• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்

Recommended Posts

புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்

 

புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்
 
புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்
 

தமிழன் என்றால் திமிர்ப்பிடித்தவன், செயல்வீரன்ஈ வீரத்தின் சின்னமவன் என்றெல்லாம் தமிழனின் பெருமை அன்றுதொட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல்துறைகளிலும் தமிழன் வெற்றிநடைபோட்டு வருகின்றான்.

தமிழன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் இலக்கை அடையும்வரை கடுமையாகப் போராடுவான். எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடவே முயற்சிப்பான். ஆனால், காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களுமே தமிழனின் வெற்றிப்பயணத்துக்கு வேலிபோடும் காரணிகளாக அமைகின்றன. 21ஆம் நூற்றாண்டிலும் அவை நீடிப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கனடா,சிங்கப்பூர், மலேசியா, பிரித்தானியா, நோர்வே உட்பட உலகின் 13 நாடுகளில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் எமது இன, மத, கலாசார, மொழிக்கட்டமைப்புகளை வைத்து இலாபமீட்டிக்கொள்ளும் ஒருதரப்பினரும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

ராஜித சொன்ன கதை

2014 நவம்பர் மாதம் 21ஆம் திகதி பொதுவேட்பாளராக களமிறங்கிய மஹிந்த படையணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மைத்திரிபால சிறிசேன. ராஜித்த சேனாரத்ன உள்ளிட்டவர்களும் வெளியேறியிருந்தனர்.

அதன்பின்னர், ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டோரும் இணைந்து, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர். அதன்போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, புலம்பெயர் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுவரும் பஸில் ராஜபக்­ஷ, புலம் பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் வைத்துள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தவே வந்துள்ளேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக கருதப்படும் ருத்ரகுமாரனுக்கு முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ""அன்பரே ருத்ரா'' என விளித்திருந்தார். எனவே, இவர்களுக்கிடையிலான உறவு எப்படியிருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசு புலம்பெயர் அமைப்புகளுக்கு எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால், மஹிந்த ஆட்சி காலத்தில் புலம்பெயர் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டன. ஆனால், மறுபுறத்தில் கள்ளத்தொடர்பு பேணப்பட்டு வந்துள்ளது என்பதையே இக்கூற்றின் ஊடாக எடுத்துரைப்பதற்கு ராஜித்த முற்பட்டார்.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் சிங்கள பேரினவாத சக்திகளால், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் மனதில் விதைக்கப்பட்ட விசமத்தனமான எண்ணப்பாடுகளைக் களையும் வகையிலான பல உரைகளை அதன்பின்னர் ராஜித நிகழ்த்தியிருந்தார். இவர் மட்டுமல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோரும் இந்தப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

 

Tamil-Diaspora.jpg

 

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த அழைப்பு உரிய வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது இன்றளவிலும் வினாவாகவே இருக்கின்றது.

தமிழர் பிரச்சினை தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த தீர்வைப் பெறுவதற்காக தமிழர்கள் அறவழி, மறவழியென இருமுனைகளிலும் போராடினார்கள். ஆனாலும், தீர்வு இன்னும் கிடைத்தப்பாடில்லை. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில், அது இன்று இராஜதந்திர சமராக உருமாறியுள்ளது.

கடந்தகால அரசுகள் இழுத்தடிப்புச்செய்தாலும், புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிடவேண்டும் என்பதில் நல்லாட்சி அரசு குறியாகவே இருக்கின்றது என்பதை கூறிதான் ஆகவேண்டும். ஆனால், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் இது தொடர்பில் தவறானதொரு விம்பம் உருவாக்கப்பட்டுவருகின்றது. எனவே, புதிய அரசமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சிங்கள மக்களும் ஏதோ தவறானதொரு விடயம் நடக்கப்போகின்றது என்பதை நம்ப ஆரம்பித்துவிட்டனர். எனவே, சந்தேகத்தை கலைப்பதற்குரிய நடவடிக்கையை தமிழர் தரப்பும், தமிழ் அமைப்புகளும் முன்னெடுக்கவேண்டும். அதுவே காலத்துக்கு தேவையான பொறிமுறையாகும். ஆனால், இன்று என்ன நடக்கின்றது?

இனப்பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் அடையும் செயலில் சிலர் இறங்கியுள்ளனர். ஒரு சில தமிழ்க் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சுயநல அரசியலை நடத்திவருகின்றனர். தமிழன் எக்கேடு கெட்டால் என்ன நமக்கு வயிறு நிறைந்தால் சரி என்ற இழிநிலை சிந்தனைக்குள் மூழ்கியுள்ளனர்.

தென்னிலங்கையில் என்ன நடக்கின்றது, சிங்கள மக்களின் மனோநிலை எவ்வாறு இருக்கின்றது, எதிர்ப்பலைகளை சமாளித்து எவ்வாறு தீர்வை பெறுவது, அதற்காக தமது தரப்பில் செய்யப்படவேண்டிய தியாகங்கள் எவை என்பதிலே தமிழர்களும், தமிழ்த் தலைமைகளும், தமிழ் அமைப்புகளும் கவனமாக இருக்கவேண்டும்.

ஆனால், அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்றுவருகின்றன. சில தமிழ் அரசியல்வாதிகள் தென்னிலங்கை மக்களை அச்சமூட்டும் வகையிலேயே அறிக்கைகளை விட்டுவருகின்றனர். அரசியல் இராஜதந்திரம் என்பது அவர்கள் மத்தியில் கொஞ்சம்கூட இல்லையென்றே கூறவேண்டும். உணர்ச்சி அரசியல் காரணமாக சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளவே முற்படுகின்றனர்.

 இதற்கிடையில் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும், பற்றி எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர் என்ற போர்வையில், சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை வலுவடையச்செய்கின்றனர்.

ஜெனிவாத் தொடர் சர்வதேச மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்று தமிழர்களுக்கு சார்பாக குரல்கொடுக்கலாம். அது கட்டாயம் செய்யப்படவேண்டிய நடவடிக்கையாகும்.
ஆனால், புலம்பெயர் தேசங்களில் இன்று என்ன நடைபெறுகின்றது? ஐக்கியம் இல்லை. பல தரப்பினரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து செயற்படுகின்றனர். ஏன்! மாவீரர்களை வைத்துக்கூட பிழைப்பு நடத்துமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. தமிழர்களின் விடுதலைக்காக போராடிய வீரமறவர்களை மறக்ககூடாது என்பதில் நாமும் உறுதியாகவே இருக்கின்றோம். அவர்களை மதிக்கவேண்டுமே தவிர, வைத்து அரசியல் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கின்றோம்.

வெளிநாடுகளில் ஒன்றுகூடி பிரமாண்ட நிகழ்வுகளை நடத்துபவர்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேசக்கரம் நீட்டினால் என்ன? இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உதவிகளை வழங்கினால் என்ன? இப்படி பொருளாதார மட்டத்தில் பல உதவிகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன. அதற்கான முதலீடுகளை செய்யலாம். ஒருசிலர் உதவுகின்றனர், அதை ஏற்கின்றோம். ஆனால், பெரும்பாலானோர் என்ன செய்கின்றனர்?

தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை முக்கியத்துவமிக்கது. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இருக்கும்போதே தீர்வை எட்டிவிடவேண்டும். இனி எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கூட்டாட்சி உதயமாகுமோ தெரியவில்லை. எனவே, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிங்கள மக்களை உசுப்பேற்றாத வகையில் தமிழர்களெல்லாம் ஓரணியில் திரண்டு அரசியல் தீர்வைபெற முயற்சிப்போம்.

மாறாக வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து, சுயலாப அரசியலை நடத்தினால் அது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் ஆபத்தாகவே அமையும்.

அடுத்தாண்டில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்போது சிங்கள, பௌத்த மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக மஹிந்த அணியும், சில கட்சிகளும் இனவாத ஆயுதத்தையே கையிலெடுக்கும். இதனால், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தடை ஏற்படக்கூடும். அந்த தடையை உடைப்பதற்குரிய நடவடிக்கையை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டுமே தவிர, அதை இறுக்கும் வகையில் செயற்படக்கூடாது.

இலங்கையை அண்மையில் புரட்டிப்போட்டது ஓகி புயல். இதனால், பெரும் சேதமும் ஏற்பட்டது. எனவே, புதிய அரசியலமைப்பு, அரசியல் தீர்வு என தமிழர்கள் இங்கு கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அவற்றை சீர்குலைக்கும் வகையில், ஓகி புயல்போன்று ஆபத்தை தரும் வகையில் எந்தரப்பும் செயற்படக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

https://www.sudaroli.com/special-articles/item/2212-2017-12-04-10-02-47

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

அப்ப உங்களோடை நிக்கிற முசுலீமுகள்.... புதிய அரசியலமைப்பை ஏற்க மாட்டினம் என்று  சொல்லுறது....மற்றப்பக்கத்தாலை காணி பிடிக்கிறது.....

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this