• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழரசு

தலைவர் இருக்கிறார் மீண்டும் வருவார்..

Recommended Posts

தலைவர் இருக்கிறார்
மீண்டும் வருவார்..

இது எம் முதல்வனைக் கொண்டாடும் தருணம்

பகிருங்கள்....

என் தலைவனுக்கு
ஒரு பக்தனின் வாழ்த்துப்பா!!
---------------------------

காந்தள் மலர்க் காடுகளே!
எனக்கொரு கடி மலர் வேண்டும்
வெடிகளுக்குள் முளைத்தெழுந்த 
எம் வீரப் புதல்வன் பொன் அடிகளுக்கு 
அதைச் சாற்றவேண்டும்
நீடூழி வாழ்கவெனப் போற்றவேண்டும்

கதைகளிலே படித்துவந்த 
காவியத்து வேல் முருகன் 
சதை உடுத்தி வந்த நாள் இன்று
போர்க் கதை உயர்த்தி வா!!
போரில் வென்றுவா என 
மனம் பதை பதைக்கப் பிணமான
எதிரிகளின் சிதைகளுக்கு
தீ வைத்த தெய்வத் திரு வேந்தன்
தமிழின வாதை துடைத்த வரலாற்று நாயகனை
வாழ்த்த வேண்டும் வாருங்கள்

காந்தள் மலர்க் காடுகளே!
எனக்கொரு கடி மலர் வேண்டும்

கொஞ்சம் புதுவகையாய்
கலித்தொகையாய்
பொன்னகையாய்
தேனாய்
மேற்கந்தி வானாய்
தெவிட்டாத தமிழிலிருந்து
ஒரு சொல்லெடுத்துத் தாராய்
தமிழ்த்தாயே பாராய்!

பாராய்!!
அழகுடுத்தி மலர்ந்த அன்னை 
நிலத்தைக் 
களவெடுக்க வந்த கயவர்கள் 
எம் சிசுவின்
உடலெடுத்துத் தாரில் உள்நுளைத்து
அழுத்திப் பின் உரிந்த தோலில் 
ஒழுகும் குருதியில்
உயிர் இருக்கிறதா எனப் பார்த்தான்
அதை என் தலைவன் பார்த்தான்

இதைக் காண்கையில் 
உயிருள்ள எல்லோர்க்கும்
உடனே கோவம் வரும்

மடை திறந்த அருவியின் 
தடை அற்ற வேகம் போல் 
குருதி கொதிக்க
பகையை கொல்வதற்கு கோவம் வரும்
தனி ஈழம் அமைக்கும் வேகம் வரும்
அதைத்தானே அன்று எம் அண்ணன் செய்தான்

கண்ணியம்
காலகாலமாய் கிடந்த இருட்டறை உடைத்து
வெளிவந்தது
ஈழத்துப்பெண்ணியம்

அன்பாய்
எதிரியை அழித்துவிடும் அம்பாய்
பண்பாய்
பனிக்குளிரில் கிடந்தாலும் பழுதுபடா
'மாமத்'தின் பலமான என்பாய்
செவ்வாய் மலர்ந்து
எமக்காய் சேவைகள் செய்த ஆண் தாய்
உனைச் சீராட்டி வளர்த்ததால்
தலை நிமிர்ந்தது வேலுப்பிள்ளையின்
வல்வாய்

எம் தலைவா எங்கள்
இதயத்திலிருக்கும் நான்கு அறை
எவர்க்கும் இடமில்லை
அது நீ இருக்கும் அறை
என் தமிழா எடுத்து வா பறை
எட்டுத் திக்கும் எம் தலைவன் பெயரை உரை
எம் இனத்தின் வாத்தியமடா அது
ஒலிக்க அறை 'பறை'

ஒரு புயலுக்குப் பின் அமைதி இருக்கும்
அந்த அமைதிக்குப் பின் வானம் கறுக்கும்
அமைதியின் அர்த்தம் ஆர்ப்பரிப்பு என
அறியாதார் செவிகள் இதைக் கேட்டால்
உறைக்கும்

'ஸ்பாட்டன்'களின் வீரத்தை
இன்றுவரை பேசுகிறது உலகு
என் தலைவன் வீரம்
பிரபஞ்சத்தில் கடைசி உயிர் உள்ளவரை
பேசப்படும் அலகு

கடவுள் இருக்கிறார்!!

கடவுள் இருக்கிறார் என்பவர் ஒருபுறம்
இல்லை என்பவர் மறு புறம்
எவர் எதையும் பேசட்டும்
ஆனால் உற்சவம் மட்டும்
சிறப்பாய் நடக்கும்

எம் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த தலைவா!
ஈழத் தாயின் உன்னத புதல்வா
இன்று போல் ஈராயிரம் ஆண்டு
கடந்து வருகிற கார்த்திகை இருபத்தியாறில்
நீ மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டுதானிருப்பாய்
தமிழர் மனங்களில் உயர்ந்துகொண்டுதானிருப்பாய்

எம் உன்னத தலைவா நீ வாழ்க!!
என்றென்றும் உன் புகழ் வாழ்க!!

-அனாதியன்-

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தலைவர் இல்லை, இனிமேல் வரமாட்டார் எனும் எடுகோளில்தான் எமது இனத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கணும்,, தலைவர் இருக்கிறார்,மீண்டும் வருவார் என்பது இரண்டு வகைபேருக்கு மட்டுமே இனிப்பாயிருக்கும், ஒன்று கவிதை எழுதுபவர்கள், மற்றையது காசை அமுக்கியவர்கள்! இத்தனை ஆயிரம் போராளிகளை,தளபதிகளை,மக்களை இழந்த ஒரு போராட்ட தலைவன், தன்னை காப்பத்திக்க நினைச்சிருந்தால், கிளிநொச்சி கையைவிட்டுபோனவுடனேயே கடல் கடந்து ஓடியிருப்பார், கொள்கைகளை அடிக்கடி மாற்றும் ஒரு இனத்தில் பிறந்து அவர் ஒரு கொள்கைக்காக வாழ்ந்தார்...போயிட்டார். இப்போ இல்லை அவ்வளவுதான்! 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழரசுக்கு: பல நாட்களுக்குப் பின் ஒரு சிறந்த கவிதையை மனப்பூரிப்புடன் படித்தது சுகம்.
 "ஸ்பாட்டன்" சிறந்த உதாரணம். அஞ்சா நெஞ்சம் படைத்த, எதற்கும் அடிபணியாத கிரேக்க நாட்டின் Spartan படை. கி.மு 6 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சிறந்த போர்வீரர்கள்.
வழவனுக்கு:  நல்ல கருத்து ஆனால் காசை அமுக்கியவர்களுக்கு அல்ல இனிமேல் அமுக்க எண்ணுபவர்களுக்குதான் தலைவர் வருவார் என்பது இனிக்கும். அமுக்கியவர்கள் தலைவர் மீண்டும் வரக்கூடாது எனத்தான் விரும்புவார்கள். 

Edited by vanangaamudi

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 3 Personen, Text

உலகமெங்கும்  அடிவாங்கிய  தமிழ் இனம், திருப்பி அடித்த இடம் தமிழ் ஈழம். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this