Jump to content

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி


Recommended Posts

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி

கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

விஷால்

 
 

நடிகர் விஷால் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. எனவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று சேரன் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.  பொதுக்குழு தொடங்கி சிறிது நேரத்திலேயே மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இதுவரை விஷால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

சேரன்

https://www.vikatan.com/news/cinema/110334-cheran-team-holds-protest-producers-council-meeting-cancelled.html

Link to comment
Share on other sites

’’7 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு என் பதில் இதுதான்!'' – கொதிக்கும் விஷால்

 
 

சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக் குழுக்  கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில்  நிறுத்தப்பட்டது. 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை  கலைவாணர் அரங்கத்தில் இன்று நண்பகல் தொடங்கியது. அசோக் குமார் மரணம், கந்துவட்டி ஃபைனான்ஸ் முறை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி கணக்கு தாக்கல், கேபிள் டி.வி உரிமம், சேட்டிலைட் உரிம்ம், டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்‌ஷன் கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எனப் பல விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்பட்ட நிலையில். எந்த ஒரு அலுவல்களும்  நடக்காமல் பொதுக்குழு நிறுத்தப்பட்டது.

 
 

VISHAL

முன்னதாக, கடந்த 7ஆம் தேதி அதிருப்தி தயாரிப்பாளர்கள்  சிலர் உயர்நீதி மன்றத்தில் இந்த பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரினர். அந்த வழக்கில் இந்த பொதுக் குழுக்கூட்டம் ஓய்வுபெற்ற முன்னாள்  நீதியரசர் திரு ராமநாதன்  முன்நிலையில் நடைபெறவும், கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களுக்கு முறையே வாக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்  என உத்தரவிடப்பட்டிருந்தது. 

முக்தா.வி . ஸ்ரீநிவாசன் , சி.வி ராஜேந்திரன் போன்ற மூத்தத்  தயாரிப்பாளர்களை கௌரவித்த பின் பொதுக் குழு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பெருங்கூட்டமாக அதிருப்தி தயாரிப்பாளர்கள், தலைவர் விஷால் பாதியில் கூட்டத்தை நிறுத்தியதாக விஷாலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு வெளியே வந்தனர்.   

கூட்டத்தை பாதியில் நிறுத்தியதைக் கண்டித்து வெளியேறிய இயக்குநர்  சேரன் கூறியது, "எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கக்  கூட்டத்தில் நடந்ததை வெளியில் சொல்வது அநாகரீகமானக்  காரியம். விஷாலுக்குதான் பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. 450 உறுப்பினர்களுக்கு மதிப்பலிக்காமல் கூட்டத்தை முடித்துவிட்டார். விஷால் எங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பயப்படுகிறார். நாங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புகாக காத்திருக்கிறோம்" என்றார்.

T RAJENDRAN

"விஷால் பொறுப்பேற்ற பின்பு கணக்கு வழக்குகளை கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. தமிழ்தாய் வாழ்த்து ஒலித்துகொண்டிருக்கும் போது மேடையில் யாருமில்லை. இது தமிழ்தாய் வாழ்த்துக்கு மதிப்பு தரவில்லை என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார். முன்னாள் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் பேச மைக்  கொடுக்கவில்லை, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதவர்கள் மேடை ஏறி பேச வைப்பது முறையன்று. இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டதும் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் பொதுக்குழுவை தேசிய கீதம் இசைத்து பாதியிலேயே நிறுத்திவிட்டார்" என டி.ராஜேந்தர் கூறினார் 

அதிருப்தி தயாரிப்பாளர்கள் சார்பில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "விஷால் பொறுப்பேற்ற பின் ரூபாய் 7.5 கோடி சங்கத்தின் வைப்பு  தொகை கணக்கில்  இருந்தது. தற்போது 4.5 கோடி ரூபாயை செலவாகியுள்ளது. அதற்கான கணக்கை உறுப்பினர்கள் விஷாலிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக கேட்டதற்கும் பதிலளிக்க முடியாமல் விஷால் திணறினார். விஷால் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சிறு தயாரிப்பாளர்கள் பெருதும் பாதிப்படைகிறார்கள்.

பின் மேடையில் இருந்த நிர்வாகிகள்  யாரிடமும் சிக்காமல் தேசிய கீதம் பாடி கூட்டத்தை முடித்து சென்றுவிட்டனர். புது அலுவலகம், சங்க பணிகளுக்கு வேலையாட்கள் பணியமர்த்தியதை, சங்க பைலா மாற்றம் என பொதுக் குழு கூட்டப்படாமலேயே நடந்த அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக கண்காணிப்பாளர் நீதியரசரிடம் கூறப்பட்டுள்ளது. இன்று என்ன நடந்ததென எடுத்துரைக்கப்பட்டு கண்காணிப்பாளரிடம் நீதி மன்றத்தின் வாயிலாக ஒரு ரிசிவர் கேட்டுள்ளோம். மேலும் விஷால்  மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நீதியரசரிடம் பெரும்பான்மையாக இருக்கும் அதிருப்தி தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளாக முன் வைத்த்துள்ளோம். நீதிமன்றத்திற்கு இந்த அறிக்கையை கண்காணிப்பாளர் நீதியரசர் ராமநாதன் தாக்கல் செய்த பின் நாங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் ’’ என கூறினார்.    

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து விஷால் பேசுகையில், "இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் இன்று நிறைவடைந்தது. மூத்த தயாரிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதையும் தாண்டி பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே . உறுப்பினர்கள் எல்லாருக்கும் தங்கள் கருத்துக்களை  பதிவு செய்யும் உரிமை இருக்கிறது. அதை செய்யும் முறை தவறாக இருக்கிறது. என் மீது தவறு  இல்லாத போது நான் ஏன் பதவி விலக வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் இன்று பிரச்னை நடந்துள்ளது.

 தயாரிப்பாளர்கள்  சங்கம்   பொதுக்குழு கூட்டம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் பை-லா மீறப்பட்டதாக கூறப்படுத்திகிறதே ?

’’சங்கத்தின் பை-லா படி நான் நிற்கவேக்  கூடாது என எங்கேயும் கூறப்படவில்லை. இங்கு அனைத்தும் பை-லா பிரகாரம் தான் நடந்துவருகிறது. பை-லா  குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.’’     

தொடர்ந்து  அரசுக்கு எதிரான போக்கில் ஈடுபடுவதால் திரைத்துறைக்கு கிடைக்கும்  அரசு சலுகைகள், மானியங்கள்  பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறதே ? 

’’அறிவிக்கப்பட்ட 149 படங்களுக்கான அரசு மானியம் எப்படி ரத்தாகும், மேலும் பல படங்களுக்கு மானியம் கேட்டுள்ளோம் இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பலனடைவார்கள்.’’

சங்கத்தின் கணக்கில் 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படுவது குறித்து உங்கள் பதில் ? 

 

’’செய்ய வேண்டிய கடமைகளை நன்றாக செய்து வருகிறோம், முறைகேடு நடந்திருந்தால் ஆதாரத்துடன் நிறுப்பிக்க வேண்டும், 7 கோடி ரூபாய் முறைகேடு செய்திருந்தால் இவ்வளவு தைரியமாக பொதுகுழுவைக் கூட்டமுடியாது, ஆதாரத்தோடு வந்தால் அதற்கு பதிலளிக்க தயார்.கண்காணிப்பு செய்த நீதியரசர்  முன்பு இதெல்லாம் நடந்ததில் மகிழ்ச்சி, உள்ளே என்ன நடந்தது என்பதற்கு நிதியரசரே ஆதாரம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்" என்று விஷால் கூறினார். 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110351-producers-council-agm-adjourned-without-proceedings.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.