Jump to content

பெண் ஒடுக்குமுறையின் ஒரு வரலாறு


Recommended Posts

பெண் ஒடுக்குமுறையின் ஒரு வரலாறு

ஆண்களைப்போன்றே பெண்களும் பல வர்க்கங்களினால் பிளவுபட்டு வாழ்கின்றனர். ஒவ்வொரு வர்க்கப் பெண்களுக்கும் தமது வர்க்கத்திற்குரிய தனித்துவமான பிரச்சினைகள் உண்டு. நம்முள் பெரும்பான்மையினரால் விளங்கப்படும் பெண்ணிலைவாதமோ பால்ரீதியான பிரச்சினைகளையே தனது மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பெண்களை (அ) வர்க்கங்களாக (ஆ) வர்க்க நிலைப்பாடுகளையொட்டி ஸ்தாபனப்படுத்த வேண்டிய அவசியம் உருத்தெரியாமல் மழுங்கடிக்கப்படுகின்றது. இதுவும் காரணமில்லாமலன்று. தமது வர்க்க நலன்களைக் காப்பாற்ற விழையும் புத்திஜீவிகளின் வெளிப்பாடுகள் தாம் இவை. தற்போது, அபிவிருத்தியடைந்துவரும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிவரும் கருத்துகளும் இப்போக்கிற்கு தூபம் போடுவனவாகவே இருக்கின்றன; ஆரம்பம் முதல் பல்வித குறியீடுகளினாலே ஆண்கள் பெண்களைத் தமக்கு இரண்டாம் பட்சமாகவே கருதியிருக்கின்றனர் என்றும் வெவ்வேறு சமுதாயங்களில் வேறுவேறு அந்தஸ்து நிலைகளில் பெண்கள் இருக்கக் காரணம் உரிமைகளின் அளவிலேயே என்றும், திரும்பத் திரும்ப பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான உறவினையே எடுத்தியம்புகின்றன. உற்பத்திச் சக்திகள் பின்னணியாகவிருக்கும் மனித வரலாற்றினை நோக்கின் இந்தக் குழப்பங்களெதுவும் தோன்றமாட்டா.

மனித உயிர்களின் சிருஷ்டி கர்த்தாக்களாகவும் அவற்றின் அவசிய தேவைகளின் உற்பத்தியாளர்களாகவும் பெண்கள் ஆற்றிய பணி மனித சமுதாயத்தின் முதற்கட்ட அமைப்பின் அத்திவாரமாகியது. இச் சமூகங்களில் பெண்கள் ஒரு போதும் அதிகாரம் செலுத்தவில்லை. ஆகவே, இவர்கள் இரண்டாம் பட்சமானவர்கள் எனக் கூறுவது தாய்வழிச் சமூக அமைப்பினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத தன்மையினாலேயாகும். கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் சொந்தத் தேவைகளுக்கேற்ப உற்பத்தி நடைபெறும்போது ஒருவர் உழைப்பினை ஒருவர் சுரண்டுமுகமாக ஏற்படுத்தப்படும் அதிகாரம் அங்கு தோன்றுவதில்லை. இங்கு, பெண்கள் அதிகாரம் செலுத்தியவர்கள் என்பதை விட தத்தமது குழுவினரை வழிநடத்தியவர்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தமாகும். கேள்வி என்னவெனில், கூட்டுச் சமூகங்களில் முதன்மை வகித்த பெண்கள் பிற்கால குடியேற்ற நாகரிகங்களில் சமூகத்திற் பின்தள்ளப்பட்டது என்பதேயாகும்.

தாய்வழிச் சமூகங்களின் வீழ்ச்சி

இற்றைக்கு சுமார் 8000 - 10,000 ஆண்டுகள் முன்பு உலகின் பல பாகங்களிலும் தோட்டப் பயிர்ச் செய்கை விருத்தியடைந்ததால், பொருளாதாரம் முன்னேற்றம் கண்டது. உழைப்பின் தேவை அதிகரித்தது. ஆண்களும் சிறிது சிறிதாக வேட்டையாடுதலை விடுத்து இதுகாறும் பெண்களுக்குரிய தொழிலாகக் கருதிவந்த பயிர் மற்றும் பொருளுற்பத்தியில் ஈடுபடலாயினர். ஆரம்பத்தில் இவர்கள் பங்கு தொழிலுக்குரிய சேவைகளைச் செய்வதாக இருந்தது. காட்டையழித்து பயிர் நிலத்தைத் தயார் செய்தனர். பாரமான மரங்களைச் சாய்த்து பெண்களின் கட்டிட வேலைக்குத் தூக்கிச் சென்றனர். உணவுற்பத்தியின் அதிகரிப்பால் நரமாமிசம் உண்ணும் வழக்கிலிருந்தும் ஆண்கள் முற்றாக மீண்டனர். இது, ஒரு நீடிய தொடர்பு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் ஏற்பட எதுவாயிற்று. திருமணங்களின் ஆரம்பமும் இதுவாகும்.

திருமணமே தனியுடைமையின் முதல் வித்துகளைப் போட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஒரு தாய்வழிச் சமூகத்தில் மனைவியின் குடியிற்சென்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் கொண்ட கணவன், தனக்கும் மனைவியின் ஆண் உறவினர்களுக்குமிடையே ஏற்பட்ட பூசல்களைத் தவிர்க்குமுகமாக முதன்முதலாகத் தனக்கும் தன் மனைவிக்குமெனச் சொந்தக் குடில் அமைத்துக் கொண்டான். மேலும், இத்திருமணங்களினால் நாளடைவில் உதிரிகளாகிய கூட்டுக்குடிகள் தம்முள் கொடுத்து வாங்கிய பரிசுகளையும் முன்புபோல் பொதுச் சொத்தெனக் கருதாது குறிப்பிட்ட தாய்வழிக் குடும்பங்களுக்கே சொந்தமாக விட்டனர். இவ்வகையாக மெல்ல மெல்ல பொதுவழக்கிற்கு வந்த தனியுடைமை அமைப்பு ஒரு குழுவினுள் அங்கத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தில் சில ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியதல்லாது ஒருவர் இன்னொருவடைய உழைப்பினைச் சுரண்டி வாழும் தன்மையினைக் கொண்டிருக்க வில்லை. ஒரு ஒடுக்குமுறை அமைப்பிற்கான முன் நிபந்தனையாக இருக்கும் உபரி உற்பத்தி இவ்வாறான தனியுடைமைச் சமூகத்தில் உருவாவதற்குத் தூண்டுதல் இருக்கவில்லை. உபரி உற்பத்திக்கான தேவையை உருவாக்கியது இன்னொரு சக்தி. அதுதான் வாணிபம்.

தந்தையுடைமைச் சமுதாயத்தின் வளர்ச்சி

நாடோடி இடையர் கூட்டங்களே உலகின் முதல் வியாபாரிகள் எனலாம். தாம் இடம்பெயரும் காலங்களில் சந்தித்த பிற குழுவினருடன் முதலில் பண்டமாற்றுச் செய்தனர். பண்டைய பண்டமாற்று முறைகள் வாணிபமாக வளர்ச்சியடைய பெரிய அளவில் சரக்குற்பத்தியும் அதன் விற்பனையும் நடைபெறலாயிற்று. ஆண்களும் பெண்களும் இலாபத்திற்கென உழைக்க ஆரம்பித்தனர். இதுகாறும் கண்டிராத வளங்களும் செல்வங்களும் தனி மனிதர்களுக்குச் சொந்தமாயின. இங்கு தோன்றிய புதிய பொருளாதார சக்திகள் பழைய பாரம்பரியங்களுடன் இணைந்து தோற்றுவித்த புதிய அமைப்பில் பெண்களின் நிலைமை வேரறுக்கப்படத் தொடங்கியது.

(அ) பெண்கள் தாய்மையின் கடமைகள் நிமித்தம் இடத்துக்கு இடம் பெயரும் வசதி குறைந்தவர்களாயிருந்தனர். விளைவாக ஆண்களே ஆரம்பத்திலிருந்து வியாபாரத்திலீடுபட்டதுடன் இலாபங்களைத் தமக்கெனக் கொள்ளும் தரகர்களாகவும் மாறினர்.

(ஆ) வணிகப் பாதைகள் உருவாகியபோது அதனூடாகக் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளைப் பாதுகாக்க ஆயுதபாணிகளின் குழுக்கள் அமைக்கப்பட வேண்டியதாயிற்று. ஆயுதக் கலாசாரம் வேரூன்றியது. வரலாற்றில் கூட வாணிபத்திற்கும் இராணுவத்துவத்திற்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளின் அடையாளங்களை நாடோடி ஆயர் நாகரிகங்களில் காணலாம்.

(இ) அன்றிருந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித உழைப்பினைக் கூடிய பங்காகக் கொண்ட உற்பத்தி முறையினைத்தான் உருவாக்கியது. உழைப்பென்னும் மூலவளம் மிக வேண்டப்பட்டதொன்றாகியது. இதனால், அன்று இரத்த வஞ்சங்களைத் தீர்க்க மேற்கொண்ட சண்டைகளில் பிடித்த கைதிகளை அடிமைகளாக்கி வேலை செய்வித்தனர். அடிமைகளைக் கைப்பற்றவும் போரிட்டனர். இவ்வடிமைகளின் உழைப்பினால் செல்வம் பெருகியது. இதனால், இவர்களை ஈட்டித்தந்த ஆண்களின் அந்தஸ்து உயர்ந்தது.

(ஈ) வளர்ந்து கொண்டிருந்த ஆண்டான் அடிமை வர்க்கங்களை ஒரு அமைப்பினுள் கட்டுக்கோப்பாக இணைத்து செயல்படவும் பலாத்காரம் தேவைப்பட்டது. இந்த சமூக அமைப்பு தோன்றவும் நிலைபெறவும் காரணமாக இருந்த இராணுவத்துவம் மதிப்பிற்குரிய தொழிலாகியது. இதேவேளையில் வேட்டையாடுதல், போரிடுதல் போன்ற எந்தவகை ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிராத பெண்கள் பின் தள்ளப்பட்டனர்.

(உ) அடிமைகள் உற்பத்தியின் முழு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட பெண்களின் உழைப்பு சமூக உற்பத்திக்கு தேவைப்படாததாகிவிட்டது.

(ஊ) நாளடைவில் நிலமும் அதனைச் சார்ந்த மூலவளங்களும் அருகத் தொடங்கின. நிலத்தை அபகரிக்கும் போட்டியில் கிராமங்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு வாழ்ந்த பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இங்குதான் ஆண்கள் பெண் கைதிகளின் அனுகூலங்களை புரிந்து கொண்டனர்; பெண்களைப் புஜபலத்தினால் ஆட்கொள்ளலாம், பால் ரீதியாகப் பலாத்காரம் செய்யலாம். அவர்களின் குழந்தைகளைப் பணயம் வைத்துப் பயமுறுத்தலாம். ஆகவே, பெண்ணடிமைகள் ஏராளமாகக் கொள்ளப்பட்டனர்.

(எ) தந்தையுடைமைச் சமுதாயம் உருவாகியது. தமது சொத்துகளை வழிவழியே கொடுக்க ஆண்களுக்கு வாரிசுகள் தேவைப்பட்டன. முன்பு அன்பளிப்புகள் கொடுத்து வாங்கிச் செய்த திருமணங்களுக்குப் பதிலாக இப்போது பரிசம் போட்டுப் பெண்ணை எடுத்தனர். ஒரு தாரமணத்தை நிறுவினர். இந்த வியாபாரத்தில் கணவன் கொடுக்க தந்தை வாங்கிக்கொண்டான். இவ்வகையில் சமூகத்தின் செல்வங்களும் இத்திருமணங்களினால் ஆண்கள் கைகளில் செறியலாயிற்று.

உலகின் ஒவ்வொரு பாகங்களிலும் தந்தையுடைமைச் சமுதாயங்களின் வளர்ச்சி மேற்கூறிய காரணிகளின் பலவிதக் கூட்டிணைப்புகளினால் ஏற்படுத்தப்பட்டது. இக் காரணிகள் எல்லாவற்றிலும் இராணுவத்துவமே ஆண்கள் செலுத்திய அரசியல் அதிகாரத்திற்கு அத்திவாரமாக அமைந்தது எனலாம். மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்த ஏற்றத் தாழ்வுள்ள சமூக அமைப்பு ஸ்தாபனமாக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் அரசு தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த ஆண்களினால் உழைப்பில் பாகுபாடு புகுத்தப்பட்டது. உற்பத்தி, இனப்பெருக்கம் ஆகியன அடங்கிய உழைப்பு சிந்தனை ரீதியாகவும் உடல் ரீதியாவும் பிரிக்கப்பட்டது. உற்பத்தியின் உடல் ரீதியான உழைப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் சுமத்தப்பட்ட அதேவேளையில் இனப் பெருக்களின் உடலுழைப்பு முழுவதும் பெண்களின் மேல் சுமத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களோ உற்பத்தியினதும் இனப் பெருக்கலினதும் உடலுழைப்பினைச் செய்ய வேண்டியவர்களாகத் தள்ளப்பட்டனர். இதற்கு நேர்மாறாக ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள் உற்பத்தியினதும் இனப்பெருக்கத்தினதும் சிந்தனை சார்ந்த வேலையைத் தமக்கென எடுத்துக் கொண்டனர். ஆகவே, ஆண், பெண் இருபாலார்க்குமிடையேயுள்ள உழைப்பின் பிரிவு தந்தையுடைமைச் சமுதாயத்தின் விளைவேயல்லாது அதன் காரணியல்ல.

தந்தையுடைமைச் சமுதாயத்தினை வளர்க்கும் காரணிகளை வெவ்வேறு வரையறைகளில் கொண்டுள்ள வெவ்வேறு கலாசாரங்கள் வித்தியாசமான ஒடுக்குமுறை அமைப்புகளைத் தோற்றுவித்தன. ஒரு சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு இராணுவத்துவத்தின் ஆளுமைக்குட்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.