Jump to content

ஃபைவ் ஸ்டார் துரோகம்...


Recommended Posts

ஃபைவ் ஸ்டார் துரோகம்...

 

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் அதிரடி அரசியல் த்ரில்லர்!

 

 கடந்த ஓராண்டு காலமாக ஒன்இந்தியா தமிழில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் தொடரான ஒன்+ஒன்=ஜீரோ தொடர் இடம் பெற்றது. லட்சக்கணக்கான வாசகர்களால் ரசிக்கப்பட்ட தொடர் இது. அந்தத் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒரு புதிய தொடரை ராஜேஷ்குமார் ஒன்இந்தியா தமிழில் எழுதுகிறார்.

 

Rajeshkumar's 'Five Star Dhrogam' new series 1

இந்தத் தொடருக்கு தனது பாணியில் 'ஃபைவ் ஸ்டார் துரோகம்' என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பே, தொடருக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறதல்லவா? ரொம்ப நாள் காத்திருக்கத் தேவையில்லை... ஜஸ்ட் 24 மணி நேரம்தான்.

நாளை இதே நேரம் ஃபைவ் ஸ்டார் துரோகம் தொடரின் முதல் அத்தியாயம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கும்.

தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-five-star-dhrogam-series-1-303494.html

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் புதிய தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 1

 

 அந்த விடியற்காலை ஐந்தேகால் மணிக்கு சட்டென்று தூக்கம் அறுந்து போனது சாதுர்யாவிற்கு.

போர்வையை விலக்கிக் கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். 'ஏதோ... சத்தம் கேட்ட மாதிரி இருந்ததே?'

"என்ன சத்தம்?"

அவளுடைய பார்வை ஜன்னலுக்கு வெளியே போயிற்று. வானம் இருட்டாக இருந்தாலும் அந்த வியாழக்கிழமை விடியும் பக்குவத்தில் தெரிந்தது. பக்கத்துத் தெரு பெருமாள் கோயிலிலிருந்து மாலே மணிவண்ணாவும் எதிர் தெருவின் தர்காவிலிருந்து 'அல்லா ஹூ அக்பர்' என்ற பாங்கு து ஆ வும் காற்றில் கலந்து சாதுர்யாவின் செவி மடலை ஸ்பரிசித்தது. அடுத்த வீட்டு பன்னீர்பூ மரம் 'ஸ்பிரே' அடித்த மாதிரி நுரையீரல் பூராவும் மணந்தது.

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 1

 

மறுபடியும் படுத்து தூக்கத்தைத் தொடரலாமா என்று யோசித்த விநாடி அவளுடைய தலைமாட்டில் இருந்த செல்போன் வைபரேஷனில் உறுமியது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

சீஃப் கமிஷன் ஆஃப் இன்கம்டாக்ஸ் 'அருள்' பெயர் பச்சை நிறத்தில் வெளிச்சமாய் ஒளிர்ந்தது. போனை எடுத்து இடது காதுக்கு ஏற்றினாள்.

"குட்மார்னிங் ஸார்"

"வெரி வெரி குட்மார்னிங் சாதுர்யா... என்ன நல்ல தூக்கம் போலிருக்கு...? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு கால் கொடுத்தேன். நோ... ரெஸ்பான்ஸ். ரிங் போயிட்டே இருந்தது."

"ஸாரி... ஸார்... நேத்து லேட் நைட்தான் படுக்கப் போனேன். ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததுன்னு இப்பதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன்.... உடனே உங்க போன்.... ஒன்ஸ் அகெய்ன் ஸார்."

"நோ ப்ராப்ளம் .... இப்ப உன்னோட ரூம்ல உன்னைத் தவிர வேற யாராவது இருக்காங்களா....?'"

"யாரும் இல்ல ஸார்... நான் மட்டும்தான். அம்மா அப்பா வழக்கம்போல கீழே ஹால் ரூம்ல. ஏன் ஸார் எனிதிங்க் இம்பார்ட்டண்ட்...?"

"எஸ்....! கொஞ்ச நேரத்துக்கு முந்தி மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸிலிருந்து எனக்கு ஒரு வோரல் ஆர்டர் வந்தது. நாம உடனடியாய் ஒரு ஆப்ரேஷனுக்குத் தயாராகணும், ஆப்ரேஷன் நேம் என்ன தெரியுமா சாதுர்யா?"

"சொல்லுங்க ஸார்"

"ஆப்ரேஷன் ஆக்டோபஸ்"

"டார்கெட் யார் ஸார்?"


"நேர்ல சொல்றேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நீ ரெடியாகி சாந்தோம் பீச்சுக்கு வரணும். டிபார்ட்மெண்ட் ஆஃப் ரெவின்யூவில் இருந்து நித்திலனையும் வரச் சொல்லியிருக்கேன்."

"சாந்தோம் பீச்ல 'லேண்ட் மார்க் பாய்ண்ட் எது ஸார்...?"

"ஹெர்பல் ஜூஸ் ஸ்டாலுக்குப் பக்கத்துல இருக்கிற வாக்கிங் பேவ்மண்ட்."

"சரியா ஆறு மணிக்கெல்லாம் அங்கே இருப்பேன் ஸார்," சொன்ன சாதுர்யா செல்போனை அணைத்து விட்டு கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்ட மாதிரி இயங்க ஆரம்பித்தாள்.

அடுத்த அரை மணி நேரத்துக்குள் குளித்து முடித்து வேறு உடைக்கு மாறி கீழே வந்தாள்.

சமையலறையில் ட்யூப்லைட் வெளிச்சம் தெரிய அம்மா ரோகிணி அங்கே இருப்பதற்கு அடையாளமாய் காப்பியின் மணம் காற்றில் கலந்திருந்தது. அம்மாவை பின்புறமாய் போய் கட்டிப் பிடித்து 'குட்மார்னிங் மாம்' என்றாள். ரோகிணி திகைத்துத் திரும்பினாள்.

"என்னடி... இவ்வளவு காலையில் எந்திரிச்சு 'ப்ரஷ்'ஷாகி வந்து இருக்கே...?"

"கடமை அழைக்குதம்மா. சீஃப் கமிஷனர் அரை மணி நேரத்துக்கு முந்தி போன் பண்ணியிருந்தார். சாந்தோம் பீச்சுக்கு வரச் சொல்றார்....!"

"என்ன விஷயம்ன்னு கேட்டியா?"

"அங்கே போனாத்தான் தெரியும்"

"உனக்கு இந்த இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை கிடைச்சபோது பொம்பள புள்ளைக்கு இந்த வேலை வேண்டாம்ன்னு தலைத்தலையா அடிச்சுகிட்டேன். நீயும் கேட்கலை. உங்க அப்பாவும் கேட்கலை... நேரங்கெட்ட நேரத்துல போன் வருது. போன மாசத்துல ஒரு நாள் நடுச் சாமம் ஒரு மணிக்கு போன் வந்தது. இன்னிக்கு காலங்காத்தால....."

"அம்மா... உன்னோட புலம்பலை அப்பா கிட்ட கன்டினியூ பண்ணு. நான் கிளம்பறேன்"

"இதோ... காப்பி ஆயிடுச்சு... ஒரு வாய் குடிச்சுட்டு போ...."

"அம்மா.... நான் காலை நேரத்துல கஷாயம் சாப்பிடறதை விட்டு ரொம்ப நாளாச்சுன்னு உனக்குத் தெரியாதா?"

"என்ன சொன்னே...?" ரோகிணி சமையல் மேசை மீது இருந்த கரண்டியை எடுக்க சாதுர்யா வெளியே ஓடினாள்.

"அம்மா! அப்பாகிட்டே சொல்லிடு. நான் கிளம்பறேன்".

சாதுர்யா வீட்டின் முகப்புக்கு வந்து மல்லிகைப் பந்தலுக்கு கீழே நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்துக் கொண்டு வெறிச்சோடிப் போயிருந்த சாலையில் வேகம் பிடித்தாள்.

சிக்னல்களில் பச்சை தாராளமாய்க் கிடைக்க சரியாய் ஆறுமணிக்கெல்லாம் சாந்தோமைத் தொட்டாள்.

சென்னையின் கிழக்கு திசை ரத்தச் சிவப்பான மேகங்களோடு சூரியனை எதிர்பார்த்து காத்திருந்தது.

சாதுர்யா ஸ்கூட்டியை டூ வீலரில் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வேகமாய் நடந்தாள். ஹெர்பல் ஜூஸ் ஸ்டால் வந்தது. மெகா சைஸ் தொப்பைகளோடு சிலர் டிஸ்போஸபில் டம்ளர்களில் அருகம்புல் ஜூஸைக் குடித்துக் கொண்டிருக்க வாக்கிங் பேவ்மெண்டில் போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்சில் 'ஜாக்கிங் சூட்'டில் அந்த அழகான இளைஞன் சமுத்திரத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

"குட்மார்னிங் நித்திலன்...." அவன் திரும்பி தன் சீரான பல்வரிசையைக் காட்டிச் சிரித்தான்.

"ஹாய் சாதுர்யா..."

"நீ வந்து ரொம்ப நேரமாச்சா...?"

 

"இப்பத்தான் வந்தேன்..."

சாதுர்யா அவனுக்குப் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.

"தலைவர் எதுக்காக கூப்பிட்டிருப்பார்ன்னு தெரியலை. எனி கெஸ் ஒர்க்?"

"அதான் போன்ல சொன்னாரே 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'ன்னு"

"டார்கெட் யார்ன்னு சொல்லலையே?"

"அதை நமக்கு கடைசி நிமிஷத்துலதான் சொல்வார்..."

"எனக்கு ஒரு சந்தேகம் நித்தி," என்ற சாதுர்யா குரலைத் தாழ்த்தினான்.

"இந்த 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'ஸுக்கு உன்னையும் என்னையும் மட்டும்தான் செலக்ட் பண்ணியிருக்கார். கவனிச்சியா?"

"ம்... கவனிச்சேன்"

"ஒரு வேளை நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சிருக்குமோ?"

"தெரிஞ்சதுனாலத்தான் உங்க ரெண்டு பேரையும் செலக்ட் பண்ணினேன்."

தங்களுக்குப் பின்பக்கம் எழுந்த குரல் கேட்டு சாதுர்யாவும், நித்தியனும் திரும்பி பார்த்தார்கள்.

சீஃப் கமிஷ்னர் ஆஃப் இன்கம்டாக்ஸ் அருள் வெள்ளை நிற டீசர்ட், பேண்டில் மினி சிரிப்போடு நின்றிருந்தார். தனது 55 வயதான உடம்பை தினசரி வாக்கிங் மூலம் பொறாமைப்படும் அளவுக்கு இளமையாய் வைத்து இருந்தார்.

இருவரும் திகைப்போடு எழுந்தார்கள்

"ஸார்..."

"நான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே இங்கே வந்துட்டேன். நான் பார்க்க விரும்பாத நண்பர் ஒருத்தர் அந்த ஹெர்பல் ஜூஸ் ஸ்டாலில் நின்றிருந்தார். அவரை அவாய்ட் பண்றதுக்காக அந்த ஷெல்டர்க்குப் பின்னாடி நின்னுட்டிருந்தேன். அந்த நண்பர் புறப்பட்டுப் போனதும் நான் வந்தேன். பை...த....பை ... காதலிக்கிறது தப்பான விஷயம் கிடையாதே..?"

"தப்பான விஷயம் கிடையாதுதான். இருந்தாலும் ஒரு வருஷம் வரைக்கும் யார்க்கும் தெரியாதபடி மெய்ன்டைன் பண்ணலாம்ன்னு நினைச்சோம் ஸார்...."

"இட்ஸ் ஓகே..... இந்த 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'க்கு உங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ண உங்க காதல் மட்டும் காரணம் இல்லை. ஐ லைக் யுவர் ட்யூட்டி டெடிகேஷன்"

. "தாங்க்யூ ஸார்"

"நவ் லெட் அஸ் கம் டு த பாயிண்ட்....' இன்னிக்கு விடிகாலை நாலுமணிக்கு மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸிலிருந்து யோகேஷ்வர் சர்மா என்னோட 'வாட்ஸ் அப்'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியும் அதைப் பற்றின சில குறிப்புகளையும் அனுப்பி வெச்சிருந்தார். அதை நீங்களும் ஒருதடவை பார்த்துருங்க. அப்புறம் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்."

சொன்ன அருள் தன் செல்போனை எடுத்து வாட்ஸ் அப் ஆப்ஷனுக்கு போய் அந்த செய்தியை உயிர்ப்பித்தார்.

"ப்ளீஸ் டேக் ஏ வ்யூ"

சாதுர்யாவும் நித்திலனும் தங்களுடைய பார்வைகளை வாட்ஸ் அப்பில் பதித்தார்கள், ஓர் ஆங்கில செய்தித்தாளும் அதில் அச்சாகியிருந்த செய்தியும் தட்டுப்பட்டது. படித்தார்கள். தமிழாக்கம் மனசுக்குள் ஓடியது.

"அசலான ரூபாய் ஐநூறு கள்ள நோட்டு ரூ 300-க்கு விற்பனை டெல்லியில் சப்ளை. இதுபற்றி டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் ஷ்யாம் தயான் கூறுகையில் 'இந்த கள்ள நோட்டுக்கள் அனைத்தும் நல்ல தரமான காகிதத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சு அசலாக ஒரிஜினல் நோட்டுகள் போலவே இருக்கின்றன. ஆனால் மொத்த நோட்டுக்களை 'ஸ்கேன்' செய்தால் மட்டுமே அதில் உள்ள குறை தெரிகிறது. அதாவது கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் 250 நோட்டுக்களில் ஒரே சீரியல் எண் உள்ளது. 80 நோட்டுகள் 4 பொதுவான சீரியல் எண்களைக் கொண்டுள்ளன. தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் இந்த நோட்டுக்களுடன் பிடிபட்டபோது எப்படியோ தப்பி விட்டான். ஆனால் அவன் செல்போன் போலீஸார் கைக்கு கிடைத்தது. அந்த போனில் பல விபரங்கள் குழப்பமாக இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. அதை இப்போதைக்கு சொல்ல முடியாது."

 

சாதுர்யாவும் நித்திலனும் 'வாட்ஸ் அப்'பிலிருந்து அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்கள். அருள் கேட்டார்.

"என்ன படிச்சிட்டீங்களா?"

"படிச்சிட்டோம் ஸார்.! ஒரு விஷயம் மட்டு தெளிவாக உள்ளதுன்னு டெல்லி போலீஸ் கமிஷனர் சொல்லியிருக்கார் ஸார். அது என்ன விஷயம்?"

 

"அந்த கமிஷனரே எனக்கு போன் பண்ணி சொன்னார், நான் அதிர்ந்து போயிட்டேன்.... தமிழ்நாட்டில் இரண்டு முறை முதலமைச்சராய் இருந்த மாஜி அமைச்சர் முகில் வண்ணன் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கிறார்." சாதுர்யாவும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டார்கள். "ஸார் நீங்க சொல்றது?" "பொய் கல்ப்பு இல்லாத ஐ.எஸ்.ஐ முத்திரையோடு கூடிய உண்மை!' "ஸார்! மாஜி அமைச்சர் முகில் வண்ணன் வெரிபவர்புல் பர்சன். அவரை நெருங்கறது அவ்வளவு சுலபம் இல்லை"

சாதுர்யாவும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டார்கள்.

"ஸார் நீங்க சொல்றது?"

"பொய் கல்ப்பு இல்லாத ஐ.எஸ்.ஐ முத்திரையோடு கூடிய உண்மை!'

"ஸார்! மாஜி அமைச்சர் முகில் வண்ணன் வெரிபவர்புல் பர்சன். அவரை நெருங்கறது அவ்வளவு சுலபம் இல்லை"


"எனக்கு அது தெரியாதா என்ன..? கொஞ்சம் கொஞ்சமாய் அவரை நாம நெருங்குறோம். இந்த ஆப்ரேஷன் ஆக்டோபஸில் நீங்க ரெண்டு பேரும்தான் செயல்பட போறீங்க. இன்னிக்குத்தான் திட்டத்தோட முதல் கட்டம் ஆரம்பம். முகில் வண்ணன் நாளைக்கு நீலாங்கரையில் உள்ள தன்னோட பண்ணை வீட்டில் அவரோட அறுபது வயது நிறைவு சஷ்டியப்த பூர்த்தி விழாவை கொண்டாட பெரிய அளவில் ஏற்பாடு பண்ணியிருக்கார். அந்த விழாவுக்கு அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி,க்கள் நிறைய பேர் கலந்துக்கப் போறாங்க. அந்த விழாவில் நீங்க ரெண்டு பேரும் கலந்துக்கப் போறீங்க. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இன்னும் சொல்லப் போனா உயிரை பணயம் வெச்சு வேவு பார்க்கப் போறீங்க".

நித்திலன் சாதுர்யா இருவரின் உடல்களிலும் ஒரு எவரெஸ்ட் குளிர் ஊசியாய் மாறி ஊடுருவியது.

- தொடரும்

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-1-303698.html

Link to comment
Share on other sites

 ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 2

 

ராஜேஷ்குமார்

சாதுர்யாவும் நித்திலனும் சீஃப் இன்கம்டாக்ஸ் ஆபீஸர் அருளை ஒரு ஆச்சர்யப் பார்வையால் நனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள்.

"ஸார்... மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனின் அறுபதாவது பிறந்தநாள் விழாவுக்கு அரசியல் துறையைச் சேர்ந்தவங்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே கலந்துக்கப் போறாங்க இல்லையா?"

"ஆமா..."

"அப்படீன்னா நாங்க எப்படி உள்ளே போக முடியும் எண்ட்ரன்ஸ்லேயே தடுத்து நிறுத்திடுவாங்களே?"

"அது எனக்குத் தெரியாதா என்ன...? இந்தா இதைப் பிடிங்க....", சொன்னவர் தன் தோளில் போட்டிருந்த லெதர் பையின் ஜிப்பை விடுவித்து உள்ளேயிருந்த அந்த இரண்டு பொன்னிற கவர்களை உருவி எடுத்தார்.

"இதுதான் முகில் வண்ணனின் சஷ்டியப்த பூர்த்தி விழா அழைப்பிதழ். சில முக்கியமான ஊடகங்களுக்கு மட்டுமே இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கு. இதை வாசலில் இருக்கிற செட்யூரிட்டிகள் கிட்டே காட்டினால் போதும். உள்ளே அட்மிட் பண்ணிடுவாங்க...."


நித்திலனும், சாதுர்யாவும் அந்த அழைப்பிதழ்களை வாங்கிப் பார்த்தார்கள்.

"அடலேறு அவதரித்த அறுபதாவது பிறந்த நாள். வரலாறை வாழ்த்துவோம் வாரீர்.

" என்ற வரிகள் தங்க நிறத்தில் தகதகத்தது. கவர்க்குள் இருந்த அழைப்பிதழ். கால் கிலோ அளவுக்கு கனத்தது. அருள் சிரித்துக் கொண்டே சொன்னார்.

"நீங்க ரெண்டு பேரும் உள்ளே போறதுக்கான பாஸ்போர்ட் இது. கூடவே இந்த நேம் பேட்ஜையும் எல்லார்க்கும் தெரியும்படி சட்டைப் பை பக்கம் குத்திக்கணும்."

 

இந்த நேம் பேட்ஜையும் எல்லார்க்கும் தெரியும்படி சட்டைப் பை பக்கம் குத்திக்கணும்."

"இது என்ன பேட்ஜ் ஸார்?"

"வாங்கிப் பாருங்க"

வாங்கி பார்த்தார்கள்

'அனைத்துலக தமிழர் வாழ்வாதார முன்னேற்ற கட்சி' என்ற வாக்கியம் அரைவட்டமாய் தெரிய அந்த வட்டத்துக்குள் மாஜி முதல் அமைச்சர் முகில்வண்ணன் வழக்கைத்தலையோடு தங்கப்பல் தெரிய சிரித்தார். பின் மண்டை தலைமுடி 'டை'யின் உபயத்தால் கறுப்பு பிறையாய் தெரிந்தது.

சாதுர்யா புன்னகையோடு தலையசைத்தாள். "இப்பப் புரியுது ஸார்.... இந்த விழா அழைப்பிதழ்தான் பாஸ்போர்ட். இந்த நேம் பேட்ச்தான் விசா. இந்த ரெண்டும் இருந்தால்தான் விழா நடக்கிற அந்த நீலாங்கரை பண்ணை வீட்டுக்குள்ளே போக முடியும்."

"அதே அதே.... சபாபதே," என்றார் அருள்.

நித்திலன் கேட்டான்.

"ஸார்.... நாங்க பண்ணை வீட்டுக்குள்ளே போனதும் எது மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளணும்...?"

"நித்திலன்! அந்த பண்ணை வீடு ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட மிகப்பெரிய பங்களான்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். அவர் எம்.எல்.ஏ வாக இருந்த போதே அவர் பேர்ல ஏகப்பட்ட ஊழல் புகார்கள். நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு நிறைய லெட்டர்ஸ் வரும்.

 

அப்பவே கட்டின பண்ணை வீடு அது. ரெண்டாவது தடவையாய் அவர் எம்.எல்.ஏ ஆனபோது பொதுப்பணித்துறை மந்திரியாய் இருந்தார். மூணாவது தடவை தேர்தலில் ஜெயிச்ச போது சி.எம். ஆயிட்டார். மொத்தம் பத்து வருஷம் முதலமைச்சராய் இந்த முகில்வண்ணன் முறை கேடாய் ஊழல் பண்ணி கோடி கோடியாய் பணம் சம்பாதிச்சார். அதிகாரமும் பதவியும் அவரோட கையில் இருந்ததால் அவரை சி.பி.ஐ யும் சரி, அமலாக்கப் பிரிவும் சரி, நம்ம டிபார்ட்மெண்ட்டும் சரி, எதுவுமே பண்ண முடியலை. காரணம் சென்ட்ரல் கவர்மெண்டில் இருக்கிற சில சர்வ வல்லமை படைத்த அதிகாரிகள். ஆனா.... இப்ப.... நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு..."

"எப்படி ஸார்?"

"மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸிலிருந்து சீஃப் சதுர்புஜன் எனக்கு பச்சை கொடி காட்டிட்டார். முகில்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கிறதுக்கு முன்பு அவரோட நெருக்கமான நண்பர்கள் யார்ங்கிறதை லிஸ்ட் பண்ணனும். இது மாதிரியான முக்கியமான விழாக்களின் போதுதான் அவர்க்கு நெருக்கமான நபர்கள் யார் என்கிற விஷயம் தெரிய வரும்.... நீங்க ரெண்டு பேரும் செல்போனில் வீடியோவாகவும் எடுக்கப் போறீங்க.... அதே நேரத்துல அந்த பண்ணை வீட்டில் எத்தனை அறைகள், எது மாதிரியான அமைப்புகளில் கட்டப்பட்டு இருக்கு என்கிற விபரங்களும் வேணும்."

"யூ டோண்ட் வொர்ரி ஸார்... நீங்க சொன்னது மட்டும் இல்லை சொல்லாத விபரங்களையும் சேர்த்து கொண்டு வர்றோம்."

அருள் அண்ணாந்து வாய்விட்டு சிரித்துவிட்டு நித்திலனின் தோள் மீது கையை வைத்தார்.


"நம்ம டிபார்ட்மெண்டிலேயே உங்க ரெண்டு பேரைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஹைலி டெடிகேட்டட் பர்ஸன்ஸ். எது மாதிரியான வேலையைக் கொடுத்தாலும் அதை ஒரு புதிய கோணத்தில் பார்த்து அதுக்கு முடிவுரை எழுதற கலை உங்ககிட்டே இருக்கு. எல்லாத்துக்கும் மேலா நீங்க ரெண்டு பேரும் ஐ.டி. டிபார்ட்மெண்டில் இருந்தாலும் வெளியுலகத்துக்கு தெரியாத 'இன் காமிரா' விங்கில் வேலை பார்த்துட்டிருக்கிறது இந்த ஆக்டோபஸ் ஆப்ரேஷனுக்கு ரொம்பவே உதவும்."

"ஸார்.... முகில்வண்ணனோட சஷ்டியப்த பூர்த்தி ஃபங்க்‌ஷன் நாளைக்குத்தானே...?"

"ஆமா..."

"எத்தனை மணிக்குக் கிளம்பணும் ஸார்?"

"விடியற்காலை அஞ்சு மணிக்கு கணபதி ஹோம பூஜையும் சுதர்சன பூஜையும் இருக்குன்னு நிகழ்ச்சி நிரலில் போட்டிருக்காங்க. அந்த நேரத்துக்கே நீங்க ரெண்டு பேரும் போயிடறது பெட்டர். இது மாதிரியான பூஜைகளின் போதுதான் முகில்வண்ணனுக்கு நெருக்கமானவங்க இருப்பாங்க... நீங்க அந்த ஃபங்க்‌ஷனில் இருக்கும்போது உங்க நடவடிக்கைகளைப் பார்த்து யாரும் சந்தேகப்பட்டுவிடக் கூடாது... ஏன்னா நான் இப்படி உங்களை வார்ன் பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கு...!"

"என்ன காரணம் ஸார்?"

"முகில்வண்ணனோட முன்கதைச் சுருக்கம் என்னான்னு தெரியுமா?"

"தெரியாது ஸார்..."

"அவரோட சொந்த ஊர் ராமநாதபுரத்தில் இருக்கிற செந்தட்டி கிராமம். அப்பா அம்மா வெச்ச பேரு முத்துக்காளை. அஞ்சாங்கிளாஸுக்கு மேல் படிப்பு வரலை. அப்பா, அம்மா இறந்த பிறகு அந்த ஊர் கவுன்சிலர் வீட்ல போய் வேலைக்கு சேர்ந்து, அவர் கூடவே இருந்து வேலையும் பார்த்துகிட்டு அரசியலையும் கத்துகிட்டு வந்து ஒரு பேட்டைக்கு ரெளடியாகி, ஒரு பெண்ணை வலிய கெடுத்து அவளையே கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு மந்திரிக்கு அடியாளாக மாறி அவரோட சிபாரிசால கவுன்சிலராகி, எம்.எல்.ஏ.வாகி, மந்திரியாகி, இப்போ மாஜி முதல் மந்திரியாய் நாளைக்கு சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடப் போறார். ஒரு முத்துக்காளை முகில்வண்ணனாய் மாறிய கதை இதுதான்."

"ஸார்.. முகில்வண்ணனோட மனைவி இறந்துட்டதாய் எப்பவோ... பேப்பர்ல படிச்ச ஒரு ஞாபகம்"


"ஆமா முதல் மனைவி விஜயா சில வருஷங்களுக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. இருந்தாலும் அடுத்த ஆறு மாசத்துக்குள்ளே முகில்வண்ணன் தன்னோட மகளிர் அணி கட்சித் தலைவி சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். முதல் மனைவி மூலமாய் முகில்வண்ணனுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகன் பேரு செந்தமிழன். வயசு முப்பது. பொண்ணோட பேரு பூவிதழ். பூவிதழ்க்கு கல்யாணமாயிருச்சு. புருஷன் பேரு மணிமார்பன். அதே வீட்ல வீட்டு மாப்பிள்ளையாய் இருக்கார்...," என்று பேசிக் கொண்டே போன அருள் ஒரு சில விநாடிகளுக்கு பேச்சை நிறுத்தினார்.

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார். "இப்ப நான் சொல்லப் போகிற விஷயத்தை நீங்க ரெண்டு பேரும் மனசுல நல்லா வாங்கிகிட்டு இந்த ஆப்ரேஷன்ல செயல்படனும்."


"சொல்லுங்க ஸார்"

"முகில்வண்ணனோட மகன் செந்தமிழும், மருமகன் மணிமார்பனும் சாதாரண நபர்கள் கிடையாது. சென்னையில் உள்ள பல கூலிப்படை அமைப்புக்கள் இவங்க ரெண்டு பேரோட கட்டுப்பாட்டுக்குள்ளேதான் இருக்கு... இவங்களோட கண்ணசைவுகள் எந்தப்பக்கம் போய் யார் மேல் பதியுதோ அவங்க ஒருவார காலம்தான் உயிரோடு இருப்பாங்க.... போலீஸ் எஃப்.ஐ.ஆர் ஃபைல் பண்றதோடு சரி. அதுக்கப்புறமாய் பெயரளவுக்கு ஒரு இன்வெஸ்டிகேஷனை பண்ணிட்டு ' THE CASE CAN NOT BE FOUND' என்கிற ஃபைல் லிஸ்ட்டுக்கு போயிடும்....'

 

நித்திலன் கோபமாய் குரலை உயர்த்தினான். "SIR THIS IS HIGHLY CONDEMNABLE".

"இது எல்லார்க்கும் தெரியும்.... ஆனா யாரும் எதுவும் பண்ண முடியாது. வீ ஆர் ஹெல்ப்லஸ்..."

"ஸார்! பணம், பதவி, அதிகாரம் இந்த மூணும் யார்கிட்ட இருந்தாலும் அவங்ககிட்டே சட்டம் செல்லுபடியாகாது. நியாயம் தர்மம் எடுபடாது. முகில்வண்ணன்கிட்டே பதவியும் அதிகாரமும் இருக்கக் காரணம் அவர் முறைகேடாய் சம்பாதிச்சு வெச்சிருக்கிற கோடிக்கணக்கான பணம்தான். அதை பறிமுதல் பண்ணி அரசு கஜானாவுக்கு கொண்டு போயிட்டாலே போதும். முகில்வண்ணன் மாதிரி இருக்கிற நபர்களோட ஆட்டமெல்லாம் ஆடி அடங்கி காணாமல் போயிடும்..."

"யூ ஆர் கரெக்ட் நித்திலன்... பட் நம்மால் இது முடிகிற காரியமா...?"

"நானும் சாதுர்யாவும் இந்த அராஜகத்துக்கு முடிவு கட்றோம் ஸார்...!"

"நீ என்ன சொல்றே சாதுர்யா?" "நான் களத்துல இறங்கி ரொம்ப நேரமாச்சு ஸார்" "தட்ஸ் குட்... நாளைக்கு நம்ம 'ஆபரேஷன் ஆக்டோபஸ்' திட்டத்தோட முதல் கட்டம் ஆரம்பம். சரியா காலைல அஞ்சு மணிக்கெல்லாம் முகில்வண்ணனோட நீலாங்கரை பண்ணை வீட்ல இருக்கணும்."

"இருப்போம் ஸார்"

-------------

 

காலை ஏழுமணி.

அடையார் போட்ஸ் கிளப் ரோட்டிலிருந்த பெரிய பங்களாவின் பூஜையிலிருந்து வெளிப்பட்ட மாஜி முதலமைச்சர் முகில்வண்ணன் அறைக்கு வெளியே நின்றிருந்த மகன் செந்தமிழையும், மருமகன் மணி மார்பனையும் ஆச்சர்யம் கலந்த கேள்விக்குறியோடு பார்த்தார்.

"என்ன.... செந்தமிழ்... நீயும் மாப்பிள்ளையும் இன்னுமா நீலாங்கரை பண்ணை வீட்டுக்குப் போகலை...?" "இதோ போயிட்டிருக்கோம்...."

"கும்பகோணத்திலிருந்தும் வைத்தீஸ்வரர் கோயிலில் இருந்தும் மொத்தம் எத்தனை சிவாச்சாரியார்கள் ஹோம குண்ட பூஜை நடத்த வர்றாங்க...?"

"மொத்தம் பதினெட்டு.."

"அவங்க தங்கறதுக்கெல்லாம் இடம் ஏற்பாடு பண்ணியாச்சா?"

முகில்வண்ணன் கேட்ட கேள்விக்கு ஆறடி இரண்டு அங்குல உயரத்தில் இருந்த மணிமார்பன் பவ்யமாய் குனிந்து சொன்னான்.

"எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு மாமா"

"சரி... நாம எத்தனை மணிக்கு இங்கிருந்து நீலாங்கரை பண்ணை வீட்டுக்கு கிளம்புறோம்...!"


"அ...அ... அது.... வந்து.... மாமா..."

நடந்து கொண்டிருந்த முகில்வண்ணன் சட்டென்னு நின்று இருவரையும் ஒரு குழப்பப் பார்வை பார்த்தார்.

"என்ன ரெண்டு பேரும் முகத்தை தொங்கப் போட்டுகிட்டு இருக்கீங்க...ஏதாவது பிரச்சனையா?"

"கொஞ்சம் பிரச்சனைதான்," என்றான் செந்தமிழ்.

"என்ன?"

"நீங்க பூஜை ரூம்ல இருந்தப்ப டெல்லி மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸிலிருந்து நம்ம ஆள் ஒருத்தர் போன் பண்ணியிருந்தார்ப்பா"

"என்னவாம்?"

"ஆபரேஷன் ஆக்டோபஸ்' என்கிற பேர்ல நம்ம பண்ணை வீட்ல ஐ.டி. ரெய்டு நடத்த திட்டம் தீட்டப்பட்டிருக்காம்... அதனோட முதல்கட்ட வேலைகள் ஆரம்பமாயிடுச்சாம்"

செந்தமிழ் சொல்லச் சொல்ல - முகில்வண்ணனின் முகம் அனல் குண்டமாய் மாறியது.

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-2-304345.html

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் பரபர அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 3

 

முகில் வண்ணனின் முகம் கோப ரத்தத்தில் மாப்பிள்ளை மணிமார்பனையும் மகனையும் செந்தமிழையும் மாறி மாறிப் பார்த்தது.

"செந்தமிழ்! நீ என்ன சொல்றே.... ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்கிற பேர்ல நம்ம பண்ணை வீட்ல ஐ.டி, ரெய்டு நடத்த திட்டம் தீட்டப்பட்டிருக்கா?"

"ஆமாப்பா..."

"உனக்குத் தகவல் கொடுத்தது யாரு?"

"மினிஸ்டரி ஆஃப் ஃபைனான்சில் இருந்து நமக்கு வேண்டிய தயான் வர்மா...."

"இது உறுதியான தகவல்தானா?"

"தயான் வர்மா சொன்னால் அது சரியாய்த்தான் இருக்கும், இதுக்கு முன்னாடி அவர் கொடுத்த எல்லாத் தகவல்களுமே சரியாய் இருந்திருக்கப்பா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.டி. அதிகாரிகள் இதே பங்களாவுக்கு ஐ.டி. ரெய்டுக்கு வரப்போவதை முன்கூட்டியே சொன்னவர் தயான் வர்மா. அவர் அப்படி தகவல் கொடுத்ததினால்தான் நாம் பதுக்கு வெச்சிருந்த 100 கோடி ரூபாயையும் 50 கிலோ தங்கத்தையும் உடனடியாய் இந்த இடத்திலிருந்து நங்கநல்லூரில் இருக்கிற நம்ம ஃபேமிலி ஃப்ரண்ட் தேவேந்திரன் வீட்டுக்கு கடத்தி அதைக் காப்பாற்றினோம்'.

 

மாப்பிள்ளை மணிமார்பன் குறுக்கிட்டான்.

"ஆமா மாமா.... தயான் வர்மா நமக்கு விசுவாசமானவர். இந்த ஆப்ரேஷன் ஆக்டோபஸ் நூறு சதவீதம் உறுதியான செய்தியாய்தான் இருக்கும்."

"சரி.... இப்ப பண்ணலாம்....?"

"மாமா.... நாளைக்கு உங்களுக்கு அறுபதுக்கு அறுபது சஷ்டியப்த பூர்த்தி. இந்த நேரத்துல நாம எந்த ஒரு டென்ஷனையும் காட்ட வேண்டாம், இப்போ தமிழ்நாட்ல நம்ம கட்சிதான் ஆட்சியில் இருக்கு. நீங்க பார்த்து ஓகே சொன்ன வஜ்ரவேலுதான் இங்கே முதலமைச்சர்.... சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருக்கிற காபினட் மந்திரிகளில் பாதி பேர் நமக்கு விசுவாசமாய் இருக்காங்க. இப்படி எல்லாமே நமக்கு சாதகமாய் இருக்கும் போது நாம ஏன் பயப்படணும்...?"

 

"நான் பயப்படலை மாப்பிள்ளை...," என்று சொன்னவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

"இந்த பண்ணை வீட்டுக்குள்ளேதான் நம்ம சம்பாதிப்புல முக்கால் பங்கு இருக்கு... இதை யார் எப்படி ஸ்மெல் பண்ணினாங்கன்னு தெரியலையே...."

"மாமா.... யார் ஸ்மெல் பண்ணினாலும் சரி நாம மறைச்சு வெச்சிருக்கிற இடத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கூட அவங்களால எடுக்க முடியாது."

"அது எனக்கும் தெரியும் மாப்ளே.... ஆனா இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத ஆப்ரேஷன் ஆக்டோபஸ்....? நாம சொன்னபடி யார்க்காவது பணத்தை செட்டில் பண்ணாமே விட்டுட்டோமா....?"

இப்போது செந்தமிழ் குறுக்கிட்டான்,

 

"அப்பா.... நாம ஒழுங்கா மூச்சு விடறோமோ இல்லையோ தெரியாது. ஆனா மாசா மாசம் யார் யார்க்கு பணம் போய்ச் சேரணுமோ.... அவங்களுக்கு ஒழுங்கா பணம் போயிடுது. அதுல எந்த ஒரு தப்பும் நடக்க வாய்ப்பு இல்லை...!"

"பின்னே எப்படி...?"

"தெரியலை..."

"நீ என்ன வஜ்ரவேலுக்கு ஒரு போன் போட்டு குடு, பேசிப் பார்க்கலாம்...!"

செந்தமிழ் தன் செல்போனை எடுத்து முதலமைச்சர் வஜ்ரவேலுவின் 'ஹாட் லைன்' இணைப்புக்குத் தொடர்பு கொண்டான். மறுமுனையில் முதலமைச்சர் பேசினார்.

"என்ன தம்பி.... காலங்காத்தால போன்?"

"அப்பா பேசணுமாம்"

"குடு... குடு..."

செந்தமிழ் செல்போனை முகில்வண்ணனிடம் தர அவர் வாங்கி வலது காதுக்கு ஏற்றினார்.

"வஜ்ரம்"

"வணக்கம் ... தலைவரே.... சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு...!"

"ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்திவரை எல்லாமே நல்லபடியாய் போயிட்டிருந்தது வஜ்ரம். இப்ப ஒரு பிரச்சனை எட்டிப் பார்த்ததால சந்தோஷமே தடம் புரண்டிருச்சு வஜ்ரம்"

. "என்ன சொல்றீங்க தலைவரே....?"

முகில்வண்ணன் விஷயத்தை சுருக்கமாய் சொன்னார். முதலமைச்சர் வஜ்ரவேல் மறுமுனையில் ஆச்சர்யப்பட்டார்.

"என்னது ஆப்ரேஷன் ஆக்டோபஸ்ஸா?"

 

"ஆமா...."

"எனக்கு இதுவரைக்கும் ஒரு தகவல் கூட இல்லை தலைவரே. அப்படி ஏதாவது இருந்திருந்தா உளவுத்துறை மூலமாய் விஷயம் என்னோட காதுக்கு வந்து இருக்குமே....!"

"வஜ்ரம் ....! உளவுத்துறை இப்போ நமக்கு விசுவாசமாய் இல்லை. நான் சி.எம்.மாய் இருந்த காலத்திலேயே அவங்க நிறைய பொய் பேசினாங்க. போன தடவை நடந்த எலெக்‌ஷன்ல 25 ஆயிரம் வோட்டு வித்தியாசத்துல நான் ஜெயிப்பேன்னு சொல்லி கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாய் ரிப்போர்ட் கொடுத்தாங்க. ஆனா நான் 50 ஆயிரம் வோட்டு வித்தியாசத்துல தோத்தேன். நீ தோப்பேன்னு சொன்னாங்க. ஜெயிச்சே!'

"ஆனா தலைவரே... நம்ம கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்ன்னு சரியாய் சொன்னாங்களே?"

"இதோ பார் வஜ்ரம்.... கட்சி மேலிடம் என்மேல் கொஞ்சம் அதிருப்தியாய் இருக்கிறதால் சி.எம்.மாய் நீ வர்றதுக்கு நான் பச்சை கொடி காட்டினேன்... டெல்லி மந்திரிகள் யார் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் நான் நல்லபடியாய் கவனிச்சு அனுப்பிச்சேன். அதுக்கு அவங்க காட்ற நன்றி இதுதானா?"

"நான் இப்ப என்ன பண்ணட்டும் தலைவரே?"

"உடனே டெல்லிக்கு போன் போடு. மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸின் சீஃப் ஆபீஸர் கிட்டே பேசு. ஆப்ரேஷன் ஆக்டோபஸ் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது."

"அவ்வளவுதானே....! இப்ப பேசிட்டு அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே உங்க லைனுக்கு வர்றேன்!"

"வா.... வெயிட் பண்ணிட்டிருக்கேன்' சொன்ன முகில்வண்ணன் கையில் இருந்த செல்போனை மகனை நோக்கி வீசிவிட்டு சுவரோரமாய் போட்டிருந்த சோபாவில் போய் சாய்ந்து கொண்டார். ஏ.ஸி. அந்த அறையை ஊட்டியாய் மாற்றியிருந்தாலும், முகமும் வழுக்கையும் வியர்வையில் மின்னியது. உதடுகளில் பத்து விநாடிகளுக்கு ஒரு முறை ஒரு கெட்ட வார்த்தை உற்பத்தியாகி வெளியே கோபத்தோடு வந்து விழுந்து காற்றை அசுத்தப்படுத்தியது.

 

சரியாய் பத்து நிமிஷம்.

செந்தமிழன் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

"அப்பா... வஜ்ரவேல்தான்!"

செந்தமிழ் நீட்டிய போனை வாங்கி கோபம் தணியாமல் பேசினார்.

"சொல்லு வஜ்ரம்"

"தலைவரே... மினிஸ்டர் கிட்டேயே பேசிட்டேன்"

"என்ன சொன்னார்?"

"அது வந்து...."

"வார்த்தைகளை முழுங்காமே பேசு வஜ்ரம்"

 

"மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸுக்கு சீஃப் ஆபீஸராய் இப்போ 'சதுர்புஜன்'ன்னு ஒருத்தர் வந்து இருக்காராம். அவரோட தாத்தா சுதந்திர போராட்ட கால வீரராம். போனவாரம்தான் ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணியிருக்கார், அன்னிக்கே CLOSED FILES செக்‌ஷனுக்குப் போய் ரேண்டமாய் ஒரு ஃபைலை எடுத்துப் பார்த்து இருக்கிறார். அப்படி அவரோட கைக்கு சிக்கின ஃபைல் உங்களோடதாம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க சி.எம்.மாய் இருந்தபோது காவல்துறைக்கு வாங்கிய அதி நவீன சாதனங்களில் பெரிய முறைகேடு நடந்ததை சரிவர விசாரிக்காமல் சி.பி.ஐ. க்ளோஸ் பண்ணின ஃபைல் அது. நிதானமாய் படிச்சுப் பார்த்துட்டு மறுபடியும் ஃபைலை ஓப்பன் பண்ணனும்ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு முன்னாடி உங்களுக்கு சொந்தமான வீடுகளில் ஒரு ரெய்டு பண்ணனும்ன்னு முடிவு எடுத்து அதுக்கு 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'ன்னு பேர் கொடுத்து இருக்கார்."

 

"ஃபைனான்ஸ் மினிஸ்டர் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலையா?"

"இல்லையாம் தலைவரே"

"ஏன்....?'

"அந்த சீஃப் ஆபீஸர் சதுர்புஜன் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கி காட்டறதாய் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து டெல்லி மக்களுக்கு மத்தியில் செல்வாக்கோடு இருக்காராம். அப்படிப்பட்ட ஒரு நபர்கிட்ட போய் உங்க ஃபைலை விசாரிக்க வேண்டாம்ன்னு சொன்னால் மினிஸ்டரையே அவர் சந்தேகப்படுவாராம்.... அதனால...."

"எனக்குப் புரியுது.... நீ எதையும் விளக்கி சொல்ல வேண்டாம் வஜ்ரம்.... நீ உன்னோட வேலையைப் பாரு. ஐ.டி. காரங்க அவங்க வேலையை பார்க்கட்டும். நான் இனிமேல் என்ன வேலையை பார்க்கணுமோ அந்த வேலையை பார்க்கிறேன்."

கோபமாய்க் கத்தி செல்போனை அணைத்தார். பெருமூச்சு ஒன்றை நெருப்பாய் வெளியேற்றிவிட்டு செந்தமிழையும், மணிமார்பனையும் சைகையால் பக்கத்தில் அழைத்தார்.

இருவரும் நெருங்கினார்கள். முகில்வண்ணன் அடிக்குரலில் பேசினார். நாளைக்கு பண்ணை வீட்டில் ஃபங்க்‌ஷன் நடக்கும் போது உங்க ரெண்டு பேர்க்கும் என்ன வேலை தெரியுமா....? அந்த கூட்டத்துல சந்தேகப்படற மாதிரி யார் இருந்தாலும் அவங்க உயிரோட வெளியே போகக் கூடாது!"

-------------------------

அடுத்த நாள் காலை அதிகாலை வேளை 4.30 மணி. ஹெட்லைட்கள் வெளிச்சத்தில் ஈ.சி.ஆர் சாலையில் தன் ஸ்விப்ட் காரை மிதமான வேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தான் நித்திலன், அவன் அருகே இருந்த இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தபடி தன் செல்போனைத் தடவி எதையோ பார்த்துக் கொண்டிருந்த சாதுர்யாவை தொண்டையைக் கனைத்து ஈர்த்தான். சாதுர்யா கேட்டாள்.

"என்ன நித்தி.... தொண்டை சரியில்லையா?"

"அதெல்லாம் நல்லாயிருக்கு.... நீதான் சரியில்லை"

"எனக்கென்னவாம்?"

"கார்லதான் வேற யாரும் இல்லையே. அப்படியே தலையை ஒரு 45 டிகிரி கோணத்தில் சாய்ச்சு என் தோள் மேல....!"

"நித்தி...." என்று சொல்லி முறைத்த சாதுர்யா அவனுடைய வலுவான புஜத்தில் குத்தினாள். சொன்னாள்.

"நாம ஒண்ணும் டூர் போகலை. வீ ஆர் ஆன் ட்யூட்டி..."

"தெரியும் சாதுர்யா.... இருந்தாலும் முகில்வண்ணனோட பண்ணைவீடு வர்ற வரைக்கும் ஆன் டுயூட்டியை பார்க்காமே நம்ம ட்யூட்டியை பார்ப்போமே!"

"டேய்.... உதை விழும்.... ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு. இன்னும் சில நிமிஷங்கள்ல பண்ணைவீடு வந்துடும்... அதோ தூரத்துல பாடு வெளிச்சம்...."

நித்திலன் பார்த்தான்.


"அவரோட பண்ணை வீட்டுக்கு இன்னும் அஞ்சு கிலோமீட்டர் தூரம் இருக்கே.... இங்கிருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே."

கார் வெளிச்சத்தை நெருங்கியது.

சாலையின் இரண்டு பக்கமும் பத்தடிக்கு ஒரு ட்யூப் லைட் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான ட்யூப்லைட்டுகள் இலவச மின்சாரம் சாப்பிட்டு அந்த விடியற்கால இருட்டை ஒரு பகல் நேரமாய் மாற்றியிருந்தன. விஸ்வரூபம் எடுத்து நின்ற ப்ளக்ஸ் போர்டு பேனர்களில் முகில்வண்ணன் விதவிதமாய் கும்பிட்டு சிரித்துக் கொண்டிருந்தார். கீழே எழுதப்பட்டிருந்த வாசங்கங்கள் பார்வையை உறுத்தின.

'நடமாடும் பாரதமே

உன் பாதம் பணிந்தோம்.'

"நித்தி! பார்த்தியா கொடுமையை"

"இந்தப் பக்கம் என்ன பேனர்ன்னு பாரு சாதுர்யா?" காரின் வேகத்தைக் குறைத்தான்.

சாதுர்யா படித்தாள்.

'தலைவா... இந்த தரணியில் உனக்கு ஜனனம் மட்டுமே!

அந்த ஆண்டவனுக்கு ஆயுள் நிர்ணயம் செய்பவன் நீ.'

நித்திலன் வாய்விட்டுத் திட்டினான்.

"அடப் பாவிகளா?"

சாதுர்யா ஏதோ சொல்ல முயன்ற விநாடி அவளுடைய செல்போன் 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாய் ஒர் 'அலர்ட் டோன்' கேட்டது.

எடுத்து வாட்ஸ் அப் ஆப்ஷனுக்குப் போய் பார்த்தாள்.

ரத்தச் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய 'எக்ஸ்' குறி தெரிந்தது.

- தொடரும்...



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter3-305147.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்
யாழில் இணைக்கப்படும்
கதைகளுக்கு என ஒரு தரம்
இருந்தது

சொந்த ஆக்கம்
தவிர பிறர் ஆக்கம்
என்றால் சிற்றிலக்கிய சஞ்சிகைகள்
காலச்சுவடு போன்றவற்றின்
படைப்புகள் போன்ற
தரமான படைப்புகள்
இணைக்கப்படும்

இப்ப கண்ட கண்ட
குப்பைகள் எல்லாம்
இங்கு வந்து கொட்டப்படுகின்றது

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 4

 

 

தன்னுடைய 'வாட்ஸ் அப்'பில் தெரிந்த அந்த சிவப்பு 'எக்ஸ்; குறியைப் பார்த்ததும் லேசாய் முகம் மாறினாள் சாதுர்யா.

"நித்தி"

"ம்"

"காரை அப்படி ஓரமாய் நிறுத்து" 

 

"ஏன் என்னாச்சு?"

"நம்ம பாஸ் அருள் என்னோட 'வாட்ஸ் அப்'புக்கு ரெட் எக்ஸ் குறி அனுப்பியிருக்கார்."

நித்திலனும் அதே விநாடி தன்னுடைய முக நிறத்தை தொலைத்துவிட்டு இடது பக்கமாய் காரை ஒடித்து ஒரு மரத்துக்கு கீழே கொண்டு போய் நிறுத்தினான்.

"அவர் உனக்கோ எனக்கோ வாட்ஸ் அப்'பில் ஒரு ரெட் எக்ஸ் குறி அனுப்பினால் நாம செல்போனில் பேசக்கூடிய நிலைமையில் இருந்தால் உடனே பேசனும்ன்னு அர்த்தம் இல்லையா?"

 

"ஆமா..."

"ம்... பேசு..."

சாதுர்யா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு செல்போனில் சீஃப் ஆபீஸர் அருளின் செல்போன் எண்ணைத் தொட்டான். மறுமுனையில் ஒரே ஒரு முறை ரிங் போய் அருளின் குரல் கேட்டது.

ஸ்பீக்கரை ஆன் செய்தாள் சாதுர்யா.

"சாதுர்யா"

"குட் மார்னிங் ஸார்"

"என்னால குட்மார்னிங் சொல்ல முடியாது"

"ஏன் ஸார்?"

"இப்ப நீயும் நித்திலனும் எங்கே இருக்கீங்க?"

"முகில் வண்ணனோட பண்ணை வீட்டுக்கு அஞ்சு கிலோமீட்டர் தள்ளி" "காரை ஓரமாய் நிறுத்திட்டீங்களா?"

"நிறுத்திட்டோம்"

 

"உங்களை யாரும் நோட் பண்ணலையா?"

"ஸார்.... ரோட்டோட ரெண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான ட்யூப்லைட்டுகளும், ராட்சஸ பேனர்களும்தான் இருக்கு... ஆள்நடமாட்டம் அறவே இல்லை.... ஏன் ஸார்.... அந்த ரெட் எக்ஸ்.... எனிதிங்க் இம்பார்ட்டண்ட்?"

"மோஸ்ட் இம்பார்ட்டண்ட்"

"சொல்லூங்க ஸார்...."

"ஆப்ரேஷன் ஆக்டோபஸ் திட்டம் எப்படியோ கசிஞ்சு முகில்வண்ணனோட காதுக்குப் போயிடுச்சுன்னு டெல்லியில் இருந்து எனக்கு தகவல் வந்தது."

"எ...எ... எப்படி ஸார்?"

"தெரியலை.... நம்ம நாட்ல 1947-லில் தியாகிகள் இருந்தாங்க. இப்ப துரோகிகள்தானே இருக்காங்க... இந்தத் திட்டத்தை சதுர்புஜன் எவ்வளவோ ரகசியமாய் வெச்சிருந்தும் எப்படியோ கசிஞ்சு வெளியே வந்து யார் காதுக்கு விஷயம் போகக்கூடாதோ அவங்க காதுக்கு போயிடுச்சு"

"போனா என்ன ஸார்.... இது ஒண்ணும் அஃபிஷியல் ரெய்டு கிடையாதே... அந்த பண்ணை வீட்டை நானும் நித்திலனும் வேவு பார்க்கப்போறோம் அவ்வளவுதானே?"

"சாதுர்யா! நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்...."

 

"சொல்லுங்க ஸார்"

"முகில்வண்ணன் இந்நேரத்துக்கு 'அலர்ட்' ஆகியிருப்பார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கும். உங்க ரெண்டு பேர் மேலேயும் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் விளைவுகள் வேறுவிதமாய் இருக்கும்".

"எங்க உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம்ன்னு சொல்ல வர்றீங்களா ஸார்?"

"எஸ் ... நான் ஏற்கனவே சொன்னது போல் முகில்வண்ணன் வெரி பவர்ஃபுல் பர்சன்... ஏற்கனவே சி.எம்.மாய் இருந்தவர். அவர் பதவியில் இல்லைன்னாலும் இன்னிக்கும் அவர்தான் ஷேடோ சீஃப் மினிஸ்டர். அவர் நினைச்சா எந்த ஒரு அநியாயத்தையும் பண்ணிட்டு அதை நியாயப்படுத்த முடியும்....!"

"ஸார்... எனக்கொரு சந்தேகம்?"

"என்ன?"

"இப்ப என்கூட போன்ல பேசிட்டிருக்கிறது சீஃப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் எங்கள் பாஸ் அருள்தானே?"

"அதுல உனக்கென்ன சந்தேகம் சாதுர்யா?"


"இல்ல ஸார் அவர் இப்படியெல்லாம் டிஸ்கரேஜ் பண்ற மாதிரி பேச மாட்டாரே?"

"உன்னோட கேலி கிண்டல் எனக்குப் புரியுது சாதுர்யா.... ஆனா நேத்து காலையில் உங்ககிட்டே பேசின அந்த பாஸ் அருள் இப்படி கோழைத்தனமாய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. நமக்கு தைரியம் வேண்டியதுதான். ஆனா, அந்த தைரியம் விவேகத்தோடு இணைந்து இருக்கணும்."

 

"ஓ.கே. ஸார். ... நாங்க இப்ப என பண்ணணும்....?"

"முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குப் போக வேண்டாம். காரை திருப்பிகிட்டு வந்துடுங்க...!"

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் ஸ்பீக்கரில் அருள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நித்திலன் தயக்கமாய் குறுக்கிட்டான்.

"ஸார்.... நான் நித்திலன்"

"சொல்லு நித்தி"

"நான் பேசலாமா ஸார்?"

"தாராளமாய்"

"ஸாரி ஸார்"

"எதுக்கு இப்போ ஸாரி?"

 

"எதுக்கு இப்போ ஸாரி?"

"முதல் தடவையாய் நானும் சாதுர்யாவும் உங்க பேச்சை மீறி நடக்கப்போறோமே அதுக்காக....!"

"நித்தி....நீ... என்ன சொல்ற?"

"ஸார்... இந்த ஆப்ரேஷன் ஆக்டோபஸ் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு.

அதுக்கான பிள்ளையார் சுழியை இன்னிக்கு நாம போட்டுட்டோம். ஸ்டார்ட் பண்ணிடலாம். யார்க்காகவும் எதற்காகவும் நாம பயப்பட வேண்டியது இல்லை ஸார்."

"எனக்கு பயம் எல்லாம் கிடையாது நித்தி. டெல்லியில் இருந்து இப்போதைக்கு இந்த ஆபரேஷன் வேண்டாமேன்னு தகவல் தரும்போது நான் என்ன செய்ய முடியும்....? அயாம் ஹெல்ப்லஸ் .... நீங்க ரெண்டு பேரும் புறப்பட்டு வந்துடுங்க.... இல்லேன்னா பாண்டிச்சேரி போய் ஒருநாள் ஜாலியாய் ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்க... லீவ் சாங்க்‌ஷன் பண்ணிடறேன்...."

"ஆஹா... இப்ப நீங்க ரெண்டாவதாய் ஒண்ணு சொன்னீங்களே அது ஓ.கே. ஸார்..."

"ரெண்டு பேரும் சாயந்தரம் அறு மணிக்குள்ளே திரும்பிடுங்க... ஏழு மணிக்கு ஐ.டி. ஆபீஸர்ஸ் மீட் ஒண்ணு ஏற்பாடு பண்ணப்பட்டிருக்கு... அந்த மீட்டிங்க்ல சில விஷயங்களை பத்திப் பேசப் போறோம்."

"சரியாய் ஆறு மணிக்கெல்லாம் சென்னையில் இருப்போம் ஸார்....!"

"ஹேவ் ஏ ஜாய்ஃபுல் டே..." மறுமுனையில் அருள் செல்போனை அணைக்க சாதுர்யா தன் செல்போனின் இணைப்பைத் துண்டித்து விட்டு நித்திலனை ஒரு தீப்பார்வை பார்த்தாள்.

நித்திலன் காரின் ஸ்டீரியங்கில் தாளம் போட்டுக் கொண்டே 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது' என்று பாடினான்.

"நித்தி .... உன்னோட வாயைக் கொஞ்சம் சாத்துறியா?"

"இதோ... சாத்திட்டேன்"

 

"நாம இப்போ பாண்டிச்சேரி போகப் போறதில்லை"

"போகப் போறதாய் நானும் சொல்லலையே...?"

"பின்னே... பாஸ் பாண்டிச்சேரிக்குப் போய் ஜாலியாய் ஒரு நாளை ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னப்ப 'ஆஹா'ன்னு சந்தோஷப்பட்டியே?"

"சந்தோஷப்பட்டதாய் யார் சொன்னது?"

"பின்னே?"

"சந்தோஷப்பட்ட மாதிரி நடிச்சேன்"

"நடிச்சியா?"

"ஆமா...."

"ஏன்?"

"அப்பத்தான் அவர் நம்புவார்....!"

"நித்தி.... நீ இப்ப என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியலை..."

"சாதுர்யா.... நாம இப்போ பாண்டிச்சேரி போறது இல்லை."

"சென்னை திரும்பறோமோ?"

"அதுவும் இல்லை...."

 

"அப்புறம்....?"

"ஆப்ரேஷன் ஆக்டோபஸை கண்டினியூ பண்றோம். நம்ம பாஸ் வேணுமின்னா மேலிடத்துக் கட்டளைக்குப் பணியலாம். நாம பணிய வேண்டியது இல்லை. பாஸ் நம்ம ரெண்டு பேர்க்கும் லீவு கொடுத்துட்டார். ஆனா ஸ்டில் வீ ஆர் ஆன் ட்யூட்டி. திட்டமிட்டபடி முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குள்ள நுழையறோம். ஆப்ரேஷன் ஆக்டோபஸில் நாம் என்னென்ன பண்ணனும்னு பாஸ் அருள் சொல்லியிருந்தாரோ அதையெல்லாம் கச்சிதமாய் செஞ்சு முடிக்கப் போறோம்....!"

சாதுர்யா நித்திலனை இமைக்காமல் பார்த்தாள். அவன் சிரித்தான். "இந்த பார்வைக்கு என்ன பொருள் என் பிரிய சகியே?"

"நி...த்...தி....!"

"சாதுர்யா! நீ ரொம்பவும் உணர்ச்சிவசப்படற மாதிரி தெரியுது. உன்னால பேச முடியலைன்னா பரவாயில்லை. ஒரு முத்தம் கொடுத்துடு.... அது டெபிட் கார்டாய் இருந்தாலும் பரவாயில்லை. கிரெடிட் கார்டாய் இருந்தாலும் பரவாயில்லை ஆல் கார்ட்ஸ் ஆர் வில் பி டேக்கன் ஹியர்"

சாதுர்யா தன் மென்மையான முஷ்டியால் அவனுடைய இடது கன்னத்தில் குத்தினாள்.

"நித்தி....! உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே இந்த தைரியம்தான்... நம்ம பாஸ் பண்ணை வீட்டுக்கு போக வேண்டாம்ன்னு சொன்னா அங்கே ஏதோ ஆபத்து இருக்குன்னு நூறு சதவீதம் நம்பலாம். ஆனா, நீ ரிஸ்க் எடுக்கிறே... உனக்கு பயமாய் இல்லை....?"

"நான் பயப்பட்டு ரொம்ப நாளாச்சு. அதாவது போன வருஷம் ஜூன் மாசம் ஏழாம் தேதி காலை 11.15 மணியிலிருந்து நான் பயப்படறதை விட்டுட்டேன்."

"ஏன் அன்னிக்கு என்ன நடந்தது?"

"அன்னிக்குத்தான் நீ என்னைப் பார்த்து நாம ரெண்டு பேரும் காதலிச்சா என்னடான்னு கேட்டே...!"

 

நித்திலன் சிரிப்போடு சொல்லிக் கொண்டிருக்க்ம்போதே காரின் கண்ணாடி கதவு வேகமாய்த் தட்டப்படும் சத்தம் கேட்டது.

"யாரது?"

திடுக்கிட்டு போனவர்களாய் இருவரும் உற்றுப் பார்த்தார்கள்.

ட்யூப்லைட்களின் வெளிச்சத்தில் அந்தப் பெண் தெரிந்தாள்.

இளம் பெண். வியர்த்து வழிந்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.

- தொடரும்...

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-4-306056.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 5

 

 

காரின் கண்ணாடிக் கதவை வெளியே இருந்தபடி அந்தப் பெண் வேகமாய்த் தட்டிக் கொண்டிருக்க, கார்க்குள் உட்கார்ந்திருந்த நித்திலனும் சாதுர்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"சாதுர்யா... அது யார்ன்னு தெரியலையே..?"

"யாராய் இருந்தா என்ன நித்தி.. மொதல்ல கண்ணாடிய இறக்கு, யாரு என்னான்னு கேளு..." கண்ணாடியை கீழே இறக்கினான் நித்திலன்.

அந்த இளம் பெண் பதறியபடி பார்வைக்குக் கிடைத்தாள்.

வியர்த்து வழியும் முகம்.

"ஸ...ஸ.... ஸார்.... ப்ளீஸ்....ஹெல்ப் மீ....."

"யார்... நீ.... என்ன ப்ராப்ளம் உனக்கு?"

"ஸார்... என் பேர் ரேகா. பிரச்சனை என்னான்னு அப்புறமாய் சொல்றேன்... நான் உங்க கார்க்குள்ளே ஏறி மறைஞ்சுக்கலாமா....? ஒரு பத்து நிமிஷ நேரம்தான்... அதுக்கப்புறம் நான் உங்களுக்கு தொந்தரவு தர மாட்டேன்.... என்னை ரெண்டு பேர் துரத்திட்டு வர்றாங்க"

"யா... யார்.....அவங்க...?"

"எ...எ....எல்லாமே சொ...சொல்றேன்....ஸார்... முதல்ல நான் கார்க்குள்ளே வந்துடறேன்... அவங்க வந்துட்டு இருக்காங்க"

"சரி ... உள்ளே வா....." நித்திலன் சொல்லிக் கொண்டே காரின் செண்ட்ரலைஸ்ட் லாக்கை விடுவித்தான்.

அவள் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு கிட்டத்தட்ட பாய்ந்து இருக்கைகளுக்கு கீழே இருந்த இடைவெளியில் ஒரு முயலைப் போல் உடம்பைக் குறுக்கி ஒளிந்து கொண்டாள். பெரிது பெரிதாய் மூச்சு வாங்கினாள்.

நித்திலன் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற போது சாதுர்யா அவனுடையத் தோளைத் தட்டி எதிர்புற ரோட்டைக் காட்டினாள்.

"நித்தி...! அங்க பாரு... மொதல்ல"

நித்தி பார்த்தான்.

சற்றுத் தொலைவில் இரண்டு பேர் ஓட்டமும் நடையுமாய் சுற்றும் முற்றும் பார்த்தபடி வேக வேகமாய் வந்து கொண்டிருந்தார்கள் ஒருவனின் கையில் ஏதோ ஓர் ஆயுதம் இடம் பிடித்து இருந்தது.

"அந்த இரண்டு பேரும் இந்தப் பெண்ணைத்தான் தேடிக்கிட்டு வந்துட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்...."

"அப்படித்தான் இருக்கணும்"

"இப்ப என்ன பண்ணலாம்?"

"மொதல்ல அவங்க என்ன பண்றாங்கன்னு அப்ஸர்வ் பண்ணலாம்."

சாதுர்யாவும் நித்திலனும் பரஸ்பரம் பேசிக் கொண்டே பதட்ட நடையோடு வந்து கொண்டிருந்த அந்த இரண்டு பேரையும் பார்த்தார்கள்.

சாதுர்யா குனிந்து கிசுகிசுப்பான குரலில் அந்த பெண்ணிடம் கேட்டாள்.

"உன் பேர் என்ன சொன்னே?"

"ரேகா..."

"ரேகா! கொஞ்ச தூரத்துல ரெண்டு பேர் வேகவேகமாய் வந்துகிட்டு இருக்காங்க. வேஷ்டியை மடிச்சு கட்டியிருக்காங்க. சிவப்புக் கலர் சர்ட் போட்டிருக்காங்க. உன்னை துரத்திட்டு வந்தது அவங்கதானே?"

"ஆமா அவங்கதான்...."

"சரி ... நீ மூச்சு காட்டாம அப்படியே இரு...," சொன்ன சதுர்யா நித்திலனை ஏறிட்டாள்.

"நித்தி! நீ காரை விட்டு இறங்கு. நான் காரோட பானட்டை ஓப்பன் பண்றேன். நீ காரை ரிப்பேர் பார்க்கிற மாதிரி பாவ்லா பண்ணு, அவங்க உன்கிட்டே ரேகாவைப் பத்தி விசாரிக்கிறாங்களான்னு பார்ப்போம்...!"

"இதுவும் நல்ல யோசனைதான்," நித்திலன் சொல்லிக் கொண்டே காரினின்றும் இறங்கினான். 'பானட்' க்ளிக் என்று விடுபட காரின் வாயைப் பிளந்தான். செல்போனின் 'டார்ச்' வெளிச்சத்தோடு குனிந்து உள்ளே பார்வையைப் போட்டபடி சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த அந்த இரண்டு பேர்களையும் கவனித்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் பக்கத்தில் வந்தார்கள். ஒருவன் கேட்டான். "கார்ல என்ன ப்ராப்ளம்?"

நித்திலன் இயல்பாய் பேசினான் "தெரியலை... திடீர்ன்னு ஸ்ட்ரக்காகி நின்னுடுச்சு. அதான் பார்த்துட்டிருக்கேன்..."

"கார் இங்கே எவ்வளவு நேரமாய் நின்னுட்டிருக்கு...?"

"ஏன்...?"

"ஒரு பொண்ணு இந்தப் பக்கம் ஓடி வந்தாளா?"

"பொண்ணா?"

"ஆமா.... சின்னவயசுப் பொண்ணு. இருபந்தஞ்சு வயசு இருக்கும்....!"

"அப்படியாரும் இந்தப் பக்கம் ஓடி வந்த மாதிரி தெரியலையே?"

"கார்க்குள்ளே இருக்கிறது யாரு?" ஒருவன் சாதுர்யாவைப் பார்த்திக் கொண்டே கேட்டான்.

"என்னோட ஒய்ஃப்"

"எங்கே போயிட்டு இருக்கீங்க...?" அவன் கேட்ட கேள்விக்கு நித்திலன் பதில் சொல்வதற்குள், சாதுர்யா காரினின்றும் இறங்கி அவர்களை நோக்கி வந்தாள். குரலை சற்றே உயர்த்தினாள்.

"அலோ.... உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்... எதுக்காக எங்ககிட்ட இப்போ இந்த போலீஸ் மாதிரியான விசாரணை....?"

"இதோ பாருங்கம்மா.... நாங்க காரணம் இல்லாமே உங்ககிட்டே விசாரணை பண்ணலை. இன்னிக்கு எக்ஸ். சி.எம். முகில்வண்ணன் அய்யாவோட மணிவிழா. இந்த மணிவிழாவுக்கு நெருக்கமான முக்கியமான நபர்களுக்கு மட்டும்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கு... அழைப்பிதழ் இல்லாமே யாரும் உள்ளே போக முடியாது. அப்படி யாராவது போக முயற்சி பண்ணினால் அவங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு எங்களோடது. அரைமணி நேரத்துக்கு முந்தி ஒரு பைக் இந்த ஏரியாவுக்குள்ளே வந்தது. ஒரு பொண்ணை அதோ அந்த சவுக்குத் தோப்பு இருட்டுல ட்ராப் பண்ணிட்டு போயிடுச்சு. பைக்ல வந்த ஆள் யார்ன்னு தெரியலை. பொண்ணை மடக்க முயற்சி பண்ணினோம். அவ எங்களைப் பார்த்ததுமே ஓட ஆரம்பிச்சா... நாங்க துரத்தினோம். அவ வேகத்துக்கு எங்களால ஓட முடியலை. ஆனா இந்த பக்கமாய்த்தான் ஓடி வந்தா..."

"அப்படி ஓடி வந்து இருந்தா எங்களோட பார்வைக்கு பட்டிருப்பாளே... நாங்க யாரையும் பார்க்கலை..."

"சரி.... நீங்க ரெண்டு பேரும் இந்த நேரத்துக்கு எங்கே போய்கிட்டு இருக்கீங்க...?"

ஒருவன் சாதுர்யாவிடம் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அந்த சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார்கள்.

ஹெட்லைட் வெளிச்சத்தோடு இரண்டு பைக்குகள் இரைச்சலாய் வந்து நின்றன. பெண்ணைத் தேடி வந்தவர்கள் அவர்களை நோக்கிப் போனார்கள். இரண்டு பேர்வழிகளில் ஒருவன் கேட்டான்.

"என்ன முருகேஷ்.... அவ கிடைச்சாளா?"

"இல்லையே.... சவுக்குத் தோப்பு பூராவும் பைக்கை ஓட்டிப் பார்த்தோம், எப்படியோ தப்பிச்சுட்டா....!"

"நாங்களும் ரோட் சைட் பூராவும் பார்த்துட்டோம். கண்ணுல படலை. பட்டிருந்தா இந்நேரம் ரெண்டு துண்டாக்கி புதைச்சிருப்போம்."

"ஜெயபால்.... அவ மூஞ்சியை நீ பார்த்தியா?"

"பார்க்கலை..."

"முருகேஷ்.... நீ...?"

"நானும் பார்க்கலை"

"சரி ... அது யாரோட கார் அது...?"

"தெரியலை... கார்ல வந்தவங்க கணவன் மனைவி. கார்ல ஏதோ ரிப்பேர்ன்னு சொல்லி பார்த்துட்டு இருக்காங்க"

"அந்தப் பொண்ணைப் பத்தி அவங்க கிட்ட விசாரிச்சியா?"

"ம்... விசாரிச்சேன். யாரும் இந்தப் பக்கம் ஓடி வரலைன்னு சொல்றாங்க...!"

"அவங்க எங்கே போறாங்கன்னு கேட்டியா...?"

"கேட்டுகிட்டு இருந்தேன்... அதுக்குள்ளே நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்க..."

"வா... கேட்டுருவோம்..... அய்யாவோட மணிவிழா ஃபங்க்‌ஷன் நடந்து முடிகிற வரைக்கும் யாரையும் நம்ப முடியாது."

நான்கு பேரும் நித்திலன், சாதுர்யாவை நெருங்கினார்கள். சாராய நெடியோடு ஒருவன் கேட்டான்.

"கார்ல ரெண்டு பேர் மட்டும்தானா?"

"ஆமா..."

"எங்கே போறீங்க...?"

"எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் சஷ்டியப்த பூர்த்தி ஃபங்க்‌ஷனுக்கு....!"

"எ...எ....என்னது ... அய்யாவோட ஃபங்க்‌ஷனுக்கா?"

"ஆமா...."

"அழைப்பிதழ் இருக்கா....?"

"இருக்கு...!"

"காட்டு...!"

முகத்தில் எந்தவிதமான சலனமும் இன்றி நித்திலன் சாதுர்யாவைப் பார்க்க, அவள் காரை நோக்கிப் போனாள். அதே விநாடி...

நான்கு பேர்களில் ஒருவன் குரல் கொடுத்தான். "ஒரு நிமிஷம்"

"என்ன...?"

"கார்ல நீங்க ரெண்டு பேரும் மட்டும்தானே வந்தீங்க?"

"ஆமா..."

"கார்ல வேற யாரோ இருக்கிற மாதிரி தெரியுதே?"

"இல்லையே?"

"யாரோ இருக்காங்க..... கார் இப்ப லேசா அசைஞ்ச மாதிரி இருந்தது....!" சொன்ன அந்த பைக் பேர்வழி காரை நோக்கிப் போனான்.

"இரு.... நானும் வர்றேன்....!" அவனோடு இன்னொருவனும் சேர்ந்து கொண்டான்.

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter1-307052.html

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம்- அத்தியாயம் 6

 

அந்த இருவரும் காரை நோக்கிப் போக நித்திலனும், சாதுர்யாவும் ஒருவரை ஒருவர் பதட்டப் பார்வைகளால் நனைத்துக் கொண்டார்கள்.

அவர்களை நோக்கி நடந்தபடி சாதுர்யா குரல் கொடுத்தாள்.

"கார்ல யாரும் இல்லை..."

"பார்த்துடலாம்...." சொல்லிக் கொண்டே ஒருவன் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். பின்னால் நின்றிருந்தவன் கேட்டான்.

"என்ன ?"

"உள்ளே யாரும் இல்லை..."

"கார் லேசாய் அசைஞ்ச மாதிரி இருந்ததே?"

"ஆமா... நானும் நோட் பண்ணினேன்"

"டிக்கியை ஓப்பப் பண்ணச் சொல்லு."

"அவங்களை என்ன கேட்கிறது.... நானே ஓப்பன் பண்றேன்" சொன்னவன் ட்ரைவிங் சீட்டுக்கு அடியில் இருந்த டிக்கியின் லாக்கரை விடுவித்தான்.

 

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 6

டிக்கி உயர்த்தப்பட்டது.

உள்ளே டூல் செட்டும், ஸ்டெப்னி டயரும் தட்டுப்பட ஆத்திரத்தோடு சாத்தினான். நித்திலன் சாதுர்யா இரண்டு பேரும் பரஸ்பரம் கண்களால் பேசிக் கொண்டார்கள்.

"அந்தப் பொண்ணு கார்லதானே இருந்தா?"

"ஆமா"

"காணோம்"

"எப்படின்னு தெரியலையே?"

பைக் பேர்வழிகளில் ஒருவன் நித்திலனுக்குப் பக்கத்தில் வந்தான்.

"அய்யாவோட பொறந்தநாளுக்குப் போறதாய் சொன்னீங்க இல்லையா?"

"ஆமா...."

"அழைப்பிதழ் இருக்கா?"

"ம்... இருக்கு"

"காட்டுங்க"

நித்திலன் டாஷ்போர்டைத் திறந்து அழைப்பிதழை எடுத்துக் காட்டினான். அவன் பார்த்துவிட்டு கேட்டான்.

"அய்யாவுக்கு நீங்க சொந்தமா?"

"ஆமா..... ஆனா கொஞ்சம் தூரத்து சொந்தம்"

"உங்க பேரு....?"

"நித்திலன்"

"கார்ல என்ன ப்ராப்ளம்?"

"ட்ரான்ஸ்ஃபார்ம்ல ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. சரி பண்ணிட்டேன். நாங்க புறப்படலாமா.... இல்லை ... இன்னமும் என்கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள் பாக்கியிருக்கா?"

"நீங்க போகலாம்...."

அவர்கள் சொல்லிவிட்டு பைக்குகளில் ஏறி கிளம்பி போய்விட காரின் பானட்டைச் சாத்தினான் நித்திலன். சாதுர்யா அவனுடைய தோளைத் தொட்டாள்.

"நித்தி! ஆச்சர்யமில்லை?"

"எது... அந்தப் பொண்ணு ரேகா கார்ல இல்லாததைத்தானே சொல்றே?"

"ஆமா... அவ கார்ல இல்லைன்னு எனக்கு முன்னாடியே தெரியும்"

"என்னது தெரியுமா..... எப்படி...?"

"நான் பார்த்தேன்"

"பார்த்தியா.... எதை....?"

"அந்த ரேகா நம்ம காரோட அடுத்தப் பக்க டோரை சத்தம் வராதபடி திறந்துகிட்டு முட்டி போட்டு தவழ்ந்துகிட்டே போய் அதோ அந்த வீராணம் ஏரி காலத்து காலியான சிமெண்ட் குழாய்க்குள்ள செட்டில் ஆயிட்டதை...!"

சாதுர்யா பிரமிப்போடு பார்த்தாள்.

"அந்த குழாயா?"

"ஆமா...." நித்திலன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரேகா அந்த வீராணம் குழாயிலிருந்து மெல்லத் தலையை நீட்டினாள். சாதுர்யா அவளை நோக்கிப் போய் கை கொடுத்து தூக்கி விட்டாள். ரேகா மூச்சு வாங்கிக் கொண்டே கேட்டாள்.

"அவங்க போயிட்டாங்களா?"

"போயிட்டாங்க..... வா.... இப்படி வந்து மறைவாய் உட்காரு.... இனிமே அவங்க வரமாட்டாங்க...!"

"உங்க உதவிக்கு ரொம்பவும் நன்றி.... உங்க காரை மட்டும் நான் பார்க்காமே இருந்திருந்தா அவங்ககிட்டே நான் மாட்டி இந்நேரம் உயிரை விட்டிருப்பேன்"

"அவங்க ஏன் உன்னைத் துரத்தணும்?"

"அது... வந்து...." என்றவள் பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உதடுகளை ஈர்ப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

"ஸ்கை வ்யூ' டிடெக்டிவ் ஏஜென்ஸியைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?"

"பெசன்ட் நகர்ல இருக்கே.... அதுதானே?"

"ஆமா.... அங்கதான் நான் ஸ்பை ஏஜெண்டாய் ஒர்க் பண்றேன். நேத்திக்கு எதிர்கட்சி பிரமுகர் ஒருத்தர் ஒரு அசைன்மெண்ட் கொடுத்தார். அந்த அசைமெண்ட்படி எக்ஸ் சிஎம் முகில்வண்ணனின் அறுபதாவது பிறந்த தின விழா நிகழ்வுகளை வீடியோவாய் எடுத்துத் தர வேண்டிய பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. நானும் என்னோட கம்பெனி கலீக் அகிலன் என்கிற ஒருத்தரும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாய் எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் பண்ணை வீட்டுக்குப் பக்கத்தில் போனோம். அழைப்பிதழ் இல்லாமல் யாரும் உள்ளே போகமுடியாதுன்னு தெரிஞ்சதும் பண்ணை வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற சவுக்குத் தோப்பு வழியாய் நான் மட்டும் உள்ளே போக முடிவு பண்ணினேன். அகிலன் என்னை சவுக்குத் தோப்புக்குள்ளே இறக்கிவிட்டு பைக்ல போயிட்டார். இதை முகில்வண்ணனோட ஆட்கள் நாலு பேர் பார்த்துட்டாங்க. ரெண்டு பேர் என்னையும் ரெண்டு பேர் அகிலனையும் துரத்த ஆரம்பிச்சாங்க..... நான் காலேஜ் டேஸ்ல கோல்ட் மெடல் வாங்கின அத்தலடிக். மூணு கிலோமீட்டர் என்னைத் துரத்திட்டு வந்தாங்க. என்னோட வேகத்துக்கு அவங்களால ஈடு கொடுக்க முடியலை. அகிலன் அந்த பைக் பேர்வழிகள்கிட்டேயிருந்து எப்படியோ தப்பிச்சுட்டார்ன்னு நினைக்கிறேன். உங்க கார் மட்டும் என்னோட பார்வையில் படாமே இருந்திருந்தா என்னால தப்பிச்சிருக்க முடியாது...."

சாதுர்யா ரேகாவிடம் கேட்டான்.

"சரி.... உன்னோட அடுத்த மூவ் என்ன...?"

"எதிர்கட்சி பிரமுகர் கொடுத்த இந்த அசைன்மெண்டை கண்டினியூ பண்ணினால் நான் வெட்டுப்பட்டுத்தான் சாகணும். நூற்றுக்கும் மேற்பட்ட முகில்வண்ணனோட ஆட்கள் முதுகில அரிவாளை சொருகிகிட்டு திரிஞ்சுட்டு இருக்காங்க... கையில் அழைப்பிதழ் இருந்தாலும் ஒரு நபரை அவங்க சந்தேகப்பட்டுட்டா கேள்விகளால துளைச்சு எடுத்துடறாங்க. இனிமே அந்த இடத்துக்கு நான் போக முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ரோட்ல பஸ் போக்குவரத்து ஆரம்பமாயிடும். ஏதாவது ஒரு பஸ்ஸைப் பிடிச்சு நான் சென்னை போயிடுவேன்.'

"உன் கூட வந்த அந்த அகிலனுக்கு போன் பண்ணி வரச்சொல்லு"

"நான் போன் பண்ணி பேசிட்டேன். ஆனா அவர் வரமாட்டார். டிடெக்டிவ் ஏஜென்ஸி ரூல்ஸ்படி ஒரு ஆபத்தான இடத்துல ரெண்டு பேர் மாட்டிகிட்டா ஒருத்தராவது தப்பிச்சடணும். மாட்டிகிட்ட நபரை காப்பாற்ற தப்பிச்ச நபர் அந்த இடத்துக்கு போகக் கூடாது. மாட்டிகிட்ட நபர் அவரோட சொந்த புத்திசாலித்தனத்தால தப்பிச்சு வரணும்....!"

"டிடெக்டிவ் ஏஜென்ஸியில் இப்படியொரு ரூல் இருக்கா ?"

"இது மாதிரியான ரிஸ்கி ரூல்ஸ் நிறைய இருக்கு,.... ஆனா ரிஸ்க் எடுத்து ஒரு அசைன்மெண்டை முடிச்சுக் கொடுத்தா லட்சக்கணக்கில் ஃபீஸ் கிடைக்கும். அதிலும் பார்ட்டி அரசியல்வாதியாய் இருந்துட்டா ஒரு கோடி ரூபாயைக் கூட ஒருநாள் வருமானமாய் பார்த்துடலாம்!"

நித்திலனும் சாதுர்யாவும் ரேகாவை பிரம்மிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் பரபரத்தாள்.

"அதோ! ஒரு பஸ் வருது... நான் கிளம்பறேன். நீங்க பண்ணின உதவிக்கு என்னோட நன்றி."

இருவரும் திரும்பி பார்த்தார்கள். 'பாண்டிச்சேரி டூ சென்னை' பெயர்பலகை எலக்ட்ரானிக் புள்ளிகளில் மின்ன அந்த ஸ்டேட் பஸ் வேகமாய் வந்து கொண்டிருந்தது.

ரேகா ஓடிப் போய் சாலையின் குறுக்கே நின்று கையைக் காட்ட பஸ் நின்றது. ஏறிக்கொண்டு ஜன்னல் வழியே கையசைத்தாள்.

பஸ் புறப்பட்டு தங்கள் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த நித்திலனும் சாதுர்யாவும் ஒரு சின்ன கலக்கத்தோடு காருக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

"நித்தி"

"ம்"

"என்ன பண்ணலாம்?"

"முகில்வண்ணனோட பண்ணை வீட்ல கெடுபிடிகள் நிறைய இருக்கும் போலிருக்கே...!"

"சென்னைக்கு போயிடலாம்ன்னு சொல்றியா?"

"இன்னொரு தடவை அப்படி சொல்லாதே. முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குள்ளே நாம நுழையறோம். எந்த ஒரு வேலையை முடிக்க வந்தோமோ அதை முடிக்கிறோம்."

"நுழையறது முக்கியமில்லை. ஒரு நூலிலை பிசகினாலும் நம்ம ரெண்டு பேரையும் நாலு துண்டாக்கி சவுக்கு மரத் தோப்புக்குள்ளே ஆழமாய் குழி தோண்டி புதைச்சுடுவாங்க....!ட

"அப்படீன்னா நீ ஒரு காரியம் பண்ணு"

"என்ன...?"

"அந்த ரேகா பஸ்ஸைப் பிடிச்சு சென்னைக்கு போன மாதிரி நீயும் போயிடு...."

நித்திலனின் பின்னத்தலையைத் தட்டினாள் சாதுர்யா.

"எனக்கு பயம்ன்னு உன்கிட்டே சொன்னேனா?"

"பின்னே நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்?"

"இதோ பார் நித்தி.... முகில்வண்ணன் மாதிரியான ஒரு மோசமான அரசியல்வாதியை இந்த தமிழ்நாடு என்னைக்குமே பார்த்தது இல்லை. அவரோட மகன் செந்தமிழும் சரி, மருமகன் மணிமார்பனும் சரி பஞ்சமாபாதகங்களுக்கு அஞ்சாத ஆட்கள். சென்னையில் இருக்கிற பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படை அமைப்புகளை ஒண்ணாய் சேர்த்து ஒரு யூனியனை ஸ்டார்ட் பண்ணி அந்த யூனியனுக்குத் தலைவராய் இருக்கிற ஒரு எக்ஸ் சி.எம்மை நம்ம நாட்ல மட்டும்தான் பார்க்க முடியும்."

"நீ இப்ப என்ன சொல்ல வர்றே சாதுர்யா?"

"அந்த ரேகா என்ன சொன்னாளோ அதைத்தான் நான் சொல்லப்போறேன். முகில்வண்ணனோட பண்ணை வீட்ல நாம மாட்டிக்கிற மாதிரியான ஒரு நிலைமை ஏற்பட்டா நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தப்பிச்சுடணும். அது நீயாக இருந்தாலும் சரி. என்னைக் காப்பாத்த நீயோ, உன்னைக் காப்பாத்த நானோ முயற்சி எடுக்கக் கூடாது."

"சா.... து...ர்...யா"

"என்ன?"

"இப்ப எனக்கு கொஞ்சம் பயம் வருது...!"

"அந்தக் கொஞ்ச பயம் நமக்கு அவசியம்... நித்தி! நீ காரை எடு...!"

கார் நகர்ந்தது.

சிறிது சிறிதாய் வேகம் பிடித்து முகில்வண்ணனின் பண்ணை வீட்டை நோக்கிப் பறந்தது.

- தொடரும்...

https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-6-307489.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 7

 

நித்திலனும் சாதுர்யாவும் முகில்வண்ணனின் பண்ணை வீட்டை நெருங்கிக் கொண்டு இருந்தார்கள். சாலையின் இரண்டு பக்கமும் பத்தடிக்கு ஒன்று வீதம் கட்டப்பட்ட ட்யூப்லைட்டுகள் ஃப்ளக்ஸ் பேனர்களோடு பிடிவாதமாய் வந்து கொண்டிருந்தன.

தெரு ஓரங்களில் வெளியூர் கட்சித் தொண்டர்கள் கொடி கட்டிய வேன்களில் க்வார்ட்டர்க்கும் கோழி பிரியாணிக்கும் விசுவாசமாய் கோஷங்கள் போட்டபடி காத்துக் கொண்டிருந்தார்கள்.

 
Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 7

ஃப்ளக்ஸ் பேனர்கள் நிறம் நிறமாய் பொய் பேசின.

வாழும் சரித்திரமே!

எதிரிகளின் சிம்ம சொப்பனமே!

முக்கனிச் சாறே!

மூவேந்தர்களின் ஒட்டு மொத்த உருவே!

அரசியலின் அதிசயமே! நீ நினைத்தால் கங்கையும் இணையும்.

அந்த இமயமும் இரண்டாய் பிரியும்.

நித்திலன் காரை ஓட்டிக் கொண்டே சிரித்தான், "சாதுர்யா...! ஃப்ளக்ஸ் போர்டு வாசகங்களைப் படிச்சியா...?"

"ம்... படிச்சிட்டுத்தான் வர்றேன். ஒவ்வொரு போர்டையும் படிக்கும் போது ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் பார்த்த மாதிரி இருக்கு. எப்படி இவங்களால இப்படியெல்லாம் எழுத முடியும்..? ரெண்டு தடவை சி.எம்மாய் இருந்த முகில்வண்ணன் எப்படிப்பட்ட ஆளுன்னு எல்லார்க்கும் தெரியும். அவர்க்கு சொத்து எப்படி சேர்ந்ததுன்னும் தெரியும். இருந்தாலும் இந்த மாதிரியான ஆட்கள் ஏதோ ஒரு வகையில் ஜெயிச்சுட்டுத்தான் இருக்காங்க...!"

"காரணம் நம்ம மக்கள்தான்... நல்ல அரசியல்வாதிகளை இப்போதும் அவங்களால தேர்ந்து எடுக்க முடியும். ஆனா முடியாது. காரணம் ஒரு காலத்தில் வாக்குச் சீட்டு கூர்மையான ஒரு ஈட்டி மாதிரி இருந்தது. ஆனா, இப்போ அது ரூபாய் நோட்டால செஞ்ச ஏரோவாய் மாறிடுச்சு...!"

"நித்தி...! தமிழ்பட ஹீரோ மாதிரி பஞ்ச் டயலாக் பேசி நாம பார்க்க வந்த வேலையைக் கோட்டை விட்டுடாதே.... பண்ணை வீட்டை நெருங்கிட்டோம்.!"

நித்திலன் குனிந்து பார்த்தான்.

முகில்வண்ணனின் பண்ணை வீடு மின் விளக்குகளால் மொய்க்கப்பட்டு சொர்க்கபுரி போல் தெரிந்தது. இரண்டு அடுக்குகளில் வளையம் போட்டிருந்த போலீஸார், வந்து கொண்டிருந்த கட்சி பிரமுகர்களை தனிவழியில் அனுப்பிக் கொண்டு இருக்க மற்றவர்களை மெட்டல் டிடெக்டர் உடம்பு முழுவதும் முகர்ந்து பார்த்துவிட்டு உள்ளே அனுப்பியது.

"சாதுர்யா! உள்ளே போக கெடுபிடிகள் பலமாய் இருக்கும் போலிருக்கே...?"

"நம்மகிட்டதான் முறையான இன்விடேஷன், பேட்ஜும் இருக்கே...?"

"இருந்தாலும் இருதயம் உதறுது ... உன்னையும் என்னையும் ஐ.டி. பீப்பிள்ன்னு யாராவது ஸ்மெல் பண்ணிட்டா இன்னிக்குத்தான் நம்ம வாழ்க்கையோட கடைசி நாள்...."

"ஆஹா...! இப்படிப்பட்ட ஒரு த்ரில்லான நாளைத்தான் இத்தனை நாளாய் எதிர்பார்த்துட்டிருந்தேன்... நித்தி...!"

"சாதுர்யா! உனக்கு கொஞ்சம் கூட பயமாய் இல்லையா?"

"நீ இருக்கும் போது எனக்கு என்னடா பயம்...? உன்னோட பலம் என்னான்னு உனக்குத் தெரியாது. எனக்குத்தான் தெரியும்."

"அதானே பார்த்தேன்" சொல்லிக் கொண்டே நித்திலன் காரை பார்க்கிங்கில் நிறுத்தினான். இறங்க முயன்ற சாதுர்யாவைத் தடுத்தான்.

"ஒரு நிமிஷம் சாதுர்யா"

"என்ன?"

"அந்த டேஷ் போர்டை ஓப்பன் பண்ணு," அவன் சொல்ல சாதுர்யா முகம் நிறைய குழுப்பத்தோடு காரின் டேஷ்போர்டைத் திறந்தாள்.

"எதுக்கு?"

"உள்ளே என்ன இருக்குன்னு பாரு"

பார்த்தான்.

ஒரு சிறிய பாலிமர் பெட்டி தீப்பெட்டி சைஸில் தெரிந்தது. எடுத்து திறந்து பார்த்தாள். உள்ளே அவரை விதை வடிவத்தில் அந்த கறுப்பு நிற வில்லைகள்

தெரிந்தது.

 

"நித்தி ... என்ன இது...?"

"இன்விஸிபிள் ஹியரிங் எய்ட்..."

"என்னது... ஹியரிங் எய்டா....?"

"ஆமா.... உனக்கு ஒண்ணு... எனக்கு ஒண்ணு"

"நமக்கென்ன காது செவிடா...?"

நித்திலன் புன்னகையொன்றை தன் உதடுகளால் பரவ விட்டான். சாதுர்யா எரிச்சலாகி முறைத்தாள்.

"நித்தி! அந்த மர்மயோகி புன்னகைக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது... இது எதுக்கு நமக்கு?"

"சாதுக்குட்டி! இது ஹியரிங் எய்ட் கிடையாதுடா"

"பின்னே"

"மினியேச்சர் சி.சி.டி.வி. காமிரா... இதை காதுக்குள்ளே ஃபிக்ஸ் பண்ணிகிட்டா டிவைஸ் மாதிரியே தெரியாது. நம்ம காதோட துவாரம் மாதிரிதான் தெரியும். இப்ப பாரு...," சொன்ன நித்திலன் அந்த அவரை விதை வடிவத்தில் இருந்த டிவைஸை எடுத்து வலது காதின் துவாரத்தில் பொருத்திக் கொண்டான். சாதுர்யாவுக்கு காதைக் காட்டினான்.

"ஏதாவது வித்தியாசமாய் தெரியுதா?"

"ஆஹா .... எங்கடா பிடிச்ச இதை...?"

"கோலாலம்பூரிலிருந்து என்னோட ஃப்ரண்ட் கிருஷ்ணா அனுப்பி வெச்சான்."

"நீ சொல்லவேயில்லை...!"

"இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் இதுமாதிரியான விஷயங்கள் வெளியே வரணும். இந்தா நீயும் எடுத்து ஃபிக்ஸ் பண்ணிக்கோ... மொதல்ல லேசா உறுத்துற மாதிரி இருக்கும். பிறகு சரியாயிடும்."

பிரமித்துப் போயிருந்த சாதுர்யா அந்த டிவைஸை எடுத்து வலது காதின் துவாரத்தில் வைக்க அது சரியாய் பொருந்திக் கொண்டது.

"நித்தி அற்புதம், எனக்கே அளவெடுத்து பண்ணின மாதிரி இருக்கு"

"இந்த விநாடியில் இருந்து அது ஒரு சி.சி.டி.வி. காமிரா மாதிரி ஒர்க் பண்ண ஆரம்பிச்சுடும். நம்ம செல்போன் காமிராக்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை....! என்ன சாது... தமிழ்பட ஹீரோயின் மாதிரி அப்படியொரு ரொமான்ஸ் லுக் விடறே... டூயட் பாடணும் போல் இருக்கா....!"

"நித்தி... நீ பார்க்கிறதுக்கு சுமாராய் இருந்தாலும் கூட உன்னை நான் ஏன் காதலிச்சேன் தெரியுமா... உன்கிட்டே இருக்கிற ஒரு விதமான புத்திசாலித்தனமான கெட்டிக்காரத்தனம்...."

"அது உன்கிட்ட இல்லேன்னு தெரிஞ்சுதான் நானும் உன்னைக் காதலிச்சேன். காரைவிட்டு இறங்கி ட்யூட்டியைப் பார்ப்போம்."

இருவரும் காரை விட்டு இறங்கினார்கள். ஆர்ப்பாட்டமாய் அலங்கரிக்கப்பட்டு இருந்த முகப்பு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வாயிலை நெருங்கும் முன்பாகவே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மறித்தார்.

"இன்விடேஷன் ப்ளீஸ்"

காட்டினார்கள். வாங்கி சரி பார்த்தவர் வாசலின் இரண்டாவது கேட்டை நோக்கி கைகாட்டினார்.

"அங்கே போய் வெரிஃபை பண்ணி சீல் போட்ட பின்னாடி நீங்க உள்ளே போகலாம்"

நித்திலனும் சாதுர்யாவும் வாசலின் இரண்டாவது கேட்டை நோக்கி நகர்ந்தார்கள். சாதுர்யா முனகினாள்.

"ஏர்போர்ட் இமிக்ரேஷன் ரேஞ்சுக்கு செக்கிங் இருக்கும் போலிருக்கே....நித்தி"

"மடியில் கனம். அதுதான் பயம்..."

இரண்டாவது கேட்டில் க்ரே நிற சபாரியில் தடித்தடியாய் நான்கு பேர் நின்றிருந்தார்கள். எஃக்கை உருக்கி வார்த்த மாதிரி உடம்பு வாகு.

மெளனமான இரண்டு நிமிஷ அழைப்பிதழ் பரிசோதனைக்குப் பிறகு முத்திரை குத்தப்பட்டது. மண்டபத்தில் மூன்றாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. இருவரும் நிம்மதி பெருமூச்சொன்றை சத்தம் இல்லாமல் வெளியேற்றியபடி மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்.

ஒரு ஐம்பதடி நடந்து இருப்பார்கள்

நித்திலனின் இடது தோள்பட்டையின் மேல் ஒரு கை விழுந்தது. கழுத்து எலும்பு நொறுங்கிவிடும் அளவுக்கு கனம் தெரிந்தது.

மூச்சுத் திணறிப் போய் திரும்பினான் நித்திலன்.

அந்த நடுத்தர வயது நபர் ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்தில் நின்றிருந்தார். அரசியல்வாதிகளின் யூனிஃபார்மான வெள்ளை சர்ட் வெள்ளை வேஷ்டியில் தெரிந்தார். முகத்தின் முப்பது சதவீத பரப்பை மீசைக்கு குத்தகைக்கு எடுத்திருக்க, நேற்றிரவு குடித்த சீமைச்சாராயம் சிவப்பேறிய கண்களில் தெரிந்தது. ஒரு பூசணிக்காயைத் திருடி வயிற்றுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டவர் போல் தொந்தியை வளர்த்து வைத்திருந்தார்.

அவருடைய கை இன்னமும் நித்திலனின் இடது தோள்பட்டையை அசுரத்தனமாய் பிடித்திருக்க, ஒரு கோணல் சிரிப்போடு சொன்னார்.

"நீ எல்லாரையும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. இந்த கஜபதியை யார்ன்னு நினைச்சே!"

கல்லோடு கல் உரசிய தினுசில் அவர் பேச நித்திலன் உறைந்தான். காதில் பொருத்தியிருந்த ஹியரில் எய்ட் அவர் உலுக்கிய உலுக்கலில் கழன்று விழுந்தது.

- தொடரும்...

https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-7-jan-17-308605.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 8

 

நித்திலனும் சாதுர்யாவும் அடிவயிற்றில் அமிலம் சுரந்து நிலை குலைந்து போனவர்களாய் தங்களுக்கு எதிரே ஒரு மினி ராட்சஸனைப் போல் நின்றிருந்த அந்த கஜபதியை கலவர விழிகளோடு பார்த்தார்கள்.

நித்திலனின் தோள்பட்டையை இன்னமும் இறுக்கமாய் பிடித்து அழுத்திய அவர் தங்கப்பல் ஒன்று இடம் பிடித்து இருந்த தன்னுடைய பல்வரிசையைக் காட்டிச் சிரித்தார்.

"என்ன தம்பி... உங்க அப்பா முத்துப்பாண்டியன் உன்னை ஃபங்க்‌ஷனுக்கு அனுப்பிட்டு தன்னோட சுயமரியாதையை தக்க வெச்சுகிட்டார் போலிருக்கு...!"

நித்திலன் மனசுக்குள் ஓர் எச்சரிக்கை போஸ்டர் அவசர அவசரமாய் பசை போட்டு ஒட்டப்பட்டது.

"இந்த அரசியல் வெள்ளைச்சட்டை ராத்திரி குடித்த விஸ்கியின் போதை தெளியாமல் யாரோ ஒரு முத்துப்பாண்டியனை என்னுடைய அப்பாவார் நினைத்துக் கொண்டு பேசுகிறார்."


"இந்த அரசியல் வெள்ளைச்சட்டை ராத்திரி குடித்த விஸ்கியின் போதை தெளியாமல் யாரோ ஒரு முத்துப்பாண்டியனை என்னுடைய அப்பாவார் நினைத்துக் கொண்டு பேசுகிறார்."

முதுகில் ஒரு தட்டு விழுந்தது.

"என்ன தம்பி.... அப்படி பார்க்கிறே... நீ இங்கே யாரை வேணும்ன்னாலும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது...."

"அது வந்து...." "இதோ பார் தம்பி.... உங்கப்பாவுக்கு பத்திரிக்கை அனுப்பும் போதே முகில்வண்ணன் என்கிட்டே 'முத்துபாண்டியன் வரமாட்டார். ... அவர் அவரோட வீட்டிலிருந்து யாரையாவது ஒருத்தரையாவது அனுப்பி வைப்பார்'ன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியேதான் நடந்திருக்கு.... உங்கப்பாவுக்கு ரோஷம் அதிகமாய் இருந்தாலும் பாசம் உள்ள மனுஷன்.... அதான் தனக்கு வர மனசில்லேன்னாலும் உன்னையும் உன் கூட தன்னோட மருமகளையும் அனுப்பி வெச்சிருக்கார். உங்கப்பாவை ரெண்டு வருஷத்துக்கு முந்தி கட்சி மாநாட்டில் பார்த்தது. அப்ப அவர் கூட நீயும் இருந்தே. இந்த சுருட்டை முடி க்ராப் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு...."

அந்த கஜபதி பேசிக் கொண்டே போக நித்திலனின் பார்வை கீழே விழுந்திருந்த இன்விஸிபிள் 'ஹியரிங் எய்ட்' நோக்கி போயிற்று. அதைக் கவனித்துவிட்ட கஜபதி கேட்டார்.

"அது என்ன தம்பி கறுப்பா....?"

"ஹியரிங் எய்ட்"

"செவிட்டு மெஷினா...?"

 

"ஆ...ஆமா...." சொல்லிக்கொண்டே அதை குனிந்து எடுத்து பொருத்திக் கொண்டான்.

"என்ன தம்பி! இந்த சின்ன வயசிலேயே காது கேட்காத பிரச்சனையா?"

"இல்லை... காதுக்குள்ளே ஒரு சின்ன கட்டி. ஒரு ரெண்டு மாசம் இதை போட்டுகிட்டு இருந்தா அது சரியாயிரும்ன்னு டாக்டர் சொன்னார்."

"அப்படியா... சரி... வாங்க...!"

நித்திலன் திகைத்து போனவனாய் "எங்கே?" என்றான்.

"தலைவரைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு போயிடலாம்...."

"அவரை எதுக்கு பார்க்கணும் வேண்டாமே!" நித்திலன் குரலை இழுத்தான்.


"அது மரியாதை இல்லை தம்பி... முத்துப்பாண்டியன் தன்னோட மகனையும் மருமகளையும் ஃபங்க்‌ஷனுக்கு அனுப்பி வெச்சிருக்கார்ன்னு தலைவர்கிட்டே சொன்னால் அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ரெண்டு பேர்க்கும் மத்தியில் இருக்கிற கொஞ்ச நஞ்சம் பகையும் போயிடும்..."

"அது வந்து...."

"அப்பா தலைவரை பார்க்க வேண்டாம்ன்னு சொன்னாரா?"

"அந்த மாதிரியெல்லாம் அவர் சொல்லல"

"அப்புறம் என்ன... வாங்க தம்பி..." சொல்லிக்கொண்டே அவர் முன்னால் நடக்க ஆரம்பித்துவிட வேறு வழியில்லாமல் நித்திலனும் சாதுர்யாவும் அவரை பின் தொடர்ந்தார்கள். சாதுர்யா நித்திலனின் காதருகே மெல்ல முணுமுணுத்தாள்.

 

"நித்தி...!"

"என்ன?"

"வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழப்போறோம்."

"பயப்படாதே.... நான்தான் முத்துப்பாண்டியனோட மகன்னு நினைச்சு கூட்டிடுப் போறார். இது நமக்கு ப்ளஸ் பாயிண்ட்தானே?"

"எப்படி ப்ளஸ் பாயிண்ட்ன்னு சொல்றே...? ஒரு வேளை அந்த முத்துப்பாண்டியனே இந்த ஃபங்க்‌ஷனுக்கு வந்துட்டா...?"

"நீ வேற வயித்தைக் கலக்காதே.... எப்படியோ உள்ளே வந்துட்டோம். என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம்...."

முன்னால் போய்க் கொண்டிருந்த நபர் திரும்பி நின்று குரல் கொடுத்தார். "சீக்கிரம் வாங்க... தலைவர் ஃபங்க்‌ஷனுக்கு போயிடப்போறார்....!"

 

இருவரும் வேக நடை போட்டார்கள்.

உள்ளே போகப் போக பண்ணை வீடு ஏதோ ஒரு 'சினிமா செட்' போல் பிரம்மாண்டம் காட்டியது.

பெரிய பெரிய தேக்குமரத்தூண்கள் பாலீஷ் ஏற்றப்பட்டு கண்ணாடி போல் பிம்பங்களைக் காட்ட, கூரைகளின் உச்சியிலிருந்து லஸ்தர் விளக்குகள் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின. அந்த நீளமான ஹாலின் இரண்டு பக்கமும் நிறைய அறைகள். ஒவ்வொரு அறையும் கனமான பூட்டுகளோடு ரகசியம் காத்தன.

நித்திலன் தலையைச் சாய்த்து சாதுர்யாவிடம் கிசுகிசுத்தான்.

"எண்ணிட்டே...வா..."

"எதை...?"

"எத்தனை ரூம்ஸ் இருக்குன்னு"

"எண்ணிட்டேன்"

"எவ்வளவு"


"மொத்தம் 24 ரூம்.... வலது பக்கம் பனிரெண்டு இடது பக்கம் பனிரெண்டு. பண்ணை வீடு இவ்வளவு பெரிசாய் இருக்கும்ன்னு நான் நினைச்சே பார்க்கலை. இப்படி உள்ளே வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அந்த முத்துப்பாண்டியனுக்கு நன்றி."

"யார் அந்த முத்துப்பாண்டியன்?"

"யார்க்குத் தெரியும்.... ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் திகிலாகவும் இருக்கு..."

மறுபடியும் கஜபதி திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தார்.

"கொஞ்சம் சீக்கிரமாய் வா தம்பி... தலைவர் ஃபங்க்‌ஷன்ல போய் உட்கார்ந்துட்டார்ன்னு இன்னிக்கு சாயந்தரம் வரைக்கும் அவரை பார்க்க முடியாது...!"

"இதோ வந்துட்டோம்" நித்திலன் சொல்லிக் கொண்டே சாதுர்யாவோடு அவரைப் பின் தொடர்ந்தான்.

----------

முகில்வண்ணனின் அறை.

அவர்க்கு முன்பாய் மகன் செந்தமிழும், மருமகன் மணிமார்பனும் சற்றே கலவரம் தோய்ந்த முகங்களோடு நின்றிருக்க அவர் சென்சார் செய்யப்படாத கெட்ட வார்த்தைகளோடு திட்டிக் கொண்டிருந்தார்.

"யாரோ ஒரு ஆணும், பெண்ணும் நம்ம ஆட்களோட கண்காணிப்பையும் மீறி நம்ம பண்ணை வீட்டுக்குள்ளே நுழைஞ்சு வேவு பார்க்க முயற்சி பண்ணியிருக்காங்க.... அவங்களை பார்த்த இடத்திலே போட்டுத்தள்ளி குழி தோண்டிப் புதைச்சுட்டு வராமே அவங்க தப்பிச்சுட்டுப் போயிட்டாங்கன்னு எம்முன்னாடி வந்து நின்னு சொல்ல உங்க ரெண்டு பேர்க்கும் வெட்கமாயில்லை?"

"அது வந்துப்பா....!"

"செந்தமிழ்,.... நீ எந்த சால்ஜாப்பையும் சொல்லி என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணாதே. தப்பிச்சுட்டு போன அந்த ரெண்டு பேரும் யாரு என்னாங்கிற விபரம் எனக்கு இன்னிக்கு சாயந்தறதுக்குள்ளே தெரியணும். ஏன்னா இன்னிக்கு தமிழ்நாட்ல இருக்கிற அரசியல் நிலவரம் சரியில்லை. நமக்கு யாரு கறுப்பு ஆடு, எவன் விசுவாசின்னு சரியாய் கணிக்க முடியலை... ஒரு சமயத்துல எல்லாரையும் நம்ப வேண்டியிருக்கு. இன்னொரு சமயத்துல எல்லாரையும் சந்தேகப்பட வேண்டியதாய் இருக்கு..."

 மாப்பிள்ளை மணிமார்பன் இப்போது குறுக்கிட்டான்.

"மாமா... இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்குள்ளே தப்பிச்சுட்டு போன அந்த ரெண்டு பேர் யார்ங்கிறதை கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்துறேன். அதுக்கப்புறம் உங்க கண் எதிரிலேயே ரெண்டு பேரையும் வெட்டிச் சாய்க்கிறேன்.... நீங்க கலவரப்படாமே இருங்க மாமா?"

"எப்படி மாப்ளே கவலைப்படாமே இருக்க முடியும்....?' இந்த பண்ணை பங்களாவுக்குள்ளே 5000 கோடி ரூபாய் இந்த வீட்டு பத்தடி ஆழத்துக்குள்ளே கண்டெய்னர் சூட்கேஸ்களில் தூங்கிகிட்டிருக்கு. அதை வருமானவரித்துறையும், சிபிஐ-யும் மோப்பம் பிடிச்சுட்டாங்களோன்னு நெஞ்சுக்குள்ள ஒரே உதறலாய் இருக்கு!"


"மாமா....! இது மாதிரியான சலசலப்புக்கெல்லாம் நீங்க பயப்படக்கூடாது. டெல்லியில் இருக்கிற மந்திரிகளில் மூணு முக்கியமான மந்திரிகள் நம்ம கையில்.... அங்கே நமக்கு எதிராய் சிறிய துரும்பு அசைஞ்சாலும் சரி உடனே நமக்கு தகவல் வந்துடும். அப்படியே வருமானத்துறை இந்த வீட்டை சோதனை போட வந்தாலும் வெளியே நின்னு வேடிக்கை பார்த்துட்டு போலாமே தவிர உள்ளே நுழைய முடியாது. டெல்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி யார் ஆட்சியில் இருந்தாலும் நமக்கு ஒரு குண்டூசி முனையளவு கூட பிரச்சனை வராது மாமா...!"

"மாப்ளே... நீங்க என்ன தைரியம் சொன்னாலும் சரி எம்மனசுக்கு நிம்மதியில்லை. இந்த வீட்டுக்கு வேவு பார்க்க வந்த அந்த ரெண்டு பேரும்....!" முகில் வண்ணன் குரலை உயர்த்தி கோபமாய் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்க்கு முன்பாய் டீ பாயில் இடம் பிடித்திருந்த அதி நவீன செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

மகனிடம் திரும்பினார் முகில்வண்ணன்.

"செந்தமிழ் போனை எடுத்து யார் கூப்பிடறாங்கன்னு பாரு...!"

செந்தமிழ் போனை எடுத்து டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்து கொண்டிருந்த பெயரை பார்த்துவிட்டு சொன்னான்.

"அப்பா லைன்ல யாரு தெரியுமா?"

"யாரு?"

"முத்துபாண்டியன்"

முகில் வண்ணன் சின்னதாய் மலர்ந்தான். "அட... நம்ம பழைய பங்காளி, அப்புறம் பகையாளி, போன வருஷம் மறுபடியும் பங்காளி. நடுவுல கொஞ்ச நாள் பகையாளி. இப்ப இவர் பங்காளியாய் போன் பண்றாரா பகையாளியாய் போன் பண்றாரான்னு தெரியலையே!"

"அப்பா...! அவர் பங்காளியோ பகையாளியோ நமக்கு தெரியாது. கட்சியில் பெரிய ஆள். தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள மனுஷன். அவரோட தயவு நமக்கு வேணும்.... வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிடறார்ன்னு நினைக்கிறேன். ரெண்டு வார்த்தை பேசிடுங்க....!"

"சரி போனைக் கொண்டா...!"

செந்தமிழ் நீட்டிய போனை வாங்கி காதுக்கு ஏற்றிய முகில் வண்ணன் உற்சாகமாய் பேச ஆரம்பித்தார்.

"வணக்கம்.... முத்துபாண்டியன்"

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter8-310297.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம்- அத்தியாயம் 9

 
 
 
 

முகில்வண்ணன் "வணக்கம்.... முத்துபாண்டியன்" என்று சொல்ல மறுமுனையில் அந்த முத்துபாண்டியன் சிரித்தார்.

"என்ன முகில்.... உன்னோட அறுபதுக்கு அறுபது சஷ்டியப்த பூர்த்தி அமர்க்களமாய் களை கட்டிடுச்சு போலிருக்கு,... சென்னையில் ஒரு சந்து பொந்து பாக்கி இல்லாமே எல்லா முச்சந்திலேயும் விதவிதமாய் போஸ் கொடுத்து சிரிச்சிட்டிருக்கே... எலக்‌ஷன் கூட பக்கத்துல இல்லை. எதுக்காக இப்படி பணத்தை வீணாய்....?"

"செலவு பண்றேன்னு கேட்கிறியா முத்துபாண்டி? காரணம் இல்லாமே நான் கரன்ஸியை வெளியே எடுப்பேனா ...? நான் ஒருத்தந்தான் ஊழல் பண்ணி பணத்தைச் சேர்த்தவன் மாதிரியும், மத்தவன் எல்லாம் உத்தமன் மாதிரியும் நம்ம கட்சியோட பெரிசு பொதுச் செயலாளர் எனக்கு மந்திரி பதவி கொடுக்காமே ஒதுக்கி வெச்சிருக்கார். அவர் ஒதுக்கி வெச்ச அன்னிக்கே நான் கட்சியை ரெண்டா உடைச்சு ஒரு புதிய கட்சி ஆரம்பிச்சிருப்பேன். அப்படி பண்ணியிருந்தா கட்சி ஆட்சி பண்ண முடியாம கவுந்து இருக்கும். ஆட்சியில நம்ம கட்சி இருந்தாத்தான் மத்திய அரசுக்கும் நம்ம கட்சி மேல ஒரு மரியாதை இருக்கும். நாம்பளும் நினைச்சதைச் சாதித்துக் கொள்ள முடியும்ன்னு நினைச்சு புதுக்கட்சி ஆரம்பிக்கிற முடிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு கட்சிக்கு விசுவாசமாய் இருந்தேன். இருந்தாலும் என்னோட தனிப்பட்ட பலம் எப்படியிருக்குன்னு நம்ம கட்சிக்கும், மத்தியில் இருக்கிற கட்சிக்கும் காட்ட வேண்டாமா என்ன...? அதுதான் இவ்வளவு தடபுடல்... அது சரி... முத்துபாண்டி நீ என்ன என்கூட போன்ல பேசிட்டு இருக்கே... ஃபங்க்‌ஷனுக்கு நீ வரலையா....?"

 

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 9

 

முகில்வண்ணன் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே மாப்பிள்ளை மணிமார்பன் தன் கையில் வைத்திருந்த செல்போனோடு அவரிடம் குனிந்தான்.

"மாமா... சி.எம். செங்குட்டுவன் இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்துடுவாராம். நாம எல்லாரும் வாசலுக்குப் போய் நின்னு வரவேற்பு கொடுக்கலைன்னா நல்லாயிருக்காது.... புறப்படலாமா?"

"ஆமா....மாப்ள....! செங்குட்டுவன் ஒரு மாதிரியான ஆளு.... அந்தாளை குளிப்பாட்டிகிட்டே இருந்தாத்தான் நாம ஒரு வாய் நிம்மதியாய் சாப்பிட்டு எட்டுமணி நேரம் தூங்க முடியும்..." முகில்வண்ணன் சொல்லிக் கொண்டே எழுந்தார். தன்னிடம் இருந்த செல்போனை மகன் செந்தமிழிடம் கொடுத்துக் கொண்டே, "இந்த போன் லைன்ல முத்துப்பாண்டியன் இருக்கான். ரெண்டு வார்த்தை பேசிட்டு கட் பண்ணிடு," குரலைத் தாழ்த்திப்பேசியவர் செல்போனை நீட்டினார்.

செந்தமிழ் செல்போனை வாங்கி தன் காதுக்கு ஒற்றி "ஹலோ" என்றான்.

மறுமுனையில் மெளனம்.

"அப்பா ! முத்துபாண்டியன் போனை கட் பண்ணிட்டார் போலிருக்கு..."

"சரி.... சரி.... மறுபடியும் போன் வந்தா பேசு... இல்லேன்னா விடு...." முகில்வண்ணன் பட்டு வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு அறையினுன்றும் வெளிப்பட, கஜபதி நித்திலன், சாதுர்யாவோடு எதிர்பட்டார்.

"தலைவரே...! யார் வந்திருக்காங்கன்னு பார்த்தீங்களா?" இரண்டு பேரையும் காட்டிக் கொண்டே கேட்டார் கஜபதி.

முகில்வண்ணனின் பரந்த நெற்றி குழப்பமான வரிகளுக்கு உட்பட்டது.

"யாரு?"

"நம்ம முத்து பாண்டியனோட பையனும் அவரோட மருமகளும்..." வேகவேகமாய் நடந்து கொண்டிருந்த முகில்வண்ணன் பிரேக் அடித்த மாதிரி நின்றார்.

"என்ன சொன்னே...?"

கஜபதி திரும்பவும் சொன்னார். முகில் வண்ணன் நித்திலனிடம் ஒரு சிரிப்புடன் திரும்பினார். ' "தம்பி... இப்பத்தான் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அப்பாகிட்டே பேசினேன். நீங்க வர்றதைப் பத்தி அவர் ஒண்ணுமே சொல்லலையே?"

நித்திலன் என்ன பதில் சொல்வது என்று திணறி கொண்டு இருக்கும்போதே செந்தமிழ் குறுக்கிட்டான்.

"அப்பா...! நீங்கதான் முத்துபாண்டியன் அங்கிள் கிட்டே போன்ல சரியா பேசலையே. சி.எம். வந்துட்டதால நீங்க புறப்பட்டீங்க. நான் அவர் கூட பேச முயற்சி செஞ்சேன். அதுக்குள்ளே லைன் கட்டாயிடுச்சு. பையனையும் மருமகளையும் அனுப்பி வெச்சிருக்கேன்னு சொல்றதுக்காகத்தான் போன் பண்ணியிருப்பார் அங்கிள்."

நித்திலனிடம் நிமிர்ந்தார் முகில்வண்ணன்.

"என்ன தம்பி அப்படியா....?"

"ஆமாம்" என்பது போல் வியர்வை மின்னும் முகத்தோடு தலையாட்டி வைத்தான் நித்திலன்.

"வாங்க தம்பி... போலாம்.... சி.எம். மை வரவேற்க போக வேண்டியிருந்தால அப்பா கிட்டே சரியா பேச முடியலை. உங்க பேர் என்ன தம்பி....?"

"நித்திலன்"

"பேர் புதுசா இருக்கே ...." சொன்னவர் அவன் தோளில் கை போட்டபடியே நடக்க ஆரம்பித்தார்.

"தம்பி... நானும் உங்க அப்பாவும் இருபது வருச காலமாய் ஒரேகட்சியில் இருந்தோம். ஒற்றுமையாய்தான் இருந்தோம். கட்சியோட மாவட்ட செயலாளர் போஸ்ட்டுக்கு ரெண்டு பேருமே போட்டி போட்டோம். அன்னிக்கு எங்களுக்குள்ளே ஏற்பட்ட பகைதான் இன்னமும் முழுசா கரையாமே அப்பப்ப எட்டிப் பார்க்குது. இனிமே அந்தப் பகையும் இருக்காது. ஏன்னா நீதான் அவர்க்கு பதிலா உன் ஒய்ஃப்போடு வந்துட்டியே....?"

என்று சொல்லிச் சிரித்தவர் சாதுர்யாவிடம் திரும்பினார். "ரெண்டு பேரும் மத்தியானம் வரைக்கும் இருந்து விருந்து சாப்பிட்டுத்தான் போகணும்... தலையைக் காட்டிட்டு போகிற வேலையெல்லாம் வேண்டாம்".

திடீரென்று வெளியே பேண்ட் வாத்திய சத்தம் கேட்டது. மணிமார்பன் அவசரப்படுத்தினான்.

"மாமா....சி.எம். வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். சீக்கிரம் வாங்க....!"

முகில்வண்ணன் உட்பட எல்லோரும் வேக வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட நித்திலனும் சாதுர்யாவும் சற்றே பின்தங்கி ஒதுங்கினார்கள். சாதுர்யா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினாள்.

"நித்தி...! உன்னோட திடீர் அப்பா முத்துபாண்டியன் முகில்வண்ணனுக்கு போன் பண்ணி பேசியிருக்கார் போலிருக்கு. பேசப் பேச சி.எம். வந்துட்டதால தொடர்ந்து பேச முடியாமே போயிருக்கு..."

"வாழ்க சி.எம்....!"

"சரி... இனிமே என்ன பண்ணப் போறோம்?"

"ரெண்டு பேரும் மத்தியானம் வரைக்கும் இருந்து விருந்து சாப்ட்டுப் போறோம்."

"நித்தி... கொஞ்சம் உன்னோட பார்வையை உயர்த்தி நம்ம ரெண்டு பேரோட தலைக்கு மேல என்ன தொங்கிட்டிருக்குன்னு பாரு..."

நித்திலன் தன்னுடைய விழிகளை உயர்த்திப் பார்த்துவிட்டு "ஒரு பெரிய லஸ்தர் லேம்ப்" என்றான்.

"என்னோட பார்வைக்கு என்ன தெரியுது தெரியுமா?"

"என்ன?"

'அரிவாள்'

"பயப்படறியா?"

"பயப்படாமே என்ன பண்றது... அதிர்ஷ்ட தேவதை ஒரு தடவை ரெண்டு தடவை காப்பாத்துவா... நம்ம பக்கத்திலேயே இருப்பான்னு நம்பிட்டு இருக்க முடியாது..."

"சி.எம். இப்போ ஃபங்க்‌ஷனுக்கு வந்துட்டதால இனிமேல் உன்னையும் என்னையும் யாரும் கவனிக்க மாட்டாங்க... நாம அபாயக்கட்டிடத்தைத் தாண்டிட்டோம்.. சாதுர்யா..."

"அப்படீன்னு நீ நினைச்சுட்டு இருக்கே. ஆனா நீயும் நானும் இன்னமும் அபாயக் கட்டத்துக்குள்ளேதான் இருக்கோம்..."

"எதை வெச்சு சொல்றே ?"

"அந்த முத்துபாண்டியன் ஒருவேளை இந்த பங்க்‌ஷனுக்கு புறப்பட்டு வந்துட்டார்ன்னா...."

"அப்படி வர்றவராய் இருந்தா இந்நேரம் வந்து இருப்பார். அந்த முத்துபாண்டியனை நீ மறந்துடு...!"

"டேய்... நித்தி... உனக்கு எமகாதக தைரியண்டா"

"எனக்கு பொன்னாடையைப் போர்த்தி ஒரு விழா எடுக்கிற வேலையெல்லாம் இப்ப வேண்டாம்.... வா... எதுக்காக வந்தோமோ அந்த வேலையைப் பார்ப்போம்... உன்னோட காதுக்குள்ளே ஃபிக்ஸ் பண்ணியிருக்கிற இன்விஸிபிள் ஹியரிங் எய்ட் பத்திரமாய் இருக்கான்னு ஒரு தடவை பார்த்துக்க"

"பார்த்துகிட்டேன்....!"

"கூட்டத்துல யாரும் உன் மேல மோதாதபடி பார்த்துக்க வேண்டியது முக்கியம். ஏன்னா தோள்பட்டையில் யாராவது பலமாய் மோதிட்டா காதுக்குள்ளே இருக்கிற ஹியரிங் எய்ட் தெறிச்சு கீழே விழ வாய்ப்பு இருக்கு..."

"சரி இப்ப எங்கே போறோம்...?"

"சி.எம். உள்ளே வந்தாச்சுன்னு நினைக்கிறேன். இப்ப அந்த இடத்துக்குப் போறோம். வி.வி.ஐ.பிக்கள், முக்கிய அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இப்படி எல்லாரையும் கண்காணிக்கனும். முகில் வண்ணனோட கால்ல யார் யார் விழறாங்கன்னு லிஸ்ட் பண்ணி அந்த வீடுகளை மட்டும் ஒரு நாள் சோதனை போட்டா போதும் கோடிக்கணக்கான பணத்தை வெளியே கொண்டு வந்துடலாம்."

இருவரும் பேசிக் கொண்டே ஃபங்க்‌ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். ஒட்டு மொத்த கூட்டமும் முதலமைச்சர் செங்குட்டுவனை வரவேற்க முன் வாசலுக்கு போயிருந்ததால் நாற்காலிகள் காலியாய் தெரிந்தன.

பின்வரிசை நாற்காலிப் பகுதிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.

அதே விநாடி...

வெள்ளுடுப்பு யூனிஃபார்ம் அணிந்த ஒரு நபர் ட்ரேயில் காப்பி டம்ளர்களோடு அவர்களுக்கு முன்பாய் வந்து நின்றார்.

"ஸார் காப்பி?"

"வேண்டாம்..."

"மேடம் உங்களுக்கு ?"

"நோ தேங்க்ஸ்..."

"ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க... இந்த அதிகாலைவேளையில் காப்பி சாப்பிட்டால்தானே வந்த வேலையை சுறுசுறுப்பாய் பார்க்க முடியும்... உளவு வேலை பார்க்கிறது சாதாரணமான விஷயமா என்ன?"

- தொடரும்...

 

https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapt-310886.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 10

 

 ராஜேஷ்குமார்

நித்திலனும் சாதுர்யாவும் முகங்கள் மாறிப் போனவர்களாய் ட்ரேயில் காப்பி டம்ளர்களோடு

நின்றிருந்த வெள்ளுடுப்பு யூனிஃபார்ம் அணிந்த நடுத்தர வயது பேரரையேப் பார்க்க அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு சிறிய புன்னகையோடு பேச்சைத் தொடர்ந்தார்.

"என்ன... ரெண்டு பேரும் பொறியில் மாட்டிகிட்ட எலிகள் மாதிரி பார்க்கறீங்க.... இது முகில்வண்ணன் அய்யாவோட இரும்புக்கோட்டை. இந்த கோட்டைக்குள்ளே அநாவசியமாய் ஒரு துரும்பு நுழைஞ்சா கூட கண்டுபிடிச்சுடுவோம்... நீங்க ரெண்டு பேரும்


ஐ.டி.டிபார்ட்மெண்ட்தானே...?"

"அது ... வந்து...."

"வீணாய் பொய் பேசி நேரத்தை வேஸ்ட் பண்றது எனக்குப் பிடிக்காது... உண்மையை சொல்லிட்டா இந்த இடத்தில் இருந்து நீங்க ரெண்டு பேரும், உயிரோடு போகலாம். இல்லேன்னா பண்ணை வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற சவுக்குத் தோப்புதான் உங்களுக்கு சமாதி"

"நித்தி! சொல்லிடு," என்றாள் சாதுர்யா.

நித்திலன் குரலைத் தாழ்த்தினான்.

"இதோ பார்! நாங்க ஐ.டி. டிபார்ட்மென்ட்தான். இந்த ஃபங்க்‌ஷனுக்கு யார் யார் வர்றாங்கன்னு பார்த்து லிஸ்ட் எடுக்க வந்தோம். மற்றபடி நாங்க எந்த ஒரு பிரச்சனையும் பண்ண வரல."

அந்த பேரர் சிரித்தார். "

நீங்க இங்கே வந்ததே பிரச்சனைதானே.... அய்யாவோட மகனுக்கோ, மாப்பிள்ளைக்கோ இந்த விஷயத்தை தெரியப்படுத்தினா உங்க நிலைமை என்னாகும் தெரியுமா...?"

 

"தெரியுது.... இப்ப உனக்கு என்ன வேணும்...? பணமா...?"

"வேறென்ன வேணும்... பணம்தான். ஆனா எனக்கு அந்த பணம் வேண்டாம்."

"பின்னே யார்க்கு...?"

"அதோ! அந்த டைனிங் ஹாலுக்குப் பின்னாடி பச்சைக் கலர் பெயிண்ட் அடிச்ச கதவு ஒண்ணை உங்களால பார்க்க முடியுதா?"

"முடியுது..."

"அந்த அறைக்குள்ளே உங்களுக்காக ஒருத்தர் வெயிட் பண்ணிட்டிருக்கார்.

போய்ப் பார்த்து டீலிங் பேசிட்டு வாங்க.... இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ளே முகில் அய்யாவும், சி.எம்.மும் இந்த இடத்துக்கு வந்துடுவாங்க... அதுக்குள்ளே அங்கே போய் டீலிங் பேசிட்டு வந்துடுங்க..."

"அந்த ரூம்ல இருக்கிறது யாரு?"

 

"போய்ப் பாருங்க தெரியும்,"

பேரர் சொல்லிவிட்டு மெதுவாய் நகர்ந்து போய்விட நித்திலனும், சாதுர்யாவும் தயக்க நடை போட்டபடி அந்தப் பச்சைப் பெயிண்ட் அடித்த கதவை நோக்கிப் போனார்கள்.

சாதுர்யா அவன் தோளைப் பற்றினாள். "நித்தி... நாம ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக்கப் போறோம்ன்னு தெரியுது..." "பயப்படாதே...

அந்த பேரர்க்கும் சரி இப்ப நாம் பார்க்கப் போயிட்டிருக்கிற நபர்க்கும் சரி, உன்னையும் என்னையும் முகில்வண்ணனுக்கு காட்டிக் கொடுக்கும் எண்ணம் இல்லை.

அவங்க நோக்கம் பணம்." "நித்தி! இப்போ நம்ம கிட்டே நம்ம செலவுக்குத் தேவையான பணம் மட்டும்தானே இருக்கு. அந்த ஆள் ஒரு பெரிய தொகையை டிமாண்ட் பண்ணினா என்ன பண்றது....?"

"அதெல்லாம் அந்த நபர்க்குத் தெரியாமலா இருக்கு....?

வா மொதல்ல ஆள் யார்ன்னு பார்ப்போம்"

"நம்மை எப்படி அடையாளம் தெரிஞ்சுகிட்டாங்க?"

சாதுர்யா வியர்த்த முகத்தோடு கேட்டுக் கொண்டு இருக்கும்போதே நித்திலன் பச்சை நிற பெயிண்ட் அடித்த கதவுக்கு முன்பாய் போய் நின்று மெல்லத் தள்ளினான்.

அது சத்தமில்லாமல் உள்வாங்கியது. நித்திலன் எட்டிப் பார்த்தான்.


சுத்தமான அந்த சிறிய அறையின் மூலையில் ஒரு மேஜை நாற்காலி போடப்பட்டிருக்க, நாற்காலியில் கஜபதி இறுக்கமான முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.

நித்திலனும் சாதுர்யாவும் அதிர்ந்து போனவர்களாய் கஜபதியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவர் தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் காட்டினார்.

"ரெண்டு பேரும் உட்கார்ங்க...." இருவரும் தயக்கமாய் உட்கார்ந்தார்கள்.

"நான் இங்கே இருப்பேன்னு நீங்க எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க இல்லையா...?"நித்திலன்,

"ஆ... ஆமா...!" என்றான் ஆச்சர்யமாய் தாளாமல். "தம்பி.... நீ முத்துப்பாண்டியனோட மகன் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் உன்னை அவரோடு பையன்தான்னு முகில்வண்ணன்கிட்டே ஏன் பொய் சொன்னேன்னு உனக்குத் தெரியுமா?"

"தெ.... தெரியாது....!" நித்திலனின் தலையாடியது. "உன்னால இந்த இடத்துல எனக்கு ஒரு வேலை ஆகணும்...!"

"எ...எ....என்ன வேலை....?" நித்திலன் குழப்பமான முகத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும்போதே வெள்ளுடுப்பு அணிந்த பேரர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார். தாழ்ப்பாழை போட்டபடி கேட்டார்.

"என்ன கஜபதி ... விஷயத்தை சொல்லிட்டியா?"

"இல்ல... பத்ரி... இப்பத்தான் பேச்சை ஆரம்பிச்சேன். என்ன சி.எம். உள்ளே வந்தாச்சா...?" "வரலை.... எப்படியும் வரவேற்பெல்லாம் முடிஞ்சு ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு வர எப்படியும் பத்து நிமிஷமாயிடும். அதுக்குள்ளே இந்த ரெண்டு பேர் கிட்டேயும் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லிவிடுவோம்."

 

"நான் சொல்லிக்கிறேன் பத்ரி... நீ வெளியே போய் அங்கே நடக்கிற சம்பவங்களை கவனி. ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு போன் பண்ணு.... பேரர் வேஷம் போட்டிருக்கே...அதை மெய்ன்டைன் பண்ணு".

"ம்...ம்... நமக்கு வேலை நடந்தால் சரி." பத்ரி சொல்லிவிட்டு வெளியேறிப் போக கஜபதி நித்திலனை ஏறிட்டார்.

மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார்.

 

"தம்பி.... நீயும் இந்தப் பொண்ணு சாதுர்யாவும் ஐ.டி. டிபார்ட்மெண்டில் இருக்கிற விஷயம் எனக்குத் தெரியும்.... கடந்த ஒரு மாச காலமாய் சென்னை ஐ.டி. டிபார்ட்மெண்டில் யார் யார் எந்தெந்த பதவிகளில் இருப்பாங்க... அவங்களோட அதிகாரங்கள் என்ன என்கிறதைப் பற்றியும் சர்வே எடுத்து லிஸ்ட் பண்ணியிருக்கேன்.

உங்க ரெண்டு பேரையும் இந்த இடத்துல பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம். கண்டிப்பாய் இந்த இடத்தை உளவு பார்க்கத்தான் வந்து இருப்பீங்க என்கிற உண்மையும் புரிஞ்சுகிட்டேன். என்ன நான் சொன்னது சரியா?"

"சரி..." "எப்படி உள்ளே வந்தீங்க...?" நித்திலன் விபரம் சொன்னான்.

 

கஜபதி அவன் சொன்னதை கவனமாய் செவிமடுத்துவிட்டு பெரூமூச்சு விட்டார். "நீங்க ரெண்டு பேருமே ரிஸ்க் எடுத்து உள்ளே வந்து இருக்கீங்க... நீங்க ரெண்டு பேரும் யார் யார்ங்கிற உண்மை எந்த நிமிஷம் தெரிஞ்சாலும் சரி, அடுத்த நிமிஷமே உயிரோடு இருக்க மாட்டீங்க.

ஏன்னா முகில்வண்ணனும் சரி, அவர் கூட இருக்கிற ஆட்களும் சரி ஈவு இரக்கம் இல்லாத, இருதயத்தை கழற்றி வெச்சுட்ட ஆட்கள். அவங்களுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள், ஐ.டி. டிபார்ட்மெண்ட் ஆட்கள்ன்னாலே அலர்ஜி. அவங்களால பிரச்னை வர்றமாதிரி இருந்தா போட்டுத் தள்ளிட்டு சட்டத்தையும், கோர்ட்டோட தீர்ப்பையும் விலை கொடுத்து வாங்கிருவாங்க...."

 

சாதுர்யா குறுக்கிட்டாள். "அது எங்களுக்கும் தெரியும்.... இப்ப நீங்க எதுக்காக முகில்வண்ணன்கிட்டயிருந்து எங்களைக் காப்பாற்றி இந்த அறைக்கு வரவழைச்சு பேசிட்டு இருக்கீங்க...?

எங்களால ஏதோ ஒரு வேலையாகணும்ன்னு சொன்னீங்க அது என்ன வேலை?"

"சொல்றேன்... அதுக்கு முன்னாடி நான் கேட்கிற இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க... நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்தது முகில்வண்ணனோட பினாமி ஆட்கள் யார் யார்ன்னு கண்டுபிடிக்கத்தானே?"

"ஆமா..." "அந்த லிஸ்ட்டை நான் தர்றேன். அப்புறம் இன்னொரு விஷயத்திலும் உங்க ஐ.டி. டிபார்ட்மெண்டுக்கு உதவிபண்ணலாம்ன்னு இருக்கேன்".

"என்ன உதவி....?" "முகில்வண்ணன்தான் முதல் அமைச்சராய் இருந்தபோது ஊழல் பண்ணி முறைகேடாய் சம்பாதிச்ச பணம் மொத்தம் 5000 கோடியைத் தாண்டும். அந்தப் பணத்தை எல்லாம் அவர் எங்கே எப்படி புத்திசாலித்தனமாய் பதுக்கி வெச்சிருக்கார்ன்னு எனக்குத் தெரியும், உங்க டிபார்ட்மெண்ட் நூற்றுக்கணக்கான அதிகாரிகளோடு தடாலடியாய் நான் சொல்ற இடத்துல 'ரெய்டு' பண்ணினா போதும். பணத்தை நீங்க பிஸ்கெட்களாகவும் வெள்ளிக் கட்டிகளாகவும் அள்ளிடலாம்."

நித்திலனும் சாதுர்யாவும் நிமிர்ந்தார்கள். "நீங்க சொல்றது உண்மையா?"

"போன மாசம் வரைக்கும் நானும் ஒரு பித்தலாட்ட அரசியல்வாதிதான். முகில்வண்ணனுக்கு இவ்வளவு பணம் சேர நானும் ஒரு காரணம். எத்தனையோ பேர்களை மிரட்டி சொத்துக்களை பறிமுதல் பண்ணியிருக்கேன். அப்படி சொத்துக்களை பறி கொடுத்தவர்களில் பாதிபேர் தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிருக்காங்க. அந்த செய்தியை எல்லாம் பேப்பர்ல படிக்கும் போது எம்மனசுக்கு கஷ்டமாய் இருக்கும்.

பண்ணின பாவத்துக்கெல்லாம் பரிகாரம் தேடத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கேன்." நித்திலன் முகம் மலர்ந்தான். "நல்ல முடிவு....!" கஜபதி மேற்கொண்டு பேசும் முன்பு பேரர் கதவைத் திறந்து கொண்டு பதட்டத்தோடு உள்ளே வந்தார். குரல் கம்மியது. "கஜபதி....!" "என்ன பத்ரி...?" "'முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் உன்னைத் தேடிகிட்டு இருக்கான்... எதுக்குன்னு தெரியலை" .....

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-10-311898.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 11

 

- ராஜேஷ்குமார்

பத்ரி சொன்னதைக் கேட்டு கஜபதி தன் முகத்தில் இருந்த ஒட்டு மொத்த ரத்தத்தையும் தொலைத்துவிட்ட தினுசில் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்தார்.

"பத்ரி! நீ என்ன சொல்றே.... முகிலோட மாப்பிள்ளை மணிமார்பன் என்னைத் தேடிகிட்டே இருக்கானா?"

"ஆமா...."

"எதுக்கு...?"

"தெரியலை.... நான் ஃபங்க்‌ஷனுக்கு வந்துகிட்டு இருந்தவங்களைப் போய்ப் பார்த்து காப்பி வேணுமான்னு கேட்டுகிட்டு இருந்த போது மணிமார்பன் அந்தப் பக்கமாய் வேகவேகமாய் வந்தான். மேடைக்கு முன்புறமாய் உட்கார்ந்துகிட்டிருந்த ஒருத்தர்கிட்டே போய் 'கஜபதியை பார்த்தியா'ன்னு கேட்டான், அந்த ஆள் பார்க்கலைன்னு சொன்னதும் மணிமார்பன் உடனே தன்னோட செல்போனை எடுத்து யார்க்கோ டயல் பண்ணி 'அந்த கஜபதியை நான் உடனே பார்க்கணும். இந்த கூட்டத்துல எங்கே இருக்கார்ன்னு தெரியலை... நீ பார்த்தா எனக்கு போன் பண்ணு'ன்னு பேசிட்டே மண்டப வாசலை நோக்கிப் போயிட்டான்."

 

"சி.எம். உள்ளே வந்துட்டாரா?"

"இல்லை...."

"சி.எம்.மை வரவேற்று உள்ளே கூட்டிகிட்டு வரவேண்டிய இந்த நேரத்துல மணிமார்பன் எதுக்காக என்னைத் தேடிகிட்டு அலையணும்...."

பேரர் யூனிஃபார்மில் இருந்த பத்ரி லேசாய் முகம் வியர்த்துப் போனவராய் தடுமாற்றமான குரலில் சொன்னார்.

"கஜபதி....! மணிமார்பன் கொஞ்சம் டென்ஷனோடு இருந்தான். அவன் உன்னை ஸ்மெல் பண்ணிட்டான்னு நினைக்கிறேன்."

"அதுக்கு வாய்ப்பு இல்லை பத்ரி... போன பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் அப்பா, மகன், மாப்பிள்ளை மூணு பேரும் என்கிட்டே நல்ல முறையில் சிரிச்சு பேசிட்டுதானே இருந்தாங்க...? ஐ.டி. ஆபீஸர்ஸ் நித்திலன் சாதுர்யாவை முத்துப் பாண்டியனோட மகன் மருமகள்னு நான் சொன்னதையும் நம்பினாங்களே...? இப்ப மட்டும் எப்படி சந்தேகம் வரும்?"

 

"இதோ பார் கஜபதி..... நீ இப்போ நிலைமை புரியாமே பேசிட்டு இருக்கே.... நீ, நான், நித்திலன், சாதுர்யா நாம நாலு பேருமே உடனடியாய் இங்கேயிருந்து தப்பிச்சுப் போயிடறது உத்தமம்.!"

"பத்ரி....! நீ ரொம்பவும் பயப்படறே... அந்த மணிமார்பன் என்னை ஸ்மெல் பண்றதுக்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவன் எதுக்காக என்னைத் தேடறான்னு நேர்லயே பார்த்து கேட்டுடறேன். வேற ஏதாவது விஷமாய் இருக்கும்...."

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் மெளனம் காத்த நித்திலன் பத்ரியை ஏறிட்டான்.

"மிஸ்டர் கஜபதி சொல்றதுதான் சரியாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அவர் மணிமார்பனைச் சந்திக்கட்டும்."

பத்ரியின் குரலில் லேசாய் கோபம் தெறித்தது.

"நித்திலன்...! உங்களுக்கு முழு விபரம் தெரிய வாய்ப்பில்லை யூனிஃபார்ம் போட்டு பேரர் வேஷத்துல இருக்கிற நான் உண்மையிலேயே யார்ன்னு உங்களுக்குத் தெரியுமா?"

நித்திலன் தெரியாது என்பது போல் தலையாட்டினான்.

 

"என்னோட முழுப்பெயர் பத்ரிநாராயணன். விஜிலன்ஸ் அண்ட் ஆண்டி கரப்ஷன் டிபார்மெண்டில் ஃபர்ஸ்ட் க்ரேட் ஆபீஸராய் இருக்கேன். கஜபதியும் நானும் ஒரே ஸ்கூல்ல டென்த் வரைக்கும் படிச்சோம். அதுக்கப்புறம் கஜபதிக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போக நான் மட்டும் போஸ்ட் கிராஜுவேசன் வரை படிச்சுட்டு இந்த லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனா, கஜபதியோ அரசியலில் புகுந்து ஒரு அரசியல் கட்சிக்கு செயலாளராகி வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டான். நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு துறையில் இருந்தாலும் வாரத்துல ஒருநாளாவது மீட் பண்ணிப் பேசிக்குவோம். லஞ்சம் வாங்குறதும் சரி, கொடுக்கிறதும் சரி தப்பு இல்லைன்னு போயிட்டிருந்த கஜபதியை நான்தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி எங்க டிபார்ட்மெண்ட்டுக்கு உதவி பண்ற அளவுக்கு கொண்டு வந்தேன். சட்ட விரோதமாய் 5000 கோடி ரூபாய் ஊழல் செய்த முகில்வண்ணனை பொறி வெச்சு பிடிக்க திட்டமும் போட்டோம். அந்தத் திட்டத்தோட முதல் கட்டம்தான் இது. நான் நேரிடையாய் இந்த ஃபங்க்‌ஷன்ல கலந்துக்க முடியாதுங்கிறதால தெரிஞ்ச கேட்டரிங் மூலமாய் ஒரு பேரராய் உள்ளே வந்தேன்."

நித்திலனும் சாதுர்யாவும் ஆச்சர்யத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்க பத்ரிநாராயணன் தொடர்ந்தார்.

"உங்க ரெண்டு பேரை இங்கே பார்த்ததும் நீங்க ஐ.டி. டிபார்ட்மெண்ட் ஆட்கள் என்கிற உண்மையை நான்தான் கஜபதிகிட்டே சொன்னேன். எங்க நோக்கத்துக்கு நீங்களும் உதவியாய் இருப்பீங்க என்கிற நம்பிக்கையில்தான் கஜபதி முகில்வண்ணன்கிட்டே உள்ளே கூட்டிட்டுப் போய் முத்துப்பாண்டியனோட மகனும், மருமகளும்ன்னு அறிமுகப்படுத்தினார். முத்துப்பாண்டியனும் முகில்வண்ணனும் அரசியலில் பரம விரோதிகள். அவர் இந்த ஃபங்க்‌ஷனுக்கு வரமாட்டார் என்கிற தைரியத்துல கஜபதி அந்தப் பொய்யைச் சொன்னார். ஆனால், எதிர்பாராதவிதமாய் முத்துபாண்டியனே முகில்வண்ணனுக்கு போன் பண்ணிப் பேசினது ஒரு ஆச்சர்யமான விஷயம். நல்லவேளையாய் சி.எம். வந்துட்டதால அந்த ரெண்டு பேரும் தொடர்ந்து பேசலை. பேசியிருந்தா உண்மை வெளியாகியிருக்கும்."

 

நித்திலன் குறுக்கிட்டுக் கேட்டான். "இப்ப அந்த உண்மை வெளியாகியிருக்கும்ன்னு நினைக்கறீங்களா மிஸ்டர் பத்ரி நாராயணன்?"

"ஆமா....."

"எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்க?"

"அந்த முத்துப்பாண்டியன் மறுபடியும் போன் பண்ணிப் பேசியிருக்கலாம்.... அப்படிப் பேசும் போது அவர் நான் 'என்னோட மகனையும், மருமகளையும் ஃபங்க்‌ஷனுக்கு அனுப்பலையேன்னு சொல்லியிருக்கலாம்."

சாதுர்யா குறுக்கிட்டாள்.

"இதைத் தவிர வேற காரணம் இருக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா?"

"கண்டிப்பாய்....!"

கஜபதி எழுந்தார்.

"ஓ.கே..... பத்ரி... இப்ப நாம என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறே....?"

"நாம நாலுபேரும் இந்தப் பண்ணைவீட்டை விட்டு உடனே கிளம்பிப் போயிடணும்....."

"அப்படி போயிட்டா மட்டும் நம்ம மேல மணிமார்பனுக்கு சந்தேகம் வராதா...?"

"சந்தேகம் வந்தாலும் பரவாயில்லை. ஆனா நாம இங்கே இருந்தா உயிரோடு இருக்க முடியாது.... மொதல்ல தப்பிச்சுப் போகிறவழியைப் பார்ப்போம்...."

"அந்த மணிமார்பன் எதுக்காக என்னைத் தேடறான்னு தெரிஞ்சுகிட்டா என்ன பத்ரி?"

"அது ரிஸ்க் கஜபதி.... நாம உயிரோடு இருந்தால்தான் நாளைக்கு இவங்களோட கோடிக்கணக்கான ஊழல் பணத்தை வெளியே கொண்டு வர முடியும்...ம்.... கிளம்பு"

பத்ரிநாராயணன் சொல்லிக் கொண்டே அந்த அறையினின்றும் வெளிப்பட மூன்று பேரும் பின் தொடர்ந்தார்கள்

பிரகாசமான ட்யூப்லைட்களின் வெளிச்சத்தில் ஆட்களின் நடமாட்டம் ஆங்காங்கே தெரிந்தது. வீட்டுக்கு வெளியே வாசலில் சி.எம்மை வரவேற்கும் விதமாக பேண்ட் வாத்திய சத்தமும், பட்டாசுகள் வெடித்துச் சிதறும் ஓசையும் விட்டு விட்டு கேட்டது.

நான்கு பேரும் வேக வேகமாய் நடந்தார்கள். பத்ரி குரலைத் தாழ்த்தினார். "கஜபதி....! உனக்குத்தான் இந்த வீட்டோட எல்லைகள் துல்லியமாய் தெரியும். எந்தப் பக்கமாய் போனால் நமக்கு பாதுகாப்பாய் இருக்கும்?"

"வீட்டோட வடகிழக்கு திசையில் கட்டப்பட்டு இருக்கிற காம்பெளண்ட் சுவர் கொஞ்சம் உயரம் கம்மியாய் இருக்கும். ஆட்களோ நடமாட்டமும் அதிகமாய் இருக்காது அந்தப்பக்கமாய் போயிடலாம்."

வெளிச்சமான பகுதிகளை விட்டு விலகி இருட்டிலேயே நடந்தார்கள். யாரேனும் பார்வைக்குத் தட்டுப்படும் போது ஒரு சில விநாடிகள் மறைந்து நின்று பின் வேகமாய் நடந்தார்கள். ஒரு ஐந்து நிமிட ஜாக்ரதையான நடைக்குப் பின் பண்ணை வீட்டின் வடகிழக்கு மூலைக்கு வந்தார்கள்.

 

வைகறை இருட்டு இன்னமும் கெட்டியாக கறுப்புச் சாயம் கரையாமல் இருக்க, கஜபதி நின்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குரலைத் தாழ்த்தினார்.

"பத்ரி... இந்த காலி இடத்துல மொதல்ல காய்கறித் தோட்டம் போட்டிருந்தாங்க.. இப்ப இல்லை. ஆனா இந்த இடம் கொஞ்சம் குண்டும் குழியுமாக இருக்கும்.. பார்த்து வரணும்."

"காம்பெளண்ட் சுவர் எங்கே இருக்குன்னு தெரியலையே..."

"இன்னும் நூறடி தூரம் நடக்கணும்...."

கஜபதி சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தார்.

"பார்த்து வா.. இங்கே ஒரு பெரிய குழி இருக்கும்...." கஜபதி சொல்லிக் கொண்டு நடக்க மூன்று பேரும் அவரை அடியொற்றி பின் தொடர்ந்தார்கள்.'

சாதுர்யாவுக்குப் பின்னால் நடந்து கொண்டு இருந்த நித்திலன் சட்டென்று நின்றான்.

"ஒரு நிமிஷம்...!" என்றான்.

முன்னால் போய்க் கொண்டிருந்த கஜபதியும் பத்ரி நாராயணனும் திரும்பிப் பார்த்தார்கள்.

"என்ன....?"

"குழிக்கு உள்ளேயிருந்து ஏதோ சத்தம் கேட்குது"

"ச.... ச.... சத்தமா...?"

"ம்.... யாரோ முனகற மாதிரி...."

நித்திலன் சொல்லிக் கொண்டே தன்னுடைய செல்போனை எடுத்து டார்ச்சை உசுப்பினான்.

பால் நிறத்தில் வெளிச்சம் பாய்ந்து அங்கிருந்த இருட்டை விரட்டியது.

வெளிச்சத்தை அப்படியே குழிக்குள் கொட்டினான்.

உள்ளே, ரத்தம் நனைந்த உடம்போடும், மரண முனகலோடும் மணிமார்பன் மல்லாந்து விழுந்திருந்தான்.

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-11-313274.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12

 

 - ராஜேஷ்குமார்

அதிர்ச்சியில் நான்கு பேரும் அந்தக் குழியைச் சூழ்ந்து நின்றார்கள். நித்திலனின் கையில் இருந்த செல்போனின் டார்ச் வெளிச்சம் குழிக்குள் விழுந்து கிடந்த மணிமார்பனை இப்போது துல்லியமாய் காட்டியது.

சாதுர்யா பயத்தில் உறைந்து போய் நிற்க கஜபதியும், பத்ரியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

 

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தட்டுப்படவில்லை. தொலைவில் முதல் மந்திரியை வரவேற்கும் ஆர்ப்பாட்டமான சத்தங்கள் மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.

"என்ன பண்ணலாம் பத்ரி.... மணிமார்பனோட உடம்புல இன்னமும் அசைவு இருக்கு.. குழிக்குள்ளே இறங்கி ஆளை எடுத்து வெளியே போடலாமா..?"

"வேண்டாம் கஜபதி... மணிமார்பனை யாரோ தாறுமாறாய் வெட்டி இருக்காங்க... ஏகப்பட்ட இடத்துல வெட்டு விழுந்திருக்கும் போலிருக்கு... உயிர் போய்விட்டு இருக்கு... பிழைக்க வாய்ப்பில்லை.... நாம பார்த்தும் பார்க்காதது போல் கிளம்பிட வேண்டியதுதான். நாம இன்னமும் இதே இடத்துல நின்னுட்டிருந்தா இந்தக் கொலைப் பழியிலேயும் மாட்டிக்க வேண்டியதுதான்... இந்த இடத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அந்த அளவுக்கு நல்லது...!"

 

நித்திலனும், சாதுர்யாவும் குழிக்குள் விழுந்து கிடந்த மணிமார்பனையே பார்த்துக் கொண்டிருக்க பத்ரி நித்திலனின் தோளில் கையை வைத்தார். "நித்திலன்! மணிமார்பன் செத்துக்கிட்டு இருக்கான்.

இரக்கம் காட்டவோ, மனிதாபமான முறையில் நடந்து கொள்ளவோ இது நேரம் இல்லை... அதோ இன்னும் கொஞ்சதூரம் நடந்தா போதும். காம்பெளண்ட் சுவர் வந்துடும். தாண்டி குதிச்சு போயிட்டே இருப்போம்.

" பத்ரி நித்திலனின் கையைப் பற்றி இழுக்க அவன் தயங்கினான்.

"ஒரு நிமிஷம் பத்ரி" "என்ன...?"

 

"குழியில் விழுந்து கிடக்கிற மணி மார்பனுக்கு பக்கத்துல செல்போன் ஒண்ணு இருக்கு. அது மணி மார்பனோட செல்போனாய் இருக்கலாம். அது நம்ம கைக்கு கிடைச்சா எக்ஸ் மினிஸ்டர் முகில்வண்ணன் பற்றியே பல விஷயங்கள் நமக்கு தெரிய வாய்ப்பு இருக்கு..."

பத்ரி குழிக்குள் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னார்.

 

"நீங்க சொல்றது சரிதான் நித்திலன்... ஆனா, நாம இந்தக் குழிக்குள்ளே இறங்கி எப்படி அந்த செல்போனை எடுக்க முடியும்?"

"கொஞ்சம் முயற்சி பண்ணினா எடுத்துட முடியும். இதோ குழியோட இடது பக்கம் அவ்வளவு ஆழம் கிடையாது. நான் வேணும்ன்னா இறங்கி...!"

"வேண்டாம் நித்திலன்..... நாம இங்கே நின்னுட்டு இருக்கிற ஒவ்வொரு விநாடியும் நமக்கு ஆபத்து. உடனடியாய் மூவ் ஆயிடறது பெட்டர்..."

"ஒரே நிமிஷம்.....! செல்போனை எடுத்துட்டு வந்துடறேன்." நித்திலன் குழியின் இடது பக்கமாய் ஓடி ஆழம் குறைவாய் இருந்த பகுதிக்குப் போய் மண்டியிட்டு உட்கார்ந்தான். பிறகு வலது காலை குழிக்குள் மெதுவாய் இறக்கி சறுக்கிக் கொண்டே கீழே போனான். அவனுடைய கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தை சிதறடித்து குழிக்குள் இருந்த இருட்டை விரட்டிவிட்டு ரத்தத்தில் நனைத்து மல்லாந்திருந்த நித்திலனையும் அவனுக்குப் பக்கத்தில் விழுந்திருந்த செல்போனையும் காட்டியது.

 

செல்போனை கையில் எடுத்துக் கொண்ட நித்திலன் மணிமார்பனையும் பார்த்தான். உயிர்த்துடிப்பு அடங்கி விட்டதற்கு அடையாளமாய் அவனுடைய விழிகள் நிலைத்துப் போயிருந்தது.

சாதுர்யா பதட்டமாய் குரல் கொடுத்தாள்.

"நித்தி....! சீக்கிரம் மேலே வா...."

"இதோ வந்துட்டேன்...," நித்திலன் குழியினின்றும் எம்பி அதன் விளிம்பைப் பற்றிக் கொண்டு மூச்சிறைக்க மேலே வந்தான்.

"மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லை..."

"இனிமேல் நாம உயிரோடு இருக்கிறதுதான் முக்கியம். ம்... வாங்க.."

"நித்திலன் ... மொதல்ல உங்க செல்போன் டார்ச் லைட்டை ஆஃப் பண்ணுங்க..."

செல்போனின் டார்ச் அணைந்தது.

கஜபதி முதல் ஆளாய் ஓட, அவரைப் பின் தொடர்ந்து பத்ரி, நித்திலன், சாதுர்யா மூன்று பேரும் வியர்த்து வழிய ஓடினார்கள்.

நான்கடி உயரமே இருந்த காம்பெளண்ட் சுவரை நெருங்கினார்கள். சுவரின் ஓரமாய் கிடந்த ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி நின்று சுவரின் விளிம்பில் காலை வைத்து மறுபக்கம் எட்டிப் பார்த்த கஜபதி அதிர்ந்து போனவராய் கீழே இறங்கினார்.

 

"பத்ரி...!"

"என்ன கஜபதி...?"

"நாம சுவர் ஏறி தப்பிக்க முடியாது போலிருக்கே?"

"ஏன்..?"

"அந்த கல்லு மேல ஏறி நின்னு பாரு"

பத்ரி பதட்டத்தோடு அந்தக் கல்லின் மேல் ஏறி நின்று மறுபக்கம் பார்த்தார். அவருடைய முதுகுத் தண்டுவடம் முழுவதும் மைனஸ் ஜீரோ டிகிரி குளிர் பாய்ந்த மாதிரியான உணர்வு.

அவரின் மறுபக்கம் தெரிந்த சவுக்குமரத் தோப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு கையில் பெரிய டார்ச் லைட்டோடும், இன்னொரு கையில் அரிவாளோடும் சுற்றும் முற்றும் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

பத்ரியைத் தொடர்ந்து நித்திலனும், சாதுர்யாவும் ஏறிப் பார்த்துவிட்டு முகங்கள் மாறினார்கள்.

"இப்ப என்ன பண்றது..?"

"இந்த வழியில் தப்பிக்க முடியலைன்னா வேற எந்த வழியிலும் தப்பிக்க முடியாது..." கஜபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் சட்டைப் பையில் சைலண்ட் மோடில் இருந்த செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

'யார் கூப்பிடறாங்கன்னு தெரியலையே' பதட்டத்தோடு செல்போனை எடுத்துப் பார்த்தார்.

அது வாட்ஸ் அப் அழைப்பு.

முகில்வண்ணனின் மகன் செந்தமிழ் அழைத்துக் கொண்டிருந்தான்.

"பத்ரி! செந்தமிழ் கூப்பிடறான்... பேசறதா வேண்டாமா...?"

"நல்லதோ... கெட்டதோ... பேசிடு... நிலைமையோட சீரியஸ்னஸ் தெரிஞ்சாத்தான் மேற்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு நம்மால யோசிக்க முடியும்...!"

கஜபதி வாட்ஸ் அழைப்பை அனுமதித்து விட்டு பேசினார்.

"எ...எ...என்ன செந்தமிழ்...?"

ஸ்பீக்கர் ஆனில் இருந்தது.

"கஜபதியண்ணே.... நீங்க எங்கே இருக்கீங்க... கடந்த அரைமணி நேரமாய் பார்வையிலேயே தட்டுப்படலை..."

"நான் இங்கதான் இருக்கேன்"

"இங்கேன்னா எங்கே...?"

 


"டைனிங் செக்‌ஷன் பக்கம்... ஆட்கள் ஒழுங்காய் வேலைப் பார்க்கிறாங்களான்னு பார்க்க வந்தேன்...!"

"மொதல்ல அந்த இடத்திலிருந்து கிளம்பி ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு வாங்க... சி.எம். மேடையில் உட்கார்ந்துட்டார். அவர் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவர்க்கு போட வேண்டிய ஊட்டி மெகா ரோஜாப்பூ மாலையும் வெள்ளிச் செங்கோலும் மேடைக்கு வரணும். அந்த ரெண்டும் உங்க பொறுப்பில்தானே இருக்கு..?"

"ஆமா... அந்த ரெண்டையும் நம்ம வீட்டு பூஜையறைக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு ரூம்ல வெச்சு பூட்டி அந்த அறையோட சாவியை உங்க தங்கச்சிக்கிட்டே கொடுத்திருக்கேன்."

"என்னண்ணே இது...! உங்ககிட்டே இரு பொறுப்பைக் கொடுத்தா அதை யார்கிட்டேயாவது கொடுத்துட்டு உங்களுக்கு சம்பந்தம் இல்லாத வேலையைப் பார்க்கப் போடறீங்க...? ஆமா நம்ம மாப்பிள்ளை உங்களைப் பார்த்தாரா...?"

"இல்லையே...!"

"அவர் உங்களைத்தானே தேடிட்டு இருந்தார்."

"எதுக்கு...?"

"வேற எதுக்கு... சி.எம்.முக்கு போட வேண்டிய மெகா மாலையும், கொடுக்க வேண்டிய செங்கோலும் உங்க பொறுப்பில்தானே இருக்கு?"

"மாப்பிள்ளை மணிமார்பனை நான் பார்க்கலையே?"

"நீங்க திடீர்ன்னு காணாம போயிட்டா மாதிரி அவரையும் இப்ப கொஞ்ச நேரமாய் காணோம்... எங்கிருக்கார்ன்னும் தெரியலை. போன் பண்ணினா அவரோட செல்போன் 'ஸ்விட்ச் ஆஃப்'ல இருக்கு. யார்க்குமே பொறுப்பு இல்லாமே போச்சு...! அப்பாவுக்கு நடக்கிற ஒரு பெரிய ஃபங்க்‌ஷன் இது.. இந்த ஃபங்க்‌ஷனை பயன்படுத்தி சி.எம்.மை குளிப்பாட்டி வெச்சாத்தான் அப்பா சம்பாதிச்சு வெச்சிருக்கிற சொத்துக்கு எந்த ஒரு பயமுறுத்தலும் இல்லாம இருக்கும். உங்களுக்குப் புரியுதாண்ணே?"

"புரியுது..."-

"உடனே புறப்பட்டு வாங்க.... நீங்களும் மேடையேறி சி.எம்.மை ரெண்டு வார்த்தை பாராட்டிப் பேசணும்"

"சரி.... வர்றேன் தம்பி..."

 

"வரும்போது அப்படியே மாப்பிள்ளை மணிமார்பன் கண்ணுல பட்டா அவரையும் கூட்டிட்டு வாங்க... மாப்பிள்ளை எங்கே எங்கேன்னு அப்பா கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை."

"ம்...ம்..." என்று முனகிக் கொண்டே செல்போனை அணைத்தார் கஜபதி. பத்ரியைப் பார்த்தார்.

"இப்ப என்ன பண்றது....?"

"வேற வழியில்லை கஜபதி... நாம நாலு பேரும் ஃபங்க்‌ஷன் முடிகிற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது."

"மணிமார்பன் கொலையானது யார்க்கும் தெரியலை போலிருக்கு...!"

"நாமும் தெரியாதது போல இருந்துட வேண்டியதுதான்.... ம்... வாங்க ஃபங்க்‌ஷனுக்குப் போலாம்."

நான்கு பேரும் அந்த வைகறை இருட்டில் மறுபடியும் வெளிச்சமாய் தெரிந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-12-315754.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 13

 

 - ராஜேஷ்குமார்

 

எகிறும் இருதயத் துடிப்புகளோடு நித்திலன், சாதுர்யா, பத்ரி, கஜபதி நான்கு பேரும் விழா நடக்கும் இடத்தை நெருங்கிய போது காற்றில் நாதஸ்வர இசை காயப்பட்டுக் கொண்டிருந்தது.

விழா மேடையில் கட்சிப் பிரமுகர்கள் நாற்காலிகளில் தொப்பைகளைத் தள்ளிக் கொண்டு உட்கார்ந்திருக்க, மையத்தில் முதல் அமைச்சர் வஜ்ரவேலு அவர்க்கென்று போடப்பட்டு இருந்த பிரத்யேக சோபாவில் சாய்ந்தபடி முகத்தில் எந்த வித சலனத்தையும் காட்டிக் கொள்ளாமல் இயந்திரத்தனமாய் யார் யாரையோ பார்த்து கும்பிடுகள் போட்டுக் கொண்டிருந்தார்.

மைக்கைப் பிடித்து இருந்த ஒரு மாவட்டச் செயலாளர் ஏற்ற இறக்கக் குரலோடு பேசிக் கொண்டிருந்தார்.


"நமது அன்புக்குரிய அண்ணன் முகில்வண்ணன் அவர்களுக்கு இன்றைக்கு அகவை அறுபது. அவரைப் பொறுத்தவரை 60 என்பது ஒரு எண். அவ்வளவுதான். அவருடைய மனதுக்கு வயது 20. இன்றைக்கும் அவருடைய செயல்பாடுகளிலே அந்த 20 வயதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தன்னுடைய பதினைந்தாவது வயதில் செய்யாத தவறுக்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்குச் சென்றவர். அங்கே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்டு அந்த பள்ளியையே சீர்திருத்திவிட்டு வந்தவர். அவர் அரசியலில் தன் இருபதாவது வயதில் நுழைந்தார். 22வது வயதிலே சட்டசபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு மக்களுக்காக ஊன் உறக்கம் இன்றி உழைக்க ஆரம்பித்தார். அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களின் ஆணவத்தையும், அகந்தையையும் அழித்தவர். சட்டசபை தேர்தலுக்கு தன்னுடைய உழைப்பைக் கொட்டியவர். சட்டசபை உறுப்பினராக ஏழுமுறை தேர்ந்து எடுக்கப்பட்டு இரண்டு தடவை முதல் அமைச்சர் பதவி வகித்தவர். பத்தாண்டுகள் பதவியில் இருந்தாலும் பத்து பைசாவைக் கூட சொத்தாக சேர்க்காதவர். அவருடைய வேஷ்டியில் கரை இருக்கும். ஆனால், கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர். கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு பாரி வள்ளலுக்கு நிகராய் முதலமைச்சர் பதவியை அண்ணன் வஜ்ரவேலு அவர்களுக்கு வழங்கி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தவர்...!"

 

முதலமைச்சர் வஜ்ரவேலு தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முகில்வண்ணனின் பக்கம் தலையைச் சாய்த்தார்.

"என்ன முகில்... மைக்கை பிடிச்சு பேசிட்டு இருக்கிறவன் யாரு சொல்லருவி மோகன்ராஜ்தானே?"

"அவன்தான்!"

"என்ன இப்படி பொய் பேசறான்...! இவனுக்கு சொல்லருவின்னு பட்டம் கொடுத்ததற்கு பதிலாய் 'பொய்யருவி’ன்னு கொடுத்து இருக்கலாம்.... பேச்சுன்னா நம்பறமாதிரிதான் இருக்கணும்..."

 

"அவன் பேச்சை நிப்பாட்டவா வஜ்ரம்?"

"வேண்டாம்... வேண்டாம்... அவன் பேசட்டும். சினிமாவுல வடிவேலும் பேசற மாதிரி இருக்கு... நமக்கும் பயம் போகம் வேண்டாமா...?" என்ற வஜ்ரவேலு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கேட்டார்.

"எங்கே.... உன்னோட மாப்பிளை மணிமார்பன்? வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன். கண்ணுல படவேயில்லை.. ஏதாவது பிரச்சனையா...?"

"சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லை. சில முக்கியமான வி.ஐ.பி.ஸ் வர்ற நேரம்.. அதான் வாசல்ல நின்னு அவங்களை ரிஸீவ் பண்ணிட்டிருப்பார்.!"

"அதெல்லாம் உன்னோட மாப்பிள்ளை பார்க்கிற வேலையா...? அவரை மேடைக்கு வரச் சொல்லு!"

"இதோ... இப்ப வரச் சொல்றேன்... வஜ்ரம்..." என்ற முகில்வண்ணன் தனக்கு பின்புறமாய் நின்றிருந்த மகன் செந்தமிழை கையசைத்துக் கூப்பிட்டார். அவன் வேகவேகமாய் பக்கத்தில் வந்து குனிந்தார்ன்.

 

"அப்பா..."

முகில் வண்ணன் கிசுகிசுப்பாய்

"மாப்பிள்ளை எங்கடா...?" என்று கேட்டார்.

"அதான் தேடிட்டு இருக்கேன்ப்பா"

"என்னது... தேடிட்டு இருக்கியா... அவர் காணாமே போறதுக்கு சின்னக் குழந்தையா என்ன...? வேண்டாத வேலையை ஏதாவது பண்ணிட்டு இருப்பார். போன்ல காண்டாக்ட் பண்ணு..."

"பண்ணினேன்ப்பா... போன் நாட் இன் யூஸ் ன்னு வருது....!"

"தங்கச்சி ஜெயக்கொடிக்கு போன் பண்ணி கேளு...!"

"கேட்டேன்... காலையில அஞ்சு மணிக்கு பார்த்தது. அப்புறம் அவரைப் பார்க்கவேயில்லைன்னு சொல்றா....!"

"தினமும் காலையில் 'பெட் காபி’க்கு பதிலாய் ஷீவாஸ் ரீகல் விஸ்கி சாப்பிடற ஆளு... சாப்ட்டுட்டு எங்கேயாவது கவுந்துட்டாருன்னு நினைக்கிறேன்."

"இப்பப் பார்த்துடறேன்ப்பா...!"

"அ...அ.... அப்புறம்... கஜபதி எங்கே....?"

"அதோ முன்வரிசையில் உட்காந்திருக்கார். பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறது முத்துப்பாண்டியனோட மகன் நித்திலனும் மகள் சாதுர்யாவும்...."

"சரி...சி.எம்.க்கு போட வேண்டிய மெகா மாலையும், கொடுக்கப் போகிற வெள்ளி செங்கோலும் ரெடியாய் இருக்கா?"

"இருக்குப்பா.... கொண்டாந்து வெச்சிருக்கேன்ட

"இந்த சொல்லருவி மோகன் பேசினதும் கஜபதியை மேடையில் ஏத்திடு. நல்லா பேசுவான்"

"சரிப்பா..." சொன்ன செந்தமிழ் பின்னுக்கு நகர்ந்து மேடைக்கு பின்புறமாய் வந்தான்.

இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருந்தார்.

செந்தமிழ் அவரைப் பார்த்துவிட்டு கேட்டான்.

 

"என்ன முஸ்தபா... இங்கே நின்னுட்டு இருக்கீங்க...?"

"ஸார்... கமிஷனர் உங்களை உடனே பார்த்து பேசனும்ன்னு சொல்றார்."

"எதுக்காக...?"

"தெரியலை ஸார்... ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை பேசணும்ன்னு சொன்னார்."

"இங்கே எனக்கு தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கு... இந்த நேரத்துல இவர் வேற... கமிஷனர் இப்போ எங்கே இருக்கார்...?"

"அதோ... அந்த சி.சி.டி.வி. காமிரா மானிடரிங் அறைக்குப் பக்கத்துல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்... ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கப் போய்த்தான் உங்களைக் கூப்பிடறார் ஸார்.... ஒரு அஞ்சு நிமிஷம் போய்ப் பார்த்து பேசிட்டு வந்துடுங்க..."

செந்தமிழ் சில விநாடிகள் யோசனையாய் இருந்து விட்டு நூறடி தூரத்தில் தெரிந்த அந்த சி.சி.டி.வி. காமிரா மானிட்டரிங் அறையை நோக்கிப் போனான்.

 

வெளிச்சம் குறைவாய் இருந்த பகுதி அது. ஒரு ட்யூப்லைட் மட்டும் பற்றாக்குறை மின்சாரத்தால் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. மானிட்டரில் அறை மூடப்பட்டு இருக்க, அதற்குப் பக்கத்தில் இருந்த சாமியானோ தடுப்புக்கு அருகே போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் நடைபோட்டபடி காத்திருந்தார். செந்தமிழைப் பார்த்தும் நின்றார். தயக்கத்தோடு சொன்னார்.

"ஸாரி... உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு... ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு நான் வந்தா பேச முடியாது. அதான் உங்களை வரச் சொன்னேன்..."

 

செந்தமிழ் எரிச்சலோடு சொன்னான்.

"அதான் வந்துட்டேனே.... என்ன விஷயம் சொல்லுங்க...?"

கமிஷனர் ஆதிமூலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னார். "ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னால் என்னுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது, கூப்பிட்டது யார்ன்னு பார்த்தேன். ஒரு புது எண். பொதுவாய் ஒரு புது நெம்பர் வந்தா அந்த நெம்பரோடு பேசும் போது அந்த ஆடியோ கான்வர்சேஷனை பதிவு பண்ணிடுவேன்.... அதே மாதிரி இந்த கான்வர்சேஷனையும் பதிவு பண்ணினேன். அந்த நபர் பேசிய விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அந்தச் செய்தி எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்ததுன்னும் தெரியலை.... எனக்கும் அந்த நபர்க்கும் நடந்த ஆடியோ கான்வர்சேஷனை இப்ப ஆன் பண்றேன். கேட்டுப் பாருங்க"

 

சொன்ன கமிஷனர் செல்போனின் ஆடியோ ஆப்ஷனை ஆன் செய்தார். ஒரு நபரின் குரலும் கமிஷனரின் குரலும் மாறி மாறி கேட்டது.

"காலை வணக்கம் கமிஷனர் ஸார்"

"பேசறது .... யாரு...?"

"என்னை அறிமுகப்படுத்திகிட்டாலும் நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியப்போறதில்லை. விஷயத்தை மட்டும் கேளுங்க ஸார்."

"சரி... சொல்லு...!"

"துக்க வீட்ல எக்ஸ் மினிஸ்டர் முகில்வண்ணனோட ரஷ்டியப்த பூர்த்தி விழா நடக்கலாமா கமிஷனர் ஸார்..?"

"ஏய் ... நீ என்ன சொல்றே?"

"முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லை..."

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/five-star-dhrogam-chapter-13-316789.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 14

செந்தமிழனின் விழிகளில் பயம் நிரம்பியது. கமிஷனரின் செல்போனில் ஆடியோ கான்வர்சேஷன் நிதானமான குரலில் போய்க் கொண்டிருக்க அதை உன்னிப்பாய் செவிமடுத்தான்.

"முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லையா...?"

கமிஷனரின் குரல் நடுக்கமாய் கேட்க மறுமுனையில் குரல் சிரித்தது.

"மணிமார்பனோட டெட்பாடியை பார்த்தால்தான் நம்புவீங்களா கமிஷனர் ஸார்?"

"மணிமார்பன் இப்ப எங்கே?"

"பாடி எங்கேன்னு கேளுங்க.... அவனோட உடம்பு இந்த பண்ணை வீட்டுக்குள்ளேயேதான் இருக்கு... போய் தேடி எடுத்து கண்டுபிடிச்சு முகில்வண்ணனோட சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளை நிறுத்திவிட்டு மணிமார்பனோட காரியங்களை பண்ண ஆரம்பிங்க... இது விஷயமாய் வேண்டியவங்க யார்க்கும் சொல்லி அனுப்ப வேண்டியது இல்லை... ஏன்னா வேண்டியவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் இங்கேயே இருக்காங்க....!"

அத்தோடு செல்போனின் கான்வர்சேஷன் அறுந்து போயிற்று. செந்தமிழ் கமிஷனரிடம் திரும்பினான். முகம் வெள்ளமாய் வியர்த்தியிருந்தது. "ஸார்.... பேசினவனின் செல்போன் நம்பரை நோட் பண்ணீங்களா?"

 

"அவன் செல்போனிலிருந்து பேசலை.... ஏதோ ஒரு பி.சி.ஓவிலிருந்து பேசியிருக்கான். நான் உடனே கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் அனுப்பி அந்த விஷயத்தை கன்பர்ம் பண்ணிகிட்டேன். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையிலிருந்து போன் பண்ணியிருக்கான். இந்த ஃபங்க்‌ஷன்ல குழப்பம் பண்ண யாரோ முயற்சி பண்றாங்கன்னு நினைக்கிறேன்... மிஸ்டர் மணிமார்பன் மேடையில்தானே இருக்கார்?"

செந்தமிழ் நெற்றி வியர்வையை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே கமிஷனரை ஏறிட்டான்.

"ஸார்... மாப்பிள்ளை மணிமார்பனை ஒரு அரைமணி நேரமாய் காணோம். அவரைத்தான் தேடிகிட்டு இருக்கேன்...!"

"என்னது... தேடிட்டு இருக்கீங்களா... அப்படீன்னா என்கூட செல்போன்ல பேசினவனை நாம அலட்சியம் பண்ண முடியாது. இதே பண்ணை வீட்டுக்குள்ளே அவர்க்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கணும்... உடனடியாய் சர்ச் ஸ்க்வாட் ஒண்ணை இன்பார்ம் பண்ணி தேடச் சொல்லணும்.... நான் அதுக்கான முயற்சியில் இறங்கட்டுமா...?"

"ம்... செய்யுங்க... ஆனா வந்து இருக்கிற யார்க்கும் தெரியாதபடி மணிமார்பனைத் தேடுங்க...." கமிஷனர் தலையாட்டிவிட்டு நடந்து போக செந்தமிழ் தளர்ந்த நடையோடு ஃபங்க்‌ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தான். மேடையில் கஜபதி மைக்குக்கு முன்பாய் நின்றபடி ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தார்.

 

"அண்ணன் முகில்வண்ணன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரு மனிதனாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் புனிதனாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அந்த எளிய மனிதரின் அரிய குணநலன்கள் தெரியவரும். அவரைத் தேடி பதவிகள் வந்தன. ஒரே ஒரு தலையசைப்பால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். சென்ற வருடம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு டெல்லியில் இருந்து அவர்க்கு ஒரு செய்தி வருகிறது. செய்தியில் குறிப்பிட்டிருந்த வாசகம் என்ன தெரியுமா? பிரதமர் நாளை மாலை உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்பதே. பிரதமரின் வார்த்தைக்கு மதிப்பளித்து அண்ணன் முகில்வண்ணன் மறுநாள் மத்திய அரசே ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுப் போனார். பிரதமரை அவருடைய வீட்டிலேயே சந்தித்தார். இந்த சந்திப்பு ரகசியமான முறையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பின் போது பிரதமர் நம் அண்ணனிடம் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதமா என்று கேட்டுள்ளார். அதற்கு அண்ணன் சொன்ன ஒற்றை வார்த்தை வேண்டாம் என்பதுதான். ஆனால் பிரதமர் விடவில்லை. 'முகில் ஜி... ஏன் குடியரசு தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?' என்று கேட்டபோது நமது அண்ணன் என்ன பதில் சொன்னார் தெரியுமா?"

 

கஜபதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் வஜ்ரவேலு முகில்வண்ணனின் காதருகே தலையைச் சாய்த்தார்.

"யோவ்... முகில் ... அந்த பிரதம மந்திரி இப்ப உயிரோடு இல்லை என்கிற தைரியத்துல உன்னோட ஆள் கஜபதி இப்படியெல்லாம் பொய் பேசறானே... கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லய்யா...."

"நான் என்ன பண்ணட்டும் வஜ்ரவேலு... எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துட்டேன். ஒருத்தனும் காதுல போட்டுக்கிறதில்லை... மைக்கைப் பிடிச்சான்னா பொய் தானா வருது.... இந்தப் பொய்யையும் நம்பறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு...."

"சரி... சரி.... உன்னோட பையன் செந்தமிழ் ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி வேர்த்து வழிஞ்சு வர்றான். விஷயம் என்னான்னு கேளு...!"

செந்தமிழ் கையில் இருந்த கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டே முகில்வண்ணனை நெருங்கி குனிந்தான்.

"அப்பா...." "என்ன செந்தமிழ்... குரல் ஒரு மாதிரி இருக்கு... மாப்பிள்ளையைப் பார்த்தியா....?"

"அது விஷயமாய்த்தான் பேசணும்... ஒரு நிமிஷம் உள்ளே வாங்கப்பா..."

"என்ன மாப்பிள்ளை ஏதாவது பிரச்சனை பண்றாரா?"

"சொல்றேன்... உள்ளே வாங்கப்பா...." முகில் வண்ணன் முதலமைச்சரிடம் திரும்பினார்.

வஜ்ரம்...! பையன் ஏதோ பேசணுமாம். ஒரு ரெண்டு நிமிஷம் உள்ளே போய்ட்டு வந்துடறேன்..."

"போய்ட்டு சீக்கிரமாய் வா.... நீ பேசினதும் நான் பேசிட்டு வேற ஒரு கல்யாணத்துக்கு போகணும்...."

"இப்ப வந்துடறேன்..." முகில்வண்ணன் எழுந்து பட்டுத் துண்டால் முதுகைப் போர்த்திக் கொண்டு செந்தமிழைப் பின் தொடர்ந்தார்.

*********

 

விழா மேடையின் முன்னால் போடப்பட்டிருந்த முன்வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த நித்திலனும் சாதுர்யாவும் ஒருத்தரையொருத்தர் கலக்கமாகப் பார்த்துக் கொண்டார்கள்

. "கவனிச்சியா சாதுர்யா....?" நித்திலன் கிசுகிசுத்தான். 

 

"ம்... கவனிச்சேன்.... முகில்வண்ணன் எந்திரிச்சு தன் பையன் பின்னாடி போறார்..."

"மணிமார்பன் கொலையான மேட்டர் செந்தமிழுக்கு தெரிஞ்சிடுச்சு போலிருக்கு..."

"விஷயம் தெரிஞ்சிருந்தா ஃபங்க்‌ஷன் நடக்காது. அதுக்கு முன்னாடி நாம இந்த இடத்தை விட்டு கிளம்பிடணும்....ஏன்னா மணிமார்பனோட செல்போன் என்கிட்டதான் இருக்கு...."

"சிம் கார்டைத்தான் வெளியே எடுத்திட்டியே... அப்புறம் என்ன பயம்....?"

"பயமில்லைதான்.... இருந்தாலும் ஒரு பயம் என்னோட மனசுக்குள்ளே நொண்டிகிட்டே இருக்கு...." நித்திலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கஜபதி அவர்களுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவர் முகம் இருண்டு போயிருந்தது.

நித்திலன் சொன்னான்.

"அருமையா மேடைக்கு ஏற்ற மாதிரி பேசிட்டீங்க ஸார்"

"உங்க பாராட்டையெல்லாம் கேட்கிற மனநிலையில் நான் இல்லை நித்திலன். விஷயம் நம்ம தலைக்கு மேல் ஒரு விபரீதம் போயிட்டிருக்கு"

 

"என்ன ஸார்?"

"மேடையில் நான் பேசி முடிச்சதும் முகில்வண்ணனும் அவருடைய மகனும் என்னை மேடைக்குப் பின்புறம் இருக்கிற அறைக்கு வரச் சொன்னாங்க... நானும் போனேன். அங்கே போலீஸ் கமிஷனரும் இருந்தார். கமிஷனருக்கு எவனோ ஒருத்தன் போன் பண்ணி மணிமார்பனோட டெட்பாடி இந்தப் பண்ணை வீட்டுக்குள்ளதான் இருக்குன்னு சொல்லியிருக்கான். பாதுகாப்புக்கு வந்து இருக்கிற போலீஸார் ரெண்டு குழுக்களாய் பிரிஞ்சு டெட்பாடி எந்த இடத்துல இருக்குன்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க.... கொலையாளி இந்தப் பண்ணை வீட்லதான் இருக்கணும்ங்கிற சந்தேகத்தின் பேரில் இங்கே இருக்கிற யாரும் இன்னும் சில மணி நேரங்களுக்கு வெளியே போக முடியாதாம்..."

நித்திலனும் சாதுர்யாவும் சுவாசிக்கத் திணறினார்கள்.

 

"இப்ப என்ன ஸார் பண்றது?"

- தொடரும்...

 


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/five-star-dhrogam-chapter-14-317981.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

தொடர்ந்து விரைவாக இணையுங்கள் நவீனன்...எத்தனையோ படைப்பாளிகள்,இலக்கியவாதிகளிண்ட கதையை வாசிச்சாலும் ராஜேஷ்குமார்,பா.கோ.பிரபாகர் போன்றவர்களது கதையை வாசிப்பது தனி சுகம் 
 

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 15


கஜபதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நித்திலன் சாதுர்யா பக்கம் தலையைச் சாய்த்து கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனோட டெட்பாடியை இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் எப்படியும் கண்டு பிடிச்சு கொலையாளி யாராய் இருக்கணும்கிற இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிச்சுடுவாங்க. நாம் டென்ஷன் படாமே இருக்கணும்….” போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் சாதாரணப்பட்ட ஆள் கிடையாது. அவருடைய விசாரணை முறைகள் வேகமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்….” 

 

கஜபதி பேசிக்கொண்டிருக்கும் போதே செந்தமிழ் மேடைக்குப் பக்கத்தில் இருந்து குரல் கொடுத்தாள்.

 

“கஜபதியண்ணே … என்ன அங்கே போய் உட்கார்ந்துட்டீங்க.. நம்ம மாப்பிள்ளையைக் காணோம்ன்னு எல்லாரும் தேடிகிட்டு இருக்கோம்…. ம்…. நீங்களும் வந்து தேடுங்க…

 

“இதோ…. வந்துட்டேன்….. தம்பி…..” கஜபதி எழுந்து வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு செந்தமிழை நோக்கிப் போனார். ஒரு ஆறுதலுக்குப் பேசினார்.

 

“மாப்பிள்ளை மணிமார்பன் எங்கே போயிடப் போறார் தம்பி …. ஏதாவது ஒரு பக்கம் விழா ஏற்பாடுகளை கவனிச்சுட்டு இருப்பார். தங்கச்சி கிட்ட கேட்டுப் பார்த்தீங்களா …..?

“ம் …… கேட்டுப் பார்த்தேன்… தங்கச்சி கயல்விழி கடந்த ஒருமணி நேரமாய் மாப்பிள்ளையைப் பார்க்கவே இல்லைன்னு சொல்றார் ….”

 

“சார். வாங்க தம்பி…. பார்த்துடுவோம்…..”

 

“ஒரு நல்ல காரியம் நடக்கற நேரத்துல இவர் வேற இப்படியொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிட்டு இருக்கார். தண்ணியைப் போட்டுகிட்டு எங்கேயாவது மட்டையாட்டம் விழுந்து கிடப்பார்ன்னு நினைக்கிறேன்…”

“சே.. சே..* என்ன தம்பி … நம்ப வீட்டு மாப்பிள்ளையைப் பத்திர அவ்வளவு மோசமாய் பேசறீங்க….இன்னிக்கு அப்பாவோட சஷ்டியப்த பூர்த்தி. எல்லா வி.ஐ.பீஸிம் வந்து போகிற நிகழ்ச்சி... அப்படி எல்லாம் அவர் தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்க மாட்டார்…..

 

“சார் சார் நிலவரம் என்னான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தொpஞ்சுடும்… வாங்கண்ணே மத்தவங்க தேடாத பக்கமாய் போய் தேடிப் பார்ப்போம்”

செந்தமிழும், கஜபதியும் பண்ணை வீட்டின் பின்புறத்தை நோக்கிப் போனார்கள்.

அறைக்குள் முகில்வண்ணன் பாறையாய் இறுகிப் போன முகத்தோடு உட்கார்ந்திருக்க, போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் தன் கையில் வைத்து இருந்த வாக்கிடாக்கியில் பதட்டமும் கவலையுமாய் அவர்க்கு முன்பாய் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வயர்லஸில் உடனுக்குடன் பதில் வந்தது.

 

“என்னாச்சு ? ..

“ஸார் … நான் B ஸ்க்வாட்… சைலேஷ்… பண்ணை வீட்டோட ஈஸ்டர்ன் சைடு முழுவதும் பார்த்துட்டோம் ஸார்.. டூ நாட் நோ வேர் ஹி ஈஸ்?;…

“சரியாய் பார்த்தீங்களா ….”

“பர்பெக்ட் சர்ச் ஸார்… * அவர் சொல்லச் சொல்ல இன்னொரு குரல் கேட்டது.

“ஸார்… நான் A ஸ்க்வாட் அப்துல் ரஹீம். மணிமார்பன் ஸாரை கண்டுபிடிக்க முடியலை. பண்ணை வீட்டில் இருக்கிற எல்லா அறைகளையும் செக் பண்ணி பார்த்துட்டோம். இப்போ பண்ணை பங்களாவோட பவுண்டரிக்கு போயிட்டிருக்கோம். இங்கே கொஞ்சம் இருட்டாய் இருக்கு. இருந்தாலும் “ஜெய்ண்ட்

 

டார்ச்” வெளிச்சத்தோட உதவியால் எல்லா பகுதிகளையும் பார்க்க முடியும். எப்படியும் கண்டு பிடிச்சுடலாம் ஸார்”

“பேசிட்டு இருக்காதீங்க… ஐ வாண்ட் ரிசல்ட்” பேசிட்டு வாக்கிடாக்கியை அணைத்த கமிஷனர் ஆதிமூலம் முகில்வண்ணனிடம் பவ்யமாய் குனிந்தார்.

”ஸார்…”

முகில்வண்ணன் பெருமூச்சோடு நிமிர்ந்தார்.

“என்ன ….? என்பது போல பார்த்தார்.

“சி.எம். கிளம்பிப் போயிட்டார். ஒரு ரிலேட்டிவ்வோட கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணனுமாம்….”

“அவரோட பிரச்சினை அவர்க்கு…. நம்ப பிரச்சினை நமக்கு….” என்று சொன்னவர் கமிஷனரை கவலையோடு ஏறிட்டார்.

“நம்ம மாப்பிள்ளை மணிமார்பனைப் பற்றி உங்க கிட்ட போன்ல பேசின நபர் என்ன சொன்னான்னு மறுபடியும் ஒரு தடவை சொல்லுங்க. அவன் பேசின வார்த்தைகளை வெச்சு அவன் யார்னு கண்டுபிடிக்க முயற்சி பண்றேன்.”

கமிஷனர் சில விநாடிகள் யோசித்துவிட்டு சொன்னார்.

 

மணிமார்பனோட உடம்பு இந்த பண்ணை வீட்டுக்குள்ளேதான் இருக்கு. போய் தேடி கண்டிபிடிச்சு, முகில்வண்ணனோட சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளை நிறுத்திவிட்டு மணிமார்பனோட காரியங்களை பண்ண ஆரம்பிங்க. இந்த விஷயமாய் வேண்டியவங்க யார்க்கும் சொல்லி அனுப்ப வேண்டியதில்லை. ஏன்னா வேண்டியவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் இங்கேயே இருக்காங்க….”

“இவ்வளவு தைரியமாய் ஒருத்தன் போன் பண்ணி பேசறான்னா அவன் சாதாரண ஆளாய் இருக்க மாட்டான். இவ்வளவு கட்டுக்காவல்களையும் மீறி ஒருத்தன் இந்த பண்ணை பங்களாவுக்குள்ளே நுழைந்து என் மாப்பிள்ளை மேல கை வெச்சிருக்கான்னா அவன் நிச்சயமாய் என்னோட எதிரியாய் இருக்கமுடியாது. ஒரு நண்பனைப்போல்தான் உள்ளே நுழைஞ்சிருக்கணும்….”

 

“ஸார்… இது வெத்து மிரட்டலாய் கூட இருக்கலாம் “

 

“அப்படி வெத்து மிரட்டலாய் இருந்தா மாப்பிள்ளை மணிமார்பன் இப்ப நம்ம முன்னாடி நின்னுட்டு இருக்கணுமே…. *

“இன்னும் கொஞ்ச நேரத்துல உண்மை என்னான்னு தெளிஞ்சிடும் ஸார்….”

கமிஷனர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முகில்வண்ணன் மகள் கயல்விழியும் செந்தமிழின் மனைவி மலர்க்கொடியும் அழுகையோடு வந்தார்கள்.

 

“அப்பா…” என்று கண்ணீரோடு விம்மியபடி முகில்வண்ணனை நெருங்கிய கயல்விழி அவருடைய காலடியில் போய் உட்கார்ந்தாள். அவர் அவளுடைய தலையை நடுக்கமாய் வருடிவிட்டார்.

“பயப்படாதேம்மா…. மாப்பிள்ளைக்கு ஒன்றும் ஆகியிருக்காது…. எனக்கு வேண்டாத யாரோ விளையாடறாங்க…. நீ தைரியமாய் இரும்மா” அவருடைய ஆறுதல் பேச்சில் நேரம் கரைய அரைமணி நேரத் தேடலுக்குப்பின் 'A’ ஸ்க்வாட் 'B’ ஸ்க்வாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கமிஷனர்க்கு முன்பாய் வியர்வை முகங்களோடு வந்து நின்றhர்கள்.

 

“என்ன ? ….

“பண்ணை பங்களாவிலும், பங்களாவைச் சுற்றி இருக்கிற பகுதிகளிலும் தேடிப் பார்த்துட்டோம் ஸார் மணிமார்பன் ஸார் எங்கேயும் இல்லை…”

“ஸோ… இது புரளிதான்”

“நோ .. டவுட் ஸார்…”

முகில்வண்ணக் கோபமாய் எழுந்து நின்றார். ஒட்டு மொத்த போலீஸையும் பார்த்து பெரிய குரலில் இறைந்தார்.

“அப்படீன்னா… என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் எங்கே…”

நித்திலனும், சாதுர்யாவும் இன்னும் அதே நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க கஜபதி சுற்றும்முற்றும் பார்த்தபடி அவர்களை நெருங்கி காலியாய் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். நடுக்கமான குரலில் கூப்பிட்டார்.

“நி…நி…நித்திலன்…*

“என்ன ஸார்…. மணிமார்பனோட டெட்பாடியை போலீஸ் பார்த்துட்டாங்களா ..?

“பாடி இருந்தாத்தானே பார்க்க முடியும்?… “

என்ன ஸார்…. சொல்றீங்க?….

“பண்ணை பங்களாவுக்கு பின்னாடி இருக்கிற ஒரு குழியில்தானே மணிமார்பனை வெட்டுப்பட்ட காயங்களோடு உயிர்விட்டதைப் பார்த்தோம்….?

“ஆமா….”

“அந்த குழியில் பாடி இல்லை. எல்லா பக்கமும் தேடிப் பார்த்துட்டோம். எங்கேயும் இல்லை….. *

 

(தொடரும்)

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/five-star-dhrogam-chapter-15-318394.html

 

10 hours ago, ரதி said:

தொடர்ந்து விரைவாக இணையுங்கள் நவீனன்...எத்தனையோ படைப்பாளிகள்,இலக்கியவாதிகளிண்ட கதையை வாசிச்சாலும் ராஜேஷ்குமார்,பா.கோ.பிரபாகர் போன்றவர்களது கதையை வாசிப்பது தனி சுகம் 
 

விரைவாக இணைப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் கதையை போடவேண்டுமே. அதுதான் தாமதம்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரதி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இருந்த அத்துணை ஒட்டு மொத்த டி.வி.சானல்களும் வயிற்றைக் கலக்கும் பின்னணி இசையோடு பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பித்துவிட்டன.

'முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மருமகன் மணிமார்பன் மாயம்’

 

'அமைச்சரின் சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்து கொண்டு இருக்கும் போதே காணாமல் போன மர்மம்’

ஒரு பிரதான டி.வியில் மட்டும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகி வர்ணனையாளர் ஒருவர் கையில் மைக்கை வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

 

“நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இடம் கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணன் அவர்களின் பண்ணை பங்களா. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தாரமாய்க் கட்டப்பட்ட பங்களா இது. இந்த பங்களாவில்தான் அமைச்சரின் அறுபதாவது பிறந்தநாள் விழா அதிவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. தற்போதைய முதலமைச்சரும் விழாவில் கலந்து கொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முகில்வண்ணன் அவர்களின் மாப்பிள்ளையான மணிமார்பன் மாயமாகிவிட்டார். அவர் எங்கே போனார் என்று தெரியாமல் எல்லோரும் தேடிக் கொண்டிருந்த வேளையில் போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் அவர்களுக்கு ஒரு மர்ம நபரிடமிருந்து அநாமதேய செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. செல்போனில் மறுமுனையில் பேசிய நபர் 'மணிமார்பன் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உடல் பண்ணை பங்களாவுக்குள்ளேயே ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாகவும், சஷ்டியப்தபூர்த்திக் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு மணிமார்பனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யுங்கள் என்றும் செல்போனில் பேசிய நபர் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் உடனடியாய் முகில்வண்ணன் மகன் செந்தமிழை வரவழைத்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இந்த விழாவின் பாதுகாப்புக்காக வந்து இருந்த ஒட்டு மொத்த போலீஸும் இரண்டாக பிரிந்து பண்ணை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து மணிமார்பனின் உடலைத் தேடியிருக்கிறார்கள். உடல் கிடைக்கவில்லை. மணிமார்பன் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகளை இப்பொழுது கேட்கப் போகிறோம்.

டெலிவிஷன் திரையில் காட்சி மாற போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் இறுகிய முகத்தோடு பார்வைக்கு கிடைத்தார். அவருடைய முகத்துக்கு நேரே மைக்கை நீட்டியபடி வர்ணனையாளர் கேட்டார்.

“ஸார்… முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மாப்பிள்ளை மணிமார்பனுக்கு என்ன நேர்ந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

“எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை”

“அவர் உயிரோடு இருப்பாரா …. ?…

“தெரியவில்லை…. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அவருடைய உடல் பண்ணை பங்களாவில் எங்களுக்கு கிடைத்து இருக்கும்”

“அப்படியென்றால் உங்களுக்கு செல்போனில் வந்த தகவலில் உண்மை இல்லையென்று எடுத்துக் கொள்ளலாமா …. ?

“ஆமாம் அது தவறான தகவலாய்தான் இருக்க வேண்டும்”

“முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணன் மணிமார்பன் மாயமானதை பற்றி என்ன சொல்கிறார்?”

அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போன மனநிலையில் உள்ளார்கள். முகில்வண்ணனுக்கு அரசியலில் எத்தனையோ எதிரிகள். அவர்களில் யாராவது சந்தோஷமான இந்த சஷ்டியப்தபூர்த்தி விழாவை மேற்கொண்டு நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு குளறுபடியைச் செய்து இருக்கலாம்”

மேற்கொண்டு வர்ணனையாளர் கேள்வி கேட்கும் முன்பாக அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரன் கமிஷனர்க்கு பக்கத்தில் வந்து நின்றார்.

 

“ஸார்… ஒரு ரெண்டு நிமிஷம் தனியாய் பேசணும்”. கமிஷனர் டி.வியை விட்டு விலகி சந்தினுடன் தனியாயப் பேசினார்.

“என்ன விஷயம் ?,,

சந்திரன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார்.

“ஸார்..* மணிமார்பன் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை”

“எப்படி சொல்றீங்க ?,,

'பண்ணை பங்காவுக்கு பின்புறம் இருக்கிற காலியான இடத்தில் ஒரு குழிவானப் பகுதியின் அருகே மோப்ப நாயைக் கொண்டு போன போது நாய் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே படுத்துக் கொண்டது. அந்த இடத்தை சீன் ஆப் கிரைம் பார்த்தோம். மணலில் திட்டுத் திட்டாய் ரத்தம்”

 

-------

நேரம் நள்ளிரவை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தின் பின் வாசலில் இருட்டில் அந்த கார் வந்து நின்று என்ஜினை அணைத்துக் கொண்டு ஊமையானது.

 

காரின் டிரைவிங் ஸீட்டில் இருந்து நித்திலன் இறங்க, பின் சீட்டிலிருந்து கஜபதியும், சாதுர்யாவும் கதவை திறந்துகொண்டு வெளிப்பட்டார்கள். அலுவலகத்தின் பின்பக்கக் கதவு லேசாய் திறந்திருக்க மூன்று பேரும் பூனை நடை போட்டுக்கொண்டு உள்ளே போனார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து சற்றுத்தள்ளி மாடிப்படிகள் ஆரம்பமாக அதனுடைய அரையிருட்டில் ஏறினார்கள். முதல் நபராய் முன்னால் போய்க் கொண்டிருந்த நித்திலனின் செல்போன் வைபரேஷனில் அதிர்ந்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு கொடுத்தான்.

“ஸார்”

“என்ன நித்தி…வந்துட்டீங்களா …. மூணு பேரும்?… “

வந்துட்டோம் ஸார்…

பின்பக்க வாசல் வழியாய் வந்து மாடிப்படிகள் ஏறிட்டு இருக்கோம்…

“யார் கண்ணிலேயும் படலையே ?….

“இல்ல ஸார்”

“சரி வாங்க…. வெயிட் பண்ணிட்டிருக்கேன்”

நித்திலன் செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கஜபதியைப் பார்த்துச் சொன்னான்.

“பேசினது எங்க பாஸ்தான்..*

“தம்பி … இந்த விவகாரத்துல எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராதே ?” கஜபதி சொல்ல சாதுர்யா சிரித்தாள்.

“பயப்படாமே வாங்க ஸார்…. வருமானவரிதுறைக்கு யார் உதவி பண்ணினாலும் சரி, அவங்க எங்களுக்கு ஆருயிர் நண்பர்கள்”

மூன்று பேரும் மாடி வராந்தாவில் நடந்து கடைசியில் இருந்த அந்த அறைக்கு முன்பாய் போய் நின்றாகள். கதவு லேசாய் சாத்தியிருந்தது. நித்திலன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக, சாதுர்யாவும், கஜபதியும் பின் தொடர்ந்தார்கள்.

ஏர்க்கண்டிஷனர் லேசாய் உறுமிக் கொண்டிருந்த அந்த அறையில் மேஜைக்குப் பின்னால் சீ்ப் கமிஷனர் ஆ்ப் இன்கம்டாக்ஸ் அருள் சற்று பதட்டத்தோடு காணப்பட்டார். மூன்று பேரைப் பார்த்ததும் எதிரி இருந்த காலியான நாற்காலிகளைக் காட்டியபடி ”ப்ளீஸ்” என்றார்.

உட்கார்ந்தார்கள்.

நித்திலன் அருளை ஏறிட்டபடி சொன்னான்.

“ஸார்… இவர்தான் கஜபதி. முகில்வண்ணனுக்கு ரொம்பவும் வேண்டியவர். அந்த குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர். இவர் மட்டும் எங்களுக்கு சரியான நேரத்தில் ஒரு பொருத்தமான பொய்யைச் சொல்லி உதவி செய்யாமே இருந்திருந்தா நானும் சாதுர்யாவும் உங்க முன்னாடி இப்படி உட்கார்ந்து இருக்கமாட்டோம்”

 

அருள் சிறு சிரிப்போடு கஜபதியின் கையைப் பற்றி குலுக்கினார். “பொதுவா எனக்கு அரசியல்வாதிகள் மேல் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான மதிப்போ, மரியாதையோ கிடையாது. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டவரை நம் நாடு ஒரு நாடாய் இருந்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களை கடுமையாக பார்த்தது. அரசு அதிகாரிகளும் லஞ்சம் கேட்கமாட்டார்கள். ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது”

 

கஜபதி விரக்தியான புன்னகை ஒன்றை உதட்டில் காட்டிவிட்டு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

“ஸார்.. * சில மாதங்களுக்கு முன்பு வரை நானும் ஒரு மோசமான அரசியல்வாதிதான். கட்சியில் எனக்கு பெரிய பதவி எல்லாம் கிடையாது. மாவட்ட கிளைச் செயலாளர் போஸ்ட் மட்டும் கிடைச்சது. அந்த போஸ்;ட்ல இருந்துகிட்டே நான் முறைகேடாய் பணம் சம்பாதிச்சேன். நான் சம்பாதிச்ச பணம் ஒரு அம்பது கோடி தாண்டும். எந்த ஒரு அதிகாரம் இல்லாத பதவியில் இருக்கிற என்னாலேயே இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்போது ரெண்டு தடவை முதலமைச்சராய் இருந்த முகில்வண்ணன் எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிச்சிருப்பார்ன்னு சின்னதா கெஸ் ஒர்க் பண்ணிப்பாருங்க “

“500 கோடி இருக்குமா ?….

 

“5000 கோடி கோடி ஸார்…..அந்தப் பணம் எல்லாம் எந்த இடத்துல பத்திரமாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்”

“எந்த இடத்துல?,,,

“சொன்னா நம்பணும் ஸார்”

“சொல்லுங்க”

கஜபதி சொன்னார்.

அருள், நித்திலன், சாதுர்யா மூன்று பேர்களின் முகங்களிலும் அதிர்ச்சி அலைகள் பரவ ஒருவரையொருவர் கலவரமாய் பார்த்துக் கொண்டார்கள்.

(தொடரும்)

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-319019.html



 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கஜபதி! நீ இப்போ எங்க இருக்கே.. ? ராஜேஷ்குமாரின் ஃபைவ் ஸ்டார் துரோகம் - (17)

 


சீப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் அருள் தன்னுடைய வியப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கஜபதியை பார்த்தார்.

“நீங்க சொல்றது உண்மையா.......?”

கஜபதி 'உச்’ கொட்டினார்.

என்ன ஸார் நீங்க....?

நான் இப்ப சொன்னது வடிகட்டின உண்மை ஸார். நான் யார்கிட்டே பொய் பேசணும் யார்கிட்டே உண்மை பேசணும்னு எனக்கு தெரியும்.

இப்ப உங்கிட்ட பேசிட்டிக்கிறது நான் இல்லை ஸார் ....... என்னோட மனசாட்சி .... அருள் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நித்திலனையும், சாதுர்யாவையும் பார்வையால் ந்னைத்துவிட்டு கஜபதியிடம் குரலைத் தாழ்த்தினார்.

 

“நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஓரு விஷயம் சொல்லலாமா ?....

“சொல்லுங்க ஸார்……”

எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன் தன்னுடைய ஆட்சிகாலத்தில் முறைகேடாய் சம்பாதித்த 5000 கோடி ரூபாயை எங்கே பதுக்கி வெச்சிருக்கார்ன்னு கேட்டப்ப நீங்க ஓரு விஷயம் சொன்னீங்க இல்லையா

“ஆமா…….”

“அதை ஒரு வாக்குமூலம் மாதிரி தர முடியுமா ?...... “

இப்ப நான் சொன்னதே வாக்குமூலம் மாதிரிதானே ஸார்……?

” அருள் நித்திலனை பார்த்தார்.

“நித்தி ! நீ கஜபதிக்கு புரியற மாதிரி சொல்லு”

நித்திலன் கஜபதியை ஏறிட்டான்.

கஜபதி ஸார் ........... ஐ.டி. டிபார்ட்மெண்ட்டில் ஒரு புரொசீட்ஜர் இருக்கு..... அதாவது முகில்வண்ணன் மாதிரியான பெரிய ஆட்களின் வீடுகளுக்கு ரெய்டு போகும் போது எங்களுடைய மேலதிகாரிகளுக்கு நாங்க ஒரு வலுவான ஆதாரத்தைத் தரணும். அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் வீட்டை ரெய்டு பண்ண அனுமதி கொடுப்பாங்க ......... ஆனா அந்த ஆதாரம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெளியே வராது. அதாவது நீங்கதான் வாக்குமுலம் கொடுத்தீங்கன்னு வெளியுலகத்துக்குத் தெரியாது. அந்த ரகசியம் கடைசி வரைக்கும் பாதுகாக்கப்படும்.

 

“அப்படீன்னா சரி........... !... “

“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்பவும் நன்றி கஜபதி“ சொன்ன அருள் அந்த அறையில் இருந்த ஒரு சி.சி.டி.வி. காமிராவின் யூனிட்டை ஆன் செய்து விட்டு பேசினார்.

“இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டே வாங்க...... அது ஆடியோ வீடியோவாய் பதிவாயிடும்“.

“ கேளுங்க ஸார் “

“ உங்க பேர் கஜபதிதானே...... ?..... “

ஆமா ஸார் “

“ எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணனை உங்களுக்கு எவ்வளவு வருஷமாய் தெரியும்………..?“

“ முப்பது வருஷமாய் தெரியும்“

“ உங்க ரெண்டு பேரோட நட்பு எப்படிப்பட்டது ? “

“ ரொம்பவும் உணர்வுப்பூர்வமான நட்புதான். ஆரம்பத்துல அவர் பண்ணின ஊழல்களுக்கெல்லாம் நான்தான் மீடியேட்டராய் இருந்தேன். பணம் எட்டுதிசையிலிருந்தும் வந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சு. எல்லாமே கோடிக் கணக்குலதான்........ தன்னோட அதிகாரத்தை முறைகேடாய் பயன்படுத்தி அவர் முதல் அமைச்சராய் இருந்த காலத்தில் சம்பாதிச்ச பணம் மட்டும் 5000 கோடி இருக்கும். ...... ஸார் “

“இந்த 5000 கோடி பணத்தை முகில்வண்ணன் எந்த இடத்துல பதுக்கி வெச்சிருக்கார்ன்னு உங்களுக்குத் தெரியுமா......?”

“நல்லாவே தெரியும் ஸார் “

“எங்கேன்னு சொல்லுங்க....... “


“ஸார் ........ ஈ.சி.ஆர்ல இருக்கிற அந்தப் பண்ணை வீட்ல அம்பதுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கு. அந்த அறைகளுக்குக் கீழே பத்தடி ஆழத்துல செல்லர்கள் இருக்கு. பொதுவாக இது மாதிரியான பாதாள அறை போன்ற செல்லர்களில் அரிசி மூட்டைகளையும், தானிய வகைகளையும் பாதுகாப்பாய் அடுக்கி வைப்பாங்க. ஆனா முகில்வண்ணன் அதுக்கு பதிலாய் 5000 கோடி ரூபாயையும் அந்த செல்லர்களில் அடுக்கி வெச்சு அந்த கரன்சிகளுக்கு மேல் அரிசி மூட்டைகளை பரப்பினார். அந்த வேலையெல்லாம் நடந்த போது நானும் இருந்தேன். ஆனா ஒரு மாசத்துக்கு முந்தி நான் கேள்விபட்ட விஷயம் வேற மாதிரி இருந்தது.

 

“என்ன....... ?“

“முகில்வண்ணன் அந்த 5000 கோடி ரூபாயையும் வேற இடத்துக்கு கொண்டு போயிட்டார்“

“வேற இடம்ன்னா.....

எந்த இடம்........? “

“ஸார் ........ சென்னையிலிருந்து காஞ்சிபுரம் போற வழியில் செந்தட்டின்னு ஒரு கிராமம் வரும். கேள்விபட்டிருங்களா.....

“இல்லை... “

 

“சென்னைக்கும் காஞ்சிபுரத்திற்கும் நடுவில் அந்த செந்தட்டி கிராமம் இருக்கு ஸார். ரொம்பவும் வளமான கிராமம். வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளுமாய் பார்க்கவே குளிர்ச்சியாய் இருக்கும். அந்த கிராமத்தில் மட்டும் முகில்வண்ணனுக்கு நூறு ஏக்கர் நிலம் இருக்கு. அவர் அங்கே நிலம் வாங்க காரணம் முகில்வண்ணனோட குலதெய்வமான குடல் வாங்கி மாரியம்மன் கோயில் அந்த கிராமத்தில் இருந்ததுதான். ஓவ்வொரு அமாவாசையன்னிக்கும் அவரோட ஒட்டு மொத்த குடும்பமும் அந்த கோயிலுக்குப் போயிடும். முகில்வண்ணன் முதல் தடவை முதலமைச்சராய் இருந்த கால கட்டத்தில் அவரோட அப்பாவும், அம்மாவும் ஒரு வருஷ வித்தியாசத்துல அடுத்தடுத்து இறந்து போனாங்க. அந்த ரெண்டு பேரையும் முகில்வண்ணன் செந்தட்டி கிராமத்துக்கு கொண்டு போய் அவரோட சொந்த நிலத்துல அடக்கம் பண்ணி ரெண்டு பெரிய மணி மண்டபங்களை கட்டி, அதைச் சுற்றி ஒரு பெரிய நந்தவனத்தையே உருவாக்கியிருக்கார். நான் கூட மொதல்ல முகில்வண்ணனுக்கு அப்பா, அம்மா மேல் இவ்வளவு பாசமான்னு நினைச்சேன். கடைசியில் நான் கேள்விப்பட்ட விஷயம் வேற மாதிரி இருந்தது”

 

“வேற மாதிரின்னா…….?”

“அப்பா, அம்மாவுக்கு கட்டின மணி மண்டபங்களுக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதை உருவாக்கி மொத்தப் பணத்தையும் அங்கே கொண்டு போயிட்டார்”

“இந்த விஷயத்தை உங்களுக்கு சொன்னது யாரு?”

“ஒரு நம்பிக்கைக்கு உரிய நபர்.

அவர் பேச்சில் பொய் இருக்காது.

ஆனா அவரோட பேரை நான் சொல்ல மாட்டேன்”

“நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்தானா…..?”

“ஒரு பர்சண்ட் கூட பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை ஸார்.

முகில்வண்ணன் தன்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கட்டினது மணி மண்டபம் இல்லை ஸார்.

Money மண்டபம் …….

அந்த சமாதிகளுக்குக் கீழே இருக்கிற சுரங்கப் பாதையைக் கண்டு பிடிச்சுட்டா ரெண்டு கண்டெய்னர் அளவுக்கு பணம் கிடைக்கும் ஸார்……..”

கஜபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் சைலன்ஸ் மோடில் இருந்தபடி யாரோ அழைப்பதற்கு அடையாளமாய் விட்டு விட்டு வெளிச்சம் அடித்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். கஜபதியின் முதுகுத் தண்டுவடத்தில் லேசாய் மின்சாரம் பாய்ந்த உணர்வு முகில்வண்ணனின் பெயர் டிஸ்ப்ளேயில் தெரிந்தது. கஜபதி அருளை ஏறிட்டார்.

“ஸார் முகில்வண்ணன் கூப்பிடறார்”

“ஸ்பீக்கரை ஆன் பண்ணி பேசுங்க....!

கஜபதி ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசினார்.

“அண்ணே !”

கஜபதி! நீ இப்போ எங்க இருக்கே ?”

“வீட்ல தூங்கிட்டிருக்கேண்ணே !”

“சரி ....! உடனே புறப்பட்டு நம்ம பண்ணை வீட்டுக்கு வா”

“எதுக்கண்ணே ..... இந்த ராத்திரியில.....?”

“காரணம் சொன்னாத்தான் வருவியா...!”

“இதோ புறப்பட்டேண்ணே….!”

 

தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-part-17-320348.html

Link to comment
Share on other sites

“எ....எ.. என்ன ஸார்... சொல்றீங்க......?”.. ராஜேஷ்குமாரின் ஃபைவ் ஸ்டார் துரோகம் - (18)

கஜபதி செல்போனை அணைத்து விட்டு அந்த குளிரான ஏஸி அறையிலும் வியர்த்துப் போயிருந்த முகத்தை மேல் துண்டால் ஓற்றிக் கொண்டு, சீப் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ர் அருளையும், நித்திலன், சாதுர்யாவையும் லேசான கலவரம் படிந்த விழிகளோடு பார்த்தார்.

“முகில்வண்ணன் இந்த நேரத்துல என்னை எதுக்காக கூப்பிட்டார்ன்னு தெரியலையே ......?”

அருள் கேட்டார் “நீங்க ஐ.டி.டிபார்ட்மெண்ட்டுக்கு ஆதரவாய் இருக்கிறது ஓருவேளை அவர்க்குத் தெரிந்து இருக்குமோ ......?”

 

”அந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை ஸார் இந்த மிட் நைட் நேரத்துல எனக்கு போன் பண்ணி என்னை உடனடியாய் வரச்சொல்றார்ன்னா வேற ஏதாவது விஷயம் இருக்கலாம்...”

”வேற ஏதாவதுன்னா......?”

 

“ என்னால கெஸ் பண்ண முடியலை. அவரைப் போய்ப் பார்த்தாத்தான் தெரியும்...”

“ இந்த நேரத்துல அவரைப் போய் நீங்க பார்க்கிறது என்னோட மனசுக்கு சரியாப்படலை ..... நாளைக்குக் காலையில் போய் பார்க்கலாமே ......?”

 

“ வேண்டாம் ஸார்...... அவர் கூப்பிட்ட நேரத்துக்கு நான் போய்ப் பார்க்கலைன்னாத்தான் அவர்க்கு என் மேல சந்தேகம் வரும். நான் கிளம்பறேன் ...” கஜபதி சொல்லிக் கொண்டே எழுந்தார். சாதுர்யா குறுக்கிட்டாள்.

“ஓரு நிமிஷம் கஜபதி ஸார்...... “

“என்னம்மா ......?”

“ எனக்கொன்னமோ உங்க உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம்ன்னு என் மனசுக்குள்ளே ஓரு எண்ணம். நீங்க ஸ்பாட்டுக்குப் போய் முகில்வண்ணன்கிட்டே பேசும்போது உங்க செல்போனை ஆன் பண்ணி வையுங்க....அப்பத்தான் உங்களுக்குள்ளே எது மாதிரியான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்குன்னு எங்களுக்குத் தெரியும்...”

“ அதெல்லாம் வேண்டாம்மா...”

” ஏன் ...? ”

முகில்வண்ணனை சுற்றியிருக்கிற ஆட்கள் சாதாரண நபர்கள் இல்லை.... அவர்கள் ஓரு உளவுத்துறை மாதிரி செயல்படுவாங்க ..... நான் முகில்வண்ணன்கிட்டே பேசும்போது என்னோட செல்போனை ”ஆன்”ல இருக்கிறத்தை ஓருத்தன் பார்த்துட்டான்னாலும் அது ஓரு பிரச்சினையாயிடும். அங்கே எது மாதிரியான பிரச்சினை நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன். நீங்க என்னைப் பத்தி கவலைப்படாதீங்க ” சொன்ன கஜபதி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.

 

நித்திலன் எழுந்து பின்னாலேயே ஓடி வந்தான்.

“ ஸார் ! நான் வேணும்ன்னா உங்களை ஈ.ஸி.ஆர் எல்லை வரைக்கும் கொண்டு வந்து விடட்டுமா ......?”

“வேண்டாம் ..... நான் ஓரு டாக்ஸி பிடிச்சுப் போயிடறேன்.. !”

ஏதாவது பிரச்சினைன்னா எனக்கு போன் பண்ணுங்க ஸார்”

“கண்டிப்பாய்.. !” சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இருட்டில் இறங்கி மறைந்தார் கஜபதி.

 

கஜபதி ஓரு டாக்ஸி பிடித்து ஓரு மணி நேரம் பயணம் செய்து ஈ.ஸி.ஆரில் இருந்த முகில்வண்ணனின் பண்னை வீட்டை நெருங்கி நிசப்தமான நுழைவாயிலுக்கு முன்பாய் இறங்கிக் கொண்ட போது நேரம் இரண்டரை மணி.

குளிர்மிகுந்த கடல்காற்று சீராய் வீசி முகத்தை அலம்பிக் கொண்டிருந்தாலும் கஜபதிக்கு வியர்த்துக் கொட்டியது.

நுழைவு வாசலிலேயே முகில்வண்ணனுக்கு வேண்டிய நபர் சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான். கஜபதியைப் பார்த்த்தும் கையில் இருந்த சிகரெட் துண்டை காலுக்கு கீழே போட்டு நசுக்கிவிட்டு “வாங்கண்ணே உங்களுக்காகதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்“ என்றான். “

 

என்ன பிரச்சினை கோவிந்த் ...... அண்ணன் இந்த ராத்திரி நேரத்துல என்னைப் புறப்பட்டு வரச் சொல்லியிருக்கார்......?”

“தெரியல்லேண்ணே .... கமிஷனர் ஆதிமுலம் ராத்திரி பதினோரு மணியிலிருந்து இங்கேதான் இருக்கார்......“ கோவிந்தராஜ் பேசிக் கொண்டே நடக்க கஜபதி எகிறும் இருதயத்தோடு பின் தொடர்ந்தார்.

 

அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையிருட்டான அறை வந்தது. “ப“ வடிவத்தில் போடப்பட்டு இருந்த சோபாக்களில் முகில்வண்ணனும், அவருடைய மகன் செந்தமிழும், மப்டி உடையில் போலீஸ் கமிஷனர் ஆதிமுலமும் நிழல் உருவங்களாய் உட்கார்ந்திருந்தார்கள்.

கஜபதி கும்பிடு போட்டார்.

“வணக்கம் அண்ணே“

முகில்வண்ணன் இறுகிப் போன முகத்தோடு கரகரப்பான குரலில் கேட்டார்.

“ என்ன கஜபதி ...... நல்லா தூங்கிட்டிருந்தியா ......?”

“ஆமாங்கண்ணே.........மனசு சரியில்லை. வருத்தமாய் இருந்ததாலே ஓரு க்வார்ட்டார் அடிச்சுட்டுப் படுத்துட்டேன். நல்ல தூக்கம். உங்க போன் வந்ததும் தூக்கம் காணாமே போயிருச்சு.... சொல்லுங்கண்ணே என்ன விஷயம்......?”

 

“மொதல்ல இப்படி உட்காரு.... கஜபதி“

“பரவாயில்லைண்ணே .... இப்படியே நிக்கறேன்“

“பேச வேண்டியது நிறைய இருக்கு ...... உட்காரு கஜபதி.....!“

பதைபதைப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் கஜபதி முகத்தை இயல்பாய் வைத்துக்கொண்டு எதிரில் காலியாக இருந்த நாற்காலிவொன்றில் உட்கார்ந்தார்.

 

அறையில் சில விநாடிகளுக்கு ஓரு வேண்டாத நிசப்தம் நிலவ அதைக் கலைத்தார் முகில்வண்ணன்.

“ நம்ம வீட்டு மாப்பிள்ளை மணிமார்பன் நேத்து காலையில் ஃபங்க்சன் நடந்துகிட்டு இருக்கும்போதே காணாம போயிட்டார். அது பத்தின விபரம் ஏதாவது உனக்குத் தெரியுமா கஜபதி......?”

“அதை நினைச்சுத்தாண்ணே மனசு உடைஞ்சு போயிருக்கிறேன்...... அவர் அப்படி காணாமே போறதுக்கு ரெண்டு வயசு குழந்தையா ....... என்ன ......?”

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இப்போது பேச்சில் குறுக்கிட்டார்.

“கஜபதி உங்களுக்கு ஓரு உண்மையெச் சொல்லட்டுமா.....!“

“என்ன ஸார்....... ?“

“மாப்பிள்ளை மணிமார்பனை பண்னை வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற ஓரு பள்ளத்துல வெச்சு தாக்கியிருக்காங்க. அந்த இடத்துல உறைஞ்சு போயிருக்கிற ரத்தத்தைப் பார்க்கும்போது அரிவாள் போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்“

“கஜபதியின் ஓட்டுமொத்த உடம்பும் ஓரு கலவர பூமியாய் மாறினாலும் அதை வெளிக்காட்டாமல் போலியான அதிர்ச்சியோடு கேட்டார்.

“எ....எ.. என்ன ஸார் ...... சொல்றீங்க. ......?”

“உண்மையைச் சொல்லிட்டிருக்கேன்...யாரோ திட்டம் போட்டு ஃபங்க்சன் நடக்கிற பண்னை வீட்டுக்குள்ளே வந்து மணிமார்பனை தீர்த்துக் கட்ட நினைச்சு இருக்காங்க....ரத்த சேத அளவை பார்க்கும்போது மணிமார்பன் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லைன்னு என்னோட மனசுக்குப்படுது“

 

கஜபதி முகில்வண்ணனை ஏறிட்டார்.

“என்னண்ணே.... கமிஷனர் இப்படி சொல்றார்.......?”

அப்படி மாப்பிள்ளையை வெட்டியிருந்தா அவரு அந்த இடத்துலதானே விழுந்து கிடந்து இருக்கணும் .......?”

“உடம்பை கடத்தியிருக்காங்க.....!“ என்றார் முகில்வண்ணன்.

“அது எப்படி அண்ணே இவ்வளவு பாதுகாப்பு இருக்கிற இந்த இடத்திலிருந்து கடத்தியிருக்க முடியும்.......?”

“இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி கஜபதி......?”

அப்படி கடத்தினது யார்ங்கிறதையும் கண்டுபிடிச்சுட்டோம்“

“அ.. அப்படியா.... யார்ண்ணே அது......?”

“அதை நான் சொல்றதைவிட நீ சொன்னாத்தான் நல்லாயிருக்கும்....!“

 

“என்னண்ணே.... சொல்றீங்க. ......?”

“உனக்கு அவனைத் தெரியும்ன்னு சொல்றேன் கஜபதி“

 

(தொடரும்)


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-part-18-321048.html

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்னண்ணே சொல்றீங்க......? ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (19)

-ராஜேஷ் குமார்

கஜபதி நிலை குலைந்து போனார். எழுந்து நின்று பதறினார்.

“அண்ணே எனக்கு அவனைத் தெரியுமா..... என்னண்ணே சொல்றீங்க......?”

முகில்வண்ணன் அவரை இடது கையால் அமர்த்தினார். “கஜபதி, ஏன் இப்படி பதட்டப்படறே......?” ஏதோ நீயே தப்பு பண்ணிட்ட மாதிரி புலம்பறே ......! என்னோட மாப்பிள்ளை மணிமார்பனை தாக்கி கடத்திவிட்டு போன ஆளை உனக்குத் தெரியும். ஏன்னா வாட்டர்கேன் சப்ளை பண்ற அந்தக் கம்பெனி ஓனரையும், அந்த கம்பெனியில் வேலை செய்யற ஆட்களையும் உனக்குத்தான் தெரியும்......! 

 

“என்னண்ணே செல்றீங்க...... எனக்கு ஓன்றுமே புரியலை ......!

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இப்போது பேச்சில் குறுக்கிட்டார். “உங்களுக்குப் புரியும்படியா நான் சொல்றேன். நேற்று காலை மாப்பிள்ளை மணிமார்பனை காணோம்ன்னு எல்லோரும் தேடிகிட்டு இருக்கும்போது குடிதண்ணீர் கேன்களை விழா மேடைக்குப் பின்னாடி அடுக்கி வெச்ச “அமிர்தம் வாட்டர் சர்வீஸ்“ கம்பெனிக்கு சொந்தமான வேன் ஓண்ணு இந்த வீட்டோட பின்பக்க மெயின் கேட் வழியா வெளியே போயிருக்கு. அந்த வேனை செக் பண்ண நிறுத்தியிருக்கார் செக்யூரிட்டி வீராசாமி . ஆனா அந்த வேன் டிரைவர் வேனை நிறுத்தாமே அந்த செக்யூரிட்டிகிட்ட “இன்னும் நூறு கேன் வாட்டர் சப்ளை பண்ணணும். இப்படி நிறுத்தி நிறுத்தி சோதனை போட்டுகிட்டு இருந்தா சரியான நேரத்துல எப்படி சப்ளை பண்றதுன்னு சத்தம் போடவே செக்யூரிட்டி வேனை சோதனை போட்டாம அனுப்பிட்டார். அப்படி அனுப்பினபிறகுதான் செக்யூரிட்டிக்கு அந்த காட்சி ஞாபகத்துக்கு வந்து இருக்கு.......!

 

அது என்ன காட்சி என்பது போல் கஜபதி போலீஸ் கமிஷனரை பார்க்க அவர் சில விநாடிகள் மெளனம் சாதித்துவிட்டு தொடர்ந்தார்.

அந்த வேனை ஓட்டிட்டு வந்த டிரைவரின் இடது தோள் பட்டை சட்டையில் ரத்தக் கறைகள் இருந்ததை பார்த்து இருக்கார் செக்யூரிட்டி. அது அந்த சமயத்துல பெரிய விஷயமாக தெரியல. ஆனா மாப்பிள்ளை மணிமார்பனை காணோம்ன்னு எல்லோரும் தேடிகிட்டு இருந்த போதுதான் அந்த ரத்தக் கறை விஷயம் ஞாபகம் வந்து இருக்கு. உடனே செக்யூரிட்டி வீராசாமி ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வந்து என்கிட்டே விஷயத்தைச் சொன்னார். செக்யூரிட்டி சொன்ன விபரங்களை வெச்சுப் பார்க்கும்போது மணிமார்பன் தாக்கப்பட்டு அந்த வேன் டிரைவரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரவேண்டியிக்கிறது. உங்களுக்கு அந்த அமிர்தம் வாட்டர் சர்வீஸ் கம்பெனியோட ஓனரைத் தெரியும்தானே.....?”

 

கஜபதி கலங்கிப் போனவராய் தலையாட்டினார்.

“தெரியும்“

“அவரோட பேர் என்ன......?”

“அமிர்தலிங்கம்.......“

“குடிதண்ணீர் கேன் ஏற்பாடுகளை எல்லாம் இந்த விழாவுக்காக பண்ணிக் கொடுத்தது நீங்கதானே......?”

”ஆமா...... ஸார்...... ”

”மணிமார்பன் தாக்கப்பட்டு காணாமே போனதுக்கும் வாட்டர் சர்வீஸ் ஓனர் அமிர்தலிங்கத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா......?”

”நான் அப்படி நினைக்கலை ஸார்...... ஏன்னா அமிர்தலிங்கத்தை எனக்கு பல வருஷ காலமாய் தெரியும். எந்த ஓரு அரசியல் கட்சியையும் சேராதவர்... தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பவர். கடவுள் பக்தி ரொம்பவும் அதிகம். கோயில் விழாக்களுக்கெல்லாம் தண்ணீரை இலவசமாகவே சப்ளை பண்ணக்கூடியவர். அவர் இப்படிப்பட்ட படுபாதகமான வேலையை பண்ணியிருக்கமாட்டார்”

 

”ஓரு வேளை அவருக்கே தெரியாமே அந்த வேன் டிரைவர் வேறு யாருடைய பேச்சைக் கேட்டு மணிமார்பனை தாக்கி வேன்ல கடத்திட்டுப் போயிருக்கலாமோ......?”

”அப்படியிருக்கவும் வாய்ப்பு இருக்கு ஸார் .......! ”

சரி..... அந்த வேன் டிரைவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா கஜபதி ......?”

”தெரியாது.... அமிர்தலிங்கத்தை கேட்டா தெரியும்... ”

”ம்.... கேளுங்க..... நானோ போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற வேறு எந்த அதிகாரியோ இதுவரைக்கும் அமிர்தலிங்கத்துக்கு போன் பண்ணியோ அல்லது நேரிடையாகவோ விசாரிக்கலை...... நீங்க போன் போட்டு பேசுங்க.... விஷயத்தை சொல்லாமே அந்த வேன் டிரைவர் யார் எப்படிப்பட்டவன் மட்டும் விசாரிங்க”

“ஸார்...... இந்த மிட் நைட்ல போன் பண்ணி பேசினா அது சரியாய் இருக்குமா ......?”

“இது மாதிரியான விஷயங்களுக்கு இதுதான் சரியான நேரம்.... ம்.... போன் பண்ணுங்க....... “

கஜபதி சில விநாடிகள் தயங்கிவிட்டு தன் செல்போனை எடுத்து அந்த அந்த அமிர்தலிங்கத்தை தொடர்பு கொண்டார். நல்ல தூக்கக் கலக்கத்தில் அவர் பேசினார். செல்போனின் ஸ்பீக்கர் ஆனில் இருந்தது.

 

“என்ன கஜபதி இந்த அகால வேளையில் எனக்கு போன் பண்றே...ஏதாவது மோசமான சம்பவமா.......?”

“ஆமா .....ஓரு சரியான விபரம் உன் கிட்டயிருந்து எனக்கு வேணும் . எதையும் மறைக்காமல் சொல்லணும்..... பொய் சொல்லிடாதே பிரச்சினையாயிடும்“

நீ பேசற விஷயத்தை பார்த்தா விவகாரம் பெரிசாயிருக்கும் போலிருக்கே......?”

“பெரிசுதான்...... எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன் வீட்டு விசேஷத்துக்கு குடி நீர் கேன் சப்ளை பண்ண எந்த வேன் டிரைவரை நீ அனுப்பி வைச்சேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா......?”

“ இருக்கே....... “

“ யாரு.. “

“ நீலகண்டன் “

“ ஆள் எப்படி......?”

“ எப்படின்னா ......?”

“ பழக்கவழக்கம்தான்“

“ அவன் வேலைக்கு சேர்ந்து ஆறுமாசம்தான் ஆச்சு. நல்ல டைப். சொன்ன வேலையைப் பண்ணிட்டு போயிட்டே இருப்பான்“

“ அந்த நீலகண்டனை வேலைக்கு சேர்க்கிறதுக்கு முந்தி அவனோட பின்னணி விசாரிச்சிங்களா ......?”

“ம்.... விசாரிச்சேன்..... ஆறுமாசத்துக்கு முன்னாடி வரை ஃபஸ்ட் அண்ட் பெஸ்ட் ட்ராக் கால் டாக்ஸியில் வேலை பார்த்து சம்பள பிரச்சினையில் வெளியே வந்திருக்கிறான். கல்யாணம் இன்னும் இல்லை....... சொந்த ஊர் நாகர்கோவில். இதுவரைக்கும் அவன் மேல எந்த ஓரு ரிமார்க்கும் இல்லை.... ஆனா நீ இப்போ போன் பண்ணியிருக்கிறதைப் பார்த்தா அங்கே ஏதாவது பிரச்சினை பண்ணியிருப்பான் போல் தெரியுது“

 

“அமிர்தம்.....இன்னிக்கு ராத்திரி நீ டி.வி. ந்யூஸ் பார்த்தியா ...?”

”ம்.... பார்த்தேன். எக்ஸ் சி.எம்.முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனை காணாம போன நியூஸ்தானே...?”

”ஆமா..... அந்த சம்பவத்துக்கும், நீலகண்டனுக்கும் ஏதோ ஓரு வகையில் சந்தேகம் இருக்குன்னு போலீஸ் சந்தேகப்படுது....”

”எதனால அந்த சந்தேகம்...?”

”குடி நீர் கேன்களை சப்ளை பண்ணிட்டு வெளியே போகும் போது வேனை சோதனை போடக்கூடாதுன்னு நீலகண்டன் செக்யூரிட்டிகிட்டே விவாதம் பண்ணியிருக்கான்..... செக்யூரிட்டி விட்டுட்டார். ஆனா நீலகண்டனின் சட்டையில ரத்தக் கறை இருந்ததை செக்யூரிட்டி பார்த்து இருக்கார்.. இந்த விபரங்கள் எல்லாம் இப்பத்தான் தெரிய வந்தது”

 

”இந்த பிரச்சினையெல்லாம் வெச்சு பார்க்கும் போது மணிமார்பன் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதற்கும், நீலகண்டனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீ சந்தேகப்படறே இல்லையா கஜபதி...?”

“ஆமா ..... “

“மறுமுனையில் அமிர்தலிங்கம் குரலைத் தாழ்த்தினார்.

“கஜபதி.... நீ இப்ப எங்கேயிருந்து போன் பண்ணி பேசிட்டிருக்கே...?”

“ என்னோட வீட்லயிருந்துதான்“

 

“நான் இப்ப சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீ ஷாக் ஆக வேண்டாம்“

“சொல்லு .... என்ன விஷயம்“

“நான் இப்போ ராயப்பேட்டை ஜெனரல் ஹாஸ்பிடல்ல இருக்கேன்“

ஹாஸ்பிடல்ல இருக்கியா “

ஆமா ..... “

“யார்க்கு என்ன உடம்பு“

“நீலகண்டன் இப்போ உயிரோடு இல்லை....பாடி மார்ச்சுவரியில இருக்கு“

(தொடரும்)
Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-19-321662.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சத்தையும் விரைவாய் இணையுங்கோ 

Link to comment
Share on other sites

"அமிர்தம் நீ என்ன சொல்ற...?" ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (20)
 

-ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் அமிர்தம் சொன்னதைக் கேட்டு முகில்வண்ணன், போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், செந்தமிழ் மூன்று பேரும் அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார்ந்து நேர்கோடுகளாய் மாறினார்கள்.

கஜபதியும் திகைத்து மேற்கொண்டு பேச முடியாமல் திணற கமிஷனர் மேற்கொண்டு பேசுமாறு கண்ணால் சைகை காட்டினார்.

கஜபதி தோளில் போட்டிருந்த துண்டால் முக வியர்வையை ஓற்றியபடி பேச்சைத் தொடர்ந்தார்.

“அமிர்தம் ......நீ என்ன சொல்ற......? அந்த வேன் டிரைவர் நீலகண்டன் இப்போ உயிரோடு இல்லையா......? “

 

“ஆமா...... நான் இப்போ இந்த ராத்திரி நேரத்துல ராயப்பேட்டை ஜி.எச்சிலிருந்துதான் பேசிட்டிருக்கேன்“

“ஏன் ..... என்னாச்சு...... அவனுக்கு......? “

“ஓரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் ஓரு டாஸ்மார்க் கடை பாரில் இருந்து யாரோ ஓருத்தர் எனக்கு போன் பண்ணி உங்ககிட்ட வேன் டிரைவராய் வேலை பார்க்கிற நீலகண்டன் இங்கே குடிச்சுட்டு போதை தெளியாமே ரோட்டோரமாய் விழுந்து கிடக்கிறார். அவர்க்கு மனைவி குடும்பம்ன்னு எதுவும் இல்லாததினால உங்களுக்கு தகவல் தர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டார்“

“பேசினது யாரு ......? “

“தெரியலை..... “

“எந்த நெம்பரிலிருந்து உனக்கு போன் வந்தது......? “

“நீலகண்டனோட செல் நெம்பரில் இருந்துதான்..... “

“அதாவது நீலகண்டனோட செல்போனையே எடுத்து உனக்கு போன் பண்ணி தகவல் சொல்லியிருக்கான்“

”ஆமா...... ” ”

சரி, அந்த நீலகண்டன் எப்படி செத்தான் ......? போதை அதிகமாய் இருந்ததுதான் காரணமா......? “

”இல்லை..... ”

”பின்னே..... ?”

”அவன் தலையோட பின்பக்கத்துல ஓரு பெரிய ரத்த காயம் இருந்தது. நீலகண்டனை மொதல்ல ஓரு பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனேன். அங்கிருந்த டாக்டர்ஸ் ரத்த காயத்தை பார்த்துட்டு ராயப்பேட்டை ஜி. ஹெச்சுக்கு கொண்டு போகச் சொல்லிட்டாங்க...... கொண்டு போனேன்”

 

”அந்த சமயத்துல நீலகண்டனோட உடம்புல உயிர் இருந்ததா......? “

ம்.... லேசா முனகிட்டு இருந்தான், அவன்கிட்ட பேச்சு கொடுத்து பார்த்தேன். எந்த பதிலும் இல்லை ...... ராயப்பேட்டை ஜி. ஹெச்ல டாக்டர்ஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கும்போதே உயிர் போய்விட்டது. பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணாமே கொடுக்க முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க...... பாடி இப்ப மார்ச்சுவரியில இருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல கஜபதி. நீலகண்டனுக்கு குடும்பம்ன்னு எதுவும் இல்லை. சிந்தாதிரிப்பேட்டை கூவம் கெனால் ரோட்ல ஓரு வீடு எடுத்து தங்கியிருக்கான். இப்ப நீ சொல்ற விஷயங்களை எல்லாம் கேட்டா என்னோட அடி வயிறு கலங்குது...... விவகாரம் பெரிசாயிருக்கும் போலிருக்கே.....! ”

 

“அமிர்தம் ......நீ பயப்படாதே..... இன்னும் ஓரு பத்து நிமிஷம் கழிச்சு உனக்கு போன் பண்றேன்... “ சொல்லி செல்போனின் இணைப்பை துண்டித்த கஜபதி முகில்வண்ணனை ஏறிட்டார்.

“அண்ணே நான் ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு போய் அமிர்தத்தை பார்க்கட்டுமா......? “

முகில்வண்ணன் இருண்டு போயிருந்த முகத்தோடு கமிஷனரிடம் திரும்பினார்.

“என்ன பண்ணலாம் ஆதிமுலம்......?”

“ ஸார்.... கஜபதி இப்போ ராயப்பேட்டை ஜி. ஹெச்சுக்கு போறதால எந்த ஓரு பிரயோஜனமும் இல்லை. உங்க மாப்பிள்ளை மணிமார்பனுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வேற ஓரு வழியில்தான் முயற்சி பண்ணனும் ....... “ சொன்ன கமிஷனர் ஆதிமுலம் செல்போனை எடுத்துக் கொண்டார். காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஓரு எண்ணைத் தொட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.

 

“க்ரைம் ப்ராஞ்ச்“

“எஸ்...... ஸார்“

“மிஸ்டர் வேல்முருகன் ......?”

“ஸ்பீக்கிங் ஸார்...... “

“வேல்முருகன் ........ திஸ் ஈஸ் வெரி இம்பார்ட்டண்ட் நீங்க உடனடியாய் ஓரு இன்வெஸ்டிகேஷன்ல இறங்கணும். நாளைக்குக் காலை சூரியன் உதிக்கிறதுக்கு முன்னால் எனக்கு ஓரு யூஸ்புல்லான ரிப்போர்ட் வேணும்.......! நான் சொல்றதை கவனமாய் கேளுங்க...... “

 

“எஸ்...... ஸார்“

******

 

அழைப்பு மணி கதறும் சத்தம் கேட்டு அப்போதுதான் ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் இருந்து திரும்பியிருந்த அமிர்தலிங்கம் போய்க் கதவைத் திறந்தார்.

வெளியே

– கஜபதியும், அவரோடு திடகாத்ரமான ஓரு இளைஞனும் நின்றிருப்பதை பார்த்துவிட்டு முகம் மாறினார்.

“என்ன கஜபதி ........ மறுபடியும் போன் பண்ணுவேன்னு நினைச்சேன்.... “

“அதான் நேர்லயே வந்துட்டேனே.....! இது பெரிய இடத்து விவகாரம். காணாமே போனது சாதாரண நபர் கிடையாது. முன்னாள் முதலமைச்சரோட மாப்பிள்ளை...... அதுதான் நேரம் காலம் பார்க்காம இன்வெஸ்டிகேஷன் போயிட்டிருக்கு.... இவர் க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி. பேரு வேல்முருகன் இவரோட விசாரணைக்கு நீ ஓத்துழைப்பு தரணும்.....! “

 

அமிர்தலிங்கம் அந்த இளைஞனைப் பார்த்து ஓரு கும்பிடு போட்டார். “வணக்கம் ஸார்“

வேல்முருகன் பதிலுக்கு “வணக்கம்“ சொல்லி கைகளை குவித்துவிட்டு அதிரடியாய் அந்த கேள்வியை கேட்டார்.

வேன் டிரைவர் நீலகண்டனோட பின்னந்தலையில் ஓரு ரத்த காயம் இருந்ததாய் சொல்லியிருக்கீங்க. அந்தக்காயம் எப்படி ஏற்பட்டதுன்னு டாக்டர்ஸ்கிட்டே கேட்டீங்களா......?”

“கேட்டேன் ஸார்“

“அவங்க பதிலுக்கு என்ன சொன்னாங்க......?”

“போஸ்ட்மார்ட்டம் பண்ணின பிறகுதான் அதைப்பத்தி சொல்ல முடியும்ன்னு சொல்லிட்டாங்க.....! ““

“நீலகண்டனுக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததா......?”

“அப்படியெல்லாம் இருந்த மாதிரி தெரியலை ஸார்“

“முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனை பற்றி நீலகண்டன் என்னிக்காவது உங்ககிட்ட பேசியது உண்டா......?”

“இல்லை ஸார்“

“சரி ..... அவன் வீடு சிந்தாதிரிப்பேட்டையில் எங்கே இருக்குன்னு தெரியுமா......?”

“தெரியும் ஸார்“

“வாங்க வந்து காட்டுங்க......“

“இப்பவேவா......?”

“ஆமா ........ இதுக்கெல்லாம் ராகு காலம் எமகண்டம் பார்த்துட்டு இருக்க முடியாது. புறப்படுங்க..... அவன் வீட்டின் பூட்டை உடைச்சு உள்ளே போய் பார்த்தாத்தான் ஏதாவது தடயம் கிடைக்கும்“

புறப்பட்டார்கள்.

அந்த நள்ளிரவு நேரத்து சென்னையின் போக்குவரத்தற்ற சாலையில் போலீஸ் ஜீப் புயல் காற்றைச் சீறி அரைமணி நேரம் பயணித்து சிந்திரிப்பேட்டையின் எல்லைக்குள் நுழைந்தது.

காற்றில் நிரந்தரமாய் உறைந்து போயிருந்த கூவத்தின் மணத்தோடு சாலையின் இரண்டு பக்கமும் குடிசைகள் விடாப்பிடியாய் வந்து கொண்டிருக்க அமிர்தலிங்கம் டிரைவருக்கு வழி சொல்லிக் கொண்டே வந்தார்.

“ இன்னும் நேரா போங்க. கூவம் கெனால் ரோடு வரும்... ரோட்டுக்கு முன்னாடியே முப்பாத்தாள் கோயில் வரும். அதுக்கு பக்கத்து சந்துல கடைசி வீடு. சந்துக்குள்ள ஜீப் போகாது. கோயிலுக்குச் சற்று தள்ளி நிறுத்திவிட்டு நடந்துதான் போகணும்.....! “

அவர் சொன்னபடியே ஜீப் பயணித்து கோயிலுக்கும் பக்கத்தில் போய் நின்றது. அமிர்தலிங்கம் முதல் ஆளாய் இறங்கி அந்த சந்துக்குள் நடந்தார். கஜபதியும், வேல்முருகனும் தொடர்ந்தார்கள்.

குப்பைத்தொட்டி அருகே படுத்து இருந்த நாய் ஓன்று எழுந்து நின்று குரைக்கலாமா வேண்டாமா என்று சில விநாடிகள் யோசித்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டது.

ஓரு நிமிட நடை

அமிர்தலிங்கம் நின்றார்.

“இந்த வீடுதான் ஸார்“

வேல்முருகன் அந்த வீட்டை பார்த்தார். பழைய வீடு. சிதிலமான படிக்கட்டுகள். அரையிருட்டில் நிதானமாய் படிகளில் ஏறினார்.

வீடு பூட்டி இருப்பதற்கு அடையாளமாய் ஓரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த “மாஸ்டர் கீ பன்ச்“சை எடுத்துக்கொண்ட வேல்முருகன் அந்த பூட்டை திறப்பதற்கு தகுதியான ஓரு சாவியைத் தேடிக்கொண்டிருந்த போது

– அந்த சத்தம் கேட்டது.

வீட்டுக்குள் யாரோ நடக்கும் சத்தம்.

அதைத் தொடர்ந்து ஓரு நாற்காலி இழுபடும் சத்தம்.

(தொடரும்)


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-20-322422.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீ சொன்னபடி வேலையை முடிச்சாச்சு..

ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (21)


வேல்முருகன் சற்றே அதிர்ந்து போனவராய் கையில் சாவிக்கொத்தோடு கஜபதியையும், அமிர்தலிங்கத்தையும் மாறி மாறி பார்த்தபடி கேட்டார்.

"வீட்டுக்கு உள்ளேயிருந்து ஏதோ சத்தம் வர்ற மாதிரி இல்லை......? "

"ஆமா ஸார்..... யாரோ நடக்கிற மாதிரியும், நாற்காலியை தள்ளிப்போடற மாதிரியும் இருக்கு "

"இப்ப என்ன பண்ணலாம்......? "

" ஸார்..... உள்ளே இருக்கிறது திருடனாய் இருக்கலாம்"

"பூட்டின வீட்டுக்குள்ளே எப்படி திருடன்......? "

"வீட்டுக்கு பின்புறமாய் வந்திருக்கலாம் ஸார்"கஜபதி சொல்ல அமிர்தலிங்கம் குறுக்கிட்டு மறுத்தார்.

" ஸார்..... நான் இந்த வீட்டுக்கு இரண்டு தடவை வந்திருக்கேன். வீட்டுக்கு பின்புறம் வழி கிடையாது"

" நிச்சயமாய் தெரியுமா ......? "

"தெரியும் ஸார்"

" சரி ..... நான் இப்ப இந்த "மாஸ்டர் கீ பன்ச்"சால் இந்தப் பூட்டை "அன்லாக்"பண்றேன். உள்ளே இருக்கும் நபர் நம்மைத் தாக்க முயற்சி பண்ணலாம். அலர்ட்டாய் இருக்கணும் "

வேல்முருகன் சொல்லிக்கொண்டே எதிரில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு நான்கைந்து சாவிகளை கொடுத்த பிறகு ஓரு சாவியின் நுழைவுக்குப்பின் சுலபமாய் திறந்து கொண்டது.

வேல்முருகன் காலால் தள்ளினார். அது உள் வாங்கிக் கொண்டது.

வீட்டுக்குள் ஓரு ஜீரோ வாட்ஸ் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க அந்த சோகையான வெளிச்சத்தில் ஓரு சிறிய பீரோ, மேஜை, டீபாய், டி.வி. தெரிந்தது.

வேல்முருகன் தன்னிடம் இருந்த பிஸ்டலை சற்றே உயர்த்திப் பிடித்துக்கொண்டு எச்சரிக்கையோடு உள்ளே நுழைந்தார்.

 

அவரைத் தொடர்ந்து கஜபதியும், அமிர்தலிங்கமும் மிரண்ட பார்வைகளோடு பின் தொடர்ந்தார்கள். இரண்டே அறைகள். முதல் அறையில் யாரும் இல்லை.

இரண்டாவது அறையான படுக்கையறையில் கட்டிலும், மெத்தையும் பார்வைக்கு தட்டுப்பட்டது. வேல்முருகன் சுவரில் இருந்த சுவிட்சைத் தேய்க்க ஓரு எல்.இ.டி. பல்பு ஓளிர்ந்து வெளிச்சத்தில் அறையை நிரப்பியது.


 "வீட்டுக்குள்ளே யாரும் இருக்கற மாதிரி தெரியல ஸார்"

"சத்தம் கேட்டதே......? "

"அது பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தமாய் கூட இருக்கலாம் ஸார். பொதுவாக இது மாதிரியான ராத்திரி வேளைகளில் பக்கத்து வீடுகளில் கேட்கிற சத்தம் கூட நம்ம வீட்ல கேட்கிற மாதிரி இருக்கும்"

 

"மே..... பி...... " என்று தலையசைத்த வேல்முருகன் அந்த அறையிலிருந்து நகர முயன்ற விநாடி சட்டென்று நின்றார். கஜபதி குழப்பமாய்ப் பார்த்தார்.

"என்ன ஸார்......? "

"ஏதோ வாசனை வரலை......? "

"வாசனையா......? "

"எஸ்...... ஏதோ பூவாசனை........ அநேகமாய் மல்லிகை வாசனை ....!"

"எனக்கு வரலை ஸார்......? "

ஓரு போலீஸ்காரனுக்கும், மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...... " சொன்னவர் சட்டென்று குனிந்து கட்டிலின் அடியில் பார்த்தார்.

மஞ்சள் நிற சேலையில் ஓரு பெண் பிராக்கெட் குறியைப்போல் உடம்பை வளைத்து படுத்திருந்தாள்.

வேல்முருகன் குரல் கொடுத்தார்.

"பார்த்துட்டோம்....... வா...... வெளியே...... "

சில நொடிகளுக்குப்பின் அந்தப்பெண்ணின் உடம்பு மெல்ல அசைந்தது. மெதுவாய் ஊர்ந்து வெளியே வந்தாள். தடுமாற்றமாய் எழுந்து நின்றாள். கை நடுக்கத்தோடு கும்பிட்டாள். அவள் தலையில் இருந்த மல்லிகைச்சரம் மூச்சையடைக்கிற மாதிரி மணத்தது. "

 

ஸார்..... என்னை ஓன்றும் பண்ணிடாதீங்க ஸார்"

அவளை நெருங்கினார் வேல்முருகன். தன் சுட்டுவிரலை உயர்த்தினார்.

"ஏய்..... நீ யாரு ....... பூட்டியிருக்கிற இந்த வீட்டுக்குள்ளே என்ன பண்ணிட்டிருக்கே....... எப்படி உள்ளே வந்தே......? "

"ஸ ... ஸ....ஸார்..... என்னை வீட்டுக்குள்ளே வெச்சு பூட்டிட்டு போனது நீலகண்டன்தான்...... என்னை தப்பா நினைக்காதீங்க ஸார்"

"நீலகண்டன் உன்னை பூட்டி வெச்சுட்டு போனானா......? "

"ஆமா ஸார்..... நீலகண்டனுக்கும் எனக்கும் ரொம்ப நாளாவே பழக்கம்..... "

"பழக்கம்ன்னா......? "

அது..... அது... வந்து...... "

"புரியுது...... நீ தொழில்காரியா......? "

 

"ஆமா ஸார்..... வாரத்துக்கு ஓரு தடவை என்னை இதுமாதிரியான ராத்திரி நேரத்துல வரச் சொல்லுவார். நானும் வருவேன். விடிகிற வரை இருந்துட்டு போவேன்.... இன்னிக்கும் அது மாதிரிதான் வந்தேன். சரக்கும், சாப்பிட பிரியாணியும் வாங்கி வர்றேன். .... நீ வீட்டுக்குள்ளே இருக்கிறது பக்கத்து வீட்டுகாரங்களுக்குத் தெரிய வேண்டாம்..... பூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டுப் போனவர் ரெண்டு மணி நேரமாய் வரலை... அவரோட செல்போனை காண்டாக்ட் பண்ணினேன்..... போன் "சுவிட்சு ஆஃப்"ன்னு வந்தது. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. எப்படி வெளியே போறதுன்னும் புரியலை. பயத்துல எதுவும் செய்யத் தோணலை. உட்கார்ந்துட்டு இருக்கும்போதுதான் உங்க பேச்சுக்குரலும், பூட்டை அசைக்கிற சத்தமும் கேட்டது. எந்திரிச்சு வந்து கதவோட சந்து வழியாக உங்க மூணு பேரையும் பார்த்தேன். நீங்க யாரு ..... எதுக்காக வந்து இருக்கீங்கன்னு தெரியலை..... அதுதான் பயந்து போய் கட்டிலுக்கு அடியில் ஓண்டிக்கிட்டேன்"

 

வேல்முருகன் அந்தப் பெண்ணையே சில விநாடிகள் வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு கேட்டார்.

"உம் பேர் என்ன ......? "

"லலிதா ஸார்"

"நீலகண்டனை உனக்கு எத்தனை வருஷமாய் தெரியும்......? "

"கடந்த ஓரு ஆறுமாத காலமாய்தான் தெரியும்"

"அவனோட பழக்கவழக்கமெல்லாம் எப்படி ......? "

" ஸார்..... அந்த ஆளு என்னோட கஸ்டமர். வாரத்துக்கு ஓரு தடவை வந்துட்டு போவேன். பீடி, சிகரெட், டாஸ்மாக் சரக்குன்னு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு......."

"அவனோட ப்ரெண்ட்ஸ் யார் யார்ன்னு தெரியுமா......? "

"அதெல்லாம் தெரியாது ஸார்" அரசியல் பற்றியோ ...... கட்சித்தலைவர்களைப்பற்றியோ உன்கிட்ட பேசியிருக்கானா ......? "

"இல்லை ஸார்"

"சரி ...... இந்த ஆறுமாச காலமாய் நீ நீலகண்டனோடு நெருக்கமாய் இருந்திருக்கே....... அவனோடு இந்த வீட்ல இருக்கும்போது அவனுக்கு வெளியில் இருந்து செல்போன் அழைப்புகள் வந்து இருக்கும். அவனும் அந்த போன் கால்ஸை அட்டெண்ட் பண்ணி பேசியிருப்பான். அப்படி அவன் பேசும்போது அந்த பேச்சை நீ நோட் பண்ணியிருக்கியா......? "

 

"இல்லை ஸார்"

"நல்லா யோசனை பண்ணிப்பாரு "

"இதுல யோசனை பண்ண என்ன ஸார் இருக்கு......? "

 

"சரி...... லாக்கப்புக்குள்ளே வந்து உட்கார்ந்து நிதானமா யோசனை பண்ணிச் சொல்லு...... "

அந்த லலிதாவின் முகம் கலவரத்துக்குப் போக வேல்முருகன் தொடர்ந்தார்.

"இதோ பார்........ உன்னை வீட்ல வெச்சு பூட்டிட்டு சரக்கும், பிரியாணியும் வாங்கப்போன நீலகண்டன் இப்ப உயிரோடு இல்லை. டாஸ்மாக் கடை வாசலிலே செத்துப்போயிருக்கான். பின்னந்தலையில் பெரிய ரத்தக்காயம். யாரோ அடிச்சு கொன்னிருக்காங்க "

 

லலிதா உறைந்து போயிருந்தாள். முகம் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

" ஸார்..... எனக்கு ஓன்றும் தெரியாது நீலகண்டன் எனக்கு ஓரு கஸ்டமர் அவ்வளவுதான்...... "

அதுவரை மெளனமாய் இருந்த கஜபதி லலிதாவிடம் ஏதோ பேச முயற்சித்தபோது அந்த சத்தம் கேட்டது. "ர்ர்ர்ர்ர்ர்"

ஏதோ ஓன்று உறுமியது போன்ற சத்தம்.

வேல்முருகன் திரும்பி பார்த்தார். அறையின் இடது பக்க மூலையில் பழைய நியூஸ் பேப்பர்கள் போடப்பட்டு குவியலாய் தெரிய அதற்குள்ளேயிருந்து அந்த "விர்ர்ர்ர்ர்ர்" சத்தம் கேட்டது.

வேக நடையில் போய் அந்த பழைய செய்திதாள்களை விலக்கினார் வேல்முருகன்.

செல்போன் ஓன்று வெளிச்சமாய் ஓளிர்ந்து வைபரேஷன் மோடில் கூப்பிட்டுக்கொண்டிருந்தது. எடுத்து "ஆன்" செய்துவிட்டு காதுக்கு ஓற்றினார். "ம்ம்ம்" என்று மட்டும் குரல் கொடுத்தார். மறுமுனையில் ஓருவன் சிரித்தான்.

" என்ன நீலு..... ஃபுல்மப்பா..... நீ சொன்னபடி வேலையை முடிச்சாச்சு..... ஆனா ரொம்ப தூரம் தள்ளித்தான் மணிமார்பனோட பாடியை டிஸ்போஸ் பண்ண வேண்டியதாயிருச்சு"

வேல்முருகனின் ஓட்டு மொத்த உடம்பும் 144 தடைச் சட்டத்துக்கு உட்பட்டு எச்சரிக்கையாயிற்று.

 

(தொடரும்)


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-323317.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.