Jump to content

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது


Recommended Posts

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

 

 
Chennaibookfair2016

புத்தக கண்காட்சி   -  கோப்புப் படம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

இதில் 450 பதிப்பாளர்கள் வரை ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தக திருவிழா 10 நாட்கள் நடக்கும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் கொண்டாட்டமாக இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகத்தினரும் தங்கள் புத்தகங்களை அரங்குகளில் விற்பனைக்கு வைப்பார்கள்.

கடந்த ஆண்டு கண்காட்சி நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நுழைவுக்கட்டணம் அரங்குகள் மற்ற விபரங்கள் பற்றி தெரிவிப்பதற்கு வரும் ஜன.5 அன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22365753.ece

Link to comment
Share on other sites

சென்னை புத்தகக் கண்காட்சி: 15 தகவல்கள்

9sepmavanbook10MAFAIRMDUjpg

புத்தக கண்காட்சி   -  கோப்புப் படம்

41-வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது. 706 அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் 13 நாட்கள் நடக்க உள்ளது.

சென்னை புத்தகக் காட்சி குறித்த 15 தகவல்கள்:

* தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைபெறுகிறது.

* வரும் ஜனவரி 10 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். இதில் தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா உள்ளிட்டோர் விருந்தினர்களாக பங்கேற்கும் விழாவில் பள்ளிக் குழந்தைகள் திரளாக கலந்துகொள்கின்றனர்.

* கண்காட்சி தொடங்கும் முன் ஜனவரி 8 அன்று கண்காட்சி அரங்கில் 2000 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் ’சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு நடைபெற உள்ளது. மறுநாள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

* தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டிமீடியா அரங்குகள் 22, பொது அரங்கு 24 என 708 அரங்குகளுடன் கண்காட்சி தொடங்குகிறது. தமிழ் 236, ஆங்கிலம் 102, மல்டிமீடியா 14, பொதுவானவர்கள் 24 என 376 பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

* சாகித்ய அகதாமி, யூனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேசிய புத்தக நிறுவனம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம், பப்ளிகேஷன் டிவிசன், உ.வெ.சா. நூல் நிலையம், தஞ்சை சர்ஸ்வதி மஹால், தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், காந்தியன் லிட்டரேசன் சொசைட்டி போன்ற அமைப்புகளும் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

* கண்காட்சி அரங்கில் வாசகர்களைக் கவரும் வண்ணம் பிரமாண்ட வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார்.

* பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடத்தப்பட உள்ளன.

* இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வண்ணம் திரையிட புத்தகக் கண்காட்சி வளாகத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறை சார்ந்த முன்னணி இயக்குனர்கள், கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

* வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு என தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களும் முன்னணி எழுத்தாளர்கள் வாசகர்களுடன் உரையாட உள்ளனர். இதில் கலந்துகொள்ள பல எழுத்தாளர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

* பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் 13 நாட்களும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களும் தலைசிறந்த ஆளுமைகள், சொற்பொழிவாளர்கள், திரைத்துறையைச்சார்ந்தவர்கள், கவிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

* புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்குகிறார்.

* வாசகர்கள் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. வாசகர்கள் பணமெடுக்க வசதியாக 2 ஏடிஎம் இயந்திரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வசதிக்காக 15 இடங்களில் ஸ்வைப் மெஷின் வசதி செய்யப்பட்டுள்ளது.

* வைஃபை வசதி, செல்போன் சார்ஜர் வசதி, வாசகர்கள் உணவருந்த தேவையான உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களை வரவேற்க ரைட்டர் பாஸ் என தனியாக வழங்கப்படுகிறது.

* நுழைவுக்கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டைப்போலவே ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்க்காக 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் தயாராக உள்ளன.

* புத்தகக் கண்காட்சி தினமும் மதியம் 2.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடைபெறும். கண்காட்சி முழு ஏற்பாடுகளையும் பபாசி குழுவே செய்து வருகிறது என அதன் தலைவர் வயிரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22374966.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஐரோப்பாவிலையிருந்து கன இலக்கியவாதிகள் போயிருப்பார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சென்னை புத்தகக் காட்சி: பெண் வாழ்வைப் பேசும் புத்தகங்கள்

 

 
book%20fair

படம்: ஆர். ரவீந்திரன்   -  THE HINDU

ர் திருவிழாவைப் போல் மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது சென்னைப் புத்தகக் காட்சி. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் புத்தகத் திருவிழாக்களுக்கு வந்தால் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் மகத்துவத்தையும் உணர்த்திவிடுகின்றன இங்கு பரவிக் கிடக்கும் கடைகளும் கடைகளை நிறைக்கும் புத்தகங்களும்.

தமிழுக்கு 428

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி 40 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. 41-வது புத்தகக் காட்சி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கி வரும் 22-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இங்கு 428 தமிழ்ப் புத்தக அரங்குகள், 234 ஆங்கிலப் புத்தக அரங்குகள், 24 பொதுக் கடைகள், 22 மல்டிமீடியா கடைகள் என மொத்தம் 706 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக் காட்சியில் இலக்கியம், சமூகம், பெண்ணியம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், அரசியல், சாதியம், வரலாறு, சுற்றுச்சூழல், சினிமா, கல்வி உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் புத்தகக் காட்சியில் அதிக அளவு விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் பெண்கள் சார்ந்த புத்தகங்களுக்குத் தனியிடம் உண்டு. இந்த ஆண்டும் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப் பண்பாட்டில் பெண்

மூத்த எழுத்தாளர் அம்பை எழுதிய ‘உடல் எனும் வெளி’ நூலைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொன்மை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் எப்படிப் பார்க்கப்பட்டுள்ளனர், பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சிலும் மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. விலை ரூ.140.

இஸ்மத் சுக்தாய் படைப்புகள்

எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் இரண்டு புத்தகங்கள் எதிர் வெளியீடு பதிப்பில் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பிடித்துள்ளன. ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ புத்தகம் (விலை ரூ.400) இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவரான இஸ்மத் சுக்தாய் போராட்டங்களுடன் கழித்த தன் இளமைக்காலம் குறித்தும் அவரது வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் விளக்குவதாகவும் உள்ளது. இந்தப் புத்தகத்தை சசிகலா பாபு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜி. விஜயபத்மா மொழிபெயர்த்துள்ள ‘இஸ்மத் சுக்தாய் கதைகள்’ புத்தகம் (விலை ரூ.500), இஸ்மத் சுக்தாயின் முக்கியமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

அரசியல், ஊடகம், நாட்டார் வழக்காற்றியல்

காலச்சுவடு பதிப்பகம், பெண்கள் தொடர்பாக மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதிய ‘ஜெயலலிதா: மனமும் மாயையும்’ புத்தகம் (விலை ரூ.195), ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்வையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மதவாத சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் எழுதியவற்றை அவருடைய நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான சந்தன் கெளடா தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ள கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது நவ்யானா பதிப்பகம். அதை ‘கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்’ (விலை ரூ.150) என்ற தலைப்பில் பொன். தனசேகரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் எழுதியுள்ள ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு’ (காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.225) என்ற புத்தகம் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மூலப் பகுதியில் இருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்றியல் சம்பவங்களை மையப்படுத்துகிறது.

கவிதையின் பாதையில்

மைத்ரி புக்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் ‘கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்’ (விலை ரூ.140), தென்னிந்தியாவைச் சேர்ந்த 17 தலித் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மூல மொழிகள் மற்றும் ஆங்கிலம் வழி வ.கீதா, சுகுமாரன், க.மாதவ், பிரேமா ரேவதி ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சாதியத்தை எதிர்க்கும் வலுவான குரல்களில் தலித் பெண்ணியக் குரல் முக்கியமானது. வீட்டிலும் சமூகத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் குரலாகவும் இது வெளிப்படுகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் உணர்த்துகின்றன.

அணங்கு பெண்ணியப் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது மாலதி மைத்ரியின், ‘முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை’ (கவிதைகள், விலை ரூ.90) புத்தகம். பின்காலனிய நிலத்தின் பெண்ணுடல்களின் மொழியைப் பிரதியெடுக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண் உடலைக் கலைத்து அடுக்கும் கவிதைகள் இவை.

எத்தனையோ நவீன மாற்றங்களுக்குப் பிறகும் இரண்டாம்பட்சமாக நடத்தப்பட்டுவரும் பெண்கள் தங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கயிறுகளை அறுத்தெறியும்வரை பேனா என்னும் கூர்வாளால் அவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதைத்தான் இந்தப் புத்தகங்கள் உணர்த்துகின்றன.

http://tamil.thehindu.com/society/women/article22436350.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.