Sign in to follow this  
நவீனன்

தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்

Recommended Posts

  • தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்
DSCF2442-750x400.jpg

தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்

 

உண்டி சுருங்­கு­தல் பெண்டிர்க்கழகு’ எனும் பழ­மொழி எங்­கள் பெண்­க­ளைச் சுட்டியே அமைந்ததொன்று. ஆண்­க­ளுக்கு வழங்கி மீத­மாக, மிஞ்­சிப்­போ­கிற உண­வைத்­தான் வீட்­டி­லுள்ள பெண்­கள் உண்ப தென்பது தமிழ்ப் பாரம்­ப­ரிய, பண்­பா­டாக இருக்­கி­றது. இத­னால் வீட்­டுப் பெண்­க­ளுக்­குச் சரி­யான, நிறை­வான, திருப்­தி­ யான உணவு கிடைப்­ப­தில்லை. இதனை அடி­யொற்­றியே மேற்­படி பழ­மொழி வழக்­கி­ல் அமைந் ததா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

ஆண்களும், பெண்களும் இணைந்த இந்­தச் சமூ­கத்­தில் எந்த விட­யத்திலும் பெண்­கள் இரண்­டாம் பட்­ச­மா­கவே கணிக்­கப்­பட்டு வரு­கின்­றார்­கள். குடும்­பத் திலோ, சமூ­கத்­திலோ பெண்­க­ளின் பங்கு காத்­தி­ர­மா­ன­தா­க­வும், ஆண்­களை விடக் கன­தி­யா­ன­தா­க­வும், பெறு­மதி மிக்­க­தா­க­வும் இருக்­கின்­றது. தாயாக, மனை­வி­யாக, சகோ­த­ரி­யாக இந்த உற­வு­க­ளுக்கு அப்­பால் தனி மனு­ஷியா­கப் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு ஆண்­களை விட மேலா­னது.

ஒரு குடும்­பத்­தில் குடும்­பத் தலை­வ­னாக, உழைப்­புத் தலை­வ­னா­கக் கண­வனோ ஓர் ஆணோ கரு­தப்­பட்­டா­லும், பெண்­க­ளின் மதிப்­பிட முடி­யாத உழைப்பு ஒரு­போ­துமே கணிப்­புக்கு வரு­வ­தில்லை. உடல் உழைப்பை வழங்­கும் ஆண்­க­ளை­விட, பின்­தூங்கி முன்­னெ­ழுந்து உழைக்­கும் பெண்களின் உழைப்பு பணக்­க­ணி­யத்­துக்கு வராத கார­ணத்­தி­னால் பெறு­ம­தி­யில்­லா­மல் போய்­விடு கிறது.

இந்­தப் பின்­ன­ணி­யில் கூலி­வேலை மற்றும், ஏனைய வேலை­க­ளுக்கு ஆண்­க­ளைப் போலவே வேலைக் குச் செல்­லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சம்பளத்­தின் அளவு எப்­ப­டி­யா­னது என்­பது வெளிப்­படை யானது. எத்­த­கைய உட­லு­ழைப்­பி­னைப் பெண்­கள் வழங்­கி­னா­லும், அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் சம்­ப­ளத்­தின் அளவு ஆண்­கள் பெறும் சம்­ப­ளத்துடன் ஒப்பிடும் போது பெரி­ய­ அளவில் வேறு­பாடு கொண்டதாகவே உள்­ளது. ஆனால் மாற்றமுறும் சமூ­க, அர­சி­யல், பொரு­ளா­தார ரீதி­யான கார­ணங்­க­ளால் பெண்­க­ளைத் தலை­மை­யா­கக் கொண்ட குடும்­பங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

 

ஆண்­கள் இல்­லாத குடும்­பங்­க­ளில் பெண்­களே வேலை செய்து ஏனைய குடும்­ப உறுப்பினர்களைக் காப்­பாற்­றும் நிலை­யில், கந்­த­றுந்து வெட்­டி­யாய் வேலை அற்­றுச் சுற்­றும் ஆண்­க­ளுக்­கா­க­வும் பெண்­கள் வேலை செய்து உழைக்க ­வேண்­டிய சூழ்­நி­லை­யில் பெண்­கள் தொழில் செய்து தங்­க­ளை­யும் தங்­கள் குடும்­பத்­தை­யும் காப்­பாற்­றும் நிலை இன்று நிலவுகிறது.

இன்­றைய நிலவரத்தின்படி, பெண்­கள் பல்­வேறு தளங்­க­ளி­லும் தமது கல்­வி­ய­றிவு ஏனைய துறை­சார்ந்த பட்­ட­றி­வு­க­ளால் சமூ­கத்­தில் பல்­வேறு துறை­க­ளில் முன்­னேறி நிலைத்து நின்­றா­லும், முழு­மை­யான, ஒரு திருப்­தி­யான நிலையை பெண்­கள் இன்­ன­மும் அடைந்து விட­வில்லை. இந்த இரண்­டாம்­தர நில­மையை வைத்­துக்­கொண்டே பல­ரும் பெண்­க­ளின் உழைப்பை யும், நலன்­க­ளை­யும் சுரண்டி வரும் நிலை யைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

பல்­வேறு உதா­ர­ணங்­களை உங்­கள் முன் வைக்­கா­மலே, சமூ­கத்­தில் உயர் நிலை­யி­லும் இல்­லா­மல், தாழ் நிலை­யி­லும் இல்­லா­மல் இடைப்­பட்ட நிலை­யில் எமது சமூ­கத்­தில் நட­மா­டும் தொழில் பார்க்­கும் பெண்­க­ளைப் பாருங்­கள். அதி­கம் படிக்­கா­மல் குறை­வா­க­வும் படிக்­கா­மல், 8,9,10, மற்றும் 11ஆம் வகுப் புக்­க­ளில், மிஞ்சி மிஞ்­சிப் போ­னால், க.பொ.த. உயர்­த­ரம்வரை படித்து அவற்­றில் முழு­ மை­யா­கச் சித்­தி­ய­டை­யா­ மல் பல்­வேறு விநோதப் பொருள் கள் விற்பனை நிலை யங்களி லும் (Fancy goods), மருந்­துக் கடை­க­ளி­லும், புட­வைக் கடை­க­ளி­லும் இது போன்­றி­ருக்­கும் இன்­னும் பல கடை­க­ளி­லும் பணி­பு­ரி­யும் பெண்­க­ளைப் பாருங்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சிறு பெட்­டிக் கடை­கள் முதல் பார்ப்­ப­தற்­குப் பிர­மாண்ட மாகத் தோற்­ற­ம­ளிக்­கும் புட­வைக்­க­டை­கள் வரை எத்­த­கைய நிலை­யில் பெண் பிள்­ளை­கள் வேலை செய்­கி­றார்­கள்? என்பதை எம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. வேலை செய்­தால் தான், தானும் சாப்­பிட்டு நோயா­ளி­யான தாயை­யும், இய­லாத தந்தையையும், ஊர்­சுற்­றும் அண்­ணன், தம்­பி­மா­ரை­யும் தாங்­கிக் கொள்­ள­வேண்டிய நிலையில் எத்­தனை பெண்­கள் வேலை செய்­கி­றார்­கள் என்­பது புரி­யும்.

அத்­தனை பெண்­க­ளுக்கும் தாம் பார்க்கும் வேலை­கள் திருப்­தியா­க, சரி­யா­ன பொரு­ளா­தார நலன்­கள் தருபவையாக அமை கின்ற னவா என்­ப­தைப் பற்­றிச் சிறிது ஆராய விரும்­பி­னோம். இந்த விடயம் குறித்து நாம் சந்தித்துப் பேசிய ஒரு சிலர் கூறிய கருத்­துக்­க­ளைக் கீழே தொகுத்­துத் தரு­கின்­றோம்.

யாழ்ப்­பாண நக­ருக்­குள் இருக்­கும் ஒரு பிர­பல புத்­தகசாலை அது. அதன் முன் வாயி­லில் நின்று தன்னை மொய்த்­துப் பிடித்­து­விட்ட வாடிக்­கை­யா­னர்­க­ளைச் சமா­ளித்து வியா­பா­ரம் செய்து கொண்­டி­ருந்த பெண்­பிள்ளை அவர். அந்த இடர்­பாட்­டுக்­குள் கிடைத்த சிறி­ய­தொரு இடை­வெ­ளிக்­குள் எங்­க­ளு­டன் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். பெயர் வித்­தியா. வயது 22. இடம் சங்­கானை. அவர் குறித்த தனிப்பட்ட விவ­ரங்­களை எடுத்தாயிற்று. தனது மனஆதங்­கத்தை, தான் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னையை அவர் இப்­ப­டிச் சொன்­னார், ‘‘எனக்கு 6.30க் குப் பிற­கு­தான் வேலை முடி­யி­றது. வீட்டை போற­துக்­குக் கடைசி பஸ்­ஸைத்­தான் என்­னாலை பிடிக்க முடி­யும். இரவு பஸ். அதிலை குடிச்­சுப்­போட்டு வாற ஆள்­க­ளுக்கு முகம் குடுக்­கே­லாமல் இருக்­குது. தைரி­யத்தை வர வைத்­துக் கொண்டு அவர்­க­ளைத் தள்ளி நிக்­கச் சொன்­னால், கெட்ட வார்த்­தை­க­ளாலை ஏசுகினம்’’ என்றார் வித்தியா.

உழைத்­துக் களைத்து வீடு திரும்­பும் வேளை யில் பெரும்பாலான நாள்களில் வித்­தியா இப்­படி ஏரா­ளம் கஷ்டங்­களை எதிர்­கொண்­டா­லும், இது ஒன்­றைத்­தான் எங்­க­ளுக்­குத் துணிந்து கூறு கிறார் என்பது தெரிந்­தது. அவ­ரது அன் றாட அவஸ்­தை­யாக அது மேலெ­ழுந்து நிற்­ப­தும் எங்­க­ளுக்­குப் புரிந்­தது.

புதிய சந்­தைக் கட்­ட­டத் தொகு­திக்­குள் புகுந்­தோம். அழகு சாத­னக் கடை ஒன்­றில் நின்ற அந்­தப் பெண் ஏதோ ஒரு அவஸ்­தைக்­குள் அகப்­பட்­டி­ருப்­பது புரிந்­தது. அவ­ரது முகம் அதை இனங்­காட்டியது. பெயர் விதுரா என்­றார். அவ­ரு­க் கு வயது 24. அல்­லைப்பிட்­டி­யைச் சேர்ந்­த­வர். ‘‘பாத்­ரூம் பிரச்­சினை­தான் இஞ்சை பெரும் பிரச்­சினை. இதுக்­குள்ள வேலை செய்­யிற எல்­லாப் பிள்­ளை­ய­ளுக்­கும் அது­தான் பெரிய பிரச்­சினை’’ என்­றார். நாங்­கள் உத­ய­னில் இருந்து வரு­கி­றோம் என்று எங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­டோம். ‘‘இந்­தப் பிரச்­சி­னையை உங்­க­ளுக்­குச் சொல்­லு­ற­தாலை தீர்வு கிடைக்­கும் என்ட நம்­பிக்­கை­யில சொல்­லு­றன்’’ என்று அவர் தொடர்ந்­தார்.
‘‘கீழை இருக்­கிற பாத்­ரூம் ஒண்­டுக்­கும் உத­வாத ஒண்­டாய்ப் போச்­சுது. அதைப் பற்றி உரிய ஆக்­கள் எவரும் அக்­க­றை எடுப்பதில்லை. இவ்­வ­ளவு நாளும் மேலை இருக்­கிற பாத்­ரூ­மைப் பாவிச்­ச­னாங்­கள். இப்ப மேலை திருத்த வேலை நடக்­கி­ற­தால, அங்க போக ஏலாது. எந்த ஒரு மாற்று வச­தி­யும் இல்லை. ஒவ்­வொரு நாளும் பெரிய கஷ்டம் இது’’
விதுரா மாத்­தி­ர­மன்றி அந்­தச் சந்­தைக் கட்­ட­டத் தொகு­திக்­குள் இருக்­கும் கடை­க­ளில் பணி புரி­யும் இவர்­போன்ற மேலும் சில பெண்­க­ளும் இந்­தக் கழிப்­ப­றைப் பிரச்­சினை­யைத் தான் முதன்­மைப்ப ­டுத்­திக் கூறி­னர் என்­ப­தை­யும் இங்கு குறிப்பிட்டுத் தானாக வேண் டும்.

மணிக்­கூட்­டுக் கடை­யில் மற்றொரு பெண்­பிள்­ளை­யைச் சந்­தித்­தோம். மயூரா அவ­ரு­டைய பெயர். 23 வயது. காரை­ நக­ரைச் சேர்ந்­த­வர். பெண்­க­ளுக்­குப் பெண்­க­ளாலதான் பிரச்­சினை. தாங்­கள் நல்ல பெயர் எடுக்­கி­ற­துக்­கா­கச் சக வேலை­யாள்­க­ளைப் பற்றி முத­லா­ளி­மா­ரி­டம் தவ­றாய்ச் சொல்­லு­றது. அடுத்­த­வ­ருயை தனிப்­பட்ட விஷ­யத்­தில தலை­யி­டு­றது என்று வேலைத்­த­ளத்­தில் பெண்­க­ளுக்கு இப்­ப­டி­யு­மொரு பிரச்­சினை இருப்­பதை அவர் வெளிப்படுத்தி வைத்தார்.

அடுத்­த­டுத்து இருந்த பான்சி கடை களுள் ஒன்றுக்குள் நுழைந்­தோம். மாதங்கி என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திய அவர், மிக­வும் சிறிய பெண்­ணா­கத் தென்பட்­டார். வயது18 என்ற றிந்து திருப்­தி­ய­டைந்து கொண்­டோம். ‘‘ஆக்­க­ளுக்கு முன்­னால வைச்­சுப் பேசு­றது கஷ்ட­மாக் கிடக்­கும். நேரத்­துக்­குச் சாப்­பிட முடி­யிற இல்லை. முந்தி இன்­னொரு பிள்ளை இஞ்சை வேலை செய்­தது. இப்ப நான் தனி­யத்­தான் வேலை செய்­யி­றன். சாப்­பி­டுற நேரம் வாடிக்­கை­யா­ளர் வந்தா, அவை­யளைக் நல்லாய்க் கவ­னிக்­க­வே­ணும். இவை­ய­ளோடை வேலை செய்­யி­றது கஷ்டமாய் இருக்கு. சம்­ப­ள­மும் குறைவு. இதை­விட, நல்லாய்ப் படிச்­சி­ருந்தா நல்­ல­நி­லை­மைக்கு வந்­தி­ருக்­க­லாம் எண்டு இப்­ப­தான் நினைக் கிறன்’’ என்­றார் மாதங்கி.

மருந்தகம் ஒன்­றுக்­குள் நுழைந்­தோம். அங்கு வேலை செய்யும் சாம்­பவி என்ற பெண்பிள்ளையைச் சந்தித்தப் பேச முடிந்தது . முத­லாளி என எண்­ணும்­ப­டி­யா­ன­ ஒருவரும் அங்கே நின்­றார். தனக்கு 28வய­தெனவும், தான் புங்­கு­டு­ தீ­வைச் சேர்ந்­த­வர் என்­றும் சாம்­பவி சொன்­னார். ‘‘வேலை முடிய நேரம் செல்­லு­ற­தும், சில வேளை­யில பஸ்ஸை ‘மிஸ்’ பண்­ணு­ற­தும் அதாலை ‘லேற்றா’ வீட்டை போற­தும், நெடு­க­லும் எனக்­கி­ருக்­கிற பிரச்­சனைதான்’’ என்­றார்.

புட­வைக்கடை­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­தார் ஒரு பெண். அவ­ரது பெயர் அமுதா. வயது34. ‘‘பஸ்­ஸில போகேக்க ஆம்­பி­ளை­யள் சேட்­டை­யள் செய்­யி­னம். வேலைக்கு வந்து போறது கஷ்­ட­மாய் இருக்கு’’ என்­றார். அவ­ர் வேலை செய்த கடைக்கு அரு­கி­லி­ருந்த கடை­யில் வேலை செய்யும் பெண்ணொருவர் தன்­னைச் சாந்தி என்று அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­டார். ‘‘ஓய்வு இல்­லா­மல் வேலை பாக்­கி­ற­தால ஒரே களைப்பாய் இருக்­குது. வாற வாடிக்­கை­யா­ள­ர்களைச் சரி­யாக் கவ­னிக்­கே­லாமை இருக்­கும். பஸ் போய்விடும் எண்ட பயத்­திலை அவ­சர அவ­ச­ர­மாய் பஸ்­சுக்கு ஓடு­ற­து­தான் நெடுக இருக்­கிற பிரச்­சினை’’ இவர்­கள் இரு­வர் மாத்­தி­ர­மன்றி இங்­குள்ள பெரும்­பா­லான பெண்­க­ளின் பேச்­சுக்­கள் பஸ் பய­ணத்­தின்­போது ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் குறித்தும், முத­லாளி மார் இவர்­களை வைத்து அதிக நேரம் வேலை வாங்­கு­வ­து குறித்த அவர்க ளது மன ஆதங்கத்தையுமே உணர்த் தின.

ஆனால், பாமி­னி­யின் பிரச்­சினை இவர்­க­ளில் இருந்து சற்று வேறு­பட்­டுத்­தான் இருந்­தது. ‘‘ நான் வேலை செய்யும் கடை ஒரு சிறிய கடை எண்ட படி­யால நான் ஒரு ஆள்தான் வேலைக்கு நிக்­கி­றன். வியா­பா­ரம் இல்­லாத நேரத்­தில எதை­யா­வது யோசிச்­சுக் கொண்டு தனி­மை­யிலை இருக்­கி­றன்’’ என்­றார். இறு­தி­யா­கச் சந்­தித்த பொன்­மதி மாத்­தி­ரம் இப்­ப­டிச் சொன்­னார். ‘‘நேரத்­துக்கு சாப்­பி­டே­லாது, செய்­யிற வேலைக்கு ஏற்ற சம்­ப­ளம் கிடைக்­கி­றேல்லை, சம்­ப­ளம் சரி­யான குறைவு.
வீட்­டி­லை­யும் நிறை­யப் பிரச்­சினை கள். எல்­லாத்­தை­யும் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்கு. சம்­ப­ளத்­தைக் கூட்­டித் தரச் சொன்­னால், வேலையை விட்டு நிப்­பாட்­டிப் போடு­வி­னம் எண்ட பயத்­திலை பேசா­ம­லி­ருக்­கி­றன்’’ என்­றார் பொன்மதி. இவ்விதம் வியாபார நிலையங்களில் உதவியாளர்களாக, விற்பனையாளர்களாகத் தொழில் பார்க்கும் அனைத்­துப் பெண்­க­ளுக்­கும் இத்தகையோர் போன்ற பிரச்­சி­னை­கள் ஏரா­ளம் இருப்­பது உண்­மை­தான். ஆனால் அவர்­க­ளில் சிலரே துணிந்து தாம் எதிர்சொகொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து உரையாடுகிறார்கள். மற்றையோர் தமது நிலைமை குறித்து உண் மையை வெளிப்படுத்த வெட்கம் காரணமாகத் தயங்குகின்றனர் என்பதை எம்மால் தெளிவாக உணரமுடிகிறது.

https://newuthayan.com/story/59325.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this