Jump to content

களமிறங்குகிறாராம் கோத்தா! 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
களமிறங்குகிறாராம் கோத்தா! 
[Saturday 2017-12-30 19:00]
2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த அணி நாடாளுமன்ற ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 2019 அல்லது 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கோத்தபாய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாகும்போது, நிறைவேற்று அதிகாரம் மிக்க பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டுவருவோம். இதனூடாக மஹிந்த - கோத்தா யுகத்தை நாட்டில் உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=196588&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்." :(

"கோத்தா அரசு செய்தால் பிணம் புணரும் காவற்படை." :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தேர்தலில் போட்டியிடுவதாயின், அமரிக்க குடியுரிமையை விடவேண்டும்.

ஒரே மகன் அங்கே உள்ள நிலையில் அதனை செய்ய மாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி, அமெரிக்காவின் கஸ்பி+ வரிச்சலுகை நீக்கம், அண்மையில் அமெரிக்காவின் சிங்களத்தை தங்கள் வலிக்கு கொண்டு வருவதற்கான, மிலெனியாம் கார்பொரேஷன் நன்கொடை, சொறி சிங்கள லங்காவிடற்கு (எலும்புத்துண்டான) தலைப்பு பதவி, உலக வங்கி திட்டமான விஷன் 2025 போன்றவை எதிர்பார்த்த  பலனிற்கு   மாற்றான பலனையே, அதாவது சீனாவின் பிடியும், இருப்பும் மீட்கமுடியாத அளவிற்கு,   நிரந்தரமாகிவிட்டது. அதாவது சொறி சொறி சிங்கள லங்காவின் வெளியாக இறைமை (அப்படி ஒன்று இருந்திருக்குமாயின்)  சீனாவிடம், கிந்தியாவையும் மீறி,  நிழலாக மாறி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் நிற்பவர் நாமல் ராஜபக்சே.

எனினும் மைத்திரி போட்டியில் இருப்பார். 

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

அடுத்த தேர்தலில் நிற்பவர் நாமல் ராஜபக்சே.

எனினும் மைத்திரி போட்டியில் இருப்பார். 

நாமல் கண்டிப்பாக தேர்தலில் நிற்பார்; ஆனால் கண்டிப்பாக சனாதிபதித் தேர்தலில் அல்ல. மகிந்த நாமலை இப்பவே சனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் அளவுக்கு அரசியல் தெரியாதவர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நாமல் கண்டிப்பாக தேர்தலில் நிற்பார்; ஆனால் கண்டிப்பாக சனாதிபதித் தேர்தலில் அல்ல. மகிந்த நாமலை இப்பவே சனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் அளவுக்கு அரசியல் தெரியாதவர் அல்ல.

இலங்கையின் அரசியல் தந்திரங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக இருந்த பிரேமதாச, எம் பி ஆக அடுத்த நிலைக்கு போக பாவித்த தந்திரம்.....

மிகவும் புகழ் பூத்த தலைவரான என் எம் பெரேரா வை எதிர்த்து எட்டியான்தோட்டை தொகுதியில், நிற்பது அரசியல் தற்கொலைக்கு சமனானது. ஐ தே க யில் யாரும் முன் வரவில்லை.

பிரேமதாச முன்வந்தார். காரணம்..... அடுத்து வந்த தேர்தலில்... கொழும்பு மத்திய தொகுதியில் எம் பி ஆக நிற்கும் வகையில் தரத்தினை அது உயர்த்தியது. இதனை செய்திராவிடில், ஆகக் கூடியது கொழும்பு நகர மேஜர்.

வென்றார். பின்னர் பிரதமரானார்.... ஜனாதிபதி ஆனார்..

நாமலும் அதே தந்திரம் தான்..... இம்முறை வெல்வதல்ல. ஜனாதிபதி தேர்தலில் போட்டி இட்டு தரத்தினை உயர்திக் கொள்வது. 

பின்னர் வெல்வதற்கு போட்டி இடுவது. வயது இருக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2017 at 9:45 AM, nochchi said:
களமிறங்குகிறாராம் கோத்தா! 
[Saturday 2017-12-30 19:00]

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 

ஒரு தலைமை இல்லையென்றால் இன்னொரு தலைமையை கட்டியெழுப்ப அவர்களால் மட்டுமே முடியும்

ஒருவன் தலைவராய் இருந்துவிட்டால் அவனை அவனை தள்ளிவிழுத்தி நாம் எப்படி பெயர் வாங்கலாம் என்பது எங்களால் மட்டுமே முடியும்...

’மேலே உள்ளது அவர்களின் பலம் , கீழே இருப்பது எங்களின் பலவீனம்’...

கோத்தபாயாவின் உடலையும் முகத்தையும் பாருங்கள், ஒல்லி குச்சிபோல் இருந்த அவனுக்கு

 வயசும், உருவமும் ஒட்டு மொத்தமாய் மாறிவிட்டாலும் , நம்மை வஞ்சிக்கும் குணம் எப்போதும் அப்படியே இருக்கிறது, அதுவே பெரும்பான்மை இனத்தின் செய்தியிலும் அவன் சிரிப்பிலும் உள்ள செய்தி!

எல்லாமே கைவிட்டு போய்விட்டது, எம்மிடம் உள்ள ஒரே ஒரு ஒரு ஆறுதல், அப்பப்போ சிங்களவனை வெறுப்பேத்தும் விக்னேஸ்வரன் ஐயா மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, valavan said:

கொப்பிழக்கக் கூடாது....

மிகவும் வித்தியாசமாக சிந்தித்தீர்களானால்...... எமது பிரச்னை தீர்வதாயின்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

ஞாயிறு சண்டே லீடர் பத்திரிகையில்.... இலங்கை தொடர்பான இந்திய ஆய்வாளர் எழுதுகிறார்.... இலங்கையின் சாபக்கேடு... அங்கே இலங்கையை ஒரே நாடாக வைத்திருக்கக் கூடிய  ஒரு நெல்சன் மண்டேலா போன்ற ஒரு சிறந்த தலைமை இல்லை...

அப்படி ஒரு தலைமை வந்தால்..... ஈழத்தினை மறந்து ஒற்றுமையாக இருக்கலாம். இல்லாவிடில் எதிர்மறை தான்.. அந்த வகையில்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

முன்னர் சோழரும் பின்னர் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷ்காரரும் தொடர்ந்து ஆழமுடியாத நிலையில்.... எத்தனை காலத்துக்கு தான் சிங்களம் ஆள முடியும்? 

ஒரு தொடக்கம் இருந்தால், முடிவும் இருக்கும்....

நாம் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் தான்... சூரியன் மறையா சாம்ராஜ்ஜியத்தின் அசூர பிடியில் இருந்து தீவு விடுபட்டது... 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இலங்கையின் அரசியல் தந்திரங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக இருந்த பிரேமதாச, எம் பி ஆக அடுத்த நிலைக்கு போக பாவித்த தந்திரம்.....

மிகவும் புகழ் பூத்த தலைவரான என் எம் பெரேரா வை எதிர்த்து எட்டியான்தோட்டை தொகுதியில், நிற்பது அரசியல் தற்கொலைக்கு சமனானது. ஐ தே க யில் யாரும் முன் வரவில்லை.

பிரேமதாச முன்வந்தார். காரணம்..... அடுத்து வந்த தேர்தலில்... கொழும்பு மத்திய தொகுதியில் எம் பி ஆக நிற்கும் வகையில் தரத்தினை அது உயர்த்தியது. இதனை செய்திராவிடில், ஆகக் கூடியது கொழும்பு நகர மேஜர்.

வென்றார். பின்னர் பிரதமரானார்.... ஜனாதிபதி ஆனார்..

நாமலும் அதே தந்திரம் தான்..... இம்முறை வெல்வதல்ல. ஜனாதிபதி தேர்தலில் போட்டி இட்டு தரத்தினை உயர்திக் கொள்வது. 

பின்னர் வெல்வதற்கு போட்டி இடுவது. வயது இருக்கிறது....

நாதம், இலங்கை அரசியல் தந்திரங்களையும் வரலாற்றையும் மகிந்தவின் அரசியலையும் புரிந்தமையால் தான் நான் நாமல் அடுத்த சனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட மாட்டார் என எழுதினேன்.

பிரேமதாசா சிங்களத்தின் செல்வாக்கு மிக்க கொவிகம சாதியில் பிறக்காமல் கடைநிலை சமூகம் ஒன்றில் பிறந்து படிப்படியாக முன்னேறி இலட்சக்கணக்கான சிங்களவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களின் மூலம் வீடுகள் வழங்கி பிரதமராகி இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி ஈற்றில் சனாதிபதியானவர். செல்வாக்கு மிக்க குடும்ப சூழல் என்று எந்த அடையாளமும் இன்றி முன்னேறிய அவரது அரசியலும் நாமலின் அரசியலும் முற்றாக வேறு விதமானவை.

சனாதிபதி தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் தான் இருக்கு. இந்த திரியை bookmark பண்ணி வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கொப்பிழக்கக் கூடாது....

மிகவும் வித்தியாசமாக சிந்தித்தீர்களானால்...... எமது பிரச்னை தீர்வதாயின்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

ஞாயிறு சண்டே லீடர் பத்திரிகையில்.... இலங்கை தொடர்பான இந்திய ஆய்வாளர் எழுதுகிறார்.... இலங்கையின் சாபக்கேடு... அங்கே இலங்கையை ஒரே நாடாக வைத்திருக்கக் கூடிய  ஒரு நெல்சன் மண்டேலா போன்ற ஒரு சிறந்த தலைமை இல்லை...

அப்படி ஒரு தலைமை வந்தால்..... ஈழத்தினை மறந்து ஒற்றுமையாக இருக்கலாம். இல்லாவிடில் எதிர்மறை தான்.. அந்த வகையில்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

முன்னர் சோழரும் பின்னர் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷ்காரரும் தொடர்ந்து ஆழமுடியாத நிலையில்.... எத்தனை காலத்துக்கு தான் சிங்களம் ஆள முடியும்? 

ஒரு தொடக்கம் இருந்தால், முடிவும் இருக்கும்....

நாம் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் தான்... சூரியன் மறையா சாம்ராஜ்ஜியத்தின் அசூர பிடியில் இருந்து தீவு விடுபட்டது... 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை, இலகு தமிழில் இரு வரியில் சொன்னால் புரிந்து கொள்வேன்! நெல்சன்மண்டேலாவே ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் இன்னொரு நிற இனத்துக்காய் போராடியதால் முழுதாய் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்த  மனிதர், அவர் எப்படி தென்னாபிரிக்காவை ஒற்றுமையாய் வைத்திருந்தார்? இந்திய ஊடகம் சொல்லியது அதனை, நான் அல்ல என்று நீங்கள் சொல்ல விழைந்தால் அதை எப்படி ஒரு ஆதாரமாக இங்கு சொல்கிறீர்கள் என்பதையும் சொன்னால் மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நாதம், இலங்கை அரசியல் தந்திரங்களையும் வரலாற்றையும் மகிந்தவின் அரசியலையும் புரிந்தமையால் தான் நான் நாமல் அடுத்த சனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட மாட்டார் என எழுதினேன்.

பிரேமதாசா சிங்களத்தின் செல்வாக்கு மிக்க கொவிகம சாதியில் பிறக்காமல் கடைநிலை சமூகம் ஒன்றில் பிறந்து படிப்படியாக முன்னேறி இலட்சக்கணக்கான சிங்களவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களின் மூலம் வீடுகள் வழங்கி பிரதமராகி இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி ஈற்றில் சனாதிபதியானவர். செல்வாக்கு மிக்க குடும்ப சூழல் என்று எந்த அடையாளமும் இன்றி முன்னேறிய அவரது அரசியலும் நாமலின் அரசியலும் முற்றாக வேறு விதமானவை.

சனாதிபதி தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் தான் இருக்கு. இந்த திரியை bookmark பண்ணி வையுங்கள்.

மகிந்த... ஓய்வு பெறாமல் அரசியலில் இருப்பதற்கு... காரணமே... நாமலுக்கு... ராஜபாடடை அமைத்துக் கொடுக்கவே...

இலங்கை அரசியலமைப்பையே மாத்தவேண்டாம் வேண்டாம் என்று சொல்வதன் காரணமும்.... அதுவே...

கோத்த... அது இது என்று பீலா விடுவதன் நோக்கம்... இன்றய அரசு அவர்களை இலக்கு வைக்கும்... உதாரணம் கீதா குமாரசிங்க... இரட்டை குடியுரிமையினால் எம் பி பதவி பறிப்பு.

பார்க்கலாம்..... 

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

அப்படி ஒரு தலைமை வந்தால்..... ஈழத்தினை மறந்து ஒற்றுமையாக இருக்கலாம். இல்லாவிடில் எதிர்மறை தான்.. அந்த வகையில்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

இப்படியான ஒரு சிந்தனையால் தான் புலிகள் மகிந்தவை வெல்ல வைப்பதற்காக தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க விடாது தடுத்தனர்; விளைவு என்னவென எல்லாருக்கும் தெரியும்.

மகிந்தவோ அல்லது கோத்தாவோ வந்தால் சிங்களவருக்கு ஏற்படும் சேதத்தினை விட தமிழர்களுக்கு தான்  மிக அதிகமாக இருக்கும். கடும் இனவாதிகள் வென்று விட்டனர் என்பதற்காக தமிழ் மக்களை வாரி எடுத்து உரிமை கொடுக்க சர்வதேசம் முன்வராது. அதற்கு பதிலாக, தம் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வண்ணம் சிங்கள இனவாதத்தையும் தலைமையயும் கையாள முயலும், முடியாவிடின் அந்த தலைமையை அகற்ற முயலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை, இலகு தமிழில் இரு வரியில் சொன்னால் புரிந்து கொள்வேன்! நெல்சன்மண்டேலாவே ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் இன்னொரு நிற இனத்துக்காய் போராடியதால் முழுதாய் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்த  மனிதர், அவர் எப்படி தென்னாபிரிக்காவை ஒற்றுமையாய் வைத்திருந்தார்? இந்திய ஊடகம் சொல்லியது அதனை, நான் அல்ல என்று நீங்கள் சொல்ல விழைந்தால் அதை எப்படி ஒரு ஆதாரமாக இங்கு சொல்கிறீர்கள் என்பதையும் சொன்னால் மகிழ்ச்சி!

நெல்சன் மண்டேலாவுக்கும்... ராபர்ட் முகாபேயுக்கும் உள்ள வித்தியாசத்தினை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் வளவன்....

1 minute ago, நிழலி said:

இப்படியான ஒரு சிந்தனையால் தான் புலிகள் மகிந்தவை வெல்ல வைப்பதற்காக தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க விடாது தடுத்தனர்; விளைவு என்னவென எல்லாருக்கும் தெரியும்.

மகிந்தவோ அல்லது கோத்தாவோ வந்தால் சிங்களவருக்கு ஏற்படும் சேதத்தினை விட தமிழர்களுக்கு தான்  மிக அதிகமாக இருக்கும். கடும் இனவாதிகள் வென்று விட்டனர் என்பதற்காக தமிழ் மக்களை வாரி எடுத்து உரிமை கொடுக்க சர்வதேசம் முன்வராது. அதற்கு பதிலாக, தம் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வண்ணம் சிங்கள இனவாதத்தையும் தலைமையயும் கையாள முயலும், முடியாவிடின் அந்த தலைமையை அகற்ற முயலும்.

இல்லை, நிழலி...

இவர்கள் முழு சீன சார்பானவர்கள்....

இவர்கள் வருவது இந்திய... அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பானது... அவர்களை மீறி வர முடியாது. வந்தால்.... அதனூடு சில நன்மைகள் நமக்கு.....

Link to comment
Share on other sites

On 12/31/2017 at 8:15 PM, nochchi said:

020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

உலகின் மிகமோசமான போர்க்குற்றவாளி, கடத்தல்க்காரன், கொலைகாரன், கொள்ளைக்காரன் ஆகவுள்ள பயங்கரவாதி கோத்தபாய ராஜபக்சவை சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது அவர்களின் அழிவில் முடிவடையும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.