Sign in to follow this  
அபராஜிதன்

வெப் சீரிஸ்- கால் கட்டு

Recommended Posts

நான் விரும்பி பார்க்கும் வெப் சீரிஸ் இது:)

 

****************†***

யூ டியூப்பில் ’கால்கட்டு’ என்றொரு தொடர் வருது.. பார்த்துருக்கீங்களா..

நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அதுவும் என் மனைவி பார்த்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துதான்.. என்னனு வாங்கி பார்த்தேன்.

அது ``Wife ஊருக்கு போறா..” என்ற தலைப்பில் இருந்தது.

சில நொடிகளிலே ``ஆத்தி.. இது நமக்கு நடக்கும் சம்பவமாச்சே..” (;)) என்று புன்னகையை வர வைத்தது காட்சிகள்.

என் மனைவி ஏன் சிரித்தார் என்று அந்த விடியோவை பார்த்ததும் உங்களுக்கே புரிந்துவிடும்.. ஏன்னா அந்த சம்பவம் உங்களுக்கும் நடந்திருக்கும்..

அதன்பிறகுதான் Black Pasanga யூ டியூப் சேனலில் வெளியாகும் இயக்குனர் வெற்றியின்( Vetri ) கால்கட்டு தொடர் படங்களை முழுவதையும் பார்த்து முடித்தேன். நான் தான் லேட்டு போல.. ஏற்கனவே லட்சக்கணக்கானோர் பார்த்துருக்காங்க..

அந்த தொடரில் தம்பதிகளாக நடிக்கும் சத்யா-பிரதீப் இருவரும் பட்டையை கிளப்புகிறார்கள்.

அதுவும் நாகரீக உடையில் இருக்கும் பெண் சத்யாவின் கிராமத்து மொழி நடை பேச்சும்.. மனைவியிடம் பல்ப் வாங்கும் கணவனாக வரும் பிரதீப்பின் முகபாவனைகளும் ஒவ்வொரு தொடரையும் ரசிக்க வைக்கின்றன.

இன்றைய ஐடி கல்ச்சரில் வாழும் ஒரு இளம்தம்பதிக்கிடையில் நடக்கும் தினசரி காட்சிகள் தான் தொடரின் மைய கரு.

ஒரு சாதாரண ஒன்லைன்.. அதை இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமா என்பதை அதை பார்த்து முடிக்கும்போது தோன்றியது.

குமுதத்தில் பணிபுரிந்தபோது கிடைத்த நண்பர் வெற்றி. கோயம்புத்தூர்காரர். இயல்பாகவே கோவைகாரர்களுக்கு இருக்கும் குசும்பு இந்த தொடர் எடுக்க அவருக்கு பெரிதும் உதவுகிறது என்று நினைக்கிறேன்.

பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு வளர்கிறார் வெற்றி..

திரைத்துறையில் நல்லதொரு இடம் உங்களுக்கு காத்திருக்கிறது வெற்றி.. விரைவில் அது நடக்கும்.

வாழ்த்துகள்.. :)

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
9-1-17

https://www.youtube.com/watch?v=V1j3vHIqZ4g

 

Share this post


Link to post
Share on other sites

முழுதாக 4 நிமிடங்கள் கூட இல்லை. விசயங்கள் எல்லாத்தையும் கொட்டி இருக்கிறார்கள்.  நன்றாக இருக்கிறது. புதுசாக குடும்பமான இளசுகளுக்கு நன்றாகப் பிடிக்கும்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this