Jump to content

பல்­லின தேசியம் இல்­லா­மையே தீர்­வுக்­குத்­தடை


Recommended Posts

பல்­லின தேசியம் இல்­லா­மையே தீர்­வுக்­குத்­தடை

asa-263892a6cb2aa37d506af175f86eef7a54eb8bfc.jpg

 

எந்த காரி­யத்தைச் செய்­வ­தா­யினும் எப்­படிச் செய்­வது? அதற்கு அவ­சி­ய­மா­னவை என்­னென்ன? இடையில் குழம்­பினால் எப்­படி சரி செய்­வது? முழு­மை­யாக நிறை­வேற்ற என்ன உபா­யங்­களைக் கையாள்­வது? என்­பன பற்­றி­யெல்லாம் முடிவு செய்தே காரி­ய­மாற்ற வேண்டும். இதைத்தான் ‘எண்­ணித்­து­ணிக கருமம் துணிந்த பின் எண்ணு­வ­தென்­பது இழுக்கு’ என வள்­ளுவர் குறிப்­பி­டு­கிறார்.

1949 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனா­நா­யக்க கிழக்கில் கல்­லோயாத் திட்­டத்தை ஆரம்­பித்து சிங்­கள மக்­களைக் குடி­யேற்­றி­ய­போது பின் விளை­வைச்­சிந்­திக்­க­வில்லை. 1956 ஆம் ஆண்டு எஸ்.டப்­ளியு ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க ‘சிங்­களம் மட்டும்’ எனும் மொழிச்­சட்­டத்தைக் கொண்டு வந்­த­போது பின் விளை­வைச்­சிந்­திக்­க­வில்லை.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க சிறு­பான்­மைக்­காப்­பீ­டான 29 ஆம் ஷரத்தை நீக்­கி­ய­போது பின்­வி­ளைவைச் சிந்­திக்­க­வில்லை.

திறந்த பொரு­ளா­தா­ர­மா­யினும் அதற்கும் கட்­டுப்­பாடு உண்டு. எனினும் ஜே.ஆர் கட்­டுப்­பா­டற்ற திறந்த பொரு­ளா­தா­ரத்­தையே கொண்டு வந்தார். மக்கள் பிர­தி­நி­தித்­து­வ­மா­யினும் அதற்கும் ஒழுங்­கு­முறை உண்டு. எனினும் அவர் மாவட்ட ரீதி­யி­லான விகி­தா­சார முறையை விருப்பு வாக்­கு­க­ளோடு கொண்­டு­வந்தார். அதன் விளை­வுகள் நாட்டை ஆழ­மா­கவே பாதித்­தன. அவர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­யைக்­கொண்டு வந்­தி­ருந்­த­போதும் அதி­கார வரம்பு இல்லை. இதன் விளை­வு­களைப் பின்­னால்தான் மக்கள் அனு­ப­வித்­தார்கள்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­யால்தான் யுத்­தங்­களில் வெல்ல முடிந்­தது எனக்­கூ­றப்­பட்­டா­லும்­கூட அத­னால்தான் சமா­தா­னத்­துக்­கான அனைத்துக் கத­வு­களும் மூடப்­பட்­டன என்­ப­த­னையும் நாம் மறந்து­ வி­டக்­கூ­டாது. போர்க்­குற்­றச்­சாட்­டின்கீழ் ஐ.நா.விடம் அகப்­பட்டு சர்­வ­தே­சத்­தி­டமும் இலங்கை இப்­போது தனி­மைப்­பட்டு நிற்­கி­றது.

மாவட்ட விகி­தா­சார இலக்க முறை­யி­லான தேர்­தல்­களில் வெற்றி பெறு­வ­தாயின் பெருத்த பண வசதி வேண்டும். சாதா­ரண மக்­களால் முடி­யாது. ஆக இதனால் சாதா­ர­ண­மா­ன­வர்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் குறைந்தே போனது. அர­சியல் செல்­வந்­தர்­களின் முத­லீட்டுத் தொழி­லா­கவும் சூதாட்­ட­மா­கவும் மாறி சேவை மனப்­போக்கு இல்­லா­மற்­போ­னது. ஊழல்­வா­தி­களை விசா­ரிப்­போரும் ஊழல்­வா­தி­களே எனும் அள­வுக்கு கட்­டுப்­பா­டற்ற திறந்த பொரு­ளா­தாரம் அர­சி­யலை மாற்றி வைத்­தி­ருக்­கி­றது. பொரு­ளோடு பிரே­ம­தாச இந்­தி­யாவை எதிர்த்துத் தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு ஆயு­தங்­க­ளையும் வழங்­கினார். அவர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­களை வழங்­காமல் இவற்றை ஏன் செய்தார்? இவற்றின் பின்­வி­ளை­வுகள் என்­ன­வா­யிற்று? இவற்­றி­லி­ருந்து எவரும் எந்தப் படிப்­பி­னையும் பெற­வில்லை என்­ப­துதான் சோகம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களை இலங்கை அரசு இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வந்­தி­ருந்தால் இந்­தியா தனது எல்­லைப்­பா­து­காப்­புக்­காகத் தலை­யிட்­டி­ருக்க மாட்­டாது. அத்­த­கைய இணக்­கப்­பாட்­டுக்கு வராமல் இந்­தி­யாவின் உத­வி­யு­ட­னேயே தமிழ் ஆயுதப் போரா­ளி­களை மஹிந்த ராஜபக் ஷ ஒழித்­ததன் விளைவு என்ன? ஐ.நா.வால் போர்க்­குற்றம் சுமத்­தப்­பட்டு விசா­ரணைப் பட்­டி­ய­லிலும் இருக்­கிறார். சர்­வ­தேசம் இவரைத் தனி­மைப்­ப­டுத்­தியும் விட்­டது. இவ­ரது தேர்தல் தோல்­வி­யூ­டாக சிங்­களப் பெரும்­பான்மை வாக்­குகள் போர் வெற்றி மூலம் கிடைக்கும் எனும் எண்­ணத்­திலும் மண் விழுந்­தது. இவ­ரது ஆத­ர­வாளர் சிலர் மைத்­திரி அரசின் அமைச்­சர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள். இவ­ருக்கு நெருக்­க­மான சீனா­வும்­கூட இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வோடு புழங்­கு­கி­றது.

யுத்­தத்தின் முடிவில் இந்­தி­யாவின் யுத்­தத்­தையே புரிந்­த­தாகக் கூறினார் அல்­லவா? எனினும் ஒரு­முறை இந்­தியா ஐ.நா.வில் நடு­நிலை வகித்­தது. மறு­முறை பிணை எடுத்­தது. முடிவில் இவ­ரது தலை­மீதே எல்லாப் பழி­களும் விழுந்­தன. யுத்­தத்­துக்கு முன்பும் இவர் பின்­வி­ளை­வு­களை எண்­ணிப்­பார்க்­க­வில்லை. யுத்­தத்தின் பின்பு நிக­ழப்­போகும் விளை­வுகள் பற்­றியும் எண்­ணிப்­பார்க்­க­வில்லை. சரத் பொன்­சே­காவின் விட­யத்­திலும் ஷிராணி பண்­டாரநாயக்­கவின் விட­யத்­திலும் ஞான­சா­ரரின் விட­யத்­திலும் விளை­வுகள் இருக்­கவே செய்­தன.

2005 ஆம்­ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு, கிழக்குத் தமி­ழரின் வாக்­குகள் ரணி­லுக்கு கிடைக்­காமற் செய்­ததன் மூலமும் ரணிலின் எம்.பி.க்கள் சில­ருக்கு அமைச்­சுப்­ப­த­வி­களைக் கொடுத்து 18 ஆம் ஷரத்தை நிறை­வேற்­றி­யதன் மூலமும் மஹிந்த ராஜபக் ஷ தனது அர­சியல் சாணக்­கி­யத்தை நுட்­ப­மாக வெளிக்­காட்­டி­யிருந்தார். அதுபோல் 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது சக போட்­டி­யாளர் சரத் பொன்­சே­காவை இடை­ந­டு­வி­லேயே சிறைப்­பி­டித்­தி­ருந்தார்.

தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளையும் வேறு­ப­டுத்தித் தோற்­க­டித்தார். இந்த அள­வுக்­கான நுட்­ப­மான ஒரு ராஜ­தந்­திரி எப்­படி 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் தோற்றார். இரண்டாம் முறையில் பத­வி­யி­லி­ருந்த அவர் மூன்றாம் முறையும் போட்­டி­யிடும் நோக்கில் 18 ஆம் ஷரத்தை நிறை­வேற்றி இரு வரு­டங்­க­ளுக்கு முன்பே தேர்­தலை வைத்­து­விட்டார். எனினும் அவ­ரது அபேட்­சகர் பத்­தி­ரத்தில் ஒப்­ப­மிட்ட அவரின் கட்­சியின் செய­லா­ளரே சக­போட்­டி­யாளர் எனக் கண்­டதும் அதிர்ந்து போனார். தேர்­த­லிலும் தோற்­றுப்­போனார்.

இதனால் மேலும் ஐந்­தாண்டு கால அதி­கா­ரத்­துக்கு ஆசை­ப்பட்டு இருந்த இரு வருட எஞ்­சிய ஆட்­சிக்­கா­லத்­தையும் இழந்தார். முன்­கூட்­டியே இதை உள­வுத்­துறை கூறி­னாலும் நம்­பி­யி­ருக்­க­மாட்டார். காரணம் ஒரு ஜோசி­ய­ரையே அவர் முழு­தாக நம்­பி­யி­ருந்­த­தாகும்.

தனது கட்­சிக்குள் நீண்­ட­காலம் தனக்குக் கட்­டுப்­பட்­டி­ருந்த செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­ப­டியும் தனக்­கெ­தி­ராகக் களத்தில் இறங்­குவார் என்­பதை அவர் கன­வி­லும்­கூட நினைத்­துப்­பார்க்­க­வில்லை. அப்­போதும் கூட இளக்­கா­ர­மா­கவே சக போட்­டி­யா­ளரைப் பார்த்தார். அந்த அள­வுக்கு அவ­ருக்கு வெற்றி மீது 100 வீத நம்­பிக்கை இருந்­தது.

அதனால் கடும்­போட்­டியில் இறங்­காது மெத்­த­னத்தில் இருந்­து­விட்டார். நிறை­வேற்று அதி­கா­ரத்­தோடு 18 ஆம் ஷரத்தின் அசுர வலி­மையும் அவ­ரிடம் இருந்­தது. அர­ச­ சேவை, பொலிஸ், தேர்தல் நீதி ஆகிய அதி­கா­ரங்­க­ளையும் கைவ­சப்­ப­டுத்­தி­யி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்­துப்­போட்­டி­யிட எல்­லோரும் அஞ்­சி­னார்கள். எனினும் சந்­தி­ரிக்­காவும் ரணிலும் பொது அபேட்­ச­க­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் களத்தில் இறக்­கி­னார்கள்.

எனி­னும்­கூட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு உள்­ளூர அச்­சமே நில­வி­யது. வெற்­றி­யிலும் நம்­பிக்கை இருக்­க­வில்லை. இறு­தியில் சிறிய வித்­தி­யா­சத்தால் அவர் வென்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டதும் ஆச்­சர்­ய­முற்றார். அவ­ரது வெற்­றிக்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யோடு மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் சிறு­பான்மைக் கட்­சி­களும் முக்­கிய பங்­க­ளித்­தன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஓர­ள­வுக்கு மட்­டுமே பங்­க­ளிப்பு வழங்­கி­யி­ருந்­தது.

பின்னர் மஹிந்த ராஜபக் ஷ கட்­சித்­த­லை­மை­யையும் இழந்து எதிர்க்­கட்சித் தலை­மை­யையும் இழந்தார். பிர­த­ம­ராகும் அவ­ரது நோக்­கமும் நிறை­வே­ற­வில்லை. வெறும் எம்.பி. பத­வியை மட்­டுமே பெற்றார். அன்று முதல் இன்­று­வரை ஆட்­சியின் அரை ஆயுள் கழிந்­தும்­கூட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் ரணி­லையும் பிரித்­து­வி­டு­வ­தையே அவர் இலட்­சி­ய­மாகக் கொண்­டி­ருக்­கிறார்.

உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களும் சர்­வ­தேசப் பிரச்­சி­னை­களும் அவ­ருக்கு இரண்டாம் பட்­சம்தான் வடக்கு, கிழக்கு இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு முட்­டுக்­கட்­டை­போட்டு போர்க்­குற்ற விட­யத்தில் ஐ.நா.வின் பொறுப்­புக்­கூ­றலை ஏற்று இணை அனு­ச­ர­ணை­யையும் ஏற்று இரு தவ­ணை­க­ளையும் பெற்­றி­ருக்கும் நிலையில் மைத்­திரி – ரணில் அரசை மேலும் 2 ½ வருட அரை ஆயுளில் எதுவும் செய்­ய­வி­டாது முடக்கி வைக்­கவே அவர் செயற்­ப­டு­கிறார். இதனால் அரசு உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் இக்­கட்­டுக்குள் மாட்­டி­விடும் என்றே அவர் எதிர்­பார்க்­கிறார்.

அடிக்­கடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தே­சத்­திலோ உள்­நாட்­டிலோ போர்­வீ­ரர்­களை விசா­ரிக்க விடவும் மாட்டேன்; தண்­டிக்க விடவும் மாட்டேன்; என்­கி­றாரே. என்ன காரணம் சகல தரப்­பி­ன­ரி­டமும் ஆலோ­சித்தே புதிய யாப்பு விட­யத்­தையும் இவர் கையில் எடுத்தால் போர்­வீ­ரர்­க­ளி­னதும் சிங்­களப் பெரும்­பான்­மை­யி­ன­ரதும் எதிர்ப்பு கிளம்­பி­விடும் என்றே அஞ்­சு­கிறார்.

அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் நாம் தான் மஹிந்த ராஜபக் ஷ மின்­சாரக் கதி­ரைக்­குப்­போ­காமல் காப்­பாற்­றினோம் என்­றார்கள். அப்­ப­டி­யானால் ஆட்­சி­மாற்றம் மஹிந்­த­வையும் நாட்­டையும் காப்­பாற்­று­வ­தற்­கா­கவா நிகழ்ந்­தது. பொறுப்­புக்­கூ­ற­லையும் இணை அனு­ச­ர­ணையையும் புது யாப்­பையும் ஐ.நா.வில் ஏற்­றுக்­கொண்ட மைத்­திரி ரணில் அரசு உள்­நாட்டில் முடக்­கப்­ப­டு­மாயின் மீண்டும் நாட்டின் சூழல் சரி­யில்லை. கொதி­நி­லையில் ஒரேயடி­யாக அணு­காது கட்டம் கட்­ட­மாக அணு­கு­கிறோம் எனக்­கூறி மீண்டும் தவணை கேட்­க­லாமா? பொறுப்­புக்­கூ­றலை ஏற்­றுக்­கொண்டோம்; இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்டோம் எனக்­கூ­றி­ய­வர்கள் நாட்டின் சூழ­லையும் மாற்­று­விக்க வேண்­டாமா? 2009 ஆம் ஆண்டே யுத்தம் முடி­வுற்­று­விட்­டது. இன்­னுமா கட்டம் கட்டம்?

யுத்த காலத்தில் இருந்த ஜனா­தி­ப­திக்கு யுத்தம் புரிய முழு­மை­யான நிறை­வேற்று அதி­காரம் இருந்­தது. ஐ.நா.வி­ட­மி­ருந்து பொறுப்­புக்­கூ­ற­லையும் இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­ப­திக்கு முழு­மை­யான நிறை­வேற்று அதி­காரம் இல்லை. பிர­த­ம­ரோடு சில அதி­கா­ரங்­களை அவர் பகிர்ந்­தி­ருக்­கிறார். இதுதான் இய­லா­மைக்குக் கார­ணமா?

பொது அபேட்­ச­க­ராகப் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வாக்­கு­களால் வென்­று­விட்டு தோல்­வி­யுற்ற ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ரா­கி­யி­ருக்­கிறார். இதனால் இரு­கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் அவர் சிக்­கி­யி­ருக்­கிறார். இவரை விடவும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் அதிக ஆத­ரவு மஹிந்த ராஜபக் ஷவி­டமே இருக்­கி­றது. நிக­ழ­வி­ருப்­ப­தாகக் கூறப்­படும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மஹிந்த – மைத்­திரி கூட்டு ஏற்­படும் எனக்­ கூ­றப்­ப­டு­கி­றது. அதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் இன்றும் முடிந்­த­பா­டில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தி­ரி­காவும் ரணிலும் பொது வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட வைத்­ததன் நோக்கம் தனிப்­பட்ட மகிந்த விரோ­த­மா­கவே முடிந்­தி­ருக்­கி­றது. ஆளை மட்­டும்தான் மாற்­றி­யி­ருக்­கி­றார்கள். ஏறத்­தாழ அவ­ரது அடிச்­சு­வ­டு­களே பின் தொட­ரப்­படு­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷ தன் மூலமே 2005 ஆம் ஆண்டு பத­விக்கு வந்­து­விட்டு தனக்­கு­ரிய கட்­சித்­த­லை­மை­யையும் சுவீ­க­ரித்து ஒதுக்கி வைத்­த­தற்­காக மஹிந்­த­மீது சந்­தி­ரி­கா­வுக்குக் கடும் பகை இருந்­தது. தனது மாம­னா­ரான ஜே.ஆரின் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை வைத்­துக்­கொண்டு தனக்­கு­ரிய ஆளும் வாய்ப்­பு­களை முடக்கும் மஹிந்­த­ மீது ரணி­லுக்கும் கடும் பகை இருந்­தது. இவை தாம் தனிப்­பட்ட முறையில் ஆளை மாற்ற வேண்டும் என்ற அவ­சி­யத்தை இரு­வ­ருக்கும் ஏற்­ப­டுத்­தி­யது.

இவர்­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷவின் சர்­வா­தி­கார செயற்­பா­டு­களும் குடும்ப ஆதிக்­கமும் மக்கள் மனதை மாற்­று­வ­தற்குத் துணை­யாக நின்­றன.

தனது கட்சி காப்­பாற்­றப்­பட வேண்டும் எனும் தேட்டம் சந்­தி­ரி­கா­வுக்கு இருந்­தது. 17 வரு­ட­காலம் ஒதுக்­கப்­பட்ட தனது கட்­சியை அதி­கா­ரத்தில் அமர்த்த வேண்டும் எனும் ஆவல் ரணி­லிடம் இருந்­தது.

சுவர் இருந்­தால்தான் சித்­திரம் தீட்­டலாம் என்­பது போல் ஐ.நா.வின் பிடி­யி­லி­ருந்தும் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்தும் இலங்­கையை விடு­விப்­பதே பொது­வாக இரு­வ­ரி­னதும் நோக்­க­மாக இருந்­தது. இந்­நி­லை­யில்தான் இரு­வரும் மஹிந்­தவை எதிர்த்துப் போட்­டி­யிட இர­க­சி­ய­மாகக் காய் நகர்த்­தி­னார்கள். கட்சி மனப்­போக்கைக் கைவிட்­டார்கள். கட்சி சார்­பற்ற பொது அபேட்­ச­க­ராக ஒரு­வ­ரையே போட்­டிக்கு நிறுத்த வேண்டும் என்றும் முடிவு செய்­தார்கள்.

இந்­நி­லை­யில்தான் வெகு­காலம் கட்­சிக்கு உழைத்­தும்­கூட பிர­தமர் பதவி தரப்­படும் என ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது இரு­வரும் பார்­வையைச் செலுத்­தி­னார்கள். கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த அவர் பல்­வேறு வகை­க­ளிலும் மஹிந்­தவின் செயற்­பா­டு­களில் அதி­ருப்­தி­யுற்­றி­­ருந்தார். இன்­னு­மொரு வகையில் அவர் சந்­தி­ரி­காவின் தீவிர விசு­வா­சி­யா­கவும் இருந்­ததால் ரணிலின் எண்ணம் பலி­த­மா­யிற்று. அதன்­படி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே மஹிந்­த­வோடு போட்­டிக்கு நிறுத்­தப்­பட்டார். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முழு­வாக்­கு­களும் தரப்­படும் என்றும் வென்­றதும் 100 நாட்­களைக் கொண்ட இடைக்­கால அரசில் தனக்கு பிர­தமர் பதவி தரப்­ப­ட­வேண்டும் என்றும் அமைச்­ச­ர­வையில் இரு­கட்­சி­யி­னரும் இருக்­கலாம் என்றும் பொதுத்­தேர்­தலில் தனித்­த­னி­யாகப் போட்­டி­யிட்டு தனது கட்சி வென்றால் தானே பிர­த­ம­ராகி கூட்டு அமைச்­ச­ரவை என்றும் ரணில் இணக்­கப்­பாட்­டுக்கு வந்தார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ரணிலின் நிபந்­த­னைகள் சாத்­தி­ய­மா­கின. உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு தற்­போது மகிந்த நிபந்­தனை விதிக்­கிறார். இதில் மகிந்த முன்­வைத்த நிபந்­த­னை­களே, இக்­கூட்டைத் தவிர்க்­கி­றதாம். பிர­தமர் பதவி தனக்குத் தரப்­பட வேண்டும் எனவும் ரணி­லோ­டுள்ள கூட்டை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் முழு­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைச்­ச­ரவை அமைய வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக் ஷ நிபந்­த­னைகள் விதிக்­கி­றாராம். மாந­கர, நகர, பிர­தே­ச­ச­பை­களின் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­காக அவர் விதிக்கும் நிபந்­த­னை­க­ளைப்­பார்த்­தீர்­களா? இத்­த­கைய தேர்­தலில் மைத்­திரி சார்­பினர் மூன்றாம் இடத்­துக்­கு­வந்தால் இமேஜ் பாதிக்­கலாம். எனினும் நிறை­வேற்று அதி­காரம் பாதிப்­பு­றலாம் எனும் நிலை இல்லை.

எனினும் மஹிந்த ராஜபக் ஷவின் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ­ரோடு கூட்டு சேர்ந்தால் எல்லா சபை­க­ளிலும் மஹிந்­தவே பலம் பெறுவார் ரணி­லோடு நேரடியாகவே முரண்படும் நிலையே ஏற்பட்டுவிடும். இதனால் எல்லா சபைகளும் அரசியல் சர்ச்சைகளுக்கு உட் பட்டு அவற்றில் நிர்வாகச் சீரழிவுகள் ஏற்பட்டுவிடும். ஏற்கனவே பாராளுமன் றத்திலும் மாகாண சபைகளிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய சீரழிவு ஒவ் வொரு கிராமங்களிலும் ஏற்பட வேண்டுமா? இவற்றின் செயற்பாடுகளில் தேசிய அரசில் இல்லாத வகையில் புதுமுறை அமுலாக வேண்டும்.

போர்க்­குற்ற விவ­காரம் போர்­வீ­ரர்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாகும். புதிய யாப்பு பெரும்­பான்மைச் சமூ­கத்தின் இணக்­கத்­துடன் செய்­யப்­பட வேண்­டி­ய­தாகும். மைத்­திரி – ரணில் அரசு போர்க்­குற்­ற­வி­சா­ர­ணை­யையும் தண்­ட­னை­யையும் முன்­னெ­டுத்தால் இதன் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­விடும். பெரும்­பான்மைச் சமூ­கத்தைப் பகைத்­துக்­கொண்டு புதிய யாப்பை இயற்­றி­னாலும் பாதிப்பே அர­சுக்கு ஏற்­படும். தனது இருப்­புக்கு மஹிந்த ராஜபக் ஷவின் பழி­வாங்கும் நோக்­கத்தால் இழப்பு ஏற்­ப­டலாம் எனும் தயக்­கமும் மைத்­தி­ரிக்கு உண்டு.

எனவே ஐ.நா.வுக்கு அவர் வாக்­க­ளித்­த­படி பொறுப்­புக்­கூ­ற­லையும் இணை அனு­ச­ர­ணை­யையும் வழங்க முடி­யுமா என்­பதே கேள்­வி­யாகும். போருக்கும் அழி­வுக்கும் முன் தீவிர பகை இல்­லா­தி­ருந்த கால­கட்­டங்­க­ளி­லேயே தேசிய இணக்­கப்­பாட்டை பல­மாக ஊன்­றி­யி­ருந்தால் இத்­த­கைய இக்­கட்­டான நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. இப்­போது போர்­வீ­ரர்­களைக் காப்­பாற்­றவும் வேண்­டி­யி­ருக்­கி­றது. தம்மை அழித்­தோரைத் தண்­டிக்­கு­மாறு கோரு­வோரின் வேண்­டு­கோளை மீறவும் முடி­யா­தி­ருக்­கி­றது. பெரும்­பான்­மைக்­கான யாப்பைத் தக்­க­வைக்க வேண்­டியும் சிறுபான்மைகளுக்குமான புது யாப்பை இயற்றவேண்டியும் இருக்கிறது. முன்கூட்டியே பின்விளைவை உணராததால் ஏற்பட்ட வினைதான் இது.

ஏ.ஜே.எம்.நிழாம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-16#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.