Jump to content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்திகள்


Recommended Posts

காய்கறி மூட்டையில் ரூ.180 கோடி
ஆர்.கே.நகருக்கு வந்தது அம்பலம்?
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சை வேட்பாளரின் கடைசி நேர பணப் பட்டுவாடாவுக்காக, தஞ்சாவூரில் இருந்து, காய்கறி மூட்டைகளில் பதுக்கி, 180 கோடி ரூபாய் சென்னைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

 

காய்கறி, மூட்டையில்,ரூ.180 கோடி ,ஆர்.கே.நகருக்கு, வந்தது அம்பலம்?


கெடுபிடி அதிகரிப்பால், முழுவீச்சில் பட்டுவாடா செய்ய முடியாமல், அவரது ஆதரவாளர்கள் தவித்துள்ளனர்.சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு, கடும் நெருக்கடியை கொடுத்துஉள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது ஆதரவாளர்கள், பிரசாரத்திற்கு

வந்தவர்களுக்கு, பெண்களுக்கு, பணத்தை வாரி இறைத்தனர்.


குறிப்பிட்ட பகுதிகளில், ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வழங்கினர். ஆளும் கட்சி சார்பில், 6,000 ரூபாய் வழங்கப்பட்டதால்,ஆளுங்கட்சி செல்வாக்கு அதிகரித்தது. எனவே, சுயேச்சை வேட்பாளர் தரப்பினர், பல பகுதிகளில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, வாரி வழங்கினார்.கடைசி நேர பட்டுவாடா மூலம், வாக்காளர்களை கவர, சுயேச்சை வேட்பாளர் திட்டமிட்டார்.


இதற்காக, தஞ்சாவூரிலிருந்து ஆறு பெண்கள், ஆம்னி பஸ்சில், 180 கோடி ரூபாயை, சென்னைக்கு எடுத்து வந்துள்ளனர்.காய்கறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி மூட்டைக்குள், இந்தப் பணம் மறைத்து, எடுத்துவரப்பட்டுள்ளது.


கோயம்பேடு வந்து இறங்கிய பண மூட்டை, யாரும் சந்தேகிக்காத வகையில், காய்கறி வண்டியில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்துள்ளது.அங்கிருந்து,

 

ஆதரவாளர்கள் வாயிலாக, தொகுதியின் சில இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. தொகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் பல இடங்களிலும், பட்டுவாடா நடந்துள்ளது. தொகுதிக்குள், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு என, தேர்தல் கமிஷன் கெடுபிடி அதிகரித்ததால், திட்டமிட்டபடி பணத்தை முழுமையாக வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1922850

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

 

 
madhu1jpg

ஆர்.கே.நகரில் வாக்களித்த அதிமுக வேட்பாளர் | படம்: ம.பிரபு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10.33 AM: தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக இன்னமும் புகார் வருவதாக தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

   

10.05 AM: தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக ஆர்.கே.நகரில் வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்ட பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

9.40 AM: பல வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும். இது குறித்து தேர்தல் ஆணையரிடம் திமுக சட்ட செயலர் மூலம் புகார் அளிக்கவுள்ளதாகவும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கூறினார்.

9.25 AM: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வண்னாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

madhu2jpg

மதுசூதனன் | படம்: ம.பிரபு

 

9.16 AM: காலை 9 மணி நிலவரப்படி 7.32% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

8.50 AM: ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

rknagar1jpg

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் | படம்: ம.பிரபு

 

8.30 AM: தேர்தல் அமைதியாக நேர்மையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு உதவி காவல் ஆய்வாளர் 5 காவலர்கள் சிஆர்பிஎஃப் மற்றும் சிஎஸ்ஐஎப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். | பலத்த பாதுகாப்பு ஏற்பாடு |

8.15 AM: ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தால்கூட மக்கள் ஏமாறமாட்டார்கள். அதிமுகவுக்கும் இன்னும் பிற கட்சிகளுக்கும் ஆர்.கே.நகர் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என வாக்களித்த பின்னர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். விரிவான செய்திக்கு: | மருதுகணேஷ் பேட்டி |

8.10 AM: திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

maruthu1jpg

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் | படம் உதவி ஏஎன்ஐ ட்விட்டர் பக்கம்.

7.55 AM: காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

rknagar2jpg

நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் | படம்: ம.பிரபு

7.50 AM: மக்கள் காலை 7.30 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர்.

பலத்த எதிர்பார்ப்பு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக), கரு.நாகராஜன் (பாஜக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), டிடிவி தினகரன் (சுயேச்சை) உட்பட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிமுக தனது பலத்தையும், திமுக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கையும், டிடிவி தினகரன் தனது தனி அரசியல் கணக்கை துவக்க வேண்டிய நிர்பந்தமும் மிகுந்துள்ளதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 லட்சத்து 28,234 வாக்காளர்கள்

தொகுதியில் 2 லட்சத்து 28,234 வாக்காளர்கள் உள்ளனர். 50 வாக்குப்பதிவு மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுடன் தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடியில் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பாதுகாப்புக்காக 3,300 போலீஸாரும் 1,500-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் தொகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடை விடாமல் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12  ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

மாலை 5 மணிக்கு வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தால், டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

24-ல் வாக்கு எண்ணிக்கை:

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு துணை ராணுவத்தினர் உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

பின்னர் வாக்குகள் எண்ணும் பணி வரும் 24-ம் தேதி நடக்கும்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22121332.ece?homepage=true

Link to comment
Share on other sites

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1.30 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.

   

1.00 PM:  ஆர்.கே.நகர் இதுவரை பதிவான வாக்குகள் மொத்தம்: 60029

ஆண்கள்: 30,973

பெண்கள்: 29,052

மற்றவர்கள்: 4

12.50 PM: 12 மணிவரை வாக்குப்பதிவு நிலவரம்- 26.3 சதவீதம்

12.30 PM: காலை 11 மணி வரை 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

11.50 AM: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா இன்றளவும் நடப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரூ.2000 முதல் ரூ.6000 வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சரியான நபருக்கு வாக்களிக்குமாறு மக்களை வேண்டுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

11.10 AM: ஆர்.கே.நகரில் காலை 10 மணி நிலவரப்படி 10.99% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கோனி தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22121332.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவு

 

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவு
 
சென்னை:

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் கடந்த மாதம் அறிவித்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இவர்கள் கடந்த இரு வாரங்களாக ஆர்.கே.நகர் தொகுதி முழுக்க பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.நேற்று முன்தினம் பிரசாரம் நிறைவடைந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகளை செய்தனர்.

காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து வாக்களித்தனர். இதனால் 258 ஓட்டுச் சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டுப் பதிவு அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இளைஞர்கள் மட்டுமின்றி முதல் தடவை வாக்களிப்பவர்களும் மிகவும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 1 மணி நேரத்தில், அதாவது 9 மணிக்கு 7.32 சதவீதம் வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 41.6 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. இதைத்தொடர்ந்து மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/21154019/1135927/5716-percentage-voting-in1-pm-for-rk-nagar-bypoll.vpf

Link to comment
Share on other sites

''டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்  கொடுத்த 10 ரூபாய்... 20 ரூபாய்..!'' வாக்காளர்களைக் கவர கடைசிநேர டெக்னிக்

 
 

ஓட்டுகளை எப்படியாவது வாங்கி விட வேண்டுமென்று மதுசூதனன், டி.டி.வி.தினகரன் ஆட்கள் விதவிதமான டெக்னிக்குகளை பயன்படுத்தி உள்ளனர். பணம், பரிசு, வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பரபரப்பு அடங்கி ஒடுங்குவதற்குள் வாக்காளர்களுக்கு 10 ரூபாய் நோட்டு, 20 ரூபாய் நோட்டு என்று டோக்கன்களை வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். இதுகுறித்து பா.ஜ.க புகார் தெரிவித்துள்ளது.

தினகரன்

 

 

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள், தேர்தல் ஆணையத்துக்குச் சவால்விடும் வகையில் இருந்துவருகிறது. பணப் பட்டுவாடா புகாரில் தமிழகத்தின் மானம் காற்றில் பறந்துகொண்டு இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா என்ற புகாரினால், 8 மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் பெயர்கள், வருமானவரித் துறையின் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்மூலம் வெளியாயின. இப்போது, மீண்டும் ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த முறையும், பணப் பட்டுவாடா புகாரில் ஆர்.கே.நகர் புகழ் பரவிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்குக் கடும் நிபந்தனைகள், பறக்கும் படை, சிறப்பு அதிகாரிகள் என நியமித்தும் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுப் பணப் பட்டுவாடாவைக் கச்சிதமாக ஆளும் கட்சி முடித்துவிட்டது. ''ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்'' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி இருக்கிறார்.

மதுசூதனன்

மதுசூதனன் டெக்னிக்!

அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி அன்று... அவர் ஏற்கெனவே அறிவித்தபடி படித்த இளம் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும். இந்தத் தொகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் 400 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித் தரப்படும்'' என்றார். இந்த அறிவிப்பை வீடுவீடாகச் சொல்லி அ.தி.மு.க-வினர் வாக்குச் சேகரித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் 56,000 வீடுகள் கட்டப்படும் என்றும், லட்சம் பேருக்கு ஸ்கூட்டி வாங்கித் தரப்படும் என்று சொல்லியும் வாக்குச் சேகரித்தார்கள். 

இதையடுத்து, 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்களைக் கணக்கெடுத்து ஓர் ஓட்டுக்கு 6 ஆயிரம் வீதம் பணப் பட்டுவாடாவைச் செய்தனர் என்று எதிர்க் கட்சியினர் புகார் கூறியுள்ளனர். அதுவும் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் போகாமலேயே வாக்காளர்களைத் தொகுதிக்கு வெளியே அழைத்து பணம் சப்ளையை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டனர். பூத் ஏஜென்ட்கள் தலா 2 பேர் வீதம் ரூ.10, 000 என்று வழக்கமான செலவுத் தொகைகளையும் முறையாகக் கொடுத்து முடித்துவிட்டார்கள். மேலும், பூத் வாரியாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், வீடுவாரியாகத் தனிப்பட்ட முறையில் செலவுசெய்து வாக்காளர்களை கவர்ந்துள்ளனர். 

டி.டி.வி.தினகரன் அணி!

தொகுதிக்குள், வீடுவீடாக வாக்காளர்களைக் கவனிக்கப் பகீரத முயற்சி எடுத்தது டி.டி.வி.தினகரன் அணி. ஆனால், போலீஸ் கெடுபிடி காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்தனர். இந்நிலையில், ஆளும் கட்சி கவனித்ததைவிட அதிக அளவில் கவனிக்க முடிவு செய்து புது டெக்னிக்கைப் பயன்படுத்தி உள்ளனர். அதாவது, ஆர்.கே.நகரில் மொத்தமுள்ள 256 பூத்களில் தலா 300 ஓட்டுவீதம் மொத்தம் 70 ஆயிரம் ஓட்டுகளுக்குப் பணப் பட்டுவாடாவை டி.டி.வி.தினகரன் அணி செய்துவிட்டது. அதாவது, ஒரு வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருந்தால்... 10 ரூபாய் நோட்டையும், 6 ஓட்டுக்கு மேல் இருந்தால் 20 ரூபாய் நோட்டையும் கொடுத்துள்ளனர். இந்த நோட்டுகளின் எண்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு வீடுவீடாகக் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அந்த நோட்டுகளைக் கொடுத்தால்... 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000-மும், 20 ரூபாய் நோட்டுக்கு ரூ.20,000-மும் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தப் புது டெக்னிக் பண மழையைப் பார்த்து மதுசூதனன் டீம் மிரண்டுபோய் உள்ளது.

ஸ்டாலின்

தி.மு.க., பி.ஜே.பி..! 

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வீடுவீடாக நடந்துசென்று வாக்குச் சேகரித்தார். தி.மு.க. தரப்பில் வாக்காளர்கள் யாருக்கும் பணப் பட்டுவாடா செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள், தங்களுடன் வந்த கட்சியினருக்குத் தெருவோரக் கடைகளில் டீ வாங்கிக் கொடுத்ததுதான் அவர்களுக்கு பெரிய செலவு. தி.மு.க. மேலிடமும் பணம் கொடுக்கச் சிக்னல் காட்டவில்லை. பி.ஜே.பி. தரப்பும், 'மாற்றத்தைத் தாருங்கள்' என்று சிம்பிளாக ஓட்டுக் கேட்டு முடித்துக்கொண்டனர். அந்தக் கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் கூறுகையில், ''டி.டி.வி.தினகரன் டீம் 10 ரூபாய், 20 ரூபாய் என்று நூதன முறையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். ஆளும் கட்சியும், அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் செய்துள்ளனர்'' என்றார். 

 

இந்த இடைத்தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆனால், வாக்காளர்களைக் கவர, அரசியல் கட்சிகள் சார்பில் முறையாகக் கணக்கில் காட்டாமல் ரூ. 200 கோடி வரை ஆர்.கே.நகரில் பணம் புழங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

https://www.vikatan.com/news/coverstory/111427-rknagar-bye-election-last-minute-technique-by-ttv-team.html

Link to comment
Share on other sites

 

டி.டி.வி தினகரன் செய்தியாளர் சந்திப்பு....

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 73.45 சதவீதம் ஓட்டுப்பதிவு

 

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்..! 77 சதவிகித வாக்குப்பதிவு

 
 
Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

f3a7b27a-5c78-4f22-a1a4-4180898024fe_200

 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகரில்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே ஆர்.கே.நகர் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர். மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆர்.கே.நகரில் மொத்தம் 2,28,234 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

d942f9ea-2ef9-41b7-b5bc-397e7c29366b_201

வாக்குப் பதிவு முடியும் நேரமான 5 மணிக்கும் பொதுமக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனையடுத்து, 5 மணிக்கு முன்பாக வந்து வாக்களிக்க வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கப்பட்டவர்கள், 5 மணிக்குப் பின்னதாகவும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.  

209e4f8e-8bf5-4146-83a9-b6246e1647dd_203

சுமார் ஏழு மணி வரையிலும் பொதுமக்கள் காத்திருந்திருந்து, வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார், ஏழு மணி அளவில் 258 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நிறைபெற்றது. 77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற நான்கு தேர்தல்களில் இந்தத் தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. 

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/111464-77-voting-in-rknagar-byelection.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் வெல்லப்போவது யார்? ஒரு அலசல்

 

 
download%205

மருது கணேஷ், டிடிவி தினகரன், மதுசூதனன்   -  கோப்புப் படம்

ஆர்.கே.நகரில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற கேள்வி இன்று அனைவர் முன்பும் உள்ளது. தங்கள் தரப்பு வெற்றிபெறும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்தித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி முன்னெப்போதும் இல்லாத ஒருவித சிக்கலில் தேர்தலைச் சந்தித்தது. எம்ஜிஆர், கருணாநிதி, பின்னர் கருணாநிதி ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் தலைமையுடன் சந்தித்த தேர்தலில் தற்போது ஜெயலலிதா கருணாநிதி இல்லாத தலைமைகள் மோதும் ஒரு தேர்தலாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

2011 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிவேல் வென்றார்.  பின்னர் சிறைவாசத்தால் எம்.எல்.ஏ பதவியை இழந்த ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட்டபோது அவருக்காக 2015 இடைத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியை வெற்றிவேல் விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்தார். அந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்க, ஒரே எதிர்க்கட்சி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். விஐபி தொகுதியானது ஆர்.கே.நகர். ஆனால் அதன் பின்னர் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 2015 இடைத்தேர்தலில் பெற்ற 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வித்தியாசத்தையோ, 1 லட்சத்து 60-க்கும் மேற்பட்ட வாக்குகளையோ ஜெயலலிதா பெறவில்லை என்றாலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழனை ஏறத்தாழ 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை தெலுங்கு பேசும் மக்கள், வன்னியர், நாடார், மீனவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பும் கலந்த ஒரு தொகுதியாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நிலையைப் பார்ப்பதற்கு முன்னர் ஆர்.கே.நகர் தொகுதியின் முந்தைய வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

1952 பொதுத்தேர்தலில் வண்ணாரப்பேட்டை தொகுதியாக இருந்தது. 1949-ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான திமுக, தேர்தலில் போட்டியிடாத காலம் அன்று வடசென்னையில் கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் இருந்த காலம். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜீவா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணப் பிள்ளையைத் தோற்கடித்தார். மீண்டும் 1957-ல் நடந்த தேர்தலில் ஜீவா 491 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முனியாண்டி நாடாரிடம் தோற்றார்.

1962-ம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக திமுக தேர்தலில் வண்ணாரப்பேட்டையில் நிற்க திமுக வேட்பாளர் வேதாச்சலம் 3 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் முனியாண்டி நாடாரிடம் தோற்றார். இரண்டு முறை வண்ணாரப்பேட்டையை தக்கவைத்த காங்கிரஸ் கட்சி 1967-ல் மிகப் பெரிய திமுகவின் எழுச்சி காரணமாக அதே திமுக வேட்பாளர் வேதாச்சலத்திடம் தொகுதியைப் பறிகொடுத்தது.

அதன் பின்னர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 1971-ல் எம்ஜிஆர், கருணாநிதி ஒன்று சேர்ந்து சந்தித்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த நிலையில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேதாச்சலம் மீண்டும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.

1977 அதிமுகவும், ஆர்.கே.நகரும் சந்தித்த முதல் தேர்தல்

வண்ணாரப்பேட்டையாக இருந்த தொகுதி 1977-ல் தேர்தல் சீர்த்திருத்த அடிப்படையில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் சுருக்கமாக ஆர்.கே.நகர் தொகுதியாக மாற்றப்பட்டது. 1977-ல் ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டபோது திமுக இரண்டாக உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அதிமுக உருவாகி சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. திமுக ஜனதாதளம் கூட்டணி, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக நடிகர் ஐசரிவேலன் போட்டியிட்டார்.

அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சீத்தாபதியை தோற்கடித்தார். சென்னை திமுகவின் கோட்டை என்பதை ஆர்.கே.நகர் மாற்றி அமைத்தது. முதன்முறை ஆர்.கே.நகரை அதிமுக கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் வென்ற ஐசரிவேலன் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் துணை அமைச்சர் பதவி வகித்தார்.

1980-ல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட அனுதாப அலையை மீறி திமுக கூட்டணி வெற்றி:

1980-ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஆர்.கே.நகர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐசரிவேலன் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரும் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற தலைவருமான ராஜசேகரனிடம் தோல்வியடைந்தார்.

1984 எம்ஜிஆர் சுகவீனம், இந்திரா மரணம், அதிமுக கூட்டணி வெற்றி

1984-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா மரணம், எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் ஆர்.கே நகரில் அதிமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனை தோற்கடித்தார்.

1989 தேர்தல்; இரண்டாக உடைந்த அதிமுக

திமுக வேட்பாளர் வெற்றி1989- சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜா, ஜெ என இரண்டாக பிளவுபட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்தலை சந்தித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனிடம் தோல்வியடைந்தார்.

1991- ராஜீவ் மரணம்,  அதிமுக வெற்றி

குறுகிய காலத்திலேயே திமுக ஆட்சி கலைக்கப்பட ஒன்றுபட்ட 1991 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் நிற்க ராஜீவ் கொலை காரணமாக எழுந்த அலையில் ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதன் முறையாக வென்றார். திமுக வேட்பாளர் சற்குணபாண்டியன் தோல்வி அடைந்தார்.

1996 அதிமுக மீதான கடுமையான கோபம்; திமுக வெற்றி

1991லிருந்து 1996 வரை மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் வகையில் ஆட்சி நடத்திய ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், திமுக ஓரணியில் இணைந்ததால் தமிழகம் முழுதும் படுதோல்வியை அதிமுக சந்திக்க ஆர்.கே.நகரிலும் தோல்வியைத் தழுவியது. சற்குணபாண்டியன் மதுசூதனனை மீண்டும் தோற்கடித்தார்.

2001 கூட்டணி மாறியது; அதிமுக வென்றது

2001-ல் திமுக கூட்டணி உடைந்தது. மூப்பனார், இடதுசாரிக் கட்சிகள் அதிமுக அணியில் இணைய அதிமுக வென்றது. ஆர்.கே.நகரில் இம்முறை அதிமுக வேட்பாளர் சேகர்பாபு வெற்றிபெற்றார்.

2006-ல் தேமுதிக எழுச்சி காரணமாக ஆட்சியை இழந்த அதிமுக

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனியாக நிற்க மூன்று கூட்டணிகளாக இருந்த நிலையில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக ஆட்சி அமைத்தது. ஆனாலும் அதிமுக ஆர்.கே.நகரை தக்கவைத்தது.

2011 அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் கூட்டணி; ஆட்சியை இழந்த திமுக

2011 தேர்தலில் 2 ஜி விவகாரம் மற்றும் தேமுதிக, இடதுசாரிக் கட்சிகள், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மிகப் பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றது. திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் சேகர்பாபு திமுகவுக்கு கட்சி மாறி போட்டியிட அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வெற்றிபெற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக தொகுதியில் அதிமுக தொடர் வெற்றி பெற்றது.

2015 இடைத்தேர்தல் எதிர்ப்பில்லா வெற்றிபெற்ற ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கு கைதுக்குப் பின் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த ஜெயலலிதாவுக்காக வெற்றிவேல் ராஜினாமா செய்ய இடைத்தேர்தலில் திமுக புறக்கணித்த நிலையில் ஆர்.கே. நகரில் வரலாறு காணாத 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார்.

2016 மூன்றாகப் பிரிந்த கூட்டணி, எளிதாக வென்ற ஜெயலலிதா

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்து நிற்க திமுக காங்கிரஸ் கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என மும்முனைப்போட்டியில் ஆட்சியைப் பிடித்தது அதிமுக. முதல்வர் தொகுதி என்ற முறையில் விஐபி அந்தஸ்து பெற்ற ஆர்.கே.நகரில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை ஜெயலலிதா தோற்கடித்தார்.

2016 ஜெயலலிதா மரணமும், இடைத்தேர்தல் ரத்தும்

ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் தனி அணி, எடப்பாடி டிடிவி தினகரன் ஓரணி என்ற நிலையில் அதிமுக இரண்டு அணிகளாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் முதன்முறையாக திமுக சார்பில் புதுமுகம் மருதுகணேஷ் நிறுத்தப்பட வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட பணமழை காரணமாக தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் நடந்திருந்தால் மதுசூதனன் வெல்லும் வாய்ப்பு அதிகம் இருந்தது. அடுத்து திமுகவுக்கு வாய்ப்பு இருந்தது என்று கூறப்பட்டது.

பிரிந்தவர் கூடினர், கூடியவர் பிரிந்தார்; வித்தியாசமான இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் கடந்த டிச.21ம் தேதி நடைபெற்றது.  வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.24) நடைபெற உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலரும் போட்டியிட்டாலும் போட்டியின் முதல் மூன்று இடத்திலிருப்பவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மட்டுமே. இவர்களில் ஒருவர் வெல்லவே வாய்ப்பு உள்ளது என அவரவர் தரப்பினர் நம்புகின்றனர்.

கடந்த முறை ஆட்சி அதிகாரத்துடன் நின்ற டிடிவி தினகரன் இந்த முறை சுயேச்சையாக நின்றார். கடந்த முறை தனி அணியாக நின்ற மதுசூதனன் சகல அதிகார பலத்துடன் முதல்வர், அமைச்சர்கள் புடைசூழ களம் கண்டுள்ளார்.

திமுக சார்பில் நின்ற  வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதிக்கு புதியவர் என்றாலும் திமுகவின் இயல்பான வேகத்துடன் கூடிய பிரச்சாரம் இன்றி தனது போட்டியைத் தொடர்ந்தார்.

அனைவருக்கும் வாழ்வா, சாவா கவுரவப் போராட்டம்.  ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல், தேமுதிக ஒதுங்கிவிட்ட நிலையில் இரண்டாங்கட்ட தலைவர்கள் தலைமையில் நடக்கும் முதல் தேர்தல் இது.

வாழ்வா, சாவா?  கவுரவப் போராட்டம்

மு.க.ஸ்டாலின்

இந்த தேர்தல் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் சந்திக்கும் தேர்தல், அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கடுமையான கோபத்தையும், டிடிவி தினகரன் ஓட்டுகளைப் பிரிக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தி திமுக வெல்லாவிட்டால் இந்த சூழ்நிலையிலும் கூட வியூகம் வகுத்து வெல்ல முடியவில்லை என்ற நிலைக்கு ஸ்டாலின் தலைமை தள்ளப்படும்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்

இரட்டை இலை கிடைத்த பின்னர், ஆட்சி அதிகாரம், மதுசூதனன் என்கிற செல்வாக்கு மிக்க வேட்பாளர் என்ற பலத்துடன் தேர்தலில் வெல்ல வேண்டும். இந்தத் தேர்தலில் வென்றால் ஜெயலலிதா இல்லாத அதிமுக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கூறலாம். நாங்கள்தான் ஒன்றுபட்ட அதிமுக என்று கூறலாம் என்கிற நிலையில் தோல்வியைத் தழுவினால் இரட்டை இலை சின்னம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது என்ற கருத்து வலுவாகிவிடும்.

டிடிவி தினகரன்

அதிமுக ஒதுக்கினாலும் நான் யார் என்று காட்டுகிறேன், என் பின்னால் அனைவரும் வரும் நேரம் வரும் என்று துணிச்சலுடன் களம் இறங்கியுள்ள டிடிவி தினகரன் வென்றால் மிகப் பெரும் விஸ்வரூபம் எடுப்பார். குறுகிய காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் என்ற நிலைக்கு தினகரன் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் தினகரன் வெற்றிபெற்றால் அது அதிமுக தலைவர்களுக்கு பலத்த பின்னடைவையும் சோர்வையும் உருவாக்கும், மாறாக தினகரன் தோல்வி அடைந்தால் அவருக்கும் அரசியல் பயணத்தில் சிக்கல் உருவாகும்.

ஆனால் 10 ஆயிரம் வாக்குகள் பெற்றாலும் அது தினகரனுக்கு வெற்றியே என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆகவே அனைவருக்குமே இந்தத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கு உரைகல் என்றால் அது மிகையாகாது.

யாருக்கு வெற்றிக்கனி?

அதிமுக எளிதாக வெல்லும் என ஆரம்பத்தில் உற்சாகமாக இறங்கிய மதுசூதனன் தற்போது டிடிவி தினகரனின் வேகத்தால் பாதிக்கப்படுவார், அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளை டிடிவி தினகரன் கட்டாயம் பிரிப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

திமுக நிதானமாக செயல்பட்டாலும் திமுகவின் வாக்கு வங்கி மாற்றுக்கட்சிக்கு செல்லப் போவதில்லை, தினகரனின் எழுச்சியினால் பிரியும் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது என்றும் திமுக நிர்வாகிகள் புது உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.

ஆனாலும் திமுகவின் வாக்கு வங்கிகளான இஸ்லாமியர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள் தினகரனை நம்புகின்றனர் என்ற கருத்து உருவாகி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆர்.கே.நகர் வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட அதிக அளவில் பதிவான 77 சதவீத வாக்குப்பதிவும், பணப் பட்டுவாடாவும் கடந்த பத்து நாட்களாக தினகரனுக்கு ஆதரவாக தொகுதி உள்ளது என்று சொன்னவர்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 4 பொதுத்தேர்தலிலும் அதிமுக வசமே இந்த தொகுதி உள்ளது, சராசரி 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ள தொகுதி ஆர்.கே.நகர்.

திமுக முன்னதாக அதிமுகவை தோற்கடித்தது அதிமுக பலகீனமாக இருந்த 1989, 96 ஆண்டுகளில் மட்டுமே. ஆகவே திமுக தனது வாக்கு வங்கியை தக்கவைத்து அதற்கு மேல் வித்தியாசத்தையும் தாண்டினால் மட்டுமே ஆர்.கே.நகர் திமுக வசமாகும்.

டிடிவி தினகரனும் கணிசமான வாக்குகளைப் பெற  வாய்ப்புள்ளது அதில் திமுகவின் வாக்குகளும் அடங்கும் என உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது.

தினகரன் வாங்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே யார் வெற்றி பெறுவார் என்பது தீர்மானிக்கப்படும். ஒரு வேளை ஆளுங்கட்சி வென்றாலும் கடந்த தேர்தலைப் போல அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இருக்காது என்று உளவுத்துறை ரிப்போர்ட் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மக்களின் தீர்ப்பே இறுதியானது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22266919.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.