Jump to content

சி(ரி)த்ராலயா


Recommended Posts

சி(ரி)த்ராலயா 24: ஸ்ரீதருக்கு அடி சறுக்கியதா?

 

 
22chrcjKalaikoil

‘கலைக் கோவில்’ படத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ

இன்றுவரை இப்படி ஒரு காதல் நகைச்சுவைப் படம் வந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றது ‘காதலிக்க நேரமில்லை’. பாலையாவுக்கு ‘ஓஹோ புரடெக்‌ஷன்’ நாகேஷ் இயக்குநராகச் செய்யும் ரகளைகளின் உச்சமாக அமைந்தது, அவர் பாலையாவிடம் கதை கூறும் இடம். ‘ஓஹோ புரடெக்‌ஷன் செல்லப்பா கதாபாத்திரத்தை எங்கிருந்து பிடித்தீர்கள்?’ என்று கோபுவைப் பார்ப்பவர்கள் இன்றும் கூடக் கேட்பார்கள்.

அந்தக் கதாபாத்திரத்துக்கான உந்துதல் ‘புதிய பறவை’ படத்தின் இயக்குநர் தாதா மிராசி என்கிறார் கோபு. தாதா மிராசி சிவாஜியின் நெருங்கிய நண்பர். ஒரு முறை, சிவாஜிகணேசன் அவரை கோபுவிடம் அனுப்பி அவர் கூறும் கதையைக் கேட்டு அபிப்ராயம் கூறும்படி கேட்டார்.

 

தாதா மிராசி கோபுவிடம் கதை சொன்னபோது அவருக்குக் குரல் எழும்பவேயில்லை. வாயால் சத்தம் செய்து, புருவத்தை உயர்த்தி, கண்களை உருட்டி ஒரு மர்மக்கதை சொன்னார். கதை புரியவில்லையே தவிர, அவரது அங்க சேஷ்டைகள் மிக அற்புதமாக இருந்தன. மிமிக்ரி கலைஞரான கோபு, மிராசியின் கோமாளித்தனம் நிறைந்த உடல்மொழியை அப்படியே உள்வாங்கி நாகேஷுக்கு நடித்துக் காட்ட நாகேஷ் அப்படியே பிடித்துக்கொண்டார். ஆனால், நாகேஷின் கதைசொல்லும் காட்சியில் மிஞ்சிவிட்டது, பாலையா கொடுத்த நொடிக்குநொடி முகபாவங்கள்.

 

மிரண்ட மெஹ்மூத்!

‘காதலிக்க நேரமில்லை’யின் வெற்றி பம்பாயை எட்டிவிட, பலர் அதன் மறு ஆக்க உரிமைக்காகப் போட்டியிட்டனர். ஆனால், சித்ராலயா நிறுவனமே இந்தியிலும் தெலுங்கிலும் எடுக்கும் என்று அறிவித்துவிட்டது. ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தில் சசிகபூர், அவருக்கு ஜோடியாகத் தமிழ் படத்தில் நடித்த ராஜஸ்ரீ, முத்துராமன் கதாபாத்திரத்தில் கிஷோர்குமார், காஞ்சனா கதாபாத்திரத்தில் கல்பனா நடிக்க, நாகேஷுக்கு மாற்றாக யாரை ஒப்பந்தம் செய்வது என்று பார்த்தபோது வேறு மாற்று இல்லாமல் இருந்தார் இந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத். பாலையா கதாபாத்திரத்தை ஓம்பிரகாஷ் செய்தார்.

இந்தி கலைஞர்கள் அனைவருக்கும் ‘ காதலிக்க நேரமில்லை’ படத்தைப் போட்டு காட்டி, வசனங்களை விளக்கினார் கோபு.

29chrcjSridhar

சித்ராலயா அலுவலகத்தில் ஸ்ரீதர்

படத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்த மெஹ்மூத், “நாகேஷ் கொடுத்த நடிப்பில் பாதியையேனும் தன்னால் தர முடியும் என்று தோன்றவில்லை” என்று கோபுவிடம் மிரண்டுபோய்க் கூறினார். தலைசிறந்த நடிகரான ஓம்பிரகாஷ் கோபுவைக் கட்டித் தழுவி, “இம்மாதிரி நகைச்சுவைக் காட்சிகள் இந்திப் பட உலகத்துக்குப் புதிது மட்டுமல்ல, புது ரத்தம் பாய்ச்சக் கூடியவை” என்று பாராட்டினார்.

திருவல்லிக்கேணி கலாச்சாரக் கழகம் இந்தப் படத்துக்காக நடத்திய பிரம்மாண்ட பாராட்டுவிழாவில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டத்தை வழங்கியது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப்பின் சித்ராலயா நிறுவனத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.

இந்த நேரத்தில் தன்னைக் காணவந்த ஸ்ரீதரை, மெரினாவில் காந்தி சிலைக்குப் பின்னால் அழைத்துச் சென்று அடுத்த நகைச்சுவையைக் கதையைக் கோபு கூறத் தொடங்கியபோது இடைமறித்த ஸ்ரீதர் “அடுத்து ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையை எழுதியிருக்கிறேன். முதலில் அதை நீ கேள்” என்றார். அந்தப் படம்தான் ‘கலைக் கோவில்’.

 

பாலமுரளியின் குரலுக்காக…

ஒரு வீணை வித்வான்தான் கதாநாயகன். வீணையைத் தன் காதலியாக நினைத்துப் பாடும் பாடல். ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. படித்தவர், பாமரர் என அனைவரையும் அன்றாடம் முணுமுணுக்க வைத்து பலரையும் பைத்தியம்போல் ஆக்கியது அந்தப் பாடல், மிகப்பெரிய ஹிட் அடித்தது! அதற்குக் காரணம் எம்.எஸ்.வியின் கர்னாடகச் சங்கீதப் புலமை மிகுந்த இசைக் கற்பனை மட்டுமல்ல; அந்தப் பாடலுக்கு ஜீவன் கொடுத்த சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் கம்பீரமான குரலும்தான். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் கூறியதும் ‘ஆபோகி’ ராகத்தில் அந்தப் பாடலுக்கான மெட்டை மிகக் குறைந்த ஸ்ருதியில் கம்போஸ் செய்திருந்தார் விஸ்வநாதன்.

29chrcjsong%20recording

‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் பதிவின்போது பாலமுரளி கிருஷ்ணா, கோபு, ஸ்ரீதர்

மெட்டைக் கேட்டுப் பாராட்டிய ஸ்ரீதர், “பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீரமான குரலுக்கு இதே ராகத்தில் இன்னும் கொஞ்சம் தூக்கிக் கொடுங்களேன்” என்றார். ஸ்ரீதர் கூறியதை ஏற்ற எம்.எஸ்.வி. ராகத்தை மாற்றாமல் பாலமுரளியின் குரல், அவரது பாடும் திறனுக்கு ஏற்ப உடனே ஸ்ருதியை மாற்றிக் கொடுத்ததுதான் நாம் தற்போதும் கேட்டுவரும் எவர்கிரீன் கிளாசிக் பாடலாக நீடித்த ஆயுளுடன் காற்றில் வலம் வந்துகொண்டிருக்கும் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’.

இந்தப் படத்துக்குப் பின் பாலமுரளி கிருஷ்ணா எந்த ஊரில் எந்தநாட்டில் கிளாசிக்கல் கச்சேரி நடத்தினாலும் அந்த மேடையில் சினிமா பாடல் என்பதைப் பொருட்படுத்தாமல் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடலைப் பாடினால்தான் ரசிகர்கள் அவரை மங்களம் பாட அனுமதிப்பார்கள் என்ற நிலை நீடித்தது.

 

செதுக்கிய ஸ்ரீதர்

இசையமைப்புக்கு முன் ஸ்ரீதரிடம் ‘கலைக் கோவில்’ படத்தின் கதையைக் கேட்ட ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. படத்தைத் தாமே தயாரிக்க முன்வந்தார். அவருடன் கங்காவும் இணைந்துகொண்டார். கோபு துணை வசனம் எழுதினார். முத்துராமனுக்காக வீணை இசைத்தவர் வீணை வித்வான் சிட்டிபாபு. இதில் ஸ்ரீதர் எனும் தொழில்நுட்பக் கலைஞன் புதிய சிகரத்தைத் தொட்டார். ஒவ்வொரு காட்சியையும் கலைநயத்துடன் செதுக்கி உருவாக்கியிருந்தார். உதாரணத்துக்கு கச்சேரி ஒன்றில் வித்வானாக எஸ்.வி. சுப்பையா வாசிக்கும் வீணை இசையை, விரல்களுக்கும் வீணைக்குமான பந்தத்தை குளோஸ் அப் காட்சிகளால் படமாக்கித் தொகுத்திருந்தது திரையுலகை வியக்க வைத்தது.

‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப் பிறகு, நாகேஷ், ஸ்ரீதர் படங்களின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராகிவிட்டார். ‘கலைக் கோவில்’ படத்தில், அவருக்கு சபா காரியதரிசி வேடம். அவருக்கு ஜோடி ஜெயந்தி. நடிக்கும்போது செட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைப்பாரே தவிர, அவர் நடிப்பில் மட்டுமே கவனமாக இருப்பார். ஆனால், ‘கலைக் கோவில்’படப்பிடிப்பில் நாகேஷ் தன்னை மறந்து ஒரு வசனத்துக்காகச் சிரித்தார். கதைப்படி ராஜஸ்ரீ ஒரு நாட்டியக் கலைஞர். தனது சபா வளர்ச்சிக்காக அவர் நடனத்தை ஒப்பந்தம் செய்ய நாகேஷ் வருவார். ராஜஸ்ரீயை சந்திப்பார்.

அவரிடம் “எங்க சபா வளர்ச்சி நிதிக்காக நீங்க நடனம் ஆடணும்” என்பார். அதற்கு ராஜஸ்ரீ “ஓ..எஸ்! அதுக்கென்ன, ஆடிடலாமே. ஒரு பத்தாயிரம் கொடுத்துடுங்க” என்பார். அதிர்ச்சியடையும் நாகேஷ் “நான் சபா வளர்ச்சி நிதிக்காக ஆடச் சொல்றேன். நீங்க என் சபாவையே அழிச்சுடுவீங்க போல இருக்கே” என்பார். படப்பிடிப்பில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு “ டேய் கோபு...எப்படிடா இந்த மாதிரியெல்லாம் எழுதறே...” என்று நினைத்து நினைத்துச் சிரித்தார்.

ஆனால், படம் ஓடவில்லை. படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.விக்கு லாபம் கிடைக்கவில்லை. ஸ்ரீதருக்கும் புகழை ஈட்டித் தரவில்லை. ‘கலைக் கோவில்’ படத்தை பற்றி விமர்சித்த பத்திரிகை ஒன்று, ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று எழுதியது. ஆனால் ஸ்ரீதர் சோர்ந்துவிடவில்லை ‘காதலிக்க நேரமில்லை’ பட விநியோகஸ்தர்கள் பலர், ‘கலைக் கோவி’லைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியிருந்தனர். அவர்களுக்குப் பலத்த அடி என்பதை உணர்ந்து, கணிசமான தொகையைத் திருப்பி வழங்கினார் ஸ்ரீதர். “அந்தக் காலத்தில் ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ இருந்தது. இப்போது அந்த உண்மைத் தன்மை இல்லை” எனும் கோபுவுக்கு சினிமாவில் பிஸியான நேரத்தில் சிவாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது சினிமாவுக்காக அல்ல!

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24280591.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 25: திருவல்லிக்கேணி எனும் திருத்தலம்

 

 
25chrcjKalattakalyanam%209

‘கலாட்டா கல்யாணம்’ படத்தில்

திரையுலகில் அடையாளம் கிடைக்கும் முன்பு, பத்திரிகையாளர், எழுத்தாளர், நடிகர், சோவின் தந்தை, ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயரின் ஆதரவில் திறந்தவெளி நாடகங்களை கோபு நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், ஸ்ரீதருடன் சினிமாவில் வெற்றியை ருசித்த பிறகு சபா நாடகங்களுக்குச் செல்வதோடு சரி. அது 1965-ம் வருடம். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது. போர் வீரர்களுக்கு நிதி திரட்ட நினைத்த தமிழக அரசு, சிவாஜி கணேசனை அணுகியது.

சிவாஜி உடனே ஸ்ரீதர் – கோபு இருவரையும் அழைத்தார். ‘சிவாஜி - ஸ்ரீதர் அளிக்கும் நட்சத்திர விழா’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் விழா ஏற்பாடானது. என்னதான் நட்சத்திரங்கள் மேடையில் வந்து முகம் காட்டி வசனம் பேசி பாட்டுப் பாடினாலும் இரண்டு மணி நேரமாவது நிகழ்ச்சி இருந்தால்தானே டிக்கெட் விற்கும்!

 

 

மொட்டை மாடியில் பிறந்த நாடகம்

கோபுவை அருகில் அழைத்துத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டார் ‘நடிகர் திலகம்’ சிவாஜி. “ஆச்சாரி! நான், ஜெமினி, சாவித்ரி, சந்தியா, ஜெயலலிதா, வி.கே. ராமசாமி. ஏ.வி.எம் ராஜன், காஞ்சனா, சௌகார் ஜானகி, தங்கவேலு, நாகேஷ், மனோரமா, சந்திரகாந்தான்னு நிறையப் பேர் மேடை ஏறி நம்ம வீரர்களுக்காக நடிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். எங்க எல்லாருக்கும் பொருந்துற மாதிரி செம ஜாலியான கதையோட ஒரு மணி நேரம் நாடகம் வேணும், நட்சத்திர விழாவுல, அதுதான் ஹைலைட்டா இருக்கணும். நீ செய்வே, ஆச்சாரி!” என்று முதுகை வருடிக் கொடுத்தார். எவ்வளவு பெரிய நடிகர், தன் மகன்களைப் போல நம்மை இப்படிக் கொஞ்சுகிறாரே என்று சிலிர்த்து எழுந்தார் கோபு.

திருவல்லிக்கேணி மாமனார் வீட்டு மொட்டை மாடியில், பீச் காற்று சாமரம் வீச, நாடகத்தை எழுதத் தொடங்கினார். பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கப்போகும் நாடகம் என்பதால், தன்னுடைய நகைச் சுவைத் திறமை என்னும் சாற்றைப் பிழிந்து ஒரு நாடகத்தை எழுதினர். ஒவ்வொரு நடிகரின் மேனரிஸத்தையும் நினைவில் கொண்டு வந்து அவரைப் போலவே மிமிக்கிரியில் பேசிப் பார்த்து வசனத்தை எழுதுவார்.

06chrcjDUO

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், “பாரேன்... அந்த அங்கிளுக்கு ஏதோ ஆகிப்போச்சு. தானே பேசிக்கிறார்” என்று அவர் காதுபடவே கிண்டல் அடித்துச் சிரிப்பார்களாம்.

 

மனைவி தந்த யோசனை

கதைப்படி ஒரு தந்தை, அவருக்கு நான்கு பெண்கள். தந்தை உட்கார்ந்த சோபாவை விட்டு எழுந்திருக்க மாட்டார். மூத்த பெண்ணுக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. மூன்றாவது பெண் இசைப் பைத்தியம். நான்காவது பெண் சினிமா பைத்தியம். இந்தப் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை, இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைத்து விடுகிறார் தந்தை. அந்தக் காதலன்தான் நாடகத்தின் கதாநாயகன். பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் அந்தக் கதாநாயகன் படும் சிரமங்களைத்தான் நகைச்சுவையாக எழுதியிருந்தார் கோபு.

ஆண்களை வெறுக்கும் முதல் பெண்ணின் மனத்தை மாற்ற மிகவும் சிரமப்படுவார் கதாநாயகன். அவள் மன மாற்றத்தை அழுத்தமாகச் சித்தரிக்க கோபு ஒரு சம்பவத்தைத் தேடியபோது, மொட்டை மாடிக்குக் கையில் காபியுடன் வந்த அவர் மனைவியிடம் யோசனை கேட்டார். எழுத்தாளரான, அவர் மனைவி கமலா, “எவ்வளவு கடினமான இதயம் கொண்ட பெண்மணிக்கும் மனத்தில் பச்சாதாப உணர்வு இருக்கும். அதை வைத்து கதாநாயகன் அவள் மனத்தை மாற்ற வேண்டும்” என்று யோசனை கூறினார்.

அதன்படி ஒரு சம்பவத்தை அமைத்தார் கோபு. ஒரு மணி நேர நகைச்சுவை நாடகம் தயார். மூன்று மணி நேரத்தில் எழுதப்பட்ட நாடகத்துக்கு, ‘கலாட்டா கல்யாணம்’ என்று தலைப்பு வைத்தார், கோபு. சித்ராலயா அலுவலக மாடியில் அமர்ந்து கோபுவை நாடகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட சிவாஜி, விழுந்து விழுந்து சிரித்து “ நீ என்னோட செல்லம்டா” என்று கட்டிப் பிடித்துக்கொண்டார்.

 

டிரில் வாங்கிய சிவாஜி

‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை சிவாஜியே இயக்கினார். மைக் முன்பாக எப்படி வந்து நிற்க வேண்டும். மேடையில் நடிகரின் அசைவுகள், உடல்மொழி, வசன உச்சரிப்பு என்ன என எல்லாவற்றையும் கிளிப்பிள்ளைகளுக்குக் கூறுவதுபோல் சொல்லிக்கொடுத்தார். நாடக அனுபவமே இல்லாத காஞ்சனா போன்ற நடிகைகளை நன்றாக டிரில் வாங்கினார், சிவாஜி. நாகேஷ், ஜெயலலிதா, சந்தியா, சௌகார் ஜானகி, கே ஆர் விஜயா, மணிமாலா, மனோரமா முதலானோர் நன்றாகப் பயிற்சி எடுத்து, நாடகத்தில் நடித்தனர். ‘கலாட்டா கல்யாணம்’ ஒவ்வோர் ஊரிலும் சக்கைப் போடு போட்டது.

சிவாஜியின் அச்சாரம்

ஒரு நாள் நாடகம் முடிந்தவுடன், சிவாஜி கோபுவிடம் வந்தார். “ ஆச்சாரி! இந்த கதை சினிமாவுக்கு செம்மையாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்காவது கொடுத்துடாதே. என் நிறுவனமே இதைப் படமா தயாரிக்கும். ஒரு பய ஒரு செகண்ட் கண் அசர முடியாது… என்னமா எழுதியிருக்கே!” என்றபடி கதையை ‘பிளாக்’ செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார்.

 

திருவல்லிக்கேணியை விட்டு..

“ஆன்மிகரீதியாக மட்டுமல்ல; எனது கற்பனைக்கும் பெரிய ஊற்றாக இருந்த திருத்தலம் திருவல்லிக்கேணி. அங்கே வாழ்ந்த மனிதர்கள், கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, உழைப்புக்கு அஞ்சாத மீனவர்கள், ஏழை, நடுத்தர வர்க்கம், மேட்டுக்குடியினர், ‘திருமேனி பாங்கா’ என்று பேசும் வைணவர்கள், ‘நெஞ்சுல இருக்குற மஞ்சா சோத்தை எடுத்துருவேன்’ என்று அச்சுறுத்தும் ரவுடிகள், மனிதக் கூட்டத்துக்கு இணையாக மக்கள் வளர்க்கும் மாடுகள் என்று 60-களின் அசலான சென்னையின் வாழ்க்கையை அங்கே பார்க்கலாம்.

06chrcjTriplicane%20house

‘சித்ராலயா’ கோபுவின் திருவல்லிக்கேணி வீடு

பின்னாளில் அது ‘பேச்சலர் பாரடைஸ்’ ஆனது, வேலை தேடி சென்னையில் வந்து குவிந்த நான்கு மாநில இளைஞர்களால். எனது 35 வருட திருவல்லிக்கேணி வாழ்க்கையைப் பொற்காலம் என்பேன்.” எனும் கோபு, திருவல்லிக்கேணியை விட்டு 1992-ல் வெளியேறினார். ஆனால் மாடுகள் இன்றும் அங்கேதான் இருக்கின்றன. அவரது திருவல்லிக்கேணி வீட்டில் படப்பிடிப்பு கூட நடத்தப்பட்டிருக்கிறது. சோ, நாகேஷ், காஞ்சனா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, நிர்மலா தொடங்கி, ஊர்வசி, பாண்டியராஜன்வரை அனைவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

பார்த்தசாரதி கோயில், மெரினா பீச் தவிர, திருவல்லிக்கேணியில் கோபுவுக்கு மிகவும் பிடித்த இடம், பார்த்தசாரதி சபா. அவரது மாமனார் வீட்டின் எதிரேயே இந்த சபா கட்டிடம் இயங்கியது. இந்த சபாவில்தான் கோபுவின் நாடக வாழ்க்கை மறுபிறவி எடுத்தது. ‘மாயா பஜார்’, ‘வீட்டுக்கு வீடு’, ‘காசேதான் கடவுளடா’, போன்ற கோபுவின் நாடகங்கள் இங்கேதான் அரங்கேறின. அவை பிற்காலத்தில் திரைப்படங்களாக உருவெடுத்தன. அவற்றுக்கெல்லாம் அச்சாரமாக ‘கலாட்டா கல்யாணம்’ அமைந்தது.

 

திரைவடிவில் ‘கலாட்டா கல்யாணம்’

நட்சத்திர இரவுக்காக கோபு எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தைப் படமாக்க கோபுவை ஒப்பந்தம் செய்தார் சிவாஜி. முதலில் அந்த படத்தை இயக்க பி.மாதவனை அணுகலாம் என்றார். ஆனால் கோபு, “ எனது நகைச்சுவை வசனங்களைச் சிந்தாமல், சிதறாமல் அப்படியே ரசிகர்களிடம் சேர்ப்பிக்கக்கூடியவர், சி. வி. ராஜேந்திரன்” என்று கூற, “புதிய பையனாக இருக்கிறானே” என்று சிவாஜி தயங்கினார்.

ஆனால், கோபு கொடுத்த அழுத்தத்தால் சி. வி. ராஜேந்திரனை இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். பின்னர் அவர் படத்தை இயக்கும் வேகத்தையும் ஆளுமையையும் கண்டு, அவரையே தனது ஆஸ்தான இயக்குநராக அறிவித்துவிட்டார். அந்த அளவுக்கு ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படமாக ரசிகர்களை எப்படிக் கவர்ந்தது?

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24337678.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 26: கதிகலங்க வைத்த கல்கத்தா பயணம்!

 

 
13chrcjdil%20ek%20mandir

‘தில் ஏக் மந்திர்’ படத்தில்

முழுநேர சினிமா எழுத்தாளர் ஆகிவிட்ட கோபுவை மீண்டும் நாடகம் எழுத வைத்துவிட்டார் நடிகர் திலகம். ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை சிவாஜி கணேசன் படமாக்க முடிவு செய்து சி.வி.ராஜேந்திரனை இயக்குநராக அமர்த்தி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அப்போது, குருதத் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா’ என இந்தியில் இரண்டு படங்களை ஸ்ரீதர் இயக்கிக்கொண்டிருந்தார்.

இந்த வேலைகளுக்காக அன்றாடம் பம்பாய்க்கும் சென்னைக்குமாகப் பறந்துகொண்டிருந்தார் கோபு. ஒரு கட்டத்தில் விமானப் பயணம் என்றாலே கோபுவுக்கு அலர்ஜியாகிவிட்டது. காரணம், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் இந்தி மறு ஆக்கமான ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் நூறாவது நாள் விழாவுக்காக, ‘சித்ராலயா’ டீம் மொத்தமும் கல்கத்தா சென்றபோது சந்தித்த திகில் அனுபவம்தான். ஸ்ரீதர், கோபு, வின்சென்ட், பி.என் சுந்தரம், திருச்சி அருணாசலம், கங்கா, எடிட்டர் ஷங்கர், சி. வி ராஜேந்திரன் உட்பட ‘ஸ்கை மாஸ்டர்’ என்ற விமானத்தில் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குச் சென்று பறந்துகொண்டிருந்தனர்.

 

இன்னும் பத்து நிமிட நேரத்தில் கல்கத்தாவில் தரையிறங்கிவிடலாம் என்ற நிலையில் திடீரென்று அதலபாதாளத்தில் விழுவதுபோல் பெரிய உலுக்கலுடன் சுமார் பத்து நொடிகள் விமானம் தலைகுப்புற கீழே வந்து பின் மேலே நிமிர்ந்து பறக்கத் தொடங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் கலவரத்துடன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார்கள். கோபுவோ அலறினார். காரணம் அவருக்கு நெஞ்சை அடைத்தது. ‘தில் ஏக் மந்திர்’ படத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் ராம் கதாபாத்திரம் கோபுவின் நினைவுக்கு வந்துபோனது.

 

பிரிட்டிஷ் பயணியின் பிரார்த்தனை!

கோபுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் பயணி ஒருவர் கோபுவைச் சமாதானம் செய்தார். “சில சமயங்களில் காற்று இல்லாத இடங்களில் ‘ஏர் பாக்கெட்ஸ்’ உருவாகிவிடும். அதுபோன்ற இடங்களில் பறக்கும்போது விமானம் கீழே தொப்பென்று இறங்கும். ஆனால், மறுபடியும் விமானி அதை மேலே கொண்டு வந்துவிடுவார்” என்று விளக்கினார் அந்த வெள்ளைக்காரர். ஆனால், இருபது முறைக்கும் மேலாக இப்படிக் கீழே இறங்குவதும் பின் தட்டுத் தடுமாறி மேலேறிப் பறப்பதுமாக அந்த விமானம் அசாதாரணமாகப் பறக்கத் தொடங்கியதும் விளக்கம் கொடுத்த வெள்ளைக்காரருக்கே வியர்க்கத் தொடங்கிவிட்டது. கோபுவின் கையைக் கெட்டியாகப் பிடித்து கொண்டு பிரார்த்தனையை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்.

சென்னையில் தொடங்கி அவ்வளவு அழகாகச் சிரித்துக்கொண்டும் கண்களில் தேவதைகளுக்கான அன்பைத் தேக்கி வைத்தபடி பயணிகளுக்கு பணிவிடைகள் செய்துகொண்டிருந்த விமானப் பணிப்பெண்களே விசும்பத் தொடங்கிவிட்டார்கள். ஹாண்ட் லக்கேஜ்கள் இங்கும் அங்குமாக விமானம் முழுவதும் சிதறிப் பறந்தன. விழுந்த பைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அருகில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டார்கள்.

ஸ்ரீதர் “ பாலாஜி… பாலாஜி ” என்று திருப்பதி பெருமாளை அழைக்கத் தொடங்கிவிட்டார். ஒளிப்பதிவாளர் வின்சென்ட் “ஆண்டவரே… இரக்கமாயிருக்கும் கிறிஸ்துவே இரக்கமாயிருக்கும்… மரியே வாழ்க” என்று கூறி பிதா, சுதன், தூய ஆவி சின்னத்தை நெஞ்சில் வரைந்துகொண்டே இருந்தார். கோபுவின் அருகில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் பயணி, அவசரமாகத் தனது மேல்கோட்டைக் கழற்றினார். ‘சரிதான்... இவருக்கு விமானம் தொடர்பாக ஏதோ விஷயம் தெரியும் போலும். காக்பிட் சென்று விமானிகளுக்கு யோசனை சொல்லப் போகிறார் என்று கோபு அவரை நம்பிக்கையுடன் பார்த்தார்.

 

யூ ஆர் கிரேட்!

அந்தப் பயணியோ அவிழ்த்த தனது கோட்டை ஒரு பாத்திரம்போல் சுருட்டி அதில் வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டார். மற்றவர்கள் மேல் வாந்தி எடுத்துவிடக் கூடாது என்ற அவரது இங்கிதத்தை கோபுவால் அந்த நேரத்திலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவரைப் பார்த்து “ யூ ஆர் ரியலி கிரேட்!” என்றார். அந்த நேரம் பார்த்து விமானம் மீண்டும் பல்டி அடிப்பதுபோல் திடீரென்று தாழ, “ ந்நோஓஓ… வி ஆர் கோயிங் டூ டெட்” என்று கத்திக்கொண்டே மூன்றாம் முறையாக வாந்தி எடுத்தார்.

13chrcjwincent%20and%20gopu

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் உடன் கோபு

 

உயிர் அந்தரத்தில் ஊசலாடும் நிலையிலும் கோபுவுக்கு நகைச்சுவை உணர்வே ரத்தத்தில் பீறிட்டுக்கொண்டு இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில், ஆபத்தில் உயிர் பிழைக்க சிறுவயதில் தனக்கு அம்மா சொல்லித் தந்த சுலோகத்தைச் சொல்லலாம் என்று தனது மூளையை அதட்டி அதை நினைவுபடுத்தக் கூறினார். ஆனால், மூளை அடம் பிடித்தது. இதற்குமேலும் பிரார்த்தனை செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்த கோபு, திருவல்லிக்கேணி மீசைக்காரப் பெருமாளை நினைத்துக்கொண்டே இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார்.

 

துப்பாக்கி முனையில் விமானம்

சுமார் முப்பது முறை அந்த விமானம் இறங்கியும் ஏறியும் பயணிகளை வாட்டி வதைத்தபின் அதிகம் வெளிச்சம் இல்லாத ஒரு இருட்டு ரன் வேயில் ஓடி நின்றது. பாதிப் பயணிகளுக்குமேல் உயிர்பிழைத்த அதிசயத்தை நினைத்து சின்னக் குழந்தையைப் போல் அழுதுகொண்டிருந்தார்கள். “ எல்லோரும் கீழே இறங்கி கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசித்துவிட்டு வரலாம்” என விமானி மைக்கில் சொல்ல, அனைவரும் இறங்கினர். கோபு தனது அணியில் முதல் ஆளாகத் தப்பிப்பதுபோல் நினைத்து ஓடினார். ஆனால், அவருக்கு முன்பே ஸ்ரீதர் இறங்கியிருந்தார். ஆனால், இறங்கிய அனைவருக்கும் அதிர்ச்சி.

அந்த விமானத்தையும், இறங்கிய பயணிகளையும் சுற்றி சுமார் ஐம்பது ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தார்கள். வேறு ஒன்றுமில்லை, கல்கத்தாவில் இறங்குவதற்கு முன், திடீரென்று வீசிய சூறைக் காற்றில் சிக்கியிருக்கிறது விமானம். அதைக் கடந்து விடலாம் என்று நினைத்திருக்கிறார் விமானி. ஆனால், காற்றின் வேகத்துக்கு முன்னால் அந்த அலுமினியப் பறவையால் ஆட்டம் காட்ட முடியாத நிலையில் காற்று வீசிய திசையிலேயே பயணித்து, ‘சானிகொண்டா’ என்ற ராணுவ விமான தளத்தில் இறங்கிவிட்டது. அனுமதியற்ற லேண்டிங். அதுவும் விமானத் தளத்தில். மீண்டும் கிளம்பத் தயாரானது. “இன்னும் இருபது நிமிடத்தில் கல்கத்தா போய்விடலாம் அனைவரும் ஏறுங்கள் ” என்று விமானி சொன்னதும் திருச்சி அருணாசலத்தின் முகம் பேயறைந்தது போல் மாறியது.

“ஐயோ… திரும்பவும் இதே விமானமா... வேணவே...வேணாம்..! எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் என்றாலும் கால்நடையாவே ஊருக்குப் போயிடுறேன்... ஆளை விடுங்க” என்று கெஞ்சினார். ஆனால், அங்கிருந்த ராணுவப் பிரிவு யாரையும் அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி அனைவரும் அதே விமானத்தில் ஏறினார்கள். கோபு ஸ்ரீதரின் பக்கம் திரும்பி, “ ஸ்ரீ! இனி இந்திப்படம் வேணவே வேணாம். ஒழுங்கா தமிழ் படம் எடுத்து செங்கல்பட்டுல ரிலீஸ் பண்ணிட்டா காஞ்சிபுரத்துல பாராட்டு விழா எடுப்பாங்க. இந்த டென்ஷன் எனக்கு ஆகாதுப்பா!” என்றார்.

இப்படிச் சொன்ன கோபு அடுத்த சில மாதங்கள் விமானப் பயணத்தைத் தவிர்த்தாலும் பின்னர், ‘சிவந்த மண்’ படப்பிடிப்புக்காக, பாரீஸ், ரோம், அமெரிக்கா, ஸ்பெயின், எகிப்து, கிரீஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பறந்து பறந்து படமெடுத்தார்.

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24400087.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 27: இந்திக்குப் போன சிரிப்புப் படம்!

 

 
sirithralayajpg

கோபுவுக்கு ஒரு ராசி!  சித்ராலயாவுக்காக பணிபுரியும் இசையமைப்பாளர்கள் அனைவருமே, அவரிடம் அதிக நெருக்கத்தைக் காட்டினார்கள். கோபுவின் இசைஞானமும் நகைச்சுவை உணர்வும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஏ.எம். ராஜா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

போன்ற நமது  இசையமைப்பாளர்கள் ஒருபுறம் என்றால், ரவி, ஷங்கர் ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் போன்ற வடநாட்டு இசையமைப்பாளர்களும் அந்த நெருக்கமான பட்டியலில் அடங்குவர்.

 

‘காதலிக்க நேரமில்லை’யின், இந்தி மறு ஆக்கமான  ‘பியார் கியே ஜா' படத்துக்கு லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்  இசை. இந்தி கதை வசனகர்த்தா ராஜேந்திர கிஷண் பாடல் வரிகளை எழுதினார். அந்தப் படத்தின் பாடல் பதிவு வேலைகளுக்காக கோபுவை அடிக்கடி மும்பைக்கு அனுப்பி வைத்தார்  ஸ்ரீதர். அவரோ  குருதத் நடிக்கும் படத்தை சென்னையில் இயக்கிக் கொண்டிருந்தார்.

விமானம் ஏறுவதற்கு முன்பாக  ஸ்ரீதர்,  கோபுவிடம்  '' காதலிக்க நேரமில்லை ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாட்டு எப்படி சூப்பர் ஹிட் ஆனதோ அதேபோல அந்தப் பாட்டு இந்தியிலும் ஹிட் ஆக  வேண்டும்” என்று அழுத்தமாகச் சொல்லி அனுப்பி வைத்தார்.

கண்ணதாசன் எழுதிய அந்தப் பாட்டின் பல்லவியை, அப்படியே ஆங்கிலத்தில் இந்திப் பாடலாசிரியர் ராஜேந்திரகிஷனிடம் விளக்கினார்.  லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்  அப்போது உச்சத்தில் இருந்த நேரம். ‘தோஸ்தி’ என்ற படத்தில் அவர்களது இசையமைப்பில் உருவான பாடல்கள் இந்தி பேசும் மாநிலங்களைத் தாண்டி கலக்கிக் கொண்டிருந்தன. தயாரிப்பாளர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

கோபுவைக் கிள்ளிய ஸ்ரீதர்

அப்படிப்பட்ட அந்த இசை இரட்டையரில் ஒருவரான லக்ஷ்மிகாந்த்துக்கு  என்ன காரணத்தினாலோ கோபுவைப் பிடித்து விட்டது. கம்போஸிங் நேரம் போக மாலை வேளைகளிலும் கோபு தங்கியிருந்த ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கே அவரைத் தேடிக்கொண்டு வந்துவிடுவார்.  தான் காதலில் விழுந்து விட்டதாகக் கூறி, ஒருநாள் தன் காதலியை அழைத்து வந்து கோபுவுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயா லக்ஷ்மிகாந்த்தை அவரது காதலியாகவே சந்தித்திருக்கிறார் கோபு.

பியாரிலால்   ஒரு நல்ல வயலின் கலைஞர். கிளாசிகல் மற்றும் மேற்கத்திய இசையில் புகுந்து விளையாடுவார்.   ஸ்ரீதர் குறிப்பிட்டுச்சொன்ன  பாடல் தயார் ஆன தகவலை ட்ரங்கால் புக் செய்து கோபு கூற,  அடுத்த விமானத்தில் ஸ்ரீதர் மும்பை கிளம்பி வந்தார். ஸ்ரீதருக்கு ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ இந்திப் பாடலின் மெட்டினை லஷ்மிகாந்த் பாடிக்காட்டினார்.

 தமிழ்ப்பட உலகத்தில் இசையமைக்கும்போது, எம். எஸ்.வியே கம்போஸ் செய்த பாடலைப் பாடி காட்டிக் கவர்ந்து விடுவார். எம்.எஸ். வி பாடிய அளவுகூடப் பாடகர்கள் பாடுவதில்லை என்று வேடிக்கையாக ஸ்ரீதர் கூறுவார். அப்படி எம்.எஸ்.வி பாடிக்காட்டுவதைக்  கேட்டு பழகிவிட்ட ஸ்ரீதருக்கு, லஷ்மிகாந்த் பாடிய ‘நாளாம் நாளாம்’ பாட்டின் மெட்டு கவரவில்லை. தனது இருக்கையில் நெளிந்த ஸ்ரீதர், அதைத் தெரிவிக்கும் விதமாக கோபுவின் கையை ரகசியமாகக் கிள்ளினார்.

''என்னடா இவர் மெட்டையே வசன நடையிலே பாடறாரே'' என்று கோபுவின் காதுக்குள் கடுகடுப்புடன் முணுமுணுத்தார்.

''எல்லாரும் எம் எஸ் வி ஆகிட முடியாது ஸ்ரீ! இவர்கள் தோஸ்தி படத்தில் போட்ட அத்தனைப் பாட்டுகளும் சூப்பர் ஹிட். இவங்க ஸ்வரத்தை எழுதி கொடுத்துடுவாங்க. இதை லதா மங்கேஸ்கர் பாடும்போது பிரமாதமாக இருக்கும். இது யமன் கல்யாண் ராகம்!'' என்றார் கோபு.

“ஆமா! நீ செம்மங்குடி சீனிவாச அய்யரோட சிஷ்யன் பாரு! எனக்கென்னமோ பயமாயிருக்கு. நான் ஊருக்குப் போய் ஷூட்டிங் வேலைகளைச் செய்யறேன். நீ ரெகார்டிங்கை முடிச்சுட்டு வா.'' என்று சொல்லிவிட்டு அரை மனதுடன் சென்னை திரும்பிவிட்டார் ஸ்ரீதர். ஆனால் கோபு கூறியது போல், லதா மங்கேஸ்கர் பாடிய அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சென்னையில் அந்தப் பாட்டை கேட்ட ஸ்ரீதருக்கு பரம திருப்தி.

இசை அமைப்பாளரின் திறமை பாடிக்காட்டுவதில் மட்டுமே இல்லை, ஃபைனல் அவுட்புட்டிலும் தெரிந்துவிடும் என்பதை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டார்.

சந்தேகம் தீர்த்த மும்தாஜ்!

‘காதலிக்க நேரமில்லை’யில் பாலையா ஏற்றிருந்த கதாபாத்திரத்தை ‘பியார் கியே ஜா’வில் நடிகர் ஓம்பிரகாஷ் செய்தார். நாகேஷின் செல்லப்பா கதாபாத்திரத்தை மெஹ்மூதும், சச்சு பாத்திரத்தை நடிகை மும்தாஜும் செய்தனர். சசிகபூர் (ரவிச்சந்திரன்) கிஷோர் குமார் (முத்துராமன்) கல்பனா (காஞ்சனா)  என கதாபாத்திரங்கள் ஒதுக்கப்பட்ட பின் நடிகர்கள் அனைவருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படம் திரையிடப்பட்டு காட்சிகள் விளக்கிக் கூறப்பட்டன. தமிழில் ராஜஸ்ரீ நடித்த கதாபாத்திரத்தை இந்தியிலும் அவரே செய்தார்.

நகைச்சுவை பகுதி காட்சிகளை விளக்குவதற்காக, ஓம்பிரகாஷ், மெஹ்மூத் மற்றும் மும்தாஜை அழைத்திருந்தது சித்ராலயா. மும்தாஜை பார்த்ததும் கோபுவுக்கு பெருத்த சந்தேகம். ஒரு கதாநாயகியின் முகவெட்டு அவருக்கு இருந்தது.  மிக அழகாக இருந்தார். தமிழ்சினிமாவா இருந்தால் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்திருப்பார்கள். முகத்தில் இம்மியளவு கூட நகைச்சுவை பாவம் இல்லை. எதற்காக இவரைப் போய் சச்சுவின் வேடத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர் என்று கோபுவுக்கு சந்தேகம் வந்தது.

மும்தாஜிடமே தனது சந்தேகத்தை கேட்டுவிட்டார். ''ஏம்மா. நீங்க செய்ய போறது நகைச்சுவை கேரக்டர். அது தெரியுமா? ''

''ஓ  தெரியுமே! மீன பிரியதர்சினி இஸ் மை கேரக்டர்'' - என்று மும்தாஜ் சொன்னார்.  பாவம்!  மும்தாஜ் அப்போது திரைப்பட உலகில் நுழைந்தால் போதும் என்று கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டிருந்தார். எனவே, சச்சு நடித்த மீனலோசனி கதாபாத்திரத்தில் மீன பிரியதர்ஷினி என்ற பெயரில் நடிக்க சம்மதித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால், தமிழில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சச்சு காதலிக்க நேரமில்லை படத்தில் அசட்டு மீனலோசனியாக நடித்து முழுநேர நகைச்சுவை நடிகையாக மாறினார். மும்தாஜோ ‘பியார் கியே ஜா’ படத்தில் நகைச்சுவை நடிகையாக நடித்து, பின்னர் முன்னணி கதாநாயகியாக மாறினார்.

மும்தாஜுக்கு நடந்தது நல்லதுதான் என்றாலும் தமிழில் நகைச்சுவைக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதற்கு சச்சுவின் திரைப் பயணம் சடாரென்று ஒரே படத்தில் மாறிப்போனது ஒரு உதாரணம். தமிழில் டி.பி.முத்துலட்சுமி,  சி.டி.ராஜகாந்தம், டி. ஏ. மதுரம், ரமாபிரபா, ஆச்சி மனோரமா, சச்சு, கோவை சரளா வரை நகைச்சுவை நடிகைகளுக்குத் தனித்துவமும் ரசிகர்களிடம் மிகுந்த மரியாதையும் உண்டு.

மிரண்ட மெஹ்மூத்!

பாலையாவுக்கு  நாகேஷ்  சினிமா கதை சொல்லும் காட்சியை, ஓம்பிரகாஷும் மெஹ்மூதும் மிரண்டு, ரசித்துப் பார்த்தனர். மனம் விட்டுச் சிரித்த அவர்கள், ‘தங்களால் அவர்கள் அளவுக்கு இந்திப் படத்தின் காட்சியைத் தரமுடியுமா’ என்று கவலை கொண்டனர். நாகேஷ் கதைக்கு பாலையா கொடுத்த முகபாவங்கள் ஓம்பிரகாஷை மிகவும் கவர்ந்தன. ‘பியார் கியே ஜா’ படமும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தி வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ‘பிரேமிஞ்சி சூடு’ என்கிற பெயரில் மறுஆக்கம் ஆனது. ஸ்ரீதருக்கு அகில இந்திய புகழ் கூடிக்கொண்டே போன இந்த நேரத்தில்தான்,  ஆந்திராவில் ஒரு பெண்ணை பார்த்து ஸ்ரீதருக்கு  கல்யாணம் பேசிவிட்டார் அவருடைய தாய்மாமா. தனது படங்களில் வருவதுபோலவே தனது யூனிட் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீதர் பெண் பார்க்கக் கிளம்பினார்.

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24470128.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 28: நீச்சல் குளத்தில் கிடைத்த முத்து!

 

 
sirithralayajpg

‘வெண்ணிற ஆடை ’ படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த் - ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன்

இந்தியத் திரையுலகின் கவனம் ஸ்ரீதர் மீது திரும்பியிருந்த நேரம் அது. அவருடைய தாய்மாமன்  ஆந்திராவில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்துக்குப் பேசிவிட்டார்.

கோபு, கலை இயக்குநர் கங்கா, ஸ்டில்ஸ் அருணாச்சலம் மூவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக ஸ்ரீதரால் இழுத்துச் செல்லப்பட்டனர். நெல்லூர் அருகே இருந்த ஒரு கிராமத்துக்குப் பெண் பார்க்கச் சென்றார்கள். பெண் நல்ல குடும்பப் பாங்காக இருந்தார். ஆனால், ஸ்ரீதரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இதைக் கண்ட தாய்மாமன் பெண்ணின் தந்தையை அழைத்து நாசூக்காகப் பேசி சிரமத்துக்கு மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டுவிட்டார்.

 
 

அதன் பின்னர் சிலமாதங்கள் கழித்து ஸ்ரீதர் ஒரு நாள் கோபுவிடம் “டேய்... ராணிமேரி கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிற பெண்ணாம். பெயர் தேவசேனா. வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். இன்னும் யாருக்கும் சொல்லலை. உனக்குத்தான் முதல்ல சொல்லச் சொன்னாங்க'' என்றார். ஸ்ரீதர் – தேவசேனா திருமணம் மிக விமரிசையாக மவுண்ட் ரோடு ஆபட்ஸ்பரி திருமண மஹாலில் நடந்தது. 

கோபுவின் ஓட்டம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, ராஜ்கபூர் குடும்பத்தினர், கிஷோர்குமார், மனோஜ்குமார், ராஜேந்திரகுமார், மீனாகுமாரி, வைஜெயந்திமாலா என்று மூன்று திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரப் பட்டாளமே ஆபட்ஸ்பரியில் திரண்டிருந்தது. ஸ்ரீதர் மணமேடையில் இருந்ததால், பாலிவுட் பட்டாளத்தைக் கவனிக்கும் பொறுப்பு கோபுவிடம் வந்தது. ராஜ்கபூர் எல்லார்  எதிரிலும்.

''கோபுஜி...கோபுஜி...'' என்று அழைத்து அவரது தோளில் கைபோட்டுப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கோபுவை சூழ்ந்துகொண்டார்கள். ராஜ்கபூர் ரசிகைகளாக விளங்கிய பெண்கள் பலரும் ''கோபு... கோபு..!'' என்று கண்ணனைச் சுற்றும் கோபிகைகள் போல அவரைத் துரத்தத் தொடங்கினர்.  இந்தத் துரத்தல் ‘ராஜ்கபூருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும், அவருடன் ஒருவார்த்தை பேச வேண்டும்’ என்ற கோரிக்கைக்காக. கோபுவின் மனைவி கமலா வேறு பக்கமாக பார்த்துக்கொண்டிருக்க, அவர் அருகில் அமர்ந்திருந்த ‘ஸ்டில்ஸ்’ அருணாச்சலத்தின் மனைவி, கோபுவை போட்டுக் கொடுத்தார்.

கமலாவை அழைத்து கோபுவைப் பெண்கள் சூழ்ந்துகொண்டிருக்கும் காட்சியைக் காட்ட, கோபுவின் மனைவியோ சடாரென்று மகிஷாசுரமர்த்தினியாக முகத்தில் உணர்ச்சியைக் காட்டி பல்லை நறநற என்று கடிக்கும் சப்தம் 200 அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்த கோபுவின் காதில் விழுந்தது. திரும்பி மனைவியின் முகத்தைப் பார்த்த கோபு, அந்த ரசிகைகளின் அன்புத்தொல்லையில் இருந்து மீளமுடியமால் தவித்தார்.

ராஜ்கபூர் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் மணமகன்தானே இன்றைய கதாநாயகன். இதை மனத்தில் நிறுத்திக்கொண்ட கோபு, அதுபோன்ற எசகுபிசகான போட்டோ செஷனோ, ஆட்டோகிராஃப் செஷனோ நடந்துவிடாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டதோடு ரசிகைகளின் ‘இன்று முழுவதும் ராஜ்கபூர் இங்கேதான் இருப்பார். விருந்துக்குப் பிறகு சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ எனச் சமாளித்துக்கொண்டிருந்தார்.

ஆனால், மாலை நடந்த திருமண வரவேற்பிலும் இதே துரத்தல் காரணமாக மண்டபம் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தார் கோபு.

முக்கோணக் காதல்

ஸ்ரீதர், தேவசேனாவைப் பார்த்த நேரம் நல்ல நேரம்தான். அவருக்கு  உற்ற துணைவியாக, ஏற்றங்கள், இறக்கங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவித்து கணவனுக்கு ஆதரவை நல்கி, ஸ்ரீதரின் பக்க பலமாக நின்றார் தேவசேனா. ஸ்ரீதருக்கு அவர் ஒரு பெரிய அஸெட்.

திருமண வாழ்க்கை ஸ்ரீதருக்கு  வண்ண மயமாக இருந்தது போலும். காரணம் திருமணத்துக்குப் பின் கறுப்பு - வெள்ளை படங்களைவிட, கலர் படங்களை எடுக்கும் ஆர்வம் அவருக்கு அதிகரித்தது. அப்போதுதான் ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதை ஒன்று தோன்றியது. அதுவே சித்ராலயா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக அமைந்த ‘வெண்ணிற ஆடை’.

பள்ளி மாணவி ஒருவருக்குப் பதின் வயதிலேயே திருமணம்  நடந்து விடுகிறது. ஒரு விபத்தில் கணவன் இறந்து விடுகிறான். அதனால் மனநிலை பாதித்த அவள், தனக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அந்த டாக்டரோ ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தக் கதைக்குக் கதாநாயகி தேடும்படலம் தொடங்கியது. இவரைப் போடலாம், அவரைப் போடலாம் என்று கோபு ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்க, ஸ்ரீதர் அவரை யோசனையுடன் பார்த்தார். “கோபு.. இந்தக் கதையில் வரும் இளம் கைம்பெண் கதாபாத்திரத்துக்கு மேல்தட்டில் பிறந்து வளர்ந்த மாடர்ன் லுக் கொண்ட ஒரு டீன் முகம் தேவை, இந்த நிமிடம் முதல் தேடத் தொடங்கு” என்றார். கோபுவுக்குத் தலை சுற்றியது. நாட்கள் ஓடியதே தவிர நாயகி கிடைத்தபாடில்லை.

கிடைத்தார் நாயகி!

சித்ராலயா குழுவினர், எம்.என். நம்பியார் ஆகியோர் சைதாப்பேட்டையில் இருந்த ஜிம்கானா நீச்சல் குளத்துக்குப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீதரும் கோபுவும் நீச்சலுக்குச் சென்றிருந்தனர். அப்போது தற்செயலாக ஸ்ரீதரின் பார்வை அங்கே நீந்திக்கொண்டிருந்த பதினைந்து வயதே மதிக்கத்தக்கப் பெண்ணின் மீது விழுந்தது.

“கோபு…அந்தப் பெண்ணைப் பாரேன்..!'' என்று ஸ்ரீதர் காட்ட, திரும்பிப் பார்த்தார் கோபு. கான்வென்ட்  மாணவியின் முகமாகவும், நவ நாகரிகமாகவும் தோற்றமளித்தார் அந்தப் பெண். துறு துறு கண்களுடன், நளினமாக நடந்து, இவர்களைக் கடந்து சென்று, ஏணிப்படிகளில் ஏறி, ராக்கெட்டைப் போல் தலைகீழாக நீரில் பாய்ந்து, லாகவமாக மேலே வந்து டால்பீனைப் போல் நீந்திக்கொண்டிருந்தார். “அந்தப் பெண் யாராக இருக்கும், கொஞ்சம் விசாரியேன்” என்று ஸ்ரீதர் சொல்ல, கோபுவுக்கு ஒரு யோசனை.

அந்தப் பெண்ணை பலமுறை அவர் நீச்சல் குளத்தில் பார்த்திருந்தார். ஒருநாள் அந்தப் பெண்ணுடன் அவருடைய தாயார் வந்திருந்தபோது அவருடன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்ததை கோபு கவனித்திருந்தது நினைவுக்கு வந்தது.

கோபாலகிருஷ்ணன் கோபுவுக்கு நண்பர்தான். அவரிடம் போன் செய்து கேட்டபோது, “அந்தப் பெண், நடிகை சந்தியாவின் மகள். என் குடும்ப நண்பர் சந்தியா” என்றார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் சித்ராலயாவின் புதுப்படத்துக்குக் கதாநாயகி தேடும் படலத்தைச் சொல்லி, ‘அந்தப் பெண்ணை அழைத்தால் நடிக்க வருவாரா’ என்று கேட்டார். '

'நான் பேசி அழைத்து வருகிறேன்.'' என்று உறுதிதந்த வி.கோபாலகிருஷ்ணன், சொன்னபடியே அடுத்த இருநாட்களில் சந்தியாவையும் அவருடைய மகளையும் சித்ராலயா அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்தான் ஜெயலலிதா.

துணிந்து எடுத்த முடிவு

ஸ்ரீதர் ஜெயலலிதாவிடம் “எதையாவது பேசி நடித்துக் காட்டுங்க” என்றார். அடுத்த நிமிடம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்திலிருந்து மோனோ ஆக்ட்டிங் ஒன்றை நடித்துக் காட்டினார். அவரது ஆங்கில உச்சரிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கதைப்படி கான்வென்டில் படித்த ஒரு பெண்ணின் கதை என்பதால் அந்தக் கதாபாத்திரத்துக்குச் கனகச்சிதமாகப் பொருந்தினார் ஜெயலலிதா.

ஸ்ரீதர் ‘வெண்ணிற ஆடை’ கதையை சந்தியாவிடமும், ஜெயலலிதாவிடமும் சுருக்கமாகச் சொன்னபோது, சந்தியா பதில் ஏதும் கூறவில்லை. “யோசித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் கோபுவுக்கு போன் செய்துபேசினார் சந்தியா. “டைரக்டர்கிட்டச் சொல்லத் தயக்கமா இருக்கு, அம்மு நடித்த கன்னட படத்துலயும் அவளுக்குக் கைம்பெண் கேரக்டர்.

இப்போ ‘வெண்ணிற ஆடை’யிலும் அதே போன்ற கேரக்டர். மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வேண்டாம்னு பார்க்கிறேன்'' என்று சொல்ல,  சந்தியாவின் முடிவை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதாகக் கூறினார் கோபு. சந்தியா கூறியதை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதற்குள், சந்தியா வீட்டிலிருந்து மீண்டும் கோபுவுக்கு போன். இம்முறை ஜெயலலிதாவே பேசினார்.

“சினிமாவில் நடிப்பதுதான் புரஃபெஷன் என்று தேர்ந்தெடுத்து விட்டேன். பிறகு எந்தக் கதாபாத்திரமாக இருந்தால் என்ன? நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் இயக்குநரிடம் கூறிவிடுங்கள்'' என்று தெளிவாக, துணிவான குரலில் தெரிவித்தார் ஜெயலலிதா. நீச்சல் குளத்தில் கிடைத்த முத்துபோல் நாங்கள் கண்டுபிடித்த ஜெயலலிதா, அம்முவாகத் தமிழகத்தில் காலடி வைத்து, திரையில் கனவுக் கன்னியாக வெற்றிபெற்று, அரசியல் கடலில் குதித்து எதிர்நீச்சல் அடித்து, அம்மாவாக மறைந்தவர்.

(நினைவுகள் தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24521696.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 29: சட்டப்படி நடந்துகொண்ட ஜெயலலிதா!

 

 
siri%201jpg

‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஸ்ரீகாந்த், நிர்மலா

அரைமனதாக ஜெயலலிதாவின் அம்மா சம்மதிக்க, முதன்மைக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஜெயலலிதா. கதைப்படி மனநிலை குன்றிய இளம் கைம்பெண்ணாக நடித்த அவருக்கு வைத்தியம் செய்யும் டாக்டராக ஸ்ரீகாந்த் நடித்தார்.

ஸ்ரீகாந்தின் காதலியாக நடிக்க பொருத்தமான மற்றொரு இளம்பெண்ணத் தேடிக்கொண்டிருந்தது சித்ராலயா. அப்போது ஒரு பெண்ணின் புகைப்படம் சித்ராலயா நிறுவனத்தை நாடி வந்தது. அந்த பெண் மிக அழகாக இருந்தார். அவர்தான் ஹேமமாலினி.

 

இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அடுத்து நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றுக்காக மூர்த்தி என்ற இளம் வழக்கறிஞர் ஒருவர் ஸ்ரீதரைச் சந்தித்தார். கோபுவின் சிபாரிசு. மூர்த்தியை கோபுவுக்கு பிடித்து போனாலும், ஸ்ரீதர் அவரது முகத்தை பார்த்ததும் யோசிக்கத் தொடங்கினார். “உங்க முகம் ரொம்ப அழகா இருக்கே. நகைச்சுவை வேடத்துக்கு எடுபடுமா தெரியல. வேறு ஏதாவது ரோல் இருந்தால் சொல்லி அனுப்புறேன்'' என்று ஸ்ரீதர் சொல்ல, மூர்த்தி பதில் பேசாமல் திரும்பி சென்றார்.

வெளியே பத்தடி தூரம் நடந்துசென்றவர் திரும்ப வந்து, ஸ்ரீதரின் அறைக்கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி.“என்னோட அழகான முகமே எனக்கு வில்லனாக மாறும்னு எதிர்பார்க்கல.'' என்று ஒரு வசனத்தைச் சொல்ல, அப்போது மூர்த்தியின் பாடி லாங்குவேஜை கவனித்த ஸ்ரீதருக்கு அந்தக் கணமே அவரைப் பிடித்து போய்விட்டது. அன்றே மூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னாளில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி என்ற பெயரில் பிரபலமானார்.

siri%203jpg

அறிமுக நைகச்சுவை நடிகராக மூர்த்தி

ஜெயலலிதாவின் திறமை

‘வெண்ணிற ஆடை’யின் படப்பிடிப்பு மதுரை வைகை அணையில் தொடங்கியது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த ‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல’ என்ற பாடல் காட்சியில்தான் முதலில் நடித்தார் ஜெயலலிதா. வைகை அணைக்கு உல்லாச பயணம் வந்திருந்த பயணிகள், அக்கம்பக்கத்து கிராம மக்கள் என்று ஆயிரம்பேர்வரை கூடிவிட்டார்கள்.

அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவே கூச்சம் துளியும் இன்றி, டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்த அசைவுகளை சரியான வேகத்தில் ஆடி, நாகரா சாதனத்தில் ஒலிக்கும் பாடல்வரிகளுக்கு மிகத்துள்ளியமாக வாயசைத்து ஒரே டேக்கில் ஓகே செய்தார். பாடல் காட்சிதான் என்றில்லை, வசனக்காட்சியில் இன்னும் ஷார்ப்! கோபுதான் அவருக்கு வசனங்களைப் படித்து காட்டுவார்.

அதை ஒருமுறை மட்டும் கவனமாக கேட்கும் ஜெயலலிதா, ஏற்ற இறக்கம், மாடுலேஷன் என எதுவும் மிஸ் ஆகாமல் பேசி நடித்து அசத்திவிடுவார். முதல்நாள் படப்பிடிப்புக்கு  எப்படி வந்தாரோ, அப்படியேதான் கடைசிநாள்வரை வந்து, தான் தேர்ந்துகொண்ட கலைத்தொழிலுக்கு முழு சிரத்தையுடன் இருந்தார்.

ரத்தான ஒப்பந்தம்

வைகை அணைப் பாடல்காட்சிக்குப்பின் வசனக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் ஹேமமாலினியை வைத்து ஒரு டூயட் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. ஸ்ரீதருக்கு ஏனோ மனதில் ஒரு சஞ்சலம். “கோபு, எடுத்தவரைக்கும் ஒரு ரஷ் பார்க்கணும், ஏற்பாடு செய்” என்றவுடன் திகைத்துப்போனார் கோபு. ஸ்ரீதர் என்றுமே இம்மாதிரி கேட்டதில்லை.

ரஷ் பார்த்த ஸ்ரீதருக்கு பகீர் என்றது. ஹேமமாலினி அழகாக இருந்தாலும் ஒட்டடைக்குச்சிபோல மிகவும் ஒல்லியாக தெரிந்தார். லாங் ஷாட்களில் அவரது உருவம் சிரிப்பை வரவழைத்தது. படத்தைப் பார்த்த பல வியாபார முக்கியஸ்தர்கள், “என்ன இவர் இவ்வளவு ஒல்லியாக இருக்காரே'' என்று கமெண்ட் அடிக்க ஸ்ரீதர் குழம்பி போய் விட்டார். அவ்வளவுதான், “கோபு, அந்தப் பெண்ணை கேன்செல் செய்து திருப்பி அனுப்பிடு'' என்று கூலாகச்சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஸ்ரீதர்.

திரண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டார் கோபு. “அக்ரிமெண்ட்ல கையெழுத்துப்போடுறது நீ. கேன்சலுக்கு மட்டும் நானா” என்று கோபு கேட்க, “நீதாண்டா இதை ஹேண்டில் பண்ணுவே” என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் படப்பிடிப்பில் மகிழ்ச்சிபொங்கும் முகத்துடன் மே-அப் போட்டுக்கொண்டிருக்கும் ஹேமமாலினியை நோக்கிச் சென்றார். அவரது பக்கத்திலேயே அமர்ந்து மகளுக்கான மேக் -அப் திருத்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் அம்மாவான ஜெயா சக்ரவர்த்தி. அவர் முன்பாக போய் அமர்ந்த கோபுவைப் பார்த்ததுமே ஏதோ பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்ட ஜெயா சக்ரவர்த்தி, “என்ன கோபு சார்?” என்றார்.

நடந்த விஷயத்தைக் கோபு சொல்ல,ஜெயா சக்கரவர்த்தி ஆக்ரோஷத்துடன் கோபுவை பார்த்தார். “யு ஹவ் வேஸ்டட் அவர் டைம்'' என்று மட்டும் கூறி விட்டு, விருட்டென்று மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திப் படவுலகம் தனது சிவப்புக் கம்பளத்தை விரித்து அவரை வரவேற்று, கனவு கன்னியாக முடிசூட்டியது.

siri%202jpg

அறிமுக நாயகியாக ஜெயலலிதா

இவர் போய் அவர் வந்தார்

பின்னர் ஒருமுறை இதே ஹேமமாலினியைச் சந்தித்துக் கால்ஷீட் கேட்பதற்காக ஸ்ரீதரும் கோபுவும் மும்பையில் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஜெயா சக்கரவர்த்தியின் கோபமான முகம் கோபுவின் மணக்கண்ணில் நிழலாடியது. அவர் வளர்க்கும் கன்றுக்குட்டி உயர நாய்களை இவர்கள் இருவரின் மீதும் அவர் ஏவி விடுவதுபோல் நினைத்துப் பார்த்து கொண்டார் கோபு.

ஆனால், ஜெயா சக்கரவர்த்தியும் ஹேமமாலினியும் இருவரையும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். ‘இந்தியில் மிகவும் பிஸியாக இருப்பதால், தமிழ்ப் படங்களை இப்போதைக்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று ஹேமா கூறிவிட்டார். கிளம்பும்போது, ஜெயா மட்டும் கோபுவின் காதருகில் வந்து கிசுகிசுத்தார். “கோபு சார்.. இப்ப என்னோட பெண்  ஒல்லியா இல்லையே? '' என்றார். கோபுவுக்கு சுருக்கென்று தைத்தது.

‘காதலிக்க நேரமில்லை’  படத்தில் முதலில் நடிக்க வைத்து, பள்ளி மாணவிபோல் இருக்கிறார் என்று சில நாள் படப்பிடிப்புக்குபின் நீக்கப்பட்ட சாந்தி என்ற நிர்மலாதான் ஹேமமாலினி ஒப்பந்தம் செய்யப்பட்ட டாக்டரின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இவரது பெயருக்கு முன்னாளும் பின்னர் ‘வெண்ணிற ஆடை’ ஒட்டிக்கொண்டது.

தணிக்கையில் சிக்கல்

‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் ‘ஏ’  சான்றிதழ் வழங்கிவிட்டது மண்டல தணிக்கைக் குழு. மனநிலை பாதிக்கப்பட்ட கதாநாயகி, தனக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரிடம் தனது ரவிக்கையின் ஹூக்கை மாட்டிவிடச் சொல்வார்.

இந்த காட்சி இடம்பெற்றதால் ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். “ஹூக்கை அவிழ்த்தாதான் தப்பு. ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுக்கலாம். நம்ம ஹீரோ மாட்டத்தானே செய்யறான்?'' ஸ்ரீதர் கேட்டார். “விட்டு தள்ளு,  ஸ்ரீதர் கூட அடல்ட்ஸ் ஒன்லி  படம் எடுத்தார்னு சொல்லிக்கலாம்.” என்றார் கோபு. ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தும் படம்  ஹிட்!

ஜெயலலிதா பார்க்க முடியாத படம்

வழக்கம் போல் இந்த படத்துக்கும் ஸ்ரீதர் ப்ரிவியூ காட்சி வைக்கவில்லை. அதனால் தனது பதினெட்டு வயது வரை ஜெயலலிதாவால் இந்தப் படத்தை பார்க்க முடியுவில்லை. தனது கான்வெண்ட் தோழிகளுடன் தான் நடித்த முதல் தமிழ் படத்தை காண ஒரு திரை அரங்குக்குச் சென்றபோது கதாநாயகியான ஜெயலலிதாவை திரையரங்க நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

மகள் ஏமாந்துவிடவேண்டாம் என்று அம்மா சந்தியா ஒரு ப்ரிவியூ காட்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு ஜெயலலிதா மட்டும் படத்தைக் காண மறுத்துவிட்டார். “சட்டப்படி எனக்குப் பதினெட்டு வயது ஆனபிறகு படத்தைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிய ஜெயலலிதா இதை அவர் அளித்த பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்திருக்கிறார். ‘வெண்ணிற ஆடை’ படத்தை பார்ப்பதற்கு முன்பாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியாகி அவர் பிரபலக் கதாநாயகி ஆகியிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் கோபுவின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை வந்தது.

தொடர்புக்கு: tanthehindu@gmail.comஅறிமுக நகைச்சுவை நடிகராக மூர்த்தி‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஸ்ரீகாந்த், நிர்மலா‘வெண்ணிற ஆடை’ படத்தில்
அறிமுக நாயகியாக ஜெயலலிதா

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24580759.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 30: சிவாஜி கொடுத்த விரு(ந்)து!

 

 
sigaramjpg

‘சிகரம்’ பட இசையமைப்பில் அனந்து, எஸ்.பி.பி.

‘வெண்ணிற ஆடை’ படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்த நேரம் அது. இந்திப் பட வேலைகளுக்காக அடிக்கடி பம்பாய்க்குச் சென்று வந்து கொண்டிருந்தார் கோபு. இதன் நடுவே, யாருக்கும் தெரியாமல் திருவல்லிக்கேணியில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார் கோபு. அதற்குப் புண்ணியம் கட்டி கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்.

அவர் பங்கேற்று வந்த யூனிட்டி கிளப் என்ற அமெச்சூர் நாடகக் குழு ஒன்று செயல்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள், ‘அன்லக்கி நம்பர் 13’ என்ற நாடகத்தை மேடையேற்றினார்கள். மேஜர் திரைப்படங்களில் பிஸியாகி விட்ட நிலையில் யூனிட்டி கிளப்பிலிருந்து விலகிவிட்டார். யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் சித்ராலயா கோபுவைத் தேடி வந்தார்கள். “எங்களுக்கு நீங்கள் நாடகம் எழுத வேண்டும். எங்கள் யூனிட்டி கிளப்பில் சினிமா தொடர்புடையவர்கள் இருந்தால், சபாக்களில் எளிதாக சான்ஸ் கிடைக்கும்” என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தார்கள்.

 

“நானும் சினிமாவில் பிஸி” என்று சொல்லத்தான் நினைத்தார் கோபு. ஆனால் எழுத்தாளர், நடிகர் சோவின் தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், தனக்கு அளித்த ஆதரவையும் “எப்போதும் நாடகத்தை விட்டுவிடாதே” என்று அவர் கொடுத்த அறிவுரையையும் அந்த நேரத்தில் கோபு நினைத்துப் பார்த்தார். வந்தவர்கள் அனைவரும் கோபுவின் முகத்தையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க “அதற்கென்ன, எழுதிட்டா போகிறது” என்றார். கோபுவின் பதிலைக் கேட்டு யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் தலைகொள்ளாத சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றார்கள்.

மனோரமாவின் நிபந்தனை

அடுத்தசில தினங்களில் யூனிட்டி கிளப்பில் இருந்த அனந்துவை கோபுவிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்கள். “இவரிடம் கதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் நாடகமாக எழுதி, அதில் மனோரமா நடித்தால் அட்டகாசமாக இருக்கும்” என்று அவர்கள் கூற, “மனோரமா ரொம்ப பிஸி. என்றாலும் நான் பேசிப் பார்க்கிறேன்'' என்ற கோபு, அப்போதே மனோரமாவுக்கு போன் செய்தார். '' நீங்க எழுதினா எனக்கு ஒகே கோபண்ணா'' என்று மனோரமா உடனே ஓகே சொன்னார்!

தொடர்ந்து முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன், மணிமாலா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஆகியோரிடம் போன் மூலம் பேசியே நாடகத்தில் நடிப்பதற்குச் சம்மதம் வாங்கினார் கோபு. மனோரமா நடித்தாலே போதும் என்று நினைத்து வந்தவர்களுக்கு, பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே வளைத்துப்பிடித்து கோபு ஒப்பந்தம் செய்து கொடுத்ததும், யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார்கள்.

மனோரமா நாடகத்தில் நடிப்பதற்குப் போட்ட கண்டிஷன் இதுதான். நாடகம் நடக்கும்போது கோபுவும் உடன் இருக்க வேண்டும். அதற்காகவே, தனது முத்திரையான நகைச்சுவையைச் சேர்த்து, அதில் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வேடத்திலும் நடித்தார் கோபு. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ஹாலில் அரங்கேறியது நாடகம். நாடகத்தின் பெயர், ‘காரணம் கேட்டு வாடி!’

அப்போதைய நாடக ஜாம்பவான்களான ஏ.பி.நாகராஜன், சோ, நீலு, சகஸ்ரநாமம் ஆகியோர் அவரது நாடகத்தைக் காண வந்ததுதான் கோபுவுக்குப் பெரிய ஆச்சரியம். ‘காரணம் கேட்டு வாடி’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, அதைப் படமாக்கப் போவதாக கூறினார் ஏ.பி.என். ஆனால், அந்த நாடகத்தைத்தான் பாலசந்தர் பிற்காலத்தில் ‘புதுப் புது அர்த்தங்கள்’ என்ற பெயரில் படமாகப் எடுத்தார்.

அந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின் அனந்துவை கோபுவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘சாந்தி நிலையம்’, ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற படங்களில் தனக்கு உதவியாளராக இருத்திக் கொண்டார். பின்னர் பாலசந்தர் “ எனக்கு அனந்துவை உதவியாளராகத் தர முடியுமா?” என்று கோபுவிடம் கேட்டு அவரை விரும்பி அழைத்துக்கொண்டார். அனந்துவைத் தனக்கு உதவியாளராக தந்ததை நினைவில் வைத்திருந்து கோபுவின் 80-தாவது பிறந்த நாளுக்கு வந்த பாலசந்தர் அதற்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.

gopujpg

கோபுவின் 80-வது பிறந்தநாள் விழாவில் தம்பதியை வாழ்த்தும் பாலசந்தர்.

 

இதுவா உன் இடம்?

இதற்கிடையில் அந்த நாடகத்தைப் பார்க்க வந்த ஸ்ரீதர். நேரே க்ரீன் ரூமுக்குள் கோபுவைக் கடிந்து கொண்டார். ''ஏண்டா காதலிக்க நேரமில்லை’ படத்தோட காமெடியை ஊரு, உலகமெல்லாம் பாராட்டிக்கிட்டு இருக்கு. சினிமாவுல போகஸ் பண்ணாம நாடகத்தைக் கட்டிக்கிட்டு அழறியே? நல்லா சம்பாதிக்கிற நேரத்துல எதுக்குடா ட்ராமா, இதுவா நீ சாதிக்க நினைச்ச இடம்?'' என்று கேட்டுவிட்டார். ''லைவ்வா கிடைக்கிற இந்தக் கைதட்டல்களுக்கு சினிமா புகழ் ஈடாகுமா ஸ்ரீ?'' கோபு கேட்க, சில நொடிகள் யோசித்த ஸ்ரீதர் தலையசைத்து ஒப்புக்கொண்டார்.

சிவாஜிக்குப் புரை ஏறியது

‘காரணம் கேட்டு வாடி’க்கு பிறகு, யூனிட்டி கிளப் சார்பில் ‘மாயா பஜார்’ என்ற நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றினார் கோபு. அந்த நாடகத்தில் கர்நாடகப் பாட்டு வாத்தியாராக கோபுவும் நடித்தார். நாடகத்தைக் காண வந்த சிவாஜி, கோபுவின் நடிப்பை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். தனது மானேஜரை ‘எஸ்கார்ட்’ போல அனுப்பி, நாடகம் முடிந்ததும் கோபுவை நேரே தனது வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார்.

“ஆச்சாரி.. ஆயிரம் சினிமாவுல நடிக்கலாம். ஆனால் ஒரு நாடகத்துல நடிச்சு நேரடியா மக்கள் கைதட்டலை வாங்கறது ரொம்ப கஷ்டம். நாடகக்காரனான எனக்குதான் அந்தக் கஷ்டம் தெரியும். நீ பாட்டு பாடி டான்ஸ் ஆடி வேற நடிக்கிறே.. உன்னை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியல. நீ பன்முகக் கலைஞன். இன்னிக்கு இரவு உணவை என்னோட உட்கார்ந்து சாப்பிடறே'' என்றார். திருமதி கமலா சிவாஜி பரிமாற, இருவரும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தனர்.

“எப்படி ஆச்சாரி... உன்னால எழுதவும் முடியுது, நடிக்கவும் முடியுது?'' சிவாஜி கேட்க, அதற்கு கோபு சொன்ன பதிலைக் கேட்டு சிவாஜி சிரிக்க தொடங்கி, அவருக்குப் புரை ஏறிவிட்டது. கமலா சிவாஜி அவர் தலையில் வெகு நேரம் தட்டிக்கொண்டிருந்தார்.

கோபு சிவாஜியிடம் சொன்ன பதில் இதுதான். “அண்ணே.. நீங்களும் நடிப்புல பொளந்து கட்டுறீங்க. நானும் நல்லா எழுதறேன்னா.. அது நம்ம மனைவிமார்களோட பெயர் ராசி. என் மனைவியின் பெயரும் கமலா.'' என்றார் கிளம்பும்போது “நாடக மும்முரத்துல நம்ம ‘கலாட்டா கல்யாணம்’ ஸ்கிரிப்ட் வேலையை மறந்துடப் போறே..'' என்று வாசல் வரை வந்து கோபுவை வழியனுப்பி வைத்தார் சிவாஜி.

“ஆயிரம் விருதுகள் வாங்கலாம். ஆனால் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பாராட்டி தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தது என்னைப் பொறுத்தவரை பெரிய விருது. சிவாஜி தந்த இந்த விருந்து எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம்'' என்று சித்ராலயா கோபு நெகிழ்ந்து போய்க் கூறுகிறார்.

மாயா பஜார் நாடகத்துக்குப் பிறகு, ‘ஸ்ரீமதி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார் கோபு. தனது நகைச்சுவையை அடக்கி வாசித்து, உணர்ச்சி பூர்வமாக கோபு எழுதிய நாடகம். அதன் பின் அரங்கேற்றிய ‘திக்கு தெரியாத வீட்டில்’ நாடகம் தமிழகத்தையே கலக்கியது. மனோரமா, கல்பனா முத்துராமன், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, கோபி ஆகியோர் நடித்தனர். இந்த நகைச்சுவை நாடகம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்த அன்றாடம் பிரபலங்கள் பலரும் நாடகத்தைப் பார்க்க வந்தனர். இடைவேளையில் அவர்களை மேடை ஏற்றி நான்கைந்து வார்த்தைகளைப் பேச வைத்தனர் யூனிட்டி கிளப் உறுப்பினர்கள்.

ஒரு முறை ஜெயலலிதா அந்த நாடகத்தைப் பார்க்க வந்து விட்டு மேடை ஏறி பேசினார்.

“சித்ராலயா கோபுவுக்கு நான் இந்த இடத்தில ஒரு கோரிக்கையை வைக்கிறேன். நிச்சயம் இந்த நாடகம் திரைப்படமாக எடுக்கப்படும். அப்படி எடுக்கும்போது, இதில் வரும் துணிச்சல்காரப் பெண்ணாக வரும் கதாநாயகியின் பாத்திரத்தை நான் ஏற்று நடிக்க விரும்புகிறேன் என்று அரங்கம் அதிர அறிவித்தார். அவரது அறிவிப்பால் கோபுவைச் சில தயாரிப்பாளர்கள் பணப் பையுடன் தேடத் தொடங்கினார்கள்.

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644090.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 31: ‘நெஞ்சிருக்கும் வரை’ மறக்க முடியாது!

 

 
sirithralayajpg

கோபு எழுதி அரங்கேற்றிய ‘திக்கு தெரியாத வீட்டில்’ நாடகத்துக்குத் தமிழகத்தின் பல நகரங்களில் வரவேற்பு கிடைத்தது. அந்த நாடகம் சென்னையில் நடந்தபோது அதற்குத் தலைமையேற்றுப் பேசிய ஜெயலலிதா, “இந்த நாடகம் படமானால் அதில்வரும் துணிச்சலான கதாநாயகி வேடத்தில் நான் நடிக்கத் தயார்” என்று மேடையில் அறிவித்தார். நாடகத்தைப் பார்த்த பாபு மூவீஸ் சுந்தரம் அதை ‘வீட்டுக்கு வீடு’ என்ற தலைப்பில் தயாரித்தார். ஆனால் அறிவித்தபடி ஜெயலலிதாவால் நடிக்க முடியவில்லை.

அப்போது எம்.ஜி.ஆர் படங்களில் அவர் படு பிஸியாகிவிட்டார். அதனால் லட்சுமி நடித்தார். முத்துராமன் நடித்த கதாபாத்திரத்தை ஜெய்சங்கரும், கோபி செய்த முரட்டு கதாபாத்திரத்தை முத்துராமனும், மணிமாலா கதாபாத்திரத்தை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவும் செய்தனர். அந்தப் படத்தில்  வி.கே. ராமசாமி - நாகேஷ் இருவரும் அப்பா மகனாக வந்து செய்யும் அமர்க்களம் பெரும் வரவேற்பினை பெற்றது.

 

பம்பாய் பயணம்

பம்பாயின் புகழ்பெற்ற  ஷண்முகானந்தா ஹாலில் மூன்று தினங்களுக்கு உங்கள் நாடகங்களை நடத்த வாருங்கள் என்று கோபுவுக்கு பம்பாய்  தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்தது. அதனால்  பம்பாய் மெயிலில் நட்சத்திர பட்டாளம் கிளம்பியது. முத்துராமன், மனோரமா, மூர்த்தி, மணிமாலா, கோபாலகிருஷ்ணன், ரேணுகா, ஆகியோர் தங்கள் குடும்பத்தோடு வந்தனர். கோபுவும் தனது குடும்பத்தினரோடு சென்றார். ஒரு ரயில் பெட்டி முழுவதும் யூனிட்டி கிளப் அங்கத்தினர்கள்தான்.

நடிகை நடிகையரைப் பார்க்க அந்த ரயில் பெட்டியைச் சுற்றி கூட்டம். ரயில் கிளம்ப ஒரு மணிநேரம்வரை இருந்ததால் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. கொஞ்ச நேரத்தில் ரயில்வே போலீஸார் ஓடிவந்து அங்கே கூட்டத்தை கலைக்க வேண்டி வந்துவிட்டது. மும்பை ஷண்முகானந்தா ஹாலில்தான் அனைவரும் தங்கினார்கள். முதல் நாள் ‘மாயா பஜார்’, இரண்டாம் நாள் ‘ஸ்ரீமதி’, மூன்றாம் ‘நாள் திக்கு தெரியாத வீட்டில்’ என்று மூன்று நாடகங்களும் அங்கே அமோக வரவேற்பைப் பெற்றன.

இப்படி கோபு நாடகங்களில் மும்முரமாக இருந்த நேரத்தில் ஒருநாள்  கோபுவைத் தேடி அவரது திருவல்லிக்கேணி வீட்டிற்கு வந்தார் ஸ்ரீதர். “என்னடா கோபு! ஆபிஸுக்கு வரவே மாட்டேங்கிறே! சிவாஜியை வச்சு புதுசா படம் பண்ணப் போறேன். உன் ட்ராமாவை மூட்டைக் கட்டி வச்சுட்டு என்னோட பெங்களூரு வா'' என்று கையோடு கோபுவை அழைத்துக்கொண்டு காரில் பறந்தார்.

காரில் திரைக்கதை

அந்தப் படம்தான் ‘நெஞ்சிருக்கும் வரை’. வேலை கிடைக்காமல் திண்டாடும் மூன்று படித்த இளைஞர்களின் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை. “ பெங்களூர் போய்ச் சேர்வதற்குள் காரிலேயே திரைக்கதையை விவாதித்து முடித்துவிடுவோம். நீ திரைக்கதையை எழுதிக்கொண்டே வா” என்றார் ஸ்ரீதர்.

 “ரூமில் அமர்ந்து எழுதினாலே, என் கையெழுத்து அலங்கோலமாக இருக்கும். ஓடும் காரில் எழுதச் சொல்லுகிறாய். பிறகு என்னுடைய கையெழுத்தை குறை சொல்ல கூடாது'' என்று கூறிப்பார்த்தார் கோபு. ஆனால் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஸ்ரீதர்.

ஸ்ரீதருக்கு மெதுவாகக் கார் ஓட்டி பழக்கமில்லாததால் கதையை விவாதிக்கும் சுவாரசியத்தில் ஸ்ரீதர் அடிக்கடி ஆக்ஸிலேட்டரை சடார், சடாரென்று மிதிக்க, அப்போதெல்லாம் ''பாத்து லாரி வருது !'' என்று கோபு சொல்வார். ஸ்ரீதரோ “ இந்த சீன்ல முத்துராமன்ல வரணும். எதுக்கு  லாரி வரனும்? '' என்பார் கூலாக. “ கதையில இல்லேப்பா.. எதிரே வருது. கதை சொல்லுற  சுவாரசியத்துல கவனத்தை ரோட்டுல வைக்க மறந்துடுரே! கதைக்கு வேகம் கொடுக்க நினைச்சு அதைக் காருக்கும் கொடுத்துடுறே.

பெங்களூரு போய் சேர்துக்குள்ளே திரைக்கதை முடியுதோ இல்லையோ நம்ம ரெண்டு பேர் கதையும் முடிஞ்சுடப்போறது. ‘நெஞ்சிருக்கும் வரை’னு தலைப்பு வெச்சுட்டே.. படம் ரிலீஸ் ஆகும்வரை நமக்கு உயிரு இருக்கணும் இல்லே'' என்று கோபு அலற, “ இதுதாண்டா… உன்னோட இந்த நகைச்சுவை உணர்வுதாண்டா எனக்கு ஹார்லிக்ஸ். நீ பக்கத்துல இருக்கற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாதுடா” என்று கூறிய ஸ்ரீதர் கூறியதுபோவே முழுக்கதையும் காரிலேயே விவாதித்து முடித்துவிட்டார். அதிவேகத்தில் பறந்த காரில் கோபு ஒன்லைனை எழுதிவந்ததால் அது ஒரு கோழி கிறுக்கலாக இருந்தது. 

ஸ்ரீதரின் புதுமை

பிறகு ஹோட்டல் போய் சேர்ந்ததும் கோபு தெளிவாக எழுதிக்கொடுத்தார். சிவாஜி, முத்துராமன், கோபாலகிருஷ்ணன், கே. ஆர். விஜயா, கீதாஞ்சலி என்று நட்சத்திரங்களையும் தேர்ந்தெடுத்தது சித்ராலயா. பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அமர்ந்து கதைக்கான உரையாடலை ஸ்ரீதரும் கோபுவும் உருவாக்கினார்கள்.

 ‘ஏழைப் பட்டதாரிகள்’ பற்றிய படம் என்பதால் வறுமையைக் காட்ட கறுப்பு வெள்ளைதான் சிறப்பாக இருக்கும் என்கிற காரணத்துக்காக ஸ்ரீதர் இப்படத்தைக் கறுப்பு வெள்ளையில் எடுத்தார். மேலும் யாரும் செய்ய துணியாத ஒரு புரட்சியை இந்தப் படத்தில் செய்தார். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் யாருக்குமே மேக்கப் கிடையாது.

விசு எனும் விஸ்வநாதன்

ஜெமினி நிறுவனத்தில் துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி அனுபவம்பெற்ற பாலகிருஷ்ணன்தான்  இந்த படத்தின் ஒளிப்பதிவாளர். இசையமைப்பாளர் சித்ராலயாவின் ஸ்பெஷலான எம்.எஸ்.வி. அவரை ஒப்பந்தம் செய்வதற்காக கோபு சென்றபோது, எம்.எஸ்.வி. கொடைக்கானல் சென்றிருப்பதாக அவரது அம்மா கூறினார். கோபு வந்துவிட்டுப் போன விவரத்தை அம்மா சொன்னதும், ஹார்மோனியப் பெட்டியுடன் சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து விட்டார் எம்.எஸ்.வி.

“ என்ன விசு… குளுகுளுன்னு இருந்தாத்தான் இந்த ஹார்மோனியப் பெட்டியில ட்யூன் வருமா என்ன?” என்று உரிமையுடன் கிண்டல் செய்தார் கோபு. “ என்ன சடகோபா அண்ணா இப்படி சொல்லிட்டே… கொடைகானல்ல சிவாஜி படம் ஷூட்டிங்! அங்கேயே சிவாஜிக்கு டியூன் போட்டு காட்ட சொன்னாங்க. நாலு டியூன் போட்டேன். ஆனா ஷூட்டிங் நடக்கல. எதோ ‘மான்சூன்’னு ஒரு மிருகமாம். அது ரொம்ப தொல்லை கொடுக்குதாம் சிவாஜி அண்ணே சொன்னாரு'' என்றார் எம்.எஸ்.வி. அப்போது உள்ளே நுழைந்த ஸ்ரீதர் ''மான்சூன்னா மிருகம் இல்லே விசு, மழைக்காலம் வந்துடுச்சுன்னு அர்த்தம்.'' என்றார்.

''ஓ.. அப்படியா.! ஷூட்டிங் நடத்தறது கஷ்டம். மான்சூன் செட் ஆயிதுச்சுன்னு பேசிக்கிட்டாங்க. நான் ஏதோ மிருகம்னு நினைச்சுக்கிட்டேன்'' என அப்பாவியாகச் சொன்னார் எம்.எஸ்.வி. அந்தக் குழந்தைமைதான் எம்.எஸ்.வி.

சித்ராலயா நிறுவனம்

எம்.எஸ்.வி.க்கு பிறந்த வீடு போன்றது. கம்போஸிங், பின்னணி இசை வேலை எதுவும் இல்லை என்றால் நேரே சித்ராலயா அலுவலகம் வந்து ஸ்ரீதர் கோபுவிடம் வம்படித்து கொண்டிருப்பார். எம்.எஸ்.வியின் அம்மா கண்டிப்பானவர். அவருக்கும் அம்மாவிடம் பக்தியும் பயமும் அதிகம். அப்படிப்பட்ட எம்.எஸ்.வி ஒருமுறை தனது அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார். 

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24707150.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 32: காலையில் அழுது இரவில் சிரித்த காஞ்சனா!

 

 
uttjpg

சித்ராலயா நிறுவனம் எம்.எஸ்.விக்கு பிறந்த வீடு போன்றது. தனது தாயாரிடம் பயமும் பக்தியும்கொண்ட எம்.எஸ்.வி, சிலசமயம் ரெக்கார்டிங் வேலைகள் முடிந்தபிறகு, தனது குழுவில் இருந்த வெங்கடேஷ், நஞ்சப்பா ஆகியோருடன் இரவுப் பார்ட்டிக்குச் சென்றுவிட்டு சற்று தாமதமாக வீட்டுக்குச் செல்வதுண்டு.

அதுபோன்ற சமயங்களில் “ ஏண்டா விசு லேட்?” என்று கேட்பாராம் அவரது அம்மா. அப்படிக் கேட்கும்போதெல்லாம் “சித்ராலயா போயிருந்தேன். ஸ்ரீதரும், சடகோப அண்ணாவும் அடுத்தப் படத்துக்கு கதை சொன்னாங்க. அதான் லேட்” என்று சொன்னால் பேசாமல் போய்விடுவார்.

 

சித்ராலயா நிறுவனத்தின் மீது அந்தத் தாய்க்கு அவ்வளவு நம்பிக்கை, மதிப்பு. ரெக்கார்டிங் ஸ்டுடியோ மராமத்து வேலைகளுக்காக ஒருவாரம் விடுமுறை விட்டிருந்த நேரத்தில் “சடகோப அண்ணாவைப் பார்த்துட்டு வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு விசு எங்கேயோ போக, கோபுவோ விசுவைத்தேடி அவர் வீட்டுக்குப் போய்விட்டார்.

கோபுவைக் கண்ட விசுவின் தாயார் '' என்ன கோபு.. கதை சொல்லிகிட்டே இருக்கீங்க. என் பிள்ளை டெய்லி லேட்டா வரான்.'' என்று கேட்டுவிட்டார். விஷயம் கோபுவிற்கு புரிந்து விட்டது. ''இல்லேம்மா.கதையை மாத்திக்கிட்டே இருக்கோம். அதனாலதான் விசுவை தொந்தரவு செய்யறோம்'' என்று சமாளித்துவிட்டார். பின்னர் எம்.எஸ்.வியைப் பார்த்தபோது

“என்ன விசு, அம்மாகிட்ட எங்களை மாட்டி விடறே” என்று கேட்டால், “ உங்க பெயரை சொன்னாதான் அம்மா திட்ட மாட்டாங்க'' என்பார் விசு. அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ளும் எம்.எஸ்.வி சித்ராலயா படங்களுக்குக் கொடுத்த இசையும் உயர்ந்த தரத்துடன் இருந்தது. ‘நெஞ்சிருக்கும் வரை’யில் எம்.எஸ்.வியின் அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன.

‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் கோபுவுக்கு இந்தப் படத்தில் வேலை இல்லை என்று நகைச்சுவை பிரியர்கள் வருத்தப்பட்டனர். இது ஸ்ரீதரின் காதுக்கும் எட்டியது. உடனே நண்பனைத் தேடி திருவல்லிக்கேணிக்கு வந்துவிட்டார்.

“கோபு! அடுத்து நான் இரண்டு படம் எடுக்கப் போறேன். எனக்காக ஒன்று. உனக்காக ஒன்று'' என்றவர் அதற்கான அதிகாரபூர்வை அறிவிப்பையும் செய்துவிட்டார். ஒன்று மிகவும் சோகமான படம். மற்றொன்று நகைச்சுவை படம். காலையில் சோகப்படமும் இரவு நகைச்சுவைப் படமும் இடைவிடாமல் படமாக்கப்பட்டன.

அழுகையும் சிரிப்பும்

இரண்டு படங்களிலும் காஞ்சனாதான் கதாநாயகி. கோபு ஒரே மூச்சில் எழுதிய முழு திரைக்கதை ‘உத்தரவின்றி உள்ளே வா’.  தான் எழுதிய படங்களிலேயே கோபுவுக்கு மிகவும் பிடித்த படமும் இதுதான். இந்தக் காலத்துக்கும் ஏற்றப் புதுமையான கதை. நாகரீகம் நிறைந்த நகைச்சுவை. படத்தின் இயக்குநர் என்.சி. சக்கரவர்த்தி.

ரமாபிரபா நடித்த ‘தேனாற்றங்கரையினிலே’ பாடல் அற்புதமாகப் படமாக்கப்பட்டது. வானொலியில் வேண்டும் என்றே இரவு நேரங்களில் அந்தப் பாடலை ஒலிபரப்பிப் பயமுறுத்துவார்கள். ரமாபிரபாவுக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. நாகேஷ் பாகவதராக ‘பூமியில் மானிட ஜென்மம் எடுத்து’ என்று பாடியபோது, விசிலும் கைதட்டலும் அரங்கை அதிரச் செய்தன.

ஸ்ரீதர் இயக்கிய படம் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ பெண்களை மிகவும் பாதித்த படம். ஜெமினி, காஞ்சனா, பாரதி, முத்துராமன், ருக்மணி ஆகியோர் நடித்த இந்தப் படம் பெண்களைக் கண்ணீர் விட வைத்தது. காஞ்சனா காலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிழிய பிழிய அழுது விட்டு, இரவு ‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்.

இடைவெளியில் ஒரு நாடகம்

‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் கோபு பிஸியாக இருந்தபோது செட்டில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி அங்கலாய்ப்பார்.  “கோபு சார், திருவல்லிக்கேணி யூனிட்டி கிளப் ஆட்கள் உங்கமேல ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க அவங்களுக்கு நாடகம் எழுதித் தராம சினிமாவுலயே கவனம் செலுத்தறீங்கன்னு ஃபீல் பண்றாங்க..'' என்றார். மனோரமாவும்  “என்ன அண்ணே. அடுத்த டிராமா எப்போ எழுதப் போறீங்க?'' என்று கேட்டபடி இருந்தார்.

கோபுவின் மூளைக்குள் மீண்டும் நாடக அரங்கம் ஒளிர்ந்தது. கரகோஷம் காதுகளுக்கு ஒலித்தது.  ‘உத்தரவின்றி உள்ளே வா’ படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் யூனிட்டி கிளப்புக்காக ஒரு நாடகத்தை எழுதத் தொடங்கினார். பிறகு நாடகத்தை அவர் படித்து காட்டுவதற்காக கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டில் நடிகர்களும் கிளப் ஆட்களும் ரகசியமாகத் திரண்டனர்.

1971-ல் பங்களாதேஷ் யுத்தத்தை முன்னிட்டு வெளியே ‘பிளாக் அவுட்’ நடந்து கொண்டிருக்க, உள்ளே கோபு வசனங்களைப் படித்து காட்டுவார். நகைச்சுவை வசனங்களைக் கேட்டு ஒரே சிரிப்பு சத்தமாக இருக்கும். நாடக வாசிப்பும் அதன்பின் விவாதமும் நடந்துமுடிந்தபிறகு

“இந்த நாடகம் உங்களுக்குப் பெரிய பெயரை வாங்கித் தரப்போகிறது. பாருங்க.'' என்று ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சொன்னார்.

‘காதலிக்க நேரமில்லை’ வாங்கிக் கொடுத்த பெயரை இந்த நாடகம் திரைப்படமாகும்போது உங்களுக்கு வாங்கிக் கொடுக்கும், சந்தேகமேயில்லை'' என்றார் முத்துராமன். அந்த நாடகம்தான்  ‘காசேதான் கடவுளடா’.

மறக்கமுடியாத மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்

கோபுவுக்கு ஒரு செண்டிமெண்ட். அவரது நாடகங்கள் எல்லாமே மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்ஸில் அரங்கேறுவதுதான் வழக்கம். மறைந்த மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ராஜகோபாலனுக்கு கோபுவின் நகைச்சுவை மீது அலாதி பிரியம். ‘காசேதான் கடவுளடா’ நாடகம் அரங்கேற்றம் ஆனது. அரங்கில் ஒரே சிரிப்பு அதிர்வெடி, கலாட்டாதான். பார்வையாளர்கள் சிரிப்பதற்கு வசதியாக நடிக நடிகையர் காத்திருந்து அடுத்த வசனத்தைப் பேசவேண்டி இருந்தது. அந்த நாடகத்தை அடுத்துவந்த மூன்று மாதங்களுக்கு அட்வான்ஸ் புங்கிங் செய்துகொண்டது மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்.

கதைப்படி சித்தியின் கண்டிப்பால் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் மூர்த்தியின் மூத்த தாரத்து மகனும் அவனது சிற்றப்பா மகனும் தங்கள் டீக்கடைக்கார நண்பனை பத்ரிநாத் சாமியார் வேடம் போட்டு அழைத்து வருவார்கள். டீக்கடைக்காரர் சாமியாராக வந்து, வீட்டுப் பையன்கள் பணப் பற்றாக்குறைக்காக, திட்டம் போட்டு சொந்த வீட்டில் திருடுவார்கள். இந்த நாடகம் திரைவடிவம் பெற்றபோது சினிமாவில் லட்சுமி நடித்த கதாபாத்திரத்தை நாடகத்தில் மனோரமா நடித்தார். முத்துராமன் நாடகத்திலும் அதே கதாபாத்திரத்தை செய்தார்.

ஒரு பக்கம் பாலசந்தரின் ராகினி கிரியேஷன்ஸ் நாடகங்கள். மறுபக்கம் சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸின் அரசியல் நையாண்டி நாடகங்கள், வி.எஸ்.ராகவனின் நாடகங்கள், எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்கள், ஆர்.எஸ்.மனோகரின் புராண நாடகங்கள், காத்தாடி ராமமூர்த்தி குழுவின் சமூக நாடகங்கள் என்று ஆரோக்கியமான போட்டிகள் இருந்த காலகட்டம் அது.

கோபுவின் நாடகங்கள் முழுநீள நகைச்சுவை வகை என்பதால், அவருக்கு எந்தவித போட்டியும் இல்லை. ஒரு நாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ‘காசேதான் கடவுளடா’ நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம், யாரும் எதிர்பாராத வகையில் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது…

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24761467.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 33: உயிரைக் குடித்த நகைச்சுவை!

 

 
sirijpg

‘காசேதான் கடவுளடா’ படத்தில் லட்சுமி, முத்துராமன், ‘தேங்காய்’ சீனிவாசன், ஸ்ரீகாந்த்

சென்னையில் இருந்த சபாக்கள், வெளியூர் சபாக்கள் ‘காசேதான் கடவுளடா!’ நாடகத்துக்கு போட்டிபோட்டுக்கொண்டு தேதிகள் வாங்கின. நாடகம் சூப்பர் ஹிட் ஆனது. 900 மேடைகள் கண்டபின்பு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ஒருநாள் ‘காசேதான் கடவுளடா!’ நாடகம் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துயர சம்பவம் நடந்தது.

நாடகத்தின் ஒரு கட்டத்தில், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி தனது இரண்டாவது மனைவியை மனோரமாவுக்கு அறிமுகம் செய்யும் காட்சி நடந்து கொண்டிருந்ததது. அதில் மூர்த்தி, லீலாவைக் காட்டி, ஆங்கிலத்தில் “She is my second wife” என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக.. “I am her second husband” என்று கூறிவிட, அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்து நிற்க சில வினாடிகள் பிடித்தது.

 

அப்போது முன்வரிசையில் அமர்ந்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவருக்குத் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆனால், அதை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாடகத்தைப் பார்த்திருக்கிறார்.

அடுத்த காட்சியில் மூர்த்தி தனது இன்ஜினீயர் நண்பரிடம், “ஏன்பா.. நேத்து உன்னைப் பார்க்க வந்தேன். உன் வீடு எனக்கு அடையாளம் தெரியலை..'' என்பார். அதற்கு அந்த இன்ஜினீயர் நண்பர், “என்ன சார்! வீட்டு வாசல்ல பொறியாளர்னு கொட்டை எழுத்துல பெயர்ப் பலகை இருக்கே, அதைப் பார்த்துமா கண்டுபிடிக்க முடியல?” என்று கேட்பார்.

உடனே மூர்த்தி. “அடடே! அந்த வீடுதானா... பொறியாளர்னு படிச்சதும் நான் ஏதோ அரிசிப்பொரி விக்கிறவர் வீடோன்னு  நினைச்சுட்டேன்..'' என்று கௌண்டர் கொடுத்ததும் சபா அதிர்ந்தது. அப்போது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் வாய்விட்டுச் சிரித்த அந்த வழக்கறிஞர் அப்படியே சுருண்டு விழுந்தார்.

அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓடிப்போய் அவரைத் தூக்க, நாடகம் நிறுத்தப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். ஆனால், சிசிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இந்த நிகழ்வு கோபுவின் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அந்த வழக்கறிஞரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு கோபு வருத்தம் தெரிவித்தபோது, “வருத்தத்துக்கு மத்தியிலும் எங்க அப்பா சிரித்துக் கொண்டே இறந்து போனார் என்ற திருப்தி இருக்கிறது. நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்'' என்றார்கள் குடும்பத்தினர். இருப்பினும் வாய்விட்டுச் சிரித்த ஒரு கலா ரசிகரை இப்படி காலன் கொண்டுசென்றது கோபுவுக்கு மனவருத்தத்தை அளித்தது.

ஓட்டை வழியே நோட்டம்

‘காசேதான் கடவுளடா’ நாடகத்துக்குக் கிடைத்த வெற்றியால் அது நிச்சயம் ஒருநாள் திரைப்படமாகும் என்று அதில் நடித்த நடிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. “கோபண்ணே.. சினிமால இந்தக் கேரக்டர் எனக்கு, அந்த கேரக்டர் எனக்கு என்று முன்கூட்டியே துண்டுபோட்டு இடம்பிடித்து வைத்துக்கொண்டார்கள். நாடகத்தில் சாமியார் வேடத்துக்கு அமோக வரவேற்பு.

ஏ.ஜி.எஸ் ஆபீசில் பணிபுரிந்த ரமணிதான் சாமியாராக நடித்தார். நாடகத்தின் வெற்றியை அறிந்து , திரைப்படத்துறையிலிருந்து நிறையப் பேர் நாடகத்தைக் காண வந்தனர். மனோரமாவுக்கு ஒரு த்ரில்லான பழக்கம். திரையில் இருக்கும் சிறு ஓட்டை வழியாக நாடகம் பார்க்க வி.ஐ.பிக்கள்  என்று யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விடுவார்.

siri%202jpg

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பாடல் பதிவில் கோபு, கவிஞர் வாலி, எம்.எஸ்.வி மற்றும் குழுவினர்

 

ஒருநாள் அப்படித் திரையின் ஓட்டை வாழியாக பார்த்துக் கொண்டிருந்தவர், பரபரப்புடன் கோபுவிடம் ஓடி வந்தார். “அண்ணே! ஏவி.எம் செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மாவும் நாடகம் பார்க்க வந்திருக்காங்க! நாடகத்தை நிச்சயம் ஏவி.எம் வாங்கப் போறாங்க'' என்றார்.  மனோரமாவுக்கு ‘ஆச்சி’ என்று பட்டம் கொடுத்ததே ஏவி.எம்தான். அவரே சொல்லும்போது நிச்சயம் அது நடக்கும்'' என்று முத்துராமனும் சேர்ந்து சொன்னார்.

மனோரமா வாய் முகூர்த்தம் பலித்தது! மறுநாளே கோபுவின் வீட்டுக்கு ஏவி.எம் மேனேஜர் கப்பல் போன்ற காரை எடுத்துவந்து அதில் கோபுவை அழைத்துச் சென்றார்.

அந்தநாள், கோபுவின் வாழ்வில் அவருக்கு இயக்குநர் அந்தஸ்து கிடைக்கும் சுபநாளாக அமைந்தது. நீங்கள்தான் படத்தை இயக்க வேண்டும் என்று ஏவி.எம் முருகன் கூற, எனது கதைகளை சி.வி.ராஜேந்திரனைக் கொண்டுதான் இயக்கச்சொல்வேன் என்று கோபு தெரிவித்தார். ஆனால், கோபுதான் இயக்க வேண்டும் என்று ஏவி.எம் நிறுவனம் வற்புறுத்தியதால் கோபு ஒப்புக்கொண்டார்.

யார் அந்தச் சாமியார்?

பட அறிவிப்பு வந்ததும் நாடகத்தை மேலும் 200 நாட்களுக்குச் சபாக்கள் ஒப்பந்தம் செய்துகொண்டன. நாடகம் சூப்பர் டூப்பராகப் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படவேலைகள் தொடங்கின. சாமியார் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது. கோபுவுக்கு மிகவும் நெருக்கமான நாகேஷைத்தான் சாமியார் வேடத்தில் போடுவார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர்.

நாகேஷ் கூட அப்படி ஒரு நினைப்பை வைத்திருந்தார். ஒரு முறை நாடகம் பார்க்க வந்த நாகேஷ், “கோபு சாமியார் ரோல் என்னோடது! சொல்லிப்புட்டேன்'' என்று அன்பாக மிரட்டிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால், மெட்ராஸ் பாஷை பேசுவதற்கு வேறு யார் சரியாக இருப்பார்கள் என்று ஏவி.எம் கேட்டபோது கோபுவின் நினைவுக்கு வந்தவர் தேங்காய் சீனிவாசன். முதலில் யோசித்த ஏவி.எம் பிறகு அவரையே ஒப்பந்தம் செய்தது.

மனோரமா நாடகத்தில் நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் லட்சுமியும், லீலா கதாபாத்திரத்தில் மனோரமாவும் நடித்தனர். முத்துராமன் சினிமாவிலும் கதாநாயகனாகத் தொடர்ந்தார். ஏவி.எம் தேங்காய் சீனிவாசனை அழைத்து நாடகத்தைப் பார்த்து வரும்படி சொல்ல, ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க அண்ணாமலை மன்றம் வந்திருந்தார் தேங்காய்.

நாடகம் தொடங்கி விட, கூட்டம் பொங்கி வழிய, தேங்காய்க்கு மட்டும் ஒரு இருக்கை தரும்படி கிளப் செயலாளர் ராமனிடம் கோபு சொல்ல, அவர் அண்ணாமலை மன்ற சிப்பந்திகளிடம் கூற, அவர்கள் தேங்காய்க்கு நாற்காலி கொடுக்க மறுத்துவிட்டார்கள்!

அந்த தர்மசங்கடமான நிலையை உணர்ந்த தேங்காய், கோபுவிடம் ''நீ கவலைப்படாதே வாத்தியாரே.. நான் மியூசிக் ‘பிட்’ல உட்கார்ந்து நாடகம் பார்க்கிறேன் என்று தாவிக் குதித்து மேடைக்குக் கீழே இசைக் கலைஞர்கள் அமர்ந்திருக்கும் பள்ளத்துக்குள் உட்கார்ந்துவிட்டார். இந்தமாதிரி பெருந்தன்மையைத் தற்போது காண்பது அரிது. நாடகம் முடிந்ததும் மேக்-அப் ரூம் வந்த தேங்காய் சீனிவாசன், கோபுவை அப்படியே கட்டிக்கொண்டு விட்டார். “வாத்யாரே.. படத்தைத் தூக்கி நிறுத்திடலாம்!'' என்றார்.

நாடகம் என்பது சினிமாவைக் காட்டிலும் பெரிய கலை. கண்ணை மூடித் திறப்பதற்குள், முந்தைய காட்சியின் செட் அமைப்புகளை நீக்கி அடுத்த காட்சியின் செட் அமைப்பினை கொண்டு வருவார்கள். அந்த ‘பேக் ஸ்டேஜ்’ கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்படிக் காட்சிமாறினாலும் பரவாயில்லை, ஆனால் ‘காசேதான் கடவுளாடா’ நாடகத்தில் நடித்துவந்த ஒரு நடிகர் திடீரென்று வரமுடியாமல் போனால்…?

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24820988.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 34: கோபுவை மேடையேற்றிய மலேரியா!

 

 
kasedhanjpg

நாடகத்தில் கோபு மும்முரமாக இருந்த நேரம். திடீரென்று சிவாஜி அழைத்து தாதா மிராசி இயக்கும் ‘மூன்று தெய்வங்கள்’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும்படி கேட்டுக்கொண்டதால் அதில் கவனம் செலுத்தினார். அப்போது அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ‘காசேதான் கடவுளடா’ நாடகம் ஏற்பாடாகி அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டிருந்தன.

ஆனால், வெண்ணிற ஆடை மூர்த்திக்குத் திடீரென்று மலேரியா ஜுரம். நடுங்கும் காய்ச்சலில் சுருண்டுகிடந்தார் மூர்த்தி. மாலை ஆறரை மணிக்கு நாடகம். ரசிகர்கள் கூட்டம் சேரத்தொடங்கிவிட்டது. “உண்மையான காரணத்தைச் சொல்லி நாடகத்தை ரத்துசெய்துவிடலாம்” என்றபோது, அண்ணாமலை மன்றத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.

 

உடனே மனோரமாவுக்கு ஒரு யோசனை. “கோபண்ணா எங்கே… அவர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு அழைச்சுக்கிட்டு வாங்க. மூர்த்தி ரோலை அவராலதான் செய்ய முடியும். அவருக்குத்தான் அந்த பாடி லாங்குவெஜ் பொருத்தமாக இருக்கும், எழுதி, இயக்கிய அவருக்கு எல்லா வசனமும் மனசுக்குள்ள அத்துப்படியா இருக்கும்” என்று சொல்ல, அடுத்த நிமிடம் கோபுவைத் தேடி அலைந்தார் யுனிட்டி கிளப்பின் செயலாளர் ராமன்.

நடிகராய் மாறிய கோபு!

கோபுவை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் கண்டு கையும் மெய்யுமாக அவரைக் கைதுசெய்வதுபோல் காரில் இழுத்துப்போட்டுக்கொண்டு அண்ணாமலை மன்றத்துக்கு விரைந்தார். நரைத்த தலை விக்குடன் தயாராகக் காத்திருந்த ஒப்பனையாளர்,''வாங்க சார்... முதல் பெல் அடிச்சாச்சு என்று சொல்லி அதனை கோபுவின் தலையில் அழுத்தி மாட்டி, ஒப்புக்குக்கூட அவரிடம் ஒரு வார்த்தை கேட்காமல் ரசாயன கோந்துவைப் போட்டு ஓட்டிவிட்டு அது செட்டாக ஓங்கி அவரது தலையில் ஒரு அடியைப் போட கலங்கிப்போனார் கோபு.

பக்கத்தில் நின்ற ராமனைப் பார்த்து “ நம்ம மேக் –அப் மேனுக்கு பேமண்ட் எல்லாம் சரியாப் போறதோ?” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள, இரண்டாவது மணி அடித்தது. ஆறரை மணி நாடகத்துக்கு ஆறேகாலுக்கு வந்த கோபுவை பொம்மை மாதிரி ஆட்டிவைத்தார்கள் அத்தனைபேரும். அதற்குக் காரணம், கோபுவிடம் வழிந்தோடிய நிபந்தனையற்ற அன்பும் அவரது தனி அடையாளமாக இருக்கும் எளிமையும்தான்.

என்னதான் கோபு எழுதி இயக்கிய நாடகமாக இருந்தாலும், முத்துராமன், மனோரமா ஆகிய கலைஞர்களுக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் அல்லவா? கோந்து போட்டு ஒட்டிய விக் அவரது தலையில் ரத்த ஓட்டத்தையே நிறுத்திவிட்டது போல் உணர, எழுதிய வசனங்கள் அத்தனையும் நொடியில் மறந்து விட்டதுபோன்ற உணர்வு.

திரை எழும்பியவுடன், நாடகத்தின் முதல் வசனத்தைக் கோபுதான் போனில் பேச வேண்டும். மேக் அப் போட்டு கொண்டு பலியாடு மாதிரி நின்ற கோபுவை நோக்கி ஓடிவந்த மனோரமா, ''கோபண்ணே,, திரை ஓட்டை வழியா பார்த்தேன். சோவும் அவங்க நாடகக்குழு காரங்க அத்தனை பெரும் வந்து முதல் வரிசையில உட்கார்ந்து இருக்காங்க. ஜமாய்ச்சு தள்ளுங்க'' என்றார்.

“அடப் பார்த்தசாரதி…! நான் நடிக்கிற நாளா பார்த்தா அவங்க வரணும்..'' என்று புலம்பியபடி நடிப்பதற்குத் தயாரானார். திரையும் எழும்பியது. மனைவிக்கு வரும் தொலைபேசியை எடுத்து அவரிடம் திட்டு வாங்கும் காட்சி.

“யாரைக் கேட்டு எனக்குவந்த போனை எடுத்தீங்க, இனிமே போனை தொடக் கூடாது!'' என்று ஆல் இந்தியா ரேடியோ லீலா சீறி விழ, ''இந்த வீட்டுல அதை மட்டும்தான் தைரியமா தொட்டுக்கிட்டு இருந்தேன். இனிமே அதையும் தொடக் கூடாதா... ரொம்ப சரி !'' என்று கோபு புலம்ப, ரசிகர்களின் கைதட்டல் அரங்கை அதிரச் செய்தது. அந்தக் கரவொலியைக் கேட்டபிறகே அப்பாடா… என்று இருந்தது கோபுவுக்கு. மூர்த்தி திரும்பி வரும் வரை, கோபுவே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இன்று எண்பத்து ஆறாவது வயதில் கோபு அதை நினைத்துப் பார்க்கிறார். கதை, வசனகர்த்தா, இயக்கத்துடன், திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கலாமோ என்று அவருக்கு அவ்வப்போது எண்ணங்கள் எழுகின்றன. பலர் கேட்டும், இளமைப் பருவத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ அவருக்கு வரவில்லையாம்.

கண்ணன் – அர்ஜுனன்

‘காசேதான் கடவுளடா’ நாடகத்தின் நூறாவது நாள் விழாவுக்கு சிவாஜி கணேசன் தலைமை வகித்து, சித்ராலயா கோபுவுக்குத் தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார். சிறப்புப் பேச்சாளராக இயக்குநர் ஸ்ரீதர் அழைக்கப்பட்டிருந்தார். முழு நாடகத்தையும் பார்த்த சிவாஜி, மேடையேறியதும் கோபுவை மிகவும் புகழ்ந்தார்.

''முழுநீள நகைச்சுவை, நாடகத்தையோ திரைப்படத்தையோ எழுதுவது மிகக் கடினம். அதை கோபு அருமையாகக் கையாள்கிறார். அவர் எங்க வீட்டுச் செல்லப் பிள்ளை!'' என்றெல்லாம் பேச, கோபுவுக்கு உச்சி குளிர்ந்துபோனது. தொடர்ந்து மேடை ஏறிய ஸ்ரீதர், '' கோபுவை நான் பாராட்டிப் பேசினால், என்னையே நான் பாராட்டிக்கொள்வது போல! கண்ணன் - அர்ச்சுனன், பட்டி - விக்கிரமாதித்தியன், சந்திரகுப்தன் - சாணக்கியன் வரிசையில் ஸ்ரீதர் - கோபு என்று நாங்கள் அழைக்கப்படுவோம்” என்று நகைச்சுவையாகக் கூறி கைதட்டல்களைப் பெற்றுச் சென்றார்.

kasedhan%202jpg
 

இயக்குநராக்கிய ஏவி.எம்.

இந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏவி.எம். கோபுவையே இயக்கும்படி கூற. “எனது ஈடுபாடு முழுவதும் கதை வசனம் எழுதுவதில்தான். எனக்குத் தோதான இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். அவரையே இயக்குநராகப் போட்டு விடுங்களேன்!'' என கோபு சொன்னபோது, “நகைச்சுவை உணர்வு உள்ளவரால்தான் நகைச்சுவைப் படத்தை இயக்க முடியும்” என்று வலியுறுத்தி கோபுவையே பிடிவாதமாக இயக்குநராக அறிவித்தது ஏவி.எம்.

‘சித்ராலயா’வில் கூட ஒரு படத்தையும் இயக்கியிராத கோபு, அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பணியாற்றியபோது “ஏவி.எம். எனும் பிரம்மாண்ட பட நிறுவனத்தின் முதலாளிகளிடம் ‘பணிவு’ எனும் பாடத்தைக் கற்றுக்கொண்டேன் என்கிறார்.

தனக்கு மிகவும் ராசியான, எம்.எஸ்.வி. - வாலி கூட்டணியை இந்தப் படத்திலும் அமைத்துக்கொண்டார். முத்துராமன், லட்சுமி, மனோரமா, மூர்த்தி, ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீநிவாசன், ரமாப்ரபா என அனைவருமே போட்டிபோட்டுக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுப் பெரிய வெற்றியைக் கண்டது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் அது வெளியானபின்பும் ஒரு இயக்குநராக கோபு சந்தித்த உணர்ச்சிகரமான அனுபவங்கள் பல. அவற்றில் ஒன்று ஏவி.எம்மில் “மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது” பாடலுக்காகப் போடப்பட்ட செட். மற்றொன்று பைலட் தியேட்டர் முன்பு ஒரே இரவில் வைக்கப்பட்ட கட் – அவுட்!

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24882601.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 35: முத்துராமனுக்கு வந்த முரட்டுக் கோபம்!

 

 
sirijpg

‘காசேதான் கடவுளடா’ படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஸ்ரீகாந்த்

இயக்குநர் அவதாரம் எடுத்தாகிவிட்டது. வெற்றிபெற்ற நாடகமே எனினும், அதன் திரைவடிவத்தை உருவாக்கும்போது மேடையில் சாத்தியமில்லாத பலவற்றை சினிமாமொழியில் சிறப்பாகக் கொண்டுவர முடியும். அதனால் திரைக்கதையில் பல திருத்தங்களைச் செய்த கோபு, கலை இயக்கம், இசை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார்.

மூத்த கலை இயக்குநரான சேகரை இந்தப் படத்துக்காக அமர்த்திக்கொண்டார். அவரிடம் “‘மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்க கூடாது’ பாடலில், நாயகன், நாயகி இருவரும் மேஜை மீது இருக்கும் டெலிபோன், பிறகு பேனா ஸ்டேண்ட் ஆகியவற்றின் மீது அமர்ந்து, பாடி, ஆடுவதுபோல் காட்சியைப் பிரம்மாண்டமாக எடுப்போம்.

 

இதற்காக டெலிபோன், பேனா ஸ்டேண்ட் ஆகியவற்றை ‘லைஃப் சைஸ்’ அளவுக்குக் கொஞ்சம் பெரியதாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்துவோம்” என்று கோபுவும், சேகரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தயாரிப்புக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஏவி.எம் மானேஜர், “இது குறைந்த பட்ஜெட் படம், ஒவ்வொரு பைசாவையும் பார்த்துச் செலவு செய்யுங்கள்?” என்று அவர்முன் கைகட்டி நின்று கேட்டுக்கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாக உதவியாளர் ஒருவரிடம் கறாராகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதை எதிர்பாராமல் காதில் வாங்கிவிட்ட, கோபு, சேகரைப் பரிதாபமாகப் பார்த்தார்.

ஆனால், சேகரின் கருத்தை அறிந்த ஏவி.எம் நிறுவனம், பெரிய டெலிபோன், பேனா ஸ்டேண்ட், காலண்டர் என ஒரு மேஜையின் மீது உள்ள பொருட்களைப் பிரம்மாண்டமாக செட் அமைத்து வைத்துவிட்டார்கள். இதை சேகர் கமுக்கமாக வைத்துக்கொள்ள, மூன்று நாட்களுக்குப் பின் படப்பிடிப்பு அரங்கத்துக்குள் நுழைந்த கோபு தான் எதிர்பார்த்த செட்டைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம்.

“இம்மாதிரி தனது நிறுவத்தின் படங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதில் ஏவி.எம்முக்கு நிகர் ஏவி.எம்தான்” என்று படப்பிடிப்பு நாட்களை நினைவுகூர்கிறார் கோபு.

காமெடியனுக்கு கட் –அவுட்

சென்னையின் ராயப்பேட்டையில் இருந்த பைலட் திரையரங்கம், ஆங்கிலப் படங்களை மட்டுமே அப்போது திரையிட்டுவந்தது. ஆச்சரியகரமாக ‘காசேதான் கடவுளடா’ படத்தை பைலட் திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தார்கள். படம் ரிலீஸ் அன்று மதியக்காட்சி முடிந்துவரும் ரசிகர்களின் கருத்துகளை அறிந்து வருவதற்காக பைலட் திரையரங்கில் படம் வெளியாகியிருப்பதை அறிந்து அங்கே வந்துசேர்ந்தார் கோபு.

படம் முடிந்து வெளியே வந்தவர்களில் ஒருவர், நேராக கோபுவை வந்து கட்டியணைத்துக்கொண்டார். “தம்பி பிரமாதம். கடைசிவரைக்கும் சிரிக்க வெச்சுட்டே. கொடுக்குற காசுக்கு ரசினுக்குத் திருப்தி கிடைக்கணும் அது உன் படத்துல இருக்கு” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அவர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.பி. நாகராஜன். ‘காசேதான் கடவுளடா’ நாலா பக்கங்களிலிருந்தும் வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்க, கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கினார், தேங்காய் சீனிவாசன்.

 ஒரு ஜரிகை வேட்டி, மேல்துண்டு ஆகியவற்றை கோபுவுக்குப் பொன்னாடையாகப் போர்த்தி அவரது காலில் விழுந்து வணங்கினார். “என்ன தேங்காய்.. நமக்குள்ள இந்த ஃபார்மாலிட்டி எதுக்கு? '' என்று கேட்க, “படத்தோட ஹீரோவை விட்டுபிட்டு, காமெடியனான எனக்கு, பதினாறு அடியில பைலட் தியேட்டர் வாசல்ல கட் அவுட் வெச்சிருக்கிறார் செட்டியார்! அதுக்கு உங்க காமெடிதான் காரணம் அண்ணா!'' என்று நெகிழ்ந்தார் தேங்காய்.

அவர் ஏற்று நடித்திருந்த அப்பாசாமி சாமியாரின் சென்னை வட்டார வழக்குத் தமிழை, ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிப்பதைப் பார்த்த செட்டியார், இரவோடு இரவாகத் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் - அவுட்டை வைத்துவிட்டார். கோபாலபுரத்தில் வசித்துவந்த தேங்காய் சீனிவாசன் எதிர்பாராமல் அந்தவழியே போய்த் தனது கட்-அவுட்டைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கி, பொளபொளவென்று கண்ணீர் வடித்துவிட்டு அப்படியே துணிக்கடைக்குச் சென்று விலை உயர்ந்த வேட்டி மற்றும் துண்டை வாங்கிக்கொண்டு கோபுவைக் காண திருவல்லிக்கேணி வந்துவிட்டார்.

ஆனால், இதைக் கண்டு செம கடுப்பாகிவிட்டார் படத்தின் ஹீரோவான முத்துராமன். கோபுவைத் தேடி அவரது வீட்டுக்கே வந்துவிட்டார். சார் என்று மரியாதையாக அழைத்தாலும் அவரது குரலில் முரட்டுக் கோபம் தெறித்தது. “கோபு சார்.. ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’, ‘நெஞ்சிருக்கும் வரை’ன்னு உங்களோடவே வளர்ந்தவன் நான்.

இது தெரிஞ்சிருந்தும் பட ஹீரோவான என்னை விட்டுட்டு காமெடியனுக்கு கட் அவுட் வச்சிருக்காங்களே.. ஜனங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க?” என்று கோபப்பட்டு பின் குழந்தையாய்க் கலங்கினார். அவரை அப்படியே அணைத்துக்கொண்ட கோபு, அவருக்குத் தேங்காய் கட்-அவுட் வந்ததன் பின்னணியை கோபு கூறியதும் கோபம் தணிந்து கோபுவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார்.

siri%202jpg

‘காசேதான் கடவுளடா’ படத்தில் முத்துராமன், லட்சுமி.

 

வருத்தமும் ஆசியும்!

இந்த கட்-அவுட் இன்னொரு பிரச்சினையையும் இழுத்துக்கொண்டுவந்தது. கதைப்படி அப்பாசாமி ஒரு டீக்கடைக்காரர். அவர் போலிச் சாமியார் என்பதைக் காட்ட, அவரது முகத்துக்குக் கருப்புக் கண்ணாடி ஒன்றை அணிவித்துவிட்டார் கோபு.

கோபுவின் நாடகத்திலும் அப்படித்தான் கருப்புக் கண்ணாடியை அந்தச் சாமியார் அணிந்திருப்பார். இது தெரியாமல் யாரோ ஒரு குசும்பு பத்திரிகையாளர், தேங்காயின் அப்பாசாமி சாமியார் கெட் - அப் அப்படியே ‘பித்துக்குளி’ முருகதாஸை நினைவூட்டுகிறது என்று எழுதிவிட, பித்துக்குளியாரே கோபுவுக்கு போன்போட்டு “என்னப்பா.. இப்படிச் செய்துட்டே… நான் புளு பூச்சிகளுக்குக்கூடத் தீங்குசெய்ய நினைக்காதவன் என்பது உலகத்துக்கே தெரியுமே” என்றார்.

அவரிடம் உண்மையை விளக்கிய கோபு'' ஒரு தடவை அந்தப் படத்த நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்குப் புரியும்!'' என்றார். அதுவும் சரிதான் என்று பித்துக்குளியார் படத்தைப் பார்த்துவிட்டு கோபுவுக்கு போன் செய்து “சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு புண் ஆயிடுச்சுப்பா… மனுசாளை நல்லா சிரிக்க வை… பாதி நோய் பறந்துடும். தீர்காஸுமான் பவ” என்று ஆசி வழங்கிய அதிசயமும் நடந்தது.

நாடகமே வாழ்க்கை

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம், தனது யூனிட்டி கிளப் நாடக குழுவினர்தான் என்கிறார் கோபு. திறமையானவர்களும் நாடகக் கலைக்காகத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்களும் அந்தக் குழுவில் இருந்தனர்.

குறிப்பாக, நட்ஸ் என்ற சம்பத், டீ.கே. கஸ்தூரி, சி.எல்.நரசிம்மன், நாகராஜன், ரமணி, ராவ் போன்றவர்கள் நாடத்துறையின் தூண்கள். யூனிட்டி கிளப்பின் அனைத்து நாடகங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன. ‘காசேதான் கடவுளடா’, ‘வீட்டுக்கு வீடு’, ‘ஸ்ரீமதி’ போன்றவை திரைப்படங்கள் ஆயின.

‘நடிகர் திலக’மாக உயர்ந்த பிறகும் நாடகத் துறையின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் சிவாஜி. சிவாஜிக்கு கோபு கதை வசனம் எழுதிய காலத்தில் மாலை ஐந்து மணி ஆனதும் படப்பிடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு நாடக மேடைக்குப் பறந்துவிடுவார்

‘நூர்ஜஹான்’, ‘காலம் கண்ட கவிஞன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற சிவாஜியின் நாடகங்கள் எழுபதுகளில் பெரிய பரபரப்பை உருவாக்கியவை. மியூசிக் அகாடெமியில் ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ்’ பத்மநாபனாக சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன், தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாராம்.

இது ஒன்று போதாதா, சிவாஜி கணேசனுக்கு நடிப்பு துறையின் மீது இருந்த தாக்கத்தைப் பற்றி அறிய. அப்படிப்பட்ட சிவாஜிக்கு அடையாற்றின் கரையில் மணிமண்டபம் உருவாகி இருக்கிறது என்பதே தமிழ் சினிமாவுக்குப் பெருமை.

இன்றும் நல்ல நாடக குழுக்கள் சிறந்த நாடகங்களைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வரவேற்புதான் வருத்தத்தைத் தருகிறது. ஐ.பி.எல், தொலைக்காட்சித் தொடர்கள் என மக்களின் கவனத்தை ஈர்க்க நிறைய பொழுதுபோக்குகள் வந்துவிட்டாலும், உயிருள்ள நடிகர்களின் நடிப்பை நேருக்கு நேராகக் காணும் அற்புதக் கலையான நாடகத்துக்கு மவுசு உருவாகும் காலம் ஒன்று வந்தே தீரும்” என்று கூறும் கோபு

நாடகத்துறையைக் கண்ணெனக் கருதிய சிவாஜியுடன் இணைந்து ஒவ்வொரு காட்சியையும் சுவைத்து, ரசித்துத் தயாரித்த ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் நினைவுகளுக்குப் பறந்தார். பெயரிலேயே கலாட்டா இருக்கிறது. அப்படி என்றால் படப்பிடிப்புத் தளத்தில் எவ்வளவு வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் ?

(சிரிப்பு தொடரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24996635.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.