Jump to content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்திகள்


Recommended Posts

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிரான எங்களது நிலைப்பாடு உறுதியானது. 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

அதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91

 
 


                                விஷால்

 

 

ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காலை முதலே ஆர்.கே.நகர்த் தொகுதி அதகளப்பட்டது. இன்று மட்டுமே நூற்றுக்கணக்கானோர் மனுவுடன் வந்துவிட்டனர். 'வேட்பாளர்களிடம் மாலை 4 மணிவரை மட்டும்தான் மனுக்கள் வாங்கப்படும்' என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து இருந்ததால், மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களிடம் ஒரு பரபரப்பு காணப்பட்டது. 


                                 மனுதாக்கல் அலுவலகம் முன்பு...

 

வேட்பாளர்களின் மனுக்களைத் தனித்தனியாகப் பரிசீலித்து முடிக்க, ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை ஆனதால், வேட்பாளர்கள் வெளியில் காத்துக்கிடந்தனர். அந்த வரிசையில் நடிகர் விஷாலும் இருந்ததால், அவரைப் பார்க்க பொதுமக்கள் முண்டியடித்தனர். மண்டல அலுவலகத்திலிருந்து அடிக்கடி வெளியே தலைநீட்டிய தேர்தல் அலுவலக ஊழியர்கள், "நாங்க கூப்பிடும்போது மட்டும் ஆள்களை உள்ளே அனுப்புங்க. டோக்கன் நம்பர் 68-ன்னு சொல்லும்போது, சுயேச்சை வேட்பாளர் விஷால் உள்ளே வந்தால் போதும். அதேபோல் டோக்கன் நம்பர் 90, வெளியேறி போனபிறகு தீபாவை உள்ளே அனுப்புங்க. அவங்க நம்பர் 91 தான். அவர்களுக்கு முன்னால் வந்து டோக்கன் வாங்கின சுயேச்சைகள் நிறைய பேரு வெளியே காத்திருக்காங்க, மறந்துடாதீங்க. வரிசைப்படியா ஆட்களை அனுப்புங்க" என்றனர். வெளியில் இருந்த மாநகராட்சி ஊழியர்களும் `அலர்ட்'டாக இருந்து வரிசைப்படி ஆட்களை உள்ளே அனுப்பினர்.


                                 பா.ஜ.க.வேட்பாளருடன் தமிழிசை

 

டோக்கன் வரிசையை மீறி திடீரென்று விஷால் உள்ளே போகப்போகிறார் என்று யாரோ பற்ற வைக்க, "அது எப்படி, நாங்க இவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறோம், விடுவோமா?" என்றபடி  மனுத்தாக்கல் செய்ய வந்த சிலர் மல்லுக்கு நின்றனர். அத்தோடு விட்டாலும் பரவாயில்லை, "பா.ஜ.க, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தேசியக் கட்சிகள், அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளே கூப்பிட்டால் பரவாயில்லை. விஷால் போன்ற சுயேச்சைகளுக்கு எப்படி முன்னுரிமைக் கொடுத்து உள்ளே விட முடியும்" என்று கொந்தளித்தனர். போலீஸ், ஒழுங்குப் படுத்தி வரிசையைக் கண்காணித்தது. விஷாலை முன்னதாக விடக் கூடாது எனக் கொந்தளித்ததில் பலர், விஷாலின் மனுத்தாக்கல் முடிந்ததும் அவரோடு 'செல்ஃபி' எடுத்துக்கொண்டனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/109774-rk-nagar-candidates-file-nominations.html

Link to comment
Share on other sites

 

தினகரனுக்காக வாக்குச் சேகரிக்கும் தேனி மாவட்ட பன்னீர் ஆதரவாளர்கள்...! என்ன நடக்கிறது ஆர்.கே.நகரில்? #RKNagarAtrocities

 
 

தினகரன் ஓ.பன்னீர்செல்வம்

மிழக அதிமுக அரசியல் எப்படியோ அப்படி இல்லை, தேனி மாவட்ட அதிமுக அரசியல். தேனி மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று ஓர் அணியில் இருப்பவர் நாளை இன்னோர் அணிக்குத் தாவுவார். மறுநாள் இன்னோர் அணியில் அமைதியாக ஐக்கியமாவார். ‘இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா…’ போல இவர்களின் குரங்கு தாவலை ஒரு புறம் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் தங்கத்தமிழ்ச்செல்வனும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அணி தாவலானது பெரிய அளவில் நடந்தது பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய காலம்தான். தேனி மாவட்டத்தில் இருந்த பெரும்பாலான கட்சி நிர்வாகிகள், தங்கத்தமிழ்ச்செல்வன் அணிக்குத் தாவினார்கள். அமைதியாக ஊருக்கு வரும் பன்னீர்செல்வம் அதே அமைதியோடு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் சென்றுவிடுவார். பிறகு, பன்னீர்செல்வமும், எடப்பாடியும் கை கோர்த்தார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணைமுதல்வர் எனப் பன்னீர்செல்வத்துக்கு பவர் கிடைக்க, அணி தாவிய நிர்வாகிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. சற்றும் யோசிக்காமல், தங்கத்தமிழ்ச்செல்வனை கை கழுவிவிட்டு பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தார்கள். புன்னகையோடு ஏற்றுக்கொண்டார் பன்னீர்செல்வம். ‘மனிதர்களில் பல நிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லி பல்லைக்கடித்துக்கொண்டார் தங்கத்தமிழ்ச்செல்வன்.

 

வெறும் புன்னகை மட்டுமே :

அணி மாறிய நிர்வாகிகள் நூற்றாண்டு விழாவில் பரபரப்பாக வேலை செய்தார்கள். தர்மயுத்த காலத்தில் பன்னீர்செல்வத்தில் காரைக் கண்டாலே மறைந்துகொள்ளும் நிர்வாகிகள் அனைவரும் அவரது காரின் பின்னால் ஓடினார்கள். ஏதாவது ஒரு கட்சி நிகழ்ச்சி என்றால் விழுந்து விழுந்து வேலை செய்தார்கள். எல்லாவற்றையும் கண்ட பன்னீர்செல்வம் புன்னகையை மட்டுமே உதிர்த்துவிட்டு அமைதியானார். பன்னீர்செல்வம் துணைமுதல்வர் ஆனதும், ரோடு கான்ட்ராக்ட், மின் விளக்கு கான்ட்ராக்ட், அரசுக் கட்டிட கான்ட்ராக்ட் எனக் கட்சி நிர்வாகிகளின் கையில் இருந்த ஒட்டுமொத்த அரசு கான்ட்ராக்ட்களும் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் அதிகாரத்தில் இருந்த பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது பன்னீர்செல்வத்துக்கும் நன்றாக தெரியும்.

தினகரனுடன் பேசிய பன்னீர் ஆதரவு நிர்வாகிகள்? 

அணி மாறி பன்னீர்செல்வம் அருகிலேயே இருந்தாலும், இன்னும் தங்கத்தமிழ்ச்செல்வனுடன் தொடர்பில் நிர்வாகிகள் அனைவரும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும் அவர்கள், சமீபத்தில் தினகரனை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் கிடைத்தது. இதை உறுதிபடுத்த பன்னீர் செல்வத்தின் நெருங்கிய வட்டாரத்தில் முதலில் விசாரித்தோம், ``இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?. எல்லோரும் கட்சிப் பணியாற்றவா எங்கள் பக்கம் வந்தார்கள். எல்லாம் சுயநலத்துடன்தான் அணி மாறியிருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தல் பணிக்காக தேனியிலிருந்து அனைவரும் சென்னை வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கடந்த முறை தினகரன் ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்யும் போது அவருடன் இருந்தவர்கள். தொகுதி மக்களுக்கு அதிகப் பணம் கொடுத்த பரிச்சையமான முகத்தவர்கள். அவர்களை தொகுதி மக்களுக்குத் தெரியும் என்பதால், தினகரன் அவர்களை ரகசியமாக அழைத்துப் பேசியிருக்கிறார். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் ஏதாவது குழப்பம் விளைவித்து தேர்தல் நடக்கவிடாமல் செய்ய ஏதோ சதி செய்கிறார்கள் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்`` என்றனர்.

தங்கத்தமிழ்ச்செல்வனின் நெருகிய வட்டாரத்தில் விசாரித்த போது, ``அதிகார ஆசைதான் எங்களைப் புறந்தள்ள காரணம். அதைப் பற்றி இன்றுவரை நாங்கள் கவலைபட்டதே இல்லை. ஆனால், இன்றும் எங்களுடன்தான் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்வது தவறான தகவல். எல்லோரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்ததன் நோக்கம் ஆர்.கே நகர் தேர்தல் இல்லை, தனது சொந்த பந்தங்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை, டாஸ்மார்க் கான்ட்ராக்ட் போன்றவற்றை கையோடு வாங்கிச் செல்ல மட்டும் தான். அவர்களைப் பற்றி யோசிக்கக் கூட நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்குத் தேர்தல் பணிகள் நிறைய இருக்கின்றன.`` என்றனர்.

 

அணி மாறியது மட்டுமல்லாமல் அதில் உள்குத்து அரசியலும் செய்யும் அக்கறை, மக்கள் பணியில் சிறிதேனும் காட்டியிருக்கலாம் என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது. கழக நிர்வாகிகளே கட்சிப்பணியினும் சிறந்தது மக்கள் பணி என்பதை இனியேனும் உணர்வீர்களா?

https://www.vikatan.com/news/tamilnadu/109745-theni-ops-supporters-to-support-dinakaran-in-rk-nagar-byelection.html

Link to comment
Share on other sites

விஷாலின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு..!

 
 
Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

6d430146-3aed-43f3-8383-94b3325fc50e_150

 
 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.முக, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அதற்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. மனு மீதான பரிசீலனைக்காக இன்று காலையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வந்துவிட்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொகுதியில் தங்கிய விஷால், அங்கிருந்தபடியே நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

மனு பரிசீலனையின்போது சுயேச்சைகளின் மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. 32 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 39 பேரின் மனுக்கள் இதுவரையில் ஏற்கப்பட்டுள்ளன. 72 வது மனுவாகப் பரிசீலிக்கப்பட்ட விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மனுவை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். முன்னதாக, வங்கிக் கணக்கை விஷால் சரிவர தாக்கல் செய்யவில்லை என்று கூறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் விஷாலின் மனுவை நிராகரிக்க வலியுறுத்தினர். இந்நிலையில், விஷால் மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை செய்யும் இடத்தில் காத்திருக்கிறார். 

https://www.vikatan.com/news/tamilnadu/109856-vishal-nomination-form-has-hold-by-election-officer.html

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த ஜெ.தீபா வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்தார் தேர்தல் அதிகாரி!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

`10 பேரில் இரண்டு பேர் முன்மொழியவில்லை' - 2 மணி நேர ஆலோசனைக்குப் பின் விஷால் வேட்புமனு திடீர் நிராகரிப்பு!

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

6d430146-3aed-43f3-8383-94b3325fc50e_175

 
 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.முக, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அதற்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. மனு மீதான பரிசீலனைக்காக இன்று காலையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்துவிட்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொகுதியில் தங்கிய விஷால், அங்கிருந்தபடியே நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

மனு பரிசீலனையின்போது சுயேச்சைகளின் மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. 32 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 39 பேரின் மனுக்கள் இதுவரையில் ஏற்கப்பட்டுள்ளன. 72 வது மனுவாகப் பரிசீலிக்கப்பட்ட விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, வங்கிக் கணக்கை விஷால் சரிவரத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் விஷாலின் மனுவை நிராகரிக்க வலியுறுத்தினர்.

இந்நிலையில், விஷால் மனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியில் விஷால் வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். வேட்புமனுவை தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், விஷாலை 10 பேரில் இரண்டு பேர் முன்மொழியவில்லை என்று  கூறி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனிடையே மனுநிராகாரிக்கப்பட்ட தகவல் அறிந்து, நடிகர் விஷால் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டு வருகிறார். 

https://www.vikatan.com/news/tamilnadu/109879-actor-vishals-nominations-cancelled.html

Link to comment
Share on other sites

’வீடியோ ஆதாரம் இருக்கிறது; முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்!’ - தேர்தல் அதிகாரியிடம் விஷால் முறையீடு

 
 
Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் விஷால் முறையிட்டு வருகிறார். 

vishal
 

 
 

டிசம்பர் 21 தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தம் நடைப்பெற்றது.  ஆர்.கே.நகர் டிடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான பரிசீலனைக்காக இன்று காலையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்துவிட்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொகுதியில் தங்கிய விஷால், அங்கிருந்தபடியே நிலவரங்களைக் கேட்டறிந்தார். விஷால் மனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியில் விஷால் வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். வேட்புமனுவை தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி.

இந்த நிலையில், விஷாலை 10 பேரில் இரண்டு பேர் முன்மொழியவில்லை என்று  கூறி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். விஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்து போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்து போட்டதிலீபன் ஆகியோர்  கையெழுத்து போடவேயில்லை என்று பின்வாங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல் அதிகாரியிடம் இதனை முறையிட்ட விஷால் தற்போது அங்கு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஆர்.கே.நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தர்ணாவில் ஈடுபட்ட விஷாலை போலீஸார் கைது செய்துள்ளனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/109881-vishal-holds-protest-in-rk-nagar.html

Link to comment
Share on other sites

வேட்புமனு ஏற்பு..! தேர்தலில் சந்திக்கிறேன்; விஷால் உற்சாகம்

 
 
Chennai: 

விஷால் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். 

8e126260-0775-4536-b968-3237b1330986_204

 
 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல் செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில், வேட்புமனு  நிராகரிப்பு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம்சாட்டினார். மேலும் அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஆடியோ பதிவு வைரலாகி வந்த நிலையில், தற்போது விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 'தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி சரியான முடிவை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டுள்ளது. நல்லது நடப்பதற்கு தடைகள் இருக்கும். நிறைய சுயேச்சை  வேட்பாளர்கள் எனக்குத் துணையாக நின்றார்கள். அவர்களுடைய பெயர்கூட எனக்குத் தெரியாது. எனக்கு எதிராக யார் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திக்கவுள்ளேன். நாளை முதல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளேன்' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/109890-vishals-nomination-form-accepted.html

Link to comment
Share on other sites

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால்

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல் செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, வேட்புமனு  நிராகரிப்பு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம்சாட்டினார். மேலும் அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஆடியோ பதிவு வைரலாகி வந்த நிலையில், விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/109903-vishals-nomination-form-for-byelection-rejected.html

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

201712052334237980_1_ix7bgs4q._L_styvpf.jpg

இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர்.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்திருக்கிறார். மேலும் தனக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த ஆடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக கூறப்படும் பத்து பெயர்களில் சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர் அவரை முன்மொழியவில்லை எனவும், வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை எனவும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து தேவையான முன்மொழிவோர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்கு பின்னரே விஷாலின் வேட்புமனு நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது எனவும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/05233415/1132858/Actor-vishal-nomination-in-rknagar-byelection-has.vpf

Link to comment
Share on other sites

`இதில் எங்கு ஜனநாயகம் இருக்கிறது..!' - வேட்புமனு நிராகரிப்பால் விஷால் ஆவேசம்

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து விஷால் செய்தியாளர்களைச் சந்தித்து, `ஜனநாயகத்தை கேலியாக்கியுள்ள நடவடிக்கை இது' என்று பொங்கியுள்ளார். 

விஷால்

 

இது குறித்து பேசிய விஷால், `வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அதை என்னிடம் அறிவித்த அதிகாரிகளே இப்போது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். இதில் எங்கு ஜனநாயகம் இருக்கிறது. எதற்காக என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஏன் இவ்வளவு தரக்குறைவாக நடந்து கொள்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. படத்தில் நடக்கும் காட்சி போல நிமிடத்திற்கு நிமிடம் கருத்துகளை மாற்றி கூறுகின்றனர் அதிகாரிகள். சுயேச்சையாக போட்டியிடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஜனநாயகத்தை கேலியாக்கியுள்ள நடவடிக்கை இது. சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்க வைப்பேன்' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்த விஷயம் குறித்து தேர்தல் அலுவலர், `விஷாலை முன்மொழிந்த 10 பேரில் 2 பேர், நாங்கள் அவரை முன்மொழியவில்லை என்று நேரில் விளக்கம் அளித்தனர். சுமதி மற்றும் தீபன் ஆகிய இருவரும்தான் விஷாலை முன்மொழியவில்லை என்று கூறியுள்ளனர். சுயேச்சையாக போட்டியிடும் நபரை தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், 8 பேர்தான் அவரை முன்மொழிந்தனர். எனவே அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது' என்று விளக்கம் அளித்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/109904-vishal-reacts-after-his-nomination-form-rejected.html

Link to comment
Share on other sites

 

 

  • gallerye_003248973_1912865.jpg

 

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பிரசார களத்திற்கு வராததால், தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், விரக்தி அடைந்துள்ளார். தி.மு.க.,வுடன் கைகோர்த்த தலைவர்கள், வெறும் அறிவிப்போடு உறவை நிறுத்தியதால், ஒட்டுமொத்த, தி.மு.க.,வினரும் சோகம் அடைந்துள்ளனர்.

 

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன்; பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன்; சுயேச்சையாக தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பன்னீர்செல்வமும், பழனி சாமியும் ஒன்றிணைந்ததால், அவர்களுக்கு, தேர்தல் கமிஷன், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள், தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக உள்ளனர்.

பழனிசாமி அரசு மீது, மக்களிடம் நிலவும் அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கருதுகிறார். ஏப்., மாதம், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டபோது போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கட்சியும், தேர்தலை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளன.

கட்டாயம்


தி.மு.க.,வை தொடர்ந்து விமர்சித்து வந்த, ம.தி.மு.க., வும், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த, காங்., முஸ்லிம் லீக் கட்சிகளுடன் சேர்த்து, தற்போது, தி.மு.க.,வின் கூட்டணி பலம் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

மருதுகணேஷ், தினமும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, ஓட்டு சேகரித்து வருகிறார். அவருடன், உள்ளூர் மற்றும் சென்னை உட்பட, பிற பகுதிகளில் இருந்து வந்துள்ள, தி.மு.க., தொண்டர்கள் மட்டுமே பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் வருவது இல்லை. இது குறித்து, ஆர்.கே. நகர் தி.மு.க.,வினர் கூறியதாவது:போலி வாக்காளர்கள் நீக்கம்; சொந்த ஓட்டு வங்கி; கூட்டணி கட்சிகளின் ஓட்டு; தினகரன் பிரிக்கும், அ.தி.மு.க., ஓட்டு ஆகியவை, தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாக உள்ளன.
 

நம்பிக்கை


காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் இருந்து, ஒரு கட்சிக்கு, மூன்று பேர் என்று, பிரசாரத்திற்கு வந்தால்கூட, ஒவ்வொரு பகுதியில் உள்ள, அவர்களின் ஆதரவாளர்களின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளருடன், தினமும் பிரசாரத் துவக்கத்தின்போது வருகின்றனர்; சிறிது நேரத்தில் காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள், தங்கள் கட்சி கொடிகளை, தி.மு.க., தொண்டர்களிடம் வழங்கி விட்டு செல்கின்றனர்.

அந்த கட்சிகளின் தலைவர்களும், தங்கள் கொடிகளை பார்த்து, தன் கட்சி தொண்டர்கள், பிரசாரத்தில் ஈடுபடுவதாக நினைத்து கொள்கின்றனர். தி.மு.க., தலைமையும், அதை நம்புகிறது.தி.மு.க.,விலும், மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முழு வீச்சில் பிரசாரம் செய்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பின், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள பலமான கூட்டணி, தலைவர்கள் மட்டத்தில் தான் உள்ளது.

விடுதலை சிறுத்தை மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.எனவே, கூட்டணி தலைவர்கள் ஒன்றாக, பொதுக் கூட்டங்களில் தோன்றுவதற்கு பதில், பகுதிதோறும் பிரசாரம் செய்ய வேண்டும். தங்கள் தொண்டர்களையும், பிரசார பணிகளில் முடுக்கி விட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தேர்தல் அதிகாரி மாற்றம் தி.மு.க., கூட்டணி திட்டம்


நடிகர் விஷால், வேட்புமனு தள்ளுபடி செய்த விவகாரத்தில், தேர்தல் அதிகாரி மீது, .மு.க.,வுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி உத்தரவின்படி தான், வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க., தரப்பில் கருதப்படுகிறது.
 

 

எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதற்கு முன், தேர்தல்அதிகாரியை மாற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள், நேற்று வலியுறுத்தியுள்ளன.எனவே, தேர்தல் அதிகாரியை மாற்றும் முயற்சியை, சட்டரீதியாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த, டிச., 11ல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில், கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நடக்கவுள்ளது.

இது குறித்து, ஸ்டாலின் அளித்த பேட்டி: டிச., 7ல், அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மழை எச்சரிக்கை காரணமாக, அக்கூட்டம், டிச., 11க்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த கூட்டத்திற்கு பின், ஆர்.கே.நகரில் பிரசாரத்தை துவக்குவோம். தேர்தலை, தேர்தல் கமிஷன் நடுநிலையுடன் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

கூட்டணி கட்சிகள் கூட்டம் தி.மு.க., திடீர் ஒத்திவைப்பு


இன்று நடக்க இருந்த, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ காரணமாக, அக்கூட்டம், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் பிரசாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 9ம் தேதி, ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கப்பட உள்ளது. ஆனால், தி.மு.க., சார்பில், இந்த வேலைகள் எதுவும் துவங்கப்படவில்லை.

இதற்கிடையில், சென்னையில், இன்று நடக்கவிருந்த, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமும், 11க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், அக்கட்சியினர் சோகமடைந்துள்ளனர்.இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:கடைசி நேரத்தில், ம.தி.மு.க., ஆதரவு அளித்துள்ளதால், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோவும், கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புகிறது.

ஆனால், கன்னியாகுமரி, தென்காசி போன்ற இடங்களில், வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால், இப்போது வர முடியாது என்றும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கும்படியும் கூறியுள்ளார்.அதோடு, புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால், சென்னையில் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகோ வருகை மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக, இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1912865

Link to comment
Share on other sites

விஷால் வேட்புமனுவை முன்மொழிந்து பின் மறுத்த இருவர் மீண்டும் வந்து விளக்கமளித்தால் மறுபரிசீலனை! தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

https://www.vikatan.com/latest-news

Link to comment
Share on other sites

தேர்தல் அலுவலரை மிரட்டினாரா விஷால்?

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுசாமியைத் தான் மிரட்டியதாக, அவர் கூறுவதாக நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட தன்னைப் பரிந்துரைத்துவிட்டு, பின்வாங்கியவர்களின் வீடுகளின் முன்பாக யாரோ ஆட்கள் நிற்பதாகவும் விஷால் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரஜினி, விஷால், கமல்

சென்னை ஆர்.கே. நகருக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரைப் பரிந்துரைத்து கையெழுத்திட்ட இருவர், அந்தப் படிவத்தில் இருப்பது தங்களது கையெழுத்து இல்லை என நேரில் வந்து கூறியதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், கையெழுத்திட்டு, பிறகு மறுத்தவர்களை நேரில் அழைத்துவரும்படி விஷாலிடம் தேர்தல் ஆணையம் கூறியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று பிற்பகலில் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்த விஷால், தேர்தல் அதிகாரியிடம் சென்று பேசினார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் மாற்றமில்லையென தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தான் தேர்தல் அதிகாரியிடம் பேசியதாகவும், அவர் தனது வேட்புமனுவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் முதலில் ஏற்பதாகச் சொல்லிவிட்டு, பிறகு நிராகரிக்கப்பட்டதாகச் சொன்னது ஏன் எனக் கேட்டபோது, தான் மிரட்டியதால்தான் அப்படிச் சொல்ல வேண்டியதாயிற்று என தேர்தல் அதிகாரி கூறியதாகவும் தான் எப்படி தேர்தல் அதிகாரியை மிரட்ட முடியும் என்றும் விஷால் கேள்வியெழுப்பினார்.

விஷால்

"நாங்கள் கெஞ்சினோம். அந்தக் கையெழுத்து உண்மையானது என்று கெஞ்சினோம். பிறகு அவர் ஏற்பதாகச் சொன்னார். அவருக்குக் கை கொடுத்தேன்" என்றார் விஷால்.

தனக்குக் கையெழுத்திட்டு மறுத்தவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களை அழைத்துவரப் போனபோது அவர்கள் வீட்டில் இல்லையென்றும் அவர்களது வீடுகளின் முன்பாக ஆட்கள் நிற்பதாகவும் விஷால் குற்றம்சாட்டினார். அவர்களது பாதுகாப்பு குறித்து தனக்குக் கவலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்போவதாகவும் விஷால் கூறினார்.

இதற்கிடையில் ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 59 பேர் களத்தில் உள்ளனர்.

ஆர்.கே. நகரில் ஒட்டுமொத்தமாக 145 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷாலின் வேட்புமனுக்கள் உட்பட 73 பேரில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

விஷால்

இதில் 13 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். ஆகவே தற்போது 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 59 பேரில் ஒருவர் மட்டுமே பெண். 47 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இ. மதுசூதனனும் சசிகலா அணியின் சார்பில் டிடிவி தினகரனும் தி.மு.க. சார்பில் மருது கணேஷும் பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.

http://www.bbc.com/tamil/india-42267808

Link to comment
Share on other sites

பிரஷர் குக்கர் சின்னத்தை இதனால்தான் தேர்வு செய்தேன்! சுறுசுறு தினகரன்

 
Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

Dinakaran_22109.jpg

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 4-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் கேட்ட தொப்பி சின்னத்தை, நமது கொங்கு முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எழுச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம் எனப் பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகள் கோரின. இதையடுத்து, குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்குத் தொப்பி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேபோல், தினகரன் கோரிய மற்ற சின்னங்களான விசில் மற்றும் பேட் ஆகியவையும் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. 

Dinakaran2_22281.jpg

ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு, தனது ஆதரவாளர்களான வெற்றிவேல், செந்தில் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் உள்ளிட்டோருடன் மாலை 4.20 மணிக்கு வந்த தினகரன், தேர்தல் அலுவலருடன் சின்னம் தொடர்பாகப் பேசினார். அவர் கேட்ட சின்னங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படவே, தேர்தல் ஆணையம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ள சின்னங்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பிரஷர் குக்கர் சின்னத்தைத் தனக்கு ஒதுக்கும்படி தினகரன் கேட்டுக்கொண்டார்.

dddddd_22504.jpg

 

 

அதன்படி, பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்படவே, வெளியில்வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன். ’’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆயிரத்தெட்டு தொல்லைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் படிக்கற்களாக்கி எதிரிகளுக்கு பிரஷர் (ரத்தக் கொதிப்பு) கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்தேன். தேர்தல் பணிகளை அடுத்த பத்தாவது நிமிடத்தில் தொடங்கிவிடுவேன்’ என்றார். அவர் கூறியதுபோலவே அடுத்த சில நிமிடங்களில் தினகரனின் புகைப்படங்களுடன், பிரஷர் குக்கர் சின்னம் அடங்கிய போஸ்டர்கள் மூலம் ஆன்லைனில் கேன்வாஸைத் தொடங்கிவிட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். 

https://www.vikatan.com/news/rk-nagar/110117-ttv-dinakaran-opens-about-selecting-pressure-cooker-symbol.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

’’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆயிரத்தெட்டு தொல்லைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் படிக்கற்களாக்கி எதிரிகளுக்கு பிரஷர் (ரத்தக் கொதிப்பு) கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்தேன்.

ஆர்கே நகரில் இரவோடு இரவாக இறங்கிய 50,000 தினகரன் குக்கர்கள்: ஜரூர் விநியோகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா

 

fe5800.jpg

எப்படி பொல் போட்டாலும் சிக்சரா அடிக்குறான்டா !!

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: தினகரனுக்கு குக்கர் சின்னம்- பருப்பு வேகுமா?

 
 
 
s3

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பரிமேலழகன் பரி

     

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் குக்கரில் வெந்த உணவைத்தான் சாப்பிடுகிறார்கள் என்று கூறிக்கொண்டு...

Vadivel Paramasivam

ஐந்தாயிரம் லட்சியம்!

பிரஷர் குக்கர் நிச்சயம்!

திருவட்டாறு சிந்துகுமார்

"இந்த டோக்கனைக் கொண்டுபோய் அந்த கடையில கொடுத்தா போதும், நீங்க கேட்கற எந்த பிராண்ட் குக்கர் வேணும்னாலும் உங்களுக்கு கொடுத்திடுவாங்க. அப்படியே அண்ணனுக்கு உங்க ஓட்டையும்... ஹி ஹி"

Varavanai Senthil Kumar

 

 

"அய்யா..கொடுத்ததுதான் கொடுத்திங்க பிரிட்ஜோ வாசிங்மெஷினோ கொடுத்திருக்கலாமே" என்றார் அந்த ஆர்.கே. நகர் ஏழை வாக்காளர்.

s4
 

சின்ன ஜெயங்கொண்டார்

பிரஷர் குக்கர் - எங்கெங்க வெடிக்கப்போகுதுனு தெரியல..

Prakash Ramasamy

குழல் இனிது,

யாழ் இனிது

என்பர்தம் மக்கள்

குக்கர் விசில் கேளாதோர்.

பசியில் எழுதியது.

சீ இராஜேந்திரன்

எதிரிகள், துரோகிகளுக்கு ப்ளட் பிரஷர் ஏற்றும் விதமாக தாய்மார்கள் விரும்பும் பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது- டிடிவி தினகரன்.

பார்த்து கேஸ்கட்ட உருவிடப்போறாங்க..!

Sooran Kanniah @sooranthevar

இன்று குக்கர் இல்லாத வீட்டை பார்க்க முடியாது!

இனி குக்கர் இல்லாமல் நாட்டை காக்க முடியாது!

ரஹீம் கஸாலி @rahimgazali

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - செய்தி#

தினகரனின் பருப்பு குக்கரில் வேகுமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

 

s1
 

TV BALASUBRAMANIAN @mythilitvb

ஜெ. டிவியில் அடுத்து சில நாட்களுக்கு குக்கர் விளம்பரங்களுக்கு கட்டணம் இல்லையாம்.

தோழி @Saranya_twit

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - செய்தி.

இனி பெக்கர் வீட்ல கூட குக்கர் இருக்கும்! #RKNagar

பேஸ்புக் பிரபலம் @dhayai

தம்பி உங்க வீட்ல எத்தனை ஓட்டுப்பா?

ஒரு ஏழு லிட்டர் குக்கர்,

ரெண்டு நாலு லிட்டர் குக்கர்,

ஒரு பால் குக்கர்ண்ணே...

#ஆர்கேநகர்_பரிதாபங்கள்

itzkarthik

துரோகிகளுக்கு ப்ரஷர் ஏற்றவே ‘ப்ரஷர் குக்கர்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது: டிடிவி.தினகரன்.

குக்கருக்குத்தானே ப்ரஷர் இருக்கும், இது புதுசா இல்ல இருக்கு!

விக்கி_டாக்ஸ் @vickytalkz

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - செய்தி

ஆர்.கே.நகருக்கு நாங்க கேரண்டி..!

s
 

சக்திமான் @mufthimohamed1

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு- செய்தி

அனேகமா அது ஏழரை லிட்டர் குக்கராத்தான் இருக்கும்..

Kumaraguru @Kumaraguru_V

நாட்டின், வீட்டின் கண்களாம் பெண்களின் சின்னம் #குக்கர்.

விடியலைதேடி @imparattai

ஆர்கே நகர் தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னம்- பொதுதேர்தல்ல முக்கியமான சிலருக்குஇதுபோல வாஷிங்மிஷின், ஃப்ரிஜ், ஏர்கூலர்னு, ஒதுக்குங்க, மக்களுக்கு கொண்டாட்டமா இருக்கும்.

Kadharb

இனி ஆர்.கே.நகர்ல தினகரன் இப்படித்தான் தேர்தல் பிரசாரம் பண்ணுவாரு போல...

''மனைவிய நேசிக்கிறவங்க பிரஷர் குக்கர் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க

தொகுதிய நேசிக்கிறவங்க பிரஷர் குக்கர் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க!''

 

http://tamil.thehindu.com/opinion/blogs/article21313812.ece

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்! #RKNagar

 
 
Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய வேலுச்சாமி திடீரென மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரவேன் நாயர்
 

 

நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீன் நாயர்  ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

https://www.vikatan.com/news/tamilnadu/110264-praveen-nair-appointed-as-rknagar-returning-officer.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா..! சாலைமறியலில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன்

 
 
Chennai: 

தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

5eed4e78-afb4-4f5b-ba63-b8bdcb9d1cee_141

 


ஆர்.கே.நகர் தொகுதியில், வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி, வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுடன் இணைந்து தமிழிசை சௌந்தரராஜன் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

a88b7679-863a-4286-be1c-a93c3189ba9b_143

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், 'ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடாவுக்காக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டவர்கள் தொகுதியில் தங்கியிருந்தனர். பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதற்காக டோக்கன் கொடுத்துவருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப் பகலில் பணப் பட்டுவாடா நடைபெறும்நிலையில், தேர்தல் நடத்திப் பலனில்லை' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/rk-nagar/110263-tamilisai-soundarrajan-road-siege-protest-in-newvannrappettai.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கிறார் தினகரன்.. பரபரப்பு சர்வே முடிவுகள்

 

ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கிறார் தினகரன்.. பரபரப்பு சர்வே முடிவுகள்-

 ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 2வது இடத்தை பிடிப்பார் என்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பெரும் சர்ப்ரைஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த கருத்து கணிப்பு, 7 வார்டுகளில், இளைஞர், இளம் பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் மொத்தம் 1267 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.


திமுக முதலிடம்

 

திமுக முதலிடம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக 33 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. எனவே அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரம், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு, 26 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைக்குமாம்.


தினகரனுக்கு 2வது இடம்

இதில் சர்ப்ரைஸ் என்னவென்றால், அதிமுகவைவிட டிடிவி தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமாம். 28 சதவீதம் வாக்குகளை தினகரன் பெறுவார் என்கிறது இந்த கருத்து கணிப்பு. இந்த கருத்து கணிப்பு நம்பகத்தன்மையோடு இருக்கும்பட்சத்தில் அதிமுக வட்டாரத்தில் கிலி ஏற்படுவது உறுதி.

பாஜக நிலை

இந்த கருத்து கணிப்பில் மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி 2.18 வாக்குகளை பெறுமாம். அதேநேரம், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக வெறும் 1.23 சதவீத வாக்குகளையே பெறுமாம். 5.59 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு போகப்போகிறதாம். பிற 4 சதவீதம் என்று கூறப்படுகிறது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

ஆர்.கே.நகரில் சட்டம் ஒழுங்கு மோசம் என்று 73 சதவீதம் பேர் கூறியுள்ளார்களாம். குடிநீர் வினியோகம் மோசம் என்று சுமார் 70 சதவீதம் பேரும், விலைவாசி மிக அதிகம் என்று 82 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளார்களாம்.

 

தினகரனுக்கு ஆதரவு

அதிகரிப்பு பிரச்சினையை தீர்க்கும் தலைவர்கள் உள்ள கட்சி என்பதிலும் திமுகவுக்கு முதலிடமாம். 29.9 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியை உடனே கலைக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளார்ளாம். 0.53 சதவீதம் பேர்தான் ஆட்சி தொடர ஆசைப்படுகிறார்களாம். கடந்த தேர்தலைவிட தினகரனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியுள்ளது என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாம். கடந்த தேர்தலில் தினகரன் பணத்தை வாரி இறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் ரத்தானது நினைவிருக்கலாம்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-will-win-rk-nagar-poll-survey/articlecontent-pf280092-304440.html
 

Link to comment
Share on other sites

'ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்கிறீர்கள்' - பன்னீர்செல்வத்தை மிரள வைத்த ஆர்.கே.நகர் வாக்காளர்கள் #RKNagarAtrocities

 
 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Chennai: 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வாக்காளர்கள் கேட்டகேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் அ.தி.மு.க.வினர் திணறியுள்ளனர். 

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் சுயேச்சையாக டி.டி.வி.தினகரன் உள்பட 59 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் மருதுகணேஷ், மதுசூதனன், தினகரன் ஆகியோருக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இந்தச்சூழ்நிலையில், மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற நேற்று (8.12.2017) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகருக்குச் சென்றார். ஆர்.கே.நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்தவர்களிடம் வாக்குகளைச் சேகரித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியினர் குல்லா அணிந்திருந்தனர். முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் தரப்பில் வரவேற்பும் அளிக்கப்பட்டது.

அப்போது, பள்ளிவாசலுக்கு அருகே உள்ள இடத்துக்காக பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோதும் அந்த இடம் குறித்து உங்களிடம் கூறினோம். அப்போது, நீங்கள் நடவடிக்கை  எடுப்பதாகத் தெரிவித்தீர்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதை அமைதியாக கேட்ட பன்னீர்செல்வம், நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். அதற்கு  ஒவ்வொரு முறையும் வாக்குறுதி கொடுக்கிறீர்கள். ஆனால், ஓட்டுப்போட்ட பிறகு எங்களின் கோரிக்கையை மறந்துவிடுகிறீர்கள் என்று சிலர் ஆவேசமாக கூறினர். அவர்களை கட்சியினரும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் சமரசப்படுத்தினர்.

 இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், வருவாய் அதிகாரிகளிடம் இடம் தொடர்பாக உடனடியாக பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதிமொழியளித்துவிட்டுச் சென்றார். அடுத்து, தொழுகைக்காக சென்ற முஸ்லிம்களிடம் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆகியோர் ஒரே நேரத்தில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க.வினர் இடையே கடும் கோஷ்டி மோதல் தலைதூக்குவதாக கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிவாசலில் வாக்குசேகரிப்பில் ஈடுபடும்போது எம்.பி ஒருவருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கடைசியில் எம்.பி.யே வெற்றி பெற்றுள்ளார். அவர்கள் இருவரின் மோதலுக்குப் பின்னால் வக்பு வாரிய விவகாரம் இருக்கிறது. வக்பு வாரியத்தின் தலைவர் பதவியை பெற இரண்டுபேரும் கடுமையாக முட்டிமோதுகின்றனர். எம்.பி.க்கு ஓ.பன்னீர்செல்வத்தின் தயவும், கட்சியின் மூத்த நிர்வாகிக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவும் இருக்கிறது. வக்பு வாரியத்தின் தலைவர் பதவியை பெறவிடாமல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கும் எம்.பியே காரணம் என்கின்றனர். இதன்எதிரொலி ஆர்.கே.நகர் பிரசாரத்திலும் உள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். பிரச்னை பூதாகரமாக வெடிப்பதற்கு முன்பு அ.தி.மு.க.வின் தலைமை சுமூக தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் கட்சியின் உண்மைவிசுவாசிகள். 

https://www.vikatan.com/news/tamilnadu/110289-you-keep-saying-this-each-time-voters-ask-ops.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடத்துவதில் கண்ணாமூச்சி!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இம்முறையும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய, கட்சிகள் தயாராகி வருகின்றன. பட்டுவாடாவுக்கு முந்தைய ஏற்பாடாக, வீடு வீடாக ஓட்டு கணக்கெடுப்பில், பகிரங்கமாக ஈடுபட்டு, அசத்தி வருகின்றன. அதேநேரத்தில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, எப்படியாவது தடுத்து விட வேண்டும் என, தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டுகிறது. பட்டுவாடா கட்சிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையிலான, இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில், ஜெயிக்கப் போவது யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

 

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடத்துவதில் கண்ணாமூச்சி!



ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, மார்ச் மாதம், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பன்னீர் அணி சார்பில் மதுசூதனன்; சசிகலா அணி சார்பில் தினகரன்; தி.மு.க., சார்பில் மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நெருக்கத்தில், வாக்காளர்களுக்கு, இந்த மூன்று தரப்பினரும், பணத்தை வாரி இறைத்தனர். அதில், தினகரன் தரப்பு, எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற துடிப்பில், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கினர். இதன் காரணமாக, தேர்தல் நிறுத்தப்பட்டது.விபரங்கள் சேகரிப்புதற்போது, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதே வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

அ.தி.மு.க., அணிகள் இணைந்து, ஒருங்கிணைந்த அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன் நிறுத்தப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கும், தினகரனுக்கும், இந்த தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, பணத்தை பெரிதும் நம்புகின்றனர்.

மூன்று தரப்பிலும் நியமிக்கப்பட்ட ஆட்கள், பட்டுவாடா செய்வதற்கு வசதியாக, வீடு வீடாகச் சென்று, வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் போன் எண் என, அனைத்து விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

மூன்று தரப்பிலும், 50 ஓட்டுக்கு, ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு, பெயர் பட்டியல் சரிபார்ப்பு பணி துரிதமாக நடந்துவருகிறது.இப்பணி முடிந்ததும், வாக்காளர்கள் விபரம் உறுதி செய்யப்பட்டு, வீட்டுக்கு வீடு பட்டுவாடா துவங்கும். இந்தக் கணக்கெடுப்புக்கு, வாக்காளர்களும் முழு ஆதரவு தெரிவிப்பதால், கணக்கெடுப்பு பணி, தடையின்றி நடக்கிறது.


 

வாகனங்களுக்கு தடை

வாக்காளர்களை, மெரினா பீச்சுக்கு வரவழைத்து, கூட்டத்தோடு கூட்டமாக, சத்தமின்றி பணம் வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும், இரவு நேரத்தில், ஓரிருவர் மட்டும், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, பணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பட்டுவாடாவிற்கு, வெளியூர் நபர்களை பயன்படுத்தாமல், உள்ளூர்காரர்களையே பயன்படுத்த உள்ளனர்.

இந்நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, இந்த முறை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. அதற்காக, எப்போதும் இல்லாத அளவிற்கு, மூன்று பொதுத் தேர்தல் பார்வையாளர்கள், மூன்று செலவினப் பார்வையாளர்கள், மூன்று போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் வாகனங்கள், உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரசாரம் செய்தால் நடவடிக்கை என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

துணை ராணுவம்



அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தும் அதிகாரியையும் மாற்றி, திடீர் நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. குஜராத் தேர்தலுக்கு பின், அங்குள்ள துணை ராணுவ படையினரை அழைத்து வந்து, ஆர்.கே.நகரில் குவிக்கவும், தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.'போலீசார் முழுஒத்துழைப்பு அளித்தால் தான், ரகசிய பட்டுவாடாவை தடுக்க முடியும்; ஆனால், போலீஸ் ஒத்துழைப்பு போதுமான அளவுக்கு இல்லை' என, தலைமை தேர்தல் கமிஷனுக்கு, தேர்தல் பார்வையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, விரைவில், நேர்மையான போலீஸ் அதிகாரிகள் அடங்கிய, அதிரடி படை அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் கமிஷன், இப்படி கடும் கெடுபிடிகளை கையாள திட்டமிட்டுள்ள நிலையில், பண பட்டுவாடாவை கச்சிதமாக முடிக்க, மூன்று தரப்பினரும், காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில், ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வி, எழுந்துள்ளது.
 

'25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5,000'


ஆர்.கே.நகரில், அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை பிரித்து, தி.மு.க., வெற்றிக்கு உதவும் வகையில், ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு வழங்க, தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளது.

சுயேச்சையாக போட்டியிடும் தினகரன், அ.தி.மு.க.,வை தோற்கடிக்கும் வேலைகளை செய்து வருகிறார். அதன்படி, ஆர்.கே.நகரில் உள்ள, 25 ஆயிரம் வாக்காளர்களிடம், தினகரனுக்கு ஓட்டளிக்க கோரி, தலா, 5,000 ரூபாய் பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 

 

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஏற்கனவே, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவித்தபோது, தினகரனுக்கு ஆதரவாக, ஆட்சியாளர்கள் செயல்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக, தினகரன் திட்டமிட்டார். இதனால், பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட்ட மதுசூதனன் மற்றும், தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷை தோற்கடிக்க, அமைச்சர்கள் துணையுடன், தொகுதியில் உள்ள, 83 சதவீத வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் என, 89 கோடி ரூபாய் அளவுக்கு, பண பட்டுவாடா செய்யப்பட்டது.

இந்த விபரம் வெட்ட வெளிச்சமானதால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது. பின், பன்னீர், பழனிசாமி அணிகள் இணைந்தன.இதையடுத்து, அவர்களுக்கு, அ.தி.மு.க., என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும், தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இதனால், 21ல் நடக்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரான மதுசூதனன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தலில், தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்துள்ள, சுயேச்சை வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க.,வை எப்படியாவது தோற்கடிக்க திட்டமிட்டு வருகிறார். இதற்காக, ஆர்.கே.நகரில், அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக உள்ள மீனவர்கள் உட்பட, 25 ஆயிரம் பேருக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கி, தனக்கு ஓட்டளிக்குமாறு கேட்க உள்ளார்.

இதனால், அ.தி.மு.க., ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளதால், கூட்டணி கட்சிகளின் பலத்துடன், தி.மு.க., வெற்றி எளிதாகும் என, தினகரன் தரப்பு கருதுகிறது. இந்த விபரத்தை, தினகரன் அணியில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்'கள், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், கையும், களவுமாக பிடித்து, தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்க, அ.தி.மு.க.,வில், இளைஞர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

 

தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர், வேலுசாமி மீது, பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவர் மாற்றப்பட்டுள்ளார். புதிதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மார்ச் மாதம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் நடத்தும் அலுவலராக, பத்மஜாதேவி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் சரியாக செயல்படவில்லை எனக் கூறி, அவரை மாற்றி விட்டு, பிரவீன் நாயரை நியமித்தனர். தற்போது, அவரையே மீண்டும் நியமித்துள்ளனர்.தென் கொரியா சென்றிருந்த, பிரவீன் நாயர், நேற்று மாலை, சென்னை திரும்பினார்.


- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1914975

Link to comment
Share on other sites

பணம் புரளுது,ஆர்.கே.நகர்,தேர்தல்,நடக்குமா,ஓட்டுக்கு,ரூ.20,000/- ,வினியோகம்,துவங்கியது

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர்களின் கண்ணில் மண்ணைத் துாவி ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வினியோகம் செய்யும் பணிகள் தைரியமாக துவங்கி உள்ளன. எப்போதும் இல்லாத வகையில் பணம் தாராளமாக புரளத் துவங்கி உள்ளதால் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

பணம் புரளுது,ஆர்.கே.நகர்,தேர்தல்,நடக்குமா,ஓட்டுக்கு,ரூ.20,000/- ,வினியோகம்,துவங்கியது

 

இடைத்தேர்தல்:


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி ஏப்ரலில் நடக்க இருந்த இடைத்தேர்தல், பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. அங்கு, டிச., 21ல், இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதியான நிலையில், மூன்று நாட்களாக பிரசாரம் களை கட்டி உள்ளது. தற்போதும், மீண்டும் வாக்காளர்களை கவர, பணப் பட்டுவாடா செய்ய, அரசியல் கட்சியினர், பல்வேறு நுாதன வழிகளை கண்டுபிடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன், பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய வாக்காளர்களின் பட்டியல் சரிபார்க்கும் பணியில், நான்கு பேர் குழு ஈடுபட்டது. வீடு வீடாகச் சென்ற இந்தக் குழுவினர், வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், மொபைல்போன் எண்களையும் பெற்றுச் சென்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை ஓட்டுக்கள் உள்ளன என்பதையும் கணக்கிட்டுச் சென்றனர்.
 

பணப் பட்டுவாடா:


படித்த பெண்கள், ஏஜன்டாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வாக்காளர்களை, மொபைல் போன் வழியாக, தொகுதிக்கு வெளியே குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து, பணப் பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்கின்றனர்.

தினமும் அவர்கள், 100 குடும்பங்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், 10 ஆயிரம் ரூபாய் கமிஷனாக, வழங்கப்படுகிறது. பணப் பட்டுவாடா முறையாக நடந்ததா என, வாக்காளர்களை மொபைல் போனில் அழைத்து, மற்றொரு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
 

20 ஆயிரம் ரூபாய்!


பிரதான கட்சிகள், 5,000 ரூபாய், சுயேச்சை தரப்பில், 10 ஆயிரம் ரூபாய் என, பண பட்டுவாடாநடக்கிறது. இதன்படி, ஒரு ஓட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தொகுதி முழுவதும் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுக்கள் சுற்றி வருவதால், தொகுதிக்கு வெளியே அழைக்கப்பட்டு, பண வினியோகம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நேதாஜி நகரைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் கூறியதாவது: நேற்று முன்தினம், ஒரு வேட்பாளரின் ஆதரவாளர், மொபைல்போனில் அழைத்தார்; 'ராயபுரம் மேம்பாலத்தின் பின்புறம் வாருங்கள்; ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, உங்கள் குடும்பத்தில் உள்ள, மூன்று ஒட்டுக்களுக்கும், 30 ஆயிரம் ரூபாய் தருகிறோம்' என்றனர். ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு முறையை பின்பற்றி, நுாதனமாக பண பட்டுவாடா செய்கின்றனர்.

தண்டையார்பேட்டை பகுதிகளில், வெள்ளை சீட்டில், ரகசிய வார்த்தைகளை கிறுக்கி தருகின்றனர். அதை, குறிப்பிட்ட மளிகை கடையில் கொடுத்து, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஓட்டுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், இதே துண்டு சீட்டை கொடுத்து, நகைக்கடைகளில், தங்கம் வாங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

சில இடங்களில், பணத்தை கொடுத்ததும், 'இந்த சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம்' என, சத்தியம் செய்ய வைக்கின்றனர். பணம் கொடுத்தால்

 

வாங்கிக் கொள்வோம்; அது, அவர்கள் பணம் அல்ல; மக்களிடம் கொள்ளையடித்தது தான். ஆனால், எந்த வேட்பாளரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு தான் ஓட்டு போடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தப்பாது:


தொகுதியில் பணப் பட்டுவாடா குறித்து கண்காணித்து வரும், மத்திய உளவுத்துறை போலீசார், ஆதாரப்பூர்வமான தகவல்களை, டில்லியில் உள்ள, உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தேர்தல் பணிகளில் குழப்பம் ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரி வேலுசாமி மாற்றப்பட்டு, பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுள்ளார். இவருடைய கண்காணிப்பு துல்லியமாக இருந்ததை, கடந்த பிரசாரத்தின்போது பார்க்க முடிந்தது.

பணப் பட்டுவாடா நடந்ததை இவர் தான் கண்டறிந்தார்; மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பினார்; தேர்தல் நின்றது. இப்போதும், எக்கச்சக்கமாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதால், இவரது கண்ணில் அது தப்பாது என்றே கருதப்படுகிறது.

'பணப்பட்டுவாடாவை தடுத்து, தேர்தலை நேர்மையாக நடத்த முடியாவிட்டால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார். இவரும், தனக்கு கிடைக்கும் தகவல்களை, மேலிடத்திற்கு தெரிவித்து வருகிறார்.

தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சுற்றி வந்தாலும், அவர்களின் கண்ணில் மண்ணைத் துாவி, வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சுயேச்சைகளும் தைரியமாக பண பட்டுவாடாவை செய்து வருகின்றனர்.

இனி என்ன நடக்கிறது என்பதை, பிரவீன் நாயர் கண்காணிப்பார். அவருடைய கண்காணிப்பின் அடிப்படையிலேயே, தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பதை அறிய முடியும்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1915779

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரமா? - கவுண்டமணி திடீர் விளக்கம்

 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  நடிகர் கவுண்டமணி அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம்செய்துவருவதாக செய்திகள் பரவின. 

goundamani
 

 

இன்று, காலைப் பத்திரிக்கை ஒன்றில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, டிச-14ல், கவுண்டமணி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். நடிகர் செந்தில், அதே சமுதாயத்தைச் சேர்ந்த தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய உள்ளார். கவுண்டமணியும் செந்திலும், திரையுலகில் ஒன்றாக இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர்கள். தற்போது, அரசியல் உலகில் எதிரும் புதிருமாகப் பிரசாரம் செய்ய உள்ளனர்” என்று செய்து வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் தீ போல பரவியது.   ''கவுண்டமணி, எடப்பாடிக்கு ஆதரவு; செந்தில், தினகரனுக்கு ஆதரவு” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்நிலையில், பத்திரிகையில் வெளியான செய்தி பொய் என்று கவுண்டமணி கூறியுள்ளார்.

 இதுகுறித்து கவுண்டமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில்... 

"இன்று (11.12.17)  காலை நாளிதழ் ஒன்றில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். 

நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் " என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/110392-goundamanis-statement-on-rk-nagar-election.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.