Jump to content

பூமி அதிர்ச்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம்.

குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு.

இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கிற பயணிகளையும் ஒரு ஆட்டு ஆட்டித் தான் புறப்படும்.எனக்கு உடனே அந்த ஞாபகம் தான் வந்தது.

http://beta.latimes.com/local/lanow/la-me-ln-earthquake-bay-area-20180104-story.html

An estimated 9.8 million people felt a magnitude 4.4 earthquake that rumbled across the Bay Area early Thursday, the U.S. Geological Survey reported.

It was felt throughout the region, with people more than 150 miles away reporting to the agency that they felt the shaking for perhaps five to 10 seconds, according to officials. Near San Francisco International Airport, several jolts could

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எம்மில் அநேகருக்கு ஏற்படாத புதிய அனுபவம் இது....!

நம்ம அனுபவம் புகையிரதப் பெட்டிகளோடு சரி...!

உங்கள் அனுபவப் பகிர்வைப் பார்த்த பிறகு... இந்த அனுபவம் எமக்கு வேண்டாம் என்று முடிவுகட்டி விட்டேன்!

Link to comment
Share on other sites

7 hours ago, ஈழப்பிரியன் said:

.

இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கிற பயணிகளையும் ஒரு ஆட்டு ஆட்டித் தான் புறப்படும்.எனக்கு உடனே அந்த ஞாபகம் தான் வந்தது.

நல்ல ஒப்பீடு அண்ணா... இதை வாசிக்கும் போது நான் உணர்ந்த பூமியதிர்ச்சியும் இலங்கை புகையிரதம் சடார் புடார் என்று வெளிக்கிடுவதும் மனசுக்குள்ளும் உணர்வுக்குள் வந்து போகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது தான் முதல் அனுபவம்.இருந்த வீடே ஒருக்கால் பலத்த சத்தத்துடன் ஆடிப் போட்டு நின்றால் எப்படி இருக்கும்.ரொம்பவும் பயந்தே விட்டேன்.

5 hours ago, புங்கையூரன் said:

எம்மில் அநேகருக்கு ஏற்படாத புதிய அனுபவம் இது....!

நம்ம அனுபவம் புகையிரதப் பெட்டிகளோடு சரி...!

உங்கள் அனுபவப் பகிர்வைப் பார்த்த பிறகு... இந்த அனுபவம் எமக்கு வேண்டாம் என்று முடிவுகட்டி விட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

எம்மில் அநேகருக்கு ஏற்படாத புதிய அனுபவம் இது....!

நம்ம அனுபவம் புகையிரதப் பெட்டிகளோடு சரி...!

உங்கள் அனுபவப் பகிர்வைப் பார்த்த பிறகு... இந்த அனுபவம் எமக்கு வேண்டாம் என்று முடிவுகட்டி விட்டேன்!

புங்கை விடிய எழும்பியவுடன் நீ இந்த கோதாரிக்குள் இருக்க வேண்டாம் நியுயோர்க் பக்கம் வா என்று மகளுடன் தொடங்க பொறுங்கோ என்று செய்தியை போட்டு காட்டி பாருங்கோ குளிரால் ஒரு கிழமைக்குள் 12 பேர் இறந்துள்ளனர் இதுக்கு என்ன செய்கிறது என்றவுடன் பேசாமல் இருந்துவிட்டா.

8BDC87AC-E81F-45BC-A9F5-B9566387B693.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி அதிர்ச்சியில்...  உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஈழப் பிரியன்.
கடவுளே... என்று, பாரதூரமாக எதுவும் நடக்கவில்லை என்பது பெரும் ஆறுதல்.

Link to comment
Share on other sites

இப்பவும் நினைவு இருக்கு 1992ம் ஆண்டு  ஒரு ஏப்ரல்  மாத இரவு 3 மணி இருக்கும்.

யாரோ கட்டிலை தூக்கி சரிப்பது போல ஒரு உணர்வு ஆனால் ஒரு சில விநாடிகள்தான்.

பயத்தில் எழும்பி லைட்டை போட்டு யன்னனால் வெளியில் பார்த்தேன்.

என்னைபோல சிலரும் அந்த அடுக்குமாடி குடியிப்பில் யன்னல் வழியே பார்க்கிறார்கள்.

ம்ம் பூமி அதிர்ச்சி என்று புரிந்து கொண்டேன். திரும்பவும் இழுத்து மூடிகொண்டு படுத்ததுதான்.tw_blush:

அப்ப தனிகாட்டு ராஜா. யாரும் இல்லை என்ன வென்றும் கேட்க..<_<

அடுத்தநாள் காலை பத்திரிகைகளில் பார்த்தபோது தெரிந்தது ஒரு சில வினாடிகளுக்கு 6,0 என்ற அளவில் அதிர்ந்ததாக.

728908403.jpg

அந்த பூமி அதிர்வில் சேதமடைந்த ஒரு கார். இது நான் இருந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த நகரத்தில்.

16 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம்.

குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு.

இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கிற பயணிகளையும் ஒரு ஆட்டு ஆட்டித் தான் புறப்படும்.எனக்கு உடனே அந்த ஞாபகம் தான் வந்தது.

http://beta.latimes.com/local/lanow/la-me-ln-earthquake-bay-area-20180104-story.html

An estimated 9.8 million people felt a magnitude 4.4 earthquake that rumbled across the Bay Area early Thursday, the U.S. Geological Survey reported.

It was felt throughout the region, with people more than 150 miles away reporting to the agency that they felt the shaking for perhaps five to 10 seconds, according to officials. Near San Francisco International Airport, several jolts could

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

பூமி அதிர்ச்சியில்...  உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஈழப் பிரியன்.
கடவுளே... என்று, பாரதூரமாக எதுவும் நடக்கவில்லை என்பது பெரும் ஆறுதல்.

4.4 என்றபடியால் உங்களுடன் பகிரக் கூடிய மாதிரி இருந்தது.இதுவே 8க்கு கூட என்றால் சந்தேகம் தான்.

5 hours ago, நவீனன் said:

இப்பவும் நினைவு இருக்கு 1992ம் ஆண்டு  ஒரு ஏப்ரல்  மாத இரவு 3 மணி இருக்கும்.

யாரோ கட்டிலை தூக்கி சரிப்பது போல ஒரு உணர்வு ஆனால் ஒரு சில விநாடிகள்தான்.

பயத்தில் எழும்பி லைட்டை போட்டு யன்னனால் வெளியில் பார்த்தேன்.

என்னைபோல சிலரும் அந்த அடுக்குமாடி குடியிப்பில் யன்னல் வழியே பார்க்கிறார்கள்.

ம்ம் பூமி அதிர்ச்சி என்று புரிந்து கொண்டேன். திரும்பவும் இழுத்து மூடிகொண்டு படுத்ததுதான்.tw_blush:

அப்ப தனிகாட்டு ராஜா. யாரும் இல்லை என்ன வென்றும் கேட்க..<_<

அடுத்தநாள் காலை பத்திரிகைகளில் பார்த்தபோது தெரிந்தது ஒரு சில வினாடிகளுக்கு 6,0 என்ற அளவில் அதிர்ந்ததாக.

728908403.jpg

அந்த பூமி அதிர்வில் சேதமடைந்த ஒரு கார். இது நான் இருந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த நகரத்தில்.

ஒரு சில வினாடிக்குள் உயிர் போய் வந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.

ஊரிலை உப்புடி சட்டிபானைச்சத்தம் கேக்குமெண்டால் பிசாசு வந்திட்டுதெண்டுதான் நினைப்பினம்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை உப்புடி சட்டிபானைச்சத்தம் கேக்குமெண்டால் பிசாசு வந்திட்டுதெண்டுதான் நினைப்பினம்.... :grin:

ஊரிலையும் சட்டி பானை சத்தம் கேட்டிருக்கிறேன்.ஆனால் பூமி அதிர்ச்சியில் அல்ல.பூனையும் எலியும் கலைபடும் போது.

மீன் கறி ஏதாவது மணமான கறி என்றால் உறியில்த் தான் தொங்கும்.

கல்வீடு கட்டிய பின் உறியையே காணோம்.

இங்குள்ள பல உறவுகளே உறியைக் கண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதூரமாக எதுவும் நடக்கவில்லை என்பது பெரும் ஆறுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஓர் அனுபவத்தை இதுவரை நான் சந்திக்கவில்லை. அமெரிக்காவின் east coast பகுதியில் வசிக்கின்றீர்கள் என நினக்கின்றேன். 

பொதுவாக இவை new zeland / japan இவை போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படும்.
இவற்றில் இருந்து பாதுகாத்த்து கொள்ள flat land ஐ நோக்கி ஒடி விடுவார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இது உண்மையா? 

மேலும் 94ல் Los Angeles ல் ஏற்பட்ட பூமியதிர்வில் பல சேதம் ஏற்பட்டது.  இதில் சில இலங்கையர்கள் கொல்லப்பட்டார்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரிலையும் சட்டி பானை சத்தம் கேட்டிருக்கிறேன்.ஆனால் பூமி அதிர்ச்சியில் அல்ல.பூனையும் எலியும் கலைபடும் போது.

மீன் கறி ஏதாவது மணமான கறி என்றால் உறியில்த் தான் தொங்கும்.

கல்வீடு கட்டிய பின் உறியையே காணோம்.

இங்குள்ள பல உறவுகளே உறியைக் கண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

Bildergebnis für உறி

உறியை... அறியாத உறவுகளுக்கு, அதனைப் பற்றிய படம்.
"உறி"  இப்படித்தான்... இருக்கும். நாங்கள் பாவித்துள்ளோம்.
இதனை... அப்போ, யாழ். பழைய சந்தையில் வாங்கலாம். அதன்... விலை, என்ன என்று  நினைவுக்கு வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பாரதூரமாக எதுவும் நடக்கவில்லை என்பது பெரும் ஆறுதல்.

எத்தனையோ பூமி அதிர்வுகளையும் இடிபாடுகளையும் இடர்களையும் தொலைக்காட்சியில் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கும்.ஆனால் பயம் என்பது வராது.இது ஓரிரு வினாடிகளில் அதுவும் 2.40 விடிய மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் வேளையில் கட்டில் வீடு என்று ஒரு சில வினாடி பலத்த சத்தத்துடன் ஆடிவிட்டு நின்றால் எப்படி இருந்திருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இப்படி ஓர் அனுபவத்தை இதுவரை நான் சந்திக்கவில்லை. அமெரிக்காவின் east coast பகுதியில் வசிக்கின்றீர்கள் என நினக்கின்றேன். 

பொதுவாக இவை new zeland / japan இவை போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படும்.
இவற்றில் இருந்து பாதுகாத்த்து கொள்ள flat land ஐ நோக்கி ஒடி விடுவார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இது உண்மையா? 

மேலும் 94ல் Los Angeles ல் ஏற்பட்ட பூமியதிர்வில் பல சேதம் ஏற்பட்டது.  இதில் சில இலங்கையர்கள் கொல்லப்பட்டார்கள் என நினைக்கின்றேன்.

கொழும்பான் நான் வசிப்பது நியூயோர்க்கில் மூத்த மகள் குடும்பமாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் வசிக்கிறா.நத்தார் புது வருடத்துக்கு எல்லோருக்கும் வேலை மெதுவாகவே நகரும்.அதனால் குடும்பமாக வந்து நிற்கிறோம்.ஞாயிறு மீண்டும் நியூயோர்க் பயணம்.

நீங்கள் சொன்னது போல் அமெரிக்க மற்றைய மாநிலங்களை விட கலிபோர்ணியா பூமி அதிர்ச்சியால் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு மாநிலம்.

1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für உறி

உறியை... அறியாத உறவுகளுக்கு, அதனைப் பற்றிய படம்.
"உறி"  இப்படித்தான்... இருக்கும். நாங்கள் பாவித்துள்ளோம்.
இதனை... அப்போ, யாழ். பழைய சந்தையில் வாங்கலாம். அதன்... விலை, என்ன என்று  நினைவுக்கு வரவில்லை.

சிறி அந்த அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற மாதிரி படங்களை இணைப்பதில் உங்களையும் ராஜவன்னியரையும் மிகவும் பாராட்ட வேண்டும்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

கொழும்பான் நான் வசிப்பது நியூயோர்க்கில் மூத்த மகள் குடும்பமாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் வசிக்கிறா.நத்தார் புது வருடத்துக்கு எல்லோருக்கும் வேலை மெதுவாகவே நகரும்.அதனால் குடும்பமாக வந்து நிற்கிறோம்.ஞாயிறு மீண்டும் நியூயோர்க் பயணம்.

நியு யோர்க்கில் கடுமையான சினோ உங்களை வரவேற்க்க காத்திருக்கும் என்று வெதர் சொல்லுது புலம்பெயர் வாழ்வு இப்படித்தான் என்றால் நம்புறங்கள் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

நியு யோர்க்கில் கடுமையான சினோ உங்களை வரவேற்க்க காத்திருக்கும் என்று வெதர் சொல்லுது புலம்பெயர் வாழ்வு இப்படித்தான் என்றால் நம்புறங்கள் இல்லை .

பெருமாள் பனியை உடனுக்கு உடன் அள்ளி போட்டுட்டால் சுலபம் இல்லாவிட்டால் உடம்பு உழைந்த கழுதை உப்புக் களம் போன மாதிரி தான்.எனது நிலையும் அது தான்.ஏற்கனவே அடித்த பனி உறைந்து கல்லு மாதிரி இருக்கும்.

அதை மறந்திருந்த எனக்கு நினைவூட்டியதற்காக வன்மையாக கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் பனியை உடனுக்கு உடன் அள்ளி போட்டுட்டால் சுலபம் இல்லாவிட்டால் உடம்பு உழைந்த கழுதை உப்புக் களம் போன மாதிரி தான்.எனது நிலையும் அது தான்.ஏற்கனவே அடித்த பனி உறைந்து கல்லு மாதிரி இருக்கும்.

அதை மறந்திருந்த எனக்கு நினைவூட்டியதற்காக வன்மையாக கண்டிக்கிறேன்.

:14_relaxed: உங்களை விட மத்திய ரேகையில் தள்ளி இருந்தும் லண்டன் காரர்களுக்கு இந்த பனி பிரச்சினை கிடையாது காரணம் பக்கத்து அரபு உலகு என்றால் நம்ம ஆட்கள் அடிக்க வருகிறான்கள்:14_relaxed: (அங்கிருந்து வரும் சூடான காற்று உபயம் ஆனால் மேல் உள்ள பகுதி எப்போதும் பணியினால் தாக்கபட்டு கொண்டு இருக்கும் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஊரிலை உப்புடி சட்டிபானைச்சத்தம் கேக்குமெண்டால் பிசாசு வந்திட்டுதெண்டுதான் நினைப்பினம்.... :grin:

புதுசா தண்ணியடிக்க பழகினவங்கள் வீட்டின் மூலையை பிடித்து நின்றதாகவும் சொல்லுவார்கள்  வீடு சுற்றுவதாக பிடித்து கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வார்கள் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புதுசா தண்ணியடிக்க பழகினவங்கள் வீட்டின் மூலையை பிடித்து நின்றதாகவும் சொல்லுவார்கள்  வீடு சுற்றுவதாக பிடித்து கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வார்கள் :cool:

தம்பிக்கு அனுபவம் பேசுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

தம்பிக்கு அனுபவம் பேசுதோ?

நம்க்கு அந்த பழக்கமே இல்லை நம்ம நட்புக்கள் அனுபவத்தை பகிரும் போது அறிந்து கொள்வது தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறி குந்தி இருந்துகொண்டு அதை மறந்துவிடுகிறோம் 
இடைக்கிட அது ஆடினால்தான் ...... பூமியில் இருப்பதே நினைவுக்கு வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஏறி குந்தி இருந்துகொண்டு அதை மறந்துவிடுகிறோம் 
இடைக்கிட அது ஆடினால்தான் ...... பூமியில் இருப்பதே நினைவுக்கு வருகிறது. 

மெதுவாக ஆடினால் சரி.கொஞ்சம் இறுக்கி எட்டு ஒன்பது போனால் கதி என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

மெதுவாக ஆடினால் சரி.கொஞ்சம் இறுக்கி எட்டு ஒன்பது போனால் கதி என்ன?

கலிபோர்னியாவில் அடிக்கடி இது வரும் என்றுதான் சொல்கிறார்கள்.
மகளை ஒரு பதிவான வீடாக பார்த்து குடி பூர சொல்லுங்கள்.

நான் அதுதான் முன்னெச்சரிக்கையாய் மின்னியப்பொலிஸ் இல் கால் ஊன்றினேன்.
இந்த கத்ரீனா ... ஈர்மா ... சிண்டி என்று புயல் பிரச்சனை ... பூமி அதிர்ச்சி பிரச்சனை 
கடல் மட்டம் கூடி வெள்ள பிரச்சனை என்று எதுவும் இல்லை. 

கோடையில் சிலநேரம் டோர்ன்நேடோ அடிக்கும் ...
இப்போ மிக துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை ஒலி 
எழுப்புகிறாரார்கள் ... அதை அசட்டை செய்பவர்களைத்தான் 
வீட்டோடு தூக்குகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி... அனுபவம் புதுமை ஆனால்  ... பயங்கரமான அனுபவம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.