Jump to content

பல்வேறு ரொட்டி வகைகள்


Recommended Posts

பல்வேறு  ரொட்டி வகைகள்

 

அனாதனா குல்சா (கோவா)

s1.jpg

தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
மாதுளை முத்துகள் - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை: மைதா, பால், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிட்டிகை உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும். மாதுளை முத்துகள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை அப்பளமாகத் திரட்டவும். மாதுளை உருண்டையை உள்ளே வைத்து, மூடி மேலும் திரட்டவும். சூடான கல்லில் போட்டு, இருபுறமும் திருப்பி நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

மிஸ்ஸி ரொட்டி (ராஜஸ்தான்)

s2.jpg

தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
பாசிப் பருப்பு - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - 1/2 கிண்ணம்
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பாசிப் பருப்பை ஊற வைத்து நீரை வடிக்கவும். ஒரு தேக்கரண்டி எடுத்து தனியாக வைக்கவும். மீதமுள்ளதை உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, புதினா சேர்த்து அரைக்கவும். தனியாவை வெறும் கடாயில் சூடு செய்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, எடுத்து வைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா, பொடித்த தனியா, 2 தேக்கரண்டி நெய் சேர்த்து பிசையவும் (தேவையானால் மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). இதை சற்று கனமான சப்பாத்தியாகத் திரட்டி, சூடான கல்லில் போட்டு எடுக்கவும். 

கேசர் மாவா பராத்தா (காஷ்மீர்)

s3.jpg

தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
குங்குமப்பூ - 2 சிட்டிகை
பால் - 1/2 கிண்ணம்
நெய் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
சர்க்கரை சேர்க்காத கோவா - 1/2 கிண்ணம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
பாதாம் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 2 தேக்கரண்டி பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். மைதாவுடன் ஊற வைத்த குங்குமப்பூ, சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து பிசைந்து மூடி வைக்கவும். கோவாவில் (சுண்டக் காய்ச்சிய பாலைத் திரட்டிச் செய்வது) உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள், துருவிய பாதாம் சேர்த்து கலந்து, உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மைதாவை அப்பளமாகத் திரட்டவும். உள்ளே கோவா கலவையை வைத்து மூடி, சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும். நான்கு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

தவா பூரி (குஜராத்)

s4.jpg

தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா - 2 தேக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை: ஒரு கிண்ணத்தில் நெய் சேர்த்து, தேக்கரண்டியால் நுரை வர அடிக்கவும். அதனுடன் சமையல் சோடா, மைதா கலந்து வைக்கவும். கோதுமை மாவுடன், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிசைந்து மூடி வைக்கவும். இதை அப்பளமாகத் திரட்டவும். மைதா, நெய் கலவையை இதன் மேல் பரவலாகத் தடவவும். அதற்கு மேல் மற்றொரு அப்பளம் வைக்கவும். இதே போன்று மூன்று அப்பளங்களை வைக்கவும். பாய் போல இறுக்கி சுருட்டவும். கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் கைகளால் அகலப்படுத்தவும். கல்லில் சுட்டு எடுத்து, காரமான சைட் டிஷ் உடன் சாப்பிடலாம்.

 

பட்டாணி ரொட்டி
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கிண்ணம்
உரித்த பச்சைப் பட்டாணி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 4
தனியாத் தூள், சீரகத் தூள், மாங்காய்த் தூள் - தலா 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பட்டாணியில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும். கோதுமை மாவுடன், சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாணியில் ஊற்றிய தண்ணீர் ஆறியதும் வடிகட்டி, அதனுடன் மிளகாய், வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் (தண்ணீர் சேர்க்காமல்) கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். விழுது இறுகி வரும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட மசாலா தூள்களைச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மாவு உருண்டையை சின்ன வட்டமாக இட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி தயாரித்து வைத்துள்ள பூரணத்தை சிறு உருண்டைப் பிடித்து மாவின் நடுவில் வைக்கவும். பூரணம் வெளியே தெரியாத அளவில் மாவைக் கொண்டு மூடி, போளி போன்று தேய்க்கவும். இந்த ரொட்டியை சூடான கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணய் விட்டு, நன்கு சிவக்க சுட்டு எடுக்கவும்.

நான் (தில்லி)

s5.jpg

தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
பிரட் துண்டுகள் - 2
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் கடாயில் வறுத்து வெண்ணெயை கலந்து ஒரு தட்டில் வைக்கவும். பிரட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு பால் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். பின்பு கைகளால் நன்கு பிசைந்து, அதனுடன் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்த்து, நன்கு பிசையவும். இதை 4 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு மாவை எடுத்து 1/4 அங்குல கனத்துக்கு திரட்டி, கத்தியால் பாதியாக வெட்டவும். ஒரு பக்கம் 1/4 தேக்கரண்டி தண்ணீர் தடவி, அந்தப் பக்கம் கல்லின் மேல் இருக்கும்படி போடவும். ஒரு கனமான பாத்திரத்தால் மேலாக அழுத்தி விடவும் (திருப்பிப் போட வேண்டாம்). வெந்ததும் எடுத்து, வெண்ணெய் உள்ள தட்டின் மேல் போட்டு, உடனே எடுத்து விடவும். சூடாகப் பரிமாறவும். உணவங்களில் கிடைக்கும் நான் போலவே இருக்கும்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.