Jump to content

கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு!


Recommended Posts

கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு!

 

 
golden_globe1

 

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 75-வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி, லேடி பேர்ட் ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காக டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக, டார்கஸ்ட் ஹவர் படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேனும் சிறந்த நடிகையாக த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்தில் நடித்த ஃபிரான்செஸ் மெக்டோர்மண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தி ஹேண்ட்மெயிட்ஸ் டேல் சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான விருதை வென்றுள்ளது.

கோல்டன் குளோப் விருது: திரைப்படங்கள்

Best motion picture, drama: “Three Billboards Outside Ebbing, Missouri”

Best motion picture, musical or comedy: “Lady Bird”

Best director, motion picture: Guillermo del Toro, “The Shape of Water”

Best performance by an actress in a motion picture, drama: Frances McDormand, “Three Billboards Outside Ebbing, Missouri”

Best performance by an actor in a motion picture, drama: Gary Oldman, “Darkest Hour”

Best performance by an actress in a motion picture, musical or comedy: Saoirse Ronan, “Lady Bird”

Best performance by an actor in a motion picture, musical or comedy: James Franco, “The Disaster Artist”

Best performance by an actress in a supporting role in any motion picture: Allison Janney, “I, Tonya”

Best performance by an actor in a supporting role in any motion picture: Sam Rockwell, “Three Billboards Outside Ebbing, Missouri”

Best screenplay, motion picture: Martin McDonagh, “Three Billboards Outside Ebbing, Missouri”

Best motion picture, animated: “Coco”

Best motion picture, foreign language: “In the Fade”

Best original score, motion picture: Alexandre Desplat, “The Shape of Water”

Best original song, motion picture: “This Is Me” — “The Greatest Showman”.

தொலைக்காட்சி

Best television series, drama: “The Handmaid’s Tale,” Hulu

Best performance by an actress in a television series, drama: Elisabeth Moss, “The Handmaid’s Tale”

Best performance by an actor in a television series, drama: Sterling K. Brown, “This Is Us”

Best television series, musical or comedy: “The Marvelous Mrs. Maisel,” Amazon

Best performance by an actress in a television series, musical or comedy: Rachel Brosnahan, “The Marvelous Mrs. Maisel”

Best performance by an actor in a television series, musical or comedy: Aziz Ansari, “Master of None”

Best television limited series or motion picture made for television: “Big Little Lies,” HBO

Best performance by an actress in a limited series or motion picture made for television: Nicole Kidman, “Big Little Lies”

Best performance by an actor in a limited series or motion picture made for television: Ewan McGregor, “Fargo”

Best performance by an actress in a supporting role in a series, limited series or motion picture made for television: Laura Dern, “Big Little Lies”

Best performance by an actor in a supporting role in a series, limited series or motion picture made for television: Alexander Skarsgard, “Big Little Lies”.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/08/golden-globe-award-winners-2018-2841136.html

Link to comment
Share on other sites

"ஹார்வியால் பேச முடியாது.. ட்ரம்ப் எரிச்சலாவார்..!" கோல்டன் க்ளோப்பில் செத் மேயரின் மரண கலாய்

 
 

கோல்டன் க்ளோப்

நம்ம ஊர் விருது வழங்கும் விழாவிலேயே இப்போதெல்லாம் அரசியல் பேச்சுகள் தலைகாட்ட தொடங்கிவிட்டன. எப்போதும் விருது வழங்கும் விழா மேடைகளில் அரசியல் பேசும் ஹாலிவுட் இந்த முறை கோல்டன் க்ளோப் விருது விழாவில் உச்சம் தொட்டுள்ளது. சென்ற முறை இதே விழாவில் மெரில் ஸ்ட்ரீப்ன் உரை ட்ரம்பை உறைய வைத்தது. இந்த முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் செத் மேயரின் உரையில் ஒட்டுமொத்த ஹாலிவுட்டும், அமெரிக்க பிரச்னைகளும் பகடிக்கு உள்ளாயின. 

 

பிக் பாஸ் மேடையில் கமல் பேசிய அரசியல் உள்ளூர் நிலைமையைச் சொல்லியது என்றால் கோல்டன் க்ளோம் தொகுப்பாளர் செத் மேயரின் நிகழ்ச்சித் தொகுப்பு சர்வதேச அரசியலை தெறிக்கவிட்டது. கோல்டன் க்ளோப் பேச்சை ''லேடிஸ் அண்ட் ரிமைனிங் ஜென்டில்மேன்'' என சர்காஸமாக ஆரம்பித்தார். முதலில் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பேச இடமில்லை. ஆனால் மெரிஜுனா கஞ்சா வுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என முதல் வரியிலேயே அமெரிக்காவின் அரசியலுக்கு செக் வைத்தார்.

கோல்டன் க்ளோப்

இங்கு நிறைய ஆண்கள் இருக்கிறீர்கள். கடந்த மூன்று மாதத்தில் எங்காவது உங்கள் பெயர் சத்தமாக ஒலித்துவிடக் கூடாது என நினைத்திருப்பீர்கள். அந்த அளவுக்கு மீ டூ பிரசாரம் வலுத்திருந்தது. இன்று உங்கள் பெயரை பயப்படாமல் சத்தமாகக் கேட்கலாம் என்றார். ஹாலிவுட் ஃபாரின் ப்ரஸ் என்ற வார்த்தைதான் நமது அதிபருக்குப் பிடிக்காத வார்த்தையாக இருக்கலாம். மூன்று வார்த்தைகள் ட்ரம்புக்கு எரிச்சலை தரும் அவை ஹிலரி மெக்ஸிகோ சாலட் அசோஷியேஷனாக இருக்கும்.

இந்த விழாமேடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என நேரடியாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட ஹார்வி வெய்ன்ஸ்டன் இல்லை. வருத்தப்பட வேண்டாம். 20 வருடங்கள் கழித்து இங்கு அவர் வந்தால் கூட அவரை பேசவிடாமல் தடுக்க இந்த மேடை தயாராக இருக்கும் என்று சொல்ல அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. 

செத் மேயர் ஓப்ரா வின்ஃப்ரேவை பார்த்து ''2011ம் ஆண்டு நான் இப்போது உள்ள அதிபர் தகுதியற்றவர் என விமர்சித்தேன். ஆனால் அவர் அதிபராகிவிட்டார். அது உண்மையென்றால் உங்களையும் இப்போது அதிபராக முடியாது என விமர்சிக்கிறேன். நீங்கள் அதிபராகிவிடுங்கள். அதேபோல் ஹென்க்ஸ் நீங்கள் துணை அதிபராக முடியாது என்று கூறுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் அதிபராகிவிடுவார்கள் என்று ட்ரம்பை கலாய்த்தார். 

அதன்பின் தனது வழக்கமான பன்ச் லைன் ஜோக்ஸ்களை ஆரம்பிக்க முதல்வரியை செத் மேயர்ஸ் கூற அடுத்த வரியை பிரபலங்கள் முடித்துவைத்தனர்.

கோல்டன் க்ளோபுக்கு 75 வயதாகிவிட்டது. ஆனால் இன்னமும் நடிகைகள் 32 வயது மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிய நடிகர்கள் வெறும் 5 சதவிகிதம் பேர்தான் ஹாலிவுட்டில் நடிக்கிறார்கள் என்பது செய்தி. ஆனால் வெள்ளைக்காரர்களுக்குக் கணக்குத் தெரிந்த நாளிலிருந்து இந்த எண்ணிக்கை இப்படியேதான் இருக்கிறதோ...

ஏமி ஒரு பன்ச் லைன் என ஆரம்பித்தவுடன் ஏமி போலர் தடுத்து ''பன்ச் லைன் சொல்வது என் வேலையல்ல '' எனக் கூற செத் மேயர்ஸ் மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார். அடுத்த நொடியே ஓ... இன்னோருவர் மன்னிப்பு கேட்கிறார் என்று ஏமி கூறியது மொத்த அரங்கமும் கைதட்டல்களால் நிறைந்தது. பின் சாரு ஜெயராமனின் டைம்ஸ் அப் வேலைகளைப் பாராட்டி தனது உரையை முடித்தார்.

 

 

சொல்லி வைத்து அனைவரும் கறுப்பு உடை அணிந்து வந்தது.. விழா மேடையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த பேச்சுகள்.. கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ட்ரம்ப்பை சாடுவது என கலை அரசியல் அதிர்வலைகளால் நிறைந்து காணப்பட்டது கோல்டன் க்ளோப் மேடை..

https://www.vikatan.com/news/world/113037-seth-meyers-takes-on-weinstein-and-trump-in-golden-globes-2018.html

Link to comment
Share on other sites

அமெரிக்க தமிழர் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரிக்கு கோல்டன் குளோப் விருது -5 தகவல்கள்

99513003golden1jpg

75வது கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கருக்கு விருது கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் எனும் விருது வழங்கப்படுகிறது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 75வது கோல்டன் குளோப் விருதுகளில் தொலைக்காட்சித் தொடர்களுக்கான இசை அல்லது நகைச்சுவைப்பிரிவில் சிறந்த நடிகர் விருது அஸீஸ் இஸ்மாயில் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • மாஸ்டர் ஆஃப் நன் என்னும் தொலைக்கட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அன்சாரி கடந்த ஆண்டும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை.
  • அஸீஸ் இஸ்மாயில் அன்சாரியின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அஸீஸ் பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில்தான். 34 வயதாகும் அஸீஸ் அன்சாரிக்கு தமிழ் மொழி பரிச்சயம்.
  • நெட்பிளிக்ஸில் வெளியாகும் இணைய தொலைக்காட்சித் தொடரான மாஸ்டர் ஆஃப் த நன் (MASTER OF THE NONE) தொடரை அலன் யங் என்பவனுடன் இணைந்து தொடங்கினார்.
  • 2015-ல் இருந்து வெளிவரும் இத்தொடரில் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அன்சாரி ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
  • 75வது கோல்டன் குளோப் விருது நிகழ்வில் டைம்ஸ் அப் இயக்கத்திற்கு ஆதரவாக பல நடிகர் நடிகைகள் உடைகளை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களோடு ஒற்றுமையாக நிற்க தொடங்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோல்டன் குளோப் விருது அரங்கில் கருப்பு நிற உடையும், டைம்ஸ் அப் பேட்ஜும் அணிந்து வந்திருந்தார் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22399104.ece

 

 

கோல்டன் குளோப் விருது அரங்கத்தை ஆக்கிரமித்த கருப்பு நிறம் - காரணம் என்ன?

99504987kendalangelinajessicajpg

ஏஞ்சலினா ஜோலி, ஜெஸ்ஸிகா சஸ்டெயின் , கெண்டல் ஜென்னர்   -  Getty Images

75-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிறம் மிகவும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது.

பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒற்றுமையாக நிற்கும் டைம்ஸ் அப் இயக்கத்திற்கு ஆதரவாக நடிகைகள் கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தனர்.

பல ஆண்களும் கருப்புச் சட்டையுடன் டைம்ஸ்-அப் பேட்ஜ் அணிந்திருந்தனர்.

99504985penelopemariahclarejpg

பெனிலோப் க்ரஸ், மரியா கரே, க்லைர் ஃபாய்   -  Getty Images

லவ்விங் பேப்லோ திரைப்படத்தின் நடிகை பெனிலோப் க்ரஸ், பாடகர் மரியா கரே, பிரிட்டிஷ் நடிகை க்லைர் ஃபாய் ஆகியோர் கருப்பு உடை அணிந்து வந்தவர்களில் சிலராவர்.

99504988globeswomencolourjpg

மார்கோட் ராபி, மாண்டி மூர்,கெல்லி கிளார்க்சன்   -  Getty Images

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருப்பு நிறமுள்ள வெவ்வேறு விதமான ஆடைகளையும் சிலர் அணிந்து வந்திருந்தனர். சூசைட் ஸ்குவாட் படத்தின் மார்கோட் ராபி, நடிகை மாண்டி மூர் மற்றும் பாடகி கெல்லி கிளார்க்சன் ஆகியோர் அதில் சிலர்.

99504984chrisewankitjpg

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், இவான் மெக்கிரீகர், கிட் ஹேரிங்டன்   -  Getty Images

தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் இவான் மெக்கிரீகர் ஆகியோர் உடைகளில் டைம்ஸ் அப் என்ற வார்த்தை சட்டைப்பையில் காணப்பட்டது. அதே வேளையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிட் ஹேரிங்டன் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டார்.

99504986millienicolejessicajpg

மில்லி பாபி ப்ரவுன், நிக்கோலே கிட்மேன், ஜெஸ்ஸிகா பீயல்   -  Getty Images

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நடிகை மில்லி பாபி ப்ரவுன், நிக்கோலே கிட்மேன் மற்றும் ஜெஸ்ஸிகா பீயல் சிவப்பு கம்பளத்தில் வெவ்வேறு விதமான கருப்பு உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

99504987kendalangelinajessicajpg

ஏஞ்சலினா ஜோலி, ஜெஸ்ஸிகா சஸ்டெயின் , கெண்டல் ஜென்னர்   -  Getty Images

கருப்பு நிற உடைந்து அணிந்து வந்திருந்த ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜெஸ்ஸிகா சஸ்டெயின் ஆகியோரைப் போல மாடல் கென்டல் ஜென்னரும் வந்திருந்தார்.

99505005gettyimages-902367598jpg

அமெரிக்கா ஃபெராரா, நடாலி போர்ட்மேன்,எம்மா ஸ்டோன், பில்லி ஜீன் கிங்   -  Getty Images

அமெரிக்கா ஃபெராரா மற்றும் நடாலி போர்ட்மேன் சிவப்புக் கம்பளத்தில் கருப்பு நிற உடைந்த அணிந்து நடந்து வந்தனர். லாலா லேண்ட் நட்சத்திரம் எம்மா ஸ்டோன் மற்றும் முன்னாள் டென்னிஸ் சாம்பியன் பில்லி ஜீன் கிங்.

99502072fa2dc20f-0419-483b-9de2-d107e207

ரீஸ் விதர்ஸ்பூன், எவா லொங்கோரியா, சல்மா ஹய்க் மற்றும் ஆஷ்லே ஜட் போஸ்   -  Getty Images

நடிகை ரீஸ் விதர்ஸ்பூன், எவா லொங்கோரியா, சல்மா ஹய்க் மற்றும் ஆஷ்லே ஜட் போஸ் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் நால்வரும் இணைந்து வந்தனர்.

கருப்பு வண்ண உடை அணியாதவர்கள் யார்?

99505385gettyimages-902329960jpg

ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர் அமைப்பு தலைவர் மெஹர் டட்னா சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். ''தனது தாயுடன் இணைந்து தேர்வு செய்த உடையை அவர் அணிந்திருந்தார்'' என தி விராப் தெரிவித்துள்ளது.

''இந்திய கலாசாரத்தின் பகுதியாக, கொண்டாட்ட நிகழ்வுகளில் விழாக்காலங்களில் அணியக்கூடிய வண்ண உடைகளை அணிவது வழக்கம்'' என அவர் தெரிவித்திருந்தார் .

டைம்ஸ் அப் இயக்கத்துக்கான ஆதரவை தெரிவிப்பதற்காக அவர் தனது பேட்ஜ் அணிந்திருந்தார்.

99505092barbarabiancajpg

பர்பரா மீயர், பியங்கா ப்ளாங்கோ   -  Getty Images

ஜெர்மன் மாடல் பர்பரா மீயர் பெய்ஜ் ஃப்ளோரல் என அழைக்கப்படும் ஒரு வித பழுப்பு நிற கவுன் அணிந்திருந்தார். நடிகை பியங்கா ப்ளாங்கோ சிகப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்.

பலரும் கோல்டன் குளோப் விருது வழங்கப்படும் களத்தை கருப்பு மயமாக்கியிருந்த நிலையில் மீயர் தனது உடை தேர்வு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். ''சற்று கவர்ச்சியாக இருக்கக்கூடிய உடைகளை பெண்கள் அணிய இயல வேண்டும் என்றும் ''ஆண்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாது'' என்பது அவர்களின் தவறல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிளாங்கோ சிவப்பு வண்ணம் அணிந்து வந்த தனது முடிவு குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22397672.ece

Link to comment
Share on other sites

”இனி யாரும் #MeToo சொல்லக் கூடாது” கோல்டன் குளோப் வென்ற ஓப்ராவின் நெகிழ்ச்சி

 
 

கிட்டத்தட்ட நாற்பது நொடிகள் அந்தக் கைதட்டல் தொடர்கிறது. அரங்கமே எழுந்து நின்று கரகொலி எழுப்புகிறது. சமீபத்தில் நடந்த 'கோல்டன் க்ளோப்' விருது நிகழ்வில் நடைபெற்ற காட்சிதான் இது. விருதினை வாங்கியவர் ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்.

கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் அந்த விருதை வாங்குவது இதுவே முதல் முறை. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், சிறந்த நடிப்புக்கான கோல்டன் க்ளோப் விருதினை 1964-ம் ஆண்டுதான் முதன்முதலில் வாங்கினார். தற்போது, ஹாலிவுட்டில் நீண்ட நாள் பங்களிப்புக்காக Hollywood Foreign Press Association மூலம் தரப்படும் Cecil B. DeMille விருதினை வாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகியிருக்கிறார் ஓப்ரா வின்ஃப்ரே. விருதினை வாங்கிவிட்டு எட்டு நிமிடங்கள் ஓப்ரா பேசியது ‘ப்ரெசிடென்ஷியல் ஸ்பீச்’ என்று எழுதும் அளவுக்கு இன்ஸ்பைரிங் ரகம். அதன் சுருக்கமான வடிவம் இதோ. 

 

ஓப்ரா வின்ஃப்ரீ - MeToo“1964-ம் ஆண்டு ஒரு சிறிய பெண்ணாக வீட்டின் தரையில் அமர்ந்து, ஆஸ்கர் விருது விழாவினை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு உச்சரிக்கப்பட்ட ஐந்து வார்த்தைகள் வரலாற்றை உருவாக்கின. விருதினைப் பெற்றவர், சிட்னி பார்டியர் (the winner is Sydney Poitier). அதுவரை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்திடாத ஒரு நேர்த்தியான மனிதர், ஒரு கறுப்பின மனிதர், வெள்ளை  உடையுடன் மேடையேறினார். அதுவரை ஒரு கறுப்பின மனிதர் அப்படிப் பாராட்டப்படுவதை, கொண்டாடப்படுவதை நான் பார்த்ததே இல்லை. சிட்னி நடித்த லில்லிஸ் ஆஃப் த ஃபீல்டு (lilies of the field) படத்தில் அவர் சொல்லும், ‘ஆமேன், ஆமேன்’ என்று உணர்வுதான் அப்போது எனக்கும் இருந்தது. 1982-ம் ஆண்டு நான் வாங்கும் இதே விருதை சிட்னி வாங்கினார். தற்போது, முதல் கறுப்பினப் பெண்ணாக நான் இந்த விருதை வாங்குவதை நிறையக் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிறப்பான நிமிடங்களை அவர்களுடனும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. நான் இந்த நிலைக்கு வருவதற்கு உதவிய ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்கும் நன்றி. Hollywood Foreign Press Association-க்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை இல்லாத அளவுக்கு ஒடுக்குமுறையை இதழியல் சந்தித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமான பிரச்னைகளை நம் அறிவதைத் உறுதிபடுத்த, அவர்கள் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊடகத்தை மதிக்கிறேன். உண்மையைப் பேசுவதுதான் உலகிலேயே மிகவும் வலிமையான ஆயுதம். அப்படி உண்மையை, தாங்கள் அனுபவித்த கொடுமைகளை மிகுந்த தைரியத்தோடு பேசிய பெண்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு வருடமும் நாம் சொல்லும் கதைகளுக்காக நாம் கொண்டாடப்பட்டோம். ஆனால், இந்த வருடம் நாமே அந்தக் கதைகளானோம். [MeToo] இது வெறுமனே என்டெர்டெயின்மென்ட் துறையை மட்டுமே இலக்காகக் கொண்டது அல்லது. இனம், புவியியல் அமைப்பு, கலாசாரம், மதம், அரசியல் என்று அனைத்தையும் கடந்தது. இந்த இரவில், என் அம்மாவைப்போல, குழந்தைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய கனவுகளுக்காகத் தனக்கு நடந்த சித்திரவதைகளை பொறுத்துக்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய பெயர்களை நாம் ஒருபோதும் அறியமாட்டோம். 

1944-ம் ஆண்டு, ரிசி டைலர் என்கிற பெண் சர்ச்சிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது ஆயுதங்கள் தங்கிய வெள்ளை இன ஆண்களால் மிகமோசமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 'இதை வெளியே சொன்னால் கொல்லப்படுவாய்' என்று மிரட்டப்பட்டார். ஆனால், ரோசா பார்க்கர்ஸ் என்கிற பெண் பத்திரிகையாளர் இதனை வெளியேகொண்டு வந்தார். நீதிக்காகப் போராடினார்கள். ஆனால், அந்த ஆண்களுக்குப் பின்னால் இருந்த அதிகாரம், நீதியை மறைத்தது. ரிசி டைலர் பத்து நாள்களுக்கு முன்னால் தன்னுடைய  98 ஆவது வயதில் இறந்து போயிருக்கிறார். பல வருடங்களாகப் பெண்கள் அதுபோன்ற அதிகாரம் படைத்த ஆண்களுக்கு எதிராகப் பேசினால், நம்பப்படாமல், அங்கீகிரிக்கப்படாமல் இருந்தார்கள். அந்தக் காலம் முடிந்துவிட்டது. ரிசி டைலர் ஓர் உண்மையை அறிந்தே மறைந்துபோனார். அவரைப்போலவே, துன்புறுத்தப்படும் பல்லாயிரம் பெண்கள் இப்போதும் அணிவகுத்துச் செல்கிறார்கள். 

அது ரோசா பார்க்கிடமும், 'மீ டூ' என்று சொன்ன ஒவ்வொருவரிடமும், அதைக் காது கொடுத்துக் கேட்கும் ஒவ்வோர் ஆணிடமும் இருக்கிறது. நான் என்னுடைய ஒவ்வொரு டிவி மற்றும் படங்களின் வழியாக ஏதோ ஒன்றை வெளிப்படுத்த விரும்பியிருக்கிறேன். ஓர் ஆணும் பெண்ணும் எப்படி நடந்துகொள்வார்கள், நாம் எப்படி அவமானப்படுத்தப்படுவோம், நாம் எப்படிக் காதலிப்போம், கோபப்படுவோம், தோற்போம், அதிலிருந்து மீண்டுவருவோம் என்பதை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். நீங்கள் யாரும் கேள்விப்பட்டிராத கொடூரங்களை அனுபவித்திருக்கும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான விஷயத்தைக் கண்டுள்ளேன். எவ்வளவோ காரிருள் சூழ்ந்த இரவுகளில் இருந்தாலும், விடியலை நோக்கிய அவர்களின் நம்பிக்கைதான் அது. இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்ல விரும்புவது…. புதிய நாள் ஒன்று அடிவானத்தில் உதித்திருக்கிறது. இனி யாருமே 'MeToo' என்று சொல்லாதபடி பிறக்கவிருக்கும் அந்தப் புதிய நாளுக்கான காரணம் இன்று இங்கு அமர்ந்திருக்கும் அற்புதமான பெண்களும், சிறப்பான ஆண்களும்தாம்”

என்று ஓப்ரா வின்ஃப்ரே முத்தபோது, கண்களில் பெருகிய கண்ணீரோடு மீண்டும் எழுந்து நின்று தன் ஆதரவை அளித்தது மொத்த அரங்கமும். 

https://www.vikatan.com/news/world/113067-oprah-winfreys-speech-after-receiving-golden-globe-steals-the-night.html

Link to comment
Share on other sites

அடர்த்தியான கறுப்புக் கோடு... கோல்டன் க்ளோப் விருது நிகழ்வில் கவனம் ஈர்த்த டிரெஸ் கோடு!

 
 
Chennai: 

75-வது கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழா, ஜனவரி 7-ம் தேதி கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இது, மற்ற விழாக்களைவிட சற்று வித்தியாசமாக நடைபெற்றது. சிவப்புக் கம்பள விரிப்பில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து வந்த ஹாலிவுட் நடிகைகளின் அணிவகுப்பு, பிரமிப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகைகளின், நிலம் தழுவப் படர்ந்திருக்கும் ஃப்லோயி (Flowy) ஆடைகள் முதல் ஷார்ட் டிரெஸ் வரை அனைத்தும் கறுப்பு நிறமே! `டைம்ஸ் அப்' எனும் கேம்பைனின் டிரெஸ் கோடுதான் இந்தக் கருநிற ஆடைகள். அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வியை எதிர்த்து நடந்த போராட்டங்களும், #MeToo #TimesUp உள்ளிட்ட கேம்பைன்களும் உலகம் அறிந்ததே. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுகள் விழாவில், ஏஞ்ஜலீனா ஜோலி, எம்மா வாட்சன், சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர் முதலிய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கருநிற உடைகள் அணிந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

 

கோல்டன் க்ளோப் விருதுகள்

மெரில் ஸ்ட்ரீப், எம்மா வாட்சன், கேல் கடோட் ஆகியோர் ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை, பெண் சுதந்திரம், சமத்துவம் போன்ற சமூகப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுத்து வருபவர்கள். இவர்களைப்போல் மேலும் சில நடிகைகள், தன்னார்வம்கொண்டு சேர்ந்த அமைப்புதான் `டைம்ஸ் அப்'. ``இன்று, பெண்கள் அனைவரும் அடர்த்தியான கறுப்பு கோடுபோல் காட்சியளிக்கிறோம். அனைவரும் ஒன்றாக இணைந்திருப்பது ஊக்கமளிக்கிறது" என்று மெரில் ஸ்ட்ரீப் தன் கருத்தைப் பதிவிட்டார்.

கருங்கடல்போல் இந்த விழா காட்சியளித்தாலும், ஒவ்வொருவரின் ஸ்டைலும் தனிப்பட்ட மாஸ் லுக். திரண்ட அழகிகளின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் இதோ...

Meryl Streep

ஆஃப் ஷோல்டர், முழு நீளக்கை, நிலம் தொடும் ஃப்லோயி டிரெஸ். இதற்கு மேட்சாக சிறிய பீட் (Bead) வைத்த காதணி, பெரிய ஃபிரேம் போட்ட கண்கண்ணாடி, கைக்கு அடக்கமாக ஒரு க்ளட்ச். இதுதான் எட்டு முறை கோல்டன் குளோப் விருதைத் தன்வசமாக்கிக்கொண்ட மெரில் ஸ்ட்ரீப்பின் உடை. 68 வயதானாலும் மிடுக்கான தோற்றத்தில் வசீகரித்தார்.

Emma Watson

`ஹாரி பாட்டரில்' ஹெர்மாயினியாக வாழ்ந்த எம்மா வாட்சன், வித்தியாசமான ஸ்லீவ் மற்றும் காலர்களைக்கொண்ட பீக்கபூ ஸ்லிட் டிரெஸ்ஸை உடுத்தியிருந்தார். வேறுபட்ட ஹேர்ஸ்டைலுடன் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் எம்மா.

Gal Gadot

பல இளைஞர்களின் மனதில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் `வொண்டர் வுமன்' கேல் கடோட், ஃபுல் ஃப்ரில் டிரெஸ் (Full Frill Dress) அணிந்திருந்தார். அதனுடன் கடோட்டின் சிக்னேச்சர் ஸ்டைல் கிராப் ப்ளேசர் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். டார்க் ரெட் லிப்ஸ்டிக் மற்றும் டேங்க்லர் காதணி வொண்டர் வுமனுக்கு ஏற்ற ஃபினிஷ்.

Vaiola Davis

`டிரிப்பிள் கிரவுன் ஆஃப் ஆக்டிங்' (Triple Crown of Acting) என மகுடம் சூட்டப்பட்ட ஒரே கறுப்பின நடிகை வயோலா டேவிஸ், அவரின் பாரம்பர்ய ஆப்பிரிக்க ஹேர்ஸ்டைலில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மைக்கேல் கோர்ஸின் கைவண்ணத்தில் உருவான வெல்வெட் முழுநீள பார்ட்டி டிரெஸ், அதை மெருகேற்றும் வகையில் முத்துமாலை, காதணி மற்றும் கறுப்பு க்ளட்ச் இவற்றுடன் மிளிரும் புன்னகை வயோலாவின் யுனிக் ஸ்டைல்.

Angelina Jolie

ஆண்களின் கனவுக்கன்னி, பெண்களின் ரோல்மாடல், சமூக சேவகி, மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் தாய் எனப் பன்முகங்களைக்கொண்டிருக்கும் ஏஞ்சலீனா ஜோலியின் கேப் ஃபுல் டிரெஸ் க்ளாசிக் டச். ஃபெதர் கஃப்களைக் (Feather Cuff) கொண்டிருக்கும் இந்த டிரெஸ்ஸில் தேவதைபோல் திகழ்ந்தார்.

Mragot Robbie

`The Wolf of Wallstreet', `Suicide Squad', `தி லெஜெண்ட் ஆஃப் டார்ஸான்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் மார்கட் ராபி. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சில்வர் நிற எம்ப்ராய்டரி பேட்டர்னில் பிளங்கிங் (Plunging) கழுத்துடைய டிரெஸ்ஸில் ஃபேஷன் அடையாளத்தைப் பதித்தார். அதிகமான அணிகலன்கள் ஏதுமின்றி மிக எளிமையாகக் கலந்துகொண்டார் ராபி.

Nicole Kidman

`Batman Forever'ல் கலக்கிய நிக்கோல் கிட்மேன், சின்னத்திரையின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். ஹய் நெக்லைன் டாப், அதில் ஒட்டப்பட்ட க்ரிஸ்டல் பீட் (Bead), வித்தியாசமான ஸ்லீவ் இவை அனைத்தும் கிட்மேனுக்கே வடிவமைக்கப்பட்டதுபோல் இருந்தன.

Oprah Winfrey

இந்த விழாவின் நாயகி ஓப்ரா வின்ஃப்ரே, ஆஃப் ஷோல்டர் முழுநீள டிரெஸ்ஸில் மிளிர்ந்தார். கோல்டன் குளோப் 75-ம் ஆண்டின் `வாழ்நாள் சாதனையாளர்' விருதுக்குச் சொந்தக்காரரான வின்ஃப்ரே, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழாவில் பதிவுசெய்த உரையாடல் பலருக்கும் ஊக்கமளித்தது. ``இனிவரும் நாள்களில் `#MeToo' என்ற பதிவு இல்லாமல்போகும் காலம் வரும்'' என்று கூறி அனைவரின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.

 

மொத்தத்தில், இது மெளனமாக நடந்த போராட்டக்களமாகவும், செலிபிரிட்டிகளின் கோலாகல விழாவாகவும் இருந்தது. `போல்டு அண்ட் பியூட்டிஃபுல்' அரங்கம்.

https://www.vikatan.com/news/miscellaneous/113080-dress-code-for-75th-golden-globe-awards.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.