Jump to content

சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! ’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’


Recommended Posts

சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! ’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1

 

 

’நமக்கு மன ரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் கலக்கப்போவது யாரு ஷோ பார்க்கும் போது அது எல்லாமே மறந்து போயிடுது...’ என நம்மில் பலர் இதைச் சொல்லியிருப்போம். இல்லை, பிறர் சொல்லக் கேட்டிருப்போம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்ல, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே அதே ரகம்தான். இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு ஹிட்டடித்ததோ அதே அளவிற்கு அதில் காமெடி செய்தவர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள்.

 

அப்படி பிரபலமானவர்கள், இந்த ஷோவிற்குள் எப்படி வந்தார்கள், வரும் போது எப்படி இருந்தார்கள் என்பதில் தொடங்கி இன்று வரை அவர்களுடனான ட்ராவலைப் பற்றி பேசயிருக்கிறார் தாம்ஸன். கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என இந்த மூன்று நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் இயக்குநர்.

இந்த நிகழ்ச்சிகளை தவறாமல் பார்க்கும் பலருக்கும் யார் இந்த தாம்ஸன் என்பதே தெரிந்திருக்காது. அதனால், இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை அவரிடம் இருந்தே தொடங்குகிறார் தாம்ஸன்.

’’லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சிட்டு என்ன பண்றதுன்னே தெரியாம ஒரு வருஷம் சும்மா சுத்திட்டு இருந்தேன். அப்போ என்னோட ஃப்ரெண்ட் உதயன் விஜய் டிவியில எடிட்டரா வேலைப் பார்த்துட்டு இருந்தான். அவன்தான் என்னை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநரா சேர்ந்து விட்டான். இப்போதும் அவன்தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் எடிட்டர். இந்த ஷோவுல சேரும்போது எனக்கு ஒன்னுமே தெரியாது. என்னை நான் ஸ்டெடி பண்ணிக்கவே ரொம்ப நாள் ஆச்சு.

சிவகார்த்திகேயன்

2005ல முதல் சீசன் ஆரம்பிச்சாங்க. முதல் இரண்டு சீசன்களுக்கு ராஜ் குமார்தான் இயக்குநர். அந்த ரெண்டு சீசனிலும் எனக்கு போட்டியாளர்களின் மேக்கப், காஸ்ட்யூம்ஸ் சரியா இருக்கிறதா என்பதைப் பார்ப்பதுதான் வேலை. சில சமயம் ஆடியன்ஸோடு ஆடியன்ஸா உக்கார்ந்துட்டு காமெடிக்கு கைத்தட்டி, சிரிக்கணும். முதல் சீசன் செம ஹிட்டாச்சு. உடனே இரண்டாவது சீசன் ஆரம்பிச்சனால அந்த சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. முதல் இரண்டு சீசன் பண்ணுன டீம் அப்படியே வேற சேனலுக்கு போயிட்டாங்க. அப்போ கலக்கப்போவது யாரு சீசன் 3யை பண்றதுக்கு வெங்கடேஷ் பாபு எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அப்படித்தான் நான் கலக்கப்போவது யாரு சீசன் 3க்கு இயக்குனரானேன். மூணாவது சீசனுக்குதான் மதுரை, கோயம்புத்தூர்னு சில ஊருக்கு மட்டும் ஆடிஷன் வச்சு போட்டியாளர்களை தேர்வு செய்தோம். ஷோ செம ஹிட்டாச்சு. நாலாவது சீசன் உடனே ஆரம்பிச்சோம். அந்த சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. அதுக்கு அப்பறம் பெரிய இடைவெளி விட்டுட்டோம். அந்த கேப்ல தான் ’அது இது எது’னு காமெடி கேம் ஷோவை ஆரம்பிச்சோம். அந்த வாய்ப்பை இக்னேஷியஸ் தான் எனக்கு கொடுத்தார். 159 எபிசோடு வரை சிவகார்த்திகேயன் பண்ணினார். அதுக்கப்பறம் 160ல் இருந்து 400 எபிசோடு வரை மா.கா.பா தொகுத்து வழங்கினார். அது இது எது நிகழ்ச்சியோட முதல் சீசன் முடியும் போதுதான் கலக்கப்போவது யாரு சீசன் 5 ஆரம்பிச்சோம்.

பெரிய இடைவெளி விட்டு ஆரம்பிச்சனால நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. இதுவரைக்கும் எந்த ஷோவுக்கும் கிடைக்காத வரவேற்பு  கலக்கப்போவது யாரு சீசன் 5க்கு கிடைச்சது. அந்த ஒரு சீசன்ல மட்டுமே பழனி, அறந்தாங்கி நிஷா, முல்லை, கோதண்டம், குரேஷி, சரத், தினா, நவீன், சதீஷ்னு நிறைய பேர் பிரபலமானாங்க. மறுபடியும் சீசன் 6 உடனே ஆரம்பிச்சனால அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. அந்த கேப்ல தான் கலக்கப்போவது சாம்பியன்ஸ் ஆரம்பிச்சோம். சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு சீசன் 5, 6னு தனி தனி டீமா வச்சு பண்ணிட்டு இருக்கோம். சாம்பியன்ஸ் போயிட்டு இருக்கும் போதே இப்போ கலக்கப்போவது யாரு சீசன் 7 ஆரம்பிச்சுட்டோம்.

சிவகார்த்திகேயன், ஜெய்

இப்படியேதான் என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. நான் இதுக்காக மட்டும்தான் உழைச்சிட்டு இருக்கேன். நீங்க பார்க்குற காமெடி எல்லாம் ஒரு நாளிலோ அல்லது அந்த ஒரு காமெடியனின் உழைப்பிலோ வந்தது இல்லை. பல நாள்கள் ப்ராக்டிஸ், ரிகர்ஷல் எல்லாம் செய்து, நானும் என்னோட டீமும் உக்கார்ந்து ஸ்கிரிப்ட் வொர்க் செய்துதான் ஃபைனலா ஷோவுக்கு போவோம். இன்னைக்கு காலையில ஒரு ஷோவோட ஷூட்டிங் ஆரம்பிச்சா அதை முடிச்சிட்டு நான் வீட்டுக்கு போக அடுத்த நாள் காலை 4.30 ஆகும். எனக்கு 2 வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அவ காலை 7.30க்கு எழுந்திருச்சிருவா. 4.30 டூ 7.30தான் நான் ஓய்வு எடுக்குற நேரம். 7.30க்கு மேல என் பொண்ணை சிரிக்க வைக்கணும். அதுதான் எனக்கான டாஸ்க். நான் பண்ற ஷோ மூலமா பல பேரை சிரிக்க வச்சாலும் என் குழந்தையை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்.

நான் காலேஜ் படிச்ச சமயத்தில் என் அப்பா எனக்கு செலவுக்கு நிறைய காசு கொடுப்பார். இன்னைக்கும் நான் ஷோ முடிச்சிட்டு காலை 4.30க்கு போகும் போதெல்லாம், ’நீ வாத்தியார் வேலைக்கு போயிருந்தா இப்படி கண்ட நேரத்துக்கெல்லாம் வந்திருப்பியா’னு கேட்பார். அதே மாதிரி நான் ஒவ்வொரு நாளும் வொர்க் முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் கதவைத் தட்டும் போது என் மனைவி எவ்வளவு கோவமா வந்து கதவை திறக்கப்போறாங்களோனு பயப்படுவேன். ஆனா அவங்க என்னைக்குமே அப்படி முகம் காட்டினதே இல்லை. அதுதான் நான் அடுத்த நாள் பார்க்கப்போற வேலைக்கான எனர்ஜி. ஞாயிறு ஒரு நாள்தான் வீட்டில் இருப்பேன். மத்த நாள் எல்லாம் ஷோ முடிச்சிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வருவேன். அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா என்னால இவ்வளவு தூரம் ஓட முடியாது. சப்போர்ட் பண்றதுல மட்டும் இல்ல என்னை கலாய்க்கவும் செய்வாங்க. ஞாயிற்றுக்கிழமையில நான் வீட்டில் இருக்கும் போது கலக்கப்போவது யாரு பார்த்து சிரிச்சிட்டு இருப்பேன். ‘நீங்க பண்ற ஷோவைப் பார்த்து எங்களுக்கு சிரிப்பு வரணும். நீங்களே சிரிச்சுக்கிட்டா எப்படி’னு சத்தமே இல்லாம கவுன்ட்டர் கொடுப்பாங்க.

ஈரோடு மகேஷ்

நான் அதிக நேரம் உழைச்சாலும் எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ஒரு டைரக்டரா இருக்கிறதைவிட க்ரியேட்டரா இருக்கத்தான் ஆசைப்படுறேன். பல பேர் இந்த ஷோல இருந்து பெரிய ஆள வந்திருக்காங்க. இது எல்லாமே எங்க சேனலுக்கு பெருமை தானே. அதுக்காக இன்னும் எவ்வளவு வேணாலும் உழைக்கலாம். 

நாம என்னதான் நேரம் காலம் பார்க்காம உழைச்சாலும் நம்மளோட வேலையை குறை சொல்றதுக்கு பல பேர் இருப்பாங்க. அதுனாலேயே நான் ஃபேஸ்புக் பக்கமெல்லாம் அடிக்கடி போறது இல்லை. ஒரு நாள் ஒரு பெண் பட்டிமன்ற பேச்சாளர் எனக்கு போன் பண்ணினாங்க. ‘உங்க ஷோல அதிகமா டபுள் மீனிங் டயலாக்ஸ் வருது. அதை பார்த்துட்டு என் பையன் புரியாம எங்ககிட்ட கேட்குறான். நாங்க என்ன பதில் சொல்ல’னு என்கிட்ட கேட்டாங்க. ‘நான் சாரிங்க’னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன். ஸ்டேஜ்ல ஒரு டீம் ஃபெர்ஃபார்ம் பண்ணும்போது ஆடியன்ஸ் கை தட்டுற உற்சாகத்துல சில டபுள் மீனிங் டயலாக்கை பேசிடுவாங்க. முடிஞ்ச அளவுக்கு அதை எடிட் பண்ணப் பார்ப்போம். சில சமயங்களில் பீப் போட்டு சமாளிப்போம். ரொம்ப வல்கரா இல்லைனா அப்படியே விட்ருவோம்.

இயக்குநர் தாம்ஸன்

நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுக்காக எந்த புத்தகமும் படிக்கிறது இல்லை, வேற மொழி ஷோஸ் பார்க்கிறது இல்லை. சாதாரண மக்கள் சந்திக்கிற பிரச்னைகள், அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கனு அவங்ககிட்ட இருந்துதான் ஒன் லைன் எடுக்குறேன். என்கிட்ட 10 பசங்க உதவி இயக்குநரா இருக்காங்க. அவங்க அந்த ஒன் லைனை ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணுவாங்க. ஃபைனலா நான் பார்த்துட்டு அதுல சில மாற்றங்கள் செய்வேன். இப்படித்தான் எல்லா ஷோவுக்கும் வொர்க் பண்றோம்.

இயக்குந தாம்ஸன்

இந்த இடத்துல நான் சிலருக்கு நன்றி சொல்லியே ஆகணும். விஜய் டிவியோட ப்ரோகிராம் ஹெட் ப்ரதீப் சார், கலக்கப்போவது யாரு சீசன் 1 ப்ரொடியூசர் ஆண்ட்ரூஸ், அது இது எது ஷோவோட ப்ரொடியூசர் ராஜ் வி குமார், சீனியர் ப்ரொடியூசர் ராமசந்திரன், கலக்கப்போவது யாரு சீசன் 5,6,7னோட ப்ரொடியூசர்ஸ் இளங்கோ, ஜெகன், சீனியர் ப்ரொடியூசர் விவேக் அப்பறம் என்னோட பிள்ளைகளாகவும், பில்லராகவும் இருக்கிற என்னோட உதவி இயக்குநர்களுக்கு என் நன்றியை இந்த இடத்தில் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கேன்.

இதுதான் நான். இதுதான் என் வேலை. கலக்கப்போவது யாரு சீசன் 1 டூ 7, அது இது எது ஷோவோட இரண்டு சீசனிலும் என்னோட ட்ராவல் பண்ணுன ஸ்டார்ஸைப் பற்றிதான் இந்த தொடரில் நான் பேசப்போறேன். உங்களுக்கு பிடிச்ச பிரபலங்கள், காமெடியன்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல தகவல்கள் ஆன் தி வே ப்ரோஸ்!’’

 

இன்னும் சிரிப்போம்...

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109329-the-real-story-of-reality-show-heroes-episode-1.html

Link to comment
Share on other sites

”வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், இரண்டு மடங்கு மூர்க்கமாவான் சிவா!’’ – ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-2

 
 

சிவகார்த்திகேயன்

 

கலக்கப்போவது யாரு சீசன் 3:

 

மதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 ஆடிஷனின்தான் நான் முதல்முறையா சிவகார்த்திகேயனைப் பார்த்தேன். அந்த ஆடிஷன்ல சிவா என்ன பெர்ஃபார்மென்ஸ் பண்ணுனான்னு இன்னைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சாலமன் பாப்பைய்யா க்ளாஸ் வாத்தியாராகவும் ,அவர்கிட்ட விஜயகாந்த், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ்னு சில நடிகர்கள் படிக்கிற மாதிரியும் ஒரு கான்செப்ட்ல மிமிக்ரி பண்ணுனான். அதுவரைக்கும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்ஸ் எப்படி பண்ணுனாங்களோ அதிலிருந்து வித்தியாசமா சிவா பண்ணினான். மத்தவங்க எல்லாரும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தோட டயலாக்கை வேற வேற நடிகர்கள் பேசுனா எப்படி இருக்கும்னு ஒரு கான்செப்ட்ல பண்ணுவாங்க. அதில் ஒரு வாய்ஸ் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் இன்னொரு வாய்ஸ் வரும். ஆனா சிவா பண்ணுன கான்செப்ட்ல ஒரு நடிகர் பேசிட்டு இருக்கும் போதே இடையில வேற நடிகர் பேசுற மாதிரி வரும். அதுக்காக டக்குனு வாய்ஸை மாத்தணும். அதை சிவா சூப்பரா பண்ணுவான். அப்படி மல்டி வாய்ஸ் கான்செப்ட் பண்ணி சிவா கலக்கப்போவது யாரு சீசன் 3க்கு செலக்ட் ஆனான்.

மதுரை, கோவையில ஆடிஷனை முடிச்சதும் ஷோவை ஸ்டார்ட் பண்ணிட்டோம். ஷோவும் டிவியில வர ஆரம்பிச்சிடுச்சு. ஆனா சேனல்ல இருந்து சிவாவுக்கு போன் போகலை. ’என்னடா நம்மளை செலக்ட் பண்ணுனாங்க. ஆனா நாம இல்லாமையே ஷோவை ஸ்டார்ட் பண்ணிட்டாங்களே’னு சிவா பயந்துப்போய் சேனலுக்கு போன் பண்ணுனான். ’கண்டிப்பா உங்களை கூப்பிடுவோம்’னு சொன்னோம்.

சிவகார்த்திகேயன்

அஞ்சு எபிசோட் ஒளிப்பரப்பானதுக்கு அப்பறம்தான் சிவா சீசன் 3க்குள் என்ட்ரி ஆகுறான். போட்டியாளர்கள் எல்லாரையும் தங்க வைக்கிறதுக்கும் ரிகர்ஷல் பாக்குறதுக்கும் கோயம்பேடு விஜய்காந்த் சார் மண்டபத்துக்கு எதிர்ல பாஸ்கர் பார்க் லாட்ஜ்ல ரூம் போட்டு கொடுத்திருந்தாங்க. அங்க நான் எல்லா போட்டியாளர்களுக்கும் ரிகர்ஷல் கொடுத்துட்டு இருந்தேன். அப்போதான் சிவா அங்க வந்து என்னைப் பார்த்தான். ஒரு நோட்ல அவன் என்னப்பண்ணப்போறானோ அதை எழுதி எடுத்துட்டு வந்தான். அதை அப்படியே என் முன்னாடி பண்ணிக்காட்டுனான். ’இதுல எந்த கரெக்‌ஷனும் வேணாம். இதை அப்படியே பண்ணு’னு சொன்னேன். அப்போவே நான் அவன்கிட்ட சொன்னேன்,’ நீ கண்டிப்பா ஃபைனஸ் போவ’னு. அதே மாதிரி ஃபைனல் போனான், டைட்டில் வின் பண்ணுனான். சிவா பெர்ஃபார்ம் பண்ணுன முதல் ஷோ என்னால மறக்க முடியாது. அவன் ஸ்டேஜ்ல ஏறுனதும் நான் கீழ இருந்து டென்ஷனா நின்னுட்டு இருந்தேன். இவன் நல்லா பண்ணுவானே… அது ஆடியன்ஸுக்கு கரெக்ட்டா கனெக்ட் ஆகணுமேனு வேண்டிட்டு இருந்தேன். நான் இப்படி வேண்டிட்டு இருந்தேன்னு சிவாவுக்கு இப்ப வரைக்கும் தெரியுமானு எனக்கு தெரியலை. அவன் ஸ்டார்ட் பண்ணுன ரெண்டு நிமிஷத்துக்குள்ளேயே செம க்ளாப்ஸ். அவன் முடிக்கிற வரைக்கும் யாரும் சிரிக்கிறதையும், க்ளாப் தட்டுறதையும் நிறுத்தலை. அந்த அளவுக்கு என்டர்டெயின் பண்ணுவான்.

சிவா மிமிக்ரியை விட நடிகர்களோட மாடுலேஷனைத்தான் பக்காவா பண்ணுவான். அந்த மாடுலேஷனை பிடிச்சிட்டு ஆடியன்ஸை சிரிக்க வச்சிருவான். பக்காவா மிமிக்ரி பண்றவங்களுக்கு ஸ்கிரிப்ட் வொர்க் சரியா பண்ணவராது. ஆனா சிவா மிமிக்ரியை 50 சதவிகிதம், ஸ்கிரிப்ட்ல 50 சதவிகிதம்னு பக்கா என்டர்டெயினரா இருப்பான். அதுனாலதான் சின்ன பசங்க முதல் பெரியவங்க வரை எல்லாரும் சிவாவை லைக் பண்றாங்க.

நிராகரிக்கப்பட்ட வாய்ப்பு:

சீசன் 3ல சிவா வின் பண்ணுனதும் சீசன் 4க்கு அவனை தொகுப்பாளரா போடலாம்னு முடிவு பண்ணினாங்க. சிவாவும் ரம்யாவும்தான் சீசன் 4ஐ தொகுத்து வழங்க ஆரம்பிச்சாங்க. சிவா ஸ்டேஜ்ல காம்ப்யரிங் பண்ணிட்டு இருக்கான், ஆனா அதுல எதோ மிஸ் ஆகுற மாதிரி இருந்துச்சு. கோட் போட்டுட்டு காம்ப்யரிங் பண்ணிட்டு இருந்த சிவாகிட்ட, ‘இல்ல வேணாம்… எதோ மிஸ் ஆகுது’னு சொன்னதும் அவன் முகம் உடனே வாடிப்போச்சு. கோட்டை கழட்டி தோள்ல போட்டுட்டு எதுவுமே பேசாம போயிட்டான். அங்க, நான் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. அதுனால என்னால எதுவும் பண்ண முடியலை.

அது இது எது சீசன் 1:

சிவகார்த்திகேயன்

கலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சிருச்சு. சீசன் 5 ஸ்டார்ட் பண்றதுக்கு கொஞ்ச இடைவெளி விட்டோம். அந்த இடைவெளியில, அது இது எதுனு ஒரு காமெடி கேம் ஷோ பண்ணலாம்னு விஜய் டிவி முடிவு பண்ணினாங்க. அப்போ எங்க டீம் எல்லாருக்கும் தோணுன ஒரு கேள்வி, ’இந்த ஷோவை யார் தொகுத்து வழங்கப்போறா..?’னுதான். அப்போ எல்லாரோட மைண்டுக்கும் சிவா மறுபடியும் வரான். சீசன் 4 நடந்துட்டு இருந்த நேரத்தில் சிவாவும் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1னு சில ஷோக்களில் கலந்துட்டு இருந்தான். அது இது எது நிகழ்ச்சிக்காக சிவாவை மறுபடியும் காம்ப்யரிங் பண்ண கூப்பிட்டோம்.

அவனும் ஓகே சொல்லிட்டான். ஒரு தடவை வீஜேயிங் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதால அடுத்த டைம் வீஜேயிங் பண்ண வரும் போது செம ஃபார்ம்ல இருந்தான். முதல் ஷோல இருந்து 159வது ஷோ வரைக்கும் அவன்தான் பண்ணுனான். அந்த 159 ஷோவும் சிவாவோட ஷோவாதான் இருந்துச்சு. நீயா நானா ஷோவுக்கு எப்படி கோபி அண்ணாவோ, காஃபி வித் டிடிக்கு எப்படி டிடி சிஸ்டரோ அந்த மாதிரி அது இது எது சிவாவோட ஷோவா இருந்துச்சு. 159 ஷோன்னா கிட்டத்தட்ட மூணு வருஷம். அவனுக்காகத்தான் எல்லாரும் அது இது எது ஷோவைப் பார்த்தாங்க. இதுதான் உண்மை.

சிவகார்த்திகேயன்

அது இது எது ஷோல என்னோட கவனம் எல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்ட் மேலதான் இருக்கும். சிவா மத்ததையெல்லாம் பார்த்துப்பான். சிரிச்சா போச்சு சில எபிசோடுக்கு கன்டென்ட் கிடைக்கலைனாலும் பெர்ஃபார்ம் பண்ண வர காமெடியன்ஸ்கிட்ட பேசி கலாய்ச்சு வேற லெவலுக்கு கொண்டு போயிருவான். இது மாதிரி கன்டென்ட்  இல்லாம இருந்த நாள்களில் சிவாதான் காப்பாத்துவான். சிவா மாதிரி டைமிங் காமெடி அடிக்க யாராலும் முடியாது. டக்டக்குனு கவுன்ட்டர் கொடுப்பான். இது எல்லாமே கேமராவை ஆன் பண்ணுனாதான். மத்த நேரத்தில் சிவா வேற ஆளாதான் இருப்பான். ஷூட்டுக்கு வந்தா வந்த வேலை மட்டும்தான் பாப்பான். வருவான், மேக்கப் போடுவான், காம்ப்யரிங் பண்ணுவான், வீட்டுக்கு கிளம்பிடுவான். யார்கிட்டையும் அரட்டை அடிக்க மாட்டான். அவன் வெட்டியா யார்கிட்டையும் பேசி நான் பார்த்ததேயில்ல. அவன் எதுக்காக மீடியாக்குள்ள, சினிமாக்குள்ள வந்தானோ அதை இன்னைக்கு வரைக்கும் பண்றான். அதை மிகச்சரியா பண்றான். அதுனாலதான் சிவா இந்த இடத்துக்கு இப்போ வந்திருக்கான். அதே மாதிரி சிவா எல்லாருக்கும் மரியாதை கொடுப்பான். அதுல நடிப்பு இருக்காது. யதார்த்தமா, ஆத்மார்த்தமா இருக்கும். அது இப்போ இருக்கிற பசங்ககிட்ட குறைவாகத்தான் இருக்கு.. டைமிங்கிலும் சிவா கில்லி. ஷூட்டுக்கு சரியான நேரத்தில் வந்திருவான். ஒரு நாளும் அவனால ஷூட் லேட்,கேன்சல் ஆனதில்லை. ஒரு விஷயத்தை கமிட் பண்றதுக்கு ரொம்ப யோசிப்பான். அத நம்மளால சரியான நேரத்தில் பண்ண முடியுமானு ப்ளான் பண்ணிட்டுதான் கமிட் பண்ணுவான். அவன் முக்கியமா யாரைப் பத்தியும் பின்னால பேச மாட்டான். அதான் அவன் வாழ்க்கையில முன்னால போறான்.

சினிமா வாய்ப்பு:

சிவாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சு, அவன் படங்களில் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தபோதும், அது இது எது ஷோல காம்ப்யர் பண்ணிட்டுத்தான் இருந்தான். அவனோட முதல் படம் மெரினா ரிலீஸுக்கு நான் எங்க டீமோட போய்ப் பார்த்தோம். எங்க டீம்ல இருந்து யார் சினிமாவுக்கு போனாலும் அவங்ககிட்ட ஃப்ரீ டிக்கெட் வாங்கிப்போய் படம் பார்க்க மாட்டேன். நானே வரிசையில நின்னு டிக்கெட் வாங்கிதான் படம் பார்ப்பேன். அப்படித்தான் மெரினா படத்தையும் உதயம் தியேட்டர்ல வரிசையில நின்னு டிக்கெட் எடுத்துப் போய் பார்த்தோம். தியேட்டர்ல செம கூட்டம். சிவா மூணு வருஷமா டிவியில ஷோ பண்ணி, யாரெல்லாம் சம்பாரிச்சு வச்சிருந்தான்னு நான் அன்னைக்குத்தான் பார்த்தோம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், குடும்பத்தோட வந்திருந்த பொண்ணுங்கனு தியேட்டர் ஃபுல்லா கூட்டம். பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

சிவகார்த்திகேயன்

மெரினாவுக்கு பிறகு மனம் கொத்தி பறவை, 3, கேடிபில்லா கில்லாடி ரங்கா படம் முடிச்சிட்டு எதிர்நீச்சல் படத்துக்கு கமிட்டாகும் போதுதான் ஷோ பண்றதை ஸ்டாப் பண்ணுனான். 159வது ஷோல, ’இனிமேல் மா.கா.பா.தான் இந்த ஷோவைப் பண்ணப்போறார்’னு அவனே ஷோ மூலமா ஆடியன்ஸுக்கு சொல்லிட்டு என்கிட்ட வந்தான். வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுதுட்டான். அவனுக்கு அந்த ஷோவை விட்டுப்போக மனசே இல்ல.  நீ உண்மையா இருந்த… உழைச்ச… அதுக்கான அங்கீகாரம் உனக்கு கிடைக்கிது. இப்போ நீ சரியான முடிவுதான் எடுத்திருக்க. நல்லபடியா பண்ணு’னு சொல்லி அனுப்பி வச்சேன்.

இன்னைக்கு வரைக்கும் அது இது எது, கலக்கப்போவது யாருனு என்னுடைய எல்லா ஷோவையும் சிவா பார்ப்பான். அதுல அவன் எதை அதிகமா ரசிச்சானோ அதை எனக்கு போன் பண்ணிச் சொல்லுவான். மொக்கையா இருந்தாலும் சொல்லுவான். கலக்கப்போவது யாரு சீசன் 5 ஃபைனல் திருச்சியில நடந்துச்சு. அதுக்கு சிவாவைதான் கெஸ்ட்டா கூப்பிட்டிருந்தோம். அந்த மேடையில் டைட்டில் வின் பண்ணுனது யாருனு சொல்லிட்டு, என்னை மேடைக்கு கூப்பிட்டான். ’என் வாழ்க்கையில முதல்முதலா சப்போர்ட்டா இருந்தது தாம்ஸன் அண்ணாதான்’னு சொன்னான். அவன் என்னை மேடைக்கு கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவான்னு எனக்கு தெரியாது. அன்னைக்குதான் பல பேருக்கு நான் தான் கலக்கப்போவது யாரு டைரக்டர்னு தெரிஞ்சிருக்கும். என் பக்கத்து வீட்டுல இருக்கிறவங்களுக்குக்கூட தெரியாது.

சிவகார்த்திகேயன்

சிவா சினிமாவுக்கு போனதுக்கு அப்பறம் நாங்க போன்ல பேசிக்கிறதுதான் அதிகம். நேர்ல மீட் பண்ண நேரமே கிடைக்காது. அவனும் ஷூட்ல பிஸி, நானும் ஷோல பிஸி. கொஞ்ச நாளுக்கு முன்னாடி என் பொண்ணோட முதல் பிறந்தநாள் பங்ஷனுக்கு சிவாவை கூப்பிட்டிருந்தேன். வந்து என் குழந்தைக்கு கிப்ட் கொடுத்துட்டு போனான். இப்படித்தான் நாங்க மீட் பண்ணிக்கிறோம்.

ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா இருந்து மிகப்பெரிய ஹீரோவா ஆனதுன்னா அது சிவா தான். இனிமேல் எந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஹீரோ ஆனாலும், சிவாதான் ஹிஸ்ட்ரி. அவனோட வளர்ச்சி எனக்கு பிரம்மிப்பா இருக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் அவன் மிகப்பெரிய உயரத்துக்கு போகணும்னு ஆசைப்படுறேன்.

God bless you siva…

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110029-only-when-he-gets-rejected-siva-bounces-back-aggressively-the-real-story-of-reality-heroes-2.html#vuukle_div

Link to comment
Share on other sites

‘’ ‘சிரிச்சா போச்சு’ல யாரும் சிரிக்கலைன்னா வருத்தப்படுவார் ரோபோ சங்கர்..!’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-3

 
 

ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை

 

கலக்கப்போவது யாரு முதல் சீசனில் முதல் போட்டியாளரே ரோபோ சங்கர்தான். முதல் சீசனில் நான் உதவியாளராக இருந்தபோதே ரோபோ சங்கரை எனக்கு தெரியும். ஆனால் அதிகமாக பேசியது கிடையாது. முதல் சீசன் முடிஞ்சதுக்கு அப்பறம் சீசன் 2,3,4 முடிஞ்சு, அது இது எது ஸ்டார்ட் பண்ணி போயிட்டு இருந்த சமயம் எனக்கு மேரேஜ் நடந்துச்சு. என் மேரேஜுக்கு ரோபோ சங்கர் வந்திருந்தார். என் மேரேஜ்ல ஒரு மணி நேர ப்ரோகிராம் ஒண்ணு பண்ணினார். அப்போதுதான் ரொம்ப நாள் கழிச்சு சங்கரைப் பார்க்கிறேன். அதுக்கப்பறம் எங்களோட நட்பு வளர ஆரம்பிச்சது. என் மேரேஜுக்கு வந்தவர் அந்த தேதியை ஞாபகம் வச்சு என்னோட முதல் திருமண நாளுக்கு போன் பண்ணி வாழ்த்தினார். 

 

ஒரு நாள் எனக்கு போன் பண்ணி, ‘நான் மறுபடியும் விஜய் டிவியில ப்ரோகிராம் பண்ண ஆசைப்படுறேன்’னு சொன்னார். ரோபோ சங்கரோட ரீ என்ட்ரி அது இது எது நிகழ்ச்சி மூலமா நடக்குது. பல நிகழ்ச்சிகளிலும், பல மேடைகளிலும் இதை அவரே சொல்லியிருக்கார். அவர் அது இது எது நிகழ்ச்சிக்குள்ள வரும்போது செம பார்ம்ல இருந்த வடிவேல் பாலாஜி, சோலோவா வந்தே  எல்லாரையும் சிரிக்கவைப்பார். அவரோட ரோபோ சங்கரும் சேர்ந்து ப்ரோகிராம் பண்ண ஸ்டார்ட் பண்ணுனாங்க. 

ரோபோ சங்கர்

50வது எபிசோடுக்கு வெங்கட் பிரபு கெஸ்ட்டா வந்தார். அந்த எபிசோடுலதான் ரோபோ சங்கரும் வந்தார். 50வது எபிசோடில் இருந்து 130வது எபிசோடு வரை சங்கர் பண்ணினார். எல்லா எபிசோடுக்கும் வருவார். அவர் ஒரு ஒன் லைன் சொல்லுவார், அதை நாங்க டெவலெப் பண்ணுவோம். சில சமயம் அவரே ஃபுல் ஸ்கிரிப்ட் கொண்டு வருவார். அதை அப்படியே பண்ணச் சொல்வோம். அந்த ‘தகிட தகிட’ டான்ஸ் கான்செப்ட் எல்லாம் அவரே பண்ணுனதுதான். வடிவேல் பாலாஜிக்கு அப்பறம் ரோபோவும் சோலோவா பண்ண ஆரம்பிச்சார். 

ரோபோ சங்கர் ரொம்ப சின்சியரா இருப்பார். நல்ல பார்ம்ல இருந்த நேரத்திலும் ரிகர்சலுக்கு வருவார், சரியான நேரத்தில் வருவார். ஷூட்டுக்கு முன்னாடி அவர் என்ன பண்ணப்போறார்னு என்கிட்ட வந்து பேசுவார். அப்படித்தான் வேலைப் பார்க்கணும். சில எபிசோடுகள் போக போக சங்கர் பிஸியாகிட்டார். நான் கேட்டவுடனே ஷோ பண்றதுக்கு ஒரு டேட் கொடுப்பார். அவர் கொடுத்த டேட்டுக்கு ஷூட் வைக்கிறதுக்காக சேனல்கிட்ட பேசும் போதுதான் தெரியும், அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைனு. சில சமயம் அவர் கொடுக்குற டேட் அரசு விடுமுறையாகவும் இருக்கும். உடனே அவருக்கு போன் பண்ணி, ’தலைவா... டேட் இப்படிக்கொடுத்த என்ன பண்றது’ன்னு கேட்பேன். இது எப்போவாச்சும் இல்ல எப்போதுமே நடக்கும். அதே மாதிரி ஒரு நாள்கூட வீட்டுல சும்மா இருக்க மாட்டார் சங்கர். ஏதாவது ஈவென்டுக்கு போயிட்டே இருப்பார். சம்பளம் கம்மியா இருந்தாலும் அந்த ஈவென்டுக்கு போயிடுவார். மத்தவங்க மாதிரி பேரம் பேசிட்டு இருக்க மாட்டார். 

ரோபோ சங்கர்,சிவகார்த்திகேயன்,தாம்ஸன்

சிரிச்சா போச்சுல பெர்ஃபார்ம் பண்றவங்களோட டாஸ்க்கே வந்துருக்கிற கெஸ்ட்டை சிரிக்க வைக்கிறதுதான். கெஸ்ட்டை சிரிக்க வைக்க முடியலைன்னா பல பேர் ஃபீல் பண்ணவே மாட்டாங்க. ஆனா, ரோபோ சங்கர் ஃபீல் பண்ணுவார். ஒரு தடவை இப்படித்தான் மூணு எபிசோடு ஒரே நாள்ல ஷூட் பண்னோம். முதல் எபிசோடு யாருமே சிரிக்கலை, ரெண்டாவது எபிசோடுலையும் யாரும் சிரிக்கலை. ரொம்ப வருத்தமா உக்கார்ந்து இருந்தார். ’என்ன சங்கர் இவ்ளோ சோகமா இருக்கீங்க’னு கேட்டா, ‘என்ன தலைவா... யாருமே சிரிக்க மாட்றாங்க. முதல் ரெண்டு எபிசோடிலும் யாரும் சிரிக்கலை. மூணாவதுலையும் சிரிக்கலைன்னா ஹாட்ரிக் ஆகிடுமே தலைவா’னு சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு சிரிக்கவா இல்ல இவரோட சின்சியாரிட்டியைப் பார்த்து பாராட்டவான்னு தெரியலை. அந்தளவுக்கு தன்னோட வேலையை டெடிக்கேட்டடா பண்ணுவார். 

பயங்கரமான ஹார்ட் வொர்க்கர். 20ஆம் தேதி அது இது எது ஷூட் இருக்கும். 19ஆம் தேதி மதுரைக்கு ஒரு ஈவென்டுக்கு போயிருப்பார். 20ஆம் தேதி காலையிலதான் சென்னை வருவார். காலையில நான் போன் பண்ணி, ‘சங்கர் எங்க இருக்கீங்க’னு கேட்பேன். ‘தலைவா இப்பத்தான் வந்தேன். ஜிம்முக்கு போயிட்டு ஸ்டூடியோவுக்கு வந்திருவேன்’னு சொல்லுவார். ஷூட் முடிச்சிட்டு வேற ஊர் ஈவென்டுக்கு போவார். இப்படி ஓடிட்டே இருப்பார். அதைப் பார்த்து,’மாசத்துல 30 நாள்னா நீங்க 60 நாள் உழைக்கிறீங்க சங்கர்’னு சொல்வேன். 

ரோபோ சங்கர்

அது இது எது ஷோ பண்ணி அதுல ஃபேமஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ரோபோ சங்கர், தீபாவளி, சென்னைக்காதல்னு சில படங்களில் நடிச்சிருந்தார். அவரை யாரும் சரியா யூஸ் பண்ணலை. ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்ட படங்களிலும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாவே யூஸ் பண்ணிக்கிறாங்க. நான் டிவி ஷோக்களில் அவரை வச்சு சிவாஜி சார் மாதிரி, எம்.ஜி.ஆர் சார் மாதிரி மிமிக்ரி பண்ணச் சொல்லித்தான் காமெடி பண்ண முடியும். ஆனால், சினிமா இயக்குநர்கள் படங்களிலும் அவரை அதே விஷயத்தைப் பண்ணச்சொன்னா எப்படி? ஆடியன்ஸ் ரொம்ப தெளிவானவங்க. டிவியை வேற மாதிரி, சினிமாவை வேற மாதிரிதான் பார்ப்பாங்க. அதுனாலதான் என்கூட இருக்க பசங்ககிட்ட, ‘எதாவது ஒரு படத்துல சின்ன கேரக்டர் கிடைக்துன்னு நடிக்காதீங்க. அப்படிப்பண்ணுனா உன்னோட டிவி மார்க்கெட்டும் போயிடும். சரியான படத்துல நல்ல ரோலா பார்த்து பண்ணு’னு சொல்லுவேன். அதை சில பேர் கேட்டாங்க, சில பேர் கேட்கவேயில்ல. 

ரோபோ சங்கர் சில படங்கள் நடிச்சிட்டு அதுல எதுவும் சரியா அமையலைனு மறுபடியும் டிவிக்கே வந்தார். அது இது எது பண்ணி அது மூலமா ஃபேமஸ் ஆனதுக்கு அப்பறம் சின்ன சின்ன ரோல் பண்ணிட்டு பெரிய ரோலா ‘மாரி’ படத்துல நடிக்க கமிட் ஆனார். தனுஷ் சார் சிரிச்சா போச்சு எபிசோடுக்கு பெரிய ஃபேன். மாரி படத்தோட ஷூட்டிங்ல சிரிச்சா போச்சுதான் பார்த்துட்டு இருந்தார்னு ரோபோ சொன்னார். அப்படித்தான் அந்தப் படத்துல ரோபோ சங்கர் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. மாரி படம் பண்ற வரைக்கும் சிரிச்சா போச்சு பண்ணிட்டு இருந்தார் சங்கர். அதுக்கப்பறம் செம பிஸி ஆகிட்டனால டிவியை விட்டுட்டு முழுசா சினிமாவுக்கு போயிட்டார். 

ரோபோ சங்கர்

மாரி படம் பார்த்துட்டு போன் பண்ணி வாழ்த்தினேன். அப்பறம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துல ரோபோ சங்கர் பண்ணுன க்ளைமேக்ஸ் போர்ஷன் ரொம்ப பிரமாத இருந்துச்சு. அப்போதும் போன் பண்ணி பேசுனேன். எனக்கு ரோபோ சங்கர் சீனியரா இருந்தாலும் என்கூட நல்லா பழகுவார். நான் அவரை சங்கர்னுதான் சொல்லுவேன், அவர் என்னை தலைவானு சொல்லுவார். நிறைய கமென்ட் அடிச்சிப்போம். சிவகார்த்திகேயன் அடிக்கடி,’சாதாரணமா இருந்த ஸ்டேஜ், ரோபோ சங்கர் வந்ததும் பெரிய ஸ்டேஜ் ஆகிடுச்சு’னு சொல்லி கலாய்ப்பார். அவரும் அதை ஜாலியா எடுத்துப்பார். இப்படி எந்த வயசு வித்தியாசமும் பார்க்காம ஜாலியா கலாய்ச்சிட்டு இருப்போம். 

 

ஒரு ஸ்டேஜ் டான்ஸரா இருந்து ஸ்டாண்டப் காமெடி, மிமிக்ரினு பண்ணி இன்னைக்கு ஒரு நடிகரா வளர்ந்திருக்கார்னா, அவர் பல கஷ்டங்களை தாண்டி வந்திருக்கார். அவரை மாதிரி பாடி லாங்வேஜை பக்காவா பண்ணக்கூடிய ஆள் யாரும் இல்ல. ரோபோ சங்கர் எண்டர்டெயினர் ப்ளஸ் பெர்ஃபார்மர். நல்ல உழைப்பாளிக்கு ஒரு நல்ல இடம் இப்போ கிடைச்சிருக்கிறதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110748-the-real-story-of-reality-show-heroes-episode-3.html

Link to comment
Share on other sites

ரியல் எஸ்டேட், கோபிநாத், தனுஷ், பொறுமை... தி மேக்கிங் ஆஃப் பழனி பட்டாளம்..! - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-4

 
 

sollmmam1_09419.jpg

 

கலக்கப்போவது யாரு சீசன் 2ல நான் உதவி இயக்குநரா இருந்தபோதுதான் பழனி பட்டாளம் அறிமுகமானார். அந்த சீசன் முடிஞ்சதும் கிங்ஸ் ஆஃப் காமெடினு ஒரு ஷோ பண்ணுனோம். அதுலயும் பழனி கலந்துகிட்டார். அந்த ஷோவுக்கு பழனியை அழைச்சிட்டு வந்தது தனசேகர்தான். மத்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் மாதிரி,’ நான் 100 வாய்ஸ், 150 வாய்ஸ் பேசுவேன்’னு சொல்ற ஆள் கிடையாது பழனி. கொஞ்ச வாய்ஸ் பேசினாலும் பக்காவா, பாடி லாங்வேஜோட பேசுவார். மன்சூர் அலிகான், டி.ஆர், கோட்டா ஸ்ரீனிவாசராவ், விடிவி கணேஷ் எல்லாம்  அவரோட பெஸ்ட் சாம்பிள்ஸ். கிங்ஸ் ஆஃப் காமெடி முடிச்சுட்டு மறுபடியும் அது இது எது ஷோவுக்கு வந்தார்.

 

பழனி பட்டாளம்

பழனி ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருந்ததால, அவரால தொடர்ந்து ஷோவுக்கு வர முடியல. மிமிக்ரி துறையில ஒரு நம்பிக்கை கிடைக்கிற வரை வேற ஒரு தொழில் கையில வச்சுக்கணும்னு அவர் அதை பண்ணிட்டு இருந்தார். அது இது எதுல 100 ஷோவுக்கு மேலதான் பழனி என்ட்ரி கொடுத்தார். பழனி சீனியரா இருந்தாலும், அப்போ இருந்த சிரிச்சா போச்சு டீமோட அவரால ஈசியா மூவ்வாக முடியலை. ஒரு வருஷம் ஆகியும் அவர் வெளியவே தெரியாம இருந்தார். ஒரு நாள் என்கிட்ட வந்து, ’சார் நான் ஒரு வருஷமா இங்க இருக்கேன். ஆனா இன்னும் வெளிய தெரியாம இருக்கேனே சார்’னு கேட்கும்போது, ‘ஒரு வருஷம் ஆகிருச்சுனு பெருசா பாக்காதீங்க. ஒரு வருஷம்தான் ஆச்சு. இன்னும் நிறைய பண்ணுங்க பழனி’னு சொன்னேன்.

அவருக்கு செம ப்ரேக்கா ஒரு விஷயம் அமைஞ்சது. விஜய் டி.வி ஸ்டார்ஸை வச்சு தீபாவளி ஸ்பெஷல் ப்ரோகிராம் ஒண்ணு பண்ணுனாங்க. அதுல சிரிச்சா போச்சு டீம் பெர்ஃபார்ம் பண்ணுனாங்க. எப்போதும் நடிகர், நடிகர்களை வச்சே மிமிக்ரி பண்ணிட்டு இருக்கோம். ஒரு சேஞ்சுக்கு விஜய் டி.வி ஸ்டார்ஸ் மாதிரியே மிமிக்ரி பண்ணலாம்னு ப்ளான் பண்ணினோம். அதுல நீயா நானா கோபிநாத் மாதிரி பழனி பண்ணினார். அதுதான் பழனிக்கு பெரிய ப்ரேக்கா இருந்துச்சு. எல்லாருக்கும் அது பிடிச்சிருந்ததால, பழனி வெளிய தெரிய ஆரம்பிச்சார். ஆனால், அந்த ஷோ பண்றதுக்கு முன்னாடி எங்க எல்லாருக்கும் செம பயம். நடிகர், நடிகைகளை மிமிக்ரி பண்ணும்போது அவங்க நம்ம முன்னாடி இருக்க மாட்டாங்க. அதனால தைரியமா பண்ணிடலாம். ஆனால், விஜய் டி.வி ஸ்டார்ஸ் எல்லாரும் முன்னாடி இருக்கும்போது அவங்களை மாதிரி மிமிக்ரி பண்றது அவங்களுக்கு பிடிக்காம போச்சுன்னா எதாவது சொல்லிடுவாங்களோனு பயம் இருந்துச்சு. ஆனால், அதை எல்லாரும் ஜாலியா எடுத்துக்கிட்டாங்க. குறிப்பா, கோபி சார் அவரோட போர்ஷனை நல்லா என்ஜாய் பண்ணிப்பார்த்தார்.

பழனி பட்டாளம்

அந்த ஸ்பெஷல் ஷோ டெலிகாஸ்ட் ஆனதுக்கு அப்புறம் நாங்க டீமா தியேட்டருக்கு போயிருந்தோம். அங்க ஒரு 50, 60 பேர் பழனி பட்டாளத்தை நோட் பண்ணிட்டாங்க. எல்லாரும் வந்து அவரோட போட்டோ எடுத்துட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவருக்கு மிமிக்ரி துறை மேல நம்பிக்கை வந்திருச்சு. நானும் பழனியும் எப்போ க்ளோஸ் ஆனோம்னா, அவர் 30 மிமிக்ரி கலைஞர்களை வச்சு 12 மணி நேரம் மிமிக்ரி ஷோ ஒண்ணு பண்ணினார். அதோட செலவு எல்லாமே அவர்தான் பண்ணுனார். நான் அந்த ஷோவை டைரக்ட் பண்னேன். அந்த நிகழ்ச்சிக்கு அப்பறம்தான் நானும் பழனியும் நல்லா பழக ஆரம்பிச்சோம்.  

பழனியோட ட்ராவலே செமையா இருக்கும். முதல் நாள் ஸ்கார்பியோல போய் இறங்கி செம கறாரா பேசி ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணுவார். அடுத்த நாள் சிரிச்சா போச்சு ஷூட்டுக்கு வந்து, அஞ்சலி பாப்பா கெட்-அப் போட்டு குழந்தை மாதிரி நடிப்பார். இப்படி அவரோட ட்ராவலே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். நான் யாருக்கெல்லாம் லேடி கெட்-அப் கொடுக்குறேனோ அவங்க எல்லாரும் என்கிட்ட வந்து புலம்புவாங்க. ‘என்ன சார், இப்படி மீசையை எடுக்க வச்சுட்டீங்க. உங்களுக்கு மீசை இல்லாததால எங்களோட மீசையையும் எடுக்க வைக்கிறீங்களா சார்’னு கேட்பாங்க. நான் அவங்ககிட்ட, ‘மீசை எடுக்குறது பெரிய விஷயம் இல்ல, பேரு எடுக்கணும் அதான் பெரிய விஷயம்’னு சமாளிச்சு அனுப்பிவிடுவேன்.

பழனி பட்டாளம்

கோபிநாத் எபிசோடு எந்தளவுக்கு ரீச்சோ அதே அளவுக்கு அஞ்சலி பாப்பா எபிசோடும் பழனிக்கு நல்ல ரீச் கொடுத்துச்சு. அந்த ஷோவை தனுஷ் சாரே ட்விட்டர்ல ஷேர் பண்ணியிருந்தார். மாரியோட ஷூட்டிங் ப்ரேக் அப்போ அந்த எபிசோடைத்தான் தனுஷ் சார் அடிக்கடி பார்ப்பார்னு ரோபோ சங்கர் சொல்லியிருக்கார். இந்த டைம்ல தான் பழனிக்கு பட வாய்ப்புகள் வந்துச்சு. இது சாதாரணமா எல்லாருக்கும் நடக்குறதுதான். சில எபிசோடு ஹிட்டான அதில் நடிச்சவங்களுக்கு பட வாய்ப்புகள் வரும். ஆனால், அதுல எது பெஸ்ட்டுனு தேர்ந்தெடுத்து நடிக்கப் போனால்தான், ரீச்சாக முடியும். அதை பழனி சரியா பண்ணினார். சின்னச் சின்ன ரோல்களா வந்தபோது அதில் நடிக்காமல், அறம் மாதிரி ஒரு நல்ல படத்துல நல்ல ரோல் கிடைச்சதும் அதில் நடிச்சார்.

பொதுவா, மிமிக்ரி ஆர்டிஸ்ட் படத்துல நடிக்கப்போனால், அவங்களுக்கு காமெடி ரோல் தருவாங்க. இல்ல, அவங்க டி.வியில என்ன பண்றாங்களோ அதையே படத்துலயும் பண்ண வைப்பாங்க. ஆனால், அறம் படத்தில் எந்த இடத்துலயும் காமெடி பண்ற பழனியைப் பார்க்க முடியாது. நடிகர் பழனியாகத்தான் படம் முழுக்க தெரிவார். அந்த வகையில் எனக்கு அறம் படத்தில் பழனியின் ரோல் ரொம்பப் பிடிக்கும். நான் அறம் ரிலீஸாகி 15 நாள் கழிச்சு படம் பார்த்துட்டு பழனிக்கு போன் பண்ணினதும், ‘என்ன சார் இவ்வளவு நாளா போன் பண்ணலை’னு கேட்டார். ஷூட் பிஸியில இருந்தனால பார்க்க முடியல பழனினு சொன்னேன்.

பழனி பட்டாளம்

கலக்கப்போவது யாரு தொடங்குன சமயம் போட்டியாளர்கள் எல்லாரும் மிமிக்ரி மட்டும்தான் பண்ணிட்டு இருந்தாங்க. மிமிக்ரி பண்றவங்களைத்தான் ஷோல எடுத்தாங்க. அதை அது இது எது ஷோல உடைச்சோம். எல்லாரும் புது புது கான்செப்ட்டா எடுத்து நடிக்க ஆரம்பிச்சாங்க. ரொம்ப நல்லா நடிக்கக்கூடிய ஆள் பழனி. குடிகாரன், ஆட்டோகாரன்னு எந்த ரோல் கொடுத்தாலும் லைவ்வா நடிப்பார். ஆள் பார்க்க அப்பு கமல் மாதிரி இருப்பாப்ள, ஆனா நான் கடவுள் ஆர்யா மாதிரி நடிப்பார்.

பழனி பட்டாளம் பெயர் காரணம்..?

30 மிமிக்ரி கலைஞர்களை வச்சு அவர் ஒரு ஷோ பண்ணுனார்ல, அந்த நிகழ்ச்சியில் பழனி பட்டாளத்தின் மிமிக்ரி ஷோனுதான் விளம்பரம் பண்ணினோம். பழனியோட மிமிக்ரி பட்டாளம்னு மீனிங். அந்த ஷோல இருந்து பழனி பட்டாளம்னு பெயர் வந்துச்சு. ஆனா பழனி பட்டாளத்துக்கு நான் ஒரு அர்த்தம் சொல்லுவேன். அவர் ரொம்ப பொறுமைசாலி. என்ன நடந்தாலும் பொறுமையா இருப்பார். அதுனால எவ்வளவு பட்டாலும் பொறுமையா இருக்கிறனாலதான் பழனி பட்டாளம்னு சொல்லுவேன். எல்லாருக்கும் பழனிகிட்ட ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். எனக்கு பழனிகிட்ட பிடிச்சது, நீளமான வசனம் கொடுத்தா அதை பேசிட்டு இருக்கும்போது இடையில மறந்து, அவரே சிரிச்சிடுவார். மத்தவங்க சிரிக்கிறதுக்கு முன்னாடி சிரிச்சிடுவார். அதுதான் பழனிகிட்ட எனக்குப் பிடிச்சது.

பழனி பட்டாளம்

ஒரு பெர்ஃபார்மருக்கு நாலு, ஐஞ்சு வருஷம் வாய்ப்பு கொடுத்தா நான் நல்லவன். ஆறாவது வருஷம் நான் வாய்ப்பு கொடுக்கலைன்னா கெட்டவன். நான் ஏன் வாய்ப்பு கொடுக்கலைன்னா அவங்க மேல எதாவது தப்பு இருக்கும். அவங்க ரிகர்சலுக்கு வராம இருக்கலாம், போனை எடுக்காம, வேற வேலையில பிஸியா இருக்கலாம். இப்படி பல காரணங்கள் இருக்கிறனால நான் அவங்களுக்கு வாய்ப்பு தராம இருப்பேன். அதுனால அவங்க என்னை கெட்டவனா நினைக்கலாம். ஆனால், நான் வாய்ப்பு தந்தாலும் தரலைனாலும் பழனிக்கு நான் எப்போதும் நல்லவன்தான். கிறிஸ்துமஸுக்கு எங்க வீட்டுல எங்களுக்கு முன்னாடி பிரியாணி சாப்டுற ஆள் பழனிதான். அந்தளவுக்கு எங்க ஃபேமிலில நெருக்கமா இருப்பார்.

எப்போதுமே எங்க ஷோவுல இருந்து ஒருத்தர் சினிமாவுக்கு போயிட்டா அவங்க போன அந்த இடத்துக்கு வேற ஆள் இல்லாம சிரமப்படுவோம். இன்னைக்கு வரைக்கும் பழனியோட இடத்துக்கு வேற சரியான ஆள் கிடைக்கலை. அதுதான் பழனியோட வெற்றி.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/111400-the-real-story-of-reality-show-heroes-episode-4.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

“மார்ச்சுவரி போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி பண்ணுவார் வடிவேல் பாலாஜி..!” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-5

 
 

ரியாலிட்டி ஷோ

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

கலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்கு காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான். வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா... வலிக்கிது, அழுதுருவேன்...’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும்  கலக்குவார். அதுனாலதான் அவரை சீசன் 4 ஆடிஷனில் செலக்ட் செய்தோம்.

 
 

அவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு எதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார்.

ரியாலிட்டி ஷோ

கலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சதும் அது இது எது ஷோல கலந்துக்கிட்டார் பாலாஜி. ‘சிரிச்சா போச்சு’வோட மிகப்பெரிய பில்லரே வடிவேல் பாலாஜிதான். இதுவரைக்கும் வடிவேல் பாலாஜி யாரையும் சிரிக்க வைக்காம போனதேயில்ல. சோலோவா வந்து சிரிக்க வைக்கிறதுதான் பாலாஜியோட ஸ்பெஷல். வடிவேலோட எல்லா கெட்டப்பையும் சிரிச்சா போச்சுல போட்டிருக்கார். கான்செப்ட் இல்லாத டைம்ல கெஸ்டுகள்கிட்ட, ஆங்கர்கிட்ட எதாவது பேசி சிரிக்க வச்சிடுவார்.

கெஸ்டுகளை சிரிக்க வைக்கிறதுக்காகவே சில டெம்ப்ளேட்ஸ் வச்சிருக்கார் பாலாஜி. அவர் லிப்ட்ல இருந்து வெளிய வந்ததும் சில சமயம் மூணு பேர்ல இரண்டு பேரு சிரிச்சிடுவாங்க. சிரிக்காத அந்த ஒருத்தர் பக்கத்துல போய், ‘என்ன டஃப் கொடுக்குறீயா’னு கேப்பார். அதுலையே அந்த கெஸ்ட்டும் சிரிச்சிடுவார்.

முன்னாடியெல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்டுல சிரிக்காம இருந்தா டி.வி கொடுப்பாங்க. அந்த டைம்ல வந்த எபிசோடுல யாராச்சும் சிரிக்காம இருந்தா, ‘ஒரு டிவிக்காக சிரிக்காம இருக்கியா..?, நீ அந்த டிவியை வாங்கிட்டு போகும்போதே அது சுக்கு நூறா உடைஞ்சிரும்’னு சபிப்பார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.

மூணு கெஸ்ட்ல பெரும்பாலும் 2 ஆண், 1 பெண் வருவாங்க. மூணு பேருக்கும் கை கொடுக்கப்போவார். 2 ஆண்களுக்கும் கை கொடுத்துட்டு, பொண்ணுக்கு கை கொடுக்க போகும்போது மட்டும் வானத்தைப் பார்த்து, தரையைப் பார்த்து வெட்கப்படுவார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.

ரியாலிட்டி ஷோ

பாலாஜி பல சமயம் லேடி கெட்டப் போடுவார். அந்த டைம் கெஸ்ட்டா வர ஆண்கள்கிட்ட, ‘என்ன குறுகுறுனு பாக்குற’, ‘என்னய்யா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு’, ‘நீ எதிர்பார்க்குறது என்கிட்ட இல்ல’னு சொல்லுவார். எல்லாரும் சிரிச்சிருவாங்க. இப்படி சில டெம்ப்ளேட்ஸ் வச்சுக்கிட்டு வொர்க் பண்ணுவார்.

வடிவேல் கெட்டப் போடுறதுக்கு சமமா லேடி கெட்டப் போடுறதுக்கும் அதிகம் ஆர்வம் காட்டுவார் பாலாஜி. லேடிஸ் என்ன என்ன யூஸ் பண்றாங்க, காஸ்ட்டியூம்ஸ் எப்படி பண்றது, மேக்கப் எப்படி பண்றதுனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுவார். சிரிச்சா போச்சுல லேடி கெட்டப் போடுறதுக்கு பல பேர் யோசிப்பாங்க. மீசை, தாடியை எடுக்கணும், வீட்டுல திட்டுவாங்கனு பல காரணங்கள் சொல்லுவாங்க. இப்போவரைக்கும் நான் என்ன கெட்டப் சொன்னாலும், எப்போ லேடி கெட்டப்போட சொன்னாலும் பாலாஜி பண்ணுவார். அதுதான் அவரோட ஸ்பெஷல். லேடி கெட்டப் போடுறதுக்கு சகிப்புத்தன்மை இருக்கணும். பாலாஜிகிட்ட அது நிறையவே இருக்கு.

‘அது இது எது’க்கு கெஸ்ட்டா வர பல பேர், வந்ததும் இன்னைக்கு வடிவேல் பாலாஜி வராறானுதான் முதலில் கேட்பாங்க. அதுதான் பாலாஜியோட வெற்றி. காமெடி பண்ற பல பேரோட ரியல் லைஃப் ரொம்ப சோகமா இருக்கும்னு சொல்றதுக்கு மிகச் சிறந்த உதாரணம் வடிவேல் பாலாஜியோட வாழ்க்கைதான். கலக்கப்போவது யாரு சீசன் 4, அது இது எது ஆரம்பத்தில் பாலாஜி, பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலைப் பார்த்தார். அதுக்கப்பறம் அதை விட்டுட்டு முழு நேர வேலையா இதை பண்ணிட்டு இருக்கார். எனக்கு அது லேட்டாத்தான் தெரியும். அப்போதான் நான் யோசிச்சேன், எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருந்தார்னு. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

வடிவேல் பாலாஜி

வடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்கு காரணம் வடிவேல் மாதிரி தத்ரூபமா பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல நம்மகிட்ட பேசுறவங்களை செமையா கலாய்ச்சு விட்டுருவார். அப்படித்தான் பாலாஜி அதிகமா மக்களை ரசிக்க வச்சார். யார் என்ன சொன்னாலும் டக்குனு கலாய்ச்சி விட்டிருவார். அதுக்காகவே பலபேர் உஷாரா இருப்பாங்க.

சிரிச்சா போச்சுல அடிக்கடி பாலாஜிக்கு ஒரு சோதனை நடக்கும். அவரோட நேரதுக்குன்னே வருகிற கெஸ்ட் எல்லாரும் வயசானவங்களா இருப்பாங்க. அந்த நேரத்துல அவங்ககிட்ட,‘வயசான காலத்துல வீட்டுல உக்காந்து டி.வி பாத்தோமா, பேர புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தோமானு இருக்கணும். அதைவிட்டுட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அதுவும் நான் வர எபிசோடுக்கு உங்களை யார் வரச்சொன்னா?’னு கேட்பார். அப்பறம் ஒரு தடவை மூணு கெஸ்ட்ல இரண்டு பேரை சிரிக்க வச்சுட்டார். அதுல ஒரு பொண்ணு மட்டும் சிரிக்கலை. அவரும் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார், ஒன்னும் நடக்கலை. அப்போதான் ஆங்கர் பாலாஜிகிட்ட, ‘அவங்களுக்கு தமிழ் தெரியாது’னு சொல்லுவார். அப்போ ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாலாஜி, அல்டிமெட்டா இருக்கும்.

ரியாலிட்டி ஷோ, தாம்ஸன், வடிவேல் பாலாஜி

பாலாஜிக்கு சில பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ‘சின்ன, சின்ன ரோல்கள் பண்ணி பாலாஜி மேல இருக்கிற எதிர்பார்ப்பு வீணாகிடக்கூடாதுனு நல்ல வாய்ப்பு வரும்போது பண்ணு’னு சொன்னேன். அதுக்காக காத்திருக்கிறார் பாலாஜி. god bless you balaji

https://cinema.vikatan.com/tamil-cinema/news/112630-the-real-story-of-reality-show-heroes-series-episode-5.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..!” - அத்தியாயம் – 6

 
 

ராமர்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 யோட ஆடிஷனில்தான் சிவகார்த்திகேயனும், ராமரும் செலக்ட் ஆனாங்க. ராமருக்கு மதுரை அரிட்டாப்பட்டிதான் சொந்த ஊர். சீசன் 3க்கு தேர்வான சமயத்தில்தான் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயா வச்சிருந்த ஹூமர் க்ளப்பில் ராமர் இருந்தார். கவுண்டமணி சார், மதன் பாபு வாய்ஸ் எல்லாம் ராமர் ரொம்ப சூப்பரா பேசுவார். அப்படித்தான் சீசன் 3ல செலக்ட் ஆகி உள்ளே வந்தார்.

 

சீசன் 3 முடிஞ்சதுக்கு அப்பறம் சாம்பியன்ஸ்ல ராமரும், அமுதவாணனும் ஜோடியா பெர்ஃபார்ம் பண்ணுனாங்க. இந்த ஜோடிதான் சாம்பியன்ஸ் டைட்டில் வின் பண்ணுனாங்க. அதுக்கு அப்பறம் ராமர் பெரிய கேப் எடுத்துக்கிட்டார். காரணம், கல்யாணம். கல்யாணம் ஆனதும் ஏகப்பட்ட பொறுப்பு வந்ததுனால ராமரால தொடர்ந்து வர முடியலை. அந்த கேப்ல நிறைய வேலைகள் பார்த்து ஓரளவு செட்டில் ஆனதுக்கு அப்பறம் மறுபடியும் நிகழ்ச்சிகளில் கலந்துக்க ஆரம்பிச்சிட்டார்.

ராமர்

‘அது இது எது' ஷோதான் ராமருக்கு ரீ-என்ட்ரி. லீவ் போட்டு சென்னையில் இருக்குற அமுதவாணன் வீட்டுக்கு வந்து ரெண்டு பேருமே ரிகர்ஷல் பார்ப்பாங்க. இன்னைக்கு வரைக்கும் இப்படி லீவ் போட்டு வந்துதான் ஷோ பண்ணிட்டு இருக்கார். ரொம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்த ராமருக்கும், சிரிச்சா போச்சுக்கும் மிகப்பெரிய ப்ரேக்னா அது ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுதான். பட்டித்தொட்டி எல்லாம் செம ஹிட். ஆனால், அதை ராமர் பண்ண மாட்டேன்னு முதலில் அடம்பிடிச்சார்.

ராமர் லேடி கெட்டப் போடுறது அவங்க மனைவிக்குப் பிடிக்காதுபோல, அதனால் அவர் முதலில் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார்.  நான் விடுறதா இல்லை. ‘நீதான் பண்ணணும்... இங்க நான்தான் டைரக்டர்...’னு சொல்லிட்டே இருந்தேன். ஏன்னா அது ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட். அதை ராமர்தான் பண்ணணும், அவருக்குதான் அது பொருத்தமா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதுனால நானும் விடாப்பிடியா இருந்து ராமரை பண்ண வெச்சேன்.

ராமர்

லேடி கெட்டப் போடுறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல, அந்த லேடி கேரக்டரோட வாய்ஸ் பிடிக்கிறதுதான் முக்கியம். அந்த வாய்ஸை கேட்டதும் சிரிப்பு வரணும். அப்படி ஒரு வாய்ஸை ராமர்கிட்ட இருந்து வாங்குனேன். கிட்டத்தட்ட 10 வாய்ஸுக்கு மேல பேசி, கடைசியாகத்தான் அந்த வாய்ஸை ஓகே பண்ணுனேன். அந்த எபிசோடு ஹிட்டாகும்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ரீச்சாகும்னு தெரியாது.

எந்த விஷயத்தை எடுத்தாலும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்கூல், காலேஜ், சோஷியல் மீடியானு பல இடங்களில் யூஸ் பண்ணுனாங்க. அது எல்லாத்தையும் பார்த்தபிறகு ராமர் வந்து, ‘சாரி சார். நான் மட்டும் அதை பண்ணாம இருந்தா இந்தளவுக்கு ரீச் ஆகியிருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்’னு சொன்னார். ‘யார் யாருக்கு என்ன வரும்... யாருக்கு எது செட்டாகும்னு டைரக்டருக்கு தெரியும் ராமர். அதான் நானும் விடாப்பிடியா இருந்தேன்’னு சொன்னேன். எப்போதுமே ஒரு டைரக்டர் சொல்றதைக் கேட்டு ஒரு நடிகர் பண்ணுனா அது ஹிட்டுதான்.

ராமர்

ராமரோட ப்ளஸ்ஸே அவரோட முகம்தான். காமெடி பண்றதுக்காகவே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கும். அதேமாதிரி நடிப்பும் பின்னியெடுப்பார். குடிகாரன் மாதிரி நடிச்சார்னா அப்படியே இருக்கும். பல நாள் குடிகாரன்கூட தோத்துருவான். அந்தளவுக்கு பக்காவா பண்ணுவார். அப்பறம் சாணியை மிதிச்சு தரையில தேய்ச்ச மாதிரி மூன்வாக் ஒண்ணு போடுவார். அது நல்லாயிருக்குனு ஆஹா ஓஹோனு பேசுறாங்க. இப்போ நாங்க பண்ணிட்டு இருக்கிற கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை ராமருக்காகத்தான் நாங்க பார்க்கிறோம்னு பல பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க.

ராமரும் தங்கதுரையும் மாத்தி மாத்தி அவங்களையே கலாய்ச்சுப்பாங்க. அது செம ஹிட்டா போகும். முதலில் தங்கதுரைதான் ராமரை கலாய்ச்சிட்டு இருந்தார். இப்போ ராமரும் உஷார் ஆகிட்டார். அவரும் திரும்ப கலாய்க்க ஆரம்பிச்சிட்டார். உதாரணத்துக்கு தங்கதுரை ராமரைப் பார்த்து,‘மாந்தோப்புல மாங்காய் திருடுறவன் மாதிரி இருக்கான், இவனா மாப்பிள்ளை’னு கேட்டால், அதுக்கு ராமர்,’ ‘மாப்ள- மாந்தோப்புல’ அவ்வளவுதான். இதுல என்ன நகைச்சுவை இருக்கு’னு பதிலுக்கு கலாய்ச்சிடுவார். இப்படி ரியல் ஃபைன்னா போறதால சாம்பியன்ஸ் ஷோ நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு.

ராமர்

 

ராமர்கிட்ட ஒரு மிகப்பெரிய நல்ல குணம் இருக்கு. தான் ஒரு சீனியரா இருந்தாலும் ஜூனியர்ஸ்கிட்ட அதைக் காட்டிக்க மாட்டார். யாராவது கலாய்ச்சா டென்ஷன் ஆக மாட்டார். ‘ஐயா... யாராவது என்னை கலாய்க்க ரெடியா இருக்கீங்களா’னு அவரே கேட்பார். ஸ்டேஜ்ல யாராவது டயலாக்கை மறந்துட்டா எனக்கு உடனே கோபம் வரும். ஆனா, ராமர் டயலாக் மறந்துட்டா எனக்கு சிரிப்புத்தான் வரும். ராமர் எது பண்ணினாலும் அதுல காமெடி இருக்கும்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/113316-the-real-story-of-reality-show-heroes-series-episode-6.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஃபேஸ்புக் சாட்... ‘காஞ்சமுகி’ கான்செப்ட்... சிவகார்த்திகேயனின் லைக்ஸ்..! இது தீனா ஸ்டோரி - அத்தியாயம் 7

 
 

ரியாலிட்டி ஷோ

 

இந்தத் தொடரில் இதுவரை நான் சொன்ன ரியாலிட்டி ஷோ ஹீரோக்கள் எல்லாருமே எனக்கு ஒரு போட்டியாளராக அறிமுகமானவர்கள். ஆனால், தீனா அப்படியில்லை. முதலில் ஒரு ரசிகனாக அறிமுகமாகி அடுத்து உதவி இயக்குநராக, அப்பறம் போட்டியாளராக இப்போ ஒரு நடிகனாக இருக்கான். இப்போ நான் இருக்கிற பிஸியில என்னால ஃபேஸ்புக் பக்கமே போக முடியலை. ‘அது இது எது’ ஷோ மட்டும் பண்ணிட்டு இருந்தப்போ ஃப்ரீ டைம்ல ஃபேஸ்புக் போவேன். அப்போ நிறைய பேர் மெசேஜ் பண்ணியிருப்பாங்க. அதில் தீனாவும் ஒரு ஆளா இருப்பான். மத்தவங்க எல்லாரும் அப்போ அப்போ மெசேஜ் பண்ணிட்டு போயிடுவாங்க. ஆனா, தீனா ஒரு வருஷமா தொடர்ந்து எனக்கு மெசேஜ் பண்ணி பேசிட்டே இருந்தான். ‘அது இது எது’ ஷோ பத்தி அதிகமா டிஸ்கஷ் பண்ணுவான். மெசேஜ்லயே ஒரு வருஷம் பேசிட்டு, ஒரு நாள் என்னைப் பார்க்க விஜய் டிவி ஆஃபிஸுக்கு வந்தான். ஒரு போட்டோ மட்டும் எடுத்துட்டு போயிட்டான். 

 

ரியாலிட்டி ஷோ,தாம்ஸன்,தீனா

அப்பறம் அடிக்கடி வர ஆரம்பிச்சான். நான் என்னோட உதவி இயக்குநர்களோடு ஸ்கிரிப்ட் டிஸ்கஷனில் இருக்கும் போதெல்லாம் கூடவே இருப்பான். எதுவுமே பேசமாட்டான். எதாவது கேட்டா மட்டும் பதில் சொல்லுவான். கொஞ்ச நாள்ல அவனும் என்கிட்ட உதவி இயக்குநராகிட்டான். ஐடியா சொல்றது, கவுன்ட்டர்ஸ் சொல்றது, ஸ்கிரிப்ட்ஸ் டைப் பண்றதுனு எல்லா வேலையும் பார்ப்பான். அப்படி ‘அது இது எது’ல உதவி இயக்குநரா வேலை பார்த்திட்டு இருக்கும் போது ஒரு நாள் ‘சிரிச்சா போச்சு’ல சின்ன கேரக்டர் கொடுத்தேன். 

தீனா அந்த எபிசோடுல பண்ணுன கேரக்டர் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு. தீனா இப்போவே ஒல்லியாகத்தான் இருக்கான். அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பான். அவனுக்கு போலீஸ் கேரக்டர் கொடுத்தேன். அவன் போலீஸ் கெட்டப் போட்டு வந்து நின்னப்போ எனக்கே செம காமெடியா இருந்தது. அந்த எபிசோடுல வடிவேல் பாலாஜி வந்திருந்த மூணு கெஸ்ட்ல ரெண்டு கெட்ஸ்ட்டை சிரிக்க வெச்சுட்டார். மூணாவது கெஸ்ட்டை சிரிக்க வைக்க பாலாஜி போராடிட்டு இருந்தார்.

அப்போ லிப்ட்ல இருந்து தீனா டான்ஸ் ஆடிட்டே என்ட்ரி கொடுத்தான். உடனே வந்திருந்த கெஸ்ட் ஒருத்தர், ‘இன்னும் ரெண்டு ஸ்டெப் போட்டு காமி’னு சொன்னார். அதுக்கு தீனா லிப்ட்ல இருந்து இறங்கி வர ஸ்டெப்பை காட்டி, ‘ஸ்டெப் 1, ஸ்டெப் 2, ஸ்டெப் 3’னு சொன்னான். ‘இதுவும் ஒரு காமெடினு இந்த பச்சப்புள்ள பண்ணிட்டு இருக்கு, அதுக்குக்கூட சிரிக்காம இப்படி கல்லு மாதிரி இருக்கீங்களே’னு வடிவேல் பாலாஜி சொன்னதும், சிரிக்காம இருந்த கெஸ்ட்டும் சிரிச்சிட்டார். இதுதான் தீனா பண்ணுன முதல் எபிசோடு. அடுத்து அப்போ, அப்போ ‘சிரிச்சா போச்சு’ல வருவான். 

‘அது இது எது’ போயிட்டு இருக்கும் போது ‘கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிச்சாங்க. அதுல கலந்துக்கிறதுக்காக திருச்சி ஆடிஷனுக்கு தீனா போயிருக்கார். நானும் அங்கதான் வரேன்னு தெரியாம, ‘சார் நான் திருச்சி ஆடிஷனில் கலந்துக்கப்போறேன் சார். bless me'னு மெசேஜ் அனுப்புனான். நானும்,’ஆல் த பெஸ்ட்டா தம்பி. நல்லா பண்ணு. god bless you'னு சொன்னேன். என் கார் ஆடிஷன் நடக்குற இடத்துக்குள்ள வந்ததும் பையனுக்கு செம ஷாக். அப்பறம் ஆடிஷனில் ஒரு கான்செப்ட் பண்ணினான். அது சிறப்பா இல்லாதனால அவனை வெயிட்டிங் லிஸ்ட்ல வெச்சாங்க. அப்பறம் சென்னை ஆடிஷனுக்கு வந்தான். அங்கேயும் பெரிசா எதுவும் பண்ணலை. ஆனால் அவன் மேல எனக்கு நம்பிக்கை இருந்தனால இவன் நல்லா பண்ணுவான்னு சொல்லி மெயின் ஆடிஷனுக்கு வரவச்சேன். அதுல செலக்ட் ஆகியிட்டான்.

இரண்டாவது ரவுண்ட்ல சரியா பண்ணலை. அப்போ தீனாவை எலிமினேட் பண்ணிடலாம்னு சொன்னாங்க. இல்லை, அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம்னு சரத், கேப்ரியாளாவோட சேர்ந்து பண்ண வச்சேன். ’காஞ்சனா’வையும் ’சந்திரமுகி’யையும்  சேர்ந்து ’காஞ்சமுகி’னு ஒண்ணு பண்ணுனாங்க. சீசன் 5ல் 20 மார்க் வாங்குன முதல் பெர்ஃபார்மென்ஸ் அதுதான். இந்த எபிசோடைப் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் கால் பன்ணி, ‘ரொம்ப நல்லா இருந்தது’னு சொன்னார். இந்த எபிசோடை அதிக முறை பார்த்ததாகவும் சொன்னார். அதே சமயம் தீனாவை எலிமினேட் பண்ணச்சொன்ன நடுவர்கள் அவனோட வளர்ச்சியைப் பார்த்துட்டு, ‘நாங்க வேணானு சொன்ன தீனாவா இது’னு ரொம்ப எமோஷனலாய் சொன்னாங்க. அதுதான் தீனாவோட வெற்றி.

ரியாலிட்டி ஷோ,தீனா,சரத்,கேப்ரியாளா,தாம்ஸன்

அதுக்கப்பறம் தீனாவும் சரத்தும் சேர்ந்து நிறைய நல்ல பெர்ஃபார்மென்ஸ் பண்ணிட்டு வந்தாங்க. கவுண்டமணி - செந்தில் காம்போ மாதிரி இவங்க காம்போ ஹிட்டாச்சு. சரத் என்ன பண்ணுனாலும் தீனா அதை கலாய்ச்சு காமெடி பண்ணது மக்கள்கிட்ட நல்லா ரீச்சாச்சு. இடையில சில எபிசோடுகள் சரியா பண்ணாததுனால ரெண்டு பேரும் எலிமினேட் ஆகி, wild card மூலம் தீனா ஃபைனலுக்கு வந்தான். ஆனால் நேரம் கம்மியா இருந்தனால அவனால சீசன் 5 டைட்டிலை வின் பண்ண முடியலை. ஆனால் வின்னருக்கான எல்லா தகுதியும் தீனாக்கிட்டையும் இருக்கு. ஏன்னா, அவன் சீசன் 5ல உதவி இயக்குநராகவும் இருந்துட்டு போட்டியாளராகவும் இருப்பான். உதவி இயக்குநரா மத்த போட்டியாளர்களின் ஸ்கிரிப்ட்லையும் வொர்க் பண்ணுவான். அப்புறம் இவனோட ஸ்கிரிப்ட்டுக்கும் தனியா வொர்க் பண்ணுவான். ரொம்ப நல்ல ஹார்டு வொர்க்கர். எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு பண்ணுவான். சீசன் 5 முடிஞ்சதுக்கு அப்பறம் சீசன் 6லையும் உதவி இயக்குநரா இருந்தான். 

அப்போதிருந்தே சின்னச் சின்ன பட வாய்ப்புகள் தீனாவுக்கு வந்துட்டு இருந்துச்சு. நான் எல்லார்கிட்டையும் சொல்ற மாதிரி அவன்கிட்டையும், ’சின்ன படம், சின்ன கேரக்டர்னு பண்ணி உன்னோட பெயரை நீயே கெடுத்துக்காத’னு சொன்னேன். பெரிய படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த தீனாவுக்கு ’பவர் பாண்டி’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ’பவர் பாண்’டி ரிலீஸானப்போ தியேட்டரில் தீனாவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. எல்லாரும் அவனை நோட் பண்ணுனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 

ரியாலிட்டி ஷோ,தீனா,தாம்ஸன்

 

அடுத்து ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ ஆரம்பிச்சதும் அவன் சில படங்களில் கமிட்டாகிட்டான். அதுனால தொடர்ச்சியா தீனாவால கலந்துக்க முடியலை. எப்போ ஃபிரீயா இருக்கானோ அப்போ மிஸ் பண்ணாம ஷூட்டிங் வந்திருவான்.  ரொம்ப நல்ல உழைப்பாளி. அவன் இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு போகணும். God bless you dheena

https://cinema.vikatan.com/tamil-cinema/news/113934-the-real-story-of-reality-show-heroes-series-episode-7.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

“தனுஷ், நயன்தாராவோட நடிக்கிற அளவுக்கு அறந்தாங்கி நிஷா வளர்ந்த கதை..!” - அத்தியாயம் 8

 
 

ரியாலிட்டி ஷோ

 

“கலக்கப்போவது யாரு சீசன் 5-ன் போட்டியாளராகத்தான் நிஷாவை எனக்கு தெரியும். அந்த சீசனுக்காக ஆடிஷன் நடக்கும் போது நிஷாவால கலந்துக்க முடியலை. அப்பறம் என்னோட உதவி இயக்குநர் ஹரிதான் நிஷாவை எனக்கு அறிமுகம் செய்து வச்சான். நிஷாவோட ஸ்டாண்ட் அப் காமெடியைப் பார்த்தவுடனே அவங்களை செலக்ட் பண்ணிட்டேன். அந்த சீசனில் அன்னலட்சுமி, சசிகலானு இரண்டு பெண் போட்டியாளர்கள் இருந்தாலும், நிஷாதான் ஃபைனல் வரைக்கும் வந்து, ரன்னர் அப் ஆனாங்க. நிஷாவைப் பொறுத்தவரைக்கும் அவங்களை பாராட்டுனா, ‘என்ன கலாய்க்கிறீங்களா’னு கேட்பாங்க. கலாய்ச்சீகன்னா, தாங்க்யூவா டேங்க்யூனு அவங்க ஸ்டைல்ல சொல்லிட்டு போவாங்க. இதைத்தான் நிஷாவோட முதல் வெற்றியா நான் பார்க்கிறேன். தன்னை கலாய்ச்சாலும் அதெல்லாம் ஒரு மேட்டரா எடுத்துக்காம போயிட்டே இருப்பாங்க. ஆனால், எப்போ கலாய்க்கணும், எப்போ கலாய் வாங்கணும்னு நிஷாவுக்கு நல்லா தெரியும்.

 

ஒரு பெண் போட்டியாளரா நிஷா நிறைய விஷயத்தை ப்ரேக் பண்ணினாங்க. தன்னை தானே கலாய்ச்சி காமெடி பண்ணுவாங்க, நடுவரா இருந்த பாலாஜியை மாமானு கூப்பிடுவாங்க, தன்னோட கணவர், மாமியாரை திட்டி காமெடி பண்ணுவாங்க. இப்படி பல விஷயங்களை தைரியமா பண்ணுனாங்க. சீசன் 5க்கு முன்னாடி நிஷா பட்டிமன்ற பேச்சாளரா இருந்தாங்க. பொதுவா பட்டிமன்ற பேச்சாளராக இருக்கவங்க காமெடி பண்ண வந்தா, அங்கேயும் பட்டிமன்றத்துல பேசுற மாதிரியே பேசுவாங்க. ஆனால், நிஷா அப்படியில்லை. இங்க வந்தா பக்கா காமெடியனாகவும், அங்க போன சிறந்த பேச்சாளராகவும் இருப்பாங்க.

அறந்தாங்கி நிஷா

நிஷா கலந்துக்கிட்ட முதல் எபிசோடுலேயே அவங்களோட நிறத்தை வைத்து காமெடி பண்ணுனாங்க. அது அப்படியே தொடர்ந்து நடுவர்களும் நிஷாயோட நிறத்தை வச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அது நிஷாவுக்கோ, அவங்க வீட்டுக்கோ எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வெளியில என்னைப் பார்க்கிற நிறைய பேர், ‘ஏன் அந்தப் பொண்னோட நிறத்தை வச்சு காமெடி பண்றீங்க. அந்தப் பொண்ணு ஒன்னும் சொல்லலைனா அப்படி பண்ணலாமா..? கறுப்பா இருக்கிற பெண்கள் அந்த காமெடியைப் பார்த்தால் சிரிப்பாங்கனு நினைக்கிறீங்களா?’னு பல கேள்விகள் கேட்டாங்க. அதுக்கப்பறம்தான் அந்த மாதிரியான உருவகேலி, நிறகேலியை முடிந்த அளவுக்கு குறைச்சிட்டு வரேன்.

அப்பறம் கணவரையும், மாமியாரையும் திட்டு நிறைய காமெடி சொல்லுவாங்க நிஷா. மாமியாரை ‘கிழவி’னு சொல்லுவாங்க, என் புருஷனை நேத்து மூக்குலையே ஒண்ணு விட்டேன்’னு சொல்லுவாங்க. இதெல்லாம் நடுவர்கள் கேட்டும் போது, ‘இப்படியெல்லாம் சொல்றீயே நிஷா, வீட்டுக்கு போனா உனக்கு சோறு கிடைக்குமா?’னு கேட்பாங்க. எனக்கும் இதே சந்தேகம் இருந்துச்சு. அதை நிஷாகிட்ட கேட்கும் போது, ‘இதெல்லாம் காமெடிக்குதான்னு என் வீட்டுல புரிஞ்சுக்கிட்டப் பின்னாடிதான் சார் நான் இந்த மாதிரி பேசவே ஆரம்பிச்சேன். அவங்க இதை சீரியஸா எடுத்துக்கிட்டா என்னால இப்படியெல்லாம் பேச முடியாது’னு சொன்னாங்க. உண்மையாகவே நிஷா வீட்டுல இப்படி ஒரு சப்போர்ட் இல்லைன்னா அவங்கனால இந்த மாதிரி காமெடி பண்ணவே முடியாது. அதேமாதிரி ஷூட்டிங்கிற்கு அறந்தாங்கியில இருந்து தனியா வந்து இரண்டு நாள் சென்னையில தங்கி ஷூட் முடிச்சிட்டு போவாங்க.

அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில சீசன் 1ல இருந்து இப்போ நடந்துட்டுவர சீசன் 7 வரைக்கும் பாத்தீங்கன்னா, நிஷா மாதிரி ஒரு பெண் போட்டியாளர் எங்க நிகழ்ச்சிக்கு கிடைக்கவே இல்லை. அவங்ககிட்ட எனர்ஜி, ஹூமர் சென்ஸ், தொடர்ச்சியா திக்காம காமெடி பண்ற திறமைனு நிறைய விஷயங்கள் இருக்கு. மொத்தத்துல சுருக்கமா சொல்லணும்னா எங்க டீமோட ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நிஷாதான். அவங்களோட இந்த வளர்ச்சி, திறமையினாலதான் இப்போ தனுஷ் சாரோட ‘மாரி 2’ படத்துலையும், நயன்தாரா மேடமோட ‘கோலமாவு கோகிலா’ படத்துலையும் நடிக்கிறாங்க. தனுஷ் சாரைப் பார்க்க போயிருந்தபோது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படத்தைப் பற்றி டிஸ்கஷன் பண்ணுனாராம். அவங்களோட காமெடியை எல்லாம் சொல்லி, நிறைய பாராட்டினாராம். அதை ரொம்ப சந்தோஷமா என்கிட்ட வந்து சொன்னாங்க.

 

நிஷா எப்போதும் இது போதும்னு நிறுத்த மாட்டாங்க. எப்போ போன் பண்ணுனாலும் எக்மோர்ல இருக்கேன், கிண்டியில இருக்கேன்னு சொல்லிட்டே இருப்பாங்க. அதுக்கு நான், ‘என்ன நிஷா கால் டாக்ஸியிலையா வேலைப் பார்க்குறீங்க. எப்போ போன் பண்ணுனாலும் ஒவ்வொரு இடம் சொல்றீங்க’ன்னு கேட்பேன். அந்த அளவுக்கு ஓடிட்டே இருப்பாங்க. பழனியும் நிஷாவும் கலக்கப்போவது யாருல எப்படி ஒத்துமையா காமெடி பண்றாங்களோ, அதே மாதிரிதான் ஈவென்ட்லையும் பண்ணுவாங்க. நிஷாவுக்கு பழனியும் நல்ல சப்போட்டா இருக்கார். நிஷாவோட திறமைக்கு இன்னும் பல உயரங்கள் தொடுவாங்கனு நம்பிக்கை இருக்கு.”

https://cinema.vikatan.com/tamil-cinema/news/115102-the-real-story-of-reality-show-heroes-episode-8.html

 

 

 

“தங்கதுரையோட ஜோக் மட்டுமில்ல, அவரே பழசுதான்..!” - அத்தியாயம் - 9

 
 

தங்கதுரை

 

‘கலக்கப்போவது யாரு’ முதல் சீசனிலேயே தங்கதுரை போட்டியாளராக இருந்தார். இப்போ எல்லாரும் அவரை பழைய ஜோக் தங்கதுரைனு சொல்றாங்க. அவரோட ஜோக் மட்டுமில்ல, அவரே பழசுதான் மக்களே. இப்போ எப்படி பழைய, பழைய ஜோக்கா சொல்றாரோ அதே மாதிரிதான், முதல் சீசனிலும் மதன்பாப் சாரைப் பார்த்து, ‘சார் நீங்க எவ்வளவுதான் குண்டா இருந்தாலும் உங்களைத் துப்பாக்கியில போட்டுச் சுட முடியாது’னு ஒரு பழைய ஜோக்கைப் போட்டார். அதனாலேயே எலிமினேட் ஆகி போயிட்டாப்ள. அதுக்கப்பறம் வேற, வேற சேனல்களுக்குப் போய், சில படங்கள் நடிச்சிட்டு மறுபடியும் ’அது இது எது’ ஷோவுல ரீ-என்ட்ரி ஆனார்.

 

சரி, திரும்ப வந்ததுக்கு அப்பறம் புது ஜோக்கா சொல்லுவார்னு பார்த்தா, அப்பவும் நிறைய பழைய ஜோக் சொன்னார். நாங்களும் எவ்வளவோ சமாளிச்சுப் பார்த்தோம், முடியல. ’சரி, இதுதான் உனக்கு வருது. நீ இதையே பண்ணு’னு சொல்லி, டைகர் கார்டன் தங்கதுரையா இருந்தவரை பழைய ஜோக் தங்கதுரையா மாத்தி களத்துல இறக்கி விட்டோம். 

தங்கதுரை

பெயர் மாத்துன ராசியா, சாம்பியன்ஸ் ஆரம்பிச்ச நேரமானு தெரியலை, தங்கதுரை எந்த ஜோக் சொன்னாலும் கைதட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ‘இவன் எப்படியும் பழைய ஜோக்தான் சொல்லப்போறான். நாம கைதட்டுவோம்’னு தட்டுனாங்களானு தெரியலை. ஆனா, ஆடியன்ஸ் தங்கதுரையோட செட்டாகிட்டாங்க. தங்கதுரை பழைய ஜோக்கினால மட்டும் ஃபேமஸ் ஆகலை. அவர் பழைய கவிதை, பழைய கானா பாட்டுனு அள்ளி எரிவாப்ல. 

சாம்பியன்ஸுல ராமருக்கு அப்பறம் தங்கதுரைக்குதான் ஃபேன்ஸ் ஜாஸ்தி. ராமரும், தங்கதுரையும் கவுண்டமணி - செந்தில் காம்போ மாதிரி. ராமர் இல்லைன்னா தங்கதுரைக்கு வேலை இல்லை. தங்கதுரை இல்லைன்னா ராமருக்கு வேலை இல்லை. ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சே ஸ்கோர் பண்ணிட்டு இருக்காங்க. 

தங்கதுரை

தங்கதுரையோட ஸ்பெஷல் என்னான்னா, எதிர்ல பேசுறவங்க சொல்ற வார்த்தையை வெச்சே, அவர் போட்டு வர கெட்டப்பை வெச்சே கவுன்ட்டர் கொடுப்பார். ஒரு தடவை ராமரைப் பார்த்து, ‘என்னணே மங்களகரமான மனிதக் குரங்கு மாதிரியே இருக்கியேணே’னு சொன்னார். அதே மாதிரி குரேஷி ஒரு தடவை வடிவேலு கெட்டப் போட்டு வந்தான். குரேஷி நல்லா கலரா இருப்பான். அவன் வடிவேலு கெட்டப் போட்டு வந்ததும், ‘என்னடா நீ வடகொரியா வடிவேலு மாதிரி இருக்கியேடா’னு சொன்னார். இப்படி தங்கதுரையை யாராவது கலாய்க்க வந்தா, அவங்களை இவர் கலாய்ச்சிடுவார். 

தங்கதுரைகிட்ட, ‘உனக்கு ஷூட் இருக்கு வாடா’னு சொன்னா, ‘ராமர் ஐயா வராறா’னுதான் கேட்பார். ஷூட்டுக்கு தங்கதுரை வந்தா, முதல்ல ராமர் என்ன கெட்டப் போடுறார்னு பார்ப்பார். ஒரு தடவை ராமர் சங்கீதகலாபூஷண் கெட்டப் போட்டு வந்தார். உடனே தங்கதுரை, ‘என்னாது, சங்கீதா கலா புருஷனா’னு கலாய்ச்சிட்டார். அடுத்து ராமர் மேக்கப் போடும்போது தங்கதுரையைப் பக்கத்துலையே விட மாட்டார். இருந்தாலும் டெம்ப்ளேட்டா சில கவுன்ட்டரை வெச்சு கலாய்ச்சி விட்ருவார். உதாரணத்துக்கு, ‘யார்ணே நீ... எந்த கெட்டப் போட்டாலும் அசிங்கமா இருக்க...’, ‘மாட்டு சாணியில ஃபேஷியல் பண்ணுன மாதிரி இருக்கியேணே’, ‘கலாய்க்கிறத்துக்காகவே படைக்கப்பட்ட மூஞ்சிணே உன்னோட மூஞ்சி’ இப்படி நிறைய வெச்சிருப்பார். ராமரை வெச்சுத்தான் தங்கதுரை ஃபேமஸ் ஆனார். ஒருத்தர் கலாய்ப்பார், ஒருத்தர் கலாய் வாங்குவார். இதை மாத்தி, மாத்தி பண்ணிட்டே இருக்கறதனாலதான் ஹிட்டாகுறாங்க.

தங்கதுரை

தங்கதுரையோட கல்யாணத்துல ஒரு காமெடி நடந்துச்சு. அன்னைக்குத்தான் எங்க டீமில் ஆனந்த்னு ஒரு பையனுக்குப் பிறந்தநாள். எல்லாரும் கல்யாணத்துக்குப் போய் அவரை வாழ்த்திட்டு, கல்யாண பொண்ணையும், மாப்பிள்ளையையும் பின்னாடி நிக்க வெச்சுட்டு, ஆனந்துக்கு கேக் வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும், ‘என்னடா, இவனுங்க கல்யாணத்துக்கு வந்துட்டு பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்காங்க’னு பார்த்தாங்க. அடுத்த நாள், ’ஏண்டா, நான் காசு கொடுத்து மஹால் புடிச்சு கல்யாணம் வெச்சா, நீங்க வந்து பர்த்டே கேக் வெட்டுறீங்க’னு செம கடுப்புல வந்து திட்டிட்டு இருந்தார்.

 

தங்கதுரை பழைய ஜோக்கே சொன்னாலும் அவரோட ஸ்லாங்தான் நமக்கு சிரிப்பு வர வைக்கும். அதே பழைய ஜோக்கை நான் சொன்னாலோ, வேற யார் சொன்னாலோ சிரிப்பு வராது, கோபம்தான் வரும், அதான் தங்கதுரைகிட்ட இருக்கிற ப்ளஸ். தங்கதுரை என்ன கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா நடிப்பார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘மாநகரம்’னு சில நல்ல படங்களில் நடிச்சிருக்கார். இப்போ ’அட்டக்கத்தி’ தினேஷ் நடிச்சிருக்கிற ‘அண்ணனுக்கு ஜே’ படத்துல ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். இன்னும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் நடிச்சு, பெரிய நடிகனாக வர தங்கதுரைக்கு என்னோட வாழ்த்துக்கள்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/115804-the-real-story-of-reality-show-heroes-episode-9.html

 

 

’’ஆக்‌ஷன் ஹீரோக்களை வெச்சு காமெடி பண்றதுல அமுதவாணன் கில்லி..!’’ - அத்தியாயம் - 10

 
 

ரியாலிட்டி ஷோ

 

’கலக்கப்போவது யாரு’ சீசன் 3ல அமுதவாணன் போட்டியாளரா இருந்தார். ஆனால், அந்த சீசனோட ஆடிஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் அமுதவாணன் வந்தார். அவர் பண்ணின பெர்ஃபார்மன்ஸ் பிடிச்சிருந்தனால செலக்ட் பண்ணிட்டோம். பொதுவா ’கலக்கப்போவது யாரு’ ஆடிஷன்னு சொன்னதும் மதுரையில இருந்து விஜயகாந்த் வாய்ஸ், கோயம்புத்தூரில் இருந்து சத்யராஜ் வாய்ஸ், திருநெல்வேலியில இருந்து கோட்டா ஸ்ரீனிவாசன் வாய்ஸ்னு ஒவ்வொரு ஊர்க்காரங்களும் வந்துடுவாங்க. ஆனால், அமுதவாணன் ஒரு டான்ஸரா இருந்தனால, அந்த டான்ஸை வெச்சே எப்படி காமெடி பண்றதுன்னு வித்தியாசமா யோசிச்சு பண்ணினார். சத்யராஜ், ராமராஜ், அர்ஜூன், சரத்குமார் மாதிரி ஆக்‌ஷன் ஹீரோக்களை வெச்சு காமெடியாக ஆடிக்காட்டினார். எனக்கு அது புதுசா இருந்துச்சு. ஆனால், அந்த சீசனில் அமுதுவால் வின் பண்ண முடியலை. 

 

அந்த வெறியில அடுத்து நடந்த ’கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸில் அமுதவாணனும் ராமரும் சேர்ந்து டைட்டில் வின் பண்ணுனாங்க. டான்ஸில் இருந்து மிமிக்ரி, ஸ்கிரிப்ட்னு நல்லாவே டெவலப் ஆகிட்டார். சாம்பியன்ஸ் முடிஞ்சதுக்குப் பிறகு ’அது இது எது’ ஆரம்பிச்சோம். ’சிரிச்சா போச்சு’ல தனியா வந்தே வடிவேல் பாலாஜி ஸ்கோர் பண்ணிட்டு இருந்த டைம்ல அமுதவாணன், பழனி பட்டாளம், ஜெயசந்திரன், திவாகர், சிங்கப்பூர் தீபன் இவங்க ஒரு டீமா என்ட்ரி ஆனாங்க. இதுதான் ’அது இது எது’ ஷோவை வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போச்சு. டீமா பண்ணும் போது நிறைய வித்தியாசமான ஸ்கிரிப்ட் பண்ணினாங்க. பல எபிசோடு வைரல் ஆச்சு.

அமுதவாணன்

சில வாய்ஸ் மட்டுமே பேசினாலும் அதை கரெக்ட்டா பேசுவார் அமுதவாணன். சில பேர் நான் 100 வாய்ஸ் பேசுவேன்; 150 வாய்ஸ் பேசுவேன்னு சொல்லுவாங்க. தமிழ் சினிமாவுல மொத்தம் அத்தனை ஹீரோக்களே இருக்க மாட்டாங்க. அந்தளவுக்கு கதை விடுறவங்க மத்தியில அமுதவாணன் மாதிரி சில வாய்ஸ் பேசினாலும் பக்காவா பேசணும். டான்ஸ், மிமிக்ரி அப்பறம் கெட்டப்ஸ் மேல கவனம் செலுத்த ஆரம்பிச்சார். ’அமைதிப்படை’ சத்யராஜ் கெட்டப்ல செமையா இருப்பார். எந்த கெட்டப் போட்டாலும் அது பக்காவா செட்டாகணும்னு அதுக்காக மெனக்கெடுவார். டான்ஸுக்கு அடுத்து கெட்டப்தான் அமுதுவை ஃபேமஸாக்குச்சு. 

டான்ஸ் நல்லா வரதுனால ’ஜோடி நம்பர் ஒன்’ல கலந்துக்கப் போனார். அங்கப்போய் டான்ஸ் மட்டுமில்லாம அதுலையும் சில காமெடிகள் பண்ணி என்டர்டெயின் பண்ணுனார். அந்த ஷோலையும் டைட்டில் வின் பன்ணி, தான் ஒரு நல்ல டான்ஸர்னு நிரூபிச்சார். அப்பறம் பாலா சாரோட ’தாரை தப்பட்டை’ படத்தில் நடிச்சார். முதல் படமே பாலா சார், இளையராஜா சார், சசிகுமார், வரலட்சுமினு ஒரு பெரிய படமா கிடைச்சதுனால எனக்கு செம ஹேப்பி. இப்போ அடுத்தடுத்து சில படங்களில் நடிச்சுட்டு இருக்கார். சினிமாவுலையும் நல்லா வருவார்னு நம்பிக்கை இருக்கு.

ரியாலிட்டி ஷோ

 

அமுதவாணன்கிட்ட இருக்கிற மிகப்பெரிய நல்ல குணமே, எப்போதும் மாறாம இருக்கிறதுதான். முதல் நாள் என்கிட்ட எப்படி பேசினாரோ அதே மாதிரிதான் இப்போதும் பேசுவார். அதேபோல் முன்னேறணும்கிற வெறி நிறையவே இருக்கு. காமெடி பண்ற வேலையா இருந்தாலும் அதை சீரியஸா எடுத்து பண்ணக்கூடிய ஆள். செம எனர்ஜியான ஆள். இரவு 2 மணிக்கு ஷூட் இருந்தாலும் எனர்ஜியா பெர்ஃபார்மன்ஸ் பண்ணுவார். ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கிதுனா அதை மிஸ் பண்ணிடவேக்கூடாதுனு நினைக்கிற ஆள். அதுனாலதான் எந்த ஒரு வாய்ப்பு கிடைச்சாலும் அதில் சிறப்பா பண்ணுவார். அமுது எப்போவோ ஜெயிக்க வேண்டிய ஆள். அவருக்கான நேரம் இன்னும் சரியா செட்டாகாம இருக்கு. சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் மாதிரி அமுதவாணனும் சீக்கிரமே சினிமாவுல ஜொலிப்பார். 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/119219-the-real-story-of-reality-show-heroes-series-episode-10.html

 

 

``கை தட்டுறதுக்கு ஆள் அழைச்சிட்டு வரணும்... இதுதான் நாஞ்சில் விஜயன் வேலை..!’’ - அத்தியாயம் 11

 
 
 

நாஞ்சில் விஜயன்

 

நாகர்கோவிலில் பாலிடெக்னிக் படிச்சுட்டு இருந்த பையன்தான் நாஞ்சில் விஜயன். காமெடி பண்ணணும்கிற ஆசையில் பாலிடெக்னிக்கை பாதியிலேயே விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டான். ஆனால், `கலக்கப்போவது யாரு’ சீசன் 4 ஆடிஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் வந்தான். விஜய் டிவியில் காமெடிக்குப் பஞ்சம் இருந்த காலத்தில் தஞ்சம் புகுந்தவன்தான் விஜயன். அட... சிரிக்காதீங்க பாஸ். உண்மைதான்.

 

அப்போ அவன் ஸ்டாண்டப் காமெடிதான் பண்ணினான். அந்தச் சமயத்துல அவனுக்கு 17 வயசுதான் இருக்கும். பார்க்க ரொம்ப சின்னப் பையன் மாதிரி இருப்பான். இப்பவும் பார்க்கச் சின்னப் பையன் மாதிரிதான் இருக்கான். அப்போ எப்படி இருந்துருப்பான்னு யோசிச்சுப் பாருங்க. பரீட்சைக்குப் போற பசங்க எப்படி மனப்பாடம் பண்ணுவாங்களோ, அப்படி மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிப்பான். காமெடிகள் நல்லா இருந்தாலும், சின்னப் பையனா இருந்ததனால மற்ற போட்டியாளர்களோட போட்டிப்போட முடியலை. அந்த சீசன்ல இருந்து எலிமினேட் ஆகிட்டான்.

நாஞ்சில் விஜயன்

அதுக்கப்பறம் ஒரு பெரிய கேப். அடுத்து `அது இது எது’ நிகழ்ச்சி ஆரம்பிச்சதும் அந்த நிகழ்ச்சிக்கு ஆடியன்ஸை அழைச்சிட்டு வர ஒருங்கிணைப்பாளர் வேலைப் பார்க்க ஆள் தேவைப்பட்டது. அதை விஜயன் பண்ணினான். இது பல பேருக்குத் தெரியாத தகவலா இருக்கும். இப்படி பல எபிசோடுகளுக்கு அவன்தான் வெப்பன் சப்ளையரா இருந்தான். அந்த டைம்ல சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கவும் செய்தான். ஸ்கிரீன்ல வந்தாலும் பெருசா வெளியில தெரியாமலே இருந்தான். அவன் எப்போ லேடி கெட்டப் போட ஆரம்பிச்சானோ அப்போத்தான் செமையா ரீச்சானான். ஒரு லேடி கெட்டப் போடுறது சாதாரண விஷயம் இல்லை. `ஒரு நாள் கூத்துக்காக ஏன் மீசையை எடுக்கணும்’னு ஒரு ஃபேமஸான வசனம் இருக்கு. அது லேடி கெட்டப்புக்கு ரொம்ப சரியாகப் பொருந்தும். ஒரு ஸ்கிரிப்ட்டுக்காக லேடி கெட்டப் போடணும்னா, மீசை, தாடி எல்லாம் எடுக்கணும். அதனாலேயே பெரும்பாலும் லேடி கெட்டப் போடுறதுக்குத் தயங்குவார்கள். 

ஆனால், விஜயன் அதுக்கெல்லாம் தயங்குற ஆளே இல்லை. அவன் லேடி கெட்டப் போட்டா, அதில் எந்த ஒரு விஷயமும் மிஸ்ஸாகாது. அதுக்காக அதிகம் மெனக்கெடுவான். இதுனால அவனுக்குக் கிண்டல், கேலிகள் அதிகமாக வந்திருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு,`சார் இனிமேல் லேடி கெட்டப்பே வேணாம் சார்’னு விஜயன் என்கிட்ட சொன்னான். அதுக்கு நான்,`உனக்கு வாய்ப்புக் கிடைக்காம இருந்தப்போ இவங்க எல்லாரும் எங்கயிருந்தாங்க. இதையெல்லாம் கண்டுக்காத. இது ஒரு கலை; இது உன்னோட வேலை. அதை பண்ணிட்டே இரு’னு சொன்னேன்.  விஜயனுக்கு மட்டுமல்ல, எங்க டீம்ல யாரெல்லாம் லேடி கெட்டப் போடுறாங்களோ அவங்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை வந்திருக்கு. 

நாஞ்சில் விஜயன்

`அது இது எது’ நிகழ்ச்சியில பல டைம் லேடி கெட்டப் போட்டிருந்தாலும், `என்னமா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுல விஜயன் போட்ட கெட்டப் அவனை வைரல் ஆக்குச்சு. அந்த எபிசோடுல ராமர், `ஏம்மா இதெல்லாம் ஒரு பொண்ணாம்மா?’னு கேட்பார். அந்த கவுன்ட்டரை இன்னைக்கு வரைக்கும் நிறைய சொல்லிட்டு இருக்காங்க. இந்த மாதிரி நாஞ்சில் விஜயனுக்குப் பல கவுன்ட்டர்ஸ் கொடுப்போம். நட்சத்திர ஆமை, தாய்லாந்து தவளை, காமெடி சைக்கோ இப்படி விஜயனைப் பார்த்து நிறைய சொல்லுவான் தங்கதுரை. நான் நாஞ்சில் விஜயனை நாலு இன்ச் விஜயன்னு தான் கூப்பிடுவேன். இது அவனோட உயரத்தை கிண்டல் பண்றதுக்காக இல்லை; ஒரு ரைமிங்கா இருக்கிறனால சொல்லுவேன். அவ்வளவுதான். 

 

தான் நடிக்கிற எபிசோடு எப்படி ஹிட்டாகணும்னு பொறுப்போட வேலைப் பார்ப்பானோ அதே மாதிரிதான் ஃபேமிலி சைடும் விஜயனுக்கு அதிக பொறுப்புகள் இருக்கு. சின்ன வயசுலேயே விஜயனோட அம்மா இறந்துட்டாங்க; சில வருடங்களா அவனோட அப்பாவும் உடம்பு சரியில்லாம இருக்கார். விஜயன்தான் அவனோட தம்பி, தங்கச்சியைப் பார்த்துக்கிறான்.`அது இது எது’ நிகழ்ச்சிக்காக ஒரு காலத்தில் ஆடியன்ஸை அழைச்சிட்டு வந்தவனுக்கு, இப்போ தனியா ஆடியன்ஸே உருவாகிட்டாங்க. அதுதான் நாஞ்சில் விஜயனோட வெற்றி.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/120537-the-real-story-of-reality-show-heroes-series-episode-11.html?artfrm=cinema_most_read

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

’’கவுண்டமணி சார் கேரக்டரை மெயினா வச்சு மிமிக்ரி பண்ணின முதல் ஆள் திவாகர்..!’’ - அத்தியாயம் - 12

 
 

திவாகர்

 

’கலக்கப்போவது யாரு’ சீசன் 4-ல தான் திவாகர் வந்தார். நிறைய பேர் மாதிரி இவரும் ஆடிஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் வந்தார். நானும் பல பேரைப் பார்த்துட்டேன், எல்லாரும் ஆடிஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் வராங்க. ஏன்னா, ஆடிஷன் அப்போ நிறைய பேரு வருவாங்க; தனியா போய்ப் பார்த்த கூட்டமே இருக்காதுனு நினைச்சிட்டு வராங்க. அப்போ உங்களுக்கு ரூல்ஸ் எல்லாம் இல்லையானு கேட்காதீங்க. நாங்க என்ன ஐ.பி.எல்.லா நடத்திட்டு இருக்கோம். அதுலேயே ரூல்ஸ் இல்லாமத்தான் போயிட்டு இருக்கு. சரி, நாம திவாகர் கதைக்கு வருவோம். 

சீசன் 4 ஆடிஷனுக்கு வந்தவர்கிட்ட, ஸ்டாண்டப் காமெடியா - மிமிக்ரியானு கேட்டேன். மிமிக்ரினு சொல்லிட்டு, மிமிக்ரியை ஸ்டாண்டப் காமெடி மாதிரி பண்ணினார். நிறைய வாய்ஸ் பேசினாலும் கவுண்டமணி வாய்ஸ் பக்காவா பண்ணினார். அது ரொம்ப பிடிச்சுப்போய் அவரை செலக்ட் பன்ணினோம். சீசன் 4-ல ஃபைனல் வரைக்கும் வந்தார் திவாகர். அவரால வின் பண்ண முடியலை; ஆனால் ஃபைனல் வரைக்கும் வந்து செம டஃப் கொடுத்தார். 

திவாகர்

அதுக்கப்பறம் ’அது இது எது’ நிகழ்ச்சி ஸ்டார்ட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்த நேரம், ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணிக்கொடுங்கனு விஜய் டிவியில இருந்து சொன்னாங்க. அந்த டெஸ்ட் ஷூட்டோட ’சிரிச்சா போச்சு’ல திவாகர்தான் காமெடி பண்ணுனார். சொல்லப்போன ’சிரிச்சா போச்சு’வை தொடங்கி வச்சதே திவாகர்தான். அந்த டெஸ்ட் ஷூட் மட்டும் ஓகே ஆகாமல், ’அது இது எது’ ப்ராஜெக்ட் ட்ராப் ஆகியிருந்தா திவாகரைத்தான் எல்லாரும் திட்டியிருப்போம். ஆனால், அவர் தொடங்கி வச்ச ஒரு நிகழ்ச்சி ரெண்டு சீசனையும் தாண்டி 400 எபிசோடுக்கு மேல போயிட்டு இருக்கு.

திவாகர்

’அது இது எது’ ஷோ ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் ’சிரிச்சா போச்சு’வை விடாம பண்ணிட்டு இருக்கார். சில எபிசோடுகள் வர முடியாமல் போயிருக்கும். ஆனால், அவர் லாங் ப்ரேக் எடுத்தது இல்லை. அந்த வகையில திவாகர் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஆள். கவுண்டமணி சாரை முதன்மை கேரக்டராக வைத்து ஒரு மிமிக்ரி ஸ்கிரிப்ட் பண்ணின முதல் ஆள் திவாகர்தான். இன்னைக்கு வரைக்கும் அதைத்தான் பண்ணிட்டு இருக்கார்; அது வேற விஷயம். ஆனால், அவர் ஸ்கிரீன்ல எப்படி கவுண்டமணி மாதிரி பண்றாரோ, அதே மாதிரிதான் ஆஃப் ஸ்கிரீன்லேயும் இருப்பார். சொல்லப்போனா ஆஃப் ஸ்கிரீன்லதான் இன்னும் நல்லா காமெடி பண்ணுவார்; எல்லாரையும் ஓட்டுவார். ஒரு நாள் மா.கா.பா.வோட பிறந்தநாள் வந்துச்சு. அன்னைக்கு அதை செட்ல செலிபிரேட் பண்ணினோம். அப்போ திவாகர், ‘மா.கா.பா பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் உலக ஆங்கர் தினமா அறிவிக்கப்படுகிறது’னு சொன்னார். இப்படி ஆஃப் ஸ்கிரீன்ல கவுன்ட்டர் போட்டுட்டே இருப்பார். 

திவாகர்

’சிரிச்சா போச்சு’ல வடிவேல் பாலாஜிக்கு முன்னாடியிருந்தே சோலோவா காமெடி பண்ணிட்டு இருந்தார் திவாகர். அப்பறம் நிறைய சோலோ பெர்ஃபார்மர் வந்தனால டீமா மாத்திட்டோம். அந்த டீம்ல ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜி, ராமர்பழனி பட்டாளம், அமுதவாணன், சிங்கப்பூர் தீபன், ஜெய சந்திரன், நாஞ்சில் விஜயன், தங்கதுரை, திவாகர்னு எல்லாருமே இருந்தாங்க. செம டீமா ஃபார்ம் பண்ணி அதகளம் பண்ணிட்டு இருந்தோம். எல்லா எபிசோடும் வைரலாச்சு. இந்த டீமில எப்போதுமே திவாகர்தான் லீடு வாய்ஸ் பேசுவார். லீடு வாய்ஸ் பேசுறது செம கஷ்டமான வேலை. மத்தவங்க எல்லாரையும் கலாய்ச்சு அந்த ஸ்கிரிப்டை கொண்டு போறதே அந்த லீடு வாய்ஸ் பேசுற கேரக்டர்தான். அதை திவாகர் ரொம்ப சரியா பண்ணுவார். அதனால அதை வேற ஆள்கிட்ட கொடுக்க மாட்டேன்; கொடுக்கவும் விடமாட்டார். 

திவாகர்

திவாகர் இன்னும் ஒரு பெரிய இடத்துக்குப் போகணும்கிற ஆசை எனக்குள்ள இருக்கு. அதுக்கு அவர் நிறைய கெட்டப்ஸ் போடணும். பெரும்பாலும் அவர் வேற வேற கெட்டப்ஸ் போடவே விரும்ப மாட்டார். ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு டைம் லேடி கெட்டப் கொடுத்தோம். அவருக்கு ஏண்டா கொடுத்தோம் என்கிற ரேஞ்சுக்கு பண்ணினார். ’பருத்திவீரன்’ பட பிரியாமணி கேரக்டர்தான் பண்ணினார். கெட்டப் போட்டு வரும்போது, ’பருத்திவீரன்’ படத்தோட க்ளைமேக்ஸ்ல பிரியாமணி எப்படி இருப்பாங்களோ அப்படி இருந்தார். அந்த எபிசோடு முடிச்சுட்டு வந்ததும் திவாகர்கிட்ட, ‘பிரியாமணி மட்டும் இதைப் பார்த்தாங்கன்னா, அவங்க வாங்குன தேசிய விருதை திரும்ப கொடுத்திருப்பாங்க’னு சொன்னேன். அதுக்கப்பறம் அவர் கெட்டப் போடவே இல்லை. ஆர்வமா பல கெட்டப்ஸ் போட்டா இன்னும் ரீச்சாகலாம். 

ஆல் தி பெஸ்ட் திவாகர்!

https://cinema.vikatan.com/tamil-cinema/news/121920-the-real-story-of-reality-show-heroes-series-episode-12.html

 

 

’’சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

 
 

சில ஷோ கன்ட்டென்டிற்காக ஹிட்டாகும்; சில ஷோ ஆங்கருக்காக ஹிட்டாகும். அப்படி சிவகார்த்திகேயனால் ஹிட்டான ஷோதான் ’அது இது எது’. ’எதிர்நீச்சல்’ படம் ரிலீஸாகுற வரைக்கும் சிவா ’அது இது எது’ நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தார். அதுக்கப்பறம் அவரால பண்ண முடியாத ஒரு சூழ்நிலை வந்தது. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியலை. சிவா கிரியேட் பண்ணி வச்ச அந்த ஒரு இடத்திற்கு அடுத்து யாரை அழைச்சிட்டு வரதுன்னு எங்களுக்குள்ள பெரிய குழப்பம். அப்போதான் விஜய் டிவி பிரதீப் சார், ‘மா.கா.பா.வை வச்சு பண்ணலாம்’னு சொன்னார். அந்த டைம் மா.கா.பா ’சூப்பர் சிங்கர்’ல ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தார். சரி, மா.கா.பா.வை வச்சே போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். 

மா கா பா

 

’அது இது எது’ ஷோவை இனிமேல் மா.கா.பா.தான் பண்ணுவார்னு சிவகார்த்திகேயனை வச்சே ஷோல சொல்ல வச்சோம். அந்த எபிசோடு முடிஞ்சதும் ரொம்ப வருத்தமாகத்தான் சிவா வெளியே போனார். சிவா போனதுக்கு அப்பறம் மா.கா.பா அந்த ஷோவை பண்ணும் போது, நிறைய பேர் அதை ஏத்துக்கவே இல்லை. ’என்ன காமெடி நல்லா இல்லை’, ‘சிரிப்பே வரலை’, ‘சிவகார்த்திகேயன் அளவுக்கு இல்லை’னு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்துச்சு. பல நெகட்டிவ்களுக்கு மத்தியில ’அது இது எது’ ஷோவோட ரேட்டிங் பாஸிட்டிவ்வா வந்துச்சு. அந்த வாரம் எங்களுக்கு நல்ல ரேட்டிங் வந்ததால நாங்க எல்லாரும் ஹேப்பியா இருந்தோம். 

மா.கா.பா

160வது எபிசோடுல இருந்து இப்போ இரண்டாவது சீசன் வரைக்கும் கிட்டத்தட்ட 280 எபிசோடுகளா ’அது இது எது’ ஷோவை சிறப்பா கொண்டு போயிட்டு இருக்கார் மா.கா.பா. அதுக்கு சாட்சியா சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ஸ்ல சிறந்த தொகுப்பாளர் விருது மா.கா.பா.வுக்கு கிடைச்சிருக்கு. என்னைப் பொருத்தவரைக்கும் மா.கா.பாவுக்கு ’சூப்பர் சிங்கர்’ ஒரு கண்ணுனா, ’அது இது எது’ இன்னொரு கண்ணு. இந்த ரெண்டு ஷோவையும் ரொம்ப முக்கியம்னு நினைப்பார். அதே மாதிரி ஆங்கரிங் பண்றதுக்கு அதிக மெனக்கெடல் எதுவும் பண்ண மாட்டார். இண்ட்ரொ இப்படி கொடுக்கணும்; இப்படித்தான் முடிக்கணும்னு எதுவும் ப்ளான் பண்ண மாட்டார். ரொம்ப யதார்த்தமா, கூலா ஆங்கரிங் பண்ணுவார். அவர் இயல்பா எப்படி பேசுவாரோ அதே மாதிரிதான் ஸ்டேஜ்லேயும் பேசுவார். எந்த ஷோவை தொகுத்து வழங்கினாலும், அந்த ஷோ மெட்டீரியலா மாறிடுவார். அதுதான் மா.கா.பா.வோட மிகப்பெரிய ப்ளஸ்.

மா.கா.பா

சிவகார்த்திகேயனுக்குப் பிறகு ’அது இது எது’ ஷோவை மா.கா.பா பண்ண ஆரம்பிச்சதும், ஷோவை ஸ்டார்ட் பண்ணும் போதே ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்பார். அந்த தத்துவங்கள் எல்லாத்தையும் அவரேதான் யோசிச்சு சொல்லுவார். அது ரொம்ப நல்லா ரீச்சாச்சு. உதாரணத்துக்கு,’ஒருத்தன் காரு வச்சிருக்கிறான்; வீடு வச்சிருக்கிறான்னு அவனைப் பார்த்து பொறாமை படாதீங்க. அவன்கிட்டப் போய் கேட்டாத்தான் எத்தனை இ.எம்.ஐ வச்சிருக்கான்னு தெரியும்’, ‘நாமளா பார்த்து கடவுளுக்கு கொடுத்த மொட்டை; அவரா பார்த்து எடுத்துக்கிட்டா சொட்டை’னு இப்படி வாராவாரம் ஒரு தத்துவத்தோடு ஷோ ஆரம்பிப்பார். அப்பறம் ’சிரிச்சா போச்சு’ டீம் பசங்களுக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார். அதுவும் ரொம்பவே நல்லாயிருக்கும். ’ஊருக்குள் ஒரே ஒரு உத்தமன் எங்கள் திருட்டு கோட் திவாகர்’, ’இடம் வாங்க, விற்க அணுகவும் பழனி பட்டாளம்’, ’கிளாமர் குயின் நாஞ்சில் விஜயன்’, ’சிங்கப்பூரே செல்லாத சிங்கப்பூர் தீபன்’, ’என்னமா ராமர்’னு இப்படி நிறைய பெயர் வைப்பார்.

எனக்கும் எங்க டீமிற்கும் மா.கா.பா ரொம்ப பெட். பொதுவா தொகுப்பாளர்கள் ரொம்ப இறங்கி வந்து பழகமாட்டாங்க; மேலோட்டமாத்தான் இருப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனால், மா.கா.பா அப்படி கிடையாது. ’சிரிச்சா போச்சு’ டீமோடு ரொம்ப க்ளோஸா இருப்பார். சிவகார்த்திகேயனுக்கும் மா.கா.பா.வுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்தான். சிவகார்த்திகேயனை கலாய்ச்சா பதிலுக்கு அவர் பங்கமா கலாய்ச்சு விட்டுடுவார். ஆனால், மா.கா.பா.வை கலாய்ச்சா அவர் அதை வாங்கிப்பார். ’சிரிச்சா போச்சு’ டீம் லிப்ட்ல இருந்து வெளிய வரும்போதே, கோவில்மணி மாதிரி மா.கா.பாவை அடிச்சுட்டுத்தான் வருவாங்க. தன்னை கலாய்க்கிறதுக்கு அவரே இடம் கொடுப்பார். எப்போதாவது திரும்ப கலாய்ப்பார். 

மா.கா.பா

 

மா.கா.பா நிறைய படங்கள் நடிச்சுட்டு இருந்தாலும் ’அது இது எது’ ஷோவுக்காக டைம் கேட்டா உடனே கொடுத்திருவார். அவரால என்னைக்கும் ஷூட் தள்ளி போனது இல்ல. அந்தளவுக்கு ரொம்ப ஈடுபாடோட இருப்பார். எதிர்காலத்துக்கான திட்டத்தைப் பற்றி யோசிக்காம வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவார். இது அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச குவாலிட்டி.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/123319-the-real-story-of-reality-show-heroes-series-episode-13.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.