• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

காலம்தோறும்

Recommended Posts

காலம்தோறும் - சிறுகதை

சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

 

ன்னும் இருள் பிரியவே இல்லை. ஆனால், அருகில் இருந்த பூங்காவிலிருந்து கூட்டுக்குரலாகச் சிரிப்பலை வெடித்தது. அவளுக்கு வழக்கம்போல எரிச்சல் ஏற்பட்டது. அவர்கள் சரியான பித்துகள் அல்லது அசாதாரணமானவர்கள். சந்தேகமில்லை. அவர்களது சிரிப்பை வைத்து அவளால் நேரத்தைக் கணிக்க முடியும். 6:30 மணி. கோடைக்காலம் என்றால் யாரும் குறைகாணத் தேவையில்லை.  நடுங்கும் குளிர்காலமாக இருந்தாலும் அது நேரம் தப்புவதில்லை என்பதில்தான் இருக்கிறது விஷயம்.

டெல்லி குளிர். இருள் விலகாதபோது, `இன்னும் கொஞ்ச நேரம்’ என, கண்களைத் திறக்க மனமில்லாமல் ரஜாய்க்குள் சுருண்டிருக்கும் வேளையில் அந்தச் சிரிப்பு. பூங்காவில் நடக்கும் யோகா வகுப்புக்கு வருபவர்கள், அரை மணி  நேர யோகாவுக்குப் பிறகு வரும் விடை கூறும் பயிற்சி அது. அட்டகாசச் சிரிப்பு மனதில் குவிந்திருக்கும் அழுத்தங்களையெல்லாம் வெளியேற்றுமாம்.

அக்கம்பக்கத்து அடுக்குமாடிக் கட்டடங்களில் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் தொந்தரவாக இருக்கும் என அவர்களுக்கு ஏன் தோன்றுவதில்லை? இப்போதெல்லாம் `மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்கிற கூச்சம், கரிசனம் யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. பூங்காவில் மூலைக்கு மூலை ஒரு திரிசூலமோ  அனுமார் படமோ முளைக்கிறது. மஞ்சளும் குங்குமமும் அப்பிவைக்கப்படுகின்றன. பஜனைகூட ஒலிக்கும், சத்தமாக. பக்தர்களின் கைங்கர்யம், அவர்களது இஷ்டம். அவர்களுக்கு அதில் சமாதானம் கிடைக்கவில்லையா... மன அழுத்தம் போகவில்லையா... அதனால்தான் இந்தச் சிரிப்பா?  அவர்கள் வெளியேற்றும் மன அழுத்தம், அவளுள் புகுந்துவிட்டதுபோல் இருந்தது.

 ``ஏன், நீகூட அப்படிச் செஞ்சுபாரேன், சிரியேன்.’’

p50a_1514709741.jpg

அவள் குனிந்து பார்த்தாள். தொப்புளிலிருந்து குரல் வந்ததுபோல் இருந்தது. அவளுக்குச் சிரிப்பு வந்தது.

 `அவர்களுடன் சேர்ந்தால் என்ன?’ என்று சில சமயம் அவளுக்குத் தோன்றும். ஒரு கூட்டத்தில் நின்று ஒரு பயிற்சியைப்போலச் சிரிப்பதில் எந்த மனக்கூச்சமும் இருக்காது. ஆனால், தனியாக நின்று வீட்டுக்குள் சிரித்தால் `பிச்சி’ என்று பணிப்பெண் கமலாகூட நினைப்பாள். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் புரளி கிளம்பும். ஏற்கெனவே...

அவள் எழுந்து, ஜன்னலுக்கு அருகில் நின்று ஏழாவது மாடியிலிருந்து தெரியும் பூங்காவைப் பார்த்தாள். பசுமை நிறைந்த தண்ணென்ற பரப்பு. திட்டுத்திட்டாக இருந்த இடைவெளிகளில் பாயை வரிசையாக விரித்து அவர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆண்கள், பெண்கள், பிராணாயாமம். அமைதியாக நாசியைப் பிடித்து வலது இடது என மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி… உள்ளிழுத்து…

அவள், சற்று நேரம் அவர்களைப் பார்த்தபடி நின்றாள். சற்று இளம்வயது அல்லது நடுவயதுப் பெண்கள் பாயை மளமளவெனச் சுருட்டி, கையில் தம்பூராவைச் சுமக்கும் பாடகிகளைப்போல தூக்கிப் பிடித்துக்கொண்டு விரைந்தார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைத் தயார்ப்படுத்தவோ நாஷ்டா சமைக்கவோ விரையும் அவசரம் நடையில் தெரிந்தது. அந்தக் கும்பலில்  சற்று வயதானவர்கள் ஒன்றிரண்டு பேர் தரையில் மெள்ள ஒரு கையை ஊன்றி எழுந்து, உடையை சரிசெய்தபடி முதுகை நெட்டி முறித்தார்கள். சகோதரிகளாக இருக்கலாம் அல்லது தோழிகள். சற்று தூரம் சேர்ந்து நடந்து வெவ்வேறு பாதைகளில் நடக்க ஆரம்பித்தார்கள்.

பார்க்கின் அடுத்த திறந்தவெளித் திட்டில் யோகப் பயிற்சியில் இருந்த ஆண்கள் ஒருசேர எழுந்து நின்று சிரிக்க ஆரம்பித்தார்கள். ``ஓ கடவுளே... ஹஹ்ஹஹ்ஹா…’’ பெண்கள் சிரித்ததைவிட அதிக நீளத்துக்கு, அதிக ஆக்ரோஷத்துடன். அவள் எப்போதோ பார்த்த புராணக் கதை சினிமாவில் கேட்ட எமதர்மராஜனின் சிரிப்புபோல. இப்போதெல்லாம் சினிமா வில்லன்கூட அப்படிச் சிரிப்பதில்லை. எமன் சிரிப்பானா? யாரும் இறந்தால் அவனுக்கு சந்தோஷமா? 

களுக் மொளுக்கெனச் சிரிப்பொலி கேட்டது... சன்னமாக, கொலுசுச் சத்தம்போல.

``உஷ்! பேசாம இரு’’ என்றாள் அவள் செல்லமாக.

குளியலறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியே வரும்போது புன்னகை அதரங்களில் இருந்தது.

``என்ன... சீக்கிரம் எழுந்துண்டுட்டே’’ என்றாள் அம்மா.

``உப்புமாவா... மூக்கைத் துளைக்கிறது வாசனை’’ என்றபடி அவள் சமையலறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.  அம்மா சிரித்தாள்.

``அதனால்தான் சீக்கிரம் எழுந்துண்டியா?’’

``இல்லை, அந்த பார்க்ல இருந்து வர்ற சிரிப்புல எப்படித் தூங்க முடியும்?’’

``அது ஒரு தெரபி’’ என்று அம்மா விளக்கினாள்.

``என்ன தெரபியோ, அந்தச் சிரிப்புல சந்தோஷமே இல்லை. ஆக்ரோஷமா இருக்கு. கோபம் இருக்கு.’’

``ஆ... அதுக்குத்தான் அது. அதைக் குறைக்கத்தானே சிரிக்கச் சொல்றார் அந்த யோகா மாஸ்டர். உண்மைதான், அப்படிச் சிரிக்க ஆரம்பிக்கும் போது நம்மை அறியாம உற்சாகம் ஏற்படும். சிரிக்கத் தோணும். குறைந்தபட்சம் டென்ஷன் குறையும்.’’

``நீ சிரிச்சிருக்கியா அப்படி?’’

அம்மா பதில் சொல்ல வில்லை. அடுப்பில் இருந்த ஏதோ ஒன்று அவளது கவனத்தைக் கலைத்தது.

``நீகூட அப்படிச் செஞ்சு பார்னு அது கேட்டுது’’ என்று அவள் முணுமுணுத்தாள்.

அம்மாவுக்கு அது காதில் விழுந்திருக்காது. 

``ஒரு நாள் நானும் அதுல சேர்ந்துக்கலாமான்னு தோன்றது.”

``இந்தக் குளிர்லயா? வேண்டவே வேண்டாம்.  இருக்கிற கோளாறு போதாதுன்னா?’’

அவள் பதில் பேசாமல் எழுந்து காபி குடித்த கோப்பையைக் கழுவி வைத்தாள். ``வீட்டுக்குள்ளேயே கொஞ்சம் நிதானமா நட’’ என்றாள் அம்மா வழக்கம்போல.

`சரியான வீட்டுச் சிறை எனக்கு’ என்ற அலுப்புடன் அவள் நகர்ந்தாள். வரவேற்பறையின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நடை. பத்து முறை, இருபது முறைகூட நடக்கலாம். அவளுக்குத்தான் பத்து முடிவதற்குள் சோர்ந்துபோகிறது;  மூச்சு வாங்குகிறது.  அம்மா அதற்குள் பயந்து `போதும்... போதும்’ எனும்போது அலுப்பேற்படுகிறது.

சுவரில் இருந்த சித்திரங்கள் எல்லாம் அவளைக் கண்டு நகைப்பதுபோல இருக்கின்றன.  அவள் அதைச் சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தாள். அவள் எதன்மீதும் மோதிக்கொள்ளக் கூடாது என்று அம்மா கவனமாக சோபாக்களை நடுவில் நடக்க சௌகர்யமாக இடம்விட்டு நகர்த்தியிருந்தாள். எல்லோரது கவனத்தின் மையப்புள்ளியாக அவள் ஆகியிருந்தாள். இடையில் ரமேஷின் வாட்ஸ்அப் செய்திகள் வேறு, `தினமும் நடக்கிறியா?’

ஒன்று… நாலு… எட்டு… பத்து… அவள் ஆசுவாசப் பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தாள். நாற்காலி சுருங்கிப்போன மாதிரி இருந்தது.

p50c_1514709757.jpg

``சரியான தொல்லையாயிட்டேன் இல்லே?’’

அவள் திடுக்கிட்டாள். `அம்மாவுக்குக் கேட்டிருக்குமா?’

``ஏன் அப்படிச் சொல்றே?’’

``எனக்கும் அலுத்துப்போச்சு.’’

``ஏன் அப்படிச் சொல்றே?’’

``என்ன சுமதி, ஏதாவது சொன்னியா என்ன?’’

``இல்லைம்மா.’’

``குளிச்சுட்டு வர்றியா டிபன் சாப்பிட, இல்லே... அப்புறமா குளிக்கிறியா?’’

``குளிக்கிறேன்.’’

அவள் குளியலறைக்குள் நுழைவதற்குள் அம்மா வாளியில் வெந்நீர் நிரப்பியிருந்தாள். அதன் எதிரில் அவள் உட்கார்ந்து குளிக்க சௌகர்யமாக  பிளாஸ்டிக் நாற்காலி ஒன்று.

இவ்வளவு கையாலாகாத்தனம் எப்படி வந்தது? அதெப்படி ஒரு சர்வசாதாரண விஷயம், மனுஷன் ஜனித்த நாளிலிருந்து பார்க்கப்படும் விஷயம் என் வரையில் உலகமகா அதிசயம்போல ஆகிப்போனது?

``மன்னிச்சுக்கோ.’’

 வாளி நீரில் ஏதையோ கண்டதுபோல அவளுக்குச் சிலிர்த்தது. ``எதுக்கு?’’

``எனக்கே இஷ்டமில்லை.’’

``என்ன  இஷ்டமில்லை?’’

பதில் இல்லை. காரணம் புரியாமல் அவளுக்குக் கண்களில் நீர் துளித்தது.

சோப்பு கண்களில் நுழைந்துவிட்டது என்று அவள் கண்களில் நீரை இறைத்துக்கொண்டாள். சில சமயம் குமுறி அழவேண்டும்போல இருந்தது. ஏன் என்றே புரியவில்லை. ஒருநாள் அந்த யோகா வகுப்புக்குப் போயே ஆகவேண்டும்.

``சிரிக்க ஆரம்பிச்சோம்னா நிஜமாவே சிரிப்பு வரும். மனசு தளர்ந்துபோகும்.’’

``சுமதி... குளிச்சாச்சா?’’

அவளுக்காக அம்மா சாப்பாட்டு மேஜையில் காத்திருந்தாள்.

அவள் மௌனமாக உடை அணிந்துகொண்டாள்.

``எனக்கு வெளியில வரவே இஷ்டமில்லை.’’

அவள் திடுக்கிட்டாள்.  ``அடச்சீ! ஏன் அப்படிச் சொல்றே?’’

``இங்கேயே எனக்குப் பாதுகாப்பா இருக்கு.’’

``நான் இருக்கும்போது வெளியிலே உனக்குப் பாதுகாப்பு இல்லாம இருக்குமா?’’

``இங்கேயே இருக்கேனே?’’

``அது சாத்தியமில்லை. உனக்கும் கஷ்டம்... எனக்கும் கஷ்டம்!’’

``எனக்கு வெளியே வரவே இஷ்டமில்லை.’’

``உள்ளே இருட்டுன்னா..? வெளியிலே பாரு. நீல ஆகாசம். மரங்கள். பறவைகள். கலர் கலரா பூக்கள்…’’

``எத்தனை தடவை உப்புமாவைச் சுடவைக்கட்டும் சுமதி? மைக்ரோவேவுக்கும் அலுத்துப்போகும்.’’

``அலுப்பு என்பது  ஜடத்துக்கும் உண்டா?’’ 

 உப்புமாவுக்குத் தொட்டுக்கொள்ள ஆவக்காய் ஊறுகாய். நாக்கு சப்புக்கொட்டிற்று.

``வேண்டாண்டி, அத்தனை காரம் கூடாது.’’

மறுபடியும் சிரிப்பு. களுக் மளுக்.

``இப்ப அப்படித்தான் நாக்குக்கு வேண்டியிருக்கும். ஆனா…’’

``ஓகே... ஓகே. அதை தூர வெச்சுடு!’’

இரவும் பகலும் சக்கரம்போலச் சுழன்று வந்தன.  இன்னும் எத்தனை நாள்?  தலையணையில் தலையைச் சாய்த்ததும் வரும் தூக்கம் எங்கேயோ பரலோகம் போயிருந்தது. தூக்கம் வராமல் அடிக்கடி கழிவறைக்குச் செல்லவேண்டியிருந்தது. குளிருக்கு இதமாக ஹீட்டரும் ரஜாயும் இருந்தும் குளிரிற்று.

கண்ணை மூடினால் என்னென்னவோ சித்திரங்கள். ஓலங்கள். கோஷங்கள். அழும் பெண்கள். பரிதவிக்கும் அம்மாக்கள். சிரிக்கும் எமன்கள். பூக்கள் காணோம். நீலவானைக் காணோம். பறவைகள்…

``நா வெளியே வர மாட்டேன்.’’

``வரணும். நீ வந்தே ஆகணும்.’’

``மாட்டேன். என்னைத் தொந்தரவு செய்யாதே.’’

``ஏன்... ஏன் மாட்டே?’’

``அது பயமுறுத்தும் வெளி. அன்பில்லாத இடம்.’’

``இல்லை, பயப்படாதே. நான் உன்னைப் பொத்தி வைப்பேன்; இறுக அணைச்சுப்பேன்.’’

``உனக்குப் புரியாது என் பயம்.’’

நேற்று  அவள் பார்த்த வீடியோ நினைவுக்கு வந்தது. எதைத் திறந்தாலும் அந்தக் காட்சி. வாட்ஸ்அப்பில், கம்ப்யூட்டரில், முகநூலில். அந்த ஆள் அட்டகாசமாகச் சிரிக்கிறான்.

p50b_1514709775.jpg

``யார் நீ?’’ 

``நான் தேசாபிமானி.  என் தேசத்தை நேசிக்கிறேன்.’’

``பொய், நீ கொலைகாரன். கொலை செஞ்சு வேஷம் போடுறியா... என்ன நியாயம்?’’

``இருக்கு நியாயம். இந்த மண்ணில் மாசாக இருப்பவர்களை ஒழிப்பேன். இதோ இந்த ஆள் எனது மதத்துக்கு விரோதி. கலாசாரத்துக்கு விரோதி.’’

``யார் அவன்?’’

``யாரோ. யாராக இருந்தால் என்ன? நான் சாப்பிடாததை அவன் சாப்பிடுகிறான். நான் வெறுக்கும் கடவுளை பூஜிப்பவன். அந்தக் கடவுள் அருவம். ஒரு திசை. அது ஒரு வழிபாடா?’’

``சே பாவம்! அவன் ஒரு தினக்கூலிக்காரன். குடும்பம், அவனை நம்பியிருக்கிறது.’’

``இருக்கட்டுமே. அவன் என் வெறுப்பின் அடையாளம். இது நான் எனது மண்ணுக்குச் செய்யும் கைங்கர்யம்.’’

அவள் கண்ணை மூடிக்கொண்டாள். மூடுவதற்கு முன் தெரிந்த காட்சி குடலைக் குமட்டிற்று. அந்தத் தினக்கூலிக்காரன்  அலற அலற,  கெக்கலிக்கும் தேசபக்தன் கோடரியால் அவனை வெட்டுகிறான். சரமாரியாக, வலது இடது நெஞ்சில், அடிவயிற்றில். கீழே கிடந்தவன் அடங்கிப்போனான்.   தீ அவனைச் சுற்றிக் கொழுந்துவிட்டு எரிகிறது. ``எடுங்கடா இந்தப் படத்தை, முகநூலில் வெளியிடணும். எல்லோரும் பார்க்கட்டும்’’  அட்டகாசச் சிரிப்பு. வெறிகொண்ட முகங்கள். கெக்கலிக்கும் கூட்டம். கோஷம்போடும்  வெறிபிடித்த கூட்டம்.

அவளுடைய நாபி வெடித்துவிடும்போல் இருக்கிறது. குரல் வெடித்தது.

``நான் எதுக்கு அங்கே வரணும்?’’

அவளுக்குக் குமுறிக்கொண்டு துக்கமும் அழுகையும் வந்தன.

``நான் செஞ்ச தப்பு இல்லை அது.’’

``உன் தப்பு… உன் தப்பு… உன் தப்புதான்.’’

தினமும் குரல் சொன்னது. `காலை, மாலை, இரவு , எப்போதும். உன் தப்பு.’

``என்ன அநியாயம் பார்த்தியோ?’’ என்றாள் அம்மா. அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில என்ன நடந்தது தெரியுமோ?’’

``என்ன?’’

``ஒரு பொண்ணுக்குப் பிரசவம் ஆகிருக்கு. `பிறந்த குழந்தை இறந்துபோச்சு’னு டாக்டர் சொல்லி எழுதியும் கொடுத்தாச்சு. செத்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில போட்டுக் கொடுத்தாங்களாம்.  குழந்தையைப் புதைக்க அந்தப் பொண்ணோட அப்பா மயானத்துக்குப் போற வேளையிலே பையிலே அசைவு தெரிஞ்சுதாம். திறந்து பார்த்தா  குழந்தை மூச்சு  விடறதாம். காலை கையை அசைக்கிறதாம்.’’

பக்கென்ற ஒரு பீதி அவளுள் பரவிற்று. ``அந்த ஆஸ்பத்திரிக்கு நாம போகவேண்டாம்.’’

``எந்த ஆஸ்பத்திரியானாலும் நான் வெளியே வர மாட்டேன்.’’

அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

``உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. எதுவுமே உன் கையில இல்லை.’’

அவள் விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

``சுமதி, நீ ஏன் அழறே? நானும் ஒரு முட்டாள். இதையெல்லாம் உங்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது.’’

``நீ சொல்ல வேண்டாம். காத்து சொல்லும்.  தொலைக்காட்சி சொல்லுது. கம்ப்யூட்டர் சொல்லும். செல்லிடப்பேசி சொல்லும்.”

அவளுக்கு மண்டை வெடித்துவிடும்போல இருந்தது.

உள்ளுக்குள் என்னவோ உடைந்தது. அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கீழ் நீர் பரவிற்று.

``அம்மா, அம்மா… என் கையில ஒண்ணும் இல்லை.’’

``சுமதி என்ன சொல்றே நீ? என்னது இது?  ஓ பனிக்குடம் உடைஞ்சுபோச்சு.”

``அப்படின்னா?’’

``உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.”

அம்மா அவசரமாக டாக்ஸியை அழைக்கிறாள். வழியெல்லாம் கந்தசஷ்டிக் கவசம் சொல்கிறாள். `காக்க… காக்க…’ அது ஒன்றுதான் காதில் விழுகிறது.

அவள் கண்களை மூடிக் கொண்டாள். கெக்கலிக்கும் குரல்கள். எரியும் உடல்கள். சிரிக்கிறார்கள். அதைக் கண்டு `ஏன்... யார் இவர்கள்?’ எம தூதர்கள்.

அவள் தலையை இடமும் வலமும் அசைக்கிறாள். ``எதுவுமே என் கையில இல்லை. உண்மைதான்.’’

 ``பனிக்குடம். எத்தனை அழகான சொல்! ஏம்மா உடைஞ்சுபோச்சு?’’

``சில பேருக்கு அப்படி ஆகும். பரவாயில்லை. டாக்டர் பார்த்துப்பார்.’’

``டாக்டர் கடவுளா? பிளாஸ்டிக் பை நினைவிருக்கோ?’’

``சீச்சீ, அசட்டுத்தனமா பேசாதே. அது அபூர்வ கேஸ்.’’

``எல்லாமே அபூர்வம்தான். கெக்கலிச்சானே அதுவும்தான். ஏன் நடக்கிறது அப்படி?’’

அவள் கண் விழித்தபோது சுற்றிலும் வெளேர் என்ற சுவர்கள்.  அவள் அலங்கமலங்க விழித்தாள். கழுத்து வரை கம்பளிப் போர்வை. ஏதோ கழன்றுபோயிருந்தது. உடலில் வெறுமை இருந்தது.

``என்ன ஆச்சு?’’

அம்மா, அவளது கையை வருடியவண்ணம் இருந்தாள். முகம் சோர்ந்திருந்தது.

``என்னம்மா?’’

அம்மா மெள்ளச் சொன்னாள். ``குழந்தை செத்துப் பிறந்தது.  பெண் குழந்தை.’’

அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஆணோ பெண்ணோ, எல்லாத்துக்கும் ஆபத்து.

அம்மாவின் கை மறுபடி வருடிற்று. ``வருத்தப்படாதே. அடுத்தது  நல்லபடியா பிறக்கும்.”  

``அவளுக்குப் பிறக்க இஷ்டமில்லை.”

``யாருக்கு? என்ன சொல்றே சுமதி?”

``நான் `பயப்படாதே’னு அதிகம் சொன்னேன். வெளியிலே வரவே மாட்டேம்பா.’’ 

``சுமதி, பேசாமே கண்ணை மூடித் தூங்கு. இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது. அடுத்தபடியா…”

``வேண்டாம் வேண்டாம். நம்மால பாதுகாப்பு குடுக்க முடியாதும்மா. `வந்துடு’ன்னேன். `உன்னைப் பொத்திவெச்சு வளர்க்கிறேன்’னேன். அவ நம்பலை.’’

குமுறிக் குமுறி துக்கம் ஏற்பட்டது.

``சுமதி, அழப்படாது. பச்சை உடம்பு.  இதான் உங்கிட்ட. நீ ஏன்டி நமக்கு சம்பந்தமில்லா விஷயத்துக்கெல்லாம் அலண்டுபோயிடுறே?”
 
 ``நமக்கு சம்பந்தம் இருக்கு.’’

அம்மாதான் இப்போது அழுதாள்.

பார்க்கில் பத்துப் பெண்கள்.  அவர்களுடன் அவள். பிராணாயாமம் முடிந்தது. எல்லோரும் எழுந்து நின்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.  பகபகவென்று. வெகு நேரம். `சிரி. மனசிலிருக்கும் பாரமெல்லாம் இறங்கும். இது தெரபி!’ அம்மா பக்கத்தில் நின்று சொல்கிறாள்.

``சிரி!’’

https://www.vikatan.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம்
   ஓவியங்கள் : ரமணன்
    
   அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’

   50 வருடத்துக்கு முந்திய கதை இது.  ‘கொக்குவில்’ ஒரு சின்னக் கிராமம். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக அந்தக் கிராமத்தில் ரயில் ஸ்டேஷன் இருந்தது. கொழும்பிலிருந்து வரும் ரயில் அங்கு நிற்கும். சனங்கள் இறங்குவார்கள். திரும்பிக் கொழும்புக்குப் போகும்போது ஏறுவார்கள். சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சனங்கள் வருவார்கள். கொழும்புக்குப் போவதென்றால், எங்கள் ஊருக்கு வந்துதான் ஆகவேண்டும். எத்தனை பெருமை எங்களுக்கு.

   எங்கள் வீடு, பக்கத்தில்தான் இருந்தது. ரயில் கூவும் சத்தம் கேட்டால், நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடுவேன். ரயில், ஸ்டேஷனுக்கு வருவதற்கிடையில் நான் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவேன். ரயிலைப் பார்ப்பதும், கைகாட்டி மரம் விழுவதும், ரயில் கேட் மூடுவதும், ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடியைக் காட்டியதும் ரயில் கொஞ்சம் பின்னால் நகர்ந்து புறப்பட்டு வேகமெடுப்பதும் பார்க்க எனக்கு அலுக்கவே மாட்டாது. ஒரு மலைப்பாம்பைப் பார்ப்பதுபோல, ஒரு யானையைப் பார்ப்பதுபோல, ரயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது இல்லாவிட்டால்கூட முடிவைக் கண்டுபிடிக்க முடியாத தண்டவாளம் இருக்கிறது.

   அவனுடைய பெயர் தவராசன் என்று சொன்னான்.  பக்கத்தில் உள்ள தாவடிதான் அவன் ஊர். என்ன வகுப்பு, எந்தப் பள்ளிக்கூடம் என ஒன்றுமே அவன் சொல்லவில்லை. காதுக்குள்ளே சதுரமான ஐந்து சதக் குற்றியைச் செருகியிருந்தான், பெரிய ஆளைப்போல. ரயில் பற்றி சகல விசயமும் அவனுக்குத் தெரிந்திருந்தது.  நிறுத்தாமல் பேசினான். நான் ஏதோ சொல்லத் தொடங்கியபோது, இரண்டு கைகளையும் தோள் அளவுக்குத் தூக்கினான், யாரோ எனக்குப் பின்னால் நின்று துப்பாக்கியை நீட்டியதுபோல.

   “என்னுடைய தாத்தா, வெள்ளைக்கார இன்ஜினீயர் தண்டவாளம் போட்டதைப் பார்த்திருக்கிறார். இந்த ரயிலை இங்கிலாந்தில் செய்கிறார்கள். நிலக்கரியும் அங்கேயிருந்துதான் வருகிறது. தண்ணீர் மாத்திரம் எங்களுடையது. எனக்கு அது புகை விடுவதும், கூவுவதும், சத்தமிடுவதும் பிடிக்கும். டீசல் ரயில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். அதிலே புகையும் வராது. சத்தமும் கேட்காது. ரயில்போலவே இருக்காது” - அவன் பேசிக்கொண்டே போனான். என்னுடைய பெயரை மட்டுமே கேட்டான். நான் என்ன வகுப்பு, எங்கே படிக்கிறேன் என்ற தகவல் அவனுக்கு முக்கியமே இல்லை.

   அவன்தான் சூரியன் ஒரு நட்சத்திரம் என்ற தகவலை எனக்குச் சொன்னான். அது பூமிக்குச் சமீபமாக இருக்கிறது. அதனால்தான் பெரிதாகத் தெரிகிறது. நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், சூரியனிலும் பார்க்க பல மடங்கு பெரியவை. அவை இருக்கும் தூரமும் அப்படித்தான். சில நட்சத்திரங்களின் ஒளி பூமிக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றான்.

   “இதை எப்படி நம்புவது?”

   “நாகப்பாம்பு இரவிலே ரத்தினக்கல்லைக் கக்கிவிட்டு அந்த ஒளியிலே இரை தேடும் என்று யாராவது சொன்னால், நீ உடனே நம்புவாய். ஏனென்றால், பொய் பல்லக்கில் வரும்; உண்மை தெருக்கூட்டும்.”
   “தெருக்கூட்டுமா?”

   ``60 வருடச் சுழற்சியில் வருடங்கள் வரும். ஏன் தெரியுமா? பூமி, வியாழன், சனி கிரகங்களைத் தொடுத்தால் கிடைக்கும் முக்கோணம், அறுபது வருடங்களுக்கு ஒருமுறை அதே வடிவத்தில் வருகிறது.’’
   ``உனக்கு எல்லாமே தெரிகிறது. நிறையப் புத்தகம் படிப்பாயா?’’ என்று கேட்டேன்.

   ``ஓ, அவ்வப்போது படிப்பதுண்டு. வீடு முழுக்கப் புத்தகங்கள்தான்’’ என்றான்.

   அவன் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சி, வீடு வந்த பிறகும் என்னைவிட்டுப் போகவில்லை. என்னுடைய வீட்டில் பாடப் புத்தகங்கள் மட்டும்தான் இருக்கும். வேறு நாவல்களோ, கதைப் புத்தகங்களோ, வாரப் பத்திரிகைகளோ கிடையாது. அவற்றை இரவல் வாங்கிப் படிக்கவும் முடியாது. ஐயா, `நாவல் உன்னைக் கெடுத்துவிடும். பாடப் புத்தகத்தைப் படி’ என்பார். அம்மா அப்படியல்ல. அவர் என் பக்கம் என்று எனக்குத் தெரியும். இரவல் வாரப் பத்திரிகைகள் கிடைத்தால் ஒளித்துவைத்து, ஐயா இல்லாத நேரங்களில் வாசிப்பேன். ஆனால், ஒரு நாவல்கூட படித்தது கிடையாது.

   மூன்று நாள்களுக்கு முன்னர், ஒரு புதன்கிழமை அன்று தவராசனை மறுபடியும் ஸ்டேஷனில் சந்தித்தேன். நிறையப் புத்தகங்கள் தன் வீட்டில் இருக்கின்றன என்று அவன் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் ஊரில் மட்டை கிழிந்த நாவல் ஒன்று யாரிடமாவது கிடைத்தால், அது ஊர் முழுக்கச் சுற்றிய படியே இருக்கும். அம்மாவிடம் அவனைப் பற்றிச் சொன்னபோது, ``அவன் புளுகுறான்’’ என்று அம்மா தீர்மானமாகச் சொன்னார்.

   ``உன் வீட்டில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன?’’ என்று அவனைச் சோதிப்பதற்காகக் கேட்டேன். அவனுக்கு அது பிடிக்கவில்லை.

   ``அதான் சொன்னேனே, எல்லாமே இருக்கிறது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகின்னு சகலதும் வீட்டிலே கிடக்கு. ஆசிரியர்கள்தான் வித்தியாசமேயொழிய, எல்லாமே ஒரே மாதிரி கதைகள்தான். `திகம்பர சாமியார்’, `ராதாரமணி’, `இரத்தினபுரி ரகஸ்யம்’. ஒன்று படித்தால் போதும். இவற்றையெல்லாம் வாசித்தால் மூளை வளராமல் நின்றுவிடும்.’’
   ``அவ்வளவு மோசமா?’’

   ``உன் உடம்பில் ஓடும் ரத்தம் வெளியே வரத் துடிக்கிறது தெரியுமா உனக்கு? கையை வெட்டினால் ரத்தம் பாய்ந்து வெளியேறும். செய்து பார்த்தால்தான் சில உண்மைகள் தெரியவரும். புத்தகத்தைப் படித்துப் பார். உனக்குப் புரியும்.’’

   ``உன் வீட்டில் இரவல் தருவார்களா?’’ என்றேன். எப்படியாவது ஒரு நாவலைப் படித்துவிட வேண்டும் என, என் இதயம் பெரிய சத்தத்துடன் அடிக்கத் தொடங்கியது. அவனிடமிருந்து வரும் பதில், என் வாழ்க்கையையே மாற்றிவிடும். கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்தேன். அவன் சொன்ன புத்தகங்களை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்றோருக்கு, தவம் செய்தால் மட்டுமே அவை கிடைக்கும். அம்மா வேறு சொல்லிவிட்டார், “இவன் புளுகுறான்” என்று. ஆனாலும், அவனை நம்பவேண்டும் எனப் பட்டது.

   ``வேறு யாரிடம் கேட்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வா. புத்தகம் என்ன வேலையா செய்கிறது? நீ பாக்குவெட்டி இரவல் கேட்டால், நான் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ அரிவாள் இரவல் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ என் வீட்டுக் குடத்தைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. புத்தகம் என்ன வேலை செய்கிறது? சும்மாதானே இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது. நீ வந்து எடுத்துப் போ’’ - அப்போது அவன் தவராசன் போலவே இல்லை. தேவதூதன் போலவே தெரிந்தான்.

   தாவடி, பக்கத்து ஊர்தான். ஆனால், நான் தனியாகப் போனதில்லை. ஐயா என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார். அம்மாவிடம் சொன்னபோது அவரும் நம்பவில்லை. ``அதிகமாகப் பேசுபவன், உண்மை சொல்ல மாட்டான். இவனை நம்பி நீ எப்படித் தனியாகப் போகலாம்’’ என்று என் பயத்தைக் கூட்டினார். எனக்கு, அவன் அப்படி ஒன்றும் பொய் சொல்கிறான் எனப் படவில்லை.

   அடுத்த முறை சந்தித்தபோது அவன் கேட்டான். ``நீ வரவே இல்லை?’’

   ``நீதான் சொன்னாயே, புத்தகம் படித்தால் மூளை வளராது என்று. பள்ளிக்கூடத்தில் நீ புத்தகம் படிப்பதில்லையா?’’


    
   ``பள்ளிக்கூடமா... நான் அங்கே ஏன் போறேன்? என்னுடைய பெயரில் ஐந்து எழுத்துகள். அதை எழுத எவ்வளவு நேரம் பிடிக்கும்? பேனாவில் மை முடிந்துவிடுமா? தலைமையாசிரியர் என் பெயரை எழுதவில்லை. நானும் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திவிட்டேன்.’’

    ``நான் தாவடிக்கு ஒரு முறையும் வந்தது கிடையாது. தனியா வரப் பயமாயிருக்கு’’ என்றேன்.

   அவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து சிரித்தான். ``தாவடி என்ன பக்கத்து நாடா? நீ படகில் கடலைக் கடக்கப்போறியா அல்லது காட்டில் வழி கண்டுபிடிக்கச் சொல்கிறேனா? ஒருவேளை பாலைவனத்தில் வழி தவறிவிடுவோம் என யோசிக்கிறாயா? நீ எப்படித் தொலைந்துபோவாய்? வழி தவறினாலும்கூட பரவாயில்லை. `தவராசன் வீடு’ எனச் சொல். காட்டுவார்கள்’’ என்றான்.

   ``நீ உன் வீட்டில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்திருக்கிறாயா?’’ என்று கேட்டேன்.

   ``நான்தான் சொன்னேனே. ஒன்று படித்தால் மற்றவை எல்லாம் படித்ததுபோலத்தான். உண்மையைச் சொன்னால், எனக்கு புத்தகங்கள்மீது வெறுப்பு உண்டு. அவை மனிதனுக்கு உதவி செய்வதில்லை; கேடு செய்கின்றன. ஏன் தெரியுமா? புத்தகம் படிக்கும் ஒருவன், தான் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறான். சொந்தமாகச் சிந்திப்பதைப் புத்தகங்கள் ஊக்குவிப்பது இல்லை. `திகம்பர சாமியாரை’ப் படிப்பதால், நீ உன் வாழ்க்கைக்கு வேண்டிய ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கிறாயா, `இரத்தினபுரி ரகஸ்ய’த்தைக் கண்டுபிடிப்பதால் உனக்கு என்ன பயன், அதைவைத்து என்ன செய்வாய்?’’

   ``என்னுடைய ஐயா, ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்தார். விளக்கை ஏற்றிவைத்து இரவு 1 மணி, 2 மணி வரை படிப்பார். அடுத்த நாள் டவுனுக்கு மறுபடியும் போய், புத்தகங்கள் வாங்கி வருவார். அம்மாவுக்குப் பிடிக்காது. வீட்டில் சமையலுக்கான பொருள்கள் இல்லை. ஐயா, புத்தக மூட்டையோடு வந்து இறங்குவார். சண்டை தொடங்கும். அப்படியும் அவர் நிறுத்தவில்லை. புத்தகப் பைத்தியமாகவே இருந்தார். சில வேளைகளில் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு இருக்கும். அப்போது இந்தியாவுக்குப் போய் புத்தகங்கள் வாங்கி வருவார்.’’

   ``இந்தியாவுக்கா... எப்படிப் போவார்? காசுக்கு என்ன செய்வார்?’’

   ``கள்ளத்தோணிதான். பெரிய கடையில் கொண்டுபோய் காசைத் தந்தால், தினகரன் பேப்பரில் மூன்றாவது பக்கம் ஏதோ கிறுக்கித் தருவார்கள். அதை இந்தியாவுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தால், அங்கே இந்தியக் காசு கிடைக்கும். எல்லாம் மட்டை கிழிந்த பழைய புத்தகங்களாக வாங்கி வருவார். `எதற்காகப் பழைய புத்தகங்கள்?’ என்று அம்மா கேட்டால், `அதே காசுக்கு இரண்டு மடங்கு வாங்கலாம்’ என்பார். அம்மாவுக்கோ, எனக்கோ ஒன்றுமே வாங்கி வந்ததில்லை. அவ்வளவு பெரிய புத்தகப் பைத்தியம்.’’

   ``இரவு பகலாகப் புத்தகம் படிப்பவர், பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமே?’’

   ``புத்தகத்துக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? ஒருநாள் எங்கள் வீட்டுக் கதவின் கைப்பிடி கழன்று விழுந்துவிட்டது. நாங்கள் வீட்டுக்குள்ளே இருந்ததால் வெளியே போக முடியவில்லை. கைப்பிடியை எடுத்து மறுபடியும் பூட்டினால்தான் கதவைத் திறக்க முடியும். ஐயா வெளியேதான் இருந்தார். அவருக்கு ஒரு ஸ்குரூவைப் பூட்டத் தெரியவில்லை. இரண்டு நிமிட வேலை. இவ்வளவு புத்தகங்கள் படித்ததுதான் மிச்சம். கடைசியில் பக்கத்து வீட்டுக்காரர் வந்து கதவைத் திறந்து எங்களை விடுவித்தார்.’’

   ``நாவல்  படிக்கக் கூடாது என்கிறாயா... அதில் சுவாரஸ்யம் இல்லையா?’’
    
   ``நீ ஏன் அவசரப்படுகிறாய்? சாப்பிடும் முன் விரல் சூப்பக் கூடாது. முதலில் படி. பிறகு, நீயே உணர்ந்துகொள்வாய். புத்தகப் படிப்பு முக்கியமல்ல. வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதுதான் முக்கியம். சிந்திக்கப் பழகுவதை வகுப்பில் பாடமாக வைக்க வேண்டும்.

   இங்கிலாந்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்றைக் கட்டினார்கள். செல்வந்தர்கள், போட்டிபோட்டுக்கொண்டு பணம் போட்டார்கள். பிரமாண்டமான கப்பல் என்பதால் அவ்வளவு லாபம் கிடைக்கும். ஆயிரம் பேர் பல மாதங்களாக உழைத்தனர். 4,000 பேர் அதில் பயணம் செய்யலாம். கட்டி முடித்த பிறகு, கப்பலை எப்படிக் கடலுக்குள் கொண்டுபோவதென்று தெரியவில்லை. ஒரு வருடமாக முயன்றும் முடியவில்லை. அவ்வளவு புத்தகங்களைக் கரைத்துக் குடித்துக் கப்பலைக் கட்டிய இன்ஜினீயர், அதை எப்படி கடலுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டார். கப்பல் சொந்தக்காரர்கள், அதை உடைத்து இரும்பாக விற்றுவிடுவது என முடிவுசெய்தார்கள். அந்த இரவு, இன்ஜினீயர்  தூங்கவில்லை. இதே யோசனையாக இருந்தார். அதிகாலையில் ஆள்களின் ஆரவாரம் கேட்டு, கதவைத் திறந்தபோது கப்பல் கடலில் மிதந்தது. இரவு கடல் பொங்கியதில், தண்ணீர் பெருகிக் கப்பலைக் கொண்டுபோய்விட்டது. புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்பதைத்தான் சொல்கிறேன்.’’

   ``சரி. சரி... நீ இப்போது சொன்னதுகூட  எங்கேயோ படித்ததுதானே. அது  எப்படிக் குற்றமாக முடியும்?’’

   `` `ராதாரமணி’ நாவலைப் படிக்க 20 மணி நேரம் எடுக்கும். அதே கதையை நான் உனக்கு ஒரு மணி நேரத்தில் சொல்ல முடியும். அப்படியானால், 19 மணி நேரம் லாபம்தானே! படித்துத் தெரிந்து கொள்வதைவிட, பார்த்து, கேட்டுத் தெரிந்துகொள்வது உத்தமம். நான், ‘கப்பல் கதை’யைக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.’’

   தவராசனைப் பார்த்தேன். 12 வயதுப் பையன்போலவே அவன் இல்லை. பெரிய மனிதர் தோரணையில் பேசினான். அவன் இவ்வளவு சொன்னாலும் அவனிடம் புத்தகம் இரவல் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

   அம்மாவிடம் சொன்னேன். அவர்,  ``சரி, நாளைக்குப் போய்ப் பார். நீ ஏன் அதற்காகக் குழம்ப வேண்டும்? பயப்படாமல் போ’’ என்றார்.

   அதிகாலை எழுந்து புறப்பட்டேன். அவ்வளவு தூரத்தை நான் தனியாளாகக் கடந்ததில்லை.  பாதி தூரம் நடந்து வந்தும் ஒருவரையும் காணவில்லை. ஒரு மனிதர், பெரிய பனைமரக் குத்தி ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு நடந்தார். அவரிடம் வழி கேட்டால், அவர் முழுத் தலையையும் என் பக்கம் திருப்ப வேண்டும். இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒன்று, `சலுங் சலுங்..’ என என்னை நோக்கி ஓடிவந்தது. வேலி ஓரத்தில் நிற்க, அது என்னைத் தாண்டிப் போனது. முதலியார் வீட்டுக்குப் போகிறது போலும்.

   கன்றுக்குட்டி ஒன்றைக் கயிற்றில் கட்டி இழுத்துப்போன மனுஷியிடம், ``தவராசன் வீடு...’’ என்றேன். அவர் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் வீட்டைக் காட்டினார்.

   வீட்டுக்கு முன்னால் நின்று ``வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்’’ என்று கத்தினேன். ஒரு சத்தமும் இல்லை. ``தவராசன்...’’ என்று கத்தினேன். கதவு படாரெனத் திறந்தது. துணிவைத்து முடியைக் கட்டியிருந்த மெலிந்துபோன ஒரு பெண் நின்றார். ஜன்னல்களுக்கு எதிரியான ஒருவர் கட்டிய வீடு. பாதி வெயிலிலும் பாதி இருட்டிலும் இருந்தது. ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் இரண்டு சிறுமிகள் உட்கார்ந்து இருந்தனர். `பாட்டு சொல்லிக்கொடுக்கிறார்’ என்று ஊகித்தேன்.

   ``தவராசன்...’’ என்றேன்.

   ``ஓ... நீதான் புத்தகம் இரவல் வாங்க வந்தனியா? அவன் இல்லை. வா வா உள்ளே’’ என்றார்.

   அப்படியொரு காட்சிக்கு என்னை நான் தயார்படுத்தவில்லை. கூரையிலிருந்து தரை மட்டும் நீண்ட நீண்ட புத்தகத் தட்டுகள் இருந்தன. அவற்றில் நிரையாகப் புத்தகங்கள் அடுக்கியிருந்தன. சில புத்தகங்கள், தரையில் சிதறிக் கிடந்தன. முதுகு உயரமான நாற்காலி ஒன்றின் மேல் 20, 30 புத்தகங்கள் கிடந்தன. நான் எங்கே தொடங்குவது எனத் தெரியாமல் மிரள மிரளப் பார்த்தேன்.

   ``தம்பி...’’ என ஆறுதலாகப் பார்த்து, ``புத்தகத்தை எடுத்துக் காட்டிவிட்டுப் போ’’ என்றார். நான் பல புத்தகங்களைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தேன். பலத்த யோசனைக்குப் பிறகு, `பிரதாப’ என்று தொடங்கும் ஒரு புத்தகத்தை அவரிடம் காட்டிவிட்டு எடுத்துச் சென்றேன்.

   இரண்டு நாள்கள், ரகசியமாக அதைப் படித்து முடித்தேன். அம்மா பக்கத்தில் படுத்துக் கதை கேட்க, முழுக்கதையையும் சொன்னேன். இரண்டு நாள்கள் படித்ததை இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடித்தேன். எனக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு இப்ப அம்மாவுக்கும் தெரிந்தது. `அண்டகடாகமும் சிரித்தது’ என்றும், `தேகவியோகமானார்’ என்றும் நான் சொன்னபோது அம்மா மெல்லிய புன்னகை பூத்தார். ஞானாம்பாள் ஆண் வேடமிட்டு விக்கிரமபுரியை ஆண்டதை விவரித்தபோது, நானே ஒரு மன்னன் ஆகிவிட்டேன்.

   ``அம்மைபோட்ட ஞானாம்பாள், கடைசியில் தப்பினாளா?’’ என்று அம்மா கேட்டார்.

   எனக்கும் தெரியவில்லை. அட்டையும், கடைசி சில பக்கங்களும் கிழிந்துவிட்டன. நானே இட்டுக்கட்டி ஒரு முடிவைச் சொன்னேன்.

   ஒரு வாரம்  சென்ற பிறகு, தவராசனை ஸ்டேஷனில் சந்தித்தேன். பழுதான ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றான். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.

   ``இதுவா?’’ என்றான்.

   ``உன்னுடைய அம்மாவிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்தேன்.’’

   ``ஐயா படித்த கடைசி நாவல் இது. விளக்கு மட்டும் அணையாமல் எரிந்தது. பாதி படித்தபடி காலையில் இறந்துபோய் கிடந்தார்’’ என்றான்.

   ``இதுதான் நான் படித்த முதல் நாவல்’’ என்றேன். பிறகு ஏன் அப்படிச் சொன்னேன் எனத் திகைத்து, பேசாமல் அவன் காதில் செருகிய ஐந்து சதக் குற்றியை உற்றுப் பார்த்தவாறே நின்றேன். பெட்டிகளில் கொழும்புக்கு என்ன அனுப்புகிறான் எனக் கேட்டபோது, ``புத்தகங்கள்தான். ஐயா இறந்த பிறகு அதுதான் எங்களுடைய வருமானம்’’ என்றான்.

   பல வருடங்களுக்குப் பிறகு அதே புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தேன். அம்மாவுக்காக நான் இட்டுக்கட்டிய முடிவு மிகத் திறமாகத்தான் இருந்தது. 50 வருடங்களாகப் புத்தகத்தின் தலைப்பைத்தான் நான் வேறு என்னவோ என நினைத்திருந்தேன்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஊமை! – சிறுகதை
    

   ரமே­ஷுக்கு அன்று முத­லி­ரவு. பால் செம்­பு­டன் படுக்­கை­ய­றைக்­குள் நுழைந்த மனைவி பத்­மாவை பாசத்­தோடு அர­வ­ணைத்து தனது அரு­கில் உட்­கார வைத்­தான். தன்­னைப் பற்­றி­யும் தனது குடும்­பத்தை பற்­றி­யும் விரி­வாக எடுத்­து­ரைத்­தான். நான் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் மேனே­ஜ­ராக வேலை பார்ப்­ப­தா­க­வும், தனக்கு ஒரு தம்­பி­யும் ஒரு தங்­கை­யும் உண்டு என்­றும், அப்பா ரயில்­வே­யில் வேலை பார்ப்­ப­தா­க­வும், அம்மா கொஞ்­சம் வாயா­டி­யா­னா­லும் அன்­பா­வ­ன­வர் என்­றும் கூறி­னான். நீ குடும்­பத்­தில் மூத்த மரு­ம­கள் என்­ப­தால் எல்­லோ­ரி­ட­மும் அன்­பா­க­வும் – பாச­மா­க­வும் நடந்து கொள்ள வேண்­டும் என்­றும் குடும்­பத்தை நல்ல முறை­யில் கவ­னித்து கொள்­ள­வேண்­டும் என்­றும், கூறி­னான்.
   எல்­லா­வற்­றிற்­கும் சிரித்­த­ப­டியே "சரி.. சரி'' என்று தலையை ஆட்­டி­னாள் மனைவி. அதைப் பார்த்து மிக­வும் சந்­தோ­ஷம் அடைந்­தான் ரமேஷ். "ஆஹா.. நான் எவ்­வ­ளவு நேரம் பேசி­யும் வாய் ­தி­றந்து ஒரு வார்த்தை கூட பேச­வில்­லையே! எவ்­வ­ளவு அடக்­கம்! என்ன மரி­யாதை!! அழ­கும் – அடக்­க­மும் நிறைந்த மனை­வி­யல்­லவா நமக்கு கிடைத்­தி­ருக்­கி­றாள்! உண்­மை­யிலேயே நாம் கொடுத்து வைத்தவன்­தான்'' என்று நினைத்து மகிழ்ந்தான்.
   மறு­நாள் காலை எல்­லோ­ரும் அமர்ந்து சிற்­றுண்டி சாப்­பிட்டு கொண்­டி­ருந்­த­னர். அப்­போது ரமேஷ் மாமாவை பார்த்து...
   "மாமா, உங்க மகள் ஏன் வாய் திறந்து பேசவே மாட்­டேன்ங்­கி­றாங்க. ராத்­தி­ரி­யில இருந்து நானும் பார்க்­கத்­தான் செய்­கி­றேன். ஒரு வார்த்தை கூட பேசவே இல்­லையே? வெட்­கத்­தில பேச­வில்­லையா..? இல்லை மவுன விர­தமா..?''
   "என்ன மாப்ளே.. எது­வும் தெரி­யா­தது போல கேட்­கி­றீங்க? அவள் எப்­படி பேசு­வாள்? அவள்­தான் ஊமை­யா­யிற்றே?''
   இதை கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்­தான் ரமேஷ். "என்ன மாமா சொல்­றீங்க? பத்மா ஊமையா? உண்­மை­யைத்­தான் சொல்­றீங்­களா? இல்லை தமாஷ் பண்­றீங்­களா..?'' – பதட்டத்து­டன் கேட்­டான்.
   "ஆமாம் மாப்­பிள்ளை, உண்­மை­யைத்­தான் சொல்­றேன். ஏன், பத்மா ஊமைங்­கிற விஷ­யம் உங்­க­ளுக்கு தெரி­யாதா? புரோக்­கர் இந்த விஷ­யத்தை உங்­க­கிட்ட சொல்­ல­லையா..?''
   "சொல்­லவே இல்­லையே? ஐய்யோ நான் ஏமாந்து போயிட்­டேனே? புரோக்­கர் என்னை ஏமாத்திட்­டானே? போயும்­போ­யும் ஒரு ஊமைய்­யய்யா நான் கல்­யா­ணம் பண்­ணி­னேன்? நேத்து ராத்­திரி நான் அவ்­வ­ளவு தூரம் பேசி­யும் பதி­லுக்கு ஒரு வார்த்தை கூட பேசா­மல் தலை தலையை ஆட்­டி­னாளே, அது இத­னால் ­தானா? பெண் பார்க்க வந்தபோது கூட என்னை பிடிச்­சி­ருக்­கான்னு கேட்­டேன். "ஆமாம்'' என்றுதான் தலையை அசைத்­தாள். அப்­போதே நான் உஷா­ராகி இருக்க வேண்­டுமே? வெளி அழகை பார்த்து மயங்­கி­விட்­டேனே? ஐயையோ இனி நான் என்ன செய்­வேன்?'' தலை­யில் அடித்­த­படி புலம்­பி­னான்.
   "நாங்க எல்லா விஷ­யத்­தை­யும் புரோக்­கர்­கிட்ட சொல்­லித்­தான் இந்த கல்­யா­ணத்தை நடத்தினோம். எங்க மேல எந்த தப்­பும் இல்லை. நாங்க யாரை­யும் ஏமாத்­த­வும் இல்லை. பத்து வய­சு­ வரை அவள் நல்­லாத்­தான் பேசிக்­கிட்­டி­ருந்­தாள். அவளை நாங்க வாயா­டின்னு கூட சொல்­லு­வோம். யார் கண்­ணு­பட்­டதோ தெரி­யல. பத்து வய­சில வந்த டைபா­யிடு ஜுரம் அவளை வாய்­பே­சாத படி ஊமை ஆக்கிடுச்சு. மற்­ற­படி அவள் பிற­வி­யிலே ஊமை இல்லை. புரோக்­கர் செய்த தப்­புக்கு நான் மன்­னிப்பு கேட்­டுக்­கி­றேன்.'' மாம­னார் தனது பக்க நியா­யத்தை எடுத்­து­ரைத்­தார்.
   'தனக்கு வாய்­பே­சாத ஊமை மனை­வி­யா­னதை நினைத்து வருந்­தி­னான் ரமேஷ். சரி நடந்­தது நடந்­தாச்சு . முறைப்­படி தாலி­கட்டி மனை­வி­யும் ஆக்­கி­யாச்சு , முத­லி­ர­வும் நடந்­தாச்சி. இனி ஏன்ன செய்­வது? குடும்­பம் நடத்­த­வேண்­டி­ய­து­தான். எல்­லாம் என் தலை­விதி' என்று தன்­னைத்­தானே சமா­தா­னப்­ப­டுத்தி கொண்­டான்.
   ஊமை மனை­வி­யு­டன் அவ­னது வாழ்க்கை தொடர்ந்­தது. மனைவி ஊமை­யாக இருப்­பது ஒரு வகை­யில் அவ­னுக்கு நிம்­ம­தியை கொடுத்­தது. அவன் என்ன கத்­தி­னா­லும் அவள் வாய் திறக்க மாட்­டாள். என்ன திட்­டி­னா­லும் பதில் பேச­மாட்­டாள். கண­வன் – மனைவி சண்­டை­கள் நடக்­காத வீடு­கள் இல்லை. சில வீடு­க­ளில் கண­வ­னின் குர­லை­விட மனை­வி­யின் குரல் ஓங்கி நிற்க்­கும். கண­வன் வாயி­லி­ருந்து மடை திறந்த வெள்­ளம் போல தகாத வார்த்­தை­கள் வரும். அதற்கு ஈடு கொடுக்­கும் வகை­யில் 'நீ நல்­லா­யி­ருப்­பியா..? நீ நாச­மாக போக..!'  போன்ற சாபங்­கள் மனை­வி­யின் வாயி­லி­ருந்து வரும். ஆத்­தி­ரத்­தால் வீட்­டில் பாத்­தி­ரங்­கள் பறக்­கும். விலை­யு­யர்ந்த பொருட்­கள் உடை­யும். வாய் சண்டை முற்றி சில நேரங்­க­ளில் அடி ­த­டி­யில் முடிந்­து­வி­டும். அது சில சம­யங்­க­ளில்
   விவா­க­ரத்து வரை சென்­று­வி­டும். இந்த பிரச்னைகள்  எது­வும்
   ரமே­ஷின் வாழ்­வில் இல்லை. அந்த வகை­யில் அவன் நிம்­ம­தி­யாக
   இருந்­தான்.
   இருந்­தா­லும், மனைவி பேசி பார்க்­க­வேண்­டும் என்ற ஆசை அவ­னுக்கு இருந்­தது. அவளை பேச வைப்­ப­தற்­கான பல முயற்­சி­களை அவன் மேற்­கொண்­டான். பல
   டாக்­டர்­க­ளி­டம் சென்று ஆலோ­சனை கேட்­டான். அலோ­பதி, ஆயுர்­வே­தம், ஹோமி­யோ­பதி, அக்­கு­பஞ்­சர் என்று பல சிகிச்சைகளை செய்து பார்த்­தான். மந்­தி­ர­வா­தி­க­ளி­ட­மும் பணத்தை இழந்­தான். எதி­லும் பயன் இல்லை. எல்லா சிகிச்சைகளும் தோல்வி அடைந்­தன.
   பத்து வரு­டங்­க­ளாக பல்­வேறு முயற்­சி­கள் செய்­தும் மனை­வியை பேச வைக்க முடி­ய­வில்லை என்று வேத­னை­யோடு இருந்­த­போது, அன்­றைய ஓர் ஆங்­கில பத்­தி­ரி­கை­யில் ஒரு செய்­தியை பார்த்­தான். "அமெ­ரிக்­காவை சார்ந்த பிர­பல காது, மூக்கு, தொண்டை மருத்­து­வ ­நி­பு­ணர் தாமஸ் சென்­னை­யில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னைக்கு வரு­கி­றார். பிறவி ஊமையை தவிர மற்­ற­வர்­களை பேச வைக்­கி­றார்'' என்று இருந்தது. இந்த செய்­தியை படித்த ரமேஷ் மகிழ்ச்­சி­யால் துள்ளி குதித்­தான். நம்­மு­டைய மனை­விக்கு விடி­வு­கா­லம் பிறக்க போகி­றது. நாம் நினைத்­தது நடக்க போகி­றது என்று சந்­தோ­ஷ­ம­டைந்­தான். உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு சென்று முன்­ப­திவு செய்­து­கொண்­டான்.
   குறிப்­பிட்ட நாளில் மனை­வி­யை­யும் அழைத்­துக் கொண்டு மருத்­து­வ­ம­னைக்கு சென்­றான். மனை­வியை பரி­சோ­தித்த டாக்­டர் 'பிரச்னை எது­வும் இல்லை. தொண்­ட­டை­யில் ஒரு சிறிய ஆப­ரே­ஷன் செய்­தால் போதும். பேச்சு வந்­து­வி­டும். இரண்டு லட்­சம் ரூபாய் செலவு ஆகும்' என்­றார். இதை கேட்ட ரமே­ஷின் முகம் மலர்ந்­தது. "எவ்­வ­ளவு பணம் செல­வா­னா­லும் பர­வா­யில்லை டாக்­டர். என்­னு­டைய மனை­விக்கு பேச்சு வந்­தால் போதும்'' – என்று மகிழ்ச்சி பொங்க சொன்­னான்.
   மறு­நாளே ஆபரேஷன் வெற்­றி­க­ர­மாக நடந்­தது. "ஒரு மாதத்­திற்கு பிறகு மனைவி கொஞ்­சம் கொஞ்­ச­மாக பேச ஆரம்­பிப்­பாள்'' என்­றார் டாக்­டர். டாக்­டர் சொன்­னது போலவே ஒரு மாதத்­திற்கு பிறகு மனைவி பேச ஆரம்­பித்­தாள். முதன் முத­லில் 'அத்­தான்' என்று தன்னை அழைப்­பாள் என்று ஆசை­யோடு எதிர்­பார்த்­தான். ஆனால் அவள் "அ..ம்..மா'' என்று பேச ஆரம்­பித்­தாள். பிறகு "அ..ப்..பா'' என்று சொன்­னாள். 3–வதாக ரமேஷை பார்த்து "அ..த்..தான்'' என்று அழைத்­தாள். இதைப்­பார்த்த ரமேஷ்
   மகிழ்ச்­சி­யால் துள்ளி குதித்­தான். மனைவி பேசு­வதை பார்த்து பர­வ­ச­ம­டைந்­தான். தனது முயற்சி வெற்றி பெற்­றதை நினைத்து பெரு­மை­ய­டைந்­தான். எல்­லோ­ருக்­கும்
   இனிப்பு வழங்கி மகிழ்வை பகிர்ந்து கொண்­டான்.
   நாட்­கள் செல்ல செல்ல, மனைவி சர­ள­மாக பேச ஆரம்­பித்­தாள். சில நேரங்­க­ளில் அள­வுக்­க­தி­மா­க­வும் பேசி­னாள். இது ரமே­ஷுக்கு வேத­னையை கொடுத்­தது. போக போக ரமேஷை ஏதிர்த்து பேச­வும் துணிந்­தாள். ரமேஷ்  ஒன்று சொல்ல, பதி­லுக்கு அவள் இரண்டு சொல்ல, அத­னால் அவர்­க­ளுக்­குள் அடிக்­கடி சண்­டை­கள் வர­வும் ஆரம்­பித்­தன.
   ஒரு ­நாள் ஒரு நெக்­லஸ் வாங்­கி­ கேட்­டாள் மனைவி.
   ''என்­னி­டம் பணம் இல்­லை­'' என்றான் ரமேஷ்.
   "ஆமா.. உங்­களை கல்­யா­ணம் பண்ணி பத்து வருஷமானது. என்ன சுகத்தை கண்­டேன்? நல்ல நகை­கள் உண்டா? நல்ல புட­வை­கள் உண்டா? பக்­கத்து வீட்டு ரமாவை பாருங்க. மாசத்­துக்கு ஒரு புடவை எடுக்குறா. வரு­ஷத்­துக்கு ஒரு நகை எடுக்குறா. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யானா ஸ்கூட்­ட­ரில் ஸ்டார் ஓட்ட­லுக்கு போயி ஜாலியா டிபன் சாப்­பிட்டு வர்­றாங்க. நீங்க என்ன வாங்கி தந்­தீங்க? வெளி­யில எங்­க­யா­வது கூட்­டிட்டு போனீங்­களா? பத்து வரு­ஷமா ஊமையா இருந்­த­தி­னால எது­வும் கேட்க முடி­யல. இப்ப ஒரு நகை வாங்கி கேட்டா இல்லேன்னு சொல்­றீங்க. சம்­பா­திக்­கிற காசெல்­லாம் என்ன செய்­றீங்க? உங்க குடும்­பத்­துக்கு கொடுக்­கி­றீங்­களா? எல்­லாம் என் தலை­யெ­ழுத்து''.
   மனை­வி­யின் ஆவேச பேச்சை கேட்டு ரமேஷ் அதிர்ச்சி அடைந்­தான். என்ன சொல்­வ­து­ என்று தெரி­யா­மல் சிலை போல நின்று கொண்­டி­ருந்­தான்.
   "என்ன பேசா­மல் நிற்­கி­றீங்க? கேக்குறதுக்கு பதில் சொல்­லுங்க. ஏன் நீங்க இப்ப ஊமை­யா­யிட்­டீங்­களா..?'' கிண்­ட­லாக கேட்­டாள்.
   மனைவி இப்­படி மோச­மாக பேசு­கி­றாளே என்று கவ­லை­ய­டைந்­தான் ரமேஷ். அவள் இப்­படி பேசு­வாள் என்று கொஞ்சம் கூட அவன் எதிர்­பார்க்­க­வில்லை. பத்து வரு­ஷம் பேச­றதை எல்­லாம் பத்து நிமி­ஷத்­தில் பேசி­விட்­டாளே என்று வருந்­தி­னான். ஊமை­யாக இருந்­த­போது எந்த பிரச்னையும் இல்­லா­மல் வீடு நிம்­ம­தி­யாக இருந்­தது. பேச ஆரம்­பித்­த­வு­டன் என்­னு­டைய நிம்­ம­தி­யெல்­லாம் போச்சே. கிளி மாதிரி பேசு­வாள் என்றுதானே நினைத்­தேன். இப்­படி பேய் மாதிரி கத்­து­வாள் என்று கன­வி­லும் நினைக்­க­வில்­லையே. இனிமே போக போக என்­ன­வெல்­லாம் பேச போகி­றாளோ. நினைத்­தால் பய­மாக இருக்­கி­றதே. ஐயோ இனி நான் என்ன செய்­வேன்?' என்று கண்­க­லங்­கி­னான். அவளுடைய பேச்­சுக்கு முடிவு கட்ட நினைத்­தான்.
   "நீ ஊமையா இருந்­தப்போ எந்த பிரச்னையும் இல்­லாம வீடு சந்­தோ­ஷமா இருந்­தது. நீ பேச ஆரம்­பிச்­சவுடனே என் நிம்­ம­தி­யெல்­லாம் போச்சு. கொஞ்­ச­மும் மரி­யாதை இல்­லாம என்னை கேவ­லமா பேசுறே. பணத்தை செலவு பண்ணி உன்னை பேச வச்­சேனே, என்னை சொல்ல­ணும். உன்னை மீண்­டும் பேச முடி­யா­த­படி ஊமை­யாக்கி காட்­டு­கி­றேனா இல்­லை­யான்னு பாரு......'' என்று கோப­மாக பேசி­விட்டு விர்ரென்று வீட்­டை­விட்­டு வெளியே கிளம்­பி­னான்.
   நேராக மருத்­து­வ­ம­னைக்கு சென்­றான். அங்­கி­ருந்த டாக்­டரை பார்த்து "சார்! அந்த அமெ­ரிக்க டாக்­டர் தாமஸ் மீண்­டும் எப்ப வரு­வார் சார்..?'' என்று கேட்­டான்.
   "அடுத்­த­ மா­தம் முதல்­வா­ரத்­தில் வரு­வார். எதுக்கு கேக்குறீங்க?"
   "இல்ல.. என் மனை­வியை மறுபடியும் ஊமை­யாக்­க­னும். அவள் பேசாம இருந்­தப்போ வீட்­டில சண்டை சச்­ச­ரவு எது­வும் இல்­லாம நிம்­ம­தியா இருந்­தது. இப்ப பேச ஆரம்பிச்சவுடனே என் நிம்­ம­தி­யெல்­லாம் போச்சு. என்­னையே
   எதிர்த்து மரி­யாதை இல்­லாம பேசுறா. அத­னால அவளை மறுபடியும்
   ஊமை­யாக்க முடி­யு­மான்னு கேட்கணும்.''
   இதை கேட்டு டாக்­டர் கல­க­ல­வென சிரித்­தார். "இந்தா பாருங்க ரமேஷ். நீங்க நினைக்­கிற மாதிரி உங்க மனை­வியை மீண்­டும் ஊமை­யாக்க முடி­யாது. ஆனா உங்க பிரச்னைக்கு தீர்வு காண ஒரு வழி இருக்கு. அவங்க கத்­தி­னா­லும் அது உங்க காதில விழா­த­படி, உங்க காதை செவி­டாக்­கிட்டா போச்சு. அதுக்கு அமெ­ரிக்க டாக்­டர்­தான் வர­ணும்னு இல்லே. அந்த வேலையை நானே செய்­வேன். என்ன செய்­யட்­டுமா..?''
   இதை கேட்­ட­தும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட்டம் பிடித்­தான்
   ரமேஷ்.
   http://www.dinamalarnellai.com
  • By நவீனன்
   சப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை
   சிறுகதை: மாத்தளை சோமு, ஓவியங்கள்: செந்தில்
    
   இருள் கலைந்து வெளிச்சம் வருவதைச் சொல்வதைப்போல் வெளியே சேவல் தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவும் சத்தம், குடிசையில் படுத்துக்கிடந்த நாதனுக்குக் கேட்டது. ஒரு விநாடி, அந்தச் சேவலை தன் மனக்கண்ணால் மீட்டுப்பார்த்தான்.

   வவுனியாவில் இருக்கும் மணியம், குஞ்சாகக் கொடுத்த சேவல். இன்று அது வளர்ந்து ஒரு குட்டி மயிலைப்போல் இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மனைவி கௌரியைக் கேட்டபோது, ``ஆமிக்காரன் போட்ட குண்டுகளால கோழி, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் செத்திட்டுது. மனுஷரே சிதறிப்போறப்ப பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? எத்தனை கோழிகள் இருந்த வீடு... இப்ப வெளியில வாங்கவேண்டி வந்திட்டுது’’  என்றாள்.

   அதைக் கேட்ட நாதன், `இவள் என்ன சொல்லவருகிறாள்?’ என்பதுபோல் அவளைப் பார்த்தான். அப்போது கௌரி சொன்னாள், ``உது மணியத்தார் குடுத்த சேவல்தானே! இனி `மணியத்தார் சேவல்’ எண்டு சொல்வோம்.’’

   அன்றிலிருந்து அந்தச் சேவல் `மணியத்தார் சேவல்’ ஆனது.

   முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்கு முன்னர், கோழிப்பண்ணைபோல் நாற்பதுக்குமேல் சேவல்களும் கோழிகளும் வீட்டைச் சுற்றி நின்றன. ஒரு நாளைக்கு இருபது முட்டைகளாவது கிடைக்கும். அவற்றை வாங்கிச் செல்ல பலரும் வருவார்கள். அந்தக் கோழிகளோடு ஆடுகள் நான்கும், மாடுகள் நான்கும் குடும்பத்தைச் சுற்றி சுகம் தந்தன. ஆனால் இன்றோ, ஆடு மாடுகளைத் தேடவேண்டியிருக்கிறது. நடந்த யுத்தம், மண்ணைப் புரட்டிப் போட்டதோடு மனிதர்களைச் சிதைத்து, கால்நடைகளையும் அழித்துவிட்டது.

   ஊருக்குள் ராணுவம் வருகிறது என்று முள்ளியவளை அம்மனுக்கு நேர்த்திவைத்த ஆட்டை இழுத்துக்கொண்டு பங்கருக்குள் போனபோது, அது பங்கரை விட்டுத் தாவி வெளியே ஓடியது. அதற்கு மனிதனின் யுத்தவெறி தெரியுமா என்ன? மறுநாள் பார்த்தபோது ஷெல் அடித்ததில் ஆடு சிதறிக்கிடந்தது.

   யுத்தம் முடிந்து முகாமில் அகதியாய்ச் சிறைப்பட்டுக்கிடந்து, பல மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி ஊருக்கு வந்தபோது, அவன் வீடு இருந்த இடமே நாதனுக்குத் தெரியவில்லை. மாவு ஆட்டும் உரலை வைத்துத்தான் இடத்தைக் கண்டுபிடித்து, சிதறிக் கிடந்ததை அள்ளி எடுத்து, அந்த இடத்தில் ஒரு மண்குடிசை போட்டு வாழ்க்கையைத் தொடங்கினான்.

   அப்போது மண்ணில் யுத்தம் இல்லாதுபோனாலும், அன்றாடம் வாழ்வதற்கே யுத்தம் செய்யவேண்டியிருந்தது. விட்ட மண்ணைக் கொத்தி விவசாயம் செய்ய அவனிடம் எதுவுமே இல்லை. தினமும் கூலி வேலைக்குப் போனான். அந்த வேலைக்குச் சம்பளமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் கிடைத்தன. எப்போதாவதுதான் காசு கிடைத்தது.

   பக்கத்தில் கால்களை நீட்டிப் படுத்திருந்த மகனைப் பார்த்தான் நாதன். இடுப்போடு ஒட்டிய கால்சட்டை. மேலே சட்டை இல்லை. அழுக்கான கால்கள். அது அவன் குற்றமல்ல. வெறுங்கால்களோடுதான் போகிறான்.  தரை அழுக்குப் படாமல் என்ன செய்யும்? சப்பாத்து (ஷூ ) வேண்டுமென்று கேட்கிறான். வாங்கிக் கொடுக்கப் பணம் வேண்டுமே!

   மகனுக்குப் பக்கத்தில் மனைவி... வற்றிப்போன உடல். திருமணத்தின்போது `கொழு கொழு’வென இருந்தாள். முள்ளியவளையில் பிறந்தவள். பத்து வரை படித்தவள். வயலிலே கால் பதித்து வாழ்ந்தவள். பிறப்பிலே மாநிறமானபோதும், சூரிய வெளிச்சம் அவளின் நிறத்தில் கறுப்பைக் கலந்தது. ஆனால், அதிலும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவளை `மனைவி’யாக்கினான் நாதன். இருபது பேரோடு வீட்டிலேயே திருமணம். மணவறை இல்லை, ஐயர் இல்லை, விருந்தினர் இல்லை. அப்போது அங்கு யுத்தம் நடக்கவில்லையென்றாலும், `யுத்த வளையத்துக்குள் எப்போது யுத்தம் வருமோ!’ என்ற எச்சரிக்கையோடு வாழ்ந்த காலம்.

   கௌரி மனைவியாக வீட்டுக்கு வந்த பத்தாவது நாள், `கோழி வளர்க்க வேண்டும்’ என்றாள். அவளுக்காக சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்குப் போய் நாட்டுக்கோழிகளை வாங்கி வந்தான். அவற்றைத் தன் `பிள்ளை’களைப்போல் வளர்த்தாள். அவை வளர்ந்ததும் தினமும் முட்டைகள் விழுந்து காசு வரத்தொடங்கியது. அப்போதுதான் அவளது கோழி வளர்ப்பு ரகசியத்தைப் புரிந்துகொண்டான் நாதன்.

   கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதும் வாழ்க்கை ஆட்டம்காணத் தொடங்கியது. அவள் இல்லையென்றால் அவன் உயிரோடு இருப்பானா தெரியாது. ராணுவத்தின் கைக்குக் கிளிநொச்சி போனதும், `வவுனியாவுக்கு வா’ என்று அவளின் அண்ணன் கூப்பிட்டதை நிராகரித்துவிட்டு இங்கேயே இருந்தாள். துன்பங்களே சுமையாக மிஞ்சியிருக்கும் இந்த நேரத்தில்கூட மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள். அதற்காகத்தான் மறுபடியும் கோழி வளர்க்கத் தொடங்கினாள்.

   ஒருநாள் குடிசையைத் தேடி இரண்டு பேர் சைக்கிளில் வந்தார்கள். கௌரி, யாரோ எவரோ என பயத்தில் நின்றாள். நாதனுக்கும் அதே பயம்தான். யுத்தம் நின்றுபோனாலும் யார், யாரோ அங்கு வருகிறார்கள். ராணுவத்தினரும் சாதாரண உடையில் வந்து போவதாகச் சொல்கிறார்கள். இவர்கள் யாரோ?

   நாதன் ``நீங்கள்..?’’ என்று மெதுவாகக் கேட்டான்.

   வந்தவர்களில் ஒருவர் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், ``நாங்கள் முள்ளியவளை ஸ்கூலிலிருந்து வருகிறோம். உங்களுக்குப் படிக்கிற வயசில் ஒரு பிள்ளை நிக்கிறதாக் கேள்விப்பட்டோம்.”

   உள்ளே இருந்த கௌரி, வெளியே வந்தாள். அவளின் பின்னே மகன் நின்றான்.

   அவர்களைப் பார்த்து கௌரி பேசினாள், ``உங்க ஒரு மகன் நிற்கிறான். வயசு பத்து இருக்கும். பிறந்த குறிப்பு எங்கயெண்டு தெரியல. அவன் படிக்க வேணும். அவன எப்புடிப் பள்ளிக்கூடம் அனுப்புறது எண்டு யோசிச்சனான். அம்மனே உங்கள அனுப்பிப்போட்டுது.”

   ``பள்ளிக்கூடம் திறந்து ஆறு மாசமாச்சு. பிள்ளைய ஏன் படிக்க அனுப்பல்ல?”

   ``அய்யா...” என்று நாதன் இழுத்தான். அதற்குள் கௌரி உள்ளத்தில் இருந்ததைக் கொட்டினாள். ``ஒழுங்கான உடுப்பில்ல. புத்தகம் வாங்கக் காசில்ல. எப்புடிப் படிக்க வருவான் அய்யா? யுத்தத்தால எங்கட உசிர் மட்டும்தான் இப்ப மிச்சமா இருக்கு.”

   ``யுத்தக் கதைய எத்தன நாளைக்குச் சொல்லிக்கொண்டு இருப்பது? யுத்தம் முடிஞ்சி பல வருஷமாச்சு. சரி, இனியாவது பிள்ளையப் படிக்கவையுங்கோ. புத்தகம் தரலாம். இப்போதைக்கு இருக்கிற உடுப்போட அனுப்புங்கோ. பேந்து (பிறகு) உடுப்புத் தரலாம். சரி, மகன்ர பேர் என்ன?” வந்தவர்களில் ஒருவர், பெயரை எழுதத் தயாரானார்.

   ``மகன்ர பெயர் சத்தியன்.”

   ``தகப்பன் பெயர்?”

   ``நாதன்.”

   பெயரை எழுதியவர், ``இன்டைக்கி வெள்ளிக்கிழமை. வர்ற திங்கள் மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புங்கோ. பள்ளிக்கூடம் எங்கயெண்டு தெரியும்தானே! பழைய இடம் இல்லை. தற்காலிகமாக சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கு.”

   நாதன் தலை அசைத்தான். கௌரி வெகுநாள்களுக்குப் பிறகு புன்னகைத்தாள். நாதனின் நெஞ்சுக்குள்ளோ எண்ண அலைகள். மகன் எப்போதும் கோழிகளோடேயே இருக்கிறானே! அதிலும் மணியத்தார் சேவல் என்றால் அவனுக்கு உயிர். படுக்கையை விட்டு எழுந்ததுமே அந்தச் சேவலைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவானே! அதற்கு அவன் வைத்த பெயர் `மயில் சேவல்.’ அவன் எப்பம் அந்தச் சேவலை விட்டுப் போவான்? ஆனால், அதைப் பற்றி மனைவியிடம் எதுவும் கேட்காமல், ``இன்னும் ரெண்டு நாள் இருக்கு. உடுத்தியிருக்கிற கால்சட்டையைத் துவைத்துப்போட வேண்டுமே!” என்று கேட்டான்.

   ``அதைப் பத்தி நீங்கள் யோசிக்க வேண்டாம். முதலில் டவுனுக்குப் போயிட்டு வாங்கோ. பழைய துணிகள் விக்கிறாங்களாம். முப்பது கோழிகள் இருக்கு. நூறு ரூபா காசும் இருக்கு. சத்தியனையும் கூட்டிக்கொண்டு போங்கோ” என்றாள் கௌரி.

   நாதனுக்கு ஆச்சர்யம், `காசு கேட்டால் இல்லை என்பாள். எப்படி நூறு ரூபா வைத்திருக்கிறாள்! எல்லாம் கோழி முட்டைகள் விற்ற காசாக இருக்கும்.’

   டவுனுக்கு மகனோடு போன நாதன், மகனுக்கு இரண்டு செட் கால்சட்டை, ஷேர்ட்டோடு திரும்பினான். கௌரி அந்த உடுப்புகளை மகனுக்குப் போட்டுப் பார்த்தாள். அளவு எடுத்துத் தைத்ததுபோல் இருந்தது.

   அவள் முகத்தில் வெளிச்சம். ``சொல்லிவைச்சுத் தைச்சதுபோல இருக்கே! என்ன விலை?”

   ``ரெண்டு செட்டும் எம்பது ரூபா. விடுதியில் விற்றார்கள். காசு விடுதிக்காம். உடுப்பு வெளிநாட்டிலிருந்து வந்ததாம்” என்ற நாதன், கையில் இருந்த மீதிப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, ``குளத்து மீனும் வாங்கியிருக்கிறேன்” என்றான்.

   குளத்து மீன்கறி என்றால் அவனுக்குப் பிடிக்கும். அவளுக்கும் பிடிக்கும். திருமணமான புதிதில் குளத்து மீன்களைக் கொடுத்துவிட்டு ``உம்மட பக்குவத்தில் கறி வையுமேன். குளத்து மீன்கறி எண்டால் எனக்குப் போதும்” என்றான்.

   அவன் கொடுத்த குளத்து மீன்களைப் பார்த்தாள். அப்போது அவன் சொன்னான், ``குளத்து மீன் சின்னது எண்டு பார்க்கிறீரோ? உமக்கு ஒரு விடுகதை சொல்லட்டோ! குளத்து மீன் சிறுத்ததேன்?” என்றவன், அதற்கு அடுத்த வார்த்தையை அவளின் காதில் சொல்லிவிட்டு, ``பெருத்ததேன்?” என்று சொல்லிவிட்டு அவளின் மார்பைப் பார்த்தான் கௌரி அவன் பார்வையால் உணர்த்தியதை உணர்ந்து வெட்கத்தில் தலை குனிந்தாள். அவளிடமிருந்து விடுகதைக்குப் பதில் வராது என்பதை அறிந்த நாதன், ``மீனை அடிக்கடி பிடிக்கிறதால அது பெருக்காது. சின்னதாகவே இருக்கும். மற்றதை அடிக்கடி பிடிக்கிறதால பெருசாகும். இதுதான் பதில்” என்றான். கௌரி முகம் சிவந்து மறுபடியும் வெட்கப்பட்டாள்.

   திங்கட்கிழமை மகனை இருவரும் அழைத்துச் சென்றார்கள். சத்தியனுக்கு, பள்ளிக்கூடம் போக விருப்பமில்லை. அம்மாவுக்கு பயந்துதான் போனான். போவதற்கு முன் மணியத்தார் சேவலைப் பிடித்துக் கொஞ்சி, அதன் சொண்டில் முத்தம் கொடுத்துவிட்டுப் போனான்.

   சத்தியனுக்கு, பள்ளிக்கூடம் புது உலகமாய் இருந்தது. வீட்டில் ஐந்து நிமிடத்துக்குமேல் ஓர் இடத்தில் இருக்க மாட்டான். ஆனால், பள்ளிக்கூடத்தில் ஒரே இடத்தில் இருப்பது என்னவோபோலிருந்தது. அவனைப் போன்று 20 பிள்ளைகள் அந்த வகுப்பில் இருந்தார்கள். கீழே மணல் தரையில் உட்கார்ந்தே படித்தான்.

   தொடக்கத்தில் பள்ளிப்பாடம் கசந்தது அவனுக்கு. ஆனால், அம்மாவுக்கு பயந்தும், தன் வயதுடையவர்கள் அங்கு வருவதால் அவர்களைப் பார்க்கவும் பேசவும் மட்டுமே போனான். அப்படிப் போனபோது, அவனுக்கு நண்பனானான் சந்திரன். அவன் சத்தியனைப் ``படி’’ எனத் தூண்டினான்.

   ஒருநாள் சந்திரன் ``எங்கட சித்தப்பா அடுத்த கெழம சிட்னியிலிருந்து உங்க வரப்போறார். அவர் நல்லா படிச்சதால உந்த ஊரவிட்டுப் போயிட்டார்” என்று சொன்னபோது, அவன் முகத்தில் மகிழ்ச்சி குடியேறியதைக் கண்டான் சத்தியன்.

   “உம்மட சித்தப்பா உமக்கு ஷேர்ட், கால்சட்டை, சொக்லெட் எல்லாம் கொண்டுவருவார்.”

   ``நான் ஒண்டும் கேட்கவில்லை. ஆனால், அப்பாவிடம் என்ர வயசை, உயரத்தைக் கேட்டவராம் சித்தப்பா! அது சரி, உமக்குச் சித்தப்பா, பெரியப்பா இல்லியோ?”

   ``சித்தப்பா மட்டும்தான். அவரும் இயக்கத்தில சேர்ந்து யுத்தத்தில செத்திட்டார்” என்றான் சத்தியன்.

   பத்து நாள்களுக்குப் பிறகு சந்திரன் புதுச்சட்டை, புதுக் கால்சட்டையோடு பள்ளிக்கூடம் வந்தான். சத்தியன், அவனைத் தலையிலிருந்து கால் வரை பார்த்தான். காலில் புத்தம் புதிய ஷூ. அதற்குள் சாக்ஸ்.
   ``உந்த சப்பாத்து என்ன விலை?”

   சந்திரன் சிரித்துவிட்டுச் சொன்னான்.. ``உது சித்தப்பா சிட்னியிலிருந்து வாங்கி வந்தது.”

   சத்தியன், அழுக்கடைந்த தன் கால்களைப் பார்த்தான்.

   அப்போது சந்திரன் ஆவலோடு, ``ஒரு விஷயம் சொல்லட்டோ... எங்கட சித்தப்பா கொழும்பில இருந்து 200 சோடி சப்பாத்துக் கொண்டுவந்து ஸ்கூல் பிரின்சிபாலிடம் உங்க படிக்கிற பிள்ளைகளுக்குக் குடுக்கச் சொல்லியிருக்கார். நேத்து சப்பாத்துக் குடுத்தாங்களே... உனக்குக் குடுக்கலியோ? ஒப்பிசில போய்க் கேளும்” என்றான்.

   பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போவதற்கு முன்னர் பிரின்சிபால் அறைக்குப் போனான். அவனைக் கண்டதும் பிரின்சிபால் ``என்ன?” என்றார்.

   சத்தியன் ``சேர்...” என்று இழுத்தான். அவரைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டது அவனுக்கு.

   ``என்ன வேணும் சொல்லும்” என்றார்.

   சத்தியன் மெல்லிய குரலில் ``எனக்கும் சப்பாத்து வேணும் சேர்” என்றான்.
   ``சப்பாத்தோ... உமக்கு அப்பா இருக்கிறாரோ?”

   ``ஓம் சேர்..”

   ``அப்படியெண்டால் உமக்குச் சப்பாத்து இல்லை. அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருத்தர் இல்லையெண்டால்தான் சப்பாத்துத் தரலாம். நீர் உம்மட அப்பாட்டச் சொல்லி வாங்கும்.”

   பிரின்சிபாலின் பதிலைக் கேட்ட சத்தியன், கவலையோடு வீட்டுக்குப் போனான். வீட்டுக்குள் போனதுமே கையில் இருந்த புத்தகங்களைத் `தொப்’பெனப் போட்டுவிட்டு, தரையில் சுருண்டு அழுதான். அதைக் கண்ட கௌரி, என்னவோ... ஏதோவெனப் பதறிப்போய் அவனருகே உட்கார்ந்து அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு, ``என்ன நடந்தது குஞ்சு?” என்றாள் கவலையோடு.

   சத்தியன் அழுகையை நிறுத்திவிட்டு, ``எனக்கு அம்மா, அப்பா இருக்காங்கள் எண்டு சப்பாத்துத் தர மாட்டேன் எண்டு சொல்றாங்கள். யாராவது ஒருத்தர் இல்லையெண்டால்தான் தருவாங்களாம். எனக்கு சப்பாத்து வேண்டும். என்ர காலப் பார் அம்மா” என்றான்.

   அவளுக்குக் கோபம் வந்தது. ``இது என்ன நியாயம்? அம்மா, அப்பா இருந்தால் உங்க காசு புரளுதோ? யாரோ குடுத்தாலும் உவன்கள் ஒரு நியாயம் கதைக்கிறாங்கள். சரி, நீ அழாதே... மணியத்தார் சேவலை வித்து, சப்பாத்து வாங்கித்தாரன் குஞ்சு!”

   அவளின் பதிலைக் கேட்ட சத்தியன் சடாரென எழுந்து உட்கார்ந்து, ``மணியத்தார் சேவல்ல கை வைக்கக் கூடாது. அத வித்து சப்பாத்து வாங்க வேணாம்” என்றான்.

   சத்தியனுக்கு `எப்படியாவது சப்பாத்து வாங்க வேண்டும்’ என்று நினைத்த நாதனால், படுக்கையிலிருந்து எழும்ப முடியவில்லை. வாயெல்லாம் கசந்தது. கால்கள் வலுவிழந்ததுபோல் இருந்தன. கண்கள் சிவந்திருந்தன. ``கௌரி... இங்க வாருமென், என்னைக் கொஞ்சம் தொட்டுப்பாரும்.”

   கௌரி, கணவனின் தேகத்தைத் தொட்டுப்பார்த்தாள். நெருப்பாய்க் கொதித்தது.

   ``உந்தக் காச்சலோட எங்கயும் போக வேண்டாம். கொத்தமல்லி அவிச்சி குடிக்கத் தாரன். பேந்து (பிறகு) கடைக்குப் போய் பெனடோல் வாங்கிக்கொண்டு வாரன்” என்ற கௌரி, கொத்தமல்லியை வறுத்துக் கஷாயம் வைக்கத் தொடங்கினாள்.

   மூன்று நாள்களாகியும் நாதனின் காய்ச்சல் குறையவில்லை. அவன் உடல் நலிந்துபோனது. அக்கம்பக்கத்தவர்கள் உதவியோடு நாதனை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்கள். கிளிநொச்சியில் இரண்டு நாள்கள் வைத்திருந்தும் காய்ச்சல் குறையாததால், ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸில் வவுனியா பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஏழு நாள்கள் இருந்து உயிரை விட்டான் நாதன். அவன் செத்த பிறகுதான் ``அந்த நெருப்புக் காய்ச்சல் உயிரை வாங்கிவிட்டது’’ என்றார்கள்.

   அப்பா செத்த பிறகு சத்தியன் பள்ளிக்கூடம் போகவேயில்லை. கௌரியும் அவனைப் `போ’ எனச் சொல்லவில்லை. கணவனின் சாவு, தலையில் இடி விழுந்ததைப்போல் ஆகியது. இனி யாருக்காக வாழ்வது என நினைக்கிறபோது, சத்தியனின் நினைவுவரும். சத்தியன் இல்லையென்றால், அவள் தற்கொலை செய்திருப்பாள். சத்தியன், அம்மாவின் பக்கத்திலேயே இருந்தான்.

   நாள்கள் ஓட ஓட, சோகத்திலிருந்து கௌரி விடுபடத் தொடங்கினாள். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து சந்திரன் வந்திருந்தான். அவன் செத்த வீட்டுக்கும் வந்திருந்தான். அவனோடு ஸ்கூல் மாஸ்டரும் வந்தார்.

   ``நடந்ததையே நினைச்சுக்கொண்டிருந்தால் மகன்ர எதிர்காலம் என்ன ஆகும்? படிக்கிற வயசு. அவனை ஸ்கூலுக்கு அனுப்புங்கோ. நான் உங்கட குடும்பத்துக்கு வெளிநாட்டு உதவி எடுத்துத் தரப் பார்க்கிறேன்” என்றார் மாஸ்டர். அவரிடம் `சப்பாத்தே எனக்குத் தரவில்லையே!’ என்று கேட்க நினைத்தான் சத்தியன். ஆனால், கேட்கவில்லை.

   சில நாள்களான பிறகு சத்தியன் பள்ளிக்கூடம் போனான். இடைவேளையில் பிரின்சிபால் இருக்கும் அறைக்குப் போனான். அங்கு அடுக்கி வைத்திருந்த சப்பாத்துப் பெட்டிகளைப் பார்த்தான். அப்போது ``உமக்கு என்ன வேணும்?” என்ற குரல் கேட்க, நிமிர்ந்தான் சத்தியன். அவர்தான் `அம்மாவோ, அப்பாவோ உயிரோடு இருந்தால் சப்பாத்து இல்லை’ என்று சொன்னவர்.

   ``எனக்கு இப்ப அப்பா இல்லை. அவர் காய்ச்சலில் செத்துப்போனார். இப்ப எனக்கு சப்பாத்துத் தருவியளோ? முந்தி கேட்டனான். அம்மா, அப்பா இருந்தால் இல்லையென்று சொன்னனீங்கள், இப்ப சப்பாத்து” என்றான் சத்தியன்.

   அவனுடைய வார்த்தைகள், புதுச் சப்பாத்தால் தன்னை அடிப்பதுபோல் உணர்ந்தார் பிரின்சிபால். பதில் வராமல் அவர் வாயிதழ்கள் மூடிக்கொண்டன.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   சங்கு மீன்
    
    
   'கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. தன் கணவன் சண்முகத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டாள். கடிதத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தார் சண்முகம். அவரது தங்கை கோமதியின் கையெழுத்துதான். அவளின் கையெழுத்து அவருக்கு நன்றாகவே தெரியும்.
   கோமதி, 10 வருடங்களுக்கு முன்னர், தேர்த் திருவிழாவின்போது சரஸ்வதியிடம் இருந்து தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனாள். மீனாட்சி திருக்கல்யாணம் அன்றுதான், அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அன்று மாலை அவள் வத்தலகுண்டுக்குப் புறப்பட்டுப்போகும்போது இரவலாக வாங்கிக்கொடுத்து அனுப்பியது சொர்ணத்தம்மாதான். அவள் தன் மருமகள் சரஸ்வதியிடம், 'கழுத்து நிறைய என் மகளுக்கு நகைகள் தெரியட்டும். உன்னோட சங்கிலி கொடுத்து அனுப்பு. மறுவீட்டுக்கு வரும்போது வாங்கிக் குடுத்துர்றேன்’ என, வாங்கிப் போட்டு அனுப்பினாள். கோமதியை அதற்குப் பிறகு சரஸ்வதி பார்க்கவில்லை.
   சண்முகத்துக்கு மூன்று தங்கைகள். மூவரில் கோமதிக்கு மட்டும் படிப்பு வரவில்லை. ஆறாம் வகுப்புக்கு மேல், அவள் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்துகொண்டாள். படிப்பும் வராமல் வீட்டில் இருந்தவளுக்கு, திருமணம் தாமதமாகத்தான் நடந்தது. தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனவள், குடும்பத்துடன் காணாமல்போய்
   10 வருடங்கள் ஆகிவிட்டன. இவ்வளவு காலத்தில் அவளிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவளைத் தேடி, சண்முகமும் சரஸ்வதியின் அப்பா பொன்னம்பலமும் மாதக்கணக்கில் அலைந்து ஓய்ந்திருந்தார்கள்.
   கோமதி காணாமல்போன இந்த 10 வருடங்களில், சரஸ்வதி வெற்றிலையில் மை தடவிப் பார்க்கும் காரியத்தில் தொடங்கி, காணாமல்போன பொருட்கள் கிடைக்கச்செய்யும் கிரகத்துக்கும் தேவதைகளுக்கும் கடவுளுக்கும் பேய்- பிசாசுகளுக்கும் சாமியார்களுக்கும் பரிகாரம் செய்ததோடு, அந்தக் காரியங்களில் தேர்ச்சியும் அடைந்திருந்தாள்.
   ஊரில் இருக்கும் உறவினர்கள் ஏதாவது தொலைந்துவிட்டது என்றால், சரஸ்வதியிடம் வந்து யோசனை கேட்கும் அளவுக்கு, இந்த விஷயத்தில் அவளுக்கு ஞானம் வாய்த்திருந்தது. இதையெல்லாம்விட, ஊருக்கு வரும் புதிய ஜோசியர்களும் சாமியார்களும் சரஸ்வதி பெயரைச் சொல்லி வீட்டுக்கு வருவதும், காணாமல்போன பொருள் கிடைக்க மந்திரித்து தாயத்து தருகிறோம் என, பணத்தை வாங்கிக்கொண்டு செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

   'சரஸ்வதியின் கண்ணீருக்காக இல்லையென்றாலும் சண்முகத்தின் தியாகத்துக்
   காகவாவது கோமதி திரும்ப வரவேண்டும்’ என அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் பேசிக்கொள்வார்கள். சண்முகத்தின் துயரத்தைக் கேட்பவர்கள் கண்ணீர்விடுவார்கள்.
   சண்முகம், வேலைக்குச் சேரும்போது அவருடைய சம்பளம் 218 ரூபாய். இந்தச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்த சண்முகத்தை, அவரது அம்மா திட்டாத நாள் இல்லை. இந்தச் சம்பளத்தில்தான் அவருடைய மூன்று தங்கைகள், ஒரு தம்பி, அவரது அம்மா என ஆறு நபர்கள் உணவருந்தி, வீட்டுக்கு வாடகை கொடுத்து, மின்சாரம் - தண்ணீர் கட்டணங்கள் செலுத்தி, இந்தத் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள்.
   சண்முகம், தன் தம்பிக்கு வேலை கிடைத்ததும் குடும்பத்தின் சிரமங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என நம்பினார். வேலை கிடைத்ததும் பெட்டிப் படுக்கையைத் தூக்கிக்கொண்டு பெங்களூர் சென்று குடியேறிய தன் தம்பியின் மீது, சண்முகம் இப்போதும் கோபமாகத்தான் இருக்கிறார். அந்தக் கோபத்தை எல்லாம் வீட்டில் இருக்கும் கோமதியிடம்தான் அவர் காட்டுவார்.
   'தெண்டச்சோறு... வட்டி வட்டியா திங்கத் தெரியுது. ஒழுங்கா சமைக்கத் தெரியுதா?’ என, தினமும் திட்டுவார். இத்தனைக்கும் சண்முகத்தின் அம்மாதான் சமையல் செய்வாள். கோமதி, ஒத்தாசையாக வெங்காயம் நறுக்கித் தருவாள்.
   சண்முகம் தன் மூன்று தங்கைகளின் திருமணம் முடிகிற வரையில், தான் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தார். அவரது அம்மாவின் தீர்மானமும் அதுவாகத்தான் இருந்தது.
   'உனக்குக் கல்யாணம் நடக்கணும்னா, முதலில் நீ உன் தங்கைகளுக்குக் கல்யாணத்தை முடிச்சு வை’ என அவள் தினந்தோறும் சண்முகத்தைத் திட்டிக்கொண்டிருப்பாள். தங்கைகளுக்கு மாப்பிள்ளை பார்க்க, வாரந்தோறும் தரகருடன் அலைந்தார் சண்முகம்.
   சொர்ணத்தம்மாவின் குணம் அறிந்த பலரும், சண்முகத்துக்கும் பெங்களூரில் வேலை பார்க்கும் சுந்தரத்துக்கும் பெண் தர முன்வரவில்லை. பொன்னம்பலம் தைரியமாக முன்வந்து சண்முகத்துக்கு, தன் மகள் சரஸ்வதியைக் கல்யாணம் செய்துதந்ததோடு, சண்முகத்தின் மூன்று சகோதரிகளின் திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார். மூன்று பெண்களும் ஒவ்வொருவராகத் திருமணம் முடிந்து, கணவன் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை சரஸ்வதிக்கும் சொர்ணத்தம்மாவுக்கும் தினமும் சண்டை சச்சரவு வரும். மாமியாரும் மருமகளும் ராகு-கேது போல எதிரெதிர் நின்றார்கள். மூன்று குமரிப்பெண்கள் வீட்டில் இருந்தபோது, 'நான் ஒருநாள் ஒருபொழுது நிம்மதியாக உணவு உண்டு, கணவனுடன் உறங்கியது இல்லை’ என, தன் அம்மாவிடம் புலம்புவாள் சரஸ்வதி.
   கடைசியாக கோமதியின் திருமணம் முடிந்து மணமக்கள் ஊருக்குப் புறப்பட்டுப் போனதும், திருமண மண்டபத்தில் இருந்து நேராக வீட்டுக்கு வந்தாள் சரஸ்வதி. மூன்று டம்ளர் பொன்னி அரிசியும் நான்கு டம்ளர் தண்ணீரும் குக்கரில் வைத்துவிட்டு, (அப்போதுதான் குக்கர் வந்த புதிது. தெருவில் அவர்களது வீட்டில்தான் குக்கர் இருந்தது. சரஸ்வதி, தன் மாமியாருக்குத் தெரியாமல் பரண் மேல் ஒளித்து வைத்திருந்ததை எடுத்து, சமையல் செய்யத் தொடங்கினாள்.) கதவைப் பூட்டிவிட்டு கட்டில் மேல் படுத்து உறங்கினாள். தன் தங்கச்சங்கிலியை இரவலாகக் கொடுத்திருக்கிறோமே, தன் மாமியாக்காரி திருப்பிக்கொடுப்பாளா... மாட்டாளா என்ற சிந்தனைகூட அவளிடம் இல்லை.
   அன்றுதான் முதன்முதலாக தன் அப்பா வாங்கிக்கொடுத்த கட்டிலின் மேல் படுத்தாள். மூன்று நான்கு தடவை புரண்டு புரண்டு படுத்துக்கொண்டாள். குக்கரில் இருந்து விசில் சத்தம் வந்ததும், எழுந்து தலை வழியாக நீரை ஊற்றிக்கொண்டு, தலையைத் துவட்டிவிட்டு, பழைய குழம்பை சுடுசோற்றில் ஊற்றி மனதாரச் சாப்பிட்டாள். பிறகு வாசற்படியில் உட்கார்ந்து, தெருவை வேடிக்கை பார்த்தாள்.
   வீட்டுக்கு வந்த கணவனிடம், 'ராத்திரிக்கு சூடா தோசையும் கெட்டிச் சட்டினியும் உமையாள் விலாஸில் வாங்கிட்டு வாங்க’ எனச் சொன்னாள். சண்முகமும் அன்றில் இருந்து ராத்திரியானதும் உமையாள் விலாஸில் முறுகலான ஸ்பெஷல் தோசை பார்சல் வாங்கிவரத் தொடங்கினார்.
   தினமும் சண்முகம் ஸ்பெஷல் தோசை வாங்கி வருவதைப் பார்த்து 'ஸ்பெஷல் தோசை சண்முகம்’ எனத் தெருக்காரர்கள் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகுதான் சரவணனும் ராஜியும் பிறந்தார்கள். ராஜி பிறந்ததும் சரஸ்வதி என்ன நினைத்தாளோ தெரியவில்லை... 'உமையாள் விலாஸ் ஸ்பெஷல் தோசை வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாள். அப்புறம் சண்முகம் பார்சல் எதுவும் வாங்கி வருவது இல்லை.
   கல்யாணம் முடிந்து மூன்று-நான்கு நாட்களுக்குப் பிறகும், கோமதி தனது சங்கிலியைத் தராதது சரஸ்வதிக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. தன் மாமியார்தான் தனக்கு ஏதோ கெடுதல் செய்கிறாள் என நினைத்தாள். அதன் பிறகு அவள் மை ஜோசியம் பார்ப்பது என முடிவுசெய்தாள். பொன்னம்பலத்தின் உதவியுடன் ஊருக்குப் புறப்பட்டாள். மை ஜோசியத்துக்குக் காணிக்கை வெறும் 1 ரூபாய் 25 பைசாதான். ஆனால், மை ஜோசியருக்கு சுருட்டு ஒரு பாக்கெட்டும், பிராந்தி பாட்டில் ஒன்றும், பார்சல் பிரியாணிப் பொட்டலம் என, ஒரு மஞ்சள் பை நிறைய சாமான்களை வாங்கிப் போக வேண்டும்.
   'தங்கச் சங்கிலி தெரிந்ததா... தங்கச் சங்கிலி தெரிந்ததா?’ என சரஸ்வதியிடம் அவளது அம்மாவும் அப்பாவும் கேட்டதற்கு அவள், 'பெரிய தேர் ஒன்று நகர்ந்து வருவதுபோலவும் அந்தத் தேரில் இருந்து மாலைகளை யாரோ உருவி உருவிப் போட்டார்கள் என்றும், ஒரு மாலை தன் கழுத்தில் விழுந்தது’ என்றும் சொன்னாள்.
   'பொன்னம்பலம் உழைத்துச் சம்பாதித்த பணம் உண்மையாக இருந்தால், தனக்குச் செய்துபோட்ட சங்கிலியில் அப்பாவின் உண்மையான அன்பு இருந்தால், திரும்பி வரட்டும். இல்லைன்னா தொலைஞ்சு அதோடு போகட்டும்... பீடை’ என கோமதியைத் திட்டினாள். அதற்குப் பிறகு கொஞ்சம் நாட்கள் கோமதியைப் பற்றி, யாரும் எதுவும் பேசிக்கொள்வது இல்லை. எல்லோருக்குமா கோமதி இருக்கும் இடம் தெரியாமல்போகும்? நிச்சயமாக யாருக்காவது தெரிந்திருக்கும். தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள் என சரஸ்வதி நினைத்தாள்.
   பங்குனி உத்திரம் முடிந்த நேரத்தில், கோமதியை திருப்பரங்குன்றத்தில் பார்த்ததாக உறவுக்காரர்கள் சொன்னார்கள். சண்முகமும் சரஸ்வதியும் பஸ் ஏறிக் கிளம்பினார்கள். மதுரையில் ஒரு சத்திரத்தில் தங்கி, தினமும் தெருத்தெருவாக அலைந்தார்கள். திருவிழாவில் கோமதியைத் தேடினார்கள். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் போய், ஒவ்வொரு சிலையாகப் பார்த்து, 'கோமதி ஒளிந்திருக்கிறாளா?’ என சரஸ்வதி கவலையோடு தேடினாள்.
   கோயிலில் பொற்றாமரைக்குளத்தில் அமர்ந்திருந்த வேளையில் சண்முகம், 'விடு சரசு... உனக்கு அதைவிட நல்லதா ஒரு செயின் 10 பவுன்ல எடுத்துத் தர்றேன். என்னாலே அலைய முடியலை; செலவும் செய்ய முடியலை...’ எனக் கண்ணீர்விடாத குறையாகச் சொன்னார். அதை, அவள் கேட்டுக்கொள்ளவில்லை.
   'நகையை அவள் வெச்சுக்கிடட்டும். எனக்கு வேணாம். ஆனா 'இத்தனை நாளா ஏன் திருப்பித் தரலை?’னு, நான் அவகிட்டே கேட்கணும். உங்க அம்மா சொல்லி அவ எனக்குத் தரலையா... இல்லை என்ன, ஏது விஷயம்னு நான் தெரிஞ்சுக்கிடணும். பொன்னம்பலம் மக என்ன உங்க அம்மாவுக்கு அரைக்கீரையா... கிள்ளிப்போடறதுக்கு?’ என முறைத்துப் பேசினாள்.
   திருவிழாவுக்கு இல்லை என்றாலும், பூப் பல்லக்கு ஊர்வலத்தில் எப்படியாவது கோமதியைப் பார்த்துவிடலாம் என, கூட்டத்தோடு கூட்டமாக நின்று சரஸ்வதி தேடினாள். தன்னை மறந்து நின்று, பூப் பல்லக்கில் வந்த மீனாட்சியம்மனையும் சுந்தரேஸ்வரரையும் பார்த்து வணங்கினாள். பல்லக்கில் இருந்து மாலை ஒன்று, அவள் கரத்தில் வந்து விழுந்தது. கண்களில் ஒற்றி வைத்துக்கொண்டாள். அன்று இரவு ஊருக்கு வந்து உறங்கி எழுந்தவள், அதிகாலையில் அழுத கண்ணீரோடு, 'கோமதி எங்கே இருந்தாலும் எங்க அப்பா செய்து கொடுத்த சங்கிலியோடு நல்லா இருக்கட்டும். எனக்கு மீனாட்சி தாய் கண் திறந்து பார்த்ததே போதும்’ என சண்முகத்திடம் சொன்னாள். ஒருநாள் ராத்திரியில் அவளுக்கு என்ன மாற்றம் நடந்தது. ஏதேனும் 'கனா கண்டாளா?’ என சொர்ணத்தம்மாவுக்குக் குழப்பம்.
   சரஸ்வதி யாரிடமும் பேசாமல், வீட்டுச் சமையல் வேலைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதில் அவள் கண்ணும்கருத்துமாக இருந்தாள். பகலில் அவள் அயர்ந்து உறங்கும்போது அவளை அறியாமல் தனது கழுத்தைத் தடவிக்கொள்வாள். அது மட்டும் அல்லாமல் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென, தனது கழுத்தையும் தொங்கிக்கொண்டிருக்கும் தாலிச்சரடையும் தடவிக்கொள்வாள்.
   கோமதியிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும், அவளை அறியாமல் தனது கழுத்தைத் தடவிக்கொண்டாள். அவளுக்கு அந்தக் கடிதம் உண்மையிலே பயத்தைத் தந்தது. இந்த 10 வருடக் காலத்தில், காணாமல்போன தங்கச் சங்கிலியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆவேசம், அவளை எதற்கெடுத்தாலும் அச்சப்படவைத்தது. சமையல் அறையில் தட்டு, டம்ளர் என ஏதாவது தவறி கிழே விழுந்தாலும், 'கோமதி வந்துட்டாளா... யாரு... யாரு..?’ என பயந்துபோய் பேசினாள். அந்தப் பயத்தோடுதான் அவள் அந்தக் கடிதத்தை கையில் வைத்திருந்தாள். அந்தப் பயத்தோடுதான் கடிதத்தை சண்முகத்திடம் கொடுத்தாள்.
   சண்முகம் தன் தங்கை கோமதியின் கடிதத்தைப் பிரித்தார். கோடுபோட்ட காகிதத்தில் எழுதியிருந்தாள். அந்தக் கடிதம் ஒரு புத்தகத்தின் அளவு பெரியதாக இருந்தது. கடிதத்தில் இருந்த வரிகளைப் பார்த்ததும், அவருக்குக் கண்களின் கீழ் இமையில் திரண்ட துளி நீர், அவருடைய அனுமதி இல்லாமல் கன்னத்தில் வழியப் பார்த்தது. ஆனால், அதை அவர் அனுமதிக்கவில்லை. சண்முகம் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார்...
   அன்புள்ள அண்ணனுக்கும் அண்ணிக்கும் வணக்கம். கோமதி எழுதும் கடிதம்...
   நான் ஆறாம் வகுப்பு படித்தப் பெண். எனக்கு அவ்வளவாக எழுதப் படிக்கத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கடிதத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
   அண்ணி என் மேல் கோபமாக இருப்பார்கள் என எனக்குத் தெரியும். இரவலாக வாங்கிப்போன நகையை, திருப்பித் தராமல் இருப்பது பெரிய குற்றம்தான். உங்களுக்கு ஏதாவது நல்ல காரியம் செய்ய நினைக்கிறேன். உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்க விரும்புகிறேன். உங்களிடம் இருந்து வாங்கிய நகை காணாமல்போய்விட்டது எனப் பொய் சொல்ல, எனக்கு மனம் வரவில்லை. என்னிடம்தான் பத்திரமாக இருக்கிறது.
   பொன்னம்பலம் மாமா எவ்வளவு கஷ்டத்தில் இந்த நகையைச் செய்து தந்திருக்கிறார் என எனக்குத் தெரியும். அதைவிட அண்ணி இந்த நகையின் மேல் எவ்வளவு பிரியமாக இருந்தார்கள் எனவும் தெரியும். அந்த நகை உங்களுக்கு வேண்டாம். பதிலாக வேறு ஏதேனும் நகையை வாங்கிக்கொள்ளுங்கள். அந்த நகைக்கான பணத்தை உங்களது பெயருக்கு செக் எடுத்து, இத்துடன் அனுப்பியிருக்கிறேன். 10 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று என்ன விலைக்கு அந்த நகையைச் செய்ய முடியுமோ, அதே விலைக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறேன். இது கணக்கை நேர்செய்ய அல்ல... உங்களுக்கு நல்லது செய்யவே. நீங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவே இதைச் செய்திருக்கிறேன்.
   நகையை ஏன் உங்களுக்குத் தரவில்லை எனச் சொல்லியாக வேண்டும். நகையை இரவலாக வாங்கிப்போன மூன்றாவது நாளில், மலேசியாவில் இருந்து என் கணவரின் சித்தியும் சித்தப்பாவும் வத்தலகுண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்த நகையை விற்று பணமாக்க விரும்பினார்கள். அந்தப் பணத்தைக்கொண்டு ஊரில் இடம்வாங்கிப் போடலாம் எனத் திட்டமிட்டிருந்தார்கள். காலி இடத்தைப் பார்க்க மாமாவும் மலேசியாக்காரரும் காலையில் புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். அப்படி ஒருநாள் இடம் பார்த்துவிட்டுத் திரும்பிவரும்போது, வயதான ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தனர். அவருக்கு நீண்ட தாடியும் முறுக்கிய மீசையும் இருந்தன. அடிக்கடி மூக்குப்பொடி போட்டுக்கொண்டார். அவருடைய வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் அழுக்காக இருந்தன. உடலில் விபூதி வாசனை அடித்தது. வயதானவர் ஏதோ மந்திரம் கற்றவர்போல தெரிந்தார். மலேசியாவில் இருந்து தாங்கள் கொண்டுவந்த நகையை, அவருக்கு முன்பாகப் பிரித்து இருவரும் வைத்தார்கள்.
   'இந்த நகையை விற்கவே முடியவில்லை. ஏதாவது பரிகாரம் செய்தால் விற்க முடியுமா?’ எனக் கேட்டார்கள். வயதானவர் நகையை கையால் எடுத்துக்கொள்ளவில்லை. நாற்காலியில் அமர்ந்தபடி மேஜையில் இருந்த நகையை முகர்ந்துபார்த்தார். மூக்குப்பொடியை உறிஞ்சுவதுபோல நகையையும் உறிஞ்சி விடுவார் எனத் தோன்றியது. அவ்வளவு வேகமாக உறிஞ்சினார். உறிஞ்ச உறிஞ்ச அவருடைய மூக்கு விடைத்துக்கொண்டதோடு, மார்பும் விரிந்தது. பிறகு, மூச்சை சிறிது சிறிதாக வெளியேற்றினார். அப்படி வெளியேற்றும்போது கண்களை மூடிக்கொண்டார். அவருடைய முகம், தன் முன்பாக அமர்ந்திருக்கும் ஒருவரின் பேச்சைக் கேட்பதுபோல் இருந்தது.
   வயதானவர், மலேசியாக்காரர்களைப் பார்த்து, 'நகையில ரத்தவாடை வீசுது. ரத்தக் கவுச்சி இருக்கு. அந்தக் கவுச்சி விபத்தா... கொலையா...னு தெரியலை. இந்த நகையை உடுத்திக்கிட்டவங்க ஆணா இருந்தா, ஆகாரம் இல்லாம செத்துப்போகணும். பெண்ணாக இருந்தா, புத்தி பேதலிச்சுச் செத்துப்போகணும்’னு சொன்னார்.
   மலேசியாவில் இருந்து வந்த அந்தப் பெண் தன் முகத்தைப் பொத்தி அழத் தொடங்கினாள். நான் அவளைச் சமாதானப்படுத்தினேன். அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

   மலேசியாக்காரர், 'நேரா பார்த்த மாதிரி சொல்றீங்களே... நீங்க சொன்னது நிஜம்தான். நிஜம்தான்’ என தலையில் அடித்துக்கொண்டு அழுதார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினோம்.
   'நகையையும் உடுத்திப்போட்ட உடுப்பையையும் மோந்து பார்த்து, அதுல வர்ற வாசனையை வெச்சு நோக்காட்டையும் குத்தம்குறையையும் கண்டுபிடிக்கிறது எங்க பரம்பரையிலே இருக்கிறவங்களுக்கு கைவந்த வித்தை. இது வித்தைனும் சொல்லலாம்; இல்லை வைத்தியம்னு சொல்லலாம். ஆனால் இதுக்குப் பரிகாரமும் இல்லை; நிவாரணமும் இல்லை. விதி விட்ட வழி’ என்றார்.
   'நடுரோட்டிலே கிடந்த அநாதைப் பிரேதத்தின் நகைகள் இவை. நடுராத்திரி நேரம். யாரும் இல்லைனு எடுத்துவெச்சோம். யாருக்கும் தெரியாம வித்துட்டு, ஊருக்கு வந்து சேர்ந்துருவோம்னு ஆசைப்பட்டுட்டோம். நகைகளை இவங்ககூட வேலை பார்க்கிறவங்களுக்கு வித்தோம். வாங்கினவங்க வீட்டில இருக்கிற பொம்பளைங்க மூணு பேரும், மறுநாள் ராத்திரியிலே தூக்குமாட்டிக்கிட்டுச் செத்துப்போயிட்டாங்க. என்ன காரணம்னு இன்ன வரைக்கும் தெரியலை. நகையை வாங்கினவர், சம்சாரம் செத்த துக்கத்திலே நகையை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துட்டார்.
   ரெண்டாவதா ஒருத்தருக்கு வித்தோம். அவர் மகள் கல்யாணத்துக்கு ஆசையா வாங்கினார். கல்யாணம் முடிஞ்ச மறுநாளே மாடியில் இருந்து குதிச்சுச் செத்துப்போச்சு அந்தப் பிள்ளை. நகையை கண் முன்னாலே வெச்சுப் பார்த்துட்டே இருக்கோம். ஒருநாள் ஒருதடவைகூட உடுத்தி அழகு பார்க்க முடியலை. ஏதோ பிசாசுகூட இருக்கிற மாதிரி இருக்கு. ஆசையா ஒருநாள் நகையைப் போடலாம்னு எடுத்தேன். கை-கால் நடுக்கம் எடுத்து, தரையிலே நிக்க முடியலை. உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பிச்சது. நகையை பெட்டியிலே போட்டதும் ஐஸ் மாதிரி உடம்பு ஜில்லுனு மாறிப்போயிருச்சு. ஆச்சர்யமா இருக்குது. இந்தா இந்த நகைதான்... மான் ஒண்ணு நிக்கிற மாதிரி இருக்குல, அதை என் மகளுக்கு ஆசையாப் போட்டுவிட்டேன். விடிகாலை எழுந்து பார்த்தா, என் மகளைக் காணோம். பூட்டின வாசல் கதவு எல்லாம் அப்படியே இருக்கு. 'எங்கே போனா?’னு தெரியலை. இன்னைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியலை. எங்களுக்குப் பயமா இருக்கு சாமி. பயந்துபோய் மலேசியாவை விட்டுட்டு ஊருக்கு வந்திருக்கிறோம். வெச்சிருக்கவும் மனசு இல்லை; விற்கவும் முடியலை. என்ன செய்யுறதுனு தெரியலை’னு அழத் தொடங்கினார் மலேசியா சித்தி.
   'நீங்க அவ்வளவு சுலபமா இந்த நகையை வித்துட முடியாது; அனுபவிக்கவும் முடியாது. இந்த நகையை எங்கே எடுத்தீங்களோ, அந்த இடத்துலயே போய் புதைச்சு வைங்க. 10 அடி ஆழத்துல குழி தோண்டி அதுல நவதானியத்தைப் போட்டு, 10 வகையான எண்ணெய் ஊற்றி, இந்த நகையை அதுல போடுங்க. நகைக்கு மேலே 10 வகையான துணிகளைப் போட்டு குழியை மூடுங்க. மறு நிமிஷத்தில் இருந்து உங்களைப் பிடிச்ச பீடை, நோவு, அசௌகரியம் உபாதை... எல்லாம் மாயமா மறைஞ்சிரும்’னு அந்தப் பெரியவர் சொன்னார். அவர்களும் அந்த வார்த்தைகளை நம்பி மலேசியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதாகச் சொன்னார்கள். அதோடு பிரச்னை முடிந்தது என்றால் பரவாயில்லை.
   என்னதான் இருந்தாலும் நான் படிக்காத முட்டாக்கழுதைதானே. வாயை மூடிக்கிட்டு இருந்திருக்க வேண்டும். அண்ணியின் நகையைக் காட்டி, 'இந்த நகையைப் பாருங்கள்’ எனக் கோட்டித்தனமாக அவரிடம் கேட்டுவிட்டேன். என் வீட்டுக்காரர் என்னைத் திட்டியதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. அப்படிக் கேட்டதுதான் இவ்வளவு பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. ஆனால் அப்படிக் கேட்காமல் இருந்து மறுநாள் ஊருக்கு வந்து உங்களிடம் நகையைக் கொடுத்திருந்தால், உங்கள் வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கும். எங்களுக்காக உழைத்த அண்ணன், எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். நல்லவேளையாக நகையைத் தராமலேயே இருந்ததை நினைக்கும்போது, மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
   பெரியவர் தனது கைக்குட்டையால் முகத்தைப் பொத்திக்கொண்டு ஆழமாக ஏதோ ஒன்றை, தனக்குள் வாங்கிக்கொள்வதுபோல மூச்சை இழுத்தார். மூச்சை இழுக்க இழுக்க, அவரது முகமும் மார்பும் காற்று நிரம்பும் பந்தைப்போல விரிந்தபடியிருந்தது. பிறகு, வெற்றுப் பலூனைப்போல சுருங்கத் தொடங்கியது. அவர் இன்னொரு முறை, தனது நாசியால் காற்றை உள்ளிழுத்துக்கொண்டார். அந்த வீட்டின் இடுக்குகளின் வழியாக ஒளிந்திருக்கிற காற்றைக்கூட முகர்ந்து, தனது உடலில் நிரப்பிக்கொள்வதுபோல துரிதம்கொண்டிருந்தார்.
   'என்ன சொல்லப்போகிறார். அதுவும் பொன்னம்பலம் மாமா செய்துகொடுத்த நகையில் என்ன குற்றம் குறையைக் கண்டுபிடிக்கப்போகிறார்’ என பரமார்த்தமாக இருந்துவிட்டேன். அவர் சொன்னார். 'இந்த நகை உன்னோடது இல்லை தாயி... நிசம்தானா?’ எனக் கேட்டார்.
   நானும் 'ஆமாம்’ என்றேன்.
   'இது யாரோடதா வேணா இருக்கட்டும். இந்த நகை இருக்கிற வீட்டிலே புருஷனும் பொண்டாட்டியும் இணைஞ்சிருக்க முடியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் எட்டிக்காய் மாதிரி கசந்துபோய்க் கிடப்பாங்க. சங்கிலி கழுத்திலே இருக்கிற பொம்பளைக்கு வயிற்றிலே பிள்ளை உதிக்காது. வம்சவிருத்தி தராமல் இருக்கிற பால் இல்லாத எட்டிக்காய் மரத்தோட நிழலில் உட்கார்ந்து, இந்த நகையைச் செய்திருக்காங்க. அந்த மரத்தோட பால் இந்த நகையிலே கலந்திருக்கு. நகையைப் போட்டதும் உடம்பு எல்லாம் கசந்துபோய் எரிச்சலாகிப்போயிரும். இனிப்பு தெரியாது. குடும்பத்திலே இருக்கிற சந்தோஷமான விஷயமும் தெரியாது. இந்தச் சங்கிலியிலே இருக்கிற மீன் கசப்பான நீரைக் குடிச்சுச் சாகக்கிடக்கு. கறுத்துப்போன மீன் இன்னும் கொஞ்ச நாளிலே செத்துப்போய் தானா அறுந்து உதிர்ந்திரும். சங்கில் இருந்து வர்ற ஓசை, ஏதோ சாவு வீட்டில் இருந்து வர்றது மாதிரி என் காதுக்குக் கேட்குது. நீ வாங்கினவங்ககிட்டயே திரும்பவும் கொடுத்திரு தாயி’ என்றார்.
   'சாமி இந்த நகை என்னோட அண்ணன் சம்சாரத்தோடது. அவங்ககிட்டே இருந்து இரவலா வாங்கிட்டு வந்திருக்கேன். திருப்பி தந்தா, அவங்க வீட்டிலே நல்லது எதுவும் நடக்காதா?’
   'கழுத்துச் சங்கிலி எங்கெங்கே இருக்கோ, அங்கே நான் சொன்னது நடக்கும். பரிகாரம் எதுவும் இல்லை. பரிகாரத்தைத் தேடிப்போய்ச் செய்றதுக்கு, சங்கிலியைக் கழுத்திலே உடுத்தாமலே இருக்கலாம்’ என்றார்.
   அன்றில் இருந்து நான் அந்த நகையை உங்களுக்குத் தரக் கூடாது என்பதில் முடிவாக இருந்தேன். என் கணவர் 'உடனே கொடுத்துவிட்டு வந்துவிடு’ எனத் தினமும் தொந்தரவு செய்தார். அவருக்குத் தெரியாமல், ஒருநாள் ஊருக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு, இரண்டு சினிமா படங்கள் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன். நகையைக் கொடுத்துவிட்டோம் என அவர் நிம்மதியாக இருந்தார். நகை இருக்கும் வீட்டில்தான் வாழ்க்கை எட்டிக்காய்போல கசக்கத் தொடங்கிவிடுமே. எதற்காக எனத் தெரியவில்லை. அவர் தினமும் குடித்துவிட்டு வர ஆரம்பித்தார். அவருக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், எனக்கு படுக்கையறை வெறுப்பாக மாறியது. எரிச்சலாக இருந்தது. உடல் பெரும் சுமையாகத் தெரிந்தது. நான் விலகவும் அவர் என்னை வெறுக்கவுமாக, தினமும் சண்டை.
   இத்தனைக்கும், நகையை சாணி உருண்டையில் போட்டு உருட்டி பந்துபோல செய்து காயவைத்து பரணில் பழைய பொருட்களோடுப் பொருட்களாக ஒளித்து வைத்திருந்தேன். இன்று வரை நாங்கள் பிரிந்துதான் இருக்கிறோம். நான் குழந்தை பெற்றுக்கொள்ளாததைப் பற்றி பலரும் திட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதையும் புது வீடு, வாசல், இரண்டாவதாக ராஜி பிறந்தது என எல்லாவற்றையும் கேள்விப்பட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. இந்தச் சந்தோஷம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
   எனக்கு 10 வருடங்களாக குழந்தை பிறக்காததன் ரகசியமும் இதுதான். யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? நான் நம்பினேன். சங்கிலியை உங்களிடம் தந்துவிட்டு, சாமியார் சொன்னதைச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். நான் இரண்டு மூன்று குழந்தை பெற்றிருப்பேன். புதிதாக ஒரு வீடுகூட வாங்கியிருப்பேன். ஆனால், அண்ணி நிச்சயமாக என் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.
   கல்யாணத்துக்கு முன்பு நான் கத்திரிக்காய் வாங்கிக்கொண்டு வந்து, புளிக்குழம்பு வைக்க வேண்டும் எனச் சொன்னால், அவர்கள் வேண்டும் என்றே துவரம் பருப்பை வேகவைத்து சாம்பார் வைப்பார்கள். என்னைக் கண்டால் அவருக்கு எட்டிக்காயைப்போல கசக்கும். வேண்டும் என்றே நான் ராத்திரியில் சாப்பிடுவதற்கு முன்பு சோற்றில் நீரை ஊற்றிவிடுவார்கள். 'கோமதி நீ சாப்பிட்டேன்னு நெனைச்சேன்’னு சொல்வார்கள். நான் தண்ணியைப் பிழிந்துவிட்டு ரசத்தை ஊற்றிச் சாப்பிடுவேன். நான் படிக்காத பெண் என்கிற இளக்காரம் எல்லோரிடமும் இருக்கிறது. அண்ணிக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்காமல்போனது ஏன் எனத் தெரியவில்லை. அண்ணா உங்களுக்கும்தான். அண்ணி... நீங்கள் என்னை நம்பாவிட்டால் பரவாயில்லை. எங்களுக்காக எங்கள் அண்ணன் எவ்வளவோ சிரமப்பட்டிருக்கிறார். நீங்களும் அண்ணனும் எங்கள் மூன்று பேர் திருமணம் முடிகிற வரை சரியாகப் பேசிக்கொண்டதுகூட கிடையாது.
   நீங்கள் தினமும் இரவு எங்களுடன் வந்து படுத்துக்கொள்வதை இப்போது நான் நினைத்துக்கொள்கிறேன். நீங்கள் எங்களைப் பெற்றெடுக்காத அம்மா. எங்களுக்காக தாம்பத்ய வாழ்க்கையை ஆறு வருடங்கள் தள்ளிவைத்திருந்தது எவ்வளவு தியாகமான செயல். அந்த வாழ்க்கை இனிமேற்பட்டு உங்களுக்குத் தொடரக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணி, நான் சங்கிலியைத் தரவில்லை. மன்னிக்கவும். இத்துடன் செக் அனுப்பியிருக்கிறேன். மனதளவில் எந்தக் கெட்ட எண்ணமும் என்னிடம் இல்லை. தையல் வேலையில் எனக்குக் கிடைத்த பணத்தைச் சேகரித்துவைத்து, உங்களுக்குப் பணத்தை அனுப்பியிருக்கிறேன்.
   அண்ணன் எத்தனையோ தடவை என்னை 'நாசமாகப் போ... நாசமாகப் போ...’ எனத் திட்டியிருக்கிறார். 'வட்டி வட்டியாக மூணு நாலு வாட்டி சோத்தைப் போட்டுத் திங்கத் தெரியுது’ எனத் திட்டியிருக்கிறார். ஒழுங்காகப் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலே இருந்து அண்ணனுக்கும் உங்களுக்கும் சுமையாக இருந்துவிட்டேன். அண்ணா உங்களது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு இதைவிட வேறு ஏதேனும் நல்லது செய்ய நினைக்கிறேன். நல்லது செய்யும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறேன்.
   எப்போதும் நன்றியுடன் உங்களது சகோதரி கோமதி.
   பின்குறிப்பு: இதில் உள்ள விலாசம், தற்காலிகமானதே; நிரந்தரமானது அல்ல. என்னைத் தேடி வர வேண்டாம். என் கணவர் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வீடு மாற்றிக்கொண்டிருப்பார். வேறு வீட்டுக்குப் போனால், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆசையில் இப்போது வரை இருக்கிறார். நான் சாண உருண்டையை பண்டப்பாத்திரங்களுடன் பாத்திரங்களாகப் போட்டு ரகசியமாகக் கொண்டுபோகிறேன். அந்த நகை உங்களுக்கு மட்டும் அல்ல. வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
   சண்முகம் கடிதத்தைப் படித்து முடித்தார். சரஸ்வதி தன் கணவனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை முதன்முதலாகப் பார்த்தபடி நின்றிருந்தாள். பிறகு கணவனிடம் இருந்து கடிதத்தை வாங்கியவள், 'கழுதை படிக்கலைனாலும் கதை கதையா எதையாவது உளறுவா. நகை காணாமப்போச்சுனு ஒரு வரியிலே சொல்லவேண்டியதுதானே...’ எனத் திட்டினாள். அவள் காலடியில் காசோலை ஒன்று, பச்சை நிறத்தில் விழுந்துகிடப்பதை அவள் கவனிக்கவில்லை! 
   https://www.vikatan.com
  • By நவீனன்
   தாய்லாந்துக் காதல்
   சிறுகதை: மாத்தளை சோமுஓவியங்கள்: ஸ்யாம்
    
   மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை  8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். 'பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், 'பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும் முடிவுரை எழுத, அந்த முடிவுரைக்கே முடிவுரை எழுதியதுபோல் அவன் பிறந்தான். அவனுக்குப் பிறகு எவரும் பிறக்கவில்லை. அவன் பிறந்ததும் எந்த எழுத்தில் பெயர்வைப்பது என, தாத்தா சோதிடரிடமும் ஐயர்களிடமும் ஓடித் திரிய, 'யாரும் எழுத்து தர வேண்டியது இல்லை. நானே பெயர் வைக்கிறேன். எங்களின் நீண்ட நாள் ஏக்கத்தைத் தணிக்க வந்ததால், தணிகைராஜன்’ என்றார் அப்பா; தாத்தாவும் 'நல்ல பெயர்’ என்றார்.
   கதவை எவரோ தட்டும் சத்தம், அவனுக்குக் கனவில் கேட்பதுபோல் இருந்தது. கனவா இருக்கும் என இருந்தபோது, 'ராஜா... ராஜா...’ என்ற சத்தமும், கதவு தட்டும் சத்தமும் கேட்டன. குரல் பீட்டருடையதுதான் என அவனின் உணர்வு அடையாளம் கண்டதுமே படுக்கையைவிட்டு வேகமாக எழுந்தான். ஓடிப்போய் கதவைத் திறந்தான். வெளியே பீட்டர் நின்றிருந்தான்.
   ஒரு வாரத்துக்கு முன்னர் 'சிட்னி ஏர்போர்ட்டுக்குப் போக வேண்டும்’ என பீட்டர் சொன்னது, அவனுக்கு ஞாபகத்தில் நின்றது. பீட்டர், ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன். சுருக்கமாகச் சொன்னால் 'ஆஸி’. எதிர்வீட்டில்தான் குடியிருக்கிறான். ராஜா வேலை செய்கிற ஃபேக்டரியில், பீட்டர் மெக்கானிக். பீட்டருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. ஆனால், ஐந்து வருடங்களுக்கு முன் அவனது, மனைவி அவனை டிவோர்ஸ் செய்துவிட்டாள். 'டிவோர்ஸ் வேண்டாம்’ என மனைவியின் காலைப் பிடித்து அழுதிருக்கிறான். ஆனால், அவள் கேட்கவில்லை. குடியிருந்த சொந்த வீடு அவளுக்கும் பிள்ளைகளுக்கும் போக, பீட்டர் தனிக்கட்டையாக வாடகை வீட்டுக்கு வந்தான். அவனுக்கு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததும் ராஜாதான்.

   கை நிறைய சம்பாதித்தாலும் தனித்துப்போன பீட்டர், ஞாயிறு பகல் ராஜா வீட்டுக்கு வந்து அழுதுவிட்டு பியர் குடிப்பான். அவனால் ராஜாவும் பியர் குடித்தான். குடிக்கிற பியர் போத்தல்களை வாங்கி வருவது பீட்டர்தான். அதற்குப் பதிலாக ராஜா கோழிக்கறி சமைத்துப் போடுவான். கொஞ்சம் காரத்தோடு சாப்பிட பீட்டருக்குப் பிடிக்கும். பியர் குடிக்கும்போதெல்லாம் தன் புராணத்தைக் கொட்டுவான் பீட்டர்.
   சின்னப்பிள்ளையாக இருந்தபோது கட்டிலில் படுக்கவைத்து அம்மாவும் அப்பாவும் சொன்ன  புராணக்கதைகளைக் கேட்டுப் பழகிய ராஜாவுக்கு, பீட்டரின் சுயபுராணம் கேட்க சுவையாக இருந்தது.
   'பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்போடு விட்ட பீட்டர், ஃபேக்டரியில் வேலைக்குச் சேர்ந்து, முதல் சம்பளத்தை வாங்கிக்கொண்டு பப்பில் சந்தோஷத்தில் பியர் குடித்துக்கொண்டிருந்தான். அப்போது 'ஹாய்’ என வந்த அவள், ஒயின் குடித்தாள். அவனையே பார்த்தாள். பிறகு, அவன் கையைத் தொட்டாள். போகும்போது அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு 'சனிக்கிழமை, கிளப்பில் சந்திப்போம்’ எனச் சொல்லிட்டுப் போனாள்.
   கிளப்பில் சந்தித்தார்கள்; பேசினார்கள்; சேர்ந்து நடனம் ஆடினார்கள். ஓர் ஆண்டுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டனர். உலகமே அவள்தான் என வாழ்ந்தான் பீட்டர். அவள் பெயருக்கே வீட்டை வாங்கினான். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. அவளுக்கு 35 வயதானபோது, 12 வருடத் திருமண வாழ்க்கை முறிந்தது. அவள் 'டிவோர்ஸ் வேண்டும்’ என்றாள். பிரிந்தார்கள். அவன் பெயரில் இருந்த 2,000 டாலரைத் தவிர, எல்லாமே போய்விட்டன. காரைக்கூட வாங்கிக்கொண்டாள்.’  பீட்டரின் கண்களில் முத்துக்களாக நீர்த்துளிகள் உருண்டன.
   ''என் வாழ்க்கை வேடிக்கையானது. நான் பிறந்தது ஒரு வீட்டில்; வளர்ந்தது ஒரு வீட்டில்; திருமணம் ஆகி வாழ்ந்தது ஒரு வீட்டில்; இப்போது டிவோர்ஸாகி வாழ்வது ஒரு வீட்டில். எனக்கு நிரந்தர வீடு இல்லை...'' என்ற பீட்டர் மிக உருக்கமாக, ''இந்த நாட்டில் மூன்று w - க்களை நம்ப மாட்டேன்; நீயும் நம்பாதே... WORK, WEATHER, WOMAN . இந்த மூன்றும் அடிக்கடி மாறும்'' என்றான்.
   விடுமுறையில் ஒருநாள், பீட்டர் தாய்லாந்து போய் வந்தான். அங்கு மூன்று வாரங்கள் இருந்துவிட்டு திரும்பிய அவன் மாறிப்போனான். டிவோர்ஸ் ஆனதை மறந்தான். அழகான தாய்லாந்துப் பெண் ஒருத்தியின் போட்டோவைக் காட்டினான். அழகாக இருந்தாள்; இளம் வயது. பீட்டருக்கும் அவளுக்கும் இடைவெளி 20 வயது இருக்கலாம்.
   பீட்டர் வெள்ளமாகச் சொன்னான்... ''அவளை நான் காதலிக்கிறேன். அவளும் என்னைக் காதலிக்கிறாள். திருமணம் செய்யவும் விரும்புகிறாள்.''
   தாய்லாந்து போன மூன்று வாரங்களில் காதலா?! ராஜாவால் நம்ப முடியவில்லை. ஆனால், பள்ளியில் இலக்கியம் படித்தபோது கம்பன் 'அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள்’ என ராமனுக்கும் சீதைக்கும் பார்த்த கணமே காதல் வந்ததாகச் சொன்னதை நம்பினோமே! இங்கு மூன்று வாரக் காலத்தில் இந்தப் பீட்டருக்குக் காதல் வராதா?
   ''அவளுக்குப் பணம் கொடுத்தாயா?''
   ''இல்லை...'' என்றான் பீட்டர்.
   'அப்படியானால் இது எப்படி?’ என எண்ணினான். அதுகுறித்து பீட்டரிடம் எதுவும் கேட்கவில்லை. பிறகு இன்டர்நெட் மூலம் தகவலைக் கண்டான். தாய்லாந்தில் ஏழ்மையும் வறுமையும் பெண்களைத் தாக்குகின்றன. கிராமத்தில் பிறக்கும் அழகான பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்ததும் வறுமையின் காரணமாக சில ஆயிரம் டாலருக்கு பேங்காக் ஏஜென்ட்களிடம் தற்காலிகமாக விற்பார்கள். அவர்கள் ஐந்து ஆண்டுகள் விபசாரத்தில் இருந்து பணத்தைத் தேடிக்கொண்டு கிராமத்துக்குப் போவார்களாம். பிறகு, அவர்களுக்குத் திருமணம் நடக்கும். இது ஒரு வகை. இன்னொரு வகை... தாய்லாந்துக்கு வரும் வயதான வெள்ளைக்காரர்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்களோ வேறு நாட்டுக்குப் போவார்கள். அங்கு இருந்து குடும்பத்துக்குப் பணம் அனுப்புவார்கள்.
   ''அவளைத் திருமணம் செய்யப்போகிறாயா?''
   ''ஆம்!''
   ராஜா, எதுவும் பேசாது மௌனமாக பீட்டரையே பார்த்தான். அந்தப் பார்வை, ஒரு கேள்வியாக மாறி அவனைக் குடைந்திருக்கலாம்.
   ''45 வயதான என்னை, எந்த வெள்ளைக்காரியும் கட்டிக்க மாட்டாள். அப்படியும் கட்ட வேண்டுமானால், பணம், அழகு எல்லாம் இருக்க வேண்டும். அழகுகூடத் தேவை இல்லை. பணம்தான் தேவை. என்னிடம் நிறையப் பணம் இல்லை. நான் இங்கு திருமணம் செய்ய முடியாது. என்னை மணக்க தாய்லாந்து கேர்ள்ஸ் தயாராக இருக்கிறார்கள். என் வாழ்க்கையை நான்தான் பார்க்க வேண்டும்'' என்றான் பீட்டர்.
   ''உன் பிள்ளைகள்?''
   ''அவர்கள் அம்மா பேச்சைக் கேட்டு, என்னை மனிதனாக மதிப்பதும் இல்லை; என்னோடு பேசுவதும் இல்லை. இந்த நாட்டுச் சட்டம் (கெட்ட வார்த்தையில் திட்டினான்) பெண்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது.
   அவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை... பீட்டரின் மனைவி, அவனை ஏன் விவாகரத்து செய்தாள் எனவும் தெரியவில்லை. ராஜாவைப் பொறுத்தவரையில், அவன் மோசமானவனாகத் தெரியவில்லை. ஆனால், அவன் யார் என்பது அவனோடு வாழ்ந்தவளுக்குத் தெரியும். தாய்லாந்து போய் வந்த பிறகு, பீட்டர் பழைய நினைவுகளை உதிர்த்து புதிய மனிதன் ஆனான். விவாகரத்து செய்த மனைவியைப் பற்றி பேசுவதைக் குறைத்தான். தாய்லாந்தில் இருந்து காதலி வரும் நாளை எதிர்பார்த்து நின்றான். அவளுக்கு விசா கிடைக்க, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதனிடையே மூன்று தடவை தாய்லாந்து போய் காதலியைப் பார்த்துவிட்டு வந்தான்.
   காலை நேர சாலை நெருக்கடியில் கார் ஓட்டிப்போவது, ராஜாவுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால், பீட்டர் அவனை சாலை நெருக்கடியில் சிக்கவைக்காமல், சந்துபொந்துகளில் குறுக்குத் தெருக்களில் காரை ஓட்டவைத்தான். காலை 9 மணிக்கு சிட்னி விமான நிலையத்துக்குப் போய் நின்றார்கள். ஆளுக்கு ஒரு 'டேக்வே’ காபியை வாங்கிக்கொண்டு காத்திருந்தார்கள். ராஜா காபியை மெள்ள மெள்ள உறிஞ்சிக்கொண்டே விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வருபவர்களைப் பார்த்தான். உலகில் உள்ள பல நாடுகளும் சிட்னிக்கு வந்ததைப்போல், பல்லின மக்களும் வெளியே வந்தார்கள். சீனர்கள் அதிகமாக வருவதுபோல் தெரிந்தது. ஆஸி வெள்ளையர்கள் சிலரே வந்தார்கள். அவர்கள்கூட அரைக்கால் சட்டை, டி-ஷர்ட், காலில் சிலிப்பர் சகிதமாக வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பழைய காட்சி ராஜா நெஞ்சில் மின்னலாக வெட்டி மறைய, தனக்குள் சிரித்துக்கொண்டான்.

   பீட்டர், ''ஏன் சிரிக்கிறாய்?'' என்றான்.
   ''சிட்னிக்கு முதன்முதலில் வந்தபோது கோட்சூட்டுமாக வந்து இறங்கியதை நினைத்தேன்... சிரித்தேன்.''
   அதைக் கேட்ட பீட்டர், ''கல்யாணத்துக்கு போட்ட என் கோட் பெட்டியில் தூங்குது'' என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தான்.
   11 மணி வாக்கில் தாய்லாந்துப் பெண் ஒருத்தி, டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்தாள். பீட்டர் உற்சாக மிகுதியில் அவளை
   எதிர்கொள்ள, ராஜாவைத் தாண்டிப்போய் நின்றான். அவனால் நம்ப முடியவில்லை. அவள் அழகானவள். சின்ன வயது. கண்ணதாசன் எழுதியதுபோல் தாய்லாந்துக் கிளி. அவன் தாய்லாந்துப் பெண்களை முதன்முதலில் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் பார்த்திருக்கிறான். பிறகு, சிட்னியில் ஹேப்பிங் சென்டரில் தாய்லாந்துப் பெண்களைப்போல் பலரைப் பார்த்திருக்கிறான். ஆனால் அவர்கள் தாய்லாந்தா, கம்போடியாவா, கொரியாவா எனத் தெரியவில்லை. ஆனால், இன்றுதான் நேருக்கு நேர் மிக அருகில் தாய்லாந்துப் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். கறுப்புத் தலைமுடி. அளவான நெற்றி, கிளி மூக்கை நினைவுபடுத்தும் மூக்கு, வில்லாக வளைந்த புருவங்கள், வேலையொத்த கண்கள்.
   பீட்டர், அவளை நெருங்கிக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். இருவரும் புன்னகை பூத்த மௌனத்தில் கண்களால் பேசிக்கொண்டார்கள்.
   டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்த பீட்டர், ராஜா அருகே வந்து நின்று அவனைப் பார்த்து, ''மாலி... மீட் மை ஃப்ரெண்ட் ராஜா'' என்றான்.
   ராஜா உடனே அவளின் கையைக் குலுக்க கையை நீட்டியபோது, அவள் இரு கைகளைக் கூப்பி அவனுக்கு தாய்லாந்து மொழியில்
   ''ஏ ருன் ஸோவட்'' (நிஷீஷீபீ விஷீக்ஷீஸீவீஸீரீ) என்றாள். ராஜாவுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் சிரித்தான்.
   அவர்கள் இருவரும் காரின் பின் ஸீட்டில் நெருக்கமாக இருக்க, ராஜா காரை ஓட்டினான். அவன் உள்ளத்தை, தாய்லாந்துப் பெண்ணின் அழகு என்னவோ செய்தது.
   ஒரு வாரம் பீட்டர் வேலைக்குப் போகவில்லை. விடுமுறை போட்டிருந்தான். விடுமுறையில், ஒவ்வொரு நாளும் சிட்னியில் ஒவ்வோர் இடத்துக்கும் பீட்டர் அவளை அழைத்துப்போனான். ஒரு வாரத்துக்குப் பிறகு ராஜாவை டின்னருக்கு அழைத்தான் பீட்டர். 'என்ன வாங்கிக்கொண்டுபோவது?’ என யோசித்த ராஜா, லேடீஸ் பேக்கையும் பியர் போத்தல்களையும் வாங்கிச் சென்றான். லேடீஸ் பேக்கை தாய்லாந்துப் பெண்ணிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக்கொண்டு 'தேங்க் யூ’ எனப் புன்னகைத்தாள். அவளின் புன்னகையும் இனிமையான குரலும் ராஜாவை மயக்கின. பியர் போத்தலைக் கண்டதும் பிரகாசமான முகத்தோடு அதன் மூடியை கையாலேயே திருகித் திறந்து சியர்ஸ் செய்து குடித்தான்; ராஜாவும் குடித்தான். பிறகு, தாய்லாந்துப் பெண் சமைத்த தாய்லாந்து உணவைச் சாப்பிட்டான். சிப்ஸும் ஸ்டேக்கும் சொசைஸும் சாப்பிடும் பீட்டர், ஐஸ்மின் சோறையும் கிரீன் கறியையும் ஒரு பிடி பிடித்தான். பதிலுக்கு ராஜா தன் வீட்டில் விருந்துவைத்தான். கோழிக்கறி, பிரியாணி செய்தான். சாப்பிட்டுவிட்டு 'வெரி நைஸ்’ என்ற அந்தத் தாய்லாந்துப் பெண், அவன் கையைக் குலுக்கிவிட்டுப் போனாள். அவன் அதை எதிர்பார்க்கவே இல்லை.
   ஒருநாள் ''மாலி... கார் ஓட்டிப் பழக, எல் பிளேட் வாங்கிவிட்டாள். நீ உன் காரில் ஓட்டிப் பழக்கு. 120 மணி நேரம் ஓட்டினால்தான் டிரைவிங் டெஸ்ட் எடுக்கலாம். பெட்ரோல் காசு தருகிறேன்'' என்றான் பீட்டர்.
   அவன் மறுக்கவில்லை. தாய்லாந்துப் பெண்ணோடு நெருங்கிப் பழக ஒரு சந்தர்ப்பம் வருகிறது என நினைத்தான்.
   சரி என ஒப்புக்கொண்டான். அவள் கார் ஓட்டவந்தபோது எல்லாம், ராஜா அவளை ஏதோ ஒரு காரணத்துக்காகத் தொட்டுப் பேசினான். கையைத் தொட்டான்; தோளைத் தொட்டான்; ஆனால், அவற்றை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு இடையே அவளோடு பழகுவதற்காக, வேண்டுமென்றே பீட்டரைக் கூப்பிட்டு விருந்துபோட்டான். விருந்தில் பீட்டரை அதிகமாகக் குடிக்கவைத்துவிட்டு, அவன் கொஞ்சமாகக் குடித்தான். போதையில் தள்ளாடிய பீட்டரை கைத்தாங்கலாக அழைத்துப்போய் படுக்கையில் படுக்கவைத்துவிட்டு, அவளோடு ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்தான்.
   சில மாதங்களுக்குப் பிறகு, தொடைகள் தெரிய கட்டையான கால்சட்டை உடுத்திக்கொண்டு தாய்லாந்துப் பெண் பீட்டரோடு போனாள். ஒருநாள் கார் ஓட்டிப் பழக, அதே கால்சட்டையில் அவள் வந்தாள். காரில் உட்கார்ந்து பெல்ட்டைப் போட்டு காரை ஓட்டியபோது, வெளியே தெரிந்த தொடைகள் ராஜாவை ஆட்டிப்படைத்தன. அவளுக்குத் தெரியாமல் அவளின் தொடைகளை ரசித்தான்.
   ஒருநாள் உறவினர் ஒருத்தரின் சாவுக்காக மெல்போர்ன் போனான் பீட்டர். 'திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும், அவளைப் பார்த்துக்கொள்’ என்றான். மனதுக்குள் எதையோ நினைத்த ராஜா, அதை வெளிக்காட்டாமல் ''டோன்ட் ஒர்ரி'' என்றான்.
   பீட்டர் மெல்போர்ன் போன அன்று வேலைக்கு லீவு போட்டுவிட்டு, லாம்ப் பிரியாணி சமைத்து எடுத்துக்கொண்டு தாய்லாந்துப் பெண்ணைப் பார்க்கப் போனான் ராஜா. அவள் எந்த எண்ணமும் இல்லாமல் அவனை வரவேற்றாள். பிரியாணியைப் பார்த்து அதன் வாசனையை முகர்ந்து ''வெரி நைஸ்'' என்றாள்.
   அவன் அவளையே பார்த்தான். அழகாக உடுத்தியிருந்தாள். அவளின் விழிகளில் ஒரு காந்தம் ஏறியிருந்தது.
   ''யூ லுக் வெரி பியூட்டிஃபுல்'' என்றான்.
   அவள் ''தேங்க் யூ'' என்றவள், ''யூ லைக் பியர்?'' என்றாள்.
   அவள் அப்படிக் கேட்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை..
   ''யெஸ்!''
   உள்ளே போன அவள், ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு பியர் போத்தலை எடுத்து, அதைத் திறந்து கிளாஸோடு வந்து, அதில் லாகவமாக பியரை ஊற்றினாள். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ராஜா.
   ''உனக்கு எப்படி பியர் ஊற்றத் தெரியும்... நீயும் பியர் குடிப்பாயா?''
   அவள் புன்னகைத்தாள். ''நான் பியர் குடிக்க மாட்டேன். பியரை ஊற்றக் கற்றுக்கொண்டது நான் வேலை செய்த ஹோட்டலில். அங்கு ஐந்து வருடங்களாக வேலை செய்தேன். பீட்டரைப் பார்த்தது அங்குதான்...'' என, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னாள்.
   பியரைக் குடித்த அவன் மறுபடியும், ''யூ லுக் வெரி நைஸ்... யங் ஏஜ்'' என மறைமுக அர்த்தத்தில் பேசினான்.
   அதைக் கேட்ட அவள், ராஜாவின் பேச்சைத் தவறாக எடுக்காமல் புன்னகைத்தாள். அவனோ தன்னிலை மயங்கி எழுந்து, அவள் அருகே போய் திடீரென அவளைக் கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். பலாத்கார முத்தம். ஆனால், அவள் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கன்னத்தில் படிந்த எச்சிலைத் துடைத்தாள். அப்போது அவன் சொன்னான் ''யூ ய்ங் கேர்ள்... பீட்டர் ஓல்டு மேன்.''
   அதைக் கேட்ட அவள் சற்றுக் கோபமாக, ''பீட்டர் வயதானவன்தான். அது தெரிந்துதான் அவனைத் திருமணம் செய்தேன். பீட்டரால் என் குடும்பம் வாழ்கிறது; என் தம்பி படிக்கிறான்; அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். தாய்லாந்துப் பெண்கள் என்றால், தப்பான எண்ணம் பலருக்கு உண்டு. அது உனக்கும் உண்டு என்பதுதான் வேதனையானது'' என்றாள் அறைகுறை ஆங்கிலத்தில்.
   சில நிமிடம் மௌனம் நிலவியது. மெள்ளமாக நடந்த அவன், அவளை நிமிர்ந்து பார்க்காமல் கெஞ்சும் குரலில் சொன்னான்... ''தயவுசெய்து பீட்டரிடம் எதையும் சொல்லிவிடாதே...''
   அவன் மனதுக்குள் பயம் எழுந்தது, 'பீட்டரிடம் நடந்ததைச் சொன்னால்?’
   அப்போது அவள் சொன்னாள்... ''உங்களுக்கு நேரம் இருந்தால், நாளை கார் பழகலாமே!''
   அவனோ அவளைப் பார்க்கத் துணிவு இல்லாமல் தலையை அசைத்தவாறு வெளியே போனான். 
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   பரமேஸ்வரி - சிறுகதை
    
    

   பரமேஸ்வரியின் மகனுக்கு, மாமனாரின் பெயரைத்தான் சூட்டியிருந்தனர். மரியாதை காரணமாக, எவரும் `உலகநாதன்’ என்று அழைப்பதில்லை. பரமேஸ்வரியின் கணவர் ராமச்சந்திரன், `மணி’ என்றுதான் அழைப்பார். பரமேஸ்வரி, ``என் சர்க்கரைக்கட்டி...  என் பூந்திக் குஞ்சே!” என இஷ்டம்போல் கொஞ்சுவாள்.

   கணவர் ராமச்சந்திரனுக்கு, ஊர் ஊராகச் சென்று பிரின்டிங் ஆர்டர் எடுக்கும் வேலை. மாமா உலகநாதன், கலெக்டர் ஆபீஸில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர்.

   பரமேஸ்வரி, ராமநாதபுரம் அலையாங்குளத்துக்காரி (அழகன்குளம்தான்  அவ்வளவு அழகாக உருமாறியிருக்கு!). சாதுவாக, அப்பிராணியாக இருந்தாலும் போக்குவரத்தெல்லாம் அடிதடிக் குடும்பங்களோடுதான். பேச்சு அதாட்டியமாக இருக்கும், பயப்பட மாட்டாள். ஆண் பிள்ளைக்குச் சமமாக மல்லுக்கு நிற்பாள். ராமச்சந்திரன் அவளைப் பெண்பார்க்க வந்தபோதே அவளுக்குப் புரிந்துவிட்டது, `அவனை தொழுவத்தில் பிடித்துக் கட்டிவிடலாம்’ என. மணமேடையிலேயே அதட்ட ஆரம்பித்துவிட்டாள், ``என்ன... பேக்கு மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் பார்த்துக்கிட்டு! ஒழுங்கா உட்காருங்க.” மாமியார் சவுந்திரம், அப்படியே ராமச்சந்திரனுக்கு அம்மா.

   மாமனார் வீட்டோடுதான் இருந்தார்கள். இவர்களுக்கு ராத்திரிக்கு எனச் சிறிய அறை ஒன்று இருந்தது, ஏறக்குறைய ஒரு மோட்டார்  செட் அளவில். நிமிர்ந்தால் தலை இடிக்கும். மேலே தகரம் போட்டிருக்கும்.
   இரண்டு நாளில் மாமனாரைக் கண்டுபிடித்துவிட்டாள், இது திருட்டுப் பூனை என. கல்யாணத்தன்றே கவனித்திருந்தாள், உலகநாதன் பெண்களை உற்று உற்றுப் பார்ப்பதையும், வாய்ப்பு கிடைத்தால் தொட்டுப் பேசுவதையும், சின்னப் பிள்ளைகளை இழுத்துவைத்துப் பேசுவதையும்.

   இவர்கள் ராத்திரி படுத்த பிறகு, யாரோ எங்கிருந்தோ பார்க்கிற உணர்வு. புருஷனிடம் சொன்னால், ``ஏதாவது பூனையாக இருக்கும்!’’ என்றான்.

   மாமியார்காரி, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மலங்க மலங்க முழிப்பாள். ராமச்சந்திரனின் அண்ணன் பொண்டாட்டி பிச்சையம்மா விலாவாரியாகச் சொன்னாள். ``அந்தக் காலத்துலேயிருந்து இந்த ஆளு அடிச்சு அடிச்சு, இப்படி ஆகிருச்சு. கல்யாணம் ஆகி வரும்போதே அது பிள்ளைப்பூச்சின்னுதான் சொல்வாங்க. அப்புறம் இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டா. நானும் கொஞ்சநாள் இங்கே இருந்தேன். ஒருநாள் படக்குன்னு இந்த ஆளு என் கையைப் பிடிச்சு இழுத்துட்டான். கண்மாய்க்குப் போயி சாகலாம்னு இறங்கிட்டேன். சித்தாயி அத்தைதான் `வாடி மூத்தவளே!’னு என்னைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தாங்க. அன்னிக்கு ராத்திரி முச்சூடும் அவங்க வீட்டுலதான் இருந்தேன். இவர் ஊருக்குப் போயிருந்தார். வந்த உடனே கட்டன்ரைட்டா சொல்லிட்டேன், தனிக்குடித்தனம்தான்னு. புதூருக்குக் குடி போனோம். அதுக்குப் பிறகு இங்கே வந்தா போனா, இவன் என் முகத்தைக்கூடப் பார்க்க மாட்டானே!”

   பரமேஸ்வரியின் புருஷன் காலையிலேயே வேலைக்குப் போய்விட, மாமியார் ஏதாவது கைவேலையாக இருப்பாள். கோயில், குளம் என அலைவாள். மாமனார் வீட்டிலேயேதான் இருப்பார். வீட்டில் உள்ள அத்தனை மேசை நாற்காலிகளிலும் `மா.ஆ.அ.ப.எ’ (மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பதிவு எண்) எனப் பொறிக்கப்பட்டிருக்கும். பெரிய ரோமன் இலக்கமிட்ட கடிகாரம் ஒன்று வீட்டின் மத்தியில் இருக்கும். அதுவும் ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான். மாமனார், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும் அதற்கு வெகுசிரத்தையாகச் சாவிகொடுப்பார். எப்போதும் நாற்காலியில் அமர்ந்தபடி வெளுத்த மற்றும் அடர்ந்த முடியுடைய மார்பைத் தடவிக்கொண்டிருப்பார். பரமேஸ்வரி முடிந்தவரை எச்சரிக்கையாகவே இருந்தாள். வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு, வெளியே வந்து உட்கார்ந்துவிடுவாள். ஆனாலும் மாமனார் ஏதாவது கேட்டுக்கொண்டிருப்பார். ``தண்ணி” என்பார், கை மேலே படும். ``சோறு” என்பார், விலகும் சேலையில் பார்வை நிற்கும்.

   வீடு தெருவிலிருந்து சற்று உள்ளே தள்ளி செண்பகம் ஆசாரி வீட்டுக்குப் பின்னால் ஒளிந்து கிடந்தது. `செண்பகம் ஆசாரி வீடு இருக்கும் இடம் இவர்களுடைய இடம்’ என்றும், ‘ஆசாரி எப்படியோ ஏமாற்றி வாங்கிவிட்டார்’ என்றும் மொட்டையம்மாள் சொன்னாள். இரண்டரை அடி அகலச் சந்து வழியாகத்தான் வீட்டுக்குள் வரவேண்டும். இவள் சீராகக் கொண்டுவந்த பீரோவை, அந்தப் பாதை வழியாகக் கொண்டுவர முடியாமல், சொர்ணம் அத்தை வீட்டு மாடிக்குக் கொண்டுபோய், அங்கிருந்து கீழே இவர்கள் வீட்டுவாசலில் இறக்கினார்கள். ஊரிலிருந்து வந்திருந்த  சித்தப்பா, ``ஆள் ஜனத்தைக் கூப்பிடணும்னா, மைக் வெச்சுதான் கத்தணும்போலிருக்கே!” என்றார்.

   மாமனாரைப் பற்றி, புருஷனிடம் சாடைமாடையாகச் சொல்லிப்பார்த்தாள். புரிந்த மாதிரி தெரியவில்லை. நேரடியாகச் சொன்னாள். பதில் பேசாமல் இருந்தான். ``நான் வேணும்னா நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி கேட்கவா?” என்று கேட்டவளுக்கும் பதில் சொல்லவில்லை. அத்தைகாரியிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. தனிக்குடித்தனம் போக முடியாது என்று பரமேஸ்வரிக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. அதற்கு உதவ, தன் வீட்டுக்கும் வக்கில்லை.

   புரு‌ஷன் மாசத்துக்கு 10, 15 நாள் வெளியூர் வேலையாகப் போய்விடுவான். அந்த நாள்களில் தகர டப்பாவில் (அவள் அதை அப்படித்தான் சொல்வாள்) பதக் பதக்கெனப் படுத்திருப்பாள்.

   குளித்துக்கொண்டிருந்தவள் திடீரென நிமிர்கையில், கதவில் போட்டிருந்த ஒரு துணியையும் காணவில்லை. முழு நிர்வாணமாகக் குளித்துதான் அவளுக்குப் பழக்கம். அத்தையும் இல்லை, எங்கோ கல்யாணத்துக்குப் போயிருக்கிறாள். சாயங்காலம்தான் வருவாள். முண்டக்கட்டையாக நின்று யோசித்தாள். ரூமுக்குப் போக வேண்டும் என்றால், மாமா அறையைத் தாண்டித்தான் போக வேண்டும். வாளியைத் திருப்பிப் போட்டு ஜன்னலில் மறைப்புக்கு இருக்கும் அட்டையை எடுத்தாள். எப்போதாவது எண்ணெய் விற்க வரும் வாணிபச்சி, அவர்களின் இரண்டரை அடி சந்தில் அதிக ஆள் புழக்கமில்லாததால் கொஞ்ச நேரம் கட்டையைச் சாத்துவாள். எட்டிப் பார்த்தால் யாரும் இல்லை. அந்த முட்டுச்சந்துக்குள் வருவதற்கு யாருக்கும் வேலையும் இல்லை; தேவையும் இல்லை. வாளி மேல் உட்கார்ந்தாள் – எவ்வளவு நேரம் எனத் தெரியாது. நடுநடுவே மாமனாரின் செருமல் சத்தம்.

   புளிச்சென்று எச்சில் துப்பும் சத்தம் வெளியே கேட்க, பிரயாசையுடன் ஏறி எட்டிப்பார்த்தாள். எண்ணெய்காரக் கிழவிதான் படுத்திருந்தாள். இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். காது சுமாராகத்தான் கேட்கும். 200ml எண்ணெய் கேட்டால் 400ml ஊற்றுவாள். ``நான் எரநூறுதானே கேட்டேன். எதுக்கு கூட ஊத்தின?” என்று கேட்டால், ``சேர்த்துக் கொடு ஆயி” என்பாள். ``அவ, எண்ணெய் விக்கிறதுக்காகக் காது கேட்கிற மாதிரி நடிக்கிறா!” என்பாள் கமலம்.

   பழைய பயோரியா பல்பொடி டப்பாவைத் தூக்கி மேலே போட்டாள். ``எந்த எடுபட்ட முண்டடி என் மேல என்னத்தையோ விட்டெறியுறது?” என்றபடி எழுந்தவள், இவள் வெளியே கையை நீட்டி ஆட்டுவதை அப்போதான் கவனித்தாள்.

   ``அங்க என்னாத்தா பண்ற?”
    
   ``ஆத்தா... முன்னாடி கொடியில சேலை காயுது, அதை எடுத்துத் தர்றியா?” என்றதும், அந்தக் கிழவி, ஏன் எதற்கு எனக் கேட்காமல் எடுத்து வந்தாள். அவளால் எட்டிக்கொடுக்க முடியவில்லை. சேலையை எண்ணெய்ச் சட்டியின் மேல் வைத்து, தலையில் தூக்கியபடி சுவர் ஓரமாக நின்றாள். அப்போதும் கை எட்டவில்லை. தண்ணி போகும் தூம்பைக் குத்துவதற்கு மூலையில் சாத்தியிருக்கும் குச்சியால்  சேலையை மெதுவாக எடுத்து, கையில் பிடித்தாள் பரமேஸ்வரி.

   சேலையை ஒரு மாதிரி கட்டிக்கொண்டு கதவைத் திறந்தால் மொத்த உருப்படியும் கதவுக்குப் பக்கத்திலேயே கிடக்கிறது. யாரையும் சந்தேகப்பட முடியாத மாதிரி, மாமனார் அறையைத் தாண்டிப் போனாள். மாமனார் செருமினார். அவரைப் பார்க்காமல் கடந்து போனாள்.

   புருஷன் இரண்டு நாள்கள் கழித்து வந்தான். இவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனாக ஒருநாள் கேட்டான், ``இப்ப எதுவும் பிரச்னையிருக்கா?”

   ``இல்லை” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள். அவனும் இந்தப் பதிலைத்தான் விரும்பியிருப்பான்போல.

   செவ்வாய்க்கிழமை விரதத்தில் மல்லிகாக்கா கேட்டாள், ``என்னடி ஈஸ்வரி, சும்மாவே இருக்க. என்னதான் பண்றீங்க ரெண்டு பேரும்?” பரமேஸ்வரி பதில் ஒன்றும் சொல்லவில்லை. பச்சரிசி மாவை அழுத்திக் கொழுக்கட்டை பிடிக்க, விகாரமான ஓர் உருவம் வந்திருந்தது.

   காலையிலிருந்து பரமேஸ்வரிக்குப் பதற்றமாக இருந்தது. மாமனார், அவளிடம் நேரடியாகவே ``வர மாட்டியா?” எனக் கேட்டார். இவள் ஒரு பார்வை பார்த்துவிட்டு, காபி டம்ளரை நங்கென வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

   அத்தைகாரி போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். ``மாமா ரூமைக் கொஞ்சம் கூட்டுறியாமா? எனக்கு முடியலை!” என்றார். மாமா குளிக்கப் போயிருந்தார். கூட்டும்போதுதான் கவனித்தாள், கடிகாரம் நின்றிருந்ததை. நாற்காலியை நகர்த்தினாள், பாச்சை கத்துவதுபோல் கத்தியது. கால் பக்கம் இரண்டு பெரிய ஆணிகள் லேசாக லூஸாகியிருந்தன. இவள் அவற்றை மேலும் லூஸாக்கினாள். ஒன்றை உருவி மறுபடியும் செருகினாள்.
   துவைக்கவேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டு கண்மாய்க்குக் கிளம்பினாள். ஜமுனாவை வழியில் பார்த்தாள். இருவரும் பேசிக்கொண்டே துணிகளுக்கு சோப் போட ஆரம்பித்தனர்.

   யாரோ ஓடிவந்தார்கள். ``உன் மாமா சேரோடு கீழ விழுந்துட்டார். அவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போறாங்க!”

   ``இந்தா வர்றேன்” என்று சொன்ன பரமேஸ்வரி, நிதானமாக சோப் போட்டு, துணியைத் துவைத்து, வாளியில் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

   இடுப்பெலும்பு முறிந்திருந்தது. ஒரு மாசம் செண்பகா ஆஸ்பத்திரியில்  வைத்துப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு அழைத்துவந்தார்கள். எல்லாம் படுக்கையில்தான். அத்தைதான் கஷ்டப்பட்டாள். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.

   மாமியார்காரி, அடுப்படிப் பக்கம் வருவதே இல்லை. பரமேஸ்வரிதான் சமையல். பரமேஸ்வரிக்கு எப்போதும் இனிப்பு தூக்கலாகப் போட்டுச் சாப்பிடுவதுதான் பிடிக்கும். காலையும் மாலையும் அவள்தான் வீட்டில் காபி போடுவாள்.

   மாமனார் காலில் புண் ஆறவேயில்லை. டாக்டர் ``சர்க்கரை அளவு கூடிவிட்டது’’ என்றார்.

   பரமேஸ்வரி உண்டானாள். ஒன்பதாவது மாசம் வளைகாப்பு முடிந்து அலையாங்குளம் புறப்பட்டாள். ஊரில் வைத்துதான் பிரசவம் பார்க்க வேண்டும் எனக் கல்யாணத்தின்போதே பேச்சு. பரமேஸ்வரி போன 15-வது நாளில் மாமனார் இறந்துபோனார். வயிற்றுப் பிள்ளைக்காரி அலையவேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள்.

   ராமச்சந்திரன், ``அப்பா எப்பவும் உட்காரும் மரச்சேரில் வைத்துதான் போட்டோ எடுக்க முயற்சி செய்தார்களாம். முடியாததால் படுக்கவைத்து போட்டோ எடுக்கப்பட்டதாம்’’ எனச் சொன்னான்.

   மூன்று மாதப் பிள்ளையோடு வீட்டுக்கு வந்தவளை, மூத்தவரின் சம்சாரம் பிச்சையம்மாதான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். உள்ளே நுழைந்த பரமேஸ்வரி கடிகாரத்தைப் பார்த்தாள். ஓடிக்கொண்டிருந்தது.

   முன்பைவிடக் கூடுதலாக நொறுங்கிப் போயிருந்த அத்தை, ``பக்கத்து வீட்டு முருகேசு மகன்தான் வந்து சாவிகொடுக்கிறான்” என்றாள்.

   அந்தக் கடிகாரம், அதற்குப் பிறகு நீண்டநாள் ஓடிக்கொண்டிருந்தது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   பிறை நிலா   சிறுகதை     பிறை நிலா
   நியதி வரதன்
   காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது .
   சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் போதும் என்பது போல் உடுத்தி விட்டு ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள் .சாலை நெரிசல் இல்லையென்றால்
   அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பதினைந்தே நிமிடத்தில் சென்று விடலாம் ஆனால் நகரை பொருத்தவரையில் காலை நேர போக்கு வரத்து நெரிசலுக்கு அது சாத்தியம் இல்லாத ஒன்று .அதனால் சற்று முன்பாக கிளம்பி விடுவாள் .
   பேருந்து நெரிசலில் சிக்கி அலுவலகம் போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அவளுக்கு.அன்று அதிசயமாக ஜன்னலோர இருக்கை கிடைத்தது.ஒரு காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சி தந்திருக்கும் இந்த ஜன்னலோர இருக்கை.அதில் அமர்ந்து பேருந்தில் ஒலிக்கும் பாடலை கேட்டவாறு வெளிப்புறத்தல் நகரும் காட்சிகளை ரசித்தவாறே செல்வது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
   ஆனால் இப்போது அப்படி இல்லை ஏதோ "இருப்பதுக்கு ஒரு இடம் கிடைத்து விட்டதே"என்பது போன்றே இருந்தது.பேருந்தில் ஒலிக்கும் பாடல் கூட அவளுக்கு தலைவலியை தான் தந்தது."அலுவலகம் வந்து போக ஒரு பைக் வாங்கிகொள்"என அவள் தோழி நிலா சொல்வது அப்பொழுது தான் நினைவுக்கு வரும்.ஆனால் அவள் கணவர் அது பாதுகாப்பு இல்லையென மறுத்து விட்டார்.
    அம்மா அப்பாவிடம் அடம்பிடத்து வாங்கிய பைக் இப்போது தங்கை ஓட்டி திரிகிறாள் . அந்த அடம் பிடிக்கும் குணம் இப்பாது எங்கே போனதென்றே தெரியவில்லை. அன்றாட வாழ்வின் அழுத்தம் ,பொருப்பு அவளை மாற்றி விட்டது என்றே சொல்லலாம்.
   அலுவலகம் சென்று அவள் இருக்கையில் அமர்கையில் ,நிலா சிரித்த முகத்துடன் அன்று தான் மலர்ந்த மலர் போல அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தாள். என்னதான் தோழியாக இருந்தாலும் நிலாவை காணும் போது சற்று பொறாமை ஏற்படுவதை வித்யாவால் தவிர்க்க முடியவில்லை.
   அவள் உடுத்தும் உடை .அணியும் நகை என அணைத்தும் ரசிக்கும் படி தான் இருக்கும் . அவளுக்கு நிலா என்று பெயர் வைத்ததில் தவறே இல்லை. அவ்வளவு பிரகாசம் அவள் முகத்தில்.
   ஆறு மாதங்களுக்கு முன்பு தான் நிலா இந்த அலுவலகத்தில் சேர்ந்தாள். அவள் சேர்ந்த புதிதில் ,ஆண்களிடம் சகஜமாக பழகும் விதமும் . அவள் உடுத்தும் ஆடையும் அவள் மேல் தவறான அபிப்ராயத்தையே பெரும்பாலானோருக்கு ஏற்படுத்தியது .
   ஆரம்பத்தில் திருமணம் ஆகாதவள் என்றே அனைவரும் எண்ணினர் . திருமணம் ஆனதிற்கான எந்த வித அறிகுறியும் அவள் இடத்தில் இல்லை . என்னதான் நாகரீக பெண்ணாக இருந்தாலும் ஒரு மெட்டியாவது அணியலாமே என பலரும் சலித்து கொண்டனர். கணவர் வெளிநாட்டில் என்பதால் எவ்வளவு சுதந்திரம் இவளுக்கு என தங்களது பொறாமையை பல பெண்கள் வெளிப்படையாகவே வெளிகாட்டினர்.
   வித்யாவிற்கும் இவ்வாறான எண்ணங்கள் வராமல் இல்லை . அதனால் நிலாவுடன் பேசவோ பழகவோ முன்வரவே இல்லை அவள். ஒரு நாள் வித்யாவின் கணவருக்கு வாகன விபத்தில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்க பட்ட வேளையில் நிலா தான் தானாக முன் வந்து பண உதவி மட்டுமின்றி இதர உதவிகளையும் வித்யா கூடவே இருந்து செய்து கொடுத்தாள். அதன்பிறகே வித்யா ,நிலாவை தன் தோழியாக ஏற்று கொண்டாள். அவளுடன் பழகிய பின் நாட்களில் நிலாவின் குணம் அவளுக்கு மிகவும் பிடித்து போனது .
   கள்ளம் ,கபடமில்லாத குழந்தை மனம் நிலாவின் மனம் என அறிந்த பிறகு அந்த ஆங்கில வரிகள் அவள் கண் முன் வந்தன" don't judge a book by its cover "
   ஒரு நாள் மதிய இடைவேளையில் வித்யா பேச்சு வாக்கில் " எப்போ குழந்தை பெத்துக்குற போற"என்றதுக்கு"இப்ப என்ன அவசரம் அதுக்கு கொஞ்ச நாள் ஃப்ரீயா இருந்துட்டு போறனே"என்பாள் . மிஞ்சி போனால் வித்யாவை விட இரண்டு வயது தான் குறைவாக இருப்பாள் . இரண்டு வருடங்களுக்கு முதல் ஐந்து வயது மகனுக்கு தாய் வித்யா . சில நேரம் நிலாவின் வாழ்க்கையை கண்டு பெருமூச்சு விட்டு கொள்வாள் வித்யா .
   கணவர் வெளிநாட்டில் . எந்த வித கட்டுப்பாடும் இல்லை.பணத்திலும் குறைவில்லை. அழகை ஆண்டவன் அள்ளி கொடுத்திருக்கிறான். புகுந்த வீட்டு பிரச்சனை இல்லை."மாமியாரா? அவங்க எனக்கு அம்மா மாதிரி" என்பாள் அடிக்கடி.
   வித்யாவிற்கு திருமணம் முடிந்து மூன்றாம் மாதத்திலேயே அவளின் மாமியார் "என்னம்மா,ஏதும் விசேஷமா"என கேட்க தொடங்கி விட்டாள்.
   குழந்தை பிறந்து ,ஒருவருடம் கழித்து வேலைக்கு போக தொடங்கி விட்டாள் .அலுவலக வேலை ,வீட்டு வேளை என சுற்றி தன்னை கவனிக்க மறந்து போனாள். அதன் விளைவு அவளின் தோற்றம் கலையிழந்து போனது.நிலா அவ்வப்போது எதாவது அழகு குறிப்பு அவளிடம் சொல்லுவாள் .அதையெல்லாம் செய்ய ஏது நேரம்.
   நிலாவை பார்க்கும் போது "கடவுள் ஒரு சிலருக்கு மட்டுமே இப்படி ஒரு வாழ்க்ககையை தருகிறார் . கொடுத்து வைத்தவள் என மனதிற்குள்ளே எண்ணி கொள்வாள்.
   இரண்டு நாட்களாக நிலா அலுவலகத்திற்கு வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடம்பு சரியில்லை என்றே விடுப்புக்கான காரணத்தை மேலதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். நேரில் சென்று பார்த்து விட்டு வருவோம் என அவள் வீட்டிற்கு சென்றாள் வித்யா.
   முகவரி தெரியுமமே தவிர இன்று தான் முதன் முறையாக வீட்டிற்கு வருகிறாள். காலிங் பெல்லை அடித்தவுடன் சற்று தாமதத்திற்கு பிறகே கதவு திறக்கப்பட்டது . அங்கு ஐம்பது வயது மதிக்க தக்க பெண்மணி நின்றிருந்தார். நிலாவின் அம்மாவாக தான் இருக்க வேண்டும் . அவளின் சாயல் இருந்தது. ஆனால் நிலாவை போன்ற பிராகசம் இல்லை . சோகம் பதிந்த முகம் அது.கண்களில் ஒளி இல்லை . அழுது கருமை படிந்த கண்கள் அவை.
   யார் என்பது போலிருந்தது அவள் முகபாவனை
   "நான் வித்யா ,நிலா வீடு இது தானே? "
   "ஓ,வித்யாவா உள்ள வா! நிலா உன்னை பத்தி சொல்லிருக்கா ,நானே உன்னை பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்"அவள் சொல்லி முடிப்பதற்குள் அறையிலிருந்து அவசரமாக வெளியே வந்த நிலா"ஹேய் வித்யா , உள்ளே வா ,உட்கார்,அம்மா வித்யா வுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வாங்க"
   "என்ன பேச விட மாட்டியே"என்றபடி சமையலறைக்கு போனாள் நிலாவின் அம்மா சாந்தி.
   "ஏன் ,உடம்புக்கு என்னாச்சு , ?""ஒன்னுமில்லை ஃபீவர் தான் .மாத்திரை எடுத்திட்டு இருக்கேன் சரியாகிவிடும்"
   "ஏன் ஃபோன் ஷ்விச் ஆஃப் ல இருக்கு எத்தனை தடவை உன்க்கு ட்ரை பன்னினேன் தெரியுமா ?"
   "ஹேய் ,'சாரி 'வித்யா ,ஃபோன் கால் வந்துட்டே இருந்துது என்னால ரெஸ்ட் எடுக்க முடியல அதான் ஆஃப் பன்னிட்டேன்"
   "உன் வீட்டுக்கார் எப்படி ஃபோன் எடுப்பார்"?
   ஆ...அது.. அதான் வீட்ல லான்ட்லைன் இருக்குல்ல அதுக்கு கால் பண்ணுவார் "குரலில் தடுமாற்றம்
   "என்ன நிலா முகமெல்லாம் வாட்டமா இருக்கு . கண்ணெல்லாம் வீங்கி ,சிவந்திருக்கு ,ஆர் யு ஓ.கே ?"
   "காய்ச்சலால் அப்படி இருக்கு .நைட் ஒழுங்க தூங்கல அதான் கண் சிவந்திருக்கு "
   "ஏன் பொய்க்கு மேல பொய்யா சொல்ற ,அவ உன் தோழி தானே உண்மையதான் சொல்லேன் . யார்கிட்டையும் சொல்லாம மனசுக்குள்ளயே வச்சு ஏன் அழுற,யார் கிட்டாயாவது சொன்னா தான் மன பாரம் தீரும்,இப்படியே இருந்த உன்னை பார்த்து பார்த்து மனசு தாங்காம நான் சீக்கிரம் போய் சேர்ந்திடுவேன்"அழுகையும் கோபமும் கலந்திருந்தது சாந்தியின் குரலில்.
   வித்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை .நிலாவன் வாழ்வில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெளிவாக புரிந்தது.
   நிலா மௌனமானாள். கண்களில் நீர் அணையை உடைத்த வெள்ளம் போல் ஓடிகொண்டிருந்தது . நிலாவை அப்படி ஒரு கோலத்தில் அவள் பார்த்ததே இல்லை. என்னசெய்வதென்றே தெரியவில்லை வித்யாவிற்கு.
   "என்ன பிரச்சனை நிலா,விரும்பினா எங்கிட்ட சொல்லு ,என்னால எதாவது செய்ய முடியுமானு பார்கிறேன் . ப்ளீஷ் அழாத" "எழுந்து உள்ளே போனவள் வரும் போது கையில் சில புகைபடங்கள்
   "இவர் தான் என் முதல் கணவர் "
   'முதல் கணவரா'அப்படி என்றால் ...
   அவள் காட்டிய புகைப்படம் அவள் திருமணத்தன்று எடுக்கப்பட்டது போலும்.நிலா இதில் இன்னும் அழகாக இருந்தாள். அவளுக்கு பொருத்தமே இல்லாத கணவர் . எப்படி இவள் சம்மதித்தாள் ?
   நான் கல்லூரி படிப்பை முடிச்சது லண்டனில் தான் "லண்டனா ?வாயடைத்து போனால் வித்யா .
   "அங்க படிக்கும் போது நிறைய பேர் எங்கிட்ட ப்ரபோஷ் பண்ணினாங்க ஆனால் யாரையும் எனக்கு கல்யாணம் பன்ற அளவுக்கு பிடிக்கல . அவங்க கிட்ட நான் எதிர் பார்த்த காதல் இல்லை.நான் எதிர் பார்த்தது என் அப்பா என்னோட அம்மா மேல வச்சிருந்த காதல் மாதிரியான ஒரு காதலை தான் . அப்பா ,அம்மா காதலிச்சு தான் திருமணம் செய்து கொண்டார்கள் . அம்மா வசதியான வீட்டு பெண் ,அப்பா அவங்க வீட்டு கார் ட்ரைவர் ,அம்மாவை திருமணம் முடிச்ச பிறகு எல்லாரும் ஒதுக்கினாலும் அவரோட சொந்த உழைப்பால இரவு பகலா உழைச்சு ட்ராவல்ஸ் நடத்தி முன்னேறினார்.
   அம்மாவ ராணி மாதிரி பார்த்தார்.அவரை பார்க்கும் போது தான் நினைப்பேன் எனக்கு வர போர கணவர் காசு பணம் இல்லைனாலும் அன்பா இருந்தா போதும்னுாஅம்மா அப்பா கிட்ட சொல்லிட்டேன் எனக்கு பண வசதி இருக்கிற மாப்பிள்ளளைதான் வேணும்னு இல்லை அன்பா ,நல்ல பையனா இருந்தா போதும்னு. அழகு ,பணம் நிறைந்த நிறைய பேர பார்த்திருக்கிறேன் ஆனால் நான் எதிர் பார்த்த அந்த மனசு இல்லை.
   நான் இந்த கால பெண்ணா இருந்தாலும் என் எதிர் பார்ப்பு பழைய கால கணவன் ,மனைவி மாதிரியான ஒரு குடும்ப வாழ்க்கையை தான் . சொந்ததிலே ஒரு பையன் இருக்கிறதா சொல்லி இவரை பார்த்தாங்க அழகு இல்லனைாலும் நல்ல மனசு இருக்கும்னு நம்பினேன் . ஊர்ல எல்லாரும் அவரை பத்தி சிறப்பாதான் சொன்னாங்க. சந்ததோஷமாதான் கல்யாணம் பண்ணினேன்.
   அப்பறம் தான் தெரிய வந்தது அவனுக்கு என் மனசு மேல காதல் இல்லை என் அழகு மேல் தான் காதல்னு. குழந்தை பிறந்தா அழகு போய்விடும்னு குழந்தை இப்போதைக்கு வேணாம்னு தள்ளி போட சொல்லிட்டான் . அவன் அழகு இல்லைன்ற தாழ்வு மனபான்மையை என் மூலமா தீர்த்து கொள்ள நினைச்சான். மத்தவங்க கிட்ட என்னை அறிமுகம் படுத்தும் போது அவ்ளோ பெருமிதம் அவன் முகத்தில இருக்கும்.அழகை ஆராதித்தவன் போக போக அதவைத்தே சந்தேக பட ஆரம்பித்து விட்டான் .
   நான் எங்கேயும் போக கூடாது ,யாரோடும் பேச கூடாது . நல்லதா உடுத்த கூடாதுனு நிறைய கட்டுபாடு. சந்தேகம் எல்லை தாண்டி போய்விட்டது . மறுத்து பேசினால் அடி ,உதை. இப்படி ஒரு வாழ்க்கை தேவை இல்லை என்று விவாகரத்து செய்து அம்மா ,அப்பா கூட இருந்தேன். ஒரு நாள் அப்பாவும் மாரடைப்புல இறந்திட்டார்
   கல்யாணத்தில இருந்த நம்பிக்கையே போய்டுச்சு. அம்மா ,கட்டாயபடுத்தி அடுத்து ஒரு கல்யாணம் பண்ணி வச்சாங்க .
   அவங்க சந்தோஷத்திற்காக பண்ணிகிட்டேன். நல்லாதான் பாத்துகிட்டான் . எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மா பேச்சை கேட்டு கேட்டு என் மேல வெறுப்பு வர ஆரம்பிடுச்சு. எவ்ளவோ ட்ரீட்மெண்ட் பார்த்தும் சரிவரல. என்னோட பணத்திற்காக என்னோடு குடும்பம் நடத்திட்டு இருந்தான். சொத்தை எல்லாம் அவன் பேர்ல மாத்தி தர சொல்லி தொல்லை பண்ணினான் . நான் மறுக்க கடைசியில என்னை வேணாம்னு விவாகரத்து நோட்டீஷ் அனுப்பிட்டான். அதான் மன ஆறுதலுக்கு இந்த ஊருக்கு வந்து ,வேலை பாத்திட்டு இருக்கனே
   இவ்ளோ சோகத்தையும் தாங்கிட்டு எப்டி நிலா இப்டி இருக்க?
   "வேற எப்டி இருக்க சொல்ற வித்யா .என் சோகத்தை எல்லார்டையும் சொல்லி அழ சொல்றியா? மத்தவங்க பரிதாப படுறது எனக்கு பிடிக்காது. நான் சொன்னாலும் அதை காரணமா வச்சு சில ஆண்கள் என்னை நெருங்க பார்பார்கள். அதான் கணவர் வெளிநாட்டில்னு பொய் சொன்னேன். தாலியும் ,மெட்டியும் புனிதமானதா நான் நினைக்கிறேன் புனிதமே இல்லாதவனுக்காக அதை நான் அணிய விரும்பல. என் காது படவே என்னை பத்தி நிறைய பேர் தப்பா பேசுனாங்க . அதை பத்தி நான் கவலை படல என்னை பத்தி எல்லார்டையும் விளக்கம் சொல்ல முடியுமா ? நான் யார்னு என் மனசாட்சிக்கு தெரிந்தால் போதும்.சில நேரம் கடவுள் மேல தான் எனக்கு கோபம் வரும்.
   இந்த அழகையும் .பணத்தையும் அளவுக்கு மீறி ஏன் கொடுத்தார்னு!.யாருக்கும் என் மனசு தெரிய மாட்டேனுதே!
   நீ கொடுத்து வைத்தவள் வித்யா எவ்ளோ அக்கரையான ,அன்பான கணவர்.அழகான குழந்தை . சில நேரம் தனிமையில் இருக்கும் உன்னோட மகனை கூட்டிட்டு வந்து என்கூட வச்சுக்களாமானு தோனும்.ஒரு குழந்தை இருந்தால் இப்படி பழயை நினைவெல்லாம் நினைக்க நேரம் கிடைக்காதுல்ல?
   உன்னை பார்க்க பொறாமையா இருக்கு வித்யா.நல்ல கணவர் ,குழந்தை தான் ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியே அந்த வகையில நான் அன்லக்கி"என்றாள் நிலா
   இவ்வளவு நாளும் அவள் கண்ணுக்கு தெரிந்தவள் நிலா இல்லை பிறை நிலா
   மீண்டும் அந்த ஆங்கில வரிகள் வித்யாவின் கண் முன்னே
   ''Don't judge a book by its cover ''
    
   https://www.facebook.com/mangayarmalar
  • By நவீனன்
   ஒரு கோப்பை காபி - சிறுகதை
       சிறுகதை: ஜெயமோகன், ஓவியங்கள்: ஸ்யாம்
    

   நான் மார்த்தாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவள் கணவன்தான் எடுத்தான். மார்த்தா ஓய்வு நாளில் செல்பேசியைப் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட வார இறுதி.

   ``ஹாய், நான் சாம்’’ என்றான்.

   என் பெயரைச் சொன்னதும், உற்சாகமாக ``ஹாய், எப்படி இருக்கிறாய்?” என்றான்.

   நான் உற்சாகத்தைக் காட்ட முயன்றாலும் என் குரல் காட்டிக்கொடுத்தது. ``நலமாக இருக்கிறேன்...” என்றேன். “எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.”

   அவன் ``என்ன ஆயிற்று? நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றான்.

   ``எடுத்துச் சொல்லும்படி நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால்...’’ என்று தயங்கினேன். ``நான் மார்த்தாவைச் சந்திக்க வேண்டும். தனிமையில். அவளிடம் சற்று நேரம் பேச வேண்டும்.”

   அவன் ``ஆம், நீ அவளிடமே பேசலாம். அவளால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்” என்றான். ``அவள், உள்ளே வேலையாக இருக்கிறாள். சற்றுப் பொறு.”

   மார்த்தா பேசியபடி வருவது கேட்டது. அவளுடைய இரு பெண் குழந்தைகளின் குரல்கள். ``ஹாய் மகா, எப்படி இருக்கிறாய்? குரல் கேட்டு நெடுநாள்களாகின்றன” என்றாள்.

   “நான் உன்னைச் சந்திக்க வேண்டும் மார்த்தா.”

   அவள் ஒரு கணம் தயங்கி ``திங்கட்கிழமை சந்திக்கலாம், சாயங்காலமா” என்றாள்.

   ``இல்லை, நான் உடனே சந்திக்க வேண்டும். இன்றைக்கே. முடியுமென்றால் இன்னும் சில மணி நேரத்தில்.”

   அவள் ``என்ன சொல்கிறாய்? இன்று விடுமுறை. சாம் வீட்டில் இருக்கிறார். குழந்தைகளுக்கு விடுமுறை” என்றாள்.

   ``மார்த்தா” என்றபோது என் குரல் இடறியது. ``நான் இக்கட்டில் இருக்கிறேன். மிகப்பெரிய துயரத்தில் இருக்கிறேன். எனக்கு வேறு எவரையும் பார்க்கத் தோன்றவில்லை... வேறு யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்.”

   அவள் ``ஜானுவுக்குத் தெரியுமா?” என்றாள்.

   ``தெரியாது” என்றேன்.

   ``மன்னித்துவிடு மகா. அது சரியல்ல.”

   அவள் தொலைபேசியை வைக்கப்போகிறாள் என எண்ணி, ``மார்த்தா... மார்த்தா...” என்று கூவினேன். ``நான் உன்னைச் சந்தித்தாக வேண்டும். இல்லாவிட்டால், நான் செத்துவிடுவேன்!”

   அவள் பெருமூச்சுடன் ``சரி, நீ இங்கேயே வா” என்றாள். ``சாம் இன்றைக்கு வெளியே போக வேண்டும் என்று சொன்னார். நான் சொல்லிக்கொள்கிறேன். எப்போது வருவாய்... சாயங்காலமா?”

   நான் ``ஒரு மணி நேரத்தில்...” என்றேன்.

   ``என்ன சொல்கிறாய்... எங்கே இருக்கிறாய்?”

   நான் ``மார்த்தா, நான் உன்னைச் சந்திக்கக் கிளம்பி வந்துவிட்டேன். வந்துகொண்டே இருக்கிறேன். ஊருக்கு இன்னும் 70 கிலோமீட்டர்தான்.”

   அவள் பெருமூச்சு விட்டு ``வா” என்றாள்.

   நான் சென்றபோது சாம் பட்டறையில் இருந்தான். என் காரின் ஒலி கேட்டு வெளியே வந்து ``ஹாய்” என்றான். கையில் ரம்பம், உடலெங்கும் மரப்பொடி.

   ``என்ன வேலை?” என்றேன்.

   ``ஒரு புத்தக அடுக்கு... சிறியது” என்றான். ``மார்த்தா உள்ளே இருக்கிறாள்.”

   நான் ``நன்றி” என்றேன்.

   ``நீ வருத்தமாக இருக்கிறாய்...” என்றான் சாம்.

   ``ஆமாம் சாம்” என்றேன்.

   ``மார்த்தாவிடம் சொல், அவள் எல்லாவற்றுக்கும் தீர்வு

   வைத்திருப்பாள், வாழ்த்துகள்.”

   அவன் உள்ளே செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மார்த்தா முன் பக்கம் நீர்க்காப்பு உடையுடன் வெளியே வந்து புன்னகைத்து ``வா...” என்றாள். நான் உள்ளே சென்றேன். கோட்டைக் கழற்றி நிலைக்கொக்கியில் மாட்டும்போது ``குழந்தைகள் எங்கே?” என்றேன்.

   ``நீச்சல்” என்றாள். கூடத்தில் சோபாவில் அமர்ந்தேன்.
    
   அவள் ``என்ன குடிக்கிறாய்... இந்தியக் காபி?” என்றாள். நான் புன்னகைத்தேன்.

   16 ஆண்டுகளுக்கு முன்னர் அவள் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ வந்தபோது நான் அருந்தும் இந்தியக் காபி என்னும் பொருளைக் கண்டு திகைத்தாள். ``ஏறத்தாழ டிம்ஹார்ட்டன் காபி போல” என்று கண்டுபிடித்தாள்.

   ``இது, இந்திய நவீனப் பண்பாட்டின் சரியான அடையாளம். காபிப்பொடி ஐரோப்பியர் கொண்டுவந்தது. சிகிரித்தூள் நாங்கள் கண்டுபிடித்தது. பாலும் சீனியும் போட்டு கீர்போல அதைச் செய்வது எங்கள் தொன்மையான பாரம்பர்யம்” என்றேன். ``நாங்கள் அந்த மூன்று அம்சங்களின் வெற்றிகரமான கலவை, தெரியுமா?”

   அவள் கண்களில் நீர்வரச் சிரித்தாள். அன்றெல்லாம் எல்லாவற்றுக்கும் சிரித்துக்கொண்டிருந்தோம்
   .
   மிகச்சரியான ஃபில்டர் காபி. அதைக் கையில் வாங்கி முகர்ந்ததுமே என் மனநிலை மாறிவிட்டது. முகம் புன்னகையில் விரியும் தசை அசைவை நானே உணர்ந்தேன். அதுவரை முகம் இறுகி இருந்தது என்பது அப்போது தெரிந்தது. அவள் என் எதிரே அமர்ந்துகொண்டு ``பரவாயில்லை, கொஞ்சம் தெளிந்துவிட்டாய்” என்றாள்.

   ``ஆம்” என்றேன்.

   ``தனியாகப் பேச வேண்டுமா... அந்த அறைக்குச் செல்வோமா?” என்றாள்.

   ``ஆம்” என்றேன். தனி அறைக்குள் சென்று அமர்ந்ததும், நான் மேலும் எளிதானேன். கால்களை நீட்டி சோபாவில் அமர்ந்தேன். இதமான குளிர். வெளியே பறவைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. காற்றில் மணி ஓசை எழுந்தது. ``மார்த்தா, நீ மிக அழகாக இருக்கிறாய்” என்றேன்.

   அவள் சிரித்து “நன்றி” என்றாள்.

   ``என்ன பிரச்னை... ஜானுவிடம் ஏதாவது சண்டையா?” என்றாள்.

   நான் அதுவரை அவளிடம் எப்படிப் படிப்படியாக எல்லாவற்றையும் சொல்வது எனத் திட்டமிட்டு ஏராளமான சொற்றொடர்களை உருவாக்கிக்கொண்டு வந்திருந்தேன். ஆனால், நேரடியாக ``மார்த்தா, உனக்கு என் அம்மாவைத் தெரியுமே!” என்றேன்.

   ``ஆம்” என்றாள். ``அப்பா இறந்த பிறகு `இங்கேதான் இருக்கிறார்கள்’ என்று ஒருமுறை சொன்னாய்.”

   ``ஆமாம்” என்றேன். “என் அம்மா, மிகச் சம்பிரதாயமான பின்னணி கொண்டவள்; அப்பாவுக்கு அடங்கி வாய் பேசத் தெரியாமல் 43 ஆண்டுக்காலம் வாழ்ந்தவள். சொந்தமாக அவளுக்கு எனக் கருத்துகள் ஏதும் இருந்ததில்லை. சொந்தமாக உணர்ச்சிகள் இருந்திருக்கலாம். அதைக்கூட அவள் காட்டிக்கொண்டதில்லை.”

   மார்த்தாவுக்கே அதெல்லாம் தெரியும். நான் மார்த்தாவைத் திருமணம் செய்துகொண்ட தகவல் தெரிந்ததும் அப்பா போனில் நாலாந்தரக் கெட்டவார்த்தைகளை இறைத்தார். சாபம்போட்டு மின்னஞ்சல் செய்தார். நான் துணிந்து மார்த்தாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். என்னைத் தெருவிலேயே நிற்கவைத்து வசைபாடினார். அருகே கிடந்த தென்னை மட்டையை எடுத்து அடிக்க வந்தார். அம்மா, கூடத்துக்குள் நின்று ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு வார்த்தை சொல்லவில்லை.

   ``அப்பா ஏழு வருஷங்களுக்கு முன்பு இறந்தார்” என்றேன். ``அது வழக்கமான இறப்பு இல்லை.”

   மார்த்தாவின் முகம் சுருங்கியது. அவள் கண்களில் வந்த மாற்றத்தைக் கவனித்தேன். அவளுடைய ஒவ்வொரு முகபாவமும் எனக்கு எத்தனை நெருக்கமாகத் தெரிந்திருக்கிறது என வியந்தேன். நீளமான மூக்கும் மெல்லிய உதடுகளும் இளம்பச்சைக் கன்னங்களும்கொண்ட ஒடுங்கிய முகம். நான் இளமையில் கண்டிருந்த எலிசபெத் அரசியின் புகைப்படங்களை அவள் நினைவுறுத்தினாள். அவளிடம் நான் முதலில் சொன்னதே அதைத்தான். ஓர் அலுவலக விருந்தில்.

   ``அப்பாவும் அம்மாவும் மட்டும்தான் திருச்சியில் தனியாக இருந்தார்கள். அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம். இரண்டு முறை இதய அடைப்பு வந்தது. ஆனால், அவரே கட்டிய வீட்டை விட்டு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அம்மாதான் அவரைப் பார்த்துக்கொண்டாள். வீட்டில் சமையல் எல்லாம் அவள்தான். ஒரு பெண் வந்து தூய்மை வேலைகளை மட்டும் செய்வாள். அப்பாவைத்தான் தெரியுமே, எது செய்தாலும் குற்றம். எவ்வளவு கவனித்தாலும் போதாது. உடல்நிலை மோசமாகும்தோறும் குணம் கெட்டுக்கொண்டே சென்றது.”

   ``ஆமாம். மறுபக்கம் எதிர்ப்பே இல்லாமல் இருக்கும்போது குரூரம் அப்படி வளர்ந்துகொண்டே போகும்” என்று மார்த்தா சொன்னாள்.

   ``அது ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் உண்டு. என் அப்பா, வீட்டுக்கு வெளியே ஒரு வாயில்லாப் பூச்சி. அவரைவிடப் பணமும் அதிகாரமும் உள்ளவர்களைக் கண்டால், அவரை அறியாமல் குழைய ஆரம்பித்துவிடுவார். அரசாங்க வேலையில் கூழைக்கும்பிடு போட்டே 36 ஆண்டுக்காலம் வேலை பார்த்ததால் வந்த குணம். அந்த இழிவை, அவர் வீட்டுக்குள் இப்படித் திமிர்கொண்டு சமன்செய்துகொண்டார்.”

   மார்த்தா புன்னகைத்தாள். நான் ``அப்பா அன்று காலை சோபாவில் அமர்ந்திருந்தார். அம்மா வெளியே சென்று பால்காரனிடம் பால் வாங்கிக்கொண்டு உள்ளே வந்தாள். வழியில் கால் விரல் நாற்காலி முனையில் முட்டிவிட்டது. வலியுடன் முனகியபடி அவள் குனிந்து நின்றாள். அப்பா அதுதான் சாக்கு என வசைபாட ஆரம்பித்துவிட்டார். வழக்கம்போல அப்போது வாயில் என்ன வருகிறதோ, எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கு அந்த வலியில் எப்படியோ ஒரு வெறி வந்துவிட்டது. பால்செம்பைத் தூக்கி அவர்மேல் அடித்திருக்கிறாள்” என்றேன்.

   ``ஓ” என்றாள் மார்த்தா.

   ``எங்கள் வீட்டில் 50 ஆண்டுகளாக இருக்கும் ஓட்டுப்பித்தளைச் செம்பு. ஒரு கிலோவுக்கு மேல் எடைகொண்டது. அப்பா அடிபட்டதும் ஒரு மூச்சொலி மட்டும் எழுப்பி அப்படியே பக்கவாட்டில் சரிந்துவிட்டார். உண்மையில், அம்மா அதைக் கவனிக்கவில்லை. கோபத்துடன் சமையலறைக்குச் சென்று கொஞ்ச நேரம் நின்றிருக்கிறார். அழுகை வந்து நன்றாக அழுது முடித்த பிறகு வந்து பார்த்தால், சோபாவில் அவர் விழுந்திருக்கிறார். அருகே போய்க் கூப்பிட்டாள். பலமுறை கூப்பிட்டும் பதில் இல்லை. மெள்ள தொட்டு உலுக்கினாள். அப்பா இறந்துகிடந்தார்.”

   மார்த்தா இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டாள். மூச்சு நின்று நின்று வருவதுபோல கழுத்து அசைந்தது.

   ``அம்மா அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள். நான்கைந்து மணி நேரம் மூச்சுப்பேச்சு இல்லாமல் அங்கேயே கிடந்திருக்கிறாள். பிறகு நினைவு வந்து எழ முடியாமல் தவழ்ந்து சென்று, பக்கத்து வீட்டு மாரிமுத்துவைக் கூப்பிட்டாள். அவர்தான் என்னைக் கூப்பிட்டு இறப்புச் செய்தி சொன்னார். நானும் ஜானகியும் உடனடியாகக் கிளம்பிச் சென்றோம். அப்பாவின் சடலத்தை ஆஸ்பத்திரியில் குளிர்ப்பெட்டியில் வைத்திருந்தார்கள். அம்மா, தீவிரக்கண்காணிப்புப் பிரிவில் இருந்தாள். அடிக்கடி மயக்கம் வந்து நினைவிழந்துகொண்டிருந்தாள். அப்பாவின் இறுதிச்சடங்கு நடந்தது எதுவும் அம்மாவுக்குத் தெரியாது.”

   மார்த்தா பெருமூச்சு விட்டாள்.

   நான் ``நான்காவது நாள் கொஞ்சம் நினைவு திரும்பியபோது அம்மா என்னைக் கண்டு கதறி அழுதாள். என்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னாள். `அவளை வெளியே போகச் சொல்’ என்று ஜானகியைப் பார்த்துக் கை நீட்டிக் கூச்சலிட்டாள். நான் ஜானகியை வெளியே அனுப்பிவிட்டேன். அதற்குள் மீண்டும் மயக்கம் வந்துவிட்டது. மீண்டும் நினைவுவந்தபோது கதறி அழுது கூச்சலிட்டாள். அவளால் சொல்ல முடியவில்லை. கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அவள் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதைக் கண்டு நான், உளவியலாளர் டாக்டர் நரேனிடம் சொன்னேன். அவர் ஏழு அமர்வுகளில் அவளிடம் பேசினார். அதன் பிறகு என்னிடம் நடந்ததைச் சொன்னார்” என்றேன்.

   ``உளவியலாளரிடம் சென்றது மிக நல்ல விஷயம். அம்மா அதையெல்லாம் உன்னிடம் சொல்லியிருந்தார் என்றால், அந்த உரையாடலே மிகப்பெரிய சித்ரவதையாக ஆகி, மேலும் சிக்கலை உருவாக்கியிருக்கும்” என்றாள் மார்த்தா.

   ``நரேன் என்னிடம் நடந்ததைச் சொன்னபோது நான் ஆடிப்போய்விட்டேன். என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. கதைகளில்தான் இப்படி நிகழும் என்பதே என் எண்ணம். அவர் சொன்னபோது நான் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. இரவெல்லாம் மனம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அன்றே வீட்டைக் காலிசெய்துவிட்டு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அடுத்த நாள் முதல் நான் மூளையமைதி மாத்திரைகள் போட ஆரம்பித்தேன். நான் சமநிலைக்கு மீள 15 நாள் ஆனது.”

   ``புரிகிறது” என்றாள் மார்த்தா.

   ``நரேன் எல்லாவற்றையும் வழிநடத்தினார். அம்மாவிடம் எதுவும் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், அவரே சில நாளில் சொல்வார் என்றும் சொன்னார். அம்மா உடனே தற்கொலை செய்துகொள்ளத்தான் நினைத்திருக்கிறார். ஆனால், நினைவு தவறிக்கொண்டே இருந்ததால் அதற்கு முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளக்கூட ஓர் ஆரோக்கியம் தேவைப்படுகிறது அல்லவா?”

   நான் சிரித்தபோது மார்த்தா சிரிக்கவில்லை. என் சிரிப்பே கோணலாக இருந்தது என உணர்ந்தேன். ``அம்மாவை நானும் ஜானகியும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டோம். மெதுவாகத் தேறி வந்தாள். நரேன் அவள் செய்தது தவறு அல்ல, அது வெறும் தற்செயல்தான் என்பதைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு சொற்களில் அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். ஏற்கெனவே அவருடைய இதயம் மிகப் பலவீனமாகவே இருந்தது. ``அது ஒரு வகை இயற்கை மரணமேதான்’’ என்றார். பிறகு அம்மாவே அப்படிச் சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் விசா வந்துவிட்டது. அவளை அமெரிக்காவுக்கு அழைத்து வந்துவிட்டேன்.”

   ``அமெரிக்கா கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு, அம்மா என்னிடம் நடந்ததைச் சொன்னாள். சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுதாள். நானும் அழுதேன். நான் அவளை எப்படியெல்லாம் சமாதானம் செய்ய வேண்டும் என்று முன்னரே யோசித்துவைத்திருந்தேன். ஆகவே, அப்போது என்னால் நன்றாகப் பேச முடிந்தது. ஆனால், அழுது முடிந்ததுமே அம்மா தெளிவாகிக்கொண்டே சென்றது எனக்குள் ஏமாற்றத்தை உருவாக்கியது. நான் சொன்ன ஆறுதல்களை எல்லாம் அவள் அப்படியே ஏற்றுக்கொண்டதும், அவள் தவறே செய்யவில்லை என்று நான் சொன்னபோது அவளும் அதை ஒப்புக்கொண்டதும் என் ஏமாற்றத்தை வளர்த்தன.”

   “ஆக, பிரச்னை இதுதான். இல்லையா?” என்றாள் மார்த்தா.

   ``ஆம். அம்மா அமெரிக்கா வந்தபோது ஒரு பக்கம் மிரட்சியுடனும் இன்னொரு பக்கம் குழந்தைத்தனமான ஆர்வத்துடனும் இருந்தாள். விமானநிலையத்தில் எலிவேட்டரில் ஏறுவதற்கு மிகவும் தடுமாறி விழப்போனாள். ஒருவழியாக நான் அவளைப் பிடித்து அதில் ஏற்றியபோதுதான் முதல்முறையாகப் புன்னகை புரிந்தாள். அமெரிக்காவின் குளிரும் வெள்ளை முகங்களும் அவளை அந்நியப்படுத்தக் கூடாது என, நான் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டேன். இங்கு உள்ள கோயில்களுக்கும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கும் சினிமாவுக்கும் அழைத்துச் சென்றேன். நானும் ஜானகியும் யாராவது ஒருவர் எப்போதும் கூடவே இருந்தோம். அம்மாவை தனியாகவே விடவில்லை.”

   ``ஜானுவுக்குத் தெரியுமா?” என்றாள் மார்த்தா.

   ``ஆமாம், அம்மாவே அவளிடம் சொல்லச் சொன்னாள்” என்றேன்.

   `` `அம்மாவை நிறைய செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்’ என்று நரேன் சொன்னார். ஆகவே, ஓர் எண்ணம் வந்தது. இங்கே எனக்குத் தெரிந்த ஓர் அம்மா இந்தியச் சமையல் செய்து இணையம் வழியாக தேவையானவர்களுக்குக் கொடுத்தனுப்பும் தொழில் செய்கிறார். அம்மாவை, அவர்களுக்கு சமையலுக்கு உதவியாக அனுப்பினேன். அம்மா, மிகச்சிறந்த சமையல்காரர். சீக்கிரத்திலேயே அம்மாவின் சமையலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அம்மாவுக்கும் அதில் மிகப்பெரிய ஈடுபாடு வந்துவிட்டது. காலையிலேயே உற்சாகமாகக் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தாள். விதவிதமாகச் சமைக்க ஆரம்பித்தாள். தன் சமையலுக்கு வரும் பாராட்டுகளை என்னிடம் ஒவ்வொன்றாகச் சொல்வாள்.”

   ``அது நல்ல உத்திதான்” என்றாள் மார்த்தா. ``எதையாவது செய்யும்போது மனம் விலகிவிடுகிறது.”

   ``மிகச் சீக்கிரத்திலேயே அம்மா மீண்டுவந்தாள். அவளே இங்கே ஓர் அம்மாவிடம் சென்று ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டாள். ஜானகியிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள். அம்மாவின் மாற்றத்தை ஓர் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். புடைவை கட்டுவதை விட்டுவிட்டாள். கூந்தலைக் குட்டையாக நறுக்கிக்கொண்டாள். அவளே தினமும் காலையில் காரை ஓட்டிக்கொண்டு வேலைக்குச் செல்கிறாள். கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்கிறாள். அங்கே அவளுக்கு என நிறைய தோழிகள் உருவாகிவிட்டார்கள். அவர்கள் சேர்ந்து சுற்றுலாவுக்கெல்லாம் செல்கிறார்கள். அம்மா இப்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர். நிறையவே சம்பாதிக்கிறாள். கிட்டத்தட்ட சுதந்திரமாக வாழ்கிறாள். என் வீட்டில் தங்கியிருப்பதால் மட்டும் என்னிடம் எங்கே போகிறாள் எனச் சொல்கிறாள். மற்றபடி முன்புபோலப் பேச்சு ஏதுமில்லை.”

   மார்த்தா என்னை நோக்கியபடி பேசாமல் இருந்தாள். நானும் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். ``வேறென்ன?” என்றாள்.

   ``மார்த்தா, அம்மாவை மாற்றியது நான். அதில் நான் வெற்றியும் பெற்றேன். ஆனால், என்னால் இந்த மாற்றத்தைத் தாள முடியவில்லை.”

   மார்த்தா ``ஏன்?” என்றாள்.

   ``தெரியவில்லை. என்னால் இப்போது அம்மாவை நேருக்குநேர் பார்க்கவே முடியவில்லை. அம்மாவை நினைத்தாலே என் மனம் எரிகிறது. பல சமயம் இரவுகளில் தூக்கமே இல்லை. நான் இப்போது மீண்டும் மூளையமைதி மாத்திரைகள் சாப்பிடுகிறேன். என்னால் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.”
    
   மார்த்தா கைகளைக் குவித்து அதன்மேல் முகத்தை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

   ``நான் அம்மாவின் பழைய புகைப்படங்களை இரவெல்லாம் பார்க்கிறேன். அம்மாவும் அப்பாவும் நானும் இருக்கும் பழைய படங்களைப் பார்த்தால், நெஞ்சுருகி அழத் தொடங்கிவிடுகிறேன். என் அவஸ்தையை ஜானகியிடம் சொன்னேன். `உனக்கென்ன பைத்தியமா?’ என்கிறாள். `அம்மா மகிழ்ச்சியாக இருப்பதில், உனக்கு என்ன பிரச்னை?’ என்கிறாள். என்னை அவளும் புரிந்துகொள்ளவில்லை. நான் முழுத்தனிமையில் இருக்கிறேன்.”

   என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை. குரல் உடைந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன்.

   ``என் அப்பா இப்போது அடிக்கடி கனவில் வருகிறார். இறந்தபோது இருந்த வடிவில் அல்ல, அலுவலகம் செல்லும் பழைய தோற்றத்தில். ஒருமுறை `சரியாகப் படிக்கவில்லை’ என என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பதுபோல கனவு. அப்பாவின் ஆவி அமைதி அடையவில்லையோ என எண்ணி, ஊருக்குப் பணம் அனுப்பி ராமேஸ்வரத்திலும் காசியிலும் புத்தகயாவிலும் சடங்குகள் செய்யவைத்தேன். திருவண்ணாமலையிலும் சிதம்பரத்திலும் மோட்சதீபம் ஏற்றினேன். ஆனாலும் கனவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.”

   “இரண்டு நாள்களுக்கு முன் ஒரு கனவு. அப்பா சடலமாக உறைந்து கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கிறார். நான் உள்ளே பார்க்கிறேன். சடலமாகவே அவர் அழுதுகொண்டிருக்கிறார். அப்படியே எழுந்து அமர்ந்து நடுங்கினேன். வியர்வை வழிந்தது. மூச்சு சீரடைய நெடுநேரமாகியது.

   காலையில் அம்மா கிளம்பிக்கொண்டிருந்தபோது அவளிடம் `கொஞ்சம் பேச வேண்டும்’ என்றேன். கூடத்திலேயே நின்று `என்ன?’ என்று கேட்டாள். என் கனவைச் சொன்னேன். `ஊருக்குச் சென்று அனைவருமாகச் சேர்ந்து ஒரு சடங்கு செய்தால் அப்பாவுக்கு அமைதி கிடைக்கும்’ என்றேன். முகம் சுளித்து `கிறுக்குத்தனம், இனிமேல் இதைப் பற்றி என்னிடம் பேசாதே!’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

   நான் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்தேன். மாலை, அம்மா அவள் தோழி மேகியுடன் வந்தாள். ஒரே சிரிப்பு, பேச்சு, கும்மாளம். இரவு ஜானுவிடம் சொன்னபோது `அம்மா சொன்னது சரிதான். உனக்குக் கிறுக்கு’ என்றாள். காலையில் அம்மா தோழிகளுடன் மேரியன் ஏரியில் படகுத் தங்கலுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். நான் வீட்டில் அமர்ந்திருந்தேன். கிறுக்குப்பிடித்துவிடும் எனத் தோன்றியது. என்னால் தாங்க முடியவில்லை. உன்னைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

   மார்த்தா தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தலைகுனிந்து சோபாவின் தோலுறையை நெருடிக்கொண்டிருந்தேன். மார்த்தா மூச்சொலியுடன் நிமிர்வதை உணர்ந்து, நிமிர்ந்து நோக்கினேன். ``நான் என்ன செய்ய வேண்டும் மகா?”

   ``எனக்குத் தெரியவில்லை.”

   ``நான் உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். நானும் சாமும் குழந்தைகளும் உன் உறவு என்றே நீ நினைக்கலாம். நீ தனிமையானவனாக எண்ணிக்கொள்ளவேண்டியதில்லை.” 

   ``நன்றி மார்த்தா” என்றேன்.

   ``நீ எதையாவது செய்ய ஆரம்பிக்கலாம் மகா. சாம் போல. கைகளால் செய்யக்கூடிய எதையாவது. மரவேலை, கடைசல்வேலை, தோட்டவேலை. இந்தியர்கள், மூளையை உடம்பிலிருந்து பிரித்துத் தனியாக வைத்திருக்கிறார்கள். அது தானாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.”

   நான் புன்னகைத்தேன். மார்த்தா ``உனக்கு இன்னொரு காபி தேவைப்படும் என நினைக்கிறேன்” என்றாள்.

   ``எப்போதுமே அது உனக்குச் சரியாகத் தெரிகிறது” என்றேன்.

   மார்த்தா இன்னொரு ஃபில்டர் காபி கொண்டு வந்தாள். நான் அதைக் குடித்தபோது மெய்யாகவே மெள்ள அனைத்திலிருந்தும் விடுபட்டேன்.

   ``மார்த்தா, இந்தக் கனவுகள்... நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்? உளவியலாளரைப் பார் என்று மட்டும் சொல்லாதே.”

   ``எனக்குத் தோன்றுவதைச் சொல்லவா?”

   ``சொல்... நிச்சயமாக அது எனக்கு முக்கியமானது.”

   ``நீ ஒருமுறை ஊருக்குப் போய் வா. உன் மதத்தின் சடங்குகளை எல்லாம் முறையாகச் செய்” என, மார்த்தா என் கண்களைக் கூர்ந்து பார்த்துச் சொன்னாள், ``உன் அப்பாவை நீதான் கைதவறுதலாகக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொள். அதற்குரிய எல்லாவற்றையும் செய். மீண்டுவிடுவாய்.”

   ``என்ன சொல்கிறாய்?” என்றேன்.

   ``ஒரு சின்ன உளவியல் நாடகம்... வேறொன்றுமில்லை”

   ``சரியாகிவிடும் என்கிறாயா?”

   ``நம்பு. கண்டிப்பாக!”

   நான் பெருமூச்சு விட்டு கோப்பையை வைத்தேன். ``நன்றி. நீ எப்போதும் சரியானதைச் சொல்வாய் என்று சாம் சொன்னார்.”

   ``அவரிடம் நான் தச்சுவேலை செய்யச் சொன்னேன்” என்று சிரித்தாள். சோழி நிறப் பற்கள். நான் ஜானகியைப் பெண் பார்க்கப் போனபோது அவளுடைய வெண்பற்களைத்தான் முக்கியமாகக் கவனித்தேன்.

   ``நீ சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். இன்று நான் சாமுக்காக இத்தாலியச் சமையல் செய்யலாம் என்றிருக்கிறேன்.”

   ``நிச்சயமாக” என்றேன்.

   ``சரி, சாமிடம் பேசிக்கொண்டிரு. ஒரு மணி நேரம்” என்றாள்

   ``மார்த்தா” என்றேன்

   ``என்ன?” என்று திரும்பினாள்.

   ``நான் வந்தது இதையெல்லாம் சொல்வதற்காக மட்டும் அல்ல.”

   அவள் புருவம் சுருங்கப் பார்த்தாள்.

   ``உன்னிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். மனமார...”

   ``சேச்சே என்ன இது?” எனச் சிரித்தாள்.

   ``இல்லை, நீ என்னை மன்னிக்க வேண்டும்.”

   ``மகா, நான் உன்மேல் கோபமே கொள்ளவில்லை.”

   ``இதுபோதும்... இதுவும் என்னை ஆறுதல்படுத்தும் என நினைக்கிறேன்”  என்றேன்.

   ``அரான்சினி செய்கிறேன். உங்கள் ஊர்ப் பலகாரம்போலவே இருக்கும்...” என்றாள் மார்த்தா. நான் புன்னகைத்தேன்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   வேலைக்காரி – சிறுகதை
   அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.
   `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன்
   `கோகிலம்` என்றாள்
   `கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.
   `இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.
   `எந்த ஊர்` எனக்கேட்டேன்.
   `தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப்போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்
   `எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே `
   `நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்`
   இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.
   `வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்
   `கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்
   அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது
   என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.
   சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது
   கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.
   மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த சட்டி கருகிப்போய்விட்டது.
   `அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்
   `இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது `என்றாள் கோகிலம்
   `நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்
   கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த சட்டியை கிழே இறக்கிவைத்தாள்.
   கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.
   பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி.
   நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.
   அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.
   கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்
   உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.
   சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.
   ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்
   வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.
   ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.
   அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்
   `நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள் `
   மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.
   கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.
   கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்
   என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.
   ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்
   `நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார் `
   `என்ன வேலை` என்று கேட்டேன்
   பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்
   `சரி போயிட்டு வா `என்றேன்
   `டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்
   `அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா`
   `அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம் `
   `அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்
   அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்
   யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.
   என் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்
   `கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்
   `அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா` எனச் சிரித்தாள் மனைவி
   அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்தவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை
   மறுநாள் என் மனைவி சொன்னாள் `கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா அதெல்லாமில்லேங்கிறா`
   `யாராவது செத்துப் போயிருப்பாங்களா` எனக்கேட்டேன்
   `தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு`.
   கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்
   `என்ன வேணும்` எனக்கேட்டேன்
   `எங்க அம்மாவை பாக்கணும்` என்றான்
   `உங்க அம்மாவா. யாரு` எனக்கேட்டேன்
   `கோகிலம்` என்றான்
   கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்
   வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது
   `இங்க எதுக்கு வந்தே` எனக்கேட்டாள்
   `உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்
   `நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்
   `யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் `
   `அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்
   `உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத` என்றான் மகன்
   `ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா `எனக்கேட்டாள்
   அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்
   `உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்`
   `நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா `
   எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்
   அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.
   கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்
   “எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.
   திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.
   அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.
   பெத்து வளர்ந்த மகனை அடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
   முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான்
   அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார் “
   எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.
   “இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே“
   “வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா`
   “அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே“ எனக்கேட்டாள் என் மனைவி
   “நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா“
   அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
   சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்
   மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது
   அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு
   இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.
   அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை
   என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும்.
   உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்
   உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது
   என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்
   “நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“
   எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை
   சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத்துவங்கியிருந்தாள்…!!!
    
   https://www.facebook.com/mangayarmalar/posts/566215233722174
  • By நவீனன்
   ஆபரேஷன் புலி - சிறுகதை
    
    

   மூன்று காரணங்களுக்காக, எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்துவது என நாங்கள் முடிவெடுத்தோம்.

   ஒன்று, புலி எந்த நேரமும் முழு போதையில் தெருவில் அங்குமிங்கும் உலாத்திக்கொண்டே இருப்பது.

   இரண்டு, புலி முழு போதையில் எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் உள்ளே நுழைந்து சமையலறையில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, சோற்றை எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது.

   மூன்று, எங்கள் தெருவுக்குள் புதிதாக யார் நடந்து சென்றாலும் அவர்களை நிறுத்தி அலப்பறை கொடுத்து, அவர்கள் சட்டைப்பையில் கையை விட்டு, தனது குடிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்வது.

   இது அப்பட்டமான ரெளடித்தனம்; பகல் கொள்ளை.

   எங்கள் தெரு, பேருந்துநிலையத்துக்குச் செல்லும் பெரிய சாலையையொட்டிய இன்னொரு குறுகிய சாலை. எனவே, புலியின் நடமாட்டம் அறியாத கிராமத்து மனிதர்களே பெரும்பாலும் புலியின் இரையாகச் சிக்குவார்கள். ஒருசில நேரத்தில் அப்பாவித்தனமாகத் தோற்றமளிக்கும் உள்ளூர் இளைஞர்கள் சிக்கிக்கொள்வார்கள். இதில்தான் எங்கள் தெருவுக்கும், இங்கே வசிக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் பெரும் அவமானம் வந்து சேர்கிறது.  ஆனால், புலியை யாரும் ஒன்றும் பண்ண முடியாது. ஏனெனில், புலி எங்கள் வார்டு கவுன்சிலர். அதுவும் ஆளும் கட்சி கவுன்சிலர்.

   யாராலும் அசைக்க முடியாமல் தொடர்ந்து ஜெயித்துவரும் புலியின் நிஜப்பெயர் சுந்தரமூர்த்தி. அந்தப் பெயர், புலிக்கே நினைவிருக்காது. நல்ல மப்பில் உற்சாக மூடில் இருந்தால், வேட்டியைக் கழட்டி மடித்து வைத்துவிட்டு, அரை நிஜாரில் புலியாட்டம் ஆடிக் காட்டுவது புலியின் ஹாபி. அவரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன்போட்டாலும், ``ஹலோ... நான் புலி எம்.சி (முனிசிபல் கவுன்சிலர்) பேசறேன்’’ என்று சொல்வதுதான் வழக்கம்.

   புலியின் அட்டகாசங்களை இனியும் பொறுப்பதில்லை என, எங்கள் தெரு இளைஞர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி, எதிர்வரும் கவுன்சிலர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி புலியைத் தோற்கடிப்பது என முடிவுசெய்தோம்.

   எங்கள் வார்டு என்பது, மிக நீளமான ஒரு தெரு. அதில் ஒருசில குறுக்குச் சந்துகள், அவ்வளவுதான். மொத்தமுள்ள 1,380 வாக்குகளும் இதற்குள்ளாகவே அடங்கிவிடும். குறுகிய சந்து என்பதால், வாகனங்கள் உள்ளே வர வாய்ப்பில்லை. எனவே, எங்கள் தெருவே பசங்களுக்குக் கிட்டிப்புள், ஐஸ்பாய், கபடி விளையாடவும், பெண்களுக்குப் பாண்டி ஆடுவதற்கான கிரவுண்டாக இருந்தது. இதன் காரணமாகவே எங்கள் தெருவில் இந்த முனையிலிருந்து அந்த முனை வரையிலான அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தோம்.

   சீனு வீட்டு மொட்டைமாடியில்தான் எங்கள் முதல் கூட்டம் நடந்தது. சீனுவின் அண்ணி பத்து, பன்னிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதற்காக அங்கே பெரிய கூரை வேயப்பட்டு, ஒருபுறம் பெரிய கரும்பலகை மாட்டப்பட்டிருக்கும். உட்கார பெஞ்சு, நாற்காலி எதுவும் இருக்காது. தரை முழுக்க பாய் விரிக்கப்பட்டிருக்கும். எந்தப் பக்கம் இருந்தேனும் மலைக்காற்று வீசிக்கொண்டேயிருப்பதால், ஃபேன் தேவைப்படவில்லை.

   முதல் கூட்டத்திலேயே வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். சீனுதான் எங்களின் வேட்பாளர். ரொம்பப் பிகு பண்ணினான். பிறகு ஒற்றைப் பைசாகூட அவனுக்குச் செலவு இல்லை என்ற  உத்தரவாதம் தந்த பிறகே ஒப்புக்கொண்டான்.  தெருவுக்கான பொதுக்காரியம் என்பதால், செலவை நண்பர்களே பகிர்ந்துகொள்ளலாம் என்றும் முடிவெடுத்தோம்.

   கோடை விடுமுறை. எனவே அடுத்த ஒரு மாதத்துக்கு டியூஷன் இல்லை. அவர்கள் வீட்டிலும் வெளியூர் சென்றிருந்தனர். மேலும் மொட்டைமாடிக்குச் செல்லும் படிகள் தெருவில் இருந்தே தொடங்குவதால், யாருக்கும் தொந்தரவின்றி இந்த இடத்தையே தேர்தல் அலுவலகமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

   இப்படிப் பல வசதிகள் இருந்ததால் மட்டும் சீனுவை வேட்பாளராகத் தேர்தெடுக்கவில்லை. உண்மையில், எங்கள் செட்டில் அதுவரையில் எங்கள் தெருவில் எந்த ஒரு பெண்ணுக்கும் காதல் கடிதம் கொடுக்காத இரண்டாவது ஜென்டில்மேன் சீனு மட்டுமே. முதல் ஜென்டில்மேன் நான். `பத்தரைமாத்துத் தங்கம்’ என்பது, எங்கள் தெரு தேவதைகளின் அம்மாக்கள் சீனுவுக்கு வைத்திருக்கும் பெயர்.

   ``டேய் இன்ஜினீயர்... உனக்கு லீவுதானே? நீதான் எலெக்‌ஷன் ஆபீஸ் இன்சார்ஜ்’’ என்றான் மணவாளன்.

   அங்கு இருந்த மொத்தம் 32 பேரில், நான் மட்டும்தான் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் அதிகமாக பொறியியல் பட்டதாரிகள் வராத 90-களின் தொடக்கம் அது. தெருவிலேயே நான்தான் முதல் இன்ஜினீயர் ஆகப்போறேன் என்பதால், அனைவரும் அப்படித்தான் அழைப்பார்கள். ஃபைனல் செமஸ்டர் லீவில் ஊருக்கு வந்திருந்தேன்.

   ``அடிச்சேடா லக்கி பிரைஸ்! ஜஸ்ட், எதிர்வீடுதான் வசுமதியோடது. இங்கு இருந்தபடியே தினமும் பார்த்துக்கலாம்’’ என்று  இளங்கோ காதருகே வந்து சொன்னான். வசுமதி எங்கள் தெருவின் பேரழகி. அட்லீஸ்ட் என் கண்களுக்கு. என்னைப் பார்த்தாலே முகத்தில் ஒரு வெளிச்சம் வந்துவிடும் அவளுக்கு. இரண்டு பக்கமும் ஓர் ஈர்ப்பு இருந்தது. விரைவில் ஒரு கடிதம் கொடுத்து உறுதிசெய்துகொள்ளக் காத்திருந்தேன்.

   ``பார்த்துக்கிறேன். ஆனா, புராஜெக்ட் ரெவியூக்கு காலேஜ்லே கூப்பிட்டா, நடுவுல ரெண்டு மூணு நாள் போய் வரவேண்டியிருக்கும்’’ என்றேன்.

   ``அதெல்லாம் வரப்போ பார்த்துக்கலாம்’’ என்றான் சைக்கிள் கடை ஏழுமலை. எங்கள் பள்ளித்தோழன்.

   நிதிக்குழு, பிரசாரக் குழு எல்லாம் சடசடவென அமைக்கப்பட்டன.

   ``சரி... புலியை எப்படிச் சமாளிக்கப்போறோம்?’’ என்றான் இளங்கோ.

   ``சே... சே! புலி என்னிக்காவது நம்ம வார்டு ஆளுங்ககிட்ட தகராறு பண்ணியிருக்கா என்ன?” என்றேன்.

   ``நம்மகிட்ட ஏதாச்சும் வேலை காட்டினால், புலியோட வாலை ஒட்ட நறுக்கிடவேண்டியதுதான்’’ எனக் கருவினான் ஏழுமலை.

   ``புலியைக்கூட சமாளிச்சிடலாம். முத்தண்ணன் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னுதான் தெரியலை’’ என்றான் சீனு.

   முத்து அண்ணன், எங்கள் தெருவில் விறகு மண்டி வைத்திருக்கிறார். பின்னாடியே வீடு. ரொம்ப நல்ல மனுஷன். எதிர்க்கட்சி வேட்பாளராகத் தொடர்ந்து மூன்று முறை புலியை எதிர்த்து நின்று மூன்று முறையும் தோற்றவர். எங்கள் எல்லோருக்கும் அவரின் விறகு மண்டிதான் எப்போதும் மீட்டிங் பாயின்ட். டீ கணக்கு எப்பவும் அவர் தலையில்தான் விடியும். சிரித்துக்கொண்டே எங்களின் அரட்டைகளை வேடிக்கை பார்ப்பார்.

   ``பேசாம, நாம முத்தண்ணனையே இந்த வாட்டியும் நிறுத்தி ஜெயிக்கவெச்சுடலாமேடா”  என்றான் சீனு.

   ``வாய்ப்பே இல்லை! அந்த ஆளோட பலம் நானூறு ஓட்டுதான். அதுக்குக் குறைவாகவும் வாங்க மாட்டார்... கூடவும் வாங்க மாட்டார்’’ என்று பின்னால் இருந்து சத்தமாகக் குரல்கொடுத்தார் தோழர்.

   ``வாங்க தோழர். நீங்க எப்ப வந்தீங்க?’’

   ``மொதல்லயே வந்துட்டேன். முத்துவாலே இந்த ஜென்மத்துல புலியை ஜெயிக்க முடியாது. புதுமுகம் ஒண்ணைப் போட்டுதான் அடிக்கணும். சீனு நல்ல சாய்ஸ்தாம்பா!’’ என்றார்.

   சீனுவின் முகத்தில் முதல்முறையாக, பீதி மறைந்து ஒரு தெளிவு வந்தது.

   ``அப்போ எங்க சார்புல நீங்களே நில்லுங்களேன் தோழர்?’’

   எங்க தெருவில் பொதுக்காரியம் எது என்றாலும் தோழர்தான் முன்னே இருந்து செய்வார். மாலையில் சின்னப்பசங்களுக்கு பாரதியார் பாடல்கள், ஆத்திசூடி எல்லாம் சொல்லித்தருவார்.

   ``அதெல்லாம் எங்க கட்சி ஒத்துக்காதுப்பா... கட்சியை மீறி நான் தனியால்லாம் நிக்க முடியாது. சீனுவே நிக்கட்டும். நாமெல்லாம் ஒத்துமையா நின்னு அவரோடு மோதிப்பார்த்துரலாம்’’ என்றார் தோழர்.

   ஒரு கோபத்தோடு கூட்டப்பட்ட அந்தக் கூட்டம், ஒரு குறிக்கோளுடன் முடிந்தது.

   நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் நான்கைந்து பேர் சீனுவைத் தூக்கிக்கொண்டு போய், அவன் செலவில் மெட்ராஸ் டீக்கடையில் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு, டி.ராஜேந்தர் படத்துக்குச் சென்றோம்.

   எங்கள் முடிவு ஒன்றும் ரகசியமானது அல்ல! தோழரே எப்படியும் டீக்கடையில் நூறு பேரிடம் சொல்லியிருப்பார். நாங்கள் முதல் ரியாக்‌ஷனைப் புலியிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் வந்ததோ, எதிர்க்கட்சியோட நகரச் செயலாளரிடமிருந்து! எங்களை அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொல்லி ஆள் அனுப்பியிருந்தார்.

   மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி, எங்க ஊர் முனிசிபல் தேர்தலில் ஜெயிக்காது என்பது ஒரு நம்பிக்கை. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிதான் எங்கள் ஊர் முனிசிபாலிட்டியில் எப்பவும் ஆளும் கட்சி.

   நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் பகுதியின் நகரச் செயலாளர் ஒரே நபர்தான். கட்சிக்காரன் எந்த நேரத்தில் அவர் வீட்டுக்குப் போய் எழுப்பினாலும், லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டு முண்டா பனியனுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எப்படியாவது பேசிக் காப்பாற்றி விடுவார்.

   நகரச் செயலாளருடனான சந்திப்புக்கு, மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு வந்து என்னை எழுப்பி உடன் கூட்டிச் சென்றனர். நான், சீனு, ஏழுமலை, இளங்கோவுடன் தோழரும் இணைந்துகொள்ள, நாங்கள் புறப்பட்டோம்.

   நகரச் செயலாளரின் தெருமுனையிலேயே சைக்கிளில் இருந்து இறங்கிக்கொண்டவர், ``நான் கூட வந்தா சரியாயிருக்காது. இங்கியே டீக்கடையில இருக்கேன். நீங்க போய்ப் பேசிட்டு வாங்க’’ எனக் கடைசி நிமிடத்தில் கழன்றுக்கொண்டார் தோழர்.

   வாசல் ஓரத்தில் நகரத்தின் டி.வி.எஸ் 50 நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. அவர் மனைவி வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தார்.

   ``அண்ணி, அண்ணன் வீட்டுல இல்லியா?’’ என்றான் ஏழுமலை.

   ``இல்லாம எங்க போவப்போறார்! இன்னும் கடை தொறந்திருக்காதே. நீங்க நேரா கிணத்தாண்ட போய்ப் பாருங்க’’ என்றார்.

   வீட்டுக்குப் பின்கட்டில் வெற்றுடம்புடன் கிணற்று மேடையில் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார் நகரம்.

   ஏழுமலையை அவருக்குத் தெரிந்திருந்தது.

   ``வாப்பா, என்ன சுயேச்சை போடப்போறீங்கனு பேசிக்கிறாங்க!’’ என்று பட்டென விஷயத்துக்கு வந்தார்.

   ``ஆமாண்ணா, பசங்க எல்லோரும் இந்த வாட்டி புலியைத் தோக்கடிச்சே ஆகணுங்கிறாங்க. உங்க ஆள் செலவும் பண்ண மாட்டேங்கிறார். தெருவுல எறங்கி கால்ல உழுந்து ஓட்டு கேட்கவும் மாட்டேங்கிறார். ரெண்டு வாட்டி கையெடுத்துக் கும்பிட்டுட்டு, சைக்கிள் ரிக்‌ஷாவுல போயிட்டா புலியை ஜெயிச்சுட முடியுமாண்ணா?’’ என்றான் ஏழுமலை.

   ``யாரு... முத்துவைத்தானே சொல்றே? அவன் சுயமரியாதைக் காரனாச்சேப்பா! கால்ல எல்லாம் விழ மாட்டானே. ஆனா, நிறைய செலவு பண்றேன்னுதானே என்கிட்டே சொல்வான்?’’

   ``எங்கே பண்றார்... நல்ல மனுஷன்தான், எங்களுக்கும் வேண்டியவர்தான். ஆனா, ஓட்டு வாங்குறதுல கோட்டை விட்டுடுறாரே?”

   ``ஆமாமாம். அந்த நானூறு ஓட்டைத் தாண்ட மாட்டான். அப்ப, நீங்க  முடிவு  பண்ணிட்டீங்களா?’’

   நகரத்தின் இந்தக் கேள்விக்கு எப்படி ரியாக்ட் செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. `ஆமாம்’ எனச் சொன்னால், எதிர்த்துப் பேசுகிற மாதிரி இருக்குமென்று அமைதியாக இருந்தோம்.

   நகரம், கிணற்றை விட்டுக் கீழிறங்கி வாளித்தண்ணீரில் கை அலம்பிவிட்டு, எங்கள் அருகில் வந்து மிகச்சரியாக சீனுவின் தோள்மீது கை போட்டவாறு, ``தைரியமா நில்லு. 1,400 ஒட்டுல முத்து 400 ஓட்டை வாங்கிடுவான். மீதி இருக்கும் ஆயிரத்துல உங்க குறி 501. அவ்ளோதான். உங்க கூட்டாளிங்க, அவங்க அம்மா, அப்பான்னு ஈஸியா இதை வாங்கிடலாம். நான் முத்துவை நிறுத்தலைன்னா, நீ 800 ஓட்டு வாங்கினாத்தான் ஜெயிப்பே. அது இன்னும் கஷ்டம். புரியுதா?’’ என்றார்.

   இந்தப் புதுவிதமான கணக்கைக் கேட்டு, நாங்கள் உறைந்துபோய் நின்றோம்.

   அவர் கட்சிக்காரன் எத்தனை ஓட்டு வாங்குவான் என்பதும், எங்களால் எத்தனை ஓட்டு வாங்க முடியும் என்பதும் அவருக்குத் தெரிகிறது. எப்படி ஓட்டு வாங்க வேண்டும் என்பதையும்  சொல்லித்தருகிறார். தன் கட்சிக்காரன் தோற்பான் எனத் தெரிந்தும் எதிர்க்கட்சிக்காரனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ரூட் க்ளியர் செய்து விடுகிறார்.

   தலையாட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு டீக்கடைக்கு வந்தோம்.

   ``ப்பா... என்னா ராஜதந்திரம்டா!’’ என்றான் இளங்கோ.

   ``இதென்ன ராஜதந்திரம்! அவரு கட்சித் தலைவர் போடுவாரு பாரு ப்ளான்! ஒவ்வொண்ணும் மாஸ்டர் ப்ளான்! அதெல்லாம் அங்க சாதாரணம்பா’’ என்றார் தோழர்.

   ``ஆனாலும் இது டூ மச் தோழர்’’ என்றேன் நான்.

   ``இதென்ன டூ மச்! உனக்குத் தெரியுமா? மொத மொத புலியை கவுன்சிலர் தேர்தல்ல நிக்கச் சொன்னதே இந்த நகரச் செயலாளர்தான். முத்து இவரோட தீவிர விசுவாசி. புலி எதிரே சீட் வாங்கி நின்னுட்டா, அவனுக்கு இருக்கிற கெட்டபேருக்கு முத்து ஈஸியா ஜெயிச்சிருவாருன்னு, இவரே புலிக்குக் காசு கொடுத்து சீட் வாங்கச் சொன்னார். இவங்க கெட்ட நேரம், புலி தொடர்ந்து அடிச்சுட்டு வர்றான்’’ என்றார் தோழர்.
   ``திஸ் ஈஸ் தி லிமிட். இதுக்குமேல என்னால தாங்க முடியாது. இதெல்லாம் ஐ.ஐ.எம்  எம்.பி.ஏ-வுலகூட சொல்லித்தர மாட்டாங்க தோழர்’’ என்றேன்.

   ``யாராலும் கத்துத்தர முடியாதுப்பா! இது அரசியல்’’ என்றார் தோழர்.

   வேட்புமனுத் தாக்கலின்போது தெருவில் இருக்கும் அத்தனை பசங்களையும் அழைத்துக்கொண்டு மேளதாளத்தோடு போய் வெற்றிகரமாக முடித்தோம். எங்களுடன் வந்த கூட்டத்தைக் கண்டு முனிசிபாலிட்டியே அரண்டுபோனது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் எங்கள் புது கவுன்சிலர் வேட்பாளர் சீனுவுக்குக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

   ``சுயேச்சையாக மனுப் போட வந்திருந்த ஒண்ணு ரெண்டு பேரும், எங்க கூட்டத்தைப் பார்த்துட்டு, போடாமலேயே போயிட்டாங்க’’ என்று தோழர் சொன்னார்.

   எங்கள் வார்டு வேட்புமனுவின் பரிசீலனையின்போதுதான் புலியை நேருக்குநேராகச் சந்தித்தோம். முனிசிபல் கமிஷனர் அருகில் இருந்த மரநாற்காலியில் காலை மடித்து அமர்ந்துகொண்டு செய்தித்தாளை எட்டாக மடித்து முகத்தருகில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தது.  முத்து அண்ணன் எங்களிடம் ஏதும் பேசாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தது, எங்களுக்கு சங்கடமாக இருந்தது.

   மொத்தம் மூன்றே மனுதான். ஒவ்வொரு மனுவாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டே வந்தவர், எங்கள் வேட்புமனு வந்தவுடன் திகைத்துப்போய் எங்களை நிமிர்ந்து பார்த்தார். வேட்புமனுவை நிரப்பும் பொறுப்பு என்னிடம்தான் தரப்பட்டிருந்தது. ஒரு இன்ஜினீயர் என்ற முறையில் அதை அழகான கையெழுத்தில் ஆங்கிலத்தில் நிரப்பியிருந்தேன்.

   கையில் இருந்த வேட்புமனுவை எங்கள் முன் நீட்டியபடி, ``இதென்ன?’’ என்றார் கமிஷனர்.

   அனைவரும் திகைத்துப்போய் என்னைத் திரும்பிப் பார்த்தனர்.

   ``நாமினேஷன் பேப்பர் மேடம். இங்கிலீஷ்ல ஃபில்லப் பண்ணக் கூடாதுன்னு எந்த ரூல்புக்லயும் இல்லியே?’’ என்றேன் கெத்தாக.

   ``அதெல்லாம் இருக்கட்டும். வேட்பாளரோட கையெழுத்து எங்கே?’’

   அந்தக் கட்டடம் அப்படியே இடிந்து என் தலைமீது விழுந்திருந்தால், நான் அவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பேன். வேட்புமனுவைத் தொலைத்துவிடக் கூடாது என்பதற்காக, அதை  யாரிடமும் கொடுக்காமல் நானே வைத்திருந்ததில் சீனுவிடம் கையெழுத்து வாங்க மறந்திருந்தேன்.

   வேட்பாளர் கையெழுத்து இல்லாத நாமினேஷன் ஃபார்ம். முதல் சுற்றிலேயே ரிஜெக்ட் ஆகிவிடும். அனைவரும் என்னை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்த நான், தலையைக் குனிந்துகொண்டேன். முத்து அண்ணனால் முகத்தில் சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை. புலி, தலையை நிமிர்த்தாமல் தந்தி பேப்பரிலேயே கவனமாக இருந்தது.

   ``இப்ப என்ன மேடம் பண்றது?’’ என்றான் சீனு.

   ``நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க? எல்லாம் புறப்படுங்க. வார்டு எண் 12! ரெண்டே வேட்பாளர்கள்தான். மிஸ்டர் சுந்தரமூர்த்தி அண்ட் மிஸ்டர் முத்து’’ எனக் கூறிவிட்டு, அருகில் இருந்த டைப்பிஸ்டிடம், ``டைப் பண்ணும்மா’’ என்றார்.

   தேர்தல் முடிவு அப்பவே தெரிஞ்சுபோச்சு, புலி நான்காம் முறையாக எங்கள் கவுன்சிலராவது. நாங்கள் நாற்காலியிலிருந்து எழுந்தோம்.

   எதற்காக கமிஷனரிடம் சொல்கிறேன் எனத் தெரியாமல் கண் கலங்கியபடி, ``ஸாரி மேடம். இட்ஸ் மை ஃபால்ட்’’ என்றேன். குரல் தழுதழுத்தது. பசங்க யாராவது ஒரே ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் வெடித்து அழுதிருப்பேன்.

   எனது தழுதழுத்த குரலைக் கேட்ட புலி, செய்தித்தாளிலிருந்து கண்ணை எடுத்து, நாற்காலியிலிருந்து இறங்கி வந்தது. நேராக கமிஷனர் டேபிளில் இருந்த எங்கள் மனுவை எடுத்து சீனுவிடம் நீட்டி, ``இப்ப என்ன... கையெழுத்துதானே போடலை? அதென்ன முப்பது வரி  நீட்டமா  எழுதப்போறான். ஒத்த வார்த்தைதானே! நீ போட்டுக் கொடு கண்ணு’’ என்றது.

   மொத்த அலுவலகமும் திகைத்து நிற்க, கமிஷனர், முத்து அண்ணனைப் பார்த்தார். அவரால் எதுவும் சொல்ல முடியாத சங்கடம். சீனு கண் கலங்கியபடி கையெழுத்து போட, நாங்கள் மீண்டும் களத்துக்கு வந்தோம்.
   அதன் பிறகு ஒரு மாதம் நடந்ததெல்லாம் ஒரு நாவலுக்குரியவை. சிறுகதைக்குள் சொல்ல வேண்டும் என்றால், எங்களின் தேர்தல் அறிக்கையைச் சொல்லலாம்.

   ``மூணே பாயின்ட்... சும்மா நச்சுனு இருக்கணும்டா’’ என்றான் ஒருவன்.

   முதல் பாயின்ட் எழுதும்போதே தோழர் வந்துவிட்டார். நமது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அமெரிக்கா என்னவெல்லாம் தொல்லைகள் தருகிறது என விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார். பொறுமையிழந்த இளங்கோ, ``தோழர், முதல் பாயின்ட் உங்க சாய்ஸ். நீங்க எதைச் சொன்னாலும் எழுதிக்கிறேன்’’ என்றான்.

   இப்படியாக முதலாவது வாக்குறுதி, `அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை விடாமல் எதிர்ப்போம்’ என்றானது.

   அடுத்து, இன்ஜினீயரான என்னோட சாய்ஸ். `நதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை நீங்கி வளமாகிவிடும்’ என ஒரு கட்டுரையில் படித்திருந்தேன். எனவே, இரண்டாவது வாக்குறுதி `எங்கள் ஊர் தென்பெண்ணையாற்றைக் காவிரியோடும் பாலாற்றோடும் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவோம்’  என்றானது. 

   மூன்றாவது வாக்குறுதி வேட்பாளர் எடுத்துக்கொண்டான். அவனின் ஐடியாபடி எங்களது மூன்றாவது வாக்குறுதி `எங்க தெருப் பசங்களுக்கு இலவசமா மெடிக்கல், இன்ஜினீயரிங் சீட் வாங்கித் தருவோம்’ என்றானது. இதைக் கேள்விப்பட்ட சிலர், அன்று மாலையே தேர்தல் அலுவலகம் வந்து அவரவர் பிள்ளைகளின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதிச் சென்றனர்.

   சீனுவின் படத்தை வெளியூருக்கு அனுப்பி பிளாக் எடுத்து, அதைக் கொண்டு ரோஸ்கலர் பேப்பரில் தேர்தல் வாக்குறுதிகளோடு 10,000 காப்பி  பிட்நோட்டீஸ் பிரின்ட் பண்ணி, பேருந்துநிலையத்தில் அனைவருக்கும் விநியோகித்தோம். மொத்த ஓட்டு 1,380தான்.

   ``வார்டு தேர்தல் நோட்டீஸை, பஸ் ஸ்டேண்டுல வந்து ஏன் தர்றீங்க?’’ என ஒரு பெரியவர் கேட்டபோது, ஒரு கணம் திகைத்து, ``அது வந்து... இப்பத்திய இளைஞர்களோட லட்சியப் பயணம் எப்படி இருக்கும்னு எங்க தேர்தல் அறிக்கையைப் பார்த்தாவது நீங்க எல்லோரும் தெரிஞ்சுக்கத்தான் பெருசு!’’ என்றான் இளங்கோ.

   வசுமதி வீட்டுக்கு நோட்டீஸ் தர, என்னை அனுப்பிவிட்டனர். நான் ஒவ்வொரு நோட்டீஸ்லயும் ஒரு கேட்பரீஸ் சாக்லேட் பின் செய்து எடுத்துப் போய்க் கொடுத்தேன். என்னை விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டே வசீகரமாகச் சிரித்தபடி மொத்தம் பத்து நோட்டீஸை அவள் அள்ளிக்கொண்டாள்.

   ``ஏம்பா, எல்லா வீட்டுக்கும் சாக்லேட் வெச்சா தர்றீங்க?’’ என அவள் அம்மா கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பாராமல் அவர் பங்குக்கு ஒரு கொத்து நோட்டீஸை அள்ளிக்கொண்டார்.

   தேர்தல் எந்தவோர் அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. சொல்லப்போனால், புலி, பூத்துக்கு உள்ளேயே வரவில்லை. அன்றுமட்டும் குடிக்காமல் பளபளப்பாக வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து நெற்றியில் திருநீற்றுடன் தெருவின் எதிர்த்திசையில் அமைதியாக அமர்ந்திருந்தது. முத்து அண்ணன் வழக்கம்போல வாசலில் நின்றுகொண்டு, வரும்  ஒவ்வொருவரிடமும் கைகூப்பி ஓட்டு கேட்டார். நாங்கள் மீதம் இருந்த எங்கள் நோட்டீஸை அனைவரின் கைகளிலும் திணித்து அனுப்பினோம்.

   வாக்கு எண்ணிக்கையின்போது சீனுவுக்கு ஜெனரல் ஏஜென்டாக ஏழுமலையை அனுப்பிவைத்தோம். யாருக்கும் பயமில்லாமல் தைரியமாகப் பேசுவான். முத்திரை எதிலுமே சரியாக விழாதது, சின்னங்களுக்கு நடுவில் முத்திரை இருந்தது, முத்திரையே இல்லாதது என சர்ச்சைக்குரிய 16 ஓட்டுகளும் எங்களுடையதுதான் எனக் கடுமையாக அவன் குரல் உயர்த்தி சத்தம்போட, புலி எங்கள் பெட்டியிலேயே அவற்றைப் போடச் சொல்லித் தலையாட்டியதாம்!

   தேர்தல் முடிவு தினத்தன்று எங்கள் வார்டு முடிவு, மதியத்துக்கு சற்று முன்னே வந்தது. பதிவான 1,184 வாக்குகளில் முத்து அண்ணன் 312, சீனு 88 வாங்கியிருக்க, புலி 784 பெற்றிருந்தது. தனது வரலாற்றின் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் புலி நான்காம் முறையாக எங்கள் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றது.

   நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தையும் பேச முடியாதபடி அதிர்ந்துபோயிருந்தோம்.

   ``ஆக, முத்தண்ணனுக்குப் போகவேண்டிய 88 ஓட்டைத்தான்டா நாம பிரிச்சிருக்கோம்!’’ என்றான் இளங்கோ.

   ``ம்க்கும்... அதுலயும் 16 ஓட்டு கவுன்ட்டிங்ல சண்டைபோட்டு நான் வாங்கினது’’ என்றான் ஏழுமலை. தனது வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்ட சீனு, வெளியே வரவே இல்லை.

   2 மணிக்கு எங்க தேர்தல் அலுவலகம் மாடிக்கு  ஓர் அட்டைப்பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து வைத்தான் புலியின் கையாள் ஏகாதேசி. பெட்டி முழுக்க பிரியாணிப் பொட்டலங்கள்.
   ``புலியண்ணன் குடுத்து அனுப்புச்சுடா, சாப்புடுங்க!’’ என்றான்.

   மறுநாளிலிருந்து நான் யார் முகத்திலும் விழிக்க விரும்பாததால், ``புராஜெக்ட் ரிவ்யூ இருக்கு’’ எனச் சொல்லிட்டு, கல்லூரிக்குப் புறப்பட்டேன். இரவு 9 மணிக்கு எனக்கு பஸ். ``நாங்க கூட வர்றோம்’’ என இளங்கோவும் ஏழுமலையும் எனது பையை சைக்கிளில் வைத்துத் தள்ளிக்கொண்டு வர, நாங்கள் மெளனமாக எங்கள் தெருவைக் கடந்து சென்றோம்.

   தேர்தல் பிரசாரம், ஆலோசனைக் கூட்டங்கள் என நாங்கள் ஒரு மாதமாகக் கட்டியாண்ட தெரு! ஒவ்வொரு வீட்டிலும் காலில் விழுந்து அவர்களிடம் சத்தியம் பெற்று எங்களுக்காக நாங்கள் உறுதி செய்திருந்த வாக்குகள் மட்டும் 900 இருக்கும். எங்கள் தெரு மக்கள் அத்தனை பேருமே பொய் சத்தியம் செய்வார்கள் என்ற சாத்தியக் கூற்றை நம்ப முடியாமல் பேச்சற்றுப்போயிருந்தோம்.

   சீனு வீடு, வெளி விளக்குகூடப் போடப்படாமல் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

   வசுமதி வீட்டு வாசற்படிகளை நிரப்பிக்கொண்டு பெண்கள் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு பெளர்ணமி இரவு.

   பாவாடை,  தாவணியில் வசுமதி தேவதையைப் போல் நடுப்படியில் அமர்ந்துகொண்டிருக்க, அவள் அம்மா அதற்கு மேல்படியில் அமர்ந்துகொண்டு தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு தேவதையின் தலையில் ஈர்க்குச்சி கொண்டு இழுத்து இழுத்து பேன் பார்த்த காட்சி, நாங்கள் வாங்கிய ஓட்டு எண்ணிக்கையைவிட அபத்தமாக இருந்தது.

   வீட்டைக் கடக்கும்போது, வசுமதியின் அம்மா சத்தமாக, ``என்னப்பா... காலேஜுக்கா?’’ என்றார்.

   ``ஆமாங்க... நாளைக்கு புராஜெக்ட் ரெவ்யூ இருக்கு’’ என்றேன்.

   ``அமெரிக்கா போகப்போறீயாமே?’’

   ``ஆமாமாம்... என் மச்சானுக்கு கேம்பஸ் இன்டர்வியூவுல வேலை கிடைச்சிருக்கு. மொத சம்பளமே டாலர்லதான்’’ என்றான் இளங்கோ.

   நான் வசுமதியையே பார்த்துக்கொண்டிருந்தேன். வைத்த கண் வாங்காமல் என்னை அதே விழுங்கல் பார்வையில் பார்த்துக்கொண்டு வாயில் எதையோ போட்டு மென்றுகொண்டிருந்தாள். நான் தந்திருந்த சாக்லேட்டில் மிச்சம் வைத்திருந்திருப்பாள்போல.

   ``என்னமோப்பா... நம்ம பசங்க எல்லோரும் நல்லா படிச்சு மேலே வந்தா சந்தோஷம்தான். ஆனா, படிச்சவுடனே வெளிநாட்டுக்கு ஓடுறீங்களே! இங்கியே இருந்து நம்ம தாய்நாட்டை முன்னேத்த வேணாமா?’’ என்றார் சரோஜாக்கா.

   ஏழுமலை கடுப்பாகிவிட்டான். ``ஆங்... நல்லா முன்னேத்த வுட்ருவீங்களே, 88 ஓட்டைப் போட்டு! சீனுவுக்கே ஓட்டு போடாத மக்கள்தானே நீங்க?’’

   ``அடப்போங்கடா, இவனுங்க வேற கிண்டல் பண்ணிக்கிட்டு. சீரியஸாவா நீங்க எலெக்‌ஷன்ல நின்னீங்க... சொம்மா தமாசுக்குதானே?’’

   ``என்னது... தமாசுக்கா! உயிரைக் கொடுத்து வேலை செஞ்சோமே! உங்க ஒவ்வொருத்தர் கால்லயும் விழுந்தோமே! எல்லாம் தமாசாவா தெரிஞ்சுது? அட, சீனுவை விடுங்க... போயும் போயும் புலிக்கு இத்தனை பேரு ஓட்டு போட்டிருக்கீங்களே? எங்க... புலிக்கு ஓட்டு போட, ஒரே ஒரு நியாயமான காரணம் சொல்லுங்க பாப்போம்!’’ - ஏழுமலை பொரிந்து தள்ளினான்.

   சரோஜாக்கா சளைக்கவில்லை.

   ``ஒண்ணு என்னடா, மூணு காரணம் சொல்றேன் கேட்டுக்கோ. ஒண்ணு, புலி எவ்ளோ போதையிலே இருந்தாலும் தெருவை விட்டு இங்க, அங்க போவாது. கூப்டா ஓடிவரும். கவுன்சிலர்னா இப்படிதான்டா இருக்கணும்.

   ரெண்டு, பெரியவங்க, சின்னவங்க பார்க்காது. மேல் சாதி, கீழ் சாதி பார்க்காது. யார் ஊட்டுக்குனாலும் உரிமையா உள்ளே வரும். வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்புடும். அவ்ளோ நல்ல குணம்.

   மூணாவது, முக்கியமானது. வயசுப் பொண்ணுங்க கொசகொசன்னு இருக்கிற தெரு நம்மது. வெளியாள் ஒருத்தரையும் லேசுல புலி உள்ளே வுடாது. ஒவ்வொருத்தரையும் நிறுத்தி, தரோவா விசாரிக்கும். தப்பான ஆளுன்னா ஃபைன் போட்டுடும். ஆமாம்.”

   ``என்னது... ஃபைன் போடுமா?’’ - நாங்கள் திகைச்சுப்போய் நின்றோம்.

   ``இப்பேர்ப்பட்ட மனுஷனை விட்டுட்டு, வேற யாருக்கு ஓட்டு போடுறதாம்? வந்துட்டானுங்க, ஏகாதிபத்தியம்... எங்க ஊட்லே பைத்தியம்னு, எடுபட்டவனுங்க.’’

   இப்படியாக, சரோஜா அக்காவின் அரசியல் பாடத்துடன் எங்கள் தெரு இளைஞர்களின் லட்சியப் பயணம் அந்த இரவின் நிலவொளியில் நிறைவுற்றது.
   https://www.vikatan.com