Jump to content

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப்


Recommended Posts

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப்

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வசைச் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக விமர்சித்த டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

வெள்ளை மாளிகையில் உள்ள, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், "இந்த மலத்துளை நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளவர்களை நாம் ஏன் வைத்திருக்கிறோம்?" என்று கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைத்தி, எல் சால்வடோர் மற்றும் ஆஃப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களை குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.

பிற அமெரிக்க ஊடகங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டள்ள இந்த செய்தி குறித்து வெள்ளை மாளிகை இதுவரை மறுப்பு எதையும் வெளியிடவில்லை.

"சில வாஷிங்டன் அரசியல்வாதிகள் பிற நாடுகளுக்காக போராட விரும்புகிறார்கள். ஆனால், அதிபர் டிரம்ப் எப்போதுமே அமெரிக்க மக்களுக்காகத்தான் போராடுவார்," என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராஜ் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் வெளிநாட்டவர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு குடியேற்ற உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக அவரைச் சந்திக்க சென்றபோது, டிரம்ப் அவ்வாறு கூறியுள்ளார்.

குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக விமர்சித்த டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அப்போது ஜனநாயக காட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ரிச்சர்டு டர்பின், இயற்கை சீற்றங்கள், போர் மற்றும் நோய்ப் பரவாலால் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க தற்காலிக உரிமை வழங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்போது டிரம்ப் கூறியுள்ளார். நார்வே பிரதமர் புதனன்று அமெரிக்கா வந்துள்ளார்.

டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினைகளும் வந்துள்ளன. மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எலிஜா கம்மிங்க்ஸ், அதிபரின் இந்த மன்னிக்க முடியாத கூற்றைக் கண்டிப்பதாகவும், இது அதிபர் பதவியை சிறுமைப்படுத்துவது என்றும் கூறியுள்ளார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கறுப்பினத்தவரான, நாடாளுமன்ற உறுப்பினர் செட்ரிக் ரிச்மன்ட், டிரம்ப் கூறிய கருத்து, "அவரது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குவோம் எனும் கோஷம் அமெரிக்காவை மீண்டும் வெள்ளை ஆக்குவோம் எனும் நோக்கத்தை கொண்டுள்ளதே உண்மை எனக் காட்டுகிறது," என்று கூறியுள்ளார்.

எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த சுமார் 2,00,000 பேருக்கு அமெரிக்காவில் வசிக்க மற்றும் பணியாற்ற வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா இந்த வாரம் ரத்து செய்தது.

ஹைத்தி மற்றும் நிகரகுவா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்தஸ்து ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டுக் குடியேறிகள் நாடுகடத்தப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-42658450

Link to comment
Share on other sites

குடியேற்றவாசிகளை தரக்குறைவாக விமர்சித்தார் டிரம்ப்- ஐநா கடும் கண்டனம்

 

 
 

குடியேற்றவாசிகளை தரக்குறைவாக விமர்சித்தார் டிரம்ப்- ஐநா கடும் கண்டனம்

குடியேற்றவாசிகளை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப வர்ணித்துள்ள அதேவேளை ஐக்கியநாடுகள் அந்த சொற்பிரயோகத்தை கண்டித்துள்ளது.
எல்சல்வடோர் மற்றும் ஆபிரிக்க நாடுகளை ஆபாசமான வார்த்தையால் வர்ணித்துள்ள டிரம்ப் ஏன் இந்த நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்கு வருகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஒரு சந்திப்பி;ன்போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்
வெள்ளை மாளிகை டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்ததை மறுக்கவில்லை
இதேவேளை டிரம்பின் இந்த வார்த்தைபிரயோகத்தினை ஐக்கியாநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் ருபேர்ட் கொல்விலே கடுமையாக கண்டித்துள்ளார்.
இது உண்மையானால் அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சி மிகுந்;த கருத்துக்கள் இவை இதனை இனவெறி என வர்ணிக்கலாம் எனவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கள்உலகம் ஸ்தாபிக்க முயலும் விழுமியங்களிற்கு எதிரானைவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/குடியேற்றவாசிகளை-தரக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இவரின் மூதாதையர் ஏன் அமெரிக்கா வந்தார்கள்.முன்னால் வந்தவன் பின்னால் வந்தவனைப் பார்த்து எப்போதுமே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

FIRST COME FIRST GO.

Link to comment
Share on other sites

நான் சொல்லவில்லை டுவிட்டிய ட்ரம்ப்!!!

 

 

தான் கூறியதாக சர்வதேசத்தால் விமர்ச்சிக்கப்படும் குறித்த மிக மோசமான அவதூறு சொல்லை தான் பிரயோகிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

online_New_Slide__3_.jpg

குடியேற்றவாசிகள் குறித்த ட்ரம்பின் பேச்சு சர்வதேசத்தின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ட்ரம்ப் நேற்று  வெளியிட்ட டுவிட் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"குடியேற்றவாசிகள் தொடர்பான தனது வார்த்தை பிரயோகம் கடினமானது என்றபோதிலும், சர்வதேசத்தால் விமர்சிக்கும் மிகமோசமான வார்த்தையை தான் பிரயோகிக்கவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற குடியேற்றவாசிகள் தொடர்பான சந்திப்பொன்றின்போது ட்ரம்ப்,

அமெரிக்கா சேரிப்புற நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகளுக்கு பதிலாக நோர்வே போன்ற நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அங்கு கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக  வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/29347

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.