Jump to content

பொங்கல் வாழ்த்துக்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

பல வருடங்களுக்கு முன்னம் வாசுகி பாடுவதற்க்காக எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்

.

பொங்கல் வாழ்த்துப் பாடல்
-வ.ஐ.ச.ஜெயபாலன்
*

வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்துகிறோம்
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்
*
பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
*

பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று
பாசத்தில் வாடும் நெஞ்சங்களே
பனியையும் மீறி பசுமையில் நிமிரும்
பைன்மரம் போன்ற சிங்கங்களே
*
பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
*
பூமியில் என்றும் அகதிகள் என்று
புழுதி மண் போல சுழலுவதோ
தாயகம் மீண்டு துயர்களை வென்று
தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ
*
பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று
பாசத்தில் வாடும் நெஞ்சங்களே
பனியையும் மீறி பசுமையில் நிமிரும்
பைன்மரம் போன்ற சிங்கங்களே

 

மிகவும் அழகான வரிகள்.....மிக மிகப் பிடித்திருக்கு கவிஞரே.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கும், சொந்தங்களுக்கும் புத்தாடை வாங்கிக் கொடுப்பதும், வயலில் விளைந்த புது நெல்லை அரிசியாக்கிப் பொங்கலிட்டுக் கதிரவனுக்கு நன்றி தெரிவிப்பதும், வெடி கொழுத்திப் பொங்கல் கொண்டாடியதும் நேற்றுப் போல...நினைவில் அகலாது உள்ளது!

பொங்கலின் மூலம் எது....என்று ஆராயப் போய்...... இன்று பொங்கல் தனது முக்கியத்துவம் இழந்து போன நாளாக ஆகிக் கொண்டு வருகின்றமையைப் பார்க்க......மனதில் ஏக்கம் தான் மிஞ்சுகின்றது!

பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும், விவசாயிகள், தோட்டக் காரார், கரும்பு விற்பவர், கற்பூரம் விற்பவர், நெசவாளர், குயவர், வெடி வியாபாரம் செய்பவர், சாராயம் விற்பவர் என்று பலருக்கும் வாழ்வளித்த ஒரு விழா இது!

பூமியில் என்றும் அகதிகள் என்று
புழுதி மண் போல சுழலுவதோ?

 

பூமியே சுழலுகின்றது கவிஞரே..... நீங்களும் நானும் எம்மாத்திரம்?

 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள், கவிஞரே!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.