Jump to content

ஒரு வீடும், சில மனிதர்களும்!


Recommended Posts

 
 
ஒரு வீடும், சில மனிதர்களும்!
 
 
 
 
 
 
 
 
E_1515148608.jpeg
 

''பால்காரரே... இன்னியிலிருந்து ஒரு மாசத்துக்கு, ரெண்டு லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க...'' என்ற கோகிலாவின் முகத்தில், அப்படியொரு சந்தோஷம்!
''என்ன கோகிலாம்மா... பையனும், பொண்ணும் குடும்பத்தோட வெளிநாட்டிலிருந்து வந்துருக்காங்க போல...'' என்றார், பாலை ஊற்றியபடி, பால்காரர்.
''மூணு வருஷம் கழிச்சு, அண்ணனும், தங்கச்சியும் ஒண்ணா லீவு போட்டு வந்திருக்காங்க... உங்களுக்குத் தான் தெரியுமே... கல்யாணமானதும், என் மக, மாப்பிள்ளையோட ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டாங்கிறது... என் மகன் சிவசு இருக்கிறதோ அமெரிக்காவுல... இந்த வருஷம் தான், ரெண்டு பேரும் சொல்லி வெச்சு, லீவு வாங்கி, அம்மாவ பாக்க வந்திருக்காங்க...''


''அவங்களப் பத்திதான் எனக்கு நல்லா தெரியுமே... நான் பால் ஊத்தி வளர்ந்த பசங்களாச்சே...உங்க பேரப் புள்ளைங்கள பத்தி சொல்லுங்க...''
பேரக் குழந்தை என்று சொன்னவுடன், கோகிலாம்மா முகத்தில், தனி சோபை வந்து உட்கார்ந்து கொண்டது.
''அதை ஏன் கேக்கறீங்க பால்காரரே... அப்படியே உங்க வாத்தியாரய்யாவ உரிச்சு வெச்சுருக்கான், சிவசுவோட மகன். அவன் பொண்ணு ரொம்ப அமைதி; நம்ம மீராவோட மகன் இருக்கானே ரெட்டை வாலு... அதுகளுக்குள்ள இங்கிலீஸ்ல தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசிக்குது; அப்பப்ப, தமிழும் திக்கித் திக்கி பேசுதுக...'' என்றாள்.
''ஆமாம்... உங்க அமெரிக்க மருமகப் பொண்ணு எப்படி இருக்காங்க...''


''அவளோட பூர்வீகம் தமிழ்நாடு தானே... அமெரிக்காவுல பிறந்து வளர்ந்த ஐயர் வீட்டு பொண்ணு... நல்ல பாந்தம்... 'கூட வேலை செய்யுது; பிடிச்சுருக்கு'ன்னு சொன்னான்; அவன் சந்தோஷம் தானே முக்கியம்... யாரை கல்யாணம் செஞ்சா என்ன... கடைசி வரை நிம்மதியா இருந்தா சரின்னு சம்மதம் சொல்லிட்டேன்; அதுகளும், ரெண்டு புள்ளைகளை பெத்து சந்தோஷமா இருக்குதுக...'' என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டிற்குள் இருந்து மகள் மீரா கூப்பிடுவது கேட்டது. ''சரிங்க பால்காரரே... பிள்ளைங்க எழுதுருச்சுட்டாங்க... போய் காபி போடணும்...'' என்றபடி வீட்டிற்குள் சென்றாள்.
''என்ன மீரா... அதுக்குள்ள எழுந்திருச்சுட்டே...'' என்றவளிடம், ''அம்மா, இங்க வந்து என் புள்ளையோட கை, காலப் பாரேன்... அம்மை போட்ட மாதிரி தடிச்சிருக்கு...'' என்றாள்.
''என்னடி சொல்றே...'' என்று பேரனின் அருகில் சென்று உற்றுப் பார்த்தவள், ''நேத்து கூட நல்லாத்தானே இருந்தான்... உடம்பெல்லாம் முத்து முத்தா இருக்கே... போய் சிவசுவ கூப்பிட்டு வா...'' என்றாள்.


''அண்ணா... துாங்கினது போதும், எழுந்து கொஞ்சம் வாயேன்...'' என்று அறைவாசலில் நின்று சத்தமாக குரல் கொடுத்தாள், மீரா.
துாக்கம் கலைந்து எழுந்து வந்த சிவசுவின் முகத்தில், மருத்துவருக்கே உரிய தோரணையும், கம்பீரமும் இருந்தது.
''என்ன ஆச்சு மீரா...'' என்று கேட்டவனிடம், கோகிலாம்மாள், ''சிவசு... இங்க பாரு புள்ளைய... கை, காலெல்லாம் கொப்புளம்... என்னாச்சுன்னு தெரியல...'' பதறினாள்.
மருமகனை உற்றுப் பார்த்தவன், ''இது, கொசுக்கடிம்மா... அவனுக்கு கொசுக்கடி புதுசுங்கறதால அலர்ஜியாயிருக்கு... மீராவ பத்தி தெரியாதா... எறும்பு கடிச்சாலே தேள் கொட்டின மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் செய்வா... நீதான், எல்லாத்துக்கும் மஞ்சள அரைச்சுப் பூசுவியே... அதுமாதிரி இதுக்கும் பூசு... சரியாப் போயிடும்...'' என்றவன், தன் தங்கையிடம், ''ஏண்டி வந்தவுடன் ஆரம்பிச்சிட்டியா... உங்கூட, எப்படித்தான், 40 நாள் இருக்கப் போறேனோ தெரியலயே...'' என்றான்.
''போடா, உனக்கென்ன... புள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா அந்த மனுஷன் எம்மேலதான் பாய்வாரு...''
அப்போது, தன், 'பாய் கட்' வெட்டப்பட்ட தலைமுடியை சிலுப்பியபடி, சிணுங்கலுடன் வந்தாள், சிவசுவின்
எட்டு வயது மகள்.


''என்னடி செல்லம்... என்ன ஆச்சு,'' என்று கேட்டாள், மீரா.
''ஆன்ட்டி, எனக்கு, 'டாய்லெட்' போகணும்.''
''அதுக்கென்ன போ...''
''எனக்கு இங்க இருக்கிற, 'டாய்லெட்' பழக்கம் இல்ல; அதுக்குள்ள விழுந்துருவேனோன்னு பயமா இருக்கு,'' என்றாள், சிறுமி.
இப்படி ஒரு பிரச்னையை யாரும் எதிர்பார்க்கவில்லை.
'இதை நான் யோசிக்கவே இல்லயே... பாவம் குழந்தைகள், அதுங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லியே... பாட்டிய பாக்க வந்து கஷ்டப்படுதுக...' கோகிலாம்மாளின் முகம் வாடியது.
''அதனால தான் அப்பவே சொன்னேன், வீட்ட இடிச்சுட்டு, மாத்தி கட்டலாம்ன்னு... நீதான் அப்பா கட்டின வீடு... ஒரு செங்கலக் கூட தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அடம் புடிக்கிற... காலத்தோட மாறப் பழகிக்கணும்மா...'' என்றான், சிவசு.
''இத்தன வருஷம் சொல்லியும் அம்மா கேக்கல... இப்ப சொன்னா மட்டும் கேக்கப் போறாங்களா... இப்ப, இவளோட பிரச்னைக்கு வழியச் சொல்லுண்ணா...''
''அம்மா... இவளுக்கு இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணையும், ஒரு வாழப்பழமும் குடு... அப்புறம் எங்க போகச் சொன்னாலும் போவா...'' என்றான், சிவசு.
''சிவசு... மேஸ்திரியக் கூப்பிட்டு பாத்ரூம மாத்தி, உங்க வசதிக்கு கட்டிக்கலாம்; நான் போய் அவர் கிட்ட சொல்லிட்டு வரேன்,'' என்றாள், கோகிலாம்மாள்.
''இரும்மா என்ன அவசரம்... பசங்க எல்லாரும் எந்திரிக்கட்டும்... என்ன டிபன் பண்ணியிருக்க...'' என்று கேட்டான்.
''இட்லிக்கு புதினா சட்னி கேட்டா மீரா. உனக்கு அடை பிடிக்குமே... வெல்லமும், வெண்ணெயும் கூட இருக்கு,'' என்றவள், அப்போது தான் எழுந்து வந்த மருமகளை நோக்கி, ''உனக்கு என்னம்மா வேணும்...'' என்று கேட்டாள்.


''எனக்கு எதுவா இருந்தாலும் ஓ.கே., ஆன்ட்டி. நான் பசிக்கு சாப்பிடறவ; ருசிக்கு இல்ல. உங்க புள்ளைக்குதான் நாக்கு நீளம். நான் எது செஞ்சாலும் எங்கம்மா சமையல் மாதிரி இல்லம்பார்; ஆனாலும் இப்படி வளர்த்திருக்க கூடாது; இப்ப நான்னா சிரமப்படறேன்,'' என்றாள்.
இதற்குள் பொடிசுகள் எல்லாம் எழுந்து விட, அதுகளின் அமளி துமளி ஆரம்பித்து விட்டது. தினமும் நெட்டில், 'சாட்' செய்தாலும், நேரில் பார்த்து பேசுவது போல் ஆகுமா!
கொண்டு வந்திருந்த பொம்மைகள், புத்தகங்களை எல்லாம் இறைத்து வைத்து, அததுகள் கதைகளை நெல்லிக்காய் மூட்டையாய், அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாக, டிபன் முடிய, ''அம்மா, உனக்கும் வயசாயிடுச்சு... ஒண்ணு எங்க கூட அமெரிக்கா வந்திடு; இல்ல, மீரா கூட ஆஸ்திரேலியா போ... இங்க, உன்னை தனியா விட்டுட்டு போக எங்களுக்கு மனசே வரல. அப்படி என்னதான் இருக்கு இந்த வீட்டில. இத விட்டு வரமாட்டேங்கிறே... உதிர்ந்து போன காரையும், கல்லுமா, பழைய காலத்து கட்டு வீடு. இடிச்சுட்டு கொஞ்சம் வசதியாவாவது கட்டித் தர்றேன்னு சொன்னா, அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கிற...'' என்றான், சிவசு.
''இங்க பாரும்மா... கதவு நெலயெல்லாம் உளுக்க ஆரம்பிச்சிட்டுது...'' என்றாள், மீரா.


கோகிலாம்மாள் மெல்ல எழுந்து கதவின் அருகே போய் நிலைப்படியை தடவினாள்.
''இந்த நெல வைக்கும்போது, மீரா மூணு வயசு குழந்த; எங்களுக்கு தெரியாம, பாத்ரூம் கழுவ வெச்சிருந்த பினாயில் பாட்டில எடுத்து, தண்ணி குடிக்கிற மாதிரி குடிச்சுட்டா. புள்ள செத்துட்டான்னே நினைச்சோம். என் மாமியாரு சிவன் கோவில்ல, 'எம் பேத்தி பிழைச்ச சேதி வந்தாத்தான் வீட்டுக்கு போவேன்'னு, மூணு நாளு பழியாக கிடந்தாங்க. அவங்க வேண்டுதல்ல தான் மீரா பிழைச்சது...'' கோகிலாம்மாவின் கண்கள், பழைய கால நினைவுகளில் ஒளிர ஆரம்பித்தது.
''ரியலி பாட்டி... '' என்று கேட்டாள், சிவசுவின் மகள்.
''ஆமாண்டி செல்லம்... உன் அப்பன் மாத்திரம் சாதாரணப் பட்டவன் இல்ல; இந்த வீடு கட்ட பூஜை செஞ்சப்ப, தேங்கா உடைச்சோம். அப்ப, 'நான் தான் தேங்காய உடைப்பேன்'னு ஒரே அழுகை. தேங்கா சரியா உடையணுமே... அப்புறம் ஒரு வழியா மேஸ்திரியும், அவனும் சேர்ந்து தேங்கா உடைச்சாங்க. தேங்காவுல பூ விழுந்திருக்க, உங்க தாத்தா முகத்தில அவ்வளவு சந்தோஷம்... 'எம் பிள்ள ராசிக்காரன்'னு தலையில துாக்கி வெச்சு ஆடினார். அப்பவும் விட்டானா... 'தேங்காத் தண்ணி தனக்குத்தான் வேணும்; மண்ணுல தெளிக்கக் கூடாது'ன்னு புரண்டு புரண்டு அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுதது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு...'' என்றாள்.


''டாடி நீங்களா இப்படியெல்லாம் செய்தீங்க... வெரி இன்ட்ரஸ்டிங்; பாட்டி... வேறென்ன எங்கப்பாவ பத்தின கதை இருக்கு; சொல்லுங்க...'' அதீத ஆர்வத்துடன் கேட்டாள், சிவசுவின் மகள்.
''பின்புறம் தோட்டத்தில் தெரியுதே ரெண்டு தென்னை மரம்... அது ஒண்ணு, சிவசு வெச்சது; இன்னொன்னு மீரா வெச்சது. இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு தண்ணி ஊத்துவாங்க. சிவசு கீழே விழுந்த தன்னோட பல் எல்லாத்தையும் அந்த மரத்துக்கு கீழ தான் புதைச்சு வெச்சிருக்கான்,'' என்றாள்.
''அய்யே... ஷேம் - ஷேம்... பல் விழுந்தா அத, டூத் பேரி கிட்டத்தான் குடுக்கணும்,'' என்றான், மீராவின் மகன்.
''நான் அந்த இடத்த பாக்கப் போறேன்... வாங்க... அந்த மரத்துக்கு கீழே தோண்டி, பல்ல பூரா எடுக்கலாம்...'' என்று
சிவசுவின் மகள் கூற, அவளைத்
தொடர்ந்து, வீட்டிற்கு பின்புறம் இருந்த தோட்டத்திற்கு ஓடினர், வாண்டுகள்.
பெரியவர்களும் மெதுவாக தோட்டத்திற்கு வர, ''அம்மா, இதுதான் உங்க தென்ன மரமா... லவ்லி...'' என்றான், மீராவின் மகன். உடனே, கோகிலாம்மாள், ''உங்க அம்மாவுக்கு தென்ன மரத்தை விட, அதோ, அந்த மா மரம் தான் ரொம்ப பிடிக்கும். பாவாடையை வழிச்சு கட்டிட்டு ஏறுவா பாரு... பசங்க தோத்தாங்க... ஒருநாள் அப்படித்தான் மாங்கா பறிக்க மரமேறி, மரத்து மேல இருந்த பச்சோந்திய பார்த்து பயந்து, கீழே விழுந்தா. மோவாய் கட்டையில நாலு தையல் போட்டோம்; அதோட, மரம் ஏறுறதை நிறுத்திட்டா...'' என்றாள்.
அழகாய் சிரித்தாள், மீரா.


''இந்த வேப்ப மரத்துக்கு கீழ தான் சைக்கிள நிறுத்துவான், சிவசு. தினமும் ஏதாவது ஒரு காக்கா, சைக்கிள் சீட்டு மேல, கழிஞ்சு வைக்கும். காக்காவை திட்டிட்டுதான் சைக்கிள் எடுப்பான். காக்காக்கு சோறு வைக்காதேன்னு கலாட்டா பண்ணுவான்...'' என்ற போது, சிவசு முகம் மலர்ந்தது.
''இந்த இடத்துல தான் மீராவும், எதிர்த்த வீட்டுல இருந்த அவ தோழியும் எப்பப் பாத்தாலும், பாண்டி விளையாடுவாங்க. மீரா ஓரக்கண்ணால் பாத்துட்டே, 'ரைட்டா... ராங்கா'ன்னு அழுகுணி ஆட்டம் ஆடுவா...'' என்றாள், கோகிலாம்மாள்.
''அம்மா அழுகுணியா... ஐய்யே ஷேம் ஆப் யூ மாம்...'' என்றான், மீராவின் மகன்.
''இது என்ன பாட்டி... இவ்வளவு பெரிய கன்டெய்னர்...'' என்று கேட்டான், சிவசுவின் மகன்.
''இதுதான் தண்ணி தொட்டி; இதிலதான் நெறைய தண்ணிய புடிச்சு வெப்போம். சிவசு குழந்தையா இருந்தப்ப, இதுல டயர் கட்டி நீச்சல் அடிப்பான். டாக்டருக்கு படிக்கும்போது, துாக்கம் வந்தா, நடு ராத்திரி தலையில தண்ணிய ஊத்திட்டு ஈரத் தலையோட படிப்பான். 'ஏண்டா இப்படி ஈரத் தலையோட உட்காந்து படிக்கிறேன்'னு கேட்டா, 'உள்ளே, டாக்டர் ஆகணும்ன்னு ஒரு தீ இருக்கும்மா... இந்த பச்ச தண்ணி தான் அந்த தீக்கு பெட்ரோல்'ன்னு எனக்கு புரியாத மாதிரி பேசுவான். இந்த புள்ள நல்லாயிருக்கணும்னு எனக்குள்ளே ஓயாம பிரார்த்தனை இருக்கும்...''


சிவசு அந்தக்கால நினைவுகளுக்கு போய் விட்டதை, அவன் மவுனம் காட்டிக் கொடுத்தது.
''ஆன்ட்டி, இது துவைக்கிற கல் தானே... இதுலயா இன்னும் துவைக்கிறீங்க... ஆத்துல மிஷின் இருக்கே...'' என்றாள், சிவசுவின் மனைவி.
''மிஷின்ல தான் போடுறேன்; குனிஞ்சு துவைக்க முடியறது இல்ல. இது, மீராவோட கல்லு; துக்கமோ, சந்தோஷமோ எது வந்தாலும், இந்த கல்லு மேலதான் வந்து உக்காந்துக்குவா. லீவு நாட்கள்ல, ஒரு கையில டீ டம்ளரும், மறு கையில புத்தகமும் வச்சுகிட்டு உட்காந்துருவா... அதப் பாத்து சிவசு, 'மீரான்னு உனக்கு சரியா தான் பேரு வெச்சிருக்காங்க; எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமா உக்காந்துட்டு... தம்புராவுக்கு பதிலாத் தான் இந்த டீ கிளாசா'ன்னு அவள கிண்டல் பண்ணுவான்...''
''ஆன்ட்டி... இது என்ன பச்சை கலர்ல பூவு... நல்ல மணமா இருக்கே...'' அருகில் இருந்த செடியில் இருந்து ஒரு பூவை பறித்தபடி கேட்டாள், சிவசுவின் மனைவி.
''இது, மனோரஞ்சிதம் பூ... சிவசுவுக்கு இந்த வாசம் ரொம்ப பிடிக்கும்; பக்கத்துல இருக்கிறது, ஜாதி மல்லி. அப்ப, மீராவுக்கு நல்ல முடி. நெகு நெகுன்னு நாக பாம்பு மாதிரி... சிக்கெடுத்து பின்னல் போடறதுக்குள்ள கை கடைஞ்சு போயிரும். ஜாதி மல்லி அவ பின்னலுக்குன்னே பூத்த மாதிரி இருக்கும். தலை குளிக்கறதுன்னா அவ்வளவுதான்... சீயக்காய் தேய்ச்சு குளிச்சு, காயவெச்சு அப்படியே விரிச்சுப் போட்டுட்டு ஊஞ்சல்ல படுத்து துாங்கிடுவா... எந்திருக்கும்போது தலைவலி வராம என்ன செய்யும்... ஈரத் தலையோட படுக்காதேன்னா கேப்பாளா... சாம்பிராணி போட்டு முடிக்கும் வரை கூட பொறுமையா இருக்க மாட்டா... கண்ணு சொக்கி விழுவா... இப்ப பாரு, அத்தனை முடியையும் கன்னா பின்னான்னு வெட்டி வெச்சுருக்கா...

 


''முடிதானே பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொன்னா, சுருக்குன்னு கோபம் வருது. அவ, முடிய வெட்டி எறிஞ்ச மாதிரி என்னால இந்த ஞாபகங்களை வெட்டி எறிய முடிஞ்சா, எப்பவோ இந்த வீட்ட இடிக்க ஒத்துருப்பேன்...'' என்றவள், தன் பேரன், பேத்திகளை நோக்கி, ''வீட்டுக்கு முன் வராந்தா இருக்கே... அதுலதான் உங்க தாத்தா கடைசியா படுத்திருந்தார். ஸ்கூலுக்கு பொறப்படும்போதே, நெஞ்சுல சுருக்குன்னு இருக்கு... இனிமே வாழைக்கா சமைக்காதன்னு சொன்னார். போகும்போது மீராவுக்கும், சிவசுவுக்கும் ஏதாவது வேணுமான்னு கேட்டார். திரும்பி வரும்போது, மாலையும், கழுத்துமா தான் வந்தார். சிரிச்ச மாதிரியே உயிர் போயிருந்தது; மாரடைப்பு. இந்த வராண்டால தான் உக்காந்து பொழுதன்னைக்கும் எழுதுவார்; பேப்பர் படிப்பார்... குயில் கத்துச்சுன்னா பதிலுக்கு விசிலடிப்பார்... அதுவும், இவருக்கு பதில் குடுக்கற மாதிரி திரும்பக் கூவும்.''


கோகிலாம்மாளின் கண்களிலிருந்து முத்து போல உருண்டு வந்த கண்ணீர் துளி சிவசு, அவன் மனைவி மற்றும் மீராவின் உள்ளத்தையும் சேர்த்து நனைத்தது.
''இப்ப, நீங்க எல்லாம் துார தேசத்துல இருக்கீங்க... உங்க ஞாபகங்களோட வாழ்ந்துட்டு இருக்கற நான், இனி, என் பேரப் புள்ளைங்க விட்டுட்டு போன செருப்பும், அழுக்கு துணியும், வீடு பூரா கேட்ட பேச்சு சத்தமும், உடைச்சு போட்ட சாமான்களும், பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும்... பிள்ளைகள் என்னை கேட்ட கேள்விகளும், அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிர்ப்போடு வைச்சுருக்கும்,'' என்றாள்.
சிறிது நேரம், அங்கே, கனத்த அமைதி. வெறும் காற்று வீசும் சத்தமும், குயில் கூவும் சத்தமும் மட்டுமே கேட்டது.
''பாட்டி... அடுத்த முறை நான் வரும்போது, 'பார்பி கேர்ள்' மாதிரி நிறைய முடி வளத்துட்டு வர்றேன்; எனக்கு தலை பின்னி அந்த வொயிட் கலர் பூவ வெச்சு விடுவீங்களா?'' என்று ஆர்வமாக கேட்டாள், சிவசுவின் மகள்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.