Jump to content

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்


Recommended Posts

வருங்கால கணவரிடம் மன்னிப்பு கேட்கும் டோனி ரசிகை

 

டோனிதான் எப்போதும் என்னுடைய முதல் காதலர் என்பதால், அவரது ரசிகை ஒருவர் வருங்கால கணவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். #CSKvRR

 
 
வருங்கால கணவரிடம் மன்னிப்பு கேட்கும் டோனி ரசிகை
lg.php?bannerid=13789&campaignid=2428&zo
 
ஐபிஎல் தொடரின் 17-வது போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவர் இந்திய அணியின் ராசியான கேப்டன் என்றும், சாதனைப் கேப்டன் என்றும் பெயரெடுத்தவர்.

டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேபோல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.

அவருக்கு தீவிரமான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் உள்ளனர். நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகை ஒருவர் வித்தியாசமான பேனர் வைத்திருந்தார். அந்த பேனர் அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளானது.

அந்த பெண் ரசிகை தனது கையில் வைத்திருந்த பேனரில் ‘‘டோனிதான் எப்போதும் என்னுடைய முதல் காதலர். எனவே வருங்கால கணவரே மன்னியுங்கள். I Love you Mahi!’’  எனக்குறிப்பிட்டுள்ளார்

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/21152908/1158263/IPL-2018-MS-Dhoni-will-always-be-my-First-Love.vpf

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

கடும் பாதுகாப்புகளையும் மீறி தோனியின் காலில் விழுந்த ரசிகர்: சாதித்த நிம்மதியுடன் சென்றார்

 

 
dhoni-feet-touching20180422299

புனேயில் நடந்த போட்டியின் போது தோனியின் காலில் விழுந்த ரசிகர்   -  படம்உதவி: ட்விட்டர்

புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் போது, கடும் பாதுகாப்புகளை மீறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் காலில் விழுந்து வணங்கிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

புனே நகரில் நேற்று ஐபிஎல்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டம் தி்ட்டமிட்ட படி சென்னையில் நடந்திருக்க வேண்டியது. ஆனால், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பை அமல்படுத்தக்கோரி நடந்த போராட்டம்காரணமாக, போட்டிகள் அனைத்தும் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, சிஎஸ்கே அணி நிர்வாகம் விசில்போடு எக்ஸ்பிரஸில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை புனே நகருக்கு சொந்த செலவில் போட்டியை காண ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், அரங்கில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடையும், மஞ்சள் கொடியுமாகத் தெரிந்தது.

ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழையா வகையிலும், சென்னை போட்டியைப் போல் ஏதேனும் கொடி, பேனரை காட்டிவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடும் பலமாக செய்யப்பட்டு இருந்தது. போலீஸார் தீவிரமாக ரோந்து வந்த வண்ணம் இருந்தனர்.

போட்டியின்போது 2வது விக்கெட்டுக்கு பேட் செய்த வந்த சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்து சென்றபோது, அடுத்ததாக கேப்டன் தோனி களமிறங்கினார். அப்போது, அரங்கில் இருந்த ரசிகர் ஒருவர் கடும் போலீஸ் பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் நுழைந்தார்.

தோனி நடந்து வந்து கொண்டிருந்த நிலையில், அவரை மறித்த அந்த ரசிகர், தோனியில் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை தோனி தூக்கிவிட்டு சில வினாடிகள் பேசினார்.

அதன்பின் தோனி நடந்து செல்லும்போது அவருடன் பேசிக்கொண்டே சென்ற அந்த ரசிகர் அதன்பின் மீண்டும் தனது இருக்கைக்கு சென்றார். அப்போது, எதையோ சாதித்துவிட்ட உணர்வுடன், வானத்தைப் பார்த்துக்கொண்டே, நெஞ்சில் கைவைத்துக்கொண்டு நன்றி தெரிவித்துச் சென்றார். அனைத்து பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ரசிகர் ஒருவர் தோனியை பார்க்கச் சென்று, ஆசிபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

donipng

இந்தியா-இலங்கைக்கு இடையிலான போட்டியின் போது தோனி காலில் விழுந்த வணங்கிய ரசிகர்

 

தோனியிடம் ரசிகர் ஆசி பெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்தது. அப்போது, பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ரசிகர் ஒருவர் தோனி காலில் விழுந்து வணங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.

http://tamil.thehindu.com/sports/article23630072.ece?homepage=true

Link to comment
Share on other sites

கடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி…!

bravo-1.jpg

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அம்பதிராயுடு 37 பந்தில் 79 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 43 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 12 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.

கேப்டன் வில்லியம்சன் 51 பந்தில் 84 ரன்னும் (5 பவுண் டரி, 5 சிக்சர்), யூசுப்பதான் 27 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், பிராவோ, சரண்சர்மா, ‌ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன்னே கொடுத்தார். இதனால் 3 பந்தில் 16 ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தில் ரஷீத்கான் சிக்சர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் கேப்டன் டோனி பிராவோ அருகே வந்து எப்படி வீச வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். 5-வது பந்தில் ரஷீத்கான் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்டது.

இந்த பந்தில் அவர் சிக்சர் அடித்து விடுவாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பிராவோ யார்க்கர் வீசி 1 ரன்னே கொடுத்தார்.

பிராவோவுக்கு அறிவுரை வழங்கியது தொடர்பாக டோனி கூறியதாவது:-

அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கு சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. 2 பந்துகள் இருக்கும் போது அவரிடம் சென்று திட்டத்தை மாற்ற சொல்லி ஆலோசனை வழங்கினேன். வேறு மாதிரி போட சொன்னேன். அதனால்தான் வெற்றி பெற முடிந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம்.

அம்பதிராயுடுவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. எந்த வரிசையில் களம் இறங்கினாலும் நம்பிக்கையுடன் ஆடுகிறார். அவரை தொடக்க வீரராகவே பார்க்க விரும்புகிறேன். தொடக்க வரிசையில் அவர் அபாயகரமானவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணி பெற்ற 4-வது வெற்றியாகும். இதன் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. சென்னை சூப்பர்கிங்ஸ் 6-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் 25-ந்தேதி மோதுகிறது.

http://metronews.lk/?p=24999

Link to comment
Share on other sites

 

லப்டப் லப்டப் ஹார்ட்பீட்... CSK வின் த்ரில் வெற்றிக்கு குவியும் மீம்ஸ் தொகுப்பு...!!

மும்பைக்கு எதிராக பிராவோ, கொல்கத்தாவுக்கு எதிராக சாம் பில்லிங்ஸ், பஞ்சாபுக்கு எதிராக தோனி, ராஜஸ்தானுக்கு எதிராக வாட்சன் வரிசையில் ஹைதரபாத்துக்கு எதிராக வெளுத்து வாங்கினார் அம்பதி ராயுடு. உள்ளூர் வீரர் ராயுடுவின் அதிரடி, தீபக் சாஹரின் அட்டகாச ஸ்பெல் முன், கேன் வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸ் எடுபடவில்லை. சி.எஸ்.கே மீண்டும் ஒருமுறை கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Link to comment
Share on other sites

எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி தான் தெரியும் - டுவிட்டரில் பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டரில் ஹிந்தியில் பதிவிடுமாறு கோரிக்கை விடுத்த ரசிகரிடம், எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி தான் தெரியும் என சென்னை அணி பதிலளித்துள்ளது. #VIVOIPL #ChennaiSuperKings

 
எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி தான் தெரியும் - டுவிட்டரில் பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
 
 
சென்னை:
 
11வது சீசன் ஐபிஎல் போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு ஆண்டு தடைக்குப் பின் வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ரசிகர்கள் கோலகல வரவேற்பளித்து வருகின்றனர்.
 
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை அணி வீரர்களும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், டுவிட்டரில் சென்னை அணி ரசிகர் ஒருவர், சென்னை அணிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அனைவருக்கும் தமிழ் தெரியாது. எனவே ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதிவிடுங்கள் என கோரிக்கை விடுத்தார்.
 
201804252022539177_1_csktweet._L_styvpf.jpg
 
அதற்கு பதிலளித்த சென்னை அணி, ஆங்கிலம் என்றால் சரி, எங்களுக்கு தோடா தோடா (கொஞ்சம் கொஞ்சம்) ஹிந்தி தான் தெரியும். அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள், என கூறியுள்ளனர். இதையடுத்து, சிலர் ஹிந்தியில் பதிவிடுமாறும், சிலர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டாலே போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.  #VIVOIPL #ChennaiSuperKing

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/25202254/1159033/IPL-2018-Chennai-Super-Kings-replies-dont-know-Hindi.vpf

Link to comment
Share on other sites

‘நாங்க மூச்சு விட்ற சத்தமே இங்க உறுமல்தான்’: சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் மிரட்டல் ட்வீட்

Harbhajan-Singh%202

ஹர்பஜன் சிங் : கோப்புப்படம்   -  படம்உதவி: ட்விட்டர்

 பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் மிரட்டலாக ட்வீட் செய்துள்ளார்.

பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

   

போட்டியின் இறுதியில் கேப்டன் தோனி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்தவுடன், மைதானத்தில் முதல் ஆளாக ஓடிவந்து, தோனியைக் கட்டித்தழுவி பாராட்டியவர் ஹர்பஜன்சிங். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழில் மிரட்டலான ட்வீட் பதிவிட்டுள்ளார்.

harbpng

ஹர்பஜனின் ட்வீட்

 

அதில் “ வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா

யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது…

மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான் ”

என்று தமிழில் ஹர்பஜன் ட்வீட் செய்து பின்னர் கன்னடத்திலும் ட்வீட் செய்துள்ளார்.

கடைசியில் “நீ நொறுக்கு பங்கு.. தோனி, ராயுடு” என இருவரையும் குறிப்பிட்டுள்ளார். #அன்பின் அடையாளம் என்று ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டதில் இருந்து தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

dhoni-jpg
 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகுறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், “சிஎஸ்கே-வை வீழ்த்திவிடலாம் என நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை ஐபிஎல் ச்சலம் பலா. இங்கே ஃபேமஸ் தம் பிரியாணி சாப்பிட வரல, தம் பிடிச்சு விளையாட வந்தோம். சாலா பாஹ உந்தி, சாஹர் சிரக தீஸ்தாவுறா.. ஓப்பனிங்கலயே இறக்குவோம் ராயுடுவ… பவுலர்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன் ரைசர்ஸ்” என பதிவிட்டு இருந்தார்.

புனேயில் நடந்த போட்டியைக் காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் சென்றனர். அதுகுறித்து ஹர்பஜன் பதிவிடுகையில்,

“பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை, அமெரிக்காவுல போய் நீங்க மேட்ச் நடத்தினாலும், விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேறும் என் தமிழினம்..உங்கள் அன்புக்கு நான் அடிமை. நீங்க வேற லெவல் மாஸ் யா சென்னை… அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23680377.ece

Link to comment
Share on other sites

#RCBvCSK: அதிரடி ஃபினிஷர் தோனி - களையிழந்த அனுஷ்கா ஷர்மா

 

இந்த ஐபிஎல் சீசன் முடிவதற்குள் எத்தனை சிஎஸ்கே ரசிகர்கள் ரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்பட போகிறார்களோ தெரியவில்லை. சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகளில் சுவாரஸ்யங்களுக்கும், திடீர் அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை.

தோனிபடத்தின் காப்புரிமைINSTAGRAM/MS DHONI

பட்டியலில் முதலிடம் பெற்ற சிஎஸ்கே

நேற்று பெங்களூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிப் பெற்றதையடுத்து பத்து புள்ளிகளுடன் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கடைசி இடத்தில் டெல்லி அணியும் இடம்பிடித்துள்ளது.

சொந்த மண்ணில் வீழ்ந்த பெங்களூரு

இந்த ஐபிஎல் சீசனின் 24வது போட்டி பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிறகு 206 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக வைக்க தோனியின் அதிரடி ஃபினிஷிங்கால் 19.4 ஓவர்களில் 207 ரன்களை பெற்று போட்டியில் சென்னை அணி வெற்றிப்பெற்றது.

நொறுங்கிப்போன விராட் அணி

சென்னைக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயித்த பெங்களூரு அணி பேட்டிங்குக்கு பிறகு மிகுந்த உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால், இரண்டு மணிநேரம் கழித்து சென்னை வெற்றிப் பெற்றதையடுத்து மைதானத்திலிருந்து தலைகுனிந்தப்படியே வெளியே வந்த பெங்களூரு வீரர்களிடம் முன்பு இருந்த உற்சாகம் இல்லை. அதற்கு ஒரே காரணம் தோனி.

தோனியை ஏன் கூல் கேப்டன் என்கிறார்கள்?

சென்னை பேட்டிங்கை ஆரம்பித்து 12 ஓவர்களில் வெறும் 100 ரன்களை எட்டியிருந்தது. இன்னும் 8 ஓவர்களே இருந்த நிலையில் 106 ரன்கள் எடுக்க வேண்டும். துளிகூட பதட்டமின்றி வெளுத்துவாங்கினார் தோனி. தோனி - ராயுடுவின் அபாரமான இணை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

தோனி தனது ஸ்டையிலில் சிக்சர் பறக்கவிட்டு போட்டியை முடித்து வைக்க, மைதானத்திற்கு வெளியே இருந்த ஹர்பஜன் ஆர்ப்பரித்தப்படி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை தூக்க முயன்றார். ஆனால், தோனி அதற்கு மறுப்பு தெரிவிக்க, பாஜி சமாதானம் செய்து சில நொடிகள் தனது கூல் கேப்டனை அலேக்காக தூக்கினார்.

களையிழந்த அனுஷ்கா ஷர்மா

#RCBvCSK: அதிரடி ஃபினிஷர் தோனி - களையிழந்த அனுஷ்கா ஷர்மாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கணவர் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை காண நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சின்னசாமி மைதானத்திற்கு வந்திருந்தார். ஆர்சிபி வீரர்கள் சிஎஸ்கே பேட்மேன்களை அவுட்டாக்கிய போதெல்லாம் ஆரவாரமாக ரசித்த அனுஷ்கா பெங்களூரு அணி தோல்வியை தழுவிய சோகத்தில் மவுனமாக காணப்பட்டார். ஆட்ட முடிவில் அவரிடமிருந்த சிரிப்பு தோனி மனைவி சாக்‌ஷி முகத்திற்கு மாறியிருந்தது.

ஃபினிஷரின் வேலை பணியை முடிப்பதே

34 பந்துகளில் 70 ரன்களை குவித்த தோனி 7 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இந்த ஐபிஎல் போட்டிகளிலேயே அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்ட போட்டியாக #RCBvCSK போட்டி பார்க்கப்படுகிறது. அடிக்கப்பட்ட 33 சிக்ஸர்களில், சென்னை அணி 17 சிக்ஸர்களை அடித்திருந்தது. ஃபினிஷரின் வேலை பணியை முடிப்பதும், அனுபவத்தை சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதும் என்று ஆட்ட நாயகன் விருது பெற்ற தோனி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-43908391

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: தோனி - "கண்ணா துண்டு ஒரு தடவதான் தவறும்"

 

 
vfghpng

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கான 206 - ஐ சேஸிங் செய்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ட்விட்டர் தாத்தா

           

‏இன்னைக்கு மேட்ச்க்கு அப்புறமும் தோனிக்கு ஹேட்டர்ஸ் இருந்தானா ஒண்ணு மென்டலா இருப்பான். இல்ல மன நோயாளியா இருப்பான்.

SK Boopathi

‏#CSK   " இப்படை தோற்பின் எப்படை வெல்லும் "

CSK Rajesh  

‏தோனி டு ஹேட்டர்ஸ்: கண்ணா துண்டு ஒரு தடவ தான் தவறும்..

வாழ்ந்து கெட்டவன்

‏நீங்கள் தோனியை தூற்றிக்கொண்டே இருங்கள், நாங்கள் போற்றிக்கொண்டே இருப்போம்

MadhankumaR

‏கடைசிவரை சாதாரணமாக இருந்து தோற்க இருந்த ஆட்டத்தை அசாதரணமாக ஆடி அணியை ஜெயிக்க வைத்த அந்த ஒற்றை நம்பிக்கையின் பேர்தான் #தல

கதிர்மொழிவர்மர்   

‏அண்ணா சிரிக்கெட்ல finishing னா என்ன அண்ணா..!!

இன்னைக்கு நடந்த மேட்ச்ல தோனி விளையாடுனத பாருமா..!!

Dinesh

‏ராஜஸ்தான் மேட்ச்ல அவுட் ஆனவுடனே  அப்படியே முதுக பிடிச்சுட்டு போடா அப்பத்தான் நம்புவாங்கன்னு கேலி கிண்டல்கள் வேற..நேத்து அடிச்ச சிக்ஸ்லாம் forearm and back uh bend பண்ணி அடிச்சது.  'அந்த' haters க்கு அவனோட கேம் மூலமாகவே பதில் சொல்லிட்டான்.

veera

‏தோனி சிக்ஸ் அடிச்சே பழகிட்டாரு, நாங்களும் அத ரசிக்க பழகிட்டோம். வயசாகிருச்சி முடிகொட்டிருச்சின்னு உங்களால என்ன சொல்லமுடியுமோ சொல்லிட்டு போங்கடா ஹேட்டர்ஸ்!!

CSK கயல்விழி

‏காலர தூக்கிவிட்டு கெத்தா சொல்வோம் நாங்க #தோனி ஃபேன்னு #Whistlepodu

nbvpng
 

Mohan

ஆயிரம் பேர் சிக்ஸ் அடிச்சாலும் #தோனி அடிக்கும் போது வர சந்தோஷமே தனி..

nmklpng
 

SKP KARUNA

‏என்னங்கடா? வோர்ல்ட் கப் விக்கெட் கீப்பர் ஸ்லாட்டுக்கு சோடி போட்டா பாத்தீங்க! சோடி... தல நின்னா ஸ்டெம்பிங்.. நடந்தா பவுண்டரி., உத்துப் பார்த்தாலே சிக்ஸர்லே... சின்னப்பசங்களா...      

Loner

‏அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தோனி.

ஆல்தோட்டபூபதி

‏இன்னமும் கொஞ்சம் வித்தை இருக்கு, மெதுவா கத்துத்தரேன், சரியா தம்பி கோலி.

CSK இம்ச

‏இந்த ஐபிஎல் சீசனோட ஒட்டுமொத்த கவனத்தையும் தோனி தன் பக்கம் திருப்பிட்டார்.

fvgpng
 

Hasan Kalifa

‏ஆர்சிபி என்னும் பெயர் வைத்த ஒருவன் 200 ரன்கள் அடித்தாலும் தோற்பான்,100 ரன்கள் அடிக்க வேண்டும் என்றாலும் தோற்பான். #RCBvCSK

வெற்றி!!!

‏ஜெயிக்குறதுக்கு முன்னாடி ஆடுறதும் ஜெயிச்சதுக்கு அப்புறம் கொண்டாடுறதும் இவர் வாழ்க்கைலயே கிடையாது...

cѕӄ яαɢuℓ

‏ஜெயிச்ச அப்றம்  மூஞ்சில ஒரு துளி expression இல்ல.... CAPTAIN COOL பார் ஏ ரீசன்

hbgpng
 

dhinesh

‏ராயுடு சென்னையில ஆடுறான்னு நாம சந்தோஷப்படறதை விட மும்பையில ஆடலன்னு #Rohit அழுவறதுதான் அதிகமா இருக்கும்

knpng
 

Thillaiyampalam Tharaneetharan

ராயுடு இன்னுமொரு ரோஹித் சர்மா.

இத்துபோக இருந்தவொன்றை கண்ணாடிப் பேழையில் வைத்து அழகு பார்ப்பதற்கு சமமானது.

நிதிஸ் ராணாவின் வரவால் மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பில்லை என்றிருந்தவருக்கு டோனி ஆரம்ப வீரராக்கி உயிர் கொடுத்திருக்கிறார்.

hjpng

ஜோக்கர்...  

‏நேற்று இரவு 11 மணிக்கு ஆரம்பித்த "டோனி" புயல் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற இடங்களில் கடுமையாக வீசி வருகிறது..

கரையை கடக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம்..

ஆகவே ஹேட்டேர்ஸ் யாரும் சமூக வலைதளங்களில் உலாவ வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

kmpng
 

தமிழ் கிறுக்கு

‏தோனி சிக்ஸூக்கு தன்னை மறந்து ஸ்டேடியத்துல ஆர்சிபி ஃபேன்ஸூம் கை தட்றானுவ..

இது தோனிக்கு மட்டுமே சாத்தியம்

http://tamil.thehindu.com/opinion/blogs/article23680771.ece

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஆப் வெளியீடு

 
 அ-அ+

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'பேட்டிள் ஆப் சேப்பாக் 2' ஆப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. #VIVOIPL #ChennaiSuperKings #BattleOfChepauk2

 
 
 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஆப் வெளியீடு
 
 
சென்னை:
 
சென்னை அணி, இரண்டு ஆண்டு தடை முடிந்து இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் மீண்டும் களமிறங்கி உள்ளது. டோனி தலைமையில் களமிறங்கி இருக்கும் சென்னை அணி இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆப் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பேட்டிள் ஆப் சேப்பாக் 2 (Battle Of Chepauk 2) என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் மூலம் ரசிகர்கள் செல்போனில் சென்னை அணிக்காக கிரிக்கெட் விளையாடலாம். அந்த ஆப்பில் சூப்பர் ஓவர், மல்டி பிளேயர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
 
201804272002183960_1_battleofchepauk._L_styvpf.jpg
 
முன்னதாக வெளியிடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே ஆப்) என்ற ஆப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இந்த ஆப்பிற்கும் கிடைத்துள்ளது. #VIVOIPL #ChennaiSuperKings #BattleOfChepauk2

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/27200218/1159438/CSK-launched-new-gaming-app-Battle-Of-Chepauk-2.vpf

Link to comment
Share on other sites

மும்பை அணியிடம் தோற்றாலும் கவலையில்லை.. ஜூனியருக்கு ‘கீப்பிங் டிப்ஸ்’ கூறிய தோனி

 

 
dhoni

மும்பை அணி வீரர் இஷான் கிஷானுக்கு கீப்பிங் டிப்ஸ் கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி   -  படம்உதவி: இன்ஸ்டாகிராம்

மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால், இந்தத் தோல்விக்குப் பின் அந்த அணியின் விக்கெட் கீப்பருக்கு தேவையான ஆலோசனைகளை தோனி வழங்கியுள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்தவருமான இஷான் கிஷான் விளையாடி வருகிறார். தோனியின் மாநிலத்தைச் சேர்ந்தவரான இஷான் கிஷான் கீப்பிங் நுணுக்கங்கள் குறித்து போட்டி முடிந்தபின் தோனியிடம் கேட்டார்.

எதிரணிவீரருக்கு எப்படி கீப்பிங் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பது என்று முகம் சுளிக்காமல் கீப்பிங் செய்வதில் உள்ள நுணுக்கங்களை இஷான் கிஷானுக்கு சொல்லிக் கொடுத்தார். சில பந்துகள் கீப்பிங் செய்தும் காண்பித்தார். ஏறக்குறைய 45 நிமிடங்கள் வரை இஷான் கிஷானுக்கு கீப்பிங் செய்தல், ஸ்டெம்பிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தோனி விளக்கினார்.

இதை இஷான் கிஷாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘கீப்பிங்கில் மிகச்சிறந்த மாஸ்டரிடம் இருந்து டிப்ஸ் பெற்றேன். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு விக்கெட் கீப்பர்களுக்கான உறவு இது’ என்று பதிவிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றபோதிலும், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில் தோனியின் விக்கெட் கீப்பிங், ஸ்டெம்பிங் செய்யும் வேகத்துக்கு யாரும் இணையில்லை.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலில் பேட், கையில் கிளவுஸ் அணிந்திருந்த போதிலும் தேர்ட் மேன்வரை ஓடிச் சென்று பந்தை பவுண்டரி செல்லாமல் தோனி தடுத்த நிகழ்வு பாரட்டப்பட்டது. 35 வயது ஆனபின்பும் உடல்தகுதியை தோனி சிறப்பாக பராமரித்துவருகிறார் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23717839.ece

Link to comment
Share on other sites

‘தோல்வியின் பாடத்தில் யானை போல் எழுவோம்’- சிஎஸ்கேவை உற்சாகப்படுத்தும் ஹர்பஜன் சிங் ட்வீட்

 

 
harbaj

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங்   -  படம்: ஐஏஎன்எஸ்

தோல்வியின் பாடத்தில் யானை போல் எழுவோம் என்று மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் தோல்விக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் 11-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார். சிஎஸ்கே வந்ததில் இருந்தே ஹர்பஜன் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

harpng
 

இந்த தோல்விக்கு பின் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தோல்வி எனும் அடி சறுக்கியது

ஆனால்,நாம் யானைபோல் எழுவதற்கு

நேரம் பிடிக்கப்போவதில்லை குதிரைபோல்

மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம்.

தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடான போட்டிக்கு பின் ஹர்பஜன் சிங் பதிவு செய்த ட்வீட்டில்,

“ வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா

யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது…

மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான் ”

என்று தமிழில் ஹர்பஜன் ட்வீட் செய்து பின்னர் கன்னடத்திலும் ட்வீட் செய்துள்ளார்.

கடைசியில் “நீ நொறுக்கு பங்கு.. தோனி, ராயுடு” என இருவரையும் குறிப்பிட்டுள்ளார். #அன்பின் அடையாளம் என்று ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகுறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், “சிஎஸ்கே-வை வீழ்த்திவிடலாம் என நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை ஐபிஎல் ச்சலம் பலா. இங்கே ஃபேமஸ் தம் பிரியாணி சாப்பிட வரல, தம் பிடிச்சு விளையாட வந்தோம். சாலா பாஹ உந்தி, சாஹர் சிரக தீஸ்தாவுறா.. ஓப்பனிங்கலயே இறக்குவோம் ராயுடுவ… பவுலர்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன் ரைசர்ஸ்” என பதிவிட்டு இருந்தார்.

புனேயில் நடந்த போட்டியைக் காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் சென்றனர். அதுகுறித்து ஹர்பஜன் பதிவிடுகையில்,

“பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை, அமெரிக்காவுல போய் நீங்க மேட்ச் நடத்தினாலும், விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேறும் என் தமிழினம்..உங்கள் அன்புக்கு நான் அடிமை. நீங்க வேற லெவல் மாஸ் யா சென்னை… அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று பதிவிட்டுஇருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23719066.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ்

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. #IPL2018 #CSKvMI

 
 
ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ்
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான புனே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தபோதே ஏறக்குறைய தோல்வி உறுதி செய்யப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 19.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் தொடரில் தங்களை தக்க வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 7 போட்டியில் 2 வெற்றி, ஐந்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அந்த அணிக்கெதிராக நேற்றயை தோல்வியின் மூலம் 13 முறை தோல்விகளை சந்தித்துள்ளது. மற்ற அணிகளை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இடைவெளி மிக அதிகம்.

201804291355272869_1_chennaisuperkings1-ssa._L_styvpf.jpg

அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 7 முறையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 7 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 6 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 6 முறையும் தோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டு முறை சாம்பியன், அதிக முறை பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது. #IPL2018 #CSK #MI #CSKvMI

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/29135527/1159715/IPL-chennai-super-kings-most-failed-against-mumbai.vpf

Link to comment
Share on other sites

எப்போது ஷாட்களை அடிப்பேன் என்பது பவுலர்களுக்குத் தெரியாது: முன்னால் இறங்குவது பற்றி தோனி பேட்டி

 

 
dhoni2jpg

தோனி. | ஏ.எப்.பி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சில மாற்றங்களைத் தைரியமாகச் செய்தாலும் முடிவு ஓவர்களில் சொதப்பியது, இதனால் பேட்டிங் பவரில்தான் சென்னை தொடர்ந்து வெல்கிறது. நேற்றும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக தோனி, வாட்சன், ராயுடு அதிரடியில் சென்னை வென்று முதலிடம் சென்றது.

தோனி தன் டவுன் ஆர்டரை சரியாக டைமிங் செய்தார். 5-ம் நிலையில் இறங்கினார். இது பற்றி நேற்று ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது:

''காயம் காரணமாகத்தான் நான் அதிகமாக உடற்பயிற்சி செய்வதில்லை. டி20யில் பெரிய பணிச்சுமை கிடையாது. எனவே அதனை எளிதில் நிர்வகிக்க முடியும். நல்ல தொடக்கம் காண வேண்டுமென்பது முக்கியம், அது ரன்கள் அளவில்தான் என்றில்லை. நல்ல கூட்டணி கூட நல்ல தொடக்கம்தான்.

என்னை நானே முன்னாள் இறக்கிக் கொண்டு 5-ம் நிலையில் இறங்கினேன். 8-வது 10-வது ஓவர்களின் போது இறங்க முடிகிறது என்றால் அது ஒரு நல்ல கேளிக்கையாகவே உள்ளது. முன்னால் இறங்கும் போது நாம் எப்போது பெரிய ஷாட்களை ஆடுவோம் என்பது எதிரணி பவுலர்களுக்குத் தெரியாது.

பிட்சைப் பார்த்தவுடன் அயல்நாட்டு பேட்ஸ்மென் ஒருவரைக் களமிறக்கலாம் என்று நினைத்தோம். சாம் பில்லிங்ஸுக்கு ஓய்வு தேவை. ராயுடு மிடில் ஆர்டரில் ஸ்திரத்தன்மையை அளிப்பார் என்பதால் டுபிளெசிஸை தொடக்கத்தில் இறக்கினோம். அது சிறந்த முடிவு. தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்தே இங்கிடி அபாரமாக வீசுகிறார். அவர் உயரமாக இருப்பதால் பவுன்ஸ் செய்கிறார்.

முடிவு ஓவர்கள் நன்றாக இல்லை. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்போது சிறிய மைதானங்களில் நடைபெறும் அப்போது இது போன்று வீச முடியாது, அங்கு தவறுகளுக்கு இடமில்லை.''

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23736301.ece?homepage=true

Link to comment
Share on other sites

அதிக சிக்ஸர்கள், அதிக ஸ்டிரைக் ரேட்: கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடும் தோனி!

 

 
dhoni_newxx

 

தோனி விளையாடும் 11-வது ஐபிஎல் போட்டி இது.

இத்தனை வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார் தோனி. 

8 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்ளிட்ட 286 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

வேறு எந்த வருடத்தை விடவும் இம்முறை அதிக ஸ்டிரைக் ரேட் (100 பந்துகளுக்கு அடித்த ரன்கள்) வைத்துள்ளார் தோனி. இதற்கு முன்பு 2013-ல் 162.89 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார். அந்த வருடம் தோனி 4 அரை சதங்களும் எடுத்திருந்தார்.

ஆனால் இந்தமுறை தோனியின் ஸ்டிரைக் ரேட் 169.23. தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன், 22 பந்துகளில் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி.

2011-ல் 23, 2013-ல் 25, 2014-ல் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி (இதர வருடங்களில் 20-க்கும் குறைவாகவே சிக்ஸர்கள் அடித்துள்ளார்.) ஆனால் 20+ சிக்ஸர்கள் அடிக்க குறைந்தபட்சம் 16 ஆட்டங்களாவது தோனிக்குத் தேவைப்பட்டன. ஆனால் இந்தமுறை எட்டே ஆட்டங்களில் 20 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார் தோனி.

இந்த அசத்தலான, அதிரடியான பேட்டிங்கை ரசிகர்களும் நிபுணர்களும் புகழ்ந்து வருகிறார்கள். பழைய தோனியை மீண்டும் காண்பதுபோல இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணி மற்றும் அதன் ரசிகர்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார் தோனி. தனது இரண்டாவது தாய் வீடு என்று சென்னையை அடிக்கடிக் குறிப்பிடுவார். இரு வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவதால் சிஎஸ்கே ரசிகர்களை அதிகம் மகிழ்விக்கவேண்டும் என எண்ணியுள்ளார் தோனி. அதனால் இந்தமுறை அவருடைய பேட்டிங் கூடுதல் ஆக்ரோஷத்துடன் மிளிர்கிறது. மேலும் கடந்த சில மாதங்களாக தோனியின் பேட்டிங் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. முன்பு போல அதிரடியாக ஆடுவதில்லை, டைமிங் இல்லை, சிக்ஸ் அடிக்க
முடிவதில்லை போன்ற விமரிசனங்களுக்கான பதிலடியையும் இந்த ஐபிஎல்-லில் தந்துவருகிறார் தோனி. இதனால் இந்த வருடமும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறத் தயாராகிவருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல்: தோனியின் ஸ்டிரைக் ரேட்

2008 - 133.54
2009 - 127.20
2010 - 136.66
2011 - 158.70
2012 - 128.77
2013 - 162.89
2014 - 148.40
2015 - 121.96
2016 - 135.23
2017 - 116.00
2018 - 169.23

 

 

http://www.dinamani.com/sports/special/2018/may/01/ms-dhoni-magic-floors-delhi-daredevils-2911254.html

https://www.iplt20.com/video/129241

Link to comment
Share on other sites

அதிரடி சிக்ஸர்கள்: வாட்சன், தோனி பேட்டிங்குகளின் விடியோ

 

 
dhoni_dd

 

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடியும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி தோல்வியடைந்தது. தில்லி டேர் டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 30-வது ஆட்டம் புணேவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சென்னையும், கடைசி இடத்தில் தில்லி அணியும் உள்ளன. முன்னதாக டாஸ் வென்ற தில்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 78 ரன்களை குவித்த நிலையில் வாட்சன் ஆட்டமிழந்தார். ராயுடு 41 ரன்களில் வீழ்ந்தார். கேப்டன் தோனி 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன், 22 பந்துகளில் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 211 ரன்களை எடுத்திருந்தது. தில்லி தரப்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால், 20-வது ஓவர் முடிவில் தில்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணி தரப்பில் ஆசீப் 2 விக்கெட்டையும், என்கிடி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தனி நபராக விஜய் சங்கர் போராடியும் தில்லியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை.

புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை அணி, தற்போதைய வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

 

https://www.iplt20.com/video/129482/m30-csk-vs-dd-match-highlights?tagNames=indian-premier-league,highlights,indian-premier-league,highlights

http://www.dinamani.com/sports/special/2018/may/01/watson-dhoni-muscle-csk-to-the-top-2911238.html

Link to comment
Share on other sites

மே தினம்: தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சியால் தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

 

 
dhoni1

தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஊழியர்கள்   -  படம்உதவி: ட்விட்டர் சிஎஸ்கே

தொழிலாளர்கள் தினமான மே1-ம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மைதானத்தை பராமரிக்கும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் தடைக்குபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, 6 போட்டிகளில் வெற்றியும், 2போட்டிகளில் தோல்வியும் அடைந்து, 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்று கொல்கத்தாவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம் வீரர்களின் உழைப்பு ஒருபுறம் இருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அணியின் இக்கட்டான தருணங்களில் இவரின் கூலான அணுகுமுறையும், அனல்பறக்கும் பேட்டிங்கும் வெற்றிகள் பலவற்றை குவிக்க உறுதுணையாக இருந்துள்ளது.

களத்தில் ஆக்ரோஷமான பேட்டிங்கையும், கூலான கேப்டன்ஷிப்பையும் வெளிப்படுத்தும் தோனி, தனி மனிதராகவும் சிலநேரங்களில் அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைப்பார்.

கடந்த 1-ந்தேதி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் மைதானப் பராமரிப்பில் ஈடுபடும் ஊழியர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தோனி, அவர்களுடன் சில மணிநேரத்தை செலவிட்டுள்ளார்.

களத்தில் தொலைவில் மட்டுமே தோனியைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற களபராமரிப்பு ஊழியர்களுக்கு திடீரென தோனியை அருகில் சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தொழிலாளர்களுடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மே தின வாழ்த்துக் கூறியுள்ளது.

dhoni2jpg

மைதான பராமரிப்பு ஊழியர்களுடன் தோனி கோப்புப்படம்

 

அதில் சூப்பரான நாள். கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் செலவிடும் ஒவ்வொருவருக்கும் சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்கள். குறிப்பாக சென்னை சேப்பாக்கம், புனே நகரில் மைதான பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள். #விசில்போடு, #எல்லோவ் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் அவரை புகழந்து வருகின்றனர்.  மனிதநேயம் மிக்க மனிதர்,  உண்மையான மனிதர், தொழிலாளர்களின் தோழர் என்றெல்லாம் அவருக்கு புகழாரம் சூட்டி அவரின் ரசிகர்கள் மகிழ்கின்றனர். ஏராளமானோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23760660.ece

Link to comment
Share on other sites

சிஏஸ்கே வீரர்களை அதிர்ச்சியடைய செய்த சிறுவன்

 

 
iunjlpng

கொல்கத்தா நைட் ரைடரஸ்  - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு இடையே நடந்த போட்டியில் சிறுவன் ஒருவனின்  செயல் சிஎஸ்கே வீரர்கள் அதிர்ச்சியடைய செய்தது.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 33வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி அடித்த் 177 ரன்களை கொல்கத்தா அணி 18 ஓவரிலேயே எட்டி வெற்றியும் பெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்யும் போது களத்துக்கு வெளியே சிஎஸ்கே வீர்ர்களிடம் கேப்டன் தோனி உரையாற்றி கொண்டிரந்தார். அப்போது எதிர்பாறாமல் ஓடி வந்த சிறுவன் ஒருவன் தோனியின் காலில் விழுந்தார்.

இதனை சற்று எதிர்பார்க்காத சிஎஸ்கேவின் பிற வீரர்கள் அதிர்ச்சையடைந்தனார். ஆனால் தோனியோ அந்த சிறுவனின் முதுகில் தட்டி கொடுத்து, முகத்தில் எந்த பாவணையும் இல்லாமல் அமைதியாக நடந்து சென்று விட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/article23770291.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடரில் அதிகம் பின்தொடரப்படும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்

 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதிக பார்வையாளர்களை கொண்டு வந்துள்ளதாக தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது. #VIVOIPL #IPL2018 #ChennaiSuperKings #mostfollowedteam

 
ஐபிஎல் தொடரில் அதிகம் பின்தொடரப்படும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்
 
 
புதுடெல்லி:
 
ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 
 
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த சீசனில் சென்னை அணி அதிக பார்வையாளர்களை கொண்டு வந்துள்ளதாக தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.
 
அதன்படி, விளையாட்டு போட்டிகளை மட்டும் ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி சேனல் தொடர்ந்து 17-வது வாரமாக அதிக பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த வாரம் மட்டும் 98,59,30,000 பார்வையாளர்களை பெற்றது. 
 
201805050556089362_1_csk0405._L_styvpf.jpg
 
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் மிக அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கடந்த வாரம் நடந்த சென்னை, பெங்களூரு இடையேயான போட்டியை 1,66,97,000 பேர் பார்த்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சென்னை, பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி 1,53,95,000 பார்வையாளர்களை பெற்றிருந்தது. 
 
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகம் பின்தொடரப்படும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அதிகம் நேசிக்கப்படும் சேனலாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி சேனலாக உள்ளது. #VIVOIPL #IPL2018 #ChennaiSuperKings #mostfollowedteam

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/05055609/1160997/IPL-2018-CSK-is-the-most-followed-team-reveals-BARC.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல்: தோனியை பார்க்க மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்

 

 
dhoni-1jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது நேற்று ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற காட்சி பார்த்து அரங்கமே அதிர்ந்தது.

ஐபிஎல் 2018-ன் 35வது போட்டியில் ஆர்சிபி அணியை முதலில் பேட் செய்ய அழைத்த தோனி அருமையான பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து அந்த அணியை 127 ரன்களுக்கு மட்டுபடுத்தி பிறகு 18 ஓவர்களில் 128/4 என்று தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.

புனே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்திவ் பட்டேல் 53, டிம் சவுத்தி 36 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, நிதானமாக விளையாடியது. இறுதிய் 18 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்த சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நேற்று முடிந்தவுடன், திடீரென ரசிகர் ஒருவர் தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அத்துமீறி அவர் நுழைந்ததால் போலீஸாரும், மற்றவர்களும் பதற்றம் அடைந்தனர். அவரை காவலர்கள் விரட்டிச் சென்றனர். அந்த நபர் நேராக டோனியிடம் ஓடி வந்து, அவரது காலில் விழுந்தார்.

தான் தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவரிடம் ஆசி வாங்குவதற்காகவே மைதானத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் கூறினார். இந்த காட்சியை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் கைதட்டலுடன் ஆரவாரம் செய்ததனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/article23791580.ece

http://tamil.thehindu.com/sports/article23791580.ece

Link to comment
Share on other sites

360 ரன்கள், சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 166; தோனியிடம் சமீபமாக காணாத பேட்டிங்கை இப்போது பார்க்கிறேன்: மைக் ஹஸ்ஸி

 

 
 
dhoni

படம். | பிடிஐ.

நடப்பு ஐபிஎல் தொடர் தோனியின் பேட்டிங்கில் ஒரு புத்தெழுச்சி என்றே கூற வேண்டும். 10 போட்டிகளில் 360 ரன்கள், இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள், சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 166 என்று 36 வயதினிலே கலக்கி வருகிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

மைக் ஹஸ்சி தோனியின் இந்தப் பார்ம் பற்றி விதந்தோதிக் கூறியுள்ளார். அதுவும் அவர் ரன் எடுக்கும் விதங்கள் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

 

விராட் கோலியும் தோனியைப் புகழ்ந்து பேசுகையில், “தோனியின் இந்தப் பேட்டிங் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம். அது குறித்து எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்” என்று கூறியிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் அறிவுரையாளர் மைக் ஹஸ்ஸி கூறும்போது, “எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர் அவர், மிக அருமையான விக்கெட் கீப்பர், நம்ப முடியாத அளவுக்கு பேட்டிங்கில் அருமையான பார்மில் உள்ளார் தோனி.

கடந்த சில ஆண்டுகளில் அவரிடம் காணாத சிறந்த பேட்டிங்கை இப்போது பார்க்கிறேன்” என்றார் மைக் ஹஸ்சி.

ஷேன் வாட்சனும், நான் எப்போது பார்ப்பதை விடவும் இப்போது தோனி பந்துகளை அருமையாக அடிக்கிறார். அனைத்து விக்கெட்டுகளிலும் அடிக்கிறார். அனைத்து பவுலர்களுக்கு எதிராகவும் அடிக்கிறார். தோனியை மிக அருகேயிருந்து பார்ப்பது சிறப்பு வாய்ந்தது, என்றார் வாட்சன்.

http://tamil.thehindu.com/sports/article23801098.ece

Link to comment
Share on other sites

ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறார் சிஎஸ்கே வீரர்!

 

 
wood_1

 

சிஎஸ்கே அணி வீரரான மார்க் வுட், நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

அடுத்து வருகிற போட்டிகளுக்குத் தயார் ஆவதற்காக இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்துள்ளேன். டெஸ்ட் அணியில் மீண்டும் திரும்பியதாலும், மேலும் தற்போதைய சிஎஸ்கே அணியில் நான் இடம்பெறாததாலும் நாடு திரும்பி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி, டெஸ்ட் அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பை உருவாக்கவுள்ளேன்.

சிஎஸ்கே அணியில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு ஐபிஎல் தொப்பியை அணிவித்தார் தோனி. மிகவும் பெருமைக்குரிய தருணம் அது. இந்த வருடம் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லையென்றாலும் மீண்டும் அந்தத் தொப்பியை அணிய ஆவலாக உள்ளேன். வீட்டில் இருந்துகொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஆதரவளிப்பேன் என்று
கூறியுள்ளார். 

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.50 கோடிக்கு மார்க் வுட்டைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இடம்பிடித்த மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 49 ரன்கள் கொடுத்தார். இதனால் அடுத்த ஆட்டங்களில் மேலும் விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

மே 24 அன்று லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்குத் தயாராவதற்காக இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் மார்க் வுட். 

http://www.dinamani.com/sports/special/2018/may/09/england-fast-bowler-mark-wood-ends-ipl-stint-early-2916431.html

Link to comment
Share on other sites

1000 ரசிகர்களுடன் புனேவுக்கு புறப்பட்டது, சி.எஸ்.கே சிறப்பு ரயில்!

 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சார்பாக 1000 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலமாக புனே நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 13-ம் தேதி நடைபெற உள்ள போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் - கிரிக்கெட்

 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கி இருப்பதால், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆட்டம் நடைபெற்ற நிலையில், காவிரி பிரச்னை காரணமாக எழுந்த எதிர்ப்பால் பிற ஆட்டங்கள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்பட்டன. 

இந்த நிலையில், சி.எஸ்.கே அணி மோதும் போட்டியைக் காண்பதற்காக ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் இருந்து ரசிகர்களுக்காகச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஏப்ரல் 20 -ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும் போட்டியைக் காண்பதற்காக சென்னையில் இருந்து ’சி.எஸ்.கே விசில் போடு’ சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதில் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் 1000 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அங்குச் சென்று சி.எஸ்.கே அணியின் ஆட்டத்தைக் கண்டதுடன், அணியினரை உற்சாகப்படுத்தினார்கள். 

சி.எஸ்.கே அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வரும் 13-ம் தேதி புனே நகரில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண்பதற்காக சென்னையில் இருந்து மீண்டும் 1000 சி.எஸ்.கே ரசிகர்களை அழைத்துச் செல்ல அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலையில் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். 

ரசிகர்களுக்காக ரயில்

அந்தச் சிறப்பு ரயிலில் ஒரு ஏ.சி கோச்சுடன் சேர்த்து மொத்தம் 13 பெட்டிகள் உள்ளன. அனைத்தும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள். அதில் 1000 பேர் பயணம் செய்கிறார்கள். இது குறித்து சி.எஸ்.கே அணியின் நிர்வாகத் தரப்பில் கூறுகையில், ’’புனே நகருக்குச் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்படும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கான டிக்கெட், உணவு, தங்குமிடம், ஜெர்ஸி, புனே நகரில் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். 13-ம் தேதி நடக்கும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து இந்தச் சிறப்பு ரயில் 14-ம் தேதி சென்னைக்கு கிளம்பும். ரசிகர்களுக்காக இந்தச் சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம்’’ என்றார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில், தமிழகத்தைச் சேர்ந்த 1000 ரசிகர்கள், சி.எஸ்.கே அணியின் மஞ்சள் வர்ண டி.ஷர்ட் அணிந்தபடி சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மாலையில் எங்குத் திரும்பினாலும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது.

https://www.vikatan.com/news/tamilnadu/124814-csk-cricket-team-organises-special-train-for-fan-to-pune.html

Link to comment
Share on other sites

பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா - ஹர்பஜன் சிங் டுவிட்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், அப்பவப்போது தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். #CSK #IPL2018 #HarbhajanSingh #VIVOIPL #KKRvCSK

 
 
பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா - ஹர்பஜன் சிங் டுவிட்
 
 
புனே:
 
சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
 
இன்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
 
201805132133240097_1_DdC6FcdUwAIWNCH2._L_styvpf.jpg
 
இந்நிலையில், ஐதராபாத் அணியிடம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளதாவது, “ஓங்கி இடிஇடித்து,ஓயாமல் மின்னல் வெட்டி,பல மணிநேரம் நிக்காமல்  நெரம்பபபெய்த,வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை.பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா.இது தலை நிமிர்ந்து நடை போடும் @chennaiipl @RayuduAmbati @ShaneRWatson33 #chahar #விஸ்வாசம்", என அவர் கூறியுள்ளார்.  #CSK #IPL2018 #HarbhajanSingh #VIVOIPL

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/13213324/1162741/IPL-Harbhajan-Singh-tweets-about-CSK-win-against-SRH.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.