Jump to content

தலைவரின் பிறந்ததினத்தில் அவர்பற்றி முகநூலில் கிடைத்தவை


Recommended Posts

தமிழ் கூறும் நல்லுலகத்தில் -  இவரை உணர்வு பூர்வமாக நேசிக்கும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் , இவரை பிடிக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள் , இவரை வைத்து இவர் பெயரை வைத்து பிழைப்பவர்களும் இருக்கிறார்கள், இவரின் மேல் கொஞ்சம் வருத்தமுண்டு என்பவரும் இருக்கிறார்கள்... 

ஆனால் இவரை பிடிக்கவே பிடிக்காது,  இவர் இருந்திருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் இருக்க முடியாது...  அப்படி சொல்பவர்கள்  முழு வரலாற்றை ஒவ்வொரு நிகழ்வையும் பற்றி அறியவில்லை என்று பொருள்..

"தமிழின தலைவர்" என்கிற சொல்லுக்கு உண்மையான சொந்தக்காரர் 

#மேதகுபிரபாகரன்63 

இராஜகோபாலன் - தமிழகம் 

 

 

மாவீரர் எத்தனை ஆயிரம் பேரை ஓரே ஒரு தலைவர் உருவாக்கியுள்ளார். பிறவியிலேயே அச்சம் மூளைக்குள் வேண்டாம் என்று தலைவனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. நாத்திகம் வீரமல்ல. தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் வீரம். ஒரு இனத்தின் அரசியல் ஆசிரியர் அவர். நினைவு கூறுவது மூளையைக் கூர் தீட்டுவது.

இளங்கோ கல்லாணை- தமிழகம் 

 

அவர்கள் என்னைத் துதிபாடி என்றார்கள். தனிமனிதனை வணங்குபவள் என்றார்கள். கண்மூடித்தனமான விசுவாசி என்றார்கள். அவ்வாறு கூறியவர்கள் ஒருவரோடு தன்னும் ஒப்பிடற்கரிய அதிமானுடன் அவர். 

வரண்டிருந்த நிலத்தில் பொழிந்த பெருமழையை, இருண்டிருந்த வானத்தில் உதித்த ஒளிநிலவை, காலகாலமாய் பயத்தில் மருண்டிருந்த விழிகளுக்குள் பெருமிதத்தை ஏற்றியவரை- நான் வணங்குவேன்; துதிபாடுவேன்; என்றென்றும் விசுவசிப்பேன்.

கடவுளைப் போல, மரணத்தைப் போல, காதலைப் போல வரைவிலக்கணக் கரைகளுள் அடக்கவியலாத பேராழியே! ஓரூழியின் முடிவில் மறைந்தீர்கள். நீங்கள் இருந்தாலும், இல்லாமற் போனாலும் உங்கள் கனவு மாறாது எங்களோடிருக்கும்.

இந்த நாளின் ஒவ்வொரு விநாடியையும் வணங்குகிறோம். தமிழ்நதி எழுத்தாளர்-(கனடா)

 

Today, you will read a lot about a man on his birthday.
There could be more positive writings and there will be equally more negative writings also coming on your news feed. People contemplate a lot on “what ifs” and “what if nots” and judge his actions, like they have been there when he decided and acted upon.

This is my perspective and my own.
The man had simple beginnings. He saw non violence fail when Dileepan starved to death.
He went on to build the biggest global network when technology or even internet was not fully in place.
He managed to run the show when electronic money was in its very nascent stages and people were then using limited cash and travelers cheques over ATM cards. Global money transaction was so hard in those times.
He built disciplined battalions that abstained from alcoholism, had the respect for the civilians on the opposite side. I’m yet to read one case of rape or violence on POWs.
He was smart enough to read and speak very early about the repercussions of 9/11 and the changes it would create in geo-politics of 21st century, which none that have access to sophisticated intelligence briefings could then understand, let alone analyzing.
A self taught man, patient listener and a measured talker who never accused or verbally abused anyone.

Skip the “messengers of peace” that will write to tarnish his image today. The man needs to be remembered for all that he was able to do which even Ivy League educated strategists and political think-tanks weren’t able to pull off. At his peak, he was sitting across the table talking to international delegations sent to his camp to negotiate peace. So much to say about what a school dropout was able to do with tactful thinking.

To run the show uninterrupted for 30 years when there is a price for your head, every move and breathe of yours is monitored, is the stuff of a military and administrative genius. You will never have anyone like him again from the Tamil diaspora.

To be the last man standing when all your resources and reinforcements were depleted and still go on with the last left drops of fuel and face the all blown attack in the war front and accepting the ultimate fate, if is not bravery, then what is?
I haven’t been largely and directly benefited or betrayed by any of his actions or decisions. But these are the takeaways from the life of the man, that many hail and criticize in equal measure.

We Indians mourn the fallen heroes and civilians on the occasion of 26/11, when a 5 kilometer radius in India’s Financial Capital was taken over by armed terrorists who threatened the livelihood of its residents for more than 2 days.
It will be ironic if you call the man and his mission, an act of terror, because he wielded weapons to fight back the same kind of intrusion and second class treatment meted out for him and his people, on their own homeland.

To me, Velupillai Prabhakaran is a Hero, now and forever and he is a man fit enough to be called a Leader!
Remembering that Non-chalant and Inimitable Hero on his 63rd Birthday!
I hope and wish that history will be kind to him.
Happy Birthday, Thalaiva!- கார்த்திக் ரங்கராஜன் 

 

Link to comment
Share on other sites

கரந்தடித்தும் கரவாதவன்;
இரவாதவன் பிரபாகரன்.
எங்க அண்ணனுக்குப் பொறந்த நாளு.
ஆறுமுகம் கேஆர் -கவிஞர் தமிழகம்

நாங்கள் தோற்றால் அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். 1.இயற்கை 2. துரோகம்.

இப்படித்தான் தங்கள் எதிர்காலத்தைக் கணித்து வைத்திருந்தார் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவரும்இ தமிழீழ தேசியத் தலைவருமான பிரபாகரன்.

இதில் இரண்டாவது சொன்ன துரோகமே இறுதியில் வென்றது.

எனினும்இ ஏழு வலிமை மிகுந்த நாடுகளின் ராணுவம் இணைந்து சூழ்ச்சி செய்துஇ துரோகத்தைத் துணைக்கழைத்தே போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

அப்போதும் ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்றே அறிவித்தனர் புலிகள் ராணுவத்தினர்.

இலங்கை ராணுவ இணையத்திலேயே இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்கள் "உலகிலேயே விமான தளம்இ போர் விமானம்இ கடற்படைஇ காலாற்படை என முழு ராணுவக் கட்டமைப்பைக் கொண்ட ஒரே அமைப்பு" என்று.

புலிகள் பயங்கரவாதம் செய்கிறார்கள் என்று சொன்ன இலங்கை ராணுவம்தான் இப்படி தங்கள் இணையத்திலும் எழுதி வைத்திருந்தது. 

தேர்வில் வெல்ல தமிழ் மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்இ சிங்களருக்கு ஒரு மதிப்பெண். அரசு வேலை வாய்ப்பில் தமிழர் புறக்கணிப்புஇ சிங்களருக்கு மட்டுமே முன்னுரிமை என தமிழர்களுக்கான உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டதை எதிர்த்து தமிழருக்கான உரிமைகளைக் கேட்டுத் தொடங்கிய அறவழிப் போராட்டமே பின் ஆயுதப்போராட்டமாக அதன்பின்னர் ராணுவப் போராட்டமாக உருமாறியது.

தமிழர்களுக்கு உரிமை கிடைக்கவில்லை எனில் தனி ஈழமே (தனி நாடே) தீர்வு என்பது பிரபாகரனுக்கு முன்னர் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஒட்டுமொத்த தமிழர்களின் இறுதி முடிவாக எடு்கப்பட்ட தீர்மானம்.

பிரபாகரன் என்பவர் மட்டுமே தனி ஈழம் கோரவில்லை. ஆனால் மாநாட்டுத் தீர்மானத்தை செயல்படுத்தியவர் பிரபாகரன்.

தனி ஈழம்இ தனி வங்கிஇ தனி காவல்துறைஇ தனி ராணுவம் என தனி ஈழ நாட்டைக் கட்டமைத்தவர் பிரபாகரன்.

கற்பனைகூட செய்ய இயலாத மாபெரும் ஈழப்போரின்  தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் 26 நவம்பர்.

-விஷ்வா விஸ்வநாத்-பத்திரிகையாளர்

 

80 களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டுக்கு ஈழப் போர் தொடர்பான பிரச்சாரத்துக்கு என்று படகில் சென்று திரும்பிய குழுவில் இருந்த அப்பா ஒரு பை வைத்திருந்தார்இ 

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வீட்டுத் தட்டில் இருக்கும் அந்த பையைக் கேட்டால் போய் வந்த கதை தான் சொல்லுவார் அதற்குள் என்ன எனக் கேட்டால் சொல்லமாட்டார்.
ஒரு நாள் அதைத் திறந்து ஏதோ எல்லாம் படிச்சுக் கொண்டிருந்தார்இ பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்ப ஒரு பொலுத்தீன் பையை எதேச்சையா எடுத்தவர் திறந்து பார்த்து விட்டு ஒரு சின்ன சந்தோசத்துடன்.
"கடவுள் இந்தா" என நீட்டினார் வாங்கித் திறந்து பார்த்த எனக்கு பெரிய சந்தோசம்.
உள்ளே வட்டம் வட்டமான அவரின் ஸ்ரிக்கர்கள். சதுரம் சதுரமானதில் மாத்தையா பக்கத்தில் நின்றார்.
ஆனால் அந்த சிறுத்தைக் குட்டியுடன் நிற்கும் படம் தான் என்னை ஈர்த்தது.
ஆனால் அதை உரித்து ஒட்ட மனமில்லாமல் அதற்கு பின் பக்கமே சோற்றால் பூசி சுவர்களில் ஒட்டிக் கொண்டேன்.
அடுத்து நான் செய்த வேலை "ஏன்ரா இவனுக்கு இதைக் கொடுத்தோம்" என அவரை சிந்திக்க வைத்தது.
வீட்டில் அம்மாவுக்கு பூனை என்றால் கண்ணில் காட்டக் கூடாதுஇ அப்படி ஒரு எதிரிஇ ஆனால் நானோ ரோட்டில் நின்ற பூனையை கலைத்துப் பிடித்து விட்டேன்.
அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். அது திமிர முடியாமல் வீறிட்டுக் கத்திக் கொண்டது. விடவே இல்லை.
"தம்பி கடிக்கப் போகுதடா" சொன்னது அக்கா.
"அப்பா எனக்கு அப்பிடிப் படம் வேணும்"
பிறகு என்ன அப்பா பேப்பர் கமெரா செய்து அதற்குள் என்னைக் கீறி வைத்த படம் வைத்து சொன்னார்இ "இது தான் கடவுள்இ படம் இந்தியா போய் கழுவினால் அப்படி வரும்"

இது ஒரு நாயகக் கனவுஇ அன்றே இந்தளவு என்றால்.......
ஒரு தனிமனிதன் ஒரு வல்லரசையே மிரட்டினான் என்றால் எப்படி இருக்கும். ஒற்றுமை அற்றுஇ காட்டிக் கொடுத்துஇ மற்றவனில் குளிர்காய்ந்த ஒரு இனத்தில் ஒரு பெரும் தொகுதியை தன் அரசின் கீழ் கொண்டுவருவதென்பது இலகுவான காரியமா.

உலகில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தலைவன் என்று எவனும் இருக்க முடியாது. ஆனால் விமர்சிப்பவன் அந்த இனத்துக்கு என்ன செய்திருக்கிறான் என்றால் ஒட்டி இருந்து குளிர்காய்தலே.

தான் தன் இனத்துக்காக தூக்கிய ஆயுதத்தை இறுதி வரை கீழே போடமல் தான் நேசித்த மண்ணிலேயே வீழ்ந்த என் நாயகன் தான் எம் இனத்தின் கடைசித் தலைவன்.

பிறந்த தினத்தில் மீண்டும் உங்களை நினைவில் நிறுத்துகின்றோம் அண்ணா ஈ3


 மதிசுதா 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் எப்போதோ சொன்ன விஷயம் ஒன்றை இப்போதும் வணிகத்தில் பின்பற்றுகிறேன். மிகச் சிறந்த மேனேஜ்மெண்ட் தியரியும்கூட அது. எல்லா துறை சார்ந்தவர்களுக்குமான நிறையச் சொல்லாடல்களை இதுபோல விட்டுச் சென்றிருக்கிறார் அவர். " தலைவனின் பணி என்பது அன்றாட நடைமுறைகளை பரிபாலனம் செய்வதல்ல. நோக்கத்தை வடிவமைப்பதும் அது தடம்புரளாமல் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வதும்தான்". - சரவணன் சந்திரன் எழுத்தாளர்

Link to comment
Share on other sites

மக்களை நேசித்த தலைவர்.
தலைவரை நேசித்த மக்கள்.

நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு. ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகள். பத்திரிகையாளர்களோடு சந்திப்பு என்று உறங்குகின்ற நேரத்தையும் ஓய்வெடுக்கின்ற நேரத்தையும் குறைத்து அதற்காக செலவிடுவதையே விரும்பி செய்தேன். அன்றும் அப்படித்தான். முதல் இரவு 11.00 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் அதன் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்), அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு என்னோடு நிகழ்த்திய உரையாடல் முடிவதற்கு நள்ளிரவைக் கடந்துவிட்டது. அதன் பிறகு புலிகளின் குரல் நண்பர்களுடன் கலந்துரையாடிவிட்டு தங்கும் விடுதிக்கு வந்து உறங்கச் செல்லும் போது அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது. 
சில மணிநேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து, வழக்கமான நடைபயிற்சியை முடித்து, புதுக் குடியிருப்பிலும் முல்லைத் தீவிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கும், நிகழ்விற்கும் டான்க் வியு விடுதியை விட்டு எனக்கான பசுரோ வாகனத்தில் புறப்பட்டேன். வாகனத்தில் ஏறியதும் கவனித்தேன் என்றும் இல்லாத வாறு ஓட்டுனர் போராளியிடம் துப்பாக்கி இருந்தது. கூடுதலாக ஒரு போராளியும் துப்பாக்கியுடன் வந்தார். வாகனம் டான்க் வியுவிலிருந்து மாலதி சிலையைக் கடந்து ஏ9 சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போதே சாலைகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் இளைஞகர்களும் குழந்தைகளும் திரளாக நின்று சாலையில் செல்வோரை வழிமறித்து சர்க்கரை பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வாகனத்தையும் நிறுத்தக் கைக் காட்டினார்கள். ஆனால் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்த போராளி நிறுத்தவில்லை. நான் அந்தப் போராளியைத் பார்த்தேன், “தலைவருடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகின்றார்கள் மாஸ்டர்” என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 
கிளிநொச்சியைக் கடந்த போது அங்கிருக்கும் முருகன் கோயிலடியில் மக்கள் திரள் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கேயும் மக்கள் என் வாகனத்தை நிறுத்த முயற்சித்தார்கள் ... வாகனம் நிற்கவில்லை. எனக்கு முன்னாள் சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்று மக்கள் தரும் சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதில் சில இயக்க வாகனங்களும் உண்டு. 
பரந்தன் சந்தியை நெருங்கியபோது மக்கள் திரள் இன்னும் அதிகமாகவே இருந்தது. யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து வருகின்றவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வருகின்றவர்கள் அல்லது அந்த பகுதிகளுக்குச் செல்கின்றவர்கள் என்று அனைவருடைய வாகனங்களும் நின்று சென்றதால் என் வாகனம் யாரும் நிறுத்தாமலே நிற்கவேண்டிவந்தது. என் வாகனத்தை நோக்கி கையில் சர்க்கரைப் பொங்கலோடு ஓடி வந்தார்கள்..... அதற்குள் ஓட்டுனர் போராளி கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தினார், முன் நின்ற வாகனத்தைக் கடந்து வலது புறம் திரும்பி புதுக்குடியிருப்பு சாலையில் வேகமெடுத்தது வாகனம். எனக்கு வருத்தமாக இருந்தது..... மக்கள் எவ்வளவு அன்போடும் மகிழ்வோடும் ஓடிவருகிறார்கள்... அதை நாம் மதிக்க வேண்டாமா..... என்ற உணர்வோடு ஓட்டுனர் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன்.... என் உணர்வை புரிந்துகொண்டவராக “மாஸ்டர் இன்றும் நாளையும் நாம் உங்களை கவனமாக பாதுகாக்க வேண்டியிருக்கிறது மாஸ்டர்” என்றார். கூடுதலாக போராளி வந்தபோதே நான் புரிந்து கொண்டேன் என்றேன். 
வழிநெடுகிலும் இதுபோன்றக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டே சென்றேன். வழியில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்றேன். மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்டேன். 
விசுவமடுவைக் கடந்து புதுக்குடியிருப்பின் நுழைவு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மக்கள் நின்று வாகனங்களை நிறுத்தி பொங்கல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இயக்க வாகனங்களும் சில நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றிரண்டு முக்கியப் பொறுப்பாளர்கள் தளபதிகளுக்குரியது என்று புரிந்தது. தளபதிகள் பொறுப்பாளர்கள் கூட நிறுத்தியிருக்கிறார்களே... என்றேன். “ஆம் மாஸ்டர் அது அவர்கள் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது என்றால் நாங்கள் தான் பொறுப்பு” என்றார் கூடுதல் பாதுகாப்பிற்கு வந்த போராளி. உண்மைதான். 
வழியெங்கும், மக்கள் மிகவும் உணர்வோடும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் ஈடுபாட்டோடும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் அமைதியோடும் கட்டுப்பாட்டோடும் தாங்கள் மிகவும் நேசிக்கும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். 
மக்களின் விடுதலையை மட்டுமே நேசிகின்ற ஒரு தலைவனை மக்கள் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண்பதற்கும் உணர்வதற்கும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு அது. அவர் பிறந்த நாளை அவர் ஒருபோதும் கொண்டாடியதில்லை. தமிழீழ மண்ணில் அவர் பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்பட்டது. 
இன்று.... உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. என்றும் கொண்டாடப்படும்.

ஓவியர் புகழேந்தி.

Link to comment
Share on other sites

ஒரு இனத்தின் அரசியல் விடுதலை எத்தனை முக்கியமானதென தமிழ் சமூகத்திற்கு விளங்க வைத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள். பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்தாலும் திறமையான தலைவர் என தமிழ் சமூகத்திற்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு  அரசியல் தலைவர்கள் தமிழக மக்களிடமும் பெருவாரியாக நேர்மையற்றவராய் இருப்பதே அரசியலுக்கான முதல் படி என்ற சூழலை உருவாக்கி இருக்கும் நேரத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழர்களின் முக்கியமான தலைவனின் பிறந்த நாளாக தொடர்ந்து அடையாளப்படுத்த வேண்டியது முக்கியம். 

டைகர்கள் கபாலியைச் சுடுவதாக படம் எடுக்கும் அபத்தங்களாவது கேள்வி கேட்கப்பட வேண்டும் என்கிற அக்கறையும். இங்கே புலிகளின் மீது சுமத்தப்படுகிற ஓராயிரம் குற்றச்சாட்டுகளையும் உண்மையல்ல என்பதை அறிவுறுத்தவும் வேறு எப்போதையும் விட தீவிரமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

இயக்கத்தையும் பிரபாகரனையும் மறுக்க உங்களுக்கு நூறு காரணங்கள் உண்டென்றால். எம் ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள எங்களுக்கு ஆயிரம் காரணங்களுண்டு.

லக்ஷ்மி சரவணகுமார்- எழுத்தாளர்

Link to comment
Share on other sites

ஒரு இனத்தின் அரசியல் விடுதலை எத்தனை முக்கியமானதென தமிழ் சமூகத்திற்கு விளங்க வைத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள். பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்தாலும் திறமையான தலைவர் என தமிழ் சமூகத்திற்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு  அரசியல் தலைவர்கள் தமிழக மக்களிடமும் பெருவாரியாக நேர்மையற்றவராய் இருப்பதே அரசியலுக்கான முதல் படி என்ற சூழலை உருவாக்கி இருக்கும் நேரத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழர்களின் முக்கியமான தலைவனின் பிறந்த நாளாக தொடர்ந்து அடையாளப்படுத்த வேண்டியது முக்கியம். 

டைகர்கள் கபாலியைச் சுடுவதாக படம் எடுக்கும் அபத்தங்களாவது கேள்வி கேட்கப்பட வேண்டும் என்கிற அக்கறையும். இங்கே புலிகளின் மீது சுமத்தப்படுகிற ஓராயிரம் குற்றச்சாட்டுகளையும் உண்மையல்ல என்பதை அறிவுறுத்தவும் வேறு எப்போதையும் விட தீவிரமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

இயக்கத்தையும் பிரபாகரனையும் மறுக்க உங்களுக்கு நூறு காரணங்கள் உண்டென்றால். எம் ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள எங்களுக்கு ஆயிரம் காரணங்களுண்டு.

லக்ஷ்மி சரவணகுமார்- எழுத்தாளர்

 

 

“போர்க்களம்” 
பிறந்த நாள் இன்று
------------------------------------ 
நவம்பர்-26.
உலகம் முழுவதும்
ஆதரிப்போர் பேசுவது 
இருக்கட்டும்..

எதிர்ப்பவர்களும் 
பேசிக்கொண்டுதான் 
இருக்கிறார்கள்.

அதுதான் பிரபாகரன்.

இனத்தின் அடையாளமாய்
இயக்கிக்கொண்டு
இயங்கிய தலைவன்.   

ஒரு
இனத்தின் 
விடுதலைக்கான
“போர்க்களம்” பிறந்த நாள் இன்று....

 

பா. ஏகலைவன் - பத்திரிகையாளர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.