Sign in to follow this  
நவீனன்

இணைவதற்கு மஹிந்த, பஷில் விருப்பம் இரு நபர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர் : இதன் விளைவை வெகுவிரைவில் எதிர்கொள்வார்கள் என்கிறார் தயாசிறி

Recommended Posts

இணைவதற்கு மஹிந்த, பஷில் விருப்பம் இரு நபர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர் : இதன் விளைவை வெகுவிரைவில் எதிர்கொள்வார்கள் என்கிறார் தயாசிறி

2-c0c9a65084c903c6ef8d28c539dc39a896278679.jpg

 

(ரொபட் அன்­டனி)

சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்டு எதி­ரணி இணை­வதை மஹிந்த ராஜ­ப­க் ஷவும் பஷில் ராஜ­ப­க்

ஷவும் விரும்­பு­கின்­றனர். ஆனால், கூட்டு எதி­ர­ணி­யி­லுள்ள எதிர்­கா­லத்தில் மன்­ன­ராக வர எதிர் ­பார்க்கும் இரண்டு நபர்­களே இதனை எதிர்க்­கின்­றனர். இதன் விளைவை அவர்கள் வெகு விரைவில் எதிர்­கொள்­வார்கள் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

கூட்டு எதி­ரி­ணியை எம்­முடன் இணைப்­ப­தற்­காக நாங்­களே கை நீட்­டினோம். ஆனால், அவர்கள் அதனை நிரா­க­ரித்து விட்­டார்கள். இப்­போது நாங்கள் தனித்தே கள­மி­றங்க தீர்­மா­னித்து விட்டோம். நிச்­சயம் இந்த தேர்­தலில் சுதந்­திரக் கட்சி வெற்றி ஈட்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தயா­சிறி ஜய­சே­கர அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்டு எதி­ர­ணியை இணைத்து கொள்ளும் நோக்கில் நாங்­களே எமது கரங்­களே நீட்­டினோம். ஆனால், கூட்டு எதி­ர­ணி­யினர் அதனை நிரா­க­ரித்­து­விட்­டனர். கூட்டு எதி­ரணி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­துதான் போட்­டி­யிட வேண்­டு­மென்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யாக இருக்­கிறார்.

மஹிந்த ராஜ­பக்ஷம் இதனை விரும்­பு­கிறார். பஷில் ராஜ­ப­க்ஷவும் இதனை விரும்­பு­கிறார். ஆனால், இன்னும் 20 வரு­டங்கள் எதிர்க்­கட்­சி­யி­லேயே இருந்து 40 வயதில் ஜனா­தி­ப­தி­யாக வேண்­டு­மென்ற ஆசை­யி­லி­ருக்­கின்ற ஒருவர் உட்­பட இரண்டு நபர்­களே கூட்டு எதி­ரிணி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணை­வதே எதிர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அவர்­க­ளுக்கு வேறு சில தரப்­புக்­க­ளுடன் டீல் இருக்­கின்­றது என்­பதே எமக்குத் தெரியும். நாங்கள் இந்த தேர்­தலில் வெற்றி பெறுவோம். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை.

ஆனால், இந்த தேர்­தலில் 60 வீத­மான வாக்­கு­களை பெற்­றால்தான் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைக்­கலாம். தற்­போ­தைய நிலை­மை­களில் எந்தக் கட்­சிக்கும் 60 வீத வாக்­கு­களை பெற முடி­யாது.தேர்­தலின் பின்னர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் கூட்­டாட்­சியே சாத்­தி­ய­மாகும்.

கேள்வி: நீங்கள் குறிப்­பிடும் அந்த இருவர் யார்?

பதில்: அதனை நான் விரைவில் பெயர்­க­ளுடன் அறி­விப்பேன். இன்று கூட்டு எதி­ரிணி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணை­வதே தடுக்கும் இரண்டு நபர்­களும் எதிர்­கா­லத்தில் விளை­வு­களை சந்­திப்­பார்கள்.

கேள்வி: ஏன் கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைய முடி­யாமல் இருக்­கி­றது.

பதில்: அவர்கள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­மாறு குறிப்­பி­டு­கின்­றனர். அது சாத்­தி­ய­மற்­ற­தாகும். நாங்கள் அர­சாங்­கத்தில் இல்­லாமல் எதிர்க்­கட்­சியில் இருந்­தி­ருந்தால் இன்று பொது மக்­க­ளுக்கு சேவை­யாற்­றி­யி­ருக்க முடி­யாது. கூட்டு எதி­ரணி அதி­க­மானோர் எம்­முடன் இணைய வேண்­டு­மென்று கூறு­கின்­றனர்.

தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்றோர் பதுளை கூட்டுத்திற்கு செல்லவில்லை. இதிலிருந்த அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது தெரிகிறது. அது மட்டுமன்றி கூட்டு எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் எம்முடன் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this