Jump to content

புட்டினுடன் பேசுவேன்...தேயிலை இறக்குமதி தடை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு


Recommended Posts

புட்டினுடன் பேசுவேன்

G26-a300beeaec320e736577f667961ff26ba19c0c13.jpg

 

தேயிலை இறக்குமதி தடை விவகாரம்  தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு 
(அப்­புத்­தளை நிருபர்)

தேயிலை ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்றின் கவ­ன­யீ­னத்தின் கார­ண­மாக எமது நாட்டு தேயி­லையை ரஷ்யா தற்­கா­லி­க­மாக ஏற்க மறுத்­தி­ருக்­கி­றது. இது­வொரு தற்­கா­லிக விடயம் மாத்­தி­ர­மே­யாகும்.

ரஷ்­யா­வுக்­கான தேயிலை ஏற்­று­மதி   விவ­கா­ரத்தில் எழுந்­துள்ள அசௌ­க­ரிய சூழலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சடு­தி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளேன். அந்த வகையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமீன் புட்­டினை சந்­தித்து சுமு­க­மான பேச்­சு­வார்­த­தை­யொன்றை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான நவீன் திஸா­நா­யக்க மற்றும் ரிசாட் பதி­யுதீன் ஆகி­யோரை எனது பிர­தி­நி­தி­க­ளாக ரஷ்­யா­வுக்கு அனுப்­பி­வைக்­கிறேன். அத்­துடன் ரஷ்ய ஜனா­தி­பதி புட்­டி­னுடன் பேசு­வ­தற்கு தயா­ராக இருக்­கிறேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.  

48 வரு­டங்­களின் பின்னர் தங்­க­ளது தொகு­தி­யூ­டாக உள்ளுர் பிர­தி­நி­தி­களை தேர்ந்­தெ­டுக்கும் வாய்ப்பு மக்­க­ளுக்கு கிட்­டி­யுள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் நாட்டு மக்கள் வாய்ப்பை சரி­யாக பயன்­ப­டுத்தி ஒழுக்­க­முள்­ள­வர்­க­ளையும் மோச­டி­யற்­ற­வர்­க­ளையும் தேர்ந்­தெ­டுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன் என்றும் அவர் கூறினார்.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட ஐக்­கிய மக்கள் சதந்­திர முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் அப்­புத்­த­ளையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. காங்­கி­ரஸின் உப தலை­வரும் ஊவா மாகாண அமைச்­ச­ரு­மான செந்தில் தொண்­டமான் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீ பால டி சில்வா, ஊவா மாகாண ஆளுநர் சட்­டத்­த­ரணி ஜய­சிங்க, ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஆ.சிவ­லிங்கம், ஆ.கணே­ச­மூர்த்தி, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் புஷ்­ப­கு­மார மற்றும் இ.தொ.கா. ஆலோ­சகர் டி.வி.சென்னன், இணைப்­பா­ளர்­க­ளான எஸ்.அசோக்­குமார், கலை சகா­தேவன் உள்­ளிட்ட இ.தொ.கா. பிர­மு­கர்கள், அப்­புத்­தளை நகர சபை வேட்­பா­ளர்கள், ஹல்­து­முல்லை பிர­தேச சபை வேட்­பா­ளர்கள், கட்சி ஆத­ர­வா­ளர்கள் கலந்­து­கொண்­டனர்.

இங்கு ஜனா­தி­பதி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் கூட்­டத்தின் முத­லா­வது கூட்­ட­மாக உழைக்கும் மக்கள் மத்­தியில் கலந்­து­கொள்ள கிடைத்த வாய்ப்­பை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். இக்­கூட்­டத்­தினை ஒழுங்கு செய்த அமைச்சர் செந்தில் தொண்­ட­மா­னுக்கும் இ.தொ.கா. விற்கும் வாழ்த்­துக்­களை தெரி­வித்து கொள்­கின்றேன். இ.தொ.கா. வின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்­டமான் பெருந்­தோட்ட மக்­களின் தேவை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் பெற்று கொடுப்­ப­தற்­காக தன்னை முழு­மை­யாக அர்ப்­ப­ணித்­தவர். ஆட்­சியில் இருந்த அனைத்து அர­சாங்­கத்­தோடும் இணைந்து பெருந்­தோட்ட மக்­களின் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­தவர். அதன் கார­ண­மா­கத்தான் அண்­மையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த பாரத பிர­தமர் நரேந்­திர மோடி நோர்­வூட்டில் தன­து­ரையில் எனது முன்­னி­லையில் தொண்­ட­மானின் சேவையை பற்றி சுட்­டிக்­காட்­டினார். அந்த வகையில் அனை­வ­ருக்கும் அது பெருமை அளிக்கும் விடயம் என்­ப­தோடு இ.தொ.கா. தொடர்ந்தும் எமது கட்­சி­யுடன் ஒத்­து­ழைத்து வரு­வது எமக்கு பல­மா­கவும் இருக்­கி­றது.

2015 ஆம் ஆண்டில் நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­போது விகி­தா­சார முறை­யினை மாற்றி தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­யினை கொண்டு வருவேன் என்ற வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தேன். அன்று என்னால் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி இன்று நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது.

48 வரு­டங்­க­ளுக்கு பின்னர் கிராம சபை, நகர சபை ரீதி­யாக தெரி­வுகள் இடம்­பெற்று கிரா­மத்­திற்கும் ஊர்­க­ளுக்கும் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தல், பாதை, பாலம் அமைத்தல், தண்ணீர் வச­தி­களை பெற்­றுக்­கொ­டுத்தல், அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்தல் போன்ற பணி­களை செய்­யக்­கூ­டி­ய­வர்­களை தெரிவு செய்யும் தேர்­தலே நடை­பெ­ற­வுள்­ளது. இந்த தேர்தல் மூல­மாக ஒரு­வரை ஒருவர் அவ­தூறு செய்து நல்­லாட்­சிக்கு பாதிப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும்.

தொகு­தி­வாரி தேர்தல் முறையின் மூல­மாக வாக்­க­ளிக்கும் உரிமை மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருப்­பதன் ஊடாக இலங்கை அர­சியல் வர­லாற்றில் தாம் வாழ்­கின்ற பிர­தே­சத்­திற்கு சேவை செய்­யக்­கூ­டிய உள்ளூர் தலை­வர்­களை நேர­டி­யாக தெரிவு செய்யும் வாய்ப்பு 48 வரு­டங்­களின் பின்னர் எட்­டி­யுள்­ளது. இதனை பிர­தேச மக்கள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி பய­ன­டைய வேண்டும் செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளையும் குற்ற செயல்­க­ளுக்கு உட்­ப­டா­த­வர்­க­ளையும் மக்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக தெரி­வு­செய்ய வேண்­டி­யது அனை­வ­ரி­னதும் பொறுப்பும் கட­மை­யு­மாகும்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும் மாகாண ஆட்­சியும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆட்­சியும் முன்­னைய ஜனா­தி­ப­திக்கு கிடைத்­தி­ருந்த போதிலும் என்னில் நம்­பிக்கை வைத்து மக்கள் என்னை தெரிவு செய்­தார்கள்.

13 வரு­டங்­க­ளாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றினேன். கடந்த உள்­ளூ­ராட்சி சபை­களில் இருந்­த­வர்கள் நூற்­றுக்கு எண்­பது வீத­மா­ன­வர்கள் பாலியல் வன்­முறை, கொலை அச்­சு­றுத்தல், போதைப்­பொருள் பாவனை போன்ற இன்­னோ­ரன்ன குற்­றங்­க­ளுக்­காக நீதி­மன்றம் சென்­ற­வர்கள் எனலாம்.

யாரை வெற்­றி­பெற செய்­வது, யாரை தோல்­வி­ய­டைய செய்­வது என்­ப­தல்ல முக்­கியம். 15 வரு­டங்­க­ளாக நாட்டை பாழ­டித்­த­வர்­களை இனங்­காண்­பதே முக்­கி­ய­மாகும். முன்னாள் தலை­வர்­க­ளான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க, ஜே.ஆர். ஜய­வர்­தன, ரண­சிங்க பிரே­ம­தாஸ போன்­ற­வர்கள் நகர சபை பிர­தி­நி­தி­க­ளாக இருந்து பிர­த­மர்­க­ளா­கவும் ஜனா­தி­ப­தி­க­ளா­கவும் வெளி­யே­றினர். எனது வயது நிமித்தம் அந்த வாய்ப்பு என்னை சேர­வில்லை.

எமது நாட்டில் புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், அறி­வா­ளிகள், விஞ்­ஞா­னிகள் இருக்­கின்­ற­போதும் ஒழுக்­க­முள்ள அர­சி­யல்­வா­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த தேர்தல் ஒரு முன்­னி­லை­யான வெடி முழக்­க­மாக அமை­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் கை சின்­னத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் வெற்­றிலை சின்­னத்­திலும் இலங்­கையின் 307 தொகு­தி­களில் போட்டி இடு­வ­தோடு பதுளை மாவட்­டத்தில் 9 இடங்­களில் இ.தொ.கா.வுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்றோம்.

இந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பாரிய பங்­க­ளிப்­பினை வழங்கி வரு­ப­வர்கள் பெருந்­தோட்ட மக்­களே என்­ப­தனை எனது மன­சாட்­சி­யோடு பதித்­துள்ளேன். இந்­நாட்டில் வாழ்­கின்ற சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனை­வ­ரது சக வாழ்­விற்கும் நான் எல்­லோரும் ஒன்­றி­ணைவோம்.

தேயிலை ஏற்­று­ம­திக்கு இன்று பாரிய சவால் ஏற்­பட்­டுள்­ளது. தனியார் நிறு­வனம் ஒன்­றினால் ஏற்­று­மதி செய்­யப்­பட்ட தேயி­லைப்­பெட்டி ஒன்றில் ஒரு­வகை வண்டு காணப்­பட்­டதால் ரஷ்யா நமது தேயி­லையை தற்­கா­லி­க­மாக ஏற்க மறுத்­துள்­ளது.

இது தொடர்பில் யாரும் அஞ்சத் தேவை­யில்லை. குறித்த ஏற்­று­மதி நிறு­வனம் தொடர்­பான முழு­மை­யான விசா­ர­ணைகள் தொடர்­வ­துடன் அதன் தவ­றுகள் நிரூ­ப­ண­மாகும் பட்­சத்தில் அந்த நிறு­வ­னத்தின் ஏற்­று­மதி அனு­ம­திப்­பத்­திரம் இரத்து செய்­யப்­படும் என்­பதை கூறி­வைக்­கிறேன்.

அது­மாத்­தி­ர­மன்றி அமைச்­சர்­க­ளான நவீன் திசா­நா­யக்க, ரிசாட் பதூர்தீன் ஆகியோர் நிலை­மையை தெளி­வுப்­ப­டுத்­து­வ­தற்­கென எனது பிர­தி­நி­தி­க­ளாக ரஷ்­யா­விற்கு செல்­கி­றார்கள். நட்பு நாடான ரஷ்­யாவின் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு தனிப்­பட்ட கடிதம் ஒன்­றினை அனுப்பி இது பற்­றிய தீர்­மா­னத்தை பரி­சீ­லனை செய்து அதனை மாற்­றிக்­கொள்­ளு­மாறு வேண்­டுகோள் விடுக்­க­வுள்ளேன்.

ஓய்வு நிலை அரச ஊழி­யர்கள் சம்­பந்­த­மாக ஊட­கங்கள் வாயி­லாக அறிந்து கொண்டேன். அவர்­க­ளது கோரிக்­கையை நிறை­வேற்­ற­வில்லை என என் மீது குற்றம் சுமத்­தி­யி­ருந்­தார்கள்.

எனினும் இன்னும் ஒரு­வார காலத்­திற்குள் அவர்­க­ளது பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும். நான் பதவி ஏற்­ற­போது நம்மை முறைத்து பார்த்த நாடுகள் அனைத்தும் இன்று நட்பு நாடுகளாக மாறியுள்ளன. இந்த உறவை நாம் தொடர்ந்தும் பாதுகாத்து தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.

மேலும் ஒழுக்கமுள்ள உள்ளூர் தலைவர்களை, இந்த உள்ளூராட்சி தேர்தல் மூலமாக தேர்வு செய்வோம். அமைச்சர் நிமால் ஸ்ரீபால த சில்வா பதுளைக்கு மாத்திரம் அல்லாமல் நாட்டிற்கு கிடைத்த நல்ல தலைவர். அவரைப் போன்றே ஊவா மாகாண இளம் முதலமைச்சரும் அவருடன் சேர்ந்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் உங்கள் பிரதேசத்தில் தலைமையேற்று சேவையாற்றி வருகின்றார்கள்.

அவர்களின் கரங்களை பலப்படுத்துவதுடன் எதிர்வரும் தேர்தலில் வெற்றிலை சின்னத்தையும் கை சின்னத்தையும் வெற்றிபெற செய்வதற்கு நாம் அனைவரும் கை கோர்ப்போம் என்றார்.

இக்கூட்டத்தில் அப்புத்தளை மற்றும் ஹல்துமுல்லை பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான அசோக்க உதயகுமார, சி.பி.சுகுமுாரன் நாயர் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.