Jump to content

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018


Recommended Posts

19 வய­துக்­குட்­பட்ட வட­மா­காண கிரிக்­கெட் அணி அறி­விப்பு

stx-cricket-615x400.jpg
 
 
 

இலங்கை கிரிக்­கெட் சபை எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யில் இருந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை கொழும்­பில் துடுப்­பாட்­டத் தொட­ரொன்றை நடத்­த­வுள்­ளது. இந்­தத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்ள வட­மா­காண அணி நேற்­று­முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

வட­மா­காண 19 வய­துக்­குட்­பட்ட அணி விவ­ரம் – எஸ்.மது­சன் (தலை­வர் – யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி), என்.நிது­சன் (உப­த­வைர் – யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி), அபி­னாஸ் (யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி, பானு­யன் (கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி), சௌமி­யன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), அஜிந்­தன் (ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி), தனு­சன் (ஸ்கந்­த­வ­ரே­தா­த­யக் கல்­லூரி அணி), ஜெய­தர்­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), ராஜ் கிளிங்­டன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விஜஸ்­காந் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விது­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), டினோ­சன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), கபி­லன் (புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி அணி), இய­ல­ர­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), வர­லக்­சன் (மகா­ஜ­னக் கல்­லூரி அணி).

 

 

யாழ். மத்தி அரை­யி­று­தி­யில்

5-cenral-750x430.jpg
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் அரை­யி­றுதி ஆட்­டத்­துக்­குத் தகு­தி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

பழைய பூங்­கா­வில் அமைந்­துள்ள கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்று இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி றிபேக் கல்­லூரி அணி மோதி­யது. 68:22 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

 

உடு­வில் மக­ளிர் அணி  அரை­யி­று­திக்­குத் தகுதி

1-lead-5-750x430.jpg
 
 

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வயது பிரிவு ஆண்­கள் கூடை­பந்­தாட்ட தொட­ரின் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணியை எதிர்த்து வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி மோதி­யது.

நான்கு கால்­பா­தி­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது கால் பாதி­யில் 22:04 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று முன்­னிலை வகித்­தது.

 

இரண்­டா­வது கால் பாதி­யும் 18:02 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உடு­வில் மக­ளி­ரின் வச­மாக முதல் பாதி­யின் முடி­வில் அந்த அணி 40:06 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆதிக்­கம் செலுத்­தி­யது.

மூன்­றாம் கால்­பா­தி­யும் 18:6 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­ட­யில் உடு­வி­லின் வச­மா­னது. நான்­காம் கால்­பா­தியை 13:00 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வழித்­துத் துடைத்­தது உடு­வில் மக­ளிர் அணி. முடி­வில் அந்த அணி 71:12 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

http://newuthayan.com

Link to comment
Share on other sites

சாதனையுடன் தங்கம் -தனதாக்கினார் ஆசிகா!!

4-aaselead-750x430.jpg
 
 

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­திய வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.ஆசிகா தனது சாத­னையை சமப்­ப­டுத்­தி­ய­து­டன் தங்­கம் வென்­றார்.

குரு­ந­கர் சென். ஜேம்ஸ் வித்­தி­யா­லய உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

20 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்­கான 63 கிலோ எடைப் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.ஆசிகா 170 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்தை வென்­றார். அத்­து­டன் வட­மா­காண சிறந்த பளு­தூக்­கும் வீராங்­க­னை­யா­க­வும் தெரிவு செய்­யப்­பட்­டார்.

http://newuthayan.com/story/10/சாதனையுடன்-தங்கம்-தனதாக்கினார்-ஆசிகா.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
கட்டை இறுக்கி பயன்படுத்தப்படும் உபகரணங்கள்
 

image_5f49a46653.jpg

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில், அதனைக் கட்டை இறுக்கி பயன்படுத்தி போட்டிகளை நடத்தி விநோதம் அண்மையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.

கோலூன்றிப் பாய்தல் தான், தேசிய விளையாட்டுப் போட்டியில் வடக்குக்கு பல பதக்கங்களை அள்ளி வருகின்றது. இவ்வாறானதொரு போட்டிக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் வட மாகாணத்தில் இல்லாதிருப்பது, பெரும் கவலைக்குரியதாகவுள்ளது.

கோலூன்றிப் பாய்தல் போட்டிதான், ஜெகதீஸ்வரன் அனித்தா, நெப்தலி ஜொய்சன், ரி. புவிதரன், நவநீதன், தனுஜா, பவித்திரா, டன்சிகா, நிலானி, ஹெரீனா, டிலக்சன். றிசோத், அன்ரனி பிரசாத், பவிள்சன், டினேஸ், சியானாஸ், வினுசன், என பல தேசிய சாதனை வீரர்களை அடையாளம் காட்டியிருந்தது.

 
 
சம்பியனாகியது மகாஜனா
 

image_54c4ff2f6c.jpgimage_ccc528a507.jpg

முன்னாள் கால்ப்பந்தாட்ட பயிற்றுநர் அமரர் ரி. பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத் தொடரில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி நிதியம், விளையாட்டு நிதியம், பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து யாழ். மாவட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்திய இக்கால்பந்தாட்டத் தொடர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரியையும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், தேவரையாளி இந்துக் கல்லூரியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தன.

மகாஜனாக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில், மகாஜனாக் கல்லூரி அணி, 4-2 என்ற ரீதியில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

குறித்த போட்டியின் நாயகனாக மகாஜனாக் கல்லூரியின் ஜக்சன் தெரிவானார்.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், தேவரையாளி இந்துக் கல்லூரியை வென்று யாழ். மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
யாழ். மத்திய கல்லூரிக்கு வெற்றி
 

image_741edc090e.jpg- குணசேகரன் சுரேன்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் ஒழுங்கமைத்து நடத்தும், பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

ஸ்கோர் விவரம்:

சென். பற்றிக்ஸ் கல்லூரி: 127/10 (45 ஓவ.) (துடுப்பாட்டம்: கே. றம்மிநாதன் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரி. விதுசன் 3, ஆர். இயலரசன் 2 விக்கெட்டுகள்)

யாழ். மத்தி: 128/7 (45 ஓவ.) (துடுப்பாட்டம்: ஆர். ராஜ்கிளின்டன் 28, கே. இயலரசன் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: றெனோல்டோ 3, டிலக்சன் 2, றெமிஸ்டன் 2 விக்கெட்டுகள்).

 
 
சம்பியனாகியது சென்றலைட்ஸ்
 

image_58be9a9f29.jpg

 

யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனாகியது.

பழைய பூங்காவிற்கு பின்னாலுள்ள கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இத்தொடரில், நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ராஸ்ஸை எதிர்கொண்ட சென்றலைட்ஸ், 70-63 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

  • 1 month later...
சம்பியனானது சென்றலைட்ஸ்
 
 

image_844f108f17.jpg

சிறப்பான கட்டுக்கோப்பான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன எதிரணியின் ஆட்டங்களைக் கட்டுப்படுத்த, கௌதமனின் சிறப்பான துடுப்பாட்டம் வெற்றியிலக்கை இலகுவாக அடைய வழிகோல, யாழ். மாவட்ட பிரிவு மூன்று அணிகளுக்கிடையிலான தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனானது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இறுதிப் போட்டியில் விக்டோரியன்ஸ் அணியை வென்றே சென்றலைட்ஸ் சம்பியனானது.

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி, தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. ஒரு கட்டத்தில், 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பிரணவன் - சாரங்கன் ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது. பிரணவன் 56, சாரங்கள் 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியில், விக்டோரியன்ஸ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், எரிக்துசாந்த் 3, சுஜன், அலன்ராஜ், டர்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், ஜெனோசன், கௌதமன், ஜெரிக்துசாந்த் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், 32.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கௌதமன் ஆட்டமிழக்காமல் 70, ஜெரிக்துசாந்த் ஆட்டமிழக்காமல் 24, ஜெனோசன் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுஜிதரன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியின் நாயகனாக சென்றலைட்ஸின் கௌதமனனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக விக்டோரியன்ஸின் பிரணவனும், சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸின் ஜெரிக் துசாந்தும், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் ஜெனோசனும் தெரிவாகினர்.

 

 

சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி
 

- கே. கண்ணன் 

image_4469416ff9.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடித் தொடரில், நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.

image_dc8d93b43f.jpgimage_ee49247491.jpg

இது தவிர, குறித்த பிரிவின் முதல் மூன்று இடங்களையும் வட மாகாண பாடசாலைகளே கைப்பற்றின. நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானதுடன், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தைப் பெற்றது.

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 37-19 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக நெல்லியடி மத்திய கல்லூரியின் நிகாலினி தெரிவானார். 

இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில் மகாபலிபுரம் வித்தியாலயத்தை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி 59-09 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

 

 

சம்பியனாகியது சாவகச்சேரி இந்துக் கல்லூரி
 

- கே. கண்ணன்

image_ec8063ce23.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி சம்பியனாகியது. 

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், தமுத்துகம வித்தியாலயத்தை எதிர்கொண்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி 36-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது. 

சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி
 

- கே. கண்ணன்

image_d7ccdf019d.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், நிந்தவூர் அல் அஸ்கர் பாடசாலையை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 58-32 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது. 

 
 
சம்பியனாகியது கிளிநொச்சி சிவநகர் அ.த.க
 

- கே. கண்ணன்

image_f611320ca0.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய மட்ட கபடித் தொடரில், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சம்பியனாகியது. 

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் மகாவலி தேசிய பாடசாலையை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 36-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-கிளிநொச்சி-சிவநகர்-அ-த-க/88-221551

Link to comment
Share on other sites

 
 
 

வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்த யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள்

 

Colombo (News 1st) 88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளில் யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்தனர்.

18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் மூன்று இடங்களையும் மகாஜனா கல்லூரி வீரர்கள் கைப்பற்றினர்.

88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகின.

இன்று காலை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சுரேஷ்குமார் சுகிஹேரதன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 4 மீட்டர் உயரத்திற்குத் தாவி ஆற்றலை வௌிப்படுத்தினார்.

இதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றொரு வீரரான சிவசாந்தன் ஜேம்ஸன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3.60 மீட்டர் உயரத்திற்குத் தாவிய ஆசிர்வாதம் ஜினோஜனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மகாஜனா கல்லூரியின் சி.ஹெரீனா வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 14.55 மீட்டர் ஆற்றலை வெளிப்படுத்திய ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

https://www.newsfirst.lk/tamil/2018/09/வட-மாகாணத்திற்கு-பெருமை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.