Jump to content

ஆந்திரா குண்டூர் சிக்கன்


Recommended Posts

ஆந்திரா குண்டூர் சிக்கன்

 
gc-14.jpg

தேவையான பொருட்கள்:

சிக்கன்  அரை கிலோ - முக்கால் கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 - 6 (காரம் அவரவர் விருப்பம்)
முழு மல்லி – 3 தேக்கரண்டி
மிளகு  ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கடுகு  அரை தேக்கரண்டி
வெந்தயம்  கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கரம் மசாலா  ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி
மல்லி இலை  சிறிது
உப்பு – தேவைக்கு.
 
செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
gc-1.jpg
சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 
gc-2.jpg
வாணலியில் காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு,வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 
gc-3.jpg
 
gc-4.jpg
வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 
gc-5.jpg
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
 
gc-6.jpg
வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
gc-7.jpg
 
gc-8.jpg
வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விடவும்.
gc-9.jpg
 
gc-10.jpg
அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.
 
gc-11.jpg
கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
 
gc-12.jpg
 சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

 
gc-13.jpg
 
 
gc-14.jpg

சுவையான குண்டூர் சிக்கன் ரெடி. இதனை ப்ளைன் ரைஸ், புலாவ்,சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறினால் பொருத்தமாக இருக்கும். 

http://asiyaomar.blogspot.de

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ....நல்ல காரமாய் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.