Jump to content

குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை! - யூடியூப்பில் அசத்தும் அபிராமி


Recommended Posts

குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை! - யூடியூப்பில் அசத்தும் அபிராமி

 

 

‘`அம்மாவிடம் கேட்டுக் கேட்டு சமையல் செஞ்சுட்டிருந்த பொண்ணு நான். இன்னிக்கு ஆன்லைன்ல ஆயிரக்கணக்கான பொண்ணுங்களுக்குச் சமைக்கக் கத்து தர்றேன்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு’’ என்று புன்னகை பூக்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் அபிராமி.

இவரின் ‘Abi’s channel’ என்கிற ரெசிப்பிகளுக்கான யூடியூப் பக்கத்தில், குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறைகளோடு அசத்திவருகிறார்.

‘`பிறந்தது ஹைதராபாத். படிச்சது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம். திருமணத்துக்குப்பின் அம்மா, மாமியார்கிட்ட சமையல் செய்யக் கத்துக்கிட்டேன்.  என்றாலும், அவங்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல்களில் யூடியூப் ஆண்டவரே ஆபத்பாந்தவர்.

அதில், சமையல் சொல்லிக்கொடுக்க ஓராயிரம் சேனல்கள் இருந்தாலும், அவற்றிலெல்லாம் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கும். இதற்கிடையில், நான் சூப்பரா சமைக்க ஆரம்பிச்சிருந்தேன்.

62p1_1513935753.jpg

ஒருமுறை புதிதாகத் திருமணமான என் கல்லூரித் தோழி ஒருத்தி, நான் எங்கம்மா, அத்தைகிட்ட கேட்டதைப்போலவே எனக்கு போன் செய்து சமையல் சந்தேகம் கேட்டா. சில ஸ்டெப்ஸ் அவளுக்குப் புரியாதபோது, அந்த ரெசிப்பியை ஒரு வீடியோவா எடுத்து அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு, ‘ஏய், சுருக்கமா அதேநேரம் எளிமையா இருந்துச்சுப்பா’னு பாராட்டினாள்.

அப்போதான் இங்கே பல சமையல் வீடியோக்களின் குறை, அது எடுத்துக்கொள்ளும் அதிக நேரம்னு எனக்குப் புரிஞ்சது. குறைவான நிமிடங்களில் விரிவான செய்முறைகள்னு சமையல் வீடியோக்கள் செய்து நாம் யூடியூப்பில் அப்லோடு செய்யலாமேனு தோணுச்சு.

என் கணவர் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை எடிட் செய்யும் வேலைகளைப் பார்த்துட்டிருக்கார். ரெண்டு பேரும் கலந்து பேசும்போது, ‘செய்முறையைச் சின்னச் சின்னச் சொற்றொடர்களாகப் பிரித்து, அவற்றை எழுத்தில் காட்டி, காட்சிகளையும் முழுமையாகக் காட்டாம தேவையான நேர அளவு மட்டும் ஓடுமாறு எடிட் செய்து, இசையும் சேர்த்தால் பார்க்கிறவங்க நேரமும் மிச்சமாகும், சொல்லவந்த விஷயமும் சென்று சேரும்’னு முடிவெடுத்தோம்.

எங்ககிட்ட ஒரு சோனி ஹேண்டிகேம் இருந்தது. கூடவே ஒரு ட்ரைபாடும் இருந்தது. என் கணவர் எனக்கு எப்படி ஷாட் வைப்பது, எந்தெந்த இடங்களை ஃபோகஸ் செய்வது போன்ற அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். முதலில் கடினமாக இருந்தாலும், பின் சுவாரஸ்யமாகவும் சவாலாகவும் இருந்தது.

62p2_1513935771.jpg

அவர் வேலைக்குக் கிளம்பினதும், நான் கேமராவை எடுத்துடுவேன். அப்படித் தொடங்கியதுதான் ‘அB’s kitchen’. என் பெயரின் முதலெழுத்தான ‘அ’ வையும், என் கணவர் பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து, அB-னு உச்சரிக்கும்போது அது என் பெயராவும் அமைந்தது. ஃபேஸ்புக் பக்கம் (facebook.com/abibalaskitchen), யூடியூப் சேனல்னு (youtube.com/channel/UC3PPTc2CvikeXLX0GPl6XTQ) களத்தில் இறங்கினோம்.

முதன்முதலா நான் அப்லோடு செய்த வெங்காய வத்தக்குழம்பு இரண்டு நிமிடங்கள் வீடியோவுக்கு நல்ல வரவேற்பு. எங்கள் தனித்துவமா நாங்கள் நினைப்பது, எந்த வீடியோவும் ஐந்து நிமிடங்களுக்கு மிகாது. மக்களும் அதையேதான் குறிப்பிட்டு, ‘சுருக்கமா, சூப்பரா இருக்கு’னு பாராட்டுறாங்க.

இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிக வியூஸ் கிடைச்சிருக்கு. 25 வயசில், ஒரு வெற்றியை ருசிச்சிட்ட சந்தோஷம் கிடைச்சிருக்கு. பயணம் தொடரும்’’ என்கிறார் அபிராமி, கேமராவை செட் செய்தபடி.

அவர் வழங்கிய ரெசிப்பிகள் அடுத்தடுத்த பக்கங்களில் இடம்பெறுகின்றன.

62p3_1513935793.jpg

62p4_1513935808.jpg

உருளை - கத்திரி - தேங்காய்ப் பொரியல்

தேவையானவை:

 உருளைக்கிழங்கு - 2
 கத்திரிக்காய் - 4 அல்லது 5 (சிறிய துண்டுகளாக்கவும்)
 தேங்காய்த் துருவல் - அரை கப்
 தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு
 பச்சை மிளகாய் - ஒன்று
 கடுகு - கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - ஒன்று
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு


62p5_1513935837.jpg

62p6_1513935851.jpg

தேங்காய் - கார சப்பாத்தி

தேவையானவை:

 கோதுமை மாவு - 2 கப்
 பூண்டு - 4 பல்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கொப்பரைத் தேங்காய் - அரை மூடி
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு 


62p7_1513935871.jpg

62p8_1513935889.jpg

கார உப்புருண்டை

தேவையானவை:

 பச்சரிசி - ஒரு கப்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - ஒன்று
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு


62p9_1513935919.jpg

62p10_1513935937.jpg

கீரைக் குழிப்பணியாரம்

தேவையானவை:

 இட்லி மாவு - 4 கப்
 நறுக்கிய சிறு கீரை - ஒரு கப்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு


62p11_1513935961.jpg

62p12_1513935975.jpg

புளிமா உப்புமா

தேவையானவை:

 அரிசி மாவு - ஒரு கப்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 புளிக்கரைசல் - ஒரு கப்
 கடுகு - கால் டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - ஒன்று
 கறிவேப்பிலை - சிறிதளவு
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.