Jump to content

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018


Recommended Posts

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018

  • யாழ்ப்பாண மத்­திய கல்­லூரி இன்­னிங்­ஸால் வெற்றி
1-laad-349x430.jpg

யாழ்ப்பாண மத்­திய கல்­லூரி இன்­னிங்­ஸால் வெற்றி

 

இலங்கை பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச்­சங்­கம் நடத்­தும் 19 வய­துப்­ப­ிரிவு அணி­க­ளுக்கு இடை­யில் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி இன்­னிங்­ஸால் வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து அக்­கு­றணை அசார் கல்­லூரி மோதி­யது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற கண்டி அக்­கு­றணை அசார் கல்­லூரி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது.

கண்டி அக்­கு­றணை அசார் கல்­லூரி அணி 32.4 பந்­துப் பரி­ மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்கு­க­ளை­யும் இழந்து 69 ஒட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­ பட்­ச­மாக நிசாந் 20 ஒட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி­யின் சார்­பில் துசாந்­தன் 7 இலக்­கு­களை வீழ்த்தினார். பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 5 இலக்­கு­களை இழந்து 314 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

 

ஜய­தர்­சன் 112 ஓட்­டங்­க­ளை­யும், தசோ­பன் ஆட்­டம் இழக்­க­ாமல் 114 ஓட்­டங்­க­ளை­யும், கௌத­மன் 22 ஒட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
அசார் கல்­லூரி அணி இரண்­டா­வது இன்­னிங்­ஸிற்­காக 73 ஓட்­டங்­களை மட்­டும் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக மொக­மட் 20 ஒட்­டங்­க­ளைப் பெற்­றார்.

blank.pngblank.png

 

https://newuthayan.com/story/59671.html

Link to comment
Share on other sites

football-1.jpg

இன்­றைய மோதல்­கள்

யங்ஸ்­ரார் வி.க.
கால்­பந்­தாட்­டம்

வவு­னியா வைர­வப் புளி­யங்­கு­ளம் யங்ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் 23ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்­டு­வ­ரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை மாலை 6.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் யுனி­பைட் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஏபிசி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

திருக்­கு­ம­ரன் வி.க.
கால்­பந்­துத் தொடர்

 

உரும்­பி­ராய் திருக்­கு­ம­ரன் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் வில­கல் முறை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை மாலை 4.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். றொக்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

http://newuthayan.com/story/60253.html

Link to comment
Share on other sites

யதுசனின் சதத்துடன், மேலும் ஒரு வெற்றியை பதிவுசெய்த சென். ஜோன்ஸ் கல்லூரி

25354003_1804762779597279_80150284372539
 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் டிவிசன் 2 பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்று போட்டியொன்றில் யாழ்ப்பாணம்,சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் பங்கெடுத்திருந்தன. இரண்டு நாட்களைக் கொண்ட போட்டியானது சென் ஜோன்ஸ் கல்லூரிமைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ பிரியரத்ன அணியானது முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்ட வேளை தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

முதலாவது விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களினைப் பகிர்ந்திருந்த வேளையில் தனுசன்( 16) ஆட்டமிழந்திருந்த போதும் சௌமியன், சேரோபன் முறையே 32,29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள்  சந்தரு ஷனில்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போதிலும் அணித்தலைவர் யதுசன் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி சதம் கடந்திருந்தார்.

பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட பிரியரத்ன அணியின் சந்தரு னில்க 98 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியானது 123 ஓட்டங்களிற்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தனர். அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான  அணித்தலைவர் கவிந்து நிமேஷ் மற்றும் றஜித்த அஷான் ஆகியோர் 25 ஓட்டங்களினைப் பெற்றுக்கொடுத்திருந்தனர். தொடர்ந்துவந்த வீரர்கள் அபினாஷ் மற்றும் கபில்ராஜ்ஜினது பந்துவீச்சில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

சென்.ஜோன்ஸ் அணியின் பந்துவீச்சில்  இடது கை சுழற்பந்து வீச்சாளரான அபினாஷ் 25 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

149 ஓட்டங்கள் பின்னிலையில் தொடர்ச்சியாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணி  முதலாவது விக்கெட்டினை விரைவாக இழந்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸிலும் கவிந்து நிமேஷின் 31 ஓட்டங்கள், முறையே கவிந்து ஈஸ்வர மற்றும் ஜசிறு டினித் ஆகியோரது 23,24 ஓட்டங்களின் துணையுடன்  சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து வந்த வீரர்கள் கபில்ராஜ், யதுசன் ஜோடியின் பந்து வீச்சிற்கு தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க, ஹெசான் கவிந்த 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பின்வரிசை விரர்களால் இரட்டை இலக்க ஓட்டத்தினைச் சேகரிக்க முடியாது போனாலும் கூட , பலத்த போராட்டத்தின் பயனாக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணி.

இந்த இன்னிங்சின் பந்துவீச்சில் கபில்ராஜ் 5 விக்கெட்டுக்களையும் யதுசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.  இதனையடுத்து 05 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கிக் களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி விக்கெட்இழப்புக்கள் ஏதுமின்றி இலக்கை எட்டியது.

கடந்த போட்டியில் ஸ்ரீ சுமங்கல கல்லூரிக்கெதிராக இன்னிங்ஸ் மற்றும் 20 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் சிறப்பான செயற்பாட்டுடன் கிடைத்திருக்கக் கூடிய இன்றைய போட்டியின் வெற்றியானது, எதிர்வரும் போட்டிகளை எதிர்கொள்ள மிகவும் உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப் போட்டித்தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது 02 போட்டிகளில் முழுமையான வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது. அதேவேளை ஒரு போட்டி சமநிலையிலும் நிறைவடைந்துள்ளது.

எதிர்வரும்போட்டிகளில் சென்.  ஜோன்ஸ் கல்லூரி கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, கேகாலை கேகளு வித்தியாலயம் மற்றும் களனி ஸ்ரீ தர்மலோகா கல்லூரி அகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிச் சுருக்கம்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 272/9d (60 ஓவர்கள்) வசந்தன் யதுசன் 106, நாகேந்திரராசா சௌமியன் 32, தேவதாஸ் செரோபன் 29, வடிவேலு அபிலக்சன் 28, சந்தரு ஷனில்க 7/98

ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலயம் (முதலாவது இன்னிங்ஸ் ) – 123/10 (53 ஓவர்கள்)  கவிந்து நிமேஷ் 25, றஜித்த அஷான் 25, மேர்ஃபின் அபினாஷ் 6/25, கனகரட்னம் கபில்ராஜ் 3/43

ஸ்ரீ தர்மரத்ன மகாவித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 153/10 (50.2 ஓவர்கள்) F/O கவிந்து நிமேஷ் 31, ஹேஷான் கவிந்த 29, கனகரட்னம் கபில்ராஜ் 5/34, வசந்தன் யதுசன் 3/33

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) –  05/00 (1.4 ஓவர்கள்)

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com

 

Link to comment
Share on other sites

  •  
  • யாழ்ப்பாணம் மத்தி. அசத்தலான வெற்றி
2-4-750x430.jpg

யாழ்ப்பாணம் மத்தி. அசத்தலான வெற்றி

இலங்கை பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச்­சங்­கம் நடத்­தும் 19 வய­துப் பிரிவு மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் கடந்த வௌ்ளிக்கிழமை ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி வெற்­றி­ பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கண்டி நுக­வேல மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது.

நாண­யச்­சு­ழற்­சி­யில் வெற்­றி­பெற்று முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது நுக­வேல மத்­திய கல்­லூரி அணி. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூரி அணி 255 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

அதி­க­பட்­ச­மாக கௌத­மன் 71 ஓட்­டங்­க­ளை­யும், வியஸ்­கான் 58 ஓட்­டங்­க­ளை­யும், இய­ல­ர­சன் 34 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்து வீச்­சில் கண்டி நுக­வேல மத்­திய கல்­லூரி அணி­யின் சார்­பில் ரத்­னா­யக்க, பிர­சன்னா, பிர­சாந் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.

 

தனது முத­லா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த நுக­வேல மத்­திய கல்­லூரி 98 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக ஜெய­ரத்ன 28 ஓட்­டங்­க­ளை­யும், கவிஸ்க 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் நிசான் 3 இலக்­கு­ க­ளை­யும், துசாந்­தன் 2 இலக்­கு­ க­ளை­யும் வீழ்த்­தி­னர்.
இரண்­டா­வது இன்­னிங்ஸுக்கா கத் துடுப்­பெ­டுத்­தா­டிய மத்­திய கல்­லூரி அணி 5 இலக்­கு­களை இழந்து 87 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது. அதி­க­பட்­ச­மாக நிசான் 41 ஓட்­டங்­க­ளை­யும், கௌத­மன் 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

தனது இரண்­டா­வது இன்­னிங் ஸுக்காகத் துடுப்­பெ­டுத்­தா­டிய கண்டி நுக­வேல மத்­திய கல்­லூரி அணி 77 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­ததை அடுத்து, 167 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

http://newuthayan.com/story/61267.html

Link to comment
Share on other sites

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டி

 

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டி

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டியில் பருந்துறை சென்தோமஸ் வெற்றி பெற்றுள்ளது.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் தைத்திருநாளை முன்னிட்டு நடாத்தும் பாரம்பரிய விளையாட்டு போட்டி விழாவின் ஓர் அங்கமான கபடி போட்டி இன்று 11 ஆம் திகதி நடைபெற்றுள்ளது அந்த வகையில் 9 அணிகள் பங்குபற்றிய இந்த போட்டியில் யாழ்ப்பாணம் பருந்துறை சென்தோமஸ் மற்றும் மன்னார் எவகிரீன் அணிகள் இறுதி போட்டியில் மோதியுள்ளன.

நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரம்பத்தில் இருநதே அபாரமாக விளையாடிய சென்தோமஸ் அணி 36 ற்கு 6 என்ற புள்ளி கணக்கில் முதல்பாதி ஆட்டத்தில் முன்னிலை வகித்துள்ளது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்பாதி ஆட்டத்தில் 56 ற்கு 18 என்ற புள்ளி கணக்கில் பருத்துறை சென்தோமஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டி

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டிபருந்துறை சென்தோமஸ்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டிமன்னார் எவகிரீன்

https://news.ibctamil.com/ta/sports/IVV-sankam-kabaddi-match

Link to comment
Share on other sites

யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்து மைதானம்

BB-4-696x464.jpg
 

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட அரங்கை முன்னாள் வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. குருகுலராஜா அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

 

கூடைப்பந்தாட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் வைத்தியர் கோபிசங்கர் அவர்களது  தலைமையில் நேற்று (12)  இடம்பெற்ற இந்நிகழ்வில்   இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மே ளனத்தின் பிரதிநிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  கணேசனாதன் அவர் களும், வட மாகாண முன்னாள் கல்வி  அமைச்சர் குருகுலராஜா அவர்களு ம், உறுப்பினர்களான ஆர்னோல்ட்,  சிவாஜிலிங்கம், சிவஜோகன், சஜந் தன் ஆகியோரும் யாழ் கல்வி வலய உ டற்கல்விபொறுப்பாசிரியர் சண் தயா ளன், சுண்டுக்குளிமகளிர் கல்லூ ரி அதிபர் திருமதி துசிதரன், கல் லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆ சிரியர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் கூடை ப்பந்தாட்ட வீரர்கள், பயிற்றுவி ப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்பினை தொடர்ந்து, வண. டேனியல் ஜெயரூபன் அவர்களது பிரார்த்தனை இடம்பெற்றது. பின்னர் கூடைப்பந்தாட்ட அபிவிருத்திக் குழுவின் சார்பில் நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரம் நடுகை இடம்பெற்றது.  

அதனைத் தொடர்ந்து மீள் நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட திடலினை முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்கள் திறந்து வைத்தார். நினைவு கல்வெட்டினை கல்லூரி உப அதிபர் துசிதரன் மற்றும் ரோஹன் தேவதாசன் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்தனர்.

அதன் பின்னர்,  முன்னாள் உப அதிபர் அமரர் திரு.N.J. பொன்னையா அவர்களது ஞாபகார்த்தமாக அவரது புதல்வர் டேவிட் மற்றும் கல்லூரியின் 1999ஆம் வருட (1999 batch) நண்பர்கள் இணைந்து அன்பளிப்பில் அமைக்கப்பட்ட முதலாவது தூண் மற்றும் அமரர் திரு சிவசோதி சிவகுமாரன் ஞாபகார்த்தமாக கல்லூரியின் 1992ஆம் வருட (1992 batch) நண்பர்களால்   அமைக்கப்பட்ட இரண்டாவது தூண் ஆகியவை திரைநீக்கம் செய்யப்பட்டது.

 

 

மின்னொளி தூண்களை அன்பளிப்பு செய்திருந்த வாமதேவ தியாகேந்திரனும் அதனை திரைநீக்கம் செய்து வைத்தார்.

கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலானது 1969இல் ஒரு முறையும், பின்னர் 1998இலும், மூன்றாவது முறையாக தற்போது தேசிய தரத்திலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது கூடைப்பந்தாட்ட அபிவிருத்தித் திட்ட குழுவின் தலைவர் திரு கோபிஷங்கர் கருத்து தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம் வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டிக்கு  அதிகளவிலான பழைய மாணவர் வந்திருந்தார்கள். அப்போது எனது நண்பர் அப்போதைய மெல்பார்ன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவிருந்த ஜுடே பிரகாஷ் கூடைப்பந்தாட்ட திடல் அவசரமாக புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது என்கிறார்.

எனவே மெல்பார்ன் பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் உலகளாவிய ரீதியில் வாழும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன், வட மாகாண சபை, ஹரின் பெர்னாண்டோ மற்றும் வாமதேவ தியாகேந்திரன் ஆகியோரது பேராதரவுடன் இன்று நிறைவடைந்துள்ளது.

இந்த கூடைப்பந்தாட்ட திடலானது அமைக்கும் பொழுது, நீண்ட கால பாவனை, காயம் ஏற்படுகின்ற வீதம் குறைவானதாகவிருக்க வேண்டும், சர்வதேச தரத்தில் அமைய வேண்டும் ஆகியன போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. அதேவேளை இந்த கூடைப்பந்தாட்ட திடலானது வெறுமனே சென் ஜோன்ஸ் கல்லூரியின்  பாவனைக்கு மாத்திரமின்றி, வடக்கினுடைய பாடசாலைகள், கழகங்கள் ஆகியனவும் பயன்பெறும் நோக்குடனேயே அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியிலான போட்டித்தொடர்கள் வெகு விரைவில் இங்கு நடத்தப்படும் என எதிர் பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இவ்வருடம் கல்லூரி ஸ்தாபகர் Joshep  Knight அவர்களது வருகையின் 200ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்து கொண்டு இருக்கையில் இந்த கூடைப்பந்தாட்ட திடலினை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவிற்கு முதலில் நீச்சல் தடாகம் மற்றும் Smart Classrooms இனையும் அமைப்பதே எமது இலக்கு. அதேவேளை, கூடைப்பந்தாட்ட நிதியம் ஒன்றினையும் அமைப்பதற்கான அழைப்பினை விடுக்கின்றோம் என கல்லூரி அதிபர் வண . N .J  ஞானபொன்ராஜா அவர்கள்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் வட மாகாண அமைச்சர்  திரு. குருகுலராஜா அவர்கள், இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மைதானம், வீரகளுக்கு சந்தோசத்தினையும், ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கின்ற அதேவேளை, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கூடைப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 127 ஆண்டுகள் ஆகின்றன.  இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய ‘James  Naismith’  குறிப்பிட்டது போல கூடைப்பந்தாட்டம் ஒரு உபாதை குறைவான விளையாட்டாகும். வாலிபர்களுக்கு விழுமியத்தினை ஊட்டுவதற்கு விளையாட்டு மிகவும் சிறந்த வழியாக அமையும்.” என மகிழ்வுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து திறப்பு விழா நினைவு புத்தகத்தினை வைத்தியர் காண்டீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க வட மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் கல்லூரி அதிபரால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. வைபவம் இனிதே வைத்தியர் காண்டீபன் அவர்களது நன்றி உரையுடன் நிறைவிற்கு வந்தது.  

பின்னர் இடம்பெற்ற பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி சிரேஷ்ட அணி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் பழைய மாணவர்கள் வெற்றி பெற்றனர்.  

கடந்த காலங்களில் வடக்கின் கூடைப்பந்தாட்டத்தில் முன்னிலை வகித்த சென் ஜோன்ஸ் கல்லூரி இந்த புதிய மைதானம்மூலம் மீண்டும் அவ்விடத்தினை அடைய எத்தனிக்கின்றது. அதேபோன்று, வடக்கினுடைய கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு இந்த திடல் மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

அபினாஷின் சகலதுறை ஆட்டத்தினால் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு மற்றொரு வெற்றி

a-5-696x464.jpg
 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பருவகாலத்திற்கான பிரிவு இரண்டு (டிவிசன் 2) அணிகளுக்கிடையிலான 2017/18 கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டியொன்றில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரில் மற்றொரு வெற்றியை சுவைத்துள்ளது.

 

 

பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் வசந்தன் யதுசன் முதலில் களத்தடுப்பினைத் தெரிவுசெய்தார்.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வூட் கல்லூரி வீரர்கள் 60.1 ஓவர்களினை எதிர்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 124 ஓட்டங்களினை மாத்திரம் சேர்த்துக்கொண்டனர். அணியின் சார்பில் அதிகபட்சமாக டுலின் விஜயநாராயன 36 ஓட்டங்களினையும், ஹசிக்க கமகே 25 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவிச்சில் சுழற்பந்து வீச்சாளர்களான சுபீட்சன், அபினாஷ் ஆகியோர் முறையே 3, 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரியினரை, கண்டி வீரர்கள் தமது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தாம் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கைக்கும் குறைவாக மட்டுப்படுத்தினர்.

லக்மல் டி சில்வா, தீகயூ பண்டார ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும், அனுல் செனவிரத்ன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற சென். ஜோன்ஸ் வீரர்களால் 48.3 ஓவர்களில் 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது

சென். ஜோன்ஸ் கல்லூரி முதற் பதினொருவர் அணியில் இவ்வருடம் முதல்முறையாக பிரவேசித்திருக்கக்கூடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான C.P தனுஜன் நிதானமாக ஆடி 46 ஓட்டங்களைச் சேகரித்திருந்தார். அபினாஷ் 21 ஓட்டங்களினைப் பெற்றுக்கொடுத்தார்.

எனவே, 17 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கியிருந்த கிங்ஸ்வூட் கல்லூரி அணியினருக்கு வடக்கு வீரர்கள் அதிர்ச்சியளித்தனர். சுழற்பந்துவீச்சாளர் அபினாஷ் 19 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், வேகப்பந்து வீச்சாளர் கபில்ராஜ் 22 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனால் 34.4 ஓவர்களை எதிர்கொண்ட கிங்ஸ்வூட் கல்லூரியினர் வெறுமனே 70 ஓட்டங்களை மட்டும் சேகரித்து 88 என்ற வெற்றியிலக்கினை நிர்ணயித்தனர். அதிகபட்சமாக குசான் விதானாராச்சி அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸிலும் C.P தனுஜன், அபினாஷ் இணை முறையே 27 மற்றும் 21 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 26.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தனர். சௌமிய வன்னியாராச்சி, லக்மல் டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

 

 

இன்றைய வெற்றியுடன் போட்டித்தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரியானது விளையாடிய 05 போட்டிகளில் மூன்றில் வெற்றியினைப் பெற்றுள்ள அதேவேளை, ஒரு போட்டியினை சமநிலையில் நிறைவு செய்துள்ளனர். அவர்கள், ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியுடனான போட்டியில் தோல்வியடைந்துள்ளனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி அடுத்து வரும் வாரங்களில் கேகாலை வித்தியாலயம் மற்றும் களனி  ஸ்ரீ தர்மலோகா கல்லூரி ஆகிய அணிகளுடனான போட்டிகளுடன் தனது குழு நிலைப் போட்டிகளினை நிறைவு செய்யவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ்வூட் கல்லூரி,கண்டி – 124 (60.1 ஓவர்கள்) டிலின் விஜயநாராயன 36, ஹசிக கமகே 26, சுபீட்சன் 03/12,மேர்ஃபின் அபினாஷ் 02/19

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் –  107 (48.3 ஓவர்கள்) C.P தனுஜன் 46, மேர்ஃபின் அபினாஷ் 21, லக்மல் டி சில்வா 03/20, தீகயூ பண்டார 03/22, அனுல் செனவிரத்ன 02/33

கிங்ஸ்வூட் கல்லூரி,கண்டி – 70 (34.4 ஓவர்கள்) குசன் விதானாராச்சி 26, மேர்ஃபின் அபினாஷ் 05/19, கனகரட்ணம் கபில்ராஜ் 04/22

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் –  89/5 (26.2 ஓவர்கள்) C.P தனுஜன் 27, மேர்ஃபின் அபினாஷ் 21, சௌமிய பியசேன 02/15, லக்மல் டி சில்வா 02/36

போட்டி முடிவு –யாழ்ப்பாணம், சென். ஜோன்ஸ் கல்லூரி 05 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஹட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி

21369615_1121281688002575_18052612002590
 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 19 வயதிற்குட்பட்ட  பிரிவு இரண்டு (டிவிசன் 2) அணிகளுக்கிடையிலான இப்பருவகாலத்திற்கான (2017/18) கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டியொன்றில் கேகாலை வித்தியாலய அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரில் மேலும் ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது. 

 

 

பிரிவு இரண்டினுடைய முதலாவது சுற்றுப் போட்டிக்காக குழு Aஇல் போட்டியிட்டுவரும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி கேகாலை வித்தியாலய அணியினை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கேகாலை வித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 29 ஓட்டங்களிற்கு 03 விக்கெட்டுக்களை பறிகொடுத்தபோதும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உமேஷ் தாரக 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ஒரு முனையில் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக சரிக்கப்பட்டபோதும்,  5ஆம் இலக்கத்தில் களம்புகுந்த மதுசன் குணசிங்க (113) சதத்தினைப் பெற்றுக்கொடுத்து அணியினை வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு இட்டுச்சென்றார். இறுதியாக 55.1 ஓவர்களினை எதிர்கொண்ட கேகாலை வீரர்கள் 224 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் அபினாஷ் 4 விக்கெட்டுக்களையும், வேகப்பந்து வீச்சாளர்கள் கபில்ராஜ், டினோசன் ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய யாழ்ப்பாண வீரர்கள் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டினை பறிகொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டிற்காக செரோபன்(21), அபினாஷ் இணை 76 ஓட்டங்களினை பகிர்ந்தது.

 

முதலாவது நாள் ஆட்டத்தினை 163/3 என பலமான நிலையில் நிறைவுசெய்த சென். ஜோன்ஸ் அணியினர், இரண்டாவது நாளின் ஆரம்பத்திலேயே அபினாஷின் (88) விக்கெட்டினை இழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களில் டினோசன்(28), சௌமியன்( 21) தவிர ஏனையோர் ஏமாற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியால் 215 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் தரிந்து சந்தருவான் 5 விக்கெட்டுக்களையும், உமேஷ் தாரக மற்றும் சச்சின் நிமேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

09 ஓட்டங்கள் முன்னிலையில் நம்பிக்கையுடன் களமிறங்கிய கேகாலையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கபில்ராஜ்ஜின்(5) பந்து வீச்சில்  சுருண்டனர். தொடர்ந்து யதுசன்(3) மற்றும் அபினாஷ்(2) ஆகியோரும் கைகொடுக்க கேகாலை வித்தியாலய அணியினர் 84 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். அதிகபட்சமாக சந்தருமிஷக 20 ஓட்டங்களை சேகரித்திருந்தார்.  

இதன் காரணமாக 94 என்ற இலகு வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய யாழ். வீரர்கள் அணித் தலைவர் யதுசனின் அரைச்சதத்தின் உதவியுடன் 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்தனர்.  

 

 

இன்றைய தினம் தமது ஆறாவது குழுநிலைப் போட்டியில் விளையாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். அதேவேளை, தலா ஒவ்வொரு போட்டியினை சமநிலையிலும், தோல்வியிலும் நிறைவு செய்துள்ளனர்.

அவர்கள் தமது இறுதிக் குழுநிலைப் போட்டிக்காக களனி ஸ்ரீ தர்மலோக கல்லூரியை எதிர்வரும் வாரங்களில் எதிர்கொள்ளவுள்ளனர்.

போட்டிச் சுருக்கம்  

கேகாலை வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) 224 (55.)1மதுசன் குணசிங்க 113, உமேஷ் தாரக 48, மேர்வின் அபினாஷ் 4/49, கனகரட்ணம் கபில்ராஜ் 3/66, தெய்வேந்திரம் டினோசன் 2/23

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 215 (61.4) – மேர்வின் அபினாஷ் 88, தெய்வேந்திரம் டினோசன் 28, நாகேந்திரராசா சௌமியன் 25, தேவதாஸ் செரோபன் 21, தரிந்து சந்தருவான் 5/73, உமேஷ் தாரக 2/43, சச்சின் நிமேஷ் 2/51

கேகாலை வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) 84 (38.1) – சந்தரு மிஷக 20, கனகரட்ணம் கபில்ராஜ் 5/40, வசந்தன் யதுசன் 3/26

சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 94/2 (22) – வசந்தன் யதுசன் 66*

போட்டி முடிவு – 8 விக்கெட்டுக்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  •  
  • கிளி­நொச்சி கால்­பந்­தாட்ட  முடி­வு­கள்
football-world-rankings-germany-end-2014

கிளி­நொச்சி கால்­பந்­தாட்ட  முடி­வு­கள்

 

கிளி­நொச்சி கால்­பந்­தாட்ட லீக்­கில் அங்­கம் வகிக்­கும் ‘பி’ பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான அணிக்கு 11 பேர் பங்­கு­பற்­றும் லீக் முறை­யி­லான தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­கள் சில­வற்­றின் முடி­வு­கள் வரு­மாறு.

பரந்­தன் இளை­ஞர்­வட்ட விளை­யாட்டு மைதா­னத்­தில் தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. கல்­மடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், அக்­க­ரா­யன் விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் கல்­மடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணி 2:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

இரா­ம­நா­த­பு­ரம் குறிஞ்சி விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், முறிப்பு கண்­ணன் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் இர­ம­நா­த­பு­ரம் குறிஞ்சி விளை­யாட்­டுக் கழக அணி 8:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

முர­சு­மோட்டை விளை­பூமி விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், சுட­ரொளி விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் நிர்­ண­யிக்­கப் பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­யி­ன­ரும் கோல் எதை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தது.

 

 

Capture-28-750x430.jpg

சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூ­ரி­யின் இல்ல மெய்­வன்­மைப்­போட்டி !!

 

சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூ­ரி­யின் இல்ல மெய்­வன்­மைப்­போட்டி கல்­லூரி மைதா­னத்­தில் கடந்­த புதன்­கி­ழமை நடை­பெற்­றது. அதி­பர் ல.முகுந்­தன் தலை­மை­யில் நடை­பெற்றது.

போட்­டி­க­ளுக்கு முதன்மை விருந்­தி­ன­ராக தென்­ம­ராட்சி வல­யக்­கல்­விப் பணி­ம­னை­யின் உடற்­கல்வி உத­விக் கல்­விப் பணிப்­பா­ளர் பிர­தீபா கிருஷ்­ண­பிள்­ளை­யும் சிறப்பு விருந்­தி­ன­ராக இலங்­கைக் காப்­பு­று­திக் கூட்­டுத்­தா­பன சாவ­கச்­சேரி கிளை முகா­மை­யா­ளர் கேச­வன் பிர­தீ­ப­னும் கலந்து கொண்­ட­னர்.

 

http://newuthayan.com

Link to comment
Share on other sites

மகாஜனாவுக்கு மூன்றாமிடம்

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­திய இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண் கள் பிரிவில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி வெண்­க­லப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தது.

கம்­பளை சாயிரா கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டம் நடை­பெற்­றது. இந்த ஆட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து கம்­பகா பண்­டா­ர­நா­யக்க வித்­தி­யா­ லய அணி மோதி­யது.

முதல் பாதி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி வீரர் கனு­ஜ­னின் ஆட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் கம்­பகா பண்­டார நாயக்கா வித்­தி­யா­லய அணி தடு­மா­றி­யது. அவர் ஆட்­டத்­தின் 5ஆவது மற்­றும் 10ஆவது நிமி­டங்­க­ளில் அடுத்­த­டுத்து கோல்­க­ளைப் பதி­வு­செய்­தார்.

இரண்­டா­வது பாதி­யாட்­டத்­தி­லும் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி­யின் ஆதிக் கம் தொடர்ந்­தது. 9ஆவது நிமி­டத்­தில் தஜீ­பன் ஒரு கோலைப் பதிவுசெய்ய ஆட்ட நேர முடி­வில் தெல்­லிப்பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி பெற்று மூன்­றாம் இடத்தைத் தன­தாக்­கி­யது. (ம-–422)

http://newuthayan.com/story/65500.html

மகாஜனா   சம்பியன்

 

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­திய 18 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்­கான தேசி­ய­மட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

கம்­பளை சாயிரா கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. யாழ்ப்­பாண மாவட்ட அணி­க­ளான தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி மோதி­யது.

முதல் பாதி­யாட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­தர பாட­சாலை அணி வீராங்­க­னை­கள் ஆட்­டம் ஆரம்­ப­மாகி 5 நிமி­டத்­தில் இரண்டு கோல்­க­ளைப் பதிவு செய்து மகா­ஜ­னக் கல்­லூ­ரியை அதிர்ச்­சிக்கு உள்­ளாக்­கி­னர்.

இதில் முத­லா­வது கோலை ஆட்­டத்­தின் இரண்­டா­வது நிமி­டத்­தில் நிரோ­சி­கா­வும், இரண்­டா­வது கோலை ஐந்­தா­வது நிமி­டத்­தில் அலன்­ரீ­னா­வும் பெற்­ற­னர். மாற்­றங்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல்­பாதி.

 

இரண்­டா­வது பாதி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி வீராங்­கனை சாணு தனது அபார ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி 15ஆவது, 20ஆவது நிமி­டங்­க­ளில் அடுத்­த­டுத்து இரண்டு கோல்­க­ளைப் பதிவு செய்து பதி­லடி கொடுத்து கோல்­க­ளின் எண்­ணிக்­கையை சம­நி­லைப்­ப­டுத்­தி­னார்.

இத­னால் ஆட்­டம் விறு­வி­றுப்­பின் உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யது. இதன் பின்­னர் இரு அணி­க­ளும் பல­முறை முயற்­சித்த போதும் மேல­திக கோல் எத­னை­யும் பதிவு செய்ய முடி­ய­வில்லை. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா இரண்டு கோல்­க­ளைப் பெற்­றி­ருந்­தன.

இத­னால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. முடி­வில் 3:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது மகா­ஜனா.

ஆட்ட நாய­கி­யாக தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி வீராங்­கனை சாணு, சிறந்த கோல் காப்­பா­ள­ராக பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி வீராங்­கனை லக்­சிகா ஆகி­யோர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.

http://newuthayan.com/story/65498.html

Link to comment
Share on other sites

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி

 

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 27 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.

 

இலங்கை பாடசாலைகளின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் தெல்லிப்பளையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி

இந்நிகழ்வானது கல்லூரி அதிபர் தி.வரதன் தலைமையில் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இவ் விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ஆகிய த.கணேசநாதன் கலந்து கொண்டுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் சி.சுகுமாரனும், உதவிக் கல்வி பணிப்பாளர் ப.பார்த்தீபனும் கலந்து கொண்டனர். இதனடிப்படையில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வுகள், மிகவும் சிறப்பாக நடைபெற்று பிற்பகல் 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி

https://news.ibctamil.com/ta/sports/tellipalai-union-college-sports-meet

Link to comment
Share on other sites

18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கால்பந்தாட்டத்தில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி சம்­பியன்; பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உ. பா. இரண்­டா­மிடம்

இலங்கை பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட சங்கம் நடத்­திய 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி சம்­பி­ய­னா­ன­துடன் பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்­தரப் பாட­சாலை இரண்டாம் இடத்தைப் பெற்­றது.

இதன் மூலம் இந்த இரண்டு பாட­சா­லை­களும் யாழ். மாவட்­டத்­துக்கு பெருமை தேடிக்­கொ­டுத்­துள்­ளன.
கம்­ப­ளையில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்­தரப் பாட­சாலை அணியை 3 க்கு 2 என்ற பெனல்­டிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டதன் மூலம் மகா­ஜன கல்­லூரி சம்­பியன் பட்­டத்தை சூடி­யது.

Mahajana-champs-jaffna.jpg

இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான இறுதிப் போட்டி 2 க்கு 2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

தலா 25 நிமி­டங்­களைக் கொண்ட இரண்டு ஆட்ட நேரப் பகு­தி­களைக் கொண்ட இப் போட்­டியின் 4ஆவது நிமி­டத்தில் என். நிரோ­ஷி­காவும் 7ஆவது நிமி­டத்தில் எஸ். வெலன்­டி­னாவும் பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்­தரப் பாட­சாலை அணி சார்­பாக கோல்­களைப் போட்­டனர்.

PGHS-runner-up-750.jpg

இடை­வே­ளையின் பின்னர் 32ஆவது மற்றும் 45ஆவது நிமி­டங்­களில் பி. ஷானு இரண்டு கோல்­களை மகா­ஜன சார்­பாக போட்டார். இவர் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் 14 வய­துக்­குட்­பட்ட தேசிய பெண்கள் அணியில் இடம்­பெற்­ற­வ­ராவார்.

தொடர்ந்து போட்டி வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­ததால் பெனல்டி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதில் நான்கு பெனல்­டி­களை தடுத்து நிறுத்­திய பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்­தரப் பாட­சாலை அணி கோல்­காப்­பாளர் ஏ. லன்சிகா சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றெடுத்தார்.

சிறந்த வீராங்கனைக்கான விருது மகாஜனவின் ஷானுவுக்கு வழங்கப்பட்டது. (என்.வீ.ஏ.)

http://metronews.lk/?p=20719

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  •  
  • இறுதிக்குள் யாழ். இந்து!!
 
Capture-155.jpg

இறுதிக்குள் யாழ். இந்து!!

யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் 13 வய­துப் பிரி­வி­ன­ருக்­கான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் நேற்­று­முன் தினம் இடம்­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி ‘பி’ அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். ஜோன்ஸ் கல்­லூரி ‘பி’ அணி 27.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 87 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக றன்­டி­யோன் 20 ஓட்­டங்­க­ளை­யும், கிரு­சாந் 18 ஓட்­டங்­க­ளை­யும், ஹனு­சாந் 13 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி­யின் சார்­பில் கயன் 6 இலக்­கு­க­ளை­யும், சந்­தோஸ் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

 
 

பதி­லுக்கு தனது முத­லா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி 314 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக சாரு­ஜன் 87 ஓட்­டங்­க­ளை­யும், கஐன் 50 ஓட்­டங்­க­ளை­யும், யோகி­சன் 48 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் றன்­டி­யோன் 3 இலக்­கு­க­ளை­யும், சஜிபன், கிருஷ்ணன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்தினர். தனது இரண்­டா­வது இன்­னிங்ஸுக்­கா­கத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் சென். ேஜான்ஸ் கல்­லூரி அணி 10 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 5 இலக்­கு­களை இழந்து 55 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­த­போது நாள் முடி­வுக்கு வந்­தது.

முதன் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்ற கார­ணத்­தால் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

http://newuthayan.com/story/69043.html

Link to comment
Share on other sites

ஸ்கந்தா மற்றும் மகாஜனா கல்லூரிகளின் வீரர்களின் போர்!

 

ஸ்கந்தா மற்றும் மகாஜனா கல்லூரிகளின் வீரர்களின் போர்!


ஸ்கந்தா மற்றும் மகாஜனா கல்லூரிகளின் வீரர்களின் போர் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியும், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியும் மோதும் வருடார்ந்த வீரர்களின் போர் என அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதி மகாஜனா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் ஸ்கந்தா மற்றும் மகாஜனா கல்லூரிகளின் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

வருடா வருடம் இடம்பெறும் வீரர்களின் போர் கிரிக்கெட் போட்டி நட்பு ரீதியாக நடைபெறுவதோடு, அதனை தொடர்ந்து பழைய மாணவர்களுக்கான நண்பர்களின் போர் என அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த 2 வருடங்கள் நடைபெற்ற வீரர்களின் போர் போட்டியில் மகாஜனா கல்லூரி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/sports/skanda-vs-mahajana-battle-of-the-heroes

Link to comment
Share on other sites

  •  
  • வட மாகாணத்தில் மகாஜனா சம்பியன்
 
3-lead-1-750x430.jpg

வட மாகாணத்தில் மகாஜனா சம்பியன்

யாழ்ப்பாண மாவட்ட பாட­சா­லை­கள் விளை­யாட்­டுச் சங்­கம் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வய­துப் பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி சம்­பி­ய­னா­னது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இரவு 8 மணி­ய­ள­வில் இந்த ஆட்­டம் நடை­பெ­று­வ­தாக இருந்­தது. மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யு­டன் மோத­வி­ருந்த பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மைதா­னத்­துக்கு சமூ­கம் தரா­ததை அடுத்து மகா­ஜனா கிண்­ணம் வென்­றது.

http://newuthayan.com/story/70223.html

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று நடைபெற்றது.

Link to comment
Share on other sites

 
 
 

யாழ். வீரர் சயந்தன்  குமித்தேயில் தங்கம்  

வட­மா­காண விளை­யாட்­டுத் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு இடை­யி­லான குமித்­தே­யில், 50 கிலோ எடைக்கு உட்­பட்ட பிரிவு குமித்­தே­யில் யாழ்ப்­பாண மாவட்டச் செய­ல­கத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த வீரர் ஜெ.சயந்­தன் தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­னார்.

மன்­னார் பொது உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. 50 கிலோ எடைக்கு உட்­பட்ட ஆண்­கள் பிரிவு குமித்­தே­யில் யாழ்ப்­பாண மாவட்ட செய­ல­கத்­தைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஜே.சயந்­தன் தங்­கப் பதக்­கத்­தை­யும், கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கத்­தைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஐ.ஏ.அம­ல­தாஸ் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், யாழ்ப்­பாண மாவட்டச் செய­ல­கத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த எம்.சோபா­னந், கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த என்.சுதன் ஆகி­யோர் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

 

 
 
 

யாழ். வீராங்கனை இந்துஜா  குமித்தேயில் தங்கப்பதக்கம்

வட­மா­காண விளை­யாட்­டுத் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு இடை­யி­லான குமித்­தே­யில், 68 கிலோ எடைக்கு மேற்­பட்ட பெண்­கள் பிரி­ வில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.இந்­துயா தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

மன்­னார் பொது உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. இதில் யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­ ல­கத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.இந்­துஜா தங்­கப் பதக்­கத்­தை­யும் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எம்.சுரேக்கா வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  •  
  • சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!!
3-lead-copy-738x430.jpg

சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!!

 

தேசியமட்ட புட்­சல் தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.

கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி மோதி­யது.

முதல் பாதி­யின் முடி­வில் 2:1 என்ற கோல் கணக்­கில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி முன்­னிலை வகித்­தது. பற்­றிக்ஸ் சார்­பாக பதி­வான இரண்டு கோல்­க­ளை­யும் றஜிந்­தன் பதி­வு­செய்­தார்.

இரண்­டாம் பாதி­யில் லியோ, அபிஸ் இருவரும் பற் றிக்­ஸின் சார்­பாக இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்தனர். முடி­வில் 4:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி.

http://newuthayan.com/story/75911.html

Link to comment
Share on other sites

சம்பியனாகியது யாழ். சென். பற்றிக்ஸ்
 

- கே. கண்ணன் 

image_1df9423a47.jpgimage_c345a62df0.jpg

இளையோர் உள்ளக புட்சல் கால்பந்தாட்ட தேசிய மட்ட அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கான, 14, 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியது.

குறித்த கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிகள், கொழும்பு சர்வதேச ஒசர்ஏசியா உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றன. 

16 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி மோதியது.

குறித்த போட்டியின் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியின் வீரர் றஜிந்தன் இரண்டு கோல்களைப் பெற 2-0 என்ற கோல் கணக்கில் இடைவேளையின்போது சென். பற்றிக்ஸ் கல்லூரி முன்னிலை வகித்தது.

இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்திலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியினரின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் திணறினர். இதனால், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர்கள் லியோ, அபிஸ் ஆகியோர் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று அசத்தினார். இருப்பினும் தொடர்ந்து போராடிய புனித ஹென்றியரசர் கல்லூரி அணி ஒரு கோலைப் பெற போட்டி நேர முடிவில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. 

14 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு இன்டர்நஷனல் பிரிட்டிஷ் கல்லூரி அணி மோதியது.

குறித்த போட்டியின் இடைவேளைக்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரண்டு அணிகளாலும் கோலெதனையும் பெற முடியவில்லை.

இடைவேளைக்கு பின்னரும் இரண்டு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இருப்பினும் போட்டி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் றோவான்சன் மிகச் சிறப்பான கோலைப் பெற்று அசத்த போட்டி நேர முடிவில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது. 

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-யாழ்-சென்-பற்றிக்ஸ்/88-212627

Link to comment
Share on other sites

  • கிளிநொச்சி மத்திய ம.வி. துடுப்பாட்டத்தில் சம்பியன்
கிளிநொச்சி மத்திய ம.வி. துடுப்பாட்டத்தில் சம்பியன்
 
 

கிளிநொச்சி மத்திய ம.வி. துடுப்பாட்டத்தில் சம்பியன்

 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கிளி­நொச்சி மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய 15 வய­துப்­பி­ரி­வி­ன­ருக்­கான துடுப்­பாட்­டத் தொட­ரில் கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய அணி 9 இலக்­குக­ளால் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென் றது.

கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி, முத­லில் துடுப்­பெ­டுத்­தாடி 26.1 பந்­துப் ப­ரி­மாற்­றங் களில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 58 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

பந்­து­வீச்­சில் அபி­ராஜ், பிர­தாப் இரு­வ­ரும் தலா 4 இலக்­கு­க­ளை­யும் காண்­டீ­பன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய அணி 6 பந்­துப் பரி­ மாற்­றங்­க­ளில் ஓர் இலக்கை இழந்து வெற்­றி­பெற்­றது. அருள்­வெட்சி 43 ஓட்­டங்­க­ளைச் சேர்த்­தார்.

கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தின் அருள்­வெட்சி சிறந்த துடுப்­பாட்ட வீர­ரா­க­வும், தொட­ராட்ட நாய­க­னா­க­வும், அதே கல்­லூ­ரி­யின் அபி­னாஸ் ஆட்­ட­நா­ய­க­னா­க­வும், சயந்­தன் சிறந்த களத்­த­டுப்­பா­ள­ரா­க­வும், பிர­தாப் சிறந்த பந்து வீச்­சா­ள­ரா­க­வும் தெரி­வா­கி­னர்.

பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ ராக கிளி­நொச்சி மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட்டச் சங்­கத்­தின் காப்­பா­ள­ரும் கிளி­நொச்சி கல்வி வலய பணிப்­பா­ள­ரு­மான தி.ஜோன்­கு­யின்­ரஸ், மதிப்­புறு விருந்­தி­னர் க­ளாக பிரித்­தா­னிய தமிழ் துடுப்­பாட்ட லீக்­கின் காப்­பா­ளர் வைத்­திய கலா­நிதி தெய்­வேந்­தி­ரம், கிளி­நொச்சி கல்வி வலய உடற்­கல்வி உத­விப் பணிப்­பா­ளர் மு.காந்­தச்­செல்­வன், வடக்கு மாகாண துடுப்­பாட்­டப் பயிற்­று­னர் அமில பின்­னத்­துவ ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

http://newuthayan.com/story/77477.html

  • யாழ். மாவட்டச் செயலகம்  சதுரங்கத்தில் சம்பியனானது
 

யாழ். மாவட்டச் செயலகம்  சதுரங்கத்தில் சம்பியனானது

 

வட­மா­காண விளை­யாட்­டுத் திணைக்­க­ளத்­தால் நடத்­தப்­பட்ட மாவட்­டச் செய­லக அணி ­க­ளுக்கு இடை­யி­லான சது­ரங்­கத் தொட­ரில் இரண்டு பிரி­வு­க­ளி­லும் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக அணி கிண்­ணம் வென்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் உள்­ள­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. பெண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­லக அணி முத­லி­டத்­தை ­யும், கிளி­நொச்சி மாவட்­டச் செய­லக அணி இரண்­டா­மி­டத்தை யும், முல்­லைத்­தீவு மாவட்டச் செய­லக அணி மூன்­றா­ மி­டத்­தை­யும் பெற்­றன.

ஆண்­கள் பிரிவு சது­ரங்­கத்­தில் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­லக அணி முத­லாம் இடத்­தை­யும், கிளி­நொச்சி மாவட்ட செய­லக அணி இரண்­டா­மி­டத்­தை­யும், முல்­லைத் தீவு மாவட்ட செய­லக அணி மூன்­றா­ மி­டத்­தை­யும் பெற்­றன.

2-kan.jpg

http://newuthayan.com/story/77480.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
 
 
 

பற்றிசியன்ஸ் கழகத்தை தோற்கடித்தது விக்ரோறி!!

கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் விக்­ரோறி அணி வெற்­றி­ பெற்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் காலை 8.30 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் பற்­றி­சி­யன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து விக்­ரோறி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பற்­றி­சி­யன்ஸ் அணி 28.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 170 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. பத்­ம­மு­ரளி அதி­க­பட்­ச­மாக 51 ஓட்­டங்­க­ளை­யும், மோனிக் 49 ஓட்­டங்­க­ளை­யும், நிலக்­சன் 19 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் சரத்­கு­மார் 4 இலக்­கு­க­ளை­யும் சுஜி­த­ரன் 3 இலக்­கு­க­ளை­யும், கதி­யோன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.
பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய விக்­ரோறி விளை­யாட்­டுக் கழக அணி 28 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 173 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக சரத்­கு­மார் ஆட்­டம் இழக்­கா­மால் 37 ஓட்­டங்­க­ளை­யும், கதி­யோன் 43 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் பத்­ம­மு­ரளி 3 இலக்­கு­க­ளை­யும், அஜித் டார்­வின், லிவிங்­ரன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

  • இந்து இளைஞர் அணி  கிண்ணம் சுவீகரித்தது
 
 

இந்து இளைஞர் அணி  கிண்ணம் சுவீகரித்தது

கிளிநொச்சி இளந்தாரகை விளையாட்டுக் கழகம் நடத்திய அரு­மை­நா­ய­கம் ஆமோஸ் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில், இந்து இளை­ஞர் அணி கிண்­ணம் வென்­றது.

இளந்­தா­ரகை விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் கிளி­நொச்சி இந்து இளை­ஞர் அணியை எதிர்த்து கிளி­நொச்சி இளந்­தா­ரகை அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி இந்து இளை­ஞர் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 6 இலக்­கு­களை இழந்து 142 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக தர்­சன் 47, பிர­தீ­சன் 35, பபி­ஸன் 13 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் பிர­காஷ் 2 இலக்­கு­க­ளை­யும் துஸ்­யந்­தன், சுதா, கீர்த்­தீ­சன் ஆகி­யோர் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய இளந்­தா­ரகை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 8 இலக்­கு­களை இழந்து 134 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக துஸ்­யந்­தன் 30, ரதன் 28, ரொபேட் 18 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் அகி­லன், மயூ­ரன் ஆகியோர் 2 இலக்­கு­க­ளை­யும், தர்­சன், பிர­தீ­பன் ஆகி­யோர் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

ஆட்ட நாய­க­னாக கிளி­நொச்சி இந்து இளை­ஞர் அணி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த அனுக்­ஸன், தொட­ராட்ட நாய­க­னாக கிளி­நொச்சி இந்து இளை­ஞர் அணியை பிர­தி­ நி­தித்­து­வம் செய்த தர்­சன், சிறந்த துடுப்­பாட்ட வீர­ராக கிளி­நொச்சி இந்து இளை­ஞர் அணியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த றொஸ்கோ, சிறந்த பந்து வீச்­சா­ள­ராக கிளி­நொச்சி மத்­தி­ய­தீ­ரர் அணியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த சுபீஸ் க­ரன் ஆகி­யோ­ர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.

 
 
 
 
 
 
 

வடதாரகை விளையாட்டுக் கழகம் இமாலய வெற்றி

வவு­னியா மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் அங்­கத்­து­வக் கழ கங்க­ளுக்கு இடை­யில் நடத்­தும் மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில், வட­தா­ரகை விளை­யாட்­டுக் கழக அணி 194 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது.

வவு­னியா நக­ர­சபை மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் வட­தா­ரகை அணியை எதிர்த்து செவ்­வா­னம் அணி மோதி­யது.

நாண­யச் சுழற்சி।யில் வெற்­றி­பெற்ற வட­தா­ரகை அணி முத­லில் துடுப்­பெ­டுத் தாடி 49.5 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்கு­ க­ளை­யும் இழந்து 328 ஓட்டங்க­ளைப் பெற்­றது. அதி­ க­ பட்­ச­மாக கிரி­த­ரன் 123 ஓட்­டங்­க­ளை­யும், சஞ்­சே­யன் 72 ஓட்­டங்­க­ளை­யும், சுகந்­தன் 38 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் பானு­சன் 4 இலக்­கு­களை வீழ்த்­தி­னார்.

329 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத் தா­டிய செவ்­வா­னம் அணி 27.1 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 134 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந் தது. இதை­ய­டுத்து 194 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது வட­தா­ரகை அணி.

பந்­து­வீச்­சில் விது­சன் 3 இலக் கு­க­ளை­யும், அகி­லன் சுகந்­தன், றோபேட் ஜோன்­சன் மூவ­ ரும் தலா இரு இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

 
 
 
 
 
 

திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் கிறாஸ்கொப்பர்ஸை வீழ்த்தியது!!

கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தி­வ­ரும் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழ­கம் வெற்­றி­பெற்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் திரு­நெல் வேலி கிரிக்­கெட் கழக அணியை எதிர்த்து கிறாஸ் கொப்பர்ஸ் அணி மோதி­யது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­ டிய கிறாஸ்­கொப்­பர்ஸ் அணி 25.5 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­ க­ளை­யும் இழந்து 139 ஓட்­டங்­களை மாத்­தி­ரம் பெற்­றது.

அஜித் 30 ஓட்­டங்­க­ளை­யும், கோகி­லன் 29 ஓட்­டங்­க­ளை­யும், சாரங்­கன் 16 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் பிர­ண­வன் 4 இலக்­கு­க­ளை­யும், அனு­ர­தன் 3 இலக்­கு­க­ளை­யும், சிவ­ராஜ் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி 23.5 பந்­துப்­ப­ரி­மாற்றங்கள் நிறை­வில் 6 இலக்­கு­களை இழந்து வெற்­றி­ பெற்­றது. தர்­சி­கன் 27 ஓட்­டங்­க­ளை­யும், சகி­லேஸ்­வ­ரன் ஆட்­டம் இழக்­கா­மல் 26 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

http://newuthayan.com/story/category/sports

Link to comment
Share on other sites

  • கொக்குவில் இந்துவை வென்றது யாழ். மத்தி.
 
 

கொக்குவில் இந்துவை வென்றது யாழ். மத்தி.

கீர்த்­தி­கன் ஞாப­கார்த்­த வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

நான்கு கால் பாதி­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது கால் பாதி­யில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி 18:6 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது.

இரண்­டா­வது கால் பாதி­யும் 22:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் மத்­தி­யின் வச­மா­னது. முதல் பாதி­யின் முடி­வில் 40:21 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னிலை வகித்­தது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

மூன்­றா­வது கால் பாதியை 22:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி. நான்­கா­வது பாதி­யில் சிறிது ஆதிக்­கம் செலுத்­திய கொக்­கு­வில் இந்து அதை 30:16 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது.

முடி­வில், 78:66 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

 
 
 
 
 
 
 

கூடைப்பந்தாட்டத்தில்  யாழ்ப்பாணம் மகுடம்

வட­மா­காண விளை­யாட்­டுத் திணைக்­க­ளத்­தால் நடத்­தப்­ப­டும் கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பாண மாவட்ட அணி சம்­பி­ய­னா­னது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்ட திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில்; யாழ்ப்­பாண மாவட்ட அணியை எதிர்த்து வவு­னியா மாவட்ட அணி மோதி­யது.

நான்கு கால்­பா­தி­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது கால் பாதியை 22:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது வவு­னியா மாவட்ட அணி. இரண்­டா­வது கால் பாதியை 36:10 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது யாழ்ப்­பாண மாவட்ட அணி.

முதல் பாதி­யின் முடி­வில் 56:32 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பாண மாவட்ட அணி முன்­னிலை வகித்­தது.

மூன்­றா­வது கால் பாதி­யாட்­டம் 29:13 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பாண மாவட்ட அணி­யின் வச­மா­னது. நான்­கா­வது கால் பாதி­யும் 20:12 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழி­டம் வீழ்ந்­தது.

முடி­வில் 105:56 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பாண மாவட்ட அணி வெற்­றி­பெற்­றது.

 
 
 
 

மானிப்பாய் ஏஞ்சல் பன்னாட்டுப் பாடசாலை வெற்றிநடை

மட்­டக்­க­ளப்பு புனித மைக்­கல் கல்­லூ­ரி­யின் பழைய மாண­வர் சங்­கத்­தால் நடத்­தப்­ப­டும் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசிய ரீதி­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில், மானிப்­பாய் ஏஞ்­சல் பன்­னாட்­டுப் பாட­சாலை அணி வெற்­றி­நடை போட்டு வரு­கி­றது.

மட்­டக்­க­ளப்பு புனித மைக்­கல் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் மானிப்­பாய் ஏஞ்­சல் பன்­னாட்­டுப் பாட­சாலை அணியை எதிர்த்து பம்­ப­லப்­பிட்டி சென். பீற்­றர்ஸ் தேசிய பாட­சாலை அணி மோதி ­யது. இந்த ஆட்­டத்­தில் 67:63 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் மானிப்­பாய் ஏஞ்­சல் பன்­னாட்­டுப் பாட­சாலை அணி வெற்­றி­பெற்­றது.

பிறி­தொரு ஆட்­டத்­தில் கொழும்பு மகிந்த தேசிய பாட­சாலை அணியை எதிர்த்து மானிப்­பாய் ஏஞ்­சல் பன்­னாட்­டுப் பாட­சாலை மோதி­யது. 72:37 என்ற புள்­ளி ­க­ளின் அடிப்­ப­டை­யில் மானிப்­பாய் ஏஞ்­சல் பன்­னாட்­டுப் பாட­சாலை அணி வெற்­றி­பெற்­றது.

http://newuthayan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வன்னிச் சமரில் சம்பியனாகிய வவுனியா இந்துக் கல்லூரி

FEatured-image-1-1-696x464.jpg
DFCCRugby2018.gif

வட மாகாணத்தில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் வவுனியா இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது.  

வவுனியா இந்துக் கல்லூரி அணியும் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணியும் மோதியவன்னிச் சமர்என வர்ணிக்கப்படும் பெண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவந்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் வெற்றி மூலம் வவுனியா மங்கைகள் போட்டியில் வெற்றி பெற்றனர்.

award-winners-1.jpg

 

வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் எம்.எப்  Batting.jpg

 

பந்துவீச்சில் மிரட்டிய வவுனியா இந்துக் கல்லூரி அணி வீராங்கனை தினோஷியா ஸ்டீவ் மெல்கம் 30 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

Bowling.jpg

அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வவுனியா இந்துக் கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் 73 உதிரி ஓட்டங்கள் எதிரணி பந்துவீச்சாளர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்.

SLC-awarding-cricket-equipments-for-two-

 

இதனையடுத்து 27 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மன்னார் சித்தி விநாயகர் அணி, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

 

spectators.jpg

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற வவுனியா இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்து நடத்தும் போட்டிகளில் முதல் போட்டியில் வவுனியா வீராங்கனைகள் வெற்றி பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், இந்தப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் ஜஸ்லா தெரிவாகியதுடன், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் திவ்யா தெரிவானார்.

இந்நிலையில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வவுனியா இந்துக் கல்லூரி வீராங்கனை தினோஷியா சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் போட்டியின் ஆட்ட நாயகி என்பவற்றுக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

போட்டியின் சுருக்கம்

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 99/10 (17)

வவுனியா இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126/10 (29.4)

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/5 (15)

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

யாழில் வடகிழக்கு பிறிமியர் லீக் உதைபந்தாட்ட தொடர் : ஐ.பி.சி தமிழ் அணியும் களத்தில்

 

 
Image

ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்கா சிறி ஆகிய நிறுவனங்கள் சார்பில் விளையாடும் அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் வட கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழில் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படும் அணிகள் விளையாடும் இந்த தொடருக்கான கிண்ண அறிமுகம் மற்றும் அணி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு யாழிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது.

தமிழ் உதைபந்தாட்ட மன்றம் ஏற்பாடு செய்துள்ள வட கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர், 2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது பருவகாலப் போட்டிகளாக இடம்பெறவுள்ளன.

வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளதுடன்,இதுவரை ஒன்பது அணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி, இரண்டு மாதங்கள் வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் மின்னொளியில் விளையாடும் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஐ.பி.சி தமிழை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளியூர் கிங்ஸ் அணியும் லங்காசிறி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் றிங்கோ ரைய்ரன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த தொடரில் இதுவரை பின்வரும் அணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

கிளியூர் கிங்ஸ் விளையாட்டு கழகம் - கிளிநொச்சி மாவட்டம்

றிங்கோ ரைய்ரன்ஸ் விளையாட்டு கழகம் - திருகோணமலை மாவட்டம்

மன்னார் ஏப்.சி விளையாட்டு கழகம் - மன்னார் மாவட்டம்

வவுனியா வொரியஸ் விளையாட்டு கழகம் - வவுனியா மாவட்டம்

முல்லை ஃபீனிக்ஸ் விளையாட்டு கழகம் - முல்லைத்தீவு மாவட்டம்

ரில்கோ காங்கிரஸ் விளையாட்டு கழகம் - யாழ்ப்பாண மாவட்டம்

வல்லை ஏப்.சி விளையாட்டு கழகம் - வல்வெட்டித்துறை

நோதர்ன் எலைய்ட் ஏப்.சி விளையாட்டு கழகம் - வல்வெட்டித்துறை

தமிழ் யுனைட்டட் விளையாட்டு கழகம் - யாழ்ப்பாண மாவட்டம்

இந்த தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் நான்கு வீரர்கள் கொண்டிருப்பது கட்டாயமானது.

ஏனைய ஐந்து வீரர்களும் வடக்கு கிழக்கிலுள்ள எதாவது ஒரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த அல்லது வெளிநாட்டு வீரர்கள் இருவர் ஓர் அணியில் விளையாடலாம் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் போட்டிகளை கண்டு களிப்பதுடன், வீரர்களுக்கும் உற்சாகம் அளிக்க விளையாட்டு இரசிகர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

Image0

http://www.ibctamil.com/football/80/100477?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!
 
 

மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மட்­டு­வில் சந்­தி­ர­பு­ரஸ்­கந்­த­வ­ரோ­தயா மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­தி­யது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி. 3ஆவது, 8ஆவது நிமி­டங்­க­ளில் சரண்யா அடுத்­த­டுத்து இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்ய 2:0 என்று வலு­வான ஆதிக்­கம் செலுத்­தி­யது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

14ஆவது நிமி­டத்­தில் யோகிதா மற்­றொரு கோலைப் பதி­வு­செய்ய முதல் பாதி­யின் முடி­வில் 3:0 என்ற கோல் கணக்­கில் வலு­வான ஆதிக்­கம் செலுத்­தி­யது மகா­ஜ­னக் கல்­லூரி அணி. இரண்­டா­வது பாதி­யில் கௌசி, சரண்யா இரு­வ­ரும் கோல்­க­ளைப் பதி­வு­செய்ய முடி­வில் 5:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று இற­திக்­குத் தகுதி பெற் றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

 
 

எல்லே இறுதியில் மெதடிஸ்த பெண்கள் அணி

வடமாகாண கல்வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்­லே­யில் பெண்­கள் பிரி­வில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண் கள் உயர்­தரப் பாட­சாலை அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­தரப் பாட­சாலை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 40 பந்­து­க­ளில் 8 இலக்­கு­களை இழந்து 18 ஓட்­டங்­களைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக காருண்யா 5, அஜிதா 4, சுவர்­ண­சீலி 3, மனோஜா 3, தயா­ல­சீலி 2 ஓட்டங்க­ளை ­யும், ஜசிந்தா ஓர் ஓட்­டத்­தை­யும் பெற்­ற­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூரி அணி 24 பந்­து­ க­ளில் 7 இலக்­கு­களை இழந்து ஓர் ஓட்­டத்தை மாத்­தி­ரம் பெற்­ற­து.

இதை­ய­டுத்து 17 ஓட்டங்க­ளால் அபார வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதிபெற்­றது பருத் தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி.

 
 
 

சைவத்தமிழ் வித்தி. இறுதிக்கு சென்றது 

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் வடமாகாணப் பாடசா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்­லே­யில் உரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­லய அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் உரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­ல­யத்தை எதிர்த்து அன­லை­தீவு சதா­சி­வம் மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய அன­லை­தீவு சதா­சி­வம் மகா வித்­தி­யா­லய அணி 33 பந்­து­க­ளில் சகல இலக்­கு­ க­ளை­யும் இழந்து ஓட்­ட­மெ­தை­யும் பெற­வில்லை.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய உரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­லய அணி 19 பந்­து­க­ளில் 5 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்று இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

 

 
 

சென். பற்றிக்ஸ் எல்லே இறுதியாட்டத்தில்

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் ஆண்கள்
பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

சென். பற்றிக்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில்,
சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 40 பந்துகளில்
10 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குக் களமிறங்கிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி
அணியும் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து இரண்டு அணிகளுக்கும்

தலா 10 பந்துகள் மேலதிகமாக வழங்கப்பட்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் 4 ஓட்டங்களைப் பெற்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியால் 2 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

இதையடுத்து  2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி  அணி.

http://newuthayan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.