Jump to content

தமயந்தியைத் தேடுகிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமயந்தியைத் தேடுகிறேன்.

அவளைச் சந்தித்ததும், அச்சந்திப்பு பின்பு தொடர்கதையாகியதும் அதுவே எனது இளமைக்காலத்தில் பல இராசாயண மாற்றங்களை என்னுள் கொண்டுவந்ததும் தற்செயலானதே ஆனால் அதன்பின்பான நினைவுகள் மட்டும் நிரந்தரமானவை .

யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டுமைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நடக்கும்போது வேம்படிமகளிர் கல்லூரி உட்பட யாழ்நகரப்பகுதி தவிர குடாநாட்டின் முண்ணணிப்பாடசாலைகள் கலந்துகொள்ளும் போட்டியாதலால் எம்போன்ற இளவட்டப் பாடசாலை மாணவர்கள் அங்கு ஆயராவதில் தவறேதும் இருப்பதாக அப்போது மட்டுமல்ல இப்போதும் எனக்குத்தோன்றவில்லை. ஓரிரு நாள் நடைபெறும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டியில் அவ்வேளைய ரோமியோக்கள் நாங்கள் அழையா விருந்தாளிகளாக மத்தியகல்லூரி மைதானத்தின் சுற்றுச்சுவர்களை அலங்கரிக்காவிட்டால் அந்த யூலியட்டுகளது மனம் எப்படிப்பேதலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் அதிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் அப்போது ஓட்டத்தில் ஜெற் எனும் அடைமொழி பெற்றிருந்த விஜயலட்சுமியின் ஓட்டத்துக்கு அந்தச்சுற்றாடலே அடிமைப்பட்டுக்கிடந்தது ஊரறிந்த விடையம். அந்தநாள்களில் யாராவது ஒரு பெண் திரும்பி இன்னுமொரு முறை எங்களைப்பார்த்தாலே பூர்வஜென்மப்பயனடைந்ததாய் புளகாங்கிதமடைவதை ஒரு வழக்கமாக நாங்கள் கொண்டிருந்த நேரம்.

அண்டைக்கும் அப்பிடித்தான் தற்செயலாக பொதுநூல்நிலையப் பக்கமுள்ள மதிலின்மேல் மந்திப்பரிவாரமாக தொத்திக்கொண்டிருந்தபோதுதான் அவளை நான் முதல்முதலில் பார்த்தேன் சும்மா பார்த்தேன் என்று கூறக்கூடாது ஒரு குரங்குவேலைபார்த்தேன். நாங்கள் தொத்திக்கொண்டு நின்ற மதில்கரையின் உட்பக்கத்தில்தான் யாழ் முனிசிபாலிட்டி தண்ணீர்குடிக்க ஒரு வவுசரை நிறப்பி வைத்திருந்தது.என்னோட வந்தவனது சொல்புத்தியில ஒரு பெரிய கல்லை பவுசருக்குக்கீழ தங்கிநின்ற தண்ணியில தொப்பென எறிய அவளது அழகான வேம்படி மகளிர்கல்லூரி ரையைத்தாங்கிநின்ற யூனிபோம் முழுதும் சேறு, கலங்கிய கண்களும் ஆத்திரம் நிறைந்த முகமுமாக ஒரு பார்வைபார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டுபோய்விட்டாள். எட பொறுக்கிநாயே என ஒன்றிரண்டு நல்லவார்த்தை சொல்லியிருந்தால் அத்தோடு எல்லாமே முடிந்திருக்கும் அதுக்குத்தானே இந்தப்பாலகுமார்கள் ஆசைப்பட்டு மருகிக்கிடக்கிறம். அத்துடன் பிறவிப்பயனடைந்ததாக எல்லாவற்றையும் மறந்து இன்னுமொரு இன்ரர்ஸ்கூல் மீற்றுக்காகக் காத்துக்கிடப்போம். ஆனால் அது நடக்கவில்லையே.

அன்று பிற்பகல் வீடு போனதும் மீண்டும் மீண்டும் அந்தச்சம்பவமும் அந்த முகமும் மனதுக்குள் வந்துகொண்டு என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. தூக்கம்க்கூட சரியாக வரவில்லை எண்டால் பார்த்துக்கொள்ளுங்கோவன். பேசாமல் போய் மேசையில் இருந்து எதையோ எடுத்து வாசிச்சுக்கொண்டிருந்தன் பாடப்புத்தகம் என்றால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல்நாள்தான் யாழ் நூல்நிலையத்தில் இரவல் வாங்கி வைத்திரிந்தேன். அப்போதும் கல்கியின் கதாநாயகி பூங்குழலி ஆத்திரம் நிறைந்த முகத்துடனும் கண்களில் கண்ணீர்த்திவலைகளுடனும் அவளது முகச்சாயலின் எனைப்பார்ப்பதுபோல் இருந்தது. அம்மா எதற்காகவோ கண்முழித்தவ பையன் அக்கறையாகப்படிக்கிறான் என நினைத்து பேசாமல் போய்ப்படுத்திட்டா. ஆனால் அனறைய சம்பவம்மட்டும் என் மனதில் உறங்காமல் என்னையும் உறங்கவிடாமல் கொன்றதென்பதே உண்மை. அந்தக்கண்ணீருக்குச் சொந்தமான விழிகளும் முகமும் எனக்கு அப்படியே அச்சுப்பதித்ததுபோல் பதிந்தது மட்டும் நின்றிருந்தால் இக்கதை எழுதவேண்டிய சந்தர்ப்பம் வந்திராது.

அப்போதுதான் என் மரமண்டைக்கு உறைத்தது அவளது முகம் களையானது மட்டுமல்ல அழகானதும் என

மூன்றரை மணிக்கு பாடசாலை மணிஅடிக்க வேம்படிப்பக்கம் சைக்களை விரட்டும் எனது அன்றாட கடமை, இச்சம்பவத்தில் பின்பு அடியோடு நின்றுவிட்டது, எனது நட்புவட்டத்துக்கு இதுசிறிது வியப்பு, தெருவில் அவளை மீண்டும் காணக்கூடாது என அனேகமாக, நேரடியாக வீட்டுக்குப்போகப் பழகிக்கொண்டேன் அம்மா மற்றும் சகோதரங்களுக்கு இது ஆச்சரியம்தான் ஆனால் அக்கா நேரடியாகவே கேட்டுவிட்டாள் எங்கேயோ அலுவலைப்பாத்துப்போட்டாய்போலக்கிடக்கு அதுதான் பம்முறாய் என. 
ஆனால் இது கனகாலம்நீடிக்கவில்லை விசையம் வீடுவரைக்கும் தேடிவரும் என நல்லூரான் சத்தியமா நினைக்கவில்லை அதுவும் யாழ்ப்பாணம் ரயில்வே ஸ்ரேசன் ரோட்டில் இருக்கும் தவமணிமாமிமூலம். தவமணி மாமி அடிக்கடி வீட்டுக்கு வருபவர்தான் ஆனால் அன்று அதே வேம்படி யூனிபோமையும் கையோட கூட்டிவருவா என நான் எதிர்பார்க்கவில்லை. பம்மிக்கொண்டு இருந்த நான் குலைப்பனுடன் சைக்கிளை எப்படி எடுத்து வீட்டைவிட்டு வெளியில போனேன் எண்டு இதுவரைக்கும் தெரியாது. ஆனால் அத்தருணத்திலும் அவளை ஒருமுறை பார்க்கத்தவறவில்லை.

பின்புவந்த நாள்களில் எதேச்சையாகவோ வீட்டுக்கு வரும்போதோ அடிக்கடி அவளைப்பார்க்கும் சந்தர்பம் அதிகரித்தேவிட்டது, என்ன அந்தப்பக்கம் காணக்கிடைக்கவில்லை இப்போ கின்டுலேடீஸ்பக்கம் ஒதுங்கீற்றியளோ அங்க யாருக்குக் கல் எறியுறதா உத்தேசம் எனக்கூறும் அளவுக்கு அவள் துணிஞ்சாலும் நான் பம்முவது நிக்கவில்லை. முதல் முதலில் கலங்கிய கண்களுடன் அவளைப்பார்த்ததோ என்னவோ அதுமட்டுமே எனக்கு அழகாக இருப்பதாகத் தெரிந்தது அதுக்காக இன்னுமொருக்கா அழவைக்க எனக்கு விருப்பமும் இல்லை ஆம் மெல்ல மெல்ல நாம் இருவரும் அதைமறந்து நெருங்கிவிட்டிருந்தம்.

ஆம் தவணிமாமியின் மகள் எனக்கு மச்சாள் மட்டுமல்ல எனது மனதுக்கு இதமானவளாகவும் இப்போ மாறியிருந்தாள்.

காதல், முடிவுறாத கவிதைபோல் ஏக்கங்களுடன் இடையில் விடுபடுவதே,
நினைவுகளை மட்டும் அசைபோடுவதன் சுகத்தையும்,
அதேவேளை துக்கத்தையும், 
இன்னமும் அவளுக்காகவோ காத்திருக்கிறோம் எனும் உணர்வினைத்தரும், 
இனிவரும் யாருடனும் நாம் நேசித்தவளை ஒப்பிடாது.

என் உயிரின் எங்கேயோ ஒரு மூலையில் ஒழிந்திருந்து, முதன் முதலில் நான் பார்த்த கலங்கிய கண்களுடனும் கோபத்துடனும் என்னை எப்போதும் பார்க்கும், தவமணி மாமி மகள் தமயந்தியை இப்போது நியத்தில் தேடுகிறேன் கண்டால் ஒருக்கால் அவளுக்குச் சொல்லுங்கள் கண்ணீரைத் துடைக்கச்சொல்லியும் கொசுறுச்செய்தியாக நான் தேடுவதாகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதை , எழுஞாயிறு!

நீங்கள் கதை கதையாம் பகுதியில் இணைத்த படியால்.....கதை என்று நம்பிட்டோம்!

இப்படி எத்தனை....எத்தனை குரங்கு வேலைகள் செய்திருக்கிறோம்!

ஆனால்....அந்த நேரங்களில் அவை....குரங்கு வேலைகளாகத் தெரிவதில்லை!

ஏதோ....வாழ்வின் அத்தியாவசியமான ஒரு செயல்களில் ஒன்றைப் போலத்தான் தெரியும்!

அடுத்த நாள் மிகவும் முக்கியமான பரீட்சை இருக்கும் போதும்....களவாக மதில் பாய்ந்து படத்துக்குப் போவது தான் அந்தக் காலத்தில் மிகவும் முக்கியமானதாகத் தெரிந்தது!

அது தான்....இளமைக்காலத்தின் வலிமையோ என்னவோ?

அதன் பின்....எவ்வளவு சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்தேறியுள்ளன! இருந்தும்....அந்த இளமைக்கால நினைவுகள் மட்டும்...எப்போதுமே மறக்கப்படுவதில்லை!

அவற்றை ...இரை  மீட்டுவதில் தான்.....எவ்வளவு சுகம்?

அது சரி.........குளிர் காலம் வரும்போது தான்.....பழைய காதலிகளின் நினைவுகள்...இதயத்தின் அடித்தளங்களிலிருந்து பலருக்கு மேலெழுகின்றன போல உள்ளது.

உங்களுக்குக் காரணம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீட்டல் என்பது மனிதனுட்பட்ட விலங்குகள் அனைத்தும் ஓய்வாக இருக்கும்போது செய்யும் விடையம் அது இரைமீட்டலாகவோ நினைவுமீட்டலோ, குளிர்காலம் அமைதிப்பொழுதில் தாயகத்தை ஒப்பிடும்போது கடந்தகாலங்கள் மீழ்கின்றன. அவை ஒருவித சோகத்தையே தருவதென்பது உண்மை. தவிர நான் அந்திமகாலத்தை நெருங்கிவிட்டோம் எங்கள் மனதிளுள் தோன்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும் யாருடனாவது பகிர்ந்துகொள்ளத்துடிக்கிறோம். எப்படியான தருணம் எல்லோருக்கும் வருவதில்லை 

தங்கள் விமர்சனத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவப்பகிர்வு ....... பெரும்பாலும் யாழ்ப்பாண சுற்றாடலில் வாழ்ந்த மாணவ மாணவிகள் அனைவருமே இது போன்ற அனுபவங்களை சந்தித்து மீண்டிருப்பார்கள்....இதய சாகரத்தின் ஆழத்தில் என்றும் உயிர்ப்புடன்  வாழ்ந்திருக்கும் நுண்ணுயிர்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுயசரிதை.
எழுத்துநடை எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் குறும்புத்தனமும் குரங்குச் சேட்டையும்போகேல்லை எழுஞாயிறு.... பக்கத்திலேயே இருந்தாலும் என்றோ முதன்முதல் பார்த்த முகத்தைத் தேடுவது உண்மையிலேயே உங்கள் அதி உச்ச சேட்டை என்று சொல்லலாமோ? அல்லது அதன் பின்னர் இதுவரைக்கும் அந்த விழிகள் அப்படி கோபத்துடன் கலங்கி காணவில்லையோ...ஒரு வேளை கோபத்துடன் கலங்குவதற்குப் பதில் அல்ல சாத்துத்தான் நடக்குதோ????<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலம் வெறும் சைகையாலேயே காதலித்து கல்யாணம் வரை போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்திக்கு நூல் விட்டதை சொல்லி இருக்காரு சூப்பரு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவர்க்கும் நன்றி

 

சில உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகவைத்து அங்கையுமிங்கையும் பொறுக்கி எடுத்து எழுதியதே இக்கதை இதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனை இல்லை. எங்களில் எல்லோருக்கும் என்றோ ஒருநாள் நடந்த விடையங்களே. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண்ணைக் காதலிப்பதிலும்பார்க்க உறவுமுறையில் யாரையாவது விரும்புவதில் பல சங்கடங்கள் உண்டு அவைகள் எல்லாம் இக்கதையில் தவிர்ர்கப்பட்டிருக்கு.

இன்னுமொரு கதையை அல்லது சம்பவத்தை எதிர்பார்க்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.