நவீனன்

உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய என அங்கஜன் கேட்கிறார்???

Recommended Posts

உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய என அங்கஜன் கேட்கிறார்???

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய முடியும். எமது மக்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே தற்போது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில்.உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடு வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன் பலர் பல இடங்களில் இருந்து எமது கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்கு காரணம் நாங்கள் செல்லும் பாதை சரியானதாக உள்ளமையே. நாம் மக்களுக்கு நிஜாயமாக எதனை செய்ய முடியுமோ அதனையே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு உள்ளோம். தற்போதைய கால கட்டத்தில் தமிழ் தலைமைகள் கூறுவதற்கும் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

எமது சமூகத்தில் தற்போது போதை பொருள் பாவனை கலாச்சார சீர்கேடுகள் , வேலையில்ல பிரச்சனைகள் காணப்படுகின்ற இவை எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்க உள்ளது. வேலையில்லாத பிரச்சனை தொடர்பில் சம்பந்தன் எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றார். ஆனால் சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றுக்கொடுக்க முடிகின்றது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமக்கு வாக்களியுங்கள் என கோரி பல சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால் அவர்கள் எதனை செய்தார்கள் ? அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன ?

இவ்வாறான நிலையில் உரிமையை காகிதத்தில் வாங்கி என்ன செய்ய முடியும் எமது மக்களுக்கு தற்போது தேவையாக உள்ளது. அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே .. அதற்காகவே மக்கள் மாற்றத்தையும் , உண்மையான நேர்மையான புதியவர்களை தேடுகின்றார்கள். அதற்கு சரியானவர்கள் நாமே .

இம்முறை உள்ளூராட்சி தேத்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த 2010ஆம் ஆண்டு வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வீட்டுக்குள் இருந்தவர்கள். அப்போது அவர்கள் பேசவில்லை வெளியே வந்து பேசுகின்றார்கள். அதேபோலவே கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை வீட்டுக்குள் இருந்த சுரேஷ் பிரேமசந்திரன் அந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தற்போது அவர்களை விமர்சிக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் இனியும் இவ்வாறானவர்களை நம்பி ஏமாற கூடாது. நாம் மக்களின் கிராமிய அபிவிருத்தியையும் , முன்னேற்றத்தையும் மேற்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.அதற்கு தேவையானவற்றை செய்ய நாம் தயாராகவே இருக்கின்றோம். அத்துடன் காணாமல் போனோர் விடயம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி வருகின்றேன். என மேலும் தெரிவித்தார்.

Ankagan1.jpg?resize=600%2C400

http://globaltamilnews.net/2018/60966/

Share this post

Link to post
Share on other sites

சம்பந்தன், சுரேஸ், கஜேந்திரகுமார், கூட்டு களவாணிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழர் விடுதலை கூட்டமைப்பு ஆகியன கூட்டு களவாணிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று கட்சிகளும் புதிய அரசியல் யாப்பினை அடிப்படையாகக் கொண்டே உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும், மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொள்ளவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன், சுரேஸ், கஜேந்திரகுமார், கூட்டு களவாணிகள் 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி பாடலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதமன், போலி வாக்குறுதிகளுக்கு மயங்காமல் மக்கள் தமது அபிவிருத்தி செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Samprasan--Suresh-Gajendrakumar-Collective-Threats

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, நவீனன் said:

அதற்காகவே மக்கள் மாற்றத்தையும் , உண்மையான நேர்மையான புதியவர்களை தேடுகின்றார்கள். அதற்கு சரியானவர்கள் நாமே .

ஆங் அப்பிடியே? பொறுங்கோ, அத நீங்கள் சொல்லக்கூடாது.  அவர்கள் சரியானவர்களை  தேர்ந்தெடுப்பார்கள். ஆளாளுக்கு வெளிக்கிட்டிட்டாங்கள் உசுப்பேற்ற. தமிழன் என்று வெளிக்கிட்டவங்களே ஒண்டும் செய்யேல. இரவல் கடசியில வென்று கிழிக்கப்போறார்.

Share this post

Link to post
Share on other sites
On 12.1.2018 at 5:06 PM, நவீனன் said:

சம்பந்தன், சுரேஸ், கஜேந்திரகுமார், கூட்டு களவாணிகள் 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி பாடலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

Bildergebnis für laughing smiley          தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி பாடலுடன். 

Share this post

Link to post
Share on other sites

 எல்லோரும்  தாங்கள் தேர்தலில் வெல்வதற்கு பயன்படுத்தும் துரும்புச் சீட்டு விடுதலைப்புலிகளே. தமிழனும்  சரி , சிங்களவனும் சரி.

Share this post

Link to post
Share on other sites

 வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை பெற புலிகளின் பாட்டுக்களை போட வேண்டிய நிலைமைக்கு  தள்ளி உள்ளது. இவ்வளவுக்கும் இற்றை வரை சிறிலங்காவில் பயங்கரவாதிகளாக கூறப்பட்டதும் தமது தேவைக்கு ஏற்றவாறு தமிம் மக்களை ஏமாற்ற தமிழ் மக்கள் ஏமாளிகளாக விட்டாலே போதும்.
மகிந்த ஆட்சியிலிருந்தால் அங்கஜன் இன்னும் இரண்டு புலிகளின் பாடல்களை போட்டிருப்பார் என்பதில் எந்தவித ஐயமுல்லை.
 
Quote

எமது சமூகத்தில் தற்போது போதை பொருள் பாவனை கலாச்சார சீர்கேடுகள் , வேலையில்ல பிரச்சனைகள் காணப்படுகின்ற இவை எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்க உள்ளது. வேலையில்லாத பிரச்சனை தொடர்பில் சம்பந்தன் எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றார். ஆனால் சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றுக்கொடுக்க முடிகின்றது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமக்கு வாக்களியுங்கள் என கோரி பல சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால் அவர்கள் எதனை செய்தார்கள் ? அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன ?

 கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளை பெற்று வந்த சிறுபான்மை தமிழர்களின் கட்சி என்பதை தவிர அவர்களுக்கு எந்த சக்தியும் மக்களுக்கு சேவை செய்ய கூடிய அளவுக்கு சிற்லங்காவின் அரசியல் சட்டங்கள் இல்லை. ஆதலால் தான் பொன்னான தமது இன்னுயிர்களை  பல தமிழர்கள் இழக்க நேரிட்டது. இதனை அங்கஜன் தெரியாதவர் இல்லை. ஆனால் சில அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதில் வல்லவர் என்பது மட்டும் நிகர்சனம். 

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now