Paanch

திருமண வாழ்க்கை பற்றி ஒரு ஆண்மகனின் அழுத்தமான கடிதம்: அனைவரும் படியுங்கள்…!!!

Recommended Posts

திருமண வாழ்க்கையில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த சமுதாயமே, ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திரையிட்டு மறைத்துக்கொள்வதற்கான காரணங்களை வழிவகுத்துவிடுகிறது.

வரதட்சணை பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்ரவதைகள் இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனைகள், ஆனால் அவற்றை ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் ஏளனசிரிப்பு தான் இங்கு தீர்வாக கிடைக்கும், அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

அப்படி தனது குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விடயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொண்டேன், அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

பெண்களை பாதுகாக்க போட்டப்பட்ட சட்டங்களை அவள் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, எங்களுக்கு எதிரான அனைத்தையும் திசைதிருப்பி விட்டாள். நான் காவல்நிலையம் சென்று எனது மனைவியால் எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தால், அவர்களுக்கு என்னை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

உனது மனைவி உன்னை அடித்தது உண்மைதானா? நீ அடிவாங்கினாயா? என்பது போன்ற உதாசீனமான கேள்விகளை கேட்டனர்.

இறுதியில் எங்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. எனக்கு பெண் குழந்தை இருப்பதால் சட்டப்படி பெண் குழந்தை தாயின் வசம் ஒப்படைக்கப்படும் என்பதால் அவளை பெறுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை.

எனது மகள் அவளது தாய்வழி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வசித்து வருகிறாள். ஒரு நரகமான வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றாலும், எனது வாழ்க்கையும் சீரழிந்துவிட்டது என நினைத்து வருத்தப்படுகிறேன்.

இதனை எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்றால், பெண்கள் மட்டுமே ஆண்களால் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று சமுதாயம் கருதுகிறது, ஆனால் ஆண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.

வன்முறைகள் என்று வந்துவிட்டதால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். எனவே இருபாலருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

todayjaffna.com

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இப்படியான பிரச்சனைகள் வர முதலாவது காரணம் பிள்ளை யாரையாவது விரும்பியிருக்கும்.சாதி மத பிரச்சனைகளால் விருப்பம் இல்லாத ஒருவருக்கு கட்டி வைத்து பெற்றோர் தமது கடமையை முடித்துவிடுவார்கள். பிள்ளை பெற்றோரின் கோபத்தை வந்தவரில் காட்டிக் கொண்டிருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

பிள்ளை தன் கணவன் தனக்குமட்டும் தான்  என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறா .. அவரின் சகோதரர் களோடு  அவர் ..உறவாடுவதை விருப்பவில்லை ..வேண்டா கணவன் கைப்படடாலும் குற்றம் கால்படாலும் குற்றம் என்று இல்லாததும் பொல்லாததும்   சொல்லி  பிரிந்துவிடடா ...தற்போது  திருமணங்கள்   மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இது ஒரு முற்றிலுமான கற்பனைக் கதை அல்ல...நிறைய உண்மைகள் கலந்திருக்கின்றன!

ஒரு பெண் நிறையக்  கனவுகளைத் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறாள்! அவற்றை நிறைவேற்ற வேண்டிய ஒரு ஒரு பெரிய சுமையை....தனது கணவன் மீது சுமத்தி விடுகிறாள்!  தனது கனவுகளை மட்டுமல்ல....தனது தாய் தந்தையர்....சகோதரர்களின் கனவுகளையும் கூட..அவன்  மீதே சுமத்தி விடுகிறாள்!

ஒரு அழகிய சிலை ஒன்று...விலை கொடுத்து வாங்கப் பட்டால்...அந்தச் சிலையை வடித்தவர்கள் ...அந்தச் சிலை மீதான முழு உரிமையையும் இழந்து போகின்றார்கள் என்பது தான் நிதர்சனம்! அந்தச் சிலை தங்கள் கண் முன்னாலேயே உருக்குலைந்து போவதைக் கண்டும் ..எதுவும் செய்ய முடியாத நிலையில் அவனைப் பெற்றவர்கள் அழுது வடிக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம்! சமுதாயம், குடும்பக் கெளரவம் எனப் பல காரணங்களினால்..அவனது பெற்றோரின் கரங்கள் கட்டப்பட்டு விடுகின்றன!

தங்கள் வசதிக்கேற்ற மாதிரி....,.வளர்ந்த சமுதாயத்தின் சட்டங்களையும்......வாழும் சமுதாயத்தின் சட்டங்களையும்...உபயோகித்துக் கொள்வார்கள்! இப்படியான மன நிலையில் உள்ளவர்களுக்கு....ஆலோசனை என்ற பெயரில்..உதவப் பலர் உள்ளனர்!

இளமையிலேயே தலை மயிர் நரைத்துப் போன பலரை நானும் அறிவேன்!

சுய நலம் என்பது வெறியாக மாறும் போது....அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகி விடுவதே....சாலச் சிறந்தது!

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

பெண் ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்! அது ஒரு நரம்பியல் மனநிலை சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதனால், மனநல  சிகிச்சை எடுத்திருந்திருக்கலாம்!

அதற்காக ஆண்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று அர்த்தமில்லை,

காலியான பல விஸ்கி போத்தலுகளுக்கு மட்டுமே தெரியும் ஆண்கள் அனைவருமே உத்தமர்கள் அல்ல என்று...

அடுப்படியில் கிடக்கும் பூரிக்கட்டைக்கு மட்டுமே தெரியும் பெண்கள் அனைவருமே மென்மையானவர்கள் அல்ல என்பது!

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, valavan said:

இதுக்காகத் தான் நான் வீட்டில் பூரிக்கட்டையே உபயோகிக்கிறதில்லை!

ஏன்....பூரியோ..சப்பாத்தியோ...அல்லது ரொட்டியோ கூட வீட்டில செய்ய அனுமதிக்கிறதும் இல்லை!

ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருந்தால்...இருக்கவே இருக்கு....இந்தியன் உணவகங்கள்!

அது சரி...வளவன்!

ஒருவன் உத்தமனா இல்லையா என்பதற்கும்...விஸ்கிப் போத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்களும் யாழ்ப்பாண அடிமட்டம் கொண்டு தான்...ஆக்களை அளக்கிறீங்க போல கிடக்கு?

Share this post

Link to post
Share on other sites
58 minutes ago, புங்கையூரன் said:

ஒருவன் உத்தமனா இல்லையா என்பதற்கும்...விஸ்கிப் போத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்களும் யாழ்ப்பாண அடிமட்டம் கொண்டு தான்...ஆக்களை அளக்கிறீங்க போல கிடக்கு?

புலத்தில் பல பெண்களின் வாழ்வு அடி,உதை,அவமானம் வறுமை , சிலவேளை அது கொலைவரை சென்று  அஸ்தமனமானது பல முழுநேர குடிகாரர்களால், அதை மனசில்  வைச்சுத்தான் அதை சொன்னேன்!

யாழிலேயே அதற்கு உதாரணமும் உண்டு: 

https://www.yarl.com/forum3/topic/205765-கனடாவில்-தமிழ்ப்-பெண்-அடித்து-கொலை-கணவன்-கைது /

Edited by valavan

Share this post

Link to post
Share on other sites

எப்படி மனைவி தனக்கு மட்டுமே உண்மையாக, தன்னை மட்டுமே சார்ந்தவளாக கிட்டத்தட்ட அடிமையாக இருக்க வேண்டுமென கணவன் நினைத்து நடக்கையில், மனைவிக்கும் அதே எண்ணம் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்...?

You reap what you sow..!

இல்வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே சமம்தான், ஏற்றத் தாழ்வு கிடையாது,இருக்கவும் கூடாது.  இதில் நான் ஆண், என் எண்ணப்படிதான் அனைத்தும் நடக்கவேண்டும் என பெரும்பாலான கணவன்கள் நினைப்பது தவறு, அதுவே குடும்ப வன்முறைகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் காரணமாகிறது.

மனைவி என்பவள், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வரும் வேலைக்காரியோ, அடிமையோ அல்ல,( புங்கை கவனிக்க -அவள் கல்லாலான சிலை அல்ல, வாங்கி உங்கள் விருப்பதிற்கு ஆட்டுவிக்க..! non-2010.gif) அவளுக்கும் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் உண்டு அவற்றை மதித்து நிறைவேற்றுவது கணவனின் கடமை. இன்னமும் மனைவிகளை ஏளனமாக நடத்தும் கணவன்கள்தான் இவ்வுலகில் பெரும்பான்மையானவர்கள். stopnon.gif

ஆணாதிக்க எண்ணத்தில் தவறாக/குழப்பத்துடன் நடந்துவிட்டு, 'வாழ்க்கையே போச்சுது.. நிம்மதியே போச்சுது..!' என புலம்புவதில் ஒரு பயனும் இல்லை!

Edited by ராசவன்னியன்
  • Like 2

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, நிலாமதி said:

பிள்ளை தன் கணவன் தனக்குமட்டும் தான்  என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறா .. அவரின் சகோதரர் களோடு  அவர் ..உறவாடுவதை விருப்பவில்லை ..வேண்டா கணவன் கைப்படடாலும் குற்றம் கால்படாலும் குற்றம் என்று இல்லாததும் பொல்லாததும்   சொல்லி  பிரிந்துவிடடா ...தற்போது  திருமணங்கள்   மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. 

தற்போதும்  திருமணங்கள் மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. :shocked:

Share this post

Link to post
Share on other sites
On 11.1.2018 at 4:30 PM, Paanch said:

-------

குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விடயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொண்டேன், அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

----

Bildergebnis für தமிழ் கலியாணம்.

திருமணம் என்பது,  "சொர்க்கத்தில்.... நிச்சயிக்கப் படுவது"   என்று சொல்வார்கள்.
அந்தத் திருமண தம்பதிகளின், பெற்றோர்.... எத்தனை வருடங்கள் காத்திருந்து,  பல எதிர் கால கனவுகளுடன்... செய்து வைக்கும், திருமணங்கள்.... அடுத்த  தலைமுறையின், வாழ்க்கை  பாதிக்கப் படுவதை,  பார்ப்பது,  வேதனையான... விடயம்.  

எல்லா.... திருமணத்தையும், ஒரு பொதுவான... வரை முறைக்குள், அடக்க முடியாது என்றாலும், விட்டுக்  கொடுப்புகள், இரு பகுதியிலும்... இருக்க வேண்டியது.. மிக முக்கியம்.காரணம்:  இரண்டு திருமண தம்பதிகளும்.... ஒரு நாடு, ஒரு மொழி,  ஒரு  இனம், ஒரு  மதம்,  ஒரு கலாச்சாரம்  என்று... வாழ்ந்தாலும்.....அந்தப் பிள்ளைகளின்... வளர்ப்பு,  பழக்க வழக்கம்... போன்றவை ஒன்றாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. அதனை... இரு பகுதியும்... எதிர் பார்ப்பது தான்.... பிரச்சினையின், மூல காரணம். 

தமிழர்கள் மத்தியில்....  ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கைக்கு அப்பால், வெளிநாட்டவர்களும், மிக மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கண் கூடாக அறிவீர்கள். பிரச்சினை... பொதுவானது. நாம்... பார்க்கும், பார்வை...  வேறானது  என நினைக்கின்றேன்.  :)

++++++++   ++++++++    +++++++++

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

இப்ப தானே கூகிள் ஆண்வரிடம் கம்பனி பெயரைச் சொன்னால் நம்பரை எடுத்து தருவாராச்சே!

இந்தக்காலத்திலை எந்த மன்னவர் வேலையிடத்து ரெலிபோன் நம்பர் மனிசிக்கு குடுக்காமல் வேலைக்கு போறவர்????:cool:
தம்பி நடக்கிற கதையை கதையுங்க தம்பி..:grin:

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தானே கூகிள் ஆண்வரிடம் கம்பனி பெயரைச் சொன்னால் நம்பரை எடுத்து தருவாராச்சே!

கூகிள்..... ஆண்டவர்,  பிறக்க முன், நடந்த........ கதை, இது... ஈழப்பிரியன்ஸ். :)

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை எந்த மன்னவர் வேலையிடத்து ரெலிபோன் நம்பர் மனிசிக்கு குடுக்காமல் வேலைக்கு போறவர்????:cool:
தம்பி நடக்கிற கதையை கதையுங்க தம்பி..:grin:

இதில... சில, "ரெக்னிக்"   இருக்கு...  அண்ணை. tw_yum:  :grin:
ஆனால், அதை ... வெளிப்படையாய்... சொல்ல மாட்டம். tw_glasses: :D:

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

இதில... சில, "ரெக்னிக்"   இருக்கு...  அண்ணை. tw_yum:  :grin:
ஆனால், அதை ... வெளிப்படையாய்... சொல்ல மாட்டம். tw_glasses: :D:

ஆக மொத்தத்தில் உண்மையாக, மறைக்காமல் நடந்துகொள்வதில்லை..! :)

Share this post

Link to post
Share on other sites

அனைவரும் படியுங்கள் என்ற கோரிக்கையோடு உள்ள இந்தக் கதை உண்மையாக இருக்க சாத்தியங்கள் குறைவு.

மேலும் கதையானது கணவனின் ஒரு தரப்புப் பார்வையாகவே உள்ளது. இதில் நிறைய கட்டுக்கதைகளும் இருக்கலாம். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளதுபோல, அடுத்த பக்கத்து மனைவியின் கதையையும் கேட்டால்தான் கதையில் உள்ள உண்மைகளை ஓரளவு அறிந்துகொள்ளலாம். 

கலியாணம் கட்டி வாழ்பவர்கள் எல்லாம் புரிந்துணர்வோடு காலங்காலமாக வாழ்கின்றனர் என்றில்லை. ஒவ்வொருவரும் அடிப்படையில் தனியன்கள். அவர்களுக்கான சுய விருப்பு வெறுப்புக்களில் ஒரு குறித்த வீதம் பொருந்தினால் அந்தப் பொதுவான தடத்திலேயே வாழ்க்கையை சிக்கல்களின்றி ஓட்டிவிடலாம். ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்து இயல்புகளை மாற்ற முயலும்போதுதான் விரிசல்களும் வெடிப்புக்களும் உருவாகின்றன.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now