Jump to content

தாய்நிலமும் தனையர்களும் (1986) கவிதையின் ஒரு பகுதி - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறேன். 1986ல் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புத் தோழதோழியர்களாலும் நயந்து வாசிக்கபட்ட “தாய் நிலமும் தனையர்களும்” என்கிற என்னுடைய கவிதையில் சில அடிகள் இந்த நிலைபாட்டை பதிவு செய்கிறது.
.
“போத்துக்கீசரை போரில் எதிர்த்த”
சிங்கள நாட்டு இளவரசனுக்கு
தன்னுயிர் நோக்காது புகலிடம் தந்த
சங்கிலி மன்ன்னைப் பாடுவோம் அம்மா.
……………………………………………………..
அன்னியர்க் கெதிராய்
போர்களில் விழுந்த நம்
மூதாதையர்கள்
மீண்டும் சிறுவராய் உதித்துவந்தனரோ
பணிகள் முடிக்கும் சபதங்களோடு.
எத்தனை பேரைக் களபலியாக
மீண்டும் உன்னிடம் தந்தோம் அம்மா!
.
பல்கலைக்கழக முன்றலில் நின்று
தொடுவானங்களை எட்டிப் பிடித்த
எத்தனைபேரைக் களபலி தந்தோம்.
விமலதாசனை, ரவி சேகரனை
திருமலை தந்த கேதீஸ்வரனை
முல்லைத் தீவின் சிறீ எனும் தோழனை
பொன்பூச் சொரியும் நிழல்வாடிகளின்
நீழலில் நின்று
விடுதலைப்போருக்கு எம்மை அழைத்த
எத்தனை பேரை நாங்கள்ம் இழந்தோம்.
.
வெடிகுண்டின்மேல் விழுந்துபடுத்து
தோழரைக் காத்த
’வெத்திலைக் கேனி’ அன்புவைப்போல
இன்னொரு தோழனைக் காண்பது எப்போ?
.
காரைதீவுக் கடற்கரைப் போரில்
இரண்டாம் வன்னி நாச்சியாய் எழுந்து
வீரம் விழைத்த சோபா என்ற
தேவதை போல
மீண்டுமோர் தோழியைக் காண்பது எப்போ?
சாவகச்சேரியில் எதிரியை வேருடன்
கல்லி எறிந்த நீக்கிலஸ் போலவும்
வன்னிச் சிறுத்தை காத்தான்
போலவும் கொழும்பு வீதியில் போர் முரசறைந்த
மானவன் பரிபூரணைப் போலவும்
இன்னொரு தோழமை எய்துமோ வாழ்வு?
.
விடுதலைக்கு மூலைக் கல்லாய்
இவர்களைத் தானே நாங்கள் நாட்டினோம்
விடுதலைக்குத் திசை விண்மீனாய்
இவர்களைத்தானே நாங்கள் எரித்தோம்.
……………………….. ………………………… ………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….
1986.
இயக்கங்கள் தங்கள் தங்கள் மாவீர்ர் தின்ங்களை தாம் நியமித்த நாட்களில் கொண்டாடுவது தொடரட்டும். ஆனால் எல்லோரும்கூடி பொதுவான ஒரு தியாகிகளுக்கு நன்றி கூறும் தினத்தை மே 17 அல்லது18 அல்லது 19ம் திகதிகளில்  கொண்டாடுவது வரலாற்றுக் கடமையாகும்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.