Jump to content

தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

 
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது
 
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10-ந்தேதி 17-ந்தேதி வரையும், டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி உடன் 24-ந்தேதி வரையும் நடக்கிறது.

அதன்பின் இந்திய அணி 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. 30-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

201712042119167540_1_patel001-s._L_styvpf.jpg

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இருக்கும் என்பதால் இந்தியா 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்து வீசி வரும் பும்ரா, முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 17 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (கேப்டன்), 2. முரளி விஜய், 3. லோகேஷ் ராகுல், 4. தவான், 5. புஜாரா, 6. ரகானே (துணை கேப்டன்), 7. ரோகித் சர்மா, 8. சகா, 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11 பார்தீவ் பட்டேல், 12. ஹர்திக் பாண்டியா, 13. புவனேஸ்வர் குமார், 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/04211910/1132647/India-squad-for-South-Africa-Tests--Bumrah-debut-6.vpf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 73
  • Created
  • Last Reply

தென்னாப்பிரிக்க பவுலர்களை சமாளிக்க வியூகம்: இந்திய அணி வீரர் முரளி விஜய் பேட்டி

 

 
murali%20vijay

கோப்புப் படம்

தென்னாப்பிரிக்க பவுலர்களைச் சமாளிக்க வியூகம் வகுத்துள்ளேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டி தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் கோலோச்சி வருகிறார் முரளி விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 2 சதங்களை விளாசினார் முரளி விஜய். தற்போது தென்னாப்பிரிக்கத் தொடருக்காக அவர் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்பது உண்மைதான். அங்குள்ள சீதோஷ்ண நிலை வேறு. இங்குள்ள சீதோஷ்ண நிலை வேறு. எனவே அங்கு சென்றபிறகு சூழ்நிலையைக் கணித்து சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை ஆராய்ந்த பின்னர்தான் போட்டித் தொடர் எப்படி அமையும் என்பதைச் சொல்ல முடியும். இந்தத் தொடரில் வெல்ல முடியுமா அல்லது முடியாதா என்பதை இப்போதே சொல்ல முடியாது.

தென்னாப்பிரிக்க பவுலர்களைச் சமாளிக்க வியூகம் வகுத்துள்ளேன். டேல் ஸ்டெயின், மோர்க்கெல் போன்ற வீரர்களைச் சந்திக்க இந்திய வீரர்கள் தயாராகவுள்ளனர். நானும், ஷிகர் தவாணும் சில போட்டிகளில் தொடக்க வீரர்களாக இறங்குவோம்.

சில சயமம் நானும், கே.எல். ராகுலும் களமிறங்கி விளையாடுவோம்.

எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. இதனால் நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைக் குவித்து எதிரணிக்கு நெருக்கடி தருகிறோம்.

எனக்கு எந்த பவுலர் பந்துவீசுகிறார் என்பது முக்கியமல்ல. பந்தைக் கணித்து ஆட முடிகிறதா என்பதே முக்கியம். நான் ஏற்கெனவே 2 முறை தென்னாப்பிரிக்கா சென்று தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் உள்ளது. அது இப்போது பயன்படும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article22284696.ece

 

 

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்: வெங்கடேஷ் பிரசாத் கருத்து

 

 
TH11VENKYjpg

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறினார்.

இதுதொடர்பாக நேற்று அவர் கூறும்போது, “நீண்ட நாட்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் விளையாட இந்தியா செல்கிறது. இந்திய அணியில் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் இடம்பெற்றுள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இதில் மிகவும் அனுபவம் உள்ள பவுலராக இருப்பவர் இஷாந்த் சர்மா.

அவர்தான் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்தவேண்டும். இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளி்ல விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 226 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த முறை தென்னாப்பிரிக்காவில் அவர் சாதிக்கவேண்டும். அதற்கான அத்தனை திறமைகளும் அவரிடம் உள்ளன. கபில்தேவ், ஜாகீர்கான், ஸ்ரீநாத் போல அவரும் சிறப்பான பவுலராக மாறவேண்டும். தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் இந்திய அணியில் இளைஞர்களும், அனுபவம் மிக்க வீரர்களும் உள்ளனர். அங்கு தொடரை இந்தியா வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஸ்டெயின், மோர்க்கெல் குறித்து இந்திய பேட்ஸ்மேன்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் காயமடைந்து தற்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா, மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர். அவரிடம் நமது பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு முறை இந்தியா தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும்போது அங்கு தொடரை, இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். இந்த முறையும் அந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளதில் தவறில்லை” என்றார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article22284701.ece

Link to comment
Share on other sites

`கிரிக்கெட் என் ரத்தத்தில் உள்ளது!' - தென்னாப்பிரிக்கத் தொடருக்கு முன் கோலி சொன்ன பன்ச்!

 
 

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் குறித்துப் பேச திருமணத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. 

விராட் கோலி

 
 


அப்போது கோலி, `நான் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தேன் என்பது உண்மைதான். ஆனால், கிரிக்கெட்டுக்குத் தகுந்த ஃபார்முக்கு வருவது எனக்கு அவ்வளவு கடினம் இல்லை. காரணம், கிரிக்கெட் என் ரத்தத்தில் இருக்கிறது. தென்னாப்ரிக்காவுக்கு நாங்கள் செல்வது எதைப் பற்றியும் யாருக்கும் நிரூபிப்பதற்காக அல்ல. அங்கு நாங்கள் செல்வது கிரிக்கெட் விளையாடுவதற்காக. அப்படி விளையாடும் போது, எங்களது 100 சதவிகிதத்தை கொடுப்போம்' என்று உறுதிபட கூறினார். அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடனிருந்தார். அவர், `தென்னாப்பிரக்கத் தொடரை அணியினர் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இது மிகப் பெரும் சவாலாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

https://www.vikatan.com/news/sports/111990-cricket-is-in-my-blood-virat-kohli.html

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்... டிவில்லியர்ஸ்ஸின் மறைமுக கண்டிஷன்!

 
 

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் பேட்ஸ்மேன், டிவில்லியர்ஸ் விளையாடுவதில் குழப்பம் நிலவி வருகிறது. 

டிவில்லியர்ஸ்

 

கிட்டத்தட்ட 23 மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த டிவில்லியர்ஸ், போர்ட் எலிசபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்-பேக் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபிளசிஸ் ஓய்வில் இருப்பதால், டிவில்லியர்ஸ் பேட்ஸ்மேனாக மட்டும் அல்லாமல், கேப்டனாகவும் களமிறங்கினார். தனது கம்-பேக் போட்டியில் அசத்தல் அரை சதமும் அடித்து அசத்தியுள்ளார் டிவில்லியர்ஸ்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக அணியில் அவரது இடம்குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது டிவில்லியர்ஸ், `டுபிளிசிஸ்தான் இந்திய தொடருக்குத் தலைமை விகிப்பார். தற்போது, அணிக்கு ஒரு தலைவலி இருக்கிறது. நிறைய பேர் நன்றாக விளையாடி வருவதால், யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை நிராகரிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறோம். நான் விளையாடும் 11 பேர்களில் தேர்வு செய்யப்பட்டால், நான்காவதாக களமிறங்கக் காத்திருக்கிறேன். அப்படி இல்லை என்றால், அணியினருக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்லப்போகிறேன்' என்று சூசகமாக கண்டிஷன் போட்டுள்ளார்.

https://www.vikatan.com/news/sports/112019-i-am-expecting-to-bat-no4-if-i-do-play-ab-de-villiers.html

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

 

 
cricket_south_africa1

 

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

ஜனவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை முதல் டெஸ்ட், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் மற்றும் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி டிசம்பர் 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பார்திவ் படேல், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நியூலான்ட்ஸில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருந்த டேல் ஸ்டெயின், டிவில்லியர்ஸ், மார்க்கல் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

ஃபாஃப் டூபிளெஸிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, டெம்பா பவுமா, குயின்டன் டி காக், தியூனிஸ் டி பிரயூன், ஏ.பி.டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மகாராஜ், ஏய்டன் மர்கராம், மார்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், ஆன்டில் ஃபெலுக்வாயோ, வெரோன் ஃபிலாண்டர், காகிஸோ ரபாடா, டேல் ஸ்டெயின்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/29/south-africa-squad-for-the-first-test-against-india-announced-on-friday-2835267.html

Link to comment
Share on other sites

தென்னாப்பிரிக்காவில் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது! முன்னாள் கேப்டன் கணிப்பு

 
 

தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது என்று முன்னாள் கேப்டனும் சுழற்பந்துவீச்சாளருமான பிஷன்சிங் பேடி கணித்துள்ளார். 

Kohli_10174.jpg

 


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை விராட்கோலி தலைமையிலான தற்போதைய அணி போக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

 

 இந்தநிலையில், தென்னாப்பிரிக்கத் தொடர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று பிஷன்சிங் பேடி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ``கேப்டனாக விராட் கோலி சவாலான தொடர்களை இதுவரை சந்திக்கவில்லை. தென்னாப்பிரிக்கத் தொடர் நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். விராட் கோலியின் கேப்டன்ஷிப், பேட்டிங் திறன் ஆகிய இரண்டையுமே சோதிக்கும் வகையில் அந்தத் தொடர் அமையும்'’ என்றார். விராட் கோலியை, பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் ஒப்பிட்ட அவர், உலகின் முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராகச் சிந்து வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆனால், விராட் கோலி போராடி வருவதாகவும் கூறினார். ’’கடந்த சில வருடங்களில் சிந்து மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், விராட் கோலியின் நிலையே வேறு. தென்னாப்பிரிக்கா தொடர் விராட் கோலியை சோதிக்கும் தொடராக இருக்கும்’' என்றார். 

https://www.vikatan.com/news/sports/112211-south-africa-tour-is-a-real-test-for-virat-kohli-says-bishan-singh-bedi.html

Link to comment
Share on other sites

எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை: விராட் கோலி

 

 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலானது என்பதை ஏற்க இயலாது என விராட் கோலி தெளிவுப்படுத்தியுள்ளார். #INDvSA #ViratKohli

 
 
எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை: விராட் கோலி
 
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் கேப் டவுன் சென்றடைந்தது. நேற்று பயிற்சியை தொடங்கியது இந்தியா.

தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி என்பதை ஏற்க இயலாது. டி வில்லியர்ஸ் எனக்கு சிறந்த நண்பர். கிரிக்கெட்டை பொறுத்த வரையிலும், தனிப்பட்ட முறையிலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், போட்டி என்று வந்தால் நட்பு என்பதெல்லாம் கிடையாது. அதை தாண்டி அணியின் வெற்றிக்காக மோதிக் கொள்வோம்.

201712311935041264_1_6ViratKohli-s._L_styvpf.jpg

நாங்கள் டி வில்லியர்ஸ்சை அவுட்டாக்க விரும்புவோம். அதைபோல் அவர்கள் என்னை, புஜாரா மற்றும் ரகானேவை அவுட்டாக்க விரும்புவார்கள். எந்தவொரு மேட்ஸ்மேனுக்கும் எதிராக, எனது மனநிலையில் இதைத்தவிர மற்ற ஏதும் இருப்பதாக தோன்றவில்லை.

ஒவ்வொரு வீரர்களும் அணியின் வெற்றிக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு அணியாக இணைந்து செயல்படவில்லை என்றால், தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடையாது’’ என்றார். #INDvSA #ViratKohli #ABDevilliers

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/31193504/1137768/INDvSA-Virat-Kohli-The-series-is-not-just-about-my.vpf

Link to comment
Share on other sites

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டேல் ஸ்டெயின் விளையாடவில்லை

 

இந்தியாவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெறும் முதல் டெஸ்டில் டேல் ஸ்டெயின் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvSA #DaleSteyn

 
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டேல் ஸ்டெயின் விளையாடவில்லை
 
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1992-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை வென்றது கிடையாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியால் தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.

சொந்த மண்ணில் எக்காரணத்தைக் கொண்டும் இந்தியாவிடம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதில் தென்ஆப்பிரிக்கா உறுதியாக இருக்கிறது. இதற்காகவே டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்து டி வில்லியர்சை மீண்டும் டெஸ்டிற்கு தென்ஆப்பிரிக்கா அழைத்துள்ளது. அதேபோல் ஓராண்டுகளாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின்-ஐ இந்திய அணிக்கெதிராக விளையாட வைக்க திட்டமிட்டது.

இந்திய தொடருக்காக ஸ்டெயின் தயாராகி வந்தார். முதன்முறையாக ஜிம்பாப்வேயிற்கு எதிரான நான்கு நாள் பகல்-இரவு டெஸ்டில் களம் இறங்கினார். அப்போது சில ஓவர்கள் வீசிய ஸ்டெயின் வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டார்.

201801021940174171_1_DaleSteyn002-s._L_styvpf.jpg

தற்போது இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தார். அவருடன் ரபாடா, மோர்னே மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இதனால் ஆடும் லெவன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் தென்ஆப்பிரிக்கா நிர்வாகத்திற்கு பெரிய சவாலா இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டெயின் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் ‘‘ஸ்டெயின் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதனால் முதல் போட்டியில் விளையாடமாட்டார்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/02194017/1138126/INDvSA-Dale-Steyn-all-but-ruled-out-from-first-South.vpf

Link to comment
Share on other sites

நிறைய பந்துகளை ஆடாமல் விடவேண்டும் என்ற மனநிலையில் களமிறங்குவதா? - முரளி விஜய் மறுப்பு

 

 
vijay

கேப்டவுனில் பயிற்சிக்காக மைதானத்துக்குள் வரும் முரளி விஜய்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஜனவரி 5-ம் தேதி கேப்டவுனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்தப் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பது பற்றி புதிராக உள்ளது. இந்நிலையில் முரளி விஜய் ஒரு தொடக்க வீரராக தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார்.

“நல்ல பசுமையாவே உள்ளது. ஆனால் முதல் நாளில் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல டெஸ்ட் போட்டியாக இருக்கும். இதற்காகத்தான் காத்திருக்கிறோம். முதல் நாள் ஆட்டத்துக்காக ஓய்வறையில் அனைவரும் காத்திருக்கிறோம்” என்றார்.

தொடக்க வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஒரு இடுகாடு என்று கிரேம் ஸ்மித் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய விஜய், டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவில்தான் தொடக்க வீரர்கள் மோசமான சராசரி வைத்துள்ளனர் என்பதையும் தெரிவித்து, “இருமுறை இங்கு வந்துள்ளேன், டெஸ்ட் போட்டி இங்கு பெரும் சவால். பவுன்ஸ், ஸ்விங் உண்மையில் தொடக்க வீரருக்கு பெரியதொரு ஆச்சரியத்தை அளிக்கக் கூடியது.

ஸ்மித் கூறுவதை ஏற்கிறேன், கடினம்தான் ஆனாலும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நம் ஆட்டத்தில் எக்ஸ்-காரணை ஒன்று இருந்தால் அதனை அடுத்த போட்டியில் கூட பயன்படுத்தலாமே.

எப்போதும் ஒரு நிலையான மனச் சிந்தனையை வைத்துக் கொள்வது நல்லதல்ல. டெஸ்ட் போட்டிக்குள் நுழையும் போதே நாம் நிறைய பந்துகளை ஆடாமல் விடப்போகிறோம் என்ற மனநிலையில் நுழைய முடியாது. ரன்கள் அடிக்க வேண்டும் என்ற மனநிலைதான் சிறந்தது. அவர்கள் நல்ல இடங்களில் பந்தைப் பிட்ச் செய்யும் போது எதிர்த்தாக்குதல் தொடுத்து வலுவாக வர வேண்டும் என்பதே எண்ணம். இதுதான், இத்தகைய விஷயங்கள்தான் நாங்கள் முன்னேறிச் செல்ல முக்கியமானதாகும்” இவ்வாறு கூறினார் முரளி விஜய்.

வெளிநாடுகளில் இந்த இந்திய அணி நன்றாக ஆடுகின்றனரா?

 

 

பிலாண்டர் சந்தேகம்

 

 
philander

தென் ஆப்பிரிக்க அபாய ஸ்விங் பவுலர் பிலாண்டர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

நாளை (வெள்ளி) கேப்டவுனில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி எதிர்கொள்ளும் நிலையில் அந்த அணியின் அபாயகர ஸ்விங் பந்து வீச்சாளர் பிலாண்டர் இந்திய அணியின் அயல்நாட்டு கிரிக்கெட் ஆட்டத்தின் மீது பெரிய திருப்தி தெரிவிக்கவில்லை.

இந்த இந்திய அணி தன்னை இதுவரை கவரவில்லை என்று தெரிவித்த பிலாண்டர், “இவர்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டில்தான் ஆடிவருகின்றனர். எனவே இங்கு எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது.

இது இங்கு முற்றிலும் வேறு ஒரு ஆட்டமாக இருக்கும் முதல் டெஸ்ட்டை இந்திய அணி பாஸ் செய்த பிறகுதான் தெரியும், அதுவரை பொறுத்திருந்துதான் பார்ப்போம்” என்றார்.

கேப்டவுனில் கடும் வறட்சி காரணமாக பிட்ச் வறண்டுதான் காணப்படுகிறது. ஆனாலும் ஓரளவுக்கு புற்கள் காணப்படுகின்றன.

பயிற்சியாளர் ஓட்டைஸ் கிப்சன், இத்தகைய பிட்ச்தான் தேவை என்கிறார் ஆனால் பிலாண்டர், “மற்ற நியுலேண்ட்ஸ் பிட்ச்களை விட இது பச்சையாக உள்ளது என்று கூற மாட்டேன். என் வாழ்நாள் முழுதும் இங்கு விளையாடியுள்ளேன். இதே போன்ற பிட்சைப் பார்த்திருக்கிறேன், இவற்றில் பெரிதாக ஒன்றும் உதவியிருக்காது. ஆனால் புற்கள் இருக்கவே செய்யும். ஆனால் இது பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்காது” என்றார்.

இப்போதைய பிட்சில் பிட்சின் குறுக்காக இல்லாமல் நேராக, குத்துக்கோட்டு வாக்காக பிளவுகள் உள்ளன, இது ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு காலியான பிட்ச் போன்றதாகத் தெரிகிறது. இது குறித்து பிலாண்டர் கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “அந்த பிட்ச் இதைவிட வித்தியாசமானது. அது இன்னும் பிளாட்டாக இருந்தது, இதில் கொஞ்சம் புற்கள் இருக்கிறது. ஆனால் இங்கு அடிக்கும் காற்றைப் பொறுத்ததே அனைத்தும். வடமேற்கு காற்று அடிக்கும், அப்போது பந்துகள் ஸ்விங் ஆகும்” என்றார் பிலாண்டர்.

சச்சின் டெண்டுல்கர் கூறியது போல் புதிய பந்தை எதிர்கொள்வதைப் பொறுத்து தொடர் அமையும், அதனால் தொடக்க வீரர்களுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article22365497.ece

Link to comment
Share on other sites

தென் ஆஃப்ரிக்காவில் இதுவரை இந்தியா சாதித்ததா? - புள்ளிவிவர பார்வை

இம்ரான் தாஹீர் மற்றும் டிவில்லியர்ஸ்படத்தின் காப்புரிமைCLIVE ROSE

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆஃப்ரிக்காவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியும் டு பிளசிஸ் தலைமையில் தென் ஆஃப்ரிக்காவும் போட்டியை எதிர்கொள்கின்றன. தென் ஆஃப்ரிக்காவுக்கு இதுவரை இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் அதில் கிடைத்த முடிவுகள் குறித்த தொகுப்பு இது.

டெஸ்ட் கிரிக்கெட்

இதுவரை தென் ஆஃப்ரிக்காவில் ஆறு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. 1992/93-இல் முதன்முறையாக தென் ஆஃப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கடைசியாக 2013/14 காலகட்டத்தில் அங்கே இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது.

இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள்படத்தின் காப்புரிமைSHAUN BOTTERILL

1992/93-இல் நடந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்தது. இதுவரை தென் ஆஃப்ரிக்காவில் இந்திய அணி விளையாடிய ஆறு டெஸ்ட் தொடர்களில் ஐந்தில் தென் ஆஃ ப்ரிக்கா வென்றது. ஒரு தொடர் டிரா ஆனது. 2010-11 தொடரில் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்தது.

ஆண்டு மொத்த டெஸ்ட் போட்டிகள் இந்தியா வெற்றி தென் ஆப்ரிக்கா வெற்றி
       
1992-93 4 0 1
1996-97 3 0 2
2001-02 2 0 1
2006-07 3 1 2
2010-11 3 1 1
2013-14 2 0 1

தென் ஆஃப்ரிக்க மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. எட்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஏழு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

தென் ஆஃப்ரிக்க மண்ணில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்கள் 459. இந்திய அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் தென் ஆஃப்ரிக்க அணி குவித்த அதிகபட்ச ரன்கள் 620/4 . இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே டெஸ்ட் போட்டியில் நடந்தன. 2010 -ஆம் ஆண்டில் சென்சூரியனில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆஃப்ரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆஃப்ரிக்காவில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள் 66. இந்த டெஸ்ட் போட்டி டர்பனில் 1996-ஆம் ஆண்டு நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்களுக்கும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆஃப்ரிக்கா வென்றது.

ரபடா உள்ளிட்ட தென் ஆஃப்ரிக்க வீரர்கள்படத்தின் காப்புரிமைPAUL KANE

2014-15 ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் இந்திய அணி இதுவரை எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் தொடர்களில் ஒன்பது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வென்றுள்ளது இந்திய அணி. அதே சமயம் இதுவரை இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது என்பதே வரலாறு.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா அல்லது மீண்டும் தென் ஆஃப்ரிக்காவே ஆதிக்கம் செலுத்துமா என்பதற்கான பதில் ஜனவரி 28-க்குள் தெரிந்துவிடும்.

ஒருநாள் போட்டிகள்

1992/93- இல் இந்தியா தென் ஆஃப்ரிக்காவில் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் ஐந்து போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளில் தென் ஆஃப்ரிக்கா தோல்வி அடைந்தது.

1996/97- இல் இந்தியா, ஜிம்பாப்வே, தென் ஆஃப்ரிக்கா இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் தென் ஆஃப்ரிக்காவில் நடந்தது. இதில் இந்தியாவும் தென் ஆஃ ப்ரிக்காவும் ஐந்து போட்டிகளில் மோதின. ஒரு போட்டி மழையால் முடிவு கிடைக்காமல் போனது. இறுதிப் போட்டி உட்பட நான்கிலும் தென் ஆஃப்ரிக்காவே வென்றது.

2001-ல் இந்தியா, கென்யா ஆகிய அணிகள் தென் ஆஃப்ரிக்காவில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் நான்கு முறை இந்தியாவும் தென் ஆஃ ப்ரிக்காவும் மோதின. இறுதிப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் தென் ஆஃப்ரிக்கா வெற்றி பெற்றது. ஒன்றில் இந்தியா ஜெயித்தது.

2006-இல் மீண்டும் இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் தென் ஆஃப்ரிக்கா மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா 91 ரன்களுக்கு ஒரு போட்டியில் ஆட்டமிழந்தது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் முறையே 168, 163, 200 ரன்களையே குவித்தது.

விராட் கோலிக்கு வாழ்த்துச் சொல்லும் தென் ஆப்ரிக்க அணிபடத்தின் காப்புரிமைGLYN KIRK

2011-இல் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்காவில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் வென்று தென் ஆஃப்ரிக்கா தொடரை வென்றது. இந்த தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது, மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

கடைசியாக 2013-இல் இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

தென் ஆஃப்ரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி ஒரு நாள் கோப்பையை வென்றதே இல்லை.

டி20 போட்டிகள்

2006, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில் இரண்டு முறை இந்திய அணியும் ஒரு முறை தென் ஆஃப்ரிக்க அணியும் கோப்பையை வென்றன.

http://www.bbc.com/tamil/sport-42556848?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

கேப் டவுன் டெஸ்டில் இந்தியா பந்து வீச்சு: பும்ரா அறிமுகம்- ரோகித் உள்ளே, ரகானே வெளியே

கேப் டவுனில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா டாஸ் தோற்று பீல்டிங் செய்கிறது. பும்ரா அறிமுகமாகியுள்ளார்.

 
கேப் டவுன் டெஸ்டில் இந்தியா பந்து வீச்சு: பும்ரா அறிமுகம்- ரோகித் உள்ளே, ரகானே வெளியே
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கேப் டவுனில் இன்று தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பந்து வீசுகிறது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் பும்ரா, முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-யின் டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இந்திய அணிக்காக விளையாடும் 290-வது டெஸ்ட் வீரர் இவராவார்.

201801051357352180_1_1bumrah001-s._L_styvpf.jpg

துணைக் கேப்டன் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாடுகிறது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தவான், 2. முரளி விஜய், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரோகித் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7. சகா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. மொகமது ஷமி, 11. புவனேஷ்வர் குமார்.

201801051357352180_2_1savind1-s._L_styvpf.jpg

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டீன் எல்கர், 2. மார்கிராம், 3. அம்லா, 4. டி வில்லியர்ஸ், 5. டு பிளிசிஸ், 6. குயின்டான் டி காக், 7. பிலாண்டர், 8. கேஷப் மகாராஜ், 9. ஸ்டெயின், 10. மோர்னே மோர்கல், 11. ரபாடா.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/05135735/1138600/SAvIND-Capte-Town-India-bowl-firt-bumrah-rohit-sharma.vpf

Link to comment
Share on other sites

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா தடுமாற்றம்; 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர்

 

 
bhupng

புவனேஷ்வர் குமார் | கோப்புப் படம்

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஆரம்ப விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

தென்னாபிரிக்கா தலை நகர் கேப்டவுன்னில் இந்திய நேரப் படி 2 மணியளவில் முதல் டெஸ்ட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

 டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடர்ந்து மூன்று முன்னணி தென் ஆப்பிரிக்க பேஸ்ட்மன்கள், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமாரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டீன் எல்கர் 0 ரன்னிலும், தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஹஷிம் ஆம்லா 3 ரன்னிலும், ஐடன் மார்க்ரம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தற்போதைய நிலவரப் படி தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்கள் முடிவில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளெஸ்ஸிஸ், ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article22374134.ece

Link to comment
Share on other sites

புவனேஸ்வரின் அசத்தல் ஸ்விங்; பும்ராவின் முதல் விக்கெட்! - 286 ரன்களுக்கு ஆல்அவுட்டான தென்னாப்பிரிக்கா

 
 

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

bhuvi_21038.jpg

 

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டூபிளஸி பேட்டிங் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையைப் போக்கும் முனைப்பில், இந்திய அணி பீல்டிங் செய்ய களமிறங்கியது. போட்டியின் முதல் ஸ்பெல்லில் அசத்தலாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டரைப் பதம் பார்த்தார். அந்த அணி 12 ரன்கள் சேர்ப்பதற்குள், டீன் எல்கர், மார்க்ராம் மற்றும் அம்லா ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. அந்த 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமாரே கைப்பற்றினார். 

 

இதையடுத்து கைகோத்த கேப்டன் டூபிளசி மற்றும் ஏ.பி.டிவிலியர்ஸ் ஜோடி தென்னாப்பிரிக்க அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடியது. நான்காவது விக்கெட்டுக்கு அந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ,65 ரன்கள் எடுத்திருந்த டிவிலியர்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதல் விக்கெட்டாக டிவிலியர்ஸை வீழ்த்தினார். டிவிலியர்ஸ் வெளியேறிய சிறிது நேரத்திலேயே டூபிளசியும் 62 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதையடுத்து களமிறங்கிய டிகாக், 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் தென்னாப்பிரிக்க அணி 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   

https://www.vikatan.com/news/sports/112828-capetown-test-south-africa-bowled-out-for-286.html

Link to comment
Share on other sites

பிடியை நழுவ விட்ட இந்திய அணி! இறுகப் பற்றிய தென் ஆப்பிரிக்கா 286 ரன்கள்; இந்தியா 28/3

 

 
kohli%20out

விராட் கோலியை வீழ்த்திய மோர்னி மோர்கெல்   -  படம். | ஏ.பி.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் விஜய், தவண், கோலி விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 5 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன் எடுக்காமலும் ஆடிவருகின்றனர்.

இன்றைய தினம் காலை முதல் 5 ஓவர்கள் புவனேஷ்குமாரின் பரபரப்பான 3 விக்கெட்டுகளுடன் தொடங்கி கடைசியில் இந்திய அணியின் வழக்கம் போலான வேகப்பந்து வீச்சுக்கு எதிரான வழக்கமான பலவீனத்துடனும் சொதப்பலுடனும் முடிந்தது.

 

bhuvaneshwar%20kumar
 

காலையில் புவனேஷ்குமார் அற்புதமான ஸ்விங் பந்து வீச்சில் டீன் எல்கர், மார்க்ரம், ஆம்லா ஆகியோரை வீழ்த்தி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தவுடன் ஒருமுறை ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் 84 ரன்களுக்குச் சுருண்டதுதான் நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு கேப்டன் கோலியின் களவியூகம் அதற்குக் கை கொடுக்கவில்லை.

டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் அபாரம்

ஏ.பி.டிவில்லியர்ஸ் எப்போது புவனேஷ்வர் குமாரை 4 பவுண்டரிகள் ஒரே ஓவரில் ஆஃப் திசையில் பளாரென்று அடித்தாரோ அப்போதே களத்தடுப்பு வியூகத்தை அமைத்து பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தி அவருக்கு கிடுக்கிப் போடி போட்டிருந்தாலோ, ரன் எடுக்க அவர் திணறும் போது அஸ்வினைக் கொண்டு வந்து முயற்சி செய்திருந்தாலோ கோலி குறிக்கோளுடன் கேப்டன்சி செய்கிறார் என்று கூறலாம்.

devilliersjpg

டிவில்லியர்ஸ் பந்தை ஆடும் காட்சி.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

 

பும்ரா, ஷமி, பாண்டியா நன்றாகவே வீசினர், ஆனால் நன்றாக வீசுவதற்கும் குறிக்கோளுடன் வீசுவதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு. நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் இல்லாதது குறிக்கோள் அதனால்தான் அவர்கள் நன்றாக வீசினாலும் ஸ்மித்தை வீழ்த்த முடியவில்லை, வெல்ல முடியவில்லை, ஆஸ்திரேலிய அணியினர் பெரும்பகுதி சாதாரணமாகவே வீசினாலும் குறிக்கோளில் தெளிவாக உள்ளனர், அதனால் வெற்றி தானாகவே வருகிறது. அந்தக் குறிக்கோள் என்னவெனில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே. களவியூகத்தைத் திட்டமிட்டபடி அமைத்தலே.

இன்று டிவில்லியர்ஸுக்கு இந்தத் தவறைத்தான் செய்தார் கோலி. பவுண்டரிகளை கட்டுப்படுத்தி, அவரை ரன்கள் எடுக்க திணறச் செய்தால் இந்தப் பிட்சில் அவர் விரைவில் காலியாகியிருப்பார். ஆனால் நடந்தது என்ன முன்னங்காலில் வந்து புல்ஷாட் வரை அவர் அபாரமான, கண்ணுக்கு விருந்தான ஷாட்களை ஆடி 65 ரன்கள் எடுத்தார், உணவு இடைவேளைக்குப் பிறகு ரன்களை கோலி கட்டுப்படுத்தினார், கவர் பாயிண்ட் வைத்து ரன்கள் வராத நிலையில் பும்ராவின் இன்ஸ்விங்கரில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். பும்ராவின் முதல் டெஸ்ட் விக்கெட் பரிசு விக்கெட்டான டிவிலியர்ஸ் விக்கெட்டாக அமைந்தது.

டுபிளெசிஸ் அவருக்கே உரிய பாணியில் 104 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார், பாண்டியாவின் பந்தில் கடுமையான எல்.பி. முறையீட்டில் நடுவர் நாட் அவுட் என்றதால் பிழைத்தார், ரிப்ளேயில் அது அவுட் போல்தான் தெரிந்தது. இதில் கோலி, பாண்டியா கடுமையாக ஏமாற்றமடைந்தனர். ஆனால் அதே ஓவரிலேயே டுபிளெசிஸ் கட் செய்ய முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி அவரை வார்த்தைகளால் வழியனுப்ப முயற்சி செய்தார், ஆனால் நடுவர்கள் கோலியை எச்சரித்தனர். டுபிளெசிஸ், டிவிலியர்ஸ் இணைந்து 114 ரன்களை 4வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். இதில் இருவரும் 23 பவுண்டரிகளை விளாசியது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் தென் ஆப்பிரிக்க அணி 41 பவுண்டரிகள் இதில் 2 சிக்சர்களும் அடங்கும். தென் ஆப்பிரிக்கா எடுத்த 286 ரன்களில் 168 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்துள்ளது. இதனை குறைத்திருந்தால் தென் ஆப்பிரிக்கா 210-220 ரன்களுக்கு மடிந்திருக்கும். குவிண்டன் டி காக், பிலாண்டர் இணைந்த பிறகும் பவுண்டரிகள் நின்றபாடில்லை, பாண்டியா, புவனேஷ்வர், ஷமி அனைவரும் ஆஃப் வாலி பந்துகளை வாரி வழங்கினர், மீண்டும் பவுண்டரிகளாகக் குவிந்தது. அஸ்வின் 43-வது ஓவர் கொண்டு வரப்பட்டார். டி காக் முதலில் அடித்த நேர் பவுண்டரி அற்புதம், அதன் பிறகு ஆஃப் திசையில் வாங்கு வாங்கினார். 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அவர் 43 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமார் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்துக்கு முன்னால் வந்து ஆட எட்ஜ் ஆகி சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பிலாண்டர் தன் பங்குக்கு அவருக்குக் கிடைத்த ஆஃப் வாலி பந்துகளை கவர் திசையில் பவுண்டரிகளாக விளாசி 23 ரன்கள் எடுத்து ஷமியின் அருமையான இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். இதற்கு முதல் பந்து சற்றே ஷார்ட் ஆக பிட்ச் ஆக இன்ஸ்விங் ஆகி பிலாண்டர் ஆடாமல் விட்ட போது ஸ்டம்புக்கு சற்று மேலே சென்றது, அடுத்த பந்தை இன்னும் கொஞ்சம் முன்னால் வீச இம்முறை ஸ்டம்ப் தொந்தரவு ஆனது. 221/7லிருந்து 286 ரன்கள் வந்ததற்குக் காரணம் ஷிகர் தவண் ஸ்லிப்பில் விட்ட கேட்ச்தான். கேஷவ் மஹராஜ் ஒரு அருமையான வீரரே. அவர் ஏற்கெனவே நன்றாக ஆடி வந்த நிலையில் புவனேஷ்வர் பந்தில் ஆன எட்ஜை ஸ்லிப்பில் தவற விட்டார், விட்டிருந்தால் கோலியே கூட பிடித்திருப்பார், புவனேஷ்வர் குமாரின் 5வது விக்கெட் தவற விடப்பட்டது. கேஷவ் மஹராஜ் அஸ்வினை ஒரு சிக்சர் அடித்தார், இரண்டு பேக்புட் ஷாட்கள் அபாரம். கடைசியில் அஸ்வினிட ரன் அவுட் ஆனார். கேஷவ் மகராஜ் 35 ரன்கள் எடுத்து அவுட்.

இன்னொருவரை இந்தியா அடிக்க விட்டது என்றால் அது ரபாடா, இவர் புவனேஷ்வர் குமாரை ஒரு காட்டு சிக்ஸை மிட்விக்கெட்டில் அடித்தார், இவர் பங்குக்கு 26 ரன்களைச் சேர்த்தார். ஸ்டெய்ன் 16 ரன்கள் சேர்த்தார். ரபாடாவையும், மோர்கெலையும் அஸ்வின் வீழ்த்த தென் ஆப்பிரிக்கா 286 ஆல் அவுட்.

இந்தியா சொதப்பல் தொடக்கம்:

11 ஓவர்களே ஆட வேண்டிய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரை பிலாண்டர் வீச 3-வது பந்து எட்ஜ் ஆனது, ஆனால் கைகளை இறுக்காமல் ஆடியதால் கல்லி வழியாக தவண் கணக்கில் முதல் பவுண்டரி ஆனது. அடுத்த பந்து வெளியே போகுமாறு போக்கு காட்டி லேசாக உள்ளே வந்து தவண் தொடையில் பட்டு பின்னால் சென்றது, பயங்கர முறையீடு நாட் அவுட். அடுத்த பந்தை தவன் மிக அருமையாக எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார்

விஜய்க்கு ஸ்டெய்ன் மெய்டன் ஓவர் வீச, பிலாண்டரின் அடுத்த ஓவரில் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய எல்.பி. முறையீடு, அது நாட் அவுட், ஆனால் தென் ஆப்பிரிக்கா ரிவியூ ஒன்றை வேஸ்ட் செய்தது. மீண்டும் தவண், ஸ்டெய்ன் பந்தை எட்ஜ் பவுண்டரி அடித்தார். விஜய் 17 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்த நிலையில் தன் கார்டை மாற்றி ஆஃப் அண்ட் மிடில் கார்ட் எடுத்தார், பிலாண்டர் இன்னும் வைடாக வீசினார், அதனை ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி எக்ல்கரிடம் கேட்ச் ஆக விஜய் அவுட், ஒருவேளை பழைய கார்டில் இருந்திருந்தால் ஆடாமல் விட்டிருக்கலாம், ஆனாலும் தேவையில்லாத ஷாட்.

3 பந்துகள் சென்று ஷிகர் தவண் 16 ரன்களில் இருந்த போது புல் ஷாட் ஆட முடியாத பந்தை புல் ஷாட் ஆட நினைத்து டேல் ஸ்டெய்ன் பந்தில் மிகப்பெரிய கொடியேற்றினார் ஸ்டெய்னே கேட்ச் பிடித்தார். அடுத்த பந்தே ஸ்டெய்ன், கோலிக்கு ஒரு பந்தை எழுப்ப நெஞ்சுயரம் வந்த பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்றார், முன் விளிம்பில் பட்டு ஸ்டெய்னுக்கு சற்று அருகில் விழுந்தது.

கோலி கடைசியில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கெல் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி எழுப்ப அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்த பந்தை எம்பி இருகால்களும் மேலே நிற்க தேவையில்லாமல் தொட்டார் கோலி எட்ஜ் ஆகி டிகாக்கிடம் கேட்ச் ஆனது.

ஆட்ட முடிவில் இந்தியா 28/3. ஆக முதல் 5 ஓவர்களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துடன் தான் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது, இந்திய பேட்ஸ்மென்கள் ஆடுவதைப் பார்த்தால் பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 59 ரன்கள் தேவை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22378757.ece?homepage=true

Link to comment
Share on other sites

டி வில்லியர்ஸுக்கு ஒரு ஸ்விங், டு பிளஸ்ஸிக்கு ஒரு யார்க்கர், மகாராஜுக்கு ஒரு பெளன்ஸர்... பலே பும்ரா... சபாஷ் புவி! #SAvIND

 
 

முதல் டெஸ்ட்டில், முதல் நாளில், முதல் செஷனில், முதல் அரைமணி நேரத்தில், 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை. தேங்ஸ் டு புவி. தன் முதல் டெஸ்ட்டில், தன் முதல் இன்னிங்ஸில், தன் முதல் ஸ்பெல்லில் எதிரணியின் கீ பிளேயரை வீழ்த்துவது தேர்ந்த பெளலருக்கு அழகு. தேங்ஸ் டு பும்ரா. 22 நிமிடத்துக்குள் எல்கர், மார்க்ரம், ஆம்லா என தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரை புவி காலி செய்தார் எனில், டேஞ்சரஸ் டி வில்லியர்ஸை தூக்கினார் பும்ரா. மூன்றாவது பந்திலேயே தென்னாப்பிரிக்காவின் தொடக்க பேட்ஸ்மேனுக்கு புவி முடிவுரை எழுதினார் எனில் வேகம், பெளன்ஸர், யார்க்கர் என சகல விதங்களிலும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களைக் கதறவிட்டார் பும்ரா. புவி, பும்ராவுக்கு ஷமி, பாண்டியா ஒத்தாசையாக இருக்க, மூன்றாவது செஷனைத் தாண்டவில்லை தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிஸ். 286 ரன்களில் ஆல் அவுட். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இத்தனை நாள்களாக இதைச் செய்யாததால்தான், துணைக் கண்டங்கள் அல்லாத ஆடுகளங்களில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. #SAvIND

#SAvIND

 

ஸ்கோர் 12/3 எனும்போது களத்தில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனுக்கும் உள்ளூர உதறல் ஏற்படும். ஆனால், டி வில்லியர்ஸுக்கு பயமில்லை. தென் ஆப்ரிக்காவின் டாப் ஆர்டரை பதம் பார்த்த புவியின் பந்தை(யே) டி வில்லியர்ஸ் ஒரு கை பார்த்தார். தடுமாறிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்தான் ஒரு மோசமான  பந்துக்காக காத்திருப்பார்; பெளலர் தவறு செய்யும் தருணத்துக்காக காத்திருப்பார். டி வில்லியர்ஸ் தடுமாறும் பேட்ஸ்மேன் அல்ல... எதிரணியைத் தடுமாறவைப்பவர்!  அவர் மோசமான பந்துக்காக காத்திருப்பதில்லை; பெளலரின் தவறுக்காக காத்திருப்பதில்லை. லைன் அண்ட் லெந்த் பற்றி கவலையில்லை; பெளலரின் கன்சிஸ்டன்ஸி பற்றி கவலையில்லை... அடிக்க நினைத்தால் அடி!

ஃபுல் லெந்த் டெலவரியா? இந்தா, பிடி... கவர் டிரைவ். ஷார்ட் பால் அதேநேரத்தில் கொஞ்சம் வெளியே செல்கிறதா? இந்தா, பிடி... கட் ஷாட்... ஆம், புவி வீசிய ஒன்பதாவது ஓவரில் டி வில்லியர்ஸ் அடித்தது நான்கு பவுண்டரிகள். நான்குமே பக்காவான ஷாட்கள். எட்ஜ் என்ற வேலைக்கே இடமில்லை. அதிலும் அந்த ஓவரில் கடைசியாக அடித்த கட் ஷாட் ஒன்றுபோதும்! ஷாட் செலக்ஷன் , மொரட்டு அடி என்பதையெல்லாம்தாண்டி, டி வில்லியர்ஸின் அப்போதைய மனநிலைதான் கவனிக்க வேண்டிய விஷயம். மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிட்டதே என பதற்றத்தில் டொக் வைத்துக்கொண்டிருக்காமல், அசாரமல் அடித்ததுதான் மேட்டர். ஆம், கவுன்ட்டர் அட்டாக்கைக் கையிலெடுத்தார் ஏபிடி. கால்பந்தில் அடிக்கடி அட்டாக்கிங்தான் பெஸ்ட் டிஃபன்ஸ் என்பார்கள். கால்பந்து மட்டுமல்ல, கிரிக்கெட்டுக்கும் அது பொருந்தும் என நிரூபித்தார், நவீன கிரிக்கெட்டின் ஏலியன். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. நெருக்கடி இந்தியாவின் பக்கம் திரும்பியது. 

ஸ்விங், Seam என மிரட்டிய புவியின் பந்தைப் புரட்டி எடுத்த டிவில்லியர்ஸையே ஒரு கணம் கதி கலங்க வைத்தார் பும்ரா. 140 கி.மீ வேகத்தில் யார்க்கர் இறக்குவதுதான் பும்ராவின் பியூட்டி. அதனால்தான் அவர் லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் ஆகச்சிறந்த டெத் பெளலர். ஆனால், இது டெஸ்ட் மேட்ச். அதுவும் அவரது முதல் மேட்ச். முதல் ஸ்பெல். இங்கு யார்க்கர்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கமுடியாது. வேரியேஸன் வேண்டும். வேகம் வேண்டும், டெக்னிக் வேண்டும். பும்ராவிடம் எல்லாமும் இருக்கிறது. பாதி பிட்ச்சில் கட் செய்கிறார். டி வில்லியர்ஸ் அதைத் தடுப்பதற்காக பேட்டை நீட்டுகிறார். பந்து அவர் எதிர்பார்த்த இடத்துக்கு வரவில்லை. பேட்டுக்கும் அவரது உடம்புக்கும் இடையே ஸ்விங்காகிச் செல்கிறது. உதடு குவித்து காற்றை ஊதி பெருமூச்சு விட்டார் டி வில்லியர்ஸ். பும்ராவிடம் இருந்து இப்படியொரு டெலிவரியை டி வில்லியர்ஸ் எதிர்பார்க்கவில்லை. டி வில்லியர்ஸ் மட்டுமா?!

#SAvIND

கமான், கமான்... உற்சாகப்படுத்துகிறார்கள் இந்தியர்கள். அடுத்த பந்து. அதை விட கச்சிதம். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் ஃபுல் லென்த் டெலிவரி. டி வில்லியர்ஸ் அதைத் தடுக்க முயல்கிறார். முடியவில்லை. இன்சைட் எட்ஜ் போல தெரிந்தது.  ம்ஹும் பந்து பேட்டில் படவில்லை. அவரை ஏமாற்றி விட்டது. அவரை மட்டுமல்ல விக்கெட் கீப்பரையும். டி வில்லியர்ஸ் மிஸ் செய்த பந்தை  தனக்கு இடதுபுறம் டைவ் அடித்தால் மட்டுமே விக்கெட் கீப்பரால் அதைப் பிடிக்க முடியும். சகா டைவ் அடித்தார். ம்ஹும் பிடிக்கமுடியவில்லை. விக்கெட் கீப்பரென்ன... ஃபைன் லெக்கில் இருந்து ஓடி வந்த புவனேஸ்வர் குமாரே தட்டுத்தடுமாறித்தான் அதைத் தடுத்தார். வேகம் அப்படி... ஸ்விங் அப்படி...! 

அட்டகாசமான ஒரு ஸ்விங், பேட்ஸ்மேனை மட்டுமல்லாது இரு ஃபீல்டர்களையும் தடுமாற வைத்திருக்கிறது. மற்றொரு பந்தில் தன் வழக்கமான யார்க்கரில் டு பிளஸ்ஸியை நிலைகுலைய வைத்தார் பும்ரா. டி வில்லியர்ஸை ஒரு இன் ஸ்விங்கில், டு பிளஸ்ஸியை ஒரு யார்க்கரில் பதம்பார்த்த பும்ரா, மகாராஜாவைத் தடுமாறி கீழே விழ வைக்க தேர்ந்தெடுத்த ஆயும், பெளன்ஸர். ஆக, Seam, பெளன்ஸர் என தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் எதற்கு ஒத்துழைக்குமோ அதைக்கொண்டே அவர்களை மிரட்டியதோடு, தன் பிரத்யேக பிரம்மாஸ்திரமான யார்க்கர் மூலமும் அட்டாக் செய்தார் பும்ரா. வெல்கம் டு டெஸ்ட் கிரிக்கெட் ப்ரோ!

செகண்ட் செஷன். இந்த செஷனைக் கடத்தி விட்டால், இந்த நாளைக் கடத்தி விடலாம். எதிர்முனையில் பள்ளிப் பருவத்துத் தோழன் டு பிளஸ்ஸி இருக்கிறார். கேப்டனுக்கே உரிய பொறுப்புடன் ஆடிக் கொண்டிருக்கிறார். சப்போர்ட்டிங் ரோலை பக்காவாக செய்து கொண்டிருக்கிறார். அருமையான பார்ட்னர்ஷிப். இந்த ஜோடியைப் பிரிக்க கோலி திணறுகிறார்.  டி வில்லியர்ஸ் அரைசதம் கடந்து முன்னேறுகிறார். இவரைத் தடுக்காவிடில் சதம் அடிப்பார். ஆனால், இந்த செஷன் பும்ராவின் செஷனாக இருக்கும்போது டி வில்லியர்ஸால் என்ன செய்துவிட முடியும்.?140 கி.மீ வேகத்தில் மீண்டும் ஒரு ஸ்விங். இந்தமுறை இன்சைட் எட்ஜ். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் விழுகிறது. அந்தச் சத்தம் காதில் கேட்கிறது. திரும்பிப் பார்க்காமலேயே தலையைத் தொங்கப் போட்டு பெவிலியன் சென்றார் டி வில்லியர்ஸ். அவர் அவ்வளவு விரக்தியாக நடையைக் கட்ட வேண்டிய அவசியமில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் ஓர் அருமையான இன்னிங்ஸ். 84 பந்துகளில் 65 ரன்கள். கெளரவமான கம்பேக். அதைவிட பும்ராவின் என்ட்ரி மாஸ் என்ட்ரி. ஆம், ஐ.பி.எல் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பும்ராவின் முதல் விக்கெட், ஏ.பி.டி வில்லியர்ஸ். பும்ரா தன் கடைசி காலத்தில் இதை பெருமையாகச் சொல்லலாம்!

#SAvIND

பும்ராவுக்கு இது முதல் டெஸ்ட். ஆனால், டு பிளஸ்ஸி தன் 45-வது டெஸ்ட்டில் ஆடிக்கொண்டிருக்கிறார். அதுவும் கேப்டன் என்ற பொறுப்புடன். பும்ராவின் யார்க்கருக்கு தடுமாறிக் கொண்டிருந்தால், மிடில் ஆர்டர் படுத்துவிடும். அணி துவண்டு விடும். எழுந்து நிற்க வேண்டும். அடிக்க வேண்டும். அதுவும் யார் பந்தில் தடுமாறினோமோ அவர் பந்தில் அடிக்க வேண்டும். புவனேஸ்வர் குமார் ஓவரில் டி வில்லியர்ஸ் அடித்தது போல... டு பிளஸ்ஸிக்கும் அப்படியொரு வாய்ப்பு வந்தது. பும்ரா 144 கி.மீ வேகத்தில் வீசிய பந்துகளை டிரைவ் மற்றும் பன்ச் மூலம் கவர் திசையில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். தெளிவாக அதேநேரத்தில் நிதானமாக அரை சதம் கடந்து முன்னேறிக் கொண்டிருந்த டு பிளஸ்ஸிக்கு ஒரு சிக்கல் வந்தது. ஹர்திக் பாண்டியாவின் பந்தில் எல்.பி.டபுள்.யு. இந்தியா அப்பீல் செய்தது. நடுவர் மறுத்தார். இந்தியா ரிவ்யூ கோரியது. நாட் அவுட். ஆனால், அடுத்த இரண்டாவது பந்தில் டு பிளஸ்ஸி அவுட். இத்தனைக்கும் அது மிரட்டலான பந்து இல்லை. கட் செய்ய முயன்று, எட்ஜாகி, விக்கெட் கீப்பர் கையில் சிக்கியது. 103 பந்துகளை பொறுப்பாக எதிர்கொண்டவர், 104-வது பந்தில் ஷாட் செலக்ஷனில் தவறு செய்தார். 62 ரன்களில் அவுட்டாகி, தென்னாப்பிரிக்காவை தடுமாறவைத்தார்.  

வந்ததில் இருந்தே அடித்து ஆடிய டி காக் அரைசதம் அடிக்கும் முன் (43) விக்கெட்டை இழந்தார். பிலாண்டர் 23, மகாராஜா 35, ரபாடா 26 ரன்கள் சேர்க்க, தென் ஆப்ரிக்கா கெளரவமான ஸ்கோரை எட்டியது. மூன்றாவது செஷன் தொடங்கிய சற்று நேரத்திலேயே தென் ஆப்ரிக்கா ஓய்ந்து விட்டது. தென் ஆப்ரிக்க டாப் ஆர்டர் போலவே இந்தியாவின் டாப் ஆர்டரும்...

#SAvIND

 

புவி, பும்ரா பந்து ஸ்விங் ஆகும்போதே ‘இவங்களே இப்படி போடுறாங்களே... அப்போ அவங்க...?!’ என ஆச்சர்யப்பட்டது பலித்து விட்டது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் மட்டுமே புதிய பந்தில் விக்கெட் எடுத்தார். ஆனால், தென்னாப்பிரிக்க தரப்பில் ஸ்டெய்ன், பிலாண்டர், மோர்கல் என பந்துவீசிய எல்லோருமே புதிய பந்தில் விக்கெட் எடுத்தனர், ரபாடா தவிர... அதிலும் பழைய வேகம், பழைய ஆக்ரோஷம் இல்லையென்றாலும், ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்தபின் ஸ்டெய்ன் ஆர்ப்பரித்தது, இந்தியாவுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை. முதல்நாளின் மூன்றாவது செஷனில், தென்னாப்பிரிக்க பெளலர்களைக் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களின் தரம் சோதிக்கப்பட்டுவிட்டது. இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டிக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது முதல்நாளே ரசிகர்களுக்குப் புரிந்துவிட்டது. விராட் அண்ட் கோ-வுக்கும் புரிந்திருக்கும்!

 

 

அதகள பௌலிங்கிற்குப் பின்னர் புவ்னேஷ்வர் குமார் என்ன சொன்னார் தெரியுமா? #INDVsSA

 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதகளப்படுத்தியுள்ளார், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார். இந்நிலையில், அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ஆட்டம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

புவ்னேஷ்வர் குமார்

 

செய்தியாளர்களிடம் பேசிய புவி, `இந்தப் போட்டியில், ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்ற வருத்தமெல்லாம் எனக்கு இல்லை. ஒரு அணியாக நாங்கள் நன்றாகச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தான் எனது குறிக்கோளாக இருக்கிறது' என்றவரிடம், தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸுக்கு பௌலிங் செய்வதுகுறித்து கேட்கப்பட்டபோது, `டிவில்லியர்ஸ் தற்போது, உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு பௌலிங் செய்யும்போது, நமது பெஸ்ட்டை கொடுத்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். இங்கு, அவருக்கு எதிராக நன்றாக பந்து வீச முடியும். காரணம், தென்னாப்பிரிக்க பிட்ச்களில் ஸ்விங் அதிகமாக இருக்கும். குறிப்பாக, முதல் 10- 15 ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும்' என்றார் நம்பிக்கையுடன்.

 

பின்னர், தென்னாப்பிரிக்கா 28 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளதால், அவர்கள் கையில் ஆட்டம் சென்றுவிட்டதா? என்ற கேள்விக்கு, `அப்படிச் சொல்வதற்கில்லை. இது அவர்கள் நாடு. அவர்களுக்கு இந்த ஆடுகளம் நன்றாக பரிட்சியம் ஆனது. எனவே, அவர்கள் நன்றாக விளையாடுவார்கள், பந்து வீசுவார்கள் என்று நாங்கள் முன்னரே கணித்திருந்தோம். சில விக்கெட்டுகளை நாங்கள் இழந்திருந்தாலும், இன்னும் இந்தப் போட்டி எங்கள் கையைவிட்டு நழுவிவிடவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்' என்றார் தீர்க்கமாக. 

 

 

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய டிவில்லியர்ஸ்: நெகிழும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்

 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தபோது, டிவில்லியர்ஸ் ஆடிய `மேஜிக் ஓவர்' குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேல் பென்கென்ஸ்டீன் நெகிழ்ந்துள்ளார். 

டிவில்லியர்ஸ்

 

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம்செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு, இந்தச் சுற்றுப்பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றிபெறுவது தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இந்நிலையில் நேற்று, முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 50 ரன்கள் எடுப்பதற்கு முன்னதாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன்கள்  டிவில்லியர்ஸ் மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பால், டீம் ஸ்கோர் 250 ரன்களைத் தாண்டியது. இதில், டிவில்லியர்ஸ் மற்றும் டூப்ளிசிஸ் முறையே, 65 மற்றும் 62 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே திணறியது. ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

 

பேட்டிங்கிற்கு மிகவும் கடுமையான ஆடுகளமாகப் பார்க்கப்படும் கேப் டவுனில், டிவில்லியர்ஸ் - டூப்ளிசிஸ் பார்ட்னர்ஷிப்பும், குறிப்பாக டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டமும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் பென்கின்ஸ்டீன், `எங்கள் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, புவ்னேஷ்வர் குமார் மீண்டும் பௌலிங் செய்ய வந்தார். அப்போது களத்துக்கு வந்த டிவில்லியர்ஸ், அதிரடி ஆட்டமாடி, அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுத்தார். அதுதான், எங்கள் பக்கம் ஆட்டத்தைத் திருப்பியது. கேப்டன் டூப்ளிசிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு இடையில் சேர்க்கப்பட்ட 100 ரன்கள்தான் இந்தப் போட்டியில் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்' என்றார் நெகிழ்ச்சியுடன்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கடின உழைப்புக்குப் பிறகு புஜாரா தேவையற்ற அவுட்: இந்திய அணி திணறல் தொடர்கிறது

 

 
rohit

ரோஹித் அவுட்டை கொண்டாடும் ரபாடா.   -  படம். | ஏ.எஃப்.பி.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாராவை 26 ரன்களில் பிலாண்டர் வீழ்த்த தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 12 ரன்களுடனும், பாண்டியா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சில் வேகம், துல்லியம் தவிர இந்திய அணிக்கு ரன் எடுக்க வாய்ப்பே அளிக்கவில்லை, இன்றைய முதல் ரன்னே 24 டாட் பால்களுக்குப் பிறகே வந்தது.

கேஜியோ ரபாடா தன் வேகம், லெந்த்தின் துல்லியம் என்று இந்திய பேட்ஸ்மென்களை கடும் அவதிக்குள்ளாக்கினார். 146-150 கிமீ வேகத்தில் வீசுகிறார், இதனால் அவரை பின் காலில் சென்று எதிர்கொள்வதே சிறந்தது, ஆனால் 145-146 கிமீ வேகத்தில் அவர் ஃபுல் லெந்தில் வீசுகிறார். காற்றில் பந்து கடும் வேகத்துடன் வருகிறது. ரோஹித் சர்மாவுக்கு சட்டென முன் கால், பின் கால் என்று முடிவெடுக்க முடியவில்லை, இதனால் இன்றைய தின 18-வது ஓவரில் இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கினார், ரபாடா வேகத்துக்கு ஏற்ப மட்டையை கீழே இறக்க முடியவில்லை, தாமதமானது, இதனால் பிளம்ப் எல்.பி.ஆகி 59 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஏற்கெனவே அயல்நாடுகளில் குறிப்பாக பசுந்தரை ஆடுகளங்களில் சிறந்த வீரரான ரஹானேயை உட்கார வைத்ததற்காக கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது ரவிசாஸ்திரி, கோலி படை. இந்நிலையில் ரோஹித் சர்மாவினால் இந்த மட்டத்துக்கு உயர முடியவில்லை என்பதும் நிதர்சனமாகத் தெரிகிறது.

இன்று காலை வெர்னன் பிலாண்டர் 5 தொடர் மெய்டன்களுடன் தொடங்கினார். டேல் ஸ்டெய்ன் மெதுவே தனது அபாயகரமான அவுட் ஸ்விங்கரைக் கண்டுபிடித்து வருகிறார். மோர்னி மோர்கெல் அசவுகரியான லெந்தில் பந்தை எழுப்புவதும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு பழக்கமில்லாத ஒன்று. கம்பீர் போன்ற வீரர்கள் அங்கும் இங்கும் அடி வாங்கி இத்தகைய சூழ்நிலைகளில் எடுத்த 93 ரன்களை நினைத்துப் பார்ப்பது நலம்.

புஜாரா மிக அருமையான நிதானத்துடன் ஆடுகிறார், அனாயசமாக ஆடுகிறார் என்று கூற முடியாது, ஆனால் குறிக்கோள் இருக்கிறது, விக்கெட்டை அவ்வளவு சுலபத்தில் கொடுத்து விடக்கூடாது என்பது தெரிகிறது, பெரும்பாலும் ஸ்கொயர் லெக்கில்தான் இவரது 26 ரன்கள் வந்தது. கவர் திசையில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார் என்றால், ஆஃப் திசையே எனக்கு வேண்டாம் என்கிற பேட்டிங்காகும் இது. ஆனாலும் என்ன செய்வது உணவு இடைவேளைக்குப் பிறகு பிலாண்டரின் வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் ஆடி டுபிளெசிசிடம் ஆட்டமிழந்தார். அத்தனை கடின உழைப்பும் வீண்.

ரோஹித் ஆட்டமிழந்தவுடன் அஸ்வின் இறங்கினார், ரபாடாவின் ஒரு பவுன்சர் பந்து வலது கை விரல்களில் ‘பச்’ என்று தாக்கியது, கிளவ்வை கழற்றி விட்டு உதறி மருந்து கிருந்தெல்லாம் போட்ட பிறகு அடுத்த பந்து இடது கை விரல்களைப் பதம்பார்த்து பவுண்டரிக்குச் சென்றது. மீண்டும் இருகைகளையும் உதறல். அவர் உறுதியுடன் 12 ரன்களில் நிற்கிறார்.

இத்தகைய பந்து வீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மென்கள் தங்களை நன்றாக கவனத்துடன் ஈடுபடுத்திக் கொள்வது அவசியம் இல்லையெனில் மிகமிகக் கடினம். இது ஒரு சவால் இதனை எதிர்கொள்வதுதான் அழகு, அதை விடுத்து எந்த அணி வெளிநாடுகளில் வெல்கிறது, இந்த அணிதான் சிறந்த அணி என்றெல்லாம் மார்தட்டிக் கொள்வது வெற்று பீற்றலாகவே முடியும்.

இந்தியா...177/7

http://tamil.thehindu.com/sports/article22384358.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஹர்திக் பாண்டியா அதிரடியால் நம்பிக்கையில் இந்தியா: தேனீர் இடைவேளை வரை 185-7

 

பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #HardikPandya

 
ஹர்திக் பாண்டியா அதிரடியால் நம்பிக்கையில் இந்தியா: தேனீர் இடைவேளை வரை 185-7
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. புவனேஸ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த டி வில்லியர்ஸ் (65), டு பிளிசிஸ் (62), டி காக் (43) ஆகியோர் சிறப்பாக விளையாட 286 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. முரளி விஜய் 1 ரன்னிலும், தவான் 16 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. புஜாரா 5 ரன்னுடனும், ரோகித் சர்மா கணக்கை துவக்காமலும் களத்தில் இருந்தனர். இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். இறுதியில் ரபாடா வீசிய 29-வது ஓவரில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 59 பந்துகளை சந்தித்தார். புஜாரா-ரோகித் சர்மா ஜோடி 20.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 30 ரன்கள் சேர்த்தது. அடுத்து அஸ்வின் களம் இறங்கினார்.  மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. புஜாரா 26 ரன்களுடனும், அஸ்வின் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

201801061909365416_1_6pandya002-s._L_styvpf.jpg

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பிலாண்டர் வீசிய முதல் பந்தில் புஜாரா டு பிளிசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விராட்டினார்.

புஜாரா அவுட்டாகிய அதிர்ச்சி மறைவதற்குள் பிலாண்டர் வீசிய அடுத்த ஓவரில் அஸ்வின் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஹா ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டெயின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இந்தியா 92 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது திணறியது.

8-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். புவனேஸ்வர் குமாரை வைத்துக் கொண்டு ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. புவனேஸ்குமாரால் ரன் அடிக்க இயலவில்லை என்றாலும் அதிகவேக பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஒருமுனையில் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டார்.

201801061909365416_2_6philander001-s._L_styvpf.jpg

46 பந்தில் 10 பவுண்டரியுடன் ஹர்திக் பாண்டியா அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 61 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 81 ரன்னுடனும், புவனேஸ்வர் குமார் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் தாக்குப்பிடித்துவிட்டால் ஆட்டம் பரபரப்பானதாகிவிடும். #SAvIND #HardikPandya #INDvSA

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/06190937/1138836/SAvIND-Hardik-Pandya-attacked-fifty-india-185-for.vpf

Link to comment
Share on other sites

93 ரன்கள்... 2 விக்கெட்...! ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா

 
 

ஹர்திக் பாண்ட்யா

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 

இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ரோகித் ஷர்மா, அஸ்வின், விக்கெட் கீப்பர் சாஹா, புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் இந்திய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச்சூழலில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. புவனேஷ்வர் குமார் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 93 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா 77 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு மார்க்ரம், டீன் எல்கர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். அணி 50 ரன்னைக் கடந்தது. பேட்டிங்கில் ஜொலித்த பாண்ட்யா பந்துவீச்சிலும் அசத்தினார். இவரது பந்துவீச்சில் மார்க்ரம் (34 ரன்), டீன் எல்கர் (25 ரன்) ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. ரபடா (2 ரன்), அம்லா (4 ரன்) களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை  மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது.

https://www.vikatan.com/news/sports/112929-hardik-pandya-took-93-runs-and-2-wickets.html

Link to comment
Share on other sites

‘இது என்ன இலங்கையா?’, ‘அயல்நாட்டுப்பயணமா கோலிக்கு மோடி அறிவுரை வழங்க வேண்டும்’: ட்விட்டர்வாசிகள் கேலி

 

 
kohli

கோலி.   -  படம்.| ராய்ட்டர்ஸ்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களையே எடுத்துள்ளதையடுத்து ட்விட்டரில் முன்னாள் வீரர்களும், பிற ட்விட்டர்வாசிகளும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட்வாலா: முதல் தின ஆட்டத்தின் நீதிபோதனை: இலங்கைக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்?

ஆகாஷ் சோப்ரா: ஸ்லிப் திசையில் சென்ற ஒரே கேட்சை தென் ஆப்பிரிக்கா பிடித்து விட்டனர், இந்திய அணி ஸ்லிப் கேட்சைத் தவற விட்டது. அயல்நாடுகளில் சிறு விஷயங்களின் விளைவுகள் பெரிது.

லஷ்மண்: புவனேஷ் குமார் முதல் ஸ்பெல்லை அருமையாக வீசினார், ஏபிடி எதிர்த்தாக்குதல் நடத்தினார். பிறகு இந்தியா 286 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை மட்டுப்படுத்தியது. 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணியை காயப்படுத்தியிருக்கும், 2-ம் நாள் நல்ல நாளாக அமையும் என்று நம்புவோம்.

ஹர்ஷா போக்ளே: புவனேஷ்வர் குமாரின் முதல் ஸ்பெல்தான் முதல் நாள் சிறப்பம்சம். மேலும் டிவில்லியர்ஸின் எதிர்த்தாக்குதல். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்று கருதுகிறேன்.

கோலியை கிண்டல் செய்த ட்விட்டர்வாசிகள்:

எம்.எஸ்.டியன் என்ற தோனி ஆதரவாளர்:

எதிர்பார்ப்பு: எந்த சூழ்நிலையிலும் கோலி ரன் எடுப்பார்.

உண்மை நிலவரம்: மட்டைப் பிட்சில் 200 ரன், பசுந்தரைப் பிட்சில் 20க்கும் கீழ்.

குர்ரம்:

விராட் கோலி 5 ரன்களில் அவுட். ஹனிமூன் நாட்களில் ஊழியர் ஒருவரை வேலைக்கு வரச்சொன்னால் இப்படித்தான் ஆகும்.

பாக்சிக்பாக் ராஜா பாபு:

கோச்: ஏன் தென் ஆப்பிரிக்காவில் போராடுகிறீர்கள்?

விராட் கோலி: மகாத்மா காந்தியே இங்கு போராடியிருக்கிறார்.

சிட்:

ஸ்டீவ் ஸ்மித் எந்த ஊரிலும் ஆடுவார், விராட் கோலி ஆடவேண்டுமென்றால் துணைக்கண்ட நிலைமை வேண்டும். விராட் கோலி பற்றி என்ன ஒரு ஊதிப்பெருக்கம்!

விஷால்:

ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் மோடிஜி விராட் கோலிக்கு டிப்ஸ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கை கேலி செய்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article22382769.ece?homepage=true

Link to comment
Share on other sites

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம்...இந்தியாவுக்கு சாதகமா?

 
 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. 

ஸ்டெயின்

 
 


முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் எடுத்தார். அடுத்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கி தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இதுவரை 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இப்போதைய நிலையில் இந்த டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் கையே ஓங்கியுள்ளது எனலாம். தென்னாப்பிரிக்க அணி 350 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயித்தால் அது இந்திய அணிக்கு சிக்கலாகலாம்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயமடைந்த செய்தி கிடைத்துள்ளது. அவருடைய இடது குதிக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக முதல் டெஸ்டில் அவர்  இனி பந்துவீச மாட்டார். அத்துடன் காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதி பெற அவருக்கு 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும் என்று தெரிகிறது. ஆகவே, அவர் இந்தத் தொடரில் இருந்து அவர் விலகக்கூடும்.

இது இந்திய அணிக்கு சாதகமாகவும், தென்னாப்பிரிக்க அணிக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. ஸ்டெயின் முதல் இன்னிங்ஸில் 17.3 ஓவர்கள் பந்து வீசி 6 மெய்டன்களுடன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஷிகர் தவான், சாஹா ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவு தான்.

https://www.vikatan.com/news/sports/112940-steyn-wont-bowl-further-in-first-test.html

Link to comment
Share on other sites

இந்தியா- தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் மழையினால் தாமதம்

 

 
 

கேப் டவுனில் நடைபெற்று வரும் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டம் மழையினால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #SAvIND

 
 
இந்தியா- தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் மழையினால் தாமதம்
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்றுமுன்தினம் (5-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான மார்கிராம், டீன் எல்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். தென்ஆப்பிரிக்கா 52 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கிராம் 34 ரன்கள் நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட்வாட்ச்மேன் ஆக ரபாடா களம் இறங்கினார். டீன் எல்கர் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். ஹசிம் அம்லா - ரபாடா ஜோடி 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 4 ரன்னுடனும், ரபாடா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா 142 ரன் முன்னிலைப் பெற்றுள்ளது.

நேற்றிரவு கேப் டவுனில் மழை பெய்தது. இதனால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது. மைதான ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் போட்டி சரியான நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. #SAvIND #INDvSA #CapeTown

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/07144149/1138909/SAvIND-Cape-Town-Test-3rd-match-delayed-by-rain.vpf

Link to comment
Share on other sites

கேப் டவுன் டெஸ்ட்: ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

 
அ-அ+

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டின் இன்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. #SAvIND

 
கேப் டவுன் டெஸ்ட்: ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்றுமுன்தினம் (5-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான மார்கிராம், டீன் எல்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். தென்ஆப்பிரிக்கா 52 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கிராம் 34 ரன்கள் நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட்வாட்ச்மேன் ஆக ரபாடா களம் இறங்கினார். டீன் எல்கர் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

201801071928169638_1_7match002-s._L_styvpf.jpg

அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். ஹசிம் அம்லா - ரபாடா ஜோடி 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 4 ரன்னுடனும், ரபாடா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா 142 ரன் முன்னிலைப் பெற்றுள்ளது.

நேற்றிரவு கேப் டவுனில் மழை பெய்தது. இதனால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது. மைதான ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் போட்டி சரியான நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

201801071928169638_2_7match003-s._L_styvpf.jpg

மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்க வாய்ப்பு இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கீட்டது. பின்னர் ஆட்டம் தொடங்குவதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

நாளை வழக்கம்போல் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும், 4-வது நாள் மற்றும் 5-வது நாளில் 98 ஓவர்கள் வீசப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. #SAvIND #INDvSA #CapeTown

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/07192817/1138947/SAvIND-Cape-Town-Test--Play-has-been-called-off-for.vpf

Link to comment
Share on other sites

130 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: இந்தியாவிற்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு

கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவிற்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #SAvIND #Bumrah

 
 
130 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: இந்தியாவிற்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியாவின் (93) உதவியால் 209 ரன்கள் சேர்த்தது இந்தியா.

முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. ரபாடா 2 ரன்களுடனும், ஹசிம் அம்லா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201801081618210655_1_1Kohli1-s._L_styvpf.jpg

நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரபாடா, அம்லா பேட்டிங்கை தொடங்கினார்கள். இந்தியாவின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அம்லா 4 ரன்களிலேயே மொகமது சமி பந்தில் ஆட்டமிழந்தார்.

201801081618210655_2_1steyn001-s._L_styvpf.jpg

அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். ரபாடா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் ரன்ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் டி காக் (8), பிலாண்டர் (0), மகாராஜ் (15), மோர்கல் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா திணறியது. கடைசி விக்கெட்டாக டி வில்லியர்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டது.

கண்மூடி விழிப்பதற்குள் தென்அப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது. இன்றைய ஆட்டத்தில் 65 ரன்னுக்குள் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. 2-வது இன்னிங்சில் பும்ரா, மொகமது ஷமி தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201801081618210655_3_1Kohli-s._L_styvpf.jpg

முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் தென்ஆப்பிரிக்கா 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. #SAvIND #Bumrah #southafricavsindia

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/08161821/1139125/SAvIND-south-africa-135-all-out-target-to-india-208.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.