• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

வழிகாட்டிய வா(ரி)சு

Recommended Posts

வழிகாட்டிய வா(ரி)சு

 

 
k12

அது ஒரு தனியார் தொழிலகம். அந்த நிறுவனத்தில் பேண்ட் ஜிப், லெதர் பேக் ஜிப் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்காட் தொழில் வளாகத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஐநூறு தொழிலாளர்கள் ஜிப் ஆலையில் வேலை பார்க்கிறார்கள். ஐம்பது பேர் நிர்வாகப் பிரிவில் மேனேஜர், உதவி மேனேஜர், உதவி அலுவலர், உதவியாட்கள், கணக்காளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களில் முக்கியமானவர்களை அழைத்து தலைமை அலுவலகம் அவ்வப்போது பயிற்சிகள் தரும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா..? என்று எல்லோருமே ஆவலாய் எதிர்பார்ப்பார்கள். 
"ஆபீஸில் உள்ள உதவி மேனேஜர்களில் நாமதான் சீனியர், ஜெனரல் மேனேஜரும் நமது பெயரையே பரிந்துரை செய்திருக்கிறார்... அதனால் பெங்களுர்ல நடக்கப் போற பயிற்சிக்கு இந்தத் தடவ நம்மளத்தான் தேர்வு செய்வார்கள்... முழுசா மூன்று மாதம் கம்பெனி செலவில் பெங்களுரில் ஜாலியாப் பொழுதப் போக்கிட்டு வரலாம்..' என்கிற தினுசில் கனவுலகில் மிதந்தான் சுந்தரம். 
"என்ன சுந்தரம்.. பெங்களுர் போகத் தயாரிட்டியா? எப்ப வேணுமுன்னாலும் மெயில்ல ஆர்டர் வரலாம்... உடனே கெüம்ப வேண்டியிருக்கும்'' என்று ஜெனரல் மேனேஜர் அவ்வப்போது சந்தோசப் பூக்களை தூவிக் கொண்டிருந்தார். 
தலைமை அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான் சுந்தரம். ஆனால் வந்த அஞ்சலில் இவன் பெயர் இல்லை என்றதும் சுந்தரம் அதிர்ச்சி அடைந்தான். அதுவும் பல வருட ஜூனியரான ராகவன் "செலக்ட்' ஆகியிருப்பதை சுந்தரத்தால் ஜீரணிக்க இயலவில்லை. ஆபீஸில் அனைவரும் ராகவனை கைகுலுக்கி வாழ்த்துவதைக் கண்டதும் சுந்தரத்தின் ஆத்திரம் அதிகமாயிற்று. ஆபீசில் இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அரை நாள் விடுப்பு போட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிட்டான். 
"என்னங்க... இந்நேரம வந்திட்டிங்க... உடம்பு சரியில்லையா?'' மனைவியின் பதட்டமான கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை. 

ஐந்து மணிக்குப் பத்தாம் வகுப்ப படிக்கும் மகன் வாசு, பள்ளி முடிந்து வந்தான். அப்பா இந்த நேரத்தில் வீட்டிலிருப்பது கண்டு ஆனந்தப்பட்டு, "அப்பா எங்க ஸ்கூல்ல கொடைக்கானலுக்கு சுற்றுலா போறாங்கப்பா... நாலு நாளுப்பா... ஆளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்கணும்பா... என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்கப்பா... நானும் போறேன்ப்பா...''
அலுவலகத்தில் தன்னை பயிற்சிக்கு தேர்வு செய்யாததால் ஏற்பட்ட ஆத்திரம் மகன் மீது கடும் கோபமாக திரும்பியது.
"படிக்காம டூர் போறதே உங்க ஸ்கூல்ல வேலயாப் போச்சு... நீயெல்லாம் டூர் போக வேண்டாம்... ஒழுங்கா படிச்சுப் பாஸôகிறதப் பாரு...''
"அப்பா முழுப் பரீட்சைக்கு முழுசா மூணுமாசம் இருக்குப்பா.. கிளாஸ் ஃபர்ஸ்ட் நான்தான்பா... நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடுவேன்பா''
"வாசு நான் சொன்னாச் சொன்னதுதான்... போ.. டூரெல்லாம் வேண்டாம்''
வாசு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அப்பாவின் அனுமதி கிடைக்கவில்லை. 

அன்று ஆறு மணி ரயிலுக்கு ராகவன் பெங்களுர் போகிறான்... சக ஆபீஸ் நண்பர்கள் ராகவனை வழியனுப்ப ரயில் நிலையம் போகிறார்கள். அலுவலக அறிவிப்புப் பலகை தகவல் சொல்லிற்று. 
இந்த அறிவிப்பிற்கு சுந்தரம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரை மணி நேரம் பெர்மிசன் போட்டுவிட்டு மாலை திரைப்படக் காட்சிக்குப் போய்விட்டான்.
திரைப்படம் முடிந்து எட்டரை மணிக்கு வீட்டுக்கு வந்தான் சுந்தரம். வீட்டில் வாசுவைக் காணவில்லை. "எங்கே போயிருப்பான்...?' மனைவியிடம் கேட்கவும் மனது வரவில்லை. அவள் தொலைக்காட்சி சீரியலில் முழ்கியிருந்தாள். யோசித்துக் கொண்டிருக்கும் போது... வீட்டுக்குள் நுழைந்தான் வாசு. 
"துரை... இன்னேரம் வரைக்கும் எங்க போய்ட்டு வர்றீங்க..?''
"அப்பா இன்னக்கித்தான் ஸ்கூல்ல இருந்து கொடைக்கானல் சுற்றுலா போறாங்கப்பா... அவுங்கள பஸ் ஸ்டாண்டுல போயி வழியனுப்பி வச்சிட்டு வர்றேன்ப்பா''
மகன் வாசுவின் பதில் சுந்தரத்தின் மன இறுக்கத்தைக் குறைத்து இயல்பு நிலைக்கு மாற்றியது. 
"என்னடா வாசு... அவுங்க சுற்றுலா ஜாலியாப் போறாங்க... ஆனா நீ போகல... அவுங்க மேல உனக்கு வருத்தம் வரலையா...?''
"அவுங்க மேல எதுக்குப்பா வருத்தம் வரணும்...சுற்றுலா போகக் கூடாதுன்னு சொன்னது நீங்கதானப்பா... உங்க மேலயே கோபம் வரல.. ஏதோ ஒரு காரணத்தாலதான் சுற்றுலா போக வேண்டாம்னு சொல்லியிருப்பீங்க.... அதனால அவுங்க மேல எதுக்கு எனக்கு வருத்தம் வரணும்..?''
இந்த பதில் சுந்தரம் மனதை "சுருக்'கென முள் தைத்தமாதிரி வலிக்க வைத்தது.
"ராகவனைப் பயிற்சிக்கு செலக்ட் செஞ்சது ஹெட் ஆபீசு... அதுக்கு ராகவன் மேல நாம ஏன் பொறாமப்படணும்... பாராமுகம் காட்டணும்...? ராகவனை வாழ்த்தி வழியனுப்பாம இருந்தது எந்த விதத்தில சரி..? ராகவனுக்கும் நமக்கும் எந்தவிதப் பிரச்னையும் இல்லியே...! சின்னப் பையனுக்குத் தோணின நியாய உணர்வு நமக்குத் தோணாமப் போச்சே...ச்சே...!'' 
இப்படிப் பட்ட எண்ணங்கள் சுந்தரத்தின் மன அரங்கில் சுற்றிச் சுழன்றன. 
"சாரிடா... வாசு...'' அப்பா ஏன் திடீரெனக் கண்கலங்க நம்மை கட்டிப் பிடித்துக் கொள்கிறார் என்று வாசு விளங்காமல் விழித்தான். 
அதன் பிறகு அலைபேசியை எடுத்து ராகவனின் எண்களை அழுத்தினான் சுந்தரம். எதற்கு...? பயிற்சிக்குப் போகும் சக நண்பனை வாழ்த்துவதற்கு...!
 

http://www.dinamani.com

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்று இதைத்தான் சொல்லுறது.....!  tw_blush: 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this