Jump to content

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி

Recommended Posts

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

prabakaran.jpg

2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு  மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செவன் தினேஷ் குமார், விஜேகுமார் விதூஷன் ஆகிய இரு  இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

http://www.virakesari.lk/article/29120

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களை குற்றவாளிகளை தண்டிக்க மட்டும் பயன்படுத்தினால் போதாது இது போன்ற சட்டதிட்டங்களை அறிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெறுவதற்கும் இனங்களுக்கிடையிலான இணக்கத்தை சீரமைத்து அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவும் சட்டம் தெரிந்த புத்தியீவிகள் முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒருவழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒருவழி.

அண்ண ...அங்கேயிருந்து கதைக்காமல் இங்கே வந்து முதல் ஆளாக நீங்களே பிரபாகரன் படத்தை பயன்படுத்தி முன்மாதிரிகை காட்டுகிறீர்களா.....?
நாங்களும் பயன்படுத்துகிறோம் . 

Link to comment
Share on other sites

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ண ...அங்கேயிருந்து கதைக்காமல் இங்கே வந்து முதல் ஆளாக நீங்களே பிரபாகரன் படத்தை பயன்படுத்தி முன்மாதிரிகை காட்டுகிறீர்களா.....?
நாங்களும் பயன்படுத்துகிறோம் . 

அதானே! வெளிநாட்டிலிருந்து கொண்டு கோழைகளுக்கு வழிகாட்ட முடியாது என்று அண்ணருக்கு விளங்கேலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

அதானே! வெளிநாட்டிலிருந்து கொண்டு கோழைகளுக்கு வழிகாட்ட முடியாது என்று அண்ணருக்கு விளங்கேலை!

வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் என்பதும் இந்த்ததம்பிக்கு தெரியும்  

Link to comment
Share on other sites

25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் என்பதும் இந்த்ததம்பிக்கு தெரியும்  

வெளிநாட்டவரை நம்பித்தான் தமிழரை அழிக்கும் தையிரியம் சிங்களத்துக்கு வந்தது என்பதும் தம்பிக்கு தெரியாதிருக்குமா.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

வெளிநாட்டவரை நம்பித்தான் தமிழரை அழிக்கும் தையிரியம் சிங்களத்துக்கு வந்தது என்பதும் தம்பிக்கு தெரியாதிருக்குமா.....??

அழிந்தது   வெளிநாட்டவரல்லவே ...புலத்திலிருக்கும் கோழைகள் தானே அனுபவித்தது /அனுபவிப்பது ...நமக்கென்ன போகிறபோக்கில எடுத்துவிடுறது தானே காசா பணமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக நீங்கள் இதை இன உணர்வில் செய்திருக்கமாட்டிர்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்!

நண்பர்களின் உசுப்பேத்தல்கள்,பலராலும்  கவனிக்கப்படவேண்டும் என்ற ஆர்வகோளாறு,விருப்பு வாக்குகள் பெற நினைக்கும் போதை என்று பல காரணிகளால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இனிமேலாவது ஈடுபடாது இருப்பதே அவர்கள் எதிர்காலத்திற்கு நல்லது!

இப்போதெல்லாம் புலத்தில் இருப்பவர்களே புலிகள்பற்றி பேசுவதை குறைத்துக்கொண்டுவிட்டார்கள்,தாயகத்தில் இருப்பவர்களுக்கு ஏன் இதெல்லாம்?  இனிமேல் நீதிமன்றம்,வழக்கு பிணை என்று சில லட்சங்களை உங்கள் பெற்றோரை செலவிட வைக்கபோகிறீர்கள், பொலிஸிடம் வாங்கபோகும்  அடி உதை வேறு எக்ஸ்ட்ரா,

விடுதலையாகி வெளியில் வந்தால்கூட தமக்கு ஏதாவது அச்சுறுத்தல் வருமோ என்று எவனும் நெருங்கி பழக முன்வரமாட்டான் உங்களுடன்,

சரி இதை பாதுகாப்பு அச்சுறுத்தலாக காட்டி வெளிநாடு வருவதென்றாலும் சிங்களவன்

“”2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு’’’’’ என்ற ஒன்றை சொல்லியிருக்கிறான், அது எங்குபோனாலும் இதை காரணம் காட்டி இலங்கை காவல்துறையை குற்றம் சொல்லமுடியாது என்ற ரகத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்!

ஏதோ ஒரு வானொலியில் சொல்வதுபோல், தெரிவிக்கவேண்டும் என்று சும்மா மனசில் தோன்றுகிறது, தீர்மானிக்கவேண்டியது நீங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இருவராலும் கோழைகள் என்ற சொற்பதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
புலத்திலிருக்கும் கோழைகள் தானே அனுபவித்தது /அனுபவிப்பது...
வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் :unsure: 

எதோ ஒரு சீண்டுதலால் இப்படி எழுதிவிட்டிர்கள் போல் தெரிகிறது..

புலத்தில் இருப்பவரையெல்லாம் இந்த கோணத்தில் பார்ப்பது ஞாயம் இல்லை.
அதே நேரத்தில் அங்கே மண்ணில் இருப்பவர்களும் மகாத்மாக்களோ அல்லது மடையர்களோ அல்ல!!

புலம் பெயர்ந்த தமிழர்களால் 
சிறிதாகவும், பெரிதாகவும், 
இங்கொன்றும், அங்கொன்றுமாய், 
சொல்லியும், சொல்லாமலும், 
வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் 
செய்யப்படும் மொத்த உதவிகள் பற்றி பேசுவோர் யாரும் இல்லை.

"போல்" சொன்னதில் ஒரு செய்தி இருக்கிறது அன்பரே...
இன்று "மாவீரர்" நாளை எப்படி அனுஷ்டிக்கிறீர்கள், அந்த உணர்வும் தைரியம் எப்படி வந்தது?
ஆண்டுகள்  செல்ல, செல்ல இந்த அனுஷ்டானம் நியாயமானதாகவும், உரிமையானதாகவும் பார்க்கப்படும்.
என்று நீங்கள் அந்த உணர்வை கடப்பில் போடுகிறீர்களோ அது வரை...

"பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

அது மட்டுமில்லை வலவன் 
முகப்புத்தகமூடாக ஏதாவது பரிமாறினால் அதனை விசாரிக்க மாகாண கட்டமைப்பில் கூட அதிகாரம் இல்லை , சைபர் கிரைம் தொடர்பாக 
BMICH இல் தற்காலிகமாக இயங்கும் அலுவலகத்திலேயே விசாரணை நடைபெறுகிறது .அதன்படி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தகவல்கள்களை  TID (Terrorism Investigation Department) இனரிடம் கையளிப்பர் 
அத்தோடு விவகாரம் காலி . கொழும்பிற்கு அலைந்தே காலம் போயிரும் . அத்தோடு வழக்கு தொடரப்பட்டால் அதனை தொழிலிற்கு விண்ணப்பிக்கும் போது  மறக்காமல் குறிப்பிடவேண்டும். 
TID வழக்கு என்றால் முடிந்தது  விண்ணப்பம் நேரடியாக குப்பைக்குத்தான் ...இதுவெல்லாம் புலம்பெயர்ந்தோருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Sasi_varnam said:

 இருவராலும் கோழைகள் என்ற சொற்பதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
புலத்திலிருக்கும் கோழைகள் தானே அனுபவித்தது /அனுபவிப்பது...
வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் :unsure: 

எதோ ஒரு சீண்டுதலால் இப்படி எழுதிவிட்டிர்கள் போல் தெரிகிறது..

புலத்தில் இருப்பவரையெல்லாம் இந்த கோணத்தில் பார்ப்பது ஞாயம் இல்லை.
அதே நேரத்தில் அங்கே மண்ணில் இருப்பவர்களும் மகாத்மாக்களோ அல்லது மடையர்களோ அல்ல!!

புலம் பெயர்ந்த தமிழர்களால் 
சிறிதாகவும், பெரிதாகவும், 
இங்கொன்றும், அங்கொன்றுமாய், 
சொல்லியும், சொல்லாமலும், 
வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் 
செய்யப்படும் மொத்த உதவிகள் பற்றி பேசுவோர் யாரும் இல்லை.

"போல்" சொன்னதில் ஒரு செய்தி இருக்கிறது அன்பரே...
இன்று "மாவீரர்" நாளை எப்படி அனுஷ்டிக்கிறீர்கள், அந்த உணர்வும் தைரியம் எப்படி வந்தது?
ஆண்டுகள்  செல்ல, செல்ல இந்த அனுஷ்டானம் நியாயமானதாகவும், உரிமையானதாகவும் பார்க்கப்படும்.
என்று நீங்கள் அந்த உணர்வை கடப்பில் போடுகிறீர்களோ அது வரை...

"பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. "

சசி அண்ணை
மாவீரர் தினம் என்பது இறந்தவர்களை நினைவுக்கூறும் நாள் என்பதற்குள் மறைந்து வருவதால் அதற்கு சில வாய்ப்பை வழங்கினர். அதற்கும் விஜயதாச ராஜபக்ச என்ன கூறினார் என்பதை பார்த்தீர்களென்றால் எவ்வாறானோதொரு இரும்புக்கரம் விடுதலை புலிகள்தொடர்பாக புலத்தவர்களை பற்றி பிடித்துள்ளது என்பது தெளிவாகும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு அசட்டுத்துணிச்சலில் அவசியமற்ற வேலைகள் பார்த்தால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் நிலைமை தான் வந்துசேரும். நமக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் இருந்தால் அதை நமக்குள்ளேயே வைத்துக்கொள்வோம் 
அதை படம் போட்டு காட்டுமளவுக்கு நிலைமை முன்னேறவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பேத்காரின் குறிப்போடு வரும் உங்கள் பதில் தூரநோக்கமானதாக இல்லை :108_metal: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கூட 

தமிழர்கள் ஒரே பாதையில்

தேவையற்ற  விடயங்களை  தவிர்த்து

ஒற்றுமையாகுதல்  தகர்ந்து

புலமா? தாயகமா? என்று  வீம்புச்சண்டைக்கு தானே  நிற்கின்றோம்

இதில  சிரிப்புக்குறி வேற....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி உசுப்பேத்தி
எழுதுகின்றவர்கள் ஊருக்கு போகும்
போது எப்படி பம்மிக் கொண்டு
போவினம் என்று கண்டு
இருக்கின்றோம்

ஆகக் குறைந்தது
உசுப்பேத்துகின்றவர்கள் தங்கள்
சுய பெயரிலும்
சொந்த படத்தை அவதாராக
போட்டாவது வந்து
வீரத்தை காட்டட்டும் பார்ப்பம்

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

இப்ப கூட 

தமிழர்கள் ஒரே பாதையில்

தேவையற்ற  விடயங்களை  தவிர்த்து

ஒற்றுமையாகுதல்  தகர்ந்து

புலமா? தாயகமா? என்று  வீம்புச்சண்டைக்கு தானே  நிற்கின்றோம்

இதில  சிரிப்புக்குறி வேற....

இந்த பிரிப்பு நன்கு திட்டமிட்ட முறையில் இலங்கை அரசால் மக்கள் இரு தரப்பு மக்களிடமும் விதைக்கபட்டு விட்டன....!!!

தாயக மக்களிடம் கூறுவது புலம் பெயர்ந்தோர் சொகுசாக வாழ்ந்து கொண்டு உங்களை பலியாக்குகிறார்கள்

புலம் பெயர்ந்தவர்களிடம் கூறுவது  தாயக மக்கள் 

சோம்பேறிகள்

குடிகாரர்

புலத்து காசில் சொகுசான வாழ்க்கை நடத்துபவர்கள்

படிப்பை கைவிட்ட சமூகம் (ஆனால் உயர் தர பரீட்சை பெறுபேறுகளோ வேறு மாதிரி இருக்கு)

சினிமா மோகம் பிடித்த சமூகம்(இந்த திட்டமிட்ட பரப்புரைக்கு என சில இளைஞர்கள் வைத்து இருக்கிறார்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Sasi_varnam said:

அம்பேத்காரின் குறிப்போடு வரும் உங்கள் பதில் தூரநோக்கமானதாக இல்லை :108_metal: 

ஊருக்கு அடுத்த முறை
போகும் போது
தலைவரின் படத்தை போட்ட
ஷேர்ட்டை  போட்டுக்
கொண்டு தானே தம்பி
போய்
விமான நிலையத்தில்
இறங்குவீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு மட்டும் விருப்பம் இல்லையா கொண்டாடட சின்ன பயல்களின்  விளையாட்டு வினையானது 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ண ...அங்கேயிருந்து கதைக்காமல் இங்கே வந்து முதல் ஆளாக நீங்களே பிரபாகரன் படத்தை பயன்படுத்தி முன்மாதிரிகை காட்டுகிறீர்களா.....?
நாங்களும் பயன்படுத்துகிறோம் . 

போல் அண்ணை அப்படித்தான் இங்க அள்ளிட்டு போவான்  எங்க கொண்டு போறான் எங்க கொண்டு வாரான் என்று ஆருக்கு தெரியும்  அண்ணயும் அள்ளி விடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Dash said:

இந்த பிரிப்பு நன்கு திட்டமிட்ட முறையில் இலங்கை அரசால் மக்கள் இரு தரப்பு மக்களிடமும் விதைக்கபட்டு விட்டன....!!!

தாயக மக்களிடம் கூறுவது புலம் பெயர்ந்தோர் சொகுசாக வாழ்ந்து கொண்டு உங்களை பலியாக்குகிறார்கள்

புலம் பெயர்ந்தவர்களிடம் கூறுவது  தாயக மக்கள் 

சோம்பேறிகள்

குடிகாரர்

புலத்து காசில் சொகுசான வாழ்க்கை நடத்துபவர்கள்

படிப்பை கைவிட்ட சமூகம் (ஆனால் உயர் தர பரீட்சை பெறுபேறுகளோ வேறு மாதிரி இருக்கு)

சினிமா மோகம் பிடித்த சமூகம்(இந்த திட்டமிட்ட பரப்புரைக்கு என சில இளைஞர்கள் வைத்து இருக்கிறார்கள்)

அதாவது
புலம் பெயர் தமிழர்களும்
முட்டாள்கள்
சொந்த புத்தி இல்லாதவர்கள்

புலத்து தமிழனும்
முட்டாள்கள்
சொந்த புத்தி இல்லாதவர்கள்

இலங்கை அரசு மட்டும்
தான் கெட்டிக்கார
பயல்கள்
என்னமா திங் பண்ணி
பிரிக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களுக்கு மட்டும் விருப்பம் இல்லையா கொண்டாடட சின்ன பயல்களின்  விளையாட்டு வினையானது 

போல் அண்ணை அப்படித்தான் இங்க அள்ளிட்டு போவான்  எங்க கொண்டு போறான் எங்க கொண்டு வாரான் என்று ஆருக்கு தெரியும்  அண்ணயும் அள்ளி விடுது 

காலம்   ஒரு  நாள்  கை  கூடும்

அந்த வேட்கையோடு புலத்தில் இருத்தல்  தேவையானதே

ஆபத்தை  உணர்ந்து  அதற்கேற்ப  தம்பை  பாதுகாத்தபடி

 காய்  நகர்த்தல்  தாயகத்தின்  கைகளில்  மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வைரவன் said:

ஊருக்கு அடுத்த முறை
போகும் போது
தலைவரின் படத்தை போட்ட
ஷேர்ட்டை  போட்டுக்
கொண்டு தானே தம்பி
போய்
விமான நிலையத்தில்
இறங்குவீர்கள் ?

தம்பி ... சின்ன தம்பி 
போட்டுக் கொண்டு போவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
அதையும் கூட தானே நீங்கள் கேள்வி கேட்பீர்கள். 
போட்டது உள்ளேயா? வெளியேயா? 
கலரா ? பிளாக் அண்ட் வைட்டா ?
யாழ்ப்பாணத்தில் போட்டாரா? இல்ல கொழும்பில போட்டாரா?

உங்களை போன்றவர்கள் அங்கே இருந்து சிங்களவனுக்கு புதுசு புதுசா ஐடியா சொல்லாமல் இருந்தால் எதுவும் சாத்தியமே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

தம்பி
கேட்ட கேள்விக்கு
சடார் என்று பதில்
சொல்ல வேண்டும்

கேள்வி சுட்டு விட்டது
என்பதுக்காக புலம்ப
கூடாது

அடுத்த முறை
ஊருக்கு போகும் போது
தலைவரின் படத்தை
போட்டுக் கொண்டு
இலங்கை விமான நிலையத்தில்
போய் இறங்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவரின் சூலாயுதத்தின்  கூர்மை வாசிப்பிலும் அதை கிரகித்து கொள்வதிலும் இருக்கவேண்டும்.
நான் கொழும்பு போகும் வரை பொறுத்திருப்பீர்களா?
இல்லை என்றால் விமானப் பற்று சீட்டை அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் பகிர்ந்தவர்களுக்கே இந்தக்கதி என்றால் முழு முட்டாள்கள்தான் தலைவரின் படமுள்ள ரீசேர்ட்டோடு சிறிலங்கா போவார்கள்.

ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நாட்டில் அதன் கொடி, இலச்சினை, அமைப்பின் பிரசுரங்கள், படங்கள் எதையும் வைத்திருந்தால் சிக்கல்கள் வரத்தானே செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புலத்தில்  உலகின் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகளின் கடவுச்சீட்டுகள் கைவசம் வைத்திருந்தும், தாயகம்போக ஆசைப்படுபவர்கள் பலர் இங்கே நடக்கும் இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்களில் பங்கு கொள்வதில்லை, பங்கு கொண்டாலும் முன் வரிசையில் நிற்பதில்லை, முன் வரிசையில் நின்றாலும் முகத்தை காட்டுவதை விரும்புவதில்லை!

எனக்கு தெரிந்து , மஹிந்த ,கோத்தபாய ஆட்சியின் பின்னர் புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்களை கண்காணிக்கும் நடவடிக்கை என்று ஆரம்பித்த பின்னர் இங்கு சாதாரண பொதுமக்களாக ஊர்வலங்களில் ,மாவீரர் நாட்களில் கலந்துகொண்டு முன் வரிசையில் நின்ற சிலர், சிங்களவன் ஒருவேளை கண்டு பிடிச்சிருப்பானோ என்ற  ஒரு முன்னெச்சரிக்கையான பயத்தில்  தாயகம் சென்று ஒரு ரவுண்ட் அடிக்கும் ஐடியாவை அடியோடு விட்டவர்கள் பலர்!

அப்படி போயே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வந்தாலும் விமானம் ஏறும் கடைசிநாள்வரை ஆயிரம்பேரிடம், அண்ண எனக்கு ஒண்டும் பிரச்சனை வராதோ என்று விசாரித்தவர்கள் பலர்!இங்கே அவர்களின் பங்களிப்பையோ பயத்தையோ கேலி செய்வது என் நோக்கமல்ல, நம்மிடையே உள்ள நிலமையை சொல்கிறேன்! 

உலகின் செல்வாக்குமிக்க நாடுகளின் பிரஜைகளாக இருந்தும், தாயகம் செல்லும்போது ஏதும் இடர் நேர்ந்தால் அவர்கள் நாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு ,ஆதரவு இருந்தும் இலங்கை பயணம் என்று வரும்போது நம்மில் சிலர் அச்சப்படுகிறார்கள் என்றால் ....

  இலங்கையில் எதிரிகளின் நடுவே தோற்றுப்போன இனமாய் வாழும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை,பாதுகாப்பு,எதிர்காலம் எந்தளவில் இருக்கும் அவர்கள் போராட்டம் சம்பந்தமான விஷயங்களில் தம்மையறியாமல் ஈடுபாடு காட்டுவது எந்த அளவில் ஆபத்தாய் அமையும், அதை பெரிய தவறு இல்லை என்ற ரீதியில் புலத்தில் உள்ள நம்மில் சிலர் கருதினால், அது எந்த அளவிற்கு பொறுப்பற்ற தன்மையாகும் என்பதே முன்னால் நிற்கும் கேள்விகள்!

முள்ளிவாய்க்காலில் எமதுபோராட்டம் முடிவடைந்தது எமக்கு மட்டும் துயரம் இல்லை, சிங்களவனுக்கும் நிச்சயமாக ஒரு துயரம்!

எமக்கு எமது பேரம்பேசும் போராட்ட சக்தியை அடியோடு இழந்துவிட்டோமே என்ற துயரம்!

அவர்களுக்கு,இனிமேல் கேட்டுகேள்வியில்லாமல் தமிழர்களை கொத்து கொத்தாக தினமும் போட்டுதள்ள ஒரு வழி இல்லாமல் போச்சே என்று உள்ளுக்குள் நினைக்கும் கொடூர துயரம்! இன்றைக்கு தாயகத்தில் தமிழர்கள் நடத்தும் அறவழிபோராட்டத்தின்போதுகூட , சே இவர்களை போட்டுதள்ள ஒரு வழிவிடாமல் போர் முடிந்துவிட்டதே என்று சிங்களவர்கள் சினக்கிறார்கள் என்பதே உண்மை, அதில் நாகவிகாரை தேரர் விஷயமும், விக்னேஸ்வரன் ஐயாவின் அறிக்கைகளும் அடக்கம்! 

இந்நாட்களில் ஆக குறைந்தது தமிழர்களை பிடிச்சு அடிச்சு உதைச்சு சிறையில் அடைத்து சிற்றின்பம் காணுவதற்கு நாமாகவே ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு செயல்தான் தாயகத்திலிருந்தபடி புலிகள்பற்றிய பேச்சுக்களும், சமூகவலை தளங்களில் புலிகள் பற்றிய தகவல் பரிமாற்றங்களும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.