• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் நெருக்கடியில் மஹிந்த ராஜபக் ஷ

Recommended Posts

கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் நெருக்கடியில் மஹிந்த ராஜபக் ஷ

P20-0c9ca3aa31424a5447d434b52846f6f2194dfbb4.jpg

 

பஷில், நாமல், பங்காளித்தரப்புக்களிடையே கடும் தர்க்கம்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு  எதிர்க்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற் குள் ஆசனப்பங்கீடு தொடர்பில் முன்னாள்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்று பங்காளிக்கட்சிகள் குற்றம் சாட்டியமையாலும் மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிஅணியினருடன் இணையது தனித்துபோட்டியிட வேண்டும் என்றும், கூட்டிணைந்து போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று இரு கருத்துக்கள் வலுத்தமையினாலுமே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியின் சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுகுழுக் கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, தேசவி முக்தி கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டு தமது சின்னங்களில் தனித்து களமிறங்கவுள்ளதாக அறிவித்திருந்தமை தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்தில் பங்கெடுத்தமை தெடர்பில் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஸபக்ஷ ஆகியோர் கடும் எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர். இதனால் இருதரப்பினரிடையேயும் தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இதன்போது விமல் விரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய ஆகியவற்றின் தலைவர்களும் தினேஷ் குணவர்த்தனவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக பசில் ராஜபக்ஷ தன்னிச்சையாக ஆசன பங்கீடுகளை மேற்கொண்டதன் காரணத்தினாலேயே தனித்துபோட்ட வேண்டியமை தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பங்காளிக்கட்சிகளால் குறிப்பிடப்பட்டு மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

அதனையடுத்து மீண்டும் மைத்திரி அணியினருடன் ஒன்றிணைவது குறித்த பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் ஒருதரப்பினர் பேச்சுக்களை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனினும் பங்காளிக்கட்சிகளான விமல்வீரசன் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய ஆகியவற்றின் தலைவர்களும் மற்றும் சில உறுப்பினர்களும் பேச்சக்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தினார்கள். இதனால் இருதரப்பினரிடையேயும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இவ்விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டு குறித்த கூட்டு எதிரணியின் சந்திப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினுள் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளமையால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குழப்பமடைந்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this