Jump to content

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார்


Recommended Posts

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார்

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார்

 

 
 
 
வடமாகாண தலைமை சங்கநாயக்கர் மற்றும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதி மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் நேற்று (19) காலமானார்.

அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வான்படை மற்றும் ராணுவத்தினரின் பங்களிப்புடன் அவரது பூதவுடல் வான் வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்பு படையினர் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=98581

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

நாளையதினம் மயானமாக மாறவுள்ள யாழ்ப்பாணம் முற்றவெளி!

 

நாளையதினம் மயானமாக மாறவுள்ள யாழ்ப்பாணம்  முற்றவெளி!

யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலம் முற்றவெளியில் நாளை எரிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இராணுவத்தால் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் இன்று(21) தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. 

யாழ்பாணம் நாகவிகாரை விகாராதிபதி மீகா யதுரே ஞானசார தேரர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா்.

நாளையதினம் மயானமாக மாறவுள்ள யாழ்ப்பாணம்  முற்றவெளி!

யாழ் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள  நாகவிகாரையின் விகாராதிபதியாக கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து வந்த இவர் தனது 70 ஆவது வயதில் நேற்றுமுன்தினம் (19) எய்தினாா். 

அன்னாரின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாகவிகாரைக்கு கொண்டுவந்த நிலையில் அவரின் உடலை தகனம் செய்வதற்றகாக யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான அனுமதியை தொல்பொருள் திணைக்களம் வழங்கியது. 

இந்நிலையில் மக்கள் நடமாட்டமுள்ள ஒரு இடத்தில், அல்லது மயானம் என்று அறிவிக்கப்படாத ஒரு இடத்தில் இறந்த ஒருவரின் உடலத்தை எரிப்பது தொடா்பில் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாளையதினம் மயானமாக மாறவுள்ள யாழ்ப்பாணம்  முற்றவெளி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-muttaveli-news21

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்களவர்களுக்கு மட்டும், எந்த திணைக்களமும் சிங்களவர்களுக்காக வாய் திறக்கும்.

இந்த இடத்தில் எரித்து விட்டு ஞாபகார்த்தமாக கட்டடமும் கட்டிவிட்டால் முற்றவெளி சிங்கள மயம்.

மோட்டுத் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பை காட்டும் ஒரு முயற்சியாக , கோவில்,பாடசாலை, அரங்கம்,பொதுநூலகம்,பொதுமக்கள் கூடும் இடம் என சூழவுள்ள ஒரு இடத்தின் மத்தியில் பிணத்தை எரிப்பது சுற்றாடலுக்கு மாசு விளைவிக்கும் என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருக்கலாம்  தமிழர்களுக்கு உரிமை வாங்கி தந்தே ஆவோம் என்று ஆவேசமாய் கிளம்பிய தமிழ் அரசியல் கட்சிகள்!

இதை தடுக்க முடியாதுபோனாலும் எதிர்காலத்திலாவது இதுபோன்ற சம்பவங்களுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம்!

தமது சின்னம்,கட்சி,பதவிகள் இவறை காப்பாற்ற ஆயிரம்தரம் நீதிமன்றத்தின் படியேறும் அரசியல் கட்சிகள் ,இதுபோன்ற விஷயங்களில் முகத்தை மறுபக்கம் திருப்பியபடி இருப்பது, நாளை நல்லூர்கோவில் முன்னாடியும் ஒரு தேரரின் இறுதிகிரியை நடத்த வழிவகுக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனிடம் ஒரு கேள்வி?

செத்தவரை அவர் பிறந்த ஊரிலையே எரிக்கலாமே?

ஏன் முற்றவெளியை தேர்ந்தெடுக்க விட்டனீங்கள்?

பொதுசனம் போய்வாற இடத்தை சுடுகாடு ஆக்கலாமா?

நீங்கள் சிங்கள அரசியலோடை ஒத்துப்போய் வெல்ல வேணும் எண்டு நினைக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தமிழ்ச்சனத்துக்கெண்டு ஒரு பாரம்பரியம் இருக்கு அதை நீங்கள் கவனத்திலை எடுக்கவேணும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் திமிர்த் தனத்தின் அடையாளம் இது!

இதுவும் ஒரு விதமான ஆக்கிரமிப்பின் வெளிப்பாடே!

Link to comment
Share on other sites

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம் – ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு.

Ganasara-thero-8.jpg?resize=980%2C735

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம். ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ganasara-thero-3.jpg?resize=735%2C980ganasara-thero-4.jpg?resize=735%2C980Ganasara-thero-5.jpg?resize=980%2C735Ganasara-thero-6.jpg?resize=735%2C980Ganasara-thero-7.jpg?resize=980%2C735Ganasara-thero-8-1.jpg?resize=980%2C735Ganasara-thero-9.jpg?resize=980%2C735

http://globaltamilnews.net/2017/56655/

 

 

 

யாழ். கோட்டைப் பகுதியில் விகாராதிபதியின் உடல் தகனம் தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்

 
 
 

யாழ். கோட்டைப் பகுதியில் விகாராதிபதியின் உடல் தகனம் தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்

இன்று யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயானங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை.
குறிப்பாக தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும்.
எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மாயனத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவன செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-கோட்டைப்-பகுதியில்/

Link to comment
Share on other sites

யாழில். விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு. நீதிமன்றை நாடவும் திட்டம்

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
 
Ganasara-thero.jpg?resize=650%2C433
யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.  அதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.  அவரது உடலம் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பணத்திற்கு கொண்டு வரப்பட்டு நாக விகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
அந்நிலையில் முற்றவெளியில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட போது , யாழ்.மாநகர சபை அதற்கான அனுமதியினை வழங்கவில்லை.  அதை அடுத்து , தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள இடத்திற்கும் , யாழ்.கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும்.
 
அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டு அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
தொல்லியலை அழிக்கும் செயற்பாடு. 
 
அதற்கு யாழில்.பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தொல்பொருள் திணைக்களம் எமது தொல்லியல்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு எமது தொல்லியல்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணை போக கூடாது.
 
தொல்லியல் திணைக்கள காணியில் உடலை தகனம் செய்வதற்கு அனுமதி கொடுக்க யார் அழுத்தம் கொடுத்தார்கள்? யாழில் எத்தனயோ சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகள் உள்ளன அவற்றில் தகனம் செய்யவோ , நல்லடக்கம் செய்யவோ நாம் எந்த எதிர்ப்பையும் கட்டமாட்டோம்.
 
ஆனால் இந்த பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு உள்நோக்கம் கொண்ட செயற்பாடு ஆகும். அதனால் அதற்கு நாம் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
mutraveli.png?resize=277%2C147
 
நீதிமன்றை நாடி தடையுத்தரவு பெற முயற்சி. 
 
மதகுருவின் உடலை தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் தகனம் செய்வதனை தடை செய்வதற்கு நீதிமன்றை நாடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
 
எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையிலும் முனியப்பர் கோவிலுக்கு அருகாமையிலும் இறந்த மத குருவின் உடல் தகனம் செய்யப்படுவதை சட்ட ரீதியாக தடைசெய்ய முயற்சி செய்வேன். தற்போது நீதிமன்றங்கள் விடுமுறையில் இருப்பது எனது முயற்சியை பாதிக்குமோ என அஞ்சுகின்றேன்.என தெரிவித்தார்.
 
சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு. 
 
அதேவேளை சமூக வலைத்தளங்களிலும் அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

http://globaltamilnews.net/2017/56646/

Link to comment
Share on other sites

முற்றவெளி பகுதியில் தகனமா? மணிவண்ணன்+11 சட்டத்தரணிகள், தடையுத்தரவு கோரி வழக்கு தாக்கல்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டும் என நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்றில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட 12 சட்டத்தரணிகள் குழு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அது தொடர்பிலான விசாரணைக்கு எதிராளிகளை மாலை 2 மணிக்கு மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

Nagavikarai1.jpg?resize=900%2C675Nagavikarai2.jpg?resize=900%2C986Nagavikarai3.jpg?resize=900%2C675Nagavikarai4.jpg?resize=900%2C675Nagavikarai5.jpg?resize=900%2C675Nagavikarai6.jpg?resize=900%2C675

http://globaltamilnews.net/2017/56734/

Link to comment
Share on other sites

விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி

Published by Priyatharshan on 2017-12-22 15:26:33

 
 

( ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டுள்ளது.

jaffna-nagavigara.jpg

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம்  செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிராளிகள் ஐவரையும் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம்  கட்டளை பிறப்பித்துள்ளது.

 

குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன தேரர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

 

அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலமையகம் ஆரியகுள நாக விகாரையினருடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்தது.

 

இந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கானது இன்று நண்பகல் 12.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதன்போது அவ் வழக்கின் இடை நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரனையின் போது குறித்த வழக்கின் எதிராளிகளான யாழ்.மாநகர சபை ஆணையாளர், யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர், யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, ஆரியகுள நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு  யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் கட்டளை பிறப்பித்திருந்த நிலையில் அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

வழக்குத் தொடுநர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சாந்த அபிமன்யூ தலைமையில் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,

விகாராதிபதியின் உடல் எரிக்கப்படும் இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடமெனவும் அங்கு விகாராதிபதியின் உடலை எரிப்பதற்கு அத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இறுதிக்கிரியைகளை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் மன்றில் முன்னிலையாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பால் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன், விகாராதிபதியின் உடலை அங்கு தகனம்செய்வதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

http://www.virakesari.lk/article/28517

Link to comment
Share on other sites

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் அஞ்சலி நிகழ்வுகள் யாழ். முற்றவெளியில்

 

nahaviharai-8.jpg?resize=960%2C640
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.நாகவிகாரையில் இருந்து விகாராதிபதியின் பூதவுடல் யாழ். முற்றவெளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முற்றவெளி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

nahaviharai-2.jpg?resize=720%2C540nahaviharai-3.jpg?resize=720%2C540nahaviharai-4.jpg?resize=720%2C540nahaviharai-5.jpg?resize=960%2C720nahaviharai-6.jpg?resize=960%2C720nahaviharai-7.jpg?resize=960%2C538nahaviharai.jpg?resize=720%2C540

http://globaltamilnews.net/2017/56813/

Link to comment
Share on other sites

நாங்கள் அடக்குமுறைகளுக்கு பயந்தவர்கள் கிடையாது: சிவாஜிலிங்கம் சீற்றம்!

 

நாங்கள் அடக்குமுறைகளுக்கு பயந்தவர்கள் கிடையாது: சிவாஜிலிங்கம் சீற்றம்!

ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், "விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப் படுவதை நாங்கள் சகித்துக் கொள்கிறோம். ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு முற்றவெளியில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதனை நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டபோது அங்கு வந்திருந்த பொலிஸார் விகாராதிபதியின் தகனக் கிரிகையை தடுத்தால் யாழ்ப்பாணத்தில் அமைதியின்மை உருவாகும் என கூறியிருக்கின்றார்களாம்.

இங்கே வந்து நிற்கும் பௌத்த இனவாதிகளை வைத்து கொண்டு அவர்கள் இந்தக் கருத்தை கூறியிருக்கலாம். ஆனால் நாங்கள் அடக்குமுறைகளுக்கு பயந்தவர்கள் கிடையாது. முற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்யப்படுமிடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் உண்மையான அமைதியின்னை உருவாகுவதை பார்க்க நேரிடும் என்பதை நாங்கள் அரசுக்கு கூற விரும்புகிறோம். அதேபோல் இங்கே வந்திருக்கின்ற பௌத்த இனவாதிகள் இங்கே அமைதியின்மையை உருவாக்கினால் அதனை தமிழர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் எனவும் யாரும் நினைக்கவேண்டாம்" என்றார்.

இதேவேளை மேற்படி விகாராதிபதியின் உடலம், நீதிமன்ற அனுமதியின்படி சிதையூட்டும் நடவடிக்கைக்காக காத்திருக்கும் நிலையில் தற்பொழுது அவர்குறித்த நினைவஞ்சலி உரைகள் நடைபெற்றுவருவதாக எமது களநிலைச் செய்தியாளர் கூறியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-sivajjilingam-dec22

Link to comment
Share on other sites

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளியில் தகனம் ஆகியது..

 

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது.  யாழ்.நாகவிகரையில் இருந்து தாள்.நகர் பகுதி ஊடாக பூதவுடல் கொண்டுவரப்பட்டு முற்றவெளியில் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.  அதன் பின்னர் பூதவுடல் மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

IMG_8724.jpg?resize=1024%2C768IMG_8727.jpg?resize=1024%2C768IMG_8730.jpg?resize=1024%2C768IMG_8731.jpg?resize=1024%2C768IMG_8740.jpg?resize=1024%2C768IMG_8751.jpg?resize=1024%2C768IMG_8756.jpg?resize=1024%2C768IMG_8773.jpg?resize=1024%2C768IMG_8788.jpg?resize=1024%2C768IMG_8799.jpg?resize=1024%2C768IMG_8808.jpg?resize=1024%2C768IMG_8821.jpg?resize=1024%2C768IMG_8831.jpg?resize=1024%2C768IMG_8834.jpg?resize=1024%2C768IMG_8844.jpg?resize=1024%2C768IMG_8854.jpg?resize=1024%2C768IMG_8858.jpg?resize=1024%2C768IMG_8869.jpg?resize=1024%2C768IMG_8875.jpg?resize=1024%2C768IMG_8885.jpg?resize=1024%2C768IMG_8892.jpg?resize=1024%2C768IMG_8908.jpg?resize=1024%2C768IMG_8920.jpg?resize=1024%2C768IMG_8935.jpg?resize=1024%2C768IMG_8948.jpg?resize=1024%2C768

http://globaltamilnews.net/2017/56856/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதோ அடுத்தது..........
 
நல்லாட்சி அரசே  
இதுவா இன மத நல்லிணக்கம்?
மூதூர் சூடைக்குடா குன்றத்தூர் மத்தளமலை திருக்குமரன் ஆலயத்தின் புனரமைப்பு வேலைக்கு தடை ஏன்?
சூடைக்குடா மத்தளமலை திருக்குமரன் ஆலயத்திற்கு சென்ற இருநாள்களுக்கு முன் பௌத்த மதத்தலைவர்கள் இவ்வாலயத்திற்கு சென்று குலப்பத்தை ஏற்படுத்தியதுடன் இன்று வெள்ளிகிழமை காலை(22-12-2017) கிழக்கு மாகாண ஆளுநர் மூதூர் பிரதேச செயளாலர் பொலிஸார் செய்தியாளர்கள் மற்ரும் பல அரச அதிகாரிகள் திருக்குமரன் ஆலயத்திற்கு சென்றனர்
இவ்வேளை ஆலயத்தின் திருத்தவேலைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது 
இவ்வேலை அங்கு இருந்த கிராமமக்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது அங்கு வந்த பெருன்பான்மை இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கிராமத்து பெண்களுக்கு தகாதவார்த்தைகளால் பேசியதுடன் அநாகரிகமானமுறையிலும் ஆலயத்தை மதிக்காது நடந்துள்ளதாக மக்கள் எமக்கு தெரிவித்தனர்
இந்த ஆலயமானது தொண்று தொட்டு 
எமது இந்து மக்களால் வழிபட்டு வந்த ஆலயம் கடந்த இறுதியுத்தத்தின் போது சேதமாக்கப்பட்டது குறிப்பிட தக்கதும் அத்தோடு இந்த பிரதேசம் முழுவதும் நூறுவீதம் இந்து மக்கள் வாழும் பிரதேசமாகும்
எனவே இந்த நல்லாட்சி காலத்தில் மதத்தலைவர்கள் அரச அதிகாரிகளின் உதவியோடு இந்து மத ஆலயத்திற்கு வந்து தடை விதித்து மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர் இதை நாம் ஏற்ருக்கொள்ள முடியாது
எனவே இந்த இந்து மத மக்கள் வாழும் பிரதேசத்தின் இந்து ஆலயத்தின் மீது செய்யும் ஆக்கிரமிப்பையும் அதன் புணர்அமைப்பு வேலைக்காண தடைவிதிப்பையும் மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.
Link to comment
Share on other sites

இந்தத் தேரைவிடவும் பிரபலம்வாய்ந்த பல தேரர்கள் சிங்களப் பகுதிகளில் இறந்து தகனம் செய்யப்பட்டுள்ளார்கள் அவர்கள் எவருக்கும் இந்தளவிற்கு முப்படையினரும் சிங்களருடன் இணைந்து பெருமெடுப்பில் நிகழ்வுகளை நடாத்தியதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இப்படி நடாத்தியதற்குக் காரணம் தமிழரை வென்றுவிட்டோம். இனி எங்களை யார் என்னசெய்ய முடியும் என்ற இறுமாப்பும், மமதையையும் தவிர வேறில்லை. உலகில் எதுவும் நிலையானதில்லை. இது மாறலாம். அது இன்றோ நாளையோ தலைமுறைகளிலோ நடைபெறலாம்.    
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

இந்நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பால் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன், விகாராதிபதியின் உடலை அங்கு தகனம்செய்வதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இவர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை இனி யாழ் நீதிமன்றங்களில், தமிழ் நீதிபதிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என எப்பவோ எதிர்பார்த்த ஒன்று. சர்வதேசம் என்கின்ற கதவை சிங்களவனுக்காகவே தட்டி திறந்து நீதி கேட்க்கும் கூட்டம். இங்கும்    அதையே நிரூபித்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தை பிணம் எரிக்கும் இடமாக மாற்ற உலகில் எந்தநாட்டிலுமே சட்டம் இல்லை.

இலங்கையில் நடந்தேறியுள்ளது.

இது ஒரு இன அடக்குமுறை அகங்காரத்துக்கான அடையாளங்கள். இந்த விடயத்தில் சர்வதேச அபிப்பிராயங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. இருக்கவும் கூடாது. இந்த அநாகரீக விடயத்திற்கே நம் தமிழ் அரசியல்வாதிகளின்  பலம் தெட்டத்தெளிவாக தெரிகின்றது.


இந்த நேரம் பாத்து சம்பந்தன் ஆஸ்பத்திரிலையாமெல்லே...வீட்டிலை இருந்திருந்தால் நடக்கிறதே வேறை...

ஆஸ்பத்திரியிலை இருக்கிற சம்பந்தன் அய்யாவுக்கு அப்பிடி இப்பிடி ஏதும் நடந்தால்.....நடக்கக்கூடாது....இருந்தாலும்.....
காலிமுகத்திடலிலை ஐயாவின்ரை இறுதிக்கிரியை நடக்க சிங்களம் ஓம்படுமா?

விடுதலைப்புலிகள் எமது பிரதேசத்தை சுடுகாடாக்கியவர்கள் என்று சொன்னவர்களுக்கு நல்ல காட்சியும் கானங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

இந்தத் தேரைவிடவும் பிரபலம்வாய்ந்த பல தேரர்கள் சிங்களப் பகுதிகளில் இறந்து தகனம் செய்யப்பட்டுள்ளார்கள் அவர்கள் எவருக்கும் இந்தளவிற்கு முப்படையினரும் சிங்களருடன் இணைந்து பெருமெடுப்பில் நிகழ்வுகளை நடாத்தியதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இப்படி நடாத்தியதற்குக் காரணம் தமிழரை வென்றுவிட்டோம். இனி எங்களை யார் என்னசெய்ய முடியும் என்ற இறுமாப்பும், மமதையையும் தவிர வேறில்லை. உலகில் எதுவும் நிலையானதில்லை. இது மாறலாம். அது இன்றோ நாளையோ தலைமுறைகளிலோ நடைபெறலாம்.    
 

அதுதான் உண்மை இதில் பள்ளிவாசல் வரலாம்,சிங்கள தேவாலயம் வரலாம் ஏன் புதிய ஒர் மதத்தின் வழிபாட்டு ஸ்தலமே வரலாம் ....அதை பார்க்க எமது சந்ததியினர் இருக்கமாற்றார்கள்

Link to comment
Share on other sites

விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்ய முற்றவெளி சுடுகாடல்ல – சட்டத்திந்கு முரணானது:-

 

cvk1.jpg?resize=900%2C675cvk2.jpg?resize=900%2C675cvk3.jpg?resize=900%2C675

யாழ்.விகாராதிபதியின் பூதவுடலை யாழ்.முற்றவெளி பகுதியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் தவறு என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடம் சுடுகாடோ அல்லது இடுகாடோ இல்லை. உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரமும் அது தவறு. உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் அதில் அனுமதி வழங்க முடியாது.

அங்கு தகனம் செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது. எது எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என தெரியவில்லை. விகாரதிபதியின் பூதவுடல் அரச பலத்துடன் , உள்ளூராட்சி சட்டத்திற்கு முரணாக தகனம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

விகாராதிபதியின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகளின் பின்னர் சடலத்தை தகனம் செய்ய யாழ்.நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2017/57051/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் நினைத்ததைச் சாதித்து விட்டார்கள்.சிங்கள பிக்குவின் உடலை எரிப்பதற்கு முற்றவெளியை ஏன் தெரிவு செய்தார்கள்.நாளை மணிமண்டபம் காட்டுவார்கள் .தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டிய தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தோரின் நினைவுத்தூபிக்கு அருகில் யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது .எது எதற்கோ தடை செய்யும் நீதிமன்றம் இதை அனுமதித்திருப்பது ஏற்க சமுடியாது.இதுதான் நல்லாட்சியா?நல்லாட்சி அரசிற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பு தேர்தல் வேலைகளில் பிசி.பெருமளவு மக்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டம் நடத்தியிருக்க வேண்டாமா?

 

வாழும் வீரர்  சம்பந்தர் ,வெடிகுண்டு மாவை,மென்வலுச்சித்தர் சுமத்திரன் நாளைக்கு முற்ற வெளியில் நின்று சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்ய முற்றவெளி சுடுகாடல்ல – சட்டத்திந்கு முரணானது:-

 

cvk1.jpg?resize=900%2C675cvk2.jpg?resize=900%2C675cvk3.jpg?resize=900%2C675

யாழ்.விகாராதிபதியின் பூதவுடலை யாழ்.முற்றவெளி பகுதியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் தவறு என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடம் சுடுகாடோ அல்லது இடுகாடோ இல்லை. உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரமும் அது தவறு. உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் அதில் அனுமதி வழங்க முடியாது.

அங்கு தகனம் செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது. எது எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என தெரியவில்லை. விகாரதிபதியின் பூதவுடல் அரச பலத்துடன் , உள்ளூராட்சி சட்டத்திற்கு முரணாக தகனம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

விகாராதிபதியின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகளின் பின்னர் சடலத்தை தகனம் செய்ய யாழ்.நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2017/57051/

நல்ல நடிப்பீங்க..... இவ்வளவும் நடக்கும் போது எங்கே போனீர்கள்?

இந்த சம்பவத்தை வைத்தே தென்சிறீலங்காவில் நல்லாட்சி அரசாங்கம் வரும் தேர்தலில் வென்றுவிடும்.

Link to comment
Share on other sites

யாழ். நீதிமன்ற நீதிவானின் பெயர் எஸ். சதீஸ்கரன் என்று தமிழர்கள் வைத்துக்கொள்ளும் பெயராக இருக்கலாம்உண்மையில் அங்கிருந்த நீதிவான் ஒரு தமிழனாக இருந்திருந்தால், இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்காது. :rolleyes:

Link to comment
Share on other sites

அங்கை இருக்கும் பலருக்கு வெளிநாட்டுக்கு வர ஆசை. எப்பவும் வெளிநாட்டு நினைப்பு. வெளிநாட்டில இருக்கிற ஆட்கள் பலருக்கு ஊரில நடக்கிற பலதை பார்த்து கவலை. எப்பவும் ஊர் நினைப்பு. என்ன செய்யலாம்?

நாங்கள் பொற்பதி வீதியும் ஆடியபாதம் தெருவும் சந்திக்கும் மூலையில் எங்கள் மாமா வீட்டில் சுமார் நான்கு வருடங்கள் அகதியாக இருந்தோம். கொக்குவில் சுடலை அருகில்தான் இருந்தது மருத்துவபீடத்து மைதானம் அருகில். கிழமைக்கு இரண்டு உடலங்களாவது அங்கு எடுத்து செல்லப்படும் எரிப்பதற்கு. உடலம் எரியும் மணம் எங்கள் வீடுவரை வரும். சாம்பல் காற்றில் பறந்து எங்கள் வீட்டு யன்னல் ஊடாகவே வரும். இதை சுகாதாரத்துக்கு தீங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை. அருகில் குடிமனை ஒன்றும் இல்லை. ஒரு தடவை எரித்தார்கள். ஒவ்வொருநாளுமா பிணங்களை கொண்டுவந்து எரிக்கின்றார்கள்? யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் தேரரின் உடலை தகனம் செய்தால் அதை ஒரு பிரச்சனை, மனதை துன்புறுத்தும் சம்பவம் என்று சொல்லலாம். இலங்கையின் வேறு பாகங்களிலும் இப்படி மைதானங்களில் பெரிய அளவில் பந்தல் எல்லாம் அமைத்து பிரபல்யமானவர்களின் உடலங்களை எரிப்பது வழமைதானே? தென்பகுதியில் இயற்கை எய்திய தேரரை யாழ்ப்பாணத்தில் கொண்டுவந்து இப்படி தகனம் செய்தால்கூட இதை ஒரு திட்டமிட்ட செயல் என்று சொல்லலாம். தேரரின் விகாரையோ மைதானத்தை அண்மித்தே இருக்கின்றது. எனக்கு என்றால் இந்தவிடயம் பற்றி அலட்டிக்கொள்ள ஒன்றும் இல்லை என்றுபடுகின்றது. தென்பகுதியில் கொழும்பு காலி வீதியில் இந்து தமிழ் பக்தர்களின் தூக்குகாவடி செல்கின்றது. இது பெளத்தர்கள் மனதை துன்புறுத்தும் சம்பவமாக அமையுமா?

Link to comment
Share on other sites

48 minutes ago, கலைஞன் said:

அங்கை இருக்கும் பலருக்கு வெளிநாட்டுக்கு வர ஆசை. எப்பவும் வெளிநாட்டு நினைப்பு. வெளிநாட்டில இருக்கிற ஆட்கள் பலருக்கு ஊரில நடக்கிற பலதை பார்த்து கவலை. எப்பவும் ஊர் நினைப்பு. என்ன செய்யலாம்?

நாங்கள் பொற்பதி வீதியும் ஆடியபாதம் தெருவும் சந்திக்கும் மூலையில் எங்கள் மாமா வீட்டில் சுமார் நான்கு வருடங்கள் அகதியாக இருந்தோம். கொக்குவில் சுடலை அருகில்தான் இருந்தது மருத்துவபீடத்து மைதானம் அருகில். கிழமைக்கு இரண்டு உடலங்களாவது அங்கு எடுத்து செல்லப்படும் எரிப்பதற்கு. உடலம் எரியும் மணம் எங்கள் வீடுவரை வரும். சாம்பல் காற்றில் பறந்து எங்கள் வீட்டு யன்னல் ஊடாகவே வரும். இதை சுகாதாரத்துக்கு தீங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை. அருகில் குடிமனை ஒன்றும் இல்லை. ஒரு தடவை எரித்தார்கள். ஒவ்வொருநாளுமா பிணங்களை கொண்டுவந்து எரிக்கின்றார்கள்? யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் தேரரின் உடலை தகனம் செய்தால் அதை ஒரு பிரச்சனை, மனதை துன்புறுத்தும் சம்பவம் என்று சொல்லலாம். இலங்கையின் வேறு பாகங்களிலும் இப்படி மைதானங்களில் பெரிய அளவில் பந்தல் எல்லாம் அமைத்து பிரபல்யமானவர்களின் உடலங்களை எரிப்பது வழமைதானே? தென்பகுதியில் இயற்கை எய்திய தேரரை யாழ்ப்பாணத்தில் கொண்டுவந்து இப்படி தகனம் செய்தால்கூட இதை ஒரு திட்டமிட்ட செயல் என்று சொல்லலாம். தேரரின் விகாரையோ மைதானத்தை அண்மித்தே இருக்கின்றது. எனக்கு என்றால் இந்தவிடயம் பற்றி அலட்டிக்கொள்ள ஒன்றும் இல்லை என்றுபடுகின்றது. தென்பகுதியில் கொழும்பு காலி வீதியில் இந்து தமிழ் பக்தர்களின் தூக்குகாவடி செல்கின்றது. இது பெளத்தர்கள் மனதை துன்புறுத்தும் சம்பவமாக அமையுமா?

யதார்த்தமான கருத்து!!!!

தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் தான் உண்டு, ஒன்று சிங்களவனுடன் சேர்ந்த்து வாழ்வது இல்லாவிடில் முஸ்லிமுக்கு அடிமையாக வாழ்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் ஒருபோதும் திருந்தமாட்டான். அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் சில தமிழர்கள் இவர் அதை செய்கின்றார் அவர் இதை செய்வார்கள் என்று சொல்லிக்கொண்டு தாங்களும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றுகின்றார்கள். என்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.