Sign in to follow this  
கிருபன்

இந்திய இராணுவ வருகை - முப்பதாண்டு சாட்சியங்கள்

Recommended Posts

58-1.jpg

நிகழ்

ஒவ்வொரு நாளும்
இரவு கவிகையில்
‘அவர்கள்’ வருவர்.

ஒழுங்கை முகப்பில்
நாய்கள்குரைக்கையில்
‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம்

விளக்கை அணைத்து
வாசலைப் பார்த்து
மௌனமாயிருப்போம்
வேலியோரத்தில்
நிற்பதும் நடப்பதுமாய்
அவர்களின் பவனி தொடரும்

புரியாத மொழியில் பேசிய போதும்
அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்:
பெண்
நகை
புலி.

ஒலியடங்கிய சற்று நேரத்தில்
எங்காவது
வீரிட்ட அழுகையோ
வேட்டொலியோ
கேட்டபடி
தூங்கிப் போவோம்

விடியும் வரையும்
நிம்மதி மறந்து
உறங்குவதே போல்
வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம்.

- எஸ்.கே. விக்னேஸ்வரன்

1987 - ‘அமைதி’

பின்னரும் நான் வந்தேன்
நீ வந்திருக்கவில்லை
காத்திருந்தேன்
அன்றைக்கு நீ வரவேயில்லை,
அப்புறம்
சுவாலை விட்டெரிகிற தீயொடு
தென் திசை நாட்கள் பெயர்ந்தன,
காலம் தாழ்த்தி
தெருவோரம் நாய் முகரக்கிடந்த
உன் மரணம் செவிப்பட்டது நண்ப,
துக்கமாய் சரிக்கும் உன் முகம் நினைவில் வர
தொண்டை கட்டிப் போயிற்று..
எல்லாவற்றின் பொருட்டாயும்  நெடுமூச்சே
‘விதி’ என்றாகிவிட்ட சுதந்திரத்துடன்
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்.

 & பா. அகிலன்

தேவரின் தூதர்களின் கதை

01.
மகா சமுத்திரங்களையும்
விரிகுடாக்களையும்
அவர்கள் கடந்து வந்தபோது
தனது கன்னிகளைக் காப்பான இடங்களில்
பதுக்கிக்கொண்டது கடல்

நிற மீன்களும் நீர்வாழிகளும்
புலம் வேறாய்ப் பெயர்ந்தன

தொடக்க வித்து ஊன்றப்பெற்று
உயிர்பெருக்கிய கடல் ஆழம்
தன்னை ஒரு மீனவனுக்குச் சொன்னது
பிறகு அவனது நாவு திரையிட்டுக்கொண்டது.

02.
காட்டு மருங்கே அவர்கள் முகாமிட்டபோது-
தன்னை இருளவைத்துக்கொண்டது காடு.
எல்லைகளின்  செடிகள் முட்களின் கூர் ஏந்தின
காற்றைத் துளையவிட்டு சத்தங்களைத் திகிலவிட்ட வனம்
உயிரிகளை அடரினுள் அழைத்துக்கொண்டது

அவர்களைத்தொட்டும் தன்னை மூடிக்கொண்டது காடு

03.
எங்கள் மண்ணோ தன்னைக் கல்லென
இயல்பில் மாற்றிக்கொண்டது
பிறகு அது நீரை உறிஞ்சுவதில்லை
வேர்களை விடுவதில்லை
விதைகளை அனுமதிப்பதில்லை

அவர்களின் சிறுநீர் பாறைகளில் பெருகி ஓடிற்று
ஈ நெருங்காது காய்ந்தன கழிவுகள்.

04.
அவர்களின் நாற்றத்தைக் காற்று சுழற்றியெறிந்தது
அவர்களின் திசைகளைத் திணறவைத்தது
புழுதியை வாரியெறிந்தது
எச்சரித்து ஊளையிட்டது
அவர்களைத் திரும்பச் சொல்லிக் கேட்டது.

05.
அவர்கள் கேள்வியற்றிருந்தனர்
பார்வையற்று இருந்தனர்
பேசும் திறனற்று இருந்தனர்

இருட்டு அவர்களில் குடிகொண்டிருந்தது.
இருளில் இருக்க விதிக்கப்பட்டார்கள்

06.
தேவரின் தூதர்களுக்காக நாங்கள்
தெருவில் கூடினோம்
மாலை சூடினோம்
குரவை இட்டோம்
போசனங்களுக்கு அழைப்புவிடுத்தோம்...

இறுதியில் ஆயுதங்களைப் பாரம்கொடுத்தோம்.

07. (1)
பிறகு அவர்கள்-
எங்கள் தெருக்களில் சண்டையை மூட்டிவிட்டனர்
சாவைக் கூட்டி வந்தனர்
போரை இட்டுவந்தனர்
பிணங்களைக் கொண்டுவந்தனர்
பிணங்களாய்த் திரும்பிவந்தனர்

அங்கிருந்த பெண்களைக் கொண்டுபோயினர்.
வாழ்வையும்

07. (2)
எண்ணிக்கையில் அரையாயும்
உருவத்தில் குறையாயும்
அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டபோது
எல்லாம் ஒரு கனவைப்போல இருந்தது.

சமாதானம் சொல்லி வந்தவர்கள்
சண்டையில் தோற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

08.
முறுக்கு மீசை
முடைநாற்றத்தோடு
பிறக்கவிருந்த சந்ததியை
வன்புணரப்பட்ட எங்கள் பெண்கள்
கலைத்துக்கொண்டார்கள்

09.
நாங்களோ எங்களது போரைத்  தொடர்ந்தோம்...

 amrashmy

 

http://www.kalachuvadu.com/archives/issue-215/நிகழ்

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தீவின் துயரப்பொழுதுகள் மறக்குமா தமிழினம்!

இணைப்புக்கு நன்றி!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this