Jump to content

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?


Recommended Posts

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

பிட்காயின்படத்தின் காப்புரிமைAFP

இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற வியம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.

பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.

தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 9,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களை கடப்பதற்கு அது ஒரு சில நாட்களையே எடுத்துக்கொண்டது. சமீத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.

பிட்காயின் என்றால் என்ன?

இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. அப்படி பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது ஒப்பீட்டளவில் அறியப்படாத ஒன்றாகும். ஆனால், bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.

பிட்காயின்படத்தின் காப்புரிமைAFP

சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் சுவாரசியமானது.

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.

திடீர் உயர்வுக்கு காரணமென்ன?

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.

பிட்காயின்படத்தின் காப்புரிமைSAUL LOEB

இம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.

மேலும், சர்ச்சைக்குரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

தற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்.

ஆனால், இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஏற்றம் நிலையானதா?

தற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.

மேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.

பிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.

பிட்காயின் வர்த்தகத்தின் பலன்கள்:

  • மிகவும் வசதியானது. பிட்காயின் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்யலாம். விடுமுறைகள் கிடையாது. இதில் வங்கிகளுக்கோ, பணியாளர்களுக்கோ தேவையில்லை. எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறையும்கூட.
  • இதன் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையேயோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் ஒரு அமைப்பு இல்லை. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமோ இல்லை.
  • ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பல மத்திய வங்கிகள் பிட்காயின் வாயிலாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில், பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான 'பிளாக்செயின்" பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதே காரணமாகும். ஆனால், பிட்காயின்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றத்திற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கிரடிட் கார்டு போன்றவை தேவையில்லை.
  • கணக்கு வைத்திருப்பவரின் தகவலும் மற்றும் அக்கணக்கு சார்ந்த தகவல்களும் ரசியமாகவும், மறையாக்கம் (என்க்ரிப்ட்) செய்யப்பட்டும் பாதுகாக்கப்படும்.

பிட்காயினில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன?

பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோககரமானது. ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாக பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிட்காயின்படத்தின் காப்புரிமைAFP

பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரென்றே தெரியாத வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010யில் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர்கள்தான். அதன் பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.

சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளது தெரியும்.

"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை," என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/india-42199410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்திலை இறங்கத்தான் இருக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிட்கொயின் போல் இருபதுக்கும் மேல் கிரிப்டோகரன்சி வகை இருக்கு இது மாத்திரம்  ஏன் பறக்கிது?

வொரன் பப்பட் போன்ற முதலிட்டாளர்கள் இதை பார்த்து திட்டிக்கொண்டு இருக்கினம் .

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

களத்திலை இறங்கத்தான் இருக்கு...:cool:

இப்பிடி யாரிடமும் கேட்க இயலும் என்றால் கேட்டு வாங்குங்கள்.tw_blush:

 

 

Link to comment
Share on other sites

பிட்கொயின் (Bitcoin) எனும் சதுரங்கவேட்டை -வி.இ.குகநாதன்:-

 

bitcoin.jpg

பிட்கொயின் (மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் ) என்பது முதலீட்டு ஆர்வலர்கள்,பொருளியிலாளர்கள் என்பவர்களினது  கவனத்தை மட்டுமல்லாமல்  சாதரண மக்களின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளது.  பிட்கொயின் ஒரு முதலீடா அல்லது ஒரு வகைச் சூதாட்டமா என்ற விவாதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெறுகிறது. இந்த வியாழன் (07-12-2017)இரவுவரை ஒரு அலகானது 52 விழுக்காடு வரை சில பரிமாற்றல்களில் அதிகரித்துக் காணப்பட்டது. இவ்வாறான பெறுமதி அதிகரிப்பே  பலரின் கவனத்தையும் பிட்கொயின் மீது திருப்பியுள்ளது. பிட்கொயின் பற்றிய உரையாடல்கள் ஐரோப்பா,அமெரிக்கக் கண்டங்களைக்  கடந்து ஆசியாவில் இந்தியா போன்ற நாடுகளையும் அடைந்துள்ளது. இப்படிப்பட்ட பிட்கொயின் பற்றி அறிமுகமில்லாதவர்களிற்காக ஒரு சிறு விளக்கத்தை முதலில் பார்ப்போம்.

பிட்கொயின்(Bitcoin):

பிட்கொயின் என்பது டிஜிட்டல் நாணயத்தின் ஒரு அலகாகும்( A  unit of digital currency). இதற்கென ஒரு பௌதீக வடிவம் இல்லை. இது கணனிக்குறியீட்டுத் தொடரிலேயே பேணப்பட்டுவருகின்றது.  Satoshi Nakamoto என்பவரினால் (இவர் இன்னமும் முழுமையாக அடையாளங்காணப்படவில்லை) 2009 தை மாதத்தில்  பிட்கொயின் வெளியிடப்பட்டது. இந்த பிட்கொயினை இணையத்தில் (Blifinex, Coinbase , etc)  வாங்கவும் விற்கவும் முடியும். இந்த பிட்கொயினை சாதாரண கோப்பி குடிப்பதற்கு முதல் விடுமுறை கால முன்பதிவு இணையத்தளங்களில் செய்வதற்குவரை பயன்படுத்தலாம். இவ்வாறான செலவீனங்களை மேற்கொள்வதனைக் காட்டிலும் முதலீட்டு நோக்கத்தில் இந்த நாணயத்தை வாங்குவோரே அதிகம்.

bitcoin2.jpg

 

பிட்கொயின் முதலீடுகள் பாதுகாப்பானவையா?

இந்தக் கேள்விதான் இன்றைய வணிக உலகின் முக்கிய கேள்வியாக எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன்னர், இக் கேள்வியினையே சரி பார்க்கவேண்டியுள்ளது. அதாவது பிட்கொயினை ஒரு முதலீடாகக் கொள்ளலாமா என ஆய்வு செய்யவேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு சூதாட்டமேயன்றி, முதலீடல்ல. ஆரம்ப அறிமுகம் முதலே பிட்கொயின் நடைமுறைகளில் ஒரு வெளிப்படைத்தன்மையோ அல்லது பொறுப்புக்கூறும் தன்மையோ காணப்படவில்லை. அதன் ஏற்றம் எவளவு சடுதியானதோ அதன் இறக்கமும் அவ்வாறேயிருக்கும் என பல பொருளியிலாளர்களால் எதிர்வு கூறப்படுகிறது.  மேலும் இந்த பிட்கொயின்களை சேமித்துவைக்கும் இணைய பணப்பையும் (online wallets) பாதுகாப்பற்றது, ஏனெனில் இதனை இணைய ஊடுருவலாளர்கள் (hackers) ஊடுருவி திருடிக்கொள்ளும் ஆபத்து எப்போதும் உண்டு.  இதே ஆபத்து இணைய வங்கி நடைமுறைகளிலும் (online banking) உண்டாயினும், அங்கு வங்கிகளாலும் அரசாலும் வழங்கப்படும் குறிப்பிடத்தக்களவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் எதுவும் இங்கில்லை.

bitcoin3.jpg

மேலும் இதன் ஆதரவாளர்கள் இங்கு ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பங்குச் சந்தையுடன் ஒப்பிடுகிறார்கள். அந்த ஒப்பீடும் தவறு, ஏனெனில் பங்குகளின் தளம்பல்களை ஒரளவிற்குப்  பொருளியல், அரசியல் அறிவுடையோரால் எதிர்வுகூறமுடியுமாகக் காணப்பட, மறுபுறத்தே  பிட்கொயின் தளம்பல்களை யாராலும் எதிர்வுகூற முடியாதநிலையே காணப்படுகிறது.

இந்த பிட்கொயின் நடைமுறை சற்றுச் சிக்கலானதாயினும் நாம் எளிமையாக விளங்கிக்கொள்ள  இதனை நாம் வளர்முக நாடுகளில் காணப்படும் வைப்புக்களிறகு அதிக வட்டி வழங்கும் தனியார் நிதிக்கம்பனிகளுடன்(finance companies) ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம். இந்த நிதிக்கம்பனிகள் வங்கிகளைவிட வைப்புக்களிற்கு அதிகவட்டி வழங்குவதால் திடீரென வாடிக்கையாளர்கள் படையெடுப்பர். வைப்புக்கள் அதிகரிக்க அதிகரிக்க  வட்டியும் அதிகமாக வழங்கப்படும். வைப்புக்களின் வருகை ஒரு கட்டத்தில் குறைய ஆரம்பிக்க இந்த நிதிநிறுவனங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும். வளர்ந்ததை விட பல மடங்கு வேகத்தில் சரிவடையும். இதே நிலமைதான் இந்த பிட்கொயின்களிற்கும் ஏற்படப்போகின்றது.

bitcoin4.jpg

இந்த பிட்கொயின்களின் பெறுமதியானது எப்போதுமே  இன்னொருவரின்  வாங்கும் விருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளதுடன் இதன் பெறுமதியினை உறுதிப்படுத்துவோரும் யாருமில்லை. ஒரு கட்டத்தில் இதனை வாங்குவோரின் விருப்பம் குறைவடையத்தொடங்கும்போது,இதன் சரிவும் ஆரம்பிக்கும். இதிலுள்ள மற்றொரு குறைபாடு யாதெனில் மற்றைய முதலீடுகளில் காணப்படும் வருமானவழிமுறைகள் எதுவுமே இதிலில்லை. அதாவது பங்குமுதலீட்டில் கிடைக்கும் பங்கிலாபம், வீட்டுமனைத்துறை (Real estate)யிலுள்ள வாடகை போன்ற வருமான மூலங்கள் எதுவுமே இங்கில்லை. இந்த பிட்கொயினானது பெறுமதி அதிகரிப்பில் மட்டுமே தங்கியிருப்பதுடன், அதன் பெறுமதிக்கு எந்தவித உத்தரவாதமும் காணப்படவில்லை. மேற்கூறிய காரணங்களாலேயே பிட்கொயினானது ஒரு முதலீடாகவல்லாமல் சூதாட்டமுறையாகவே கருதப்படவேண்டியுள்ளது.

bitcoin5.jpg

இதுகாறும் பிட்கொயின் நடைமுறையால் பொதுமக்களிற்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பார்த்தோம். அரசுகளைப் பொறுத்தவரையில் பிட்கொயினானது ஒரு கறுப்புப்பண முதலீடாகவும், சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கான பணப்பரிமாற்ற வழியாகவும் இலகுவாக பயன்பட நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.  இவளவு ஆபத்துக்கள் காணப்படுகின்றபோதும் இந்த பிட்கொயினை அரசுகள் கண்டுகொள்ளாமலிருப்பதற்கான அரசியல் நுட்பமாக ஆராயப்படவேண்டியுள்ளது.

bitcoin1.jpg

http://globaltamilnews.net/archives/54107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நவீனன் said:

இப்பிடி யாரிடமும் கேட்க இயலும் என்றால் கேட்டு வாங்குங்கள்.tw_blush:

 

 

  எல்லாம் சரி......இந்த வயதிலை பொம்பிளைக்கு  இனிநான் ஆர்ரை கையை புடிக்கிறது?  :(

Link to comment
Share on other sites

5 வருடங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவன் அடிக்கடி பிட்கொயின் பற்றிப் பேசுவான். அலுப்புத் தாங்க முடியாமல் இன்னொரு நண்பன் இனி அந்தப் பேச்சையே எடுக்காதே என்று சொல்லிவிட்டான். அப்போது ஒருசில டொலர்களிலேயே விலை போனது. அன்று நாலைஞ்சு வாங்கியிருந்தால் இன்று கதை மாறியிருக்கும். :cool:

அண்மையில் அதே நண்பனைச் சந்திக்க நேர்ந்தது. நான்தான் கோட்டை விட்டேன் அவனாவது வாங்கி வைத்திருப்பானா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இனி வாங்குவது 90 வீதம் நேரே சுவரில் மோதிக்கொள்வதற்குச் சமன். 

சென்ற வாரம் அவுஸ்திரேலியாவும் தனது பங்குச் சந்தையில் Blockchain இனை இறக்கி உள்ளதாக வாசித்தேன்.

Link to comment
Share on other sites

பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா?

 
பிட்காயின்படத்தின் காப்புரிமைAFP

மின்னணு பணமான பிட்காயின் வளர்ந்த நாடுகளை விட அதிக மின்சாரம் பயன்படுத்துகிறது என்ற கூற்று சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டது. எனவே, பிபிசியின் உண்மையை கண்டறியும் அணியானது அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அது உண்மைதானா? என்பதை ஆராய்ந்தது.

பிட்காயின் என்பது 2009 ஆம் ஆண்டு முதல் இருந்தபோதிலும், மின்னணு நாணயம் அல்லது கிரிப்டோகரன்சியானது, சமீபத்தில் அதில் ஏற்பட்ட மதிப்புயர்வின் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது.

உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தாள்கள் அல்லது நாணயங்களைப் போலல்லாமல், பிட்காயின் அரசாங்கங்களாலும் அல்லது பாரம்பரிய வங்கிகளாலும் அச்சிடப்படாது, பெருமளவில் ஆன்லைனையே இருப்பிடமாக கொண்டுள்ளது.

"மைனிங்" என்று அழைக்கப்படும் ஒரு சிக்கலான செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு நாளும் 3,600 புதிய பிட்காயின்கள் உருவாக்கப்படுகிறது. சிறப்பு மென்பொருளால் கணித சமன்பாடுகளை செயல்படுத்தி கணினிகளின் மூலம் செயற்படுத்தி பிட்காயின் உருவாக்கப்படுகிறது.

இந்த சமன்பாடுகளை செயலாக்கும் ஒரு சில கணினிகளை தவிர, உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் பிட்காயின்களின் செயல்பாட்டிற்காக இயங்கி வருகிறது. மேலும், அதற்கு அதிகளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது.

பிட்காயின்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மைனிங் செயற்பாட்டின் மூலம் பிட்காயின்களை பெறுவதற்காக துறை சார்பற்றவர்களும், தொழில்முறையில் இதை மேற்கொள்பவர்களும் புதிய கணினிகளையும், இயந்திரங்களையும் பயன்பாட்டுக்கு உட்படுத்துகின்றனர்.

மின்னணு செயற்பாட்டை அடிப்படையாக கொண்ட பிட்காயின்களை உருவாக்குவதற்கும், அதை நிர்வகிப்பதற்கும் உண்மையிலேயே எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்பதை அறிவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர்.

'டென்மார்க் பயன்படுத்தும் அளவுக்கு ஈடாக"

திகைப்பிற்கு இடமின்றி ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிட்காயின்களின் எரிசக்தி பயன்பாட்டை பற்றிய கூற்றுகள் வளம் வர ஆரம்பித்தன.

இதுபோன்ற ஒப்பீடுகள் சரியானவையா?

பிட்காயின் போன்ற மின்னணு நாணயங்களின் எரிசக்தி பயன்பாட்டின் பற்றிய அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை என்பதால், இதற்கான கூறிய பதிலை கூறுவதென்பது மிகவும் கடினமாகும்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @EricHolthaus
 

Uhhh... about bitcoin... it's actually ruining the planet.

The bitcoin computer network currently uses as much electricity as Denmark. In 18 months, it will use as much as the entire United States.

Something's gotta give. This simply can’t continue.https://grist.org/article/bitcoin-could-cost-us-our-clean-energy-future/ 

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @EricHolthaus

மின்னணு நாணயத்தின் மதிப்பைக் காட்டிலும் வேறு எந்தவொரு கண்ணோட்டத்தையும் சரிபார்ப்பதென்பது மிகவும் கடினமானது. ஏனெனில், பிட்காயின்கள் செயல்படுவதற்கு மூலக் காரணியாக உள்ள கணினிகள் ஒன்றுடொன்று பிண்ணிப் பிணைந்து இணையத்திலேயே செயல்படுகிறது.

செயல்பாட்டு செலவுகள்

ஆனால், இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு பலர் முயற்சித்தனர். பொதுவான மைனிங் தொழில்நுட்பத்தின் செயல்திறன் குறிப்புக்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் கிரிப்டோகரன்சி வலைத்தளமான டிஜிகோனிஸ்ட் அளிக்கும் தரவுகளை கொண்டே பிட்காயின்களின் எரிசக்தி பயன்பாடு தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

மைனிங் மூலம் திரட்டப்படும் வருவாயை ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக் கொண்டு, அதன் செயல்பாடு சார்ந்த விடயங்களுக்காக செலவிடப்படும் தொகையுடன் அதை வகுக்கும்போது எரிசக்தி பயன்பாட்டுக்காக செலவிடப்படும் தொகை மற்றும் எரிசக்தியின் அளவுக்கான சராசரி கிடைக்கிறது.

பிட்காயின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த மதிப்பீட்டு முறையின்படி, பிட்காயின்களின் நிகழாண்டு எரிசக்தி பயன்பாடு கிட்டத்தட்ட 32.56 டெராவாட் மணிநேரங்கள் (TWh) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறுதான் மற்ற நாடுகளுடனான ஒப்பீடும் செய்யப்படுகிறது.

உதாரணத்திற்கு யூரோஸ்டாட்டிடமிருந்து பெறப்பட்ட தரவின்படி 2015ல் டென்மார்க் 30.7 TWh எரிசக்தியையும், அயர்லாந்து 25.07 TWh எரிசக்தியையும் உபயோகித்துள்ளது.

எனவே, இம்மேற்கண்ட முறையை நீங்கள் பயன்படுத்தினால், ட்விட்டரில் நீங்கள் பார்த்த ஒப்பீடுகள் பரந்தளவில் சரியானவை என்று கூறலாம்.

ஆனால், இம்முறையானது ஊகங்களையும், மதிப்பீடுகளையும் பயன்படுத்துவதால், டிஜிகோனிஸ்ட் தெரிவிக்கும் விடயங்களுக்கு விமர்சகர்கள் இருக்கிறாரகள் என்பது ஆச்சரியமல்ல.

ஆய்வாளரான மார்க் பெவன்ட், இந்த முறை தவறானது என்று வாதிடுகிறார். ஏனெனில் மைனிங் செய்பவர்கள் பயன்படுத்தும் புதிய மற்றும் அதிக சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை இதுபோன்ற மதிப்பீட்டை செய்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், "மைனிங் மூலம் கிடைக்கும் வருவாயில் 60% எரிசக்தி பயன்பாட்டுக்காக செலவிடப்படுவதாக கூறப்படும் ஊகம் தவறானதாகும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அக்டோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், பிட் காயினின் மதிப்பீட்டு சந்தை மூலதன மதிப்பானது கோல்ட்மேன் சாச்ஸ் மற்றும் ஈபே போன்ற நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்புகளை கடந்துவிட்டது. இந்நிலையானது, விரைவில் கிரிப்டோகரன்சிகள் ஒரு ஒட்டுமொத்த நாட்டுடன் ஒப்பீடு செய்யுமளவுக்கு செல்லுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு அல்லது பொருள்சார்ந்த தயாரிப்பாக இருந்தாலும், ஒரு தயாரிப்பின் எதிர்காலமென்பது அது எவ்வளவு குறைவான தொகையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை பொறுத்தே உள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த பிட்காயின்களின் எண்ணிக்கை 16.7 மில்லியனாக உள்ளது. மேலும், இது தனது உச்சபட்ச எண்ணிக்கையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 21 மில்லியனை எட்டும் வரை தொடரும்.

மின்சாரம் மலிவானதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் இருக்கும் வரை, தொழில்நுட்பம் உடனடியாக பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. மேலும் மின்னணு நாணயத்தின் மதிப்பு, உற்பத்தி செலவுகளை சமாளிப்பதற்கு போதுமானதாக உள்ளது. பிட்காயின் அதன் அதிகபட்ச எண்ணிக்கையான 21 மில்லியனை அடையும் வரை தொடர்ந்து தலைப்பு செய்தியை ஆக்கிரமிக்கலாம்.

http://www.bbc.com/tamil/global-42326961

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

உலகின் முதல் பிட்காயின் கோடீஸ்வரர்கள் யார் தெரியுமா?

டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள் உலகின் முதல் பிட்காயின் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி?

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம்  !

இலவச எண்மநாணயம்  Digital coin /currency

ஐ. சி.ஓ.என்ற சந்தைக்கு வரும் முன்னரான ஒருவித எண்மநாணயம்

உங்கள் முதலீடு -பூச்சியம்

காலம் : தை 31க்குள் ( Jan 31, 2018 )

இதன் பெறுமதி என்ன? சந்தைக்கு வரும்பொழுது தான் தெரியும்

எவ்வாறு பெறுவது? இந்த இணைப்பை அழுத்தவும்: https://wizzle.referralrock.com/l/GANESANANDAN/

இதை பெற என்ன தேவை:
1. மின்னஞ்சல் முகவரி
2. இலத்திரனியல் பண உறை (  digital wallet)) இதை எவ்வாறு பெறுவது?
https://myetherwallet.github.io/knowledge-base/getting-started/getting-started-new.html

மேலதிக தகவல்:  https://wizzle.io
Solution : Proposed solution will help everyone buy, sell and trade cryptocurrency in their everyday life.

Revenue model : Every time you complete a financial transactions with one of the WIZZLE services you automatically earn WIZZLE Infinity tokens – WZI!
WZI - which can be used for future transactions. You earn tokens for using any Wizzle service.

நன்றி 

Link to comment
Share on other sites

கல்வி : சங்கிலி கட்டமைப்பு தொழில்நுட்பம்

வணக்கம் !

இந்த சங்கிலி கட்டமைப்பு தொழில்நுட்பம் இனிவரும் காலங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும். ஆனால் இது பற்றிய கல்விவசதி இன்று மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது.

சில இலவச மற்றும் பணம் செலுத்த வேண்டிய இணைய வலைகளை பார்க்கலாம்:

https://www.b21block.com/
https://www.youtube.com/channel/UC1y2yA6CTN_O866SkeNnfYg

https://www.coursera.org/learn/ibm-blockchain-essentials-for-developers

https://www.udemy.com/blockchain-and-bitcoin-fundamentals/

இந்தியாவில் வேலை வாய்ப்புக்கள்: https://www.naukri.com/blockchain-jobs

நன்றி.

Link to comment
Share on other sites

சங்கிலி கட்டமைப்பின் அனுகூலங்கள் / பிரதிகூலங்கள் 

வணக்கம் !

சதோஷி நாக்கமுட்டொ ; யார் இவர் என்பது புரிந்தும் புரியாத புதிராக உள்ளது. இவர் ஜப்பானியரா இல்லை அமெரிக்க வாழ் ஜப்பானிய குடிமகனா ? இல்லை இந்த பெயரில் ஒரு குழுவா? இல்லை இவர் அமெரிக்க முன்னாள் உளவாளியா ? என பலரும் பல்வேறு ஆதாரமற்ற எண்ணங்களை முன்வைக்கின்றார்கள்.

இவர் யார் என்பதை விட இவரின் சிந்தனை என்ன என பார்ப்போம்.

பிட்கொயின் மற்றும் சங்கிலிகட்டமைப்பின் தந்தை என கருதப்படுபவர் சதோசி நக்கமோட்டொ. இவர் ஒரு வெள்ளை படிவத்தை  பிரசுரித்தார். துறைசார் வல்லுனர்கள் பலரும் பார்த்து இதன் திறமையை புரிந்து அவருடன் இணைந்து அதற்கு செயல் வடிவம் கொடுத்தனர். 

எந்த திட்டமும் ஒரு இலக்கை கொண்டிருக்கவேண்டும். அந்த வகையில் இவர் சாதிக்க எண்ணியது உலகின் ஒரு மூலையில் உள்ள ஒருவர் இன்னொரு மூலையில் உள்ளவருக்கு எண்மநாணயம் அதாவது டிஜிடல் நாணயம் ஊடாக மின்வலையில் அனுப்பலாம். இவ்வாறு 2009இல் வெற்றிகரமாக அனுப்பிய இவர் பின்னர் மறைந்துவிட்டார். ஆனால், இவர் உருவாக்கிய பிட்கொயின் இன்று பலவேறு எண்மநாணயங்களை உருவாக்கி ஒரு புதிய நாணய பொருளாதரத்திற்கு வித்திட்டுள்ளது.

இந்த பொருளாதாரம் ஆரம்பித்து சில வருடங்களே ஆன நிலையில் இதன்மூலம் இலகுவாக ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கூட்டமும் தமது கைவரியத்தை காட்டி வருகின்றது.

இதன் அனுகூலங்கள் சிலவற்றை பார்ப்போம்:

மூன்றாம் நபராக சங்கிலிகட்டமைப்பு செயல்படுகின்றது. அதாவது வர்த்தக வங்கிகள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் குறைந்த செலவிலும் அதிக வேகத்திலும் செய்கின்றது. உதாரணத்துக்கு குவைத்தில் வேலை செய்யும் என் நண்பன் தாயகத்தில் உள்ள உறவிற்கு பணம் அனுப்ப வர்த்தக வாங்கிற்கு ஒரு தொகையையும் செலுத்தி பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதை சங்கிலி கட்டமைப்பு ஊடாக செய்யும்பொழுது நண்பன் அனுப்பும் பணம் பற்றிய தகவல் இந்த சங்கிலிகட்டமைப்பில் இணைக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் கணணிகளில் பதியப்படுகின்றது. இதனால் அனுப்பிய பணத்தை கிடைக்கவில்லை என உறவும் கூறமுடியாது நானும் அனுப்பிய பணம் உறவிற்கு கிடைக்கவில்லை என பொய் பேச முடியாது.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தை யாரும் ஊடறுக்கவில்லை. அதாவது 'ஹாக்கிங்' செய்ய முடியாத தொழில்நுட்பமாக இந்த சங்கிலி கட்டமைப்பு விளங்குகின்றது.

அரசுகளும் நிறுவனங்களும் இந்த சங்கிலிகட்டமைப்பு தொழில்நுட்பத்தை ஏற்று வர தொடங்கியுள்ளன.

இதன் பிரதிகூலங்கள் சிலவற்றை பார்ப்போம்:

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல ஏமாற்று விற்பனைகள் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன.இது பல அரசுகளுக்கும் நெருக்கடியை தரும் நிலை உள்ளது. 

இவற்றை வேண்டி விற்கும் நிறுவனங்கள் அரச கட்டுப்பாட்டுக்குள் எல்லா நாடுகளிலும் இல்லை. இவற்றை அதிக அளவில் வேண்டும் மக்கள் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா. அமெரிக்க மட்டும் ஜப்பானில் அரசுகள் சில வரையறைகளை  விதித்து வருகின்றன. அதன் மூலம் இவை தடை செய்யபட மாட்டா என்ற நம்பிக்கை உள்ளது. 

நன்றி. 

 

Link to comment
Share on other sites

சங்கிலி கட்டமைப்பு - அதன் பொருளாதார தாக்கம்

வணக்கம் !

சங்கிலி கட்டமைப்பு (Blockchain) அதன் தொழில்நுட்பம் மற்றும் அதன் பொருளாதார தாக்கமும்

பொதுவாக இன்றுவரை அநேகமான மெகா நிறுவனங்கள் தாமே நுகர்வோர்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் வைத்துக்கொண்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் அதிக பணத்தை மேற்கொள்ளுவதுடன் அதுவே நுகர்வோர்கள் மற்றும் அவர்கள் பற்றிய சகல தகவல்களையும் கொண்டுள்ளது. இதுவே இணைய ஊடறுப்பிற்கும் (ஹாகிங்) செய்து தகவல்களை பெறவும் வழிசமைக்கின்றது.

சங்கிலி கட்டமைப்பு ஊடாக வடிவமைக்கப்படும் தொழில்முறையில் இலாபத்தினை பகிரவும் இணைய ஊடறுப்பினை தடுக்கவும் முடிகின்றது.

சமூக வலைத்தளங்கள் : உதாரணத்திற்கு முகநூல் கோடிக்கணக்கில் மக்கள் செலவிடும் நேரத்தை வைத்து உழைக்கின்றது. ஆனால், புதியாய் தொடங்கிய தளங்கள் மக்களுக்கு பணத்தை தருகின்றது.

https://steemit.com இவ்வாறான ஒரு சமூக வலைத்தளம். இதில் நீங்கள் இடும் பதிவுகள், கருத்துக்கள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

https://d.tube இதில் நீங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

இவை இரண்டுமே ஓரிடத்தில் இல்லாமல் உலகம் எல்லாம் சங்கிலி கட்டமைப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று வேறு பல தொழில் முறைகளிலும் இந்த தொழில்நுட்பம் உள்ளே நுழைய ஆரம்பித்துள்ளது.

பிறப்பு அத்தாட்சி / வீடு உரிமை பத்திரங்கள் - இதை இந்த தொழில்நுட்பத்தை பாவித்து தரவேற்றம் செய்ய சில அரசுகள் முடிவு செய்துள்ளன. காரணம், இதன் தகவல்களை யாரும் மாற்ற முடியாது.

பழுதான ஆரோக்கியம் அற்ற பொருட்களை கடைகளில் கடைகளில் இருந்து அகற்றவும் ( supply chain ) இது பயன்பட உள்ளது. உதாரணத்திற்கு ஒரு குறிப்பிடட விளையாட்டு பொருள் ஆபத்தானது என ஒரு நிறுவனம் முடிவு செய்து அதை அகற்ற இந்த தொழில்நுட்பம் மூலம் உலகம் முழுவதும் அவை உள்ள கடைகளுக்கு ஒரு நொடியில் அடையாளம் கண்டு அனுப்பிவிடலாம்.

நன்றி 

Link to comment
Share on other sites

எண்ம நாணய துரித வளர்ச்சிற்கு என்ன ( யார்) காரணம் ?

வணக்கம் !

எண்ம நாணய துரித வளர்ச்சிற்கு என்ன ( யார்) காரணம் ? மத்தியவங்கிகளும் ( கொள்கைகள்) , மெகா பணக்காரர்களும் (நிறுவனங்களும்).?

சேமிப்பு: மத்திய வங்கிகள் அதிக பணத்தை அச்சடித்து அதன் மூலம் வட்டி வீதத்தை குறைத்து வருவது. இதனால் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் இல்லாமல் போனது.

மெகா பணக்காரர்கள் : அவர்கள் இந்த வட்டி குறைந்த பணம் மூலம் நிறுவனங்கள் வீடுகளை வேண்டி அதன் மூலம் மேலும் பணம் சேர்க்கின்றனர்.

பண வீக்கம் : பல பொருளாதார வளர்ச்சி குறைந்த நாடுகளில் மக்கள் பண வீக்கத்திற்கு எதிராக போராடுவதிற்கு வழி தேடி வருகின்றனர்.

ஏமாற்றும் அரசியல் தலைமைகள் : சிம்பாவே மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளில் மக்களின் பணத்தை அரசுகளே சூறையாடுகின்றன.

இவை போன்ற வேறு பல காரணங்கள் எண்மநாணய வளர்ச்சிக்கு ஒரு தேவையாக உள்ளது.

அன்று பலரும் தங்கத்தை ஒரு சேமிப்பாக கருதினர். ஆனால் இன்றை மற்றும் வரும் தலைமுறைகள் அதில் நாட்டம் காட்டுமா? என்பது கேள்வியே. தங்கத்தின் இடத்தை சில எண்மநாணயங்கள் பிடிக்கக்கூடும். 

இன்றைய உலகில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் எந்தவிதமான வங்கிவசதியும் இல்லாமல் உள்ளனார். இவர்கள் தமது செல்லிடை தொலைபேசி மூலம் மேற்குலக சட்டங்களுங்கி அமைய வங்கி வசதிகளை செய்து தரும் நிலைமை உருவாகியுள்ளது. 

உலகில் 14 நாடுகளின் மத்திய வங்கிகளே அதீத நம்பகத்தன்மையை கொண்டுள்ளன. இதானால், பல மக்களும் மாற்று வழிகளை தேடி வருகின்றனர்.  

புலம்பெயர்ந்து வாழும் உலக மக்கள் அனுப்பும் பணத்தில் 600 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் வரை வங்கிகளும் தரகர்களும் எடுக்கின்றனர். 

நன்றி !

Link to comment
Share on other sites

பிட்கொயின் BTC - எதெரியம் ETH

இந்த இரண்டும் தான் மொத்த பெறுமதியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன.
இவற்றின் பெறுமதியை எங்கே பார்க்கலாம் ? https://coinmarketcap.com/

என்ன வித்தியாசம் ? என்ன வேற்றுமை?
ஒற்றுமை : இரண்டுமே சங்கிலி கட்டமைப்பில் (Blockchain) (bவடிவமைக்கப்பட்டவை. அவை ஓரிடத்தில் இல்லாமல் பல வேறு இடங்களிலும்  (decentralized) பேணப்படுகின்றன. இரண்டுமே நீண்ட அனுபவம் கொண்ட குழுமங்கள், ஆர்வலர்களை கொண்டவை.

இரண்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான எண்ணிக்கியை மட்டுமே கொண்டிருக்கும், அவற்றின் கடைந்தெடுக்கும் காலம் (minig) முடிகையில்.

இரண்டுமே கொயின் வகையை சார்ந்தவை. அடுத்த வகை - டோக்கின். ஆனால் எதெரியம், எதேர் என்ற டோக்கினையும் கொண்டது.இது ஒப்பந்தபடுத்தப்பட்ட சேவை முடித்து கொடுக்கும் தருவாயில் மட்டுமே சேவை பெற்றவர் பணத்தை செலுத்தும் வசதியை (smart contract) செய்துள்ளது. இதனால் பலரும் தமது வியாபார சேவைகளை எதேர் மூலம் எதெரிய சங்கிலி கட்டமைப்பில் வடிவமைக்கின்றனர்.

இரண்டையுமே நீங்கள் அவற்றின் மில்லியனனின் ஒரு பங்களவில் வேண்டலாம்.

பலவேறு புதிய திட்டங்கள் (DAPP) எதரை பாவித்து வடிவமைக்கப்படுகின்றது. இதனால் இது பிரபலமடைந்து வருகின்றது. 

மின்வலையில் தமது வர்த்தக பரிவர்த்தனை செய்வதில் எதர் பிட்கொயினை விடவேகம் கூடியது 

Bitcoin's blocks with 1MB block -  3.3 and 7 transactions per second. Ethereum 20 transactions per second

Paypal 193 transactions per second and Visa 1667 transactions per second 

அதேவேளை பிட்கொயினின் பரிவர்த்தனை கட்டணமும் கூட https://bitcoinfees.earn.com/

நன்றி .

Link to comment
Share on other sites

பிட்கொயின் BTC - லைட்கொயின் LTC

வணக்கம்!

பலவழிகளிலும் லைட்கொயின் பிட்கொயின் போன்றதே. இரண்டுமே சங்கிலிகட்டமைப்பு  வடிவமைப்பை கொண்டன. அதேபோன்று மைனிங் மூலம் இரண்டுமே உருவாக்கப்படுகின்றன. இரண்டின் பரிவர்த்தனைகளுமே மைனிங் மூலம் செயல்படுத்தப்பட்டு மீளஅழிக்கப்படமுடியாத பதிவை ஏற்படுத்துகின்றன. 

வித்தியாசங்கள் என பார்க்கும் பொழுது லைட்கொயின் விரைவான பரிவர்த்தனையையும் மலிவான பரிவர்த்தனை கூலியையும் கொண்டுள்ளன. 

மொத்தத்தில் லைட்கொயின் வெள்ளிக்கு ஈடாகவும் பிட்கொயின் எண்மநாணய உலகில் தங்கமாகவும் பார்க்கப்படுகின்றன. 

நன்றி.

Link to comment
Share on other sites

நாடுகளும் மற்றும் இனம் சார்ந்த எண்மநாணயங்களும் 

வணக்கம் !

வளமான நாடு இருந்தும் உலகில் கடினப்படும் மக்கள் உள்ளனர். உதாரணம் - வெனிசுவேலா. 
வளமில்லா நாடு இருந்தும் உலகில் ஆளுமை உள்ள நாடாக இனமாக உள்ளது இஸ்ரேல் - யூத மக்கள் 

வெனிசுவேலா மக்கள் தமது சேமிப்புக்கள் சரிவதை கண்டு இதற்கு மாற்றீடாக எண்மநாணயங்களை நாடினர். அரசும் அதை தடை செய்ய முயல்கின்றது. ஆனால், இன்று அதே அரசு தனக்கான ஒரு எண்ம நாணயத்தை உருவாக்குகின்றது. காரணம் - தன் மீதான பொருளாதார தடையை தாண்டும் நோக்கம்.

A “pre-sale” of Venezuela’s new ‘petro’ cryptocurrency will begin on Feb. 20, President Nicolas Maduro said on Tuesday, a move that the government hopes will help pull the country out of a dire economic crisis.

 

அதேவேளை பிட்ட்கொயின் BitCoen என்ற பெயரில் உலகம் முழுவதும் பரந்து வாழும் யூத மக்களை இணைக்க முயலுகின்றது. 

https://bitcoen.io/

BitCoen (abbreviated BEN) - the first "kosher" official crypto token, business platform and system of services, created for interaction between representatives of the communities around the world. 

உலகம் முழுவதும் பரந்து வாழும் யூத மக்கள் தங்கள் பொருட்களை வாங்கவும் அவற்றை விளம்பரப்படுத்தவும் மக்களுக்கு உதவவும் இது பயன்படும் என இதன் வெள்ளை பத்திரம் கூறி நிற்கின்றது. 

நன்றி !

Link to comment
Share on other sites

எண்மநாணயங்களும் மத்திய வங்கிகளும் 

வணக்கம் !


ஒருநாட்டின் இறைமை என்பதில் அந்த நாட்டின் பணம் ஒரு முக்கிய இடம்பெறுகின்றது. ஒரு காலத்தில் பண்டமாற்று செய்த மனிதகுலம் பின்னர் தங்கம் மூலம் அதன் பெறுமதியை உறுதி செய்த அமெரிக்க டாலரில் இருந்து ரூபாய் வரை சென்றன. ஆனால், வர்த்தக வங்கிகள் செய்யும் தவறுகள் மூலம் அதை நிவர்த்தி செய்ய கோடிக்கணக்கில் பணத்தை அச்சடித்த அமெரிக்க டாலரில் இருந்து கருப்பு பணம் சேர்க்கும் வளரும் நாடுகளில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் இந்த எண்மநாணய பிறப்பிற்கு வித்திட்டுள்ளனர். 

நேற்று இருக்கவில்லை ஊபர். நாளை இருக்கலாம் அமசோன். நாளை மறுநாள்?

புதிய தொழில்நுட்பமும் தயக்கமும் 
நேராக உயரமாக முதலில் வளரும் எதுவும் வெட்டப்படும் அபாயம் கொண்டது. முதலில் கடன்மட்டைகள் வந்த பொழுது மக்கள் பயப்பட்டனர். முதலில் மின்வலை ஊடக பணம் அனுப்ப மக்கள் தயக்கப்பட்டனர். ஆனால், இவைபோன்ற தொழில்நுட்பங்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்டன. 

பொருளாதாரமயப்படுத்தப்பட்ட உலகம் 
1989இல் பெர்லின் சுவர் உடைந்த நாளே உலகம் கிடையாகிவிட்டது. இன்று பொருளாதாரம் உலக மயமாகிவிட்ட்து. இந்த உலகில் இன்னும் ஏன் பலவேறு நாணயங்கள் வேண்டும்? 

அப்படி ஒன்றாக தங்கம் பார்க்கப்பட்டது.அதையும் 60 த்ரிலியன்கள் "அமெரிக்க"டாலர்கள் என மதிக்கப்பட்டது. இதனால் பயன் பெற்றவர்கள் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தவர்கள். 

உதாரணத்திற்கு உலகில் சிறந்த கோப்பியை உருவாக்கும் ஏழை மக்களுக்கு அவர்களின் உண்மையான உழைப்பின் பெறுமதியை எண்மநாணயம் உறுதி செய்ய முடிந்தால் அந்தசமூகத்தின் வாழ்க்கை சிறக்கும். அப்படியான ஒரு எண்ண அடிப்படையில் உருவானது இந்த திட்டம்.: https://cryptokafe.io/

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மாறுவது எல்லாம் உயிரோடு. 

நன்றி.

 

Link to comment
Share on other sites

எண்மநாணயங்களை அரசுகளால் தடை செய்யமுடியுமா ? 

வணக்கம்!  துணிந்தவர் தோற்றது இல்லை. தயங்கியவர் வென்றது இல்லை.-மகாகவி பாரதி 

கட்டுப்படுத்தலாம், ஆனால் தடை செய்யமுடியாது. இதை அண்மைய சீனா மற்றும் தென்கொரிய நாட்டு அரசுகளின் நிலைப்பாடுகள் கூறி நிற்கின்றன. அடிப்படையில் இந்த எண்மநாணயங்கள் மின்வலை வசதி இருந்தால் மேற்கொள்ளலாம்  என்ற நிலை இருப்பதால், மின்வலை தடை மூலமே அதை செய்யலாம். 

ஜப்பான் அதிகளவில் எண்மநாணயத்தை ஊக்குவிற்கும் நாடாக பார்க்கப்படுகின்றது. பல அன்றாட தேவைக்கான பாவிப்பில் ஜப்பான் முன்னணி வகிக்கின்றது. இருக்கும் சவால்களை அரசு இணைந்து இந்த துறையை வளர்க்கின்றது. 

மிகப்பலம் வாய்ந்த அமெரிக்கா எண்மநாணயம் ஒரு சொத்தா? இல்லை பணமா? இல்லை ஒரு நிறுவனத்தின் பங்கு போன்றதா என நிர்ணயிக்க முடியாமல் உள்ளது. ஆனால், இதில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்த நாட்டின் சட்டத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என கூறிவருவது தடையை அதுசெய்யாது என்பது பரவலான எதிர்பார்ப்பு. அத்துடன் இது சம்பந்தப்பட்ட பலவேறு முதலீடுகளை அனுமதித்து வருகின்றது. 

அமெரிக்கா,ஜப்பான் மற்றும் சீனா எண்மநாணயத்தை தடைசெய்யாவிடில் உலகம் ஏற்றுக்கொள்கின்றது என கொள்ளலாம். 

நன்றி. 

Link to comment
Share on other sites

எண்மநாணய சந்தை 

நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நம் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புக்கள் உள்ளன. 
- அய்யா அப்துல் கலாம் அவர்கள் 

 

1. பங்கு சந்தைகள் போன்று எண்மநாணய சந்தைகளும் உள்ளன. அந்தந்த நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமைய அமைக்கப்பட்ட காப்புறுதி செய்யப்பட்ட  சந்தைகள் உள்ளன. 

நீங்கள் இங்கே எண்மநாணயங்களை வாங்கலாம் விற்கலாம். 

2. சிறப்பு வடிமைப்பை கொண்ட தளங்களில் இவர் தாம் இணங்கிய விலைக்கு இணங்கி பரிமாறலாம். 

இவை இரண்டையும் தவிர வேறு வழிகளும் உள்ளன. 

Link to comment
Share on other sites

எண்மநாணய கணக்கும் பாதுகாப்பும் 

வணக்கம் !

பொதுவாக வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வேண்டி மக்களுக்கு ஒரு வட்டியை வைத்து விற்பார்கள். இதற்கு மேலை நாடுகளில் பாதுகாப்பு உத்தரவாதமும் ( insurance ) உள்ளது. ஆனால், வளர்ந்து நாடுகளில் மக்கள் பொதுவாக அரச வங்கிகளில் முதலிடுவது பாதுகாப்பு என நம்புவர். ஒரு காரணம் - அவர்களுக்கு மாற்று வழிகள் என பல இருப்பதில்லை. 

எண்மநாணய கணக்கு வைத்திருக்கும் பொழுது நீங்களே உங்கள் வாங்கி, அதற்கான பாதுகாப்பு.
வைத்திருக்கும் கணக்காளர்கள் இரண்டு திறப்பை வைத்திருப்பர். 

  • ஒன்று - பொதுவான திறப்பு  ( public key)
  • இரண்டு - உங்களுக்கான தனியார் திறப்பு  (private key )  

இந்த தனியார் திறப்பை நீங்கள்  உங்கள் மின்னஞ்சல்முகவரியில் இல்லை கணணியில் வைத்திருக்கும் பொழுது அதை திருடி உங்கள் பணத்தை இழக்கும் சாத்தியம் உள்ளது. 

இந்த தனியார் திறப்பை நீங்கள் இழந்தால் மீளபெற முடியாது.பலர் இதை பல இடங்களில் ( வீட்டில், வேலை தளத்தில்,..) எழுதி வைத்திருப்பர். 

அதேவேளை எண்மநாணய சந்தை கணக்கில் வைத்திருந்தாலும் ஆபத்தே. இவ்வாறு பல எண்மநாணய சந்தைகள் சூறையாடப்பட்டுள்ளன. 

இதற்கு  தீர்வாக உங்கள் தனியார் திறப்பை நீங்கள் பத்திரமாக பேண யு எஸ் பி ( USB) திறப்பு வடிவமைக்கப்பட்ட கடினப்பொருள் ( hardware wallet ?) உள்ளது. இதுவே மிகவும் பாதுகாப்பானது. இவ்வாறான இரண்டு பொருட்களின் முகவரிகள் கீழே உள்ளன. 

1. https://trezor.io/

2. https://www.ledgerwallet.com/

நன்றிகள் 

Link to comment
Share on other sites

வேறு சில தகவல்கள் 

வணக்கம் 
 

1. பல்வேறு எண்மநாணய தளங்கள் ஆரம்பிக்கப்படுவது என்ற பெயரை.io கொண்டு. உதாரணத்திற்கு  www.tamilcoin.io

2. HODL : எண்மநாணயத்தை வேண்டி நீண்ட காலம் வைத்திருப்பவர் ( வேண்டி விற்பவர் அல்ல )

3. FOMO :  ( Fear Of Missing Out) அட நாம் இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவோமோ என்ற பயம் 

4. Whale : திமிங்கிலங்கள் - பெரிய பணத்தை கொண்டவர்கள்.ஒன்றின் விலையை மாற்றக்கூடியவர்கள். 

5. KYC ( Know Your Customer ) : அநேகமான தரமான எண்மநாணய நிறுவனங்கள் இதை உங்களிடம் வினவும் நீங்கள் பதியும் பொழுது. நீங்கள் நீங்கள்தானா என உறுதி செய்வதே இதன் நோக்கம். காரணம், போலியான பேர்வழிகள் மற்றும் சில நாட்டு சட்டங்கள் காரணமாக அவர்களை தவிர்க்கவும் 

6. ICO Initial Coin Offering : ஐ. சி. ஓ  என்றால் என்ன ?  பங்குசந்தை போன்ற ஒரு அலகு. இவை பங்குகள்  போன்று அரசுகளால் வரையறைகளுக்கு கட்டுப்பட்டவை என்று சொல்லமுடியாது. அதனால் ஆபத்துக்கள் நிறைந்தது. 

6.DApp : decentralized application. A DApp has its backend code running on a decentralized peer-to-peer network. எண்மநாணய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் மென்பொருட்கள். 

7. Air Drop : புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ' டோக்கன்' நிறுவனம் இலவசமாக சில எண்மநாணயங்களை தருவது. சிலர்  உங்களின் பிரத்தியேக இலத்திரனியல் எண்மபணஉறையின் முகவரியை கேட்பர். அவையே தரமானவையாக இருக்கும். எந்த தருணத்திலும் உங்கள் தனிப்பட்ட திறப்பை கொடுக்கவேண்டாம். 

8. ERC20 : இன்று பிரபல்யமான எண்மநாணய பரிவர்த்தனை கொள்கை. இதை எதேர் ( Ether) என்ற சங்கிலி கட்டமைப்பின் மேலாக வடிவமைத்து பல ஆயிரம் 'டோக்கன்கள்' வடிவமைக்கப்பட்டுள்ளன.

நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ampanai said:

வேறு சில தகவல்கள் 

வணக்கம் 
 

வணக்கம் அம்பானி.

நிறையவே தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.உங்கள் விரிவான தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

எண்மபணஉறை  Digital Wallet 

அன்று மின்வலை ஆரம்பிக்கப்பட்ட பொழுது எந்த தொழில்நுட்பம் தகவல் பரிவர்த்தனையில் வெற்றி பெறும் என ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.இன்று மின்வலை தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக இருப்பது ரி.சி.பி. ( TCP / IP Protocol)  என்ற தகவல் பரிவர்த்தனை கொள்கை. இதன் காரணமாக நாம் இன்றுமின்வலை ஊடாக பணம் அனுப்பும் அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளோம். 

ERC20 : இன்று பிரபல்யமான எண்மநாணய பரிவர்த்தனை கொள்கை. இதை எதேர் ( Ether) என்ற சங்கிலி கட்டமைப்பின் மேலாக வடிவமைத்து பல ஆயிரம் 'டோக்கன்கள்' வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த தொழில்நுட்பம் தான் இறுதியில் வெற்றிபெறும் என உறுதியாக சொல்லமுடியாது. அதனால், சில ஆபத்துக்களும் உள்ளன. 

https://www.myetherwallet.com/ 

பலரும் பாவிக்கும் இலத்திரனியல் எண்மபணஉறை.இதை யாரும் இலவசமாக பாவித்து தமது முகவரியுடன் ஒரு கணக்கை ஆரம்பிக்கலாம். உங்கள் தனிப்பட்ட பிரத்தியேக திறப்பை கவனமாக வைத்திருக்க வேண்டும். 

கடவுச்சொல்லை மறந்தால் திரும்ப பெற முடியாது.

அனுப்பும் முகவரி தவறாக இருந்தால் அனுப்பிய பணத்தை பெற முடியாது .

நன்றி !

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சங்கிலி கட்டமைப்பு இ எண்ம நாணயம் : இலவச வழிகள் 

தமது புதிய எண்ம நாணயங்களின் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசெல்லவும் அவற்றை சந்தைப்படுத்தவும் பலரும் இலவச நாணயங்களை தருவதுண்டு. இதை ஆங்கிலத்தில் எயர் ட்ரோப் ( air drop)  எனப்படும். 

இவ்வாறான இலவச எண்ம நாணயங்களை நீங்களும் சேர்க்கலாம். 

பொறுப்புதுறப்பு : இந்த கட்டுரைகளில் தரப்படும் கருத்துக்கள் எனது தனிப்பட்ட எண்ணங்களே அன்றி முதலீட்டு பரிந்துரைகள் அல்ல. உங்களின் முதலீடுகள் உங்களின் முடிவுகளே. அதனால் வரும் இழப்புக்களுக்கு நானோ இல்லை தளமோ பொறுப்பல்ல !  இது ஒரு தமிழ் சகோதரனின் தகவல் மட்டுமே. 

எண்ம நாணய குறியீடு CLIN
இலவச எண்ம நாணயங்கள்  500 ( நிறுவனம் இதன் விலையை 0.03 USD என குறிப்பிடுகின்றது) 

காலம் : மாசி மாதம் 21க்கு முன்னால் 

செய்ய வேண்டியது : இந்த தளத்தில் பதியவேண்டியது  : https://clinicoin.io/en/dashboard 

எப்பொழுது உங்களுக்கு இந்த இலவச எண்ம நாணயங்கள் கிடைக்கும்? எண்ம நாணயங்களின் விற்பனைக்கு பின்னராக 7 நாட்களின் பின்னர். 

எந்த நாட்டில் இந்த நிறுவனம் இயங்குகின்றது : ஐக்கிய அமேரிக்கா 

இந்த திட்டத்தின் வியாபார திடடம் என்ன : மக்களை ஆரோக்கியமாக பேணவும் அவர்களின் அந்த பழக்கத்தை பண  ரீதியாக ஊக்குவித்தலும். 

எவ்வாறு பணத்தை நிறுவனம் பெறும் : மருத்துவர்கள் மருத்துவ நிறுவனங்கள் இந்த எண்ம நாணயத்தை தங்களிடம் சேவை பெறும் மக்களுக்கு தருவார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.