Jump to content

கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்!


Recommended Posts

  • கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்!
கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்!
 
 

கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்!

 
 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்று­மைக்­காக எந்த விட்­டுக் கொ­டுப்­புக்­கும் தயார் என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார் என்று அறிய முடி­கின்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீடு தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் நடந்த சந்­திப்புக் குழப்­பத்­தில் முடிந் தது. அதன்­பின்­னர் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்­வ­தில்லை என்று ரெலோ அமைப்பு அறி­வித்­தது.

தமிழ்க் கூட்­ட­மைப்­புக்­குள் எழுந்­துள்ள குழப்ப நிலை­மையை அடுத்து அதன் தலை­வர் இரா.சம்­பந்­தன் சம­ரச முயற்­சி­க­ளில் நேர­டி­யாக இறங்­கி­யுள்­ளார். ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­த­னு­டன் அவர் அலை­பே­சி­யில் பேசி­னார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் இரா.சம்­பந்­த­னின் பிர­தி­நி­தி­யாக செல்­வம் அடைக்­க­ல­நா­த­னைச் சந்­தித்­தார். சந்­திப்­புத் திருப்­தி­க­ர­மாக அமைந்­தது என்று கூறி­யுள்ள எம்.ஏ.சுமந்­தி­ரன், தொடர்ந்து பேச்சு நடத்­தப்­ப­டும் என்று குறிப்­பிட்­டார்.

ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்­தா­வு­ட­னும் இரா.சம்­பந்­தன் அலை­பேசி ஊடா­கப் பேசி­யுள்­ளார். ஆச­னப் பங்­கீட்டு விவ­கா­ரத்­தைப் பேசித் தீர்த்­துக் கொள்­ள­லாம், பேச்சு நடத்­த­லாம் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார். பேச்சு நடத்­து­வ­தற்­குத் தயார் என்று சிறி­காந்­தா­வும் பதி­ல­ளித்­துள்­ளார்.

 

புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­த­னு­ட­னும் அலை­பேசி ஊடாக இரா.சம்­பந்­தன் தொடர்­பு­கொண்­டுள்­ளார். நடந்த விவ­ரங்­களை கேட்­ட­றிந்து கொண்­டுள்­ளார். பிரச்­சி­னைக்­கு­ரிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் தொடர்­பா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் பேசு­வேன் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் பேசும்­போது ஒன்­று­மைக்­காக எந்த விட்­டுக் கொடுப்­புக்­கும் தயார். அது தொடர்­பில் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு அறி­வு­றுத்­து­வேன் என்று இரா.சம்­பந்­தன் கூறி­னார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

http://newuthayan.com/story/53432.html

Link to comment
Share on other sites

தமிழரசுக்கட்சி அதிகூடிய விட்டுக்கொடுப்புக்கு தயார் : பேசித்தீர்ப்போம் என்கிறார் சம்பந்தன்

5-0e8fe82a44e32df78bf75d527f2e2ea794db3bb8.jpg

 

(ஆர்.ராம்)

ஜன­நா­யக கட்­ட­மைப்பில் தேர்தல் காலங்­களில் சிறு பிரச்­சி­னைகள் வரு­வது  வழ­மை­யான விட­ய­மாகும். இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது அதி­கூ­டிய விட்­டுக்­கொ­டுப்­புக்கு தயா­ரா­கவே உள்­ளது.

அதே­போன்று பங்­கா­ளிக்­கட்­சி­களும்  
விட்­டுக்­கொ­டுத்துச் செல்­ல­வேண்டும். இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு பேச்­சு­வார்த்­தைகள் மூலம் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும் என்­பதில் சந்­தேகம் வேண்டாம் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் சூடு­பி­டித்­துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் ஆச­ன­பங்­கீடு தொடர்­பாக முரண்­பா­டுகள் வலுத்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது ஜன­நா­யக கட்­ட­மைப்­பாகும். ஜன­நா­யக கட்­ட­மைப்பில் தேர்­தல்­கா­லங்­களில் இவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­ப­டு­வது சாதா­ர­ண­மா­ன­தொரு விட­ய­மாகும். இந்த இடத்தில் அனைத்து தரப்­பி­ன­ரையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையில் பேச்­சு­வார்த்­தை­களின் ஊடாக முடி­வுகள் எட்­டப்­ப­ட­வேண்டும்.

அந்த வகையில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா எம்.பி பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டார். தொடர்ந்தும் மேற்­கொள்­ள­வுள்ளார். அவ்­வா­றான நிலையில் ரெலோ, புளொட் போன்ற கட்­சிகள் சில கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளன. அதே­போன்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியும் சில நிலைப்­பா­டு­களை கொண்­டி­ருக்­கின்­றது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களின் கோரிக்­கை­க­ளையும் கைவி­ட­மு­டி­யாது. அதே­போன்று பங்­கா­ளிக்­கட்­சி­களின் கோரிக்­கை­க­ளையும் கருத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. இந்த விட­யத்தில் நாம் பேச்­சுக்­களை நடத்தி முடி­வு­களை எடுக்­க­வுள்ளோம்.

இலங்கை தமி­ழ­ர­சு­கட்­சி­யா­னது கூட்­ட­மைப்பின் ஒற்­று­மைக்­காக அதி­கூ­டிய விட்­டுக்­கொ­டுப்­பக்­க­ளுக்கு தயா­ரா­கவே உள்­ளது. அதே­போன்று ஏனைய கட்­சி­களும் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை செய்­ய­வேண்டும். அதன்­மூலம் பரஸ்­ப­ர­மான இணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதற்குரிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும். இவ்விதமான பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்போம். முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவோம். அதில் எவரும் சந்தேகப்படவேண்டியதில்லை. அந்த கருமங்கள் கிரமமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைப் பயம் வந்திட்டுது.....தொட்ட சுகம் விடமனம் வராதுதானே.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.