Jump to content

தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

நடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வீசிய கோலிக்கு 25 சதவீதம் அபராதம்

 
அ-அ+

நடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வேகமாக வீசியதற்காக விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvIND #ViratKohli

 
 
 
 
நடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வீசிய கோலிக்கு 25 சதவீதம் அபராதம்
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 307 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தென்ஆப்பிரிக்கா அணி 23.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருக்கும்போது திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சிறிது நேரத்தில் மழை நின்றபின் ஆட்டம் தொடங்கியது. அப்போது பவுண்டரி லைனில் (OutFeild) மிகவும் ஈரப்பதமாக இருந்தது. இதனால் பந்து ஈரமானது. ஈரமான பந்தால் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய திணறினார்கள்.

ஆகவே, விராட் கோலி மைதான நடுவர் மைக்கேல் காக்கிடம் புகார் அளித்தார். ஆனால் காக் விராட் கோலியின் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விரக்தியில் பந்தை தரையில் வேகமாக வீசினார்.

பின்னர் 29-வது ஓவர் முடிவில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய விராட் கோலி, டிரெஸ்ஸிங் அறை சென்று தலைமை பயிற்சியாளரை அழைத்துக் கொண்டு போட்டி நடுவரிடம் முறையிட்டார்.

201801161523363925_1_2ViratKohli2-s._L_styvpf.jpg

மைதான நடுவரிடம் வாக்குவாதம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக பந்தை தரையில் வீசியதும் ஐசிசி-யின் வீரர்கள் நன்னடத்தை விதிக்கு மாறானது என மைதான நடுவர் மைக்கேல் காக் புகார் அளித்தார்.

விராட் கோலி தனது மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. #SAvIND #ViratKohli

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/16152337/1140526/SAvIND-Centurion-Test-Virat-Kohli-fined-for-breaching.vpf

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

இந்திய பௌலர்கள் அசத்தல்... தென்னாப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்-அவுட்!

 
 

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  2-வது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால, இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பௌலர்கள் அசத்தல்

 

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி, 150 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 258 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில், முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு லீட் ரன்கள் இருக்கவே, இந்திய அணிக்கு டார்கெட்டாக 287 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாகத் தொடங்கி தொடர்ந்து விளையாடி வருகிறது. 5 ஓவர் முடிவில் 11 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் இந்தியா ஆடி வருகிறது. ஓபனர்கள் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களத்தில் உள்ளனர். 

https://www.vikatan.com/news/sports/113718-sa-all-out-for-258-in-second-test-of-second-innings-against-india.html

Link to comment
Share on other sites

287 ரன் இலக்கு: 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்- 4-வது நாள் முடிவில் 35-3

 
அ-அ+

செஞ்சூரியன் டெஸ்டில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.

 
 
 
 
287 ரன் இலக்கு: 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்- 4-வது நாள் முடிவில் 35-3
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 8-வது ஓவரில் முரளி விஜய் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 26 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் பார்தீவ் பட்டேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

நாளைய கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 252 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 252 ரன்கள் என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை இந்த ஜோடி நாளை காலை செசன் (மதிய உணவு இடைவேளை) வரை நிலைத்து நின்றால், ஒருவேளை இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது. இல்லையெனில் இந்தியா தோல்வியை சந்திக்கும். #SAvIND #INDvSA #CenturionTest #Ngidi

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/16221933/1140577/SAvIND-India-struggle-35-for-3-pujara-fight.vpf

Link to comment
Share on other sites

தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஆடுகளத்தில் ராகுலுடன் தமிழில் பேசிய விஜய்; வைரலாகும் வீடியோ

 

 
vijjpg

தமிழில் பேசும் விஜய் | படம் ட்விட்டர் பக்கத்திலிருந்து

தென் ஆப்பிரிக்காவுனான இரண்டாவது இன்னிங்கிஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ராகுல் அகியோர் களத்தில் விளையாடும்போது தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு அவர்களது ஆட்ட யுத்தி புரியாமல் இருப்பதற்காக தமிழிக வீரர் முரளி விஜய் இதனை கையாண்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், ராகுலும் களமிறங்கினர்.

தென் ஆப்பிரிக்காவுடனான  டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் இந்தியா பேட்டிங் வரிசை சற்று தடுமாறிதான் போயுள்ளனர். இதனை நினைவில் கொண்ட தங்களது ஆட்ட உத்தியை தென் ஆப்பிரிக்க வீரர்கள் தெரிந்துக் கொள்ளாத வண்ணம் இருக்க தமிழக வீரர் முரளி விஜய் களத்தில் தனது சக வீரர் ராகுலுடன் தமிழில் உரையாற்றினார்.

ராகுல் கர்நாடாகவைச் சேர்ந்தவர். 

இதனைத் தொடர்ந்து முரளி விஜய் ராகுலுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் விஜய், "மெல்ல... மச்சான் இந்த ஓவர் எல்லாமே (பந்தை )உள்ளதான் போடுறாங்க” என்று கூறுகிறார்.

 

எனினும் விஜய் 9 ரன்னிலும், ராகுல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2-வது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22454930.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

6.png&h=42&w=42

307 & 151 (50.2 ov, target 287)
 

South Africa won by 135 runs

டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா

செஞ்சூரியன் டெஸ்ட்: இந்திய அணி தோல்வி

Link to comment
Share on other sites

151 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா: தொடரை வென்றது தெ.ஆ.

 

 
lungi33

 

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றுள்ளது. 

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்துடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. பார்திவ் (5 ரன்கள்), புஜாரா (11 ரன்கள்) களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இந்திய அணி புஜாரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்த நிலையில் முதல் இன்னிங்ஸைப் போல இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளார் புஜாரா.

இதன் மூலம் புஜாரா சில விநோத சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனதில்லை. இதன் அடிப்படையில் இருமுறை ரன் அவுட் ஆன முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கிற விநோத சாதனைக்கு உள்ளாகியுள்ளார் புஜாரா. 

ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை - 23. கடந்த 17 வருடங்களில் இப்போதுதான் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பரில் ஸ்டீபன் பிளமிங் இதுபோல ஒரே டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனார். 

புஜாராவின் விக்கெட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. பார்தீவ் படேல் மார்கலின் அற்புதமான கேட்ச்சால் 19 ரன்களில் வெளியேறினார். பாண்டியா 6 ரன்களில் நடையைக் கட்டினார். முதல் இன்னிங்ஸில் நன்கு விளையாடிய அஸ்வின் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இதன்பிறகு ரோஹித் சர்மாவும் ஷமியும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார்கள்.

1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் வேகமாக ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, 47 ரன்களில் ரபடா பந்துவீச்சில் வீழ்ந்தார். அடுத்ததாக ஷமி 28 ரன்களிலும் பூம்ரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வேதனையான 2-வது இன்னிங்ஸ் நிறைவு பெற்றது.

இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 50.2 ஓவர்களில் 151 ரன்களுக்குச் சுருண்டது. 2-வது டெஸ்டை 135 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/17/ngidi-639-helps-bowl-india-out-for-151-to-win-the-2nd-2846116.html

Link to comment
Share on other sites

`கோலியின் விக்கெட்தான் ஸ்பெஷல்!' - இந்திய அணியைத் தவிடுபொடியாக்கிய லுங்கி எங்கினி நெகிழ்ச்சி!

 
 

தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள்கொண்ட தொடரையும் 2-0 என்ற ரீதியில் இழந்தது இந்திய அணி. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க அணி சார்பில் லுங்கி எங்கினி கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது, அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் போட்டிகுறித்து தனது கருத்துகளை லுங்கி எங்கினி தெரிவித்துள்ளார். 

Lungi Ngidi

 

லுங்கி எங்கினி, `எனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா போன்ற ஒரு அணிக்கு எதிராக நன்றாக பந்து வீசியது மன நிறைவைத் தருகிறது. இந்தப் போட்டியில், நான் எத்தனை விக்கெட் எடுத்திருந்தாலும் விராட் கோலியின் விக்கெட்தான் எனக்கு மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. ஏனென்றால், அந்த விக்கெட்டுக்காக ஒரு கேம் ப்ளானை வடிவமைத்து, அதைக் கச்சிதமாக செயல்படுத்தினேன். கோலியின் விக்கெட்டை கைப்பற்றியபோது, எனது கேம் ப்ளான் செயல்படுத்தப்பட்டதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/sports/113856-the-moment-for-me-i-think-was-the-captains-wicket-lungi-ngidi.html

Link to comment
Share on other sites

ஒன்றா, இரண்டா... பல இடங்களில் சறுக்கிய கேப்டன் கோலி...! இந்தியா தோற்றது ஏன்? #SAvsIND

 
 

செஞ்சுரியன் மைதானத்தில் அதுவரை சந்தித்த 236 பந்துகளையும் திடமாக எதிர்கொண்டிருந்தார் கோலி. அனுபவ மோர்கல், அசுரவேக ரபாடா, கடந்த போட்டியின் நாயகன் பிலாண்டர் மூவரையும் அற்புதமாகக் கையாண்டார். அவர்கள் யாரும் கோலிக்கு அதுவரை அப்படியொரு பந்தை வீசியிருக்கவில்லை. 16-வது ஓவரின் கடைசிப் பந்து, கோலியை மிரளவைத்தது. குட் லென்த்தில், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்டது அந்தப் பந்து. பௌன்ஸ் ஆகியிருக்கவேண்டும். ஸ்விங் ஆகியிருந்தாலும் ஆஃப் ஸ்டம்ப் லைனுக்குத்தான் வந்திருக்கவேண்டும். கோலியும் அதைத்தான் எதிர்பார்த்தார். ஆனால்... #SAvsIND

Kohli #SAvsIND

 

பௌன்ஸ் ஆகவில்லை. மிடில் ஸ்டம்புக்கும், லெக் ஸ்டம்புக்கும் நடுவில், கோலியின் pad-யைப் பதம் பார்த்தது. நிலைகுலைந்து உட்காந்தார் கோலி. அந்தப் பந்தின் தரம் அப்படி. அப்பீல் செய்ததும், நடுவரின் விரல் உயர்ந்துவிட்டது. இந்தியக் கேப்டனையும், இந்தியாவின் வெற்றிக் கனவையும் மொத்தமாகக் காலி செய்தார் லுங்கி எங்கிடி. அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள்... தென்னாப்பிரிக்கா தொடரை வென்றுவிட்டது.

ஒரு பேட்ஸ்மேனாக அந்தத் தருணம் கோலிக்கு ஏமாற்றம்தான். ஆனால், அதைவிட கேப்டன் கோலிக்கு அது மிகவும் மோசமான தருணம். இதுவரை அவரது தலைமையில் இந்திய அணி ஒரு தொடரைக்கூட தோற்காமல் இருந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் ஆடிய இரண்டாவது போட்டியிலேயே, அந்தப் பெருமை பறந்துவிட்டது. கேப் டவுன் போட்டி அளவுக்கு இந்தப் போட்டி மோசம் இல்லைதான். ஆனால், இந்திய வீரர்களின் ஆட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1 சதம், 1 அரைசதம். அந்தச் சதமும் கேப்டன் அடித்ததுதான். மற்ற எந்த பேட்ஸ்மேனும் ஒழுங்காக ஆடவில்லை...புஜாரா உள்பட. மற்ற பேட்ஸ்மேன்களை மட்டும் தோல்விக்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. கோலிக்கும் இதில் பொறுப்பிருக்கிறது. கேப்டன் கோலிக்கு இந்தத் தோல்வியில் பெரிய பங்கிருக்கிறது.

#SAvsIND

ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா... இலங்கையிடம் விளையாடும் ஞாபகத்தில் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார் கேப்டன். இன்றைய சூழ்நிலையில், இந்தியாவின் சிறந்த 'ஓவர்சீஸ்' பேட்ஸ்மேன் ரஹானே. அதேபோல், டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஃபாஸ்ட் பௌலர்கள் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இருவரும்தான். முதல் போட்டியில் இவர்கள் மூவருமே இல்லாத பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தார் கோலி. சிறப்பான தொடக்கம் தரக்கூடிய ராகுல். அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படாததும் தோல்விக்கான காரணங்கள் வரிசையில் ஒட்டிக்கொண்டது. அந்தத் தோல்விக்குப் பிறகாவது அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இஷாந்த், ராகுல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டனர். ரஹானே சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சிதான்.

ரோஹித் - இந்தியத் துணைக்கண்டத்தில், இங்கிலாந்துக்கு எதிராக ஆடியதை வைத்து தேர்வு செய்தது மிகவும் தவறான முடிவாக அமைந்துவிட்டது. கடினமான நேரத்தில், அவரால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸ் 'பில்ட்' செய்ய முடியவில்லை. ரஹானேவின் இடத்தில் ஆடும் ஒரு வீரரிடம் இப்படியொரு பெர்ஃபாமென்ஸ்... அதேபோல் பும்ரா! இன்னும் கொஞ்சம் அனுபவம் பெற்றபின் களமிறக்கியிருக்கலாம். அறிமுகத்தோடு சேர்த்து பிரஷரையும் அன்பளிப்பாகக் கொடுத்து களமிறக்கியுள்ளனர். விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், இன்னும் லைன் அண்ட் லென்த்... டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை. ஓவருக்கு இரண்டு மோசமான பந்துகள் வீசும்போது எதிரணி பேட்ஸ்மேன்களால் ஈசியாக ரன்சேர்க்க முடியும். இந்த இடத்தில் உமேஷ் பெரிதும் உதவியாக இருந்திருப்பார்.

#SAvsIND

போட்டி தொடங்கிய பிறகும் கோலியின் தவறுகள் தொடர்ந்தன. அட்டாக்கிங் மைண்ட்செட் உடையவர் என்று கருதப்படும் விராட், பல இடங்களில் டிஃபன்ஸிவாக யோசித்தார். நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன்... தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்காமல், ரன்கள் கட்டுப்படுத்துவதில் குறியாக இருந்தார். முகமது ஷமியின் ஓவரில் ரன் அடித்துவிடுவார்கள் என நினைத்து, அவருக்கு அந்த செஷனில் ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார் கோலி. அப்போது சிக்கனமாகப் பந்துவீசிய இஷாந்த், பாண்டியா இருவரும்தான் அந்த செஷனில் தொடர்ச்சியாகப் பந்துவீசினர். 

அதேபோல், தென்னாப்பிரிக்க அணி 253 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோதே, இந்திய அணி புதிய பந்தை எடுத்திருக்கலாம். அப்போது, தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது. புதிய பந்தை எடுத்து அட்டாக் செய்திருந்தால், டெய்ல் எண்டர்களை சீக்கிரம் வீழ்த்தியிருக்கலாம். ஆனால், டுபிளஸ்ஸி களத்தில் இருந்ததனால் அதற்கும் தயங்கினார் கோலி. ஒருவேளை அவர் புது பந்தில் எளிதாக ரன் எடுத்துவிட்டால்...? தயங்கினார் கோலி. மிகவும் தாமதித்தே புதுப் பந்து எடுக்கப்பட்டது. முதல் ஸ்லிப்பை கீப்பருக்குத் தொலைவாக நிற்கவைத்தது, பெவிலியன் எண்டிலிருந்து மட்டுமே அஷ்வினைப் பந்துவீசச் செய்தது என கோலியின் பல முடிவுகள் அவரது அனுபவமின்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

#SAvsIND

"தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்களைவிடச் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக ஃபீல்டிங்கில்..." என்று பரிசளிப்பு விழாவில் கூறினார் விராட். இந்தியாவின் ஸ்லிப் பிரச்னை இன்னும் தீராத நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்களின் ஃபீல்டிங்... தட் ஸ்டொமக் பர்னிங் மொமன்ட்! பார்த்திவ் கேட்ச்சை மோர்னே மோர்கல் பிடித்தது, ரோஹித் கேட்சை டிவில்லியர்ஸ் பிடித்தது, புஜாராவை அன் அவுட்டாக்கிய ஏ.பி-யின் பெர்ஃபெக்ட் த்ரோ என மெர்சல் காட்டியது தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங். முன்னணி வீரர்களெல்லாம் ஃபீல்டிங்கில் மிரட்ட, பௌலிங்கில் அசத்தினார் எங்கிடி.

முதல் போட்டி. இவர் replace செய்தது - டேல் ஸ்டெய்ன்! அந்த இடத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்தார். சீம், பௌன்ஸ், ஸ்விங், வேகம் என அனைத்து ஆயுதங்களாலும் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். சாதாரணமாக பௌன்ஸர்களை upper cut மூலம் பௌண்டரிக்கு விரட்டுவர் ஹர்டிக். எங்கிடி வீசிய அந்தப் பந்திலும், அதற்குத்தான் முயற்சி செய்தார். பந்து பௌன்ஸ் மட்டும் ஆகவில்லை. விலகி வெளியே சென்றது. சேஸ் செய்து அடித்து, அவுட்டானார் பாண்டியா. இந்திய வீரர்கள் பொறுமை இழக்கும்போதெல்லாம், சரியாகப் பந்துவீசி அவர்களது விக்கெட்டை வீழ்த்தினார் எங்கிடி. ராகுல், பாண்டியா, அஷ்வின் எல்லோரும் இவரது வலையில் வீழ்ந்தனர். இவரது பௌலிங் சிறப்பாக இருந்தது என்றாலும், அவர் ஆட்ட நாயகன் விருது வெல்வதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள்தான் முக்கியக் காரணம்.

#SAvsIND

தென்னாப்பிரிக்காவில் இறங்குவதற்கு முன்பு விளையாடிய 6 போட்டிகளில், ஒரே இன்னிங்ஸில் மட்டும்தான் இந்திய அணி 450 ரன்களுக்கும் குறைவாக ஆல்அவுட் ஆனது. அந்த ஆறு போட்டிகளில் 68 விக்கெட்டுகள் மட்டுமே இழந்தது இந்தியா. சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்தது  - 56.84 ரன்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவில்... 4 இன்னிங்ஸ்களிலும் ஆல்அவுட். இன்னும் ஒருமுறை கூட 350-யைத் தொடவில்லை. இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 20.05 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். 

 

பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறுவது, பிட்ச்சின் தன்மையை உணர்ந்து ஆடுவது, முதல் செஷனில் விக்கெட்டை இழக்காமல்  பொறுமை காப்பது என டெஸ்ட் போட்டிக்குத் தேவையான எதையுமே இந்திய பேட்ஸ்மேன்கள் பின்பற்றவில்லை. விளைவு - 33 போட்டிகள் கழித்து, தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது இந்திய அணி. கோலியின் தலைமையில் 9 டெஸ்ட் தொடர்களை வென்றுவிட்டு, ஒரு போட்டியை வெல்லவே இப்போது போராடிக்கொண்டிருக்கிறது. ஆசியாவிலேயே தொடர்ந்து ஆடுவது, ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்கும் வீரர்களை டெஸ்ட் போட்டியில் களமிறக்குவது, ஃபீல்டிங் சொதப்புவது என இந்தியாவின் தோல்விக்கு அதே பழைய காரணங்கள்தான் இன்னும் வழிவகுத்துக்கொண்டிருக்கின்றன. அதை மாற்றிக்கொள்ளத்தான் இந்திய அணி தயங்குகிறது!

https://www.vikatan.com/news/sports/113859-india-lost-the-series-to-south-africa.html

Link to comment
Share on other sites

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி: தோனி விமரிசனம்

 

 
dhoni_kohli1xx

 

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரையும் 2-0 என இழந்தது.

இதன்மூலம் தொடர்ச்சியாக ஏற்பட்ட 9 தொடர்களின் வெற்றிச் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்தியாவை வயிட்-வாஷ் செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கவுள்ளது.

அதுபோல, கடைசி போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் தேட இந்தியாவும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டார்.

அப்போது இந்திய அணி தோல்வி குறித்து தோனி பேசியதாவது:

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள தவறுகளை நான் சுட்டிக்காட்ட மாட்டேன். மாறாக இந்த தொடரில் ஏற்பட்டுள்ள நன்மைகளை நாம் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டும்.

ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 20 விக்கெட்டுகள் தேவை. அது தற்போது நடந்துள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. நாம் எங்கு ஆடுகிறோம் என்பது முக்கியமில்லை.

தற்போது நம்மால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் தற்போது வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். இந்த தருணத்தில் கூடுதலாக ரன்கள் குவிப்பதில் மட்டுமே சிறிது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் ; ரஹானேக்கு வாய்ப்பு

 

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நாளை மறுதினம் இடம்பெற்றவுள்ள 3 ஆவது டெஸ்ட்  போட்டிக்கு ரஹானேக்கு வாய்ப்பளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

rahane.jpg

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

 

இரு அணிகளுக்குமிடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் இடம்பெற்ற முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில் 135 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை 24 ஆம் திகதி ஜோகன்ஸ்பேர்க்கில் ஆரம்பமாகின்றது. 

முதலிரு  டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத ரஹானேவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/29789

Link to comment
Share on other sites

தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ்ஸை புன்னகைக்க வைக்கும் காட்சி!

 

 
TH22PLESS

எல்கர், டுபிளெசிஸ், ஆம்லா.   -  படம். | ஏ.பி.

வாண்டரர்ஸ் பிட்சில் புற்கள் அதிக அளவில் விடப்பட்டுள்ளதால் பொதுவாக இன்னொரு கேப்டன் கூலாக இருக்கும் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் முகத்தில் புன்னகை தவழ்ந்துள்ளது.

இந்த வாண்டரர்ஸ் பிட்சில் பவுன்ஸ், ஸ்விங், வேகம் அதிகம் இருக்கும் என்பது ஏற்கெனவே திணறி வரும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ஒரு கெட்ட செய்தி, ஆனால் நம் பவுலர்களுக்கும் புன்னகை வருவிக்கும் பிட்சாக இது அமையும் என்பதால் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்களுக்கும் பிரச்சினைதான். ஆனால் ஏற்கெனவே சின்னாபின்னமாகியுள்ள இந்திய பேட்ஸ்மென்களுக்கு மேலும் சில சுயபரிசோதனைத் தேடல்களை இந்தப் பிட்ச் ஏற்படுத்தும் என்பது உண்மை.

அமைதியான ஒரு ஞாயிறில் நேற்று இந்திய அணி இங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பிட்சைப் பார்த்து நிச்சயம் கவலை அடைந்திருக்கும். 4 வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணியை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கவலை இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும். புதனன்று வாண்டரர்ஸில் 3-வது டெஸ்ட் தொடங்குகிறது. ரஹானே மீண்டும் அணிக்கு வரும் சுவடுகள் தெரிகின்றன.

2-வது டெஸ்ட் போட்டியில் செஞ்சூரியனில் தயாரிக்கப்பட்ட பிட்ச் குறித்து டுபிளெசிஸ் தனது அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தெரிவித்திருந்தார், இந்திய பிராண்ட் கிரிக்கெட்டுக்கு ஒத்து வரும் பிட்சாக அது இருந்தும், மோசமான அணித்தேர்வு, பீல்டிங், கேப்டன்சி, மோசமான பேட்டிங்கினால் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

இந்தியாவில் நடுநிலையான பிட்சை அமைக்காமல் பந்துகள் கடுமையாகத் திரும்பும் குழிபிட்ச்களைப் போட்டு தங்கள் அணியை வீழ்த்தியது பற்றி டுபிளெசிஸின் கோபம் அவரது செஞ்சூரியன் பிட்ச் பற்றிய கருத்தில் வெளிப்பட்டது. இந்திய மாதிரி பிட்ச் தயாரித்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி தன் பந்து வீச்சு, பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்தியச் சவாலை முறியடித்தது.

டுபிளெசிஸின் கேப்டன்சி ஆக்ரோஷமானது ஆனால் அதற்காக தாறுமாறான நடத்தையைக் கொண்டதல்ல. அவர் தனது உத்திகளில் கருனையற்ற ஒரு கேப்டனாக இருக்கிறார். ஆட்டத்தைத் தீர்மானிக்கும் கணங்களை டுபிளெசிஸ் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.

தனது களவியூகத்தின் மூலம் பேட்ஸ்மென்களுக்கு சவால் விடுக்கிறார், விராட் கோலிக்கு மிட்விக்கெட் பகுதியை காலியாக வைத்து அவரை பிளிக் ஆடத் தூண்டி எல்.பி.யில் வீழ்த்துமாறு செய்கிறார். பந்து வீச்சு மாற்றம் ஒவ்வொரு முறையும் வெற்றியடைந்துள்ளது. பேட்ஸ்மென் தெம்பா பவுமாவை எடுக்காமல் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிசையும் எடுக்காமல் 4 வேகப்பந்து வீச்சு என்பதில் கொள்கைத் தீவிரம் இவருக்கும் பயிற்சியாளர் கிப்சனுக்குமான மன ஒற்றுமையைக் காட்டுகிறது.

டேல் ஸ்டெய்ன் காயமடைந்து வெளியேறிய போதும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியாவின் கதையை கேப்டவுனில் முடித்தனர். 2 டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க பீல்டிங் பிரமாதமாக அமைய, இந்திய அணி 9 கேட்ச்களை விட்டது. தென் ஆப்பிரிக்காவின் கள பீல்டிங்கின் தாக்கத்தை புஜாராவை விட யார் உணர்ந்திருக்க முடியும்?

ஒன்றுமில்லாததிலிருந்து வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ஏ.பி.டிவில்லியர்ஸ், பவுண்டரியில் அருமையான கேட்ச்களைப் பிடிக்கும் மோர்னி மோர்கெல் என்று தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் வாங்கிய 3-0 தோல்வியை எந்த விதத்திலும் மறக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டியது.

இந்தத் தொடரில் டுபிளெசிஸுக்கு இன்னும் இலக்கு முடிந்து விடவில்லை. அது ஏ.பி.டிவில்லியர்ஸ், ரபாடா ஆகியோர் வெளிப்படுத்திய 3-0 கிளீன் ஸ்வீப்பாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

http://tamil.thehindu.com/sports/article22490486.ece

Link to comment
Share on other sites

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்; வீரர்கள் தேர்வில் இரு மாற்றம்

 

 
virat

கோப்புப் படம்   -  படம். | ராய்ட்டர்ஸ்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) 3-வது டெஸ்ட் நடைபெறுகிறது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்ட இந்திய அணி ஒயிட்வாஷை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

இந்திய அணி தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்கு பதில் ரஹானேவும், அஸ்வினுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேசவ் மகாராஜ் பதிலாக அண்டிலே பெலுக்வாயா சேர்க்கப்பட்டுள்ளார்.

அணிகள் விவரம்

தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஹசிம் ஆம்லா, வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், பிலாண்டர், கேசவ் மகாராஜ், ரபாடா, மோர்கல், நிகிடி, கிறிஸ் மோரிஸ் அண்டிலே பெலுக்வாயா.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல்,, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா.

http://tamil.thehindu.com/sports/article22506592.ece?homepage=true

Link to comment
Share on other sites

பந்துவீச்சில் மிரட்டும் தெ.ஆ: இந்திய அணி மீண்டும் திணறல்!

vijay_3rd1

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா ஆகிய இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். பார்தீவ் படேல் இந்த டெஸ்டிலும் இடம்பெற்றுள்ளார். பாண்டியா உள்ளிட்ட 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜுக்குப் பதிலாக அன்டிலே பெலுக்வாயோ இடம்பெற்றுள்ளார்.

3rd_test1.jpg

இன்றும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. இதனால் இந்த டெஸ்டிலும் இந்திய தொடக்க வீரர்கள் ரன் எடுக்கச் சிரமப்பட்டார்கள். கேஎல் ராகுல், 7 பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்கமுடியாமல் பிலாண்டரின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்தச் சில ஓவர்களில் 8 ரன்களுடன் முரளி விஜய்யும் நடையைக் கட்டினார். ரபடா அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். 13 ரன்களுக்குள் தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து இந்த டெஸ்டிலும் ஏமாற்றமளித்துள்ளார்கள்.

முதல் விக்கெட் வீழ்ந்தபிறகு களமிறங்கிய புஜாரா மிகவும் கவனமாக விளையாடினார். ரன் எடுப்பதை விடவும் விக்கெட் பறிபோகாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார். பிலாண்டர் பந்துவீச்சை அதிகம் எதிர்கொண்ட புஜாரா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் அவரால் முதல் ரன்னை எடுக்கவே நீண்ட நேரம் பிடித்தது. 24-வது பந்தை எதிர்கொண்டபோது ஒரு ரன் எடுத்தார். ஆனால் அதனை லெக் பை என நடுவர் முடிவு செய்தார். கடைசியாக 54-வது பந்தில்தான் அவரால் தன்னுடைய முதல் ரன்னை எடுக்கமுடிந்தது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் செய்து புஜாராவை உற்சாகப்படுத்தினார்கள்.

ரபடா பந்துவீச்சில் கோலி கொடுத்த கேட்ச்சை பிலாண்டர் தவறவிட்டதால் கோலியை வெளியேற்றும் நல்ல வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா. பிறகு கோலி, தெ.ஆ. வேகப்பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு விளையாடினார்.

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 58 பந்துகளில் 24 ரன்களுடனும் புஜாரா 66 பந்துகளில் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/24/rahul-and-vijay-depart-as-south-africa-claim-early-ascendancy-at-the-wanderers-2850543.html

Link to comment
Share on other sites

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பல்!- நொண்டியடித்த இந்தியா 

 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Kohli

 


விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரையும் கைப்பற்றி விட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டார். அஷ்வின் நீக்கப்பட்டு, புவனேஷ்வர் குமார் மீண்டும் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்க வீரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல்  களமிறங்கினார்கள். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், விஜய் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய புஜாரா, கேப்டன் கோலி இணை விக்கெட் விழுந்துவிடாமல் இருக்க தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதிலும் புஜாரா கடுமையான நிதானத்தைக் கடைபிடித்தார். முதல் ரன் எடுக்கவே அவருக்கு 54 பந்துகள் தேவைப்பட்டன. இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி மெல்ல நிமிர்ந்தது. கோலி அரைசதம் அடித்தார். நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்த நிலையில், ஸ்கோர் 97 ரன்களாக உயர்ந்தபோது கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்தியா மீண்டும் வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது.

Cricket
 

 

எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 8 ரன்னிலும், பட்டேல் 2 ரன்னிலும் வீழ்ந்தனர். அரைசத்தைக் கடந்த புஜாரா 50 ரன்னுக்கு அவுட்டானார்.  ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார். பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் சிறிது நேரம் போராடி 30 ரன் சேர்த்தார்.  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 76.4 ஓவர்களைச் சந்தித்த இந்திய அணியின் ரன் வேகம் மிகக் குறைவாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. டீன் எல்கர, மார்க்ரம் துவக்க வீரர்களாக களமிறங்கினர். மார்க்ரம் 2 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.  இன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

https://www.vikatan.com/news/sports/114470-3rd-test-india-all-out-for-187-runs.html

Link to comment
Share on other sites

53 பந்துகளுக்குப் பிறகு முதல் ரன் எடுத்த புஜாரா!

 

 
pujara_2nd

 

தென் ஆப்பிரிக்கா - இந்தியா ஆகிய இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். பார்தீவ் படேல் இந்த டெஸ்டிலும் இடம்பெற்றுள்ளார். பாண்டியா உள்ளிட்ட 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜுக்குப் பதிலாக அன்டிலே பெலுக்வாயோ இடம்பெற்றுள்ளார்.

இன்றும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. இதனால் இந்த டெஸ்டிலும் இந்திய தொடக்க வீரர்கள் ரன் எடுக்கச் சிரமப்பட்டார்கள். கேஎல் ராகுல், 7 பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்கமுடியாமல் பிலாண்டரின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்தச் சில ஓவர்களில் 8 ரன்களுடன் முரளி விஜய்யும் நடையைக் கட்டினார். ரபடா அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். 13 ரன்களுக்குள் தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து இந்த டெஸ்டிலும் ஏமாற்றமளித்துள்ளார்கள்.

முதல் விக்கெட் வீழ்ந்தபிறகு களமிறங்கிய புஜாரா மிகவும் கவனமாக விளையாடினார். ரன் எடுப்பதை விடவும் விக்கெட் பறிபோகாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார். பிலாண்டர் பந்துவீச்சை அதிகம் எதிர்கொண்ட புஜாரா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் அவரால் முதல் ரன்னை எடுக்கவே நீண்ட நேரம் பிடித்தது. 24-வது பந்தை எதிர்கொண்டபோது ஒரு ரன் எடுத்தார். ஆனால் அதனை லெக் பை என நடுவர் முடிவு செய்தார். கடைசியாக 54-வது பந்தில்தான் அவரால் தன்னுடைய முதல் ரன்னை எடுக்கமுடிந்தது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் செய்து புஜாராவை உற்சாகப்படுத்தினார்கள்.

இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. கோலி 18, புஜாரா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

முதல் ரன் எடுப்பதற்கு முன்பு அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்கள் (2001-க்குப் பிறகு)

61 பந்துகள் பிராட் vs நியூஸிலாந்து, ஆக்லாந்து, 2013
53 புஜாரா vs தென் ஆப்பிரிக்கா, ஜோஹன்னஸ்பர்க், 2018 
52 டு பிளெஸ்ஸி vs இந்தியா, தில்லி, 2015
45 ஆம்லா vs இந்தியா, தில்லி, 2015

முதல் ரன் எடுக்க அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்கள்

57 பந்துகள் ஆர் செளகான் vs இலங்கை, அஹமதாபாத் 1994

54 புஜாரா vs தென் ஆப்பிரிக்கா, ஜோஹன்னஸ்பர்க், 2018

உலக சாதனை: 80 பந்துகள் முர்ரே (இங்கிலாந்து) vs ஆஸ்திரேலியா, சிட்னி 1963

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/24/cheteshwar-pujara-batted-53-consecutive-balls-without-scoring-from-start-of-his-innings-2850539.html

Link to comment
Share on other sites

3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 194 ரன்னில் ஆல்அவுட்- இந்தியா- 49-1

 
அ-அ+

இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 194 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார். #SAvIND

 
 
 
 
3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 194 ரன்னில் ஆல்அவுட்- இந்தியா- 49-1
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் நான்கு ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ரபாடா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

201801252154449880_1_philander001-s._L_styvpf.jpg

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. எல்கர் நேற்று எடுத்திருந்த 4 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ரபாடா உடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ரபாடா முன்னணி பேட்ஸ்மேன் போன்று விளையாடினார்.

தென்ஆப்பிரிக்கா 80 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரபாடா 84 பந்தில் 6 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அம்லா-ரபாடா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடிய இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரன்னாக அமைந்தது.

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 5 ரன்னிலும், டு பிளிசிஸ் 8 ரன்னிலும், டி காக் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 125 ரன்கள் எடுப்பதற்குள் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பிலாண்டர் அதிரடி ஆட்டத்தில் விளையாடினார். மறுமுனையில் அம்லா அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடி அம்லா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்தது. இதுவும் தென்ஆப்பிரிக்காவின் ரன் உயர்வுக்கு முக்கியமானதாக இருந்தது.

பிலாண்டர் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 65.5 ஓவரில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியாவை விட 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய் உடன் பார்தீப் பட்டேல் களம் இறங்கினார். அதிரடியாக விளையாட நினைத்த பார்தீவ் பட்டேல் 15 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

201801252154449880_2_vijayrahul-s._L_styvpf.jpg

2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 2 செசன் விளையாடினால் இந்தியாவிற்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. #SAvIND #Bumrah

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/25215446/1142246/3rd-Test-south-africa-194-all-out-india-49-for-one.vpf

Link to comment
Share on other sites

விராட் கோலி செய்த தவறுக்கு டிவில்லியர்ஸை பவுல்டு செய்து ஈடுகட்டிய புவனேஷ்வர் குமார்

 
devilliers

ஏ.பி.டிவில்லியர்ஸ்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகு 0-வில் இருந்த அபாயகர பேட்ஸ்மென் டிவில்லியர்ஸுகு தவறுதலாக ரிவியூ கேட்காமல் விட்டு விட்டார் இந்திய கேப்டன் விராட் கோலி.

ஆனால் டிவில்லியர்ஸுக்கு இந்தத் தவறைச் செய்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர் சற்று முன் புவனேஷ்வர் குமார் பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த முறை ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக வெளியில் பிட்ச் ஆகி பெரிய இன்ஸ்விங்கர் ஆனது அதனை அடிக்கப் பார்த்தார் டிவில்லியர்ஸ் பந்து இடையில் புகுந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.

நேற்று புஜாரா இதே போல் 0-வில் இருந்த போது ‘அம்பயர்ஸ் கால்’ என்று நினைத்து டுபிளெசிஸ் எல்.பி.க்கு ரிவியூ கேட்காததையடுத்து அரைசதம் கண்டார் புஜாரா.

இன்று உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னிங்சின் 32-வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீச மணிக்கு 137 கிமீ வேகம் வந்த அந்த சற்றே கூடுதலான இன்ஸ்விங்கர் டிவில்லியர்ஸின் மட்டையைக் கடந்து கால்காப்பைத் தாக்கியது, இந்தப் பிட்சில் உயரம் சந்தேகம் காரணமாக நடுவர்கள் எல்.பி தீர்ப்பை சரியாக வழங்க முடியவில்லை, அதே போல் இதற்கும் நாட் அவுட் என்றே கள நடுவர் தீர்ப்பளித்தார்.

பயங்கரமான முறையீடு எழுந்தும் நடுவர் வாளாவிருந்தார். இதனை ரிவியூ செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தனர் ஆனால் இது அம்பயர்ஸ் கால் அல்ல ஹாக் ஐ ரீப்ளேயில் 3 சிகப்புக் கோடுகளுடன் அவுட் என்றே காட்டியது. கோலி கடுப்பானார், ரவிசாஸ்திரி பெவிலியனிலிருந்து ஒற்றை விரலை உயர்த்தினார்.

இடைவேளைக்கு முன்பாக ஆம்லாவுக்கு இதே போன்ற பந்துக்கு ரிவியூ செய்து தோல்வியில் முடிந்தது, இதனையடுத்தே கோலி ரிவியூ செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கலாம், ஆனால் தப்பிய டிவில்லியர்ஸ் பெரிய இன்ஸ்விங்கரி பவுல்டு ஆனார். விராட்டின் தவறினால் பெரிய பாதிப்பில்லை.

 

 

 

பும்ரா, புவனேஷ்வர், ஆம்லா அபாரம்: தென் ஆப்பிரிக்கா 194 ரன்களுக்குச் சுருண்டது

 

 
bumrah

5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ரா.   -  படம். | ஏ.எஃப்.பி.

வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆம்லா மிகப்பிரமாதமாக ஆடி 61 ரன்களை எடுக்க இந்தியா தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

புவனேஷ்வர் குமார் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மொகமது ஷமி கடும் ஏமாற்றமளித்தார். மற்றவரெல்லாம் 3 ரன்களுக்குக் கீழ் கொடுக்க ஷமி 12 ஓவர்களில் 46 ரன்களுக்கு1 விக்கெட் என்பது இந்தப் பிட்சில் மோசமான பந்து வீச்சுதான்.

முதல் நாள் பிட்சை விட 2-ம் நாள் பிட்ச் கொஞ்சம் வேகம் கூடியிருந்தது. இதனால்தான் டாஸ் வென்று கோலி பேட்டிங்கை தேர்வு செய்தது மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகும். இந்தப் பிட்சில் ஷமி பவுலிங் ஏமாற்றமே. மற்றபடி தென் ஆப்பிரிக்காவை விட இந்திய பவுலர்கள் அபாயகரமாக வீசினர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக ரபாடா பந்துகளை சந்திப்பதிலும் ஆடாமல் விடுவதிலும், ஷார்ட் தேர்விலும் தேர்ந்த ஒரு மட்டையாளர் போல் ஆடினார்.

உணவு இடைவேளையின் போது 81/3 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி உணவு இடைவேளைக்குப் பிறகு 5 ரன்களில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை புவனேஷ்வர் குமாரின் அதி அற்புத இன்ஸ்விங்கருக்கு பவுல்டு முறையில் இழந்தது. முன்னதாக ஒரு எல்.பி. அவுட் ஆனார் டிவில்லியர்ஸ், அதாவது நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரீப்ளேயில் அது பிளம்ப், ஆனால் விராட் கோலி நடுவர் அழைப்பு என்று ரிவியூ செய்யாமல் விட்டு விட்டார், அவர் ரிவியூ செய்திருக்க வேண்டும், ஏனெனில் நடுவர் அழைப்பு என்றால் ரிவியூ இழப்பு ஏற்படாது, ஆனால் கோலி ரிவியூ செய்யவில்லை. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புவனேஷ்வர் தனது இன்ஸ்விங்கரால் உறுதி செய்தார்.

டுபிளெசிஸ் 8 ரன்கள் எடுத்து பும்ராவின் இன்ஸ்விங்கரை தவறாகக் கணித்து ஸ்டம்பை இழந்தார். பந்து உள்ளே வருவது தெரிந்தது, ஆனால் ஸ்டம்புக்கு மேலே செல்லும் என்று அவர் நினைத்தார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. குவிண்டன் டி காக் பும்ராவின் இன்னொரு அருமையான பந்தை நேராக பஞ்ச் செய்ய முயன்றார் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே இடைவெளி ஏற்பட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு படேல் கையில் கேட்ச் ஆனது. 125/6 என்ற நிலையில் பிலாண்டர், ஆம்லாவுடன் இணை தார். தேநீர் இடைவேளையின் போது 143/6 என்று தென் ஆப்பிரிக்கா இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிலாண்டர் கடுமையாக பொறுமையைச் சோதித்தார். அவர் ஏகப்பட்ட பீட்டன்களுடனும் ஒரு பந்தில் கிளவ்வில் கடுமையாக அடி வாங்கியும் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார், முன்னதாக மொஹீந்தர் அமர்நாத் போல் பும்ரா, புவனேஷ்வர், இஷாந்த் ஷர்மாவின் ஸ்விங், வேகம் மற்றும் எழுச்சியை தைரியமாக, கடும் உத்திக்ளுடன் எதிர்கொண்ட ஆம்லா 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து பும்ராவின் லெக் திசை பந்தை நன்றாக மிடில் ஆஃப் த பேட்டில் பிளிக் செய்தார், ஆனால் பந்து காற்றில் எழும்ப டீப்பில் பாண்டியா பிடித்துப் போட்டார்.

பிலாண்டர் மிக அருமையாக பும்ராவை ஒரு புல்ஷாட்டும், ஷமியை ஒரு கட்ஷாட்டும் ஆடி பொறுமையைச் சோதித்து மீண்டும் ஒரு 35 முக்கிய ரன்களை எடுத்து ஷமி வீசிய பவுன்சரை ஹூக் செய்து பும்ராவின் மிக நல்ல கேட்சுக்கு வெளியேறினார். பெலுக்வயோ சிறந்த பேட்ஸ்மென்கள் இந்தப் பிட்சில் கனவு காணும் இரண்டு அற்புதமான ஆஃப் திசை பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்து பும்ராவின் நேர் புல்டாஸுக்கு எல்.பி.ஆனார். ஆனால் புல்டாஸில் நேராக காலில் வாங்கி அதை ரிவியூ செய்து தமாஷ் காட்டினார். மோர்கெல் ஒரு பிளிக், ஒரு நேர் பவுண்டரி என்று 9 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இங்கிடி படேலிடம் கேட்ச் கொடுத்து பும்ராவின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். 65.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

 

 Share  Tweet   அ-அ+

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்றுவரும் 3-வது டெஸ்டி போட்டியில் தென்னாப்ரிக்காவுக்கு அணிக்கு 241 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. #SAvIND #JohannesburgTest

ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
 
ஜொகன்னஸ்பர்க்:
 
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அம்லா 61 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
201801262007308438_1_indvssa-rabada._L_styvpf.jpg
 
7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா, 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
 
42 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ராகுல் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் விஜய்யுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். விஜய் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 
 
உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து மூன்றாம் நாளின் இரண்டாவது செஸ்சன் ஆட்டம் நடைபெற்றது. அடுத்ததாக கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடினர். கோலி 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 
 
தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ரகானேவுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் எடுத்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷம்மி அதிரடியாக விளையாடினார். அவர் 27 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
201801262007308438_2_indvssa-indallout1._L_styvpf.jpg
 
இறுதியில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் வெர்னான் பிளாண்டர், ககிசோ ரபாடா,  மோர்னே மார்கல் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாப்ரிக்கா அணி 241 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. டெஸ்ட் கிர்க்கெட்டில் இது குறைவான ஸ்கோராக இருப்பினும் இந்த மைதானத்தில் இந்த இலக்கு தென்னாப்ரிக்கா அணிக்கு கடும் சவாலான இலக்காக இருக்கும் என கூறப்படுகிறது. 
 
இதையடுத்து தென்னாப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் மற்றும் எல்கர் களமிறங்கியுள்ளனர். #SAvIND #JohannesburgTest

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/26200732/1142396/Johannesburg-Test-India-set-target-of-241-for-South.vpf

Link to comment
Share on other sites

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடக்குமா? - ஐ.சி.சி ட்வீட்

 
 

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. ஆனால், பிட்ச் கண்டிஷன் மோசமடையவே, மூன்றாவது நாள் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று போட்டி நடக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், ஐ.சி.சி அது குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ICC

 

ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்திருந்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதே நேரத்தில், கோலி, ரஹானே, புவ்னேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் மதிக்கத்தக்க ரன்கள் குவிக்கவே, இந்திய அணி, 247 ரன்களை எட்டியது. இந்திய தரப்பில் ரஹானே அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 10 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே முதல் விக்கெட்டை இழந்தது. மேலும், பிட்ச்சின் மோசமான கண்டிஷன் காரணமாக, யூகிக்க முடியாத அளவில் பந்து பௌன்ஸ் ஆனது. இதனால், நிறைய பந்துகள் பேட்ஸ்மேன்களின் உடம்பை பதம்பார்த்தது. குறிப்பாக, பும்ரா வீசிய பந்து எல்காரின் ஹெல்மெட்டைத் தாக்க, ஆட்ட நடுவர்கள் மற்றும் ரெஃப்ரி ஆகியோர் பிட்ச்சை ஆய்வு செய்தனர். இதையடுத்து, மூன்றாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று ஆட்டம் நடக்குமா என்ற கேள்விக்கு ஐ.சி.சி பதில் அளித்துள்ளது. 

 

இது குறித்து ஐ.சி.சி பதிவிட்டுள்ள ட்வீட்டில், `ஆட்ட நடுவர்கள், போட்டியின் ரெஃப்ரி, இரு அணி கேப்டன்கள், க்ரௌண்ட்ஸ்மேன் ஆகியோருடன் உரையாடிய பிறகு, ஜோகனஸ்பர்க் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிட்ச்சின் கண்டிஷன் குறித்து நடுவர்கள் தொடர்ந்து கவனித்து வருவர். பிட்ச் மேலும் மோசமடைந்தால் அதற்கு ஏற்றாற் போல் முடிவெடுப்பர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

https://www.vikatan.com/news/sports/114662-the-johannesburg-test-will-resume-on-time-on-saturday-icc.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படா இதையாவது வென்றாச்சு.....

Link to comment
Share on other sites

``வீறுகொண்டு எழுந்த வேகங்கள்’’ - தென்னாப்பிரிக்காவில் இந்திய அணிக்கு முதல் வெற்றி!

 
 

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Shami_20002.jpg

 

Photo Credit: Twitter/ICC

ஜோகன்ஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணிக்கு டீன் எல்கர் - ஹஷிம் அம்லா ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இந்திய பந்துவீச்சைத் திறம்பட சமாளித்த இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. அம்லா, 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

 

அம்லா வெளியேறியவுடன் தென்னாப்பிரிக்க அணியின் சரிவு தொடங்கியது. ஒரு முனையில் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடினாலும், அவருக்கு சரியான ஒத்துழைப்பை எந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனும் கொடுக்கவில்லை. டிவிலியர்ஸ் 6 ரன்களிலும் கேப்டன் டுபிளசி 2 ரன்களிலும், விக்கெட் கீப்பர் டி காக் ரன் கணக்கைத் தொடங்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிலாண்டர் 10 ரன்களிலும், பெலுக்வாயோ, ரபாடா மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் ரன் கணக்கைத் தொடங்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர். முடிவில் தென்னாப்பிரிக்க அணி 73.3 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-2 என்ற கணக்கில் முடித்துக்கொண்டது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  தென்னாப்பிரிக்க அணி தரப்பில் டீன் எல்கர் 84 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். ஹசீம் அம்லா 52 ரன்கள் எடுத்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா தொடரை வென்றிருந்தது. 

https://www.vikatan.com/news/sports/114706-india-beat-south-africa-by-63-runs-in-3rd-test.html

Link to comment
Share on other sites

இந்தியா இறுதிப் போட்டியில் திரில் வெற்றி ; தொடரை வென்றது தென்னாபிரிக்கா

 

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்யில் 69 ஓட்டங்கள் திரில் வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது.

india.jpg

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இடம்பெற்று வந்தது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிற்காக 187 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

விராட் கோலி 54 ஓட்டங்களையும் புஜாரா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 194 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அம்லா 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

272596.jpg

7 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இந்தியா தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களை பெற்றிருந்தது, முரளி விஜய் 13 ஓட்டங்களுடனும் லோகேஷ் ராகுல் 16 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.

 

42 ஓட்டங்களுடன் தொடர்ந்து 3 ஆவது நாளில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.

முரளி விஜய் 127 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். கோலி 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாண்டியா 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டமிழந்தார். 

272597.jpg

சிறப்பாக விளையாடிய ரகானே 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷம்மி அதிரடியாக விளையாடினார். அவர் 27 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

 

தென்னாபிரிக்க அணி பந்துவீச்சில் வெர்னான் பிளாண்டர், ககிசோ ரபாடா,  மோர்னே மார்கல் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. 

272602.jpg

இதையடுத்து தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்க்ராமும் களமிறங்கினர். 

மார்க்ராம் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஷம்மி பந்தில் பார்தீவ் பட்டேலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹாசிம் அம்லா களமிறங்கினார். தென்னாபிரிக்க அணி 8.2 ஓவர்களில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. 

 

தொடர்ந்து வெற்றிக்கு 224 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  அம்லாவும் எல்கரும் நிதானமாக விளையாடினர். நேற்று ஆடுகளம் அபாயகரமாக இருந்தது. இருப்பினும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக ஆடுகளம் சற்று ஈரமாக இருந்ததால், இன்று பந்து பெரிய அளவில் எகிறவில்லை. இது தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது. அம்லா - எல்கர் இணைந்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.

இன்றைய நாள் ஆட்டத்தின் இரண்டாவது 2 ஆவது பாதியில் அம்லா ஆட்டமிழந்தார். அவர் 52 ஓட்டங்களில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

டி வில்லியர்ஸ் 6 ஓட்டங்களுடனும் டூ பிளஸ்சிஸ் 2 ஓட்டங்களுடனும் டீ காக் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்தனர். வெர்னான் பிளாண்டர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பெஹ்லுக்வாயோ, ரபாடா, மோர்னே மோர்கல் ஆகியோர் அடுத்தடுத்து  ஆட்டமிழந்து வெளியேறினர்.  அப்போது தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து நிகிடி களமிறங்கினார். நிகிடி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்க அணி 177 ஓட்டங்களைப் பெற்றபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்டவீரராக களமிறங்கிய டீன் எல்கர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்திய அணி பந்துவீச்சில் மொகமது ஷம்மி ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்ரிக்க அணியின் வெர்னான் பிளாண்டர் தொடர்நாயகன் விருது பெற்றார். 

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது. 

http://tamil.thehindu.com/sports/article22537405.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.