­கும்.அன்று இந்த விட­யம் குறித்து எதிர்க்­கட்­சி­யி­னர் மேற்­கொண்ட பரப்­புரை, மத்­திய வங்கி முற்று முழு­தாக வங்­கு­ரோத்து நிலைக்கு உட்­பட்டு விட்­ட­தென நாட்டு மக்­கள் நம்­பும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் இன்றோ, நாட்டு மக்­கள் முன்­ன­ரை­விட அர­சி­யல், பொரு­ளா­தார ரீதி­யில் அறி­வும் அனு­ப­வ­மும் மிக்­க­வர்­க­ளாக ஆகி­யுள்­ள­னர்.

அந்த வகை­யில் முன்­னைய மகிந்த அர­சின் காலத்­தில் மத்­திய வங்­கி­யின் செயற்­பா­டு­க­ளால் ஏற்­பட்ட நட்­டத்­தை­விட, இன்­றைய கூட்டு அர­சுக்கு முண்டு கொடுக்­கும் தரப்­பி­ன­ரால் மத்­திய வங்­கிக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாதிப்பு பல மடங்­கா­கும் என்­பதை நாட்­டு­மக்­கள் தௌ்ளத்­தௌி­வா­கத் தெரிந்து கொண்­டுள்­ள­னர் என்­பதே உண்­மை­யா­கும்.

http://newuthayan.com/story/63311.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.