Jump to content

தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம்


Recommended Posts

தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம்

 
 

எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட  சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...!  

அருவி

 

அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்த வயசுகளுக்கே உரிய உரையாடல்கள் நடக்கும் நண்பர்கள் குழு, 'லவ் யூ அருவினு வெள்ளைப் பேப்பர்ல எழுதிக்கொடுத்து ப்ரொபோஸ் பண்ணணும்' என்ற சினிமாத்தனமான  ஆசை - இதுதான் அருவியின் உலகம். வெளிப்பார்வைக்கு அருவி நம்மைச் சுற்றி நடமாடும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி. பின் எது அவளைத் தனித்துவமானவள் ஆக்குகிறது என்ற கேள்விக்குப் பதிலாக விரிகிறது இந்த இரண்டு மணிநேர பயணம்.  

ஒரு பிரச்னை காரணமாக அருவி வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது. இரண்டு பைகளோடு தெருவில் இறங்கும் அவள் தனக்கான கூட்டைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைகிறாள். கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கை வாழும் அவளுக்கு ஒரு திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்கிறார்கள். அரங்கிற்குள் சராசரி சமூக மதிப்பீடுகளின்படி '.............' அருவியாக நுழையும் அவள், அங்கிருந்து வெளிவரும்போது அதே சமூக மதிப்பீடுகளின்படி 'தீவிரவாதி' அருவியாக வெளிவருகிறாள். உண்மையில் அருவி யார்? எது அவளை வீட்டை விட்டு வெளியேற்றி டிவி நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்தது? டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் செட்டுக்குள் என்ன நடந்தது? தவறு யார் மேல் என்பதையெல்லாம் அடுத்தடுத்த திருப்பங்களின் வழியே முகத்திலறைந்து சொல்கிறது திரைக்கதை.

அதிதி பாலன்

நீண்ட நாட்களுக்குப் பின் முழுக்க முழுக்க ஒரே ஒரு பெண் கேரக்டரை மையமாக வைத்து வெளியான படம். அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு புதுமுக நடிகையைப் பார்த்து பிரமித்ததும் இந்தப் படத்தில்தான். 'யப்பா என்னம்மா நடிக்குதுய்யா இந்தப் பொண்ணு' என நிச்சயம் ஒரு ஃப்ரேமிலாவது நம் வாய் முணுமுணுக்கும். சின்னச் சின்ன கண் சிமிட்டல்கள், ஒருகணம் சோகமாக... மறுகணம் வீம்பாக என்று சட்சட்டென நிகழும் முக மாறுதல்கள், நெகிழ்ச்சியான பின்பாதியில், உள்ளிருந்து ஓலத்தோடு எழும் சிரிப்பு என முதல் படத்திலேயே உணர்வுகளின் கலவைகளைக் கொட்டியிருக்கிறார் அதிதி பாலன். இந்த ஆண்டின் பெருமைக்குரிய அறிமுகம் இவர் என்பதில் சந்தேகம் இல்லை.    

Aruvi

அருவியோடு படம்நெடுகப் பயணிக்கும் திருநங்கை எமிலியாக சிறப்பாக நடித்திருக்கிறார் அஞ்சலி வரதன். பெரும்பாலான சினிமாக்களில் சித்திரிக்கப்படும் திருநங்கை கேரக்டரில் இருந்து அவருடையது வேறுபட்டிருப்பது பெரிய ஆறுதல். ஆனால் அந்த விடலைப் பையன் அவரைப் பற்றி கேட்கும் சந்தேகம் திரும்பத் திரும்ப வருவது சற்றே நெருடல் `டேய் ஃப்ரேமே சரி இல்லடா' என உதவியாளர்களிடம் எகிறிவிட்டு அடுத்தகணமே 'நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம் மேடம்' என பம்மும் ரியாலிட்டி ஷோ இயக்குநராக இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில்கவிதா பாரதி கச்சிதமாகப் பொருந்துகிறார். துணை இயக்குநராக நடித்திருக்கும் பிரதீப் ஆண்டனி, நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடித்திருக்கும் லஷ்மி கோபால்சுவாமி, சுபாஷாக வரும் விடலைப் பையன், தமிழைக் கடித்து துப்பும் போலீஸ் அதிகாரி என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் பொறுப்பு உணர்ந்து பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் மீதான மதிப்பீடுகளை இந்தச் சமூகம் அவள் உடல் சார்ந்தே முன் வைப்பது, பாதிக்கப்பட்டவள் பெண்ணாகவே இருந்தாலும், 'அவ அப்படி இருக்கப் போய்தான் இப்படியாச்சு' என திரும்பவும் அவளையே குற்றம்சாட்டுவது என புரையோடிப் போயிருக்கும் பிற்போக்கு எண்ணங்களை சுளீர் வசனங்கள் மூலம் விமர்சனத்துக்குளாக்குகிறார் இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில் முன் பின்னாக நகரும் கதை சொல்லல், இறுக்கமாக நகரும் காட்சிகளிலும்கூட இயல்பான நகைச்சுவைக்கு இடம் கொடுக்கும் காட்சியமைப்பு என ரொம்பவே மெனக்கெட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். தனிநபர் வாழ்க்கையில் மீடியாவின் தலையீடு, சாமியார்கள் மேல் கட்டப்படும் புனிதப் பிம்பம் என போகிறபோக்கில் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றாலும் படத்தின் மையப்புள்ளியை விட்டுவிலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது கதை.

ஒரே ஒரு சின்ன இடத்தில் நடக்கும் கதை. ஆனாலும் அதை சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாக பரிமாறியதில் வெற்றி கண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். ஆர்ப்பரிக்கும் நிஜ அருவியின் சாரல்கள் நம் மீது விழுவதற்கும், அழுது புழுங்கும் கதாநாயகி அருவியின் கண்ணீர்துளிகள் நம் மீது தெறிப்பதற்கும் இவரின் கேமரா வித்தை முக்கிய காரணம். பிந்துமாலினி - வேதாந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அழகு. படத்தின் பாடல்கள் அனைத்துமே கதையோடு ஒன்றிப்போவதும் கதையின் நகர்விற்கு உதவுவதுமாக அமைந்திருக்கின்றன. 

 

இயக்குநர், அதிதி பாலன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக வேலை எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவிற்குத்தான். நான் லீனியர் பாணியில் கொஞ்சம் தவறினாலும் அயர்ச்சி தோன்றிவிடும் வாய்ப்புகள் அதிகம். போக, திரைப்பட விழாக்களுக்குச் சென்றுவந்த படங்கள் என்றாலே மெதுவாக நகருமோ என்ற தயக்கம் உண்டாவதும் இயல்பு. அந்த அயர்ச்சியும் தயக்கமும் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது ரேமண்ட்டின் வெற்றி. 

படத்தில் இப்படி எக்கச்சக்க ப்ளஸ்கள் இருந்தாலும் சிற்சில லாஜிக் உறுத்தல்கள் கண்ணுக்குத் தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை. முக்கியமாக அருவி வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக இருக்கும் 'அது'. நடைமுறையில் அப்படி நிகழ வாய்ப்புகள் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. முதல்பாதியில் யாருக்கும் பயப்படாத துணிச்சல்காரியாக வரும் அருவி இரண்டாம் பாதியில் எல்லாவற்றுக்கும் கலங்குவது ஏன்? ரியாலிட்டி ஷோவிற்கு வரும் மூன்று பேருக்கும் எந்த 'ஆபத்து'மில்லை என முன்கூட்டியே அருவிக்கு எப்படித் தெரிந்தது? குண்டுகளே தீராத அந்தத் துப்பாக்கியை அவ்வளவு சிறப்பாக அருவி கையாள்வது எப்படி என்ற கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கலாம்.

 

 

இந்த சின்னச் சின்ன உறுத்தல்களைத் தாண்டிப் படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கூடவே சில கதாபாத்திரங்களும் பயணிக்கலாம். அது 'எனக்கும் உங்களை மாதிரியெல்லாம் வாழணும்னு ஆசை' என சமூகம் ஒதுக்கிவைத்த ஆதங்கத்தில் பொருமும் அருவியாக இருக்கலாம், 'தெருவில இறங்குனா குறுகுறுன்னு பாக்குறானுக, அவ்வளவு அழகாவா இருக்கோம்?' என விரக்தியாய்ப் பேசும் எமிலியாக இருக்கலாம், இல்லை 'நாலு பேரு என்ன சொல்லுவான்?' என கண்ணுக்குத் தெரியாதவர்களைப் பற்றி கவலைப்பட்டு மகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் அருவியின் அப்பாவாக இருக்கலாம். ஆனால், படம் பார்த்த அனுபவமும், உடன் பயணிக்கும் கேரக்டர்களும் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு விலகப்போவதில்லை. தமிழ் சினிமா கானகத்தில் காட்டாறாகப் பாயவிருக்கும்  இந்த அருவியை கொண்டாடித் தீர்க்கலாம் வாருங்கள்..!

https://cinema.vikatan.com/movie-review/110705-aruvi-movie-review.html

Link to comment
Share on other sites

'அருவி' - விருதுக்கானதா, திரை விருந்துக்கானதா? இயக்குநர், நடிகை பேட்டி

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அருவி திரைப்படம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் பங்கேற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பெரும்பாலோனோர் புதியவர்கள் மற்றும் இளைஞர்களே.

'அருவி' : மக்களுக்கான திரைப்படமா? விருதுகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமா?படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM

இத்திரைப்படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வெளியாகும் இத்திரைப்படம் குறித்தும், அருவி குறித்து எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் பிபிசி தமிழிடம் இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு உரையாடினார்.

அருவி ஒரு சமூக அரசியல் சார்ந்த படமா அல்லது பொழுதுபோக்கு திரைப்படமா என்று கேட்டதற்கு, ''அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு ஜனரஞ்சக திரைப்படம்தான் அருவி. மக்கள் சார்ந்த அரசியல் மட்டுமே இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

''ஆனால், இது அரசியல் சார்ந்த அல்லது நம்மை ஆள்பவர்களை பற்றிய திரைப்படம் அல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களைதான் இந்த திரைப்படத்தில் அலசியுள்ளோம்'' என்று அருண் மேலும் கூறினார்.

அருவி திரைப்பட போஸ்டர் சர்ச்சை

அருவி திரைப்பட போஸ்டர் வெளியான போது எழுந்த சர்ச்சை பற்றி கேட்டதற்கு பதிலளித்த அருண், ''படத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிக்கொணரும் வகையில்தான் போஸ்டர் உருவாக்கப்பட்டது. படம் வெளியானவுடன், அதை பார்த்தவர்கள்தான் படத்தின் கருவை போஸ்டரோடு தொடர்பு கொள்ள முடியும். அப்போதுதான் முழுமையாக புரியும்'' என்று தெரிவித்தார்.

'அருவி' : மக்களுக்கான திரைப்படமா? விருதுகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமா?படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM

இது அன்பு குறித்து பேசும் படம். பிரசாரப் படமல்ல என்று அருவி குறித்து அருண், மேலும் குறிப்பிட்டார்.

சர்வதேச பனோரமா பிரிவு விருது உள்பட பல விருதுகளை அருவி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ளது.

இந்நிலையில், அருவி மக்களுக்காக எடுக்கப்பட்ட படமா, விருதுக்காக எடுக்கப்பட்ட படமா என்று கேட்டதற்கு, ''அருவி மக்களுக்கான திரைப்படம்தான். மூன்றாவது நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி இந்த திரைப்படம் பேசுவதால் இந்த திரைப்படம் பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றது'' என்று தெரிவித்தார்.

அதிதி பாலன்

திரைப்படத்தின் சில வசனங்கள் இன்றைய நடைமுறையை, இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று கூறிய அருண், ''திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் முழு திரைப்படம் ஆகிய இரண்டும் வெவ்வேறு அனுபவங்களை தரும். முழுப்படமும் பார்த்தால்தான் சொல்ல வந்த கருத்து தெளிவாக புரியும்'' என்று தெரிவித்தார்.

பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் ஆகிய இருவரும் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், குட்டி ரேவதி பாடல்கள் எழுதியுள்ளார்.

''பிரதான கதாபாத்திரமான அருவியை தவிர 25 கதாபாத்திரங்களுக்கு இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் உள்ளது. படத்தேர்வுக்கு 7 அல்லது 8 மாதங்கள் ஆனது. அனுபவம் வாய்ந்த நடிகர்களை தேடாமல் கதாபாத்திரத்துக்கு பொருந்தும் எளிய மனிதர்களையே நாங்கள் தேர்வு செய்தோம்'' என்று அருண் குறிப்பிட்டார்.

அருவி திரைப்பட நடிகர்களுடன் இயக்குநர் அருண் பிரபு (மத்தியில் இருப்பவர்) Image captionஅருவி திரைப்பட நடிகர்களுடன் இயக்குநர் அருண் பிரபு (நடுவில் இருப்பவர்)

''மக்களை மனிதில் வைத்து எழுதப்பட்டது அருவி திரைப்படம். இது மக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும்'' என்று அருண் நம்பிக்கை தெரிவித்தார்.

அருவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?

திரைப்பட பின்னணி எதுவும் இல்லாத அதிதி பாலன், இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அருவி திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பிபிசி தமிழிடம் அதிதி பாலன் கூறுகையில், ''இந்த படத்தின் நடிகர், நடிகை தேர்வு குறித்து சமூகவலைத்தளத்தில் வந்த தகவல் மூலம் அறிந்து நான் விண்ணப்பித்தேன். அதன் பிறகு டெஸ்ட் ஷூட் நடந்தது. வசன ஒத்திகையிலும் தேர்வு பெற்று இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்'' என்று தெரிவித்தார்.

அருவி எப்படிப்பட்டவள்?படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM Image captionஅதிதி பாலன்

''இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பலரும் புதியவர்கள். அதனால் மூன்று மாதங்களாக இந்த திரைப்படத்தின் வசன மற்றும் காட்சி ஒத்திகை நடந்தது. அதனால் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாகவே உணர்ந்தோம்'' என்று அதிதி தெரிவித்தார்.

அருவி எப்படிப்பட்டவள்?

அன்பை பகிர்ந்து கொள்ளும் கதாபாத்திரம்தான் அருவி என்று தெரிவித்த அதிதி, படத்தின் டிரெய்லரில் அருவி ஆவேசமாக தோன்றுவார். ஆனால், முழுப்படத்தையும் பார்த்தால்தான் அந்த கோபத்தின் அர்த்தம் புரியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதிதி பாலன்படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM Image captionஅதிதி பாலன்

முதல் திரைப்படத்திலேயே தனக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அதிதி, ''இனிவரும் திரைப்படங்களில் வெவ்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமுள்ளது'' என்று தெரிவித்தார்.

பார்வையாளர்களை ஈர்க்கும் திரைப்படமா அருவி?

அருவி திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திரைப்பட விமர்சகரான சரா சுப்ரமணியம், ''இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். ஆனால், இது விருதுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படம் என்று ஒரு தவறான பார்வை உள்ளது'' என்று கூறினார்.

தனி மனித உணர்ச்சிகளுக்கு இந்த திரைப்படம் மிகவும் முக்கியத்துவம் தந்துள்ளது என்று குறிப்பிட்ட சரா, ''படத்தின் ஆரம்பம் முதல் தொடர்ந்து பார்வையாளர்களின் கவனத்தை பெறும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஒரு முழுமையான அனுபவத்தை இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு தரும்'' என்று தெரிவித்தார்.

சரா சுப்ரமணியம் Image captionசரா சுப்ரமணியம்

''ஒட்டுமொத்த சமூகத்தின் கோபம் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இந்த கோபத்தை தங்களுக்கு நெருக்கமாக உணர்வர்'' என்று அவர் கூறினார்.

'நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை'

''அருவி போல பல நல்ல திரைப்படங்கள் தமிழில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த போதிலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் வசதிகள் இல்லை. இதில் பல சிக்கல்கள் இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

''பல நல்ல திரைப்படங்களை பொது மக்கள் பார்ப்பதற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை. திரைப்பட ஆர்வலர்கள் கொண்டாடும் பல திரைப்படங்களும் மக்களை சென்றடையாமல் இருப்பதற்கு இதுவே காரணம் இந்த நிலை மாறினால்தான் மக்கள் நல்ல திரைப்படங்களை காண இயலும்'' என்று சரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42335844

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.